13. ஸூரத்துர் ரஃது (இடி)

மதனீ, வசனங்கள்: 43

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
الٓمّٓرٰ ۫ تِلْكَ اٰیٰتُ الْكِتٰبِ ؕ وَالَّذِیْۤ اُنْزِلَ اِلَیْكَ مِنْ رَّبِّكَ الْحَقُّ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یُؤْمِنُوْنَ ۟
الٓمّٓرٰ ۫அலிஃப் லாம் மீம் ராتِلْكَஇவைاٰیٰتُவசனங்கள்الْكِتٰبِ ؕவேதத்தின்وَ الَّذِیْۤமேலும் எதுاُنْزِلَஅருளப்பட்டதோاِلَیْكَஉமக்குمِنْஇருந்துرَّبِّكَஉமது இறைவனிடம்الْحَقُّசத்தியமானதுوَ لٰكِنَّஆனால்اَكْثَرَபெரும்பாலானالنَّاسِமனிதர்கள்لَاஇல்லைیُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்கிறார்கள்
அலிFப்-லாம்-மீம்-ரா; தில்க ஆயாதுல் கிதாBப்; வல்லதீ உன்Zஜில இலய்க மிர் ரBப்Bபிகல் ஹக்கு வ லாகின்ன அக்தரன் னாஸி லா யு'மினூன்
அலிஃப், லாம், மீம், றா. இவை வேதத்தின் வசனங்களாகும். மேலும் (நபியே!) உம் மீது, உம் இறைவனிடமிருந்து அருளப்பட்டுள்ள இது உண்மையாகும் - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் (இதனை) நம்புவதில்லை.
اَللّٰهُ الَّذِیْ رَفَعَ السَّمٰوٰتِ بِغَیْرِ عَمَدٍ تَرَوْنَهَا ثُمَّ اسْتَوٰی عَلَی الْعَرْشِ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ ؕ كُلٌّ یَّجْرِیْ لِاَجَلٍ مُّسَمًّی ؕ یُدَبِّرُ الْاَمْرَ یُفَصِّلُ الْاٰیٰتِ لَعَلَّكُمْ بِلِقَآءِ رَبِّكُمْ تُوْقِنُوْنَ ۟
اَللّٰهُஅல்லாஹ்الَّذِیْஎவனென்றால்رَفَعَஉயர்த்தினான்السَّمٰوٰتِவானங்களைبِغَیْرِஇல்லாமல்عَمَدٍதூண்கள்تَرَوْنَهَاநீங்கள் அவற்றைப் பார்க்கிறீர்கள்ثُمَّபின்னர்اسْتَوٰیநிலைபெற்றான்عَلَیமீதுالْعَرْشِஅர்ஷின்وَ سَخَّرَமேலும் வசப்படுத்தினான்الشَّمْسَசூரியனைوَ الْقَمَرَ ؕமேலும் சந்திரனைكُلٌّஒவ்வொன்றும்یَّجْرِیْஓடுகிறதுلِاَجَلٍஒரு தவணை வரைمُّسَمًّی ؕநிர்ணயிக்கப்பட்டیُدَبِّرُஅவன் நிர்வகிக்கிறான்الْاَمْرَகாரியத்தைیُفَصِّلُஅவன் விவரிக்கிறான்الْاٰیٰتِஅத்தாட்சிகளைلَعَلَّكُمْநீங்கள்بِلِقَآءِசந்திப்பதைرَبِّكُمْஉங்கள் இறைவனைتُوْقِنُوْنَஉறுதி கொள்வதற்காக
அல்லாஹுல் லதீ ரFப்'அஸ் ஸமாவாதி Bபிகய்ரி 'அமதின் தரவ்னஹா தும்மஸ் தவா 'அலல் 'அர்ஷி வ ஸக்கரஷ் ஷம்ஸ வல்கமர குல்லு(ன்)ய் யஜ்ரீ லி அஜலிம் முஸம்மா; யுதBப்Bபிருல் அம்ர யுFபஸ்ஸிலில் ஆயாதி ல'அல்லகும் Bபிலிகா'இ ரBப்Bபிகும் தூகினூன்
(இவ்வேதத்தை அருளிய) அல்லாஹ் எத்தகையவனென்றால் அவன் வானங்களைத் தூணின்றியே உயர்த்தியுள்ளான்; நீங்கள் அவற்றைப் பார்க்கிறீர்கள்; பின்னர் அவன் அர்ஷின்மீது அமைந்தான்; இன்னும் அவனே சூரியனையும் சந்திரனையும் (தன்) அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; (இவை) அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன; அவனே (எல்லாக்) காரியத்தையும் நிர்வகிக்கின்றான் - நீங்கள் உங்கள் இறைவனைச் சந்திப்பதை உறுதி கொள்ளும் பொருட்டு, அவன் (இவ்வாறு தன்) வசனங்களை விளக்குகின்றான்.
وَهُوَ الَّذِیْ مَدَّ الْاَرْضَ وَجَعَلَ فِیْهَا رَوَاسِیَ وَاَنْهٰرًا ؕ وَمِنْ كُلِّ الثَّمَرٰتِ جَعَلَ فِیْهَا زَوْجَیْنِ اثْنَیْنِ یُغْشِی الَّیْلَ النَّهَارَ ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یَّتَفَكَّرُوْنَ ۟
وَ هُوَமேலும் அவன்الَّذِیْஎத்தகையவன் என்றால்مَدَّவிரித்தான்الْاَرْضَபூமியைوَ جَعَلَமேலும் அமைத்தான்فِیْهَاஅதில்رَوَاسِیَஉறுதியான மலைகளைوَ اَنْهٰرًا ؕமேலும் ஆறுகளைوَ مِنْமேலும் இருந்துكُلِّஒவ்வொருالثَّمَرٰتِகனிகளிலும்جَعَلَஆக்கினான்فِیْهَاஅதில்زَوْجَیْنِஜோடிகளைاثْنَیْنِஇரண்டுیُغْشِیஅவன் மூடுகிறான்الَّیْلَஇரவைக் கொண்டுالنَّهَارَ ؕபகலைاِنَّநிச்சயமாகفِیْஇல்ذٰلِكَஅதில்لَاٰیٰتٍஅத்தாட்சிகள் உள்ளனلِّقَوْمٍஒரு சமூகத்தாருக்குیَّتَفَكَّرُوْنَசிந்திப்பவர்களுக்கு
வ ஹுவல் லதீ மத்தல் அர்ள வ ஜ'அல Fபீஹா ரவாஸிய வ அன்ஹாரா; வ மின் குல்லிஸ் தமராதி ஜ'அல Fபீஹா Zஜவ்ஜய்னித் னய்னி யுக்ஷில் லய்லன் னஹார்; இன்ன Fபீ தாலிக ல ஆயாதில் லிகவ்மி(ன்)ய் யதFபக்கரூன்
மேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து. அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான்; இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான்; அவனே இரவைப் பகலால் மூடுகிறான் - நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
وَفِی الْاَرْضِ قِطَعٌ مُّتَجٰوِرٰتٌ وَّجَنّٰتٌ مِّنْ اَعْنَابٍ وَّزَرْعٌ وَّنَخِیْلٌ صِنْوَانٌ وَّغَیْرُ صِنْوَانٍ یُّسْقٰی بِمَآءٍ وَّاحِدٍ ۫ وَنُفَضِّلُ بَعْضَهَا عَلٰی بَعْضٍ فِی الْاُكُلِ ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یَّعْقِلُوْنَ ۟
وَ فِیமேலும்الْاَرْضِபூமியில்قِطَعٌநிலப்பகுதிகள்مُّتَجٰوِرٰتٌஅருகருகே உள்ளவைوَّ جَنّٰتٌமேலும் தோட்டங்கள்مِّنْகொண்டاَعْنَابٍதிராட்சைகள்وَّ زَرْعٌமேலும் பயிர்கள்وَّ نَخِیْلٌமேலும் பேரீச்சை மரங்கள்صِنْوَانٌகிளைத்தவைوَّ غَیْرُமேலும் அல்லாதவைصِنْوَانٍகிளைத்தவைیُّسْقٰیநீர் பாய்ச்சப்படுகின்றனبِمَآءٍநீரினால்وَّاحِدٍ ۫ஒரேوَ نُفَضِّلُமேலும் நாம் மேன்மையாக்குகிறோம்بَعْضَهَاஅவற்றில் சிலவற்றைعَلٰیவிடبَعْضٍமற்றொன்றைفِیஇல்الْاُكُلِ ؕசுவைاِنَّநிச்சயமாகفِیْஉள்ளனذٰلِكَஇதில்لَاٰیٰتٍபல அத்தாட்சிகள்لِّقَوْمٍஒரு சமூகத்தாருக்குیَّعْقِلُوْنَசிந்திக்கும்
வ Fபில் அர்ளி கித'உம் முத ஜாவிராது(ன்)வ் வ ஜன்னாதும் மின் அஃனாBபி(ன்)வ் வ Zஜர்'உ(ன்)வ் வ னகீலுன் ஸின்வானு(ன்)வ் வ கய்ரு ஸின்வானி(ன்)ய் யுஸ்கா Bபிமா'இ(ன்)வ் வாஹித்; வ னுFபள்ளிலு Bபஃளஹா 'அலா Bபஃளின் Fபில்-உகுல்; இன்ன Fபீ தாலிக ல ஆயாதில் லிகவ்மி(ன்)ய் யஃகிலூன்
இன்னும், பூமியில் அருகருகே இணைந்தார்போல் பல பகுதிகளை (அமைத்து, அவற்றில்) திராட்சைத் தோட்டங்களையும், விளைநிலங்களையும், கிளைகள் உள்ளதும், கிளைகள் இல்லாததுமான பேரீச்சை (வர்க்கத்தை)யும் (அவனே உண்டாக்கினான்; இவையனைத்திற்கும்) ஒரே தண்ணீர் கொண்டு தான் பாய்ச்சப்பட்டாலும், அவற்றில் சிலவற்றை வேறு சிலவற்றை விட சுவையில் நாம் மேன்மையாக்கியிருக்கின்றோம்; நிச்சயமாக இவற்றில் உணர்ந்தறியும் மக்களுக்கு பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
وَاِنْ تَعْجَبْ فَعَجَبٌ قَوْلُهُمْ ءَاِذَا كُنَّا تُرٰبًا ءَاِنَّا لَفِیْ خَلْقٍ جَدِیْدٍ ؕ۬ اُولٰٓىِٕكَ الَّذِیْنَ كَفَرُوْا بِرَبِّهِمْ ۚ وَاُولٰٓىِٕكَ الْاَغْلٰلُ فِیْۤ اَعْنَاقِهِمْ ۚ وَاُولٰٓىِٕكَ اَصْحٰبُ النَّارِ ۚ هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟
وَ اِنْமேலும் நீர்تَعْجَبْஆச்சரியப்படுவீரானால்فَعَجَبٌஆச்சரியப்பட வேண்டியதேقَوْلُهُمْஅவர்களின் கூற்றுءَاِذَاஎன்ன? எப்போதுكُنَّاநாம் ஆகிவிட்டால்تُرٰبًاமண்ணாகءَاِنَّاநிச்சயமாக நாமாلَفِیْநிச்சயமாகخَلْقٍபடைப்பில்جَدِیْدٍ ؕ۬புதியاُولٰٓىِٕكَஅவர்கள் தான்الَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோبِرَبِّهِمْ ۚதங்கள் இறைவனைوَ اُولٰٓىِٕكَமேலும் அவர்கள்الْاَغْلٰلُஇரும்பு விலங்குகள்فِیْۤமாட்டப்பட்டிருக்கும்اَعْنَاقِهِمْ ۚஅவர்களின் கழுத்துகளில்وَ اُولٰٓىِٕكَமேலும் அவர்கள்اَصْحٰبُவாசிகள்النَّارِ ۚநரகத்தின்هُمْஅவர்கள்فِیْهَاஅதில்خٰلِدُوْنَஎன்றென்றும் தங்குபவர்கள்
வ இன் தஃஜBப் Fப'அஜBபுன் கவ்லுஹும் 'அ-இதா குன்ன துராBபன் 'அ-இன்ன லFபீ கல்கின் ஜதீத்; உலா 'இகல் லதீன கFபரூ Bபி ரBப்Bபிஹிம் வ உலா'இகல் அக்லாலு Fபீ அஃனாகிஹிம் வ உலா'இக அஸ்ஹாBபுன் னாரி ஹும் Fபீஹா காலிதூன்
(அவர்களிடம் நம்பிக்கை இல்லையே என்று நபியே!) நீர் ஆச்சரியப்படுவீராயின் அவர்கள், “நிச்சயமாக நாங்கள் (மரித்து) மண்ணாகிவிட்ட பிறகு நாம் புதிதாக படைக்கப்படுவோமா?” என்று கூறுவது (இதைவிட) ஆச்சரியமானதே! இவர்கள் தாம் தங்களுடைய இறைவனையே நிராகரிப்பவர்கள் (ஆகவே, மறுமையில்) இவர்களுடைய கழுத்துகளில் விலங்கிடப்படும்; இவர்கள் நரகவாசிகளே யாவார்கள்; இவர்கள் அதில் என்றென்றும் இருப்பார்கள்.
