اِنَّاநிச்சயமாக நாம்جَعَلْنٰهُஇதை ஆக்கினோம்قُرْءٰنًاகுர்ஆனாகعَرَبِيًّاஅரபி மொழிلَّعَلَّكُمْ تَعْقِلُوْنَۚநீங்கள் சிந்தித்து புரிய வேண்டும் என்பதற்காக
எனினும் இவர்களை விட மிக்க பலசாலிகளான அவர்களைப் பிடியாகப் பிடித்து நாம் அழித்து இருக்கிறோம்; (இவ்வாறாக உங்களுக்கு) முன்னிருந்தோரின் உதாரணம் நடந்தேறியிருக்கிறது.
(நபியே!) நீர் அவர்களிடம்: “வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?” என்று கேட்டால், “யாவரையும் மிகைத்தவனும், எல்லாவற்றையும் அறிந்தோனுமாகிய அவனே அவற்றை படைத்தான்” என்று நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள்.
الَّذِىْஎப்படிப்பட்டவன்جَعَلَஅவன் ஆக்கினான்لَـكُمُஉங்களுக்குالْاَرْضَபூமியைمَهْدًاவிரிப்பாகوَّ جَعَلَஇன்னும் ஏற்படுத்தினான்لَكُمْஉங்களுக்குفِيْهَاஅதில்سُبُلًاபாதைகளைلَّعَلَّكُمْ تَهْتَدُوْنَۚநீங்கள் சரியான பாதையில் செல்வதற்காக
அவன்தான் வானத்திலிருந்து மழையை அளவோடு இறக்கி வைக்கிறான். பின்னர், அதனைக் கொண்டு இறந்து கிடந்த பூமியை நாம் தாம் உயிர்ப்பிக்கின்றோம். இவ்வாறே நீங்களும் (மரணத்திற்கு பின் உயிர்ப்படுத்தப் பெற்று) வெளிப்படுத்தப்படுவீர்கள்.
அவற்றின் முதுகுகளின் மீது நீங்கள் உறுதியாக அமர்ந்து கொள்வதற்காக; அவற்றின் மேல் நீங்கள் உறுதியாக அமர்ந்ததும், உங்கள் இறைவனுடைய அருளை நினைவு கூர்ந்து “இதன் மீது (செல்ல) சக்தியற்றவர்களாக இருந்த எங்களுக்கு, இதனை வசப்படுத்தித்தந்த அ(வ் விறை)வன் மிக்க பரிசுத்தமானவன்” என்று நீங்கள் கூறுவதற்காகவும்.
இன்னும், அவர்கள் அவனுடைய அடியார்களில் ஒரு பகுதியினரை அவனுக்கு(ப் பெண் சந்ததியை) ஆக்குகிறார்கள்; நிச்சயமாக மனிதன் பகிரங்கமான பெரும் நிராகரிப்பவனாக இருக்கின்றான்.
அர் ரஹ்மானுக்கு அவர்கள் எதனை ஒப்பாக்கினார்களோ அதை (அதாவது பெண் குழந்தையை) கொண்டு அவர்களில் ஒருவனுக்கு நற்செய்தி கூறப்படும்பொழுது அவனுடைய முகம் கருத்துப் போய்விடுகின்றது. மேலும் அவன் கோபம் நிரம்பியவனாகவும் ஆகிவிடுகின்றான்.
அன்றியும், அர் ரஹ்மானின் அடியார்களாகிய மலக்குகளை அவர்கள் பெண்களாக ஆக்குகிறார்கள்; அவர்கள், படைக்கப்பட்ட போது இவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்களா? அவர்களுடைய சாட்சியம் பதிவு செய்து வைக்கப்பட்டு, அவர்கள் கேள்வி கேட்கப்படுவார்கள்.
வ காலூ லவ் ஷா'அர் ரஹ்மானு மா 'அBபத்னாஹும்; மா லஹும் Bபிதாலிக மின் 'இல்மின் இன் ஹும் இல்லா யக்ருஸூன்
மேலும், “அர் ரஹ்மான் நாடியிருந்தால், அவர்களை நாங்கள் வணங்கியிருக்க மாட்டோம்” என்றும் அவர்கள் கூறுகின்றனர்; அவர்களுக்கு இதைப்பற்றி யாதோர் அறிவுமில்லை; அவர்கள் பொய்யே கூறுகிறார்கள்.
