104. ஸூரத்துல் ஹுமஜா(புறங்கூறல்)

மக்கீ, வசனங்கள்: 9

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
وَیْلٌ لِّكُلِّ هُمَزَةٍ لُّمَزَةِ ۟ۙ
وَيْلٌகேடுதான்لِّـكُلِّஎல்லோருக்கும்هُمَزَةٍபுறம் பேசுபவர்لُّمَزَةِ ۙ‏குறை கூறுபவர்
வய்லுல்-லிகுல்லி ஹு மZஜதில்-லுமZஜஹ்
குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்.
لَّذِیْ جَمَعَ مَالًا وَّعَدَّدَهٗ ۟ۙ
اۨلَّذِىْஎவன்جَمَعَசேகரித்தான்مَالًاசெல்வத்தைوَّعَدَّدَهٗ ۙ‏இன்னும் அதை எண்ணி எண்ணிப் பார்த்தான்
அல்லதீ ஜம'அ மால(ன்)வ் வ 'அத்ததஹ்
(அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான்.
یَحْسَبُ اَنَّ مَالَهٗۤ اَخْلَدَهٗ ۟ۚ
يَحْسَبُகருதுகிறான்اَنَّ مَالَهٗۤநிச்சயமாக தன் செல்வம்اَخْلَدَهٗ‌ ۚ‏தன்னை நிரந்தரமாக்கும்
யஹ்ஸBபு அன்ன மாலஹூ அக்லதஹ்
நிச்சயமாகத், தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான்.
كَلَّا لَیُنْۢبَذَنَّ فِی الْحُطَمَةِ ۟ؗۖ
كَلَّا‌அவ்வாறல்லلَيُنْۢبَذَنَّநிச்சயமாக எறியப்படுவான்فِى ‏الْحُطَمَةِؗۖஹூதமாவில்
கல்லா; லயும்Bபதன்ன Fபில் ஹுதமஹ்
அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் எறியப்படுவான்.
وَمَاۤ اَدْرٰىكَ مَا الْحُطَمَةُ ۟ؕ
وَمَاۤஎதுاَدْرٰٮكَஉமக்கு அறிவித்ததுمَاஎன்னவென்றுالْحُطَمَةُ ؕ‏ஹூதமா
வமா அத்ராக மல்-ஹுதமஹ்
ஹுதமா என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?
نَارُ اللّٰهِ الْمُوْقَدَةُ ۟ۙ
نَارُநெருப்புاللّٰهِஅல்லாஹ்வுடையالْمُوْقَدَةُ ۙ‏எரிக்கப்பட்ட
னாருல் லாஹில்-மூகதா
அது எரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பாகும்.
الَّتِیْ تَطَّلِعُ عَلَی الْاَفْـِٕدَةِ ۟ؕ
الَّتِىْஅதுتَطَّلِعُஎட்டிப் பார்க்கும்عَلَى الْاَفْـــِٕدَةِ ؕ‏உள்ளங்களில்
அல்லதீ தத்தலி'உ 'அலல் அFப்'இதஹ்
அது (உடலில் பட்டதும்) இருதயங்களில் பாயும்.
اِنَّهَا عَلَیْهِمْ مُّؤْصَدَةٌ ۟ۙ
اِنَّهَاநிச்சயமாக அதுعَلَيْهِمْஅவர்கள் மீதுمُّؤْصَدَةٌ ۙ‏மூடப்படும்
இன்னஹா 'அலய்ஹிம் மு'ஸதா
நிச்சயமாக அது அவர்களைச் சூழ்ந்து மூட்டப்படும்.
فِیْ عَمَدٍ مُّمَدَّدَةٍ ۟۠
فِىْ عَمَدٍதூண்களில்مُّمَدَّدَةٍ‏உயரமான
Fபீ 'அமதிம் முமத்ததஹ்
நீண்ட கம்பங்களில் (அவர்கள் கட்டப்பட்டவர்களாக).