16. ஸூரத்துந் நஹ்ல் (தேனி)

மக்கீ, வசனங்கள்: 128

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
اَتٰۤی اَمْرُ اللّٰهِ فَلَا تَسْتَعْجِلُوْهُ ؕ سُبْحٰنَهٗ وَتَعٰلٰی عَمَّا یُشْرِكُوْنَ ۟
اَتٰۤىவந்தது (வந்தே தீரும்)اَمْرُகட்டளைاللّٰهِஅல்லாஹ்வுடையفَلَا تَسْتَعْجِلُوْهُ‌ ؕஅவசரமாக தேடாதீர்கள்/அதைسُبْحٰنَهٗஅவன் மிகப் பரிசுத்தமானவன்وَتَعٰلٰىஇன்னும் முற்றிலும் உயர்ந்தவன்عَمَّا يُشْرِكُوْنَ‏அவர்கள் இணைவைப்பதை விட்டு
அதா அம்ருல்லாஹி Fபலா தஸ்தஃஜிலூஹ்; ஸுBப்ஹானஹூ வ த'ஆலா 'அம்மா யுஷ்ரிகூன்
அல்லாஹ்வின் கட்டளை வந்து விட்டது; அதைப்பற்றி நீங்கள் அவசரப்படாதீர்கள்; அவன் மிகவும் தூயவன் - அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிக்க மேலானவன்.
یُنَزِّلُ الْمَلٰٓىِٕكَةَ بِالرُّوْحِ مِنْ اَمْرِهٖ عَلٰی مَنْ یَّشَآءُ مِنْ عِبَادِهٖۤ اَنْ اَنْذِرُوْۤا اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّاۤ اَنَا فَاتَّقُوْنِ ۟
يُنَزِّلُஇறக்குகிறான்الْمَلٰۤٮِٕكَةَவானவர்களைبِالرُّوْحِஉயிருடன்مِنْ اَمْرِهٖதன் கட்டளைப்படிعَلٰىமீதுمَنْஎவர்يَّشَآءُநாடுகின்றான்مِنْ عِبَادِهٖۤதன் அடியார்களில்اَنْஎன்றுاَنْذِرُوْۤاஎச்சரியுங்கள்اَنَّهٗநிச்சயமாக செய்திلَاۤஅறவே இல்லைاِلٰهَவணக்கத்திற்குரியவன்اِلَّاۤதவிரاَنَاஎன்னைفَاتَّقُوْنِ‏ஆகவே, அஞ்சுங்கள்
யுனZஜ்Zஜிலுல் மலா 'இகத Bபிர்ரூஹி மின் அம்ரிஹீ 'அலா மய் யஷா'உ மின் 'இBபாதிஹீ அன் அன்திரூ அன்னஹூ லா இலாஹ இல்லா அன Fபத்தகூன்
அவன் மலக்குகளிடம் வஹீயைக் கொடுத்துத் தன் அடியார்களில் தான் நாடியவர் மீது (அனுப்பி வைத்து,) “நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) நாயன், என்னைத்தவிர வேறுயாருமில்லை; ஆகையால் நீங்கள் எனக்கே அஞ்சுங்கள் என (மக்களுக்கு) எச்சரிக்கை செய்யுங்கள்” என்ற கட்டளையுடன் (மலக்குகளை) இறக்கி வைக்கிறான்.
خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِالْحَقِّ ؕ تَعٰلٰی عَمَّا یُشْرِكُوْنَ ۟
خَلَقَபடைத்தான்السَّمٰوٰتِவானங்களைوَالْاَرْضَஇன்னும் பூமியைبِالْحَـقِّ‌ؕஉண்மையான நோக்கத்திற்கேتَعٰلٰىமுற்றிலும் உயர்ந்தவன்عَمَّا يُشْرِكُوْنَ‏அவர்கள் இணைவைப்பதை விட்டு
கலகஸ் ஸமாவாதி வல் அர்ள Bபில்ஹக்க்; த'ஆலா 'அம்மா யுஷ்ரிகூன்
அவன் வானங்களையும், பூமியையும் உண்மையைக் கொண்டு படைத்துள்ளான்; அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் அவன் மிக்க மேலானவன்.
خَلَقَ الْاِنْسَانَ مِنْ نُّطْفَةٍ فَاِذَا هُوَ خَصِیْمٌ مُّبِیْنٌ ۟
خَلَقَபடைத்தான்الْاِنْسَانَமனிதனைمِنْஇருந்துنُّـطْفَةٍஇந்திரியம்فَاِذَا هُوَஅவனோخَصِيْمٌவாதி, எதிரிمُّبِيْنٌ‏பகிரங்கமான
கலகல் இன்ஸான மின் னுத்Fபதின் Fப இதா ஹுவ கஸீமும் முBபீன்
அவன் மனிதனை இந்திரியத்துளியினால் படைத்தான்; அப்படியிருந்தும் மனிதன் பகிரங்கமான எதிரியாக இருக்கின்றான்.
وَالْاَنْعَامَ خَلَقَهَا ۚ لَكُمْ فِیْهَا دِفْءٌ وَّمَنَافِعُ وَمِنْهَا تَاْكُلُوْنَ ۪۟
وَالْاَنْعَامَஇன்னும் கால்நடைகளைخَلَقَهَا‌படைத்தான் / அவற்றைلَـكُمْஉங்களுக்காகفِيْهَاஅவற்றில்دِفْ ٴٌஆடைوَّمَنَافِعُஇன்னும் பலன்கள்وَمِنْهَاஇன்னும் அவற்றிலிருந்துتَاْكُلُوْنَ‏புசிக்கின்றீர்கள்
வல் அன் 'அமா கலகஹா; லகும் Fபீஹா திFப்'உ(ன்)வ் வ மனாFபி'உ வ மின்ஹா தாகுலூன்
கால் நடைகளையும் அவனே படைத்தான்; அவற்றில் உங்களுக்குக் கத கதப்பு(ள்ள ஆடையனிகளு)ம் இன்னும் (பல) பலன்களும் இருக்கின்றன; அவற்றிலிருந்து நீங்கள் புசிக்கவும் செய்கிறீர்கள்.
وَلَكُمْ فِیْهَا جَمَالٌ حِیْنَ تُرِیْحُوْنَ وَحِیْنَ تَسْرَحُوْنَ ۪۟
وَلَكُمْஇன்னும் உங்களுக்குفِيْهَاஅவற்றில்جَمَالٌஅழகுحِيْنَநேரத்தில்تُرِيْحُوْنَமாலையில் ஓட்டி வருகிறீர்கள்وَحِيْنَஇன்னும் நேரத்தில்تَسْرَحُوْنَ‏மேய்க்க ஓட்டிச் செல்கிறீர்கள்
வ லகும் Fபீஹா ஜமாலுன் ஹீன துரீஹூன வ ஹீன தஸ்ரஹூன்
அவற்றை நீங்கள் மாலை நேரத்தில் (வீட்டுக்குத்) திரும்பி ஓட்டி வரும் போதும், காலை நேரத்தில் (மேய்ச்சலுக்காக) அவிழ்த்துவிடும் போதும், அவற்றில் உங்களுக்கு(ப் பொலிவும்) அழகுமிருக்கிறது.
وَتَحْمِلُ اَثْقَالَكُمْ اِلٰی بَلَدٍ لَّمْ تَكُوْنُوْا بٰلِغِیْهِ اِلَّا بِشِقِّ الْاَنْفُسِ ؕ اِنَّ رَبَّكُمْ لَرَءُوْفٌ رَّحِیْمٌ ۟ۙ
وَتَحْمِلُஅவை சுமக்கின்றனاَثْقَالَـكُمْசுமைகளை/உங்கள்اِلٰى بَلَدٍஊருக்குلَّمْ تَكُوْنُوْاநீங்கள் இல்லைبٰلِغِيْهِஅடைபவர்களாக/அதைاِلَّاதவிரبِشِقِّ الْاَنْفُسِ‌ؕமிகுந்த சிரமத்துடன்اِنَّநிச்சயமாகرَبَّكُمْஉங்கள் இறைவன்لَرَءُوْفٌமகா இரக்கமுள்ளவன்رَّحِيْمٌۙ‏மகா கருணையாளன்
வ தஹ்மிலு அத்காலகும் இலா Bபலதில் லம் தகூனூ Bபாலிகீஹி இல்லா Bபிஷிக்கில் அன்Fபுஸ்; இன்ன ரBப்Bபகும் ல ர'ஊFபுர் ரஹீம்
மேலும், மிக்க கஷ்டத்துடனன்றி நீங்கள் சென்றடைய முடியாத ஊர்களுக்கு அவை உங்களுடைய சுமைகளைச் சுமந்து செல்கின்றன - நிச்சயமாக உங்களுடைய இறைவன் மிக இரக்கமுடையவன்; அன்பு மிக்கவன்.
وَّالْخَیْلَ وَالْبِغَالَ وَالْحَمِیْرَ لِتَرْكَبُوْهَا وَزِیْنَةً ؕ وَیَخْلُقُ مَا لَا تَعْلَمُوْنَ ۟
وَّالْخَـيْلَஇன்னும் குதிரைகளைوَالْبِغَالَஇன்னும் கோவேறு கழுதைகளைوَالْحَمِيْرَஇன்னும் கழுதைகளைلِتَرْكَبُوْهَاநீங்கள் ஏறிசெல்வதற்க்காக /அவற்றில்وَزِيْنَةً‌ ؕஅலங்காரத்திற்காகوَيَخْلُقُஇன்னும் படைப்புகள்مَاஎவற்றைلَا تَعْلَمُوْنَ‏அறியமாட்டீர்கள்
வல்கய்ல வல் Bபிகால வல் ஹமீர லிதர்கBபூஹா வ Zஜீனஹ்; வ யக்லுகு மா லா தஃலமூன்
இன்னும், குதிரைகள், கோவேறு கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச்செல்வதற்காகவும், அலங்காரமாகவும், (அவனே படைத்துள்ளான்;) இன்னும், நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைக்கிறான்.
وَعَلَی اللّٰهِ قَصْدُ السَّبِیْلِ وَمِنْهَا جَآىِٕرٌ ؕ وَلَوْ شَآءَ لَهَدٰىكُمْ اَجْمَعِیْنَ ۟۠
وَعَلَى اللّٰهِஅல்லாஹ்வின் பொறுப்புقَصْدُநேர்السَّبِيْلِவழிوَمِنْهَاஇன்னும் அவற்றில்جَآٮِٕرٌ‌ؕகோணலானதுوَلَوْ شَآءَஅவன் நாடினால்لَهَدٰٮكُمْநேர்வழி நடத்தி இருப்பான்/உங்களைاَجْمَعِيْنَ‏அனைவரையும்
வ 'அலல் லாஹி கஸ்துஸ் ஸBபீலி வ மின்ஹா ஜா'இர்; வ லவ் ஷா'அ லஹதாகும் அஜ்ம'ஈன்
இன்னும் நேர் வழிகாட்டுதல் அல்லாஹ்வின் மீதே இருக்கிறது; (அவனருளை அடைய முடியாத) தவறான (பாதைகளும்) இருக்கின்றன; மேலும், அல்லாஹ் நாடினால் உங்கள் அனைவரையும் நிச்சயமாக நேர்வழியில் சேர்த்துவிடுவான்.  
هُوَ الَّذِیْۤ اَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً لَّكُمْ مِّنْهُ شَرَابٌ وَّمِنْهُ شَجَرٌ فِیْهِ تُسِیْمُوْنَ ۟
هُوَஅவன்الَّذِىْۤஎத்தகையவன்اَنْزَلَஇறக்கினான்مِنَ السَّمَآءِமேகத்திலிருந்துمَآءً‌மழை நீரைلَّـكُمْஉங்களுக்குمِّنْهُஅதில்شَرَابٌகுடிநீர்وَّمِنْهُஇன்னும் அதிலிருந்துشَجَرٌமரங்கள்فِيْهِஅவற்றில்تُسِيْمُوْنَ‏மேய்க்கிறீர்கள்
ஹுவல் லதீ அன்Zஜல மினஸ் ஸமா'இ மா'அல் லகும் மின்ஹு ஷராBபு(ன்)வ் வ மின்ஹு ஷஜருன் Fபீஹி துஸீமூன்
அவனே வானத்திலிருந்து மழையைப் பொழியச் செய்கிறான்; அதிலிருந்து உங்களுக்கு அருந்தும் நீரும் இருக்கிறது; அதிலிருந்து (உங்கள் கால்நடைகளை) மேய்ப்பதற்கான மரங்கள் (மற்றும் புற்பூண்டுகளும் உண்டாகி) அதில் இருக்கின்றன.
یُنْۢبِتُ لَكُمْ بِهِ الزَّرْعَ وَالزَّیْتُوْنَ وَالنَّخِیْلَ وَالْاَعْنَابَ وَمِنْ كُلِّ الثَّمَرٰتِ ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً لِّقَوْمٍ یَّتَفَكَّرُوْنَ ۟
يُنْۢبِتُமுளைக்கவைக்கிறான்لَـكُمْஉங்களுக்குبِهِஅதைக் கொண்டுالزَّرْعَபயிர்களைوَالزَّيْتُوْنَஇன்னும் ஜைதூனைوَالنَّخِيْلَஇன்னும் பேரீச்ச மரத்தைوَالْاَعْنَابَஇன்னும் திராட்சைகளைوَمِنْஇன்னும் இருந்துكُلِّஎல்லாالثَّمَرٰتِ‌ؕகனிவர்க்கங்கள்اِنَّநிச்சயமாகفِىْ ذٰ لِكَஇவற்றில்لَاٰيَةًஅத்தாட்சிلِّـقَوْمٍமக்களுக்குيَّتَفَكَّرُوْنَ‏சிந்திக்கின்றார்கள்
யும்Bபிது லகும் BபிஹிZஜ் Zஜர்'அ வZஜ்Zஜய்தூன வன்ன கீல வல்-அஃனாBப வ மின் குல்லித் தமராத், இன்ன Fபீ தாலிக ல ஆயதல் லிகவ்மி(ன்)ய் யதFபக்கரூன்
அதனைக் கொண்டே, (விவசாயப்) பயிர்களையும், ஒலிவம்(ஜைத்தூன்) மரத்தையும், பேரீத்த மரங்களையும், திராட்சைக் கொடிகளையும், இன்னும் எல்லாவகைக் கனிவர்க்கங்களிலிருந்தும் அவன் உங்களுக்காக விளைவிக்கிறான் - நிச்சயமாக இதில் சிந்திக்கும் மக்கள் கூட்டத்தாருக்கு(த் தக்க) அத்தாட்சி இருக்கிறது.
وَسَخَّرَ لَكُمُ الَّیْلَ وَالنَّهَارَ ۙ وَالشَّمْسَ وَالْقَمَرَ ؕ وَالنُّجُوْمُ مُسَخَّرٰتٌ بِاَمْرِهٖ ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یَّعْقِلُوْنَ ۟ۙ
وَسَخَّرَஇன்னும் வசப்படுத்தினான்لَـكُمُஉங்களுக்குالَّيْلَஇரவைوَالنَّهَارَۙஇன்னும் பகலைوَالشَّمْسَஇன்னும் சூரியனைوَالْقَمَرَ‌ؕஇன்னும் சந்திரனைوَالنُّجُوْمُஇன்னும் நட்சத்திரங்கள்مُسَخَّرٰتٌۢவசப்படுத்தப்பட்டவைبِاَمْرِهٖؕஅவனுடைய கட்டளையைக் கொண்டுاِنَّநிச்சயமாகفِىْ ذٰ لِكَஇவற்றில்لَاٰيٰتٍபல அத்தாட்சிகள்لِّـقَوْمٍமக்களுக்குيَّعْقِلُوْنَۙ‏சிந்தித்து புரிகின்றனர்
வ ஸக்க்கர லகுமுல் லய்ல வன்னஹார வஷ் ஷம்ஸ வல்கமர வன்னுஜூமு முஸக்கராதும் Bபி அம்ரிஹ்; இன்ன Fபீ தாலிக ல ஆயாதில் லிகவ்மி(ன்)ய் யஃகிலூன்
இன்னும் அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் உங்க(ள் நலன்க)ளுக்கு வசப்படுத்திக் கொடுத்துள்ளான்; அவ்வாறே நட்சத்திரங்களும் அவன் கட்டளைப் படியே வசப்படுத்தப்பட்டுள்ளன - நிச்சயமாக இதிலும் ஆய்ந்தறியக் கூடிய மக்கள் கூட்டத்தாருக்கு(த் தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன.
وَمَا ذَرَاَ لَكُمْ فِی الْاَرْضِ مُخْتَلِفًا اَلْوَانُهٗ ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً لِّقَوْمٍ یَّذَّكَّرُوْنَ ۟
وَمَاஇன்னும் எது?ذَرَاَபடைத்தான்لَـكُمْஉங்களுக்காகفِى الْاَرْضِபூமியில்مُخْتَلِفًاமாறுபட்டதுاَلْوَانُهٗ‌ ؕஅதன் நிறங்கள்اِنَّநிச்சயமாகفِىْ ذٰ لِكَஇதில்لَاٰيَةًஓர் அத்தாட்சிلّـِقَوْمٍமக்களுக்குيَّذَّكَّرُوْنَ‏நல்லுபதேசம் பெறுகின்றனர்
வமா தர அ லகும் Fபில் அர்ளி முக்தலிFபன் அல்வானுஹ்; இன்ன Fபீ தாலிக ல ஆயதல் லிகவ்மி(ன்)ய் யதக்கரூன்
இன்னும், பூமியில் அவன் படைத்திருப்பன பல விதமான நிறங்களையுடைய (செடி கொடிகள், பிராணிகள், பறவைகள், போன்ற)வையுமாகும்; நிச்சயமாக இதில் (அல்லாஹ்வின் அருள் கொடைகளை நன்றியுடன்) நினைவு கூறும் மக்களுக்கு(த் தக்க) அத்தாட்சியுள்ளது.
وَهُوَ الَّذِیْ سَخَّرَ الْبَحْرَ لِتَاْكُلُوْا مِنْهُ لَحْمًا طَرِیًّا وَّتَسْتَخْرِجُوْا مِنْهُ حِلْیَةً تَلْبَسُوْنَهَا ۚ وَتَرَی الْفُلْكَ مَوَاخِرَ فِیْهِ وَلِتَبْتَغُوْا مِنْ فَضْلِهٖ وَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ۟
وَهُوَ الَّذِىْஅவன்தான்سَخَّرَவசப்படுத்தினான்الْبَحْرَகடலைلِتَاْكُلُوْاநீங்கள் புசிப்பதற்காகمِنْهُஅதிலிருந்துلَحْمًاஒரு மாமிசத்தைطَرِيًّاபசுமையானது, மென்மையானது, புதியது, சதையுடையதுوَّتَسْتَخْرِجُوْاஇன்னும் வெளியெடுப்பதற்காகمِنْهُஅதிலிருந்துحِلْيَةًஆபரணங்களைتَلْبَسُوْنَهَا‌ۚஅணிகிறீர்கள் / அவற்றைوَتَرَىஇன்னும் பார்க்கிறீர்الْـفُلْكَகப்பல்களைمَوَاخِرَபிளந்து செல்பவையாகفِيْهِஅதில்وَلِتَبْتَغُوْاஇன்னும் நீ தேடுவதற்காகمِنْ فَضْلِهٖஅவனுடைய அருளைوَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏இன்னும் நீங்கள் நன்றி செலுத்துவதற்காக
வ ஹுவல் லதீ ஸக்கரல் Bபஹ்ர லிதாகுலூ மின்ஹு லஹ்மன் தரிய்ய(ன்)வ் வ தஸ்தக்ரிஜூ மின்ஹு ஹில்யதன் தல்Bபஸூனஹா வ தரல் Fபுல்க மவாகிர Fபீஹி வ லிதBப்தகூ மின் Fபள்லிஹீ வ ல'அல்லகும் தஷ்குரூன்
நீங்கள் கடலிலிருந்து நய(மும், சுவையு)முள்ள மீன் போன்ற மாமிசத்தை புசிப்பதற்காகவும், நீங்கள் அணிந்து கொள்ளக்கூடிய ஆபரணத்தை அதிலிருந்து நீங்கள் வெளிப்படுத்தவும் அவன் தான் அதனையும் (கடலையும்) வசப்படுத்தித் தந்தான்; இன்னும் அதில் தண்ணீரைப் பிளந்து கொண்டு செல்லும் கப்பலை நீங்கள் காணுகிறீர்கள்; (பல்வேறு இடங்களுக்குச் சென்று) அவன் அருட்கொடையை நீங்கள் தேடவும், நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டும் (அதை) இவ்வாறு வசப்படுத்திக் கொடுத்தான்.
وَاَلْقٰی فِی الْاَرْضِ رَوَاسِیَ اَنْ تَمِیْدَ بِكُمْ وَاَنْهٰرًا وَّسُبُلًا لَّعَلَّكُمْ تَهْتَدُوْنَ ۟ۙ
وَاَلْقٰىஅவன் அமைத்தான்فِى الْاَرْضِபூமியில்رَوَاسِىَமலைகளைاَنْ تَمِيْدَஅசையாதிருப்பதற்காகبِكُمْஉங்களைக் கொண்டுوَاَنْهٰرًاஇன்னும் நதிகளைوَّسُبُلًاஇன்னும் பாதைகளைلَّعَلَّكُمْ تَهْتَدُوْنَۙ‏நீங்கள் வழி பெறுவதற்காக
வ அல்கா Fபில் அர்ளி ரவாஸிய அன் தமீத Bபிகும் வ அன்ஹார(ன்)வ் வ ஸுBப்லுலல் ல 'அல்லகும் தஹ்ததூன்
உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் உறுதியான மலைகளை நிறுத்தினான்; இன்னும் நீங்கள் சரியான வழியை அறி(ந்து செல்)வதற்காக அவன் ஆறுகளையும் பாதைகளையும் (அமைத்தான்).
وَعَلٰمٰتٍ ؕ وَبِالنَّجْمِ هُمْ یَهْتَدُوْنَ ۟
وَعَلٰمٰتٍ‌ؕஇன்னும் பல அடையாளங்களைوَبِالنَّجْمِஇன்னும் நட்சத்திரங்களைக் கொண்டுهُمْஅவர்கள்يَهْتَدُوْنَ‏வழி பெறுகின்றனர்
வ 'அலாமாத்; வ Bபின் னஜ்மி ஹும் யஃததூன்
(வழிகாட்டும்) அடையாளங்களையும் (வழி காட்டுவதற்காக அவன் அமைத்துள்ளான்); நட்சத்திரங்களைக் கொண்டும் (பிரயாணிகளாகிய) அவர்கள் வழிகளை அறிந்து கொள்கிறார்கள்.
اَفَمَنْ یَّخْلُقُ كَمَنْ لَّا یَخْلُقُ ؕ اَفَلَا تَذَكَّرُوْنَ ۟
اَفَمَنْஆவானா?/எவன்يَّخْلُقُபடைப்பான்كَمَنْஎவனைப் போல்لَّا يَخْلُقُ‌ؕபடைக்கமாட்டான்اَفَلَا تَذَكَّرُوْنَ‏நீங்கள் நல்லுபதேசம் பெற வேண்டாமா?
அFபம(ன்)ய் யக்லுகு கமல்லா யக்லுக்; அFபலா ததக் கரூன்
(அனைத்தையும்) படைக்கிறானே அவன், (எதையுமே) படைக்காத (நீங்கள் வணங்குப)வை போலாவானா? நீங்கள் (இதையேனும்) சிந்திக்க வேண்டாமா?
وَاِنْ تَعُدُّوْا نِعْمَةَ اللّٰهِ لَا تُحْصُوْهَا ؕ اِنَّ اللّٰهَ لَغَفُوْرٌ رَّحِیْمٌ ۟
وَاِنْ تَعُدُّوْاநீங்கள் எண்ணினால்نِعْمَةَஅருளைاللّٰهِஅல்லாஹ்வின்لَاநீங்கள் எண்ணி முடிக்கமாட்டீர்கள்تُحْصُوْهَاؕஅதைاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்لَـغَفُوْرٌமகா மன்னிப்பாளன்رَّحِيْمٌ‏மகா கருணையாளன்
வ இன் த'உத்தூ னிஃமதல் லாஹி லா துஹ்ஸூஹா; இன்னல் லாஹ ல கFபூருர் ரஹீம்
இன்னும் அல்லாஹ்வின் அரு(ட் கொடைக)ளை நீங்கள் கணக்கிட்டால், அவற்றை (வரையறை செய்து) நீங்கள் எண்ணி முடியாது! நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், மிகக் கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.
وَاللّٰهُ یَعْلَمُ مَا تُسِرُّوْنَ وَمَا تُعْلِنُوْنَ ۟
وَاللّٰهُ يَعْلَمُஅல்லாஹ் நன்கறிவான்مَاஎதைتُسِرُّوْنَமறைக்கிறீர்கள்وَ مَا تُعْلِنُوْنَ‏எதை/வெளிப்படுத்துகிறீர்கள்
வல்லாஹு யஃலமு மா துஸிர்ரூன வமா துஃலினூன்
அன்றியும், அல்லாஹ் நீங்கள் மறைத்து வைத்திருப்பதையும், நீங்கள் பகிரங்கப்படுத்துவதையும் அறிகிறான்.
وَالَّذِیْنَ یَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَا یَخْلُقُوْنَ شَیْـًٔا وَّهُمْ یُخْلَقُوْنَ ۟ؕ
وَالَّذِيْنَஎவர்கள்يَدْعُوْنَஅழைக்கிறார்கள்مِنْ دُوْنِஅன்றிاللّٰهِஅல்லாஹ்لَا يَخْلُقُوْنَபடைக்க மாட்டார்கள்شَيْــٴًــاஎதையும்وَّهُمْஅவர்களோيُخْلَقُوْنَؕ‏படைக்கப்படுகிறார்கள்
வல்லதீன யத்'ஊன மின் தூனில் லாஹி லா யக்லுகூன ஷய்'அ(ன்)வ் வ ஹும் யுக்லகூன்
அல்லாஹ்வையன்றி வேறு எவர்களை அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ,அவர்கள் எந்தப் பொருளையும் படைக்க மாட்டார்கள்; அவர்(களால் பிரார்த்திக்கப்படுபவர்)களும் படைக்கப்பட்டவர்களாவார்கள்.
