36. ஸூரத்து யாஸீன்

மக்கீ, வசனங்கள்: 83

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
وَالْقُرْاٰنِ الْحَكِیْمِ ۟ۙ
وَالْقُرْاٰنِகுர்ஆன் மீது சத்தியமாக!الْحَكِيْمِ ۙ‏ஞானமிகுந்த(து)
வல்-குர்ஆனில்-ஹகீம்
ஞானம் நிரம்பிய இக் குர்ஆன் மீது சத்தியமாக!
اِنَّكَ لَمِنَ الْمُرْسَلِیْنَ ۟ۙ
اِنَّكَநிச்சயமாக நீர்لَمِنَ الْمُرْسَلِيْنَۙ‏இறைத்தூதர்களில் ஒருவர் ஆவீர்
இன்னக லமினல் முர்ஸலீன்
நிச்சயமாக, நீர் (நம்) தூதர்களில் உள்ளவராவீர்.
عَلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۟ؕ
عَلٰى صِرَاطٍபாதையில்مُّسْتَقِيْمٍؕ‏நேரான(து)
'அலா ஸிராதிம் முஸ்தகீம்
நேரான பாதை மீது (இருக்கின்றீர்).
تَنْزِیْلَ الْعَزِیْزِ الرَّحِیْمِ ۟ۙ
تَنْزِيْلَஇறக்கிய வேதமாகும்الْعَزِيْزِமிகைத்தவன்الرَّحِيْمِ ۙ‏மகா கருணையாளன்
தன்Zஜீலல் 'அZஜீZஜிர் ரஹீம்
(இது) யாவரையும் மிகைத்தோன், கிருபையுடையவனால் இறக்கி அருளப்பட்டதாகும்.
لِتُنْذِرَ قَوْمًا مَّاۤ اُنْذِرَ اٰبَآؤُهُمْ فَهُمْ غٰفِلُوْنَ ۟
لِتُنْذِرَநீர் எச்சரிப்பதற்காகقَوْمًاஒரு சமுதாயத்தைمَّاۤ اُنْذِرَஎச்சரிக்கப்படவில்லைاٰبَآؤُமூதாதைகள்هُمْஅவர்களின்فَهُمْஆகவே, அவர்கள்غٰفِلُوْنَ‏அலட்சியக்காரர்களாக இருக்கின்றனர்
லிதுன்திர கவ்மம் மா உன்திர ஆBபா'உஹும் Fபஹும் காFபிலூன்
எந்த சமூகத்தினரின் மூதாதையர்கள், எச்சரிக்கப்படாமையினால் இவர்கள் (நேர்வழி பற்றி) அலட்சியமாக இருக்கின்றார்களோ இ(த்தகைய)வர்களை நீர் எச்சரிப்பதற்காக.
لَقَدْ حَقَّ الْقَوْلُ عَلٰۤی اَكْثَرِهِمْ فَهُمْ لَا یُؤْمِنُوْنَ ۟
لَقَدْதிட்டமாகحَقَّஉறுதியாகிவிட்டதுالْقَوْلُவாக்குعَلٰٓى اَكْثَرِஅதிகமானவர்கள் மீதுهِمْஅவர்களில்فَهُمْஆகவே, அவர்கள்لَا يُؤْمِنُوْنَ‏நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
லகத் ஹக்கல் கவ்லு 'அலா அக்தரிஹிம் Fபஹும் லா யு'மினூன்
இவர்களில் பெரும்பாலோர் மீது (இவர்களுக்கு வரவிருக்கும் வேதனை பற்றிய) வாக்கு நிச்சயமாக உண்மையாகிவிட்டது; ஆகவே இவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள்.
اِنَّا جَعَلْنَا فِیْۤ اَعْنَاقِهِمْ اَغْلٰلًا فَهِیَ اِلَی الْاَذْقَانِ فَهُمْ مُّقْمَحُوْنَ ۟
اِنَّاநிச்சயமாக நாம்جَعَلْنَاஏற்படுத்தி விட்டோம்فِىْۤ اَعْنَاقِهِمْஅவர்களின் கழுத்துகள் மீதுاَغْلٰلًاஅரிகண்டங்களைفَهِىَஅவைاِلَى الْاَ ذْقَانِதாடைகள் வரைفَهُمْஆகவே, அவர்கள்مُّقْمَحُوْنَ‏உயர்த்தியவர்களாக
இன்னா ஜ'அல்னா Fபீ அஃனாகிஹிம் அக்லாலன் Fபஹிய இலல் அத்கானி Fபஹும் முக்மஹூன்
நிச்சயமாக நாம் அவர்களுடைய கழுத்துகளில் மோவாய்க் கட்டைகள் வரையில், அரிகண்டங்களைப் போட்டிருக்கின்றோம், ஆகவே அவர்கள் (குனிய முடியாதவாறு) தலை நிமிர்ந்து விட்டனர்.
وَجَعَلْنَا مِنْ بَیْنِ اَیْدِیْهِمْ سَدًّا وَّمِنْ خَلْفِهِمْ سَدًّا فَاَغْشَیْنٰهُمْ فَهُمْ لَا یُبْصِرُوْنَ ۟
وَجَعَلْنَاநாம் ஆக்கினோம்مِنْۢ بَيْنِ اَيْدِيْهِمْஅவர்களுக்கு முன்னும்سَدًّاஒரு தடுப்பைوَّمِنْ خَلْفِهِمْஅவர்களுக்கு பின்னும்سَدًّاஒரு தடுப்பைفَاَغْشَيْنٰهُمْஆகவே நாம் அவர்க(ளின் பார்வைக)ளை மூடி விட்டோம் (-குருடாக்கி விட்டோம்)فَهُمْஆகவே, அவர்கள்لَا يُبْصِرُوْنَ‏பார்க்கமாட்டார்கள்
வ ஜ'அல்னா மின் Bபய்னி அய்தீஹிம் ஸத்த(ன்)வ்-வ மின் கல்Fபிஹிம் ஸத்தன் Fப அக்ஷய் னாஹும் Fபஹும் லா யுBப்ஸிரூன்
இன்னும் நாம் அவர்களுக்கு முன்னே ஒரு தடுப்பையும் அவர்களுக்குப் பின்னே ஒரு தடுப்பையும் ஏற்படுத்தியுள்ளோம்; (இவ்வாறாக) அவர்களை மூடிவிட்டோம் - ஆகையால் அவர்கள் பார்க்க முடியாது.
وَسَوَآءٌ عَلَیْهِمْ ءَاَنْذَرْتَهُمْ اَمْ لَمْ تُنْذِرْهُمْ لَا یُؤْمِنُوْنَ ۟
وَسَوَآءٌசமம் தான்عَلَيْهِمْஅவர்கள் மீதுءَاَنْذَرْتَهُمْநீர் அவர்களை எச்சரித்தாலும்اَمْஅல்லதுلَمْ تُنْذِرْهُمْஅவர்களை நீர் எச்சரிக்கவில்லை என்றாலும்لَا يُؤْمِنُوْنَ‏அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
வ ஸவா'உன் 'அலய்ஹிம் 'அ-அன்தர்தஹும் அம் லம் துன்திர்ஹும் லா யு'மினூன்
இன்னும், அவர்களை நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும் அல்லது அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யாமலிருப்பதும் அவர்களுக்கு சமமே தான்; அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்.
اِنَّمَا تُنْذِرُ مَنِ اتَّبَعَ الذِّكْرَ وَخَشِیَ الرَّحْمٰنَ بِالْغَیْبِ ۚ فَبَشِّرْهُ بِمَغْفِرَةٍ وَّاَجْرٍ كَرِیْمٍ ۟
اِنَّمَا تُنْذِرُநீர் எச்சரிப்பதெல்லாம்مَنِஎவர்اتَّبَعَபின்பற்றினார்الذِّكْرَஇந்த வேதத்தைوَخَشِىَஇன்னும் பயந்தார்الرَّحْمٰنَபேரருளாளனைبِالْغَيْبِۚமறைவில்فَبَشِّرْهُஆகவே அவருக்கு நற்செய்தி கூறுவீராக!بِمَغْفِرَةٍமன்னிப்பைக் கொண்டும்وَّاَجْرٍகூலியைக் கொண்டும்كَرِيْمٍ‏கண்ணியமான
இன்னமா துன்திரு மனித் தBப 'அத்-திக்ர வ கஷியர் ரஹ்மான Bபில்கய்Bப், FபBபஷ்ஷிர்ஹு Bபிமக்Fபிரதி(ன்)வ்-வ அஜ்ரின் கரீம்
நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதெல்லாம் உபதேசத்தைப் பின்பற்றி யார் மறைவாகவும் அர்ரஹ்மானுக்கு அஞ்சி நடக்கிறார்களோ அவர்களைத் தான்; அ(த்தகைய)வருக்கு மன்னிப்பும் மகத்தான நற்கூலியும் உண்டென்று நன்மாராயம் கூறுவீராக.
اِنَّا نَحْنُ نُحْیِ الْمَوْتٰی وَنَكْتُبُ مَا قَدَّمُوْا وَاٰثَارَهُمْ ؔؕ وَكُلَّ شَیْءٍ اَحْصَیْنٰهُ فِیْۤ اِمَامٍ مُّبِیْنٍ ۟۠
اِنَّا نَحْنُநிச்சயமாக நாம்தான்نُحْىِஉயிர்ப்பிக்கின்றோம்الْمَوْتٰىஇறந்தவர்களைوَنَكْتُبُஇன்னும் பதிவு செய்வோம்مَا قَدَّمُوْاஅவர்கள் முன்னர் செய்தவற்றையும்وَاٰثَارَகாலடிச் சுவடுகளைهُمْؕؔஅவர்களின்وَكُلَّ شَىْءٍஎல்லாவற்றையும்اَحْصَيْنٰهُஅதைப் பதிவு செய்துள்ளோம்فِىْۤ اِمَامٍபதிவேட்டில்مُّبِيْنٍ‏தெளிவான
இன்னா னஹ்னு னுஹ்யில் மவ்தா வ னக்துBபு மா கத்தமூ வ ஆதாரஹும்; வ குல்ல ஷய்'இன் அஹ்ஸய்னாஹு Fபீ இமாமிம் முBபீன்
நிச்சயமாக மரணமடைந்தவர்களை நாமே உயிர்ப்பிக்கிறோம்; அன்றியும் (நன்மை, தீமைகளில்) அவர்கள் முற்படுத்தியதையும், அவர்கள் விட்டுச் சென்றவற்றையும் நாம் எழுதுகிறோம்; எல்லாவற்றையும், நாம் ஒரு விளக்கமான ஏட்டில் பதிந்தே வைத்துள்ளோம்.  
