18. ஸூரத்துல் கஹ்ஃபு (குகை)

மக்கீ, வசனங்கள்: 110

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِیْۤ اَنْزَلَ عَلٰی عَبْدِهِ الْكِتٰبَ وَلَمْ یَجْعَلْ لَّهٗ عِوَجًا ۟ؕٚ
اَ لْحَمْدُபுகழ்لِلّٰهِஅல்லாஹ்விற்கேالَّذِىْۤஎப்படிப்பட்டவன்اَنْزَلَஇறக்கினான்عَلٰىமீதுعَبْدِهِதன் அடியார்الْكِتٰبَவேதத்தைوَلَمْ يَجْعَلْஅவன்ஆக்கவில்லைلَّهٗஅதில்عِوَجًا ٚ  ؕஒரு குறையை
அல்ஹம்து லில்லாஹில் லதீ அன்Zஜல 'அலா 'அBப்திஹில் கிதாBப வ லம் யஜ்'அல் லஹூ 'இவஜா
தன் அடியார் மீது எந்த விதமான (முரண்பாடு) கோணலும் இல்லாததாக ஆக்கி இவ்வேதத்தை இறக்கி வைத்தானே, அந்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தாகும்.
قَیِّمًا لِّیُنْذِرَ بَاْسًا شَدِیْدًا مِّنْ لَّدُنْهُ وَیُبَشِّرَ الْمُؤْمِنِیْنَ الَّذِیْنَ یَعْمَلُوْنَ الصّٰلِحٰتِ اَنَّ لَهُمْ اَجْرًا حَسَنًا ۟ۙ
قَيِّمًاநீதமிகுந்ததாக, நேர்மை நிறைந்ததாக, பாதுகாக்கக்கூடியதாகلِّيُنْذِرَஅது எச்சரிப்பதற்காகبَاْسًاவேதனையைشَدِيْدًاகடுமையான(து)مِّنْ لَّدُنْهُஅவன் புறத்திலிருந்துوَيُبَشِّرَஇன்னும் நற்செய்தி கூறுவதற்காகالْمُؤْمِنِيْنَநம்பிக்கையாளர்களுக்குالَّذِيْنَஎவர்கள்يَعْمَلُوْنَசெய்கின்றார்கள்الصّٰلِحٰتِநன்மைகளைاَنَّநிச்சயமாகلَهُمْஅவர்களுக்குاَجْرًاகூலிحَسَنًاۙ‏அழகிய(து)
கய்யிமல் லியுன்திர Bப'அஸன் ஷதீதம் மில் லதுன்ஹு வ யுBபஷ்ஷிரல் மு'மினீனல் லதீன யஃமலூனஸ் ஸாலிஹாதி அன்ன லஹும் அஜ்ரன் ஹஸனா
அது உறுதியான (வழியைக் காண்பிப்ப)து, அவனிடத்திலிருந்துள்ள கடினமான வேதனையைப் பற்றி அச்சமூட்டுவதற்காகவும் ஸாலிஹான (நற்)செயல்கள் செய்யும் முஃமின்களுக்கு - நிச்சயமாக அவர்களுக்கு அழகிய நற்கூலி(யாக சுவனபதி) இருக்கிறது என்று நன்மாராயங் கூறுவதற்காகவும் (குர்ஆனை அருளினான்).
مَّاكِثِیْنَ فِیْهِ اَبَدًا ۟ۙ
مّٰكِثِيْنَதங்கி இருப்பார்கள்فِيْهِஅதில்اَبَدًا ۙ‏எப்போதும்
மாகிதீன Fபீஹி அBபதா
அதில் (அதாவது சுவனபதியில்) அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள்.
وَّیُنْذِرَ الَّذِیْنَ قَالُوا اتَّخَذَ اللّٰهُ وَلَدًا ۟ۗ
وَّيُنْذِرَஇன்னும் அது எச்சரிப்பதற்காகالَّذِيْنَஎவர்கள்قَالُواகூறினர்اتَّخَذَஎடுத்துக் கொண்டான்اللّٰهُஅல்லாஹ்وَلَدًا‏ஒரு குழந்தையை, சந்ததியை
வ யுன்திரல் லதீன காலுத் தகதல் லாஹு வலதா
அல்லாஹ் (தனக்கென) ஒரு மகனை எடுத்துக் கொண்டான் என்று சொல்பவர்களை எச்சரிப்பதற்காகவும் (இதனை இறக்கி வைத்தான்).
مَا لَهُمْ بِهٖ مِنْ عِلْمٍ وَّلَا لِاٰبَآىِٕهِمْ ؕ كَبُرَتْ كَلِمَةً تَخْرُجُ مِنْ اَفْوَاهِهِمْ ؕ اِنْ یَّقُوْلُوْنَ اِلَّا كَذِبًا ۟
مَا لَهُمْஅவர்களுக்கு இல்லைبِهٖஅவனைப் பற்றிمِنْ عِلْمٍஎந்த அறிவும்وَّلَاஇன்னும் இல்லைلِاٰبَآٮِٕهِمْ‌ؕஅவர்களுடைய மூதாதைகளுக்குكَبُرَتْபெரும் பாவமாகி விட்டதுكَلِمَةًசொல்تَخْرُجُவெளிப்படும்مِنْ اَفْوَاهِهِمْ‌ؕவாய்களிலிருந்து அவர்களின்اِنْ يَّقُوْلُوْنَஅவர்கள் கூறுவதில்லைاِلَّاதவிரكَذِبًا‏பொய்யை
மா லஹும் Bபிஹீ மின் 'இல்மி(ன்)வ் வலா லி ஆBபா'இஹிம்; கBபுரத் கலிமதன் தக்ருஜு மின் அFப்வாஹிஹிம்; இ(ன்)ய் யகூலூன இல்லா கதிBபா
அவர்களுக்கோ, இன்னும் அவர்களுடைய மூதாதையர்களுக்கோ இதைப் பற்றி எவ்வித அறிவாதாரமுமில்லை; அவர்களுடைய வாய்களிலிருந்து புறப்படும் (இந்த) வார்த்தை பெரும் பாவமானதாகும்; அவர்கள் கூறுவது பொய்யேயன்றி வேறில்லை.
فَلَعَلَّكَ بَاخِعٌ نَّفْسَكَ عَلٰۤی اٰثَارِهِمْ اِنْ لَّمْ یُؤْمِنُوْا بِهٰذَا الْحَدِیْثِ اَسَفًا ۟
فَلَعَلَّكَ بَاخِعٌநீர் அழித்துக் கொள்வீரோنَّـفْسَكَஉயிரை/உம்عَلٰٓىமீதேاٰثَارِசுவடுகள்هِمْஅவர்களுடையاِنْ لَّمْ يُؤْمِنُوْاஅவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை எனில்بِهٰذَا الْحَـدِيْثِஇந்த குர்ஆனைاَسَفًا‏துக்கப்பட்டு
Fபல'அல்லக Bபாகி'உன் னFப்ஸக 'அலா ஆதாரிஹிம் இல்லம் யு'மினூ Bபிஹாதல் ஹதீதி அஸFபா
(நபியே!) இந்த (வேத) அறிவிப்பில் அவர்கள் நம்பிக்கை கொள்ளாவிட்டால், அவர்களுக்காக வியாகூலப்பட்டு, நீர் உம்மையே அழித்துக் கொள்வீர்கள் போலும்!
اِنَّا جَعَلْنَا مَا عَلَی الْاَرْضِ زِیْنَةً لَّهَا لِنَبْلُوَهُمْ اَیُّهُمْ اَحْسَنُ عَمَلًا ۟
اِنَّاநிச்சயமாக நாம்جَعَلْنَاஆக்கினோம்مَاஎதைعَلَىமீதுالْاَرْضِபூமிزِيْنَةًஅலங்காரமாகلَّهَاஅதற்குلِنَبْلُوَهُمْநாம் சோதிப்பதற்காக/ அவர்களைاَ يُّهُمْயார் / அவர்களில்اَحْسَنُமிக அழகியவர்عَمَلًا‏செயலால்
இன்னா ஜ'அல்னா ம 'அலல் அர்ளி Zஜீனதல் லஹா லினBப்லுவஹும் அய்யுஹும் அஹ்ஸனு 'அமலா
(மனிதர்களில்) அழகிய செயலுடையவர்கள் யார் என்று அவர்களைச் சோதிப்பதற்காக, நிச்சயமாக பூமியிலுள்ளவற்றை அதற்கு அலங்காரமாக நாம் ஆக்கினோம்.
وَاِنَّا لَجٰعِلُوْنَ مَا عَلَیْهَا صَعِیْدًا جُرُزًا ۟ؕ
وَاِنَّاநிச்சயமாக நாம்لَجٰعِلُوْنَஆக்கி விடுவோம்مَاஎதைعَلَيْهَاஅதன் மீதுصَعِيْدًاசமமான தரையாகجُرُزًا ؕ‏செடி கொடியற்ற பூமி
வ இன்னா ல ஜா'இலூன மா 'அலய்ஹா ஸ'ஈதன் ஜுருZஜா
இன்னும், நிச்சயமாக நாம் அதன் மீது உள்ளவற்றை (ஒரு நாள் அழித்துப்) புற்பூண்டில்லாப் பாலைநிலமாக்கி விடுவோம்.
اَمْ حَسِبْتَ اَنَّ اَصْحٰبَ الْكَهْفِ وَالرَّقِیْمِ ۙ كَانُوْا مِنْ اٰیٰتِنَا عَجَبًا ۟
اَمْ حَسِبْتَஎண்ணுகிறீரா?اَنَّநிச்சயமாகاَصْحٰبَ الْـكَهْفِகுகை வாசிகள்وَالرَّقِيْمِۙஇன்னும் கற்பலகைكَانُوْاஇருக்கின்றனர்مِنْ اٰيٰتِنَاநம் அத்தாட்சிகளில்عَجَبًا‏அற்புதமாக
அம் ஹஸிBப்த அன்ன அஸ்ஹாBபல் கஹ்Fபி வர் ரகீமி கானூ மின் ஆயாதினா 'அஜBபா
(அஸ்ஹாபுல் கஹ்ஃபு என்ற குகையிலிருந்தோரைப் பற்றி) அந்த குகையிலிருந்தோரும், சாஸனத்தையுடையோரும் நம்முடைய ஆச்சரியமான அத்தாட்சிகளில் நின்றும் உள்ளவர்கள் என எண்ணுகிறீரோ?