اَمْوَاتٌ غَیْرُ اَحْیَآءٍ ۚ وَمَا یَشْعُرُوْنَ ۙ اَیَّانَ یُبْعَثُوْنَ ۟۠
اَمْوَاتٌஇறந்தவர்கள்غَيْرُஅல்லர்اَحْيَآءٍ‌ ۚஉயிருள்ளவர்கள்وَمَا يَشْعُرُوْنَஇன்னும் அறியமாட்டார்கள்اَيَّانَஎப்போதுيُبْعَثُوْنَ‏எழுப்பப்படுவார்கள்
அம்வாதுன் கய்ரு அஹ்யா'இ(ன்)வ் வமா யஷ்'உரூன அய்யான யுBப்'அதூன்
அவர்கள் இறந்தவர்களே-உயிருள்ளவர்களல்லர்; மேலும், எப்பொழுது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள்.  
اِلٰهُكُمْ اِلٰهٌ وَّاحِدٌ ۚ فَالَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ قُلُوْبُهُمْ مُّنْكِرَةٌ وَّهُمْ مُّسْتَكْبِرُوْنَ ۟
اِلٰهُكُمْ(வணங்கத் தகுதியான) உங்கள் இறைவன்اِلٰهٌஇறைவன்وَّاحِدٌ‌ ۚஒரே ஒருவன்فَالَّذِيْنَஎவர்கள்لَا يُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்ள மாட்டார்கள்بِالْاٰخِرَةِமறுமையைقُلُوْبُهُمْஉள்ளங்கள்/அவர்களுடையمُّنْكِرَةٌநிராகரிக்கின்றனوَّهُمْஇன்னும் அவர்கள்مُّسْتَكْبِرُوْنَ‏பெருமையடிக்கிறார்கள்
இலாஹுகும் இலாஹு(ன்)வ் வாஹித்; Fபல்லதீன லா யு'மினூன Bபில் ஆகிரதி குலூBபுஹும் முன்கிரது(ன்)வ் வ ஹும் முஸ்தக்Bபிரூன்
உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான்; எனவே, எவர்கள் மறுமையை நம்பவில்லையோ, அவர்களுடைய நெஞ்சங்கள் (இவ்வுண்மையை) நிராகரிப்பவையாக இருக்கின்றன - மேலும் அவர்கள் (ஆணவங் கொண்டு) பெருமையடிப்பவர்களாக இருக்கிறார்கள்.
لَا جَرَمَ اَنَّ اللّٰهَ یَعْلَمُ مَا یُسِرُّوْنَ وَمَا یُعْلِنُوْنَ ؕ اِنَّهٗ لَا یُحِبُّ الْمُسْتَكْبِرِیْنَ ۟
لَا جَرَمَசந்தேகமே இல்லைاَنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்يَعْلَمُஅறிவான்مَاஎதைيُسِرُّوْنَமறைக்கிறார்கள்وَمَاஇன்னும் எதைيُعْلِنُوْنَ‌ؕவெளிப் படுத்துகிறார்கள்اِنَّهٗநிச்சயமாக அவன்لَا يُحِبُّநேசிக்க மாட்டான்الْمُسْتَكْبِرِيْنَ‏பெருமையடிப்ப வர்களை
லா ஜரம அன்னல் லாஹ யஃலமு மா யுஸிர்ரூன வ ம யுஃலினூன்; இன்னஹூ லா யுஹிBப்Bபுல் முஸ்தக்Bபிரீன்
சந்தேகமின்றி அல்லாஹ், அவர்கள் மறைத்து வைத்திருப்பதையும்; அவர்கள் பகிரங்கப்படுத்துவதையும்; நிச்சயமாக அறிவான்; (ஆணவங் கொண்டு) பெருமையடிப்பவர்களை அவன் நிச்சயமாக நேசிப்பதில்லை.
وَاِذَا قِیْلَ لَهُمْ مَّاذَاۤ اَنْزَلَ رَبُّكُمْ ۙ قَالُوْۤا اَسَاطِیْرُ الْاَوَّلِیْنَ ۟ۙ
وَاِذَا قِيْلَகூறப்பட்டால்لَهُمْஅவர்களிடம்مَّاذَاۤஎன்னاَنْزَلَஇறக்கினான்رَبُّكُمْ‌ۙஉங்கள் இறைவன்قَالُـوْۤاகூறினர்اَسَاطِيْرُகட்டுக் கதைகள்الْاَوَّلِيْنَۙ‏முன்னோரின்
வ இதா கீல லஹும் மாதா அன்Zஜல ரBப்Bபுகும் காலூ அஸாதீருல் அவ்வலீன்
“உங்களுடைய இறைவன் எதை இறக்கி வைத்தான்?” என்று (குர்ஆனை குறிப்பிட்டு) அவர்களிடம் கேட்கப்பட்டால், “முன்னோர்களின் கட்டுக்கதைகள்” என்று அவர்கள் (பதில்) கூறுகிறார்கள்.
لِیَحْمِلُوْۤا اَوْزَارَهُمْ كَامِلَةً یَّوْمَ الْقِیٰمَةِ ۙ وَمِنْ اَوْزَارِ الَّذِیْنَ یُضِلُّوْنَهُمْ بِغَیْرِ عِلْمٍ ؕ اَلَا سَآءَ مَا یَزِرُوْنَ ۟۠
لِيَحْمِلُوْۤاஇவர்கள்சுமப்பதற்காகاَوْزَارَهُمْதங்கள் (பாவச்)சுமைகளைكَامِلَةًமுழுமையாகيَّوْمَ الْقِيٰمَةِ‌ۙமறுமை நாளில்وَمِنْஇன்னும் இருந்துاَوْزَارِசுமைகள்الَّذِيْنَஎவர்கள்يُضِلُّوْنَهُمْவழிகெடுக்கின்றனர்/அவர்களைبِغَيْرِஇன்றிعِلْمٍ‌ؕகல்விاَلَاஅறிந்துகொள்ளுங்கள்!سَآءَமிகக் கெட்டதுمَاஎதுيَزِرُوْنَ‏சுமப்பார்கள்
லியஹ்மிலூ அவ்Zஜாரஹும் காமிலத(ன்)ய் யவ்மல் கியாமதி வ மின் அவ்Zஜாரில் லதீன யுளில்லூனஹும் Bபிகய்ரி 'இல்ம்; அலா ஸா'அ மா யZஜிரூன்
கியாம நாளில் அவர்கள், தங்கள் (பாவச்) சுமைகளை முழுமையாக சுமக்கட்டும்; மேலும் அறிவில்லாமல் இவர்கள் எவர்களை வழி கெடுத்தார்களோ, அவர்களுடைய (பாவச்) சுமைகளையும் (சுமக்கட்டும்); இவர்கள் (சுமக்கும்) சுமை மிகவும் கெட்டதல்லவா?.  
قَدْ مَكَرَ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ فَاَتَی اللّٰهُ بُنْیَانَهُمْ مِّنَ الْقَوَاعِدِ فَخَرَّ عَلَیْهِمُ السَّقْفُ مِنْ فَوْقِهِمْ وَاَتٰىهُمُ الْعَذَابُ مِنْ حَیْثُ لَا یَشْعُرُوْنَ ۟
قَدْதிட்டமாகمَكَرَசூழ்ச்சி செய்தனர்الَّذِيْنَஎவர்கள்مِنْ قَبْلِهِمْஅவர்களுக்கு முன்னர்فَاَتَىஆகவே வந்தான்اللّٰهُஅல்லாஹ்بُنْيَانَهُمْகட்டடத்திற்கு/அவர்களின்مِّنَஇருந்துالْقَوَاعِدِஅடித்தளங்கள்فَخَرَّவிழுந்ததுعَلَيْهِمُஅவர்கள் மீதுالسَّقْفُமுகடுمِنْஇருந்துفَوْقِهِمْஅவர்களுக்கு மேல்وَاَتٰٮهُمُஇன்னும் வந்தது/அவர்களுக்குالْعَذَابُவேதனைمِنْ حَيْثُவிதத்தில்لَا يَشْعُرُوْنَ‏அறிய (உணர) மாட்டார்கள்
கத் மகரல் லதீன மின் கBப்லிஹிம் Fப அதல் லாஹு Bபுன்யா னஹும் மினல் கவா'இதி Fபகர்ர 'அலய்ஹிமுஸ் ஸக்Fபு மின் Fபவ்கிஹிம் வ அதாஹுமுல் 'அதாBபு மின் ஹய்து லா யஷ்'உரூன்
நிச்சயமாக, இவர்களுக்கு முன்னர் இருந்தார்களே அவர்களும் (இவ்வாறே) சூழ்ச்சிகள் செய்தார்கள்; அதனால், அல்லாஹ் அவர்களுடைய கட்டிடத்தை அடியோடு பெயர்த்து விட்டான்; ஆகவே அவர்களுக்கு மேலே இருந்து முகடு அவர்கள் மீது விழுந்தது; அவர்கள் அறிந்து கொள்ள முடியாத புறத்திலிருந்து அவர்களுக்கு வேதனையும் வந்தது.
ثُمَّ یَوْمَ الْقِیٰمَةِ یُخْزِیْهِمْ وَیَقُوْلُ اَیْنَ شُرَكَآءِیَ الَّذِیْنَ كُنْتُمْ تُشَآقُّوْنَ فِیْهِمْ ؕ قَالَ الَّذِیْنَ اُوْتُوا الْعِلْمَ اِنَّ الْخِزْیَ الْیَوْمَ وَالسُّوْٓءَ عَلَی الْكٰفِرِیْنَ ۟ۙ
ثُمَّபிறகுيَوْمَ الْقِيٰمَةِமறுமை நாளில்يُخْزِيْهِمْஇழிவு படுத்துவான்/அவர்களைوَيَقُوْلُகூறுவான்اَيْنَஎங்கே?شُرَكَآءِىَஎன் இணைகள்الَّذِيْنَஎவர்கள்كُنْتُمْஇருந்தீர்கள்تُشَآقُّوْنَதர்க்கிப்பீர்கள்فِيْهِمْ‌ؕஅவர்கள் விஷயத்தில்قَالَகூறுவார்(கள்)الَّذِيْنَஎவர்கள்اُوْتُواகொடுக்கப்பட்டனர்الْعِلْمَகல்விاِنَّநிச்சயமாகالْخِزْىَஇழிவுالْيَوْمَஇன்றுوَالسُّوْۤءَஇன்னும் தண்டனைعَلَى الْكٰفِرِيْنَۙ‏நிராகரிப்பவர்கள் மீது
தும்ம யவ்மல் கியாமதி யுக்Zஜீஹிம் வ யகூலு அய்ன ஷுரகா'இயல் லதீன குன்தும் துஷாக்கூன Fபீஹிம்; காலல் லதீன ஊதுல் 'இல்ம இன்னல் கிZஜ்யல் யவ்ம வஸ்ஸூ'அ 'அலல் காFபிரீன்
பின்னர், கியாம நாளில் அவன் அவர்களை இழிவு படுத்துவான்; “எவர்களை நீங்கள் எனக்கு இணையா(ன தெய்வங்களா)க்கி, அவர்களைப்பற்றி (முஃமின்களிடம்) பிணங்கிக் கொண்டிருந்தீர்களோ, அவர்கள் எங்கே?” என (அவர்களிடம்) கேட்பான்; எவர்களுக்குக் கல்வியறிவு கொடுக்கப்பட்டதோ அவர்கள்: “நிச்சயமாக இன்று இழிவும் வேதனையும் காஃபிர்கள் மீது தான்” என்று கூறுவார்கள்.
الَّذِیْنَ تَتَوَفّٰىهُمُ الْمَلٰٓىِٕكَةُ ظَالِمِیْۤ اَنْفُسِهِمْ ۪ فَاَلْقَوُا السَّلَمَ مَا كُنَّا نَعْمَلُ مِنْ سُوْٓءٍ ؕ بَلٰۤی اِنَّ اللّٰهَ عَلِیْمٌۢ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟
الَّذِيْنَஎவர்கள்تَتَوَفّٰٮهُمُஉயிர் கைப்பற்றுகின்றனர்/அவர்களைالْمَلٰۤٮِٕكَةُவானவர்கள்ظَالِمِىْۤதீங்கிழைத்தவர்களாகاَنْفُسِهِمْ‌தங்களுக்குத் தாமேفَاَلْقَوُا السَّلَمَபணிந்து விட்டார்கள்مَا كُنَّاநாங்கள் இருக்கவில்லைنَـعْمَلُசெய்வோம்مِنْ سُوْۤءٍؕஒரு தீமையையும்بَلٰٓىஅவ்வாறல்லاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்عَلِيْمٌۢநன்கறிந்தவன்بِمَاஎவற்றைكُنْتُمْஇருந்தீர்கள்تَعْمَلُوْنَ‏செய்வீர்கள்
அல்லதீன ததவFப் Fபாஹு முல் மலா'இகது ளாலிமீ அன்Fபுஸிஹிம் Fப அல்கவுஸ் ஸலம மா குன்னா னஃமலு மின் ஸூ'; Bபலா இன்னல் லாஹ 'அலீமும் Bபிமா குன்தும் தஃமலூன்
அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்பவர்களாக இருக்கும் நிலையில், மலக்குகள் அவர்களுடைய உயிர்களைக் கைப்பற்றுவார்கள்; அப்போது அவர்கள், “நாங்கள் எந்தவிதமான தீமையும் செய்யவில்லையே!” என்று (கீழ்படிந்தவர்களாக மலக்குகளிடம்) சமாதானம் கோருவார்கள்; “அவ்வாறில்லை! நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை நன்கறிந்தவன்; (என்று மலக்குகள் பதிலளிப்பார்கள்.)
فَادْخُلُوْۤا اَبْوَابَ جَهَنَّمَ خٰلِدِیْنَ فِیْهَا ؕ فَلَبِئْسَ مَثْوَی الْمُتَكَبِّرِیْنَ ۟
فَادْخُلُوْۤاஆகவே நுழையுங்கள்اَبْوَابَவாசல்களில்جَهَنَّمَநரகத்தின்خٰلِدِيْنَநிரந்தரமானவர்களாகفِيْهَا‌ؕஅதில்فَلَبِئْسَகெட்டுவிட்டதுمَثْوَىதங்குமிடம்الْمُتَكَبِّرِيْنَ‏பெருமையடிப்பவர்களின்
Fபத்குலூ அBப்வாBப ஜஹன்னம காலிதீன Fபீஹா FபலBபி'ஸ மத்வல் முதகBப் Bபிரீன்
“ஆகவே, நீங்கள் நரகத்தின் வாயில்களில் புகுந்து, அங்கே என்றென்றும் தங்கியிருங்கள்” (என்றும் மலக்குகள் கூறுவார்கள்; ஆணவங் கொண்டு) பெருமையடித்துக் கொண்டிருந்த இவர்களின் தங்குமிடம் மிகவும் கெட்டது.
وَقِیْلَ لِلَّذِیْنَ اتَّقَوْا مَاذَاۤ اَنْزَلَ رَبُّكُمْ ؕ قَالُوْا خَیْرًا ؕ لِلَّذِیْنَ اَحْسَنُوْا فِیْ هٰذِهِ الدُّنْیَا حَسَنَةٌ ؕ وَلَدَارُ الْاٰخِرَةِ خَیْرٌ ؕ وَلَنِعْمَ دَارُ الْمُتَّقِیْنَ ۟ۙ
وَقِيْلَஇன்னும் கூறப்பட்டதுلِلَّذِيْنَஎவர்களுக்குاتَّقَوْاஅஞ்சினார்கள்مَاذَاۤஎன்ன?اَنْزَلَஇறக்கினான்رَبُّكُمْ‌ؕஉங்கள் இறைவன்قَالُوْاகூறினார்கள்خَيْرًاؕநன்மையைلِّـلَّذِيْنَஎவர்களுக்குاَحْسَنُوْاநல்லறம் புரிந்தனர்فِىْ هٰذِهِஇந்தالدُّنْيَاஉலகில்حَسَنَةٌ‌  ؕநன்மைوَلَدَارُவீடுதான்الْاٰخِرَةِமறுமையின்خَيْرٌ  ؕமிக மேலானதுوَلَنِعْمَமிகச் சிறந்ததுدَارُவீடுالْمُتَّقِيْنَۙ‏அஞ்சுபவர்களின்
வ கீல லில்லதீனத் தகவ் மாதா அன்Zஜல ரBப்Bபுகும்; காலூ கய்ரா; லில்லதீன அஹ்ஸனூ Fபீ ஹாதிஹித் துன்யா ஹஸனஹ்; வ ல தாருல் ஆகிரதி கய்ர்; வ லனிஃம தாருல் முத்தகீன்
பயபக்தியுள்ளவர்களிடம், “உங்களுடைய இறைவன் எதை இறக்கி வைத்தான்?” என்று (குர்ஆனை குறிப்பிட்டு) அவர்களிடம் கேட்கப்பட்டபோது “நன்மையையே (அருளினான்)” என்று அவர்கள் (பதில்) கூறுவார்கள். எவர் அழகான நன்மை புரிந்தார்களோ, அவர்களுக்கு இவ்வுலகிலும் அழகான நன்மையுண்டு; இன்னும், மறுமை வீடானது (அவர்களுக்கு மிக) மேலானதாகவும் இருக்கும், பயபக்தியுடையவர்களுடைய வீடு நிச்சயமாக நேர்த்தியானது!
جَنّٰتُ عَدْنٍ یَّدْخُلُوْنَهَا تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ لَهُمْ فِیْهَا مَا یَشَآءُوْنَ ؕ كَذٰلِكَ یَجْزِی اللّٰهُ الْمُتَّقِیْنَ ۟ۙ
جَنّٰتُசொர்க்கங்கள்عَدْنٍஅத்ன்يَّدْخُلُوْنَهَاஅவர்கள் நுழைவார்கள்/அவற்றில்تَجْرِىْஓடும்مِنْ تَحْتِهَاஅவற்றின் கீழ்الْاَنْهٰرُ‌நதிகள்لَهُمْஅவர்களுக்குفِيْهَاஅதில்مَاஎதைيَشَآءُوْنَ‌ؕநாடுவார்கள்كَذٰلِكَஇவ்வாறுதான்يَجْزِىகூலி கொடுக்கிறான்اللّٰهُஅல்லாஹ்الْمُتَّقِيْنَۙ‏அஞ்சுபவர்களுக்கு
ஜன்னாது 'அத்னி(ன்)ய் யத்குலூனஹா தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு லஹும் Fபீஹா மா யஷா'ஊன்; கதாலிக யஜ்Zஜில் லாஹுல் முத்தகீன்
என்றென்றும் நிலைத்திருக்கக் கூடிய சுவனபதிகளில் அவர்கள் நுழைவார்கள்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; அவர்களுக்கு அங்கே அவர்கள் விரும்புவதெல்லாம் கிடைக்கும். இவ்வாறே பயபக்தியுடையோருக்கு அல்லாஹ் நற்கூலியளிக்கிறான்.
الَّذِیْنَ تَتَوَفّٰىهُمُ الْمَلٰٓىِٕكَةُ طَیِّبِیْنَ ۙ یَقُوْلُوْنَ سَلٰمٌ عَلَیْكُمُ ۙ ادْخُلُوا الْجَنَّةَ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟
الَّذِيْنَ تَتَوَفّٰٮهُمُஎவர்கள்/உயிர்கைப்பற்றுகின்றனர்/அவர்களைالْمَلٰۤٮِٕكَةُவானவர்கள்طَيِّبِيْنَ‌ ۙநல்லவர்களாகيَقُوْلُوْنَகூறுவார்கள்سَلٰمٌஸலாம் (ஈடேற்றம்)عَلَيْكُمُۙஉங்களுக்குادْخُلُواநுழையுங்கள்الْجَـنَّةَசொர்க்கத்தில்بِمَا كُنْتُمْநீங்கள் இருந்ததின் காரணமாகتَعْمَلُوْنَ‏செய்வீர்கள்
அல்லதீன ததவFப் Fபாஹுமுல் மலா'இகது தய்யிBபீன யகூலூன ஸலாமுன் 'அலய் குமுத் குலுல் ஜன்னத Bபிமா குன்தும் தஃமலூன்
(குஃப்ரை விட்டும்) தூயவர்களாக இருக்கும் நிலையில் மலக்குகள் எவருடைய உயிர்களைக் கைப்பற்றுகிறார்களோ அவர்களிடம்: “ஸலாமுன் அலைக்கும்” (“உங்கள் மீது சாந்தி உண்டாவதாக); நீங்கள் செய்து கொண்டிருந்த (நற்) கருமங்களுக்காக சுவனபதியில் நுழையுங்கள்” என்று அம்மலக்குகள் சொல்வார்கள்.
هَلْ یَنْظُرُوْنَ اِلَّاۤ اَنْ تَاْتِیَهُمُ الْمَلٰٓىِٕكَةُ اَوْ یَاْتِیَ اَمْرُ رَبِّكَ ؕ كَذٰلِكَ فَعَلَ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ ؕ وَمَا ظَلَمَهُمُ اللّٰهُ وَلٰكِنْ كَانُوْۤا اَنْفُسَهُمْ یَظْلِمُوْنَ ۟
هَلْ يَنْظُرُوْنَஎதிர்பார்க்கிறார்களா?اِلَّاۤதவிரاَنْ تَاْتِيَهُمُவருவதை / தங்களிடம்الْمَلٰۤٮِٕكَةُவானவர்கள்اَوْ يَاْتِىَஅவர்கள் வருவதுاَمْرُகட்டளைرَبِّكَ‌ؕஉம் இறைவனின்كَذٰلِكَ فَعَلَஇவ்வாறே செய்தனர்الَّذِيْنَஎவர்கள்مِنْ قَبْلِهِمْ‌ؕஅவர்களுக்கு முன்னர்وَمَاதீங்கிழைக்கவில்லைظَلَمَهُمُஅவர்களுக்குاللّٰهُஅல்லாஹ்وَلٰـكِنْஎனினும்كَانُوْۤاஇருந்தனர்اَنْفُسَهُمْதங்களுக்கேيَظْلِمُوْنَ‏தீங்கிழைப்பவர்களாக
ஹல் யன்ளுரூன இல்லா அன் தாதியஹுமுல் மலா'இகது அவ் யாதிய அம்ரு ரBப்Bபிக்; கதாலிக Fப'அலல் லதீன மின் கBப்லிஹிம்; வமா ளலமஹுமுல் லாஹு வ லாகின் கானூ அன்Fபுஸஹும் யள்லிமூன்
(ஆனால் அக்கிரமக்காரர்களோ) தங்களிடம் (உயிர்களைக் கைப்பற்றுவதற்காக) மலக்குகள் வருவதையோ, அல்லது உம் இறைவனுடைய (வேதனை தரும்) கட்டளை வருவதையோ தவிர வேறு எதை அவர்கள் எதிர் பார்க்கின்றனர்? இவர்களுக்கு முன்னிருந்தோரும் இவ்வாறே (அநியாயம்) செய்தார்கள்; இவர்களுக்கு அல்லாஹ் அநியாயம் எதுவும் செய்யவில்லை; ஆனால் அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்கள்.
فَاَصَابَهُمْ سَیِّاٰتُ مَا عَمِلُوْا وَحَاقَ بِهِمْ مَّا كَانُوْا بِهٖ یَسْتَهْزِءُوْنَ ۟۠
فَاَصَابَهُمْஆகவே அடைந்தன/அவர்களைسَيِّاٰتُதீமைகள், தண்டனைகள்مَا عَمِلُوْاஅவர்கள் செய்தவற்றின்وَحَاقَஇன்னும் சூழ்ந்ததுبِهِمْஅவர்களைمَّاஎதுكَانُوْاஇருந்தனர்بِهٖஅதைக் கொண்டுيَسْتَهْزِءُوْنَ‏பரிகசிக்கின்றனர்
Fப அஸாBபஹும் ஸய்யி ஆது மா 'அமிலூ வ ஹாக Bபிஹிம் மா கானூ Bபிஹீ யஸ்தஹ்Zஜி'ஊன்
எனவே, அவர்கள் செய்து கொண்டிருந்த தீமைகளே அவர்களை வந்தடைந்தன; அன்றியும் எதை அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ, அதுவே அவர்களைச் சூழ்ந்து கொண்டது.  
وَقَالَ الَّذِیْنَ اَشْرَكُوْا لَوْ شَآءَ اللّٰهُ مَا عَبَدْنَا مِنْ دُوْنِهٖ مِنْ شَیْءٍ نَّحْنُ وَلَاۤ اٰبَآؤُنَا وَلَا حَرَّمْنَا مِنْ دُوْنِهٖ مِنْ شَیْءٍ ؕ كَذٰلِكَ فَعَلَ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ ۚ فَهَلْ عَلَی الرُّسُلِ اِلَّا الْبَلٰغُ الْمُبِیْنُ ۟
وَقَالَகூறினர்(கள்)الَّذِيْنَஎவர்கள்اَشْرَكُوْاஇணைவைத்தனர்لَوْ شَآءَநாடியிருந்தால்اللّٰهُஅல்லாஹ்مَا عَبَدْنَاவணங்கியிருக்க மாட்டோம்مِنْ دُوْنِهٖஅவனையன்றிمِنْ شَىْءٍஎதையும்نَّحْنُநாங்களும்اٰبَآؤُنَاஎங்கள்وَلَا حَرَّمْنَاஇன்னும் தடுத்திருக்க மாட்டோம்مِنْ دُوْنِهٖஅவனையன்றிمِنْ شَىْءٍ‌ؕஎதையும்كَذٰلِكَஇவ்வாறேفَعَلَசெய்தார்(கள்)الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ‌ۚஇவர்களுக்கு முன்னிருந்தவர்கள்فَهَلْ عَلَ?/மீதுالرُّسُلِதூதர்கள்اِلَّاதவிரالْبَلٰغُஎடுத்துரைப்பதுالْمُبِيْنُ‏தெளிவாக
வ காலல் லதீன அஷ்ரகூ லவ் ஷா'அல் லாஹு ம 'அBபத்னா மின் தூனிஹீ மின் ஷய்'இன் னஹ்னு வ லா ஆBபா'உனா வலா ஹர்ரம்னா மின் தூனிஹீ மின் ஷய்'; கதாலிக Fப'அலல் லதீன மின் கBப்லிஹிம் Fபஹல் 'அலர் ருஸுலி இல்லல் Bபலாகுல் முBபீன்
“அல்லாஹ் நாடியிருந்தால் அவனையன்றி வேறு எந்தப் பொருளையும், நாங்களோ, எங்களுடைய தந்தையர்களோ வணங்கியிருக்கமாட்டோம்; இன்னும் அவனுடைய கட்டளையின்றி எப்பொருளையும் (ஆகாதவை யென்று) விலக்கி வைத்திருக்கவும் மாட்டோம்” என்று முஷ்ரிக்குகள் கூறுகின்றனர். இப்படித்தான் இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் செய்தார்கள்; எனவே (நம்) தூதர்களுக்குத் (தம் தூதுவத்தைத்) தெளிவாக அறிவிப்பதைத் தவிர வேறு ஏதாவது பொறுப்புண்டா? (இல்லை).
