45. ஸூரத்துல் ஜாஸியா (முழந்தாளிடுதல்)

மக்கீ, வசனங்கள்: 37

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
تَنْزِیْلُ الْكِتٰبِ مِنَ اللّٰهِ الْعَزِیْزِ الْحَكِیْمِ ۟
تَنْزِیْلُஇறக்கியருளப்பட்டதுالْكِتٰبِஇவ்வேதம்مِنَஇடமிருந்துاللّٰهِஅல்லாஹ்الْعَزِیْزِமிகைத்தவன்الْحَكِیْمِஞானமிக்கவன்
தன்Zஜீலுல் கிதாBபி மினல் லாஹில் 'அZஜீZஜில் ஹகீம்
இவ்வேதம், யாவரையும் மிகைத்தோனும் ஞானம் மிக்கோனுமாகிய அல்லாஹ்விடமிருந்தே இறக்கியருளப்பட்டது.
اِنَّ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ لَاٰیٰتٍ لِّلْمُؤْمِنِیْنَ ۟ؕ
اِنَّநிச்சயமாகفِیஇல்السَّمٰوٰتِவானங்கள்وَ الْاَرْضِமற்றும் பூமிلَاٰیٰتٍஅத்தாட்சிகள்لِّلْمُؤْمِنِیْنَؕநம்பிக்கையாளர்களுக்கு
இன்னா Fபிஸ் ஸமாவாதி வல் அர்ளி ல ஆயாதில் லில்மு'மினீன்
முஃமின்களுக்கு நிச்சயமாக வானங்களிலும், பூமியிலும் அத்தாட்சிகள் இருக்கின்றன.
وَفِیْ خَلْقِكُمْ وَمَا یَبُثُّ مِنْ دَآبَّةٍ اٰیٰتٌ لِّقَوْمٍ یُّوْقِنُوْنَ ۟ۙ
وَ فِیْஇன்னும் ...ல்خَلْقِكُمْஉங்களைப் படைத்திருப்பதில்وَ مَاமேலும் எவற்றைیَبُثُّஅவன் பரவச் செய்திருக்கிறானோمِنْஆகியدَآبَّةٍஉயிரினங்களில்اٰیٰتٌஅத்தாட்சிகள் உள்ளனلِّقَوْمٍஒரு சமூகத்தாருக்குیُّوْقِنُوْنَۙஉறுதியான நம்பிக்கை கொள்ளும்
வ Fபீ கல்கிகும் வமா யBபுத்து மின் தாBப்Bபதின் ஆயாதுல் லிகவ்மி(ன்)ய்-யூகினூன்
இன்னும் உங்களைப் படைத்திருப்பதிலும், அவன் உயிர்ப் பிராணிகளைப் பரப்பியிருப்பதிலும் (நம்பிக்கையில்) உறுதியுள்ள சமூகத்தாருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.
وَاخْتِلَافِ الَّیْلِ وَالنَّهَارِ وَمَاۤ اَنْزَلَ اللّٰهُ مِنَ السَّمَآءِ مِنْ رِّزْقٍ فَاَحْیَا بِهِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا وَتَصْرِیْفِ الرِّیٰحِ اٰیٰتٌ لِّقَوْمٍ یَّعْقِلُوْنَ ۟
وَ اخْتِلَافِஇன்னும் மாறி மாறி வருவதிலும்الَّیْلِஇரவின்وَ النَّهَارِமற்றும் பகலின்وَ مَاۤஇன்னும் எதனைاَنْزَلَஇறக்கினானோاللّٰهُஅல்லாஹ்مِنَஇருந்துالسَّمَآءِவானத்தில்مِنْஆகرِّزْقٍவாழ்வாதாரத்தைفَاَحْیَاபிறகு உயிர்ப்பித்தானோبِهِஅதைக் கொண்டுالْاَرْضَபூமியைبَعْدَபிறகுمَوْتِهَاஅதன் இறப்பிற்குப்وَ تَصْرِیْفِஇன்னும் திசை திருப்புவதிலும்الرِّیٰحِகாற்றுகளைاٰیٰتٌஅத்தாட்சிகள்لِّقَوْمٍஒரு சமூகத்தாருக்குیَّعْقِلُوْنَஅவர்கள் சிந்தித்து விளங்குகிறார்கள்
வக்திலாFபில் லய்லி வன்னஹாரி வ மா அன்Zஜலல் லாஹு மினஸ் ஸமா'இ மிர் ரிZஜ்கின் Fப அஹ்யா Bபிஹில் அர்ள Bபஃத மவ்திஹா வ தஸ் ரீFபிர் ரியாஹி ஆயாதுல் லிகவ்மி(ன்)ய் யஃகிலூன்
மேலும் இரவு பகல் மாறி மாறி வருவதிலும், வானத்திலிருந்து அருள் மாரியை அல்லாஹ் இறக்கி வைத்து, இறந்து போன பூமியை அதைக் கொண்டு உயிர்ப்பிப்பதிலும்; காற்றுகளை மாறி மாறி வீசச்செய்வதிலும் அறிவுடைய சமூகத்தாருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.
تِلْكَ اٰیٰتُ اللّٰهِ نَتْلُوْهَا عَلَیْكَ بِالْحَقِّ ۚ فَبِاَیِّ حَدِیْثٍ بَعْدَ اللّٰهِ وَاٰیٰتِهٖ یُؤْمِنُوْنَ ۟
تِلْكَஇவைاٰیٰتُவசனங்கள்اللّٰهِஅல்லாஹ்வின்نَتْلُوْهَاஅவற்றை நாம் ஓதிக்காட்டுகிறோம்عَلَیْكَஉமக்குبِالْحَقِّ ۚசத்தியத்துடன்فَبِاَیِّஎனவே எந்தحَدِیْثٍۭசெய்தியைبَعْدَபிறகுاللّٰهِஅல்லாஹ்வுக்கும்وَ اٰیٰتِهٖமேலும் அவனது வசனங்களுக்கும்یُؤْمِنُوْنَஅவர்கள் நம்பிக்கை கொள்வார்கள்?
தில்க ஆயதுல் லாஹி னத்லூஹா 'அலய்க Bபில் ஹக்க், FபBபிஅய்யி ஹதீதிம் Bபஃதல் லாஹி வ ஆயாதிஹீ யு'மினூன்
இவை அல்லாஹ்வுடைய வசனங்கள், இவற்றை (நபியே!) உம்மீது உண்மையுடன் ஓதிக் காண்பிக்கிறோம்; அல்லாஹ்வுக்கும் அவனுடைய வசனங்களுக்கும் பின்னர் இவர்கள் எதனைத் தான் நம்பப் போகிறார்கள்.
وَیْلٌ لِّكُلِّ اَفَّاكٍ اَثِیْمٍ ۟ۙ
وَیْلٌகேடுلِّكُلِّஒவ்வொருاَفَّاكٍபெரும் பொய்யனுக்கும்اَثِیْمٍۙபெரும் பாவிக்கும்
வய்லுல் லிகுல்லி அFப்Fபாகின் அதீம்
(சத்தியத்தை புறக்கணித்துப்) பொய்க் கற்பனை செய்யும் பாவிகள் யாவருக்கும் கேடுதான்.
