54. ஸூரத்துல் கமர் (சந்திரன்)

மக்கீ, வசனங்கள்: 55

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
اِقْتَرَبَتِ السَّاعَةُ وَانْشَقَّ الْقَمَرُ ۟
اِقْتَرَبَتِநெருங்கிவிட்டதுالسَّاعَةُமறுமை நாள்وَ انْشَقَّமேலும் பிளந்துவிட்டதுالْقَمَرُசந்திரன்
இக்தரBபதிஸ் ஸா'அது வன் ஷக்கல் கமர்
(இறுதி) நேரம் நெருங்கி விட்டது; சந்திரனும் பிளந்து விட்டது.
وَاِنْ یَّرَوْا اٰیَةً یُّعْرِضُوْا وَیَقُوْلُوْا سِحْرٌ مُّسْتَمِرٌّ ۟
وَ اِنْமேலும்یَّرَوْاஅவர்கள் கண்டால்اٰیَةًஓர் அத்தாட்சியைیُّعْرِضُوْاபுறக்கணிக்கிறார்கள்وَ یَقُوْلُوْاமேலும் கூறுகிறார்கள்سِحْرٌசூனியம்مُّسْتَمِرٌّதொடர்ந்து வரும்
வ இ(ன்)ய் யரவ் ஆயத(ன்)ய் யுஃரிளூ வ யகூலூ ஸிஹ்ருன் முஸ்தமிர்ர்
எனினும், அவர்கள் ஓர் அத்தாட்சியைப் பார்த்தால், (அதைப்) புறக்கணித்து விடுகிறார்கள்; “இது வழமையாக நடைபெறும் சூனியம் தான்” என்றும் கூறுகிறார்கள்.
وَكَذَّبُوْا وَاتَّبَعُوْۤا اَهْوَآءَهُمْ وَكُلُّ اَمْرٍ مُّسْتَقِرٌّ ۟
وَ كَذَّبُوْاமேலும் அவர்கள் பொய்ப்பித்தார்கள்وَ اتَّبَعُوْۤاமேலும் அவர்கள் பின்பற்றினார்கள்اَهْوَآءَهُمْதங்கள் மன இச்சைகளைوَ كُلُّமேலும் ஒவ்வொருاَمْرٍகாரியமும்مُّسْتَقِرٌّநிலைபெறக்கூடியது
வ கத்தBபூ வத்தBப'ஊ அஹ்வா'அஹும்; வ குல்லு அம்ரின் முஸ்தகிர்ர்
அன்றியும், அவர்கள் (காண்பிக்கப் பெறும் அத்தாட்சிகளைப்) பொய்ப்பிக்க முற்படுகின்றனர்; மேலும் தங்கள் இச்சைகளையே பின்பற்றுகின்றனர், ஆயினும் ஒவ்வொரு காரியமும் (அதற்கான நிலையில்) உறுதிப்பட்டே விடும்.
وَلَقَدْ جَآءَهُمْ مِّنَ الْاَنْۢبَآءِ مَا فِیْهِ مُزْدَجَرٌ ۟ۙ
وَ لَقَدْமேலும் நிச்சயமாகجَآءَهُمْஅவர்களிடம் வந்துள்ளதுمِّنَஇருந்துالْاَنْۢبَآءِசெய்திகள்مَاஎதுفِیْهِஅதில்مُزْدَجَرٌۙஎச்சரிக்கை
வ லகத் ஜா'அஹும் மினல் அன்Bபா'இ மா Fபீஹி முZஜ்தஜர்
அச்சுறுத்தலுள்ள பல செய்திகள் திடமாக (முன்னரே) அவர்களிடம் வந்திருக்கின்றன.
حِكْمَةٌ بَالِغَةٌ فَمَا تُغْنِ النُّذُرُ ۟ۙ
حِكْمَةٌۢஞானம்بَالِغَةٌமுழுமையானفَمَاஆயினும்تُغْنِபயனளிக்கவில்லைالنُّذُرُۙஎச்சரிக்கைகள்
ஹிக்மதுன் Bபாலிகதுன் Fபமா துக்னின் னுதுர்
நிறைவான ஞானம் உடையவை - ஆனால் (அவர்களுக்கு அவற்றின்) எச்சரிக்கைகள் பயனளிக்கவில்லை.
فَتَوَلَّ عَنْهُمْ ۘ یَوْمَ یَدْعُ الدَّاعِ اِلٰی شَیْءٍ نُّكُرٍ ۟ۙ
فَتَوَلَّஎனவே விலகிச் செல்வீராகعَنْهُمْ ۘஅவர்களிடமிருந்துیَوْمَஅந்நாளில்یَدْعُஅழைக்கும்الدَّاعِஅழைப்பவர்اِلٰیபால்شَیْءٍஒரு காரியத்தின்نُّكُرٍۙபயங்கரமான
Fபதவல்ல 'அன்ஹும்; யவ்ம யத்'உத் தா'இ இலா ஷய் 'இன் னுகுர்
ஆகையால் (நபியே!) அவர்களை விட்டும் நீர் திரும்பி விடும்; (அவர்களுக்கு) வெறுப்பான (கேள்வி கணக்கு) விஷயத்திற்காக அழைப்பவர் (அவர்களை) அழைக்கும் நாளில்:
خُشَّعًا اَبْصَارُهُمْ یَخْرُجُوْنَ مِنَ الْاَجْدَاثِ كَاَنَّهُمْ جَرَادٌ مُّنْتَشِرٌ ۟ۙ
خُشَّعًاதாழ்ந்தاَبْصَارُهُمْஅவர்களின் பார்வைகள்یَخْرُجُوْنَஅவர்கள் வெளிப்படுவார்கள்مِنَஇருந்துالْاَجْدَاثِகல்லறைகள்كَاَنَّهُمْஅவர்கள் இருப்பதைப் போலجَرَادٌவெட்டுக்கிளிகள்مُّنْتَشِرٌۙபரவிச் செல்லும்
குஷ்ஷ'அன் அBப்ஸாருஹும் யக்ருஜூன மினல் அஜ்தாதி க அன்னஹும் ஜராதும் முன்தஷிர்
(தாழ்ந்து பணிந்து) கீழ்நோக்கிய பார்வையுடன், அவர்கள் புதை குழிகளிலிருந்து பரவிச் செல்லும் வெட்டுக்கிளிகளைப் போல் வெளியேறுவார்கள்.
