51. ஸூரத்துத் தாரியாத் (புழுதியைக் கிளப்பும் காற்றுகள்)

மக்கீ, வசனங்கள்: 60

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
وَالذّٰرِیٰتِ ذَرْوًا ۟ۙ
وَ الذّٰرِیٰتِசிதறடிப்பவற்றின் மீது சத்தியமாகذَرْوًاۙசிதறடித்தலாக
வத்-தாரியாதி தர்வா
(புழுதியைக் எழுப்பி) நன்கு பரத்தும் (காற்றுகள்) மீது சத்தியமாக!
فَالْحٰمِلٰتِ وِقْرًا ۟ۙ
فَالْحٰمِلٰتِபின்னர் சுமப்பவற்றின் மீதுوِقْرًاۙசுமையை
Fபல்ஹாமிலாதி விக்ரா
(மழைச்)சுமையைச் சுமந்து செல்பவற்றின் மீதும்,
فَالْجٰرِیٰتِ یُسْرًا ۟ۙ
فَالْجٰرِیٰتِபின்னர் மிதந்து செல்பவற்றின் மீதுیُسْرًاۙஎளிதாக
Fபல்ஜாரியாதி யுஸ்ரா
பின்னர் (கடலில்) இலேசாகச் செல்பவற்றின் மீதும்,
فَالْمُقَسِّمٰتِ اَمْرًا ۟ۙ
فَالْمُقَسِّمٰتِபங்கிடுபவைاَمْرًاۙகாரியத்தை
Fபல்முகஸ்ஸிமாதி அம்ரா
(பூமியிலுள்ளோருக்கு விதியானவற்றை அல்லாஹ்வின்) கட்டளைப்படி பங்கிடுவோர் மீதும் சத்தியமாக
اِنَّمَا تُوْعَدُوْنَ لَصَادِقٌ ۟ۙ
اِنَّمَاநிச்சயமாகتُوْعَدُوْنَஉங்களுக்கு வாக்களிக்கப்படுவதுلَصَادِقٌۙஉண்மையானதே
இன்னமா தூ'அதூன ல-ஸாதிக்
நிச்சயமாக நீங்கள் வாக்களிக்கப் படுவதெல்லாம் உண்மையேயாகும்.
وَّاِنَّ الدِّیْنَ لَوَاقِعٌ ۟ؕ
وَّ اِنَّமேலும் நிச்சயமாகالدِّیْنَதீர்ப்புلَوَاقِعٌؕநிகழக்கூடியதே
வ இன்னத் தீன ல வாகி'
அன்றியும், (நன்மை, தீமைக்குரிய) கூலி வழங்குவதும் நிச்சயமாக நிகழ்வதேயாகும்.
وَالسَّمَآءِ ذَاتِ الْحُبُكِ ۟ۙ
وَ السَّمَآءِவானத்தின் மீது சத்தியமாகذَاتِஉடையالْحُبُكِۙபாதைகளை
வஸ்ஸமா'இ தாதில் ஹுBபுக்
அழகு நிரம்பிய வானத்தின் மீது சத்தியமாக!
اِنَّكُمْ لَفِیْ قَوْلٍ مُّخْتَلِفٍ ۟ۙ
اِنَّكُمْநிச்சயமாக நீங்கள்لَفِیْஉறுதியாகقَوْلٍகூற்றில்مُّخْتَلِفٍۙமுரண்பட்ட
இன்னகும் லFபீ கவ்லிம் முக்தலிFப்
நீங்கள் (குர்ஆனைப் பற்றி) முரண்பட்ட பேச்சிலேயே இருக்கின்றீர்கள்.
یُّؤْفَكُ عَنْهُ مَنْ اُفِكَ ۟ؕ
یُّؤْفَكُதிருப்பப்படுகிறார்عَنْهُஅதிலிருந்துمَنْஎவர்اُفِكَؕதிருப்பப்பட்டாரோ
யு'Fபகு 'அன்ஹு மன் உFபிக்
அ(வ் வேதத்)திலிருந்து திருப்பப்பட்டவன் (இப்பொழுதும்) திருப்பப்படுகிறான்.
قُتِلَ الْخَرّٰصُوْنَ ۟ۙ
قُتِلَஅழிவார்களாகالْخَرّٰصُوْنَۙபொய்யர்கள்
குதிலல் கர்ராஸூன்
பொய் சொல்பவர்கள் அழிந்தே போவார்கள்.
الَّذِیْنَ هُمْ فِیْ غَمْرَةٍ سَاهُوْنَ ۟ۙ
الَّذِیْنَஎவர்கள்هُمْஅவர்கள்فِیْஇல்غَمْرَةٍஅறியாமையில்سَاهُوْنَۙஅலட்சியமாக இருக்கிறார்களோ
அல்லதீன ஹும் Fபீ கம்ரதின் ஸாஹூன்
அவர்கள் எத்தகையோரென்றால் மடமையினால் மறதியில் இருக்கின்றனர்.
یَسْـَٔلُوْنَ اَیَّانَ یَوْمُ الدِّیْنِ ۟ؕ
یَسْـَٔلُوْنَஅவர்கள் கேட்கிறார்கள்اَیَّانَஎப்பொழுதுیَوْمُநாள்الدِّیْنِؕதீர்ப்பு
யஸ்'அலூன அய்யான யவ்முத் தீன்
(நன்மை, தீமைக்குக்) “கூலி கொடுக்கும் நாள் எப்போது வரும்?” என்று அவர்கள் கேட்கின்றனர்.
یَوْمَ هُمْ عَلَی النَّارِ یُفْتَنُوْنَ ۟
یَوْمَஅந்நாளில்هُمْஅவர்கள்عَلَیமீதுالنَّارِநெருப்பின்یُفْتَنُوْنَவேதனை செய்யப்படுவார்கள்
யவ்ம ஹும் 'அலன் னாரி யுFப்தனூன்
நெருப்பிலே அவர்கள் சோதிக்கப்படும் நாளாகும் அது (என்று நபியே! நீர் கூறும்).
