63. ஸூரத்துல் முனாஃபிஃகூன் (நயவஞ்சகர்கள்)

மதனீ, வசனங்கள்: 11

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
اِذَا جَآءَكَ الْمُنٰفِقُوْنَ قَالُوْا نَشْهَدُ اِنَّكَ لَرَسُوْلُ اللّٰهِ ۘ وَاللّٰهُ یَعْلَمُ اِنَّكَ لَرَسُوْلُهٗ ؕ وَاللّٰهُ یَشْهَدُ اِنَّ الْمُنٰفِقِیْنَ لَكٰذِبُوْنَ ۟ۚ
اِذَاபொழுதுجَآءَكَஉம்மிடம் வந்தால்الْمُنٰفِقُوْنَநயவஞ்சகர்கள்قَالُوْاஅவர்கள் கூறுகிறார்கள்نَشْهَدُநாங்கள் சாட்சி கூறுகிறோம்اِنَّكَநிச்சயமாக நீர்لَرَسُوْلُநிச்சயமாகத் தூதர்اللّٰهِ ۘஅல்லாஹ்வின்وَ اللّٰهُஅல்லாஹ்வோیَعْلَمُஅறிவான்اِنَّكَநிச்சயமாக நீர்لَرَسُوْلُهٗ ؕநிச்சயமாக அவனுடைய தூதர்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்یَشْهَدُசாட்சி கூறுகிறான்اِنَّநிச்சயமாகالْمُنٰفِقِیْنَநயவஞ்சகர்கள்لَكٰذِبُوْنَۚநிச்சயமாகப் பொய்யர்கள்
இதா ஜா'அகல் முனாFபிகூன காலூ னஷ்ஹது இன்னக ல ரஸூலுல் லாஹ்; வல்லாஹு யஃலமு இன்னக ல ரஸூலுஹூ வல்லாஹு யஷ்ஹது இன்னல் முனாFபிகீன லகாதிBபூன்
“(நபியே!) முனாஃபிக்குகள் (நயவஞ்சகர்கள்) உம்மிடம் வந்து, “நிச்சயமாக, நீர் அல்லாஹ்வின் தூதராக இருக்கின்றீர்” என்று நாங்கள் சாட்சி சொல்கிறோம்” என்று கூறுகின்றனர். மேலும், அல்லாஹ், “நிச்சயமாக நீர் அவனுடைய தூதராக இருக்கின்றீர்” என்பதை நன்கு அறிவான். ஆனால், அல்லாஹ், நிச்சயமாக முனாஃபிக்குகள் (வஞ்சகமாகப்) பொய்யுரைப்பவர்கள்” என்பதாகச் சாட்சி சொல்கிறான்.
اِتَّخَذُوْۤا اَیْمَانَهُمْ جُنَّةً فَصَدُّوْا عَنْ سَبِیْلِ اللّٰهِ ؕ اِنَّهُمْ سَآءَ مَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
اِتَّخَذُوْۤاஅவர்கள் ஆக்கிக்கொண்டார்கள்اَیْمَانَهُمْதங்கள் சத்தியங்களைجُنَّةًஒரு கேடயமாகفَصَدُّوْاஆகவே அவர்கள் தடுத்தார்கள்عَنْவிட்டுسَبِیْلِபாதையைاللّٰهِ ؕஅல்லாஹ்வின்اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்سَآءَமிகக் கெட்டதுمَاஎதைكَانُوْاஅவர்கள் இருந்தார்களோیَعْمَلُوْنَசெய்து கொண்டிருந்தார்களோ
இத்தகதூ அய்மானஹும் ஜுன்னதன் Fபஸத்தூ 'அன் ஸBபீலில் லாஹ்; இன்னஹும் ஸா'அ மா கானூ யஃமலூன்
இவர்கள் தங்களுடைய (பொய்ச்)சத்தியங்களைக் கேடயமாக வைத்துக் கொண்டு அல்லாஹ்வின் பாதையிலிருந்து (மக்களைத்) தடுத்தும் வருகின்றனர்; நிச்சயமாக இவர்கள் செய்து கொண்டிருப்பது மிகவும் கெட்டது.