وَیَسْتَعْجِلُوْنَكَ بِالسَّیِّئَةِ قَبْلَ الْحَسَنَةِ وَقَدْ خَلَتْ مِنْ قَبْلِهِمُ الْمَثُلٰتُ ؕ وَاِنَّ رَبَّكَ لَذُوْ مَغْفِرَةٍ لِّلنَّاسِ عَلٰی ظُلْمِهِمْ ۚ وَاِنَّ رَبَّكَ لَشَدِیْدُ الْعِقَابِ ۟
وَ یَسْتَعْجِلُوْنَكَமேலும் அவர்கள் உம்மிடம் அவசரப்படுகிறார்கள்بِالسَّیِّئَةِதீமையைقَبْلَமுன்னதாகالْحَسَنَةِநன்மைக்குوَ قَدْமேலும் நிச்சயமாகخَلَتْகடந்துவிட்டனمِنْஇருந்துقَبْلِهِمُஅவர்களுக்கு முன்னால்الْمَثُلٰتُ ؕமுன்மாதிரியான தண்டனைகள்وَ اِنَّமேலும் நிச்சயமாகرَبَّكَஉமது இறைவன்لَذُوْநிச்சயமாக உடையவன்مَغْفِرَةٍமன்னிப்பைلِّلنَّاسِமனிதர்களுக்குعَلٰیஇருந்தபோதிலும்ظُلْمِهِمْ ۚஅவர்களின் அநியாயம்وَ اِنَّமேலும் நிச்சயமாகرَبَّكَஉமது இறைவன்لَشَدِیْدُநிச்சயமாக கடுமையானவன்الْعِقَابِதண்டனை அளிப்பதில்
வ யஸ்தஃஜிலூனக Bபிஸ் ஸய்யி'அதி கBப்லல் ஹஸனதி வ கத் கலத் மின் கBப்லிஹிமுல் மதுலாத்; வ இன்ன ரBப்Bபக லதூ மக்Fபிரதில் லின்னாஸி 'அலா ளுல்மிஹிம் வ இன்ன ரBப்Bபக லஷதீதுல் 'இகாBப்
(நபியே!) நன்மை (வருவதற்கு) முன்னர், தீமையைக் கொண்டு (வருமாறு) உம்மை இவர்கள் அவசரப்படுத்துகிறார்கள்; நிச்சயமாக இவர்களுக்கு முன்னரும் (வேதனை மிக்க தண்டனைகள் வழங்கப்பட்ட உதாரணமான) நிகழ்ச்சிகள் நடந்தேயிருக்கின்றன; நிச்சயமாக உம் இறைவன் மனிதர்களை அவர்களின் பாவங்களுக்காக மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்; மேலும், உம் இறைவன் நிச்சயமாக வேதனை செய்வதிலும் கடுமையானவனாக இருக்கின்றான்.
وَیَقُوْلُ الَّذِیْنَ كَفَرُوْا لَوْلَاۤ اُنْزِلَ عَلَیْهِ اٰیَةٌ مِّنْ رَّبِّهٖ ؕ اِنَّمَاۤ اَنْتَ مُنْذِرٌ وَّلِكُلِّ قَوْمٍ هَادٍ ۟۠
وَ یَقُوْلُமேலும் கூறுகிறார்கள்الَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோلَوْ لَاۤஏன்اُنْزِلَஅருளப்படவில்லைعَلَیْهِஅவர் மீதுاٰیَةٌஓர் அத்தாட்சிمِّنْஇருந்துرَّبِّهٖ ؕஅவருடைய இறைவனிடம்اِنَّمَاۤமட்டுமேاَنْتَநீர்مُنْذِرٌஎச்சரிக்கை செய்பவர்وَّ لِكُلِّமேலும் ஒவ்வொருقَوْمٍசமூகத்திற்கும்هَادٍ۠ஒரு வழிகாட்டி
வ யகூலுல் லதீன கFபரூ லவ் லா உன்Zஜில 'அலய்ஹி ஆயதும் மிர் ரBப்Bபிஹ்; இன்னமா அன்த முன்திரு(ன்)வ் வ லிகுல்லி கவ்மின் ஹாத்
இன்னும் (நபியே! உம்மைப்பற்றி இந் நிராகரிப்போர் “அவருக்கு அவருடைய இறைவனிடமிருந்து (நாம் விரும்பும்) அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா?” என்று கூறுகிறார்கள்; நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரே ஆவீர், மேலும், ஒவ்வொரு சமூகத்தவருக்கும் ஒரு நேர்வழி காட்டியுண்டு.  
اَللّٰهُ یَعْلَمُ مَا تَحْمِلُ كُلُّ اُ وَمَا تَغِیْضُ الْاَرْحَامُ وَمَا تَزْدَادُ ؕ وَكُلُّ شَیْءٍ عِنْدَهٗ بِمِقْدَارٍ ۟
اَللّٰهُஅல்லாஹ்یَعْلَمُஅறிகிறான்مَاஎதைتَحْمِلُசுமக்கிறாளோكُلُّஒவ்வொருاُنْثٰیபெண்ணும்وَ مَاமேலும் எதைتَغِیْضُகுறைகிறதோالْاَرْحَامُகருப்பைகள்وَ مَاமேலும் எதைتَزْدَادُ ؕஅதிகரிக்கிறதோوَ كُلُّமேலும் ஒவ்வொருشَیْءٍபொருளும்عِنْدَهٗஅவனிடம்بِمِقْدَارٍஒரு அளவின்படியே
அல்லாஹு யஃலமு மா தஹ்மிலு குல்லு உன்தா வமா தகீளுல் அர்ஹாமு வமா தZஜ்தாத், வ குல்லு ஷய்'இன் 'இன்தஹூ Bபிமிக்தார்
ஒவ்வொரு பெண்ணும் (கர்ப்பத்தில்) சுமந்து கொண்டிருப்பதையும், கர்ப்பப்பைகள் சுருங்கி குறைவதையும், அவை விரிந்து அதிகரிப்பதையும் அல்லாஹ் நன்கறிவான்; ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் அளவு இருக்கின்றது.
عٰلِمُ الْغَیْبِ وَالشَّهَادَةِ الْكَبِیْرُ الْمُتَعَالِ ۟
عٰلِمُஅறிபவன்الْغَیْبِமறைவானவற்றைوَ الشَّهَادَةِவெளிப்படையானவற்றையும்الْكَبِیْرُமிகப் பெரியவன்الْمُتَعَالِமிக உயர்ந்தவன்
'ஆலிமுல் கய்Bபி வஷ் ஷஹாததில் காBபீருல் முத'ஆல்
(எல்லாவற்றின்) இரகசியத்தையும், பரகசியத்தையும் அவன் நன்கறிந்தவன்; அவன் மிகவும் பெரியவன்; மிகவும் உயர்ந்தவன்.
سَوَآءٌ مِّنْكُمْ مَّنْ اَسَرَّ الْقَوْلَ وَمَنْ جَهَرَ بِهٖ وَمَنْ هُوَ مُسْتَخْفٍ بِالَّیْلِ وَسَارِبٌ بِالنَّهَارِ ۟
سَوَآءٌசமமேمِّنْكُمْஉங்களில்مَّنْஎவர்اَسَرَّஇரகசியமாகப் பேசுகிறாரோالْقَوْلَபேச்சைوَ مَنْமேலும் எவர்جَهَرَபகிரங்கமாகப் பேசுகிறாரோبِهٖஅதைوَ مَنْமேலும் எவர்هُوَஅவர்مُسْتَخْفٍۭமறைந்து கொள்கிறாரோبِالَّیْلِஇரவில்وَ سَارِبٌۢமேலும் நடமாடுகிறாரோبِالنَّهَارِபகலில்
ஸவா'உம் மின்கும் மன் அஸர்ரல் கவ்ல வ மன் ஜஹர Bபிஹீ வ மன் ஹுவ முஸ்தக்Fபிம் Bபில்லய்லி வ ஸாரிBபும் Bபின்னஹார்
எனவே, உங்களில் எவரும் தம் பேச்சை இரகசியமாக வைத்துக் கொண்டாலும், அல்லது, அதை வெளிப்படையாகக் கூறினாலும், (அவனுக்கு) சமமேயாகும்; இரவில் மறைந்திருப்பவனும், பகலில் பகிரங்கமாக நடப்பவனும் (எல்லோரும் அவனுக்குச் சமமே).
لَهٗ مُعَقِّبٰتٌ مِّنْ بَیْنِ یَدَیْهِ وَمِنْ خَلْفِهٖ یَحْفَظُوْنَهٗ مِنْ اَمْرِ اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ لَا یُغَیِّرُ مَا بِقَوْمٍ حَتّٰی یُغَیِّرُوْا مَا بِاَنْفُسِهِمْ ؕ وَاِذَاۤ اَرَادَ اللّٰهُ بِقَوْمٍ سُوْٓءًا فَلَا مَرَدَّ لَهٗ ۚ وَمَا لَهُمْ مِّنْ دُوْنِهٖ مِنْ وَّالٍ ۟
لَهٗஅவருக்குمُعَقِّبٰتٌதொடர்ச்சியாக வருபவர்கள்مِّنْۢஇருந்துبَیْنِமுன்னால்یَدَیْهِஅவருக்குوَ مِنْமேலும் இருந்துخَلْفِهٖஅவருக்குப் பின்னால்یَحْفَظُوْنَهٗஅவரைப் பாதுகாக்கிறார்கள்مِنْமூலம்اَمْرِகட்டளையால்اللّٰهِ ؕஅல்லாஹ்வின்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَاஇல்லைیُغَیِّرُமாற்றமாட்டான்مَاநிலையைبِقَوْمٍஒரு சமூகத்திடம்حَتّٰیவரைیُغَیِّرُوْاஅவர்கள் மாற்றிக்கொள்ளும்مَاநிலையைبِاَنْفُسِهِمْ ؕதங்களுக்குள்ளேوَ اِذَاۤமேலும் எப்போதுاَرَادَநாடினால்اللّٰهُஅல்லாஹ்بِقَوْمٍஒரு சமூகத்திற்குسُوْٓءًاதீமையைفَلَاஅப்போது இல்லைمَرَدَّதடுப்பதுلَهٗ ۚஅதற்குوَ مَاமேலும் இல்லைلَهُمْஅவர்களுக்குمِّنْஇருந்துدُوْنِهٖஅவனையன்றிمِنْஎந்தوَّالٍபாதுகாவலரும்
லஹூ மு'அக்கிBபாதும் மிம் Bபய்னி யதய்ஹி வ மின் கல்Fபிஹீ யஹ்Fபளூனஹூ மின் அம்ரில் லாஹ்; இன்னல் லாஹ லா யுகய்யிரு மா Bபிகவ்மின் ஹத்தா யுகய்யிரூ மா Bபிஅன்Fபுஸிஹிம்; வ இதா அராதல் லாஹு Bபிகவ்மின் ஸூ'அன் Fபலா மரத்த லஹ்; வமா லஹும் மின் தூனிஹீமி(ன்)வ் வால்
மனிதனுக்கு முன்னாலும், பின்னாலும் தொடர்ந்து வரக்கூடிய (மலக்குகள்) இருக்கிறார்கள். அல்லாஹ்வின் கட்டளையால் அவர்கள் அவனைப் பாதுகாக்கிறார்கள்; எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை; இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை.
