50. ஸூரத்து ஃகாஃப்

மக்கீ, வசனங்கள்: 45

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
قٓ ۚ۫ وَالْقُرْاٰنِ الْمَجِیْدِ ۟ۚ
قٓ ۚ۫காஃப்وَ الْقُرْاٰنِகுர்ஆன் மீது சத்தியமாகالْمَجِیْدِۚமகத்துவமிக்க
காFப்; வல் குர் ஆனில் மஜீத்
காஃப், கண்ணியமிக்க இக்குர்ஆன் மீது சத்தியமாக!
بَلْ عَجِبُوْۤا اَنْ جَآءَهُمْ مُّنْذِرٌ مِّنْهُمْ فَقَالَ الْكٰفِرُوْنَ هٰذَا شَیْءٌ عَجِیْبٌ ۟ۚ
بَلْமாறாகعَجِبُوْۤاஅவர்கள் ஆச்சரியப்பட்டனர்اَنْஎன்றுجَآءَهُمْஅவர்களிடம் வந்ததைمُّنْذِرٌஓர் எச்சரிக்கையாளர்مِّنْهُمْஅவர்களிலிருந்தேفَقَالَஎனவே கூறினார்கள்الْكٰفِرُوْنَநிராகரிப்பாளர்கள்هٰذَاஇதுشَیْءٌஒரு விஷயம்عَجِیْبٌۚஆச்சரியமானது
Bபல் 'அஜிBபூ அன் ஜா'அஹும் முன்திரும் மின்ஹும் Fபகாலல் காFபிரூன ஹாதா ஷய்'உன் 'அஜீBப்
எனினும்: அவர்களிலிருந்தே, அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் ஒருவர் வந்ததைப் பற்றி அவர்கள் ஆச்சரியப்படுகின்றனர்; ஆகவே, காஃபிர்கள் கூறுகிறார்கள்: “இது ஓர் ஆச்சரியமான விஷயமேயாகும்.”
ءَاِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا ۚ ذٰلِكَ رَجْعٌ بَعِیْدٌ ۟
ءَاِذَاஎன்ன! நாம் ...போதா?مِتْنَاமரணமடைந்துوَ كُنَّاமேலும் நாம் ஆகிவிட்டால்تُرَابًا ۚமண்ணாகذٰلِكَஅதுرَجْعٌۢமீளுதல்بَعِیْدٌவெகு தூரமானது
'அ-இதா மித்னா வ குன்னா துராBபன் தாலிக ரஜ்'உம் Bப'ஈத்
“நாம் மரணமடைந்து மண்ணாகி விட்டாலு(ம் உயிர் கொடுத்து எழுப்பப்படுவோ)மா? இப்படி மீள்வது (சாத்தியமில்லாத) தொலைவானது” (என்றும் அவர்கள் கூறுகின்றனர்).
قَدْ عَلِمْنَا مَا تَنْقُصُ الْاَرْضُ مِنْهُمْ ۚ وَعِنْدَنَا كِتٰبٌ حَفِیْظٌ ۟
قَدْநிச்சயமாகعَلِمْنَاநாம் அறிந்துள்ளோம்مَاஎதைتَنْقُصُகுறைக்கிறதுالْاَرْضُபூமிمِنْهُمْ ۚஅவர்களிலிருந்துوَ عِنْدَنَاமேலும் நம்மிடம்كِتٰبٌஒரு பதிவேடுحَفِیْظٌபாதுகாப்பானது
கத் 'அலிம்னா மா தன்கு-ஸுல்-அர்ளு மின்ஹும் வ 'இன்தனா கிதாBபுன் ஹFபீள்
(மரணத்திற்குப் பின்) அவர்களிலிருந்து (அவர்கள் உடலை) பூமி எந்த அளவு குறைத்திருக்கின்றதோ அதைத் திட்டமாக நாம் அறிந்திருக்கின்றோம்; நம்மிடம் (யாவும் பதிக்கப் பெற்று) பாதுகாக்கப்பட்ட ஏடு இருக்கிறது.
بَلْ كَذَّبُوْا بِالْحَقِّ لَمَّا جَآءَهُمْ فَهُمْ فِیْۤ اَمْرٍ مَّرِیْجٍ ۟
بَلْமாறாகكَذَّبُوْاஅவர்கள் பொய்ப்பித்தார்கள்بِالْحَقِّஉண்மையைلَمَّاபோதுجَآءَهُمْஅவர்களிடம் வந்தفَهُمْஎனவே அவர்கள்فِیْۤஉள்ளார்கள்اَمْرٍஒரு நிலையில்مَّرِیْجٍகுழப்பமான
Bபல் கத்தBபூ Bபில்ஹக்கி லம்மா ஜா'அஹும் Fபஹும் Fபீ அம்ரிம் மரீஜ்
இருப்பினும், சத்திய (வேத)த்தை -அது தம்மிடம் வந்த போது பொய்ப்பிக்(க முற்படு)கிறார்கள்; அதனால், அவர்கள் குழப்பமான நிலையிலேயே இருக்கின்றனர்.