مُّهْطِعِیْنَ اِلَی الدَّاعِ ؕ یَقُوْلُ الْكٰفِرُوْنَ هٰذَا یَوْمٌ عَسِرٌ ۟
مُّهْطِعِیْنَவிரைந்தோடியவர்களாகاِلَیநோக்கிالدَّاعِ ؕஅழைப்பவரைیَقُوْلُகூறுவார்கள்الْكٰفِرُوْنَநிராகரிப்பாளர்கள்هٰذَاஇதுیَوْمٌஒரு நாள்عَسِرٌகடினமான
முஹ்தி'ஈன இலத் தா'இ யகூலுல் காFபிரூன ஹாதா யவ்முன் 'அஸிர்
அழைப்பவரிடம் விரைந்து வருவார்கள்; “இது மிகவும் கஷ்டமான நாள்” என்றும் அக்காஃபிர்கள் கூறுவார்கள்.
كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوْحٍ فَكَذَّبُوْا عَبْدَنَا وَقَالُوْا مَجْنُوْنٌ وَّازْدُجِرَ ۟
كَذَّبَتْபொய்ப்பித்தனர்قَبْلَهُمْஅவர்களுக்கு முன்னர்قَوْمُசமுதாயம்نُوْحٍநூஹின்فَكَذَّبُوْاஎனவே அவர்கள் பொய்ப்பித்தனர்عَبْدَنَاநமது அடியாரைوَ قَالُوْاமேலும் அவர்கள் கூறினர்مَجْنُوْنٌபைத்தியக்காரர்وَّ ازْدُجِرَமேலும் அவர் மிரட்டப்பட்டார்
கத்தBபத் கBப்லஹும் கவ்மு னூஹின் Fபகத்தBபூ 'அBப்தனா வ காலூ மஜ்னூனு(ன்)வ் வZஜ்துஜிர்
இவர்களுக்கு முன்னர் நூஹின் சமூகத்தினர் (மறுமையைப்) பொய்யாக்கினர்; ஆகவே அவர்கள் நம் அடியாரைப் பொய்ப்பித்து (அவரைப்) “பைத்தியக்காரர்” என்று கூறினர்; அவர் விரட்டவும் பட்டார்.
فَدَعَا رَبَّهٗۤ اَنِّیْ مَغْلُوْبٌ فَانْتَصِرْ ۟
فَدَعَاஎனவே அவர் பிரார்த்தித்தார்رَبَّهٗۤதனது இறைவனிடம்اَنِّیْநிச்சயமாக நான்مَغْلُوْبٌதோற்கடிக்கப்பட்டவன்فَانْتَصِرْஎனவே உதவி செய்வாயாக
Fபத'ஆ ரBப்Bபஹூ அன்னீ மக்லூBபுன் Fபன்தஸிர்
அப்போது அவர்; “நிச்சயமாக நாம் தோல்வியடைந்தவனாக இருக்கிறேன்; ஆகவே, நீ (எனக்கு) உதவி செய்வாயாக!” என்று அவர் தம் இறைவனிடம் பிரார்த்தித்தார்.
فَفَتَحْنَاۤ اَبْوَابَ السَّمَآءِ بِمَآءٍ مُّنْهَمِرٍ ۟ؗۖ
فَفَتَحْنَاۤஎனவே நாம் திறந்தோம்اَبْوَابَவாசல்களைالسَّمَآءِவானத்தின்بِمَآءٍநீரைக் கொண்டுمُّنْهَمِرٍؗۖகொட்டும்
FபFபதஹ்னா அBப்வாBபஸ் ஸமா'இ Bபி மா'இன் முன்ஹமிர்
ஆகவே, நாம் கொட்டும் மழையைக் கொண்டு வானங்களின் வாயில்களைத் திறந்து விட்டோம்.
وَّفَجَّرْنَا الْاَرْضَ عُیُوْنًا فَالْتَقَی الْمَآءُ عَلٰۤی اَمْرٍ قَدْ قُدِرَ ۟ۚ
وَّ فَجَّرْنَاமேலும் நாம் பீறிடச் செய்தோம்الْاَرْضَபூமியைعُیُوْنًاஊற்றுகளாகفَالْتَقَیஆகவே சந்தித்ததுالْمَآءُநீர்عَلٰۤیஏற்பاَمْرٍஒரு காரியத்திற்குقَدْஏற்கனவேقُدِرَۚதீர்மானிக்கப்பட்டிருந்தது
வ Fபஜ்ஜர்னல் அர்ள 'உயூனன் Fபல்தகல் மா'உ 'அலா அம்ரின் கத் குதிர்
மேலும், பூமியின் ஊற்றுகளை பொங்க வைத்தோம்; இவ்வாறாக, குறிப்பிட்ட ஓர் அளவின் படி (இரு வகை) நீரும் கலந்(து பெருக் கெடுத்)தது.
