78. ஸூரத்துந் நபா (பெரும் செய்தி)

மக்கீ, வசனங்கள்: 40

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
عَمَّ یَتَسَآءَلُوْنَ ۟ۚ
عَمَّஎதைப் பற்றிيَتَسَآءَلُوْنَ‌ۚ‏விசாரித்துக் கொள்கிறார்கள்
'அம்ம யதஸா-அலூன்
எதைப்பற்றி அவர்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்கின்றனர்?
عَنِ النَّبَاِ الْعَظِیْمِ ۟ۙ
عَنِ النَّبَاِசெய்தியைப் பற்றிالْعَظِيْمِۙ‏மகத்தான(து)
'அனின்-னBபா-இல் 'அளீம்
மகத்தான அச்செய்தியைப் பற்றி,
الَّذِیْ هُمْ فِیْهِ مُخْتَلِفُوْنَ ۟ؕ
الَّذِىْஎதுهُمْஅவர்கள்فِيْهِஅதில்مُخْتَلِفُوْنَؕ‏முரண்பட்டவர்கள்
அல்லதி ஹும் Fபீஹி முக் தலிFபூன்
எதைப்பற்றி அவர்கள் வேறுபட்(ட கருத்துக்கள் கொண்)டிருக்கிறார்களோ அதைப் பற்றி,
كَلَّا سَیَعْلَمُوْنَ ۟ۙ
كَلَّاஅவ்வாறல்லسَيَعْلَمُوْنَۙ‏(விரைவில்) அறிவார்கள்
கல்லா ஸ யஃலமூன்
அவ்வாறன்று! அவர்கள் விரைவில் அறிந்துகொள்வார்கள்.
ثُمَّ كَلَّا سَیَعْلَمُوْنَ ۟
ثُمَّபிறகுكَلَّاஅவ்வாறல்லسَيَعْلَمُوْنَ‏(விரைவில்) அறிவார்கள்
தும்ம கல்லா ஸ யஃலமூன்
பின்னரும் (சந்தேகமின்றி) அவர்கள் விரைவிலேயே அறிந்துகொள்வார்கள்.
اَلَمْ نَجْعَلِ الْاَرْضَ مِهٰدًا ۟ۙ
اَلَمْ نَجْعَلِநாம் ஆக்கவில்லையாالْاَرْضَபூமியைمِهٰدًا ۙ‏விரிப்பாக
அலம் னஜ்'அலில் அர்ள மிஹா தா
நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா?
وَّالْجِبَالَ اَوْتَادًا ۟
وَّالْجِبَالَஇன்னும் மலைகளைاَوْتَادًا ۙ‏முளைக்கோல்களாக
வல் ஜிBபால அவ் தாதா
இன்னும், மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா?
وَّخَلَقْنٰكُمْ اَزْوَاجًا ۟ۙ
وَّخَلَقْنٰكُمْஇன்னும் உங்களைப் படைத்தோம்اَزْوَاجًا ۙ‏ஜோடிகளாக
வ கலக் னாகும் அZஜ்வாஜா
இன்னும் உங்களை ஜோடி ஜோடியாகப் படைத்தோம்.
وَّجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا ۟ۙ
وَّجَعَلْنَاஇன்னும் ஆக்கினோம்نَوْمَكُمْஉங்கள் நித்திரையைسُبَاتًا ۙ‏ஓய்வாக
வஜ'அல்ன னவ்மகும் ஸுBபதா
மேலும், உங்களுடைய தூக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கினோம்.
وَّجَعَلْنَا الَّیْلَ لِبَاسًا ۟ۙ
وَّجَعَلْنَاஇன்னும் ஆக்கினோம்الَّيْلَஇரவைلِبَاسًا ۙ‏ஆடையாக
வஜ'அல்னல் லய்ல லிBபஸா
அன்றியும், இரவை உங்களுக்கு ஆடையாக ஆக்கினோம்.
وَّجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا ۪۟
وَّجَعَلْنَاஇன்னும் ஆக்கினோம்النَّهَارَபகலைمَعَاشًا‏வாழ்வாக
வஜ'அல்னன் னஹர ம 'ஆஷா
மேலும், பகலை உங்கள் வாழ்க்கை (வசதிகளைத் தேடிக்கொள்ளும் காலம்) ஆக்கினோம்.
وَّبَنَیْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا ۟ۙ
وَّبَنَيْنَاஇன்னும் அமைத்தோம்فَوْقَكُمْஉங்களுக்கு மேல்سَبْعًاஏழு வானங்களைشِدَادًا ۙ‏பலமான
வ Bபனய்னா Fபவ்ககும் ஸBப் 'அன் ஷி தாதா
உங்களுக்குமேல் பலமான ஏழுவானங்களை உண்டாக்கினோம்.
وَّجَعَلْنَا سِرَاجًا وَّهَّاجًا ۟
وَّ جَعَلْنَاஇன்னும் ஆக்கினோம்سِرَاجًاவிளக்கைوَّهَّاجًا ۙ‏பிரகாசிக்கக்கூடிய
வஜ'அல்ன ஸிராஜவ் வஹ் ஹாஜா
ஒளிவீசும் விளக்கை(சூரியனை)யும் (அங்கு) அமைத்தோம்.
وَّاَنْزَلْنَا مِنَ الْمُعْصِرٰتِ مَآءً ثَجَّاجًا ۟ۙ
وَّاَنْزَلْنَاஇன்னும் இறக்கினோம்مِنَ الْمُعْصِرٰتِகார் மேகங்களிலிருந்துمَآءً(மழை) நீரைثَجَّاجًا ۙ‏தொடர்ச்சியாக பொழியக்கூடிய
வ அன்Zஜல்ன மினல் முஃஸிராதி மா-அன் தஜ்-ஜாஜா
அன்றியும், கார்மேகங்களிலிருந்து பொழியும் மழையையும் இறக்கினோம்.
لِّنُخْرِجَ بِهٖ حَبًّا وَّنَبَاتًا ۟ۙ
لِّـنُخْرِجَநாம் உற்பத்தி செய்வதற்காகبِهٖஅதன் மூலம்حَبًّاதானியத்தைوَّنَبَاتًا ۙ‏இன்னும் தாவரத்தை
லினுக் ரிஜ Bபிஹீ ஹBப்Bபவ் வன Bபாதா
அதைக் கொண்டு தானியங்களையும், தாவரங்களையும் நாம் வெளிப்படுத்துவதற்காக.
وَّجَنّٰتٍ اَلْفَافًا ۟ؕ
وَّجَنّٰتٍஇன்னும் தோட்டங்களைاَلْفَافًا ؕ‏அடர்த்தியான
வ ஜன் னாதின் அல்FபFபா
(கிளைகளுடன்) அடர்ந்த சோலைகளையும் (வெளிப்படுத்துவதற்காக).
اِنَّ یَوْمَ الْفَصْلِ كَانَ مِیْقَاتًا ۟ۙ
اِنَّநிச்சயமாகيَوْمَ الْفَصْلِதீர்ப்பு நாள்كَانَஇருக்கிறதுمِيْقَاتًا ۙ‏(நேரம்) குறிப்பிடப்பட்ட காலமாக
இன்ன யவ்மல்-Fபஸ்லி கான மீகாதா
நிச்சயமாகத் தீர்ப்புக்குரிய நாள், நேரங்குறிக்கப்பட்டதாகவே இருக்கிறது.
یَّوْمَ یُنْفَخُ فِی الصُّوْرِ فَتَاْتُوْنَ اَفْوَاجًا ۟ۙ
يَّوْمَ يُنْفَخُஊதப் படுகின்ற நாளில்فِى الصُّوْرِ‘சூர்’ல்فَتَاْتُوْنَஆகவே வருவீர்கள்اَفْوَاجًا ۙ‏கூட்டங்களாக
யவ்ம யுன் Fபகு Fபிஸ்-ஸூரி Fபதா'தூன அFப்வாஜா
ஸூர் (எக்காளம்) ஊதப்படும் அந்நாளில் நீங்கள் அணிஅணியாக வருவீர்கள்.
وَّفُتِحَتِ السَّمَآءُ فَكَانَتْ اَبْوَابًا ۟ۙ
وَّفُتِحَتِஇன்னும் திறக்கப்படும்السَّمَآءُவானம்فَكَانَتْஅது மாறிவிடும்اَبْوَابًا ۙ‏வழிகளாக
வ Fபுதிஹ திஸ் ஸமா-உ Fபகானத் அBப்வாBபா
இன்னும், வானம் திறக்கப்பட்டு பல வாசல்களாகிவிடும்.
