56. ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி)

மக்கீ, வசனங்கள்: 96

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
اِذَا وَقَعَتِ الْوَاقِعَةُ ۟ۙ
اِذَا وَقَعَتِநிகழ்ந்து விட்டால்الْوَاقِعَةُ ۙ‏நிகழக்கூடிய மறுமை
இதா வக'அதில் வாகி'அஹ்
மாபெரும் நிகழ்ச்சி(யான இறுதிநாள்) ஏற்பட்டால் -
لَیْسَ لِوَقْعَتِهَا كَاذِبَةٌ ۟ۘ
لَيْسَமுடியாதுلِـوَقْعَتِهَاஅது நிகழ்வதைكَاذِبَةٌ‌ ۘ‏பொய்ப்பிக்க
லய்ஸ லிவக்'அதிஹா காதிBபஹ்
அந்நிகழ்ச்சியைப் பொய்யாக்குவது எதுவுமில்லை.
خَافِضَةٌ رَّافِعَةٌ ۟ۙ
خَافِضَةٌதாழ்த்தக்கூடியதுرَّافِعَةٌ ۙ‏உயர்த்தக்கூடியது
கFபிளதுர் ராFபி'அஹ்
அது (தீயோரைத்) தாழ்த்தி விடும்; (நல்லோரை) உயர்த்தி விடும்.
اِذَا رُجَّتِ الْاَرْضُ رَجًّا ۟ۙ
اِذَا رُجَّتِகுலுக்கப்பட்டால்الْاَرْضُபூமிرَجًّا ۙ‏பலமாக
இதா ருஜ்ஜதில் அர்ளு ரஜ்ஜா
பூமி நடுக்கத்தால் நடுக்கமடையச் செய்யும் போது.
وَّبُسَّتِ الْجِبَالُ بَسًّا ۟ۙ
وَّبُسَّتِதூளாக ஆக்கப்பட்டால்الْجِبَالُமலைகள்بَسًّا ۙ‏தூள்
வ Bபுஸ்ஸதில் ஜிBபாலு Bபஸ்ஸா
இன்னும் மலைகள் தூள் தூளாக ஆக்கப்படும் போது,
فَكَانَتْ هَبَآءً مُّنْۢبَثًّا ۟ۙ
فَكَانَتْஆகிவிடும்هَبَآءًஒளிக் கதிர்களைப் போல்مُّنْۢبَـثًّا ۙ‏பரவுகின்ற(து)
Fபகானத் ஹBபா'அம் மும்Bபத்தா
பின்னர், அது பரப்பப்பட்ட புழுதி ஆகிவிடும்.
وَّكُنْتُمْ اَزْوَاجًا ثَلٰثَةً ۟ؕ
وَّكُنْـتُمْநீங்கள் ஆகிவிடுவீர்கள்اَزْوَاجًاவகையினராகثَلٰـثَـةً ؕ‏மூன்று
வ குன்தும் அZஜ்வாஜன் தலாதஹ்
(அப்போது) நீங்களும் மூன்று பிரிவினர்களாகி விடுவீர்கள்.
فَاَصْحٰبُ الْمَیْمَنَةِ ۙ۬ مَاۤ اَصْحٰبُ الْمَیْمَنَةِ ۟ؕ
فَاَصْحٰبُ الْمَيْمَنَةِ ۙஅருள் மிகுந்த வலப்பக்கம் உடையவர்கள்!مَاۤ اَصْحٰبُ الْمَيْمَنَةِ ؕ‏யார்? அருள் மிகுந்த வலப்பக்கம் உடையவர்கள்!
Fப அஸ் ஹாBபுல் மய்மனதி மா அஸ் ஹாBபுல் மய்மனஹ்
(முதலாமவர்) வலது பாரிசத்திலுள்ளோர் - வலது பாரிசத்துக்காரர் யார்? (என்பதை அறிவீர்களா?)
وَاَصْحٰبُ الْمَشْـَٔمَةِ ۙ۬ مَاۤ اَصْحٰبُ الْمَشْـَٔمَةِ ۟ؕ
وَاَصْحٰبُ الْمَشْــٴَــمَةِ ۙதுர்பாக்கியம் நிறைந்த இடப்பக்கம் உடையவர்கள்!مَاۤ اَصْحٰبُ الْمَشْــٴَــمَةِؕ‏துர்பாக்கியம் நிறைந்த இடப்பக்கம் உடையவர்கள் யார்?
வ அஸ் ஹாBபுல் மஷ்'அமதி மா அஸ் ஹாBபுல் மஷ்'அமஹ்
(இரண்டாமவர்) இடது பாரிசத்திலுள்ளோர் - இடது பாரிசத்திலுள்ளோர் யார்? (என அறிவீர்களா?)
وَالسّٰبِقُوْنَ السّٰبِقُوْنَ ۟ۚۙ
وَالسّٰبِقُوْنَமுந்தியவர்கள்தான்السّٰبِقُوْنَۚ ۙ‏முந்தியவர்கள்
வஸ்ஸாBபிகூனஸ் ஸாBபிகூன்
(மூன்றாமவர் நம்பிக்கையில்) முந்தியவர்கள் (மறுமையிலும்) முந்தியவர்களே யாவார்கள்.
اُولٰٓىِٕكَ الْمُقَرَّبُوْنَ ۟ۚ
اُولٰٓٮِٕكَஅவர்கள்الْمُقَرَّبُوْنَ‌ۚ‏மிக நெருக்கமானவர்கள்
உலா'இகல் முகர்ரBபூன்
இவர்கள் (இறைவனுக்கு) அண்மையிலாக்கப்பட்டவர்கள்.
فِیْ جَنّٰتِ النَّعِیْمِ ۟
فِىْ جَنّٰتِசொர்க்கங்களில்النَّعِيْمِ‏இன்பங்கள் நிறைந்த
Fபீ ஜன்னாதின் ன'ஈம்
இவர்கள் பாக்கியங்களுள்ள (சுவனச்) சோலைகளில் இருப்பர்.
