87. ஸூரத்துல் அஃலா (மிக்க மேலானவன்)

மக்கீ, வசனங்கள்: 19

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
سَبِّحِ اسْمَ رَبِّكَ الْاَعْلَی ۟ۙ
سَبِّحِதுதிப்பீராகاسْمَதிருப்பெயரைرَبِّكَஉமது இறைவனின்الْاَعْلَیۙமிக உயர்ந்த
ஸBப்Bபிஹிஸ்ம ரBப்Bபிகல் அஃலா
(நபியே!) மிக்க மேலானவனான உம்முடைய இறைவனின் திருநாமத்தை(த் தியானித்து) தஸ்பீஹு செய்வீராக.
الَّذِیْ خَلَقَ فَسَوّٰی ۟
الَّذِیْஅவன்خَلَقَபடைத்தான்فَسَوّٰی۪ۙபின்னர் செம்மைப்படுத்தினான்
அல்லதீ கலக Fபஸவ்வா
அவனே (யாவற்றையும்) படைத்துச் செவ்வையாக்கினான்.
وَالَّذِیْ قَدَّرَ فَهَدٰی ۟
وَ الَّذِیْமேலும் எவன்قَدَّرَநிர்ணயித்தானோفَهَدٰی۪ۙபின்னர் வழிகாட்டினானோ
வல்லதீ கத்தர Fபஹதா
மேலும், அவனே (அவற்றுக்கு வேண்டிய அனைத்தையும்) அளவுபட நிர்ணயித்து (அவற்றைப் பெறுவதற்கு) நேர்வழி காட்டினான்.
وَالَّذِیْۤ اَخْرَجَ الْمَرْعٰی ۟
وَ الَّذِیْۤமேலும் எவன்اَخْرَجَமுளைக்கச் செய்தானோالْمَرْعٰی۪ۙமேய்ச்சல் புற்களை
வல்லதீ அக்ரஜல் மர்'ஆ
அன்றியும் அவனே (கால் நடைகளுக்கென) மேய்ச்சலுக்குரியவற்றையும் வெளியாக்கினான்.
فَجَعَلَهٗ غُثَآءً اَحْوٰی ۟ؕ
فَجَعَلَهٗபின்னர் அதனை ஆக்கினான்غُثَآءًசருகாகاَحْوٰیؕகருகிய
Fபஜ'அலஹூ குதா'அன் அஹ்வா
பின்னர் அவற்றை உலர்ந்த கூளங்களாக ஆக்கினான்.
سَنُقْرِئُكَ فَلَا تَنْسٰۤی ۟ۙ
سَنُقْرِئُكَநாம் உமக்கு ஓதச் செய்வோம்فَلَاஎனவேتَنْسٰۤیۙநீர் மறக்க மாட்டீர்
ஸனுக்ரி'உக Fபலா தன்ஸா
(நபியே!) நாம் உமக்கு ஓதக்கற்றுக் கொடுப்போம்; அதனால் நீர் அதை மறக்கமாட்டீர்-
اِلَّا مَا شَآءَ اللّٰهُ ؕ اِنَّهٗ یَعْلَمُ الْجَهْرَ وَمَا یَخْفٰی ۟ؕ
اِلَّاதவிரمَاஎதைشَآءَநாடினானோاللّٰهُ ؕஅல்லாஹ்اِنَّهٗநிச்சயமாக அவன்یَعْلَمُஅறிகிறான்الْجَهْرَவெளிப்படையானதைوَ مَاமேலும் எதைیَخْفٰیؕமறைந்திருக்கிறதோ
இல்லா மா ஷா'அல் லாஹ்; இன்னஹூ யஃலமுல் ஜஹ்ர வமா யக்Fபா
அல்லாஹ் நாடியதை அல்லாமல் - நிச்சயமாக, அவன் வெளிப்படையானதையும் மறைந்திருப்பதையும் அறிகிறான்.
وَنُیَسِّرُكَ لِلْیُسْرٰی ۟ۚۖ
وَ نُیَسِّرُكَமேலும் நாம் உமக்கு எளிதாக்குவோம்لِلْیُسْرٰیۚۖமிக எளிதான வழியின்பால்
வ னு-யஸ்ஸிருக லில்யுஸ்ரா
அன்றியும், இலேசான (மார்க்கத்)தை நாம் உமக்கு எளிதாக்குவோம்.
فَذَكِّرْ اِنْ نَّفَعَتِ الذِّكْرٰی ۟ؕ
فَذَكِّرْஎனவே நினைவூட்டுவீராகاِنْஎனில்نَّفَعَتِபயனளிக்கும்الذِّكْرٰیؕநினைவூட்டல்
Fபதக்கிர் இன் னFப'அதித்திக்ரா
ஆகவே, நல்லுபதேசம் பயனளிக்குமாயின், நீர் உபதேசம் செய்வீராக.