وَحَمَلْنٰهُ عَلٰی ذَاتِ اَلْوَاحٍ وَّدُسُرٍ ۟ۙ
وَ حَمَلْنٰهُமேலும் நாம் அவரைச் சுமந்தோம்عَلٰیமீதுذَاتِஉடையاَلْوَاحٍபலகைகள்وَّ دُسُرٍۙமற்றும் ஆணிகள்
வ ஹமல்னாஹு 'அலா தாதி அல்வாஹி(ன்)வ் வ துஸுர்
அப்போது, பலகைகளினாலும் ஆணிகளினாலும் செய்யப்பட்ட மரக்கலத்தின் மீது அவரை ஏற்றிக் கொண்டோம்.
تَجْرِیْ بِاَعْیُنِنَا ۚ جَزَآءً لِّمَنْ كَانَ كُفِرَ ۟
تَجْرِیْஅது மிதந்து சென்றதுبِاَعْیُنِنَا ۚநமது கண்காணிப்பில்جَزَآءًநற்கூலியாகلِّمَنْஎவருக்குكَانَஇருந்தாரோكُفِرَநிராகரிக்கப்பட்டாரோ
தஜ்ரீ Bபி அஃயுனினா ஜZஜா'அன் லிமன் கான குFபிர்
எனவே, எவர் (அவர்களால்) நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தாரோ, அவருக்கு (நற்) கூலி கொடுப்பதாக, (அம்மரக்கலம்) நம் கண் முன்னிலையில் மிதந்து சென்று கொண்டிருந்தது.
وَلَقَدْ تَّرَكْنٰهَاۤ اٰیَةً فَهَلْ مِنْ مُّدَّكِرٍ ۟
وَ لَقَدْமேலும் நிச்சயமாகتَّرَكْنٰهَاۤஅதனை நாம் விட்டு வைத்தோம்اٰیَةًஓர் அத்தாட்சியாகفَهَلْஎனவே உண்டாمِنْஎவரேனும்مُّدَّكِرٍபடிப்பினை பெறுபவர்
வ லகத் தரக்னாஹா ஆயதன் Fபஹல் மின் முத்தகிர்
நிச்சயமாக நாம் (வருங்காலத்திற்கு இ(ம் மரக்கலத்)தை ஓர் அத்தாட்சியாக விட்டு வைத்தோம்; (இதன் மூலமாக) நல்லுணர்வு பெறுவோர் உண்டா?
فَكَیْفَ كَانَ عَذَابِیْ وَنُذُرِ ۟
فَكَیْفَஎனவே எவ்வாறுكَانَஇருந்ததுعَذَابِیْஎனது வேதனைوَ نُذُرِஎனது எச்சரிக்கைகளும்
Fபகய்Fப கான 'அதாBபீ வ னுதுர்
ஆகவே, என் (கட்டளையினால் ஏற்பட்ட) வேதனையும், எச்சரிக்கையும் எப்படி இருந்தன? (என்பதை கவனிக்க வேண்டாமா?)
وَلَقَدْ یَسَّرْنَا الْقُرْاٰنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ ۟
وَ لَقَدْநிச்சயமாகیَسَّرْنَاநாம் எளிதாக்கினோம்الْقُرْاٰنَகுர்ஆனைلِلذِّكْرِபடிப்பினைக்காகفَهَلْஎனவே உண்டாمِنْஎவரேனும்مُّدَّكِرٍபடிப்பினை பெறுபவர்
வ லகத் யஸ்ஸர்னல் குர்'ஆன லித் திக்ரி Fபஹல் மின் முத்தகிர்
நிச்சயமாக, இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம். எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா?
كَذَّبَتْ عَادٌ فَكَیْفَ كَانَ عَذَابِیْ وَنُذُرِ ۟
كَذَّبَتْபொய்ப்பித்தனர்عَادٌஆதுفَكَیْفَஆகவே எவ்வாறுكَانَஇருந்ததுعَذَابِیْஎன் வேதனைوَ نُذُرِஎன் எச்சரிக்கைகளும்
கத்தBபத் 'ஆதுன் Fபகய்Fப கான 'அதாBபீ வ னுதுர்
“ஆது” (கூட்டத்தாரும் தங்கள் நபியை) பொய்ப்படுத்தினர்; அதனால், என் (கட்டளையினால் ஏற்பட்ட) வேதனையும். எச்சரிக்கையும் எப்படி இருந்தன (என்பதை கவனிக்க வேண்டாமா?)
اِنَّاۤ اَرْسَلْنَا عَلَیْهِمْ رِیْحًا صَرْصَرًا فِیْ یَوْمِ نَحْسٍ مُّسْتَمِرٍّ ۟ۙ
اِنَّاۤநிச்சயமாக நாம்اَرْسَلْنَاஅனுப்பினோம்عَلَیْهِمْஅவர்கள் மீதுرِیْحًاஒரு காற்றைصَرْصَرًاகடும் சப்தமிடும்فِیْஇல்یَوْمِநாளில்نَحْسٍதுரதிர்ஷ்டமானمُّسْتَمِرٍّۙதொடர்ச்சியான
இன்னா அர்ஸல்னா 'அலய்ஹிம் ரீஹன் ஸர்ஸரன் Fபீ யவ்மி னஹ்ஸின் முஸ்தமிர்ர்
நிச்சயமாக நாம் அவர்கள் மீது, நிலையான துர்பாக்கியமுடைய ஒரு நாளில், பேரிறைச்சலைக் கொண்ட வேகமான காற்றை அனுப்பினோம்.
تَنْزِعُ النَّاسَ ۙ كَاَنَّهُمْ اَعْجَازُ نَخْلٍ مُّنْقَعِرٍ ۟
تَنْزِعُஅது பிடுங்கி எறிந்ததுالنَّاسَ ۙமனிதர்களைكَاَنَّهُمْஅவர்கள் என்னவோاَعْجَازُஅடிமரங்களைப்نَخْلٍபேரீச்ச மரங்களின்مُّنْقَعِرٍவேரோடு பிடுங்கப்பட்ட
தன்Zஜி'உன் னாஸ க அன்னஹும் அஃஜாZஜு னக்லின் முன்க'இர்
நிச்சயமாக: வேரோடு பிடுங்கப் பட்ட பேரீத்த மரங்களின் அடித்தூறைப் போல் (அக்காற்று) மனிதர்களை பிடுங்கி எறிந்து விட்டது.