هُوَ الَّذِیْ یُرِیْكُمُ الْبَرْقَ خَوْفًا وَّطَمَعًا وَّیُنْشِئُ السَّحَابَ الثِّقَالَ ۟ۚ
هُوَஅவன்الَّذِیْஎத்தகையவனென்றால்یُرِیْكُمُஉங்களுக்குக் காட்டுகிறான்الْبَرْقَமின்னலைخَوْفًاஅச்சமாகவும்وَّ طَمَعًاமேலும் ஆதரவாகவும்وَّ یُنْشِئُமேலும் உண்டாக்குகிறான்السَّحَابَமேகங்களைالثِّقَالَۚகனமான
ஹுவல் லதீ யுரீகுமுல் Bபர்க கவ்Fப(ன்)வ் வ தம'அ(ன்)வ் வ யுன்ஷி'உஸ் ஸஹாBபஸ் திகால்
அவன் எத்தகையவெனின், அச்சத்தையும் (அதே நேரத்தில் மழைக்குரிய) ஆதரவையும் தரக்கூடிய நிலையில் மின்னலை அவன்தான் உங்களுக்குக் காட்டுகிறான்; கனத்த மேகத்தையும் அவனே உண்டாக்குகிறான்.
وَیُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهٖ وَالْمَلٰٓىِٕكَةُ مِنْ خِیْفَتِهٖ ۚ وَیُرْسِلُ الصَّوَاعِقَ فَیُصِیْبُ بِهَا مَنْ یَّشَآءُ وَهُمْ یُجَادِلُوْنَ فِی اللّٰهِ ۚ وَهُوَ شَدِیْدُ الْمِحَالِ ۟ؕ
وَ یُسَبِّحُமேலும் துதிக்கிறதுالرَّعْدُஇடிبِحَمْدِهٖஅவனது புகழைக் கொண்டுوَ الْمَلٰٓىِٕكَةُஇன்னும் வானவர்களும்مِنْஇருந்துخِیْفَتِهٖ ۚஅவனது அச்சத்தினால்وَ یُرْسِلُமேலும் அவன் அனுப்புகிறான்الصَّوَاعِقَஇடிமின்னல்களைفَیُصِیْبُஅதனால் அவன் தாக்குகிறான்بِهَاஅதைக் கொண்டுمَنْயாரைیَّشَآءُஅவன் நாடுகிறானோوَ هُمْஇன்னும் அவர்கள்یُجَادِلُوْنَதர்க்கம் செய்கிறார்கள்فِیபற்றிاللّٰهِ ۚஅல்லாஹ்வைப்وَ هُوَமேலும் அவன்شَدِیْدُகடுமையானالْمِحَالِؕவல்லமையுடையவன்
வ யுஸBப்Bபிஹுர் ரஃது Bபிஹம்திஹீ வல்மலா'இகது மின் கீFபதிஹீ வ யுர்ஸிலுஸ் ஸவா'இக Fப யுஸீBபு Bபிஹா மய் யஷா'உ வ ஹும் யுஜாதிலூன Fபில் லாஹி வ ஹுவ ஷதீதுல் மிஹால்
மேலும் இடி அவன் புகழைக் கொண்டும், மலக்குகள் அவனையஞ்சியும் (அவனை) தஸ்பீஹு செய்(து துதிக்)கின்றனர். இன்னும் அவனே இடிகளை விழச்செய்து, அவற்றைக் கொண்டு, தான் நாடியவரைத் தாக்குகின்றான்; (இவ்வாறிருந்தும்) அவர்கள் அல்லாஹ்வைப் பற்றி தர்க்கிக்கின்றனர், அவனோ மிகுந்த வல்லமையுடையவனாக இருக்கின்றான்.
لَهٗ دَعْوَةُ الْحَقِّ ؕ وَالَّذِیْنَ یَدْعُوْنَ مِنْ دُوْنِهٖ لَا یَسْتَجِیْبُوْنَ لَهُمْ بِشَیْءٍ اِلَّا كَبَاسِطِ كَفَّیْهِ اِلَی الْمَآءِ لِیَبْلُغَ فَاهُ وَمَا هُوَ بِبَالِغِهٖ ؕ وَمَا دُعَآءُ الْكٰفِرِیْنَ اِلَّا فِیْ ضَلٰلٍ ۟
لَهٗஅவனுக்கேدَعْوَةُஅழைப்புالْحَقِّ ؕஉண்மையானوَ الَّذِیْنَஇன்னும் எவர்களைیَدْعُوْنَஇவர்கள் அழைக்கிறார்களோمِنْஅன்றிدُوْنِهٖஅவனையல்லாதلَاஇல்லைیَسْتَجِیْبُوْنَஅவர்கள் பதிலளிக்க மாட்டார்கள்لَهُمْஇவர்களுக்குبِشَیْءٍஎப்பொருளையும் கொண்டுاِلَّاதவிரكَبَاسِطِநீட்டுபவனைப் போலكَفَّیْهِதன் இரு கைகளையும்اِلَیநோக்கிالْمَآءِதண்ணீரைلِیَبْلُغَஅது சென்றடையفَاهُஅவனுடைய வாயைوَ مَاஆனால் இல்லைهُوَஅதுبِبَالِغِهٖ ؕஅதை அடைவதாகوَ مَاமேலும் இல்லைدُعَآءُபிரார்த்தனைالْكٰفِرِیْنَநிராகரிப்போரின்اِلَّاதவிரفِیْஇல்ضَلٰلٍவழிகேடு
லஹூ தஃவதுல் ஹக்க்; வல்லதீன யத்'ஊன மின் தூனிஹீ லா யஸ்தஜீBபூன லஹும் Bபிஷய்'இன் இல்லா கBபாஸிதி கFப்Fபய்ஹி இலல் மா'இ லியBப்லுக Fபாஹு வமா ஹுவ BபிBபாலிகிஹ்; வமா து'ஆ'உல் காFபிரீன இல்லா Fபீ ளலால்
உண்மையான அழைப்பு (பிரார்த்தனை) அவனுக்கே உரியதாகும்; எவர் அவனை அன்றி (மற்றவர்களை) அழைக்கின்றார்களோ, அவர்கள் இவர்களுக்கு எவ்வித பதிலும் தர மாட்டார்கள்; (அல்லாஹ் அல்லாதவர்களைப் பிரார்த்திப் போரின் உதாரணம்;) தண்ணீர் தன் வாய்க்கு(த் தானாக) வந்தடைய வேண்டுமென்று, தன் இருகைகளையும் விரித்து ஏந்திக் கொண்டு இருப்பவனைப்போல் இருக்கிறது; (இவன் அள்ளாது) அது வாயை அடைந்து விடாது - இன்னும் காஃபிர்களின் பிரார்த்தனை வழிகேட்டில் இருப்பதே தவிர வேறில்லை.
وَلِلّٰهِ یَسْجُدُ مَنْ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ طَوْعًا وَّكَرْهًا وَّظِلٰلُهُمْ بِالْغُدُوِّ وَالْاٰصَالِ ۟
وَ لِلّٰهِஅல்லாஹ்வுக்கேیَسْجُدُஸஜ்தா செய்கின்றனர்مَنْஎவரும்فِیஉள்ளالسَّمٰوٰتِவானங்களில்وَ الْاَرْضِமற்றும் பூமியில்طَوْعًاவிருப்பத்துடனும்وَّ كَرْهًاமற்றும் வெறுப்புடனும்وَّ ظِلٰلُهُمْமேலும் அவர்களின் நிழல்களும்بِالْغُدُوِّகாலையிலும்وَ الْاٰصَالِ۩மற்றும் மாலைகளிலும்
வ லில்லாஹி யஸ்ஜுது மன் Fபிஸ் ஸமாவாதி வல் அர்ளி தவ் 'அ(ன்)வ் வ கர்ஹ(ன்)வ் வ ளிலாலுஹும் Bபில்குதுவ்வி வல் ஆஸால்
வானங்களிலும், பூமியிலும் இருப்பவையெல்லாம், விரும்பியோ விரும்பாமலோ அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்(து சிரம் பணி)கின்றன; அவற்றின் நிழல்களும் காலையிலும் மாலையிலும் (அவ்வாறே! ஸஜ்தா செய்கின்றன).
قُلْ مَنْ رَّبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ قُلِ اللّٰهُ ؕ قُلْ اَفَاتَّخَذْتُمْ مِّنْ دُوْنِهٖۤ اَوْلِیَآءَ لَا یَمْلِكُوْنَ لِاَنْفُسِهِمْ نَفْعًا وَّلَا ضَرًّا ؕ قُلْ هَلْ یَسْتَوِی الْاَعْمٰی وَالْبَصِیْرُ ۙ۬ اَمْ هَلْ تَسْتَوِی الظُّلُمٰتُ وَالنُّوْرُ ۚ۬ اَمْ جَعَلُوْا لِلّٰهِ شُرَكَآءَ خَلَقُوْا كَخَلْقِهٖ فَتَشَابَهَ الْخَلْقُ عَلَیْهِمْ ؕ قُلِ اللّٰهُ خَالِقُ كُلِّ شَیْءٍ وَّهُوَ الْوَاحِدُ الْقَهَّارُ ۟
قُلْகூறுவீராகمَنْயார்رَّبُّஇறைவன்السَّمٰوٰتِவானங்களின்وَ الْاَرْضِ ؕமற்றும் பூமியின்قُلِகூறுவீராகاللّٰهُ ؕஅல்லாஹ்قُلْகூறுவீராகاَفَاتَّخَذْتُمْஅப்படியிருக்க நீங்கள் எடுத்துக் கொண்டீர்களாمِّنْஅன்றிدُوْنِهٖۤஅவனையன்றிاَوْلِیَآءَபாதுகாவலர்களைلَاஇல்லைیَمْلِكُوْنَஅவர்கள் சக்தி பெற்றிருக்கிறார்கள்لِاَنْفُسِهِمْதங்களுக்குத் தாங்களேنَفْعًاநன்மையைوَّ لَاமேலும் இல்லைضَرًّا ؕதீங்கைقُلْகூறுவீராகهَلْஎன்னیَسْتَوِیசமமாவாராالْاَعْمٰیபார்வையற்றவரும்وَ الْبَصِیْرُ ۙ۬மற்றும் பார்வையுடையவரும்اَمْஅல்லதுهَلْஎன்னتَسْتَوِیசமமாகுமாالظُّلُمٰتُஇருள்களும்وَ النُّوْرُ ۚ۬மற்றும் ஒளியும்اَمْஅல்லதுجَعَلُوْاஅவர்கள் ஆக்கிக் கொண்டார்களாلِلّٰهِஅல்லாஹ்வுக்குشُرَكَآءَஇணைகளைخَلَقُوْاஅவர்கள் படைத்தார்களாكَخَلْقِهٖஅவனது படைப்பைப் போன்றேفَتَشَابَهَஅதனால் குழப்பமாகிவிட்டதாالْخَلْقُஅந்தப் படைப்புعَلَیْهِمْ ؕஅவர்களுக்குقُلِகூறுவீராகاللّٰهُஅல்லாஹ்خَالِقُபடைப்பவன்كُلِّஅனைத்துப்شَیْءٍபொருட்களையும்وَّ هُوَமேலும் அவன்الْوَاحِدُஏகன்الْقَهَّارُஅடக்கியாள்பவன்
குல் மர் ரBப்Bபுஸ் ஸமாவாதி வல் அர்ள்; குலில்லாஹ்; குல் அFபத்தகத்தும் மின் தூனிஹீ அவ்லியா'அ லா யம்லிகூன லி அன்Fபுஸிஹிம் னFப்'அ(ன்)வ் வலா ளர்ரா; குல் ஹல் யஸ்தவில் அஃமா வல் Bபஸீரு அம் ஹல் தஸ்தவிள் ளுலுமாது வன்னூர்; அம் ஜ'அலூ லில்லாஹி ஷுரகா'அ கலகூ ககல்கிஹீ Fபதஷா Bபஹல் கல்கு 'அலய்ஹிம்; குலில் லாஹு காலிகு குல்லி ஷய்'இ(ன்)வ் வ ஹுவல் வாஹிதுல் கஹ்ஹர்
(நபியே! அவர்களிடம்;) “வானங்களுக்கும் பூமிக்கும் இறைவன் யார்?” என்று நீர் கேளும். அவன் அல்லாஹ்தான் என்று நீரே கூறும்: “(அவ்வாறிருக்க) நீங்கள் அவனையன்றி (வேறு தெய்வங்களை) இரட்சகர்களாக எடுத்துக் கொள்கிறீர்களா? அவர்கள் தங்களுக்கே யாதொரு நன்மையும் தீமையும் செய்து கொள்ளச் சக்தியற்றவர்களாய் இருக்கின்றனர்”; மேலும், கூறும்: “குருடனும் பார்வை உடையவனும் சமமாவார்களா? அல்லது இருள்களும், ஒளியும் சமமாகுமா? அல்லது அவர்கள் இணையாக்கிக் கொண்டிருக்கும் (தெய்வங்கள்) அல்லாஹ் படைத்திருப்பதைப் போல் எதையும் படைத்திருக்கின்றனவா? (அப்படியிருந்தால் இது யார்) படைப்பு என்று அவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டிருக்கலாம்!” (அவ்வாறில்லையே எனவே நபியே! நீர் உறுதியாகக்) கூறும்: “அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் படைக்கிறவன்; அவன் ஒருவனே; (அனைத்தையும்) அடக்கி ஆள்பவன்” என்று.
اَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً فَسَالَتْ اَوْدِیَةٌ بِقَدَرِهَا فَاحْتَمَلَ السَّیْلُ زَبَدًا رَّابِیًا ؕ وَمِمَّا یُوْقِدُوْنَ عَلَیْهِ فِی النَّارِ ابْتِغَآءَ حِلْیَةٍ اَوْ مَتَاعٍ زَبَدٌ مِّثْلُهٗ ؕ كَذٰلِكَ یَضْرِبُ اللّٰهُ الْحَقَّ وَالْبَاطِلَ ؕ۬ فَاَمَّا الزَّبَدُ فَیَذْهَبُ جُفَآءً ۚ وَاَمَّا مَا یَنْفَعُ النَّاسَ فَیَمْكُثُ فِی الْاَرْضِ ؕ كَذٰلِكَ یَضْرِبُ اللّٰهُ الْاَمْثَالَ ۟ؕ
اَنْزَلَஅவன் இறக்கினான்مِنَஇருந்துالسَّمَآءِவானம்مَآءًநீரைفَسَالَتْஅதனால் பாய்ந்தோடினاَوْدِیَةٌۢபள்ளத்தாக்குகள்بِقَدَرِهَاஅவற்றின் அளவுக்கேற்பفَاحْتَمَلَசுமந்து சென்றதுالسَّیْلُவெள்ளம்زَبَدًاநுரையைرَّابِیًا ؕமிதக்கின்றوَ مِمَّاமேலும் எதிலிருந்துیُوْقِدُوْنَஅவர்கள் நெருப்பூட்டுகிறார்களோعَلَیْهِஅதன் மேல்فِیஇல்النَّارِநெருப்புابْتِغَآءَதேடிحِلْیَةٍஆபரணம்اَوْஅல்லதுمَتَاعٍபொருட்கள்زَبَدٌநுரைمِّثْلُهٗ ؕஅதைப் போன்றதேكَذٰلِكَஇவ்வாறேیَضْرِبُவிளக்குகிறான்اللّٰهُஅல்லாஹ்الْحَقَّசத்தியத்தைوَ الْبَاطِلَ ؕ۬மேலும் அசத்தியத்தைفَاَمَّاஆனால்الزَّبَدُநுரையானதுفَیَذْهَبُஅது சென்றுவிடுகிறதுجُفَآءً ۚவீணாகوَ اَمَّاஆனால்مَاஎதுیَنْفَعُபயனளிக்கிறதோالنَّاسَமனிதர்களுக்குفَیَمْكُثُஅது தங்கிவிடுகிறதுفِیஇல்الْاَرْضِ ؕபூமிكَذٰلِكَஇவ்வாறேیَضْرِبُவிளக்குகிறான்اللّٰهُஅல்லாஹ்الْاَمْثَالَؕஉதாரணங்களை
அன்Zஜல மினஸ் ஸமா'இ மா'அன் Fபஸாலத் அவ்தியதும் Bபிகதரிஹா Fபஹ்தமலஸ் ஸய்லு ZஜBபதர் ராBபியா; வ மிம்ம்மா யூகிதூன 'அலய்ஹி Fபின் னாரிBப் திகா'அ ஹில்யதின் அவ் மதா'இன் ZஜBபதும் மித்லுஹ்; கதாலிக யள்ரிBபுல் லாஹுல் ஹக்க வல் Bபாதில்; Fப அம்மZஜ் ZஜBபது Fப யத்ஹBபு ஜுFபா'ஆ; வ அம்மா மா யன்Fப'உன் னாஸ Fப யம்குது Fபில் அர்ள்; கதாலிக யள்ரிBபுல் லாஹுல் அம்தால்
அவன்தான் வானத்திலிருந்து மழையை இறக்கினான்; அப்பால் ஓடைகள் அவற்றின் அளவுக்குத் தக்கபடி (நீரைக் கொண்டு) ஓடுகின்றன; அவ்வெள்ளம் நுரையை மேலே சுமந்து செல்கிறது; (இவ்வாறே) ஆபரணமோ அல்லது (வேறு) சாமான் செய்யவோ (உலோகங்களை) நெருப்பில் வைத்து உருக்கும் போதும் அதைப் போல் நுரை உண்டாகின்றது; இவ்வாறு சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் அல்லாஹ் (உவமை) கூறுகிறான்; அழுக்கு நுரை (பலனற்றதாக இருப்பதால்) அழிந்துபோய் விடுகிறது; ஆனால் மனிதர்களுக்குப் பலன் அளிக்கக் கூடியதோ, பூமியில் தங்கி விடுகிறது; இவ்வாறே அல்லாஹ் உவமைகளைக் கூறுகிறான்.
لِلَّذِیْنَ اسْتَجَابُوْا لِرَبِّهِمُ الْحُسْنٰی ؔؕ وَالَّذِیْنَ لَمْ یَسْتَجِیْبُوْا لَهٗ لَوْ اَنَّ لَهُمْ مَّا فِی الْاَرْضِ جَمِیْعًا وَّمِثْلَهٗ مَعَهٗ لَافْتَدَوْا بِهٖ ؕ اُولٰٓىِٕكَ لَهُمْ سُوْٓءُ الْحِسَابِ ۙ۬ وَمَاْوٰىهُمْ جَهَنَّمُ ؕ وَبِئْسَ الْمِهَادُ ۟۠
لِلَّذِیْنَஎவர்களுக்குاسْتَجَابُوْاபதிலளித்தார்களோلِرَبِّهِمُதங்கள் இறைவனுக்குالْحُسْنٰی ؔؕஅழகிய நற்பலன்وَ الَّذِیْنَஇன்னும் எவர்கள்لَمْஇல்லைیَسْتَجِیْبُوْاபதிலளிக்கவில்லையோلَهٗஅவனுக்குلَوْஒருவேளைاَنَّநிச்சயமாகلَهُمْஅவர்களுக்குمَّاஎவைفِیஉள்ளதோالْاَرْضِபூமியில்جَمِیْعًاஅனைத்தும்وَّ مِثْلَهٗஇன்னும் அது போன்றதும்مَعَهٗஅதனுடன்لَافْتَدَوْاஅவர்கள் ஈடாகக் கொடுத்து விடுவார்கள்بِهٖ ؕஅதைக் கொண்டுاُولٰٓىِٕكَஅத்தகையோர்لَهُمْஅவர்களுக்குسُوْٓءُமிகக் கொடியالْحِسَابِ ۙ۬கேள்வி கணக்குوَ مَاْوٰىهُمْஇன்னும் அவர்களின் தங்குமிடம்جَهَنَّمُ ؕநரகம்وَ بِئْسَஇன்னும் அது மிகக் கெட்டالْمِهَادُ۠புகலிடம்
லில்லதீனஸ் தஜாBபூ லிரBப்Bபிஹிமுல் ஹுஸ்னா; வல்லதீன லம் யஸ்தஜீBபூ லஹூ லவ் அன்ன லஹும் மா Fபில் அர்ளி ஜமீ'அ(ன்)வ் வ மித்லஹூ ம'அஹூ லFப்ததவ் Bபிஹ்; உலா'இக லஹும் ஸூ'உல் ஹிஸாBப்; வ ம'வாஹும் ஜஹன்னமு வ Bபி'ஸல் மிஹாத்
எவர் தம் இறைவனின் கட்டளைகளை ஏற்றுக் கொள்கிறார்களோ, அவர்களுக்கு (அது) அழகிய நன்மையாகும்; இன்னும் எவர் அவனது கட்டளைகளை ஏற்றுக் கொள்ள வில்லையோ, அவர்களுக்கு பூமியிலுள்ள பொருள்கள் யாவும் சொந்தமாக இருந்து, அத்துடன் அதைப்போன்ற (இன்னொரு) பாகமும் இருந்து (மறுமையின் வேதனையிலிருந்து தப்பித்துக்கொள்ள) அவற்றையெல்லாம் மீட்டுப் பொருளாகக் கொடுத்துவிடவே விரும்புவார்கள்; (ஆனால் இது பலனை அளிக்காது;) அவர்களுக்குக் கேள்வி கணக்கு மிகவும் கடினமாக இருக்கும்; அவர்கள் தங்கும் இடம் நரகமேயாகும்; அது மிகவும் கெட்ட புகலிட(மும் ஆகு)ம்.  
اَفَمَنْ یَّعْلَمُ اَنَّمَاۤ اُنْزِلَ اِلَیْكَ مِنْ رَّبِّكَ الْحَقُّ كَمَنْ هُوَ اَعْمٰی ؕ اِنَّمَا یَتَذَكَّرُ اُولُوا الْاَلْبَابِ ۟ۙ
اَفَمَنْஆகவே எவர்یَّعْلَمُஅறிகிறாரோاَنَّمَاۤநிச்சயமாக எதுاُنْزِلَஅருளப்பட்டதோاِلَیْكَஉமக்குمِنْஇருந்துرَّبِّكَஉமது இறைவனிடம்الْحَقُّசத்தியம்كَمَنْஅவரைப் போன்றவராهُوَஅவர்اَعْمٰی ؕகுருடர்اِنَّمَاநிச்சயமாகیَتَذَكَّرُபடிப்பினை பெறுவர்اُولُواஉடையவர்கள்الْاَلْبَابِۙநல்லறிவு
அFபமய் யஃலமு அன்னமா உன்Zஜில இலய்க மிர் ரBப்Bபிகல் ஹக்கு கமன் ஹுவ அஃமா; இன்னமா யததக்கரு உலுல் அல்BபாBப்
உம் இறைவனால் உம் மீது நிச்சயமாக இறக்கப்பட்ட (வேதத்)தை உண்மையென அறிகிறவர் குருடராக இருப்பவரைப் போலாவாரா? நிச்சயமாக (இவ்வேதத்தின் மூலம்) அறிவுடையவர்கள் தாம் நல்லுபதேசம் பெறுவார்கள்.
الَّذِیْنَ یُوْفُوْنَ بِعَهْدِ اللّٰهِ وَلَا یَنْقُضُوْنَ الْمِیْثَاقَ ۟ۙ
الَّذِیْنَஎவர்கள்یُوْفُوْنَநிறைவேற்றுவார்களோبِعَهْدِவாக்குறுதியைاللّٰهِஅல்லாஹ்வின்وَ لَاமேலும்یَنْقُضُوْنَமுறிக்க மாட்டார்கள்الْمِیْثَاقَۙஉடன்படிக்கையை
அல்லதீன யூFபூன Bபி'அஹ்தில் லாஹி வலா யன்கு ளூனல் மீதாக்
அவர்கள் எத்தகையோரென்றால் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுவார்கள்; இன்னும் (தாம் செய்த) உடன்படிக்கையை முறித்து விடவும் மாட்டார்கள்.