وَاضْرِبْ لَهُمْ مَّثَلًا اَصْحٰبَ الْقَرْیَةِ ۘ اِذْ جَآءَهَا الْمُرْسَلُوْنَ ۟ۚ
وَاضْرِبْஎடுத்துச் சொல்வீராக!لَهُمْஅவர்களுக்குمَّثَلًاஉதாரணமாகاَصْحٰبَ الْقَرْيَةِ ۘஅந்த ஊர் வாசிகளைاِذْ جَآءَهَاஅவர்களிடம் வந்த சமயத்தை நினைவு கூர்வீராக!الْمُرْسَلُوْنَۚ‏தூதர்கள்
வள்ரிBப் லஹும் மதலன் அஸ்ஹாBபல் கர்யதிஹ்; இத் ஜா'அஹல் முர்ஸலூன்
(நபியே! நம்) தூதர்கள் ஓர் ஊர்வாசிகளிடம் வந்த(போது நிகழ்ந்த)தை அவர்களுக்கு உதாரணமாகச் சொல்வீராக.
اِذْ اَرْسَلْنَاۤ اِلَیْهِمُ اثْنَیْنِ فَكَذَّبُوْهُمَا فَعَزَّزْنَا بِثَالِثٍ فَقَالُوْۤا اِنَّاۤ اِلَیْكُمْ مُّرْسَلُوْنَ ۟
اِذْ اَرْسَلْنَاۤநாம் அனுப்பியபோதுاِلَيْهِمُஅவர்களிடம்اثْنَيْنِஇருவரைفَكَذَّبُوْஅவர்கள் பொய்ப்பித்தனர்هُمَاஅவ்விருவரையும்فَعَزَّزْنَاபலப்படுத்தினோம்بِثَالِثٍமூன்றாவது ஒருவரைக்கொண்டுفَقَالُـوْۤاஅவர்கள் கூறினர்اِنَّاۤநிச்சயமாக நாங்கள்اِلَيْكُمْஉங்கள் பக்கம்مُّرْسَلُوْنَ‏அனுப்பப்பட்ட தூதர்கள்
இத் அர்ஸல்னா இலய்ஹிமுத்னய்னி Fபகத்தBபூஹுமா Fப'அZஜ்ZஜZஜ்னா Bபிதாலிதின் Fபகாலூ இன்னா இலய்கும் முர்ஸலூன்
நாம் அவர்களிடம் தூதர்கள் இருவரை அனுப்பியபோது, அவ்விருவரையும் அவர்கள் பொய்யாக்கினார்கள்; ஆகவே (அவர்களை) மூன்றாவது தூதரைக் கொண்டு வலுப்படுத்தினோம்; ஆகவே, “நிச்சயமாக நாங்கள் உங்களிடம் அனுப்பப்பட்ட தூதர்கள் ஆவோம்” என்று அவர்கள் கூறினார்கள்.
قَالُوْا مَاۤ اَنْتُمْ اِلَّا بَشَرٌ مِّثْلُنَا ۙ وَمَاۤ اَنْزَلَ الرَّحْمٰنُ مِنْ شَیْءٍ ۙ اِنْ اَنْتُمْ اِلَّا تَكْذِبُوْنَ ۟
قَالُوْاஅவர்கள் கூறினர்مَاۤ اَنْـتُمْநீங்கள் இல்லைاِلَّاஅன்றிبَشَرٌமனிதர்கள்مِّثْلُـنَا ۙஎங்களைப் போன்றوَمَاۤ اَنْزَلَஇறக்கவில்லைالرَّحْمٰنُபேரருளாளன்مِنْ شَىْءٍۙஎதையும்اِنْ اَنْـتُمْநீங்கள் இல்லைاِلَّاதவிரتَكْذِبُوْنَ‏பொய் சொல்கின்றவர்களாகவே
காலூ மா அன்தும் இல்லா Bபஷரும் மித்லுனா வ மா அன்Zஜலர் ரஹ்மானு மின் ஷய்'இன் இன் அன்தும் இல்லா தக்திBபூன்
(அதற்கு அம்மக்கள்:) “நீங்களும் எங்களைப் போன்ற மனிதர்களேயன்றி வேறல்லர்; அர்ரஹ்மான் (உங்களுக்கு) எதனையும் இறக்கி வைக்கவில்லை. நீங்கள் பொய்யே கூறுகிறீர்களேயன்றி வேறில்லை” என்று கூறினார்கள்.
قَالُوْا رَبُّنَا یَعْلَمُ اِنَّاۤ اِلَیْكُمْ لَمُرْسَلُوْنَ ۟
قَالُوْاஅவர்கள் கூறினர்رَبُّنَاஎங்கள் இறைவன்يَعْلَمُநன்கறிவான்اِنَّاۤநிச்சயமாக நாங்கள்اِلَيْكُمْஉங்கள் பக்கம்لَمُرْسَلُوْنَ‏அனுப்பப்பட்ட தூதர்கள்
காலூ ரBப்Bபுனா யஃலமு இன்னா இலய்கும் லமுர்ஸலூன்
(இதற்கு அவர்கள்:) “நிச்சயமாக நாங்கள் உங்களிடம் அனுப்பப்பட்டுள்ளவர்கள் என்பதை எங்கள் இறைவன் நன்கறிவான்” என்று கூறினர்.
وَمَا عَلَیْنَاۤ اِلَّا الْبَلٰغُ الْمُبِیْنُ ۟
وَمَا عَلَيْنَاۤஎங்கள் மீது இல்லைاِلَّاதவிரالْبَلٰغُஎடுத்துரைப்பதைالْمُبِيْنُ‏தெளிவாக
வமா 'அலய்னா இல்லல் Bபலாகுல் முBபீன்
“இன்னும், எங்கள் கடமை (இறைவனின் தூதுச் செய்தியை) விளக்கமாக எடுத்துச் சொல்வதைத் தவிர வேறில்லை” (என்றும் கூறினார்).
قَالُوْۤا اِنَّا تَطَیَّرْنَا بِكُمْ ۚ لَىِٕنْ لَّمْ تَنْتَهُوْا لَنَرْجُمَنَّكُمْ وَلَیَمَسَّنَّكُمْ مِّنَّا عَذَابٌ اَلِیْمٌ ۟
قَالُـوْۤاஅவர்கள் கூறினர்اِنَّاநிச்சயமாக நாங்கள்تَطَيَّرْنَاதுர்ச்குனமாக கருதுகின்றோம்بِكُمْۚஉங்களைلَٮِٕنْ لَّمْ تَنْتَهُوْاநீங்கள் விலகவில்லை என்றால்لَنَرْجُمَنَّكُمْநிச்சயமாக நாங்கள் உங்களை கல்லால் எறிவோம்وَلَيَمَسَّنَّكُمْஇன்னும் நிச்சயமாக உங்களை வந்தடையும்مِّنَّاஎங்களிடமிருந்துعَذَابٌவேதனைاَلِيْمٌ‏வலிமிகுந்த
காலூ இன்னா ததய்யர்னா Bபிகும் ல'இல்-லம் தன்தஹூ லனர் ஜுமன்னகும் வ ல-யமஸ்ஸன் னகும் மின்னா 'அதாBபுன் அலீம்
(அதற்கு அம்மக்கள்:) கூறினார்கள்: “நிச்சயமாக நாங்கள் உங்களைத் துர்ச்சகுனமாகவே கருதுகின்றோம்; நீங்கள் (இதிலிருந்து) விலகிக் கொள்ளாவிட்டால் உங்களைத் திட்டமாகக் கல்லாலடிப்போம்; மேலும் எம்மிடமிருந்து உங்களை நோவினை செய்யும் வேதனையும் பிடித்துக் கொள்ளும்.”
قَالُوْا طَآىِٕرُكُمْ مَّعَكُمْ ؕ اَىِٕنْ ذُكِّرْتُمْ ؕ بَلْ اَنْتُمْ قَوْمٌ مُّسْرِفُوْنَ ۟
قَالُوْاஅவர்கள் கூறினர்طٰۤٮِٕـرُதுர்ச்சகுனம்كُمْஉங்கள்مَّعَكُمْؕஉங்களுடன்தான்اَٮِٕنْ ذُكِّرْتُمْ ؕநீங்கள் அறிவுறுத்தப்பட்டாலுமாبَلْமாறாகاَنْـتُمْநீங்கள்قَوْمٌமக்கள்مُّسْرِفُوْنَ‏வரம்பு மீறுகின்ற
காலூ தா'இருகும் ம'அகும்; அ'இன் துக்கிர்தும்; Bபல் அன்தும் கவ்மும் முஸ்ரிFபூன்
அ(தற்கு தூதனுப்பப்பட்ட)வர்கள் கூறினார்கள்: “உங்கள் துர்ச்சகுனம் உங்களிடத்தில் தான் இருக்கின்றது; உங்களுக்கு நற்போதனை செய்வதையா (துர்ச்சகுனமாகக் கருதுகிறீர்கள்?) அப்படியல்ல! நீங்கள் வரம்பு மீறிய சமூகத்தாராகவே இருக்கிறீர்கள்.
وَجَآءَ مِنْ اَقْصَا الْمَدِیْنَةِ رَجُلٌ یَّسْعٰی قَالَ یٰقَوْمِ اتَّبِعُوا الْمُرْسَلِیْنَ ۟ۙ
وَجَآءَவந்தார்مِنْ اَقْصَاகடைக்கோடியில் இருந்துالْمَدِيْنَةِபட்டணத்தின்رَجُلٌஓர் ஆடவர்يَّسْعٰىவிரைந்தவராகقَالَஅவர் கூறினார்يٰقَوْمِஎன் மக்களே!اتَّبِعُواநீங்கள் பின்பற்றுங்கள்الْمُرْسَلِيْنَۙ‏தூதர்களை
வ ஜா'அ மின் அக்ஸல் மதீனதி ரஜுலு(ன்)ய் யஸ்'ஆ கால யா கவ்மித் தBபி'உல் முர்ஸலீன்
(அப்பொழுது) ஒரு மனிதர் அப்பட்டணத்தின் கடைக்கோடியிலிருந்து விரைந்து வந்து (அவர்களிடம்); “என் சமூகத்தவரே! நீங்கள் இத்தூதர்களைப் பின்பற்றுங்கள்” என்று கூறினார்.
اتَّبِعُوْا مَنْ لَّا یَسْـَٔلُكُمْ اَجْرًا وَّهُمْ مُّهْتَدُوْنَ ۟
اتَّبِعُوْاபின்பற்றுங்கள்مَنْஎவர்لَّا يَسْــٴَــلُكُمْஉங்களிடம் கேட்க மாட்டார்اَجْرًاகூலியைوَّهُمْஅவர்கள்தான்مُّهْتَدُوْنَ‏நேர்வழி பெற்றவர்கள்
இத்தBபி'ஊ மல்-லா யஸ்'அலுகும் அஜ்ர(ன்)வ்-வ ஹும் முஹ்ததூன்
“உங்களிடம் ஒரு கூலியும் கேட்காத இவர்களை நீங்கள் பின்பற்றுங்கள்; இன்னும் இவர்களே நேர்வழி பெற்றவர்கள்” (என்றும் அவர் கூறினார்).  