فَكَیْفَ كَانَ عَذَابِیْ وَنُذُرِ ۟
فَكَیْفَஎனவே எப்படிكَانَஇருந்ததுعَذَابِیْஎன் வேதனைوَ نُذُرِஎன் எச்சரிக்கைகளும்
Fபகய்Fப கான 'அதாBபீ வ னுதுர்
ஆகவே, என் (கட்டளையினால் ஏற்பட்ட) வேதனையும் எச்சரிக்கையும் எப்படி இருந்தன? (என்பதைக் கவனிக்க வேண்டாமா?)
وَلَقَدْ یَسَّرْنَا الْقُرْاٰنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ ۟۠
وَ لَقَدْநிச்சயமாகیَسَّرْنَاநாம் எளிதாக்கினோம்الْقُرْاٰنَகுர்ஆனைلِلذِّكْرِபடிப்பினைக்காகفَهَلْஎனவேمِنْஎவரேனும்مُّدَّكِرٍ۠படிப்பினை பெறுபவர் உண்டா
வ லகத் யஸ்ஸர்னல் குர்'ஆன லித் திக்ரி Fபஹல் மின் முத்தகிர்
நிச்சயமாக, இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம்; எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா?  
كَذَّبَتْ ثَمُوْدُ بِالنُّذُرِ ۟
كَذَّبَتْபொய்ப்பித்ததுثَمُوْدُஸமூதுبِالنُّذُرِஎச்சரிக்கைகளை
கத்தBபத் தமூது Bபின்னுதுர்
ஸமூது(கூட்டமு)ம் எச்சரிக்கைகளைப் பொய்ப்பித்தது.
فَقَالُوْۤا اَبَشَرًا مِّنَّا وَاحِدًا نَّتَّبِعُهٗۤ ۙ اِنَّاۤ اِذًا لَّفِیْ ضَلٰلٍ وَّسُعُرٍ ۟
فَقَالُوْۤاஅவர்கள் கூறினார்கள்اَبَشَرًاஒரு மனிதரையாمِّنَّاநம்மில் உள்ளوَاحِدًاஒருவரைنَّتَّبِعُهٗۤ ۙநாம் பின்பற்றுவதாاِنَّاۤநிச்சயமாக நாம்اِذًاஅவ்வாறாயின்لَّفِیْநிச்சயமாகضَلٰلٍவழிகேட்டிலும்وَّ سُعُرٍபைத்தியக்காரத்தனத்திலும்
Fபகாலூ அ' Bபஷரன் மின்னா வாஹிதன் னத்தBபி'உஹூ இன்னா இதல் லFபீ ளலாலி(ன்)வ் வ ஸு'உர்
“நம்மிலிருந்துள்ள ஒரு தனி மனிதரையா நாம் பின்பற்றுவோம்? (அப்படிச் செய்தால்) நாம் நிச்சயமாக வழி கேட்டிலும் பைத்தியத்திலும் இருப்போம்” என்றும் (அக்கூட்டத்தினர்) கூறினர்.
ءَاُلْقِیَ الذِّكْرُ عَلَیْهِ مِنْ بَیْنِنَا بَلْ هُوَ كَذَّابٌ اَشِرٌ ۟
ءَاُلْقِیَஇறக்கப்பட்டதா?الذِّكْرُநினைவூட்டல்عَلَیْهِஅவர் மீதுمِنْۢஇருந்துبَیْنِنَاநம்மிடையேبَلْமாறாகهُوَஅவர்كَذَّابٌபெரும் பொய்யர்اَشِرٌகர்வமிக்கவர்
'அ உல்கியத் திக்ரு 'அலய்ஹி மின் Bபய்னினா Bபல் ஹுவ கத்தாBபுன் அஷிர்
“நம்மிடையே இருந்து அவர் மீதுதானா (நினைவுறுத்தும்) நல்லுபதேசம் இறக்கப்படவேண்டும்; அல்ல! அவர் ஆணவம் பிடித்த பெரும் பொய்யர்” (என்றும் அவர்கள் கூறினர்).
سَیَعْلَمُوْنَ غَدًا مَّنِ الْكَذَّابُ الْاَشِرُ ۟
سَیَعْلَمُوْنَஅவர்கள் விரைவில் அறிந்துகொள்வார்கள்غَدًاநாளைمَّنِயார்الْكَذَّابُபெரும் பொய்யன்الْاَشِرُஅகந்தை பிடித்தவன்
ஸ-யஃலமூன கதன் மனில் கத்தாBபுல் அஷிர்
“ஆணவம் பிடித்த பெரும் பொய்யர் யார்?” என்பதை நாளைக்கு அவர்கள் திட்டமாக அறிந்து கொள்வார்கள்.
اِنَّا مُرْسِلُوا النَّاقَةِ فِتْنَةً لَّهُمْ فَارْتَقِبْهُمْ وَاصْطَبِرْ ۟ؗ
اِنَّاநிச்சயமாக நாம்مُرْسِلُواஅனுப்புபவர்கள்النَّاقَةِஅந்தப் பெண் ஒட்டகத்தைفِتْنَةًஒரு சோதனையாகلَّهُمْஅவர்களுக்குفَارْتَقِبْهُمْஆகவே அவர்களைக் கவனிப்பீராகوَ اصْطَبِرْؗமேலும் பொறுமையாயிருப்பீராக
இன்னா முர்ஸிலுன் னாகதி Fபித்னதன் லஹும் Fபர்தகிBப்ஹும் வஸ்தBபிர்
அவர்களைச் சோதிக்கும் பொருட்டு, நிச்சயமாக நாம் ஒரு பெண் ஒட்டகத்தை அனுப்பி வைப்போம்; ஆகவே, நீர் அவர்களை கவனித்துக் கொண்டும், பொறுமையுடனும் இருப்பீராக!