ثُلَّةٌ مِّنَ الْاَوَّلِیْنَ ۟ۙ
ثُلَّةٌஅதிகமானவர்கள்مِّنَ الْاَوَّلِيْنَۙ‏முந்தியவர்களில்
துல்லதும் மினல் அவ்வலீன்
முதலாமவரில் ஒரு பெருங் கூட்டத்தினரும்,
وَقَلِیْلٌ مِّنَ الْاٰخِرِیْنَ ۟ؕ
وَقَلِيْلٌஇன்னும் குறைவானவர்கள்مِّنَ الْاٰخِرِيْنَؕ‏பின்னோரில்
வ கலீலும் மினல் ஆ கிரீன்
பின்னவர்களில், ஒரு சொற்பத்தொகையினரும் -
عَلٰی سُرُرٍ مَّوْضُوْنَةٍ ۟ۙ
عَلٰى سُرُرٍகட்டில்களின் மீதுمَّوْضُوْنَةٍۙ‏ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட(து)
அலா ஸுருரிம் மவ்ளூனஹ்
(பொன்னிழைகளால்) ஆக்கப் பெற்ற கட்டில்களின் மீது -
مُّتَّكِـِٕیْنَ عَلَیْهَا مُتَقٰبِلِیْنَ ۟
مُّتَّكِـــِٕيْنَசாய்ந்தவர்களாகعَلَيْهَاஅவற்றின் மீதுمُتَقٰبِلِيْنَ‏ஒருவரை ஒருவர் பார்த்தவர்களாக
முத்தகி'ஈன 'அலய்ஹா முதகாBபிலீன்
ஒருவரையொருவர் முன்னோக்கியவர்களாக, அவற்றின் மீது சாய்ந்திருப்பார்கள்.
یَطُوْفُ عَلَیْهِمْ وِلْدَانٌ مُّخَلَّدُوْنَ ۟ۙ
يَطُوْفُசுற்றி வருவார்கள்عَلَيْهِمْஅவர்கள் மீதுوِلْدَانٌசிறுவர்கள்مُّخَلَّدُوْنَۙ‏நிரந்தரமான(வர்கள்)
யதூFபு 'அலய்ஹிம் வில்தா னும் முகல்லதூன்
நிலையான இளமையுடைய இளைஞர்கள் (இவர்கள் பணிக்காகச்) சுற்றிக் கொண்டே இருப்பார்கள்.
بِاَكْوَابٍ وَّاَبَارِیْقَ ۙ۬ وَكَاْسٍ مِّنْ مَّعِیْنٍ ۟ۙ
بِاَكْوَابٍகுவளைகளுடனும்وَّاَبَارِيْقَ ۙகூஜாக்களுடனும்وَكَاْسٍகிண்ணங்களுடனும்مِّنْ مَّعِيْنٍۙ‏தூய்மையான மது நிறைந்த
Bபி அக்வாBபி(ன்)வ் வ அBபாரீக், வ காஸிம் மிம் ம'ஈன்
தெளிந்த பானங்களால் நிறம்பிய கிண்ணங்களையும், கெண்டிகளையும், குவளைகளையும் கொண்டு (அவர்களிடம் சுற்றி வருவார்கள்).
لَّا یُصَدَّعُوْنَ عَنْهَا وَلَا یُنْزِفُوْنَ ۟ۙ
لَّا يُصَدَّعُوْنَ عَنْهَاஅவர்கள் தலைவலிக்கும் ஆளாக மாட்டார்கள்/ அதனால்وَلَا يُنْزِفُوْنَۙ‏அவர்கள் அறிவு தடுமாறவும் மாட்டார்கள்
லா யுஸத்த'ஊன 'அன்ஹா வலா யுன்ZஜிFபூன்
(அப்பானங்களைப் பருகும்) அவர்கள் அவற்றினால் தலை நோய்க்காளாக மாட்டார்கள்; மதிமயங்கவுமாட்டார்கள்.
وَفَاكِهَةٍ مِّمَّا یَتَخَیَّرُوْنَ ۟ۙ
وَفَاكِهَةٍபழங்களுடனும்مِّمَّا يَتَخَيَّرُوْنَۙ‏அவர்கள் விரும்பி தேர்ந்தெடுக்கின்ற
வ Fபாகிஹதிம் மிம்மா யதகய்யரூன்
இன்னும் அவர்கள் தெரிந்தெடுக்கும் கனி வகைகளையும் -
وَلَحْمِ طَیْرٍ مِّمَّا یَشْتَهُوْنَ ۟ؕ
وَلَحْمِமாமிசங்களுடனும்طَيْرٍபறவைمِّمَّا يَشْتَهُوْنَؕ‏அவர்கள் மனம் விரும்புகின்றவற்றின்
வ லஹ்மி தய்ரிம் மிம்மா யஷ்தஹூன்
விரும்பும் பட்சிகளின் மாமிசத்தையும் (கொண்டு அவ்விளைஞர்கள் வருவார்கள்).
وَحُوْرٌ عِیْنٌ ۟ۙ
وَحُوْرٌவெண்மையான பெண்கள்عِيْنٌۙ‏கண்ணழகிகளான
வ ஹூருன்'ஈன்
(அங்கு இவர்களுக்கு) ஹூருல் ஈன் (என்னும் நெடிய கண்களுடைய) கன்னியர் இருப்பர்.
كَاَمْثَالِ اللُّؤْلُوءِ الْمَكْنُوْنِ ۟ۚ
كَاَمْثَالِபோல் உள்ளاللُّـؤْلُـوٴِமுத்துக்களைالْمَكْنُوْنِ‌ۚ‏பாதுகாக்கப்பட்ட(து)
க அம்தாலில் லு'லு'இல் மக்னூன்
மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் அவர்கள் (இருப்பார்கள்).
جَزَآءً بِمَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
جَزَآءًۢ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ‏கூலியாக/அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கு
ஜZஜா'அம் Bபிமா கானூ யஃமலூன்
(இவையாவும்) சுவர்க்க வாசிகள் (இம்மையில் செய்து கொண்டிருந்த) செயல்களுக்கு கூலியாகும்.
لَا یَسْمَعُوْنَ فِیْهَا لَغْوًا وَّلَا تَاْثِیْمًا ۟ۙ
لَا يَسْمَعُوْنَஅவர்கள் செவியுற மாட்டார்கள்فِيْهَاஅதில்لَغْوًاவீண் பேச்சுகளை(யும்)وَّلَا تَاْثِيْمًا ۙ‏பாவமான பேச்சுகளையும்
லா யஸ்ம'ஊன Fபீஹா லக்வ(ன்)வ் வலா தா'தீமா
அங்கு இவர்கள் வீணானதையும், பாவமுண்டாக்குவதையும் (கொண்ட பேச்சுகளைச்) செவியுற மாட்டார்கள்.
