106. ஸூரத்து குறைஷின்(குறைஷிகள்)

மக்கீ, வசனங்கள்: 4

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
لِاِیْلٰفِ قُرَیْشٍ ۟ۙ
لِاِيْلٰفِவிருப்பத்தை ஏற்படுத்தியதால்قُرَيْشٍۙ‏குறைஷிகளுக்கு
லி-ஈலாFபி குரய்ஷ்
குறைஷிகளுக்கு விருப்பம் உண்டாக்கி,
اٖلٰفِهِمْ رِحْلَةَ الشِّتَآءِ وَالصَّیْفِ ۟ۚ
اٖلٰفِهِمْஅவர்களுக்கு விருப்பமாக்கியதால்رِحْلَةَபயணத்தைالشِّتَآءِகுளிர்காலம்وَالصَّيْفِ‌ۚ‏இன்னும் கோடைகாலம்
ஈலாFபிஹிம் ரிஹ்லதஷ் ஷிதா'இ வஸ்ஸய்Fப்
மாரி காலத்துடையவும் கோடைக்காலத்துடையவும் பிரயாணத்தில் அவர்களுக்கு மன விருப்பத்தை உண்டாக்கியமைக்காக-
فَلْیَعْبُدُوْا رَبَّ هٰذَا الْبَیْتِ ۟ۙ
فَلْيَـعْبُدُوْاஅவர்கள் வணங்கவும்رَبَّஅதிபதியைهٰذَاஇந்தالْبَيْتِۙ‏கஅபாவின்
Fபல்யஃBபுதூ ரBப்Bப ஹாதல்-Bபய்த்
இவ்வீட்டின் (கஃபாவின்) இறைவனை அவர்கள் வணங்குவார்களாக.
الَّذِیْۤ اَطْعَمَهُمْ مِّنْ جُوْعٍ ۙ۬ وَّاٰمَنَهُمْ مِّنْ خَوْفٍ ۟۠
الَّذِىْۤஎவன்اَطْعَمَهُمْஅவர்களுக்கு உணவளித்தான்مِّنْ جُوْعٍபசிக்கு  ۙ وَّاٰمَنَهُمْஇன்னும் அவர்களுக்கு அபயமளித்தான்مِّنْ خَوْفٍ‏பயத்திலிருந்து
அல்லதீ அத்'அமஹும் மின் ஜூ'இ(ன்)வ்-வஆமனஹும் மின் கவ்Fப்
அவனே, அவர்களுக்கு பசிக்கு உணவளித்தான்; மேலும் அவர்களுக்கு அச்சத்திலிருந்தும் அபயமளித்தான்.