یَّسْمَعُ اٰیٰتِ اللّٰهِ تُتْلٰی عَلَیْهِ ثُمَّ یُصِرُّ مُسْتَكْبِرًا كَاَنْ لَّمْ یَسْمَعْهَا ۚ فَبَشِّرْهُ بِعَذَابٍ اَلِیْمٍ ۟
یَّسْمَعُஅவன் செவியேற்கிறான்اٰیٰتِவசனங்களைاللّٰهِஅல்லாஹ்வின்تُتْلٰیஓதிக்காட்டப்படுவதைعَلَیْهِஅவனுக்குثُمَّபின்னர்یُصِرُّபிடிவாதம் பிடிக்கிறான்مُسْتَكْبِرًاபெருமையடித்தவனாகكَاَنْபோலلَّمْஇல்லைیَسْمَعْهَا ۚஅவற்றை அவன் செவியேற்றான்فَبَشِّرْهُஎனவே அவனுக்கு நற்செய்தி கூறுவீராகبِعَذَابٍவேதனையைக் கொண்டுاَلِیْمٍநோவினை தரும்
யஸ்ம'உ ஆயாதில் லாஹி துத்லா 'அலய்ஹி தும்ம யுஸிர்ரு முஸ்தக்Bபிரன் க-அல் லம் யஸ்மஃஹா FபBபஷ்ஷிர்ஹு Bபி'அதாBபின் அலீம்
தன் மீது ஓதிக்காட்டப்படும் அல்லாஹ்வுடைய வசனங்களைக் கேட்கிறான்; பின்பு பெருமையடித்துக் கொண்டு அவன் அதைக் கேளாதது போல் (தன் நிராகரிப்பில்) பிடிவாதம் செய்கிறான்; அ(த்தகைய)வனுக்கு நோவினை செய்யும் வேதனையைக் கொண்டு நன்மாராயம் கூறுவீராக.
وَاِذَا عَلِمَ مِنْ اٰیٰتِنَا شَیْـَٔا تَّخَذَهَا هُزُوًا ؕ اُولٰٓىِٕكَ لَهُمْ عَذَابٌ مُّهِیْنٌ ۟ؕ
وَ اِذَاமேலும் எப்போதுعَلِمَஅவர் அறிகிறாரோمِنْஇருந்துاٰیٰتِنَاஎமது வசனங்களில்شَیْـَٔاஎதனையும்ِ۟اتَّخَذَهَاஅவற்றை அவர் ஆக்கிக் கொள்கிறார்هُزُوًا ؕபரிகாசமாகاُولٰٓىِٕكَஅத்தகையோர்لَهُمْஅவர்களுக்குعَذَابٌவேதனைمُّهِیْنٌؕஇழிவுபடுத்தும்
வ இதா 'அலிம மின் ஆயாதினா ஷய்' 'அனித் தகதஹா ஹுZஜுவா; உலா'இக லஹும் 'அதாBபும் முஹீன்
நம் வசனங்களிலிருந்து ஏதாவது ஒன்றை அவன் அறிந்து கொண்டால், அதைப் பரிகாசமாக எடுத்துக் கொள்கிறான்; அ(த்தகைய)வர்களுக்கு இழிவு தரும் வேதனையுண்டு.
مِنْ وَّرَآىِٕهِمْ جَهَنَّمُ ۚ وَلَا یُغْنِیْ عَنْهُمْ مَّا كَسَبُوْا شَیْـًٔا وَّلَا مَا اتَّخَذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ اَوْلِیَآءَ ۚ وَلَهُمْ عَذَابٌ عَظِیْمٌ ۟ؕ
مِنْஇருந்துوَّرَآىِٕهِمْஅவர்களுக்கு முன்னால்جَهَنَّمُ ۚநரகம்وَ لَاமேலும் இல்லைیُغْنِیْபயன் தரும்عَنْهُمْஅவர்களுக்குمَّاஎதைكَسَبُوْاஅவர்கள் சம்பாதித்தார்களோشَیْـًٔاஎதனையும்وَّ لَاமேலும் இல்லைمَاஎதைاتَّخَذُوْاஅவர்கள் ஆக்கிக்கொண்டார்களோمِنْஇருந்துدُوْنِஅன்றிاللّٰهِஅல்லாஹ்வைاَوْلِیَآءَ ۚபாதுகாவலர்களாகوَ لَهُمْஇன்னும் அவர்களுக்குعَذَابٌவேதனைعَظِیْمٌؕமகத்தான
மி(ன்)வ் வரா'இஹிம் ஜஹன்னமு வலா யுக்னீ 'அன்ஹும் மா கஸBபூ ஷய்'அ(ன்)வ் வலா மத் தகதூ மின் தூனில் லாஹி அவ்லியா; வ லஹும் 'அதாBபுன் 'அளீம்
அவர்களுக்கு முன்னால் நரகம் இருக்கிறது; அவர்கள் சம்பாதித்துக் கொண்டதில் எப்பொருளும் அவர்களுக்குப் பயன் தராது; அல்லாஹ்வையன்றி, எவற்றை அவர்கள் பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டார்களோ அவையும் (அவர்களுக்குப் பயன் தராது); மேலும், அவர்களுக்கு மாபெரும் வேதனையுமுண்டு.
هٰذَا هُدًی ۚ وَالَّذِیْنَ كَفَرُوْا بِاٰیٰتِ رَبِّهِمْ لَهُمْ عَذَابٌ مِّنْ رِّجْزٍ اَلِیْمٌ ۟۠
هٰذَاஇதுهُدًی ۚநேர்வழிوَ الَّذِیْنَமேலும் எவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோبِاٰیٰتِவசனங்களைرَبِّهِمْதங்கள் இறைவனின்لَهُمْஅவர்களுக்குعَذَابٌவேதனைمِّنْஇருந்துرِّجْزٍமிகக் கொடியاَلِیْمٌ۠நோவினை தரும்
ஹாதா ஹுதா; வல் லதீன கFபரூ Bபி ஆயாதி ரBப்Bபிஹிம் லஹும் 'அதாBபும் மிர் ரிஜ்Zஜின் 'அலீம்
இது (குர்ஆன்)தான் நேர்வழிகாட்டியாகும். எவர்கள் தம்முடைய இறைவனின் வசனங்களை நிராகரித்து விட்டார்களோ, அவர்களுக்கு நோவினை மிகுந்த கடினமான வேதனையுண்டு.  