وَّسُیِّرَتِ الْجِبَالُ فَكَانَتْ سَرَابًا ۟ؕ
وَّ سُيِّرَتِஇன்னும் அகற்றப்பட்டுவிடும்الْجِبَالُமலைகள்فَكَانَتْஅது மாறிவிடும்سَرَابًا ؕ‏கானல் நீராக
வ ஸுய்யி ராதில் ஜிBபாலு Fப கானத் ஸராBபா
மலைகள் பெயர்க்கப்பட்டு கானல் நீராகிவிடும்.
اِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا ۟
اِنَّ جَهَنَّمَநிச்சயமாக நரகம்كَانَتْஇருக்கிறதுمِرْصَادًا ۙ‏எதிர் பார்க்கக்கூடியதாக
இன்ன ஜஹன் னம கானத் மிர்ஸாதா
நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.
لِّلطَّاغِیْنَ مَاٰبًا ۟ۙ
لِّلطّٰغِيْنَவரம்பு மீறியவர்களைمَاٰبًا ۙ‏தங்குமிடமாக
லித் தா கீன ம ஆBபா
வரம்பு மீறியவர்களுக்குத் தங்குமிடமாக.
لّٰبِثِیْنَ فِیْهَاۤ اَحْقَابًا ۟ۚ
لّٰبِثِيْنَதங்கக்கூடியவர்களாகفِيْهَاۤஅதில்اَحْقَابًا‌ ۚ‏நீண்ட காலங்கள்
லா Bபிதீன Fபீஹா அஹ்காBபா
அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில்.
لَا یَذُوْقُوْنَ فِیْهَا بَرْدًا وَّلَا شَرَابًا ۟ۙ
لَا يَذُوْقُوْنَசுவைக்க மாட்டார்கள்فِيْهَاஅதில்بَرْدًاகுளிர்ச்சியைوَّلَاஇன்னும் இல்லைشَرَابًا ۙ‏ஒரு பானத்தை
லா ய தூகூன Fபீஹா Bபர் தவ் வலா ஷராBபா
அவர்கள் அதில் குளிர்ச்சியையோ, குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள்.
اِلَّا حَمِیْمًا وَّغَسَّاقًا ۟ۙ
اِلَّاதவிரحَمِيْمًاகொதி நீரைوَّغَسَّاقًا ۙ‏இன்னும் சீழ் சலத்தை
இல்லா ஹமீ மவ்-வ கஸ் ஸாகா
கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர.
اِنَّهُمْ كَانُوْا لَا یَرْجُوْنَ حِسَابًا ۟ۙ
اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்كَانُوْاஇருந்தார்கள்لَا يَرْجُوْنَஆதரவு வைக்காதவர்களாகحِسَابًا ۙ‏விசாரிக்கப்படுவதை
இன்னஹும் கானு லா யர்ஜூன ஹிஸாBபா
நிச்சயமாக அவர்கள் கேள்வி கணக்கில் நம்பிக்கை கொள்ளாமலேயே இருந்தனர்.
وَّكَذَّبُوْا بِاٰیٰتِنَا كِذَّابًا ۟ؕ
وَّكَذَّبُوْاஇன்னும் பொய்ப்பித்தார்கள்بِاٰيٰتِنَاநம் வசனங்களைكِذَّابًا ؕ‏அதிகமாகப் பொய்ப்பித்தல்
வ கத்தBபு Bபி ஆயாதினா கித்தாBபா
அன்றியும் அவர்கள் நம் வசனங்களைப் பொய்யெனக் கூறி பொய்யாக்கிக் கொண்டிருந்தார்கள்.
وَكُلَّ شَیْءٍ اَحْصَیْنٰهُ كِتٰبًا ۟ۙ
وَكُلَّ شَىْءٍஇன்னும் எல்லாவற்றையும்اَحْصَيْنٰهُஅவற்றைப் பதிவு செய்தோம்كِتٰبًا ۙ‏எழுதி
வ குல்ல ஷய்-இன் அஹ்ஸய் னாஹு கிதா Bபா
நாம் ஒவ்வொரு பொருளையும் பதிவேட்டில் பதிவு செய்திருக்கின்றோம்.