وَنَبِّئْهُمْ اَنَّ الْمَآءَ قِسْمَةٌ بَیْنَهُمْ ۚ كُلُّ شِرْبٍ مُّحْتَضَرٌ ۟
وَ نَبِّئْهُمْமேலும் அவர்களுக்குத் தெரிவிப்பீராகاَنَّநிச்சயமாகالْمَآءَதண்ணீர்قِسْمَةٌۢபங்கிடப்பட்டுள்ளதுبَیْنَهُمْ ۚஅவர்களுக்கு இடையேكُلُّஒவ்வொருشِرْبٍகுடிநேரமும்مُّحْتَضَرٌஆஜராகப்பட வேண்டியதாகும்
வ னBப்Bபி'ஹும் அன்னல் மா'அ கிஸ்மதுன் Bபய்னஹும் குல்லு ஷிர்Bபின் முஹ்தளர்
(அவ்வூரிலுள்ள கிணற்றின்) தண்ணீர் அவர்களுக்கு(ம் அந்த ஒட்டகத்திற்கும்) இடையில் பங்கிடப்பட்டுள்ளது; “ஒவ்வொருவரும் (தண்ணீர்) முறைப்படி குடிப்பதற்கு வரலாம்” என்று அவர்களுக்கு அறிவித்து விடும்.
فَنَادَوْا صَاحِبَهُمْ فَتَعَاطٰی فَعَقَرَ ۟
فَنَادَوْاஆகவே அவர்கள் அழைத்தார்கள்صَاحِبَهُمْதங்கள் தோழனைفَتَعَاطٰیஅவன் (வாளைக்) கையில் எடுத்தான்فَعَقَرَஅவன் (அதைக்) கொன்றான்
Fப னாதவ் ஸாஹிBபஹும் Fப த'ஆதா Fப 'அகர்
ஆனால் (அம்மக்களோ ஒட்டகையை அறுத்துவிடத்) தம் தோழனை அழைத்தனர்; அவன் (துணிந்து கை) நீட்டி (அதன் கால் நரம்புகளைத்) தரித்து விட்டான்.
فَكَیْفَ كَانَ عَذَابِیْ وَنُذُرِ ۟
فَكَیْفَஎனவே எவ்வாறுكَانَஇருந்ததுعَذَابِیْஎனது வேதனைوَ نُذُرِஎனது எச்சரிக்கைகளும்
Fபகய்Fப கான 'அதாBபீ வ னுதுர்
என் (கட்டளையினால் பின்னர் அம் மக்களுக்கு) வேதனையும், எச்சரிக்கையும் எப்படி இருந்தன? (என்பதை கவனிக்க வேண்டாமா?)
اِنَّاۤ اَرْسَلْنَا عَلَیْهِمْ صَیْحَةً وَّاحِدَةً فَكَانُوْا كَهَشِیْمِ الْمُحْتَظِرِ ۟
اِنَّاۤநிச்சயமாக நாம்اَرْسَلْنَاஅனுப்பினோம்عَلَیْهِمْஅவர்கள் மீதுصَیْحَةًஒரு பேரொலியைوَّاحِدَةًஒரேفَكَانُوْاஅதனால் அவர்கள் ஆகிவிட்டார்கள்كَهَشِیْمِகாய்ந்த சருகுகளைப் போலالْمُحْتَظِرِதொழுவம் கட்டுபவனின்
இன்னா அர்ஸல்னா 'அலய்ஹிம் ஸய்ஹத(ன்)வ் வாஹிததன் Fபகானூ கஹஷீமில் முஹ்தளிர்
நிச்சயமாக நாம் அவர்கள் மீது ஒரு பெரும் சப்தத்தை அனுப்பினோம் - அதனால் அவர்கள் காய்ந்து மிதிபட்ட வேலி(யின் கூளம்) போல் ஆகிவிட்டனர்.
وَلَقَدْ یَسَّرْنَا الْقُرْاٰنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ ۟
وَ لَقَدْமேலும் நிச்சயமாகیَسَّرْنَاநாம் எளிதாக்கினோம்الْقُرْاٰنَகுர்ஆனைلِلذِّكْرِபடிப்பினைக்காகفَهَلْஎனவே உண்டாمِنْஎவரேனும்مُّدَّكِرٍபடிப்பினை பெறுபவர்
வ லகத் யஸ்ஸர்னல் குர்'ஆன லித் திக்ரி Fபஹல் மின் முத்தகிர்
நிச்சயமாக இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம்; எனவே இதிலிருந்து நல்லுணர்வு பெறுவோர் உண்டா?
كَذَّبَتْ قَوْمُ لُوْطٍ بِالنُّذُرِ ۟
كَذَّبَتْபொய்ப்பித்தனர்قَوْمُசமுதாயம்لُوْطٍۭலூத்தின்بِالنُّذُرِஎச்சரிக்கைகளை
கத்தBபத் கவ்மு லூதின் Bபின்னுதுர்
லூத்துடைய சமூகத்தாரும் (நம்முடைய) எச்சரிக்கைகளைப் பொய்ப்பித்தனர்.