اَفَلَمْ یَنْظُرُوْۤا اِلَی السَّمَآءِ فَوْقَهُمْ كَیْفَ بَنَیْنٰهَا وَزَیَّنّٰهَا وَمَا لَهَا مِنْ فُرُوْجٍ ۟
اَفَلَمْஆகவே இல்லையாیَنْظُرُوْۤاஅவர்கள் கவனிக்கاِلَیநோக்கிالسَّمَآءِவானத்தைفَوْقَهُمْஅவர்களுக்கு மேலேكَیْفَஎப்படிبَنَیْنٰهَاஅதனை நாம் அமைத்தோம்وَ زَیَّنّٰهَاமேலும் அதனை நாம் அழகுபடுத்தினோம்وَ مَاமேலும் இல்லைلَهَاஅதற்குمِنْஎவ்விதفُرُوْجٍபிளவுகளும்
அFபலம் யன்ளுரூ இலஸ் ஸமா'இ Fபவ்கஹும் கய்Fப Bபனய்னாஹா வ Zஜய்யன்னாஹா வமா லஹா மின் Fபுரூஜ்
அவர்களுக்கு மேலிருக்கும் வானத்தை நாம் எவ்வாறு அதை (ஒரு கட்டுக் கோப்பாக) அமைத்து, அதை அழகு செய்து, அதில் எவ்வித வெடிப்புகளும் இல்லாமல் (ஆக்கியிருக்கின்றோம்) என்பதை அவர்கள் பார்க்கவில்லையா?
وَالْاَرْضَ مَدَدْنٰهَا وَاَلْقَیْنَا فِیْهَا رَوَاسِیَ وَاَنْۢبَتْنَا فِیْهَا مِنْ كُلِّ زَوْجٍ بَهِیْجٍ ۟ۙ
وَ الْاَرْضَமேலும் பூமியைمَدَدْنٰهَاஅதனை நாம் விரித்தோம்وَ اَلْقَیْنَاமேலும் நாம் நிறுவினோம்فِیْهَاஅதில்رَوَاسِیَஉறுதியான மலைகளைوَ اَنْۢبَتْنَاமேலும் நாம் முளைக்கச் செய்தோம்فِیْهَاஅதில்مِنْஇருந்துكُلِّஒவ்வொருزَوْجٍۭஜோடியையும்بَهِیْجٍۙஅழகான
வல் அர்ள மதத்னாஹா வ அல்கய்னா Fபீஹா ரவாஸிய வ அம்Bபத்னா Fபீஹா மின் குல்லி Zஜவ்ஜிம் Bபஹீஜ்
மேலும் நாம் பூமியை நீட்டி விரிவாக்கி, அதில் உறுதியான மலைகளை அமைத்துள்ளோம்; மேலும் அதில் அழகிய புற்பூண்டுகளை (ஆண், பெண் வகையுள்ள) ஜோடியாக முளைப்பிக்கவும் செய்திருக்கின்றோம்.
تَبْصِرَةً وَّذِكْرٰی لِكُلِّ عَبْدٍ مُّنِیْبٍ ۟
تَبْصِرَةًஅகப்பார்வையாகوَّ ذِكْرٰیநினைவூட்டலாகவும்لِكُلِّஒவ்வொருعَبْدٍஅடியாருக்கும்مُّنِیْبٍமீளும்
தBப்ஸிரத(ன்)வ் வ திக்ரா லிகுல்லி 'அBப்திம் முனீBப்
(இது இறைவன் பக்கம்) திரும்பும் அடியார்கள் எல்லோருக்கும் (அகப்) பார்வை அளிப்பதாகவும், (நினைவூட்டும்) நல்லுபதேசமாகவும் உள்ளது.
وَنَزَّلْنَا مِنَ السَّمَآءِ مَآءً مُّبٰرَكًا فَاَنْۢبَتْنَا بِهٖ جَنّٰتٍ وَّحَبَّ الْحَصِیْدِ ۟ۙ
وَ نَزَّلْنَاமேலும் நாம் இறக்கினோம்مِنَஇருந்துالسَّمَآءِவானம்مَآءًநீரைمُّبٰرَكًاபாக்கியம் மிக்கفَاَنْۢبَتْنَاபின்னர் நாம் முளைக்கச் செய்தோம்بِهٖஅதைக் கொண்டுجَنّٰتٍதோட்டங்களைوَّ حَبَّமேலும் தானியத்தைالْحَصِیْدِۙஅறுவடை செய்யப்படும்
வ னZஜ்Zஜல்னா மினஸ் ஸமா'இ மா'அம் முBபாரகன் Fப அம்Bபத்னா Bபிஹீ ஜன்னாதி(ன்)வ் வ ஹBப்Bபல் ஹஸீத்
அன்றியும், வானத்திலிருந்து மிக்க பாக்கியமுள்ள தண்ணீரை (மழையை) நாம் இறக்கி வைத்து, அதைக் கொண்டு தோட்டங்களையும், அறுவடை செய்யப்படும் தானியங்களையும் முளைப்பிக்கிறோம்.
وَالنَّخْلَ بٰسِقٰتٍ لَّهَا طَلْعٌ نَّضِیْدٌ ۟ۙ
وَ النَّخْلَபேரீச்ச மரங்களையும்بٰسِقٰتٍஉயர்ந்தلَّهَاஅவற்றுக்குطَلْعٌபாளைகள்نَّضِیْدٌۙஅடுக்கடுக்கான
வன்னக்ல Bபாஸிகாதில் லஹ தல்'உன் னளீத்
அடுக்கடுக்கான பாளைகளைக் கொண்ட (குலைகளையுடைய) நெடிய பேரீச்ச மரங்களையும் (உண்டாக்கினோம்).