اِذْ اَوَی الْفِتْیَةُ اِلَی الْكَهْفِ فَقَالُوْا رَبَّنَاۤ اٰتِنَا مِنْ لَّدُنْكَ رَحْمَةً وَّهَیِّئْ لَنَا مِنْ اَمْرِنَا رَشَدًا ۟
اِذْசமயம்اَوَىஒதுங்கினார்(கள்)الْفِتْيَةُஅவ்வாலிபர்கள்اِلَى الْـكَهْفِகுகைக்குفَقَالُوْاகூறினர்رَبَّنَاۤஎங்கள் இறைவாاٰتِنَاஎங்களுக்குத் தாمِنْ لَّدُنْكَஉன் புறத்திலிருந்துرَحْمَةًஅருளைوَّهَيِّئْஇன்னும் ஏற்படுத்துلَـنَاஎங்களுக்குمِنْ اَمْرِنَاஎங்கள் காரியத்தில்رَشَدًا‏நல்வழியை
இத் அவல் Fபித்யது இலல் கஹ்Fபி Fபகாலூ ரBப்Bபனா ஆதினா மில் லதுன்க ரஹ்மத(ன்)வ் வ ஹய்யி' லனா மின் அம்ரினா ரஷதா
அந்த இளைஞர்கள் குகையினுள் தஞ்சம் புகுந்த போது அவர்கள் “எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்கு எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக!” என்று கூறினார்கள்.
فَضَرَبْنَا عَلٰۤی اٰذَانِهِمْ فِی الْكَهْفِ سِنِیْنَ عَدَدًا ۟ۙ
فَضَرَبْنَاஅமைத்தோம்عَلٰٓىமீதுاٰذَانِهِمْகாதுகள்/அவர்களுடையفِى الْـكَهْفِகுகையில்سِنِيْنَஆண்டுகள்عَدَدًاۙ‏எண்ணப்பட்ட
FபளரBப்னா 'அலா ஆதானிஹிம் Fபில் கஹ்Fபி ஸீனீன 'அததா
ஆகவே நாம் அவர்களை எண்ணப்பட்ட பல ஆண்டுகள் வரை அக்குகையில் (தூங்குமாறு) அவர்களுடைய காதுகளின் மீது (திரையிட்டுத்) தடையேற்படுத்தினோம்.
ثُمَّ بَعَثْنٰهُمْ لِنَعْلَمَ اَیُّ الْحِزْبَیْنِ اَحْصٰی لِمَا لَبِثُوْۤا اَمَدًا ۟۠
ثُمَّபிறகுبَعَثْنٰهُمْஎழுப்பினோம் / அவர்களைلِنَعْلَمَநாம் அறிவதற்காகاَىُّஎந்த, யார்?الْحِزْبَيْنِஇரு பிரிவுகளில்اَحْصٰىமிக சரியாக கணக்கிடுபவர்لِمَا لَبِثُوْۤاஅவர்கள் தங்கியதைاَمَدًا‏காலத்தை,எல்லையை
தும்ம Bப'அத்னாஹும் லினஃலம அய்யுல் ஹிZஜ்Bபய்னி அஹ்ஸா லிமா லBபிதூ அமதா
பின்பு, (அக்குகையில் தங்கியிருந்த) இருபிரிவினர்களில் எப்பிரிவினர், தாங்கள் (குகையில்) தங்கியிருந்த கால அளவை நன்கு அறிந்திருந்தார்கள் என்பதைச் சோதிப்பதற்காக அவர்களை நாம் எழுப்பினோம்.
نَحْنُ نَقُصُّ عَلَیْكَ نَبَاَهُمْ بِالْحَقِّ ؕ اِنَّهُمْ فِتْیَةٌ اٰمَنُوْا بِرَبِّهِمْ وَزِدْنٰهُمْ هُدًی ۟ۗۖ
نَحْنُநாம்نَقُصُّவிவரிக்கிறோம்عَلَيْكَஉமக்குنَبَاَهُمْஅவர்களின்செய்தியைبِالْحَـقِّ‌ؕஉண்மையுடன்اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்فِتْيَةٌவாலிபர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்بِرَبِّهِمْதங்கள் இறைவனைوَزِدْنٰهُمْஇன்னும் அதிகப்படுத்தினோம்/அவர்களுக்குهُدًى‌ۖ‏நேர்வழியை
னஹ்னு னகுஸ்ஸு 'அலய்க னBப அஹும் Bபில்ஹக்க்; இன்னஹும் Fபித்யதுன் ஆமனூ Bபி ரBப்Bபிஹிம் வ Zஜித்னாஹும் ஹுதா
(நபியே!) நாம் உமக்கு அவர்களுடைய வரலாற்றை உண்மையைக் கொண்டு அறிவிக்கிறோம்; நிச்சயமாக அவர்கள் இளைஞர்கள் - தங்கள் இறைவன் மீது ஈமான் கொண்டார்கள்; இன்னும் நாம் அவர்களை நேர் வழியில் அதிகப்படுத்தினோம்.
وَّرَبَطْنَا عَلٰی قُلُوْبِهِمْ اِذْ قَامُوْا فَقَالُوْا رَبُّنَا رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ لَنْ نَّدْعُوَاۡ مِنْ دُوْنِهٖۤ اِلٰهًا لَّقَدْ قُلْنَاۤ اِذًا شَطَطًا ۟
وَّرَبَطْنَاஇன்னும் உறுதிபடுத்தினோம்عَلٰى قُلُوْبِهِمْஅவர்களுடைய உள்ளங்களைاِذْபோதுقَامُوْاநின்றனர்فَقَالُوْاஇன்னும் கூறினர்رَبُّنَاஎங்கள் இறைவன்رَبُّஇறைவன்السَّمٰوٰتِவானங்களின்وَالْاَرْضِஇன்னும் பூமிلَنْ نَّدْعُوَا۟அழைக்கவே மாட்டோம்مِنْ دُوْنِهٖۤஅவனையன்றிاِلٰهًـا‌(வேறு) ஒரு கடவுளைلَّـقَدْ قُلْنَاۤதிட்டமாக கூறி விடுவோம்اِذًاஅப்போதுشَطَطًا‏எல்லை மீறிய பொய்யை
வ ரBபத்னா 'அலா குலூ Bபிஹிம் இத் காமூ Fபகாலூ ரBப்Bபுனா ரBப்Bபுஸ் ஸமாவாதி வல் அர்ளி லன் னத்'உவ மின் தூனிஹீ இலாஹல் லகத் குல்னா இதன் ஷததா
அவர்கள் (கொடுமைக்கார அரசன் முன்னிலையில்) எழுந்து நின்று “வானங்களுக்கும், பூமிக்கும் இறைவனாகிய அவனே, எங்களுடைய இறைவன்; எக்காலத்தும் அவனையன்றி வேறு எவரையும் நாயனென்று அழைக்க மாட்டோம்; (அப்படிச் செய்தால் குஃப்ரில் கொண்டு சேர்க்கும்) - வரம்பு மீறியதைச் சொன்னவர்கள் ஆவோம்” என்று அவர்கள் உறுதியாகக் கூறிய நிலையில் அவர்கள் இதயங்களை நாம் வலுப்படுத்தினோம்.
هٰۤؤُلَآءِ قَوْمُنَا اتَّخَذُوْا مِنْ دُوْنِهٖۤ اٰلِهَةً ؕ لَوْلَا یَاْتُوْنَ عَلَیْهِمْ بِسُلْطٰنٍ بَیِّنٍ ؕ فَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَرٰی عَلَی اللّٰهِ كَذِبًا ۟ؕ
هٰٓؤُلَاۤءِஇவர்கள்قَوْمُنَاமக்கள்/எங்கள்اتَّخَذُوْاஎடுத்துக் கொண்டனர்مِنْ دُوْنِهٖۤஅவனையன்றிاٰلِهَةً‌ ؕபல கடவுள்களைلَوْ لَا يَاْتُوْنَஅவர்கள் வரவேண்டாமா?عَلَيْهِمْஅவற்றின் மீதுبِسُلْطٰنٍۢஆதாரத்தைக் கொண்டுبَيِّنٍ‌ ؕதெளிவானதுفَمَنْஆகவே, யார்اَظْلَمُமகா தீயவன்مِمَّنِஎவனைவிடافْتَـرٰىஇட்டுக்கட்டினான்عَلَى اللّٰهِஅல்லாஹ்வின் மீதுكَذِبًا ؕ‏பொய்யை
ஹா'உலா'இ கவ்முனத் தகதூ மின் தூனிஹீ ஆலிஹதல் லவ் லா யாதூன 'அலய்ஹிம் Bபிஸுல்தானிம் Bபய்யின்; Fபமன் அள்லமு மிம்மனிFப்தரா 'அலல் லாஹி கதிBபா
எங்கள் சமூகத்தாராகிய அவர்கள் அவனையன்றி வேறு நாயனை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்; அவர்கள் அவற்றின் மீது தெளிவான அத்தாட்சியைக் கொண்டு வரவேண்டாமா? ஆகவே அல்லாஹ்வின் மீது பொய்யாக இட்டுக் கட்டுபவனை விட அநியாயக்காரன் யார்? (என்றும் கூறினார்கள்).
وَاِذِ اعْتَزَلْتُمُوْهُمْ وَمَا یَعْبُدُوْنَ اِلَّا اللّٰهَ فَاْوٗۤا اِلَی الْكَهْفِ یَنْشُرْ لَكُمْ رَبُّكُمْ مِّنْ رَّحْمَتِهٖ وَیُهَیِّئْ لَكُمْ مِّنْ اَمْرِكُمْ مِّرْفَقًا ۟
وَاِذِநீங்கள் விலகியபோதுاعْتَزَلْـتُمُوْهُمْஅவர்களைوَمَاஇன்னும் எவைيَعْبُدُوْنَவணங்குகின்றார்கள்اِلَّاதவிரاللّٰهَஅல்லாஹ்فَاْوٗۤاஒதுங்குங்கள்اِلَى الْـكَهْفِகுகையில்يَنْشُرْவிரிப்பான்لَـكُمْஉங்களுக்குرَبُّكُمْஉங்கள் இறைவன்مِّنْ رَّحْمَتِهٖதன் அருளில்وَيُهَيِّئْஇன்னும் ஏற்படுத்துவான்لَـكُمْஉங்களுக்குمِّنْ اَمْرِكُمْஉங்கள் காரியத்தில்مِّرْفَقًا‏இலகுவை
வ இதிஃதZஜல் துமூஹும் வமா யஃBபுதூன இல்லல் லாஹ Fபாவூ இலல் கஹ்Fபி யன்ஷுர் லகும் ரBப்Bபுகும் மிர் ரஹ்மதிஹீ வ யுஹய்யி' லகும் மின் அம்ரிகும் மிர்Fபகா
அவர்களையும், அவர்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றையும் விட்டு விலகி நீங்கள், குகையின்பால் ஒதுங்கிக் கொள்ளுங்கள், உங்களுடைய இறைவன் தன்னுடைய ரஹ்மத்திலிருந்து உங்களுக்கு விசாலமாகக் கொடுத்து, உங்கள் காரியத்தில் உணவு பிரச்சனையை உங்களுக்கு எளிதாக்கித் தருவான் (என்று அவர்களில் ஓர் இளைஞர் சொன்னார்).