اِنَّاۤ اَرْسَلْنَا عَلَیْهِمْ حَاصِبًا اِلَّاۤ اٰلَ لُوْطٍ ؕ نَجَّیْنٰهُمْ بِسَحَرٍ ۟ۙ
اِنَّاۤநிச்சயமாக நாம்اَرْسَلْنَاஅனுப்பினோம்عَلَیْهِمْஅவர்கள் மீதுحَاصِبًاகல்மாரியைاِلَّاۤதவிரاٰلَகுடும்பத்தாரைلُوْطٍ ؕலூத்தின்نَجَّیْنٰهُمْஅவர்களை நாம் காப்பாற்றினோம்بِسَحَرٍۙவிடியற்காலையில்
இன்னா அர்ஸல்னா 'அலய்ஹிம் ஹாஸிBபன் இல்லா ஆல லூதின் னஜ்ஜய்னாஹும் Bபிஸஹர்
லூத்துடைய குடும்பத்தாரைத் தவிர, மற்றவர்கள் மீது, நாம் நிச்சயமாக கல்மாரியை அனுப்பினோம்; விடியற்காலையில் நாம் அவர் குடும்பத்தார்களை பாதுகாத்துக் கொண்டோம்.
نِّعْمَةً مِّنْ عِنْدِنَا ؕ كَذٰلِكَ نَجْزِیْ مَنْ شَكَرَ ۟
نِّعْمَةًஅருளாகمِّنْஇருந்துعِنْدِنَا ؕநம்மிடம்كَذٰلِكَஇவ்வாறேنَجْزِیْநாம் நற்கூலி வழங்குகிறோம்مَنْஎவர்شَكَرَநன்றி செலுத்தினாரோ
னிஃமதன் மின் 'இன்தினா; கதாலிக னஜ்Zஜீ மன் ஷகர்
நம்மிடமிருந்துள்ள அருள் கொடையால் (இப்படிக் காப்பாற்றினோம்) இவ்வாறே நாம் நன்றி செலுத்துபவர்களுக்கு கூலி அளிக்கிறோம்.
وَلَقَدْ اَنْذَرَهُمْ بَطْشَتَنَا فَتَمَارَوْا بِالنُّذُرِ ۟
وَ لَقَدْமேலும் நிச்சயமாகاَنْذَرَهُمْஅவர் அவர்களை எச்சரித்தார்بَطْشَتَنَاநம்முடைய பிடியைப் பற்றிفَتَمَارَوْاஅவர்கள் தர்க்கித்தார்கள்بِالنُّذُرِஎச்சரிக்கைகளைப் பற்றி
வ லகத் அன்தரஹும் Bபத்ஷதனா Fபதமாரவ் Bபின்னுதுர்
திட்டமாக நம்முடைய கடுமையான பிடியைப்பற்றி அவர் (தம் சமூகத்தாருக்கு) அச்சுறுத்தி எச்சரித்திருந்தார். எனினும் அச்சுறுத்தும் அவ்வெச்சரிக்கைகளைப் பற்றி அவர்கள் சந்தேகி(த்துத் தர்க்கி)க்கலாயினர்.
وَلَقَدْ رَاوَدُوْهُ عَنْ ضَیْفِهٖ فَطَمَسْنَاۤ اَعْیُنَهُمْ فَذُوْقُوْا عَذَابِیْ وَنُذُرِ ۟
وَ لَقَدْமேலும் நிச்சயமாகرَاوَدُوْهُஅவர்கள் அவரிடம் வற்புறுத்தினார்கள்عَنْthey demded from himகுறித்துضَیْفِهٖஅவருடைய விருந்தினர்களைفَطَمَسْنَاۤஎனவே நாம் குருடாக்கினோம்اَعْیُنَهُمْஅவர்களுடைய கண்களைفَذُوْقُوْاஎனவே சுவையுங்கள்عَذَابِیْஎனது வேதனையைوَ نُذُرِமேலும் எனது எச்சரிக்கைகளை
வ லகத் ராவதூஹு 'அன்ளய்Fபீஹீ Fபதமஸ்னா அஃயுனஹும் Fபதூகூ 'அதாBபீ வ னுதுர்
அன்றியும் அவருடைய விருந்தினரை (துர்ச் செயலுக்காக)க் கொண்டு போகப் பார்த்தார்கள்; ஆனால் நாம் அவர்களுடைய கண்களைப் போக்கினோம். “என்(னால் உண்டாகும்) வேதனையையும், எச்சரிக்கைகளையும் சுவைத்துப் பாருங்கள்” (என்றும் கூறினோம்).
وَلَقَدْ صَبَّحَهُمْ بُكْرَةً عَذَابٌ مُّسْتَقِرٌّ ۟ۚ
وَ لَقَدْநிச்சயமாகவேصَبَّحَهُمْஅவர்களைக் காலையில் வந்தடைந்ததுبُكْرَةًஅதிகாலையில்عَذَابٌஒரு வேதனைمُّسْتَقِرٌّۚநிலையான
வ லகத் ஸBப்Bபஹஹும் Bபுக்ரதன் 'அதாBபுன் முஸ்தகிர்ர்
எனவே, அதிகாலையில் அவர்களை நிலையான வேதனை திட்டமாக வந்தடைந்தது.
فَذُوْقُوْا عَذَابِیْ وَنُذُرِ ۟
فَذُوْقُوْاஆகவே சுவையுங்கள்عَذَابِیْஎன் வேதனையைوَ نُذُرِஎன் எச்சரிக்கைகளையும்
Fபதூகூ 'அதாBபீ வ னுதுர்
“ஆகவே, என்(னால் உண்டாகும்) வேதனையையும் எச்சரிக்கையையும் சுவைத்துப் பாருங்கள்” (என்று கூறினோம்).