رِّزْقًا لِّلْعِبَادِ ۙ وَاَحْیَیْنَا بِهٖ بَلْدَةً مَّیْتًا ؕ كَذٰلِكَ الْخُرُوْجُ ۟
رِّزْقًاஉணவாகلِّلْعِبَادِ ۙஅடியார்களுக்குوَ اَحْیَیْنَاமேலும் நாம் உயிர்ப்பித்தோம்بِهٖஅதன் மூலம்بَلْدَةًஒரு நிலத்தைمَّیْتًا ؕஇறந்தكَذٰلِكَஇவ்வாறேالْخُرُوْجُவெளிப்படுதல்
ரிZஜ்கல் லில்'இBபாத், வ அஹ்யய்னா Bபிஹீ Bபல்ததம் மய்தா; கதாலிகல் குரூஜ்
(அவற்றின் கனிகளை) அடியார்களுக்கு உணவாக (அளிக்கிறோம்), மேலும், அதைக் கொண்டு இறந்து கிடந்த ஊரை (பூமியை) நாம் உயிர்ப்பிக்கிறோம், இவ்விதமே, (இறந்தவர்கள் உயிர்ப்பிக்கப் பெற்று) வெளியேறுதலும் இருக்கிறது.
كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوْحٍ وَّاَصْحٰبُ الرَّسِّ وَثَمُوْدُ ۟ۙ
كَذَّبَتْபொய்ப்பித்தனர்قَبْلَهُمْஅவர்களுக்கு முன்னர்قَوْمُசமுதாயம்نُوْحٍநூஹின்وَّ اَصْحٰبُமேலும் தோழர்கள்الرَّسِّரஸ்ஸுடையوَ ثَمُوْدُۙமேலும் ஸமூது
கத்தBபத் கBப்லஹும் கவ்மு னூஹி(ன்)வ் வ அஸ்ஹாBபுர் ரஸ்ஸி வ தமூத்
இவர்களுக்கு முன்னர் இருந்த நூஹுடைய சமூகத்தாரும், ரஸ்ஸு (கிணற்று) வாசிகளும், ஸமூது மக்களும் (இவ்வாறு மறுமையை) மறுத்தார்கள்.
وَعَادٌ وَّفِرْعَوْنُ وَاِخْوَانُ لُوْطٍ ۟ۙ
وَ عَادٌஇன்னும் ஆது கூட்டத்தினரும்وَّ فِرْعَوْنُஃபிர்அவ்னும்وَ اِخْوَانُஇன்னும் சகோதரர்களும்لُوْطٍۙலூத்துடைய
வ 'ஆது(ன்)வ் வ Fபிர்'அவ்னு வ இக்வானு லூத்
“ஆது” (சமூகத்தாரும்) ஃபிர்அவ்னும் லூத்தின் சகோதரர்களும் (மறுத்தனர்).
وَّاَصْحٰبُ الْاَیْكَةِ وَقَوْمُ تُبَّعٍ ؕ كُلٌّ كَذَّبَ الرُّسُلَ فَحَقَّ وَعِیْدِ ۟
وَّ اَصْحٰبُமேலும் வாசிகளும்الْاَیْكَةِஅடர்ந்த வனத்தின்وَ قَوْمُமேலும் சமூகத்தாரும்تُبَّعٍ ؕதுப்பஃكُلٌّஒவ்வொருவரும்كَذَّبَபொய்ப்பித்தனர்الرُّسُلَதூதர்களைفَحَقَّஆகவே உறுதியானதுوَعِیْدِஎனது எச்சரிக்கை
வ அஸ்ஹாBபுல் அய்கதி வ கவ்மு துBப்Bப'; குல்லுன் கத்தBபர் ருஸுல Fபஹக்க வ'ஈத்
(அவ்வாறே மத்யன்) தோப்புவாசிகளும், துப்பவுடைய கூட்டத்தாரும் ஆக எல்லோரும் (நம்) தூதர்களைப் பொய்ப்பிக்க முற்பட்டனர்; எனவே (அவர்களைப் பற்றிய) என்னுடைய எச்சரிக்கை உண்மையாயிற்று.
اَفَعَیِیْنَا بِالْخَلْقِ الْاَوَّلِ ؕ بَلْ هُمْ فِیْ لَبْسٍ مِّنْ خَلْقٍ جَدِیْدٍ ۟۠
اَفَعَیِیْنَاநாம் சோர்வடைந்து விட்டோமாبِالْخَلْقِபடைப்பினால்الْاَوَّلِ ؕமுதல்بَلْமாறாகهُمْஅவர்கள்فِیْஉள்ளார்கள்لَبْسٍகுழப்பத்தில்مِّنْகுறித்துخَلْقٍபடைப்பைப்جَدِیْدٍ۠புதிய
அFப'அ யீனா Bபில்கல்கில் அவ்வல்; Bபல் ஹும் Fபீ லBப்ஸிம் மின் கல்கின் ஜதீத்
எனவே, (எல்லாவற்றையும்) முதலாவதாகப் படைப்பதில் நாம் சோர்வடைந்து விட்டோமா? இல்லை. எனினும், இ(க்காஃபிரான)வர்கள் (நாம்) புதிதாக படைப்பதைப் பற்றி சந்தேகத்தில் இருக்கின்றனர்.  
وَلَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهٖ نَفْسُهٗ ۖۚ وَنَحْنُ اَقْرَبُ اِلَیْهِ مِنْ حَبْلِ الْوَرِیْدِ ۟
وَ لَقَدْமேலும் நிச்சயமாகخَلَقْنَاநாம் படைத்தோம்الْاِنْسَانَமனிதனைوَ نَعْلَمُமேலும் நாம் அறிவோம்مَاஎதைتُوَسْوِسُஊசலாட்டத்தை உண்டாக்குகிறதோبِهٖஅவனுள்نَفْسُهٗ ۖۚஅவனது மனம்وَ نَحْنُமேலும் நாம்اَقْرَبُமிக நெருக்கமானவர்கள்اِلَیْهِஅவனுக்குمِنْவிடحَبْلِநரம்பைالْوَرِیْدِபிடரி
வ லகத் கலக்னல் இன்ஸான வ னஃலமு மா துவஸ்விஸு Bபிஹீ னFப்ஸுஹூ வ னஹ்னு அக்ரBபு இலய்ஹி மின் ஹBப்லில் வரீத்
மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும், (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம்.