وَلَقَدْ بَعَثْنَا فِیْ كُلِّ اُمَّةٍ رَّسُوْلًا اَنِ اعْبُدُوا اللّٰهَ وَاجْتَنِبُوا الطَّاغُوْتَ ۚ فَمِنْهُمْ مَّنْ هَدَی اللّٰهُ وَمِنْهُمْ مَّنْ حَقَّتْ عَلَیْهِ الضَّلٰلَةُ ؕ فَسِیْرُوْا فِی الْاَرْضِ فَانْظُرُوْا كَیْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِیْنَ ۟
وَلَـقَدْதிட்டவட்டமாகبَعَثْنَاஅனுப்பினோம்فِىْ كُلِّ اُمَّةٍஎல்லாசமுதாயங்களில்رَّسُوْلًاஒரு தூதரைاَنِஎன்றுاعْبُدُواவணங்குங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَاجْتَنِبُواஇன்னும் விலகுங்கள், தூரமாகுங்கள்الطَّاغُوْتَ‌ۚஷைத்தானை விட்டுفَمِنْهُمْஅவர்களில்مَّنْஎவர்هَدَىநேர்வழி காட்டினான்اللّٰهُஅல்லாஹ்وَمِنْهُمْஇன்னும் அவர்களில்مَّنْஎவர்حَقَّتْஉறுதியாகி விட்டதுعَلَيْهِஅவர் மீதுالضَّلٰلَةُ‌ ؕவழிகேடுفَسِيْرُوْاஆகவே சுற்றுங்கள்فِىْ الْاَرْضِபூமியில்فَانْظُرُوْاஇன்னும் பாருங்கள்كَيْفَஎவ்வாறுكَانَஇருந்ததுعَاقِبَةُமுடிவுالْمُكَذِّبِيْنَ‏பொய்ப்பிப்பவர்களின்
வ லகத் Bப'அத்னா Fபீ குல்லி உம்மதிர் ரஸூலன் அனிஃBபுதுல் லாஹ வஜ்தனிBபுத் தாகூத Fபமின்ஹும் மன் ஹதல் லாஹு வ மின்ஹும் மன் ஹக்கத் 'அலய்ஹிள் ளலாலஹ்; Fபஸீரூ Fபில் அர்ளி Fபன்ளுரூ கய்Fப கான 'ஆகிBபதுல் முகத்திBபீன்
மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், “அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்” என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; எனவே அ(ந்த சமூகத்த)வர்களில் அல்லாஹ் நேர்வழி காட்டியோரும் இருக்கிறார்கள்; வழிகேடே விதிக்கப்பெற்றோரும் அவர்களில் இருக்கிறார்கள்; ஆகவே நீங்கள் பூமியில் சுற்றுப்பயணம் செய்து, பொய்யர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதைக் கவனியுங்கள்.
اِنْ تَحْرِصْ عَلٰی هُدٰىهُمْ فَاِنَّ اللّٰهَ لَا یَهْدِیْ مَنْ یُّضِلُّ وَمَا لَهُمْ مِّنْ نّٰصِرِیْنَ ۟
اِنْ تَحْرِصْநீர் பேராசைப்பட்டால்عَلٰىமீதுهُدٰٮهُمْஅவர்கள் நேர்வழி காட்டப்படுவதுفَاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்لَا يَهْدِىْநேர்வழி செலுத்த மாட்டான்مَنْஎவரைيُّضِلُّ‌வழிகெடுப்பார்وَمَاஇல்லைلَهُمْஅவர்களுக்குمِّنْ نّٰصِرِيْنَ‏உதவியாளர்களில் எவரும்
இன் தஹ்ரிஸ் 'அலா ஹுதாஹும் Fப இன்னல் லாஹ லா யஹ்தீ மய் யுளில்லு வமா லஹும் மின் னாஸிரீன்
(நபியே!) அவர்கள் நேர்வழி பெற்றிடவேண்டுமென்று நீர் பேராவல் கொண்ட போதிலும், அல்லாஹ் யாரை வழிதவற வைத்தானோ அத்தகையோரை நேர்வழியில் சேர்க்க மாட்டான் - இன்னும் அவர்களுக்கு உதவி செய்வோரும் எவருமில்லை.
وَاَقْسَمُوْا بِاللّٰهِ جَهْدَ اَیْمَانِهِمْ ۙ لَا یَبْعَثُ اللّٰهُ مَنْ یَّمُوْتُ ؕ بَلٰی وَعْدًا عَلَیْهِ حَقًّا وَّلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یَعْلَمُوْنَ ۟ۙ
وَ اَقْسَمُوْاசத்தியம் செய்தனர்بِاللّٰهِஅல்லாஹ் மீதுجَهْدَ اَيْمَانِهِمْ‌ۙஅவர்கள் மிக உறுதியாக சத்தியமிடுதல்لَا يَبْعَثُஎழுப்ப மாட்டான்اللّٰهُஅல்லாஹ்مَنْஎவர்يَّمُوْتُ‌ؕஇறக்கின்றார்بَلٰىஅவ்வாறன்றுوَعْدًاவாக்குعَلَيْهِஅவன் மீதுحَقًّاகடமையானதுوَّلٰـكِنَّஎனினும்اَكْثَرَஅதிகமானவர்(கள்)النَّاسِமக்களில்لَا يَعْلَمُوْنَۙ‏அறியமாட்டார்கள்
வ அக்ஸமூ Bபில்லாஹி ஜஹ்த அய்மானிஹிம் லா யBப்'அதுல் லாஹு மய் யமூத்; Bபலா வஃதன் 'அலய்ஹி ஹக்க(ன்)வ் வ லாகின்ன அக்தரன் னாஸி லா யஃலமூன்
இறந்தவர்களை அல்லாஹ் (உயிர்ப்பித்து) எழுப்ப மாட்டான் என்று அவர்கள் அல்லாஹ்வின் மீது பிரமாணமாகச் சத்தியம் செய்கிறார்கள். அப்படியல்ல! (உயிர் கொடுத்து எழுப்புவதான அல்லாஹ்வின்) வாக்கு மிக்க உறுதியானதாகும்; எனினும் மக்களில் பெரும்பாலோர் இதை அறிந்து கொள்வதில்லை.
لِیُبَیِّنَ لَهُمُ الَّذِیْ یَخْتَلِفُوْنَ فِیْهِ وَلِیَعْلَمَ الَّذِیْنَ كَفَرُوْۤا اَنَّهُمْ كَانُوْا كٰذِبِیْنَ ۟
لِيُبَيِّنَதெளிவுபடுத்துவதற்காகلَهُمُஅவர்களுக்குالَّذِىْஎதைيَخْتَلِفُوْنَமுரண்படுகின்றனர்فِيْهِஅதில்وَ لِيَـعْلَمَஇன்னும் அறிவதற்காகالَّذِيْنَ كَفَرُوْۤاநிராகரித்தவர்கள்اَنَّهُمْநிச்சயமாக அவர்கள்كَانُوْاஇருந்தனர்كٰذِبِيْنَ‏பொய்யர்களாக
லியுBபய்யின லஹுமுல் லதீ யக்தலிFபூன Fபீஹி வ லியஃலமல் லதீன கFபரூ அன்னஹும் கானூ காதிBபீன்
(இவ்வுலகில்) அவர்கள் எவ்விஷயத்தில் பிணங்கி(த் தர்க்கித்து)க் கொண்டிருந்தார்களோ, அதை அவர்களுக்குத் தெளிவு படுத்துவதற்காகவும், காஃபிர்கள் தாம் பொய்யர்களாக இருந்தார்கள் என்பதை அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும் (அல்லாஹ் அவர்களை மறுமையில் உயிர்ப்பிப்பான்).
اِنَّمَا قَوْلُنَا لِشَیْءٍ اِذَاۤ اَرَدْنٰهُ اَنْ نَّقُوْلَ لَهٗ كُنْ فَیَكُوْنُ ۟۠
اِنَّمَا قَوْلُـنَاநம் கூற்றெல்லாம்لِشَىْءٍஒரு பொருளுக்குاِذَاۤநாம் நாடினால்اَرَدْنٰهُஅதைاَنْ نَّقُوْلَநாம் கூறுவதுلَهٗஅதற்குكُنْஆகுفَيَكُوْنُ‏ஆகிவிடும்
இன்னமா கவ்லுனா லிஷய்'இன் இதா அரத்னாஹு அன் னகூல லஹூ குன் Fப யகூன்
ஏனெனில் நாம் ஏதேனும் ஒரு பொருளை (உண்டு பண்ண) நாடினால் நாம் அதற்காகக் கூறுவது, “உண்டாகுக!” என்பது தான். உடனே அது உண்டாகிவிடும்.  
وَالَّذِیْنَ هَاجَرُوْا فِی اللّٰهِ مِنْ بَعْدِ مَا ظُلِمُوْا لَنُبَوِّئَنَّهُمْ فِی الدُّنْیَا حَسَنَةً ؕ وَلَاَجْرُ الْاٰخِرَةِ اَكْبَرُ ۘ لَوْ كَانُوْا یَعْلَمُوْنَ ۟ۙ
وَالَّذِيْنَஎவர்கள்هَاجَرُوْاநாடு துறந்தார்கள்فِى اللّٰهِஅல்லாஹ்விற்காகمِنْۢ بَعْدِபின்புمَا ظُلِمُوْاஅவர்கள் அநீதியிழைக்கப்படுதல்لَـنُبَوِّئَنَّهُمْநிச்சயமாக அமைப்போம்/அவர்களுக்குفِى الدُّنْيَاஇவ்வுலகில்حَسَنَةً‌  ؕஅழகியதைوَلَاَجْرُகூலிதான்الْاٰخِرَةِமறுமையின்اَكْبَرُ‌ۘமிகப் பெரியதுلَوْ كَانُوْا يَعْلَمُوْنَۙ‏அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே!
வல்லதீன ஹாஜரூ Fபில் லாஹி மிம் Bபஃதி மா ளுலிமூ லனுBபவ்வி' அன்னஹும் Fபித்துன்யா ஹஸனத(ன்)வ் வ ல அஜ்ருல் ஆகிரதி அக்Bபர்; லவ் கானூ யஃலமூன்
கொடுமைப்படுத்தப்பட்ட பின்னர், எவர்கள் அல்லாஹ்வுக்காக நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றார்களோ, அவர்களுக்கு, நாம் நிச்சயமாக அழகான தங்குமிடத்தை இவ்வுலகத்தில் கொடுப்போம். இன்னும், அவர்கள் அறிந்து கொண்டார்களேயானால் மறுமையிலுள்ள (நற்) கூலி (இதைவிட) மிகவும் பெரிது;
الَّذِیْنَ صَبَرُوْا وَعَلٰی رَبِّهِمْ یَتَوَكَّلُوْنَ ۟
الَّذِيْنَ صَبَرُوْاபொறுத்தவர்கள்وَعَلٰىமீதேرَبِّهِمْதங்கள் இறைவன்يَتَوَكَّلُوْنَ‏நம்பிக்கை வைப்பார்கள்
அல்லதீன ஸBபரூ வ 'அலா ரBப்Bபிஹிம் யதவக் கலூன்
இவர்கள் தாம் (துன்பங்களைப் பொறுமையுடன்) சகித்துக் கொண்டு, தம் இறைவன் மீது முற்றிலும் சார்ந்து முழு நம்பிக்கை வைப்பவர்கள்.
وَمَاۤ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ اِلَّا رِجَالًا نُّوْحِیْۤ اِلَیْهِمْ فَسْـَٔلُوْۤا اَهْلَ الذِّكْرِ اِنْ كُنْتُمْ لَا تَعْلَمُوْنَ ۟ۙ
وَمَاۤ اَرْسَلْنَاநாம் அனுப்பவில்லைمِنْ قَبْلِكَஉமக்கு முன்னர்اِلَّاதவிரرِجَالًاஆடவர்களைنُّوْحِىْۤவஹீ அறிவிப்போம்اِلَيْهِمْ‌அவர்களுக்குفَسْــٴَــلُوْۤاஆகவே கேளுங்கள்اَهْلَ الذِّكْرِஞானமுடையவர்களைاِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்لَا تَعْلَمُوْنَۙ‏அறியாதவர்களாக
வ மா அர்ஸல்னா மின் கBப்லிக இல்லா ரிஜாலன் னூஹீ இலய்ஹிம்; Fபஸ்'அலூ அஹ்லத் திக்ரி இன் குன்தும் லா தஃலமூன்
(நபியே!) இன்னும் உமக்கு முன்னர் வஹீ கொடுத்து நாம் அவர்களிடம் அனுப்பி வைத்த தூதர்கள் எல்லோரும் ஆடவரே தவிர வேறல்லர்; ஆகவே (அவர்களை நோக்கி) “நீங்கள் (இதனை) அறிந்து கொள்ளாமலிருந்தால். (முந்திய) வேத ஞானம் பெற்றோரிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள்” (என்று கூறுவீராக).
بِالْبَیِّنٰتِ وَالزُّبُرِ ؕ وَاَنْزَلْنَاۤ اِلَیْكَ الذِّكْرَ لِتُبَیِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ اِلَیْهِمْ وَلَعَلَّهُمْ یَتَفَكَّرُوْنَ ۟
بِالْبَيِّنٰتِஅத்தாட்சிகளைக் கொண்டுوَالزُّبُرِ‌ؕஇன்னும் வேதங்கள்وَاَنْزَلْنَاۤஇன்னும் இறக்கினோம்اِلَيْكَஉமக்குالذِّكْرَஞானத்தைلِتُبَيِّنَ(ஏ) தெளிவுபடுத்துவீர்لِلنَّاسِஅம்மக்களுக்காகمَاஎதுنُزِّلَஇறக்கப்பட்டதுاِلَيْهِمْஅவர்களுக்குوَلَعَلَّهُمْ يَتَفَكَّرُوْنَ‏இன்னும் அவர்கள் சிந்திக்க வேண்டும்
Bபில்Bபய்யினாதி வZஜ் ZஜுBபுர்; வ அன்Zஜல்னா இலய்கத் திக்ர லிதுBபய்யின லின்னாஸி மா னுZஜ்Zஜில இலய்ஹிம் வ ல'அல்லஹும் யதFபக்கரூன்
தெளிவான அத்தாட்சிகளையும் வேதங்களையும் (அத்தூதர்களுக்கும் கொடுத்தனுப்பினோம்; நபியே!) மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம்.
اَفَاَمِنَ الَّذِیْنَ مَكَرُوا السَّیِّاٰتِ اَنْ یَّخْسِفَ اللّٰهُ بِهِمُ الْاَرْضَ اَوْ یَاْتِیَهُمُ الْعَذَابُ مِنْ حَیْثُ لَا یَشْعُرُوْنَ ۟ۙ
اَفَاَمِنَஅச்சமற்றுவிட்ட(ன)ரா?الَّذِيْنَஎவர்கள்مَكَرُواசூழ்ச்சி செய்தனர்السَّيِّاٰتِதீமைகளைاَنْ يَّخْسِفَசொருகிக் கொள்வான்اللّٰهُஅல்லாஹ்بِهِمُதங்களைالْاَرْضَபூமியில்اَوْஅல்லதுيَاْتِيَهُمُவரும்/தங்களுக்குالْعَذَابُவேதனைمِنْ حَيْثُவிதத்தில்لَا يَشْعُرُوْنَۙ‏உணர மாட்டார்கள்
அFப அமினல் லதீன மகருஸ் ஸய்யி ஆதி அய் யக்ஸிFபல் லாஹு Bபிஹிமுல் அர்ள அவ் யா தியஹுமுல் 'அதாBபு மின் ஹய்து லா யஷ்'உரூன்
தீமையான சூழ்ச்சிகளைச் செய்யும் அவர்களைப் பூமி விழுங்கும்படி அல்லாஹ் செய்யமாட்டான் என்றோ, அல்லது அவர்கள் அறியாப் புறத்திலிருந்து அவர்களை வேதனை வந்து அடையாதென்றோ அவர்கள் அச்சந்தீர்ந்து இருக்கின்றார்களா?
اَوْ یَاْخُذَهُمْ فِیْ تَقَلُّبِهِمْ فَمَا هُمْ بِمُعْجِزِیْنَ ۟ۙ
اَوْ يَاْخُذَهُمْஅல்லது/அவன்பிடித்துவிடுவதை/அவர்களைفِىْ تَقَلُّبِهِمْபயணத்தில் / அவர்களுடையفَمَا هُمْஅவர்கள் இல்லைبِمُعْجِزِيْنَۙ‏பலவீனப்படுத்துபவர்களாக
அவ் யாகுதஹும் Fபீ தகல்லுBபிஹிம் Fபமா ஹும் Bபி முஃஜிZஜீன்
அல்லது அவர்களின் போக்குவரத்தின்போதே (அல்லாஹ்) அவர்களைப் பிடிக்க மாட்டான் (என்று அச்சமற்றவர்களாக இருக்கிறார்களா? அல்லாஹ் அவ்வாறுசெய்தால் அவனை) அவர்கள் இயலாமலாக்க முடியாது.
اَوْ یَاْخُذَهُمْ عَلٰی تَخَوُّفٍ ؕ فَاِنَّ رَبَّكُمْ لَرَءُوْفٌ رَّحِیْمٌ ۟
اَوْஅல்லதுيَاْخُذَهُمْஅவன் பிடித்துவிடுவதை/அவர்களைعَلٰى تَخَوُّفٍؕகொஞ்சம் குறைத்துفَاِنَّநிச்சயமாகرَبَّكُمْஉங்கள் இறைவன்لَرَءُوْفٌமகா இரக்கமானவன்رَّحِيْمٌ‏மிகக் கருணையாளன்
அவ் யாகுதஹும் 'அலா தகவ்வுFப்; Fப இன்ன ரBப்Bபகும் ல ர'ஊFபுர் ரஹீம்
அல்லது. அவர்கள் அஞ்சிக் கொண்டிருக்கும் பொழுதே (அல்லாஹ்) அவர்களைப் பிடிக்கமாட்டான் (என்று அச்சமற்றவர்களாக இருக்கிறார்களா?) நிச்சயமாக உங்கள் இறைவன் இரக்கமுடையவன்; பெருங் கிருபையுடையவன்.
اَوَلَمْ یَرَوْا اِلٰی مَا خَلَقَ اللّٰهُ مِنْ شَیْءٍ یَّتَفَیَّؤُا ظِلٰلُهٗ عَنِ الْیَمِیْنِ وَالشَّمَآىِٕلِ سُجَّدًا لِّلّٰهِ وَهُمْ دٰخِرُوْنَ ۟
اَوَلَمْ يَرَوْاஅவர்கள் பார்க்கவில்லையா?اِلٰى مَاஎதன் பக்கம்خَلَقَபடைத்தான்اللّٰهُஅல்லாஹ்مِنْ شَىْءٍஒருபொருளையேனும்يَّتَفَيَّؤُاசாய்கின்றனظِلٰلُهٗஅவற்றின் நிழல்கள்عَنِ الْيَمِيْنِவலப்புறமாகوَالشَّمَآٮِٕلِஇன்னும் இடப்புறமாகسُجَّدًاசிரம் பணிந்தவையாகلِّلّٰهِஅல்லாஹ்விற்குوَهُمْஅவைدٰخِرُوْنَ‏மிகப்பணிந்தவை
அவ லம் யரவ் இலா மா கலகல் லாஹு மின் ஷய்'இ(ன்)ய்-யதFபய்ய'உ ளிலாலுஹூ 'அனில் யமீனி வஷ்ஷமா' இலி ஸுஜ்ஜதல் லில்லாஹி வ ஹும் தாகிரூன்
அல்லாஹ் படைத்திருக்கும் பொருட்களில் அவர்கள் எதையுமே (உற்றுப்) பார்க்கவில்லையா? அவற்றின் நிழல்கள் வலமும், இடமுமாக (ஸுஜூது செய்தவையாகச்) சாய்கின்றன; மேலும் அவை பணிந்து (கீழ்படிதலுடன் இவ்வாறு) அல்லாஹ்வுக்கு வழிபடுகின்றன.
وَلِلّٰهِ یَسْجُدُ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ مِنْ دَآبَّةٍ وَّالْمَلٰٓىِٕكَةُ وَهُمْ لَا یَسْتَكْبِرُوْنَ ۟
وَلِلّٰهِஅல்லாஹ்விற்குيَسْجُدُசிரம் பணிகிறார்(கள்)مَا فِى السَّمٰوٰتِவானங்களில் உள்ளவைوَمَا فِى الْاَرْضِஇன்னும் பூமியில்உள்ளவைمِنْ دَآبَّةٍஎல்லா உயிரினங்கள்وَّالْمَلٰۤٮِٕكَةُஇன்னும் வானவர்கள்وَهُمْஇன்னும் அவர்கள்لَا يَسْتَكْبِرُوْنَ‏பெருமையடிப்பதில்லை
வ லில்லாஹி யஸ்ஜுது மா Fபிஸ் ஸமாவாதி வமா Fபில் அர்ளி மின் தாBப்Bபதி(ன்)வ் வல்ம லா'இகது வ ஹும் லா யஸ்தக்Bபிரூன்
வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் - ஜீவராசிகளும், மலக்குகளும் அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்து (சிரம் பணிந்து) வணங்குகின்றன. அவர்கள் (ஆணவங் கொண்டு) பெருமையடிப்பதில்லை.
یَخَافُوْنَ رَبَّهُمْ مِّنْ فَوْقِهِمْ وَیَفْعَلُوْنَ مَا یُؤْمَرُوْنَ ۟
يَخَافُوْنَபயப்படுகின்றனர்رَبَّهُمْதங்கள் இறைவனைمِّنْ فَوْقِهِمْதங்களுக்கு மேலுள்ளوَيَفْعَلُوْنَஇன்னும் செய்கின்றனர்مَاஎதைيُؤْمَرُوْنَ ۩‏ஏவபடுகின்றனர்
யகாFபூன ரBப்Bபஹும் மின் Fபவ்கிஹிம் வ யFப்'அலூன மா யு'மரூன்
அவர்கள் தங்களுக்கு மேலாக இருக்கும் (சர்வ வல்லமையுடைய) தங்கள் இறைவனை பயப்படுகிறார்கள்; இன்னும் தாங்கள் ஏவப்பட்டதை (அப்படியே) செய்கிறார்கள்.  
وَقَالَ اللّٰهُ لَا تَتَّخِذُوْۤا اِلٰهَیْنِ اثْنَیْنِ ۚ اِنَّمَا هُوَ اِلٰهٌ وَّاحِدٌ ۚ فَاِیَّایَ فَارْهَبُوْنِ ۟
وَقَالَகூறுகிறான்اللّٰهُஅல்லாஹ்لَا تَـتَّخِذُوْۤاஎடுத்துக் கொள்ளாதீர்கள்اِلٰهَيْنِஇரு கடவுள்களைاثْنَيْنِ‌ۚஇரண்டுاِنَّمَا هُوَஅவனெல்லாம்اِلٰـهٌகடவுள்وَّاحِدٌ‌ ۚஒருவன்தான்فَاِيَّاىَஆகவே எனக்குفَارْهَبُوْنِ‏பயப்படுங்கள்/என்னை
வ காலல் லாஹு லா தத்த கிதூ இலாஹய்னித் னய்னி இன்னமா ஹுவ இலாஹு(ன்)வ் வாஹித்; Fப இய்யாய Fபர்ஹBபூன்
இன்னும், அல்லாஹ் கூறுகின்றான்; இரண்டு தெய்வங்களை ஏற்படுத்திக்கொள்ளாதீர்கள்; நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) அவன் ஒரே நாயன்தான்! என்னையே நீங்கள் அஞ்சுங்கள்.
وَلَهٗ مَا فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَلَهُ الدِّیْنُ وَاصِبًا ؕ اَفَغَیْرَ اللّٰهِ تَتَّقُوْنَ ۟
وَلَهٗஅவனுக்கேمَا فِى السَّمٰوٰتِவானங்களில் உள்ளவைوَ الْاَرْضِஇன்னும் பூமியில்وَلَهُஇன்னும் அவனுக்கேالدِّيْنُ وَاصِبًا‌ ؕகீழ்ப்படிதல்/ என்றென்றும்اَفَغَيْرَஅல்லாததையா?اللّٰهِஅல்லாஹ்تَـتَّـقُوْنَ‏அஞ்சுகிறீர்கள்
வ லஹூ மா Fபிஸ் ஸமாவாதி வல் அர்ளி வ லஹுத் தீனு வாஸிBபா; அFபகய்ரல் லாஹி தத்தகூன்
வானங்களிலும், பூமியிலும் உள்ளவை(யெல்லாம்) அவனுக்கே (சொந்தமானவை) அவனுக்கே (என்றென்றும்) வழிபாடு உரியதாக இருக்கிறது; (உண்மை இவ்வாறிருக்க) அல்லாஹ் அல்லாதவற்றையா நீங்கள் அஞ்சுகிறீர்கள்?
وَمَا بِكُمْ مِّنْ نِّعْمَةٍ فَمِنَ اللّٰهِ ثُمَّ اِذَا مَسَّكُمُ الضُّرُّ فَاِلَیْهِ تَجْـَٔرُوْنَ ۟ۚ
وَمَاஎதுبِكُمْஉங்களிடம்مِّنْ نّـِعْمَةٍஅருட்கொடையில்فَمِنَ اللّٰهِ‌அல்லாஹ்விடமிருந்துثُمَّபிறகுاِذَا مَسَّكُمُஉங்களுக்கு ஏற்பட்டால்الضُّرُّதுன்பம், தீங்குفَاِلَيْهِஅவனிடமேتَجْئَرُوْنَ‌ۚ‏கதறுகிறீர்கள்
வமா Bபிகும் மின்னிஃமதின் Fபமினல் லாஹி தும்ம இதா மஸ்ஸகுமுள் ளுர்ரு Fப இலய்ஹி தஜ்'அரூன்
மேலும், எந்த நிஃமத் (பாக்கியம்) உங்களிடம் இருந்தாலும் அது அல்லாஹ்விடமிருந்து உள்ளதேயாகும்; பின்னர் ஏதாவது ஒரு துன்பம் உங்களைத் தொட்டு விட்டால் அவனிடமே (அதை நீக்குமாறு பிரலாபித்து) நீங்கள் முறையிடுகிறீர்கள்.