اَللّٰهُ الَّذِیْ سَخَّرَ لَكُمُ الْبَحْرَ لِتَجْرِیَ الْفُلْكُ فِیْهِ بِاَمْرِهٖ وَلِتَبْتَغُوْا مِنْ فَضْلِهٖ وَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ۟ۚ
اَللّٰهُஅல்லாஹ்الَّذِیْஎத்தகையவன்سَخَّرَவசப்படுத்தினான்لَكُمُஉங்களுக்குالْبَحْرَகடலைلِتَجْرِیَசெல்வதற்காகالْفُلْكُகப்பல்கள்فِیْهِஅதில்بِاَمْرِهٖஅவனது கட்டளையினால்وَ لِتَبْتَغُوْاமேலும் நீங்கள் தேடுவதற்காகمِنْஇருந்துفَضْلِهٖஅவனது அருளைوَ لَعَلَّكُمْமேலும் நீங்கள்تَشْكُرُوْنَۚநன்றி செலுத்துவீர்கள்
அல்லாஹுல் லதீ ஸஹ்கர லகுமுல் Bபஹ்ர லிதஜ்ரியல் Fபுல்கு Fபீஹி Bபி அம்ரிஹீ வ லிதBப்தகூ மின் Fபள்லிஹீ வ ல'அல்லகும் தஷ்குரூன்
கப்பல்கள் அவன் கட்டளையைக் கொண்டு (கடலில்) செல்லும் பொருட்டும், நீங்கள் அவனுடைய அருளைத் தேடிக்கொள்ளும் பொருட்டும்; மேலும் அவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டும் உங்களுக்குக் கடலை வசப்படுத்திக் கொடுத்தவன் அல்லாஹ்வே ஆவான்.
وَسَخَّرَ لَكُمْ مَّا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ جَمِیْعًا مِّنْهُ ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یَّتَفَكَّرُوْنَ ۟
وَ سَخَّرَமேலும் அவன் வசப்படுத்தினான்لَكُمْஉங்களுக்குمَّاஎவற்றைفِیஉள்ளதோالسَّمٰوٰتِவானங்களில்وَ مَاஇன்னும் எவற்றைفِیஉள்ளதோالْاَرْضِபூமியில்جَمِیْعًاஅனைத்தையும்مِّنْهُ ؕஅவனிடமிருந்துاِنَّநிச்சயமாகفِیْஉள்ளனذٰلِكَஅதில்لَاٰیٰتٍஅத்தாட்சிகள்لِّقَوْمٍஒரு சமூகத்தாருக்குیَّتَفَكَّرُوْنَசிந்திக்கும்
வ ஸக்கர லகும் மா Fபிஸ் ஸமாவாதி வமா Fபில் அர்ளி ஜமீ'அம் மின்ஹு; இன்ன Fபீதாலிக ல ஆயாதில் லிகவ்மி(ன்)ய் யதFபக்கரூன்
அவனே வானங்களிலுள்ளவை, பூமியிலுள்ளவை அனைத்தையும் தன் அருளால் உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; அதில் சிந்திக்கும் சமூகத்தாருக்கு நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் உள்ளன.
قُلْ لِّلَّذِیْنَ اٰمَنُوْا یَغْفِرُوْا لِلَّذِیْنَ لَا یَرْجُوْنَ اَیَّامَ اللّٰهِ لِیَجْزِیَ قَوْمًا بِمَا كَانُوْا یَكْسِبُوْنَ ۟
قُلْகூறுவீராகلِّلَّذِیْنَஎவர்களுக்குاٰمَنُوْاஈமான் கொண்டார்களோیَغْفِرُوْاஅவர்கள் மன்னித்துவிடட்டும்لِلَّذِیْنَஎவர்கள்لَاஇல்லைیَرْجُوْنَஎதிர்பார்க்கிறார்களோاَیَّامَநாட்களைاللّٰهِஅல்லாஹ்வின்لِیَجْزِیَஅவன் கூலி கொடுப்பதற்காகقَوْمًۢاஒரு சமூகத்திற்குبِمَاஅதற்காகكَانُوْاஅவர்கள்یَكْسِبُوْنَசம்பாதித்துக் கொண்டிருந்தார்களோ
குல் லில்லதீன ஆமனூ யக்Fபிரூ லில்லதீன லா யர்ஜூன அய்யாமல் லாஹி லியஜ்Zஜிய கவ்மம் Bபிமா கானூ யக்ஸிBபூன்
ஈமான் கொண்டவர்களுக்கு (நபியே!) நீர் கூறிவிடும்: அல்லாஹ்வுடைய (தண்டனைக்கான) நாட்களை நம்பாதவர்களை அவர்கள் மன்னித்து (அவர்களைப் பற்றி அல்லாஹ்விடம் பரஞ் சாட்டிவிடட்டும்); ஜனங்களுக்கு அவர்கள் தேடிக் கொண்ட வினைக்குத் தக்கபலனை அவன் கொடுப்பான்.  
مَنْ عَمِلَ صَالِحًا فَلِنَفْسِهٖ ۚ وَمَنْ اَسَآءَ فَعَلَیْهَا ؗ ثُمَّ اِلٰی رَبِّكُمْ تُرْجَعُوْنَ ۟
مَنْஎவர்عَمِلَசெய்கிறாரோصَالِحًاநன்மையைفَلِنَفْسِهٖ ۚஅது அவருக்கேوَ مَنْமேலும் எவர்اَسَآءَதீமை செய்கிறாரோفَعَلَیْهَا ؗஅது அவருக்கு எதிராகவேثُمَّபின்னர்اِلٰیநோக்கிرَبِّكُمْஉங்கள் இறைவனைتُرْجَعُوْنَநீங்கள் திருப்பப்படுவீர்கள்
மன் 'அமில ஸாலிஹன் FபலினFப்ஸிஹீ வ மன் அஸா'அ Fப'அலய்ஹா தும்ம இலா ரBப்Bபிகும் துர்ஜ'ஊன்
எவர் ஸாலிஹான (நல்ல) அமலை செய்கிறாரோ அது அவருக்கே நன்மையாகும்; அன்றியும், எவர் தீமையைச் செய்கிறாரோ, அது அவருக்கே தீமையாகும், பின்னர் உங்கள் இறைவனிடமே நீங்கள் மீட்டப்படுவீர்கள்.
وَلَقَدْ اٰتَیْنَا بَنِیْۤ اِسْرَآءِیْلَ الْكِتٰبَ وَالْحُكْمَ وَالنُّبُوَّةَ وَرَزَقْنٰهُمْ مِّنَ الطَّیِّبٰتِ وَفَضَّلْنٰهُمْ عَلَی الْعٰلَمِیْنَ ۟ۚ
وَ لَقَدْநிச்சயமாகاٰتَیْنَاநாம் வழங்கினோம்بَنِیْۤசந்ததியினருக்குاِسْرَآءِیْلَஇஸ்ராயீல்الْكِتٰبَவேதத்தைوَ الْحُكْمَஅதிகாரத்தையும்وَ النُّبُوَّةَநபித்துவத்தையும்وَ رَزَقْنٰهُمْஅவர்களுக்கு நாம் உணவளித்தோம்مِّنَலிருந்துالطَّیِّبٰتِதூய்மையானவற்றைوَ فَضَّلْنٰهُمْஅவர்களை நாம் சிறப்பித்தோம்عَلَیவிடالْعٰلَمِیْنَۚஅகிலத்தாரை
வ லகத் ஆதய்னா Bபனீ இஸ்ரா'ஈலல் கிதாBப வல்ஹுக்ம வன் னுBபுவ்வத வ ரZஜக்னாஹும் மினத் தய்யிBபாதி வ Fபள்ளல்னாஹும்;அலல் 'ஆலமீன்
நிச்சயமாக நாம், இஸ்ராயீலின் சந்ததியினருக்கு வேதத்தையும், அதிகாரத்தையும், நுபுவ்வத்தையும் கொடுத்தோம்; அவர்களுக்கு மணமான உணவு (வசதி)களையும் கொடுத்தோம் - அன்றியும் அகிலத்தாரில் அவர்களை மேன்மையாக்கினோம்.