اِذْ یَتَلَقَّی الْمُتَلَقِّیٰنِ عَنِ الْیَمِیْنِ وَعَنِ الشِّمَالِ قَعِیْدٌ ۟
اِذْஅப்போதுیَتَلَقَّیபதிவு செய்கின்றனர்الْمُتَلَقِّیٰنِஇரு வானவர்கள்عَنِஇருந்துالْیَمِیْنِவலதுபுறம்وَ عَنِமேலும் இருந்துالشِّمَالِஇடதுபுறம்قَعِیْدٌஅமர்ந்திருப்பவர்
'இத் யதலக்கல் முதலக்கி யானி 'அனில் யமீனி வ 'அனிஷ் ஷிமாலி க'ஈத்
(மனிதனின்) வலப்புறத்திலும், இடப்புறத்திலும் அமர்ந்து எடுத்தெழுதும் இரு(வான)வர் எடுத்தெழுதும் போது-
مَا یَلْفِظُ مِنْ قَوْلٍ اِلَّا لَدَیْهِ رَقِیْبٌ عَتِیْدٌ ۟
مَاஇல்லைیَلْفِظُமொழிகிறான்مِنْஎந்தقَوْلٍசொல்லையும்اِلَّاதவிரلَدَیْهِஅவனிடம்رَقِیْبٌகண்காணிப்பவர்عَتِیْدٌதயாரானவர்
மா யல்Fபிளு மின் கவ்லின் இல்லா லதய்ஹி ரகீBபுன் 'அதீத்
கண்காணித்து எழுதக்கூடியவர் அவனிடம் (மனிதனிடம்) இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை.
وَجَآءَتْ سَكْرَةُ الْمَوْتِ بِالْحَقِّ ؕ ذٰلِكَ مَا كُنْتَ مِنْهُ تَحِیْدُ ۟
وَ جَآءَتْமேலும் வந்துவிட்டதுسَكْرَةُமயக்கம்الْمَوْتِமரணத்தின்بِالْحَقِّ ؕஉண்மையுடன்ذٰلِكَஅதுதான்مَاஎதனைكُنْتَநீمِنْهُஅதிலிருந்துتَحِیْدُவிலகிக் கொண்டிருந்தாயோ
வ ஜா'அத் ஸக்ரதுல் மவ்தி Bபில்ஹக்க்; தாலிக மா குன்த மின்ஹு தஹீத்
மரண வேதனை சத்தியத்தைக் கொண்டு (மெய்யாகவே) வருகின்றது; (அப்போது அவனிடம்) நீ எதை விட்டும் விரண்டோடிக் கொண்டிருந்தாயோ அது தான் (இந்நிலை என்று கூறப்படும்)
وَنُفِخَ فِی الصُّوْرِ ؕ ذٰلِكَ یَوْمُ الْوَعِیْدِ ۟
وَ نُفِخَமேலும் ஊதப்படும்فِیஇல்الصُّوْرِ ؕசூர் (எக்காளம்)ذٰلِكَஅதுதான்یَوْمُநாள்الْوَعِیْدِஎச்சரிக்கப்பட்ட
வ னுFபிக Fபிஸ் ஸூர்; தாலிக யவ்முல் வ'ஈத்
மேலும் ஸூர் (எக்காளம்) ஊதப்படும். அதுதான் அச்சுறுத்தி எச்சரிக்கப்பட்ட நாளாகும்.
وَجَآءَتْ كُلُّ نَفْسٍ مَّعَهَا سَآىِٕقٌ وَّشَهِیْدٌ ۟
وَ جَآءَتْமேலும் வரும்كُلُّஒவ்வொருنَفْسٍஆத்மாவும்مَّعَهَاஅதனுடன்سَآىِٕقٌஓட்டிச் செல்பவர்وَّ شَهِیْدٌஒரு சாட்சியும்
வ ஜா'அத் குல்லு னFப்ஸிம் ம'அஹா ஸா'இகு(ன்)வ் வ ஷஹீத்
அன்றியும், (அந்நாளில்) ஒவ்வோர் ஆன்மாவும் தன்னை அழைத்து வருபவர், சாட்சியாளர் ஆகியோருடன் வரும்.
لَقَدْ كُنْتَ فِیْ غَفْلَةٍ مِّنْ هٰذَا فَكَشَفْنَا عَنْكَ غِطَآءَكَ فَبَصَرُكَ الْیَوْمَ حَدِیْدٌ ۟
لَقَدْநிச்சயமாகكُنْتَநீ இருந்தாய்فِیْநிலையில்غَفْلَةٍஅலட்சியம்مِّنْபற்றிهٰذَاஇதனைفَكَشَفْنَاஆகவே நாம் நீக்கினோம்عَنْكَஉன்னிடமிருந்துغِطَآءَكَஉனது திரையைفَبَصَرُكَஎனவே உனது பார்வைالْیَوْمَஇன்றுحَدِیْدٌகூர்மையானது
லகத் குன்த Fபீ கFப் லதிம் மின் ஹாதா FபகஷFப்னா 'அன்க கிதா'அக FபBபஸருகல் யவ்ம ஹதீத்
“நீ இதைப் பற்றி அலட்சியத்தில் இருந்தாய்; (இப்பொழுது) உன் (பார்வையை) விட்டு உனது திரையை நாம் அகற்றி விட்டோம். எனவே, இன்று உன் பார்வை கூர்மையாக இருக்கிறது.” (என்று கூறப்படும்).