ذُوْقُوْا فِتْنَتَكُمْ ؕ هٰذَا الَّذِیْ كُنْتُمْ بِهٖ تَسْتَعْجِلُوْنَ ۟
ذُوْقُوْاசுவையுங்கள்فِتْنَتَكُمْ ؕஉங்கள் வேதனையைهٰذَاஇதுதான்الَّذِیْஎதனைكُنْتُمْநீங்கள்بِهٖஅதற்காகتَسْتَعْجِلُوْنَஅவசரப்பட்டுக் கொண்டிருந்தீர்களோ
தூகூ Fபித்னதகும் ஹா தல் லதீ குன்தும் Bபிஹீ தஸ் தஃஜிலூன்
“உங்களுடைய சோதனையைச் சுவைத்துப் பாருங்கள்;” எதனை நீங்கள் அவசரப்படுத்திக் கொண்டிருந்தீர்களோ, இதுதான்.
اِنَّ الْمُتَّقِیْنَ فِیْ جَنّٰتٍ وَّعُیُوْنٍ ۟ۙ
اِنَّநிச்சயமாகالْمُتَّقِیْنَஇறையச்சமுடையவர்கள்فِیْஇல்جَنّٰتٍசுவனச்சோலைகள்وَّ عُیُوْنٍۙமற்றும் நீரூற்றுகள்
இன்னல் முத்தகீன Fபீ ஜன்னாதி(ன்)வ் வ 'உயூன்
நிச்சயமாக பயபக்தியுடையவர்கள், (சுவர்க்கத்தின்) சோலைகளிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள்.
اٰخِذِیْنَ مَاۤ اٰتٰىهُمْ رَبُّهُمْ ؕ اِنَّهُمْ كَانُوْا قَبْلَ ذٰلِكَ مُحْسِنِیْنَ ۟ؕ
اٰخِذِیْنَபெற்றுக்கொண்டவர்களாகمَاۤஎதைاٰتٰىهُمْஅவர்களுக்கு வழங்கினானோرَبُّهُمْ ؕஅவர்களின் இறைவன்اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்كَانُوْاஇருந்தார்கள்قَبْلَமுன்னர்ذٰلِكَஅதற்குمُحْسِنِیْنَؕநன்மை செய்பவர்களாக
ஆகிதீன மா ஆதாஹும் ரBப்Bபுஹும்; இன்னஹும் கானூ கBப்ல தாலிக முஹ்ஸினீன்
அவர்கள் தங்களிறைவன் அவர்களுக்கு அளித்ததை (திருப்தியுடன்) பெற்றுக் கொள்வார்கள்; நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் நன்மை செய்வோராகவே இருந்தனர்.
كَانُوْا قَلِیْلًا مِّنَ الَّیْلِ مَا یَهْجَعُوْنَ ۟
كَانُوْاஅவர்கள் இருந்தார்கள்قَلِیْلًاசொற்பமாகمِّنَஇருந்துالَّیْلِஇரவுمَاஅன்றிیَهْجَعُوْنَஅவர்கள் உறங்குவார்கள்
கானூ கலீலம் மினல் லய்லி மா யஹ்ஜ'ஊன்
அவர்கள் இரவில் மிகவும் சொற்ப நேரமேயன்றித் தூங்கமாட்டார்கள்.
وَبِالْاَسْحَارِ هُمْ یَسْتَغْفِرُوْنَ ۟
وَ بِالْاَسْحَارِமேலும் விடியற்காலங்களில்هُمْஅவர்கள்یَسْتَغْفِرُوْنَபாவமன்னிப்புத் தேடுவார்கள்
வ Bபில் அஸ் ஹாரி ஹும் யஸ்தக்Fபிரூன்
அவர்கள் விடியற் காலங்களில் (பிரார்த்தனைகளின் போது இறைவனிடம்) மன்னிப்புக் கோரிக் கொண்டிருப்பார்கள்.
وَفِیْۤ اَمْوَالِهِمْ حَقٌّ لِّلسَّآىِٕلِ وَالْمَحْرُوْمِ ۟
وَ فِیْۤஇன்னும்اَمْوَالِهِمْஅவர்களின் செல்வங்களில்حَقٌّபங்குلِّلسَّآىِٕلِயாசிப்பவருக்கும்وَ الْمَحْرُوْمِவறியவருக்கும்
வ Fபீ அம்வாலிஹிம் ஹக்குல் லிஸ்ஸா'இலி வல்மஹ்ரூம்
அவர்களுடைய செல்வத்தில் இரப்போருக்கும், வசதியற்றோருக்கும் பாத்தியதை உண்டு.
وَفِی الْاَرْضِ اٰیٰتٌ لِّلْمُوْقِنِیْنَ ۟ۙ
وَ فِیமேலும்الْاَرْضِபூமியில்اٰیٰتٌஅத்தாட்சிகள்لِّلْمُوْقِنِیْنَۙஉறுதியாக நம்புவோருக்கு
வ Fபில் அர்ளி ஆயாதுல் லில்மூகினீன்
உறுதியாக நம்பிக்கை கொண்டவர்களுக்கு பூமியில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.
وَفِیْۤ اَنْفُسِكُمْ ؕ اَفَلَا تُبْصِرُوْنَ ۟
وَ فِیْۤமேலும்اَنْفُسِكُمْ ؕஉங்களுக்குள்ளும்اَفَلَاஆகவே, நீங்கள்تُبْصِرُوْنَஉற்று நோக்க மாட்டீர்களா?