وَتَرَی الشَّمْسَ اِذَا طَلَعَتْ تَّزٰوَرُ عَنْ كَهْفِهِمْ ذَاتَ الْیَمِیْنِ وَاِذَا غَرَبَتْ تَّقْرِضُهُمْ ذَاتَ الشِّمَالِ وَهُمْ فِیْ فَجْوَةٍ مِّنْهُ ؕ ذٰلِكَ مِنْ اٰیٰتِ اللّٰهِ ؕ مَنْ یَّهْدِ اللّٰهُ فَهُوَ الْمُهْتَدِ ۚ وَمَنْ یُّضْلِلْ فَلَنْ تَجِدَ لَهٗ وَلِیًّا مُّرْشِدًا ۟۠
وَتَرَىபார்ப்பீர்الشَّمْسَசூரியனைاِذَا طَلَعَتْஅது உதிக்கும்போதுتَّزٰوَرُஅது சாயும்عَنْ كَهْفِهِمْஅவர்களின் குகையை விட்டுذَاتَ الْيَمِيْنِவலது பக்கமாகوَاِذَا غَرَبَتْஇன்னும் அது மறையும்போதுتَّقْرِضُهُمْவெட்டி விடுகிறது/அவர்களைذَاتَ الشِّمَالِஇடது பக்கமாகوَهُمْஅவர்கள்فِىْ فَجْوَةٍவிசாலமான பள்ளப்பகுதியில்مِّنْهُ‌ ؕ ذٰ لِكَஅதில்/இதுمِنْ اٰيٰتِஅத்தாட்சிகளில்اللّٰهِ‌ ؕஅல்லாஹ்வின்مَنْஎவரைيَّهْدِநேர்வழி செலுத்துகிறான்اللّٰهُஅல்லாஹ்فَهُوَஅவர்الْمُهْتَدِ ۚநேர்வழி பெற்றவர்وَمَنْஇன்னும் எவரைيُّضْلِلْவழிகெடுப்பான்فَلَنْ تَجِدَகாணவே மாட்டீர்لَهٗஅவருக்குوَلِيًّاநண்பனைمُّرْشِدًا‏நல்லறிவு புகட்டுபவர்
வ தரஷ் ஷம்ஸ இதா தல'அத் தZஜாவரு 'அன் கஹ்Fபிஹிம் தாதல் யமீனி வ இதா கரBபத் தக்ரிளுஹும் தாதஷ் ஷிமாலி வ ஹும் Fபீ Fபஜ்வதிம் மின்ஹ்; தாலிக மின் ஆயாதில்லாஹ்; மய் யஹ்தில் லாஹு Fபஹுவல் முஹ்தத், வ மய் யுள்லில் Fபலன் தஜித லஹூ வலிய்யம் முர்ஷிதா
சூரியன் உதயமாகும் போது (அவர்கள் மீது படாமல்) அது அவர்களுடைய குகையின் வலப்புறம் சாய்வதையும், அது அஸ்தமிக்கும் போது அது அவர்களுடைய இடப்புறம் செல்வதையும் நீர் பார்ப்பீர்; அவர்கள் அதில் ஒரு விசாலமான இடத்தில் இருக்கின்றனர் - இது அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளதாகும், எவரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகிறானோ, அவரே நேர் வழிப்பட்டவராவார்; இன்னும், எவனை அவன் வழிகேட்டில் விடுகிறானோ, அவனுக்கு நேர் வழிகாட்டும் உதவியாளர் எவரையும் நீர் காணவே மாட்டீர்.  
وَتَحْسَبُهُمْ اَیْقَاظًا وَّهُمْ رُقُوْدٌ ۖۗ وَّنُقَلِّبُهُمْ ذَاتَ الْیَمِیْنِ وَذَاتَ الشِّمَالِ ۖۗ وَكَلْبُهُمْ بَاسِطٌ ذِرَاعَیْهِ بِالْوَصِیْدِ ؕ لَوِ اطَّلَعْتَ عَلَیْهِمْ لَوَلَّیْتَ مِنْهُمْ فِرَارًا وَّلَمُلِئْتَ مِنْهُمْ رُعْبًا ۟
وَ تَحْسَبُهُمْகருதுவீர் / அவர்களைاَيْقَاظًاவிழித்தவர்களாகوَّهُمْஅவர்களோرُقُوْدٌ ۖஉறங்குபவர்களாகوَنُـقَلِّبُهُمْஇன்னும் புரட்டுகிறோம்/அவர்களைذَاتَ الْيَمِيْنِவலது பக்கமாகوَ ذَاتَ الشِّمَالِ‌ இன்னும் இடது பக்கமாகوَكَلْبُهُمْஅவர்களுடைய நாய்بَاسِطٌவிரித்துள்ளதுذِرَاعَيْهِதன் இரு குடங்கைகளைبِالْوَصِيْدِ‌ ؕவாசலில், முற்றத்தில்لَوِ اطَّلَعْتَநீர் எட்டிப்பார்த்தால்عَلَيْهِمْஅவர்களைلَوَلَّيْتَதிரும்பி இருப்பீர்مِنْهُمْஅவர்களை விட்டுفِرَارًاவிரண்டு ஓடுதல்وَّلَمُلِئْتَஇன்னும் நிரப்பப்பட்டுஇருப்பீர்مِنْهُمْஅவர்களின்رُعْبًا‏பயத்தால்
வ தஹ்ஸBபுஹும் அய்காள(ன்)வ் வ ஹும் ருகூத்; வ னுகல்லிBபுஹும் தாதல் யமீனி வ தாதஷ் ஷிமாலி வ கல்Bபுஹும் Bபாஸிதுன் திரா'அய்ஹி Bபில்வஸீத்; லவித் தலஃத 'அலய்ஹிம் ல வல்லய்த மின்ஹும் Fபிரார(ன்)வ் வ லமுலி'த மின்ஹும் ருஃBபா
மேலும், அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோதிலும், நீர் அவர்களை விழித்துக் கொண்டிருப்பவர்களாகவே எண்ணுவீர்; அவர்களை நாம் வலப்புறமும் இடப்புறமுமாக புரட்டுகிறோம்; தவிர, அவர்களுடைய நாய் தன் இரு முன்னங்கால்களையும் வாசற்படியில் விரித்(துப் படுத்)திருக்கிறது; அவர்களை நீர் உற்றுப்பார்த்தால், அவர்களை விட்டும் வெருண்டு ஓடிப் பின்வாங்குவீர்; அவர்களில் நின்றும் உண்டாகும் பயத்தைக் கொண்டு நிரம்பிவிடுவீர்,
وَكَذٰلِكَ بَعَثْنٰهُمْ لِیَتَسَآءَلُوْا بَیْنَهُمْ ؕ قَالَ قَآىِٕلٌ مِّنْهُمْ كَمْ لَبِثْتُمْ ؕ قَالُوْا لَبِثْنَا یَوْمًا اَوْ بَعْضَ یَوْمٍ ؕ قَالُوْا رَبُّكُمْ اَعْلَمُ بِمَا لَبِثْتُمْ ؕ فَابْعَثُوْۤا اَحَدَكُمْ بِوَرِقِكُمْ هٰذِهٖۤ اِلَی الْمَدِیْنَةِ فَلْیَنْظُرْ اَیُّهَاۤ اَزْكٰی طَعَامًا فَلْیَاْتِكُمْ بِرِزْقٍ مِّنْهُ  وَلَا یُشْعِرَنَّ بِكُمْ اَحَدًا ۟
وَكَذٰلِكَஅவ்வாறேبَعَثْنٰهُمْஎழுப்பினோம் / அவர்களைلِيَتَسَآءَلُوْاஅவர்கள் கேட்டுக் கொள்வதற்காகبَيْنَهُمْ‌ ؕதங்களுக்கு மத்தியில்قَالَகூறினார்قَآٮِٕلٌகூறுபவர் ஒருவர்مِّنْهُمْஅவர்களில்كَمْஎத்தனைلَبِثْتُمْ ؕதங்கினீர்கள்قَالُوْاகூறினர்لَبِثْنَاதங்கினோம்يَوْمًاஒரு நாள்اَوْஅல்லதுبَعْضَ يَوْمٍ‌ ؕஒரு நாளின் சில பகுதிقَالُوْاகூறினர்رَبُّكُمْஉங்கள் இறைவன்اَعْلَمُமிக அறிந்தவன்بِمَا لَبِثْتُمْ ؕநீங்கள் தங்கியதைفَابْعَثُوْۤاஆகவே அனுப்புங்கள்اَحَدَكُمْஉங்களில் ஒருவரைبِوَرِقِكُمْஉங்கள் வெள்ளி நாணயத்தைக் கொண்டுهٰذِهٖۤஇந்தاِلَى الْمَدِيْنَةِபட்டணத்திற்குفَلْيَنْظُرْஅவர் கவனிக்கட்டும்اَيُّهَاۤஅதில் யார்?اَزْكٰىமிக சுத்தமானவர்طَعَامًاஉணவால்فَلْيَاْتِكُمْவரட்டும்/உங்களுக்குبِرِزْقٍஉணவைக் கொண்டுمِّنْهُஅவரிடமிருந்துوَلْيَتَلَطَّفْஇன்னும் அவர் மதிநுட்பமாக நடக்கட்டும்وَلَا يُشْعِرَنَّஇன்னும் உணர்த்தி விட வேண்டாம்بِكُمْஉங்களைப் பற்றிاَحَدًا‏ஒருவருக்கும்
வ கதாலிக Bப'அத்னாஹும் லியதஸா'அலூ Bபய்னஹும்; கால கா'இலும் மின்ஹும் கம் லBபித்தும் காலூ லBபித்னா யவ்மன் அவ் Bபஃள யவ்ம்; காலூ ரBப்Bபுகும் அஃலமு Bபிமா லBபித்தும் FபBப்'அதூ அஹதகும் Bபிவரிகிகும் ஹாதிஹீ இலல் மதீனதி Fபல்யன்ளுர் அய்யுஹா அZஜ்கா த'ஆமன் Fபல்யாதிகும் BபிரிZஜ்கிம் மின்ஹு வல்யதலத்தFப் வலா யுஷ்'இரன்ன Bபிகும் அஹதா
இன்னும் அவர்களிடையே ஒருவரையொருவர் கேட்டுக் கொள்வதற்காக நாம் அவர்களை இவ்வாறு எழுப்பினோம்; அவர்களிலிருந்து சொல்பவர் (ஒருவர்) “நீங்கள் எவ்வளவு நேரம் (நித்திரையில்) இருந்தீர்கள்?” எனக் கேட்டார்; “ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறிது பாகம் தங்கியிருந்தோம்” எனக் கூறினார்கள்; (மற்றவர்கள்) “நீங்கள் (நித்திரையில்) இருந்த காலத்தை உங்கள் இறைவன்தான் நன்கு அறிந்தவன்; ஆகவே, உங்களில் ஒருவரை இந்த வெள்ளிக் காசுடன் பட்டணத்திற்கு அனுப்புங்கள்; அவர்கள் சுத்தமான ஆகாரம் எது என்பதை நன்கு கவனித்து, அதிலிருந்து ஆகாரத்தை உங்களுக்காகக் கொண்டு வரட்டும்; மேலும் அவர் எச்சரிக்கையாக இருக்கட்டும்; உங்களைப் பற்றி எவருக்கும் அவர் அறிவித்து விட வேண்டாம் (என்றனர்).