وَقَالَ قَرِیْنُهٗ هٰذَا مَا لَدَیَّ عَتِیْدٌ ۟ؕ
وَ قَالَமேலும் கூறுவான்قَرِیْنُهٗஅவனுடைய தோழன்هٰذَاஇதுمَاஎதுلَدَیَّஎன்னிடம்عَتِیْدٌؕதயாராக உள்ளது
வ கால கரீனுஹூ ஹாதா மா லதய்ய 'அதீத்
அப்போது அவனுடன் இருப்பவர் (மலக்கு) “இதோ (இம்மனிதனின் ஏடு) என்னிடம் சித்தமாக இருக்கிறது” என்று கூறுவார்.
اَلْقِیَا فِیْ جَهَنَّمَ كُلَّ كَفَّارٍ عَنِیْدٍ ۟ۙ
اَلْقِیَاபோடுங்கள்فِیْஇல்جَهَنَّمَநரகத்தில்كُلَّஒவ்வொருكَفَّارٍநிராகரிப்பாளனையும்عَنِیْدٍۙபிடிவாதக்காரனையும்
அல்கியா Fபீ ஜஹன்னம குல்ல கFப்Fபாரின் 'அனீத்
“மனமுரண்டாக நிராகரித்துக் கொண்டிருந்தோர் எல்லோரையும் நீங்கள் இருவரும் நரகில் போடுங்கள்.
مَّنَّاعٍ لِّلْخَیْرِ مُعْتَدٍ مُّرِیْبِ ۟ۙ
مَّنَّاعٍதடுப்பவர்لِّلْخَیْرِநன்மையைمُعْتَدٍவரம்பு மீறுபவர்مُّرِیْبِۙசந்தேகப்படுபவர்
மன்னா'இல் லில்கய்ரி முஃததிம் முரீBப்
“(அவன்) நன்மையை தடுத்துக் கொண்டேயிருந்தவன்; (இந்நாளைப் பற்றி) சந்தேகிப்பவனாக, வரம்பு மீறிக் கொண்டும் இருந்தான்.
لَّذِیْ جَعَلَ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ فَاَلْقِیٰهُ فِی الْعَذَابِ الشَّدِیْدِ ۟
ِ۟الَّذِیْஎவன்جَعَلَஏற்படுத்தினானோمَعَஉடன்اللّٰهِஅல்லாஹ்اِلٰهًاஇறைவனைاٰخَرَவேறொருفَاَلْقِیٰهُஎனவே அவனை எறியுங்கள்فِیஇல்الْعَذَابِவேதனைالشَّدِیْدِகடுமையான
அல்லதீ ஜ'அல ம'அல் லாஹி இலாஹன் ஆகர Fப அல்கியாஹு Fபில்'அதாBபிஷ் ஷதீத்
“அவன் அல்லாஹ்வுடன் வேறொரு நாயனை ஏற்படுத்தினான். ஆகவே நீங்களிருவரும் இவனை மிகக் கடுமையான வேதனையில் போட்டு விடுங்கள்” (என்றும் கூறப்படும்).
قَالَ قَرِیْنُهٗ رَبَّنَا مَاۤ اَطْغَیْتُهٗ وَلٰكِنْ كَانَ فِیْ ضَلٰلٍۢ بَعِیْدٍ ۟
قَالَகூறுவான்قَرِیْنُهٗஅவனுடைய தோழன்رَبَّنَاஎங்கள் இறைவனேمَاۤஇல்லைاَطْغَیْتُهٗஅவனை நான் வரம்பு மீறச் செய்தேன்وَ لٰكِنْஆனால்كَانَஅவன் இருந்தான்فِیْஇல்ضَلٰلٍۭவழிகேடுبَعِیْدٍவெகு தூரமான
கால கரீனுஹூ ரBப்Bபனா மா அத்கய்துஹூ வ லாகின் கான Fபீ ளலாலின் Bப'ஈத்
(அப்போது ஷைத்தானாகிய) அவனுடைய கூட்டாளி கூறுவான்: “எங்கள் இறைவா! நான் இவனை வழி கெடுக்கவில்லை; ஆனால், அவனே தூரமான வழி கேட்டில் தான் இருந்தான்-”
قَالَ لَا تَخْتَصِمُوْا لَدَیَّ وَقَدْ قَدَّمْتُ اِلَیْكُمْ بِالْوَعِیْدِ ۟
قَالَகூறுவான்لَاவேண்டாம்تَخْتَصِمُوْاவிவாதிக்கلَدَیَّஎன்னிடம்وَ قَدْதிண்ணமாகقَدَّمْتُமுன்வைத்தேன்اِلَیْكُمْஉங்களிடம்بِالْوَعِیْدِஎச்சரிக்கையை
கால லா தக்தஸிமூ லதாய்ய வ கத் கத்தம்து இலய்கும் Bபில்வ'ஈத்
“என் முன்னிலையில் நீங்கள் வாக்குவாதம் செய்யாதீர்கள்; (இதைப்பற்றி என் அச்சுறுத்தலை முன்னரே விடுத்திருக்கிறேன்” என்று (அல்லாஹ்) கூறுவான்.
مَا یُبَدَّلُ الْقَوْلُ لَدَیَّ وَمَاۤ اَنَا بِظَلَّامٍ لِّلْعَبِیْدِ ۟۠
مَاஇல்லைیُبَدَّلُமாற்றப்படும்الْقَوْلُசொல்لَدَیَّஎன்னிடம்وَ مَاۤமேலும் இல்லைاَنَاநான்بِظَلَّامٍஅநீதி இழைப்பவன்لِّلْعَبِیْدِ۠அடியார்களுக்கு
மா யுBபத்தலுல் கவ்லு லதய்ய வ மா அன Bபிளல் லாமில் லில்'அBபீத்
(எனவே என்னுடைய) அச்சொல் “என்னிடத்தில் மாற்றப்படுவதில்லை - நான் அடியார்களுக்கு அநியாயம் செய்பவனல்லன்” (என்றும் அல்லாஹ் கூறுவான்).  