வ Fபீ அன்Fபுஸிகும்; அFபலா துBப்ஸிரூன்
உங்களுக்குள்ளேயும் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன; (அவற்றை) நீங்கள் உற்று நோக்க வேண்டாமா?
وَفِی السَّمَآءِ رِزْقُكُمْ وَمَا تُوْعَدُوْنَ ۟
وَ فِیமேலும் ...-இல்السَّمَآءِவானம்رِزْقُكُمْஉங்கள் வாழ்வாதாரம்وَ مَاமேலும் எதுتُوْعَدُوْنَநீங்கள் வாக்களிக்கப்படுகிறீர்களோ
வ Fபிஸ்ஸமா'இ ரிZஜ்குகும் வமா தூ'அதூன்
அன்றியும் வானத்தில் உங்கள் உணவும், (மற்றும்) நீங்கள் வாக்களிக்கப் பட்டவையும் இருக்கின்றன.
فَوَرَبِّ السَّمَآءِ وَالْاَرْضِ اِنَّهٗ لَحَقٌّ مِّثْلَ مَاۤ اَنَّكُمْ تَنْطِقُوْنَ ۟۠
فَوَرَبِّஎனவே, இறைவன் மீது சத்தியமாகالسَّمَآءِவானத்தின்وَ الْاَرْضِமற்றும் பூமியின்اِنَّهٗநிச்சயமாக அதுلَحَقٌّஉண்மையானதாகும்مِّثْلَபோலவேمَاۤஎவ்வாறுاَنَّكُمْநீங்கள்تَنْطِقُوْنَ۠பேசுகிறீர்களோ
Fபவ ரBப்Bபிஸ் ஸமா'இ வல் அர்ளி இன்னஹூ லஹக்கும் மித்ல மா அன்னகும் தன்திகூன்
ஆகவே, வானங்கள், பூமி ஆகியவற்றின் இறைவன் மீது ஆணையாக! நீங்கள் பேசிக்கொண்டிருப்பது உங்கள் வார்த்தையாக இருப்பது போன்று இது பிரத்தியட்சமான உண்மையாகும்.  
هَلْ اَتٰىكَ حَدِیْثُ ضَیْفِ اِبْرٰهِیْمَ الْمُكْرَمِیْنَ ۟ۘ
هَلْவந்ததா?اَتٰىكَஉமக்குحَدِیْثُசெய்திضَیْفِவிருந்தினர்களின்اِبْرٰهِیْمَஇப்ராஹீமின்الْمُكْرَمِیْنَۘகண்ணியப்படுத்தப்பட்டவர்களின்
ஹல் அதாக ஹதீது ளய்Fபி இBப்ராஹீமல் முக்ரமீன்
இப்ராஹீமின் கண்ணியம் மிக்க விருந்தினர்களின் செய்தி உமக்கு வந்ததா?
اِذْ دَخَلُوْا عَلَیْهِ فَقَالُوْا سَلٰمًا ؕ قَالَ سَلٰمٌ ۚ قَوْمٌ مُّنْكَرُوْنَ ۟
اِذْபோதுدَخَلُوْاஅவர்கள் நுழைந்தعَلَیْهِஅவரிடம்فَقَالُوْاஅவர்கள் கூறினார்கள்سَلٰمًا ؕஸலாம்قَالَஅவர் கூறினார்سَلٰمٌ ۚஸலாம்قَوْمٌமக்கள்مُّنْكَرُوْنَۚஅறிமுகமில்லாதவர்கள்
இத் தகலூ 'அலய்ஹி Fபகாலூ ஸலாமன் கால ஸலாமுன் கவ்மும் முன்கரூன்
அவர்கள், அவரிடம் பிரவேசித்த போது, (அவரை நோக்கி: “உங்களுக்கு) “ஸலாம்” என்று கூறினார்கள்; (அதற்கவர்), “(உங்களுக்கு) “ஸலாம்” என்று கூறினார். “இவர்கள் (நமக்கு) அறிமுகமில்லா சமூகத்தாராக (இருக்கின்றார்களே” என்று எண்ணிக் கொண்டார்).
فَرَاغَ اِلٰۤی اَهْلِهٖ فَجَآءَ بِعِجْلٍ سَمِیْنٍ ۟ۙ
فَرَاغَபின் அவர் சென்றார்اِلٰۤیநோக்கிاَهْلِهٖதன் குடும்பத்தாரைفَجَآءَபின் அவர் கொண்டு வந்தார்بِعِجْلٍஒரு கன்றுக்குட்டியைسَمِیْنٍۙகொழுத்த
Fபராக இலா அஹ்லிஹீ Fபஜா'அ Bபி'இஜ்லின் ஸமீன்
எனினும் அவர் தம் குடும்பத்தாரிடம் விரைந்து சென்று, ஒரு கொழுத்த காளைக் கன்றை(ப் பொறித்துக்) கொண்டு வந்தார்.
فَقَرَّبَهٗۤ اِلَیْهِمْ قَالَ اَلَا تَاْكُلُوْنَ ۟ؗ
فَقَرَّبَهٗۤபின்பு அதை அவர் நெருக்கினார்اِلَیْهِمْஅவர்களிடம்قَالَஅவர் கூறினார்اَلَاஏன்تَاْكُلُوْنَؗநீங்கள் உண்ணமாட்டீர்களா?
Fபகர்ரBபஹூ இலய்ஹிம் கால அலா தா'குலூன்
அதை அவர்கள் முன் வைத்து, “நீங்கள் புசிக்க மாட்டீர்களா?” என்று கூறினார்.