وَاٰتَیْنٰهُمْ بَیِّنٰتٍ مِّنَ الْاَمْرِ ۚ فَمَا اخْتَلَفُوْۤا اِلَّا مِنْ بَعْدِ مَا جَآءَهُمُ الْعِلْمُ ۙ بَغْیًا بَیْنَهُمْ ؕ اِنَّ رَبَّكَ یَقْضِیْ بَیْنَهُمْ یَوْمَ الْقِیٰمَةِ فِیْمَا كَانُوْا فِیْهِ یَخْتَلِفُوْنَ ۟
وَ اٰتَیْنٰهُمْமேலும் அவர்களுக்கு நாம் வழங்கினோம்بَیِّنٰتٍதெளிவான அத்தாட்சிகளைمِّنَஇருந்துالْاَمْرِ ۚகாரியத்தில்فَمَاஆகவே இல்லைاخْتَلَفُوْۤاஅவர்கள் மாறுபட்டார்கள்اِلَّاதவிரمِنْۢஇருந்துبَعْدِபின்னர்مَاஎதுجَآءَهُمُஅவர்களுக்கு வந்ததோالْعِلْمُ ۙஅறிவுبَغْیًۢاபொறாமையினால்بَیْنَهُمْ ؕதங்களுக்கு இடையில்اِنَّநிச்சயமாகرَبَّكَஉமது இறைவன்یَقْضِیْதீர்ப்பளிப்பான்بَیْنَهُمْஅவர்களுக்கு இடையில்یَوْمَநாளில்الْقِیٰمَةِமறுமைفِیْمَاஎதில்كَانُوْاஅவர்கள் இருந்தார்களோفِیْهِஅதில்یَخْتَلِفُوْنَமாறுபடுகிறார்களோ
வ ஆதய்னாஹும் Bபய்யினாதிம் மினல் அம்ரி Fபமக் தலFபூ இல்லா மிம் Bபஃதி மா ஜா'அஹுமுல் 'இல்மு Bபக்யம் Bபய்னஹும்; இன்ன ரBப்Bபக யக்ளீ Bபய்னஹும் யவ்மல் கியாமதி Fபீமா கானூ Fபீஹி யக்தலிFபூன்
அவர்களுக்கு (மார்க்க விஷயத்தில்) தெளிவான கட்டளைகளையும் கொடுத்தோம்; எனினும் அவர்களுக்கிடையே உண்டான பொறாமையினால், அவர்களுக்கு (வேத) ஞானம் வந்தபின்னரும் அவர்கள் அபிப்பிராய பேதம் கொண்டார்கள்; நிச்சயமாக உம் இறைவன் அவர்கள் எதில் அபிப்பிராய பேதம் கொண்டிருந்தார்களோ அதில் கியாம நாளில் அவர்களிடையே தீர்ப்புச் செய்வான்.
ثُمَّ جَعَلْنٰكَ عَلٰی شَرِیْعَةٍ مِّنَ الْاَمْرِ فَاتَّبِعْهَا وَلَا تَتَّبِعْ اَهْوَآءَ الَّذِیْنَ لَا یَعْلَمُوْنَ ۟
ثُمَّபின்னர்جَعَلْنٰكَநாம் உம்மை ஆக்கினோம்عَلٰیமீதுشَرِیْعَةٍஒரு மார்க்கத்தின்مِّنَஉள்ளالْاَمْرِகட்டளையில்فَاتَّبِعْهَاஎனவே அதனைப் பின்பற்றுவீராகوَ لَاமேலும் வேண்டாம்تَتَّبِعْநீர் பின்பற்றاَهْوَآءَமன இச்சைகளைالَّذِیْنَஎவர்கள்لَاஇல்லைیَعْلَمُوْنَஅறிகிறார்களோ
தும்ம ஜ'அல்னாக 'அலா ஷரீ'அதிம் மினல் அம்ரி Fபத்தBபிஃஹா வலா தத்தBபிஃ அஹ்வா'அல்-லதீன லா யஃலமூன்
இதன் பின்னர் உம்மை ஷரீஅத்தில் (மார்க்கத்தில்) ஒரு நேரான வழியில் நாம் ஆக்கியுள்ளோம். ஆகவே நீர் அதனையே பின்பற்றுவீராக; அன்றியும், அறியாமல் இருக்கின்றார்களே அவர்களின் விருப்பங்களைப் பின்பற்றாதீர்.
اِنَّهُمْ لَنْ یُّغْنُوْا عَنْكَ مِنَ اللّٰهِ شَیْـًٔا ؕ وَاِنَّ الظّٰلِمِیْنَ بَعْضُهُمْ اَوْلِیَآءُ بَعْضٍ ۚ وَاللّٰهُ وَلِیُّ الْمُتَّقِیْنَ ۟
اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்لَنْஒருபோதும்یُّغْنُوْاபயனளிக்க மாட்டார்கள்عَنْكَஉமக்குمِنَஇருந்துاللّٰهِஅல்லாஹ்شَیْـًٔا ؕசிறிதளவும்وَ اِنَّமேலும் நிச்சயமாகالظّٰلِمِیْنَஅநியாயக்காரர்கள்بَعْضُهُمْஅவர்களில் சிலர்اَوْلِیَآءُபாதுகாவலர்கள்بَعْضٍ ۚசிலருக்குوَ اللّٰهُமேலும் அல்லாஹ்وَلِیُّபாதுகாவலன்الْمُتَّقِیْنَஇறையச்சமுடையவர்களுக்கு
இன்னஹும் ல(ன்)ய் யுக்னூ 'அன்க மினல் லாஹி ஷய்'ஆ; வ இன்னள் ளாலிமீன Bபஃளுஹும் அவ்லியா'உ Bபஃளி(ன்)வ் வல்லாஹு வலிய்யுல் முத்தகீன்
நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கு எதிராக உமக்கு யாதோர் உதவியும் செய்து விட முடியாது. இன்னும் நிச்சயமாக அநியாயக்காரர்களில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கிறார்கள்; ஆனால் பயபக்தியுடையவர்களுக்கு அல்லாஹ்வே பாதுகாவலன் ஆவான்
هٰذَا بَصَآىِٕرُ لِلنَّاسِ وَهُدًی وَّرَحْمَةٌ لِّقَوْمٍ یُّوْقِنُوْنَ ۟
هٰذَاஇதுبَصَآىِٕرُதெளிவான சான்றுகள்لِلنَّاسِமனிதர்களுக்குوَ هُدًیமேலும் வழிகாட்டியாகவும்وَّ رَحْمَةٌமேலும் அருளாகவும்لِّقَوْمٍசமுதாயத்திற்குیُّوْقِنُوْنَஉறுதியாக நம்புகின்ற
ஹாதா Bபஸா'இரு லின்னாஸி வ ஹுத(ன்)வ் வ ரஹ்மதுல் லிகவ்மி(ன்)ய் யூகினூன்
இது (குர்ஆன்) மனிதர்களுக்கு தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டதாகவும், உறுதியான நம்பிக்கையுடைய சமூகத்தாருக்கு நேர்வழியாகவும், ரஹ்மத்தாகவும் இருக்கிறது.