وَمَا لِیَ لَاۤ اَعْبُدُ الَّذِیْ فَطَرَنِیْ وَاِلَیْهِ تُرْجَعُوْنَ ۟
وَمَا لِىَஎனக்கு என்ன நேர்ந்தது?لَاۤ اَعْبُدُநான் வணங்காமல் இருப்பதற்குالَّذِىْ فَطَرَنِىْஎன்னைப் படைத்தவனைوَاِلَيْهِஅவன் பக்கம்தான்تُرْجَعُوْنَ‏நீங்களும் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்
வமா லிய லா அஃBபுதுல் லதீ Fபதரனீ வ இலய்ஹி துர்ஜ'ஊன்
“அன்றியும், என்னைப்படைத்தவனை நான் வணங்காமலிருப்பதற்கு எனக்கென்ன (காரணமிருக்கிறது?) அவனிடமே நீங்கள் மீள்விக்கப்படுவீர்கள்.
ءَاَتَّخِذُ مِنْ دُوْنِهٖۤ اٰلِهَةً اِنْ یُّرِدْنِ الرَّحْمٰنُ بِضُرٍّ لَّا تُغْنِ عَنِّیْ شَفَاعَتُهُمْ شَیْـًٔا وَّلَا یُنْقِذُوْنِ ۟ۚ
ءَاَ تَّخِذُநான் எடுத்துக் கொள்வேனா!مِنْ دُوْنِهٖۤஅவனையன்றிاٰلِهَةً(வேறு) தெய்வங்களைاِنْ يُّرِدْنِஎனக்கு நாடினால்الرَّحْمٰنُபேரருளாளன்بِضُرٍّஒரு தீங்கைلَّا تُغْنِதடுக்காதுعَنِّىْஎன்னை விட்டும்شَفَاعَتُهُمْஅவற்றின் சிபாரிசுشَيْئًاஎதையும்وَّلَا يُنْقِذُوْنِ‌ۚ‏இன்னும் அவர்கள் என்னை காப்பாற்ற மாட்டார்கள்
'அ-அத்தகிது மின் தூனிஹீ ஆலிஹதன் இ(ன்)ய்-யுரித்னிர் ரஹ்மானு Bபிளுர்ரில்-லா துக்னி 'அன்னீ ஷFபா 'அதுஹும் ஷய் 'அ(ன்)வ்-வ லா யுன்கிதூன்
“அவனையன்றி வேறு நாயனை நான் எடுத்துக் கொள்வேனா? அர்ரஹ்மான் எனக்கு ஏதேனும் கெடுதியைக் கொண்டு நாடினால், இவற்றின் சிபாரிசு ஒரு பயனும் எனக்கு அளிக்காது. இவை என்னை விடுவிக்கவும் முடியாது.
اِنِّیْۤ اِذًا لَّفِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟
اِنِّىْۤநிச்சயமாக நான்اِذًاஅப்போதுلَّفِىْ ضَلٰلٍவழிகேட்டில்தான்مُّبِيْنٍ‏தெளிவான
இன்னீ இதல்-லFபீ ளலா-லிம்-முBபீன்
“(எனவே, நான் அவன் ஒருவனையே வணங்காவிட்டால்) அப்போது நான் நிச்சயமாக, வெளிப்படையான வழிகேட்டில் இருப்பேன்.
اِنِّیْۤ اٰمَنْتُ بِرَبِّكُمْ فَاسْمَعُوْنِ ۟ؕ
اِنِّىْۤநிச்சயமாக நான்اٰمَنْتُநம்பிக்கை கொண்டேன்بِرَبِّكُمْஉங்கள் இறைவனைفَاسْمَعُوْنِؕ‏ஆகவே எனக்கு செவிசாயுங்கள்!
இன்னீ ஆமன்து Bபி ரBப்Bபிகும் Fபஸ்ம'ஊன்
“உங்கள் இறைவன் மீதே நிச்சயமாக நான் ஈமான் கொண்டிருக்கின்றேன்; ஆகவே, நீங்கள் எனக்குச் செவிசாயுங்கள்.”
قِیْلَ ادْخُلِ الْجَنَّةَ ؕ قَالَ یٰلَیْتَ قَوْمِیْ یَعْلَمُوْنَ ۟ۙ
قِيْلَகூறப்பட்டதுادْخُلِநீர் நுழைவீராக!الْجَـنَّةَ ؕசொர்க்கத்தில்قَالَஅவர் கூறினார்يٰلَيْتَ قَوْمِىْ يَعْلَمُوْنَۙ‏என் மக்கள் (இதை) அறியவேண்டுமே!
கீலத் குலில் ஜன்னத கால யா லய்த கவ்மீ யஃலமூன்
(ஆனால், செவிசாய்க்காது அவரைக் கொன்றுவிட்டனர்.) “நீர் சுவர்க்கத்தில் பிரவேசிப்பீராக” என்று (அவரிடம்) கூறப்பட்டது. “என்னுடைய சமூகத்தார் அறிந்து கொள்ள வேண்டுமே என்று கூறினார்.”
بِمَا غَفَرَ لِیْ رَبِّیْ وَجَعَلَنِیْ مِنَ الْمُكْرَمِیْنَ ۟
بِمَا غَفَرَமன்னிப்பு வழங்கியதையும்لِىْஎனக்குرَبِّىْஎன் இறைவன்وَجَعَلَنِىْஎன்னை அவன் ஆக்கியதையும்مِنَ الْمُكْرَمِيْنَ‏கண்ணியமானவர்களில்
Bபிமா கFபர லீ ரBப்Bபீ வ ஜ'அலனீ மினல் முக்ரமீன்
“என்னுடைய இறைவன் எனக்கு மன்னிப்பளித்து, கண்ணியமானவர்களில் நின்றும் அவன் என்னை ஆக்கிவிட்டான்” (என்பதை).
وَمَاۤ اَنْزَلْنَا عَلٰی قَوْمِهٖ مِنْ بَعْدِهٖ مِنْ جُنْدٍ مِّنَ السَّمَآءِ وَمَا كُنَّا مُنْزِلِیْنَ ۟
وَمَاۤ اَنْزَلْنَاநாம் இறக்கவில்லைعَلٰىமீதுقَوْمِهٖஅவருடைய மக்கள்مِنْۢ بَعْدِهٖஅவருக்குப் பின்னர்مِنْ جُنْدٍஒரு படையைمِّنَ السَّمَآءِவானத்திலிருந்துوَمَا كُـنَّاநாம் இல்லைمُنْزِلِيْنَ‏இறக்குபவர்களாகவும்
வ மா அன்Zஜல்னா 'அலா கவ்மிஹீ மிம் Bபஃதிஹீ மின் ஜுன்திம் மினஸ்-ஸமா'இ வமா குன்னா முன்Zஜிலீன்
தவிர, நாம் அவருக்குப் பின்னால் அவருடைய சமூகத்தார் மீது வானத்திலிருந்து எந்த சேனையையும் (அவர்களை அழிப்பதற்காக) இறக்கிவைக்கவில்லை; அப்படி இறக்கி வைப்பவராகவும் நாம் இல்லை.
اِنْ كَانَتْ اِلَّا صَیْحَةً وَّاحِدَةً فَاِذَا هُمْ خٰمِدُوْنَ ۟
اِنْ كَانَتْஅது இருக்கவில்லைاِلَّاதவிரصَيْحَةًஒரு சப்தமாகவேوَّاحِدَةًஒரே ஒருفَاِذَا هُمْஆகவே, அப்போது அவர்கள்خٰمِدُوْنَ‏அழிந்து விட்டார்கள்
இன் கானத் இல்லா ஸய்ஹத(ன்)வ் வாஹிததன் Fப-இதா ஹும் காமிதூன்
ஒரே ஒரு பேரொலி! (அவ்வளவு)தான்! அவர்கள் சாம்பலாயினர்.
یٰحَسْرَةً عَلَی الْعِبَادِ ؔۚ مَا یَاْتِیْهِمْ مِّنْ رَّسُوْلٍ اِلَّا كَانُوْا بِهٖ یَسْتَهْزِءُوْنَ ۟
يٰحَسْرَةًநிகழ்ந்த துக்கமே!عَلَى الْعِبَادِ ؔ‌ۚஅடியார்கள் மீதுمَا يَاْتِيْهِمْஅவர்களிடம் வரவில்லைمِّنْ رَّسُوْلٍஎந்த ஒரு தூதரும்اِلَّاதவிரكَانُوْاஅவர்கள் இருந்தேبِهٖஅவரைيَسْتَهْزِءُوْنَ‏அவர்கள் பரிகாசம் செய்பவர்களாக
யா ஹஸ்ரதன் 'அலல் 'இBபாத்; மா ய'தீஹிம் மிர் ரஸூலின் இல்லா கானூ Bபிஹீ யஸ்தஹ்Zஜி 'ஊன்
அந்தோ! அடியார்கள் மீது கைசேதமே! அவர்களிடம் எந்தத்தூதர் வந்தாலும், அவரை அவர்கள் பரிகாசம் செய்யாதிருந்ததில்லை.
اَلَمْ یَرَوْا كَمْ اَهْلَكْنَا قَبْلَهُمْ مِّنَ الْقُرُوْنِ اَنَّهُمْ اِلَیْهِمْ لَا یَرْجِعُوْنَ ۟ؕ
اَلَمْ يَرَوْاஅவர்கள் கவனிக்க மாட்டார்களா?كَمْஎத்தனையோاَهْلَـكْنَاநாம் அழித்திருக்கின்றோம்قَبْلَهُمْஅவர்களுக்கு முன்னர்مِّنَ الْقُرُوْنِதலைமுறைகளைاَنَّهُمْநிச்சயமாக அவர்கள்اِلَيْهِمْதங்கள் பக்கம்لَا يَرْجِعُوْنَؕ‏திரும்பி வரமாட்டார்கள்
அலம் யரவ் கம் அஹ்லக் னா கBப்லஹும் மினல் குரூனி அன்னஹும் இலய்ஹிம் லா யர்ஜி'ஊன்
“அவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறைகளை நாம் அழித்திருக்கின்றோம்; நிச்சயமாக அவர்கள், இவர்களிடம் திரும்பி வரவே மாட்டார்கள்” என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா?