ثُمَّ اِذَا كَشَفَ الضُّرَّ عَنْكُمْ اِذَا فَرِیْقٌ مِّنْكُمْ بِرَبِّهِمْ یُشْرِكُوْنَ ۟ۙ
ثُمَّ اِذَا كَشَفَபிறகு/நீக்கினால்الضُّرَّதுன்பத்தைعَنْكُمْஉங்களை விட்டுاِذَاஅப்போதுفَرِيْقٌஒரு பிரிவினர்مِّنْكُمْஉங்களில்بِرَبِّهِمْதங்கள் இறைவனுக்குيُشْرِكُوْنَۙ‏இணைவைக்கின்றனர்
தும்மா இதா கஷFபள் ளுர்ர 'அன்கும் இதா Fபரீகும் மின்கும் Bபி ரBப்Bபிஹிம் யுஷ்ரிகூன்
பின்னர் அவன் உங்களிடமிருந்து அத்துன்பத்தை நீக்கிவிட்டால், உடனே உங்களில் ஒரு பிரிவினர் தம் இறைவனுக்கே இணை வைக்கின்றனர்.
لِیَكْفُرُوْا بِمَاۤ اٰتَیْنٰهُمْ ؕ فَتَمَتَّعُوْا ۫ فَسَوْفَ تَعْلَمُوْنَ ۟
لِيَكْفُرُوْاஅவர்கள் நிராகரிப்பதற்காகبِمَاۤ اٰتَيْنٰهُمْ‌ؕநாம் அவர்களுக்கு கொடுத்தவற்றைفَتَمَتَّعُوْا‌ஆகவே சுகமனுபவியுங்கள்فَسَوْفَ تَعْلَمُوْنَ‏நீங்கள் அறிவீர்கள்
லியக்Fபுரூ Bபிமா ஆதய்னாஹும்; Fபதமத்த'ஊ, Fபஸவ்Fப தஃலமூன்
நாம் அவர்களுக்கு அளித்துள்ளதை (நன்றியில்லாது) நிராகரிக்கும் வரையில் - ஆகவே (இம்மையில் சிலகாலம்) சுகித்திருங்கள் - பின்னர் (விரைவிலேயே உங்கள் தவற்றை) அறிந்து கொள்வீர்கள்.
وَیَجْعَلُوْنَ لِمَا لَا یَعْلَمُوْنَ نَصِیْبًا مِّمَّا رَزَقْنٰهُمْ ؕ تَاللّٰهِ لَتُسْـَٔلُنَّ عَمَّا كُنْتُمْ تَفْتَرُوْنَ ۟
وَيَجْعَلُوْنَஇன்னும் ஆக்குகின்றனர்لِمَا لَا يَعْلَمُوْنَஅவர்கள் அறியாதவற்றுக்குنَصِيْبًاஒரு பாகத்தைمِّمَّاஇருந்துرَزَقْنٰهُمْ‌ؕகொடுத்தோம்/அவர்களுக்குتَاللّٰهِஅல்லாஹ் மீது சத்தியமாகلَـتُسْـٴَــلُنَّநிச்சயமாக விசாரிக்கப்படுவீர்கள்عَمَّاபற்றிكُنْتُمْஇருந்தீர்கள்تَفْتَرُوْنَ‏இட்டுக்கட்டுகிறீர்கள்
வ யஜ்'அலூன லிமா லா யஃலமூன னஸீBபம் மிம்மா ரZஜக்ன்னாஹும்; தல்லாஹி லதுஸ்'அலுன்னா 'அம்மா குன்தும் தFப்தரூன்
இன்னும், அவர்கள் நாம் அவர்களுக்கு அளித்துள்ளதில் ஒரு பாகத்தைத் தாம் அறியாத (பொய் தெய்வங்களுக்காக) குறிப்பிட்டு வைக்கிறார்கள்; அல்லாஹ்வின் மேல் ஆணையாக! நீங்கள் இட்டுக் கட்டிக்கொண்டிருந்த (இவை) பற்றி நிச்சயமாக கேட்கப்படுவீர்கள்.
وَیَجْعَلُوْنَ لِلّٰهِ الْبَنٰتِ سُبْحٰنَهٗ ۙ وَلَهُمْ مَّا یَشْتَهُوْنَ ۟
وَيَجْعَلُوْنَஇன்னும் ஆக்குகின்றனர்لِلّٰهِஅல்லாஹ்வுக்குالْبَـنٰتِபெண் பிள்ளைகளைسُبْحٰنَهٗ‌ۙஅவன் மிகப் பரிசுத்தமானவன்وَلَهُمْதங்களுக்குمَّاஎதைيَشْتَهُوْنَ‏விரும்புகின்றனர்
வ யஜ்'அலூன லில்லாஹில் Bபனாதி ஸுBப்ஹானஹூ வ லஹும் மா யஷ்தஹூன்
மேலும், அவர்கள் அல்லாஹ்வுக்குப் பெண் மக்களை ஏற்படுத்துகிறார்கள்; அவன் (இவர்கள் கூறுவதிலிருந்து) மகா பரிசுத்தமானவன். ஆனால் அவர்கள் தங்களுக்காக விரும்புவதோ (ஆண் குழந்தைகள்).
وَاِذَا بُشِّرَ اَحَدُهُمْ بِالْاُ ظَلَّ وَجْهُهٗ مُسْوَدًّا وَّهُوَ كَظِیْمٌ ۟ۚ
وَاِذَا بُشِّرَநற்செய்தி கூறப்பட்டால்اَحَدُهُمْஅவர்களில் ஒருவனுக்குبِالْاُنْثٰىபெண் குழந்தையைக் கொண்டுظَلَّஆகிவிட்டதுوَجْهُهٗஅவனுடைய முகம்مُسْوَدًّاகருத்ததாகوَّهُوَஇன்னும் அவன்كَظِيْمٌ‌ۚ‏துக்கப்படுகிறான்
வ இதா Bபுஷ்ஷிர அஹதுஹும் Bபில் உன்தா ளல்ல வஜ்ஹுஹூ முஸ்வத்த(ன்)வ் வ ஹுவ களீம்
அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாராயங் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து விடுகிறது - அவன் கோபமுடையவனாகிறான்.
یَتَوَارٰی مِنَ الْقَوْمِ مِنْ سُوْٓءِ مَا بُشِّرَ بِهٖ ؕ اَیُمْسِكُهٗ عَلٰی هُوْنٍ اَمْ یَدُسُّهٗ فِی التُّرَابِ ؕ اَلَا سَآءَ مَا یَحْكُمُوْنَ ۟
يَتَوَارٰىமறைந்து கொள்கிறான்مِنَ الْقَوْمِமக்களை விட்டுمِنْ سُوْۤءِதீமையினால்مَا بُشِّرَ بِهٖ ؕநற்செய்தி கூறப்பட்டது/தனக்குاَيُمْسِكُهٗவைத்திருப்பதா?/அதைعَلٰى هُوْنٍகேவலத்துடன்اَمْஅல்லதுيَدُسُّهٗபுதைப்பான்/அதைفِى التُّـرَابِ‌ ؕமண்ணில்اَلَاஅறிந்துகொள்ளுங்கள்!سَآءَகெட்டு விட்டதுمَا يَحْكُمُوْنَ‏அவர்கள் தீர்ப்பளிப்பது
யதவாரா மினல் கவ்மிமின் ஸூ'இ மா Bபுஷ்ஷிர Bபிஹ்; அ-யும்ஸிகுஹூ 'அலா ஹூனின் அம் யதுஸ்ஸுஹூ Fபித் துராBப்; அலா ஸா'அ மா யஹ்குமூன்
எதைக் கொண்டு நன்மாராயங் கூறப்பட்டானோ, (அதைத் தீயதாகக் கருதி) அந்தக் கெடுதிக்காக(த் தம்) சமூகத்தாரை விட்டும் ஒளிந்து கொள்கிறான் - அதை இழிவோடு வைத்துக் கொள்வதா? அல்லது அதை (உயிரோடு) மண்ணில் புதைத்து விடுவதா? (என்று குழம்புகிறான்); அவர்கள் (இவ்வாறெல்லாம்) தீர்மானிப்பது மிகவும் கெட்டதல்லவா?
لِلَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ مَثَلُ السَّوْءِ ۚ وَلِلّٰهِ الْمَثَلُ الْاَعْلٰی ؕ وَهُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟۠
لِلَّذِيْنَஎவர்களுக்குلَا يُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்ள மாட்டார்கள்بِالْاٰخِرَةِமறுமையைمَثَلُதன்மைالسَّوْءِ‌ۚகெட்டதுوَلِلّٰهِஇன்னும் அல்லாஹ்விற்கேالْمَثَلُதன்மைالْاَعْلٰى‌ ؕமிக உயர்ந்ததுوَهُوَஅவன்الْعَزِيْزُமகா மிகைத்தவன்الْحَكِيْمُ‏மகா ஞானவான்
லில்லதீன லா யு'மினூன Bபில் ஆகிரதி மதலுஸ் ஸவ்'இ வ லில்லாஹில் மதலுல் அஃலா; வ ஹுவல் 'அZஜீZஜுல் ஹகீம்
எவர்கள் மறுமையின் மீது ஈமான் கொள்ளவில்லையோ அவர்களுக்கே கெட்ட தன்மை இருக்கிறது - அல்லாஹ்வுக்கோ மிக உயர்ந்த தன்மை இருக்கிறது; மேலும் அவன் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.  
وَلَوْ یُؤَاخِذُ اللّٰهُ النَّاسَ بِظُلْمِهِمْ مَّا تَرَكَ عَلَیْهَا مِنْ دَآبَّةٍ وَّلٰكِنْ یُّؤَخِّرُهُمْ اِلٰۤی اَجَلٍ مُّسَمًّی ۚ فَاِذَا جَآءَ اَجَلُهُمْ لَا یَسْتَاْخِرُوْنَ سَاعَةً وَّلَا یَسْتَقْدِمُوْنَ ۟
وَلَوْ يُؤَاخِذُதண்டித்தால்اللّٰهُஅல்லாஹ்النَّاسَமக்களைبِظُلْمِهِمْகுற்றத்தின் காரணமாக/அவர்களுடையمَّا تَرَكَவிட்டிருக்க மாட்டான்عَلَيْهَاஅதன் மீதுمِنْ دَآبَّةٍஓர் உயிரினத்தைوَّلٰـكِنْஎனினும்يُّؤَخِّرُபிற்படுத்துகிறான்هُمْஅவர்களைاِلٰٓىவரைاَجَلٍஒரு தவணைمُّسَمًّى‌ۚகுறிப்பிடப்பட்டதுفَاِذَا جَآءَவந்தால்اَجَلُهُمْதவணை/அவர்களுடையلَا يَسْتَـاْخِرُوْنَபிந்த மாட்டார்கள்سَاعَةً‌ஒரு விநாடிوَّلَا يَسْتَقْدِمُوْنَ‏இன்னும் முந்த மாட்டார்கள்
வ லவ் யு'ஆகிதுல் லாஹுன் னாஸ Bபிளுல்மின்ஹிம் மா தரக 'அலய்ஹா மின் தாBப்Bபதி(ன்)வ் வ லாகி(ன்)ய் யு'அக்கிருஹும் இலா அஜலிம் முஸம்மன் Fப இதா ஜா'அ அஜலுஹும் லா யஸ்தாகிரூன ஸா'அத(ன்)வ் வலா யஸ்தக்திமூன்
மனிதர்கள் செய்யும் அக்கிரமங்களுக்காக அல்லாஹ் அவர்களை உடனுக்குடன் பிடி(த்துத் தண்டி)ப்பதாக இருந்தால் உயிர்ப்பிராணிகளில் ஒன்றையுமே பூமியில் விட்டு வைக்க மாட்டான்; ஆனால், ஒரு குறிப்பிட்ட தவணை வரை அவர்களை(ப் பிடிக்காது) பிற்படுத்துகிறான் - அவர்களுடைய தவணை வந்து விட்டாலோ ஒரு கணமேனும் (தண்டனை பெறுவதில்) அவர்கள் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்.
وَیَجْعَلُوْنَ لِلّٰهِ مَا یَكْرَهُوْنَ وَتَصِفُ اَلْسِنَتُهُمُ الْكَذِبَ اَنَّ لَهُمُ الْحُسْنٰی ؕ لَا جَرَمَ اَنَّ لَهُمُ النَّارَ وَاَنَّهُمْ مُّفْرَطُوْنَ ۟
وَيَجْعَلُوْنَஇன்னும் ஆக்குகின்றனர்لِلّٰهِஅல்லாஹ்விற்குمَاஎதைيَكْرَهُوْنَவெறுக்கின்றனர்وَتَصِفُஇன்னும் வர்ணிக்கின்றனاَلْسِنَـتُهُمُநாவுகள்/அவர்களின்الْـكَذِبَபொய்யைاَنَّநிச்சயமாகلَهُمُதங்களுக்குالْحُسْنٰى‌ؕசொர்க்கம், மிக அழகியதுلَا جَرَمَகண்டிப்பாகاَنَّநிச்சயம்لَهُمُஇவர்களுக்குالنَّارَநரகம்தான்وَ اَنَّهُمْஇன்னும் நிச்சயம் இவர்கள்مُّفْرَطُوْنَ‏விடப்படுபவர்கள்
வ யஜ்'அலூன லில்லாஹி மா யக்ரஹூன வ தஸிFபு அல்ஸினதுஹுமுல் கதிBப அன்ன லஹுமுல் ஹுஸ்னா லா ஜரம அன்ன லஹுமுன் னார வ அன்னஹும் முFப்ரதூன்
(இன்னும்) தாங்கள் விரும்பாதவைகளை (பெண் மக்களை) அல்லாஹ்வுக்கு உண்டென்று (கற்பனையாக) ஏற்படுத்துகிறார்கள். நிச்சயமாகத் தங்களுக்கு (இதனால்) நன்மையே கிட்டுமென அவர்களுடைய நாவுகள் பொய்யுரைக்கின்றன; நிச்சயமாக அவர்களுக்கு (நரக) நெருப்புத் தான் இருக்கிறது; இன்னும், நிச்சயமாக அவர்கள் அதில் முற்படுத்தப்படுவார்கள் என்பதிலும் சந்தேகமில்லை.
تَاللّٰهِ لَقَدْ اَرْسَلْنَاۤ اِلٰۤی اُمَمٍ مِّنْ قَبْلِكَ فَزَیَّنَ لَهُمُ الشَّیْطٰنُ اَعْمَالَهُمْ فَهُوَ وَلِیُّهُمُ الْیَوْمَ وَلَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
تَاللّٰهِஅல்லாஹ் மீது சத்தியமாகلَـقَدْதிட்டவட்டமாகاَرْسَلْنَاۤஅனுப்பினோம்اِلٰٓى اُمَمٍசமுதாயங்களுக்குمِّنْ قَبْلِكَஉமக்கு முன்னர்فَزَيَّنَஅழகாக்கினான்لَهُمُஅவர்களுக்குالشَّيْطٰنُஷைத்தான்اَعْمَالَهُمْஅவர்களுடைய செயல்களைفَهُوَஆகவே அவன்وَلِيُّهُمُஅவர்களுக்குநண்பன்الْيَوْمَஇன்றுوَلَهُمْஇன்னும் அவர்களுக்குعَذَابٌவேதனைاَلِيْمٌ‏துன்புறுத்தக் கூடியது
தல்லாஹி லகத் அர்ஸல்னா இலா உமமிம் மின் கBப்லிக FபZஜய்யன லஹுமுஷ் ஷய்தானு அஃமாலஹும் Fபஹுவ வலிய்யுஹுமுல் யவ்ம வ லஹும் 'அதாBபுன் அலீம்
அல்லாஹ்வின் மீது சத்தியமாக, உமக்கு முன்னிருந்த வகுப்பார்களுக்கும் நாம் (தூதர்களை) அனுப்பிவைத்தோம் - ஆனால் ஷைத்தான் அவர்களுக்கு அவர்களுடைய (தீய) செயல்களையே அழகாக்கி வைத்தான் - ஆகவே இன்றைய தினம் அவர்களுக்கும் அவனே உற்ற தோழனாக இருக்கின்றான் - இதனால் அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையுண்டு.
وَمَاۤ اَنْزَلْنَا عَلَیْكَ الْكِتٰبَ اِلَّا لِتُبَیِّنَ لَهُمُ الَّذِی اخْتَلَفُوْا فِیْهِ ۙ وَهُدًی وَّرَحْمَةً لِّقَوْمٍ یُّؤْمِنُوْنَ ۟
وَمَاۤ اَنْزَلْنَاநாம் இறக்கவில்லைعَلَيْكَஉம்மீதுالْـكِتٰبَஇவ்வேதத்தைاِلَّاதவிரلِتُبَيِّنَநீர் தெளிவு படுத்துவதற்காகلَهُمُஇவர்களுக்குالَّذِىஎதுاخْتَلَـفُوْاதர்க்கித்தார்கள்فِيْهِ‌ۙஅதில்وَهُدًىஇன்னும் நேர்வழிوَّرَحْمَةًஇன்னும் அருளாகلِّـقَوْمٍமக்களுக்குيُّؤْمِنُوْنَ‏நம்பிக்கை கொள்வார்கள்
வ மா அன்Zஜல்னா 'அலய்கல் கிதாBப இல்லா லிதுBபய்யின லஹுமுல் லதிக் தலFபூ Fபீஹி வ ஹுத(ன்)வ் வ ரஹ்மதல் லிகவ்மி(ன்)ய் யு'மினூன்
(நபியே!) அன்றியும், அவர்கள் எ(வ் விஷயத்)தில் தர்க்கித்துக் கொண்டிருந்தார்களோ அதை நீர் தெளிவாக்குவதற்காகவே உம் மீது இவ்வேதத்தை இறக்கினோம்; இன்னும், ஈமான் கொண்டுள்ள மக்களுக்கு (இது) நேரான வழியாகவும், ரஹ்மத்தாகவும் (அருளாகவும்) இருக்கிறது.
وَاللّٰهُ اَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً فَاَحْیَا بِهِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً لِّقَوْمٍ یَّسْمَعُوْنَ ۟۠
وَاللّٰهُஅல்லாஹ்اَنْزَلَஇறக்குகின்றான்مِنَஇருந்துالسَّمَآءِமேகம்مَآءًமழையைفَاَحْيَاஇன்னும் உயிர்ப்பிக்கின்றான்بِهِஅதன் மூலம்الْاَرْضَபூமியைبَعْدَ مَوْتِهَا‌ؕஅது இறந்த பின்னர்اِنَّநிச்சயமாகفِىْ ذٰ لِكَஇதில்لَاٰيَةًஓர் அத்தாட்சிلِّقَوْمٍமக்களுக்குيَّسْمَعُوْنَ‏செவி சாய்க்கின்றார்கள்
வல்லாஹு அன்Zஜல மினஸ் ஸமா'இ மா'அன் Fப அஹ்யா Bபிஹில் அர்ள Bபஃத மவ்திஹா; இன்ன Fபீ தாலிக ல ஆயதல் லிகவ் மி(ன்)ய் யஸ்ம'ஊன்
இன்னும், அல்லாஹ் வானத்திலிருந்து மழையை பொழிய வைத்து, அதைக் கொண்டு உயிரிழந்த பூமியை உயிர் பெறச் செய்கிறான் - நிச்சயமாக செவியேற்கும் மக்களுக்கு இதில் (தக்க) அத்தாட்சி இருக்கிறது.  
وَاِنَّ لَكُمْ فِی الْاَنْعَامِ لَعِبْرَةً ؕ نُسْقِیْكُمْ مِّمَّا فِیْ بُطُوْنِهٖ مِنْ بَیْنِ فَرْثٍ وَّدَمٍ لَّبَنًا خَالِصًا سَآىِٕغًا لِّلشّٰرِبِیْنَ ۟
وَاِنَّநிச்சயமாகلَـكُمْஉங்களுக்குفِىْ الْاَنْعَامِகால்நடைகளில்لَعِبْرَةً‌  ؕஒரு படிப்பினைنُّسْقِيْكُمْபுகட்டுகிறோம்/உங்களுக்குمِّمَّاஎதிலிருந்துفِىْ بُطُوْنِهٖஅதன் வயிறுகளில்مِنْۢ بَيْنِஇடையில்فَرْثٍசானம்وَّدَمٍஇன்னும் இரத்தம்لَّبَنًاபாலைخَالِصًاகலப்பற்றதுسَآٮِٕغًاமதுரமானது, இலகுவாக இறங்கக்கூடியதுلِّلشّٰرِبِيْنَ‏அருந்துபவர்களுக்கு
வ இன்ன லகும் Fபில் அன்'ஆமி ல'இBப்ரஹ்; னுஸ்கீகும் மிம்ம்மா Fபீ Bபுதூனிஹீ மிம் Bபய்னி Fபர்தி(ன்)வ் வ தமில் லBபனன்ன் காலிஸன் ஸா'இகல்லிஷ் ஷாரிBபீன்
நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலும் (தக்க) படிப்பினை இருக்கின்றது; அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இனிமையானதாக (தாராளமாகப்) புகட்டுகிறோம்.
وَمِنْ ثَمَرٰتِ النَّخِیْلِ وَالْاَعْنَابِ تَتَّخِذُوْنَ مِنْهُ سَكَرًا وَّرِزْقًا حَسَنًا ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً لِّقَوْمٍ یَّعْقِلُوْنَ ۟
وَمِنْ ثَمَرٰتِகனிகளிலிருந்துالنَّخِيْلِபேரீச்சை மரத்தின்وَالْاَعْنَابِஇன்னும் திராட்சைகள்تَتَّخِذُوْنَசெய்கிறீர்கள்مِنْهُஅதிலிருந்துسَكَرًاபோதையூட்டக் கூடியதுوَّرِزْقًاஇன்னும் உணவுحَسَنًا ؕநல்லதுاِنَّ فِىْ ذٰ لِكَநிச்சயமாக/இதில்لَاٰيَةًஓர் அத்தாட்சிلِّقَوْمٍமக்களுக்குيَّعْقِلُوْنَ‏சிந்தித்து புரிகின்றார்கள்
வ மின் தமராதின் னகீலி வல் அ'ன்னாBபி தத்தகிதூன மின்ஹு ஸகர(ன்)வ் வ ரிZஜ்கன்ன் ஹஸனா; இன்ன Fபீ தாலிக ல ஆயதல் லிகவ்மி(ன்)ய் யஃகிலூன்
பேரீச்சை, திராட்சை பழங்களிலிருந்து மதுவையும், நல்ல ஆகாரங்களையும் நீங்கள் உண்டாக்குகிறீர்கள்; நிச்சயமாக இதிலும் சிந்திக்கும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.
وَاَوْحٰی رَبُّكَ اِلَی النَّحْلِ اَنِ اتَّخِذِیْ مِنَ الْجِبَالِ بُیُوْتًا وَّمِنَ الشَّجَرِ وَمِمَّا یَعْرِشُوْنَ ۟ۙ
وَاَوْحٰىசெய்தியளித்தான்رَبُّكَஉம் இறைவன்اِلَى النَّحْلِதேனீக்குاَنِஎன்றுاتَّخِذِىْஅமைத்துக்கொள்مِنَ الْجِبَالِமலைகளில்بُيُوْتًاவீடுகளைوَّمِنَ الشَّجَرِஇன்னும் மரங்களில்وَمِمَّا يَعْرِشُوْنَۙ‏இன்னும் அவர்கள் கட்டுகிறவற்றில்
வ அவ்ஹா ரBப்Bபுக இலன்-னஹ்லி அனித் தகிதீ மினல் ஜிBபாலி Bபுயூத(ன்)வ் வ மினஷ் ஷஜரி வ மிம்மா யஃரிஷூன்
உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். “நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக்கொள் (என்றும்),
ثُمَّ كُلِیْ مِنْ كُلِّ الثَّمَرٰتِ فَاسْلُكِیْ سُبُلَ رَبِّكِ ذُلُلًا ؕ یَخْرُجُ مِنْ بُطُوْنِهَا شَرَابٌ مُّخْتَلِفٌ اَلْوَانُهٗ فِیْهِ شِفَآءٌ لِّلنَّاسِ ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً لِّقَوْمٍ یَّتَفَكَّرُوْنَ ۟
ثُمَّபிறகுكُلِىْபுசிمِنْஇருந்துكُلِّஒவ்வொருالثَّمَرٰتِபூக்கள்فَاسْلُكِىْஇன்னும் செல்سُبُلَவழிகளில்رَبِّكِஉனது இறைவனின்ذُلُلًا‌ ؕசுலபமாகيَخْرُجُவெளியேறுகிறதுمِنْۢஇருந்துبُطُوْنِهَاஅதன் வயிறுகள்شَرَابٌஒரு பானம்مُّخْتَلِفٌமாறுபட்டதுاَلْوَانُهٗஅதன் நிறங்கள்فِيْهِஅதில்شِفَآءٌநிவாரணம்لِّلنَّاسِ‌ؕமக்களுக்குاِنَّநிச்சயமாகفِىْ ذٰ لِكَஇதில்لَاٰيَةًஓர் அத்தாட்சிلِّقَوْمٍமக்களுக்குيَّتَفَكَّرُوْنَ‏சிந்திக்கின்றார்கள்
தும்ம்ம குலீ மின் குல்லித் தமராதி Fபஸ்லுகீ ஸுBபுல ரBப்Bபிகி துலுலா; யக்ருஜு மிம் Bபுதூனிஹா ஷராBபும் முக் தலிFபுன் அல்வானுஹூ Fபீஹி ஷிFபா'உல் லின்னாஸ், இன்ன்ன Fபீ தாலிக ல ஆயதல் லிகவ்மி(ன்)ய் யதFபக்கரூன்
“பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்” (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது; அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.