அப்படியல்ல! அவர்கள் கூறுகிறார்கள்: “நிச்சயமாக நாங்கள் எங்களுடைய மூதாதையர்களை ஒரு மார்க்கத்தில் கண்டோம்; நிச்சயமாக நாங்கள் அவர்களுடைய அடிச்சுவடுகளையே பின்பற்றுகிறோம்.”
வ கதாலிக மா அர்ஸல்னா மின் கBப்லிக Fபீ கர்யதிம் மின் னதீரின் இல்லா கால முத்ரFபூஹா இன்னா வஜத்னா ஆBபா'அனா 'அலா உம்மதி(ன்)வ் வ இன்னா 'அலா ஆதாரிஹிம் முக்ததூன்
இவ்வாறே உமக்கு முன்னரும் நாம் (நம்முடைய) தூதரை எந்த ஊருக்கு அனுப்பினாலும், அவர்களில் செல்வந்தர்கள்: “நிச்சயமாக நாங்கள் எங்கள் மூதாதையரை ஒரு மார்க்கத்தில் கண்டோம்; நிச்சயமாக நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகளையே பின்பற்றுகின்றோம்” என்று கூறாதிருக்கவில்லை.
قٰلَகூறினார்اَوَلَوْ جِئْتُكُمْநான் உங்களிடம் கொண்டு வந்தாலுமாبِاَهْدٰىமிகச் சிறந்த நேர்வழியைمِمَّاஎதைவிடوَجَدْتُّمْகண்டீர்களோعَلَيْهِஅதன் மீதுاٰبَآءَكُمْ ؕஉங்கள் மூதாதைகளைقَالُوْۤاஅவர்கள் கூறினார்கள்اِنَّاநிச்சயமாக நாங்கள்بِمَاۤ اُرْسِلْـتُمْநீங்கள் எதைக் கொடுத்து அனுப்பப்பட்டீர்களோبِهٖஅதைكٰفِرُوْنَநிராகரிப்பவர்கள்
கால அவ லவ் ஜி'துகும் Bபி அஹ்தா மிம்மா வஜத்த்தும் 'அலய்ஹி ஆBபா'அகும் காலூ இன்னா Bபிமா உர்ஸில்தும் Bபிஹீ காFபிரூன்
(அப்பொழுது அத்தூதர்,) “உங்கள் மூதாதையரை எதன்மீது நீங்கள் கண்டீர்களோ, அதை விட மேலான நேர்வழியை நான் உங்களுக்குக் கொண்டு வந்திருந்த போதிலுமா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள்: “நிச்சயமாக நாங்கள், எதைக்கொண்டு நீங்கள் அனுப்பப்பட்டிருக்கிறீர்களோ, அதை நிராகரிக்கிறோம்” என்று சொல்கிறார்கள்.