وَاِنْ كُلٌّ لَّمَّا جَمِیْعٌ لَّدَیْنَا مُحْضَرُوْنَ ۟۠
وَاِنْ كُلٌّ(அவர்கள்) எல்லோரும் இல்லைلَّمَّاதவிரجَمِيْعٌஅனைவரும்لَّدَيْنَاநம்மிடம்مُحْضَرُوْنَ‏ஆஜர்படுத்தப்பட்டவர்களாகவே
வ இன் குல்லுல் லம்மா ஜமீ'உல்-லதய்னா முஹ்ளரூன்
மேலும் அவர்கள் யாவரும் ஒன்று திரட்டப்பட்டு (விசாரணைக்கு) நம்மிடமே கொண்டுவரப்படுவர்.  
وَاٰیَةٌ لَّهُمُ الْاَرْضُ الْمَیْتَةُ ۖۚ اَحْیَیْنٰهَا وَاَخْرَجْنَا مِنْهَا حَبًّا فَمِنْهُ یَاْكُلُوْنَ ۟
وَاٰيَةٌஅத்தாட்சிلَّهُمُஅவர்களுக்குالْاَرْضُபூமியாகும்الْمَيْتَةُ ۖۚஇறந்துபோனاَحْيَيْنٰهَاஅதை நாம் உயிர்ப்பித்தோம்وَاَخْرَجْنَاநாம் வெளியாக்கினோம்مِنْهَاஅதிலிருந்துحَبًّاவித்துக்களைفَمِنْهُஅதில் இருந்துதான்يَاْكُلُوْنَ‏அவர்கள் சாப்பிடுகின்றார்கள்
வ ஆயதுல் லஹுமுல் அர்ளுல் மய்தது அஹ்யய்னாஹா வ அக்ரஜ்னா மின்ஹா ஹBப்Bபன் Fபமின்ஹு ய'குலூன்
அன்றியும், இறந்து (தரிசாகக்)கிடக்கும் பூமி அவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும்; (பின்னர் மழையினால்) அதனை நாமே உயிர்ப்பித்து, அதிலிருந்து தானியத்தை வெளிப்படுத்துகின்றோம்; அதிலிருந்துதான் இவர்கள் உண்கிறார்கள்.
وَجَعَلْنَا فِیْهَا جَنّٰتٍ مِّنْ نَّخِیْلٍ وَّاَعْنَابٍ وَّفَجَّرْنَا فِیْهَا مِنَ الْعُیُوْنِ ۟ۙ
وَجَعَلْنَاஇன்னும் ஏற்படுத்தினோம்فِيْهَاஅதில்جَنّٰتٍதோட்டங்களைمِّنْ نَّخِيْلٍபேரித்த மரங்கள்وَّاَعْنَابٍஇன்னும் திராட்சைகளின்وَّفَجَّرْنَاஉதித்தோடச்செய்தோம்فِيْهَاஅதில்مِنَ الْعُيُوْنِۙ‏ஊற்றுக் கண்களை
வ ஜ'அல்னா Fபீஹா ஜன்னாதிம் மின் னகீலி(ன்)வ் வ அஃனாBபி(ன்)வ் வ Fபஜ்ஜர்னா Fபீஹா மினல் 'உயூன்
மேலும், அதில் நாம் பேரீத்த மரங்களினாலும், திராட்டசை(க் கொடி)களினாலும் தோட்டங்களை உண்டாக்குகிறோம்; இன்னும் அதில் நீரூற்றுக்களைப் பீறிட்டு ஓடச்செய்கின்றோம்.
لِیَاْكُلُوْا مِنْ ثَمَرِهٖ ۙ وَمَا عَمِلَتْهُ اَیْدِیْهِمْ ؕ اَفَلَا یَشْكُرُوْنَ ۟
لِيَاْكُلُوْاஅவர்கள் புசிப்பதற்காகمِنْ ثَمَرِهٖ ۙஅவனுடைய கனிகளில் இருந்துوَمَا عَمِلَـتْهُஇவற்றை செய்யவில்லைاَيْدِيْهِمْ‌ ؕஅவர்களின் கரங்கள்اَفَلَا يَشْكُرُوْنَ‏அவர்கள் நன்றி செலுத்த வேண்டாமா?
லி ய'குலூ மின் தமரிஹீ வமா 'அமிலத்-ஹு அய்தீஹிம்; அFபலா யஷ்குரூன்
அதன் பழவகைகளை அவர்கள் உண்பதற்காக; ஆனால் அவர்களுடைய கைகள் இதை உண்டாக்கவில்லை - ஆகவே அவர்கள் நன்றி செலுத்தமாட்டார்களா?
سُبْحٰنَ الَّذِیْ خَلَقَ الْاَزْوَاجَ كُلَّهَا مِمَّا تُنْۢبِتُ الْاَرْضُ وَمِنْ اَنْفُسِهِمْ وَمِمَّا لَا یَعْلَمُوْنَ ۟
سُبْحٰنَமிகப் பரிசுத்தமானவன்الَّذِىْ خَلَقَபடைத்தவன்الْاَزْوَاجَபல வகைகளைكُلَّهَاஎல்லாம்مِمَّا تُنْۢبِتُமுளைக்க வைக்கக்கூடியதில்الْاَرْضُபூமிوَمِنْ اَنْفُسِهِمْஅவர்களிலும்وَمِمَّا لَا يَعْلَمُوْنَ‏அவர்கள் அறியாதவற்றிலும்
ஸுBப்ஹானல் லதீ கலகல் அZஜ்வாஜ குல்லஹா மிம்மா தும்Bபிதுல் அர்ளு வ மின் அன்Fபுஸிஹிம் வ மிம்மா லா யஃலமூன்
பூமி முளைப்பிக்கின்ற (புற்பூண்டுகள்) எல்லாவற்றையும், (மனிதர்களாகிய) இவர்களையும், இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன்.
وَاٰیَةٌ لَّهُمُ الَّیْلُ ۖۚ نَسْلَخُ مِنْهُ النَّهَارَ فَاِذَا هُمْ مُّظْلِمُوْنَ ۟ۙ
وَاٰيَةٌஇன்னும் அத்தாட்சிلَّهُمُஅவர்களுக்குالَّيْلُ ۖۚஇரவாகும்نَسْلَخُஉரித்தெடுக்கின்றோம்مِنْهُஅதிலிருந்துالنَّهَارَபகலைفَاِذَا هُمْஅப்போது அவர்கள்مُّظْلِمُوْنَۙ‏இருளில் ஆகிவிடுகின்றனர்
வ ஆயதுல் லஹுமுல் லய்லு னஸ்லகு மின்ஹுன் னஹார Fப-இதா ஹும் முள்லிமூன்
இரவும் இவர்களுக்கோர் அத்தாட்சியாகும்; அதிலிருந்து பகலை கழற்றி விடுகிறோம்; அதனால் இவர்கள் ஆழ்ந்த இருளிலாகிவிடுகிறார்கள்.
وَالشَّمْسُ تَجْرِیْ لِمُسْتَقَرٍّ لَّهَا ؕ ذٰلِكَ تَقْدِیْرُ الْعَزِیْزِ الْعَلِیْمِ ۟ؕ
وَالشَّمْسُசூரியன்تَجْرِىْஓடுகிறதுلِمُسْتَقَرٍّஇருப்பிடத்தை நோக்கிلَّهَا ؕதனதுذٰلِكَஅதுتَقْدِيْرُஏற்பாடாகும்الْعَزِيْزِமிகைத்தவனுடையالْعَلِيْمِؕ‏நன்கறிந்த(வன்)
வஷ்-ஷம்ஸு தஜ்ரீ லிமுஸ்தகர்ரில் லஹா; தாலிக தக்தீருல் 'அZஜீZஜில் அலீம்
இன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது; இது யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய (இறை)வன் விதித்ததாகும்.
وَالْقَمَرَ قَدَّرْنٰهُ مَنَازِلَ حَتّٰی عَادَ كَالْعُرْجُوْنِ الْقَدِیْمِ ۟
وَالْقَمَرَசந்திரனைقَدَّرْنٰهُஅதை நாம் திட்டமிட்டோம்مَنَازِلَபல தங்குமிடங்களில்حَتّٰىஇறுதியாகعَادَதிரும்பிவிடுகின்றதுكَالْعُرْجُوْنِபேரிச்ச குலையின் காய்ந்த மட்டையைப் போல்الْقَدِيْمِ‏பழைய
வல்கமர கத்தர்னாஹு மனாZஜில ஹத்தா 'ஆத கல்'உர் ஜூனில் கதீம்
இன்னும் (உலர்ந்த வளைந்த) பழைய பேரீத்த மட்டையைப் போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (தங்குமிடங்களை) ஏற்படுத்தியிருக்கின்றோம்.
لَا الشَّمْسُ یَنْۢبَغِیْ لَهَاۤ اَنْ تُدْرِكَ الْقَمَرَ وَلَا الَّیْلُ سَابِقُ النَّهَارِ ؕ وَكُلٌّ فِیْ فَلَكٍ یَّسْبَحُوْنَ ۟
لَا الشَّمْسُ يَنْۢبَغِىْசூரியன் ஆகுமாகாதுلَهَاۤஅதற்குاَنْ تُدْرِكَஅது அடைவதுالْقَمَرَசந்திரனைوَلَا الَّيْلُ سَابِقُஇரவு முந்திவிடாதுالنَّهَارِ‌ؕபகலைوَكُلٌّஒவ்வொன்றும்فِىْ فَلَكٍஒரு கோளில்يَّسْبَحُوْنَ‏நீந்துகின்றன
லஷ் ஷம்ஸு யம்Bபகீ லஹா அன் துத்ரிகல் கமர வலல் லய்லு ஸாBபிகுன் னஹார்; வ குல்லுன் Fபீ Fபலகி யஸ்Bபஹூன்
சூரியன் சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க முடியாது; இரவு பகலை முந்தமுடியாது. இவ்வாறே எல்லாம் (தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன.
وَاٰیَةٌ لَّهُمْ اَنَّا حَمَلْنَا ذُرِّیَّتَهُمْ فِی الْفُلْكِ الْمَشْحُوْنِ ۟ۙ
وَاٰيَةٌஇன்னும் அத்தாட்சியாவதுلَّهُمْஅவர்களுக்குاَنَّاநிச்சயமாக நாம்حَمَلْنَاநாம் பயணிக்க வைத்தோம்ذُرِّيَّتَهُمْஅவர்களின் சந்ததிகளைفِى الْفُلْكِகப்பலில்الْمَشْحُوْنِۙ‏நிரம்பிய
வ ஆயதுல் லஹும் அன்னா ஹமல்னா துர்ரியதஹும் Fபில் Fபுல்கில் மஷ்ஹூன்
இன்னும் அவர்களுக்கு ஓர் அத்தாட்சி, நாம் நிச்சயமாக அவர்களுடைய சந்ததிகளை நிறப்பப்பட்ட கப்பலில் ஏற்றிச் செல்வதில் உள்ளது.