فَذُوْقُوْا فَلَنْ نَّزِیْدَكُمْ اِلَّا عَذَابًا ۟۠
فَذُوْقُوْاஆகவே சுவையுங்கள்فَلَنْ نَّزِيْدَஅதிகப்படுத்தவே மாட்டோம்كُمْஉங்களுக்குاِلَّاதவிரعَذَابًا‏வேதனையை
Fப தூகூ Fபலன்-னZஜீ தகும் இல்ல்-லா அதாBபா
“ஆகவே சுவையுங்கள் - வேதனையைத் தவிர வேறு எதனையும் உங்களுக்கு நாம் அதிகப் படுத்த மாட்டோம்” (என்று அவர்களுக்குக் கூறப்படும்).  
اِنَّ لِلْمُتَّقِیْنَ مَفَازًا ۟ۙ
اِنَّநிச்சயமாகلِلْمُتَّقِيْنَஅல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்குمَفَازًا ۙ‏வெற்றி
இன்ன லில் முத்த கீன மFபாZஜா
நிச்சயமாக பயபக்தியுடையவர்களுக்கு வெற்றிப் பாக்கியம் இருக்கிறது.
حَدَآىِٕقَ وَاَعْنَابًا ۟ۙ
حَدَآٮِٕقَதோட்டங்கள்وَاَعْنَابًا ۙ‏இன்னும் திராட்சைகள்
ஹதா-இக வ அஃனா Bபா
தோட்டங்களும், திராட்சைப் பழங்களும்.
وَّكَوَاعِبَ اَتْرَابًا ۟ۙ
وَّكَوَاعِبَஇன்னும் மார்பு நிமிர்ந்த கன்னிகள்اَتْرَابًا ۙ‏சம வயதுடைய(வர்கள்)
வ காவ 'இBப அத் ராBபா
ஒரே வயதுள்ள கன்னிகளும்.
وَّكَاْسًا دِهَاقًا ۟ؕ
وَّكَاْسًاஇன்னும் கிண்ணம்دِهَاقًا ؕ‏நிரம்பிய
வ க'ஸன் தி ஹாகா
பானம் நிறைந்த கிண்ணங்களும், (இருக்கின்றன).
لَا یَسْمَعُوْنَ فِیْهَا لَغْوًا وَّلَا كِذّٰبًا ۟ۚ
لَا يَسْمَعُوْنَசெவியுறமாட்டார்கள்فِيْهَاஅதில்لَـغْوًاவீண் பேச்சைوَّلَا كِذّٰبًا‌ ۚ‏இன்னும் பொய்ப்பிப்பதை
லா யஸ்ம'ஊன Fபிஹா லக் வவ் வலா கித்தாBபா
அங்கு அவர்கள் வீணானவற்றையும், பொய்ப்பித்தலையும் கேட்கமாட்டார்கள்.
جَزَآءً مِّنْ رَّبِّكَ عَطَآءً حِسَابًا ۟ۙ
جَزَآءًகூலியாகمِّنْ رَّبِّكَஉமது இறைவனிடமிருந்துعَطَآءًகொடையாகحِسَابًا ۙ‏கணக்கிடப்பட்ட
ஜZஜா-அம் மிர்-ரBப்Bபிக அதா-அன் ஹிஸாBபா
(இது) உம்முடைய இறைவனிடமிருந்து (அளிக்கப் பெறும்) கணக்குப் படியான நன்கொடையாகும்.
رَّبِّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَیْنَهُمَا الرَّحْمٰنِ لَا یَمْلِكُوْنَ مِنْهُ خِطَابًا ۟ۚ
رَّبِّஅதிபதியாகியالسَّمٰوٰتِவானங்கள்وَالْاَرْضِஇன்னும் பூமிوَمَا بَيْنَهُمَاஇன்னும் அவ்விரண்டிற்கும் மத்தியிலுள்ளவற்றின்الرَّحْمٰنِ‌பேரருளாளனாகியلَاமாட்டார்கள்يَمْلِكُوْنَசக்தி பெறمِنْهُஅவனிடம்خِطَابًا‌ ۚ‏பேசுவதற்கு
ரBப்Bபிஸ் ஸமா வாதி வல் அர்ளி வமா Bபய்ன ஹுமர் ரஹ்மானி லா யம் லிகூன மின்ஹு கிதாBபா
(அவனே) வானங்களுக்கும், பூமிக்கும் அவ்விரண்டிற்கும் இடையேயுள்ள வற்றிற்கும் இறைவன்; அர்ரஹ்மான் - அவனிடம் பேச எவரும் அதிகாரம் பெறமாட்டார்கள்.