فَاَوْجَسَ مِنْهُمْ خِیْفَةً ؕ قَالُوْا لَا تَخَفْ ؕ وَبَشَّرُوْهُ بِغُلٰمٍ عَلِیْمٍ ۟
فَاَوْجَسَஎனவே அவர் உணர்ந்தார்مِنْهُمْஅவர்களிடமிருந்துخِیْفَةً ؕஓர் அச்சத்தைقَالُوْاஅவர்கள் கூறினார்கள்لَاவேண்டாம்تَخَفْ ؕஅஞ்சாதீர்وَ بَشَّرُوْهُமேலும் அவருக்கு நற்செய்தி கூறினார்கள்بِغُلٰمٍஓர் ஆண் குழந்தையைப் பற்றிعَلِیْمٍஞானமுள்ள
Fப அவ்ஜஸ மின்ஹும் கீ Fபதன் காலூ லா தகFப் வ Bபஷ்ஷரூஹு Bபிகுலாமின் 'அலீம்
(அவர்கள் அதைப் புசிக்காததால்,) அவருக்கு இவர்களைப் பற்றி உள்ளூர ஓர் அச்சம் ஏற்பட்டது, “(இதனை அறிந்த) அவர்கள், பயப்படாதீர்!” எனக் கூறினர்; அன்றியும், அவருக்கு அறிவு மிக்க புதல்வர் (பிறப்பார்) என்று நன்மாராயங் கூறினர்.
فَاَقْبَلَتِ امْرَاَتُهٗ فِیْ صَرَّةٍ فَصَكَّتْ وَجْهَهَا وَقَالَتْ عَجُوْزٌ عَقِیْمٌ ۟
فَاَقْبَلَتِஅப்பொழுது முன்வந்தாள்امْرَاَتُهٗஅவருடைய மனைவிفِیْஒருصَرَّةٍசத்தத்துடன்فَصَكَّتْஅறைந்து கொண்டாள்وَجْهَهَاதன் முகத்தைوَ قَالَتْமேலும் கூறினாள்عَجُوْزٌகிழவிعَقِیْمٌமலடி
Fப அக்Bபலதிம் ர-அதுஹூ Fபீ ஸர்ரதின் Fபஸக்கத் வஜ்ஹஹா வ காலத் 'அஜூZஜுன் 'அகீம்
பின்னர் இதைக்கேட்ட அவருடைய மனைவியார் சப்தமிட்டவராக (அவர்கள்) எதிரில் வந்து, தம் முகத்தில் அடித்துக் கொண்டு “நான் மலட்டுக் கிழவியாயிற்றே!” என்று கூறினார்.
قَالُوْا كَذٰلِكِ ۙ قَالَ رَبُّكِ ؕ اِنَّهٗ هُوَ الْحَكِیْمُ الْعَلِیْمُ ۟
قَالُوْاஅவர்கள் கூறினார்கள்كَذٰلِكِ ۙஅவ்வாறேقَالَகூறினான்رَبُّكِ ؕஉனது இறைவன்اِنَّهٗநிச்சயமாக அவன்هُوَஅவன்الْحَكِیْمُஞானமிக்கவன்الْعَلِیْمُநன்கறிந்தவன்
காலூ கதாலிகி கால ரBப்Bபுகி இன்னஹூ ஹுவல் ஹகீமுல் 'அலீம்
(அறிவு மிக்க புதல்வர் பிறப்பார் என்று:) “இவ்வாறே உம் இறைவன் கூறினான், நிச்சயமாக அவன் ஞானம் மிக்கவன்; (யாவற்றையும்,) நன்கறிந்தவன்” என்று கூறினார்கள்.  
قَالَ فَمَا خَطْبُكُمْ اَیُّهَا الْمُرْسَلُوْنَ ۟
قَالَகூறினார்فَمَاஅப்படியானால் என்னخَطْبُكُمْஉங்கள் காரியம்اَیُّهَاالْمُرْسَلُوْنَதூதர்களே
கால Fபமா கத்Bபுகும் அய்யுஹல் முர்ஸலூன்
(பின்னர் இப்ராஹீம்:) “தூதர்களே! உங்களுடைய காரியம் என்ன?” என்று வினவினார்.
قَالُوْۤا اِنَّاۤ اُرْسِلْنَاۤ اِلٰی قَوْمٍ مُّجْرِمِیْنَ ۟ۙ
قَالُوْۤاஅவர்கள் கூறினார்கள்اِنَّاۤநிச்சயமாக நாங்கள்اُرْسِلْنَاۤஅனுப்பப்பட்டுள்ளோம்اِلٰیநோக்கிقَوْمٍஒரு சமூகத்தைمُّجْرِمِیْنَۙகுற்றவாளிகளான
காலூ இன்னா உர்ஸில்னா இலா கவ்மிம் முஜ்ரிமீன்
“குற்றவாளிகளான ஒரு சமூகத்தினர் பால் நாங்கள் நிச்சயமாக அனுப்பப்பட்டிருக்கிறோம்” என்று அவர்கள் கூறினார்கள்.
لِنُرْسِلَ عَلَیْهِمْ حِجَارَةً مِّنْ طِیْنٍ ۟ۙ
لِنُرْسِلَநாம் அனுப்புவதற்காகعَلَیْهِمْஅவர்கள் மீதுحِجَارَةًகற்களைمِّنْஇருந்துطِیْنٍۙகளிமண்
லினுர்ஸில 'அலய்ஹிம் ஹிஜா ரதம் மின் தீன்
“அவர்கள் மீது (சுட்ட) களிமண் கற்களை எறிவதற்காக (நாங்கள் அனுப்பப்பட்டுள்ளோம்)-
مُّسَوَّمَةً عِنْدَ رَبِّكَ لِلْمُسْرِفِیْنَ ۟
مُّسَوَّمَةًஅடையாளமிடப்பட்டعِنْدَஇடத்தில்رَبِّكَஉம் இறைவனின்لِلْمُسْرِفِیْنَவரம்பு மீறியவர்களுக்காக
முஸவ்வமதன் 'இன்த ரBப்Bபிக லில்முஸ்ரிFபீன்
“வரம்பு மீறியவர்களுக்காக உங்கள் இறைவனிடம் (அக்கற்கள்) அடையாள மிடப்பட்டவை.”