اِلَّا قِیْلًا سَلٰمًا سَلٰمًا ۟
اِلَّا قِيْلًاபேச்சைத் தவிரسَلٰمًا سَلٰمًا‏ஸலாம் ஸலாம்
இல்லா கீலன் ஸலாமன் ஸலாமா
“ஸலாம், ஸலாம்” என்னும் சொல்லையே (செவியுறுவார்கள்).
وَاَصْحٰبُ الْیَمِیْنِ ۙ۬ مَاۤ اَصْحٰبُ الْیَمِیْنِ ۟ؕ
وَاَصْحٰبُ الْيَمِيْنِ ۙவலது பக்கம் உடையவர்கள்!مَاۤ اَصْحٰبُ الْيَمِيْنِؕ‏வலது பக்கம் உடையவர்கள் யார்
வ அஸ் ஹாBபுல் யமீனி மா அஸ் ஹாBபுல் யமீன்
இன்னும் வலப்புறத்தார்கள் - வலப்புறத்தார்கள் யார்? (என்பதை அறிவீர்களா?)
فِیْ سِدْرٍ مَّخْضُوْدٍ ۟ۙ
فِىْ سِدْرٍமரங்களின் அருகிலும்مَّخْضُوْدٍۙ‏முட்கள் நீக்கப்பட்ட இலந்தை
Fபீ ஸித்ரிம் மக்ளூத்
(அவர்கள்) முள்ளில்லாத இலந்தை மரத்தின் கீழும்;
وَّطَلْحٍ مَّنْضُوْدٍ ۟ۙ
وَّطَلْحٍவாழை மரங்களுக்குمَّنْضُوْدٍۙ‏குலைகுலையாய் தொங்குகின்ற
வ தல்ஹிம் மன்ளூத்
(நுனி முதல் அடிவரை) குலை குலையாகப் பழங்களுடைய வாழை மரத்தின் கீழும்;
وَّمَآءٍ مَّسْكُوْبٍ ۟ۙ
وَّ مَآءٍநீருக்கு அருகிலும்مَّسْكُوْبٍۙ‏ஓடிக்கொண்டே இருக்கின்ற
வ மா'இம் மஸ்கூBப்
(சதா) ஒலித்தோடிக் கொண்டிருக்கும் நீரின் அருகிலும்,
وَّفَاكِهَةٍ كَثِیْرَةٍ ۟ۙ
وَّفَاكِهَةٍபழங்களுக்கு அருகிலும்كَثِيْرَةٍۙ‏அதிகமான
வ Fபாகிஹதின் கதீரஹ்
ஏராளமான கனிவகைகளின் மத்தியிலும் -
لَّا مَقْطُوْعَةٍ وَّلَا مَمْنُوْعَةٍ ۟ۙ
لَّا مَقْطُوْعَةٍதீர்ந்துவிடாதوَّلَا مَمْنُوْعَةٍۙ‏தடுக்கப்படாத
லா மக்தூ'அதி(ன்)வ் வலா மம்னூ'அஹ்
அவை அற்றுப் போகாதவை, (உண்ணத்) தடுக்கப்படாதவை -
وَّفُرُشٍ مَّرْفُوْعَةٍ ۟ؕ
وَّ فُرُشٍவிரிப்புகளிலும்مَّرْفُوْعَةٍؕ‏உயர்வான
வ Fபுருஷிம் மர்Fபூ'அஹ்
மேலும், உன்னதமான விரிப்புகளில் (அமர்ந்திருப்பர்).
اِنَّاۤ اَنْشَاْنٰهُنَّ اِنْشَآءً ۟ۙ
اِنَّاۤநிச்சயமாக நாம்اَنْشَاْنٰهُنَّஅவர்களை உருவாக்குவோம்اِنْشَآءًۙ‏முற்றிலும் புதிதாகவே
இன்னா அன்ஷா'னாஹுன்ன இன்ஷா'ஆ
நிச்சயமாக (ஹூருல் ஈன் என்னும் பெண்களைப்) புதிய படைப்பாக, நாம் உண்டாக்கி;
فَجَعَلْنٰهُنَّ اَبْكَارًا ۟ۙ
فَجَعَلْنٰهُنَّஅவர்களை நாம் ஆக்குவோம்اَبْكَارًاۙ‏கன்னிப் பெண்களாக
Fபஜ'அல்னாஹுன்ன அBப்காரா
அப்பெண்களைக் கன்னிகளாகவும்;
عُرُبًا اَتْرَابًا ۟ۙ
عُرُبًاகணவனை நேசிப்பவர்களாகاَتْرَابًاۙ‏சம வயதுடையவர்களாக
'உருBபன் அத்ராBபா
(தம் துணைவர் மீது) பாசமுடையோராகவும், சம வயதினராகவும்,
لِّاَصْحٰبِ الْیَمِیْنِ ۟ؕ۠
لِّاَصْحٰبِ الْيَمِيْنِؕ‏வலப் பக்கமுடையவர்களுக்காக
லி அஸ் ஹாBபில் யமீன்
வலப்புறத்தோருக்காக (ஆக்கி வைத்துள்ளோம்).  
ثُلَّةٌ مِّنَ الْاَوَّلِیْنَ ۟ۙ
ثُلَّةٌஅதிகமானவர்கள்مِّنَ الْاَوَّلِيْنَۙ‏முன்னோரிலும்
துல்லதும் மினல் அவ்வ லீன்
முன்னுள்ளோரில் ஒரு கூட்டமும்,
وَثُلَّةٌ مِّنَ الْاٰخِرِیْنَ ۟ؕ
وَثُلَّةٌஅதிகமானவர்கள்مِّنَ الْاٰخِرِيْنَؕ‏இன்னும் பின்னோரிலும்
வ துல்லதும் மினல் ஆகிரீன்
பின்னுள்ளோரில் ஒரு கூட்டமும் (வலப்புறத்தோராக இருப்பார்கள்).
وَاَصْحٰبُ الشِّمَالِ ۙ۬ مَاۤ اَصْحٰبُ الشِّمَالِ ۟ؕ
وَاَصْحٰبُ الشِّمَالِ ۙஇடப்பக்கமுடையவர்கள்!مَاۤ اَصْحٰبُ الشِّمَالِؕ‏இடப்பக்கமுடையவர்கள் யார்?