یَوْمَ یَقُوْمُ الرُّوْحُ وَالْمَلٰٓىِٕكَةُ صَفًّا ۙۗؕ لَّا یَتَكَلَّمُوْنَ اِلَّا مَنْ اَذِنَ لَهُ الرَّحْمٰنُ وَقَالَ صَوَابًا ۟
يَوْمَநாளில்يَقُوْمُநிற்கின்றالرُّوْحُஜிப்ரீல்وَالْمَلٰٓٮِٕكَةُஇன்னும் வானவர்கள்صَفًّا ؕۙவரிசையாகلَّا يَتَكَلَّمُوْنَபேசமாட்டார்கள்اِلَّاதவிரمَنْஎவர்اَذِنَஅனுமதித்தான்لَهُஅவருக்குالرَّحْمٰنُபேரருளாளன்وَقَالَஇன்னும் கூறுவார்صَوَابًا‌‏சரியானதையே
யவ்ம யகூ முர் ரூஹு வல் மலா-இகது ஸFப்-Fபல் லா யதகல்லமூன இல்ல்-லா மன் அதின லஹுர் ரஹ்மானு வ கால ஸவாBபா
ரூஹு (என்ற ஜிப்ரீலு)ம், மலக்குகளும் அணியணியாக நிற்கும் நாளில் அர்ரஹ்மான் எவருக்கு அனுமதி கொடுகிறானோ அவர்களைத் தவிர்த்து வேறெவரும் பேசமாட்டார்கள் - அ(த்தகைய)வரும் நேர்மையானதையே கூறுவார்.
ذٰلِكَ الْیَوْمُ الْحَقُّ ۚ فَمَنْ شَآءَ اتَّخَذَ اِلٰی رَبِّهٖ مَاٰبًا ۟
ذٰلِكَஅதுதான்الْيَوْمُநாள்الْحَـقُّ‌ ۚஉண்மையானفَمَنْஆகவே யார்شَآءَநாடுவாரோاتَّخَذَஆக்கிக்கொள்வார்اِلٰى رَبِّهٖதம் இறைவனருகில்مَاٰبًا‏தங்குமிடத்தை
தாலிகல் யவ்முல் ஹக்கு Fபமன் ஷா-அத் த காத இலா ரBப்Bபிஹி மஆBபா
அந்நாள் சத்தியமானது. ஆகவே, எவர் விரும்புகிறாரோ, அவர் தம் இறைவனிடம் தங்குமிடத்தை ஏற்படுத்திக் கொள்வாராக.
اِنَّاۤ اَنْذَرْنٰكُمْ عَذَابًا قَرِیْبًا ۖۚ۬ یَّوْمَ یَنْظُرُ الْمَرْءُ مَا قَدَّمَتْ یَدٰهُ وَیَقُوْلُ الْكٰفِرُ یٰلَیْتَنِیْ كُنْتُ تُرٰبًا ۟۠
اِنَّاۤநிச்சயமாக நாம்اَنْذَرْنٰـكُمْஉங்களை எச்சரித்தோம்عَذَابًاஒரு வேதனையைப் பற்றிقَرِيْبًا ۖۚ சமீபமானيَّوْمَநாளில்يَنْظُرُபார்க்கின்றالْمَرْءُமனிதன்مَا قَدَّمَتْமுற்படுத்தியவற்றைيَدٰهُதனது இரு கரங்கள்وَيَقُوْلُஇன்னும் கூறுவான்الْـكٰفِرُநிராகரிப்பாளன்يٰلَيْتَنِىْ كُنْتُநான் ஆகவேண்டுமேتُرٰبًا‏மண்ணாக
இன் னா அன்தர் னாகும் அதாBபன் கரீBபய்ய்-யவ்ம யன் ளுருல் மர்ர்-உ மா கத்தமத் யதாஹு வ ய கூலுல்-காFபிரு யா லய் தனீ குன்து துராBபா
நிச்சயமாக, நெருங்கி வரும் வேதனையைப்பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம் - மனிதன் தன் இரு கைகளும் செய்து முற்படுத்தியவற்றை - அமல்களை - அந்நாளில் கண்டு கொள்வான் - மேலும் காஃபிர் “அந்தோ கைசேதமே! நான் மண்ணாகிப் போயிருக்க வேண்டுமே!” என்று (பிரலாபித்துக்) கூறுவான்.