وَاللّٰهُ خَلَقَكُمْ ثُمَّ یَتَوَفّٰىكُمْ ۙ۫ وَمِنْكُمْ مَّنْ یُّرَدُّ اِلٰۤی اَرْذَلِ الْعُمُرِ لِكَیْ لَا یَعْلَمَ بَعْدَ عِلْمٍ شَیْـًٔا ؕ اِنَّ اللّٰهَ عَلِیْمٌ قَدِیْرٌ ۟۠
وَاللّٰهُஅல்லாஹ்خَلَقَكُمْஉங்களைப் படைத்தான்ثُمَّ يَتَوَفّٰٮكُمْ‌ۙபிறகு/உயிர் கைப்பற்றுகிறான்/உங்களைوَمِنْكُمْஇன்னும் உங்களில்مَّنْஎவர்يُّرَدُّதிருப்பப்படுபவர்اِلٰٓىவரைاَرْذَلِஅற்பமானதுالْعُمُرِவயதுلِكَىْஆவதற்காகلَا يَعْلَمَஅறியமாட்டான்بَعْدَபின்புعِلْمٍஅறிதல்شَيْــٴًــا‌ؕஒன்றைاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்عَلِيْمٌநன்கறிந்தவன்قَدِيْرٌ‏பேராற்றலுடையவன்
வல்லாஹு கலககும் தும்ம யதவFப்Fபாகும்; வ மின்கும் ம(ன்)ய்-யு ரத்து இலா அர்தலில் 'உமுரி லிகய் லா யஃலம Bபஃத 'இல்மின் ஷய்'ஆ; இன்னல் லாஹ 'அலீமுன் கதீர்
இன்னும்; உங்களைப்படைத்தவன் அல்லாஹ் தான், பின்னர் அவனே உங்களை மரணிக்கச் செய்கிறான்; கல்வியறிவு பெற்றிருந்தும் (பின்) எதுவுமே அறியாதவர்களைப்போல் ஆகிவிடக் கூடிய மிகத் தளர்ந்த வயோதிகப் பருவம் வரையில் வாழ்ந்திருப்பவர்களும் உங்களில் உண்டு - நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாகவும், பேராற்றல் உடையவனாகவும் இருக்கின்றான்.
وَاللّٰهُ فَضَّلَ بَعْضَكُمْ عَلٰی بَعْضٍ فِی الرِّزْقِ ۚ فَمَا الَّذِیْنَ فُضِّلُوْا بِرَآدِّیْ رِزْقِهِمْ عَلٰی مَا مَلَكَتْ اَیْمَانُهُمْ فَهُمْ فِیْهِ سَوَآءٌ ؕ اَفَبِنِعْمَةِ اللّٰهِ یَجْحَدُوْنَ ۟
وَاللّٰهُஅல்லாஹ்فَضَّلَமேன்மையாக்கினான்بَعْضَكُمْஉங்களில் சிலரைعَلٰى بَعْضٍசிலரை விடفِى الرِّزْقِ‌ۚவாழ்வாதாரத்தில்فَمَاஇல்லைالَّذِيْنَஎவர்கள்فُضِّلُوْاமேன்மையாக்கப்பட்டார்கள்بِرَآدِّىْதிருப்பக் கூடியவர்களாகرِزْقِهِمْவாழ்வாதாரத்தை/தங்கள்عَلٰىமீதுمَاஎவர்கள்مَلَـكَتْசொந்தமாக்கினاَيْمَانُهُمْவலக்கரங்கள்/தங்கள்فَهُمْஅவர்கள்فِيْهِஅதில்سَوَآءٌ‌ ؕசமமானவர்கள்اَفَبِنِعْمَةِஅருளையா?اللّٰهِஅல்லாஹ்வின்يَجْحَدُوْنَ‏நிராகரிக்கின்றனர்
வல்லாஹு Fபள்ளல Bபஃளகும் 'அலா Bபஃளின் Fபிர் ரிZஜ்க்; Fபமல் லதீன Fபுள்ளிலூ Bபிராத்தீ ரிZஜ்கிஹிம் 'அலா மா மலகத் அய்மானுஹும் Fபஹும் Fபீஹி ஸவா'; அFபBபினிஃமதில் லாஹி யஜ்ஹதூன்
அல்லாஹ் உங்களில் சிலரை சிலரைவிட செல்வத்தில் மேன்மைப்படுத்தி இருக்கிறான்; இவ்வாறு மேன்மையாக்கப்பட்டவர்கள்; தங்களுடைய செல்வத்தை தங்கள் வலக்கரங்களுக்கு உட்பட்டு(த் தம் ஆதிக்கத்தில்) இருப்பவர்களிடம் கொடுத்து, அவர்களும் இவர்கள் செல்வத்தில் சமமான உரிமை உள்ளவர்கள் என்று ஆக்கிவிடுவதில்லை; (அவ்வாறிருக்க) அல்லாஹ்வின் அருட்கொடையையா? இவர்கள் மறுக்கின்றனர்.
وَاللّٰهُ جَعَلَ لَكُمْ مِّنْ اَنْفُسِكُمْ اَزْوَاجًا وَّجَعَلَ لَكُمْ مِّنْ اَزْوَاجِكُمْ بَنِیْنَ وَحَفَدَةً وَّرَزَقَكُمْ مِّنَ الطَّیِّبٰتِ ؕ اَفَبِالْبَاطِلِ یُؤْمِنُوْنَ وَبِنِعْمَتِ اللّٰهِ هُمْ یَكْفُرُوْنَ ۟ۙ
وَاللّٰهُஅல்லாஹ்جَعَلَபடைத்தான்لَـكُمْஉங்களுக்காகمِّنْஇருந்துاَنْفُسِكُمْஉங்களில்اَزْوَاجًاமனைவிகளைوَّ جَعَلَஇன்னும் படைத்தான்لَـكُمْஉங்களுக்குمِّنْஇருந்துاَزْوَاجِكُمْஉங்கள் மனைவிகள்بَنِيْنَஆண் பிள்ளைகளைوَحَفَدَةًஇன்னும் பேரன்களைوَّرَزَقَكُمْஇன்னும் உணவளித்தான்/உங்களுக்குمِّنَ الطَّيِّبٰتِ‌ؕநல்லவற்றிலிருந்துاَفَبِالْبَاطِلِ?/பொய்யைيُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்கிறார்கள்وَبِنِعْمَتِஇன்னும் அருட்கொடையைاللّٰهِஅல்லாஹ்வின்هُمْ يَكْفُرُوْنَۙ‏அவர்கள் நிராகரிக்கின்றனர்
வல்லாஹு ஜ'அல லகும் மின் அன்Fபுஸிகும் அZஜ்வாஜ(ன்)வ் வ ஜ'அல லகும் மின் அZஜ்வாஜிகும் Bபனீன வ ஹFபதத(ன்)வ் வ ரZஜககும் மினத் தய்யிBபாத்; அFபBபில் Bபாதிலி யு'மினூன வ Bபினிஃமதில் லாஹி ஹும் யக்க்Fபுரூன்
இன்னும், அல்லாஹ் உங்களுக்காக உங்களிலிருந்தே மனைவியரை ஏற்படுத்தியிருக்கிறான்; உங்களுக்கு உங்கள் மனைவியரிலிருந்து சந்ததிகளையும்; பேரன் பேத்திகளையும் ஏற்படுத்தி, உங்களுக்கு நல்ல பொருட்களிலிருந்து ஆகாரமும் அளிக்கிறான்; அப்படியிருந்தும், (தாமே கற்பனை செய்து கொண்ட) பொய்யானதின் மீது ஈமான் கொண்டு அல்லாஹ்வின் அருட்கொடையை இவர்கள் நிராகரிக்கிறார்களா?
وَیَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا یَمْلِكُ لَهُمْ رِزْقًا مِّنَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ شَیْـًٔا وَّلَا یَسْتَطِیْعُوْنَ ۟ۚ
وَيَعْبُدُوْنَஇன்னும் வணங்குகின்றனர்مِنْ دُوْنِஅன்றிاللّٰهِஅல்லாஹ்مَا لَا يَمْلِكُஎதை/உரிமை பெறாதுلَهُمْஇவர்களுக்குرِزْقًاஉணவளிப்பதுمِّنَஇருந்துالسَّمٰوٰتِவானங்கள்وَالْاَرْضِஇன்னும் பூமிشَيْــٴًــاஒன்றைوَّلَا يَسْتَطِيْعُوْنَ‌ۚ‏இன்னும் ஆற்றல் பெற மாட்டார்கள்
வ யஃBபுதூன மின் தூனில் லாஹி மா லா யம்லிகு லஹும் ரிZஜ்கம் மினஸ் ஸமாவாதி வல் அர்ளி ஷய்'அ(ன்)வ் வலா யஸ்ததீ'ஊன்
வானங்களிலோ பூமியிலோ இவர்களுக்காக எந்த உணவையும் கைவசத்தில் வைத்திருக்காதவைகளையும் (அதற்கு) சக்திபெறாதவைகளையும் அல்லாஹ்வை விட்டுவிட்டு இவர்கள் வணங்குகிறார்கள்.
فَلَا تَضْرِبُوْا لِلّٰهِ الْاَمْثَالَ ؕ اِنَّ اللّٰهَ یَعْلَمُ وَاَنْتُمْ لَا تَعْلَمُوْنَ ۟
فَلَا تَضْرِبُوْاவிவரிக்காதீர்கள்لِلّٰهِஅல்லாஹ்வுக்குالْاَمْثَالَ‌ؕஉதாரணங்களைاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்يَعْلَمُஅறிவான்وَاَنْـتُمْநீங்கள்لَا تَعْلَمُوْنَ‏அறியமாட்டீர்கள்
Fபலா தள்ரிBபூ லில்லாஹில் அம்தால்; இன்னல் லாஹ யஃலமு வ அன்தும் லா தஃலமூன்
ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு உதாரணங்களை கூறாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ்தான் (யாவற்றையும் நன்கு) அறிபவன்; ஆனால் நீங்கள் அறிய மாட்டீர்கள்.
ضَرَبَ اللّٰهُ مَثَلًا عَبْدًا مَّمْلُوْكًا لَّا یَقْدِرُ عَلٰی شَیْءٍ وَّمَنْ رَّزَقْنٰهُ مِنَّا رِزْقًا حَسَنًا فَهُوَ یُنْفِقُ مِنْهُ سِرًّا وَّجَهْرًا ؕ هَلْ یَسْتَوٗنَ ؕ اَلْحَمْدُ لِلّٰهِ ؕ بَلْ اَكْثَرُهُمْ لَا یَعْلَمُوْنَ ۟
ضَرَبَவிவரிக்கிறான்اللّٰهُஅல்லாஹ்مَثَلًاஓர் உதாரணத்தைعَبْدًاஓர் அடிமைمَّمْلُوْكًاசொந்தமானவர்لَّا يَقْدِرُஆற்றல் பெற மாட்டார்عَلٰى شَىْءٍஒன்றுக்கும்وَّمَنْஇன்னும் ஒருவர்رَّزَقْنٰهُவழங்கினோம்/ அவருக்குمِنَّاநம் புறத்திலிருந்துرِزْقًاவாழ்வாதாரத்தைحَسَنًاஅழகியதுفَهُوَஆகவே அவர்يُنْفِقُதர்மம் புரிகிறார்مِنْهُஅதிலிருந்துسِرًّاஇரகசியமாகوَّجَهْرًا‌ؕஇன்னும் வெளிப்படையாகهَلْ يَسْتَوٗنَ‌ؕசமமாவார்களா?اَ لْحَمْدُபுகழ்لِلّٰهِ‌ؕஅல்லாஹ்விற்கேبَلْ اَكْثَرُهُمْஎனினும்/அதிகமானவர்(கள்)/அவர்களில்لَا يَعْلَمُوْنَ‏அறியமாட்டார்கள்
ளரBபல் லாஹு மதலன் 'அBப்தம் மம்ம்லூகல் லா யக்திரு 'அலா ஷய்'இ(ன்)வ் வ மர்ரZஜக்னாஹும் மின்னா ரிZஜ்கன் ஹஸனன் Fபஹுவ யுன்Fபிகு மின்ஹு ஸிர்ர(ன்)வ் வ ஜஹ்ர; ஹல் யஸ்த-வூன்; அல்ஹம்துலில்லாஹ்; Bபல் அக்தருஹும் லா யஃலமூன்
அல்லாஹ் (இருவரை) உதாரணம் கூறுகிறான்: பிறிதொருவனுக்கு உடமையாக்கப்பட்ட எந்தப் பொருளின் மீதும் (அதிகார) உரிமை பெறாத ஓர் அடிமை; மற்றொருவனோ, நம்மிடமிருந்து அவனுக்கு நல்ல உணவு(ம் மற்றும்) பொருள்களும் கொடுத்திருக்கின்றோம்; அவனும் அவற்றிலிருந்து இரகசியமாகவும் பகிரங்கமாகவும் (நம் வழியில்) செலவு செய்கிறான். இவ்விருவரும் சமமாவாரா? அல்ஹம்து லில்லாஹ் (புகழ் எல்லாம் அல்லாஹ்வுக்கே) - என்றாலும் அவர்களில் பெரும் பாலோர் (இதனை) அறிந்து கொள்வதில்லை.
وَضَرَبَ اللّٰهُ مَثَلًا رَّجُلَیْنِ اَحَدُهُمَاۤ اَبْكَمُ لَا یَقْدِرُ عَلٰی شَیْءٍ وَّهُوَ كَلٌّ عَلٰی مَوْلٰىهُ ۙ اَیْنَمَا یُوَجِّهْهُّ لَا یَاْتِ بِخَیْرٍ ؕ هَلْ یَسْتَوِیْ هُوَ ۙ وَمَنْ یَّاْمُرُ بِالْعَدْلِ ۙ وَهُوَ عَلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۟۠
وَضَرَبَஇன்னும் விவரிக்கிறான்اللّٰهُஅல்லாஹ்مَثَلاًஓர் உதாரணத்தைرَّجُلَيْنِஇரு ஆடவர்கள்اَحَدُهُمَاۤஅவ்விருவரில் ஒருவர்اَبْكَمُஊமைلَا يَقْدِرُசக்தி பெறமாட்டார்عَلٰى شَىْءٍஎதையும் (செய்ய)وَّهُوَ كَلٌّஅவர் சுமையாகعَلٰىமீதுمَوْلٰٮهُۙதன் எஜமானர்اَيْنَمَاஅவர் எங்கு அனுப்பினாலும்يُوَجِّهْهُّஅவரைلَا يَاْتِ بِخَيْرٍ‌ؕநன்மையை செய்யமாட்டார்هَلْ يَسْتَوِىْசமமாவார்(களா)?هُوَۙஇவரும்وَمَنْஇன்னும் எவர்يَّاْمُرُஏவுகின்றார்بِالْعَدْلِ‌ۙநீதத்தைக் கொண்டுوَهُوَஇன்னும் அவர்عَلٰى صِرَاطٍவழியில்مُّسْتَقِيْمٍ‏நேரான(து)
வ ளரBபல் லாஹு மதலர் ரஜுலய்னி அஹதுஹுமா அBப்கமு லா யக்திரு 'அலா ஷய்'இ(ன்)வ் வ ஹுவ கல்லுன் 'அலா மவ்லாஹு அய்னமா யுவஜ்ஜிஹ்ஹு லா யாதி Bபிகய்ரின் ஹல் யஸ்தவீ ஹுவ வ ம(ன்)ய்-யாமுரு Bபில்'அத்லி வ ஹுவ 'அலா ஸிராதிம் முஸ்தகீம்
மேலும், அல்லாஹ் இரு மனிதர்களைப் பற்றிய (மற்றும்) ஓர் உதாரணம் கூறுகிறான்: அவ்விருவரில் ஒருவன் ஊமை(யான அடிமை); எந்தப் பொருளின் மீது (உரிமையும்) சக்தியும் அற்றவன்; தன் எஜமானனுக்குப் பெரும் சுமையாகவும் அவன் இருக்கின்றான்; எங்கு அவனை அனுப்பினாலும் அவன் யாதொரு நன்மையும் கொண்டு வர மாட்டான்; மற்றவனோ, தானும் நேர் வழியிலிருந்து, (பிறரையும் நன்மை செய்யுமாறு) நீதியைக் கொண்டு ஏவுகிறான் - இவனுக்கு (முந்தியவன்) சமமாவானா?  
وَلِلّٰهِ غَیْبُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ وَمَاۤ اَمْرُ السَّاعَةِ اِلَّا كَلَمْحِ الْبَصَرِ اَوْ هُوَ اَقْرَبُ ؕ اِنَّ اللّٰهَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
وَلِلّٰهِஅல்லாஹ்வுக்கேغَيْبُமறைவானவைالسَّمٰوٰتِவானங்களில்وَالْاَرْضِ‌ؕஇன்னும் பூமியில்وَمَاۤஇன்னும் இல்லைاَمْرُநிலைالسَّاعَةِ(மறுமை நிகழும்) நேரம்اِلَّاதவிரكَلَمْحِசிமிட்டுவதைப் போல்الْبَصَرِபார்வைاَوْஅல்லதுهُوَஅதுاَقْرَبُ‌ؕமிக நெருக்கமானதுاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்عَلٰىமீதுكُلِّ شَىْءٍஎல்லாவற்றின்قَدِيْرٌ‏பேராற்றலுடையவன்
வ லில்லாஹி கய்Bபுஸ் ஸமாவாதி வல் அர்ள்; வ மா அம்ருஸ் ஸா'அதி இல்லா கலம்ஹில் Bபஸரி அவ் ஹுவ அக்ரBப்; இன்னல் லாஹ 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
மேலும், வானங்களிலும், பூமியிலும் உள்ள இரகசியம் அல்லாஹ்வுக்கே உரியது; ஆகவே, (இறுதித் தீர்ப்புக்குரிய) வேளையின் விஷயம் இமை கொட்டி விழிப்பது போல் அல்லது (அதைவிட) சமீபத்தில் இல்லாமலில்லை; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுள்ளவனாக இருக்கின்றான்.
وَاللّٰهُ اَخْرَجَكُمْ مِّنْ بُطُوْنِ اُمَّهٰتِكُمْ لَا تَعْلَمُوْنَ شَیْـًٔا ۙ وَّجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْاَبْصَارَ وَالْاَفْـِٕدَةَ ۙ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ۟
وَاللّٰهُஅல்லாஹ்اَخْرَجَكُمْவெளிப்படுத்தினான்/உங்களைمِّنْۢ بُطُوْنِவயிறுகளில் இருந்துاُمَّهٰتِكُمْதாய்மார்கள்/உங்கள்لَا تَعْلَمُوْنَஅறியாதவர்களாக (அறிய மாட்டீர்கள்)شَيْئًا ۙஒன்றையும்وَّ جَعَلَஇன்னும் படைத்தான்لَـكُمُஉங்களுக்குالسَّمْعَசெவிகளைوَالْاَبْصٰرَஇன்னும் பார்வைகளைوَالْاَفْـِٕدَةَ‌ ۙஇன்னும் உள்ளங்களைلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏நீங்கள் நன்றி செலுத்துவதற்காக
வல்லாஹு அக்ரஜகும் மிம் Bபுதூனி உம்மஹாதிகும் லா தஃலமூன ஷய்'அ(ன்)வ் வ ஜ'அல லகுமுஸ் ஸம்'அ வல் அBப்ஸார வல் அFப்'இதத ல'அல்லகும் தஷ்குரூன்
உங்கள் மாதாக்களின் வயிறுகளிலிருந்து நீங்கள் ஒன்றுமே அறியாதவர்களாக இருந்த நிலையில் உங்களை அல்லாஹ் வெளிப்படுத்துகிறான்; அன்றியும் உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும், இதயங்களையும் - நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு - அவனே அமைத்தான்.
اَلَمْ یَرَوْا اِلَی الطَّیْرِ مُسَخَّرٰتٍ فِیْ جَوِّ السَّمَآءِ ؕ مَا یُمْسِكُهُنَّ اِلَّا اللّٰهُ ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یُّؤْمِنُوْنَ ۟
اَلَمْ يَرَوْاஅவர்கள் பார்க்கவில்லையா?اِلَى الطَّيْرِபறவைகளைمُسَخَّرٰتٍவசப்படுத்தப்பட்டவையாகفِىْ جَوِّஆகாயத்தில்السَّمَآءِ ؕவானம்مَاதடுக்கவில்லைيُمْسِكُهُنَّஅவற்றைاِلَّاதவிரاللّٰهُ‌ؕஅல்லாஹ்اِنَّநிச்சயமாகفِىْ ذٰ لِكَஇதில்لَاٰيٰتٍ(பல) அத்தாட்சிகள்لِّقَوْمٍமக்களுக்குيُّؤْمِنُوْنَ‏நம்பிக்கை கொள்கிறார்கள்
அலம் யரவ் இலத் தய்ரி முஸக்கராதின் Fபீ ஜவ்விஸ் ஸமா'இ மா யும்ஸிகுஹுன்ன இல்லல் லாஹ்; இன்ன Fபீ தாலிக ல ஆயாதில் லிகவ்மி(ன்)ய் யு'மினூன்
வான(மண்டல)த்தின் (காற்று) வெளியில் (இறை கட்டளைக்குக்) கட்டுப்பட்டு பறக்கும் பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையா? அவற்றை (ஆகாயத்தில்) தாங்கி நிற்பவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை; நிச்சயமாக இதில் ஈமான் கொண்ட மக்களுக்கு(த் தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன.
وَاللّٰهُ جَعَلَ لَكُمْ مِّنْ بُیُوْتِكُمْ سَكَنًا وَّجَعَلَ لَكُمْ مِّنْ جُلُوْدِ الْاَنْعَامِ بُیُوْتًا تَسْتَخِفُّوْنَهَا یَوْمَ ظَعْنِكُمْ وَیَوْمَ اِقَامَتِكُمْ ۙ وَمِنْ اَصْوَافِهَا وَاَوْبَارِهَا وَاَشْعَارِهَاۤ اَثَاثًا وَّمَتَاعًا اِلٰی حِیْنٍ ۟
وَاللّٰهُஅல்லாஹ்جَعَلَபடைத்தான், அமைத்தான்لَـكُمْஉங்களுக்குمِّنْۢ بُيُوْتِكُمْஉங்கள் வீடுகளில்سَكَنًاதங்குவதைوَّجَعَلَஇன்னும் அமைத்தான்لَـكُمْஉங்களுக்குمِّنْஇருந்துجُلُوْدِதோல்கள்الْاَنْعَامِகால்நடைகளின்بُيُوْتًاகூடாரங்களைتَسْتَخِفُّوْنَهَاஎளிதாக்கிக் கொள்கிறீர்கள்/அவற்றைيَوْمَநாள்ظَعْنِكُمْநீங்கள் பயணிப்பதுوَيَوْمَஇன்னும் நாள்اِقَامَتِكُمْ‌ۙநீங்கள் தங்குகின்றوَمِنْ اَصْوَافِهَاஇன்னும் கம்பளிகள் / அவற்றில்وَاَوْبَارِهَاஇன்னும் உரோமங்கள்/அவற்றின்وَاَشْعَارِهَاۤஇன்னும் முடிகள்/அவற்றின்اَثَاثًاசெல்வம், பொருள்وَّمَتَاعًاஇன்னும் சுகமானபயன்பாட்டைاِلٰىவரைحِيْنٍ‏ஒரு காலம்
வல்லாஹு ஜ'அல லகும் மிம் Bபுயூதிகும் ஸகன(ன்)வ் வ ஜ'அல லகும் மின் ஜுலூதில் அன்'ஆமி Bபுயூதன் தஸ்தகிFப் Fபூனஹா யவ்ம ளஃனிகும் வ யவ்ம இகாமதிகும் வ மின் அஸ்வாFபிஹா வ அவ்Bபாரிஹா வ அஷ்'ஆரிஹா அதாத(ன்)வ் வ மதா'அன் இலா ஹீன்
அல்லாஹ் உங்களுக்கு உங்கள் இல்லங்களை அமைதித்தளமாக ஏற்படுத்தியுள்ளான்; உங்கள் பிரயாண நாட்களிலும் (ஊரில்) நீங்கள் தங்கும் நாட்களிலும் (பயன்படுத்த) உங்களுக்கு எளிதாக இருக்கும் (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளின் தோல்களிலிருந்தும் வீடுகளை உங்களுக்கு ஆக்கினான். வெள்ளாட்டின் உரோமங்கள் ஒட்டகையின் உரோமங்கள், செம்மறியாட்டின் உரோமங்கள் ஆகியவற்றிலிருந்தும் உங்களுக்கு ஆடைகளையும் குறிப்பிட்ட காலம் வரை (அவற்றில்) சுகத்தையும் அமைத்துத் தந்திருக்கிறான்.
وَاللّٰهُ جَعَلَ لَكُمْ مِّمَّا خَلَقَ ظِلٰلًا وَّجَعَلَ لَكُمْ مِّنَ الْجِبَالِ اَكْنَانًا وَّجَعَلَ لَكُمْ سَرَابِیْلَ تَقِیْكُمُ الْحَرَّ وَسَرَابِیْلَ تَقِیْكُمْ بَاْسَكُمْ ؕ كَذٰلِكَ یُتِمُّ نِعْمَتَهٗ عَلَیْكُمْ لَعَلَّكُمْ تُسْلِمُوْنَ ۟
وَاللّٰهُஅல்லாஹ்جَعَلَஅமைத்தான்لَـكُمْஉங்களுக்குمِّمَّا خَلَقَதான் படைத்திருப்பவற்றில்ظِلٰلًاநிழல்களைوَّجَعَلَஇன்னும் அமைத்தான்لَـكُمْஉங்களுக்குمِّنَ الْجِبَالِமலைகளில்اَكْنَانًاகுகைகளைوَّجَعَلَஇன்னும் அமைத்தான்لَـكُمْஉங்களுக்குسَرَابِيْلَசட்டைகளைتَقِيْكُمُகாக்கின்றன/உங்களைالْحَـرَّவெப்பத்தை விட்டுوَسَرَابِيْلَஇன்னும் சட்டைகளைتَقِيْكُمْகாக்கின்றன/ உங்களைبَاْسَكُمْ‌ؕஉங்கள் பலமான தாக்குதல்كَذٰلِكَஇவ்வாறுதான்يُتِمُّமுழுமையாக்குகிறான்نِعْمَتَهٗதன் அருளைعَلَيْكُمْஉங்கள் மீதுلَعَلَّكُمْ تُسْلِمُوْنَ‏நீங்கள் முற்றிலும் பணிந்து நடப்பதற்காக
வல்லாஹு ஜ'அல லகும் மிம்மா கலக ளிலால(ன்)வ் வ ஜ'அல லகும் மினல் ஜிBபாலி அக்னான(ன்)வ் வ ஜ'அல லகும் ஸராBபீல தகீகுமுல் ஹர்ர வ ஸராBபீல தகீகும் Bபா'ஸகும்; கதாலிக யுதிம்மு னிஃமதஹூ அலய்கும் ல'அல்லகும் துஸ்லிமூன்
இன்னும் அல்லாஹ் தான் படைத்துள்ளவற்றிலிருந்து உங்களுக்கு நிழல்களையும் ஏற்படுத்தினான்; மலைகளிலிருந்து உங்களுக்கு(த் தங்குமிடங்களாக) குகைகளையும் ஏற்படுத்தினான்; இன்னும் வெப்பத்திலிருந்து உங்களைப் பாதுகாக்கக்கூடிய சட்டைகளையும் உங்களுடைய போரில் உங்களை பாதுகாக்கக்கூடிய கவசங்களையும் உங்களுக்காக அமைத்தான்; நீங்கள் (அவனுக்கு) முற்றிலும் வழிப்பட்டு நடப்பதற்காக, இவ்வாறு தன் அருட்கொடையை உங்களுக்குப் பூர்த்தியாக்கினான்.