வ அஸ் ஹாBபுஷ் ஷிமாலி மா அஸ் ஹாBபுஷ் ஷிமால்
இடது பாரிசத்திலுள்ளவர்களோ இடது பாரிசத்திலுள்ளவர்கள் யார்? (என்று அறிவீர்களா?)
فِیْ سَمُوْمٍ وَّحَمِیْمٍ ۟ۙ
فِىْ سَمُوْمٍகடுமையான வெப்பக் காற்றிலும்وَّحَمِيْمٍۙ‏நன்கு கொதிக்கின்ற சுடு நீரிலும்
Fபீ ஸமூமி(ன்)வ் வ ஹமீம்
(அவர்கள்) கொடிய அனல் காற்றிலும், கொதிக்கும் நீரிலும் -
وَّظِلٍّ مِّنْ یَّحْمُوْمٍ ۟ۙ
وَّظِلٍّநிழலிலும்مِّنْ يَّحْمُوْمٍۙ‏கரும் புகையின்
வ ளில்லிம் மி(ன்)ய் யஹ்மூம்
அடர்ந்து இருண்ட புகையின் நிழலிலும் இருப்பார்கள்.
لَّا بَارِدٍ وَّلَا كَرِیْمٍ ۟
لَّا بَارِدٍகுளிர்ந்திருக்காதுوَّلَا كَرِيْمٍ‏நறுமணம் உடையதாகவும் இருக்காது
லா Bபாரிதி(ன்)வ் வலா கரீம்
(அங்கு) குளிர்ச்சியுமில்லை; நலமுமில்லை.
اِنَّهُمْ كَانُوْا قَبْلَ ذٰلِكَ مُتْرَفِیْنَ ۟ۚۖ
اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்كَانُوْاஇருந்தனர்قَبْلَ ذٰ لِكَஇதற்கு முன்னர்مُتْرَفِيْنَۚ  ۖ‏சுகவாசிகளாக
இன்னஹும் கானூ கBப்ல தாலிக முத்ரFபீன்
நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் (உலகத்தில்) சுகபோகிகளாக இருந்தனர்.
وَكَانُوْا یُصِرُّوْنَ عَلَی الْحِنْثِ الْعَظِیْمِ ۟ۚ
وَكَانُوْاஇருந்தனர்يُصِرُّوْنَபிடிவாதம் பிடித்தவர்களாகعَلَى الْحِنْثِபாவத்தின் மீதுالْعَظِيْمِ‌ۚ‏பெரும்
வ கானூ யுஸிர்ரூன 'அலல் ஹின்தில் 'அளீம்
ஆனால், அவர்கள் பெரும் பாவத்தின் மீது நிலைத்தும் இருந்தனர்.
وَكَانُوْا یَقُوْلُوْنَ ۙ۬ اَىِٕذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَّعِظَامًا ءَاِنَّا لَمَبْعُوْثُوْنَ ۟ۙ
وَكَانُوْاஇருந்தனர்يَقُوْلُوْنَ ۙகூறுபவர்களாகاَٮِٕذَا مِتْنَاநாங்கள் இறந்துவிட்டால்وَكُنَّاஇன்னும் ஆகிவிட்டால்تُرَابًاமண்ணாக(வும்)وَّعِظَامًاஎலும்புகளாகவும்ءَاِنَّا لَمَبْعُوْثُوْنَۙ‏நாங்கள் எழுப்பப்படுவோமா?
வ கானூ யகூலூன அ'இதா மித்னா வ குன்னா துராBப(ன்)வ் வ இளாமன் 'அ-இன்னா லமBப்'ஊதூன்
மேலும், அவர்கள்: “நாம் மரித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகி விட்டாலும், நாம் மீண்டும் நிச்சயமாக எழுப்பப்படுவோமா?” என்று கேட்டுக் கொண்டு இருந்தனர்.
اَوَاٰبَآؤُنَا الْاَوَّلُوْنَ ۟
اَوَاٰبَآؤُنَاஎங்கள் மூதாதைகளுமாالْاَوَّلُوْنَ‏முன்னோர்களான
அவ ஆBபா'உனல் அவ்வலூன்
“அல்லது, முன்னோர்களான நம் தந்தையருமா? (எழுப்பப்படுவர்?” என்றும் கூறினர்.)
قُلْ اِنَّ الْاَوَّلِیْنَ وَالْاٰخِرِیْنَ ۟ۙ
قُلْநீர் கூறுவீராக!اِنَّநிச்சயமாகالْاَوَّلِيْنَமுன்னோரும்وَالْاٰخِرِيْنَۙ‏பின்னோரும்
குல் இன்னல் அவ்வலீன வல் ஆகிரீன்
(நபியே!) நீர் கூறும்: “(நிச்சயமாக உங்களில்) முன்னோர்களும், பின்னோர்களும்.
لَمَجْمُوْعُوْنَ ۙ۬ اِلٰی مِیْقَاتِ یَوْمٍ مَّعْلُوْمٍ ۟
لَمَجْمُوْعُوْنَ ۙஒன்று சேர்க்கப்படுவீர்கள்اِلٰى مِيْقَاتِஒரு குறிப்பிட்ட நேரத்தில்يَوْمٍநாளின்مَّعْلُوْمٍ‏அறியப்பட்ட
லமஜ்மூ'ஊன இலா மீகாதி யவ்மிம் மஃலூம்
“குறிப்பிட்ட நாளின் ஒரு நேரத்தில் (நீங்கள் யாவரும்) ஒன்று கூட்டப்படுவீர்கள்.
ثُمَّ اِنَّكُمْ اَیُّهَا الضَّآلُّوْنَ الْمُكَذِّبُوْنَ ۟ۙ
ثُمَّபிறகுاِنَّكُمْநிச்சயமாக நீங்கள்اَيُّهَا الضَّآلُّوْنَவழிகேடர்களே!الْمُكَذِّبُوْنَۙ‏பொய்ப்பிக்கின்ற
தும்ம இன்னகும் அய்யுஹள் ளால்லூனல் முகத்திBபூன்
அதற்குப் பின்னர்: “பொய்யர்களாகிய வழி கேடர்களே! நிச்சயமாக நீங்கள்,
لَاٰكِلُوْنَ مِنْ شَجَرٍ مِّنْ زَقُّوْمٍ ۟ۙ
لَاٰكِلُوْنَசாப்பிடுவீர்கள்مِنْ شَجَرٍமரத்தில் இருந்துதான்مِّنْ زَقُّوْمٍۙ‏சக்கூம்
ல ஆகிலூன மின் ஷஜ ரிம் மின் Zஜக்கூம்
ஜக்கூம் (என்னும் கள்ளி) மரத்திலிருந்தே நீங்கள் புசிப்பவர்கள்.