فَانْتَقَمْنَاஆகவே, நாம் பழிவாங்கினோம்مِنْهُمْஅவர்களிடம்فَانْظُرْஆக, நீர் கவனிப்பீராக!كَيْفَஎப்படிكَانَஇருந்ததுعَاقِبَةُமுடிவுالْمُكَذِّبِيْنَபொய்ப்பித்தவர்களின்
وَاِذْ قَالَகூறிய சமயத்தை நினைவு கூர்வீராக!اِبْرٰهِيْمُஇப்ராஹீம்لِاَبِيْهِதனது தந்தைக்கு(ம்)وَقَوْمِهٖۤதனது மக்களுக்கும்اِنَّنِىْ بَرَآءٌநிச்சயமாக நான் முற்றிலும் நீங்கியவன்مِّمَّا تَعْبُدُوْنَۙநீங்கள் வணங்குகின்ற அனைத்தையும் விட்டும்
வ இத் கால இBப்ராஹீமு லிஅBபீஹி வ கவ்மிஹீ இன்னனீ Bபரா'உம் மிம்மா தஃBபுதூன்
அன்றியும், இப்ராஹீம் தம் தந்தையையும், தம் சமூகத்தவர்களையும் நோக்கி: “நிச்சயமாக நான், நீங்கள் வழிபடுபவற்றை விட்டும் விலகிக் கொண்டேன்” என்று கூறியதையும்;
وَ جَعَلَهَاஇதை ஆக்கினார்كَلِمَةًۢஒரு வாக்கியமாகبَاقِيَةًநீடித்து இருக்கின்ற(து)فِىْ عَقِبِهٖதனது சந்ததிகளில்لَعَلَّهُمْ يَرْجِعُوْنَஅவர்கள் திரும்ப வேண்டும் என்பதற்காக
உமது இறைவனின் ரஹ்மத்தை (நல்லருளை) இவர்களா பங்கிடுகிறார்கள்? இவர்களுடைய உலகத் தேவைகளை இவர்களிடையே நாமே பங்கிட்டு இருக்கிறோம்.” இவர்களில் சிலர், சிலரை ஊழியத்திற்கு வைத்துக் கொள்ளும் பொருட்டு, இவர்களில் சிலரை, சிலரைவிட தரங்களில் நாம் உயர்த்தி இருக்கிறோம்; உம்முடைய இறைவனின் ரஹ்மத்து அவர்கள் சேகரித்து வைத்துக் கொண்டிருப்பதை விட மேலானதாகும்.
வ லவ் லா அ(ன்)ய் யகூனன் னாஸு உம்மத(ன்)வ் வாஹிததன் லஜ'அல்னா லிம(ன்)ய் யக்Fபுரு Bபிர் ரஹ்மானி லி Bபுயூதிஹிம் ஸுகுFபன் மின் Fபிள்ளதி(ன்)வ் வ ம'ஆரிஜ 'அலய்ஹா யள்ஹரூன்
நிராகரிப்போருக்கு நாம் கொடுக்கும் செல்வத்தைக் கண்டு, மனிதர்கள் (நிராகரிக்கும்) சமுதாயமாக ஆகிவிடுவார்கள் என்பது இல்லாவிட்டால், அவர்களின் வீட்டு முகடுகளையும், (அவற்றுக்கு அவர்கள்) ஏறிச் செல்லும் படிகளையும் நாம் வெள்ளியினால் ஆக்கியிருப்போம்.
எவனொருவன் அர் ரஹ்மானின் நல்லுபதேசத்தை விட்டும் கண்ணை மூடிக் கொள்வானோ, அவனுக்கு நாம் ஒரு ஷைத்தானை ஏற்படுத்தி விடுகிறோம்; அவன் இவனது நெருங்கிய நண்பனாகி விடுகிறான்.
இன்னும், அந்த ஷைத்தான்கள் அவர்களை நேரான பாதையிலிருந்து தடுத்து விடுகின்றன. ஆனாலும், தாங்கள் நேரான பாதையில் செலுத்தப்படுவதாகவே அவர்கள் எண்ணிக் கொள்கிறார்கள்.
எதுவரையென்றால், (இறுதியாக அத்தகையவன்) நம்மிடம் வரும்போது (ஷைத்தானிடம்):- “ஆ! எனக்கிடையிலும், உனக்கிடையிலும் கிழக்குத் திசைக்கும், மேற்குத் திசைக்கும் இடையேயுள்ள தூரம் இருந்திருக்க வேண்டுமே!” (எங்களை வழிகெடுத்த) இந்நண்பன் மிகவும் கெட்டவன்” என்று கூறுவான்.
வ லய் யன்Fப'அகுமுல் யவ்ம இத் ளலம்தும் அன்னகும் Fபில் 'அதாBபி முஷ்தரிகூன்
(அப்போது) “நீங்கள் அநியாயம் செய்த படியால் இன்று உங்களுக்கு நிச்சயமாக யாதொரு பயனும் ஏற்படாது; நீங்கள் வேதனையில் கூட்டாளிகளாக இருப்பீர்கள்” (என்று அவர்களுக்குச் சொல்லப்படும்).