اِنَّهُمْ اِنْ یَّظْهَرُوْا عَلَیْكُمْ یَرْجُمُوْكُمْ اَوْ یُعِیْدُوْكُمْ فِیْ مِلَّتِهِمْ وَلَنْ تُفْلِحُوْۤا اِذًا اَبَدًا ۟
اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்اِنْ يَّظْهَرُوْاஅவர்கள் அறிந்தால்عَلَيْكُمْஉங்களைيَرْجُمُوْكُمْஏசுவார்கள்/உங்களைاَوْஅல்லதுيُعِيْدُوْதிருப்பிவிடுவார்கள்كُمْஉங்களைفِىْ مِلَّتِهِمْதங்கள் மார்க்கத்திற்குوَلَنْ تُفْلِحُوْۤاவெற்றி பெறவே மாட்டீர்கள்اِذًاஅவ்வாறு நடந்து விட்டால்اَبَدًا‏எப்போதும்
இன்னஹும் இ(ன்)ய் யள்ஹரூ 'அலய்கும் யர்ஜுமூகும் அவ் யு'ஈதூகும் Fபீ மில்லதிஹிம் வ லன் துFப்லிஹூ இதன் அBபதா
ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் உங்களை அறிந்து கொண்டால், உங்களைக் கல்லாலடித்துக் கொன்றுவிடுவார்கள்; அல்லது தங்களுடைய மார்க்கத்தில் உங்களை மீட்டி விடுவார்கள்; அப்புறம், நீங்கள் ஒருபோதும் வெற்றியடைய மாட்டீர்கள்” (என்றும் கூறினர்).
وَكَذٰلِكَ اَعْثَرْنَا عَلَیْهِمْ لِیَعْلَمُوْۤا اَنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ وَّاَنَّ السَّاعَةَ لَا رَیْبَ فِیْهَا ۗۚ اِذْ یَتَنَازَعُوْنَ بَیْنَهُمْ اَمْرَهُمْ فَقَالُوا ابْنُوْا عَلَیْهِمْ بُنْیَانًا ؕ رَبُّهُمْ اَعْلَمُ بِهِمْ ؕ قَالَ الَّذِیْنَ غَلَبُوْا عَلٰۤی اَمْرِهِمْ لَنَتَّخِذَنَّ عَلَیْهِمْ مَّسْجِدًا ۟
وَكَذٰلِكَஅவ்வாறேاَعْثَرْنَاகாண்பித்தோம்عَلَيْهِمْஅவர்களைلِيَـعْلَمُوْۤاஅவர்கள் அறிவதற்காகاَنَّநிச்சயம்وَعْدَவாக்குاللّٰهِஅல்லாஹ்வின்حَقٌّஉண்மைوَّاَنَّஇன்னும் நிச்சயம்السَّاعَةَமறுமைلَا رَيْبَஅறவே சந்தேகம் இல்லைفِيْهَا ۚஅதில்اِذْபோதுيَتَـنَازَعُوْنَதர்க்கிப்பார்கள்بَيْنَهُمْதங்களுக்கிடையில்اَمْرَهُمْ‌தங்கள் விஷயத்தில்فَقَالُواகூறினர்ابْنُوْاஎழுப்புங்கள், கட்டுங்கள்عَلَيْهِمْஅவர்களுக்கருகில்بُنْيَانًـا ؕஒரு கட்டடத்தைرَبُّهُمْஅவர்களின் இறைவன்اَعْلَمُமிக அறிந்தவன்بِهِمْ‌ؕஅவர்களைقَالَகூறினார்(கள்)الَّذِيْنَஎவர்கள்غَلَبُوْاமிகைத்தனர்عَلٰٓى اَمْرِهِمْஅவர்களின் விஷயத்தில்لَـنَـتَّخِذَنَّநிச்சயம்ஆக்குவோம்عَلَيْهِمْஅவர்களுக்கருகில்مَّسْجِدًا‏ஒரு தொழுமிடத்தை
வ கதாலிக அஃதர்னா 'அலய்ஹிம் லியஃலமூ அன்ன வஃதல் லாஹி ஹக்கு(ன்)வ் வ அன்னஸ் ஸா'அத லா ரய்Bப Fபீஹா இத் யதனாZஜ'ஊன Bபய்னஹும் அம்ரஹும் FபகாலுBப் னூ 'அலய்ஹிம் Bபுன்யானா; ரBப்Bபுஹும் அஃலமு Bபிஹிம்; காலல் லதீன கலBபூ 'அலா அம்ரிஹிம் லனத் தகிதன்ன 'அலய்ஹிம் மஸ்ஜிதா
இன்னும், நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்றும், நிச்சயமாக கியாம நாளிலும் சந்தேகமில்லை என்றும் அப்பட்டணவாசிகள் அறிந்து கொள்வதற்காகவே, இவ்வாறு அவர்களைப் பற்றிய (விஷயத்)தை வெளியாக்கினோம்; (அப்பட்டணவாசிகளோ) “இவர்கள் யார் என்பதை பற்றி தர்க்கித்துக் கொண்டதை (நபியே! நினைவு கூறும்) “இவர்கள் (இருந்த இடத்தின்) மீது ஒரு கட்டடத்தைக் கட்டுங்கள்; இவர்களை(ப் பற்றி) இறைவனே நன்கறிவான் என்றனர்; இ(வ்விவாதத்)தில் எவர்களுடைய கருத்து மிகைத்ததோ அவர்கள்: “நிச்சயமாக அவர்கள் மீது ஒரு மஸ்ஜிதை அமைப்போம்” என்று கூறினார்கள்.
سَیَقُوْلُوْنَ ثَلٰثَةٌ رَّابِعُهُمْ كَلْبُهُمْ ۚ وَیَقُوْلُوْنَ خَمْسَةٌ سَادِسُهُمْ كَلْبُهُمْ رَجْمًا بِالْغَیْبِ ۚ وَیَقُوْلُوْنَ سَبْعَةٌ وَّثَامِنُهُمْ كَلْبُهُمْ ؕ قُلْ رَّبِّیْۤ اَعْلَمُ بِعِدَّتِهِمْ مَّا یَعْلَمُهُمْ اِلَّا قَلِیْلٌ ۫۬ فَلَا تُمَارِ فِیْهِمْ اِلَّا مِرَآءً ظَاهِرًا ۪ وَّلَا تَسْتَفْتِ فِیْهِمْ مِّنْهُمْ اَحَدًا ۟۠
سَيَـقُوْلُوْنَகூறுகின்றனர்ثَلٰثَةٌமூவர்رَّابِعُهُمْஅவர்களில் நான்காவதாகكَلْبُهُمْ‌ۚஅவர்களின் நாய்وَيَقُوْلُوْنَஇன்னும் கூறுவர்خَمْسَةٌஐவர்سَادِسُهُمْஅவர்களில் ஆறாவதாகكَلْبُهُمْஅவர்களின் நாய்رَجْمًۢا بِالْغَيْبِ‌ۚகண்மூடித்தனமாகوَيَقُوْلُوْنَஇன்னும் கூறுவர்سَبْعَةٌஏழு நபர்கள்وَّثَامِنُهُمْஇன்னும் அவர்களில் எட்டாவதாகكَلْبُهُمْ‌ؕஅவர்களின் நாய்قُلْகூறுவீராகرَّبِّىْۤஎன் இறைவன்اَعْلَمُமிக அறிந்தவன்بِعِدَّتِهِمْஅவர்களின் எண்ணிக்கையைمَّاஅறியமாட்டார்கள்يَعْلَمُهُمْஅவர்களைاِلَّاதவிரقَلِيْلٌகுறைவானவர்(கள்)فَلَا تُمَارِஆகவே விவாதிக்காதீர்فِيْهِمْஅவர்களைப் பற்றிاِلَّاதவிரمِرَآءًவிவாதமாகவேظَاهِرًاவெளிப்படையானوَّلَا تَسْتَفْتِஇன்னும் விளக்கம் கேட்காதீர்فِيْهِمْஇவர்களைப் பற்றிمِّنْهُمْஅவர்களில்اَحَدًا‏ஒருவரிடமும்
ஸ யகூலூன தலாததுர் ராBபி'உஹும் கல்Bபுஹும் வ யகூலூன கம்ஸதுன் ஸாதிஸுஹும் கல்Bபுஹும் ரஜ்மம் Bபில்கய்Bப்; வ யகூலூன ஸBப்'அது(ன்)வ் வ தாமினுஹும் கல்Bபுஹும்; குர் ரBப்Bபீ அஃலமு Bபி'இத்ததிஹிம் மா யஃலமுஹும் இல்லா கலீல்; Fபலா துமாரி Fபீஹிம் இல்லா மிரா'அன் ளாஹிர(ன்)வ் வலா தஸ்தFப்தி Fபீஹிம் மின்ஹும் அஹதா
(அவர்கள்) மூன்று பேர் தாம்; அவர்களில் நான்காவது அவர்களுடைய நாய் என்று (சிலர்) கூறுகின்றனர்(இல்லை) அவர்கள் ஐந்து பேர் தாம்; - அவர்களில் ஆறாவது அவர்களுடைய நாய்” என்று மறைவானதை ஊகம் செய்து (சிலர்) கூறுகிறார்கள்; இன்னும் (சிலர்) “ஏழுபேர் - அவர்களில் எட்டாவது அவர்களுடைய நாய்” என்று சொல்கிறார்கள் - (நபியே!) அவர்களுடைய எண்ணிக்கையை என்னுடைய இறைவன் தான் நன்கறிவான்; சிலரைத் தவிர, மற்றெவரும் அவர்களைப் பற்றி அறிய மாட்டார்கள்” என்று கூறுவீராக! ஆகவே, அவர்களைப் பற்றி வெளிரங்கமான விஷயம் தவிர (வேறெது பற்றியும்) நீர் தர்க்கம் செய்ய வேண்டாம்; இன்னும் அவர்களைக் குறித்து இவர்களில் எவரிடமும் நீர் தீர்ப்புக் கேட்கவும் வேண்டாம்.