فَمَالِـُٔوْنَ مِنْهَا الْبُطُوْنَ ۟ۚ
فَمٰلِـــٴُـوْنَநிரப்புவீர்கள்مِنْهَاஅதில் இருந்துالْبُطُوْنَ‌ۚ‏வயிறுகளை
Fபமாலி'ஊன மின்ஹல் Bபுதூன்
ஆகவே, “அதைக் கொண்டே வயிறுகளை நிறப்புவீர்கள்.
فَشٰرِبُوْنَ عَلَیْهِ مِنَ الْحَمِیْمِ ۟ۚ
فَشٰرِبُوْنَகுடிப்பீர்கள்عَلَيْهِஅதற்கு மேலாகمِنَ الْحَمِيْمِ‌ۚ‏கடுமையாக கொதிக்கின்ற சுடு நீரை
FபஷாரிBபூன 'அலய்ஹி மினல் ஹமீம்
அப்புறம் அதன்மேல் கொதிக்கும் நீரையே குடிப்பீர்கள்.
فَشٰرِبُوْنَ شُرْبَ الْهِیْمِ ۟ؕ
فَشٰرِبُوْنَஇன்னும் குடிப்பீர்கள்شُرْبَகுடிப்பதைப் போல்الْهِيْمِؕ‏தாகித்த ஒட்டகங்கள்
FபஷாரிBபூன ஷுர்Bபல் ஹீம்
“பின்னும் ஹீம் - தாகமுள்ள ஒட்டகை குடிப்பதைப் போல் குடிப்பீர்கள்.”
هٰذَا نُزُلُهُمْ یَوْمَ الدِّیْنِ ۟ؕ
هٰذَاஇதுதான்نُزُلُهُمْஅவர்களுக்குரிய விருந்தோம்பலாகும்يَوْمَ الدِّيْنِؕ‏கூலி நாளில்
ஹாதா னுZஜுலுஹும் யவ்மத் தீன்
இதுதான் நியாயத் தீர்ப்பு நாளில் அவர்களுக்கு விருந்தாகும்.
نَحْنُ خَلَقْنٰكُمْ فَلَوْلَا تُصَدِّقُوْنَ ۟
نَحْنُநாம்தான்خَلَقْنٰكُمْஉங்களைப் படைத்தோம்فَلَوْلَا تُصَدِّقُوْنَ‏உண்மை என நம்பமாட்டீர்களா?
னஹ்னு கலக்னாகும் Fபலவ் லா துஸத்திகூன்
நாமே உங்களைப் படைத்தோம். எனவே, (நாம் கூறுவதை) நீங்கள் உண்மையென்று நம்ப வேண்டாமா?
اَفَرَءَیْتُمْ مَّا تُمْنُوْنَ ۟ؕ
اَفَرَءَيْتُمْஅறிவியுங்கள்!مَّا تُمْنُوْنَؕ‏நீங்கள் செலுத்துகின்ற இந்திரியத்தைப் பற்றி
அFபர'அய்தும் மா தும்னூன்
(கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா?
ءَاَنْتُمْ تَخْلُقُوْنَهٗۤ اَمْ نَحْنُ الْخٰلِقُوْنَ ۟
ءَاَنْتُمْ تَخْلُقُوْنَهٗۤஅதை நீங்கள் படைக்கின்றீர்களா?اَمْஅல்லதுنَحْنُநாம்தான்الْخٰلِقُوْنَ‏படைப்பவர்களா?
'அ-அன்தும் தக்லுகூ னஹூ அம் னஹ்னுல் காலிகூன்
அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா?
نَحْنُ قَدَّرْنَا بَیْنَكُمُ الْمَوْتَ وَمَا نَحْنُ بِمَسْبُوْقِیْنَ ۟ۙ
نَحْنُநாம்தான்قَدَّرْنَاநிர்ணயித்தோம்بَيْنَكُمُஉங்களுக்கு மத்தியில்الْمَوْتَமரணத்தைوَمَا نَحْنُநாங்கள் இல்லைبِمَسْبُوْقِيْنَۙ‏முடியாதவர்கள்
னஹ்னு கத்தர்னா Bபய்ன குமுல் மவ்த வமா னஹ்னு Bபிமஸ்Bபூகீன்
உங்களுக்கிடையில் மரணத்தையும் நாமே ஏற்படுத்தியுள்ளோம்; எனவே நம்மை எவரும் மிகைக்க முடியாது.
عَلٰۤی اَنْ نُّبَدِّلَ اَمْثَالَكُمْ وَنُنْشِئَكُمْ فِیْ مَا لَا تَعْلَمُوْنَ ۟
عَلٰٓى اَنْ نُّبَدِّلَநாங்கள் மாற்றுவதற்குاَمْثَالَـكُمْஉங்கள் உருவங்களைوَنُـنْشِئَكُمْஇன்னும் உங்களை உருவாக்கிவிடுவதற்குفِىْ مَا لَا تَعْلَمُوْنَ‏நீங்கள் அறியாத ஒன்றில்
அலா அன் னுBபத்தில அம்தாலகும் வ னுன்ஷி'அகும் Fபீ மா லா தஃலமூன்
(அன்றியும் உங்களைப் போக்கி விட்டு) உங்கள் போன்றோரை பதிலாகக் கொண்டு வந்து நீங்கள் அறியாத உருவத்தில் உங்களை உண்டாக்கவும் (நாம் இயலாதவர்கள் அல்ல).
وَلَقَدْ عَلِمْتُمُ النَّشْاَةَ الْاُوْلٰی فَلَوْلَا تَذَكَّرُوْنَ ۟
وَلَـقَدْதிட்டவட்டமாகعَلِمْتُمُநீங்கள் அறிந்தீர்கள்.النَّشْاَةَபடைத்திருப்பதைالْاُوْلٰىமுதல் முறைفَلَوْلَا تَذَكَّرُوْنَ‏நீங்கள் நல்லுபதேசம் பெறமாட்டீர்களா?