وَالَّذِیْنَ یَصِلُوْنَ مَاۤ اَمَرَ اللّٰهُ بِهٖۤ اَنْ یُّوْصَلَ وَیَخْشَوْنَ رَبَّهُمْ وَیَخَافُوْنَ سُوْٓءَ الْحِسَابِ ۟ؕ
وَ الَّذِیْنَமேலும் எவர்கள்یَصِلُوْنَஇணைக்கின்றார்களோمَاۤஎதைاَمَرَகட்டளையிட்டானோاللّٰهُஅல்லாஹ்بِهٖۤஅதைக் கொண்டுاَنْஎன்றுیُّوْصَلَஇணைக்கப்படوَ یَخْشَوْنَஇன்னும் அஞ்சுகிறார்கள்رَبَّهُمْதங்கள் இறைவனைوَ یَخَافُوْنَமேலும் பயப்படுகிறார்கள்سُوْٓءَகடுமையானالْحِسَابِؕகேள்வி கணக்கிற்கு
வல்லதீன யஸிலூன மா அமரல் லாஹு Bபிஹீ அய் யூஸல வ யக்-ஷவ்ன ரBப்Bபஹும் வ யகாFபூன ஸூ'அல் ஹிஸாBப்
மேலும், அவர்கள் எத்தகையோரென்றால் அல்லாஹ் எது சேர்த்துவைக்கப் படவேண்டும் எனக் கட்டளையிட்டானோ, அதைச் சேர்த்து வைப்பார்கள்; இன்னும் அவர்கள் தம் இறைவனுக்கு அஞ்சுவார்கள்; மேலும் (மறுமை நாளின்) கடுமையான கேள்வி கணக்கைக் குறித்தும் பயப்படுவார்கள்.
وَالَّذِیْنَ صَبَرُوا ابْتِغَآءَ وَجْهِ رَبِّهِمْ وَاَقَامُوا الصَّلٰوةَ وَاَنْفَقُوْا مِمَّا رَزَقْنٰهُمْ سِرًّا وَّعَلَانِیَةً وَّیَدْرَءُوْنَ بِالْحَسَنَةِ السَّیِّئَةَ اُولٰٓىِٕكَ لَهُمْ عُقْبَی الدَّارِ ۟ۙ
وَ الَّذِیْنَமேலும் எவர்கள்صَبَرُواபொறுமை காத்தார்களோابْتِغَآءَநாடிوَجْهِபொருத்தத்தைرَبِّهِمْதங்கள் இறைவனின்وَ اَقَامُواமேலும் நிலைநாட்டினார்களோالصَّلٰوةَதொழுகையைوَ اَنْفَقُوْاமேலும் செலவு செய்தார்களோمِمَّاஎதிலிருந்துرَزَقْنٰهُمْநாம் அவர்களுக்கு வழங்கினோமோسِرًّاஇரகசியமாகوَّ عَلَانِیَةًமேலும் வெளிப்படையாகوَّ یَدْرَءُوْنَமேலும் அவர்கள் அகற்றுகிறார்களோبِالْحَسَنَةِநன்மையைக் கொண்டுالسَّیِّئَةَதீமையைاُولٰٓىِٕكَஅத்தகையோர்لَهُمْஅவர்களுக்கேعُقْبَیஇறுதி முடிவுالدَّارِۙஅவ்வில்லத்தின்
வல்லதீன ஸBபருBப் திகா'அ வஜ்ஹி ரBப்Bபிஹிம் வ அகாமுஸ் ஸலாத வ அன்Fபகூ மிம்மா ரZஜக்னாஹும் ஸிர்ர(ன்)வ் வ 'அலானியத(ன்)வ் வ யத்ர'ஊன Bபில்ஹஸனதிஸ் ஸய்யி'அத உலா'இக லஹும் 'உக்Bபத் தார்
இன்னும், அவர்கள் எத்தகையோரென்றால் தங்கள் இறைவனின் பொருத்தத்தைத் தேடி, பொறுமையைக் கடைப்பிடிப்பார்கள்; தொழுகையையும் நிலைநிறுத்துவார்கள்; நாம் அவர்களுக்கு அளித்ததிலிருந்து இரகசியமாகவும், பகிரங்கமாகவும் (நன்முறையில்) செலவு செய்வார்கள்; நன்மையைக் கொண்டே தீமையைத் தடுத்துக் கொள்வார்கள். இத்தகையோருக்கே மறுமையில் (சுவனபதி யென்னும்) நல்ல வீடு இருக்கிறது.
جَنّٰتُ عَدْنٍ یَّدْخُلُوْنَهَا وَمَنْ صَلَحَ مِنْ اٰبَآىِٕهِمْ وَاَزْوَاجِهِمْ وَذُرِّیّٰتِهِمْ وَالْمَلٰٓىِٕكَةُ یَدْخُلُوْنَ عَلَیْهِمْ مِّنْ كُلِّ بَابٍ ۟ۚ
جَنّٰتُசுவனங்கள்عَدْنٍநிலையானیَّدْخُلُوْنَهَاஅவற்றில் அவர்கள் நுழைவார்கள்وَ مَنْமேலும் எவர்صَلَحَநற்செயல் செய்தாரோمِنْஇருந்துاٰبَآىِٕهِمْஅவர்களின் மூதாதையர்கள்وَ اَزْوَاجِهِمْஇன்னும் அவர்களின் துணைகள்وَ ذُرِّیّٰتِهِمْஇன்னும் அவர்களின் சந்ததிகள்وَ الْمَلٰٓىِٕكَةُஇன்னும் வானவர்கள்یَدْخُلُوْنَநுழைவார்கள்عَلَیْهِمْஅவர்களிடம்مِّنْஇருந்துكُلِّஒவ்வொருبَابٍۚவாசல்
ஜன்னாது 'அதி(ன்)ய் யத்கு லூனஹா வ மன் ஸலஹ மின் ஆBபா'இஹிம் வ அZஜ்வாஜிஹிம் வ துர்ரிய்யாதிஹிம் வல்மலா'இ கது யத்குலூன 'அலய்ஹிம் மின் குல்லி BபாBப்
நிலையான (அந்த) சுவனபதிகளில் இவர்களும், இவர்களுடைய தந்தையரில், இவர்களுடைய மனைவிமார்களில், இவர்கள் சந்ததியினரில் (சன்மார்க்கத்திற்கு) இசைந்து யார் நடந்தார்களோ அவர்களும் நுழைவார்கள்; மலக்குகள் ஒவ்வொரு வாயில் வழியாகவும் இவர்களிடம் வருவார்கள்.
سَلٰمٌ عَلَیْكُمْ بِمَا صَبَرْتُمْ فَنِعْمَ عُقْبَی الدَّارِ ۟ؕ
سَلٰمٌசாந்திعَلَیْكُمْஉங்கள் மீதுبِمَاகாரணமாகصَبَرْتُمْநீங்கள் பொறுமை காத்ததின்فَنِعْمَஆகவே மிகவும் சிறந்ததுعُقْبَیஇறுதி முடிவுالدَّارِؕஇல்லம்
ஸலாமுன் 'அலய்கும் Bபிமா ஸBபர்தும்; Fபனிஃம 'உக்Bபத் தார்
“நீங்கள் பொறுமையைக் கடைப்பிடித்ததற்காக “ஸலாமுன் அலைக்கும்” (உங்கள் மீது ஸலாம் உண்டாவதாக!) உங்களுடைய இறுதி வீடு மிகவும் நல்லதாயிற்று!” (என்று கூறுவார்கள்.)
وَالَّذِیْنَ یَنْقُضُوْنَ عَهْدَ اللّٰهِ مِنْ بَعْدِ مِیْثَاقِهٖ وَیَقْطَعُوْنَ مَاۤ اَمَرَ اللّٰهُ بِهٖۤ اَنْ یُّوْصَلَ وَیُفْسِدُوْنَ فِی الْاَرْضِ ۙ اُولٰٓىِٕكَ لَهُمُ اللَّعْنَةُ وَلَهُمْ سُوْٓءُ الدَّارِ ۟
وَ الَّذِیْنَஇன்னும் எவர்கள்یَنْقُضُوْنَமுறிக்கிறார்களோعَهْدَஉடன்படிக்கையைاللّٰهِஅல்லாஹ்வின்مِنْۢஇருந்துبَعْدِபிறகுمِیْثَاقِهٖஅதன் உறுதிமொழிக்குوَ یَقْطَعُوْنَஇன்னும் துண்டிக்கிறார்களோمَاۤஎதனைاَمَرَகட்டளையிட்டானோاللّٰهُஅல்லாஹ்بِهٖۤஅதைக் கொண்டுاَنْஎன்றுیُّوْصَلَஇணைக்கப்படوَ یُفْسِدُوْنَஇன்னும் குழப்பம் செய்கிறார்களோفِیஇல்الْاَرْضِ ۙபூமிاُولٰٓىِٕكَஅத்தகையோர்لَهُمُஅவர்களுக்குاللَّعْنَةُசாபம்وَ لَهُمْஇன்னும் அவர்களுக்குسُوْٓءُதீயالدَّارِஇருப்பிடம்
வல்லதீன யன்குளூன 'அஹ்தல் லாஹி மிம் Bபஃதி மீதாகிஹீ வ யக்த'ஊன மா அமரல் லாஹு Bபிஹீ அய் யூஸல வ யுFப்ஸிதூன Fபில் அர்ளி உலா'இக லஹுமுல் லஃனது வ லஹும் ஸூ'உத் தார்
எவர்கள் அல்லாஹ்விடம் அளித்த வாக்குறுதியை உறுதிப்படுத்திய பின்னர் முறித்து விடுகிறார்களோ; இன்னும், அல்லாஹ் சேர்த்து வைக்க வேண்டுமென ஏவியதைப் பிரித்து விடுகிறார்களோ; பூமியில் ஃபஸாது (விஷமம்) செய்கிறார்களோ - அத்தகையோருக்குச் சாபந்தான்; அவர்களுக்கு மிகக்கெட்ட வீடும் இருக்கிறது.
اَللّٰهُ یَبْسُطُ الرِّزْقَ لِمَنْ یَّشَآءُ وَیَقْدِرُ ؕ وَفَرِحُوْا بِالْحَیٰوةِ الدُّنْیَا ؕ وَمَا الْحَیٰوةُ الدُّنْیَا فِی الْاٰخِرَةِ اِلَّا مَتَاعٌ ۟۠
اَللّٰهُஅல்லாஹ்یَبْسُطُவிசாலமாக்குகிறான்الرِّزْقَவாழ்வாதாரத்தைلِمَنْஎவருக்குیَّشَآءُஅவன் நாடுகிறானோوَ یَقْدِرُ ؕமேலும் சுருக்குகிறான்وَ فَرِحُوْاமேலும் அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்بِالْحَیٰوةِவாழ்க்கையைக் கொண்டுالدُّنْیَا ؕஇவ்வுலகوَ مَاமேலும் இல்லைالْحَیٰوةُவாழ்க்கைالدُّنْیَاஇவ்வுலகفِی-இல்الْاٰخِرَةِமறுமைக்குاِلَّاதவிரمَتَاعٌ۠அற்ப சுகமே
அல்லாஹு யBப்ஸுதுர் ரிZஜ்க லிமய் யஷா'உ வ யக்திர்; வ Fபரிஹூ Bபில்ஹயாதித் துன்யா வ மல் ஹயாதுத் துன்ய Fபில் ஆகிரதி இல்லா மதா'
அல்லாஹ் தான் நாடியவருக்கு சம்பத்தை விசாலமாக்குகிறான்; (தான் நாடியவருக்கு) அளவிட்டுக் கொடுக்கின்றான்; எனினும் அவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் மகிழ்ச்சியடைகிறார்கள் - இவ்வுலக வாழ்க்கையோ மறுமைக்கு ஒப்பிட்டால் மிகவும் அற்பமேயன்றி வேறில்லை.  