ذٰلِكَ بِاَنَّهُمْ اٰمَنُوْا ثُمَّ كَفَرُوْا فَطُبِعَ عَلٰی قُلُوْبِهِمْ فَهُمْ لَا یَفْقَهُوْنَ ۟
ذٰلِكَஅதுبِاَنَّهُمْஏனெனில் அவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்கள்ثُمَّபின்னர்كَفَرُوْاநிராகரித்தார்கள்فَطُبِعَஆகவே முத்திரையிடப்பட்டதுعَلٰیமீதுقُلُوْبِهِمْஅவர்களின் உள்ளங்களின்فَهُمْஎனவே அவர்கள்لَاஇல்லைیَفْقَهُوْنَவிளங்கிக் கொள்வார்கள்
தாலிக Bபி அன்னஹும் ஆமனூ தும்ம கFபரூ FபதுBபி'அ 'அலா குலூBபிஹிம் Fபஹும் லா யFப்கஹூன்
இது நிச்சயமாக இவர்கள் ஈமான் கொண்டு பின் காஃபிர் ஆகி விட்டதனாலேயாகும்; ஆகவே இவர்களின் இதயங்கள் மீது முத்திரையிடப்பட்டு விட்டது; எனவே, அவர்கள் விளங்கிக் கொள்ள மாட்டார்கள்.
وَاِذَا رَاَیْتَهُمْ تُعْجِبُكَ اَجْسَامُهُمْ ؕ وَاِنْ یَّقُوْلُوْا تَسْمَعْ لِقَوْلِهِمْ ؕ كَاَنَّهُمْ خُشُبٌ مُّسَنَّدَةٌ ؕ یَحْسَبُوْنَ كُلَّ صَیْحَةٍ عَلَیْهِمْ ؕ هُمُ الْعَدُوُّ فَاحْذَرْهُمْ ؕ قٰتَلَهُمُ اللّٰهُ ؗ اَنّٰی یُؤْفَكُوْنَ ۟
وَ اِذَاமேலும் எப்போதுرَاَیْتَهُمْநீர் அவர்களைக் காண்பீரோتُعْجِبُكَஉம்மை ஆச்சரியப்படுத்தும்اَجْسَامُهُمْ ؕஅவர்களின் உடல்கள்وَ اِنْமேலும் ஒருவேளைیَّقُوْلُوْاஅவர்கள் பேசினால்تَسْمَعْநீர் செவிமடுப்பீர்لِقَوْلِهِمْ ؕஅவர்களின் பேச்சைكَاَنَّهُمْஅவர்கள் இருப்பதைப் போன்றேخُشُبٌமரக்கட்டைகள்مُّسَنَّدَةٌ ؕசாய்த்து வைக்கப்பட்டیَحْسَبُوْنَஅவர்கள் எண்ணுகிறார்கள்كُلَّஒவ்வொருصَیْحَةٍசத்தத்தையும்عَلَیْهِمْ ؕதங்களுக்கு எதிராகهُمُஅவர்களேالْعَدُوُّஎதிரிகள்فَاحْذَرْهُمْ ؕஎனவே அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீராகقٰتَلَهُمُஅவர்களை அழிப்பானாகاللّٰهُ ؗஅல்லாஹ்اَنّٰیஎவ்வாறுیُؤْفَكُوْنَஅவர்கள் திசைதிருப்பப்படுகிறார்கள்
வ இதா ர அய்தஹும் துஃஜிBபுக அஜ்ஸாமுஹும் வ இ(ன்)ய் யகூலூ தஸ்மஃ லிகவ்லிஹிம் க'அன்னஹும் குஷுBபும் முஸன்னதஹ்; யஹ்ஸBபூன குல்ல ஸய்ஹதின் 'அலய்ஹிம்; ஹுமுல் 'அதுவ்வு Fபஹ்தர்ஹும்; காதலஹுமுல் லாஹு அன்னா யு'Fபகூன்
இவர்களை நீர் பார்த்தால், இவர்களுடைய உடல் (அமைப்பு)கள் உம்மை ஆச்சரியப்படுத்தும்; அன்றியும் இவர்கள் பேசினால், இவர்களுடைய பேச்சை நீர் (கவனித்துக்) கேட்பீர்; எனினும் இவர்கள் (நேர்மையானவர்கள் அல்லர்; சுவரில்) சாய்த்து வைக்கப்பட்ட மரங்கள் போன்று இருக்கின்றனர்; ஒவ்வொரு சப்தமும் தங்களுக்கு எதிரானது என்று எண்ணுகிறார்கள்; இவர்கள்தாம் (உம்) பகைவர்கள்; ஆகவே இவர்களிடம் நீர் எச்சரிக்கையாக இருப்பீராக; அல்லாஹ் இவர்களை அழித்து விடுவான்; இவர்கள் (சத்தியத்திலிருந்து) எங்கு செல்கின்றனர்?