اَمْ حَسِبَ الَّذِیْنَ اجْتَرَحُوا السَّیِّاٰتِ اَنْ نَّجْعَلَهُمْ كَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ۙ سَوَآءً مَّحْیَاهُمْ وَمَمَاتُهُمْ ؕ سَآءَ مَا یَحْكُمُوْنَ ۟۠
اَمْஅல்லதுحَسِبَஎண்ணிக் கொண்டார்களாالَّذِیْنَஎவர்கள்اجْتَرَحُواசெய்தார்களோالسَّیِّاٰتِதீமைகளைاَنْஎன்றுنَّجْعَلَهُمْஅவர்களை நாம் ஆக்குவோம்كَالَّذِیْنَஅவர்களைப் போலاٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِ ۙநற்செயல்களைسَوَآءًசமமாகمَّحْیَاهُمْஅவர்களின் வாழ்வும்وَ مَمَاتُهُمْ ؕஅவர்களின் மரணமும்سَآءَமிகக் கெட்டதுمَاஎதைیَحْكُمُوْنَ۠அவர்கள் தீர்ப்பளிக்கிறார்களோ
அம் ஹஸிBபல் லதீனஜ் தரஹுஸ் ஸய்யிஆதி அன் னஜ்'அலஹும் கல்லதீன ஆமனூ வ 'அமிலு ஸாலிஹாதி ஸவா'அம் மஹ்யாஹும் வ மமாதுஹும்; ஸா'அ மா யஹ்குமூன்
எவர்கள் தீமைகள் செய்கிறார்களோ அவர்களை, எவர்கள் ஈமான் கொண்டு நல்ல அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்குச் சமமாக நாம் ஆக்கிவிடுவோம் என்று எண்ணுகின்றார்களா? அவர்கள் உயிருடனிருப்பதும், மரணமடைவதும் சமமாகுமா? அவர்கள் முடிவு செய்து கொண்டது மிகவும் கெட்டதாகும்.  
وَخَلَقَ اللّٰهُ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِالْحَقِّ وَلِتُجْزٰی كُلُّ نَفْسٍ بِمَا كَسَبَتْ وَهُمْ لَا یُظْلَمُوْنَ ۟
وَ خَلَقَமேலும் படைத்தான்اللّٰهُஅல்லாஹ்السَّمٰوٰتِவானங்களைوَ الْاَرْضَமற்றும் பூமியைبِالْحَقِّசத்தியத்துடன்وَ لِتُجْزٰیமேலும் கூலி வழங்கப்படுவதற்காகكُلُّஒவ்வொருنَفْسٍۭஆத்மாவிற்கும்بِمَاஎதைكَسَبَتْஅது சம்பாதித்ததோوَ هُمْமேலும் அவர்கள்لَاமாட்டார்கள்یُظْلَمُوْنَஅநீதி இழைக்கப்பட
வ கலகல் லாஹுஸ் ஸமாவாதி வல் அர்ள Bபில்ஹக்கி வ லிதுஜ்Zஜா குல்லு னFப்ஸிம் Bபிமா கஸBபத் வ ஹும் லா யுள்லமூன்
வானங்களையும் பூமியையும் அல்லாஹ் உண்மையுடன் (தக்க காரணத்தைக் கொண்டே) படைத்துள்ளான்; ஒவ்வோர் ஆத்மாவும் அது தேடிக் கொண்டதற்குத் தக்க கூலி கொடுக்கப்படுவதற்காக; அவை அநியாயம் செய்யப்படமாட்டா.
اَفَرَءَیْتَ مَنِ اتَّخَذَ اِلٰهَهٗ هَوٰىهُ وَاَضَلَّهُ اللّٰهُ عَلٰی عِلْمٍ وَّخَتَمَ عَلٰی سَمْعِهٖ وَقَلْبِهٖ وَجَعَلَ عَلٰی بَصَرِهٖ غِشٰوَةً ؕ فَمَنْ یَّهْدِیْهِ مِنْ بَعْدِ اللّٰهِ ؕ اَفَلَا تَذَكَّرُوْنَ ۟
اَفَرَءَیْتَநீர் பார்த்தீரா?مَنِஎவன் ஒருவன்اتَّخَذَஆக்கிக் கொண்டானோاِلٰهَهٗதனது இறைவனாகهَوٰىهُதனது மன இச்சையைوَ اَضَلَّهُமேலும் அவனை வழிகேட்டில் விட்டுவிட்டான்اللّٰهُஅல்லாஹ்عَلٰیமீதுعِلْمٍஞானத்தின்وَّ خَتَمَமேலும் முத்திரையிட்டான்عَلٰیமீதுسَمْعِهٖஅவனது செவியின்وَ قَلْبِهٖமேலும் அவனது இதயத்தின்وَ جَعَلَமேலும் அமைத்தான்عَلٰیமீதுبَصَرِهٖஅவனது பார்வையின்غِشٰوَةً ؕஒரு திரையைفَمَنْஆகவே யார்یَّهْدِیْهِஅவனுக்கு நேர்வழி காட்டுவார்مِنْۢபிறகுبَعْدِபின்னரும்اللّٰهِ ؕஅல்லாஹ்வுக்குப்اَفَلَاநீங்கள் ஏன்تَذَكَّرُوْنَசிந்திக்க மாட்டீர்கள்?
அFபர'அய்த மனித் தகத இலாஹஹூ ஹவாஹு வ அளல் லஹுல் லாஹு 'அலா 'இல்மி(ன்)வ் வ கதம 'அலா ஸம்'இஹீ வ கல்Bபிஹீ வ ஜ'அல 'அலா Bபஸரிஹீ கிஷாவதன் Fபம(ன்)ய் யஹ்தீஹி மிம் Bபஃதில் லாஹ்; அFபலா ததக்கரூன்
(நபியே!) எவன் தன்னுடைய (சரீர, மனோ) இச்சையைத் தன்னுடைய தெய்வமாக ஆக்கிக் கொண்டானோ, அவனை நீர் பார்த்தீரா? மேலும், அறிந்தே அல்லாஹ் அவனை வழிகேட்டில் விட்டு அவனுடைய காதுகள் மீதும் இருதயத்தின் மீதும் முத்திரையிட்டு; இன்னும், அவனுடைய பார்வை மீதும் திரையை அமைத்துவிட்டான். எனவே, அல்லாஹ்வுக்குப் பிறகு அவனுக்கு நேர்வழி காண்பிப்பவர் யார்? நீங்கள் சிந்தித்து உணர வேண்டாமா?