وَلَقَدْ یَسَّرْنَا الْقُرْاٰنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ ۟۠
وَ لَقَدْமேலும் நிச்சயமாகیَسَّرْنَاநாம் எளிதாக்கினோம்الْقُرْاٰنَகுர்ஆனைلِلذِّكْرِநினைவுகூர்வதற்காகفَهَلْஎனவே உண்டாمِنْஎவரேனும்مُّدَّكِرٍ۠படிப்பினை பெறுபவர்
வ லகத் யஸ்ஸர்னல் குர்'ஆன லித் திக்ரி Fபஹல் மின் முத்தகிர்
நிச்சயமாக இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம். எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா?  
وَلَقَدْ جَآءَ اٰلَ فِرْعَوْنَ النُّذُرُ ۟ۚ
وَ لَقَدْமேலும் நிச்சயமாகவேجَآءَவந்தனاٰلَகூட்டத்தாரிடம்فِرْعَوْنَஃபிர்அவ்னுடையالنُّذُرُۚஎச்சரிக்கைகள்
வ லகத் ஜா'அ ஆல Fபிர்'அவ்னன் னுதுர்
ஃபிர்அவ்னின் கூட்டத்தாருக்கும் அச்சமூட்டும் எச்சரிக்கைகள் வந்தன.
كَذَّبُوْا بِاٰیٰتِنَا كُلِّهَا فَاَخَذْنٰهُمْ اَخْذَ عَزِیْزٍ مُّقْتَدِرٍ ۟
كَذَّبُوْاஅவர்கள் பொய்ப்பித்தார்கள்بِاٰیٰتِنَاநம்முடைய அத்தாட்சிகளைكُلِّهَاஅனைத்தையும்فَاَخَذْنٰهُمْஆகவே நாம் அவர்களைப் பிடித்தோம்اَخْذَபிடியாகعَزِیْزٍமிகைத்தவனின்مُّقْتَدِرٍபேராற்றலுடையவனின்
கத்தBபூ Bபி ஆயாதினா குல்லிஹா Fப அகத்னாஹும் அக்த 'அZஜீZஜிம் முக்ததிர்
ஆனால் அவர்கள் நம்முடைய அத்தாட்சிகள் அனைத்தையும் பொய்யாக்கினர்; அப்போது, சக்தி வாய்ந்த (யாவற்றையும்) மிகைக்கின்றவனின் பிடியாக அவர்களை நாம் பிடித்துக் கொண்டோம்.
اَكُفَّارُكُمْ خَیْرٌ مِّنْ اُولٰٓىِٕكُمْ اَمْ لَكُمْ بَرَآءَةٌ فِی الزُّبُرِ ۟ۚ
اَكُفَّارُكُمْஉங்கள் நிராகரிப்பாளர்கள்خَیْرٌசிறந்தவர்களாمِّنْவிடاُولٰٓىِٕكُمْஅவர்களைاَمْஅல்லதுلَكُمْஉங்களுக்குبَرَآءَةٌவிடுதலைفِیஇல்الزُّبُرِۚவேதங்கள்
'அ குFப்Fபாருகும் கய்ருன் மின் உலா'இகும் அம் லகும் Bபரா'அதுன் FபிZஜ் ZஜுBபுர்
(சென்று போன) அவர்களை விட உங்களிலுள்ள காஃபிர்கள் மேலானவர்களா? அல்லது, உங்களுக்கு (வேதனையிலிருந்து) விலக்கு இருப்பதாக வேத ஆதாரம் உண்டா?
اَمْ یَقُوْلُوْنَ نَحْنُ جَمِیْعٌ مُّنْتَصِرٌ ۟
اَمْஅல்லதுیَقُوْلُوْنَஅவர்கள் கூறுகிறார்களாنَحْنُநாங்கள்جَمِیْعٌஒரு கூட்டத்தினர்مُّنْتَصِرٌவெல்லக்கூடியவர்கள்
அம் யகூலூன னஹ்னு ஜமீ'உன் முன்தஸிர்
அல்லது (நபியே!) “நாங்கள் யாவரும் வெற்றி பெறுங் கூட்டத்தினர்” என்று அவர்கள் கூறுகின்றார்களா?
سَیُهْزَمُ الْجَمْعُ وَیُوَلُّوْنَ الدُّبُرَ ۟
سَیُهْزَمُவிரைவில் தோற்கடிக்கப்படும்الْجَمْعُஅக்கூட்டம்وَ یُوَلُّوْنَமேலும் அவர்கள் திரும்புவார்கள்الدُّبُرَபுறமுதுகு காட்டி
ஸ யுஹ்Zஜமுல் ஜம்'உ வ யுவல்லூனத் துBபுர்
அதிசீக்கிரத்தில் இக்கூட்டத்தினர் சிதறடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஓடுவர்.
بَلِ السَّاعَةُ مَوْعِدُهُمْ وَالسَّاعَةُ اَدْهٰی وَاَمَرُّ ۟
بَلِமாறாகالسَّاعَةُமறுமை வேளைمَوْعِدُهُمْஅவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட நேரம்وَ السَّاعَةُமேலும் அந்த மறுமை வேளைاَدْهٰیமிகக் கொடியதுوَ اَمَرُّமேலும் மிகக் கசப்பானது
Bபலிஸ் ஸா'அது மவ்'இதுஹும் வஸ் ஸா'அது அத்ஹா வ அமர்ர்
அதுவுமின்றி, மறுமைதான் இவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட (சோதனைக்) காலமாகும்; மறுமை அவர்களுக்கு மிகக் கடுமையானதும் மிக்க கசப்பானதுமாகும்.
اِنَّ الْمُجْرِمِیْنَ فِیْ ضَلٰلٍ وَّسُعُرٍ ۟ۘ
اِنَّநிச்சயமாகالْمُجْرِمِیْنَகுற்றவாளிகள்فِیْஉள்ளனர்ضَلٰلٍவழிகேட்டிலும்وَّ سُعُرٍۘநரக நெருப்பிலும்
இன்னல் முஜ்ரிமீன Fபீ ளலாலி(ன்)வ் வ ஸு'உர்
நிச்சயமாக, அக்குற்றவாளிகள் வழி கேட்டிலும், மதியிழந்தும் இருக்கின்றனர்.