وَلَا تَقُوْلَنَّ لِشَایْءٍ اِنِّیْ فَاعِلٌ ذٰلِكَ غَدًا ۟ۙ
وَلَا تَقُوْلَنَّஅறவே கூறாதீர்لِشَا۟ىْءٍஒன்றைப் பற்றிاِنِّىْநிச்சயம் நான்فَاعِلٌசெய்பவன்ذٰلِكَஅதைغَدًاۙ‏நாளை
வ லா தகூலன்ன லிஷய்'இன் இன்னீ Fபா'இலுன் தாலிக கதா
(நபியே!) இன்னும் எந்த விஷயத்தைப் பற்றியும் “நிச்சயமாக நான் நாளை அதைச் செய்பவனாக இருக்கிறேன்” என்று நிச்சயமாக கூறாதீர்கள்.
اِلَّاۤ اَنْ یَّشَآءَ اللّٰهُ ؗ وَاذْكُرْ رَّبَّكَ اِذَا نَسِیْتَ وَقُلْ عَسٰۤی اَنْ یَّهْدِیَنِ رَبِّیْ لِاَقْرَبَ مِنْ هٰذَا رَشَدًا ۟
اِلَّاۤதவிரاَنْ يَّشَآءَநாடினால்اللّٰهُ‌அல்லாஹ்وَاذْكُرْநினைவு கூருவீராகرَّبَّكَஉம் இறைவனைاِذَا نَسِيْتَநீர் மறந்து விட்டால்وَقُلْஇன்னும் கூறுவீராகعَسٰٓىகூடும்اَنْ يَّهْدِيَنِஅவன் நேர்வழி காட்ட / எனக்குرَبِّىْஎன் இறைவன்لِاَقْرَبَமிக நெருக்கமானதன் பக்கம்مِنْ هٰذَاஇதைவிடرَشَدًا‏தெளிவான அறிவிற்கு
இல்லா அ(ன்)ய் யஷா'அல்லாஹ்; வத்குர் ரBப்Bபக இதா னஸீத வ குல் 'அஸா அ(ன்)ய் யஹ்தியனி ரBப்Bபீ லி அக்ரBப மின் ஹாதா ரஷதா
“இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்” என்று சேர்த்துச் சொன்னால்) அன்றி; தவிர, (இதை) நீர் மறந்து விடுங்கால் உம் இறைவனை நினைவு படுத்திக் கொள்வீராக; இன்னும், “என்னுடைய இறைவன், நேர் வழியில் இதை விட இன்னும் நெருங்கிய (விஷயத்)தை எனக்கு அறிவிக்கக்கூடும்” என்றும் கூறுவீராக!
وَلَبِثُوْا فِیْ كَهْفِهِمْ ثَلٰثَ مِائَةٍ سِنِیْنَ وَازْدَادُوْا تِسْعًا ۟
وَلَبِثُوْاதங்கினர்فِىْ كَهْفِهِمْதங்கள் குகையில்ثَلٰثَ مِائَةٍமுன்னூறுسِنِيْنَஆண்டுகள்وَازْدَادُوْاஇன்னும் அதிகப்படுத்தினர்تِسْعًا‏ஒன்பதை
வ லBபிதூ Fபீ கஹ்Fபிஹிம் தலாத மி'அதின் ஸினீன வZஜ்தாதூ திஸ்'ஆ
அவர்கள் தங்கள் குகையில் முன்னூறு வருடங்களுடன் மேலும் ஒன்பது அதிகமாக்கி (முன்னூற்றி ஒன்பது வருடங்கள்) தங்கினார்கள்.
قُلِ اللّٰهُ اَعْلَمُ بِمَا لَبِثُوْا ۚ لَهٗ غَیْبُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ اَبْصِرْ بِهٖ وَاَسْمِعْ ؕ مَا لَهُمْ مِّنْ دُوْنِهٖ مِنْ وَّلِیٍّ ؗ وَّلَا یُشْرِكُ فِیْ حُكْمِهٖۤ اَحَدًا ۟
قُلِகூறுவீராகاللّٰهُஅல்லாஹ்اَعْلَمُமிக அறிந்தவன்بِمَا لَبِثُوْا‌ ۚஅவர்கள் தங்கியதைلَهٗஅவனுக்கேغَيْبُமறைவானவைالسَّمٰوٰتِவானங்கள்وَالْاَرْضِ‌ ؕஇன்னும் பூமிاَبْصِرْ بِهٖஅவன் துள்ளியமாகப் பார்ப்பவன்وَاَسْمِعْ‌ ؕஇன்னும் துள்ளியமாகக் கேட்பவன்مَا لَهُمْஅவர்களுக்கு இல்லைمِّنْ دُوْنِهٖஅவனையன்றிمِنْ وَّلِىٍّ நிர்வகிக்கும் பாதுகாவலன்وَّلَا يُشْرِكُஇன்னும் கூட்டாக்க மாட்டான்فِىْ حُكْمِهٖۤதனது அதிகாரத்தில்اَحَدًا‏ஒருவரை
குலில் லாஹு அஃலமு Bபிமா லBபிதூ லஹூ கய்Bபுஸ் ஸமாவாதி வல் அர்ளி அBப்ஸிர் Bபிஹீ வ அஸ்மிஃ; மா லஹும் மின் தூனிஹீ மி(ன்)வ் வலிய்யி(ன்)வ் வலா யுஷ்ரிகு Fபீ ஹுக்மிஹீ அஹதா
“அவர்கள் (அதில்) தரிப்பட்டிருந்த (காலத்)தை அல்லாஹ்வே நன்கறிந்தவன்; வானங்களிலும் பூமியிலும் மறைவாய் இருப்பவை அவனுக்கே உரியனவாகும்; அவற்றை அவனே நன்றாக பார்ப்பவன்; தெளிவாய்க் கேட்பவன் - அவனையன்றி அவர்களுக்கு உதவி செய்வோர் எவருமில்லை, அவன் தன்னுடைய அதிகாரத்தில் வேறு எவரையும் கூட்டாக்கிக் கொள்வதுமில்லை” என்று (நபியே!) நீர் கூறும்.
وَاتْلُ مَاۤ اُوْحِیَ اِلَیْكَ مِنْ كِتَابِ رَبِّكَ ؕۚ لَا مُبَدِّلَ لِكَلِمٰتِهٖ ۫ۚ وَلَنْ تَجِدَ مِنْ دُوْنِهٖ مُلْتَحَدًا ۟
وَاتْلُஇன்னும் ஓதுவீராகمَاۤஎதுاُوْحِىَவஹீ அறிவிக்கப்பட்டதுاِلَيْكَஉமக்குمِنْ كِتَابِவேதத்தில்رَبِّكَ ؕஉம் இறைவனின்لَاஅறவே இல்லைمُبَدِّلَமாற்றுபவர்لِكَلِمٰتِهٖ‌ ۚஅவனுடைய வாக்கியங்களைوَلَنْ تَجِدَகாணமாட்டீர்مِنْ دُوْنِهٖஅவனையன்றிمُلْتَحَدًا‏அடைக்கலம் பெறுமிடத்தை
வத்லு மா ஊஹிய இலய்க மின் கிதாBபி ரBப்Bபிக லா முBபத்தில லி கலிமாதிஹீ வ லன் தஜித மின் தூனிஹீ முல்தஹதா
இன்னும் (நபியே!) உம்முடைய இறைவனின் வேதத்திலிருந்து உமக்கு வஹீ மூலம் அருளப்பட்டதை நீர் ஓதி வருவீராக - அவனுடைய வார்த்தைகளை மாற்றக் கூடியவர் எவருமில்லை; இன்னும் அவனையன்றி புகலிடம் எதையும் நீர் காணமாட்டீர்.
وَاصْبِرْ نَفْسَكَ مَعَ الَّذِیْنَ یَدْعُوْنَ رَبَّهُمْ بِالْغَدٰوةِ وَالْعَشِیِّ یُرِیْدُوْنَ وَجْهَهٗ وَلَا تَعْدُ عَیْنٰكَ عَنْهُمْ ۚ تُرِیْدُ زِیْنَةَ الْحَیٰوةِ الدُّنْیَا ۚ وَلَا تُطِعْ مَنْ اَغْفَلْنَا قَلْبَهٗ عَنْ ذِكْرِنَا وَاتَّبَعَ هَوٰىهُ وَكَانَ اَمْرُهٗ فُرُطًا ۟
وَاصْبِرْதடுப்பீராகنَـفْسَكَஉம்மைمَعَஉடன்الَّذِيْنَஎவர்கள்يَدْعُوْنَபிரார்த்திக்கிறார்கள்رَبَّهُمْதங்கள் இறைவனைبِالْغَدٰوةِகாலையில்وَالْعَشِىِّஇன்னும் மாலையில்يُرِيْدُوْنَநாடியவர்களாகوَجْهَهٗ‌அவனுடைய முகத்தைوَلَا تَعْدُஅகன்றிடவேண்டாம்عَيْنٰكَஉம் இரு கண்கள்عَنْهُمْ‌ ۚஅவர்களை விட்டுتُرِيْدُநாடுகிறீர்زِيْنَةَஅலங்காரத்தைالْحَيٰوةِவாழ்க்கையின்الدُّنْيَا‌ ۚஉலகம்وَ لَا تُطِعْகீழ்ப்படியாதீர்مَنْஎவனுக்குاَغْفَلْنَاகவனமற்றதாக ஆக்கினோம்قَلْبَهٗஅவனுடைய உள்ளத்தைعَنْ ذِكْرِنَاநம் நினைவை விட்டுوَاتَّبَعَஇன்னும் பின்பற்றினான்هَوٰٮهُதனது மன இச்சையைوَكَانَஇன்னும் ஆகிவிட்டதுاَمْرُهٗஅவனுடைய காரியம்فُرُطًا‏எல்லை மீறியதாக
வஸ்Bபிர் னFப்ஸக ம'அல் லதீன யத்'ஊன ரBப்Bபஹும் Bபில்கதாதி வல்'அஷிய்யி யுரீதூன வஜ்ஹஹூ வலா தஃது 'அய்னாக 'அன்ஹும் துரீது Zஜீனதல் ஹயாதித் துன்யா வலா துதிஃ மன் அக்Fபல்னா கல்Bபஹூ 'அன் திக்ரினா வத்தBப'அ ஹவாஹு வ கான அம்ருஹூ Fபுருதா
(நபியே!) எவர் தம் இறைவனுடைய திருப்பொருத்தத்தை நாடியவர்களாக காலையிலும், மாலையிலும் அவனைப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்களோ, அவர்களுடன் நீரும் பொறுமையை மேற் கொண்டிருப்பீராக! இன்னும் உலக வாழ்க்கையின் அலங்காரத்தை நாடி அ(த்தகைய)வர்களை விட்டும் உம் இரு கண்களையும் திருப்பி விடாதீர்; இன்னும், எவனுடைய இதயத்தை நம்மை நினைவு கூர்வதிலிருந்து நாம் திருப்பி விட்டோமோ அவனை நீர் வழிபடாதீர்; ஏனெனில் அவன்தன் இச்சையைப் பின் பற்றியதனால் அவனுடைய காரியம் வரம்பு மீறியதாகி விட்டது.