فَاِنْ تَوَلَّوْا فَاِنَّمَا عَلَیْكَ الْبَلٰغُ الْمُبِیْنُ ۟
فَاِنْ تَوَلَّوْاஅவர்கள் விலகினால்فَاِنَّمَا عَلَيْكَஉம்மீது எல்லாம்الْبَلٰغُஎடுத்துரைப்பதுதான்الْمُبِيْنُ‏தெளிவாக
Fப இன் தவல்லவ் Fப இன்னமா 'அலய்கல் Bபலாகுல் முBபீன்
எனினும் இவர்கள் (உம்மைப்) புறக்கணித்துத் திரும்பிவிடுவார்களாயின், (நபியே! அதற்காகக் கவலைப்படாதீர்; ஏனெனில்) உம்மீது (கடமையு)ள்ளதெல்லாம் (இறை கட்டளைகளை அவர்களுக்குத்) தெளிவாகச் சேர்ப்பிப்பதுதான்.
یَعْرِفُوْنَ نِعْمَتَ اللّٰهِ ثُمَّ یُنْكِرُوْنَهَا وَاَكْثَرُهُمُ الْكٰفِرُوْنَ ۟۠
يَعْرِفُوْنَஅறிகிறார்கள்نِعْمَتَஅருட்கொடையைاللّٰهِஅல்லாஹ்வின்ثُمَّபிறகுيُنْكِرُوْنَهَاஅதை நிராகரிக்கின்றனர்وَاَكْثَرُஇன்னும் அதிகமானவர்(கள்)هُمُஅவர்களில்الْكٰفِرُوْنَ‏நன்றி கெட்டவர்கள்
யஃரிFபூன னிஃமதல் லாஹி தும்ம யுன்கிரூனஹா வ அக்தருஹுமுல் காFபிரூன்
அல்லாஹ்வின் அருட்கொடைகளை அவர்கள் நன்றாக அறிகிறார்கள்; பின்னர் அதனை அவர்கள் நிராகரிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர் காஃபிர் (நன்றி கெட்டவர்)களாகவே இருக்கின்றனர்.  
وَیَوْمَ نَبْعَثُ مِنْ كُلِّ اُمَّةٍ شَهِیْدًا ثُمَّ لَا یُؤْذَنُ لِلَّذِیْنَ كَفَرُوْا وَلَا هُمْ یُسْتَعْتَبُوْنَ ۟
وَيَوْمَநாளில்نَـبْعَثُஎழுப்புவோம்مِنْஇருந்துكُلِّஒவ்வொருاُمَّةٍசமுதாயம்شَهِيْدًاஒரு சாட்சியாளரைثُمَّபிறகுلَا يُؤْذَنُஅனுமதிக்கப்படாதுلِلَّذِيْنَஎவர்களுக்குكَفَرُوْاநிராகரித்தனர்وَلَا هُمْ يُسْتَعْتَبُوْنَ‏இன்னும் அவர்கள் காரணம் கேட்கப் பட மாட்டார்கள்
வ யவ்ம னBப்'அது மின் குல்லி உம்மதின் ஷஹீதன் தும்ம லா யு'தனு லில்லதீன கFபரூ வலா ஹும் யுஸ்தஃதBபூன்
ஒவ்வொரு சமூகத்தாரிலிருந்தும் ஒரு சாட்சியை நாம் எழுப்பும் (நாளை நினைவூட்டுவீராக; அந்)நாளில் நிராகரிப்பவர்களுக்கு(ப் புகல் கூறுவதற்கு) அனுமதி வழங்கப்படமாட்டாது; (அல்லாஹ்வுக்குப் பொருத்தமானதை செய்து, அவ்வேளை தண்டனைக்குத் தப்பித்துக் கொள்ளவும்) இடங்கொடுக்கப்பட மாட்டாது.
وَاِذَا رَاَ الَّذِیْنَ ظَلَمُوا الْعَذَابَ فَلَا یُخَفَّفُ عَنْهُمْ وَلَا هُمْ یُنْظَرُوْنَ ۟
وَاِذَا رَاَகண்டால்الَّذِيْنَஎவர்கள்ظَلَمُواதீங்கிழைத்தனர்الْعَذَابَவேதனையைفَلَا يُخَفَّفُஇலகுவாக்கப்படாதுعَنْهُمْஅவர்களை விட்டுوَلَا هُمْ يُنْظَرُوْنَ‏இன்னும் அவர்கள்அவகாசம் அளிக்கப் பட மாட்டார்கள்
வ இதா ர அல் லதீன ளலமுல் 'அதாBப Fபலா யுகFப் FபFபு 'அன்ஹும் வலா ஹும் யுன்ளரூன்
அக்கிரமக்காரர்கள் (மறுமையில்) வேதனையைக் (கண்கூடாகப்) பார்க்கும்போது, (தம் வேதனையைக் குறைக்குமாறு எவ்வளவு வேண்டினாலும்) அவர்களுக்கு (வேதனை) இலேசாக்கவும் பட மாட்டாது; அன்றியும் (அவ்வேதனை பெறுவதில்) அவர்கள் தாமதப் படுத்தபடவும் மாட்டார்கள்.
وَاِذَا رَاَ الَّذِیْنَ اَشْرَكُوْا شُرَكَآءَهُمْ قَالُوْا رَبَّنَا هٰۤؤُلَآءِ شُرَكَآؤُنَا الَّذِیْنَ كُنَّا نَدْعُوْا مِنْ دُوْنِكَ ۚ فَاَلْقَوْا اِلَیْهِمُ الْقَوْلَ اِنَّكُمْ لَكٰذِبُوْنَ ۟ۚ
وَ اِذَا رَاَகண்டால்الَّذِيْنَஎவர்கள்اَشْرَكُوْاஇணைவைத்தனர்شُرَكَآءَஇணை தெய்வங்களைهُمْதங்கள்قَالُوْاகூறுவார்கள்رَبَّنَاஎங்கள் இறைவாهٰٓؤُلَاۤءِஇவைشُرَكَآؤُنَاஎங்கள் தெய்வங்கள்الَّذِيْنَஎவர்கள்كُنَّاஇருந்தோம்نَدْعُوْاஅழைப்போம்مِنْ دُوْنِكَ‌ۚஉன்னையன்றிفَاَلْقَوْا اِلَيْهِمُ الْقَوْلَஅதற்கு அவை கூறிவிடுவர்/ இவர்களை நோக்கிاِنَّكُمْநிச்சயமாக நீங்கள்لَـكٰذِبُوْنَ‌ۚ‏பொய்யர்கள்தான்
வ இதா ர அல் லதீன அஷ்ரகூ ஷுரகா'அஹும் காலூ ரBப்Bபன ஹா'உலா'இ ஷுரகா'உனல் லதீன குன்னா னத்'ஊ மின் தூனிக Fப அல்கவ் இலய்ஹிமுல் கவ்ல இன்னகும் லகாதிBபூன்
இன்னும், இணை வைத்தவர்கள் தாங்கள் இணைவைத்தவர்களை (மறுமை நாளில்) பார்த்தார்களாயின் “எங்கள் இறைவனே! நாங்கள் இணைவைத்துக் கொண்டிருந்தவர்கள் இவர்கள்தான். உன்னையன்றி நாங்கள் இவர்களைத் தான் அழைத்துக் கொண்டிருந்தோம்” என்று அவர்கள் கூறுவார்கள்; அதற்கு (அந்தத் தெய்வங்கள், “நாங்கள் தெய்வங்களல்ல) நிச்சயமாக, நீங்கள் பொய்யர்களே” என்னும் சொல்லை அவர்கள் மீது வீசும்.
وَاَلْقَوْا اِلَی اللّٰهِ یَوْمَىِٕذِ لسَّلَمَ وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا یَفْتَرُوْنَ ۟
وَاَلْقَوْاஅவர்கள் விடுவார்கள்اِلَى اللّٰهِஅல்லாஹ்விற்குيَوْمَٮِٕذٍஅந்நாளில்ۨالسَّلَمَ‌பணிந்துوَضَلَّமறைந்தனعَنْهُمْஇவர்களை விட்டுمَّاஎவைكَانُوْاஇருந்தனர்يَفْتَرُوْنَ‏இட்டுக்கட்டுவார்கள்
வ அல்கவ் இலல் லாஹி யவ்ம'இதினிஸ் ஸலம வ ளல்ல 'அன்ஹும் மா கானூ யFப்தரூன்
இன்னும், அந்நாளில் அவர்கள் அல்லாஹ்வுக்கு அடிபணிவார்கள்; பின்னர் இவர்கள் இட்டுக் கட்டிக்கொண்டிருந்தவையெல்லாம் இவர்களை(க் கை) விட்டும் மறைந்து விடும்.
اَلَّذِیْنَ كَفَرُوْا وَصَدُّوْا عَنْ سَبِیْلِ اللّٰهِ زِدْنٰهُمْ عَذَابًا فَوْقَ الْعَذَابِ بِمَا كَانُوْا یُفْسِدُوْنَ ۟
اَ لَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தனர்وَصَدُّوْاஇன்னும் தடுத்தனர்عَنْ سَبِيْلِபாதையை விட்டுاللّٰهِஅல்லாஹ்வுடையزِدْنٰهُمْஅதிகப்படுத்துவோம்/அவர்களுக்குعَذَابًاவேதனையைفَوْقَமேல்الْعَذَابِவேதனைக்குبِمَاஇருந்தனர்كَانُوْاகாரணத்தால்يُفْسِدُوْنَ‏விஷமம்செய்வார்கள்
அல்லதீன கFபரூ வ ஸத்தூ 'அன் ஸBபீலில் லாஹி Zஜித்னாஹும் 'அதாBபன் Fபவ்கல் 'அதாBபி Bபிமா கானூ யுFப்ஸிதூன்
எவர்கள் நிராகரித்துக் கொண்டும், அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்துக்கொண்டும், இருந்தார்களோ அவர்களுக்கு - (பூமியில்) குழப்பம் உண்டாக்கிக் கொண்டிருந்ததற்காக - நாம் வேதனைக்கு மேல் வேதனையை அதிகப்படுத்திக்கொண்டே இருப்போம்.
وَیَوْمَ نَبْعَثُ فِیْ كُلِّ اُمَّةٍ شَهِیْدًا عَلَیْهِمْ مِّنْ اَنْفُسِهِمْ وَجِئْنَا بِكَ شَهِیْدًا عَلٰی هٰۤؤُلَآءِ ؕ وَنَزَّلْنَا عَلَیْكَ الْكِتٰبَ تِبْیَانًا لِّكُلِّ شَیْءٍ وَّهُدًی وَّرَحْمَةً وَّبُشْرٰی لِلْمُسْلِمِیْنَ ۟۠
وَيَوْمَநாளில்نَـبْعَثُநாம் எழுப்புவோம்فِىْ كُلِّஒவ்வொருاُمَّةٍசமுதாயம்شَهِيْدًاஒரு சாட்சியாளரைعَلَيْهِمْஅவர்களுக்கு எதிராகمِّنْஇருந்தேاَنْفُسِهِمْ‌அவர்களில்وَجِئْنَاஇன்னும் வருவோம்بِكَஉம்மைக் கொண்டுشَهِيْدًاசாட்சியாளராகعَلٰىஎதிரானهٰٓؤُلَاۤءِ ؕஇவர்களுக்குوَنَزَّلْنَاஇறக்கினோம்عَلَيْكَஉம்மீதுالْـكِتٰبَவேதத்தைتِبْيَانًاமிக தெளிவுபடுத்தக்கூடியதாகلِّـكُلِّ شَىْءٍஎல்லாவற்றையும்وَّ هُدًىஇன்னும் நேர்வழிகாட்டியாகوَّرَحْمَةًஇன்னும் அருளாகوَّبُشْرٰىஇன்னும் நற்செய்தியாகلِلْمُسْلِمِيْنَ‏முஸ்லிம்களுக்கு
வ யவ்ம னBப்'அது Fபீ குல்லி உம்ம்மதின் ஷஹீதன் 'அலய்ஹிம் மின் அன்Fபுஸிஹிம் வ ஜி'னா Bபிக ஷஹீதன் 'அலா ஹா'உலா'; வ னZஜ்Zஜல்னா 'அலய்கல் கிதாBப திBப்யானல் லிகுல்லி ஷய்'இ(ன்)வ் வ ஹுத(ன்)வ் வ ரஹ்மத(ன்)வ் வ Bபுஷ்ரா லில்முஸ்லிமீன்
இன்னும், ஒவ்வொரு சமூகத்திலும் அ(ந்த சமூகத்த)வர்களிலிருந்தே அவர்களுக்கு எதிர்சாட்சியை அவர்களுக்கு எதிராக, எழுப்பி அந்நாளில், உம்மை இவர்களுக்கு (உம்மை நிராகரிக்க முற்படும் இம்மக்களுக்கு) எதிராகச் சாட்சியாக நாம் கொண்டு வருவோம்; மேலும், இவ்வேதத்தை ஒவ்வொரு பொருளையும் தெளிவாக்குகிறதாகவும், நேர்வழி காட்டியதாகவும், ரஹ்மத்தாகவும், முஸ்லிம்களுக்கு நன்மாராயமாகவும் உம்மீது நாம் இறக்கி வைத்திருக்கிறோம்.  
اِنَّ اللّٰهَ یَاْمُرُ بِالْعَدْلِ وَالْاِحْسَانِ وَاِیْتَآئِ ذِی الْقُرْبٰی وَیَنْهٰی عَنِ الْفَحْشَآءِ وَالْمُنْكَرِ وَالْبَغْیِ ۚ یَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ ۟
اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்يَاْمُرُஏவுகிறான்بِالْعَدْلِநீதம் செலுத்துவதற்குوَالْاِحْسَانِஇன்னும் நல்லறம் புரிதல்وَاِيْتَآىِٕஇன்னும் கொடுப்பதற்குذِى الْقُرْبٰىஉறவினர்களுக்குوَيَنْهٰىஇன்னும் அவன் தடுக்கிறான்عَنِ الْفَحْشَآءِமானக்கேடானவற்றை விட்டுوَالْمُنْكَرِஇன்னும் பாவம்وَالْبَغْىِ‌ۚஇன்னும் அநியாயம்يَعِظُكُمْஉங்களுக்கு உபதேசிக்கிறான்لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ‏நீங்கள் ஞானம் பெறுவதற்காக
இன்னல் லாஹ ய'முரு Bபில் 'அத்லி வல் இஹ்ஸானி வ ஈதா'இ தில் குர்Bபா வ யன்ஹா 'அனில் Fபஹ்ஷா'இ வல் முன்கரி வல்Bபக்-இ' ய'இளுகும் ல'அல்லகும் ததக்கரூன்
நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும், நன்மை செய்யுமாறும், உறவினர்களுக்கு கொடுப்பதையும் கொண்டு (உங்களை) ஏவுகிறான்; அன்றியும், மானக்கேடான காரியங்கள், பாவங்கள், அக்கிரமங்கள் செய்தல் ஆகியவற்றை விட்டும் (உங்களை) விலக்குகின்றான் - நீங்கள் நினைவு கூர்ந்து சிந்திப்பதற்காக, அவன் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறான்.
وَاَوْفُوْا بِعَهْدِ اللّٰهِ اِذَا عٰهَدْتُّمْ وَلَا تَنْقُضُوا الْاَیْمَانَ بَعْدَ تَوْكِیْدِهَا وَقَدْ جَعَلْتُمُ اللّٰهَ عَلَیْكُمْ كَفِیْلًا ؕ اِنَّ اللّٰهَ یَعْلَمُ مَا تَفْعَلُوْنَ ۟
وَ اَوْفُوْاமுழுமையாக நிறைவேற்றுங்கள்بِعَهْدِஒப்பந்தத்தைاللّٰهِஅல்லாஹ்வின்اِذَا عَاهَدْتُّمْநீங்கள்ஒப்பந்தம்செய்தால்وَلَا تَنْقُضُواமுறிக்காதீர்கள்الْاَيْمَانَசத்தியங்களைبَعْدَபின்புتَوْكِيْدِهَاஅவற்றை உறுதிபடுத்துவதுوَقَدْ جَعَلْتُمُஆக்கிவிட்டீர்கள்اللّٰهَஅல்லாஹ்வைعَلَيْكُمْஉங்கள் மீதுكَفِيْلًا‌ ؕபொறுப்பாளனாகاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்يَعْلَمُஅறிவான்مَاஎதைتَفْعَلُوْنَ‏செய்வீர்கள்
வ அவ்Fபூ Bபி அஹ்தில் லாஹி இதா 'ஆஹத்தும் வலா தன்குளுல் அய்மான Bபஃத தவ்கீதிஹா வ கத் ஜ'அல்துமுல் லாஹ 'அலய்கும் கFபீலா; இன்னல் லாஹ யஃலமு மா தFப்'அலூன்
இன்னும், நீங்கள் அல்லாஹ்வின் பெயரால் செய்யும் உடன்படிக்கையை நிறைவேற்றுங்கள்; அல்லாஹ்வை சாட்சியாக வைத்துச் சத்தியம் செய்து, அதனை உறுதிப் படுத்திய பின்னர், அச்சத்தியத்தை முறிக்காதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிவான்.
وَلَا تَكُوْنُوْا كَالَّتِیْ نَقَضَتْ غَزْلَهَا مِنْ بَعْدِ قُوَّةٍ اَنْكَاثًا ؕ تَتَّخِذُوْنَ اَیْمَانَكُمْ دَخَلًا بَیْنَكُمْ اَنْ تَكُوْنَ اُمَّةٌ هِیَ اَرْبٰی مِنْ اُمَّةٍ ؕ اِنَّمَا یَبْلُوْكُمُ اللّٰهُ بِهٖ ؕ وَلَیُبَیِّنَنَّ لَكُمْ یَوْمَ الْقِیٰمَةِ مَا كُنْتُمْ فِیْهِ تَخْتَلِفُوْنَ ۟
وَلَا تَكُوْنُوْاஆகிவிடாதீர்கள்كَالَّتِىْஎவள்/போன்றுنَقَضَتْபிரித்தாள்غَزْلَهَاதான் நெய்த நூலைمِنْۢ بَعْدِ قُوَّةٍபின்பு/உறுதி பெறுதல்اَنْكَاثًا ؕதிரிகளாகتَتَّخِذُوْنَஆக்கிக்கொள்கிறீர்களா?اَيْمَانَكُمْஉங்கள் சத்தியங்களைدَخَلًاۢஏமாற்றமாக, வஞ்சகமாகبَيْنَكُمْஉங்களுக்கிடையில்اَنْ تَكُوْنَஇருப்பதற்காகاُمَّةٌஒரு சமுதாயம்هِىَஅதுاَرْبٰىபலம்வாய்ந்தவர்களாகمِنْவிடاُمَّةٍ‌ ؕஒரு சமுதாயத்தைاِنَّمَا يَبْلُوْكُمُநிச்சயமாக சோதிக்கிறான் / உங்களைاللّٰهُஅல்லாஹ்بِهٖ ؕஇதன் மூலம்وَلَيُبَيِّنَنَّநிச்சயம் தெளிவுபடுத்துவான்لَـكُمْஉங்களுக்குيَوْمَ الْقِيٰمَةِமறுமை நாளில்مَاஎதைكُنْـتُمْஇருந்தீர்கள்فِيْهِஅதில்تَخْتَلِفُوْنَ‏தர்க்கிப்பீர்கள்
வ லா தகூனூ கல்லதீ னகளத் கZஜ்லஹா மிம் Bபஃதி குவ்வதின் அன்காதா; தத்தகிதூன அய்மானகும் தகலம் Bபய்னகும் அன் தகூன உம்மதுன் ஹிய அர்Bபா மின் உம்மஹ்; இன்ன்னமா யBப்லூகுமுல் லாஹு Bபிஹ்; வ ல யுBபய்யினன்ன லகும் யவ்மல் கியாமதி மா குன்தும் Fபீஹி தக்தலிFபூன்
நீங்கள் (சத்தியத்தை முறிக்கும் இவ்விஷயத்தில் மதிகெட்ட) ஒரு பெண்ணுக்கு ஒப்பாகி விடாதீர்கள் - அவள் நூலை நூற்று நன்கு முறுக்கேற்றிய பிறகு, தானே அதைத் (தறித்து) துண்டு துண்டாக்கி விட்டாள்; ஒரு சமூகத்தார் மற்றொரு சமூகத்தாரை விட அதிகமானவர்களாக இருக்கிறார்கள் என்னும் காரணத்தால் நீங்கள் உங்கள் சத்தியங்களை உங்களுக்கிடையில் ஏமாற்றுவதற்கு சாதனங்களாக்கிக் கொள்ளாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் உங்களைச் சோதிப்பதெல்லாம் இதன் மூலமாகத்தான். இன்னும் நீங்கள் எ(வ் விஷயத்)தில் பேதப்பட்டுக் கொண்டிருந்தீர்களோ, (அதனை) அவன் உங்களுக்கு கியாமநாளில் நிச்சயமாகத் தெளிவாக்குவான்.
وَلَوْ شَآءَ اللّٰهُ لَجَعَلَكُمْ اُمَّةً وَّاحِدَةً وَّلٰكِنْ یُّضِلُّ مَنْ یَّشَآءُ وَیَهْدِیْ مَنْ یَّشَآءُ ؕ وَلَتُسْـَٔلُنَّ عَمَّا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟
وَلَوْ شَآءَநாடியிருந்தால்اللّٰهُஅல்லாஹ்لَجَـعَلَكُمْஉங்களை ஆக்கியிருப்பான்اُمَّةًஒரு சமுதாயமாகوَّاحِدَةًஒரேوَّلٰـكِنْஎனினும்يُّضِلُّவழிகெடுக்கின்றான்مَنْஎவரைيَّشَآءُநாடுகின்றான்وَيَهْدِىْஇன்னும் நேர்வழி செலுத்துகின்றான்مَنْ يَّشَآءُ‌ ؕஎவரை/நாடுகின்றான்وَلَـتُسْــٴَــلُنَّநிச்சயம் விசாரிக்கப்படுவீர்கள்عَمَّاஎதைப்பற்றிكُنْتُمْஇருந்தீர்கள்تَعْمَلُوْنَ‏செய்வீர்கள்
வ லவ் ஷா'அல் லாஹு லஜ'அலகும் உம்ம்மத(ன்)வ் வாஹிதத(ன்)வ் வ லாகி(ன்)ய் யுளில்லு ம(ன்)ய்-யஷா'உ வ யஹ்தீ ம(ன்)ய்-யஷா'; வ லதுஸ்'அலுன்ன 'அம்மா குன்தும் தஃமலூன்
மேலும், அல்லாஹ் நாடியிருந்தால் உங்களை ஒரே சமுதாயத்தவராய் ஆக்கியிருப்பான்; என்றாலும் தான் நாடியவர்களை வழி கேட்டிலே விட்டு வைக்கிறான் - இன்னும் தான் நாடியவர்களை நேர் வழியில் சேர்ப்பான்; நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி நிச்சயமாக (மறுமையில்) நீங்கள் கேட்கப்படுவீர்கள்.
وَلَا تَتَّخِذُوْۤا اَیْمَانَكُمْ دَخَلًا بَیْنَكُمْ فَتَزِلَّ قَدَمٌ بَعْدَ ثُبُوْتِهَا وَتَذُوْقُوا السُّوْٓءَ بِمَا صَدَدْتُّمْ عَنْ سَبِیْلِ اللّٰهِ ۚ وَلَكُمْ عَذَابٌ عَظِیْمٌ ۟
وَلَا تَتَّخِذُوْۤاஆக்கிக் கொள்ளாதீர்கள்اَيْمَانَكُمْஉங்கள் சத்தியங்களைدَخَلًاۢஏமாற்றமாகبَيْنَكُمْஉங்களுக்கு மத்தியில்فَتَزِلَّசருகிவிடும்قَدَمٌۢஒரு பாதம்بَعْدَபின்புثُبُوْتِهَاஅது நிலைபெறுதல்وَتَذُوْقُواஇன்னும் அனுபவிப்பீர்கள்السُّوْۤءَதுன்பத்தைبِمَا صَدَدْتُّمْநீங்கள் தடுத்த காரணத்தால்عَنْ سَبِيْلِபாதையை விட்டுاللّٰهِ‌ۚஅல்லாஹ்வின்وَ لَـكُمْஇன்னும் உங்களுக்குعَذَابٌஒரு வேதனைعَظِيْمٌ‏மகத்தானது
வ லா தத்தகிதூ அய்மானகும் தகலம் Bபய்னகும் FபதZஜில்ல கதமும் Bபஃத துBபூதிஹா வ ததூகுஸ் ஸூ'அ Bபிம ஸதத்தும் 'அன் ஸBபீலில் லாஹி வ லகும் 'அதாBபுன் 'அளீம்
நீங்கள் உங்கள் சத்தியங்களை உங்களுக்கிடையில் (சதி, துரோகம்) ஆகியவற்றுக்குக் காரணமாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்; (அவ்வாறு செய்வதால்) நிலை பெற்ற (உங்களுடைய) பாதம் சறுகி விடும்; அன்றியும், நீங்கள் அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களைத்) தடுத்துக்கொண்டிருந்த காரணத்தால், (இம்மையில் பெருந்) துன்பத்தை அனுபவிக்க நேரிடும்; (மறுமையிலும்) உங்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு.