وَقَالُوْا مَا هِیَ اِلَّا حَیَاتُنَا الدُّنْیَا نَمُوْتُ وَنَحْیَا وَمَا یُهْلِكُنَاۤ اِلَّا الدَّهْرُ ۚ وَمَا لَهُمْ بِذٰلِكَ مِنْ عِلْمٍ ۚ اِنْ هُمْ اِلَّا یَظُنُّوْنَ ۟
وَ قَالُوْاமேலும் அவர்கள் கூறினார்கள்مَاஇல்லைهِیَஇதுاِلَّاதவிரحَیَاتُنَاஎமது வாழ்க்கைالدُّنْیَاஇவ்வுலகنَمُوْتُநாம் மரணிக்கிறோம்وَ نَحْیَاமேலும் நாம் வாழ்கிறோம்وَ مَاமேலும் இல்லைیُهْلِكُنَاۤஎங்களை அழிப்பதுاِلَّاதவிரالدَّهْرُ ۚகாலம்وَ مَاமேலும் இல்லைلَهُمْஅவர்களுக்குبِذٰلِكَஅதைப் பற்றிمِنْஎந்தعِلْمٍ ۚஅறிவும்اِنْஇல்லைهُمْஅவர்கள்اِلَّاதவிரیَظُنُّوْنَஊகம் செய்கிறார்கள்
வ காலூ மா ஹிய இல்லா ஹயாதுனத் துன்யா னமூது வ னஹ்யா வமா யுஹ்லிகுனா இல்லத் தஹ்ர்; வமா லஹும் Bபிதாலிக மின் 'இல்மின் இன் ஹும் இல்லாயளுன்னூன்
மேலும் (மறுமையை நம்பாத) அவர்கள்: “நமது இந்த உலக வாழ்க்கையைத் தவிர வேறு (வாழ்க்கை) கிடையாது; நாம் இறக்கிறோம்; ஜீவிக்கிறோம்; “காலம்” தவிர வேறெதுவும் நம்மை அழிப்பதில்லை” என்று கூறுகிறார்கள்; அவர்களுக்கு அது பற்றிய அறிவு கிடையாது - அவர்கள் (இது பற்றிக் கற்பனையாக) எண்ணுவதைத் தவிர வேறில்லை.
وَاِذَا تُتْلٰی عَلَیْهِمْ اٰیٰتُنَا بَیِّنٰتٍ مَّا كَانَ حُجَّتَهُمْ اِلَّاۤ اَنْ قَالُوا ائْتُوْا بِاٰبَآىِٕنَاۤ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
وَ اِذَاமேலும் எப்பொழுதுتُتْلٰیஓதிக்காட்டப்படுகிறதோعَلَیْهِمْஅவர்களுக்குاٰیٰتُنَاநம்முடைய வசனங்கள்بَیِّنٰتٍதெளிவானவையாகمَّاஇல்லைكَانَஇருந்ததுحُجَّتَهُمْஅவர்களுடைய வாதம்اِلَّاۤதவிரاَنْஎன்றுقَالُواஅவர்கள் கூறுவதைائْتُوْاகொண்டு வாருங்கள்بِاٰبَآىِٕنَاۤஎங்கள் முன்னோர்களைاِنْஎன்றால்كُنْتُمْநீங்கள் இருந்தால்صٰدِقِیْنَஉண்மையாளர்களாக
வ இதா துத்லா 'அலய்ஹிம் ஆயாதுன Bபய்யினாதிம் மா கான ஹுஜ்ஜதஹும் இல்லா அன் காலு'தூ Bபி ஆBபா'இனா இன் குன்தும் ஸாதிகீன்
அவர்களிடம் தெளிவான நம் வசனங்கள் ஓதிக்காண்பிக்கப்பட்டால், அவர்களுடைய வாதமெல்லாம், “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் எங்களுடைய மூதாதையரை (எழுப்பிக்) கொண்டு வாருங்கள்” என்பது தவிர வேறில்லை.
قُلِ اللّٰهُ یُحْیِیْكُمْ ثُمَّ یُمِیْتُكُمْ ثُمَّ یَجْمَعُكُمْ اِلٰی یَوْمِ الْقِیٰمَةِ لَا رَیْبَ فِیْهِ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یَعْلَمُوْنَ ۟۠
قُلِகூறுவீராகاللّٰهُஅல்லாஹ்یُحْیِیْكُمْஉங்களை உயிர்ப்பிக்கிறான்ثُمَّபின்னர்یُمِیْتُكُمْஉங்களை மரணிக்கச் செய்கிறான்ثُمَّபின்னர்یَجْمَعُكُمْஉங்களை ஒன்று சேர்ப்பான்اِلٰیநோக்கிیَوْمِநாள்الْقِیٰمَةِமறுமைلَاஇல்லைرَیْبَசந்தேகம்فِیْهِஅதில்وَ لٰكِنَّஆனால்اَكْثَرَபெரும்பாலானالنَّاسِமனிதர்கள்لَاஅறியیَعْلَمُوْنَ۠மாட்டார்கள்
குலில் லாஹு யுஹ்யீகும் தும்ம யுமீதுகும் தும்ம யஜ்ம'உகும் இலா யவ்மில் கியாமதி லா ரய்Bப Fபீஹி வ லாகின்ன அக்தரன் னாஸி லா யஃலமூன்
“அல்லாஹ் உங்களுக்கு உயிர் கொடுக்கிறான்; பின்னர் அவனே உங்களை மரணம் அடையச் செய்கிறான்; பின்னர் கியாம நாளன்று அவன் உங்களை ஒன்று சேர்ப்பான் - இதில் சந்தேகமேயில்லை” எனினும் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள் என்று (நபியே!) நீர் கூறும்.  
وَلِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ وَیَوْمَ تَقُوْمُ السَّاعَةُ یَوْمَىِٕذٍ یَّخْسَرُ الْمُبْطِلُوْنَ ۟
وَ لِلّٰهِமேலும் அல்லாஹ்வுக்கேمُلْكُஆட்சிالسَّمٰوٰتِவானங்களின்وَ الْاَرْضِ ؕமற்றும் பூமியின்وَ یَوْمَமேலும் (எந்த) நாளில்تَقُوْمُஏற்படுமோالسَّاعَةُஇறுதி வேளைیَوْمَىِٕذٍஅந்நாளில்یَّخْسَرُநஷ்டமடைவார்கள்الْمُبْطِلُوْنَபொய்யர்கள்
வ லில்லாஹி முல்குஸ் ஸமாவாதி வல் அர்ள்; வ யவ்ம தகூமுஸ் ஸா'அது யவ்ம 'இதி(ன்)ய் யக்ஸருல் முBப்திலூன்
அன்றியும், வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது; மேலும், இறுதித் தீர்ப்புக்கான வேளை வந்து வாய்க்கும் நாளில், பொய்யர்கள் நஷ்டமடைவார்கள்.