یَوْمَ نَقُوْلُ لِجَهَنَّمَ هَلِ امْتَلَاْتِ وَتَقُوْلُ هَلْ مِنْ مَّزِیْدٍ ۟
یَوْمَஅந்நாளில்نَقُوْلُநாம் கூறுவோம்لِجَهَنَّمَநரகத்திடம்هَلِஎன்னامْتَلَاْتِநிரம்பிவிட்டாயாوَ تَقُوْلُமேலும் அது கூறும்هَلْஏதேனும்مِنْஇன்னும்مَّزِیْدٍஅதிகம்
யவ்ம னகூலு லி'ஜஹன்னம ஹலிம் தலாதி வ தகூலு ஹல் மிம் மZஜீத்
நரகத்தை நோக்கி, “நீ நிறைந்து விட்டாயா? என்று நாம் கேட்டு, அதற்கு அது “இன்னும் அதிகமாக ஏதும் இருக்கின்றதா?” என்று கேட்கும் அந்நாளை (நபியே! நீர் நினைவுறுத்துவீராக)!
وَاُزْلِفَتِ الْجَنَّةُ لِلْمُتَّقِیْنَ غَیْرَ بَعِیْدٍ ۟
وَ اُزْلِفَتِமேலும் நெருக்கமாக்கப்படும்الْجَنَّةُசுவனம்لِلْمُتَّقِیْنَஇறையச்சமுடையோருக்குغَیْرَஅல்லாமல்بَعِیْدٍதொலைவில்
வ உZஜ்லிFபதில் ஜன்னது லில் முத்தகீன கய்ர Bப'ஈத்
(அன்றியும் அந்நாளில்) பயபக்தியுடையவர்களுக்கு சுவர்க்கம் தொலைவில்லாத நிலையில் மிகவும் சமீபமாக்கப்படும்.
هٰذَا مَا تُوْعَدُوْنَ لِكُلِّ اَوَّابٍ حَفِیْظٍ ۟ۚ
هٰذَاஇதுதான்مَاஎதுتُوْعَدُوْنَவாக்களிக்கப்படுகிறீர்களோلِكُلِّஒவ்வொருவருக்கும்اَوَّابٍமீளுபவர்حَفِیْظٍۚபேணுபவர்
ஹாத மா தூ'அதூன லிகுல்லி அவ்வாBபின் ஹFபீள்
“இது தான் உங்களுக்கு வாக்களிக்கப்பட்டதா(ன சுவர்க்கமா)கும்; எப்பொழுதும் இறைவனையே நோக்கி, (பாவத்தை தவிர்த்துப்) பேணி நடந்த ஒவ்வொருவருக்கும் (இது உரியது).”
مَنْ خَشِیَ الرَّحْمٰنَ بِالْغَیْبِ وَجَآءَ بِقَلْبٍ مُّنِیْبِ ۟ۙ
مَنْஎவர்خَشِیَஅஞ்சினாரோالرَّحْمٰنَஅளவற்ற அருளாளனைبِالْغَیْبِமறைவாகوَ جَآءَமேலும் வந்தாரோبِقَلْبٍஉள்ளத்துடன்مُّنِیْبِۙமீளும்
மன் கஷியர் ரஹ்மான Bபில்கய்Bபி வ ஜா'அ Bபிகல்Bபிம் முனீBப்
எவர்கள், மறைவிலும் அர்ரஹ்மானை அஞ்சி நடந்து கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கும் (அவனையே) முற்றிலும் நோக்கிய இதயத்துடன் வருவோருக்கும் (இது வாக்களிக்கப்பட்டிருக்கிறது).
دْخُلُوْهَا بِسَلٰمٍ ؕ ذٰلِكَ یَوْمُ الْخُلُوْدِ ۟
ِ۟ادْخُلُوْهَاஅதில் நுழையுங்கள்بِسَلٰمٍ ؕசாந்தியுடன்ذٰلِكَஅதுவேیَوْمُநாள்الْخُلُوْدِநிலையான வாழ்வு
உத்குலூஹா Bபிஸலாமின் தாலிக யவ்முல் குலூத்
“ஸலாமுடன் - சாந்தியுடன் - இ(ச் சுவர்க்கத்)தில் பிரவேசியுங்கள்; இதுதான் நித்தியமாக நீங்கள் தங்கியிருக்கும் நாளாகும்” (என்று கூறப்படும்).
لَهُمْ مَّا یَشَآءُوْنَ فِیْهَا وَلَدَیْنَا مَزِیْدٌ ۟
لَهُمْஅவர்களுக்குمَّاஎதைیَشَآءُوْنَஅவர்கள் விரும்புகிறார்களோفِیْهَاஅதில்وَ لَدَیْنَاமேலும் நம்மிடம்مَزِیْدٌஅதிகமுண்டு
லஹும் மா யஷா'ஊன Fபீஹா வ லதய்னா மZஜீத்
அவர்கள் விரும்பியதெல்லாம், அதில் அவர்களுக்கு இருக்கிறது; இன்னும் (அதற்கு) அதிகமும் நம்மிடம் இருக்கிறது.