اَوْஅல்லதுنُرِيَنَّكَநாம் உமக்கு காண்பிப்போம்الَّذِىْ وَعَدْنٰهُمْஅவர்களுக்கு நாம் வாக்களித்ததைفَاِنَّاநிச்சயமாக நாம்عَلَيْهِمْஅவர்கள் மீதுمُّقْتَدِرُوْنَமுழு ஆற்றல் உள்ளவர்கள்
வஸ்'அல் மன் அர்ஸல்னா மின் கBப்லிக மிர் ருஸுலினா 'அ ஜ'அல்னா மின் தூனிர் ரஹ்மானி ஆலிஹத(ன்)ய் யுஃBபதூன்
நம்முடைய தூதர்களில் உமக்கு முன்னே நாம் அனுப்பியவர்களை “அர் ரஹ்மானையன்றி வணங்கப்படுவதற்காக (வேறு) தெய்வங்களை நாம் ஏற்படுத்தினோமா?” என்று நீர் கேட்பீராக.
மூஸாவை நம்முடைய அத்தாட்சிகளுடன் ஃபிர்அவ்னிடமும், அவனுடைய சமுதாய தலைவர்களிடமும் திட்டமாக நாம் அனுப்பி வைத்தோம். அவர் (அவர்களை நோக்கி:) “நிச்சயமாக நாம் அகிலங்களின் இறைவனால் அனுப்பப்பட்ட தூதன் ஆவேன்” என்று கூறினார்.
وَمَا نُرِيْهِمْஅவர்களுக்கு நாம் காண்பிக்க மாட்டோம்مِّنْ اٰيَةٍஓர் அத்தாட்சியைاِلَّاதவிரهِىَஅதுاَكْبَرُபெரியதாக இருந்தேمِنْ اُخْتِهَاஅதன் சகோதரியை விடوَ اَخَذْنٰهُمْஇன்னும் நாம் அவர்களைப் பிடித்தோம்بِالْعَذَابِவேதனையால்لَعَلَّهُمْ يَرْجِعُوْنَஅல்லது திரும்புவதற்காக
வமா னுரீஹிம் மின் ஆயதின் இல்லா ஹிய அக்Bபரு மின் உக்திஹா வ அகத்னாஹும் Bபில்'அதாBபி ல'அல்லஹும் யர்ஜி'ஊன்
ஆனால் நாம் அவர்களுக்குக் காட்டிய ஒவ்வோர் அத்தாட்சியும், அடுத்ததை விட மிகவும் பெரிதாகவே இருந்தது; எனினும் அவர்கள் (பாவத்திலிருந்து) மீள்வதற்காக நாம் அவர்களை வேதனையைக் கொண்டே பிடித்தோம்.
மேலும், அவர்கள்: “சூனியக்காரரே (உம் இறைவன்) உம்மிடம் அறுதிமானம் செய்திருப்பதால், நீர் எங்களுக்காக உம்முடைய இறைவனை அழை(த்துப் பிரார்த்தனை செய்)யும், நிச்சயமாக நாங்கள் நேர்வழியை பெற்று விடுவோம்” என்று கூறினார்கள்.
வ னாதா Fபிர்'அவ்னு Fபீ கவ்மிஹீ கால யா கவ்மி அலய்ஸ லீ முல்கு மிஸ்ர வ ஹாதிஹில் அன்ஹாரு தஜ்ரீ மின் தஹ்தீ அFபலா துBப்ஸிரூன்
மேலும் ஃபிர்அவ்ன் தன் சமூகத்தாரிடம் பறை சாற்றினான்: “என்னுடைய சமூகத்தாரே! இந்த மிஸ்ரு (எகிப்தின்) அரசாங்கம், என்னுடையதல்லவா? என் (மாளிகை) அடியில் ஓடிக் கொண்டிருக்கும் (நீல நதியின்) இக்கால்வாய்களும் (என் ஆட்சிக்கு உட்பட்டவை என்பதைப்) பார்க்கவில்லையா?
فَاسْتَخَفَّஅற்பமாகக் கருதினான்قَوْمَهٗதனது மக்களைفَاَطَاعُوْهُؕஆக, அவர்கள் அவனுக்கு கீழ்ப்படிந்தனர்اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்كَانُوْاஇருந்தனர்قَوْمًاமக்களாகفٰسِقِيْنَபாவிகளான
(இவ்வாறாக) அவன் தன் சமூகத்தாரை (அவர்களுடைய அறிவை) இலேசாக மதித்தான்; அவனுக்கு அவர்களும் கீழ்ப்படிந்து விட்டார்கள். நிச்சயமாக அவர்கள் வரம்பை மீறிய சமூகத்தாராகவும் ஆகி விட்டார்கள்.