وَخَلَقْنَا لَهُمْ مِّنْ مِّثْلِهٖ مَا یَرْكَبُوْنَ ۟
وَخَلَقْنَاநாம் படைத்தோம்لَهُمْஅவர்களுக்குمِّنْ مِّثْلِهٖஅதைப் போன்றுمَا يَرْكَبُوْنَ‏அவர்கள் வாகணிப்பதை
வ கலக்னா லஹும் மிம்-மித்லிஹீ மா யர்கBபூன்
இன்னும், அவர்கள் ஏறிச் செல்வதற்காக அதைப் போன்ற (பல்வேறு கலங்களை) நாம் அவர்களுக்காகப் படைத்திருக்கின்றோம்.
وَاِنْ نَّشَاْ نُغْرِقْهُمْ فَلَا صَرِیْخَ لَهُمْ وَلَا هُمْ یُنْقَذُوْنَ ۟ۙ
وَاِنْ نَّشَاْநாம் நாடினால்نُغْرِقْهُمْஅவர்களை மூழ்கடிப்போம்فَلَا صَرِيْخَ لَهُمْஅவர்களுக்கு உதவியாளர் அறவே இல்லைوَلَا هُمْ يُنْقَذُوْنَۙ‏இன்னும் அவர்கள் பாதுகாக்கப்பட மாட்டார்கள்
வ இன் னஷா னுக்ரிக்ஹும் Fபலா ஸரீக லஹும் வலா ஹும் யுன்கதூன்
அன்றியும் நாம் நாடினால் அவர்களை மூழ்கடித்து விடுவோம்; அப்பொழுது அவர்களைக் காப்பாற்றுவோர் எவரும் இருக்க மாட்டார்; மேலும், அவர்கள் விடுவிக்கப்படவும் மாட்டார்கள்.
اِلَّا رَحْمَةً مِّنَّا وَمَتَاعًا اِلٰی حِیْنٍ ۟
اِلَّاஎனினும்رَحْمَةًகருணையினாலும்مِّنَّاநமதுوَمَتَاعًاசுகம் அனுபவிப்பதற்காகவும்اِلٰى حِيْنٍ‏சில காலம் வரை
இல்லா ரஹ்மதம் மின்னா வ மதா'அன் இலா ஹீன்
நம்முடைய கருணையினால் சிறிது காலம் அவர்கள் சுகிப்பதற்காக (விட்டு வைக்கப்பட்டாலன்றி),
وَاِذَا قِیْلَ لَهُمُ اتَّقُوْا مَا بَیْنَ اَیْدِیْكُمْ وَمَا خَلْفَكُمْ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ ۟
وَاِذَا قِيْلَகூறப்பட்டால்لَهُمُஅவர்களுக்குاتَّقُوْاநீங்கள் பயந்து கொள்ளுங்கள்!مَا بَيْنَ اَيْدِيْكُمْஉங்களுக்கு முன்னுள்ளதையும்وَمَا خَلْفَكُمْஉங்களுக்கு பின்னுள்ளதையும்لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ‏நீங்கள் கருணை காட்டப்படுவீர்கள்
வ இதா கீல லஹுமுத்தகூ மா Bபய்ன அய்தீகும் வமா கல்Fபகும் ல'அல்லகும் துர்ஹமூன்
“இன்னும், நீங்கள் கிருபை செய்யப்பெறும் பொருட்டு, உங்களுக்குமுன் இருப்பதையும், உங்களுக்குப்பின் இருப்பதையும் அஞ்சி நடந்து கொள்ளுங்கள்” என்று அவர்களுக்குக் கூறப்பட்டாலும் -
وَمَا تَاْتِیْهِمْ مِّنْ اٰیَةٍ مِّنْ اٰیٰتِ رَبِّهِمْ اِلَّا كَانُوْا عَنْهَا مُعْرِضِیْنَ ۟
وَمَا تَاْتِيْهِمْஅவர்களிடம் வருவதில்லைمِّنْ اٰيَةٍஓர் அத்தாட்சிمِّنْ اٰيٰتِஅத்தாட்சிகளில் இருந்துرَبِّهِمْஅவர்களுடைய இறைவனின்اِلَّاதவிரكَانُوْاஅவர்கள் இருந்தேعَنْهَاஅதைمُعْرِضِيْنَ‏புறக்கணித்தவர்களாக
வமா த'தீஹிம் மின் ஆயதிம் மின் ஆயாதி ரBப்Bபிஹிம் இல்லா கானூ 'அன்ஹா முஃரிளீன்
அவர்களுடைய இறைவனின் அத்தாட்சிகளில் எந்த ஓர் அத்தாட்சி அவர்களிடம் வந்தாலும் அதனை அவர்கள் புறக்கணிக்காமல் இருப்பதில்லை.
وَاِذَا قِیْلَ لَهُمْ اَنْفِقُوْا مِمَّا رَزَقَكُمُ اللّٰهُ ۙ قَالَ الَّذِیْنَ كَفَرُوْا لِلَّذِیْنَ اٰمَنُوْۤا اَنُطْعِمُ مَنْ لَّوْ یَشَآءُ اللّٰهُ اَطْعَمَهٗۤ ۖۗ اِنْ اَنْتُمْ اِلَّا فِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟
وَاِذَا قِيْلَகூறப்பட்டால்لَهُمْஅவர்களுக்குاَنْفِقُوْاநீங்கள் தர்மம் செய்யுங்கள்مِمَّا رَزَقَكُمُஉங்களுக்கு கொடுத்தவற்றில் இருந்துاللّٰهُ ۙஅல்லாஹ்قَالَகூறுகின்றனர்الَّذِيْنَ كَفَرُوْاநிராகரித்தவர்கள்لِلَّذِيْنَ اٰمَنُوْۤاநம்பிக்கையாளர்களை நோக்கிاَنُطْعِمُநாங்கள் உணவளிக்க வேண்டுமா?مَنْ لَّوْ يَشَآءُஎவருக்கு/நாடினால்اللّٰهُஅல்லாஹ்اَطْعَمَهٗٓஅவருக்கு உணவளித்து விடுவான்ۖ  اِنْ اَنْـتُمْநீங்கள் இல்லைاِلَّاதவிரفِىْ ضَلٰلٍவழிகேட்டிலேயேمُّبِيْنٍ‏தெளிவான
வ இதா கீல லஹும் அன்Fபிகூ மிம்மா ரZஜககுமுல் லாஹு காலல் லதீன கFபரூ லில்லதீன ஆமனூ அனுத்'இமு மல்-லவ் யஷா'உல் லாஹு அத்'அமஹூ இன் அன்தும் இல்லா Fபீ ளலாலிம் முBபீன்
“அல்லாஹ் உங்களுக்கு அளித்திருப்பவற்றிலிருந்து நீங்கள் (அவன் பாதையில்) செலவு செய்யுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், “அல்லாஹ் நாடியிருந்தால் எவருக்கு அவன் உணவளித்திருப்பானோ, அவர்களுக்கு நாம் உணவளிப்போமா? நீங்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கின்றீர்கள்” என்று நிராகரிப்பவர்கள் ஈமான் கொண்டவர்களைப் பார்த்துக் கூறுகிறார்கள்.
وَیَقُوْلُوْنَ مَتٰی هٰذَا الْوَعْدُ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
وَيَقُوْلُوْنَஇன்னும் அவர்கள் கூறுகின்றனர்مَتٰىஎப்போது நிகழும்هٰذَاஇந்தالْوَعْدُவாக்குاِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்صٰدِقِيْنَ‏உண்மையாளர்களாக
வ யகூலூன மதா ஹாதல் வஃது இன் குன்தும் ஸாதிகீன்
இன்னும், அவர்கள் கூறுகிறார்கள்: “நீங்கள் உண்மையாளர்களாக இருப்பின், (மறுமை பற்றிய) அந்த வாக்குறுதி எப்பொழுது வந்து சேரும்?” என்று.
مَا یَنْظُرُوْنَ اِلَّا صَیْحَةً وَّاحِدَةً تَاْخُذُهُمْ وَهُمْ یَخِصِّمُوْنَ ۟
مَا يَنْظُرُوْنَஅவர்கள் எதிர்பார்க்கவில்லைاِلَّا صَيْحَةًசப்தத்தைத் தவிரوَّاحِدَةًஒரே ஒருتَاْخُذُهُمْஅவர்களை அது பிடித்துக் கொள்ளும்وَهُمْ يَخِصِّمُوْنَ‏அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருப்பார்கள்
மா யன்ளுரூன இல்லா ஸய்ஹத(ன்)வ் வாஹிததன் த'குதுஹும் வ ஹும் யகிஸ்ஸிமூன்
அவர்கள் ஒரே ஒரு பேரொலிக்காகக் காத்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறில்லை; அவர்கள் வழக்காடிக் கொண்டிருக்கும் நிலையிலேயே அது அவர்களைப் பிடித்துக் கொள்ளும்.
فَلَا یَسْتَطِیْعُوْنَ تَوْصِیَةً وَّلَاۤ اِلٰۤی اَهْلِهِمْ یَرْجِعُوْنَ ۟۠
فَلَا يَسْتَطِيْعُوْنَஅவர்கள் சக்தி பெறமாட்டார்கள்تَوْصِيَةًமரண சாசனம் கூறுவதற்குوَّلَاۤ اِلٰٓى اَهْلِهِمْஇன்னும் தங்கள் குடும்பத்தாரிடம்يَرْجِعُوْنَ‏திரும்பி வர மாட்டார்கள்
Fபலா யஸ்ததீ'ஊன தவ் ஸியத(ன்)வ்-வ லா இலா அஹ்லிஹிம் யர்ஜி'ஊன்
அப்போது அவர்கள் வஸிய்யத்து சொல்ல சக்தி பெறமாட்டார்கள்; தம் குடும்பத்தாரிடம் மீளவும் மாட்டார்கள்.  
وَنُفِخَ فِی الصُّوْرِ فَاِذَا هُمْ مِّنَ الْاَجْدَاثِ اِلٰی رَبِّهِمْ یَنْسِلُوْنَ ۟
وَنُفِخَஊதப்படும்فِى الصُّوْرِசூரில்فَاِذَا هُمْஅப்போது அவர்கள்مِّنَ الْاَجْدَاثِகப்ருகளில் இருந்துاِلٰى رَبِّهِمْதங்கள் இறைவன் பக்கம்يَنْسِلُوْنَ‏விரைவாக வெளியேறி வருவார்கள்
வ னுFபிக Fபிஸ்-ஸூரி Fப-இதா ஹும் மினல் அஜ்தாதி இலா ரBப்Bபிஹிம் யன்ஸிலூன்
மேலும், ஸூர் ஊதப்பட்டதும், உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து வெளிப்பட்டுத் தங்கள் இறைவனிடம் விரைவார்கள்.