وَكَمْ اَهْلَكْنَا قَبْلَهُمْ مِّنْ قَرْنٍ هُمْ اَشَدُّ مِنْهُمْ بَطْشًا فَنَقَّبُوْا فِی الْبِلَادِ ؕ هَلْ مِنْ مَّحِیْصٍ ۟
وَ كَمْஇன்னும் எத்தனையோاَهْلَكْنَاநாம் அழித்திருக்கிறோம்قَبْلَهُمْஅவர்களுக்கு முன்னர்مِّنْஇருந்தقَرْنٍதலைமுறையினரைهُمْஅவர்கள்اَشَدُّமிக வலிமையானவர்கள்مِنْهُمْஅவர்களை விடبَطْشًاவலிமையில்فَنَقَّبُوْاஆகவே அவர்கள் சுற்றித் திரிந்தார்கள்فِیஎங்கும்الْبِلَادِ ؕநாடுகளில்هَلْஉண்டாمِنْஏதேனும்مَّحِیْصٍதப்பிக்கும் இடம்
வ கம் அஹ்லக்னா கBப்லஹும் மின் கர்னின் ஹும் அஷத்து மின்ஹும் Bபத்ஷன் Fபனக்கBபூ Fபில் Bபிலாத், ஹல் மிம் மஹீஸ்
அன்றியும், (நிராகரிப்போரான) அவர்களைவிட பலசாலிகளாக இருந்த எத்தனையோ தலைமுறையினரை அவர்களுக்கு முன்னர் நாம் அழித்திருக்கின்றோம்; அவர்கள் (அழிவிலிருந்து தப்பித்துக் கொள்ள) பல ஊர்களிலும் (துளைத்துச்) சென்றனர்; ஆனால் அவர்கள் தப்பித்துக் கொள்ள புகலிடம் இருந்ததா?
اِنَّ فِیْ ذٰلِكَ لَذِكْرٰی لِمَنْ كَانَ لَهٗ قَلْبٌ اَوْ اَلْقَی السَّمْعَ وَهُوَ شَهِیْدٌ ۟
اِنَّநிச்சயமாகفِیْஇல்ذٰلِكَஅதில்لَذِكْرٰیஒரு படிப்பினைلِمَنْஎவருக்குكَانَஇருக்கிறதோلَهٗஅவருக்குقَلْبٌஉள்ளம்اَوْஅல்லதுاَلْقَیசெலுத்துகிறாரோالسَّمْعَசெவிوَ هُوَமேலும் அவர்شَهِیْدٌகவனிப்பவராக
இன்ன Fபீ தாலிக லதிக்ரா லிமன் கான லஹூ கல்Bபுன் அவ் அல்கஸ் ஸம்'அ வ ஹுவ ஷஹீத்
எவருக்கு (நல்ல) இதயம் இருக்கிறதோ, அல்லது எவர் ஓர்மையுடன் செவிதாழ்த்திக் கேட்கிறாரோ அ(த்தகைய)வருக்கு நிச்சயமாக இதில் நினைவுறுத்தலும் (படிப்பினையும்) இருக்கிறது.
وَلَقَدْ خَلَقْنَا السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَیْنَهُمَا فِیْ سِتَّةِ اَیَّامٍ ۖۗ وَّمَا مَسَّنَا مِنْ لُّغُوْبٍ ۟
وَ لَقَدْமேலும் நிச்சயமாகخَلَقْنَاநாம் படைத்தோம்السَّمٰوٰتِவானங்களைوَ الْاَرْضَபூமியையும்وَ مَاஇன்னும் எவற்றையும்بَیْنَهُمَاஅவ்விரண்டிற்கும் இடையில்فِیْஇல்سِتَّةِஆறுاَیَّامٍ ۖۗநாட்கள்وَّ مَاமேலும் இல்லைمَسَّنَاநம்மைத் தீண்டியதுمِنْஎந்தவிதلُّغُوْبٍசோர்வும்
வ லகத் கலக்னஸ் ஸமாவாதி வல் அர்ள வமா Bபய்னஹுமா Fபீ ஸித்ததி அய்யாமின் வமா மஸ்ஸனா மில் லுகூBப்
நிச்சயமாக நாம் தாம் வானங்களையும், பூமியையும் அவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தோம்; (அதனால்) எத்தகைய களைப்பும் நம்மைத் தீண்டவில்லை.
فَاصْبِرْ عَلٰی مَا یَقُوْلُوْنَ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوْعِ الشَّمْسِ وَقَبْلَ الْغُرُوْبِ ۟ۚ
فَاصْبِرْஆகவே பொறுமையுடன் இருப்பீராகعَلٰیமீதுمَاஎதைیَقُوْلُوْنَஅவர்கள் கூறுகிறார்களோوَ سَبِّحْமேலும் துதிப்பீராகبِحَمْدِபுகழுடன்رَبِّكَஉமது இறைவனின்قَبْلَமுன்னதாகطُلُوْعِஉதிப்பதற்குالشَّمْسِசூரியன்وَ قَبْلَமேலும் முன்னதாகالْغُرُوْبِۚமறைவதற்கு
Fபஸ்Bபிர் 'அலா மா யகூலூன வ ஸBப்Bபிஹ் Bபிஹம்தி ரBப்Bபிக கBப்ல துலூ'இஷ் ஷம்ஸி வ கBப்லல் குரூBப்
எனவே (நபியே!) அவர்கள் கூறுவதைப் பற்றிப் பொறுமையோடிருப்பீராக; இன்னும், சூரிய உதயத்திற்கு முன்னரும், (அது) அஸ்தமிப்பதற்கு முன்னரும் உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு நீர் தஸ்பீஹு செய்வீராக.