وَاِذَا قِیْلَ لَهُمْ تَعَالَوْا یَسْتَغْفِرْ لَكُمْ رَسُوْلُ اللّٰهِ لَوَّوْا رُءُوْسَهُمْ وَرَاَیْتَهُمْ یَصُدُّوْنَ وَهُمْ مُّسْتَكْبِرُوْنَ ۟
وَ اِذَاமேலும் எப்போதுقِیْلَகூறப்பட்டால்لَهُمْஅவர்களுக்குتَعَالَوْاவாருங்கள்یَسْتَغْفِرْபாவமன்னிப்புத் தேடுவார்لَكُمْஉங்களுக்காகرَسُوْلُதூதர்اللّٰهِஅல்லாஹ்வின்لَوَّوْاஅவர்கள் திருப்பிக் கொள்கிறார்கள்رُءُوْسَهُمْதங்கள் தலைகளைوَ رَاَیْتَهُمْமேலும் நீர் அவர்களைக் காண்பீர்یَصُدُّوْنَஅவர்கள் புறக்கணிக்கிறார்கள்وَ هُمْமேலும் அவர்கள்مُّسْتَكْبِرُوْنَபெருமையடித்தவர்களாக
வ இதா கீல லஹும் த'ஆலவ் யஸ்தக்Fபிர் லகும் ரஸூலுல் லாஹி லவ்வவ் ரு'ஊ ஸஹும் வ ர அய்தஹும் யஸுத்தூன வ ஹும் முஸ்தக்Bபிரூன்
இன்னும், “வாருங்கள்; அல்லாஹ்வின் தூதர் உங்களுக்காக (இறைவனிடம்) பாவமன்னிப்புத் தேடுவார் என்று இவர்களிடம் கூறப்பட்டால், இவர்கள் தங்கள் தலைகளைச் சாய்த்துக் கொண்டு, பெருமை கொண்டவர்களாகத் திருப்பிச் செல்வதை நீர் காண்பீர்.
سَوَآءٌ عَلَیْهِمْ اَسْتَغْفَرْتَ لَهُمْ اَمْ لَمْ تَسْتَغْفِرْ لَهُمْ ؕ لَنْ یَّغْفِرَ اللّٰهُ لَهُمْ ؕ اِنَّ اللّٰهَ لَا یَهْدِی الْقَوْمَ الْفٰسِقِیْنَ ۟
سَوَآءٌசமமேعَلَیْهِمْஅவர்களுக்குاَسْتَغْفَرْتَநீர் மன்னிப்புக் கோரினாலும்لَهُمْஅவர்களுக்காகاَمْஅல்லதுلَمْஇல்லைتَسْتَغْفِرْநீர் மன்னிப்புக் கோரلَهُمْ ؕஅவர்களுக்காகلَنْஒருபோதும்یَّغْفِرَமன்னிக்க மாட்டான்اللّٰهُஅல்லாஹ்لَهُمْ ؕஅவர்களுக்குاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَاஇல்லைیَهْدِیநேர்வழி காட்டுவான்الْقَوْمَமக்களைالْفٰسِقِیْنَபாவம் செய்யும்
ஸவா'உன் 'அலய்ஹிம் அஸ் தக்Fபர்த லஹும் அம் லம் தஸ்தக்Fபிர் லஹும் ல(ன்)ய் யக்Fபிரல் லாஹு லஹும்; இன்னல் லாஹ லா யஹ்தில் கவ்மல் Fபாஸிகீன்
அவர்களுக்காக நீர் பாவமன்னிப்புக் கோரினாலும் அல்லது பாவமன்னிப்புக் கோராவிட்டாலும் அவர்களுக்குச் சமமேயாகும்; அல்லாஹ் அவர்களுக்குப் பாவமன்னிப்பளிக்க மாட்டான் - பாவம் செய்யும் சமூகத்தாரை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.