وَقُلِ الْحَقُّ مِنْ رَّبِّكُمْ ۫ فَمَنْ شَآءَ فَلْیُؤْمِنْ وَّمَنْ شَآءَ فَلْیَكْفُرْ ۙ اِنَّاۤ اَعْتَدْنَا لِلظّٰلِمِیْنَ نَارًا ۙ اَحَاطَ بِهِمْ سُرَادِقُهَا ؕ وَاِنْ یَّسْتَغِیْثُوْا یُغَاثُوْا بِمَآءٍ كَالْمُهْلِ یَشْوِی الْوُجُوْهَ ؕ بِئْسَ الشَّرَابُ ؕ وَسَآءَتْ مُرْتَفَقًا ۟
وَقُلِஇன்னும் கூறுவீராகالْحَـقُّஉண்மைمِنْ رَّبِّكُمْ‌உங்கள் இறைவனிடமிருந்துفَمَنْஎவர்شَآءَவிரும்பினார்فَلْيُؤْمِنْநம்பிக்கை கொள்ளலாம்وَّمَنْஇன்னும் எவர்شَآءَவிரும்பினார்فَلْيَكْفُرْநிராகரித்து விடலாம்ۙاِنَّاۤநிச்சயமாக நாம்اَعْتَدْنَاஏற்படுத்தியுள்ளோம்لِلظّٰلِمِيْنَதீயவர்களுக்குنَارًا ۙநரக நெருப்பைاَحَاطَசூழ்ந்துள்ளதுبِهِمْஅவர்களைسُرَادِقُهَا‌ ؕஅதன் சுவர்وَاِنْ يَّسْتَغِيْثُوْاஅவர்கள் உதவி தேடினால்يُغَاثُوْاஉதவப்படுவார்கள்بِمَآءٍநீரைக் கொண்டுكَالْمُهْلِமுற்றிலும் சூடேறி உருகிப்போன உலோக திராவத்தைப் போன்றيَشْوِىபொசுக்கக் கூடியதுالْوُجُوْهَ‌ؕமுகங்களைبِئْسَமகா கெட்டதுالشَّرَابُபானம்وَسَآءَتْஇன்னும் அது தீயதுمُرْتَفَقًا‏ஓய்விடம்
வ குலில் ஹக்கு மிர் ரBப்Bபிகும் Fபமன் ஷா'அ Fபல்யு'மி(ன்)வ் வ மன் ஷா'அ Fபல்யக்Fபுர்; இன்னா அஃதத்னா லிள்ளாலிமீன னாரன் அஹாத Bபிஹிம் ஸுராதிகுஹா; வ இ(ன்)ய் யஸ்தகீதூ யுகாதூ Bபிமா'இன் கல்முஹ்லி யஷ்வில் வுஜூஹ்' Bபி'ஸஷ்-ஷராBப்; வ ஸா'அத் முர்தFபகா
(நபியே!) இன்னும் நீர் கூறுவீராக: “இந்தச் சத்திய (வேதம்) உங்கள் இறைவனிடமிருந்து (வந்து)ள்ளது;” ஆகவே, விரும்புபவர் (அதனை) நம்பி கொள்ளட்டும். விரும்புபவர் (அதனை) நிராகரிக்கட்டும். அநியாயக் காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம்; (அந்நெருப்பின்) சுவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்; அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக் கருக்கி விடும்; மிகக் கேடான பானமாகும் அது! இன்னும், இறங்கும் தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும்.
اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ اِنَّا لَا نُضِیْعُ اَجْرَ مَنْ اَحْسَنَ عَمَلًا ۟ۚ
اِنَّநிச்சயமாகالَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்وَعَمِلُواஇன்னும் செய்தார்கள்الصّٰلِحٰتِநன்மைகளைاِنَّاநிச்சயமாக நாம்لَا نُضِيْعُவீணாக்கமாட்டோம்اَجْرَகூலியைمَنْஎவர்(கள்)اَحْسَنَமிக அழகியதை செய்தார்(கள்)عَمَلًا‌ۚ‏செயல்
இன்னல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி இன்னா லா னுளீ'உ அஜ்ர மன் அஹ்ஸன 'அமலா
நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு, (ஸாலிஹான) நற் கருமங்களையும் செய்கிறார்களோ, அத்தகைய அழகிய செயல் செய்வோரின் (நற்) கூலியை நாம் நிச்சயமாக வீணாக்க மாட்டோம்.
اُولٰٓىِٕكَ لَهُمْ جَنّٰتُ عَدْنٍ تَجْرِیْ مِنْ تَحْتِهِمُ الْاَنْهٰرُ یُحَلَّوْنَ فِیْهَا مِنْ اَسَاوِرَ مِنْ ذَهَبٍ وَّیَلْبَسُوْنَ ثِیَابًا خُضْرًا مِّنْ سُنْدُسٍ وَّاِسْتَبْرَقٍ مُّتَّكِـِٕیْنَ فِیْهَا عَلَی الْاَرَآىِٕكِ ؕ نِعْمَ الثَّوَابُ ؕ وَحَسُنَتْ مُرْتَفَقًا ۟۠
اُولٰۤٮِٕكَஅவர்கள்لَهُمْஅவர்களுக்கு உண்டுجَنّٰتُசொர்க்கங்கள்عَدْنٍஅத்ன்تَجْرِىْஓடும்مِنْ تَحْتِهِمُஅவர்களின் கீழ்الْاَنْهٰرُநதிகள்يُحَلَّوْنَஅலங்காரம் செய்யப்படுவார்கள்فِيْهَاஅவற்றில்مِنْ اَسَاوِرَவளையல்களினால்مِنْ ذَهَبٍதங்கத்திலிருந்துوَّ يَلْبَسُوْنَஇன்னும் அணிவார்கள்ثِيَابًاஆடைகளைخُضْرًاபச்சை நிறمِّنْ سُنْدُسٍமென்மையான பட்டுகளிலிருந்துوَّاِسْتَبْرَقٍதடிப்பமான பட்டுمُّتَّكِــِٕيْنَசாய்ந்தவர்களாகفِيْهَاஅவற்றில்عَلَى الْاَرَآٮِٕكِ‌ؕகட்டில்கள் மீதுنِعْمَசிறந்தالثَّوَابُ ؕகூலிوَحَسُنَتْஇன்னும் அழகியதுمُرْتَفَقًا‏ஓய்விடம்
உலா'இக லஹும் ஜன்னாது 'அத்னின் தஜ்ரீ மின் தஹ்திஹிமுல் அன்ஹாரு யுஹல்லவ்ன Fபீஹா மின் அஸாவிர மின் தஹBபி(ன்)வ் வ யல்Bபஸூன தியாBபன் குள்ரம் மின் ஸுன்துஸி(ன்)வ் வ இஸ்தBப்ரகிம் முத்தகி'ஈன Fபீஹா 'அலல் அரா'இக்; னிஃமத் தவாBப்; வ ஹஸுனத் முர்தFபகா
அ(த்தகைய)வர்களுக்கு என்றென்றும் தங்கியிருக்கக் கூடிய சுவனபதிகள் உண்டு. அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்; அவர்களுக்கு அங்கு பொன்னாலாகிய கடகங்கள் அணிவிக்கப் படும், ஸுன்துஸ், இஸ்தப்ரக் போன்ற பச்சை நிற பூம்பட்டாடைகளை அவர்கள் அணிந்திருப்பார்கள்; அங்குள்ள உயர்ந்த ஆசனங்களின் மீது சாய்(ந்து மகிழ்)ந்து இருப்பார்கள் - (அவர்களுடைய) நற் கூலி மிகவும் பாக்கியமிக்கதாயிற்று; (அவர்கள்) இளைப்பாறுமிடமும் மிக அழகியதாயிற்று.  
وَاضْرِبْ لَهُمْ مَّثَلًا رَّجُلَیْنِ جَعَلْنَا لِاَحَدِهِمَا جَنَّتَیْنِ مِنْ اَعْنَابٍ وَّحَفَفْنٰهُمَا بِنَخْلٍ وَّجَعَلْنَا بَیْنَهُمَا زَرْعًا ۟ؕ
وَاضْرِبْஇன்னும் விவரிப்பீராகلَهُمْஅவர்களுக்குمَّثَلًاஓர் உதாரணத்தைرَّجُلَيْنِஇரு ஆடவர்கள்جَعَلْنَاஆக்கினோம்لِاَحَدِهِمَاஅவ்விருவரில் ஒருவருக்குجَنَّتَيْنِஇரு தோட்டங்களைمِنْ اَعْنَابٍதிராட்சைகளினால் (நிரம்பிய)وَّحَفَفْنٰهُمَاஇன்னும் அவ்விரண்டையும் சுற்றினோம்بِنَخْلٍபேரிட்ச மரங்களால்وَّجَعَلْنَاஇன்னும் ஆக்கினோம்بَيْنَهُمَاஅவ்விரண்டுக்கும் இடையில்زَرْعًا ؕ‏விவசாயத்தை
வள்ரிBப் லஹும் மதலர் ரஜுலய்னி ஜ'அல்னா லி அஹதிஹிமா ஜன்னதய்னி மின் அஃனாBபி(ன்)வ் வ ஹFபFப்னாஹுமா Bபினகிலி(ன்)வ் வ ஜ'அல்னா Bபய்னஹுமா Zஜர்'ஆ
(நபியே!) இரு மனிதர்களை அவர்களுக்கு உதாரணமாகவும் கூறுவீராக! அவ்விருவரில் ஒருவருக்கு நாம் திராட்சைத் தோட்டங்களில் இரண்டைக் கொடுத்தோம்; இன்னும் பேரீத்த மரங்களைக் கொண்டு அவ்விரண்டையும் சூழப்பட்டவை ஆக்கினோம், அவ்விரண்டிற்கும் இடையில் (தானிய) விவசாயத்தையும் அமைத்தோம்.