வ லகத் 'அலிம்துமுன் னஷ் அதல் ஊலா Fபலவ் லா ததக்கரூன்
முதல் முறையாக (நாம் உங்களைப்) படைத்தது பற்றி நிச்சயமாக நீங்கள் அறிவீர்கள் - எனவே (அதிலிருந்து நினைவு கூர்ந்து) நீங்கள் உணர்வு பெற வேண்டாமா?
اَفَرَءَیْتُمْ مَّا تَحْرُثُوْنَ ۟ؕ
اَفَرَءَيْتُمْநீங்கள் அறிவியுங்கள்!مَّاஎதைتَحْرُثُوْنَؕ‏உழுகின்றீர்கள்
அFபர'அய்தும் மா தஹ்ருதூன்
(இப்பூமியில்) விதைப்பதை நீங்கள் கவனித்தீர்களா?
ءَاَنْتُمْ تَزْرَعُوْنَهٗۤ اَمْ نَحْنُ الزّٰرِعُوْنَ ۟
ءَاَنْتُمْ تَزْرَعُوْنَهٗۤஅதை நீங்கள் முளைக்க வைக்கின்றீர்களா?اَمْஅல்லதுنَحْنُநாம்தான்الزّٰرِعُوْنَ‏முளைக்க வைக்கின்றோமா?
'அ-அன்தும் தZஜ்ர'ஊனஹூ அம் னஹ்னுZஜ் Zஜாரி'ஊன்
அதனை நீங்கள் முளைக்கச் செய்கின்றீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கின்றோமா?
لَوْ نَشَآءُ لَجَعَلْنٰهُ حُطَامًا فَظَلْتُمْ تَفَكَّهُوْنَ ۟
لَوْ نَشَآءُநாம் நாடினால்لَجَـعَلْنٰهُஅதை ஆக்கிவிடுவோம்حُطَامًاகுப்பையாகفَظَلْتُمْநீங்கள் ஆகி இருப்பீர்கள்تَفَكَّهُوْنَ‏நீங்கள் ஆச்சரியப்படுகின்றவர்களாக
லவ் னஷா'உ லஜ'அல் னாஹு ஹுதாமன் Fபளல்தும் தFபக்கஹூன்
நாம் நாடினால் திட்டமாக அதனைக் கூளமாய் ஆக்கிவிடுவோம் - அப்பால் நீங்கள் ஆச்சரியப்பட்டுக் கொண்டு இருப்பீர்கள்.
اِنَّا لَمُغْرَمُوْنَ ۟ۙ
اِنَّا لَمُغْرَمُوْنَۙ‏நிச்சயமாக நாங்கள் நஷ்டவாளிகள்
இன்னா லமுக்ரமூன்
“நிச்சயமாக நாம் கடன் பட்டவர்களாகி விட்டோம்.
بَلْ نَحْنُ مَحْرُوْمُوْنَ ۟
بَلْமாறாகنَحْنُநாங்கள்مَحْرُوْمُوْنَ‏பெரும் இழப்புக்குள்ளானவர்கள்
Bபல் னஹ்னு மஹ்ரூமூன்
“மேலும், (பயிர்களிலிருந்து எதுவும் பெற முடியாதவர்களாகத்) தடுக்கப்பட்டு விட்டோம்” (என்றும் கூறிக் கொண்டிருப்பீர்கள்).
اَفَرَءَیْتُمُ الْمَآءَ الَّذِیْ تَشْرَبُوْنَ ۟ؕ
اَفَرَءَيْتُمُஅறிவியுங்கள்!الْمَآءَதண்ணீரைப் பற்றிالَّذِىْஎதுتَشْرَبُوْنَؕ‏குடிக்கின்றீர்கள்
அFபர'அய்துமுல் மா'அல்லதீ தஷ்ரBபூன்
அன்றியும், நீங்கள் குடிக்கும் நீரைக் கவனித்தீர்களா?
ءَاَنْتُمْ اَنْزَلْتُمُوْهُ مِنَ الْمُزْنِ اَمْ نَحْنُ الْمُنْزِلُوْنَ ۟
ءَاَنْـتُمْ اَنْزَلْـتُمُوْهُஅதை நீங்கள் இறக்கினீர்களா?مِنَ الْمُزْنِகார்மேகத்தில் இருந்துاَمْஅல்லதுنَحْنُநாம்தான்الْمُنْزِلُوْنَ‏இறக்குகின்றவர்களா?
'அ-அன்தும் அன்Zஜல்துமூஹு மினல் முZஜ்னி அம் னஹ்னுல் முன்Zஜிலூன்
மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்குகிறோமா?
لَوْ نَشَآءُ جَعَلْنٰهُ اُجَاجًا فَلَوْلَا تَشْكُرُوْنَ ۟
لَوْ نَشَآءُநாம் நாடினால்جَعَلْنٰهُஅதை ஆக்கிவிடுவோம்اُجَاجًاஉப்பு நீராகفَلَوْلَا تَشْكُرُوْنَ‏நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?
லவ் னஷா'உ ஜ'அல்னாஹு உஜாஜன் Fபலவ் லா தஷ்குரூன்
நாம் நாடினால், அதை உப்பாக ஆக்கியிருப்போம் (இவற்றுக்கெல்லாம்) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?
اَفَرَءَیْتُمُ النَّارَ الَّتِیْ تُوْرُوْنَ ۟ؕ
اَفَرَءَيْتُمُஅறிவியுங்கள்!النَّارَநெருப்பைப் பற்றிالَّتِىْஎதுتُوْرُوْنَؕ‏தீ மூட்டுகின்றீர்கள்
அFபர'அய்துமுன் னாரல் லதீ தூரூன்
நீங்கள் மூட்டும் நெருப்பை கவனித்தீர்களா?
ءَاَنْتُمْ اَنْشَاْتُمْ شَجَرَتَهَاۤ اَمْ نَحْنُ الْمُنْشِـُٔوْنَ ۟
ءَاَنْتُمْ اَنْشَاْتُمْநீங்கள் உருவாக்கினீர்களா?شَجَرَتَهَاۤஅதன் மரத்தைاَمْஅல்லதுنَحْنُநாம்الْمُنْشِــٴُــوْنَ‏உருவாக்குகின்றோமா?
'அ-அன்தும் அன்ஷா'தும் ஷஜரதஹா அம் னஹ்னுல் முன்ஷி'ஊன்
அதன் மரத்தை நீங்கள் உண்டாக்கினீர்களா? அல்லது நாம் உண்டு பண்ணுகிறோமா?