فَلَمَّاۤ اٰسَفُوْنَاஅவர்கள் நமக்கு கோபமூட்டவேانْتَقَمْنَاநாம் பழிவாங்கினோம்مِنْهُمْஅவர்களிடம்فَاَغْرَقْنٰهُمْமூழ்கடித்தோம்/அவர்கள்اَجْمَعِيْنَۙஅனைவரையும்
وَقَالُـوْٓاஅவர்கள் கூறினார்கள்ءَاٰلِهَتُنَا?/எங்கள் கடவுள்கள்خَيْرٌசிறந்த(வர்களா)اَمْஅல்லதுهُوَؕஅவர்مَا ضَرَبُوْهُஅவரை உதாரணமாக அவர்கள் பேசவில்லைلَكَஉமக்குاِلَّاதவிரجَدَلًا ؕதர்க்கம் செய்வதற்காகவேبَلْமாறாகهُمْஅவர்கள்قَوْمٌமக்கள்خَصِمُوْنَதர்க்கம் செய்கின்ற(வர்கள்)
மேலும்: “எங்கள் தெய்வங்கள் மேலா? அல்லது அவர் மேலா?” என்றும் அவர்கள் கேட்கிறார்கள்; அவரை வீண் தர்க்கத்திற்காகவே உம்மிடம் உதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள்; ஆகவே அவர்கள் விதண்டா வாதம் செய்யும் சமூகத்தாரேயாவர்.
وَاِنَّهٗநிச்சயமாக அவர்لَعِلْمٌஅடையாளமாவார்لِّلسَّاعَةِமறுமையின்فَلَا تَمْتَرُنَّ بِهَاஆகவே அதில் நீங்கள் அறவே சந்தேகிக்காதீர்கள்وَاتَّبِعُوْنِؕஇன்னும் என்னை பின்பற்றுங்கள்!هٰذَاஇதுதான்صِرَاطٌநேரான(து)مُّسْتَقِيْمٌபாதையாகும்
நிச்சயமாக அவர் (ஈஸா) மறுமை நாளின் அத்தாட்சியாவார்; ஆகவே, நிச்சயமாக நீங்கள் இதில் சந்தேகப்பட வேண்டாம்; மேலும், என்னையே பின்பற்றுங்கள்; இதுவே (ஸிராத்துல் முஸ்தகீம்) நேரான வழி (என்று நபியே! நீர் கூறுவிராக!)
இன்னும், ஈஸா தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தபோது: “மெய்யாகவே நான் உங்களுக்கு ஞானத்தைக் கொண்டு வந்திருக்கிறேன்; நீங்கள் கருத்து வேற்றுமையுடன் இருக்கும் சிலவற்றை உங்களுக்கு விளக்கிக் கூறுவேன் - ஆகவே நீங்கள் அல்லாஹ்விடம் பயபக்தியுடன் இருங்கள்; எனக்கும் கீழ்படியுங்கள்” என்று கூறினார்.
هَلْ يَنْظُرُوْنَஅவர்கள் எதிர்பார்க்கின்றனரா?اِلَّاதவிரالسَّاعَةَமறுமைاَنْ تَاْتِيَهُمْஅவர்களிடம் வருவதைبَغْتَةًதிடீரென்றுوَّهُمْ لَا يَشْعُرُوْنَஅவர்கள் உணராமல் இருக்கின்ற நிலையில்
பொன் தட்டுகளும், கிண்ணங்களும் அவர்களைச் சுற்றிக் கொண்டேயிருக்கும்; இன்னும் அங்கு அவர்கள் மனம் விரும்பியதும், கண்களுக்கு இன்பம் தருவதும் அதிலுள்ளன; இன்னும், “நீங்கள் இங்கு என்றென்றும் தங்கியிருப்பீர்கள்!” (என அவர்களிடம் சொல்லப்படும்.)