سَیَذَّكَّرُ مَنْ یَّخْشٰی ۟ۙ
سَیَذَّكَّرُபடிப்பினை பெறுவார்مَنْஎவர்یَّخْشٰیۙஅஞ்சுகிறாரோ
ஸ யத்தக்கரு மய்யக்-ஷா
(அல்லாஹ்வுக்கு) அஞ்சுபவன் விரைவில் உபதேசத்தை ஏற்பான்.
وَیَتَجَنَّبُهَا الْاَشْقَی ۟ۙ
وَ یَتَجَنَّبُهَاமேலும் அதைத் தவிர்த்துக் கொள்வான்الْاَشْقَیۙபெரும் துர்ப்பாக்கியவான்
வ யதஜன்னBபுஹல் அஷ்கா
ஆனால் துர்பாக்கியமுடையவனோ, அதை விட்டு விலகிக் கொள்வான்.
الَّذِیْ یَصْلَی النَّارَ الْكُبْرٰی ۟ۚ
الَّذِیْஅவன்یَصْلَیநுழைவான்النَّارَநெருப்பில்الْكُبْرٰیۚமிகப்பெரிய
அல்லதீ யஸ்லன் னாரல் குBப்ரா
அவன் தான் பெரும் நெருப்பில் புகுவான்.
ثُمَّ لَا یَمُوْتُ فِیْهَا وَلَا یَحْیٰی ۟ؕ
ثُمَّபின்னர்لَاமாட்டான்یَمُوْتُமரணிக்கفِیْهَاஅதில்وَ لَاஇன்னும் மாட்டான்یَحْیٰیؕஉயிர்வாழ
தும்ம லா யமூது Fபீஹா வலா யஹ்யா
பின்னர், அதில் அவன் மரணிக்கவும் மாட்டான்; வாழவும் மாட்டான்.
قَدْ اَفْلَحَ مَنْ تَزَكّٰی ۟ۙ
قَدْநிச்சயமாகاَفْلَحَவெற்றியடைந்தார்مَنْஎவர்تَزَكّٰیۙதூய்மையாக்கிக் கொண்டாரோ
கத் அFப்லஹ மன் தZஜக்கா
தூய்மையடைந்தவன், திட்டமாக வெற்றி பெறுகிறான்.
وَذَكَرَ اسْمَ رَبِّهٖ فَصَلّٰی ۟ؕ
وَ ذَكَرَமேலும் நினைவுகூர்ந்துاسْمَதிருநாமத்தைرَبِّهٖதன் இறைவனின்فَصَلّٰیؕபின்னர் தொழுதானோ
வ தகரஸ் ம ரBப்Bபிஹீ Fபஸல்லா
மேலும், அவன் தன் இறைவனுடைய நாமத்தைத் துதித்துக் கொண்டும், தொழுது கொண்டும் இருப்பான்.
بَلْ تُؤْثِرُوْنَ الْحَیٰوةَ الدُّنْیَا ۟ۚۖ
بَلْமாறாகتُؤْثِرُوْنَநீங்கள் முன்னுரிமை அளிக்கிறீர்கள்الْحَیٰوةَவாழ்க்கைக்குالدُّنْیَاؗۖஇவ்வுலக
Bபல் து'திரூனல் ஹயாதத் துன்யா
எனினும், நீங்களோ (மறுமையை விட்டு விட்டு) இவ்வுலக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்.
وَالْاٰخِرَةُ خَیْرٌ وَّاَبْقٰی ۟ؕ
وَ الْاٰخِرَةُமறுமையோخَیْرٌமிகச் சிறந்ததுوَّ اَبْقٰیؕமேலும் நிலையானது
வல் ஆகிரது கய்ரு(ன்)வ் வ அBப்கா
ஆனால் மறுமை (வாழ்க்கை)யோ சிறந்ததாகும்; என்றும் நிலைத்திருப்பதும் ஆகும்.
اِنَّ هٰذَا لَفِی الصُّحُفِ الْاُوْلٰی ۟ۙ
اِنَّநிச்சயமாகهٰذَاஇதுلَفِیநிச்சயமாகவேالصُّحُفِஏடுகளில்الْاُوْلٰیۙமுந்தைய
இன்ன ஹாதா லFபிஸ் ஸுஹு Fபில் ஊலா
நிச்சயமாக இது முந்திய ஆகமங்களிலும்-
صُحُفِ اِبْرٰهِیْمَ وَمُوْسٰی ۟۠
صُحُفِஏடுகள்اِبْرٰهِیْمَஇப்ராஹீம்وَ مُوْسٰی۠இன்னும் மூஸா
ஸுஹுFபி இBப்ராஹீம வ மூஸா
இப்ராஹீம், மூஸாவினுடைய ஆகமங்களிலும் (இவ்வாறே அறிவிப்பு) இருக்கிறது.