هُمُ الَّذِیْنَ یَقُوْلُوْنَ لَا تُنْفِقُوْا عَلٰی مَنْ عِنْدَ رَسُوْلِ اللّٰهِ حَتّٰی یَنْفَضُّوْا ؕ وَلِلّٰهِ خَزَآىِٕنُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَلٰكِنَّ الْمُنٰفِقِیْنَ لَا یَفْقَهُوْنَ ۟
هُمُஅவர்கள்الَّذِیْنَஎவர்கள்یَقُوْلُوْنَகூறுகிறார்களோلَاசெய்யாதீர்கள்تُنْفِقُوْاசெலவுعَلٰیமீதுمَنْஎவர்عِنْدَஇடத்தில் உள்ளாரோرَسُوْلِதூதரின்اللّٰهِஅல்லாஹ்வின்حَتّٰیவரைیَنْفَضُّوْا ؕகலைந்து செல்லும்وَ لِلّٰهِமேலும் அல்லாஹ்வுக்கேخَزَآىِٕنُகருவூலங்கள்السَّمٰوٰتِவானங்களின்وَ الْاَرْضِமற்றும் பூமியின்وَ لٰكِنَّஆனால்الْمُنٰفِقِیْنَநயவஞ்சகர்கள்لَاஇல்லைیَفْقَهُوْنَஉணர்கிறார்கள்
ஹுமுல் லதீன யகூலூன லா துன்Fபிகூ 'அலா மன் இன்த ரஸூலில் லாஹி ஹத்தா யன்Fபள்ளூ; வ லில்லாஹி கZஜா' இனுஸ் ஸமாவாதி வல் அர்ளி வ லாகின்னல் முனாFபிகீன ல யFப்கஹூன்
இவர்கள் தாம், அல்லாஹ்வின் தூதருடன் இருப்பவர்கள்; (அவரை விட்டுப்) பிரிந்து செல்லும் வரை அவர்களுக்காக நீங்கள் செலவு செய்யாதீர்கள்” என்று கூறியவர்கள்; வானங்களிலும், பூமியிலுமுள்ள பொக்கிஷங்கள் அல்லாஹ்வுக்கே சொந்தமானவை; ஆனால் இந்நயவஞ்சகர்கள் (அதை) உணர்ந்து கொள்ளமாட்டார்கள்.
یَقُوْلُوْنَ لَىِٕنْ رَّجَعْنَاۤ اِلَی الْمَدِیْنَةِ لَیُخْرِجَنَّ الْاَعَزُّ مِنْهَا الْاَذَلَّ ؕ وَلِلّٰهِ الْعِزَّةُ وَلِرَسُوْلِهٖ وَلِلْمُؤْمِنِیْنَ وَلٰكِنَّ الْمُنٰفِقِیْنَ لَا یَعْلَمُوْنَ ۟۠
یَقُوْلُوْنَஅவர்கள் கூறுகிறார்கள்لَىِٕنْநிச்சயமாகرَّجَعْنَاۤநாம் திரும்பினால்اِلَیநோக்கிالْمَدِیْنَةِமதீனாவைلَیُخْرِجَنَّநிச்சயமாக வெளியேற்றுவார்الْاَعَزُّகண்ணியமானவர்مِنْهَاஅதிலிருந்துالْاَذَلَّ ؕஇழிவானவரைوَ لِلّٰهِமேலும் அல்லாஹ்வுக்கேالْعِزَّةُகண்ணியம்وَ لِرَسُوْلِهٖமேலும் அவனுடைய தூதருக்கும்وَ لِلْمُؤْمِنِیْنَமேலும் முஃமின்களுக்கும்وَ لٰكِنَّஆனால்الْمُنٰفِقِیْنَநயவஞ்சகர்கள்لَاஇல்லைیَعْلَمُوْنَ۠அவர்கள் அறிகிறார்கள்
யகூலூன ல'இர் ரஜஃனா இலல் மதீனதி ல யுக்ரிஜன்னல் அ'அZஜ்Zஜு மின்ஹல் அதல்ல்; வ லில்லாஹில் 'இZஜ்Zஜது வலி ரஸூலிஹீ வ லில்மு'மினீன வலாகின்னல் முனாFபிகீன லா யஃலமூன்
“நாங்கள் அல்மதீனாவுக்குத் திரும்புவோமானால், கண்ணியமானவர்கள் தாழ்ந்தவர்களை அதிலிருந்து நிச்சயமாக வெளியேற்றிவிடுவார்கள்” என்று அவர்கள் கூறுகின்றனர்; ஆனால் கண்ணியம் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், முஃமின்களுக்குமே உரியது; எனினும், இந்நயவஞ்சகர்கள் (அதை) அறிந்து கொள்ளமாட்டார்கள்.  