وَلَا تَشْتَرُوْا بِعَهْدِ اللّٰهِ ثَمَنًا قَلِیْلًا ؕ اِنَّمَا عِنْدَ اللّٰهِ هُوَ خَیْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ ۟
وَلَا تَشْتَرُوْاவாங்காதீர்கள்بِعَهْدِஒப்பந்தத்திற்கு பகரமாகاللّٰهِஅல்லாஹ்வின்ثَمَنًاஒரு விலையைقَلِيْلًا‌ ؕசொற்பமானதுاِنَّمَاநிச்சயமாக/எதுعِنْدَ اللّٰهِஅல்லாஹ்விடத்தில்هُوَஅதுخَيْرٌமிக மேலானதுلَّـكُمْஉங்களுக்குاِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்تَعْلَمُوْنَ‏அறிவீர்கள்
வ லா தஷ்தரூ Bபி 'அஹ்தில் லாஹி தமனன் கலீலா; இன்னமா 'இன்தல் லாஹி ஹுவ கய்ருல் லகும் இன் குன்தும் தஃலமூன்
இன்னும், அல்லாஹ்விடம் செய்து கொண்ட வாக்குறுதியை அற்ப விலைக்கு நீங்கள் விற்று விடாதீர்கள்; நீங்கள் அறிந்தவர்களாக இருப்பின், அல்லாஹ்விடம் இருப்பதுதான் உங்களுக்கு மிகவும் மேலானதாக இருக்கும்.
مَا عِنْدَكُمْ یَنْفَدُ وَمَا عِنْدَ اللّٰهِ بَاقٍ ؕ وَلَنَجْزِیَنَّ الَّذِیْنَ صَبَرُوْۤا اَجْرَهُمْ بِاَحْسَنِ مَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
مَاஎதுعِنْدَكُمْஉங்களிடம்يَنْفَدُ‌தீர்ந்துவிடும்وَمَاஇன்னும் எதுعِنْدَ اللّٰهِஅல்லாஹ்விடம்بَاقٍؕநிரந்தரமானவைوَلَـنَجْزِيَنَّநிச்சயமாக கூலி கொடுப்போம்الَّذِيْنَஎவர்கள்صَبَرُوْۤاபொறுத்தனர்اَجْرَهُمْஅவர்களின் கூலியைبِاَحْسَنِமிக அழகிய முறையில்مَاஎவைكَانُوْاஇருந்தனர்يَعْمَلُوْنَ‏செய்வார்கள்
மா 'இன்தகும் யன்Fபது வமா 'இன்தல் லாஹி Bபாக்; வ லனஜ்Zஜியன்னல் லதீன ஸBபரூ அஜ்ஜ்ரஹும் Bபி அஹ்ஸனி மா கானூ யஃமலூன்
உங்களிடம் இருப்பவை எல்லாம் தீர்ந்துவிடும். அல்லாஹ்விடம் இருப்பதே (அழியாது என்றென்றும்) நிலைத்திருக்கும் - எவர்கள் பொறுமையுடன் (கஷ்டங்களைச்) சகித்துக் கொள்கிறார்களோ, அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம்.
مَنْ عَمِلَ صَالِحًا مِّنْ ذَكَرٍ اَوْ اُ وَهُوَ مُؤْمِنٌ فَلَنُحْیِیَنَّهٗ حَیٰوةً طَیِّبَةً ۚ وَلَنَجْزِیَنَّهُمْ اَجْرَهُمْ بِاَحْسَنِ مَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
مَنْஎவர்கள்عَمِلَசெய்தார்(கள்)صَالِحًـاநல்லதைمِّنْஇருந்துذَكَرٍஆண்கள்اَوْஅல்லதுاُنْثٰىபெண்கள்وَهُوَஅவர்(கள்)مُؤْمِنٌநம்பிக்கை கொண்டவர்(களாக)فَلَـنُحْيِيَنَّهٗநிச்சயம் வாழச்செய்வோம்/அவர்களைحَيٰوةًவாழ்க்கைطَيِّبَةً‌ ۚநல்ல(து)وَلَـنَجْزِيَـنَّهُمْநிச்சயம் கொடுப்போம்/அவர்களுக்குاَجْرَهُمْஅவர்களின் கூலியைبِاَحْسَنِமிக அழகிய முறையில்مَاஎவைكَانُوْاஇருந்தனர்يَعْمَلُوْنَ‏செய்வார்கள்
மன் 'அமில ஸாலிஹம் மின் தகரின் அவ் உன்தா வ ஹுவ மு'மினுன் Fபலனுஹ்யியன்னஹூ ஹயாதன் தய்இயிBபத(ன்)வ் வ லனஜ்Zஜி யன்ன்னஹும் அஜ்ரஹும் Bபி அஹ்ஸனி மா கானூ யஃமலூன்
ஆணாயினும், பெண்ணாயினும் முஃமினாக இருந்து யார் (சன்மார்க்கத்திற்கு இணக்கமான) நற் செயல்களைச் செய்தாலும், நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) மணமிக்க தூய வாழ்க்கையில் வாழச் செய்வோம்; இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம்.
فَاِذَا قَرَاْتَ الْقُرْاٰنَ فَاسْتَعِذْ بِاللّٰهِ مِنَ الشَّیْطٰنِ الرَّجِیْمِ ۟
فَاِذَا قَرَاْتَநீர் ஓதினால்الْقُرْاٰنَகுர்ஆனைفَاسْتَعِذْபாதுகாவல் கோருங்கள்بِاللّٰهِஅல்லாஹ்விடம்مِنَவிட்டுالشَّيْطٰنِஷைத்தானைالرَّجِيْمِ‏விரட்டப்பட்டவன்
Fப இதா கர தல் குர்'ஆன Fபஸ்த'இத் Bபில்லாஹி மினஷ்ஹ் ஷய் தானிர் ரஜீம்
மேலும் (நபியே!) நீர் குர்ஆனை ஓதுவீராயின் (முன்னதாக) வெருட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் காவல் தேடிக்கொள்வீராக.
اِنَّهٗ لَیْسَ لَهٗ سُلْطٰنٌ عَلَی الَّذِیْنَ اٰمَنُوْا وَعَلٰی رَبِّهِمْ یَتَوَكَّلُوْنَ ۟
اِنَّهٗநிச்சயமாக அவன்لَـيْسَஇல்லைلَهٗஅவனுக்குسُلْطٰنٌஅதிகாரம்عَلَىமீதுالَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்கள்وَعَلٰىஇன்னும் மீதுرَبِّهِمْதங்கள் இறைவன்يَتَوَكَّلُوْنَ‏நம்பிக்கை வைப்பார்கள்
இன்னஹூ லய்ஸ லஹூ ஸுல்தானுன் 'அலல் லதீன ஆமனூ வ 'அலா ரBப்Bபிஹிம் யதவக்கலூன்
எவர்கள் ஈமான் கொண்டு தன் இறைவனை முற்றிலும் சார்ந்திருக்கிறார்களோ அவர்கள் மீது நிச்சயமாக (ஷைத்தானுக்கு) எவ்வித அதிகாரமுமில்லை.
اِنَّمَا سُلْطٰنُهٗ عَلَی الَّذِیْنَ یَتَوَلَّوْنَهٗ وَالَّذِیْنَ هُمْ بِهٖ مُشْرِكُوْنَ ۟۠
اِنَّمَا سُلْطٰنُهٗஅவனுடைய அதிகாரமெல்லாம்عَلَىமீதுالَّذِيْنَஎவர்கள்يَتَوَلَّوْنَهٗநட்புவைப்பார்கள்/ அவனுடன்وَالَّذِيْنَஇன்னும் எவர்கள்هُمْஅவர்கள்بِهٖஅவனுக்குمُشْرِكُوْنَ‏இணைவைப்பவர்கள்
இன்ன்னமா ஸுல்தானுஹூ 'அலல் லதீன யதவல்லவ்னஹூ வல்லதீன ஹும் Bபிஹீ முஷ்ரிகூன்
திடனாக அவனுடைய அதிகாரமெல்லாம், அவனைக் காரியகர்த்தனாக்கிக் கொள்கிறவர்கள் மீதும், அல்லாஹ்வுக்கு இணைவைத்தார்களே அவர்கள் மீதும்தான் (செல்லும்).  
وَاِذَا بَدَّلْنَاۤ اٰیَةً مَّكَانَ اٰیَةٍ ۙ وَّاللّٰهُ اَعْلَمُ بِمَا یُنَزِّلُ قَالُوْۤا اِنَّمَاۤ اَنْتَ مُفْتَرٍ ؕ بَلْ اَكْثَرُهُمْ لَا یَعْلَمُوْنَ ۟
وَاِذَا بَدَّلْنَاۤநாம் மாற்றினால்اٰيَةًஒரு வசனத்தைمَّكَانَஇடத்தில்اٰيَةٍ‌ۙமற்றொரு வசனத்தின்وَّ اللّٰهُஅல்லாஹ்اَعْلَمُமிக அறிந்தவன்بِمَا يُنَزِّلُதான் இறக்குவதைقَالُوْۤاகூறுகின்றனர்اِنَّمَاۤ اَنْتَநீரெல்லாம்مُفْتَرٍؕஇட்டுக்கட்டுபவர்بَلْமாறாகاَكْثَرُهُمْஅதிகமானவர்(கள்)/ இவர்களில்لَا يَعْلَمُوْنَ‏அறியமாட்டார்கள்
வ இதா Bபத்தல்னா ஆயதம் மகான ஆயதி(ன்)வ் வல் லாஹு அஃலமு Bபிமா யுனZஜ்Zஜிலு காலூ இன்னமா அன்த முFப்தர்; Bபல் அக்தருஹும் லா யஃலமூன்
(நபியே!) நாம் ஒரு வசனத்தை மற்றொரு வசனத்தின் இடத்தில் மாற்றினால், (உம்மிடம்) “நிச்சயமாக நீர் இட்டுக்கட்டுபவராக இருக்கின்றீர்” என்று அவர்கள் கூறுகிறார்கள்: எ(ந்த நேரத்தில், எ)தை இறக்க வேண்டுமென்பதை அல்லாஹ்வே நன்கறிந்தவன், எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இவ்வுண்மையை) அறிய மாட்டார்கள்.
قُلْ نَزَّلَهٗ رُوْحُ الْقُدُسِ مِنْ رَّبِّكَ بِالْحَقِّ لِیُثَبِّتَ الَّذِیْنَ اٰمَنُوْا وَهُدًی وَّبُشْرٰی لِلْمُسْلِمِیْنَ ۟
قُلْகூறுவீராகنَزَّلَهٗஇறக்கினார்/இதைرُوْحُ الْقُدُسِரூஹூல் குதுஸ்مِنْஇருந்துرَّبِّكَஉம் இறைவன்بِالْحَـقِّஉண்மையைக் கொண்டுلِيُثَبِّتَஉறுதிப்படுத்துவதற்காகالَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்وَهُدًىஇன்னும் நேர்வழியாகوَّبُشْرٰىஇன்னும் நற்செய்தியாகلِلْمُسْلِمِيْنَ‏முஸ்லிம்களுக்கு
குல் னZஜ்Zஜலஹூ ரூஹுல் குதுஸி மிர் ரBப்Bபிக Bபில்ஹக்கி லியுதBப்Bபிதல் லதீன ஆமனூ வ ஹுத(ன்)வ் வ Bபுஷ்ரா லில்முஸ்லிமீன்
(நபியே!) “ஈமான் கொண்டோரை உறுதிப்படுத்துவதற்காகவும், (இறைவனுக்கு முற்றிலும் வழிப்பட்டோராகிய) முஸ்லிம்களுக்கு நேர்வழி காட்டியாகவும் நன்மாராயமாகவும் உம்முடைய இறைவனிடமிருந்து உண்மையைக் கொண்டு ரூஹுல் குதுஸ் (என்னும் ஜிப்ரீல்) இதை இறக்கி வைத்தார்” என்று (அவர்களிடம்) நீர் கூறுவீராக.
وَلَقَدْ نَعْلَمُ اَنَّهُمْ یَقُوْلُوْنَ اِنَّمَا یُعَلِّمُهٗ بَشَرٌ ؕ لِسَانُ الَّذِیْ یُلْحِدُوْنَ اِلَیْهِ اَعْجَمِیٌّ وَّهٰذَا لِسَانٌ عَرَبِیٌّ مُّبِیْنٌ ۟
وَلَـقَدْதிட்டவட்டமாகنَـعْلَمُஅறிவோம்اَنَّهُمْநிச்சயமாக அவர்கள்يَقُوْلُوْنَகூறுவர்اِنَّمَاகற்றுக் கொடுப்பதெல்லாம்يُعَلِّمُهٗஅவருக்குبَشَرٌ‌ؕமனிதர்தான்لِسَانُமொழிالَّذِىْஎவருடையيُلْحِدُوْنَசேர்க்கிறார்கள்اِلَيْهِஅவர் பக்கம்اَعْجَمِىٌّஅரபியல்லாதவர்وَّهٰذَاஇதுவோلِسَانٌமொழிعَرَبِىٌّஅரபிمُّبِيْنٌ‏தெளிவானது
வ லகத் னஃலமு அன்னஹும் யகூலூன இன்னமா யு'அல்லிமுஹூ Bபஷர்; லிஸானுல் லதீ யுல்ஹிதூன இலய்ஹி அஃஜ மிய்யு(ன்)வ் வ ஹாத லிஸானுன் 'அரBபிய்யும் முBபீன்
“நிச்சயமாக அவருக்கு கற்றுக் கொடுப்பவன் ஒரு மனிதனே, (இறைவனல்லன்)” என்று அவர்கள் கூறுவதை திடமாக நாம் அறிவோம்; எவனைச் சார்ந்து அவர்கள் கூறுகிறார்களோ, அவனுடைய மொழி (அரபியல்லாது) அன்னிய மொழியாகும்; ஆனால், இதுவோ தெளிவான அரபி மொழியாகும்.
اِنَّ الَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ بِاٰیٰتِ اللّٰهِ ۙ لَا یَهْدِیْهِمُ اللّٰهُ وَلَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
اِنَّநிச்சயமாகالَّذِيْنَஎவர்கள்لَا يُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்ள மாட்டார்கள்بِاٰيٰتِவசனங்களைاللّٰهِۙஅல்லாஹ்வுடையلَاநேர்வழி செலுத்த மாட்டான்يَهْدِيْهِمُஅவர்களைاللّٰهُஅல்லாஹ்وَلَهُمْஇன்னும் அவர்களுக்குعَذَابٌவேதனைاَلِيْمٌ‏துன்புறுத்தக் கூடியது
இன்னல் லதீன லா யு'மினூன Bபி ஆயாதில் லாஹி லா யஹ்தீஹிமுல் லாஹு வ லஹும் 'அதாBபுன் அலீம்
நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நம்பவில்லையோ, அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்; இன்னும் அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையுமுண்டு.
اِنَّمَا یَفْتَرِی الْكَذِبَ الَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ بِاٰیٰتِ اللّٰهِ ۚ وَاُولٰٓىِٕكَ هُمُ الْكٰذِبُوْنَ ۟
اِنَّمَا يَفْتَرِىஇட்டுக்கட்டுவ தெல்லாம்الْـكَذِبَபொய்யைالَّذِيْنَஎவர்கள்لَا يُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்ள மாட்டார்கள்بِاٰيٰتِவசனங்களைاللّٰهِ‌ۚஅல்லாஹ்வின்وَاُولٰۤٮِٕكَ هُمُஇவர்கள்தான்الْكٰذِبُوْنَ‏பொய்யர்கள்
இன்னமா யFப்தரில் கதிBபல் லதீன லா யு'மினூன Bபி ஆயாதில் லாஹி வ உலா'இக ஹுமுல் காதிBபூன்
நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள்.
مَنْ كَفَرَ بِاللّٰهِ مِنْ بَعْدِ اِیْمَانِهٖۤ اِلَّا مَنْ اُكْرِهَ وَقَلْبُهٗ مُطْمَىِٕنٌّۢ بِالْاِیْمَانِ وَلٰكِنْ مَّنْ شَرَحَ بِالْكُفْرِ صَدْرًا فَعَلَیْهِمْ غَضَبٌ مِّنَ اللّٰهِ ۚ وَلَهُمْ عَذَابٌ عَظِیْمٌ ۟
مَنْஎவர்كَفَرَநிராகரித்தார்بِاللّٰهِஅல்லாஹ்வைمِنْۢ بَعْدِபின்னர்اِيْمَانِهٖۤஅவர் நம்பிக்கை கொண்டاِلَّاதவிரمَنْஎவர்اُكْرِهَதான் நிர்பந்திக்கப்பட்டார்وَقَلْبُهٗதனது உள்ளமோمُطْمَٮِٕنٌّۢதிருப்தியடைந்ததுبِالْاِيْمَانِநம்பிக்கையில்وَلٰـكِنْஎனினும்مَّنْஎவர்شَرَحَதிறந்தான், விவரித்தான், விரும்பினான்بِالْكُفْرِநிராகரிப்பைصَدْرًاநெஞ்சத்தால்فَعَلَيْهِمْஅவர்கள் மீதுغَضَبٌகோபம்مِّنَ اللّٰهِ‌ۚஅல்லாஹ்வுடையوَلَهُمْஇன்னும் அவர்களுக்குعَذَابٌவேதனைعَظِيْمٌ‏கடுமையானது
மன் கFபர Bபில்லாஹி மிம் Bபஃதி ஈமானிஹீ இல்லா மன் உக்ரிஹ வ கல்Bபுஹூ முத்ம்ம'இன்னும் Bபில் ஈமானி வ லாகிம் மன் ஷரஹ Bபில்குFப்ரி ஸத்ரன் Fப'அலய்ஹிம் களBபும் மினல் லாஹி வ லஹும் 'அதாBபுன் 'அளீம்
எவர் ஈமான் கொண்டபின் அல்லாஹ்வை நிராகரிக்கிறாரோ அவர் (மீது அல்லாஹ்வின் கோபம் இருக்கிறது) - அவருடைய உள்ளம் ஈமானைக் கொண்டு அமைதி கொண்டிருக்கும் நிலையில் யார் நிர்ப்பந்திக்கப்படுகிறாரோ அவரைத் தவிர - (எனவே அவர் மீது குற்றமில்லை) ஆனால் (நிர்ப்பந்தம் யாதும் இல்லாமல்) எவருடைய நெஞ்சம் குஃப்ரைக்கொண்டு விரிவாகி இருக்கிறதோ - இத்தகையோர் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும்; இன்னும் அவர்களுக்குக் கொடிய வேதனையும் உண்டு.
ذٰلِكَ بِاَنَّهُمُ اسْتَحَبُّوا الْحَیٰوةَ الدُّنْیَا عَلَی الْاٰخِرَةِ ۙ وَاَنَّ اللّٰهَ لَا یَهْدِی الْقَوْمَ الْكٰفِرِیْنَ ۟
ذٰ لِكَஅதுبِاَنَّهُمُகாரணம்/நிச்சயமாகஅவர்கள்اسْتَحَبُّواவிரும்பினார்கள்الْحَيٰوةَவாழ்வைالدُّنْيَاஉலகம்عَلَى الْاٰخِرَةِ ۙமறுமையை விடوَاَنَّஇன்னும் நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَا يَهْدِىநேர்வழி செலுத்த மாட்டான்الْقَوْمَமக்களைالْكٰفِرِيْنَ‏நிராகரிக்கின்றவர்கள்
தாலிக Bபி அன்னஹுமுஸ் தஹBப்Bபுல் ஹயாதத் துன்யா 'அலல் ஆகிரதி வ அன்னல் லாஹ லா யஹ்தில் கவ்மல் காFபிரீன்
ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கையையே அதிகமாக நேசிக்கிறார்கள்; மேலும், நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களின் கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்த மாட்டான்.
اُولٰٓىِٕكَ الَّذِیْنَ طَبَعَ اللّٰهُ عَلٰی قُلُوْبِهِمْ وَسَمْعِهِمْ وَاَبْصَارِهِمْ ۚ وَاُولٰٓىِٕكَ هُمُ الْغٰفِلُوْنَ ۟
اُولٰۤٮِٕكَஅவர்கள்الَّذِيْنَஎவர்கள்طَبَعَமுத்திரையிட்டான்اللّٰهُஅல்லாஹ்عَلٰى قُلُوْبِهِمْஅவர்களின் உள்ளங்கள் மீதுوَسَمْعِهِمْஇன்னும் செவிகள்/ அவர்களின்وَاَبْصَارِஇன்னும் பார்வைகள்هِمْ‌ۚஅவர்களின்وَاُولٰۤٮِٕكَ هُمُஅவர்கள்தான்الْغٰفِلُوْنَ‏உணராதவர்கள், கவனமற்றவர்கள்
உலா'இகல் லதீன தBப'அல் லாஹு 'அலா குலூBபிஹிம் வ ஸம்'இஹிம் வ அBப்ஸாரிஹிம் வ உலா'இக ஹுமுல் காFபிலூன்
அத்தகையோருடைய இதயங்கள், செவிப்புலன், பார்வைகள் (ஆகியவற்றின்) மீது அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். இவர்கள் தான் (தம் இறுதி பற்றி) பாராமுக அலட்சியமாகயிருப்பவர்கள்.
لَا جَرَمَ اَنَّهُمْ فِی الْاٰخِرَةِ هُمُ الْخٰسِرُوْنَ ۟
لَا جَرَمَசந்தேகமின்றிاَنَّهُمْநிச்சயமாக அவர்கள்فِى الْاٰخِرَةِமறுமையில்هُمُ الْخٰسِرُوْنَ‏நஷ்டவாளிகள்தான்
லா ஜரம அன்ன்னஹும் Fபில் ஆகிரதி ஹுமுல் காஸிரூன்
சந்தேகமின்றி, இவர்கள் மறுமையில் முற்றிலும் நஷ்டமடைவார்கள்.
ثُمَّ اِنَّ رَبَّكَ لِلَّذِیْنَ هَاجَرُوْا مِنْ بَعْدِ مَا فُتِنُوْا ثُمَّ جٰهَدُوْا وَصَبَرُوْۤا ۙ اِنَّ رَبَّكَ مِنْ بَعْدِهَا لَغَفُوْرٌ رَّحِیْمٌ ۟۠
ثُمَّபிறகுاِنَّநிச்சயமாகرَبَّكَஉம் இறைவன்لِلَّذِيْنَஎவர்களுக்குهَاجَرُوْاநாடு துறந்தார்கள்مِنْۢ بَعْدِ مَا فُتِنُوْاஅவர்கள் துன்புறுத்தப்பட்ட பின்புثُمَّபிறகுجٰهَدُوْاபோர் புரிந்தனர்وَصَبَرُوْۤا ۙஇன்னும் சகித்தனர்اِنَّநிச்சயமாகرَبَّكَஉம் இறைவன்مِنْۢ بَعْدِபின்புهَاஇவற்றுக்குلَغَفُوْرٌமகா மன்னிப்பாளன்رَّحِيْمٌ‏மிகக் கருணையாளன்
தும்ம இன்ன ரBப்Bபக லில்லதீன ஹாஜரூ மிம் Bபஃதிமா Fபுதினூ தும்ம்ம ஜாஹதூ வ ஸBபரூ இன்ன ரBப்Bபக மிம் Bபஃதிஹா ல கFபூருர் ரஹீம்
இன்னும் எவர்கள் (துன்பங்களுக்கும்) சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டபின் (தம் வீடுகளைத் துறந்து) ஹிஜ்ரத் செய்து (வெளிக்கிளம்பினார்களோ), பின்பு அறப்போர் புரிந்தார்களோ இன்னும் பொறுமையைக் கையாண்டார்களோ, அவர்களுக்கு (உதவி செய்ய) நிச்சயமாக உம்முடைய இறைவன் இருக்கின்றான்; இவற்றுக்குப் பின்னரும், உம்முடைய இறைவன் மன்னிப்பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.  
یَوْمَ تَاْتِیْ كُلُّ نَفْسٍ تُجَادِلُ عَنْ نَّفْسِهَا وَتُوَفّٰی كُلُّ نَفْسٍ مَّا عَمِلَتْ وَهُمْ لَا یُظْلَمُوْنَ ۟
يَوْمَநாளில்تَاْتِىْவரும்كُلُّஒவ்வொருنَفْسٍஆன்மாتُجَادِلُதர்க்கித்ததாகعَنْ نَّفْسِهَاதன்னைப் பற்றிوَتُوَفّٰىஇன்னும் முழு கூலி கொடுக்கப்படும்كُلُّஒவ்வொருنَفْسٍஆன்மாمَّاஎதற்குعَمِلَتْசெய்ததுوَهُمْ لَا يُظْلَمُوْنَ‏இன்னும் அவர்கள் அநீதியிழைக்கப்பட மாட்டார்கள்
யவ்ம தாதீ குல்லு னFப்ஸின் துஜாதிலு 'அன் னFப்ஸிஹா வ துவFப்Fபா குல்லு னFப்ஸிம் மா 'அமிலத் வ ஹும் லா யுள்லமூன்
ஒவ்வோர் ஆத்மாவும் தனக்காக வாதாட முற்படும் அந்நாளில், ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது செய்(து வந்)ததற்குரிய கூலி முழுமையாகக் கொடுக்கப்படும் - அவர்கள் அநியாயம் செய்யப்படவும் மாட்டார்கள்.