وَمِنَ الَّیْلِ فَسَبِّحْهُ وَاَدْبَارَ السُّجُوْدِ ۟
وَ مِنَஇன்னும்الَّیْلِஇரவிலும்فَسَبِّحْهُஅவனைத் துதிப்பீராகوَ اَدْبَارَபின்னரும்السُّجُوْدِஸுஜூதுகளுக்கு
வ மினல் லய்லி FபஸBப்Bபிஹ் ஹு வ அத்Bபாரஸ் ஸுஜூத்
இன்னும் இரவிலிருந்தும், ஸுஜூதுக்குப் பின்னரும் அவனைத் தஸ்பீஹு செய்வீராக.
وَاسْتَمِعْ یَوْمَ یُنَادِ الْمُنَادِ مِنْ مَّكَانٍ قَرِیْبٍ ۟ۙ
وَ اسْتَمِعْஇன்னும் செவிமடுப்பீராகیَوْمَஅந்நாளில்یُنَادِஅழைப்பார்الْمُنَادِஅழைப்பவர்مِنْஇருந்துمَّكَانٍஓர் இடத்தில்قَرِیْبٍۙசமீபமான
வஸ்தமிஃ யவ்ம யுனா தில் முனாதி மிம் மகானின் கரீBப்
மேலும், சமீபமான இடத்திலிருந்து கூவி அழைப்பவர் அழைக்கும் நாளை(ப் பற்றி நபியே!) நீர் செவிமடுப்பீராக.
یَّوْمَ یَسْمَعُوْنَ الصَّیْحَةَ بِالْحَقِّ ؕ ذٰلِكَ یَوْمُ الْخُرُوْجِ ۟
یَّوْمَஅந்நாளில்یَسْمَعُوْنَஅவர்கள் செவியேற்பார்கள்الصَّیْحَةَஅந்தப் பெரும் சத்தத்தைبِالْحَقِّ ؕஉண்மையாகذٰلِكَஅதுیَوْمُநாள்الْخُرُوْجِவெளியேறுதல்
யவ்ம யஸ்மஊனஸ் ஸய் ஹத Bபில்ஹக்க் தாலிக யவ்முல் குரூஜ்
அந்நாளில், உண்மையைக் கொண்டு ஒலிக்கும் பெரும் சப்தத்தை அவர்கள் கேட்பார்கள். அதுதான் (மரித்தோர்) வெளியேறும் நாளாகும்.
اِنَّا نَحْنُ نُحْیٖ وَنُمِیْتُ وَاِلَیْنَا الْمَصِیْرُ ۟ۙ
اِنَّاநிச்சயமாக நாம்نَحْنُநாம்نُحْیٖஉயிர்ப்பிக்கிறோம்وَ نُمِیْتُமேலும் மரணிக்கச் செய்கிறோம்وَ اِلَیْنَاமேலும் நம்மிடமேالْمَصِیْرُۙமீளுதல்
இன்னா னஹ்னு னுஹ்யீ வ னுமீது வ இலய்னல் மஸீர்
நிச்சயமாக நாமே உயிர் கொடுக்கிறோம்; நாமே மரணிக்கும்படிச் செய்கிறோம் - அன்றியும் நம்மிடமே (எல்லோரும்) மீண்டு வர வேண்டியிருக்கிறது.
یَوْمَ تَشَقَّقُ الْاَرْضُ عَنْهُمْ سِرَاعًا ؕ ذٰلِكَ حَشْرٌ عَلَیْنَا یَسِیْرٌ ۟
یَوْمَஅந்நாளில்تَشَقَّقُபிளந்துالْاَرْضُபூமிعَنْهُمْஅவர்களை விட்டும்سِرَاعًا ؕவிரைவாகذٰلِكَஅதுحَشْرٌஒன்று திரட்டுதல்عَلَیْنَاநமக்குیَسِیْرٌஎளிதானது
யவ்ம தஷக்ககுல் அர்ளு 'அன்ஹும் ஸிரா'ஆ; தாலிக ஹஷ்ருன் 'அலய்னா யஸீர்
பூமி பிளந்து, அவர்கள் வேகமாக (வெளியே) வரும் நாள்; இவ்வாறு (அவர்களை) ஒன்று சேர்ப்பது நமக்கு எளிதானதாகும்.
نَحْنُ اَعْلَمُ بِمَا یَقُوْلُوْنَ وَمَاۤ اَنْتَ عَلَیْهِمْ بِجَبَّارٍ ۫ فَذَكِّرْ بِالْقُرْاٰنِ مَنْ یَّخَافُ وَعِیْدِ ۟۠
نَحْنُநாம்اَعْلَمُநன்கு அறிந்தவர்கள்بِمَاஎதனைیَقُوْلُوْنَஅவர்கள் கூறுகிறார்களோوَ مَاۤமேலும் இல்லைاَنْتَநீர்عَلَیْهِمْஅவர்கள் மீதுبِجَبَّارٍ ۫நிர்ப்பந்திப்பவர்فَذَكِّرْஎனவே நினைவூட்டுவீராகبِالْقُرْاٰنِகுர்ஆனைக் கொண்டுمَنْஎவர்یَّخَافُஅஞ்சுகிறாரோوَعِیْدِ۠எனது எச்சரிக்கையை
னஹ்னு அஃலமு Bபிமா யகூலூன வ மா அன்த 'அலய்ஹிம் BபிஜBப்Bபாரின் Fபதக்கிர் Bபில் குர்'ஆனி ம(ன்)ய் யகாFபு வ'ஈத்
அவர்கள் கூறுவதை நாம் நன்கறிவோம் - நீர் அவர்கள் மீது நிர்ப்பந்தம் செய்பவரல்லர், ஆகவே (நம்) அச்சுறுத்தலை பயப்படுவோருக்கு, இந்த குர்ஆனை கொண்டு நல்லுபதேசம் செய்வீராக.