فَاَخْرَجْنَا مَنْ كَانَ فِیْهَا مِنَ الْمُؤْمِنِیْنَ ۟ۚ
فَاَخْرَجْنَاஎனவே நாம் வெளியேற்றினோம்مَنْஎவர்كَانَஇருந்தாரோفِیْهَاஅதில்مِنَஇருந்துالْمُؤْمِنِیْنَۚஇறைநம்பிக்கையாளர்களில்
Fப அக்ரஜ்னா மன் கான Fபீஹா மினல் மு'மினீன்
ஆகவே அவ்வூரில் இருந்த முஃமின்களை (முதலில்) நாம் வெளியேற்றி விட்டோம்.
فَمَا وَجَدْنَا فِیْهَا غَیْرَ بَیْتٍ مِّنَ الْمُسْلِمِیْنَ ۟ۚ
فَمَاஎனவே இல்லைوَجَدْنَاநாம் கண்டோம்فِیْهَاஅதில்غَیْرَதவிரبَیْتٍஒரு வீட்டைمِّنَஇருந்துالْمُسْلِمِیْنَۚமுஸ்லிம்களில்
Fபமா வஜத்னா Fபீஹா கய்ர Bபய்திம் மினல் முஸ்லிமீன்
எனவே, அதில் முஸ்லிம்களிலிருந்து ஒரு வீட்டாரைத் தவிர, ஒருவரையும் நாம் காணவில்லை.
وَتَرَكْنَا فِیْهَاۤ اٰیَةً لِّلَّذِیْنَ یَخَافُوْنَ الْعَذَابَ الْاَلِیْمَ ۟ؕ
وَ تَرَكْنَاமேலும் நாம் விட்டு வைத்தோம்فِیْهَاۤஅதில்اٰیَةًஓர் அத்தாட்சியைلِّلَّذِیْنَஎவர்களுக்குیَخَافُوْنَஅஞ்சுகிறார்களோالْعَذَابَவேதனையைالْاَلِیْمَؕநோவினை தரும்
வ தரக்னா Fபீஹா ஆயதல் லில்லதீன யகாFபூனல் 'அதாBபல் அலீம்
நோவினை தரும் வேதனையை அஞ்சுகிறார்களே அவர்களுக்கு நாம் இதில் ஓர் அத்தாட்சியை விட்டு வைத்தோம்.
وَفِیْ مُوْسٰۤی اِذْ اَرْسَلْنٰهُ اِلٰی فِرْعَوْنَ بِسُلْطٰنٍ مُّبِیْنٍ ۟
وَ فِیْஇன்னும்مُوْسٰۤیமூஸாவிலும்اِذْபோதுاَرْسَلْنٰهُநாம் அவரை அனுப்பினோம்اِلٰیபால்فِرْعَوْنَஃபிர்அவ்னிடம்بِسُلْطٰنٍஓர் ஆதாரத்துடன்مُّبِیْنٍதெளிவான
வ Fபீ மூஸா இத் அர்ஸல்னாஹு இலா Fபிர்'அவ்ன Bபிஸுல்தா னிம் முBபீன்
மேலும், மூஸாவி(ன் வரலாற்றி)லும் ஓர் அத்தாட்சி இருக்கிறது; நாம் அவரைத் தெளிவான ஆதாரத்துடன் ஃபிர்அவ்னிடத்தில் அனுப்பிய போது:
فَتَوَلّٰی بِرُكْنِهٖ وَقَالَ سٰحِرٌ اَوْ مَجْنُوْنٌ ۟
فَتَوَلّٰیஎனவே அவன் புறக்கணித்தான்بِرُكْنِهٖதனது பலத்துடன்وَ قَالَமேலும் கூறினான்سٰحِرٌசூனியக்காரன்اَوْஅல்லதுمَجْنُوْنٌபைத்தியக்காரன்
Fபதவல்ல Bபிருக்னிஹீ வ கால ஸாஹிருன் அவ் மஜ்னூன்
அவன் தன் (ஆட்சி, செல்வம், படைகள் ஆகியவற்றின்) வல்லமையின் காரணமாக (அவரைப்) புறக்கணித்து: “இவர் ஒரு சூனியக்காரர், அல்லது பைத்தியக்காரர்” என்று கூறினான்.
فَاَخَذْنٰهُ وَجُنُوْدَهٗ فَنَبَذْنٰهُمْ فِی الْیَمِّ وَهُوَ مُلِیْمٌ ۟ؕ
فَاَخَذْنٰهُஆகவே நாம் அவனைப் பிடித்தோம்وَ جُنُوْدَهٗஅவனுடைய படைகளையும்فَنَبَذْنٰهُمْபின்னர் அவர்களை நாம் எறிந்தோம்فِیஉள்ளேالْیَمِّகடலில்وَ هُوَஅவனோمُلِیْمٌؕபழிக்குரியவனாக இருந்தான்
Fப அகத்னாஹு வ ஜுனூ தஹூ FபனBபத்னாஹும் Fபில் யம்மி வ ஹுவ முலீம்
ஆகவே, நாம் அவனையும், அவனுடைய படைகளையும் பிடித்து அவர்களைக் கடலில் எறிந்தோம்; அவன் நிந்தனைக்கும் ஆளாகி விட்டான்.