وَضَرَبَ اللّٰهُ مَثَلًا قَرْیَةً كَانَتْ اٰمِنَةً مُّطْمَىِٕنَّةً یَّاْتِیْهَا رِزْقُهَا رَغَدًا مِّنْ كُلِّ مَكَانٍ فَكَفَرَتْ بِاَنْعُمِ اللّٰهِ فَاَذَاقَهَا اللّٰهُ لِبَاسَ الْجُوْعِ وَالْخَوْفِ بِمَا كَانُوْا یَصْنَعُوْنَ ۟
وَضَرَبَவிவரிக்கிறான், கூறுகிறான்اللّٰهُஅல்லாஹ்مَثَلًاஉதாரணமாகقَرْيَةًஓர் ஊரைكَانَتْஇருந்ததுاٰمِنَةًஅச்சமற்றதாகمُّطْمَٮِٕنَّةًநிம்மதி பெற்றதாகيَّاْتِيْهَاவந்தது/அதற்குرِزْقُهَاவாழ்வாதாரம்رَغَدًاதாராளமாகمِّنْஇருந்துكُلِّஎல்லாம்مَكَانٍஇடம்فَكَفَرَتْஆகஅதுநிராகரித்ததுبِاَنْعُمِஅருட்கொடைகளைاللّٰهِஅல்லாஹ்வுடையفَاَذَاقَهَاசுவைக்கச் செய்தான்/அதற்குاللّٰهُஅல்லாஹ்لِبَاسَஆடையைالْجُـوْعِபசியின்وَالْخَـوْفِஇன்னும் பயம்بِمَا كَانُوْاஅவர்கள் இருந்ததின்காரணமாகيَصْنَعُوْنَ‏செய்வார்கள்
வ ளரBபல் லாஹு மதலன் கர்யதன் கானத் ஆமினதம் முத்ம'இன்னத(ன்)ய் யாதீஹா ரிZஜ்குஹா ரகதம் மின் குல்லி மகானின் FபகFபரத் Bபி அன்'உமில் லாஹி Fப அதாகஹல் லாஹு லிBபாஸல் ஜூ'இ வல்கவ்Fபி Bபிமா கானூ யஸ்ன'ஊன்
மேலும், அல்லாஹ் ஓர் ஊரை (அவர்களுக்கு) உதாரணங் கூறுகிறான்; அது அச்சமில்லாதும், நிம்மதியுடனும் இருந்தது, அதன் உணவு(ம் மற்றும் வாழ்க்கை)ப் பொருட்கள் யாவும் ஒவ்வோரிடத்திலிருந்தும் ஏராளமாக வந்து கொண்டிருந்தன - ஆனால் (அவ்வூர்) அல்லாஹ்வின் அருட் கொடைகளுக்கு நன்றி செலுத்தாமல் மாறு செய்தது; ஆகவே, அவ்வூரார் செய்து கொண்டிருந்த (தீச்) செயல்களின் காரணமாக, அல்லாஹ் பசியையும் பயத்தையும் அவர்களுக்கு ஆடையாக (அணிவித்து அவற்றை) அனுபவிக்குமாறு செய்தான்.
وَلَقَدْ جَآءَهُمْ رَسُوْلٌ مِّنْهُمْ فَكَذَّبُوْهُ فَاَخَذَهُمُ الْعَذَابُ وَهُمْ ظٰلِمُوْنَ ۟
وَلَـقَدْதிட்டவட்டமாகجَآءَவந்தார்هُمْஅவர்களிடம்رَسُوْلٌஒரு தூதர்مِّنْهُمْஅவர்களிலிருந்தேفَكَذَّبُوْهُஅவர்கள் பொய்ப்பித்தனர்/அவரைفَاَخَذَபிடித்ததுهُمُஅவர்களைالْعَذَابُவேதனைوَهُمْஅவர்கள் இருக்கின்ற நிலையில்ظٰلِمُوْنَ‏அநியாயக்காரர்களாக
வ லகத் ஜா'அஹும் ரஸூலும் மின்ஹும் Fபகத்தBபூஹு Fப அகதஹுமுல் 'அதாBபு வ ஹும் ளாலிமூன்
இன்னும், நிச்சயமாக அவர்களிடத்தில் அவர்களிலிருந்தே (இறை) தூதர் வந்தார்; ஆனால் அவர்கள் அவரைப் பொய்ப்பித்தனர்; ஆகவே, அவர்கள் அநியாயம் செய்தவர்களாக இருக்கிற நிலையில் அவர்களை வேதனை பிடித்துக் கொண்டது.
فَكُلُوْا مِمَّا رَزَقَكُمُ اللّٰهُ حَلٰلًا طَیِّبًا ۪ وَّاشْكُرُوْا نِعْمَتَ اللّٰهِ اِنْ كُنْتُمْ اِیَّاهُ تَعْبُدُوْنَ ۟
فَكُلُوْاபுசியுங்கள்مِمَّاஎவற்றிலிருந்துرَزَقَكُمُஅளித்தான்/ உங்களுக்குاللّٰهُஅல்லாஹ்حَلٰلًاஆகுமானதைطَيِّبًاநல்லதைوَّاشْكُرُوْاஇன்னும் நன்றி செலுத்துங்கள்نِعْمَتَஅருட் கொடைகளுக்குاللّٰهِஅல்லாஹ்வின்اِنْ كُنْـتُمْநீங்கள் இருந்தால்اِيَّاهُஅவனையேتَعْبُدُوْنَ‏வணங்குவீர்கள்
Fபகுலூ மிம்மா ரZஜக குமுல் லாஹு ஹலாலன் தய்யிBப(ன்)வ் வஷ்குரூ னிஃமதல் லாஹி இன் குன்தும் இய்யாஹு தஃBபுதூன்
(முஃமின்களே!) அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ளவற்றிலிருந்து ஹலாலான நல்லவற்றையே நீங்கள் புசியுங்கள்; நீங்கள் அவனையே வணங்குபவர்களாக இருப்பின் அல்லாஹ்வின் அருட்கொடைக்கு நன்றி செலுத்துங்கள்.
اِنَّمَا حَرَّمَ عَلَیْكُمُ الْمَیْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنْزِیْرِ وَمَاۤ اُهِلَّ لِغَیْرِ اللّٰهِ بِهٖ ۚ فَمَنِ اضْطُرَّ غَیْرَ بَاغٍ وَّلَا عَادٍ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
اِنَّمَا حَرَّمَஅவன் தடுத்ததெல்லாம்عَلَيْكُمُஉங்கள் மீதுالْمَيْتَةَசெத்ததைوَ الدَّمَஇன்னும் இரத்தம்وَلَحْمَஇன்னும் மாமிசம்الْخِنْزِيْرِபன்றியின்وَمَاۤ اُهِلَّஇன்னும் பெயர் கூறப்பட்டவைلِغَيْرِஅல்லாதவற்றின்اللّٰهِஅல்லாஹ்بِهٖ‌ۚஅதைفَمَنِஎவர்اضْطُرَّநிர்பந்தத்திற்குள்ளானார்غَيْرَ بَاغٍநாடியவராக அல்லாமல்وَّلَا عَادٍமீறியவராகஅல்லாமல்فَاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்غَفُوْرٌமகா மன்னிப்பாளன்رَّحِيْمٌ‏மிகக் கருணையாளன்
இன்னமா ஹரம 'அலய் குமுல் மய்தத வத்தம வ லஹ்மல் கின்Zஜீரி வ மா உஹில்ல லிகய்ரில் லாஹி Bபிஹீ Fபமனிள் துர்ர கய்ர Bபாகி(ன்)வ் வலா 'ஆதின் Fப இன்னல் லாஹ கFபூருர் ரஹீம்
(நீங்கள் புசிக்கக் கூடாது என்று) உங்களுக்கு அவன் விலக்கியிருப்பவையெல்லாம்; தானே செத்ததும், இரத்தமும், பன்றி இறைச்சியும், எதன் மீது அல்லாஹ்(வின் பெயர்) அல்லாத வேறு (பெயர்) உச்சரிக்கப்பட்டதோ அதுவுமேயாகும் - ஆனால் எவரேனும் வரம்பை மீற வேண்டுமென்று (எண்ணம்) இல்லாமலும், பாவம் செய்யும் விருப்பமில்லாமலும் (எவராலும் அல்லது பசியின் கொடுமையாலும்) நிர்ப்பந்திக்கப்பட்டால் (அவர் மீது குற்றமில்லை); நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
وَلَا تَقُوْلُوْا لِمَا تَصِفُ اَلْسِنَتُكُمُ الْكَذِبَ هٰذَا حَلٰلٌ وَّهٰذَا حَرَامٌ لِّتَفْتَرُوْا عَلَی اللّٰهِ الْكَذِبَ ؕ اِنَّ الَّذِیْنَ یَفْتَرُوْنَ عَلَی اللّٰهِ الْكَذِبَ لَا یُفْلِحُوْنَ ۟ؕ
وَلَا تَقُوْلُوْاகூறாதீர்கள்لِمَاஎதற்குتَصِفُவருணிக்கும்اَلْسِنَـتُكُمُஉங்கள் நாவுகள்الْكَذِبَபொய்யைهٰذَاஇதுحَلٰلٌ(ஹலால்) ஆகுமானதுوَّهٰذَاஇன்னும் இதுحَرَامٌ(ஹராம்) ஆகாததுلِّـتَفْتَرُوْاநீங்கள் இட்டுக்கட்டுவதற்காகعَلَىமீதுاللّٰهِஅல்லாஹ்வின்الْكَذِبَ‌ؕபொய்யைاِنَّநிச்சயமாகالَّذِيْنَஎவர்கள்يَفْتَرُوْنَஇட்டுக்கட்டுகிறார்கள்عَلَىமீதுاللّٰهِஅல்லாஹ்الْكَذِبَபொய்யைلَا يُفْلِحُوْنَؕ‏அவர்கள் வெற்றி பெற மாட்டார்கள்
வ லா தகூலூ லிமா தஸிFபு அல்ஸினதுகுமுல் கதிBப ஹாத ஹலாலு(ன்)வ் வ ஹாதா ஹராமுல் லிதFப்தரூ 'அலல் லாஹில் கதிBப்; இன்னல் லதீன யFப்தரூன 'அலல் லாஹில் கதிBப லா யுFப்லிஹூன்
உங்கள் நாவுகள் (சில பிராணிகள் பற்றி) பொய்யாக வர்ணிப்பது போல், இது ஹலாலானது, இது ஹராமானது என்று அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டாதீர்கள் - நிச்சயமாக, எவர் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுகிறார்களோ அவர்கள் வெற்றியடைய மாட்டார்கள்.
مَتَاعٌ قَلِیْلٌ ۪ وَّلَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
مَتَاعٌசுகம்قَلِيْلٌசொற்பமானதுوَّلَهُمْஇன்னும் அவர்களுக்குعَذَابٌவேதனைاَلِيْمٌ‏துன்புறுத்தக் கூடியது
மதா'உன் கலீலு(ன்)வ் வ லஹும் 'அதாBபுன் அலீம்
(இத்தகைய பொய்யர்கள் அனுபவிப்பதெல்லாம்) சொற்ப இன்பம்தான்; (மறுமையிலோ) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையுண்டு.
وَعَلَی الَّذِیْنَ هَادُوْا حَرَّمْنَا مَا قَصَصْنَا عَلَیْكَ مِنْ قَبْلُ ۚ وَمَا ظَلَمْنٰهُمْ وَلٰكِنْ كَانُوْۤا اَنْفُسَهُمْ یَظْلِمُوْنَ ۟
وَعَلَى الَّذِيْنَ هَادُوْاமீது / யூதர்களாக இருப்பவர்கள்حَرَّمْنَاதடுத்தோம்مَاஎவற்றைقَصَصْنَاவிவரித்தோம்عَلَيْكَஉமக்குمِنْ قَبْلُ‌ۚ(இதற்கு) முன்னர்وَمَاநாம் தீங்கிழைக்கவில்லைظَلَمْنٰهُمْஅவர்களுக்குوَلٰـكِنْஎனினும்كَانُوْۤاஇருந்தனர்اَنْفُسَهُمْதங்களுக்கேيَظْلِمُوْنَ‏தீங்கிழைப்பவர்களாக
வ 'அலல் லதீன ஹாதூ ஹர்ரம்னா ம கஸஸ்னா 'அலய்க மின் கBப்லு வமா ளலமனாஹும் வ லாகின் கானூ அன்Fபுஸஹும் யள்லிமூன்
இன்னும் யூதர்களுக்கு, உமக்கு நாம் முன்னரே விளக்கியுள்ளவற்றைத் தடுத்து விட்டோம்; (எனினும்) நாம் அவர்களுக்குத் தீங்கிழைக்கவில்லை; ஆனால் அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்.
ثُمَّ اِنَّ رَبَّكَ لِلَّذِیْنَ عَمِلُوا السُّوْٓءَ بِجَهَالَةٍ ثُمَّ تَابُوْا مِنْ بَعْدِ ذٰلِكَ وَاَصْلَحُوْۤا ۙ اِنَّ رَبَّكَ مِنْ بَعْدِهَا لَغَفُوْرٌ رَّحِیْمٌ ۟۠
ثُمَّபிறகுاِنَّநிச்சயமாகرَبَّكَஉம் இறைவன்لِلَّذِيْنَஎவர்களுக்குعَمِلُواசெய்தனர்السُّوْۤءَகெட்டதைبِجَهَالَةٍஅறியாமையின் காரணமாகثُمَّபிறகுتَابُوْاதிருந்தி விலகி மன்னிப்புக் கேட்டனர்مِنْۢ بَعْدِ ذٰ لِكَஅதற்கு பின்னர்وَاَصْلَحُوْۤا ۙஇன்னும் சீர்படுத்தினார்கள்اِنَّநிச்சயமாகرَبَّكَஉம் இறைவன்مِنْۢ بَعْدِهَاஅதற்குப் பின்புلَغَفُوْرٌமகா மன்னிப்பாளன்தான்رَّحِيْمٌ‏மிகக் கருணையாளன்
தும்ம்ம இன்ன ரBப்Bபக லில்லதீன 'அமிலுஸ் ஸூ'அ Bபிஜஹாலதின் தும்ம தாBபூ மிம் Bபஃதி தாலிக வ அஸ்லஹூ இன்ன ரBப்Bபக மிம் Bபஃதிஹா ல கFபூருர் ரஹீம்
பிறகு, நிச்சயமாக உம் இறைவன் - எவர்கள் அறியாமையினால் தீமை செய்து பின்பு (அவற்றிலிருந்து விலகி) தவ்பா செய்து தங்களைச் சீர்திருத்திக் கொள்கிறார்களோ அவர்களுக்கு (மன்னிப்பளிப்பவன்); நிச்சயமாக அதன் பின்பும் உம் இறைவன் பிழை பொறுப்பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.  
اِنَّ اِبْرٰهِیْمَ كَانَ اُمَّةً قَانِتًا لِّلّٰهِ حَنِیْفًا ؕ وَلَمْ یَكُ مِنَ الْمُشْرِكِیْنَ ۟ۙ
اِنَّ اِبْرٰهِيْمَநிச்சயமாக இப்றாஹீம்كَانَஇருந்தார்اُمَّةًநன்மையை போதிப்பவராகقَانِتًاமிக பணிந்தவராகلِّلّٰهِஅல்லாஹ்வுக்குحَنِيْفًاؕகொள்கை உறுதியுடையவராகوَلَمْ يَكُஅவர் இருக்கவில்லைمِنَ الْمُشْرِكِيْنَۙ‏இணைவைப்பவர்களில்
இன்ன இBப்ராஹீம கான உம்மதன் கானிதல் லில்லாஹி ஹனீFப(ன்)வ் வ லம் யகுமினல் முஷ்ரிகீன்
நிச்சயமாக இப்ராஹீம் ஒரு வழிகாட்டியாகவும் அல்லாஹ்வுக்கு அடிபணிந்தவராகவும் (நேரான பாதையில்) சார்ந்தவராகவும் இருந்தார்; மேலும், அவர் முஷ்ரிக்குகளில் (இணை வைப்போரில்) ஒருவராக இருக்கவில்லை.
شَاكِرًا لِّاَنْعُمِهٖ ؕ اِجْتَبٰىهُ وَهَدٰىهُ اِلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۟
شَاكِرًاநன்றிசெலுத்துபவராகلِّاَنْعُمِهِ‌ؕஅவனுடைய அருட்கொடைகளுக்குاِجْتَبٰٮهُதேர்ந்தெடுத்தான்/அவரைوَهَدٰٮهُஇன்னும் நேர்வழி செலுத்தினான்/அவரைاِلٰى صِرَاطٍபாதையில்مُّسْتَقِيْمٍ‏நேரான
ஷாகிரல் லி அன்'உமிஹ்; இஜ்தBபாஹு வ ஹதாஹு இலா ஸிராதிம் முஸ்தகீம்
(அன்றியும்) அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துபவராக அவர் இருந்தார்; அல்லாஹ் அவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்; இன்னும் அவரை நேர் வழியில் செலுத்தினான்.
وَاٰتَیْنٰهُ فِی الدُّنْیَا حَسَنَةً ؕ وَاِنَّهٗ فِی الْاٰخِرَةِ لَمِنَ الصّٰلِحِیْنَ ۟ؕ
وَاٰتَيْنٰهُஇன்னும் அவருக்குக் கொடுத்தோம்فِى الدُّنْيَاஇவ்வுலகில்حَسَنَةً‌  ؕஉயர்வைوَاِنَّهٗஇன்னும் நிச்சயமாக அவர்فِى الْاٰخِرَةِமறுமையில்لَمِنَ الصّٰلِحِيْنَؕ‏நல்லவர்களில்
வ ஆதய்னாஹு Fபித் துன்யா ஹஸனஹ்; வ இன்னஹூ Fபில் ஆகிரதி லமினஸ் ஸாலிஹீன்
மேலும் நாம் அவருக்கு இவ்வுலகத்தில் அழகானவற்றையே கொடுத்தோம்; நிச்சயமாக மறுமையிலும் அவர் ஸாலிஹானவர்களில் (நல்லவர்களில் ஒருவராக) இருப்பார்.
ثُمَّ اَوْحَیْنَاۤ اِلَیْكَ اَنِ اتَّبِعْ مِلَّةَ اِبْرٰهِیْمَ حَنِیْفًا ؕ وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِیْنَ ۟
ثُمَّபிறகுاَوْحَيْنَاۤவஹீ அறிவித்தோம்اِلَيْكَஉமக்குاَنِஎன்றுاتَّبِعْபின்பற்றுمِلَّةَமார்க்கத்தைاِبْرٰهِيْمَஇப்றாஹீமின்حَنِيْفًا‌ ؕகொள்கை உறுதியுடையவராகوَمَا كَانَ(அவர்) இருக்கவில்லைمِنَ الْمُشْرِكِيْنَ‏இணைவைப்பவர்களில்
தும்ம்ம அவ்ஹய்னா இலய்க அனித் தBபிஃ மில்லத இBப்ராஹீம ஹனீFபா; வமா கான மினல் முஷ்ரிகீன்
(நபியே!) பின்னர் “நேர்மையாளரான இப்ராஹீமின் சன்மார்க்கத்தை நீர் பின்பற்ற வேண்டும்” என்று நாம் உமக்கு வஹீ அறிவித்தோம்; அவர் முஷ்ரிக்குகளில் (இணை வைப்போரில்) ஒருவராக இருந்ததில்லை.
اِنَّمَا جُعِلَ السَّبْتُ عَلَی الَّذِیْنَ اخْتَلَفُوْا فِیْهِ ؕ وَاِنَّ رَبَّكَ لَیَحْكُمُ بَیْنَهُمْ یَوْمَ الْقِیٰمَةِ فِیْمَا كَانُوْا فِیْهِ یَخْتَلِفُوْنَ ۟
اِنَّمَا جُعِلَஆக்கப்பட்டதெல்லாம்السَّبْتُசனிக்கிழமைعَلَىமீதுالَّذِيْنَஎவர்கள்اخْتَلَفُوْاமுரண்பட்டனர் (தர்க்கித்தனர்)فِيْهِ‌ؕஅதில்وَاِنَّநிச்சயமாகرَبَّكَஉம் இறைவன்لَيَحْكُمُதிட்டமாக தீர்ப்பளிப்பான்بَيْنَهُمْஅவர்களுக்கிடையில்يَوْمَ الْقِيٰمَةِமறுமை நாளில்فِيْمَاஎதில்كَانُوْاஇருந்தனர்فِيْهِஅதில்يَخْتَلِفُوْنَ‏முரண்படுவார்கள்
இன்ன்னமா ஜு'இலஸ் ஸBப்து 'அலல் லதீனக்தலFபூ Fபீஹ்; வ இன்ன ரBப்Bபக ல யஹ்குமு Bபய்னஹும் யவ்மல் கியாமதி Fபீமா கானூ Fபீஹி யக்தலிFபூன்
“சனிக்கிழமை (ஓய்வு நாள்)” என்று ஏற்படுத்திய தெல்லாம், அதைப்பற்றி எவர்கள் மாறுபட்டு(த் தர்க்கித்து)க் கொண்டிருந்தார்களோ, அவர்களுக்குத்தான் - நிச்சயமாக உம் இறைவன் கியாம நாளில் அவர்கள் மாறுபட்டு(த் தர்க்கித்து)க் கொண்டிருந்தவை பற்றி அவர்களுக்கிடையே தீர்ப்புச் செய்வான்.
اُدْعُ اِلٰی سَبِیْلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ وَجَادِلْهُمْ بِالَّتِیْ هِیَ اَحْسَنُ ؕ اِنَّ رَبَّكَ هُوَ اَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِیْلِهٖ وَهُوَ اَعْلَمُ بِالْمُهْتَدِیْنَ ۟
اُدْعُஅழைப்பீராகاِلٰىபக்கம்سَبِيْلِபாதைرَبِّكَஉம் இறைவனுடையبِالْحِكْمَةِஞானத்தைக்கொண்டுوَالْمَوْعِظَةِஇன்னும் உபதேசம்الْحَسَنَةِ‌அழகியதுوَجَادِلْهُمْஇன்னும் தர்க்கிப்பீராக/அவர்களிடம்بِالَّتِىْஎதைக் கொண்டுهِىَஅதுاَحْسَنُ‌ؕமிக அழகியதுاِنَّநிச்சயமாகرَبَّكَ هُوَஉம் இறைவன்தான்اَعْلَمُமிக அறிந்தவன்بِمَنْஎவரைضَلَّவழிதவறினார்عَنْ سَبِيْلِهٖ‌அவனுடைய பாதையிலிருந்துوَهُوَஇன்னும் அவன்اَعْلَمُமிக அறிந்தவன்بِالْمُهْتَدِيْنَ‏நேர்வழி செல்வோரை
உத்'உ இலா ஸBபீலி ரBப்Bபிக Bபில்ஹிக்மதி வல்மவ் 'இளதில் ஹஸனதி வ ஜாதில்ஹும் Bபில்லதீ ஹிய அஹ்ஸன்; இன்ன ரBப்Bபக ஹுவ அஃலமு Bபிமன் ளல்ல 'அன் ஸBபீலிஹீ வ ஹுவ அஃலமு Bபில்முஹ்ததீன்
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்.
وَاِنْ عَاقَبْتُمْ فَعَاقِبُوْا بِمِثْلِ مَا عُوْقِبْتُمْ بِهٖ ؕ وَلَىِٕنْ صَبَرْتُمْ لَهُوَ خَیْرٌ لِّلصّٰبِرِیْنَ ۟
وَاِنْ عَاقَبْتُمْநீங்கள் தண்டித்தால்فَعَاقِبُوْاதண்டியுங்கள்بِمِثْلِபோன்றுمَا عُوْقِبْتُمْநீங்கள் தண்டிக்கப்பட்டதுبِهٖ‌ۚஅதில்وَلَٮِٕنْ صَبَرْتُمْதிட்டமாக நீங்கள் பொறுத்தால்لَهُوَஅதுதான்خَيْرٌமிக நல்லதுلِّلصّٰبِرِيْنَ‏பொறுமையாளர் களுக்கு
வ இன் 'ஆகBப்தும் Fப'ஆகிBபூ Bபிமித்லி மா 'ஊகிBப்தும் Bபிஹீ வ ல'இன் ஸBபர்தும் லஹுவ கய்ருல் லிஸ்ஸாBபிரீன்
(முஃமின்களே!) நீங்கள் தண்டிப்பதாக இருந்தால் எந்த அளவிற்கு நீங்கள் தண்டிக்கப்பட்டீர்களோ அது போன்ற அளவுக்கே நீங்களும் தண்டியுங்கள், பொறுத்துக் கொண்டால், நிச்சயமாக அதுவே பொறுமையாளருக்கு மிக்க மேன்மையானதாகும்.
وَاصْبِرْ وَمَا صَبْرُكَ اِلَّا بِاللّٰهِ وَلَا تَحْزَنْ عَلَیْهِمْ وَلَا تَكُ فِیْ ضَیْقٍ مِّمَّا یَمْكُرُوْنَ ۟
وَاصْبِرْபொறுப்பீராகوَمَاஇல்லைصَبْرُكَஉம் பொறுமைاِلَّاதவிரبِاللّٰهِ‌அல்லாஹ்வைக் கொண்டேوَلَا تَحْزَنْஇன்னும் கவலைப்படாதீர்عَلَيْهِمْஅவர்கள் மீதுوَلَا تَكُஇன்னும் ஆகாதீர்فِىْ ضَيْقٍநெருக்கடியில்مِّمَّاஎதைப் பற்றிيَمْكُرُوْنَ‏சூழ்ச்சி செய்வார்கள்
வஸ்Bபிர் வமா ஸBப்ருக இல்லா Bபில்லாஹ்; வலா தஹ்Zஜன் 'அலய்ஹிம் வலா தகு Fபீ ளய்கிம் மிம்மா யம்குரூன்
(நபியே!) இன்னும் நீர் பொறுமையுடன் இருப்பீராக; எனினும் அல்லாஹ்வின் உதவியில்லாமல் நீர் பொறுமையுடனே இருக்க முடியாது - அவர்களுக்காக நீர் (எது பற்றியும்) கவலைப்பட வேண்டாம் - அவர்கள் செய்யும் சூழ்ச்சிகளை பற்றி நீர் (மன) நெருக்கடியில் ஆகிவிடவேண்டாம்.
اِنَّ اللّٰهَ مَعَ الَّذِیْنَ اتَّقَوْا وَّالَّذِیْنَ هُمْ مُّحْسِنُوْنَ ۟۠
اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்مَعَஉடன்الَّذِيْنَஎவர்கள்اتَّقَوْاஅஞ்சினார்கள்وَّالَّذِيْنَஇன்னும் எவர்கள்هُمْஅவர்கள்مُّحْسِنُوْنَ‏நல்லறம் புரிபவர்கள்
இன்னல் லாஹ ம'அல் லதீனத் தகவ் வல் லதீன ஹும் முஹ்ஸினூன்
நிச்சயமாக எவர் பயபக்தியுடையவராக இருக்கிறார்களோ, அவர்களுடனும் எவர் நற்செயல் புரிகின்றார்களோ அவர்களுடனும் அல்லாஹ் இருக்கிறான்.