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تُلْهِكُمْ اَمْوَالُكُمْ وَلَاۤ اَوْلَادُكُمْ عَنْ ذِكْرِ اللّٰهِ ۚ وَمَنْ یَّفْعَلْ ذٰلِكَ فَاُولٰٓىِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோلَاவேண்டாம்تُلْهِكُمْஉங்களை திசைதிருப்பிவிடاَمْوَالُكُمْஉங்கள் செல்வங்கள்وَ لَاۤஇன்னும் வேண்டாம்اَوْلَادُكُمْஉங்கள் பிள்ளைகள்عَنْவிட்டுذِكْرِநினைவு கூர்வதைاللّٰهِ ۚஅல்லாஹ்வைوَ مَنْஇன்னும் எவர்یَّفْعَلْசெய்கிறாரோذٰلِكَஅதைفَاُولٰٓىِٕكَஅத்தகையவர்கள் தான்هُمُஅவர்கள்الْخٰسِرُوْنَநஷ்டமடைந்தவர்கள்
யா அய்யுஹல் லதீன ஆமனூ ல துல்ஹிகும் அம்வாலுகும் வலா அவ்லாதுகும் 'அன்திக்ரில் லாஹ்; வ மய்-யFப்'அல் தாலிக Fப-உலா'இக ஹுமுல் காஸிரூன்
ஈமான் கொண்டவர்களே! உங்கள் செல்வமும், உங்களுடைய மக்களும், அல்லாஹ்வின் நினைப்பை விட்டும் உங்களைப் பராமுகமாக்கிவிட வேண்டாம் - எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள்.
وَاَنْفِقُوْا مِنْ مَّا رَزَقْنٰكُمْ مِّنْ قَبْلِ اَنْ یَّاْتِیَ اَحَدَكُمُ الْمَوْتُ فَیَقُوْلَ رَبِّ لَوْلَاۤ اَخَّرْتَنِیْۤ اِلٰۤی اَجَلٍ قَرِیْبٍ ۙ فَاَصَّدَّقَ وَاَكُنْ مِّنَ الصّٰلِحِیْنَ ۟
وَ اَنْفِقُوْاமேலும் செலவு செய்யுங்கள்مِنْஇருந்துمَّاஎதைرَزَقْنٰكُمْநாம் உங்களுக்கு வழங்கினோமோمِّنْஇருந்துقَبْلِமுன்னதாகاَنْஎன்றுیَّاْتِیَவருவதற்குاَحَدَكُمُஉங்களில் ஒருவருக்குالْمَوْتُமரணம்فَیَقُوْلَஅப்போது அவர் கூறுவார்رَبِّஎன் இறைவனேلَوْ لَاۤஏன் நீاَخَّرْتَنِیْۤஎன்னை தாமதப்படுத்தக் கூடாதுاِلٰۤیவரைاَجَلٍஒரு தவணைقَرِیْبٍ ۙநெருங்கியفَاَصَّدَّقَஅதனால் நான் தர்மம் செய்திருப்பேன்وَ اَكُنْமேலும் நான் ஆகியிருப்பேன்مِّنَஉள்ளவர்களில்الصّٰلِحِیْنَநல்லோர்களில்
வ அன்Fபிகூ மிம் மா ரZஜக்னாகும் மின் கBப்லி அ(ன்)ய்-ய'திய அஹதகுமுல் மவ்து Fப யகூல ரBப்Bபி லவ் லா அக்கர்தனீ இலா அஜலின் கரீBபின் Fப அஸ்ஸத்தக வ அகும் மினஸ்ஸாலிஹீன்
உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள்; (அவ்வாறு செய்யாதது மரணிக்கும் சமயம்); “என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே” என்று கூறுவான்.
وَلَنْ یُّؤَخِّرَ اللّٰهُ نَفْسًا اِذَا جَآءَ اَجَلُهَا ؕ وَاللّٰهُ خَبِیْرٌ بِمَا تَعْمَلُوْنَ ۟۠
وَ لَنْஇன்னும் ஒருபோதும்یُّؤَخِّرَபிற்படுத்தமாட்டான்اللّٰهُஅல்லாஹ்نَفْسًاஎந்த ஓர் ஆத்மாவையும்اِذَاஎப்பொழுதுجَآءَவந்துவிடுகிறதோاَجَلُهَا ؕஅதன் தவணைوَ اللّٰهُமேலும் அல்லாஹ்خَبِیْرٌۢநன்கு அறிந்தவன்بِمَاஎவற்றைتَعْمَلُوْنَ۠நீங்கள் செய்கிறீர்களோ
வ ல(ன்)ய் யு 'அக்கிரல் லாஹு னFப்ஸன் இதா ஜா'அ அஜலுஹா; வல்லாஹு கBபீரும் Bபிமா தஃமலூன்
ஆனால், அல்லாஹ், எந்த ஆத்மாவுக்கும் அதன் தவணை வந்துவிட்டால் (அதனைப்) பிற்படுத்த மாட்டான் - நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் தெரிந்தே இருக்கின்றான்.