قَالُوْا یٰوَیْلَنَا مَنْ بَعَثَنَا مِنْ مَّرْقَدِنَا ؔٚۘ هٰذَا مَا وَعَدَ الرَّحْمٰنُ وَصَدَقَ الْمُرْسَلُوْنَ ۟
قَالُوْاஅவர்கள் கூறுவார்கள்يٰوَيْلَنَاஎங்கள் நாசமே!مَنْۢ بَعَثَنَاயார் எங்களை எழுப்பியது?مِنْ مَّرْقَدِنَاۘؔ ٚஎங்கள் தூங்குமிடத்தில் இருந்துهٰذَاஇதுمَا وَعَدَவாக்களித்தது(ம்)الرَّحْمٰنُபேரருளாளன்وَصَدَقَஉண்மையாகக் கூறியதும்الْمُرْسَلُوْنَ‏தூதர்கள்
காலூ யா வய்லனா மம் Bப'அதனா மிம் மர்கதினா; ஹாத மா வ'அதர் ரஹ்மனு வ ஸதகல் முர்ஸலூன்
“எங்களுடைய துக்கமே! எங்கள் தூங்குமிடங்களிலிருந்து எங்களை எழுப்பியவர் யார்?” என்று அவர்கள் கேட்பார்கள்; அர்ரஹ்மான் வாக்களித்ததும், (அவனுடைய) தூதர்கள் உண்மையெனக் கூறியதும் இதுதான்” (என்று அவர்களுக்குக் கூறப்படும்).
اِنْ كَانَتْ اِلَّا صَیْحَةً وَّاحِدَةً فَاِذَا هُمْ جَمِیْعٌ لَّدَیْنَا مُحْضَرُوْنَ ۟
اِنْ كَانَتْஅது இருக்காதுاِلَّاதவிரصَيْحَةًசப்தமேوَّاحِدَةًஒரே ஒருفَاِذَا هُمْஅப்போது அவர்கள்جَمِيْعٌஅனைவரும்لَّدَيْنَاநம்மிடம்مُحْضَرُوْنَ‏ஆஜராக்கப்படுவார்கள்
இன் கானத் இல்லா ஸய்ஹத(ன்)வ் வாஹிததன் Fப-இதா ஹும் ஜமீ'உல் லதய்னா முஹ்ளரூன்
ஒரே ஒரு பேரொலி தவிர (வேறொன்றும்) இருக்காது; உடன், அவர்கள் யாவரும் நம்முன் கொண்டுவரப்படுவார்கள்.
فَالْیَوْمَ لَا تُظْلَمُ نَفْسٌ شَیْـًٔا وَّلَا تُجْزَوْنَ اِلَّا مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟
فَالْيَوْمَஇன்றைய தினம்لَا تُظْلَمُ نَفْسٌஅநீதி இழைக்கப்படாது/எந்த ஓர் ஆன்மாவும்شَيْئًاசிறிதளவும்وَّلَا تُجْزَوْنَகூலி கொடுக்கப்பட மாட்டீர்கள்اِلَّا مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கே தவிர
Fபல்-யவ்ம லா துள்லமு னFப்ஸுன் ஷய்'அ(ன்)வ்-வ லா துஜ்Zஜவ்ன இல்லா மா குன்தும் தஃமலூன்
அன்றியும், அந்நாளில் எந்த ஓர் ஆத்மாவுக்கும் ஏதும் அநியாயம் செய்யப்பட மாட்டாது; இன்னும், நீங்கள் செய்தவற்றிற்கேயன்றி (வேறு எதற்கும்) கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள்.
اِنَّ اَصْحٰبَ الْجَنَّةِ الْیَوْمَ فِیْ شُغُلٍ فٰكِهُوْنَ ۟ۚ
اِنَّநிச்சயமாகاَصْحٰبَ الْجَـنَّةِசொர்க்கவாசிகள்الْيَوْمَஇன்றுفِىْ شُغُلٍவேளையில் இருந்துகொண்டுفٰكِهُوْنَ‌ۚ‏இன்பமனுபவிப்பார்கள்
இன்ன அஷ்ஹாBபல் ஜன்னதில் யவ்ம Fபீ ஷுகுலின் Fபாகிஹூன்
அந்நாளில், நிச்சயமாக சுவர்க்கவாசிகள் (தங்கள்) அலுவலில் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.
هُمْ وَاَزْوَاجُهُمْ فِیْ ظِلٰلٍ عَلَی الْاَرَآىِٕكِ مُتَّكِـُٔوْنَ ۟
هُمْஅவர்களும்وَاَزْوَاجُهُمْஅவர்களின் மனைவிகளும்فِىْ ظِلٰلٍநிழல்களில்عَلَى الْاَرَآٮِٕكِகட்டில்கள் மீதுمُتَّكِــــٴُـوْنَ‏சாய்ந்தவர்களாக
ஹும் வ அZஜ்வாஜுஹும் Fபீ ளிலாலின் 'அலல் அரா'இகி முத்தகி'ஊன்
அவர்களும், அவர்களுடைய மனைவியரும் நிழல்களில் கட்டில்களின் மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள்.
لَهُمْ فِیْهَا فَاكِهَةٌ وَّلَهُمْ مَّا یَدَّعُوْنَ ۟ۚۖ
لَهُمْஅவர்களுக்குفِيْهَاஅதில் கிடைக்கும்فَاكِهَةٌகனிகள்وَّلَهُمْஇன்னும் அவர்களுக்குمَّا يَدَّعُوْنَ‌ ۖ‌ۚ‏அவர்கள் ஆசைப்படுவதும்
லஹும் Fபீஹா Fபாகிஹ து(ன்)வ்-வ லஹும் மா யத்த'ஊன்
அங்கே அவர்களுக்கு (பலவகைக்) கனி வகைகள் உண்டு; இன்னும் அவர்களுக்கு அவர்கள் வேண்டுவது கிடைக்கும்.
سَلٰمٌ ۫ قَوْلًا مِّنْ رَّبٍّ رَّحِیْمٍ ۟
سَلٰمٌஸலாம் உண்டாகட்டும்قَوْلًاகூறப்படும்مِّنْ رَّبٍّஇறைவன் புறத்தில்رَّحِيْمٍ‏மகா கருணையாளன்
ஸலாமுன் கவ்லம் மிர் ரBப்Bபிர் ரஹீம்
“ஸலாமுன்” என்று, நிகரற்ற அன்புடையோனுமான இறைவனிடமிருந்து சொல்லுதல் உண்டு.
وَامْتَازُوا الْیَوْمَ اَیُّهَا الْمُجْرِمُوْنَ ۟
وَامْتَازُواநீங்கள் பிரிந்து விடுங்கள்!الْيَوْمَஇன்றைய தினம்اَيُّهَا الْمُجْرِمُوْنَ‏குற்றவாளிகளே!
வம்தாZஜுல் யவ்ம அய்யுஹல் முஜ்ரிமூன்
அன்றியும்: “குற்றவாளிகளே! இன்று நீங்கள் (நல்லோரிலிருந்து) பிரிந்து நில்லுங்கள்” (என்று குற்றவாளிகளிடம் கூறப்படும்).
اَلَمْ اَعْهَدْ اِلَیْكُمْ یٰبَنِیْۤ اٰدَمَ اَنْ لَّا تَعْبُدُوا الشَّیْطٰنَ ۚ اِنَّهٗ لَكُمْ عَدُوٌّ مُّبِیْنٌ ۟ۙ
اَلَمْ اَعْهَدْநான் கட்டளையிடவில்லையா?اِلَيْكُمْஉங்களுக்குيٰبَنِىْۤ اٰدَمَஆதமின் மக்களே!اَنْ لَّا تَعْبُدُواநீங்கள் வணங்காதீர்கள் என்றுالشَّيْطٰنَ‌ۚஷைத்தானைاِنَّهٗநிச்சயமாக அவன்لَـكُمْஉங்களுக்குعَدُوٌّஎதிரியாவான்مُّبِيْنٌ ۙ‏தெளிவான
அலம் அஃஹத் இலய்கும் யா Bபனீ ஆதம அல்-லா தஃBபுதுஷ் ஷய்தான இன்னஹூ லகும் 'அதுவ்வும் முBபீன்
“ஆதமுடைய மக்களே! நீங்கள் ஷைத்தானை வணங்காதீர்கள், நிச்சயமாக அவன் உங்ளுக்குப் பகிரங்கமான பகைவன்” என்று நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா?
وَّاَنِ اعْبُدُوْنِیْ ؔؕ هٰذَا صِرَاطٌ مُّسْتَقِیْمٌ ۟
وَّاَنِ اعْبُدُوْنِىْ ؔ‌ؕஇன்னும் என்னை வணங்குங்கள்هٰذَاஇதுதான்صِرَاطٌபாதையாகும்مُّسْتَقِيْمٌ‏நேரான
வ அனி'Bபுதூனீ; ஹாதா ஸிராதும் முஸ்தகீம்
“என்னையே நீங்கள் வணங்க வேண்டும்; இதுதான் நேரானவழி.
وَلَقَدْ اَضَلَّ مِنْكُمْ جِبِلًّا كَثِیْرًا ؕ اَفَلَمْ تَكُوْنُوْا تَعْقِلُوْنَ ۟
وَلَقَدْதிட்டவட்டமாகاَضَلَّஅவன் வழிகெடுத்துள்ளான்مِنْكُمْஉங்களில்جِبِلًّاபடைப்புகளைكَثِيْرًا‌ ؕஅதிகமானاَفَلَمْ تَكُوْنُوْاநீங்கள்இருக்கவில்லையா?تَعْقِلُوْنَ‏நீங்கள் சிந்தித்து புரிகின்றவர்களாக
வ லகத் அளல்ல மின்கும் ஜிBபில்லன் கதீரா; அFபலம் தகூனூ தஃகிலூன்
“அவ்வாறிருந்தும், நிச்சயமாக அவன் உங்களில் மிகுதமான மக்களை வழி கெடுத்து விட்டான். இதை நீங்கள் அறிந்து கொள்ளவில்லையா?
هٰذِهٖ جَهَنَّمُ الَّتِیْ كُنْتُمْ تُوْعَدُوْنَ ۟
هٰذِهٖஇதுதான்جَهَنَّمُநரகம்الَّتِىْ كُنْتُمْ تُوْعَدُوْنَ‏நீங்கள் அச்சுறுத்தப்பட்டுக் கொண்டிருந்த
ஹாதிஹீ ஜஹன்னமுல் லதீ குன்தும் தூ'அதூன்
“இதுதான் உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட ஜஹன்னம் (நரகம்) ஆகும்.