وَیَقُوْلُ الَّذِیْنَ كَفَرُوْا لَوْلَاۤ اُنْزِلَ عَلَیْهِ اٰیَةٌ مِّنْ رَّبِّهٖ ؕ قُلْ اِنَّ اللّٰهَ یُضِلُّ مَنْ یَّشَآءُ وَیَهْدِیْۤ اِلَیْهِ مَنْ اَنَابَ ۟ۖۚ
وَ یَقُوْلُமேலும் கூறுகிறார்கள்الَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோلَوْ لَاۤஏன்اُنْزِلَஇறக்கப்படவில்லைعَلَیْهِஅவர் மீதுاٰیَةٌஓர் அத்தாட்சிمِّنْஇருந்துرَّبِّهٖ ؕஅவருடைய இறைவனிடம்قُلْநீர் கூறுவீராகاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்یُضِلُّவழிகேட்டில் விடுகிறான்مَنْயாரைیَّشَآءُநாடுகிறானோوَ یَهْدِیْۤமேலும் நேர்வழி காட்டுகிறான்اِلَیْهِதன்பால்مَنْஎவர்اَنَابَۖۚதிரும்புகிறாரோ
வ யகூலுல் லதீன கFபரூ லவ் லா உன்Zஜில 'அலய்ஹி ஆயதும் மிர் ரBப்Bபிஹ்; குல் இன்னல் லாஹ யுளில்லு மய் யஷா'உ வ யஹ்தீ இலய்ஹி மன் அனாBப்
“இவருக்கு இவருடைய இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சி இறக்கி வைக்கப்படக் கூடாதா” என்று நிராகரிப்போர் கூறுகிறார்கள், (நபியே!) நீர் கூறும்: “நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவரை வழிகெடச்செய்கிறான்; தன் பால் எவர் திரும்புகிறாரோ அத்தகையோருக்கு நேர் வழிகாட்டுகிறான்” என்று
اَلَّذِیْنَ اٰمَنُوْا وَتَطْمَىِٕنُّ قُلُوْبُهُمْ بِذِكْرِ اللّٰهِ ؕ اَلَا بِذِكْرِ اللّٰهِ تَطْمَىِٕنُّ الْقُلُوْبُ ۟ؕ
اَلَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ تَطْمَىِٕنُّமேலும் அமைதி பெறுகின்றனவோقُلُوْبُهُمْஅவர்களின் உள்ளங்கள்بِذِكْرِநினைவால்اللّٰهِ ؕஅல்லாஹ்வின்اَلَاஅறிந்து கொள்ளுங்கள்بِذِكْرِநினைவால்اللّٰهِஅல்லாஹ்வின்تَطْمَىِٕنُّஅமைதி பெறுகின்றனالْقُلُوْبُؕஉள்ளங்கள்
அல்லதீன ஆமனூ வ தத்ம'இன்னு குலூBபுஹும் Bபிதிக்ரில் லாஹ்; அலா Bபிதிக்ரில் லாஹி தத்ம'இன்னுல் குலூBப்
(நேர் வழி பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தாம் (முற்றிலும்) ஈமான் கொண்டவர்கள்; மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன; அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க!
اَلَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ طُوْبٰی لَهُمْ وَحُسْنُ مَاٰبٍ ۟
اَلَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِநற்செயல்களைطُوْبٰیநற்பேறுلَهُمْஅவர்களுக்குوَ حُسْنُமேலும் அழகியمَاٰبٍமீளுமிடம்
அல்லதீன ஆமனூ வ அ'அமிலுஸ் ஸாலிஹாதி தூBபா லஹும் வ ஹுஸ்னு ம ஆBப்
எவர்கள் ஈமான் கொண்டு நற்கருமங்கள் புரிகின்றார்களோ, அவர்களுக்கு (எல்லா) நற்பாக்கியங்களும் உண்டு; இன்னும் அழகிய இருப்பிடமும் உண்டு.
كَذٰلِكَ اَرْسَلْنٰكَ فِیْۤ اُمَّةٍ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهَاۤ اُمَمٌ لِّتَتْلُوَاۡ عَلَیْهِمُ الَّذِیْۤ اَوْحَیْنَاۤ اِلَیْكَ وَهُمْ یَكْفُرُوْنَ بِالرَّحْمٰنِ ؕ قُلْ هُوَ رَبِّیْ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ۚ عَلَیْهِ تَوَكَّلْتُ وَاِلَیْهِ مَتَابِ ۟
كَذٰلِكَஅவ்வாறேاَرْسَلْنٰكَஉம்மை நாம் அனுப்பியுள்ளோம்فِیْۤஇல்اُمَّةٍஒரு சமுதாயம்قَدْநிச்சயமாகخَلَتْசென்றுவிட்டனمِنْஇருந்துقَبْلِهَاۤஅதற்கு முன்اُمَمٌபல சமுதாயங்கள்لِّتَتْلُوَاۡநீர் ஓதிக்காட்டுவதற்காகعَلَیْهِمُஅவர்களுக்குالَّذِیْۤஎதனைاَوْحَیْنَاۤநாம் அறிவித்தோமோاِلَیْكَஉமக்குوَ هُمْஅவர்களோیَكْفُرُوْنَநிராகரிக்கிறார்கள்بِالرَّحْمٰنِ ؕஅளவற்ற அருளாளனைقُلْநீர் கூறுவீராகهُوَஅவனேرَبِّیْஎன் இறைவன்لَاۤஇல்லைاِلٰهَவணக்கத்திற்குரியவன்اِلَّاதவிரهُوَ ۚஅவனைعَلَیْهِஅவன் மீதேتَوَكَّلْتُநான் முழுமையாக நம்பிக்கை வைத்துள்ளேன்وَ اِلَیْهِமேலும் அவனிடமேمَتَابِஎனது மீளுதல்
கதாலிக அர்ஸல்னாக Fபீ உம்மதின் கத் கலத் மின் கBப்லிஹா உமமுல் லிதத்லுவ 'அலய்ஹிமுல் லதீ அவ்ஹய்னா இலய்க வ ஹும் யக்Fபுரூன Bபிர் ரஹ்மான்; குல் ஹுவ ரBப்Bபீ லா இலாஹ இல்லா ஹுவ 'அலய்ஹி தவக்கல்து வ இலய்ஹி மதாBப்
(நபியே!) நாம் உம்மை இவ்வாறே ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தோம்; இவர்களுக்கு முன்னரும் பல கூட்டத்தினர் நிச்சயமாகச் சென்றிருக்கிறார்கள்; நாம் உம் மீது எதை வஹீயாக அறிவித்தோமோ அதை இவர்களுக்கு ஓதிக்காண்பிப்பதற்காக (உம்மை அனுப்பினோம்); ஆனால் இவர்களோ அர்ரஹ்மா(ன் எனும் அருள் மிக்க இறைவ)னையே நிராகரிக்கின்றனர். அவர்களிடம்: “அவனே என் இறைவன்; அவனைத் தவிர வேறு நாயன் எவனுமில்லை; அவன் மீதே நான் முழுமையாக நம்பிக்கை வைத்திருக்கிறேன். அவனிடமே (என்னுடைய) மீட்சியும் இருக்கிறது” என்று நீர் கூறுவீராக!
وَلَوْ اَنَّ قُرْاٰنًا سُیِّرَتْ بِهِ الْجِبَالُ اَوْ قُطِّعَتْ بِهِ الْاَرْضُ اَوْ كُلِّمَ بِهِ الْمَوْتٰی ؕ بَلْ لِّلّٰهِ الْاَمْرُ جَمِیْعًا ؕ اَفَلَمْ یَایْـَٔسِ الَّذِیْنَ اٰمَنُوْۤا اَنْ لَّوْ یَشَآءُ اللّٰهُ لَهَدَی النَّاسَ جَمِیْعًا ؕ وَلَا یَزَالُ الَّذِیْنَ كَفَرُوْا تُصِیْبُهُمْ بِمَا صَنَعُوْا قَارِعَةٌ اَوْ تَحُلُّ قَرِیْبًا مِّنْ دَارِهِمْ حَتّٰی یَاْتِیَ وَعْدُ اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ لَا یُخْلِفُ الْمِیْعَادَ ۟۠
وَ لَوْஇன்னும் ஒருவேளைاَنَّநிச்சயமாகقُرْاٰنًاஒரு குர்ஆன்سُیِّرَتْநகர்த்தப்பட்டாலும்بِهِஅதைக் கொண்டுالْجِبَالُமலைகள்اَوْஅல்லதுقُطِّعَتْபிளக்கப்பட்டாலும்بِهِஅதைக் கொண்டுالْاَرْضُபூமிاَوْஅல்லதுكُلِّمَபேச வைக்கப்பட்டாலும்بِهِஅதைக் கொண்டுالْمَوْتٰی ؕஇறந்தவர்கள்بَلْமாறாகلِّلّٰهِஅல்லாஹ்வுக்கேالْاَمْرُஅதிகாரம்جَمِیْعًا ؕஅனைத்தும்اَفَلَمْஅப்படியிருக்க, இல்லையாیَایْـَٔسِஅறியالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْۤاநம்பிக்கை கொண்டார்களோاَنْஎன்றுلَّوْஒருவேளைیَشَآءُநாடினால்اللّٰهُஅல்லாஹ்لَهَدَیஅவன் நேர்வழி காட்டியிருப்பான்النَّاسَமனிதர்களுக்குجَمِیْعًا ؕஅனைவர்க்கும்وَ لَاஇன்னும்یَزَالُதொடர்ந்துالَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோتُصِیْبُهُمْஅவர்களை வந்தடையும்بِمَاகாரணமாகصَنَعُوْاஅவர்கள் செய்தவற்றின்قَارِعَةٌஒரு பேரழிவுاَوْஅல்லதுتَحُلُّஅது இறங்கும்قَرِیْبًاஅருகாமையில்مِّنْஇலிருந்துدَارِهِمْஅவர்களின் இல்லங்களுக்குحَتّٰیவரைیَاْتِیَவரும்وَعْدُவாக்குறுதிاللّٰهِ ؕஅல்லாஹ்வுடையاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَاஇல்லைیُخْلِفُமாறு செய்யமாட்டான்الْمِیْعَادَ۠வாக்குறுதிக்கு
வ லவ் அன்ன குர்'ஆனன் ஸுய்யிரத் Bபிஹில் ஜிBபாலு அவ் குத்தி'அத் Bபிஹில் அர்ளு அவ் குல்லிம Bபிஹில் மவ்தா; Bபல் லில்லாஹில் அம்ரு ஜமீ'ஆ; அFபலம் யய்'அஸில் லதீன ஆமனூ அல் லவ் யஷா 'உல்லாஹு லஹதன் னாஸ ஜமீ'ஆ; வலா யZஜாலுல் லதீன கFபரூ துஸீBபுஹும் Bபிமா ஸன'ஊ காரி'அதுன் அவ் தஹுல்லு கரீBபம் மின் தாரிஹிம் ஹத்தா ய'திய வஃதுல் லாஹ்; இன்னல் லாஹ லா யுக்லிFபுல் மீ'ஆத்
நிச்சயமாக குர்ஆன் - அதனைக் கொண்டு மலைகளை நகரும்படிச் செய்தாலும், அல்லது அதனைக் கொண்டு பூமியைத் துண்டு துண்டாக்கினாலும், அல்லது அதனைக் கொண்டு இறந்தவர்கள் பேசும்படிச் செய்யப்பட்டாலும் (காஃபிர்கள் விசுவாசங்கொள்ளவே மாட்டார்கள்), ஆயினும் எல்லாக்காரியங்களும் அல்லாஹ்வுக்கே உரியன; ஆகவே, அல்லாஹ் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவருக்கும் நேர்வழி காட்டியிருப்பான் என்பதை ஈமான் கொண்டவர்கள் அறியவில்லையா? நிராகரிப்போரை, அவர்கள் செய்து கொண்டிருக்கும் (தீச்) செயல்கள் காரணமாக ஏதேனும் ஒரு கேடு வந்தடைந்து கொண்டேயிருக்கும், அல்லது அவர்களுடைய இருப்பிடங்களுக்குச் சமீபமாகவேனும், (அக்கேடு) சம்பவித்து, (உங்கள் வெற்றி குறித்து) அல்லாஹ்வின் வாக்குறுதி நிறைவேறியே தீரும் - நிச்சயமாக அல்லாஹ் (தன்) வாக்குறுதியில் மாறுசெய்யமாட்டான்.
وَلَقَدِ اسْتُهْزِئَ بِرُسُلٍ مِّنْ قَبْلِكَ فَاَمْلَیْتُ لِلَّذِیْنَ كَفَرُوْا ثُمَّ اَخَذْتُهُمْ ۫ فَكَیْفَ كَانَ عِقَابِ ۟
وَ لَقَدِமேலும் நிச்சயமாகاسْتُهْزِئَபரிகசிக்கப்பட்டார்கள்بِرُسُلٍதூதர்கள்مِّنْஇருந்துقَبْلِكَஉமக்கு முன்னர்فَاَمْلَیْتُஎனவே நான் அவகாசம் அளித்தேன்لِلَّذِیْنَஎவர்களுக்குكَفَرُوْاநிராகரித்தார்களோثُمَّபின்னர்اَخَذْتُهُمْ ۫நான் அவர்களைப் பிடித்துக் கொண்டேன்فَكَیْفَஆகவே எப்படிكَانَஇருந்ததுعِقَابِஎனது தண்டனை
வ லகதிஸ் துஹ்Zஜி'அ Bபி ருஸுலிம் மின் கBப்லிக Fப அம்லய்து லில்லதீன கFபரூ தும்ம அகத்துஹும் Fபகய்Fப கான 'இகாBப்
(நபியே!) நிச்சயமாக உமக்கு முன்னர் (வந்து சென்ற நம்) தூதர்களும் (இவ்வாறே) பரிகசிக்கப் பட்டனர்; ஆகவே, நிராகரித்துக் கொண்டிருந்தோருக்கு நான் தவணையளித்துப் பின்னர் அவர்களைப் பிடித்துக் கொண்டேன்; ஆகவே, (அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட) என் தண்டனை எவ்வாறு இருந்தது? (என்பதைச் சிந்திப்பார்களாக!)
