99. ஸூரத்துஜ் ஜில்ஜால் (அதிர்ச்சி)

மதனி, வசனங்கள்: 8

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
اِذَا زُلْزِلَتِ الْاَرْضُ زِلْزَالَهَا ۟ۙ
اِذَاபோதுزُلْزِلَتِஅதிர்க்கப்படும்الْاَرْضُபூமிزِلْزَالَهَاۙஅதன் அதிர்ச்சியால்
இதா Zஜுல் Zஜிலதில் அர்ளு Zஜில் Zஜாலஹா
பூமி பெரும் அதிர்ச்சியாக - அதிர்ச்சி அடையும் போது-
وَاَخْرَجَتِ الْاَرْضُ اَثْقَالَهَا ۟ۙ
وَ اَخْرَجَتِமேலும் வெளியேற்றும்الْاَرْضُபூமிاَثْقَالَهَاۙதன் சுமைகளை
வ அக் ரஜதில் அர்ளு அத்காலஹா
இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது-
وَقَالَ الْاِنْسَانُ مَا لَهَا ۟ۚ
وَ قَالَமேலும் கூறுவான்الْاِنْسَانُமனிதன்مَاஎன்னلَهَاۚஇதற்கு
வ காலல் இன்ஸானு ம லஹா
“அதற்கு என்ன நேர்ந்தது?” என்று மனிதன் கேட்கும் போது-
یَوْمَىِٕذٍ تُحَدِّثُ اَخْبَارَهَا ۟ؕ
یَوْمَىِٕذٍஅந்நாளில்تُحَدِّثُஅது அறிவிக்கும்اَخْبَارَهَاۙஅதன் செய்திகளை
யவ்மா இதின் துஹத்திது அக்Bபாரஹா
அந்நாளில், அது தன் செய்திகளை அறிவிக்கும்.
بِاَنَّ رَبَّكَ اَوْحٰی لَهَا ۟ؕ
بِاَنَّஏனெனில்رَبَّكَஉமது இறைவன்اَوْحٰیஅறிவித்தான்لَهَاؕஅதற்கு
Bபி-அன்ன ரBப்Bபக அவ்ஹா லஹா
(அவ்வாறு அறிவிக்குமாறு) உம்முடைய இறைவன் அதற்கு வஹீ மூலம் அறிவித்ததனால்.
یَوْمَىِٕذٍ یَّصْدُرُ النَّاسُ اَشْتَاتًا ۙ۬ لِّیُرَوْا اَعْمَالَهُمْ ۟ؕ
یَوْمَىِٕذٍஅந்நாளில்یَّصْدُرُபுறப்படுவார்கள்النَّاسُமனிதர்கள்اَشْتَاتًا ۙ۬பல பிரிவுகளாகلِّیُرَوْاகாண்பிக்கப்படுவதற்காகاَعْمَالَهُمْؕஅவர்களுடைய செயல்களை
யவ்ம இதி(ன்)ய் யஸ் துருன் னாஸு அஷ் ததல் லியுரவ் அஃமாலஹும்
அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள்.
فَمَنْ یَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَیْرًا یَّرَهٗ ۟ؕ
فَمَنْஎனவே எவர்یَّعْمَلْசெய்கிறாரோمِثْقَالَஅளவுذَرَّةٍஅணுخَیْرًاநன்மையைیَّرَهٗؕஅதைக் காண்பார்
Fபமய்ய் யஃமல் மித்கல தர்ரதின் கய் ரய்ய்-யரஹ்
எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார்.
وَمَنْ یَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا یَّرَهٗ ۟۠
وَ مَنْமேலும் எவர்یَّعْمَلْசெய்கிறாரோمِثْقَالَஎடைذَرَّةٍஅணுவளவுشَرًّاதீமையைیَّرَهٗ۠அதைக் காண்பார்
வ மய்ய்-யஃமல் மித்கல தர்ரதின் ஷர்ரய்ய்-யரஹ்
அன்றியும், எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்.