نَحْنُ جَعَلْنٰهَا تَذْكِرَةً وَّمَتَاعًا لِّلْمُقْوِیْنَ ۟ۚ
نَحْنُநாம்جَعَلْنٰهَاஅதை ஆக்கினோம்تَذْكِرَةًஒரு நினைவூட்டலாகவும்وَّمَتَاعًاஒரு பலனாகவும்لِّلْمُقْوِيْنَ‌ۚ‏பயணிகளுக்கு
னஹ்னு ஜ'அல்னாஹா தத்கிர த(ன்)வ் வ மதா'அல் லில்முக்வீன்
நாம் அதனை நினைவூட்டுவதாகவும், பயணிகளுக்கு பயனளிப்பதற்காகவும் உண்டாக்கினோம்.
فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِیْمِ ۟۠
فَسَبِّحْஆகவே, துதிப்பீராக!بِاسْمِபெயரைرَبِّكَஉமது இறைவனின்الْعَظِيْمِ‏மகத்தான
FபஸBப்Bபிஹ் Bபிஸ்மி ரBப்Bபிகல் 'அளீம்
ஆகவே, மகத்தான உம்முடைய ரப்பின் திருநாமத்தைக் கொண்டு தஸ்பீஹு செய்வீராக.
فَلَاۤ اُقْسِمُ بِمَوٰقِعِ النُّجُوْمِ ۟ۙ
فَلَاۤ اُقْسِمُநான் சத்தியம் செய்கின்றேன்بِمَوٰقِعِவிழுகின்ற இடங்கள் மீதுالنُّجُوْمِۙ‏‏நட்சத்திரங்கள்
Fபலா உக்ஸிமு Bபிம வாகி'இன்னுஜூம்
நட்சத்திர மண்டலங்களின் மீது நான் சத்தியம் செய்கிறேன்.
وَاِنَّهٗ لَقَسَمٌ لَّوْ تَعْلَمُوْنَ عَظِیْمٌ ۟ۙ
وَاِنَّهٗநிச்சயமாக இதுلَقَسَمٌசத்தியமாகும்لَّوْ تَعْلَمُوْنَநீங்கள் அறிந்து கொண்டால்عَظِيْمٌۙ‏மாபெரும்
வ இன்னஹூ லகஸமுல் லவ்தஃலமூன'அளீம்
நீங்கள் அறீவீர்களாயின் நிச்சயமாக இது மகத்தான பிரமாணமாகும்.
اِنَّهٗ لَقُرْاٰنٌ كَرِیْمٌ ۟ۙ
اِنَّهٗ لَـقُرْاٰنٌநிச்சயமாக இது குர்ஆனாகும்كَرِيْمٌۙ‏கண்ணியமான
இன்னஹூ ல குர்'ஆனுன் கரீம்
நிச்சயமாக, இது மிகவும் கண்ணியமும் சங்கையும் மிக்க குர்ஆன் ஆகும்.
فِیْ كِتٰبٍ مَّكْنُوْنٍ ۟ۙ
فِىْ كِتٰبٍபதிவேட்டில் உள்ளمَّكْنُوْنٍۙ‏பாதுகாக்கப்பட்ட(து)
Fபீ கிதாBபிம் மக்னூன்
பாதுகாக்கப்பட்ட ஏட்டில் இருக்கிறது.
لَّا یَمَسُّهٗۤ اِلَّا الْمُطَهَّرُوْنَ ۟ؕ
لَّا يَمَسُّهٗۤஇதைத் தொடமாட்டார்கள்اِلَّا الْمُطَهَّرُوْنَؕ‏மிகவும் பரிசுத்தமானவர்களைத் தவிர
லா யமஸ்ஸுஹூ இல்லல் முதஹ்ஹரூன்
தூய்மையானவர்களைத் தவிர (வேறெவரும்) இதனைத் தொட மாட்டார்கள்.
تَنْزِیْلٌ مِّنْ رَّبِّ الْعٰلَمِیْنَ ۟
تَنْزِيْلٌஇறக்கப்பட்ட வேதமாகும்مِّنْ رَّبِّஇறைவனிடமிருந்துالْعٰلَمِيْنَ‏அகிலங்களின்
தன்Zஜீலும் மிர் ரBப்Bபில்'ஆலமீன்
அகிலத்தாரின் இறைவனால் இது இறக்கியருளப்பட்டது.
اَفَبِهٰذَا الْحَدِیْثِ اَنْتُمْ مُّدْهِنُوْنَ ۟ۙ
اَفَبِهٰذَا?/இந்தالْحَـدِيْثِபேச்சைاَنْتُمْநீங்கள்مُّدْهِنُوْنَۙ‏அலட்சியம் செய்கின்றீர்கள்
அFபBபிஹாதல் ஹதீதி அன்தும் முத்ஹினூன்
அவ்வாறிருந்தும், (குர்ஆனின் மகத்தான) இச்செய்தி பற்றி நீங்கள் அலட்சியமாக இருக்கிறீர்களா?
وَتَجْعَلُوْنَ رِزْقَكُمْ اَنَّكُمْ تُكَذِّبُوْنَ ۟
وَتَجْعَلُوْنَஆக்கிக் கொண்டீர்களா?رِزْقَكُمْஉங்கள் நன்றியாகاَنَّكُمْநிச்சயமாக நீங்கள்تُكَذِّبُوْنَ‏பொய்ப்பிப்பதையே
வ தஜ்'அலூன ரிZஜ்ககும் அன்னகும் துகத்திBபூன்
நீங்கள் பொய்ப்பிப்பதை (இறைவன் தந்த) உங்கள் பாக்கியங்களுக்கு (நன்றியாக) ஆக்குகின்றீர்களா?