وَفِیْ عَادٍ اِذْ اَرْسَلْنَا عَلَیْهِمُ الرِّیْحَ الْعَقِیْمَ ۟ۚ
وَ فِیْமேலும் ...-ல்عَادٍஆது (சமூகத்தார்)اِذْபோதுاَرْسَلْنَاநாம் அனுப்பினோம்عَلَیْهِمُஅவர்கள் மீதுالرِّیْحَகாற்றைالْعَقِیْمَۚநாசமாக்கும்
வ Fபீ 'ஆதின் இத் அர்ஸல்னா 'அலய்ஹிமுர் ரீஹல்'அகீம்
இன்னும், “ஆது” (சமூகத்தாரிலும் ஒரு படிப்பினை இருக்கிறது); நாம் அவர்கள் மீது (நாசம் விளைவிக்கக் கூடிய) மலட்டுக்காற்றை அனுப்பிய போது;
مَا تَذَرُ مِنْ شَیْءٍ اَتَتْ عَلَیْهِ اِلَّا جَعَلَتْهُ كَالرَّمِیْمِ ۟ؕ
مَاஇல்லைتَذَرُஅது விட்டுவைக்கمِنْஎந்தشَیْءٍஒரு பொருளையும்اَتَتْஅது வந்ததோعَلَیْهِஅதன் மீதுاِلَّاதவிரجَعَلَتْهُஅதை ஆக்கியதைكَالرَّمِیْمِؕமக்கிப்போன தூளைப் போல்
மா ததரு மின் ஷய்'இன் அதத் 'அலய்ஹி இல்லா ஜ'அலத் ஹு கர்ரமீம்
அ(க்காற்றான)து தன் எதிரில் பட்டதையெல்லாம் தூள் தூளாக்காமல் விடவில்லை.
وَفِیْ ثَمُوْدَ اِذْ قِیْلَ لَهُمْ تَمَتَّعُوْا حَتّٰی حِیْنٍ ۟
وَ فِیْமேலும்ثَمُوْدَஸமூது (கூட்டத்தாரிடமும்)اِذْபோதுقِیْلَகூறப்பட்டதுلَهُمْஅவர்களுக்குتَمَتَّعُوْاசுகம் அனுபவியுங்கள்حَتّٰیவரைحِیْنٍசிறிது காலம்
வ Fபீ தமூத இத் கீல லஹும் தமத்த''ஊ ஹத்தா ஹீன்
மேலும் “ஸமூது” (சமூகத்தாரிலும் ஒரு படிப்பினை இருக்கிறது); “ஒரு காலம் சுகம் அனுபவியுங்கள்” என்று அவர்களுக்குக் கூறப்பட்டபோது:
فَعَتَوْا عَنْ اَمْرِ رَبِّهِمْ فَاَخَذَتْهُمُ الصّٰعِقَةُ وَهُمْ یَنْظُرُوْنَ ۟
فَعَتَوْاஅவர்கள் மீறினார்கள்عَنْவிட்டுاَمْرِகட்டளையைرَبِّهِمْதங்கள் இறைவனின்فَاَخَذَتْهُمُஎனவே அவர்களைப் பிடித்ததுالصّٰعِقَةُபேரிடிوَ هُمْஅவர்கள்یَنْظُرُوْنَபார்த்துக் கொண்டிருக்கும்போதே
Fப'அதவ் 'அன் அம்ரி ரBப்Bபிஹிம் Fப அகதத் ஹுமுஸ் ஸா'இகது வ ஹும் யன்ளுரூன்
அவர்கள் தங்கள் இறைவனுடைய கட்டளையை மீறினார்கள்; அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே (நில நடுக்கம் பேரிடி போன்ற) பயங்கரமான பெரும் சப்தம் அவர்களைப் பிடித்துக் கொண்டது.
فَمَا اسْتَطَاعُوْا مِنْ قِیَامٍ وَّمَا كَانُوْا مُنْتَصِرِیْنَ ۟ۙ
فَمَاஎனவே இல்லைاسْتَطَاعُوْاஅவர்களால் முடிந்ததுمِنْஎந்தقِیَامٍஎழுந்து நிற்கوَّ مَاமேலும் இல்லைكَانُوْاஅவர்கள் இருந்தார்கள்مُنْتَصِرِیْنَۙதற்காத்துக் கொள்பவர்களாக
Fபமஸ் ததா'ஊ மின் கியாமி(ன்)வ் வமா கானூ முன்தஸிரீன்
ஆகவே, அவர்கள் நிற்கவும் சக்தி பெற்றார்களில்லை; (எத்தகைய) உதவியும் பெற்றுக் கொள்ள முடியாதவர்களா(க மடிந்து) போயினர்.
وَقَوْمَ نُوْحٍ مِّنْ قَبْلُ ؕ اِنَّهُمْ كَانُوْا قَوْمًا فٰسِقِیْنَ ۟۠
وَ قَوْمَமேலும் சமூகத்தாரைنُوْحٍநூஹுடையمِّنْஇதற்குقَبْلُ ؕமுன்னர்اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்كَانُوْاஇருந்தார்கள்قَوْمًاஒரு சமூகமாகفٰسِقِیْنَ۠வரம்பு மீறியவர்களாக
வ கவ்ம னூஹிம் மின் கBப்லு இன்னஹும் கானூ கவ்மன் Fபாஸிகீன்
அன்றியும், இவர்களுக்கு முன்னால் நூஹுடைய சமூகத்தாரையும் (நினைவூட்டுவீராக); நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் சமூகத்தாராகவே இருந்தார்கள்.
وَالسَّمَآءَ بَنَیْنٰهَا بِاَیْىدٍ وَّاِنَّا لَمُوْسِعُوْنَ ۟
وَ السَّمَآءَமேலும் வானத்தைبَنَیْنٰهَاநாம் அதனை அமைத்தோம்بِاَیْىدٍவல்லமையைக் கொண்டுوَّ اِنَّاமேலும் நிச்சயமாக நாம்لَمُوْسِعُوْنَவிரிவுபடுத்துபவர்கள்
வஸ்ஸமா'அ Bபனய்னா ஹா Bபி அய்தி(ன்)வ் வ இன்னா லமூஸி'ஊன்
மேலும், நாம் வானத்தை (நம்) சக்திகளைக் கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக நாம் விரிவாற்றலுடையவராவோம்.