یَوْمَ یُسْحَبُوْنَ فِی النَّارِ عَلٰی وُجُوْهِهِمْ ؕ ذُوْقُوْا مَسَّ سَقَرَ ۟
یَوْمَஅந்நாளில்یُسْحَبُوْنَஅவர்கள் இழுக்கப்படுவார்கள்فِیஇல்النَّارِநெருப்புعَلٰیமீதுوُجُوْهِهِمْ ؕதங்கள் முகங்கள்ذُوْقُوْاசுவையுங்கள்مَسَّதீண்டுதலைسَقَرَஸகர்
யவ்ம யுஸ்-ஹBபூன Fபின் னாரி 'அலா வுஜூஹிஹிம் தூகூ மஸ்ஸ ஸகர்
அவர்களுடைய முகங்களின் மீது அவர்கள் நரகத்திற்கு இழுத்துச் செல்லப்படும் நாளில், “நரக நெருப்புத் தீண்டுவதைச் சுவைத்துப் பாருங்கள்” (என்று அவர்களுக்கு கூறப்படும்).
اِنَّا كُلَّ شَیْءٍ خَلَقْنٰهُ بِقَدَرٍ ۟
اِنَّاநிச்சயமாக நாம்كُلَّஒவ்வொருشَیْءٍபொருளையும்خَلَقْنٰهُஅதனைப் படைத்தோம்بِقَدَرٍஓர் அளவின்படியே
இன்னா குல்ல ஷய்'இன் கலக்னாஹு Bபி கதர்
நாம் ஒவ்வொரு பொருளையும் நிச்சயமாக (குறிப்பான) அளவின்படியே படைத்திருக்கின்றோம்.
وَمَاۤ اَمْرُنَاۤ اِلَّا وَاحِدَةٌ كَلَمْحٍ بِالْبَصَرِ ۟
وَ مَاۤமேலும் இல்லைاَمْرُنَاۤஎமது கட்டளைاِلَّاதவிரوَاحِدَةٌஒன்றேكَلَمْحٍۭஇமைப்பதைப் போலبِالْبَصَرِகண்ணால்
வ மா அம்ருனா இல்லா வாஹிததுன் க லம்ஹின் Bபில் Bபஸர்
நம்முடைய கட்டளை (நிறைவேறுவது) கண் மூடி விழிப்பது போன்ற ஒன்றே அன்றி வேறில்லை.
وَلَقَدْ اَهْلَكْنَاۤ اَشْیَاعَكُمْ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ ۟
وَلَقَدْநிச்சயமாகவேاَهْلَكْنَاۤநாம் அழித்திருக்கிறோம்اَشْیَاعَكُمْஉங்களைப் போன்றவர்களைفَهَلْஎனவே உண்டாمِنْஎவரேனும்مُّدَّكِرٍபடிப்பினை பெறுபவர்
வ லகத் அஹ்லக்னா அஷ்யா'அகும் Fபஹல் மின் முத்தகிர்
(நிராகரிப்போரே!) உங்களில் எத்தனையோ வகுப்பார்களை நாம், நிச்சயமாக அழித்திருக்கின்றோம், எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா?
وَكُلُّ شَیْءٍ فَعَلُوْهُ فِی الزُّبُرِ ۟
وَ كُلُّமேலும் ஒவ்வொருشَیْءٍகாரியமும்فَعَلُوْهُஅவர்கள் செய்தவைفِیஇல்الزُّبُرِபதிவேடுகள்
வ குல்லு ஷய்'இன் Fப'அலூஹு FபிZஜ் ZஜுBபுர்
அவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும் (அவர்களுக்கான) பதிவேடுகளில் இருக்கிறது.
وَكُلُّ صَغِیْرٍ وَّكَبِیْرٍ مُّسْتَطَرٌ ۟
وَ كُلُّமேலும் ஒவ்வொருصَغِیْرٍசிறியதும்وَّ كَبِیْرٍபெரியதும்مُّسْتَطَرٌபதிவு செய்யப்பட்டுள்ளது
வ குல்லு ஸகீரி(ன்)வ் வ கBபீரின் முஸ்ததர்
சிறிதோ, பெரிதோ அனைத்தும் (அதில்) வரையப்பட்டிருக்கும்.
اِنَّ الْمُتَّقِیْنَ فِیْ جَنّٰتٍ وَّنَهَرٍ ۟ۙ
اِنَّநிச்சயமாகالْمُتَّقِیْنَஇறையச்சமுடையவர்கள்فِیْஇல்جَنّٰتٍசுவனங்கள்وَّ نَهَرٍۙமற்றும் ஆறு
இன்னல் முத்தகீன Fபீ ஜன்னாதி(ன்)வ் வ னஹர்
நிச்சயமாக பயபக்தியுடையவர்கள் சுவர்க்கச் சோலைகளில் (அவற்றிலுள்ள) ஆறுகளில் இருப்பார்கள்
فِیْ مَقْعَدِ صِدْقٍ عِنْدَ مَلِیْكٍ مُّقْتَدِرٍ ۟۠
فِیْஇல்مَقْعَدِஇருக்கைصِدْقٍசத்தியமானعِنْدَஅருகில்مَلِیْكٍபேரரசன்مُّقْتَدِرٍ۠பேராற்றல் மிக்க
Fபீ மக்'அதி ஸித்கின் 'இன்த மலீகின் முக்ததிர்
உண்மையான இருக்கையில் சர்வ வல்லமையுடைய அரசனின் (அருள்) அண்மையில் இருப்பார்கள்.