وَتَرٰی كُلَّ اُمَّةٍ جَاثِیَةً ۫ كُلُّ اُمَّةٍ تُدْعٰۤی اِلٰی كِتٰبِهَا ؕ اَلْیَوْمَ تُجْزَوْنَ مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟
وَ تَرٰیமேலும் நீர் காண்பீர்كُلَّஒவ்வொருاُمَّةٍசமுதாயத்தையும்جَاثِیَةً ۫மண்டியிட்டதாகكُلُّஒவ்வொருاُمَّةٍசமுதாயமும்تُدْعٰۤیஅழைக்கப்படும்اِلٰیநோக்கிكِتٰبِهَا ؕஅதன் பதிவேட்டைاَلْیَوْمَஇன்றைய தினம்تُجْزَوْنَகூலி வழங்கப்படுவீர்கள்مَاஎதைكُنْتُمْநீங்கள் இருந்தீர்களோتَعْمَلُوْنَசெய்து கொண்டு
வ தரா குல்ல உம்மதின் ஜாதியஹ்; குல்லு உம்மதின் துத்'ஆ இலா கிதாBபிஹா அல் யவ்ம துஜ்Zஜவ்ன மா குன்தும் தஃமலூன்
(அன்று) ஒவ்வொரு சமுதாயத்தையும் முழந்தாளிட்டிருக்க (நபியே!) நீர் காண்பீர்; ஒவ்வொரு சமுதாயமும் அதனதன் (பதிவு) புத்தகத்தின் பக்கம் அழைக்கப்படும்; அன்று, நீங்கள் (உலகில்) செய்திருந்ததற்குரிய கூலி கொடுக்கப்படுவீர்கள்.
هٰذَا كِتٰبُنَا یَنْطِقُ عَلَیْكُمْ بِالْحَقِّ ؕ اِنَّا كُنَّا نَسْتَنْسِخُ مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟
هٰذَاஇதுكِتٰبُنَاஎமது ஏடுیَنْطِقُபேசுகிறதுعَلَیْكُمْஉங்களுக்கு எதிராகبِالْحَقِّ ؕஉண்மையுடன்اِنَّاநிச்சயமாக நாம்كُنَّاநாம் இருந்தோம்نَسْتَنْسِخُபதிவு செய்து கொண்டிருந்தோம்مَاஎவற்றைكُنْتُمْநீங்கள்تَعْمَلُوْنَசெய்து கொண்டிருந்தீர்களோ
ஹாதா கிதாBபுனா யன்திகு 'அலய்கும் Bபில்ஹக்க்; இன்னா குன்னா னஸ்தன்ஸிகு மா குன்தும் தஃமலூன்
“இது உங்களைப்பற்றிய உண்மையைக் கூறும் நம்முடைய புத்தகம்; நிச்சயமாக நாம் நீங்கள் செய்து வந்ததைப் பதிவு செய்து கொண்டிருந்தோம்” (என்று கூறப்படும்).
فَاَمَّا الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَیُدْخِلُهُمْ رَبُّهُمْ فِیْ رَحْمَتِهٖ ؕ ذٰلِكَ هُوَ الْفَوْزُ الْمُبِیْنُ ۟
فَاَمَّاஆனால்الَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِநற்செயல்களைفَیُدْخِلُهُمْஅவர்களைப் புகுத்துவான்رَبُّهُمْஅவர்களுடைய இறைவன்فِیْஇல்رَحْمَتِهٖ ؕஅவனுடைய அருள்ذٰلِكَஅதுதான்هُوَஅதுالْفَوْزُவெற்றிالْمُبِیْنُதெளிவானது
Fப அம்மல் லதீன ஆமானூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி Fபயுத்கிலுஹும் ரBப்Bபுஹும் Fபீ ரஹ்மதிஹ்; தாலிக ஹுவல் Fபவ்Zஜுல் முBபீன்
ஆகவே, எவர்கள் ஈமான் கொண்டு நல்லமல்கள் செய்து வந்தார்களோ, அவர்களை அவர்களுடைய இறைவன் தன் ரஹ்மத்தில் பிரவேசிக்கச் செய்வான்; அதுவே தெளிவான வெற்றியாகும்.
وَاَمَّا الَّذِیْنَ كَفَرُوْا ۫ اَفَلَمْ تَكُنْ اٰیٰتِیْ تُتْلٰی عَلَیْكُمْ فَاسْتَكْبَرْتُمْ وَكُنْتُمْ قَوْمًا مُّجْرِمِیْنَ ۟
وَ اَمَّاஆனால்الَّذِیْنَஎவர்கள்كَفَرُوْا ۫நிராகரித்தார்களோاَفَلَمْஇல்லையாتَكُنْஇருக்கاٰیٰتِیْஎனது வசனங்கள்تُتْلٰیஓதிக்காட்டப்படعَلَیْكُمْஉங்களுக்குفَاسْتَكْبَرْتُمْஅப்போது நீங்கள் பெருமையடித்தீர்கள்وَ كُنْتُمْமேலும் நீங்கள் இருந்தீர்கள்قَوْمًاஒரு கூட்டத்தினராகمُّجْرِمِیْنَகுற்றவாளிகளாக
வ அம்மல் லதீன கFபரூ அFபலம் தகுன் ஆயாதீ துத்லா 'அலய்கும் Fபஸ்தக்Bபர்தும் வ குன்தும் கவ்மம் முஜ்ரிமீன்
ஆனால், நிராகரித்தவர்களிடம்: “உங்களுக்கு என் வசனங்கள் ஓதிக்காண்பிக்கப்பட்டுக் கொண்டு இருக்கவில்லையா? அப்பொழுது நீங்கள் பெருமையடித்துக் கொண்டு குற்றவாளிகளாக இருந்தீர்கள்” (என்று சொல்லப்படும்).
وَاِذَا قِیْلَ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ وَّالسَّاعَةُ لَا رَیْبَ فِیْهَا قُلْتُمْ مَّا نَدْرِیْ مَا السَّاعَةُ ۙ اِنْ نَّظُنُّ اِلَّا ظَنًّا وَّمَا نَحْنُ بِمُسْتَیْقِنِیْنَ ۟
وَ اِذَاமேலும் எப்போதுقِیْلَகூறப்பட்டதோاِنَّநிச்சயமாகوَعْدَவாக்குறுதிاللّٰهِஅல்லாஹ்வின்حَقٌّஉண்மையானதுوَّ السَّاعَةُமேலும் மறுமை நாள்لَاஇல்லைرَیْبَசந்தேகம்فِیْهَاஅதில்قُلْتُمْநீங்கள் கூறினீர்கள்مَّاஇல்லைنَدْرِیْநாங்கள் அறிவோம்مَاஎன்னவென்றுالسَّاعَةُ ۙமறுமை நாள்اِنْஇல்லைنَّظُنُّநாங்கள் கருதுகிறோம்اِلَّاதவிரظَنًّاஒரு ஊகமாகوَّ مَاமேலும் இல்லைنَحْنُநாங்கள்بِمُسْتَیْقِنِیْنَஉறுதி கொண்டவர்களாக
வ இதா கீல இன்ன வஃதல்லாஹி ஹக்கு(ன்)வ் வஸ் ஸா'அது லா ரய்Bப Fபீஹா குல்தும் மா னத்ரீ மஸ் ஸா'அது இன் னளுன்னு இல்லா ளன்ன(ன்)வ் வமா னஹ்னு Bபிமுஸ்தய்கினீன்
மேலும் “நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது; மறுமை நாள் அது பற்றியும் சந்தேகமில்லை” என்று கூறப்பட்ட போது; “(மறுமை) நாள் என்ன என்று நாங்கள் அறியோம்; அது ஒரு வெறும் கற்பனை என்றே நாங்கள் கருதுகிறோம். எனவே (அதை) நாங்கள் உறுதியென நம்புபவர்களல்லர்” என்று நீங்கள் கூறினீர்கள்.