وَالْاَرْضَ فَرَشْنٰهَا فَنِعْمَ الْمٰهِدُوْنَ ۟
وَ الْاَرْضَபூமியையும்فَرَشْنٰهَاநாம் அதனை விரித்தோம்فَنِعْمَஆகவே, மிகச் சிறந்தالْمٰهِدُوْنَவிரிப்பவர்கள்
வல் அர்ள Fபரஷ்னாஹா Fபனிஃமல் மாஹிதூன்
இன்னும், பூமியை - நாம் அதனை விரித்தோம்; எனவே, இவ்வாறு விரிப்பவர்களில் நாமே மேம்பாடுடையோம்.
وَمِنْ كُلِّ شَیْءٍ خَلَقْنَا زَوْجَیْنِ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ ۟
وَ مِنْமேலும், இருந்துكُلِّஒவ்வொருشَیْءٍபொருளையும்خَلَقْنَاநாம் படைத்தோம்زَوْجَیْنِஇணைகளாகلَعَلَّكُمْநீங்கள்تَذَكَّرُوْنَசிந்தித்து உணர்வதற்காக
வ மின் குல்லி ஷய்'இன் கலக்னா Zஜவ்ஜய்னி ல'அல்லகும் ததக்கரூன்
நீங்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறுவதற்காக ஒவ்வொரு பொருளையும் ஜோடி ஜோடியாக நாம் படைத்தோம்.
فَفِرُّوْۤا اِلَی اللّٰهِ ؕ اِنِّیْ لَكُمْ مِّنْهُ نَذِیْرٌ مُّبِیْنٌ ۟ۚ
فَفِرُّوْۤاஎனவே விரைந்து செல்லுங்கள்اِلَیநோக்கிاللّٰهِ ؕஅல்லாஹ்வைاِنِّیْநிச்சயமாக நான்لَكُمْஉங்களுக்குمِّنْهُஅவனிடமிருந்துنَذِیْرٌஎச்சரிப்பவர்مُّبِیْنٌۚதெளிவான
FபFபிர்ரூ இலல் லாஹி இன்னீ லகும் மின்ஹு னதீரும் முBபீன்
ஆகவே, அல்லாஹ்வின் பக்கம் விரைந்து செல்லுங்கள்; நிச்சயமாக, நான் அவனிடமிருந்து உங்களுக்குத் தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனாகவே இருக்கின்றேன் (என்று நபியே! நீர் கூறுவீராக).
وَلَا تَجْعَلُوْا مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ ؕ اِنِّیْ لَكُمْ مِّنْهُ نَذِیْرٌ مُّبِیْنٌ ۟
وَ لَاஇன்னும் வேண்டாம்تَجْعَلُوْاஆக்கمَعَஉடன்اللّٰهِஅல்லாஹ்اِلٰهًاஇறைவனைاٰخَرَ ؕவேறொருاِنِّیْநிச்சயமாக நான்لَكُمْஉங்களுக்குمِّنْهُஅவனிடமிருந்துنَذِیْرٌஎச்சரிப்பவன்مُّبِیْنٌۚதெளிவான
வ லா தஜ்'அலூ ம'அல் லாஹி இலாஹன் ஆகர இன்னீ லகும் மின்ஹு னதீரும் முBபீன்
மேலும், அல்லாஹ்வுடன் வேறு நாயனை (இணையாக) ஆக்காதீர்கள்; நிச்சயமாக, நான் அவனிடமிருந்து உங்களுக்குத் தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனாகவே - இருக்கின்றேன் (என்றும் கூறும்).
كَذٰلِكَ مَاۤ اَتَی الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ مِّنْ رَّسُوْلٍ اِلَّا قَالُوْا سَاحِرٌ اَوْ مَجْنُوْنٌ ۟ۚ
كَذٰلِكَஇவ்வாறேمَاۤஇல்லைاَتَیவந்தார்الَّذِیْنَஎவர்கள்مِنْஇருந்துقَبْلِهِمْஅவர்களுக்கு முன்مِّنْஎந்தவொருرَّسُوْلٍதூதர்اِلَّاதவிரقَالُوْاகூறினார்கள்سَاحِرٌசூனியக்காரர்اَوْஅல்லதுمَجْنُوْنٌۚபைத்தியக்காரர்
கதாலிக மா அதல் லதீன மின் கBப்லிஹிம் மிர் ரஸூலின் இல்லா காலூ ஸாஹிருன் அவ் மஜ்னூன்
இவ்வாறே, இவர்களுக்கு முன்னிருந்தவர்களிடம் (நம்) தூதர்களிலிருந்து ஒருவர் வரும் போதெல்லாம், அவர்கள் (அவரை) சூனியக்காரர், அல்லது பைத்தியக்காரர் என்று கூறாமல் இருந்ததில்லை.
اَتَوَاصَوْا بِهٖ ۚ بَلْ هُمْ قَوْمٌ طَاغُوْنَ ۟ۚ
اَتَوَاصَوْاஅவர்கள் ஒருவருக்கொருவர் அறிவுறுத்தினார்களா?بِهٖ ۚஇதனைبَلْமாறாகهُمْஅவர்கள்قَوْمٌஒரு கூட்டத்தினர்طَاغُوْنَۚவரம்பு மீறியவர்கள்
அதவாஸவ் Bபிஹ்; Bபல் ஹும் கவ்முன் தாகூன்
இவ்வாறுதான் அவர்கள் தங்களுக்குள் (நம் தூதர்களைப் பழிக்க வேண்டுமென) ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து கொண்டனரா? அன்று, அவர்கள் அக்கிரமக்கார சமூகத்தாராகவே இருந்தனர்.