كِلْتَا الْجَنَّتَیْنِ اٰتَتْ اُكُلَهَا وَلَمْ تَظْلِمْ مِّنْهُ شَیْـًٔا ۙ وَّفَجَّرْنَا خِلٰلَهُمَا نَهَرًا ۟ۙ
كِلْتَا الْجَـنَّتَيْنِஅவ்விரு தோட்டங்களும்اٰتَتْதந்தனاُكُلَهَاதத்தமது கனிகளைوَلَمْ تَظْلِمْகுறை(வை)க்கவில்லைمِّنْهُஅவற்றில்شَيْــٴًـــا‌ ۙஎதையும்وَّفَجَّرْنَاஇன்னும் பிளந்தோடச் செய்தோம்خِلٰـلَهُمَاஅவ்விரண்டுக்கும் இடையில்نَهَرًاۙ‏ஓர் ஆற்றை
கில்தல் ஜன்னதய்னி ஆதத் உகுலஹா வ லம் தள்லிம் மின்ஹு ஷய்'அ(ன்)வ் வ Fபஜ்ஜர்னா கி லாலஹுமா னஹரா
அவ்விரு தோட்டங்களும் அவற்றின் பலன்களை - எப்பொருளையும் குறையாது கொடுத்துக் கொண்டிருந்தன. அவ்விரண்டிற்கும் நடுவே நாம் ஓர் ஆற்றையும் ஒலித்தோடச் செய்தோம்.
وَّكَانَ لَهٗ ثَمَرٌ ۚ فَقَالَ لِصَاحِبِهٖ وَهُوَ یُحَاوِرُهٗۤ اَنَا اَكْثَرُ مِنْكَ مَالًا وَّاَعَزُّ نَفَرًا ۟
وَكَانَஇன்னும் இருந்தனلَهٗஅவனுக்குثَمَرٌ‌ ۚகனிகள்فَقَالَகூறினான்لِصَاحِبِهٖதன் தோழருக்குوَهُوَஅவனோيُحَاوِرُهٗۤஅவரிடம் பேசியவனாகاَنَا اَكْثَرُநான் மிக அதிகமானவன்مِنْكَஉன்னை விடمَالًاசெல்வத்தால்وَّاَعَزُّஇன்னும் மிக கண்ணியமுள்ளவன்نَفَرًا‏குடும்பத்தால்
வ கான லஹூ தமருன் Fபகால லிஸாஹிBபிஹீ வ ஹுவ யுஹாவிருஹூ அன அக்தரு மின்க மால(ன்)வ் வ அ'அZஜ்Zஜு னFபரா
இன்னும் அவனுக்கு (வேறு) கனிகளும் இருந்தன; அப்பொழுது அவன் தன் தோழனிடம் விதண்டாவாதம் செய்தவனாக: “நான் உன்னை விடப் பொருளால் அதிகமுள்ளவன், ஆட்களிலும் நான் (உன்னை) மிகைத்தவன்” என்று கூறினான்.
وَدَخَلَ جَنَّتَهٗ وَهُوَ ظَالِمٌ لِّنَفْسِهٖ ۚ قَالَ مَاۤ اَظُنُّ اَنْ تَبِیْدَ هٰذِهٖۤ اَبَدًا ۟ۙ
وَدَخَلَஇன்னும் நுழைந்தான்جَنَّتَهٗதனது தோட்டத்தில்وَهُوَஅவனோظَالِمٌதீங்கிழைத்தவனாகلِّنَفْسِهٖ‌ ۚதனக்குத் தானேقَالَகூறினான்مَاۤ اَظُنُّநான் எண்ணவில்லைاَنْ تَبِيْدَஅழியும் என்றுهٰذِهٖۤஇதுاَبَدًا ۙ‏ஒருபோதும்
வ தகல ஜன்னதஹூ வ ஹுவ ளாலிமுல் லினFப்ஸிஹீ கால மா அளுன்னு அன் தBபீத ஹாதிஹீ அBபதா
(பெருமையினால்) தன் ஆத்மாவுக்குத் தீங்கிழைத்தவனாக தன் தோட்டத்திற்குள் நுழைந்தான்; அவன், “இந்த(த் தோட்டம்) எப்பொழுதாவது அழிந்துவிடும் என்று நான் எண்ணவில்லை” என்றும் கூறிக் கொண்டான்.
وَّمَاۤ اَظُنُّ السَّاعَةَ قَآىِٕمَةً ۙ وَّلَىِٕنْ رُّدِدْتُّ اِلٰی رَبِّیْ لَاَجِدَنَّ خَیْرًا مِّنْهَا مُنْقَلَبًا ۟ۚ
وَّمَاۤ اَظُنُّஇன்னும் நான்எண்ணவில்லைالسَّاعَةَ قَآٮِٕمَةً  ۙமறுமை/நிகழும்وَّلَٮِٕنْ رُّدِدْتُّநான் திரும்பக் கொண்டுவரப்பட்டாலும்اِلٰى رَبِّىْஎன் இறைவனிடம்لَاَجِدَنَّநிச்சயம் பெறுவேன்خَيْرًاசிறந்த ஒன்றைمِّنْهَاஇதைவிடمُنْقَلَبًا‏மீளுமிடமாக
வ மா அளுன்னுஸ் ஸா'அத கா'இமத(ன்)வ் வ ல'இர் ருதித்து இலா ரBப்Bபீ ல அஜிதன்ன கய்ரம் மின்ஹா முன்கலBபா
(நியாயத் தீர்ப்புக்குரிய) வேளை ஏற்படும் என்றும் நான் எண்ணவில்லை. (அப்படி ஏதும் நிகழ்ந்து) நான் என் இறைவனிடம் மீண்டும் கொண்டு செல்லப்படுவேனாயின், நிச்சயமாக இங்கிருப்பதைவிட மேலான இடத்தையே நான் காண்பேன்” என்றும் கூறினான்.
قَالَ لَهٗ صَاحِبُهٗ وَهُوَ یُحَاوِرُهٗۤ اَكَفَرْتَ بِالَّذِیْ خَلَقَكَ مِنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُّطْفَةٍ ثُمَّ سَوّٰىكَ رَجُلًا ۟ؕ
قَالَகூறினார்لَهٗஅவனுக்குصَاحِبُهٗஅவரது தோழர்وَهُوَஅவர்يُحَاوِرُهٗۤஅவனிடம் பேசியவராகاَكَفَرْتَநீ நிராகரித்தாயா?بِالَّذِىْஎப்படிப்பட்டவனைخَلَقَكَஉன்னைப் படைத்தான்مِنْ تُرَابٍமண்ணிலிருந்துثُمَّபிறகுمِنْ نُّـطْفَةٍஇந்திரியத்திலிருந்துثُمَّபிறகுسَوّٰٮكَசீரமைத்தான்رَجُلًاؕ‏ஓர் ஆடவராக
கால லஹூ ஸாஹிBபுஹூ வ ஹுவ யுஹாவிருஹூ அகFபர்த Bபில்லதீ கலகக மின் துராBபின் தும்ம மின் னுத்Fபதின் தும்ம ஸவ்வாக ரஜுலா
அவனுடைய தோழன் அவனுடன் (இது பற்றித்) தர்க்கித்தவனாக: “உன்னை மண்ணிலிருந்தும், பின் ஒரு துளி இந்திரியத்திலிருந்தும் படைத்து, பின்பு உன்னைச் சரியான மனிதனாக ஆக்கினானே அவனையா நீ நிராகரிக்கின்றாய்?” என்று அவனிடம் கேட்டான்.
لٰكِنَّاۡ هُوَ اللّٰهُ رَبِّیْ وَلَاۤ اُشْرِكُ بِرَبِّیْۤ اَحَدًا ۟
لّٰـكِنَّا۟எனினும் நான்هُوَஅவன்தான்اللّٰهُஅல்லாஹ்رَبِّىْஎன் இறைவன்وَلَاۤ اُشْرِكُஇணையாக்க மாட்டேன்بِرَبِّىْۤஎன் இறைவனுக்குاَحَدًا‏ஒருவரையும்
லாகின்னா ஹுவல் லாஹு ரBப்Bபீ வலா உஷ்ரிகு Bபி ரBப்Bபீ அஹதா
“ஆனால், (நான் உறுதி சொல்கிறேன்:) அல்லாஹ் - அவன்தான் என் இறைவனாவான்; என் இறைவனுக்கு நான் யாரையும் இணை வைக்கவும் மாட்டேன் -
وَلَوْلَاۤ اِذْ دَخَلْتَ جَنَّتَكَ قُلْتَ مَا شَآءَ اللّٰهُ ۙ لَا قُوَّةَ اِلَّا بِاللّٰهِ ۚ اِنْ تَرَنِ اَنَا اَقَلَّ مِنْكَ مَالًا وَّوَلَدًا ۟ۚ
وَلَوْلَاۤவேண்டாமா?اِذْ دَخَلْتَநீ நுழைந்த போதுجَنَّتَكَஉன் தோட்டத்தில்قُلْتَநீ கூறியிருக்கمَاஎதுشَآءَநாடினான்اللّٰهُ ۙஅல்லாஹ்لَا قُوَّةَஅறவே ஆற்றல் இல்லைاِلَّا بِاللّٰهِ‌ ۚதவிர/அல்லாஹ்வைக் கொண்டேاِنْ تَرَنِஎன்னை நீ பார்த்தால்اَنَاநான்اَقَلَّகுறைவானவனாகمِنْكَஉன்னைவிடمَالًاசெல்வத்திலும்وَّوَلَدًا‌ ۚ‏சந்ததியிலும்
வ லவ் லா இத் தகல்த ஜன்னதக குல்த மா ஷா'அல்லாஹு லா குவ்வத இல்லா Bபில்லாஹ்; இன் தரனி அன அகல்ல மின்க மால(ன்)வ் வ வலதா
“மேலும், நீ உன் தோட்டத்தில் நுழைந்தபோது “மாஷா அல்லாஹு; லா குவ்வத்த இல்லா பில்லாஹ்” - அல்லாஹ் நாடியதே நடக்கும்; அனைத்து சக்தியும் அல்லாஹ்வுக்கேயன்றி வேறில்லை - என்று கூறியிருக்க வேண்டாமா? செல்வத்திலும், பிள்ளையிலும் நான் உன்னைவிடக் குறைந்தவனாக இருப்பதாய் நீ கண்ட போதிலும் -
فَعَسٰی رَبِّیْۤ اَنْ یُّؤْتِیَنِ خَیْرًا مِّنْ جَنَّتِكَ وَیُرْسِلَ عَلَیْهَا حُسْبَانًا مِّنَ السَّمَآءِ فَتُصْبِحَ صَعِیْدًا زَلَقًا ۟ۙ
فَعَسٰىகூடும்رَبِّىْۤஎன் இறைவன்اَنْ يُّؤْتِيَنِஅவர்கள் எனக்குத் தந்துخَيْرًاசிறந்ததைمِّنْ جَنَّتِكَஉன்தோட்டத்தைவிடوَيُرْسِلَஇன்னும் அனுப்பعَلَيْهَاஅதன் மீதுحُسْبَانًاவேதனையை,அழிவைمِّنَ السَّمَآءِவானத்திலிருந்துفَتُصْبِحَஅது ஆகிவிடும்صَعِيْدًاவழுவழுப்பானزَلَـقًا ۙ‏வெறும் தரையாக
Fப'அஸா ரBபீ அ(ன்)ய் யு'தியனி கய்ரம் மின் ஜன்னதிக வ யுர்ஸில 'அலய்ஹா ஹுஸ்Bபானம் மினஸ் ஸமா'இ Fபதுஸ்Bபிஹ ஸ'ஈதன் Zஜலகா
“உன்னுடைய தோட்டத்தைவிட மேலானதை என் இறைவன் எனக்குத் தரவும் (உன் தோட்டத்தின் மீது) வானத்திலிருந்தும் இடிகளை அனுப்பி அதை அதனால் மழுமட்டையான திடலாக ஆக்கி விடவும் போதும்.