اِصْلَوْهَا الْیَوْمَ بِمَا كُنْتُمْ تَكْفُرُوْنَ ۟
اِصْلَوْهَاஅதில் நீங்கள் பொசுங்குங்கள்الْيَوْمَஇன்றுبِمَا كُنْتُمْ تَكْفُرُوْنَ‏நீங்கள் நிராகரித்துக்கொண்டிருந்த காரணத்தால்
இஸ்லவ்ஹல் யவ்ம Bபிமா குன்தும் தக்Fபுரூன்
“நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததனால் இன்று இதனுள் நுழையுங்கள்” (என்று குற்றவாளிகளிடம் கூறப்படும்).
اَلْیَوْمَ نَخْتِمُ عَلٰۤی اَفْوَاهِهِمْ وَتُكَلِّمُنَاۤ اَیْدِیْهِمْ وَتَشْهَدُ اَرْجُلُهُمْ بِمَا كَانُوْا یَكْسِبُوْنَ ۟
اَلْيَوْمَஇன்றுنَخْتِمُமுத்திரையிடுவோம்عَلٰٓى اَفْوَاهِهِمْஅவர்களின் வாய்களின் மீதுوَتُكَلِّمُنَاۤஇன்னும் நம்மிடம் பேசும்اَيْدِيْهِمْஅவர்களின் கரங்கள்وَتَشْهَدُஇன்னும் சாட்சி சொல்லும்اَرْجُلُهُمْஅவர்களின் கால்கள்بِمَا كَانُوْا يَكْسِبُوْنَ‏அவர்கள் செய்துகொண்டிருந்ததற்கு
அல்-யவ்ம னக்திமு 'அலா அFப்வாஹிஹிம் வ துகல்லிமுனா அய்தீஹிம் வ தஷ்ஹது அர்ஜுலுஹும் Bபிமா கானூ யக்ஸிBபூன்
அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்; அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசும்; அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும்.
وَلَوْ نَشَآءُ لَطَمَسْنَا عَلٰۤی اَعْیُنِهِمْ فَاسْتَبَقُوا الصِّرَاطَ فَاَنّٰی یُبْصِرُوْنَ ۟
وَلَوْ نَشَآءُநாம் நாடியிருந்தால்لَـطَمَسْنَاகுருடாக்கி இருப்போம்عَلٰٓى اَعْيُنِهِمْஅவர்களின் கண்களைفَاسْتَبَقُواதவறி இருப்பார்கள்الصِّرَاطَபாதைفَاَنّٰىஆக, எப்படிيُبْصِرُوْنَ‏பார்ப்பார்கள்
வ லவ் னஷா'உ லத மஸ்ன 'அலா அஃயுனிஹிம் Fபஸ்த Bபகுஸ்-ஸிராத Fப-அன்னா யுBப்ஸிரூன்
நாம் நாடியிருந்தால், நாம் அவர்களுடைய கண்களைப் போக்கியிருப்போம்; அப்பொழுது (அவர்கள் தப்பும்) வழிதேடி ஓடினால் அவர்கள் எதைப் பார்ப்பார்கள்?
وَلَوْ نَشَآءُ لَمَسَخْنٰهُمْ عَلٰی مَكَانَتِهِمْ فَمَا اسْتَطَاعُوْا مُضِیًّا وَّلَا یَرْجِعُوْنَ ۟۠
وَلَوْ نَشَآءُநாம் நாடியிருந்தால்لَمَسَخْنٰهُمْஅவர்களை உட்கார வைத்திருப்போம்عَلٰى مَكَانَتِهِمْஅவர்களின் இடத்திலேயேفَمَا اسْتَطَاعُوْاஆக, அவர்கள் ஆற்றல் பெறமாட்டார்கள்مُضِيًّاநடப்பதற்கு(ம்)وَّلَا يَرْجِعُوْنَ‏திரும்பி வரவும் மாட்டார்கள்
வ லவ் னஷா'உ லமஸக்னாஹும் 'அலா மகானதிஹிம் Fபமஸ்-ததா'ஊ முளிய்ய(ன்)வ்-வ லா யர்ஜி'ஊன்
அன்றியும், நாம் நாடியிருந்தால், அவர்களுடைய இடத்திலேயே அவர்களை உரு மாற்றியிருப்போம். அப்போது, அவர்கள் முன் செல்லவும் சக்தி பெறமாட்டார்கள்; இன்னும் அவர்கள் மீளவும் மாட்டார்கள்.  
وَمَنْ نُّعَمِّرْهُ نُنَكِّسْهُ فِی الْخَلْقِ ؕ اَفَلَا یَعْقِلُوْنَ ۟
وَمَنْ نُّعَمِّرْهُநாம் எவருக்கு நீண்ட வயதை கொடுக்கின்றோமோنُـنَكِّسْهُஅவரை திருப்பி விடுவோம்فِى الْخَـلْقِ‌ؕபடைப்பில்اَفَلَا يَعْقِلُوْنَ‏அவர்கள் சிந்தித்து புரிய வேண்டாமா?
வ மன் னு 'அம்மிர்ஹு னுனக்கிஸ்ஹு Fபில்-கல்க்; அFபலா யஃகிலூன்
மேலும், எவரை நாம் வயோதிகமாக்குகிறோமோ, அவருடைய நிலைமையைப் படைப்பில் (பலஹீனமான நிலைக்கு) மாற்றிவிடுகிறோம்; அவர்கள் (இதை) அறிந்து கொள்ள வேண்டாமா?
وَمَا عَلَّمْنٰهُ الشِّعْرَ وَمَا یَنْۢبَغِیْ لَهٗ ؕ اِنْ هُوَ اِلَّا ذِكْرٌ وَّقُرْاٰنٌ مُّبِیْنٌ ۟ۙ
وَمَا عَلَّمْنٰهُநாம் அவருக்கு கற்றுத்தரவில்லைالشِّعْرَகவிதைகளைوَمَا يَنْۢبَغِىْதகுதியானதும் இல்லைلَهٗؕஅவருக்குاِنْ هُوَஇது இல்லைاِلَّا ذِكْرٌஅறிவுரை(யும்) அன்றிوَّقُرْاٰنٌகுர்ஆனும்مُّبِيْنٌۙ‏தெளிவான(து)
வமா 'அல்லம்னாஹுஷ் ஷிஃர வமா யம்Bபகீ லஹ்; இன் ஹுவ இல்லா திக்ரு(ன்)வ்-வ குர்ஆனும் முBபீன்
(நம்முடைய தூதராகிய) அவருக்கு நாம் கவிதை (இயற்றக்) கற்றுக் கொடுக்கவில்லை; அது அவருக்குத் தேவையானதும் அல்ல; இது நல்லுப தேசமும் தெளிவான குர்ஆனுமே தவிர வேறில்லை.
لِّیُنْذِرَ مَنْ كَانَ حَیًّا وَّیَحِقَّ الْقَوْلُ عَلَی الْكٰفِرِیْنَ ۟
لِّيُنْذِرَஅது எச்சரிப்பதற்காகவும்مَنْஎவர்كَانَஇருக்கின்றார்حَيًّاஉயிருள்ளவராகوَّيَحِقَّஉறுதியாகி விடுவதற்காகவும்الْقَوْلُவாக்குعَلَىமீதுالْكٰفِرِيْنَ‏நிராகரிப்பாளர்கள்
லியுன்திர மன் கான ஹய்ய(ன்)வ்-வ யஹிக்கல் கவ்லு 'அலல்-காFபிரீன்
(இது) உயிரோடிருப்பவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது. நிராகரிப்பவர்களுக்கு (தண்டனை உண்டு என்ற) வாக்கை உண்மையென உறுதிப் படுத்துகிறது.
اَوَلَمْ یَرَوْا اَنَّا خَلَقْنَا لَهُمْ مِّمَّا عَمِلَتْ اَیْدِیْنَاۤ اَنْعَامًا فَهُمْ لَهَا مٰلِكُوْنَ ۟
اَوَلَمْ يَرَوْاஅவர்கள் பார்க்கவில்லையா?اَنَّاநிச்சயமாக நாம்خَلَقْنَاநாம் படைத்ததைلَهُمْஅவர்களுக்குمِّمَّا عَمِلَتْசெய்தவற்றிலிருந்துاَيْدِيْنَاۤநமது கரங்கள்اَنْعَامًاகால்நடைகளைفَهُمْஅவர்கள்لَهَاஅவற்றுக்குمٰلِكُوْنَ‏உரிமையாளர்களாக
அவலம் யரவ் அன்னா கலக்னா லஹும் மிம்மா 'அமிலத் அய்தீனா அன்'ஆமன் Fபஹும் லஹா மாலிகூன்
நிச்சயமாக நாம் அவர்களுக்காக நம்முடைய கைகள் செய்தவற்றிலிருந்து கால்நடைகளைப் படைத்திருக்கின்றோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? அவற்றின் மீது அவர்கள் உரிமை பாராட்டுகிறார்கள்.
وَذَلَّلْنٰهَا لَهُمْ فَمِنْهَا رَكُوْبُهُمْ وَمِنْهَا یَاْكُلُوْنَ ۟
وَذَلَّـلْنٰهَاநாம் அவற்றை பணியவைத்தோம்لَهُمْஅவர்களுக்குفَمِنْهَاஅவற்றில்رَكُوْبُهُمْஅவர்களின் வாகனங்களும்وَمِنْهَاஇன்னும் அவற்றில் இருந்துيَاْكُلُوْنَ‏அவர்கள் புசிக்கவும் செய்கின்றார்கள்
வ தல்லல்னாஹா லஹும் Fபமின்ஹா ரகூBபுஹும் வ மின்ஹா ய'குலூன்
மேலும், அவற்றை அவர்களுக்குக் கீழ்படியுமாறு செய்துள்ளோம்; ஆகவே, அவற்றில் சிலவற்றின் மீது அவர்கள் ஏறிச்சவாரி செய்வதும் இருக்கிறது; இன்னும் அவற்றிலிருந்து சிலவற்றைப் புசிக்கிறார்கள்.
وَلَهُمْ فِیْهَا مَنَافِعُ وَمَشَارِبُ ؕ اَفَلَا یَشْكُرُوْنَ ۟
وَلَهُمْஇன்னும் அவர்களுக்குفِيْهَاஇவற்றில்مَنَافِعُபலன்கள்وَمَشَارِبُ‌ؕகுடிபானங்களும்اَفَلَا يَشْكُرُوْنَ‏அவர்கள் நன்றி செலுத்த வேண்டாமா?
வ லஹும் Fபீஹா மனா Fபி'உ வ மஷாரிBப்; அFபலா யஷ்குரூன்
மேலும், அவற்றிலிருந்து அவர்களுக்கு பயன்களும், பானங்களும் இருக்கின்றன, இவற்றுக்கெல்லாம் அவர்கள் நன்றி செலுத்த மாட்டார்களா?
وَاتَّخَذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ اٰلِهَةً لَّعَلَّهُمْ یُنْصَرُوْنَ ۟ؕ
وَاتَّخَذُوْاஅவர்கள் ஏற்படுத்திக் கொண்டனர்مِنْ دُوْنِ اللّٰهِஅல்லாஹ்வையன்றிاٰلِهَةًபல கடவுள்களைلَّعَلَّهُمْ يُنْصَرُوْنَؕ‏தாங்கள் உதவி செய்யப்படுவதற்காக
வத்தகதூ மின் தூனில் லாஹி ஆலிஹதல் ல'அல்லஹும் யுன்ஸரூன்
எனினும் அல்லாஹ் அல்லாதவற்றையும் - தாங்கள் உதவி செய்யப்படும் பொருட்டு அவர்கள் தெய்வங்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
لَا یَسْتَطِیْعُوْنَ نَصْرَهُمْ ۙ وَهُمْ لَهُمْ جُنْدٌ مُّحْضَرُوْنَ ۟
لَا يَسْتَطِيْعُوْنَஅவர்கள் சக்தி பெறமாட்டார்கள்نَصْرَஉதவுவதற்குهُمْۙஅவர்களுக்குوَهُمْஇன்னும் அவர்கள்لَهُمْஅவர்கள் முன்جُنْدٌராணுவமாகمُّحْضَرُوْنَ‏தயாராக இருக்கின்ற
லா யஸ்ததீ'ஊன னஸ்ரஹும் வ ஹும் லஹும் ஜுன்தும் முஹ்ளரூன்
ஆனால் அவை அவர்களுக்கு உதவி செய்யும் சக்தி பெறவில்லை -ஆயினும் அவற்றையே இவர்களுக்கு (எதிரான) படையாகக் கொண்டுவரப்படும்.
فَلَا یَحْزُنْكَ قَوْلُهُمْ ۘ اِنَّا نَعْلَمُ مَا یُسِرُّوْنَ وَمَا یُعْلِنُوْنَ ۟
فَلَا يَحْزُنْكَஆகவே உம்மை கவலைக்குள்ளாக்க வேண்டாம்قَوْلُهُمْ‌ۘஅவர்களின் பேச்சுاِنَّا نَـعْلَمُநிச்சயமாக நாம் நன்கறிவோம்مَا يُسِرُّوْنَஅவர்கள் மறைத்து பேசுவதை(யும்)وَمَا يُعْلِنُوْنَ‏அவர்கள் வெளிப்படுத்தி பேசுவதை(யும்)
Fபலா யஹ்Zஜுன்க கவ்லுஹும்; இன்னா னஃலமு மா யுஸிர்ரூன வமா யுஃலினூன்
(நபியே!) அவர்களுடைய பேச்சு உம்மை விசனப்படுத்த வேண்டியதில்லை. அவர்கள் (தங்கள் மனத்தில்) மறைப்பதையும் அவர்கள் பகிரங்கப்படுத்துவதையும் நிச்சயமாக நாம் நன்கறிவோம்.
اَوَلَمْ یَرَ الْاِنْسَانُ اَنَّا خَلَقْنٰهُ مِنْ نُّطْفَةٍ فَاِذَا هُوَ خَصِیْمٌ مُّبِیْنٌ ۟
اَوَلَمْ يَرَபார்க்கவில்லையா?الْاِنْسَانُமனிதன்اَنَّا خَلَقْنٰهُநிச்சயமாக நாம் அவனை படைத்துள்ளோம்مِنْ نُّطْفَةٍஓர் இந்திரியத் துளியில் இருந்துفَاِذَا هُوَஆனால், அவனோخَصِيْمٌதர்க்கம் செய்பவனாகمُّبِيْنٌ‏தெளிவாக
அவலம் யரல் இன்ஸானு அன்னா கலக்னாஹு மின் னுத்Fபதின் Fப-இதா ஹுவ கஸீமும் முBபீன்
மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவ்வாறிருந்தும், அவன் (நமக்கு) வெளிப்படையான தர்க்க வாதியாகி விடுகிறான்.
وَضَرَبَ لَنَا مَثَلًا وَّنَسِیَ خَلْقَهٗ ؕ قَالَ مَنْ یُّحْیِ الْعِظَامَ وَهِیَ رَمِیْمٌ ۟
وَضَرَبَவிவரிக்கின்றான்لَـنَاநமக்குمَثَلًاஓர் உதாரணத்தைوَّ نَسِىَஅவன் மறந்துவிட்டான்خَلْقَهٗ‌ ؕதான் படைக்கப்பட்டதைقَالَஅவன் கூறுகின்றான்مَنْயார்يُّحْىِஉயிர்ப்பிப்பான்?الْعِظَامَஎலும்புகளைوَهِىَ رَمِيْمٌ‏அவை மக்கிப்போன நிலையில் இருக்கின்றபோது
வ ளரBப லனா மத்ல(ன்)வ்-வ னஸிய கல்கஹூ கால மய்-யுஹ்யில்'இளாம வ ஹிய ரமீம்
மேலும், அவன் தன் படைப்பை (தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டு, அவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகின்றான்; “எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?” என்று.
قُلْ یُحْیِیْهَا الَّذِیْۤ اَنْشَاَهَاۤ اَوَّلَ مَرَّةٍ ؕ وَهُوَ بِكُلِّ خَلْقٍ عَلِیْمُ ۟ۙ
قُلْகூறுவீராக!يُحْيِيْهَاஅவற்றை உயிர்ப்பிப்பான்الَّذِىْۤ اَنْشَاَهَاۤஅவற்றை உருவாக்கியவன்தான்اَوَّلَமுதல்مَرَّةٍ‌ ؕமுறைوَهُوَஇன்னும் அவன்بِكُلِّஎல்லாخَلْقٍபடைப்புகளையும்عَلِيْمُ ۙ‏நன்கறிந்தவன்
குல் யுஹ் யீஹல் லதீ அன்ஷ அஹா அவ்வல மர்ரஹ்; வ ஹுவ Bபிகுல்லி கல்கின் 'அலீம்
“முதல் முதலில் அவற்றை உண்டு பண்ணியவனே (பின்னும்) அவற்றுக்கு உயிர் கொடுப்பான். அவன் எல்லாவகைப் படைப்புகளையும் நன்கறிந்தவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
لَّذِیْ جَعَلَ لَكُمْ مِّنَ الشَّجَرِ الْاَخْضَرِ نَارًا فَاِذَاۤ اَنْتُمْ مِّنْهُ تُوْقِدُوْنَ ۟
اۨلَّذِىْஎவன்جَعَلَஏற்படுத்துகின்றான்لَـكُمْஉங்களுக்குمِّنَ الشَّجَرِமரத்தில் இருந்துالْاَخْضَرِபச்சைنَارًاநெருப்பைفَاِذَاۤ اَنْـتُمْஅப்போது நீங்கள்مِّنْهُஅதில்تُوْقِدُوْنَ‏நெருப்பை மூட்டிக்கொள்கிறீர்கள்
அல்லதீ ஜ'அல லகும் மினஷ் ஷஜரில் அக்ளரி னாரன் Fப-இதா அன்தும் மின்ஹு தூகிதூன்
“பசுமையான மரத்திலிருந்து உங்களுக்காக நெருப்பை உண்டாக்குபவனும் அவனே; அதிலிருந்தே நீங்கள் (தீ) மூட்டுகிறீர்கள்.
اَوَلَیْسَ الَّذِیْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِقٰدِرٍ عَلٰۤی اَنْ یَّخْلُقَ مِثْلَهُمْ ؔؕ بَلٰی ۗ وَهُوَ الْخَلّٰقُ الْعَلِیْمُ ۟
اَوَلَيْسَஇல்லையா?الَّذِىْ خَلَقَபடைத்தவன்السَّمٰوٰتِவானங்களை(யும்)وَالْاَرْضَபூமியையும்بِقٰدِرٍஆற்றலுடையவனாகعَلٰٓى اَنْ يَّخْلُقَபடைப்பதற்குمِثْلَهُمْؔؕஇவர்களைப் போன்றவர்களைبَلٰیஏன் இல்லை!وَهُوَஅவன்தான்الْخَـلّٰقُமகா படைப்பாளன்الْعَلِيْمُ‏நன்கறிந்தவன்
அவ லய்ஸல் லதீ கலகஸ் ஸமாவாதி வல் அர்ள Bபிகாதிரின் 'அலா அய்-யக்லுக மித்லஹும்; Bபலா வ ஹுவல் கல்லாகுல் 'அலீம்
வானங்களையும் பூமியையும் படைத்தவன், அவர்களைப் போன்றவர்களைப் படைக்கச் சக்தியற்றவனா? ஆம் (சக்தியுள்ளவனே!) மெய்யாகவே, அவனே (பல வகைகளையும்) படைப்பவன்; யாவற்றையும் நன்கறிந்தவன்.
اِنَّمَاۤ اَمْرُهٗۤ اِذَاۤ اَرَادَ شَیْـًٔا اَنْ یَّقُوْلَ لَهٗ كُنْ فَیَكُوْنُ ۟
اِنَّمَاۤ اَمْرُهٗۤஅவனது கட்டளை எல்லாம்اِذَاۤ اَرَادَஅவன் நாடினால்شَیْـٴًـــاஎதையும்اَنْ يَّقُوْلَஅவன் கூறுவதுதான்لَهٗஅதற்குكُنْஆகு (என்று)فَيَكُوْنُ‏அது ஆகிவிடும்
இன்னமா அம்ருஹூ இதா அராத ஷய்'அன் அய்-யகூல லஹூ குன் Fப-யகூன்
எப்பொருளையேனும் அவன் (படைக்க) நாடினால், அதற்கு அவன் கட்டளையிடுவதெல்லாம்; “குன்” (ஆகுக!) என்று கூறுவதுதான்; உடனே அது ஆகிவிடுகிறது.
فَسُبْحٰنَ الَّذِیْ بِیَدِهٖ مَلَكُوْتُ كُلِّ شَیْءٍ وَّاِلَیْهِ تُرْجَعُوْنَ ۟۠
فَسُبْحٰنَஆக, அவன் மகா பரிசுத்தமானவன்الَّذِىْஎவன்بِيَدِهٖஅவனுடைய கரத்தில்مَلَـكُوْتُபேராட்சிكُلِّ شَىْءٍஎல்லாவற்றின்وَّاِلَيْهِஅவன் பக்கம்தான்تُرْجَعُوْنَ‏நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்
Fப ஸுBப்ஹானல் லதீ Bபியதிஹீ மலகூது குல்லி ஷய்-இ(ன்)வ்-வ இலய்ஹி துர்ஜ'ஊன்
ஆகவே, எல்லாப் பொருட்களின் ஆட்சியும் எவன் கையிலிருக்கிறதோ அவனே மிகத் தூய்மையானவன், அவனிடமே நீங்கள் மீள்விக்கப்படுவீர்கள்.