فَتَوَلَّ عَنْهُمْ فَمَاۤ اَنْتَ بِمَلُوْمٍ ۟
فَتَوَلَّஎனவே புறக்கணிப்பீராகعَنْهُمْஅவர்களை விட்டுفَمَاۤஎனவே இல்லைاَنْتَநீர்بِمَلُوْمٍபழிக்கப்படுபவர்
Fபதவல்ல 'அன்ஹும் Fபமா அன்த Bபிமலூம்
ஆகவே (நபியே!) நீர் அவர்களைப் புறக்கணித்து (விலகி) விடும்; (அப்படி நீர் விலகிவிடுவீராயின் அதற்காக) நீர் பழிக்கப்படமாட்டீர்.
وَّذَكِّرْ فَاِنَّ الذِّكْرٰی تَنْفَعُ الْمُؤْمِنِیْنَ ۟
وَّ ذَكِّرْமேலும் நினைவூட்டுவீராகفَاِنَّஏனெனில் நிச்சயமாகالذِّكْرٰیநினைவூட்டல்تَنْفَعُபயனளிக்கும்الْمُؤْمِنِیْنَநம்பிக்கையாளர்களுக்கு
வ தக்கிர் Fப இன்னத் திக்ரா தன்Fப'உல் மு'மினீன்
மேலும், நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும்.
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْاِنْسَ اِلَّا لِیَعْبُدُوْنِ ۟
وَ مَاமேலும் இல்லைخَلَقْتُநான் படைத்தேன்الْجِنَّஜின்களைوَ الْاِنْسَமனிதர்களையும்اِلَّاதவிரلِیَعْبُدُوْنِஅவர்கள் என்னை வணங்குவதற்காகவே
வமா கலக்துல் ஜின்ன வல் இன்ஸ இல்லா லியஃBபுதூன்
இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.
مَاۤ اُرِیْدُ مِنْهُمْ مِّنْ رِّزْقٍ وَّمَاۤ اُرِیْدُ اَنْ یُّطْعِمُوْنِ ۟
مَاۤஇல்லைاُرِیْدُநான் நாடுகிறேன்مِنْهُمْஅவர்களிடமிருந்துمِّنْயாதொருرِّزْقٍவாழ்வாதாரத்தைوَّ مَاۤமேலும் இல்லைاُرِیْدُநான் நாடுகிறேன்اَنْஅவர்கள்یُّطْعِمُوْنِஎனக்கு உணவளிக்க
மா உரீது மின்ஹும் மிர் ரிZஜ்கி(ன்)வ் வ மா உரீது அ(ன்)ய்யுத்'இமூன்
அவர்களிடமிருந்து எந்த பொருளையும் நான் விரும்பவில்லை. எனக்கு அவர்கள் உணவு அளிக்க வேண்டுமென்றும் நான் விரும்பவில்லை.
اِنَّ اللّٰهَ هُوَ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِیْنُ ۟
اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்هُوَஅவனேالرَّزَّاقُஉணவளிப்பவன்ذُوஉடையவன்الْقُوَّةِவல்லமைالْمَتِیْنُஉறுதியானவன்
இன்னல் லாஹ ஹுவர் ரZஜ்Zஜாகு துல் குவ்வதில் மதீன்
நிச்சயமாக அல்லாஹ்தான் உணவு அளித்துக் கொண்டிருப்பவன்; பலம் மிக்கவன்; உறுதியானவன்.
فَاِنَّ لِلَّذِیْنَ ظَلَمُوْا ذَنُوْبًا مِّثْلَ ذَنُوْبِ اَصْحٰبِهِمْ فَلَا یَسْتَعْجِلُوْنِ ۟
فَاِنَّஆகவே நிச்சயமாகلِلَّذِیْنَஎவர்கள்ظَلَمُوْاஅநீதி இழைத்தார்களோ அவர்களுக்குذَنُوْبًاஒரு பங்கு (வேதனை) உண்டுمِّثْلَபோன்றذَنُوْبِபங்கினைப்اَصْحٰبِهِمْஅவர்களுடைய தோழர்களின்فَلَاஎனவே வேண்டாம்یَسْتَعْجِلُوْنِஅவர்கள் என்னிடம் அவசரப்பட
Fப இன்ன லில்லதீன ளலமூ தனூBபம் மித்ல தனூBபி அஸ்ஹாBபிஹிம் Fபலா யஸ்தஃஜிலூன்
எனவே, அநியாயம் செய்து கொண்டிருப்போருக்கு, அவர்களுடைய தோழர்களுக்கு வேதனையிலிருந்து ஒரு பங்கு இருந்தது போல், ஒரு பங்கு நிச்சயமாக உண்டு; ஆகவே, (தண்டனைக்காக) அவர்கள் என்னை அவசரப்படுத்த வேண்டாம்.
فَوَیْلٌ لِّلَّذِیْنَ كَفَرُوْا مِنْ یَّوْمِهِمُ الَّذِیْ یُوْعَدُوْنَ ۟۠
فَوَیْلٌஎனவே கேடுلِّلَّذِیْنَஎவர்களுக்குكَفَرُوْاநிராகரித்தார்களோمِنْஇருந்துیَّوْمِهِمُஅவர்களுடைய நாளில்الَّذِیْஎந்தیُوْعَدُوْنَ۠வாக்களிக்கப்படுகிறார்களோ
Fபவய்லுல் லில்லதீன கFபரூ மி(ன்)ய் யவ்மிஹிமுல் லதீ யூ'அதூன்
ஆகவே, காஃபிர்களுக்கு அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட அவர்களுடைய நாளில், கேடுதான்.