اَفَمَنْ هُوَ قَآىِٕمٌ عَلٰی كُلِّ نَفْسٍ بِمَا كَسَبَتْ ۚ وَجَعَلُوْا لِلّٰهِ شُرَكَآءَ ؕ قُلْ سَمُّوْهُمْ ؕ اَمْ تُنَبِّـُٔوْنَهٗ بِمَا لَا یَعْلَمُ فِی الْاَرْضِ اَمْ بِظَاهِرٍ مِّنَ الْقَوْلِ ؕ بَلْ زُیِّنَ لِلَّذِیْنَ كَفَرُوْا مَكْرُهُمْ وَصُدُّوْا عَنِ السَّبِیْلِ ؕ وَمَنْ یُّضْلِلِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ هَادٍ ۟
اَفَمَنْஎனவே எவன்هُوَஅவன்قَآىِٕمٌகண்காணிப்பவனோعَلٰیமீதுكُلِّஒவ்வொருنَفْسٍۭஆத்மாவின்بِمَاஎதைக் கொண்டுكَسَبَتْ ۚஅது சம்பாதித்ததோوَ جَعَلُوْاமேலும் அவர்கள் ஆக்கினார்கள்لِلّٰهِஅல்லாஹ்வுக்குشُرَكَآءَ ؕஇணைகளைقُلْநீர் கூறுவீராகسَمُّوْهُمْ ؕஅவர்களுக்குப் பெயரிடுங்கள்اَمْஅல்லதுتُنَبِّـُٔوْنَهٗஅவனுக்கு நீங்கள் அறிவிக்கிறீர்களாبِمَاஎதைப்பற்றிلَاஇல்லைیَعْلَمُஅவன் அறிகிறான்فِیஇல்الْاَرْضِபூமியில்اَمْஅல்லதுبِظَاهِرٍவெளிப்படையானதைக் கொண்டுمِّنَலிருந்துالْقَوْلِ ؕசொல்லின்بَلْமாறாகزُیِّنَஅழகாக்கப்பட்டதுلِلَّذِیْنَஎவர்களுக்குكَفَرُوْاநிராகரித்தார்களோمَكْرُهُمْஅவர்களின் சூழ்ச்சிوَ صُدُّوْاமேலும் அவர்கள் தடுக்கப்பட்டனர்عَنِலிருந்துالسَّبِیْلِ ؕநேர்வழியின்وَ مَنْமேலும் எவரைیُّضْلِلِவழிகேட்டில் விடுகிறானோاللّٰهُஅல்லாஹ்فَمَاபிறகு இல்லைلَهٗஅவனுக்குمِنْஎந்தهَادٍநேர்வழி காட்டுபவரும்
அFபமன் ஹுவ கா'இமுன் 'அலா குல்லி னFப்ஸிம் Bபிமா கஸBபத்; வ ஜ'அலூ லில்லாஹி ஷுரகா'அ குல் ஸமூஹும்; அம் துனBப்Bபி'ஊன ஹூ Bபிமா லா யஃலமு Fபில் அர்ளி; அம் Bபிளாஹிரிம் மினல் கவ்ல்; Bபல் Zஜுய்யின லில்லதீன கFபரூ மக்ருஹும் வ ஸுத்தூ 'அனிஸ் ஸBபீல்; வ மய் யுள்லிலில் லாஹு Fபமா லஹூ மின் ஹாத்;
ஒவ்வோர் ஆத்மா சம்பாதிக்கும் ஒவ்வொன்றையும் கண்காணிப்பவன் அவனல்லவா? அப்படியிருந்தும்; அவர்கள் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்துகின்றார்கள். (நபியே!) நீர் கூறும்: “அவர்களின் பெயர்களைக் கூறுங்கள்; அல்லது பூமியிலுள்ள அவன் அறியாதவற்றை நீங்கள் அவனுக்கு அறிவிக்கின்றீர்களா? அல்லது (நீங்கள் கூறுவது) வெறும் வார்த்தைகள் தானா?” என்று. அப்படியல்ல! நிராகரிப்பவர்களுக்கு அவர்களுடைய சூழ்ச்சிகள் அழகாகக் காண்பிக்கப் பட்டுள்ளன; நேர்வழியிலிருந்து அவர்கள் தடுக்கப்பட்டும் விட்டனர். எவரை அல்லாஹ் தவறான வழியில் விட்டுவிட்டானோ, அவரை நேர் வழியில் செலுத்துபவர் எவருமில்லை.
لَهُمْ عَذَابٌ فِی الْحَیٰوةِ الدُّنْیَا وَلَعَذَابُ الْاٰخِرَةِ اَشَقُّ ۚ وَمَا لَهُمْ مِّنَ اللّٰهِ مِنْ وَّاقٍ ۟
لَهُمْஅவர்களுக்குعَذَابٌவேதனைفِیஇல்الْحَیٰوةِவாழ்க்கைالدُّنْیَاஇவ்வுலகوَ لَعَذَابُஇன்னும் நிச்சயமாக வேதனைالْاٰخِرَةِமறுமையின்اَشَقُّ ۚமிகக் கடினமானதுوَ مَاமேலும் இல்லைلَهُمْஅவர்களுக்குمِّنَஇருந்துاللّٰهِஅல்லாஹ்مِنْஎந்த ஒருوَّاقٍபாதுகாப்பவரும்
லஹும் 'அதாBபுன் Fபில் ஹயாதித் துன்யா வ ல'அதாBபுல் ஆகிரதி அஷக், வமா லஹும் மினல் லாஹி மின்-வாக்
அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையிலும் வேதனையுண்டு, மறுமையின் வேதனை மிகக் கடுமையானது - அல்லாஹ்விடமிருந்து அவர்களைக் காப்பாற்றுவோர் எவருமில்லை.
مَثَلُ الْجَنَّةِ الَّتِیْ وُعِدَ الْمُتَّقُوْنَ ؕ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ؕ اُكُلُهَا دَآىِٕمٌ وَّظِلُّهَا ؕ تِلْكَ عُقْبَی الَّذِیْنَ اتَّقَوْا ۖۗ وَّعُقْبَی الْكٰفِرِیْنَ النَّارُ ۟
مَثَلُதன்மைالْجَنَّةِசுவனத்தின்الَّتِیْஎத்தகையதென்றால்وُعِدَவாக்களிக்கப்பட்டதோالْمُتَّقُوْنَ ؕஇறையச்சமுடையோருக்குتَجْرِیْஓடும்مِنْஇருந்துتَحْتِهَاஅதன் கீழேالْاَنْهٰرُ ؕஆறுகள்اُكُلُهَاஅதன் உணவுகள்دَآىِٕمٌநிலையானவைوَّ ظِلُّهَا ؕஅதன் நிழலும்تِلْكَஅதுவேعُقْبَیமுடிவுالَّذِیْنَஎவர்கள்اتَّقَوْا ۖۗஇறையச்சத்தோடு இருந்தார்களோوَّ عُقْبَیமேலும் முடிவுالْكٰفِرِیْنَநிராகரிப்பவர்களின்النَّارُநெருப்பாகும்
மதலுல் ஜன்னதில் லதீ வு'இதல் முத்தகூன தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு உகுலுஹா தா'இமு(ன்)வ் வ ளில்லுஹா; தில்க உக்Bபல் லதீனத் தகவ் வ 'உக்Bபல் கFபிரீனன் னார்
பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவனபதியின் தன்மையானது - அதன் கீழே நீர் அருவிகள் (என்றென்றும்) ஓடிக் கொண்டிருக்கும்; அதன் ஆகாரமும், அதன் நிழலும் நிலையானவை; இது தான் பயபக்தியுடையோரின் முடிவாகும்; காஃபிர்களின் முடிவோ (நரக) நெருப்பேயாகும்.
وَالَّذِیْنَ اٰتَیْنٰهُمُ الْكِتٰبَ یَفْرَحُوْنَ بِمَاۤ اُنْزِلَ اِلَیْكَ وَمِنَ الْاَحْزَابِ مَنْ یُّنْكِرُ بَعْضَهٗ ؕ قُلْ اِنَّمَاۤ اُمِرْتُ اَنْ اَعْبُدَ اللّٰهَ وَلَاۤ اُشْرِكَ بِهٖ ؕ اِلَیْهِ اَدْعُوْا وَاِلَیْهِ مَاٰبِ ۟
وَ الَّذِیْنَஇன்னும் எவர்களுக்குاٰتَیْنٰهُمُநாம் வழங்கினோமோالْكِتٰبَவேதத்தைیَفْرَحُوْنَஅவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்بِمَاۤஎதனைக் கொண்டுاُنْزِلَஅருளப்பட்டதோاِلَیْكَஉமக்குوَ مِنَஇன்னும்الْاَحْزَابِபிரிவினர்களில்مَنْஎவர்یُّنْكِرُமறுக்கிறாரோبَعْضَهٗ ؕஅதன் சில பகுதியைقُلْநீர் கூறுவீராகاِنَّمَاۤநிச்சயமாகاُمِرْتُநான் ஏவப்பட்டுள்ளேன்اَنْஎன்றுاَعْبُدَநான் வணங்க வேண்டும்اللّٰهَஅல்லாஹ்வைوَ لَاۤஇன்னும் கூடாதுاُشْرِكَநான் இணைவைக்கبِهٖ ؕஅவனுக்குاِلَیْهِஅவன்பாலேயேاَدْعُوْاநான் அழைக்கின்றேன்وَ اِلَیْهِஇன்னும் அவன்பாலேயேمَاٰبِஎனது மீளுதல்
வல்லதீன ஆதய்னா ஹுமுல் கிதாBப யFப்ரஹூன Bபிமா உன்Zஜில இலய்க வ மினல் அஹ்ZஜாBபி மய் யுன்கிரு Bபஃளஹ்; குல் இன்னமா உமிர்து அன் அஃBபுதல் லாஹ வ லா உஷ்ரிக Bபிஹ்; இலய்ஹி அத்'ஊ வ இலய்ஹி மாBப்
எவர்களுக்கு நாம் (முன்னர்) வேதத்தை அளித்தோமோ, அவர்கள் (நபியே!) உம் மீது இறக்கப்பட்ட (இவ்வேதத்)தைப் பற்றி மகிழ்வார்கள்; எனினும் இதன் சில பகுதிகளை மறுக்கிறவர்களும் (அவர்களுடைய) கூட்டதில் இருக்கிறார்கள். (அவர்களை நோக்கி:)நான் ஏவப்பட்டிருப்பதெல்லாம், அல்லாஹ் - (ஒருவனையே) வணங்க வேண்டும்; அவனுக்கு (எதனையும், எவரையும்) இணைவைக்கக் கூடாது என்பது தான்; நான் (உங்களை) அவன் பக்கமே அழைக்கின்றேன்; அவன் பாலே (என்) மீட்சியும் இருக்கிறது” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
وَكَذٰلِكَ اَنْزَلْنٰهُ حُكْمًا عَرَبِیًّا ؕ وَلَىِٕنِ اتَّبَعْتَ اَهْوَآءَهُمْ بَعْدَ مَا جَآءَكَ مِنَ الْعِلْمِ ۙ مَا لَكَ مِنَ اللّٰهِ مِنْ وَّلِیٍّ وَّلَا وَاقٍ ۟۠
وَ كَذٰلِكَஅவ்வாறேاَنْزَلْنٰهُஅதனை நாம் இறக்கினோம்حُكْمًاஒரு சட்டமாகعَرَبِیًّا ؕஅரபு மொழியில்وَ لَىِٕنِஇன்னும் நீர் ஒருவேளைاتَّبَعْتَபின்பற்றினால்اَهْوَآءَهُمْஅவர்களின் மனோ இச்சைகளைبَعْدَ مَاஅதற்குப் பின்னர்جَآءَكَஉமக்கு வந்தمِنَஇருந்துالْعِلْمِ ۙஞானம்مَاஇல்லைلَكَஉமக்குمِنَஇடமிருந்துاللّٰهِஅல்லாஹ்مِنْஎந்த ஒருوَّلِیٍّபாதுகாவலனும்وَّ لَاஇன்னும் இல்லைوَاقٍ۠காப்பவனும்
வ கதாலிக அன்Zஜல்னாஹு ஹுக்மன் 'அரBபிய்யா; வ ல'இனித் தBபஃத அஹ்வா 'அஹும் Bபஃத மா ஜா'அக மினல் 'இல்மி மா லக மினல் லாஹி மி(ன்)வ் வலியி(ன்)வ் வலா வாக்
(நபியே!) இவ்வாறே அரபி (மொழி)யில் சட்ட திட்டங்களைக் கொண்டதாக, இ(வ் வேதத்)தை நாம் இறக்கி வைத்திருக்கின்றோம்; எனவே உமக்கு ஞானம் வந்த பின்னரும் அவர்களுடைய (வீணான) இச்சைகளை நீர் பின்பற்றினால் அல்லாஹ்விடமிருந்து (உம்மை இரட்சிக்கும் உற்ற) உதவியாளரோ, பாதுகாவலரோ (எவரும்) உமக்குக் கிடைக்க மாட்டார்.  