فَلَوْلَاۤ اِذَا بَلَغَتِ الْحُلْقُوْمَ ۟ۙ
فَلَوْلَاۤ اِذَا بَلَغَتِதடுத்திருக்கவேண்டாமா அது அடைந்தபோதுالْحُـلْقُوْمَۙ‏தொண்டைக் குழியை
Fபலவ் லா இதா Bபலகதில் ஹுல்கூம்
மரணத் தறுவாயில் ஒருவனின் (உயிர்) தொண்டைக் குழியை அடையும் போது -
وَاَنْتُمْ حِیْنَىِٕذٍ تَنْظُرُوْنَ ۟ۙ
وَاَنْتُمْநீங்கள்حِيْنَٮِٕذٍஅந்நேரத்தில்تَـنْظُرُوْنَۙ‏நீங்கள் பார்க்கின்றீர்கள்
வ அன்தும் ஹீன'இதின் தன்ளுரூன்
அந்நேரம் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
وَنَحْنُ اَقْرَبُ اِلَیْهِ مِنْكُمْ وَلٰكِنْ لَّا تُبْصِرُوْنَ ۟
وَنَحْنُநாம்اَقْرَبُமிக அருகில்اِلَيْهِஅவருக்குمِنْكُمْஉங்களை விடوَلٰـكِنْஎன்றாலும்لَّا تُبْصِرُوْنَ‏நீங்கள் பார்க்க முடியாது
வ னஹ்னு அக்ரBபு இலய்ஹி மின்கும் வ லாகில் லா துBப்ஸிரூன்
ஆயினும், நாமோ அவனுக்கு உங்களை விட சமீபமாக இருக்கிறோம். எனினும் நீங்கள் பார்க்கிறீர்களில்லை.
فَلَوْلَاۤ اِنْ كُنْتُمْ غَیْرَ مَدِیْنِیْنَ ۟ۙ
فَلَوْلَاۤ اِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்غَيْرَ مَدِيْنِيْنَۙ‏கூலி கொடுக்கப்படாதவர்களாக
Fபலவ் லா இன் குன்தும் கய்ர மதீனீன்
எனவே, (மறுமையில் உங்கள் செயல்களுக்கு) கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள் என்று இருந்தால் -
تَرْجِعُوْنَهَاۤ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
تَرْجِعُوْنَهَاۤஅதை நீங்கள் திரும்ப கொண்டு வந்திருக்கலாமல்லவா?اِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்صٰدِقِيْنَ‏உண்மையாளர்களாக
தர்ஜி'ஊனஹா இன் குன்தும் ஸாதிகீன்
நீங்கள் உண்மையாளராக இருப்பின், (அவ்வுயிரை) மீளவைத்திருக்கலாமே!
فَاَمَّاۤ اِنْ كَانَ مِنَ الْمُقَرَّبِیْنَ ۟ۙ
فَاَمَّاۤஆகاِنْ كَانَஇருந்தால்مِنَ الْمُقَرَّبِيْنَۙ‏நெருக்கமானவர்களில்
Fப அம்மா இன் கான மினல் முகர்ரBபீன்
(இறந்தவர் இறைவனுக்கு) நெருக்கமானவர்களில் நின்றும் இருப்பாராயின்.
فَرَوْحٌ وَّرَیْحَانٌ ۙ۬ وَّجَنَّتُ نَعِیْمٍ ۟
فَرَوْحٌஇறையருளும்وَّ رَيْحَانٌ ۙஉணவும்وَّجَنَّتُசொர்க்கமும்نَعِيْمٍ‏இன்பம் நிறைந்த
Fபரவ்ஹு(ன்)வ் வ ரய்ஹா னு(ன்)வ் வ ஜன்னது ன'ஈம்
அவருக்குச் சுகமும், நல்லுணவும் இன்னும் பாக்கியமுள்ள சுவர்க்கமும் உண்டு.
وَاَمَّاۤ اِنْ كَانَ مِنْ اَصْحٰبِ الْیَمِیْنِ ۟ۙ
وَاَمَّاۤஆகاِنْ كَانَஇருந்தால்مِنْ اَصْحٰبِ الْيَمِيْنِۙ‏வலப்பக்கம் உடையவர்களில்
வ அம்மா இன் கான மின் அஸ் ஹாBபில் யமீன்
அன்றியும், அவர் வலப்புறத்துத் தோழராக இருந்தால்,
فَسَلٰمٌ لَّكَ مِنْ اَصْحٰبِ الْیَمِیْنِ ۟ؕ
فَسَلٰمٌஸலாம் உண்டாகட்டும்لَّكَஉமக்குمِنْ اَصْحٰبِ الْيَمِيْنِؕ‏வலப்பக்கம் உடையவர்களில்
Fபஸலாமுல் லக மின் அஸ் ஹாBபில் யமீன்
“வலப்புறத்தோரே! உங்களுக்கு “ஸலாம்” உண்டாவதாக” (என்று கூறப்படும்).
وَاَمَّاۤ اِنْ كَانَ مِنَ الْمُكَذِّبِیْنَ الضَّآلِّیْنَ ۟ۙ
وَاَمَّاۤ اِنْ كَانَஆக/இருந்தால்مِنَ الْمُكَذِّبِيْنَபொய்ப்பித்த(வர்களில்)الضَّآلِّيْنَۙ‏வழிகெட்டவர்கள்
வ அம்மா இன் கான மினல் முகத்திBபீனள் ளால்லீன்
ஆனால் அவன் வழிகெட்டுப் பொய்யாக்குவோரில் (ஒருவனாக) இருந்தால்
فَنُزُلٌ مِّنْ حَمِیْمٍ ۟ۙ
فَنُزُلٌவிருந்து(ம்)مِّنْ حَمِيْمٍۙ‏கடுமையாக கொதிக்கின்ற சுடு நீரின்
FபனுZஜுலும் மின் ஹமீம்
கொதிக்கும் நீரே, அவனுக்கு விருந்தாகும்.
وَّتَصْلِیَةُ جَحِیْمٍ ۟
وَّتَصْلِيَةُநெருப்பில் பொசுக்குவதும்தான்جَحِيْمٍ‏நரகத்தில்
வ தஸ்லியது ஜஹீம்
நரக நெருப்பில் தள்ளப்படுவது (விருந்தாகும்).
اِنَّ هٰذَا لَهُوَ حَقُّ الْیَقِیْنِ ۟ۚ
اِنَّநிச்சயமாகهٰذَا لَهُوَஇதுதான்حَقُّஉண்மையாகும்الْيَـقِيْنِۚ‏மிக உறுதியான
இன்ன ஹாத லஹுவ ஹக்குல் யகீன்
நிச்சயமாக இதுதான் உறுதியான உண்மையாகும்.
فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِیْمِ ۟۠
فَسَبِّحْஆக, துதிப்பீராக!بِاسْمِபெயரைرَبِّكَஉமது இறைவனின்الْعَظِيْمِ‏மகத்தான(வன்)
FபஸBப்Bபிஹ் Bபிஸ்மி ரBப்Bபிகல் 'அளீம்
எனவே (நபியே!) மகத்தான உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு தஸ்பீஹு செய்வீராக.