99. ஸூரத்துஜ் ஜில்ஜால்(அதிர்ச்சி)

மதனி, வசனங்கள்: 8

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
اِذَا زُلْزِلَتِ الْاَرْضُ زِلْزَالَهَا ۟ۙ
اِذَا زُلْزِلَتِநடுங்க வைக்கப்படும் போதுالْاَرْضُபூமிزِلْزَالَهَا ۙ‏அதன் நிலநடுக்கத்தால்
இதா Zஜுல் Zஜிலதில் அர்ளு Zஜில் Zஜாலஹா
பூமி பெரும் அதிர்ச்சியாக - அதிர்ச்சி அடையும் போது-
وَاَخْرَجَتِ الْاَرْضُ اَثْقَالَهَا ۟ۙ
وَاَخْرَجَتِஇன்னும் எறிந்துவிடும்الْاَرْضُபூமிاَثْقَالَهَا ۙ‏அதன் சுமைகளை
வ அக் ரஜதில் அர்ளு அத்காலஹா
இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது-
وَقَالَ الْاِنْسَانُ مَا لَهَا ۟ۚ
وَقَالَஇன்னும் கூறுவான்الْاِنْسَانُமனிதன்مَا لَهَا‌ ۚ‏இதற்கென்ன
வ காலல் இன்ஸானு ம லஹா
“அதற்கு என்ன நேர்ந்தது?” என்று மனிதன் கேட்கும் போது-
یَوْمَىِٕذٍ تُحَدِّثُ اَخْبَارَهَا ۟ؕ
يَوْمَٮِٕذٍஅந்நாளில்تُحَدِّثُஅறிவிக்கும்اَخْبَارَهَا ۙ‏அது தன் செய்திகளை
யவ்மா இதின் துஹத்திது அக்Bபாரஹா
அந்நாளில், அது தன் செய்திகளை அறிவிக்கும்.
بِاَنَّ رَبَّكَ اَوْحٰی لَهَا ۟ؕ
بِاَنَّஅதாவது நிச்சயமாகرَبَّكَஉம் இறைவன்اَوْحٰى لَهَا ؕ‏தனக்கு கட்டளையிட்டான்
Bபி-அன்ன ரBப்Bபக அவ்ஹா லஹா
(அவ்வாறு அறிவிக்குமாறு) உம்முடைய இறைவன் அதற்கு வஹீ மூலம் அறிவித்ததனால்.
یَوْمَىِٕذٍ یَّصْدُرُ النَّاسُ اَشْتَاتًا ۙ۬ لِّیُرَوْا اَعْمَالَهُمْ ۟ؕ
يَوْمَٮِٕذٍஅந்நாளில்يَّصْدُرُபுறப்படுவார்கள்النَّاسُமக்கள்اَشْتَاتًا  ۙபலபிரிவுகளாகلِّيُرَوْاஅவர்கள் காண்பதற்காகاَعْمَالَهُمْؕ‏அவர்களின் செயல்களை
யவ்ம இதி(ன்)ய் யஸ் துருன் னாஸு அஷ் ததல் லியுரவ் அஃமாலஹும்
அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள்.
فَمَنْ یَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَیْرًا یَّرَهٗ ۟ؕ
فَمَنْஆகவே, யார்يَّعْمَلْசெய்வாரோمِثْقَالَஅளவுذَرَّةٍஓர் அணுخَيْرًاநன்மைيَّرَهٗ ؕ‏அதைப் பார்ப்பார்
Fபமய்ய் யஃமல் மித்கல தர்ரதின் கய் ரய்ய்-யரஹ்
எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார்.
وَمَنْ یَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا یَّرَهٗ ۟۠
وَمَنْஇன்னும் யார்يَّعْمَلْசெய்வாரோمِثْقَالَஅளவுذَرَّةٍஓர் அணுشَرًّاதீமைيَّرَهٗ‏அதைப் பார்ப்பார்
வ மய்ய்-யஃமல் மித்கல தர்ரதின் ஷர்ரய்ய்-யரஹ்
அன்றியும், எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்.