وَلَقَدْ اَرْسَلْنَا رُسُلًا مِّنْ قَبْلِكَ وَجَعَلْنَا لَهُمْ اَزْوَاجًا وَّذُرِّیَّةً ؕ وَمَا كَانَ لِرَسُوْلٍ اَنْ یَّاْتِیَ بِاٰیَةٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِ ؕ لِكُلِّ اَجَلٍ كِتَابٌ ۟
وَ لَقَدْநிச்சயமாகاَرْسَلْنَاநாம் அனுப்பினோம்رُسُلًاதூதர்களைمِّنْஇருந்துقَبْلِكَஉமக்கு முன்னர்وَ جَعَلْنَاமேலும் நாம் ஏற்படுத்தினோம்لَهُمْஅவர்களுக்குاَزْوَاجًاமனைவியரையும்وَّ ذُرِّیَّةً ؕமற்றும் சந்ததியினரையும்وَ مَاமேலும் இல்லைكَانَஇருந்ததுلِرَسُوْلٍஎந்த ஒரு தூதருக்கும்اَنْஎன்பதுیَّاْتِیَஅவர் கொண்டு வருவதுبِاٰیَةٍஓர் அத்தாட்சியைاِلَّاதவிரبِاِذْنِஅனுமதியுடன்اللّٰهِ ؕஅல்லாஹ்வின்لِكُلِّஒவ்வொருاَجَلٍதவணைக்கும்كِتَابٌஒரு பதிவு உண்டு
வ லகத் அர்ஸல்னா ருஸுலம் மின் கBப்லிக வ ஜ'அல்னா லஹும் அZஜ்வாஜ(ன்)வ் வ துர்ரிய்யஹ்; வமா கான லிரஸூலின் அய் ய'திய Bபி ஆயதின் இல்லா Bபி இத்னில் லாஹ்; லிகுல்லி அஜலின் கிதாBப்
(நபியே!) நிச்சயமாக உமக்கு முன்னரும், நாம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; அவர்களுக்கும் மனைவியரையும், சந்ததிகளையும் நாம் ஏற்படுத்தியிருந்தோம்; மேலும், எந்தத் தூதரும் அல்லாஹ்வின் அனுமதியில்லாமல் எந்த அத்தாட்சியையும் கொண்டுவந்ததில்லை; ஒவ்வொரு தவணைக்கும் ஒரு (பதிவு) ஏடு உள்ளது.
یَمْحُوا اللّٰهُ مَا یَشَآءُ وَیُثْبِتُ ۖۚ وَعِنْدَهٗۤ اُمُّ الْكِتٰبِ ۟
یَمْحُواஅழிக்கிறான்اللّٰهُஅல்லாஹ்مَاஎதைیَشَآءُநாடுகிறானோوَ یُثْبِتُ ۖۚமேலும் நிலைநிறுத்துகிறான்وَ عِنْدَهٗۤமேலும் அவனிடமேاُمُّமூலالْكِتٰبِஏடு
யம்ஹுல் லாஹு மா யஷா'உ வ யுத்Bபிது வ 'இன்தஹூ உம்முல் கிதாBப்
(எனினும்,) தான் நாடியதை (அதிலிருந்து) அல்லாஹ் அழித்து விடுவான். (தான் நாடியதை அதில்) நிலைத்திருக்கவும் செய்வான் - அவனிடத்திலேயே உம்முல் கிதாப் (மூலப் பதிவேடும்) இருக்கிறது.
وَاِنْ مَّا نُرِیَنَّكَ بَعْضَ الَّذِیْ نَعِدُهُمْ اَوْ نَتَوَفَّیَنَّكَ فَاِنَّمَا عَلَیْكَ الْبَلٰغُ وَعَلَیْنَا الْحِسَابُ ۟
وَ اِنْஇன்னும்مَّاஒருவேளைنُرِیَنَّكَஉமக்கு நாம் காண்பித்தாலும்بَعْضَசிலவற்றைالَّذِیْயாதொன்றைنَعِدُهُمْஅவர்களுக்கு நாம் வாக்களிக்கிறோமோاَوْஅல்லதுنَتَوَفَّیَنَّكَஉம்மை நாம் கைப்பற்றிக் கொண்டாலும்فَاِنَّمَاஆகவே நிச்சயமாகعَلَیْكَஉம் மீதுالْبَلٰغُஎத்திவைப்பதுதான்وَ عَلَیْنَاஇன்னும் நம் மீதுالْحِسَابُகணக்குக் கேட்பது
வ இம் மா னுர்ரியன்னக Bபஃளல் லதீ ன'இதுஹும் அவ் னத வFப்Fபயன்னக Fப இன்னமா 'அலய்கல் Bபலாகு வ 'அலய்னல் ஹிஸாBப்
(நபியே!) அவர்களுக்கு நாம் வாக்களித்தவற்றில் சிலதை (உம் வாழ் நாளிலேயே உம் கண்ணால்) நீர் காணும்படிச் செய்தாலும், அல்லது (அதற்கு முன்னரே) நாம் உம்மைக் கைப்பற்றிக் கொண்டாலும் (அதைப் பற்றி நீர் விசாரப்பட வேண்டாம்); உம்முடைய கடமையெல்லாம் (நம்முடைய கட்டளையை அவர்களிடம்) சேர்ப்பிப்பது தான்; (அவர்களிடம்) கணக்கு வாங்குதல் நம்மிடம் இருக்கிறது.
اَوَلَمْ یَرَوْا اَنَّا نَاْتِی الْاَرْضَ نَنْقُصُهَا مِنْ اَطْرَافِهَا ؕ وَاللّٰهُ یَحْكُمُ لَا مُعَقِّبَ لِحُكْمِهٖ ؕ وَهُوَ سَرِیْعُ الْحِسَابِ ۟
اَوَ لَمْஅவர்கள் இல்லையாیَرَوْاபார்க்கிறார்கள்اَنَّاநிச்சயமாக நாம்نَاْتِیவருகிறோம்الْاَرْضَபூமியைنَنْقُصُهَاஅதனை நாம் குறைக்கிறோம்مِنْஇருந்துاَطْرَافِهَا ؕஅதன் எல்லைகள்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்یَحْكُمُதீர்ப்பளிக்கிறான்لَاஇல்லைمُعَقِّبَமாற்றியமைப்பவர்لِحُكْمِهٖ ؕஅவனது தீர்ப்பைوَ هُوَமேலும் அவன்سَرِیْعُவிரைவானவன்الْحِسَابِகணக்குத் தீர்ப்பதில்
அவலம் யரவ் அன்னா ன'தில் அர்ள னன்குஸுஹா மின் அத்ராFபிஹா; வல்லாஹு யஹ்குமு லா மு'அக்கிBப லிஹுக்மிஹ்; வ ஹுவ ஸரீ'உல் ஹிஸாBப்
பூமியை அதன் அருகுகளிலிருந்து நாம் (படிப்படியாகக்) குறைத்து வருகிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா, மேலும், அல்லாஹ்வே தீர்ப்பளிப்பவன்; அவன் தீர்ப்பை மாற்றுபவன் எவனுமில்லை! மேலும், அவன் கேள்வி கணக்கு கேட்பதில் மிகவும் தீவிரமானவன்.
وَقَدْ مَكَرَ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ فَلِلّٰهِ الْمَكْرُ جَمِیْعًا ؕ یَعْلَمُ مَا تَكْسِبُ كُلُّ نَفْسٍ ؕ وَسَیَعْلَمُ الْكُفّٰرُ لِمَنْ عُقْبَی الدَّارِ ۟
وَ قَدْமேலும் நிச்சயமாகمَكَرَசூழ்ச்சி செய்தார்கள்الَّذِیْنَஎவர்கள்مِنْஇருந்துقَبْلِهِمْஅவர்களுக்கு முன்فَلِلّٰهِஆனால் அல்லாஹ்வுக்கேالْمَكْرُசூழ்ச்சிجَمِیْعًا ؕஅனைத்தும்یَعْلَمُஅவன் அறிவான்مَاஎதைتَكْسِبُசம்பாதிக்கிறதோكُلُّஒவ்வொருنَفْسٍ ؕஆத்மாவும்وَ سَیَعْلَمُமேலும் விரைவில் அறிந்து கொள்வார்கள்الْكُفّٰرُநிராகரிப்பாளர்கள்لِمَنْயாருக்குعُقْبَیஇறுதி முடிவுالدَّارِஅவ்வில்லத்தின்
வ கத் மகரல் லதீன மின் கBப்லிஹிம் Fபலில்லாஹில் மக்ரு ஜமீ'ஆ; யஃலமு மா தக்ஸிBபு குல்லு னFப்ஸ்; வ ஸ யஃலமுல் குFப்Fபாரு லிமன் 'உக்Bபத் தார்
(நபியே!) இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (இவ்வாறே பல) சூழ்ச்சிகளைச் செய்துகொண்டிருந்தனர்; எனினும் எல்லா சூழ்ச்சிக(ளின் முடிவுக)ளும் அல்லாஹ்விடமே இருக்கின்றன; ஒவ்வோர் ஆத்மா சம்பாதிப்பதையும் அவன் நன்கறிவான்; மேலும், (மறுமையில்) எவர்களுக்கு நல்ல வீடு உரியது என்பதை காஃபிர்கள் சீக்கிரத்தில் அறிந்து கொள்வார்கள்.
وَیَقُوْلُ الَّذِیْنَ كَفَرُوْا لَسْتَ مُرْسَلًا ؕ قُلْ كَفٰی بِاللّٰهِ شَهِیْدًا بَیْنِیْ وَبَیْنَكُمْ ۙ وَمَنْ عِنْدَهٗ عِلْمُ الْكِتٰبِ ۟۠
وَ یَقُوْلُமேலும் கூறுகின்றனர்الَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோلَسْتَநீர் இல்லைمُرْسَلًا ؕஒரு தூதர்قُلْநீர் கூறுவீராகكَفٰیபோதுமானவன்بِاللّٰهِஅல்லாஹ்شَهِیْدًۢاசாட்சியாகبَیْنِیْஎனக்கும்وَ بَیْنَكُمْ ۙஉங்களுக்கும் இடையில்وَ مَنْமேலும் எவரிடம்عِنْدَهٗஉள்ளதோعِلْمُஞானம்الْكِتٰبِ۠வேதத்தின்
வ யகூலுல் லதீன கFபரூ லஸ்த முர்ஸலா; குல் கFபா Bபில்லாஹி ஷஹீதம் Bபய்னீ வ Bபய்னகும் வ மன் 'இன்தஹூ 'இல்முல் கிதாBப்
(நபியே!) நீர் (இறைவனால் அனுப்பப்பட்ட) தூதர் அல்லர் என்று காஃபிர்கள் சொல்கிறார்கள்; எனக்கும், உங்களுக்குமிடையே சாட்சியாக இருக்க அல்லாஹ்வும், வேதஞானம் யாரிடமிருக்கிறதோ அவர்களும் போதுமானவர்கள்” என்று நீர் கூறிவிடுவீராக!