وَتِلْكَஇதுதான்الْجَنَّةُஅந்த சொர்க்கம்الَّتِىْۤஎதுاُوْرِثْتُمُوْநீங்கள் சொந்தமாக்கி வைக்கப்பட்டீர்கள்هَاஅதைبِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَநீங்கள் செய்து கொண்டிருந்த நன்மைகளினால்
வ னாதவ் யா மாலிகு லியக்ளி 'அலய்னா ரBப்Bபுக கால இன்னகும் மாகிதூன்
மேலும், அவர்கள் (நரகத்தில்) “யா மாலிக்” உமது இறைவன் எங்களை முடித்து விடட்டுமே!” என்று சப்தமிடுவார்கள்; அதற்கு அவர் “நிச்சயமாக நீங்கள் (இங்கு) நிலைத்து இருக்க வேண்டியவர்களே” என்று கூறுவார்.
அல்லது, அவர்களுடைய இரகசியத்தையும், அவர்கள் தனித்திருந்து கூடிப் பேசுவதையும் நாம் கேட்கவில்லையென்று எண்ணிக் கொண்டார்களா? அல்ல: மேலும் அவர்களிடமுள்ள நம் தூதர்கள் (எல்லாவற்றையும்) எழுதிக் கொள்கிறார்கள்.
ஆகையால், அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட அவர்களுடைய (வேதனையின்) நாளை அவர்கள் சந்திக்கும் வரை, அவர்களை (வீண் விவாதத்தில்) மூழ்கியிருக்கவும், விளையாட்டில் கழிக்கவும் (நபியே!) நீர் விட்டு விடும்.
அவன் பெரும் பாக்கியம் உடையவன்; வானங்கள், பூமி, இவை இரண்டிற்குமிடையே உள்ளவை ஆகியவற்றின் ஆட்சி அவனுக்குடையதே, அவனிடம் தான் (இறுதி) வேளைக்குரிய ஞானமும் இருக்கிறது; மேலும், அவனிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்.
وَلَا يَمْلِكُஉரிமை பெற மாட்டார்(கள்)الَّذِيْنَஎவர்களைيَدْعُوْنَஅவர்கள் அழைக்கின்றார்கள்مِنْ دُوْنِهِஅவனையன்றிالشَّفَاعَةَசிபாரிசு செய்வதற்குاِلَّاஆனால்مَنْஎவர்கள்شَهِدَசாட்சிகூறினார்(களோ)بِالْحَـقِّஉண்மைக்குوَهُمْஅவர்கள்يَعْلَمُوْنَநன்கு அறிந்தவர்களாக
வ லா யம்லிகுல் லதீன யத்'ஊன மின் தூனிஹிஷ் ஷFபா'அத இல்லா மன் ஷஹித Bபில்ஹக்கி வ ஹும் யஃலமூன்
அன்றியும், அல்லாஹ்வையன்றி அவர்கள் எவர்களை (தெய்வங்களாக) அழைக்கிறார்களோ, அவர்கள் (அவனிடம் அவர்களுக்குப்) பரிந்து பேச அதிகாரமுள்ளவர்கள் அல்லர். ஆனால் எவர்கள் சத்தியத்தை அறிந்து (ஏற்றவர்காளாக அதற்குச்) சாட்சியம் கூறுகிறார்களோ அவர்கள் (இறை அனுமதி கொண்டு பரிந்து பேசுவர்).
وَلَٮِٕنْ سَاَلْـتَهُمْநீர் அவர்களிடம் கேட்டால்مَّنْயார்خَلَقَهُمْஅவர்களைப் படைத்தான்لَيَقُوْلُنَّநிச்சயமாக அவர்கள் கூறுவார்கள்اللّٰهُஅல்லாஹ்فَاَنّٰىஎப்படிيُؤْفَكُوْنَۙதிருப்பப்படுகின்றார்கள்
மேலும், அவர்களிடம் யார் அவர்களைப் படைத்தது என்று நீர் கேட்டால் “அல்லாஹ்” என்றே அவர்கள் நிச்சயமாக கூறுவார்கள்; அவ்வாறிக்கும் போது (அவனைவிட்டு) அவர்கள் எங்கு திருப்பப்படுகிறார்கள்?