وَبَدَا لَهُمْ سَیِّاٰتُ مَا عَمِلُوْا وَحَاقَ بِهِمْ مَّا كَانُوْا بِهٖ یَسْتَهْزِءُوْنَ ۟
وَ بَدَاமேலும் வெளியாகும்لَهُمْஅவர்களுக்குسَیِّاٰتُதீமைகள்مَاஎவற்றைعَمِلُوْاஅவர்கள் செய்தார்களோوَ حَاقَமேலும் சூழ்ந்துகொள்ளும்بِهِمْஅவர்களைمَّاஎதைكَانُوْاஅவர்கள்بِهٖஅதைக் கொண்டுیَسْتَهْزِءُوْنَபரிகசித்துக் கொண்டிருந்தார்களோ
வ Bபதா லஹும் ஸய்யிஆது மா 'அமிலூ வ ஹாக Bபிஹிம் மா கானூ Bபிஹீ யஸ்தஹ்Zஜி'ஊன்
அவர்கள் செய்த தீமையெல்லாம் (அந்நாளில்) அவர்களுக்கு வெளியாகும்; எதை அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ, அதுவே அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்.
وَقِیْلَ الْیَوْمَ نَنْسٰىكُمْ كَمَا نَسِیْتُمْ لِقَآءَ یَوْمِكُمْ هٰذَا وَمَاْوٰىكُمُ النَّارُ وَمَا لَكُمْ مِّنْ نّٰصِرِیْنَ ۟
وَ قِیْلَமேலும் சொல்லப்படும்الْیَوْمَஇன்றைய தினம்نَنْسٰىكُمْநாம் உங்களை மறக்கிறோம்كَمَاஎவ்வாறுنَسِیْتُمْநீங்கள் மறந்தீர்களோلِقَآءَசந்திப்பைیَوْمِكُمْஉங்களுடைய நாளின்هٰذَاஇந்தوَ مَاْوٰىكُمُமேலும் உங்கள் தங்குமிடம்النَّارُநரக நெருப்புوَ مَاமேலும் இல்லைلَكُمْஉங்களுக்குمِّنْஎந்தنّٰصِرِیْنَஉதவியாளர்களும்
வ கீலல் யவ்ம னன்ஸாகும் கமா னஸீதும் லிகா'அ யவ்மிகும் ஹாதா வ மாவாகுமுன் னாரு வமா லகும் மின் னாஸிரீன்
இன்னும், “நீங்கள் உங்களுடைய இந்நாளின் சந்திப்பை மறந்து விட்டது போன்றே, இன்றைய தினம் நாம் உங்களை மறக்கிறோம்; அன்றியும் நீங்கள் தங்குமிடம் நரகம் தான்; மேலும், உங்களுக்கு உதவி செய்பவர் எவருமில்லை” என்று (அவர்களுக்குக்) கூறப்படும்.
ذٰلِكُمْ بِاَنَّكُمُ اتَّخَذْتُمْ اٰیٰتِ اللّٰهِ هُزُوًا وَّغَرَّتْكُمُ الْحَیٰوةُ الدُّنْیَا ۚ فَالْیَوْمَ لَا یُخْرَجُوْنَ مِنْهَا وَلَا هُمْ یُسْتَعْتَبُوْنَ ۟
ذٰلِكُمْஅதுبِاَنَّكُمُஏனெனில் நீங்கள்اتَّخَذْتُمْஆக்கிக் கொண்டீர்கள்اٰیٰتِவசனங்களைاللّٰهِஅல்லாஹ்வின்هُزُوًاபரிகாசமாகوَّ غَرَّتْكُمُமேலும் உங்களை ஏமாற்றிவிட்டதுالْحَیٰوةُவாழ்க்கைالدُّنْیَا ۚஇவ்வுலகفَالْیَوْمَஆகவே இன்றைய தினம்لَاஇல்லைیُخْرَجُوْنَஅவர்கள் வெளியேற்றப்படுவார்கள்مِنْهَاஅதிலிருந்துوَ لَاமேலும் இல்லைهُمْஅவர்கள்یُسْتَعْتَبُوْنَமன்னிப்புக் கோர அனுமதிக்கப்படுவார்கள்
தாலிகும் Bபி அன்னகுமுத் தகத்தும் ஆயாதில் லாஹி ஹுZஜுவ(ன்)வ் வ கர்ரத்குமுல் ஹயாதுத் துன்யா; Fபல் யவ்ம லா யுக்ரஜூன மின்ஹா வ லாஹும் யுஸ்தஃதBபூன்
நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களை ஏளனமாக எடுத்துக் கொண்டதனாலும் இவ்வுலக வாழ்க்கை உங்களை மயக்கி ஏமாற்றி விட்டதினாலுமே இந்த நிலை. இன்றைய தினத்தில் அதிலிருந்து அவர்கள் வெளியேற்றப்படவும் மாட்டார்கள்; மன்னிப்பளிக்கப்படவும் மாட்டார்கள்.
فَلِلّٰهِ الْحَمْدُ رَبِّ السَّمٰوٰتِ وَرَبِّ الْاَرْضِ رَبِّ الْعٰلَمِیْنَ ۟
فَلِلّٰهِஎனவே அல்லாஹ்வுக்கேالْحَمْدُபுகழனைத்தும்رَبِّஇறைவன்السَّمٰوٰتِவானங்களின்وَ رَبِّமேலும் இறைவன்الْاَرْضِபூமியின்رَبِّஇறைவன்الْعٰلَمِیْنَஅகிலங்களின்
Fபலில்லாஹில் ஹம்து ரBப்Bபிஸ் ஸமாவாதி வ ரBப்Bபில் அர்ளி ரBப்Bபில்-'ஆலமீன்
ஆகவே வானங்களுக்கும் இறைவனான - பூமிக்கும் இறைவனான - அகிலத்தாருக்கெல்லாம் இறைவனான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
وَلَهُ الْكِبْرِیَآءُ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ۪ وَهُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟۠
وَ لَهُஅவனுக்கேالْكِبْرِیَآءُபெருமைفِیஉள்ளالسَّمٰوٰتِவானங்கள்وَ الْاَرْضِ ۪மற்றும் பூமிوَ هُوَமேலும் அவன்الْعَزِیْزُமிகைத்தவன்الْحَكِیْمُ۠ஞானமிக்கவன்
வ லஹுல் கிBப்ரியா'உ Fபிஸ்ஸமாவாதி வல் அர்ளி வ ஹுவல் 'அZஜீZஜுல் ஹகீம்
இன்னும், வானங்களிலும், பூமியிலுமுள்ள பெருமை அவனுக்கே உரியது; மேலும், அவன் தான் (யாவரையும்) மிகைத்தவன், ஞானம் மிக்கோன்.