اَوْ یُصْبِحَ مَآؤُهَا غَوْرًا فَلَنْ تَسْتَطِیْعَ لَهٗ طَلَبًا ۟
اَوْஅல்லதுيُصْبِحَஆகிவிடக் கூடும்مَآؤُهَاஅதன் தண்ணீர்غَوْرًاஆழத்தில்فَلَنْ تَسْتَطِيْعَஆகவே, அறவே நீ இயலமாட்டாய்لَهٗஅதைطَلَبًا‏தேட
அவ் யுஸ்Bபிஹ மா'உஹா கவ்ரன் Fபலன் தஸ்ததீ'அ லஹூ தலBபா
“அல்லது அதன் நீர் முழுதும் உறிஞ்சப்பட்டதாகி - அதை நீ தேடிக்கண்டு பிடிக்க முடியாதபடியும் ஆகிவிடலாம்” என்று கூறினான்.
وَاُحِیْطَ بِثَمَرِهٖ فَاَصْبَحَ یُقَلِّبُ كَفَّیْهِ عَلٰی مَاۤ اَنْفَقَ فِیْهَا وَهِیَ خَاوِیَةٌ عَلٰی عُرُوْشِهَا وَیَقُوْلُ یٰلَیْتَنِیْ لَمْ اُشْرِكْ بِرَبِّیْۤ اَحَدًا ۟
وَاُحِيْطَஅழிந்தனبِثَمَرِهٖஅவனுடைய கனிகள்فَاَصْبَحَஆரம்பித்தான்يُقَلِّبُபுரட்டكَفَّيْهِதன் இரு கைகளைعَلَىٰ مَاۤ اَنْفَقَசெலவழித்ததின் மீதுفِيْهَاஅதில்وَهِىَஅதுخَاوِيَةٌவெறுமையாகிவிட்டதுعَلٰىவிட்டுعُرُوْشِهَاஅதன் செடி கொடிகளைوَيَقُوْلُஇன்னும் கூறுவான்يٰلَيْتَنِىْநான் இருந்திருக்க வேண்டுமேلَمْ اُشْرِكْநான்இணையாக்காமல்بِرَبِّىْۤஎன் இறைவனுக்குاَحَدًا‏ஒருவரை
வ உஹீத Bபிதமரிஹீ Fபாஸ்Bபஹ யுகல்லிBபு கFப்Fபய்ஹி 'அலா மா அன்Fபக Fபீஹா வ ஹிய காவியதுன் 'அலா 'உரூஷிஹா வ யகூலு யாலய்தனீ லம் உஷ்ரிக் Bபி ரBப்Bபீ அஹதா
அவனுடைய விளைபொருட்கள் அழிக்கப்பட்டன. அதற்காக தான் செலவு செய்ததைக் குறித்து (வருந்தியவனாக) இரு கைகளையும் பிசைந்து கொண்டிருந்தான். அ(த்தோட்டமான)து வேரோடு சாய்ந்து கிடக்கின்றது. (இதனைப் பார்த்த) அவன் “என் இறைவனுக்கு எவரையும் நான் இணை வைக்காமல் இருந்திருக்க வேண்டுமே!” என்று கூறினான்.
وَلَمْ تَكُنْ لَّهٗ فِئَةٌ یَّنْصُرُوْنَهٗ مِنْ دُوْنِ اللّٰهِ وَمَا كَانَ مُنْتَصِرًا ۟ؕ
وَلَمْ تَكُنْஇருக்கவில்லைلَّهٗஅவனுக்குفِئَةٌகூட்டம்يَّـنْصُرُوْنَهٗஅவனுக்கு உதவுவார்கள்مِنْ دُوْنِஅன்றிاللّٰهِஅல்லாஹ்வைوَمَا كَانَஇன்னும் இருக்கவில்லைمُنْتَصِرًا ؕ‏பாதுகாப்பவனாக
வ லம் தகுல் லஹூ Fபி'அது(ன்)ய் யன்ஸுரூனஹூ மின் தூனில் லாஹி வமா கான முன்தஸிரா
மேலும், அல்லாஹ்வையன்றி, அவனுக்கு உதவி செய்யும் கூட்டத்தார் எவரும் அவனுக்கு இருக்கவில்லை; ஆகவே, அவன் (இவ்வுலகில்) எவராலும் உதவி செய்யப்பட்டவனாக இல்லை.
هُنَالِكَ الْوَلَایَةُ لِلّٰهِ الْحَقِّ ؕ هُوَ خَیْرٌ ثَوَابًا وَّخَیْرٌ عُقْبًا ۟۠
هُنَالِكَஅந்நேரத்தில்الْوَلَايَةُஉதவிلِلّٰهِஅல்லாஹ்விற்கேالْحَـقِّ‌ؕஉண்மையானவன்هُوَ خَيْرٌஅவன் சிறந்தவன்ثَوَابًاநன்மையாலும்وَّخَيْرٌஇன்னும் சிறந்தவன்عُقْبًا‏முடிவாலும்
ஹுனாலிகல் வலாயது லில்லாஹில் ஹக்க்; ஹுவ கய்ருன் தவாBப(ன்)வ் வ கய்ருன் 'உக்Bபா
அங்கே உதவிசெய்தல் உண்மையான அல்லாஹ்வுக்கே உரியது, அவன் கூலி வழங்குவதிலும் மிக்க சிறந்தவன்; முடிவெடுப்பதிலும் மிக்க மேலானவன்.
وَاضْرِبْ لَهُمْ مَّثَلَ الْحَیٰوةِ الدُّنْیَا كَمَآءٍ اَنْزَلْنٰهُ مِنَ السَّمَآءِ فَاخْتَلَطَ بِهٖ نَبَاتُ الْاَرْضِ فَاَصْبَحَ هَشِیْمًا تَذْرُوْهُ الرِّیٰحُ ؕ وَكَانَ اللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ مُّقْتَدِرًا ۟
وَاضْرِبْவிவரிப்பீராகلَهُمْஅவர்களுக்குمَّثَلَதன்மையைالْحَيٰوةِவாழ்க்கைالدُّنْيَاஉலகம்كَمَآءٍமழை நீரைப்போன்றுاَنْزَلْنٰهُஅதை இறக்கினோம்مِنَ السَّمَآءِவானத்திலிருந்துفَاخْتَلَطَஅது கலந்ததுبِهٖஅதனுடன்نَبَاتُதாவரம்الْاَرْضِபூமியின்فَاَصْبَحَஅது ஆகிவிட்டதுهَشِيْمًاகாய்ந்த சருகாகتَذْرُوْهُஅடித்து வீசும்படியான/அதைالرِّيٰحُ‌ ؕகாற்றுகள்وَكَانَஇருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்عَلٰى كُلِّ شَىْءٍஎல்லாவற்றின் மீதுمُّقْتَدِرًا‏பேராற்றலுடையவனாக
வள்ரிBப் லஹும் மதலல் ஹயாதித் துன்யா கமா'இன் அன்Zஜல்னாஹு மினஸ் ஸமா'இ Fபக்தலத Bபிஹீ னBபாதுல் அர்ளி Fப அஸ்Bபஹ ஹஷீமன் தத்ரூ ஹுர் ரியாஹ்; வ கானல் லாஹு 'அலா குல்லி ஷய்'இம் முக்ததிரா
மேலும், இவ்வுலக வாழ்க்கைக்கு ஓர் உதாரணம், அவர்களுக்கு (நபியே!) நீர் கூறுவீராக! “அது நாம் வானத்திலிருந்து இறக்கி வைத்த நீரைப் போலிருக்கிறது; பூமியிலுள்ள தாவரங்கள் அதனுடன் கலந்(து செழித்)தன; ஆனால் அவை காய்ந்து, பதராகி அவற்றைக் காற்று அடித்துக் கொண்டு போய் விடுகிறது - மேலும், எல்லாப் பொருளின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவனாக இருக்கின்றான்.
اَلْمَالُ وَالْبَنُوْنَ زِیْنَةُ الْحَیٰوةِ الدُّنْیَا ۚ وَالْبٰقِیٰتُ الصّٰلِحٰتُ خَیْرٌ عِنْدَ رَبِّكَ ثَوَابًا وَّخَیْرٌ اَمَلًا ۟
اَلْمَالُசெல்வம்وَ الْبَـنُوْنَஇன்னும் ஆண்பிள்ளைகள்زِيْنَةُஅலங்காரமாகும்الْحَيٰوةِ الدُّنْيَا‌ ۚஉலக வாழ்க்கையின்وَالْبٰقِيٰتُஇன்னும் நிலையாக இருப்பவைالصّٰلِحٰتُநற்செயல்கள்خَيْرٌசிறந்தவைعِنْدَ رَبِّكَஉம் இறைவனிடம்ثَوَابًاநன்மையிலும்وَّخَيْرٌசிறந்தவைاَمَلًا‏ஆசையிலும்
அல்மாலு வல்Bபனூன Zஜீனதுல் ஹயாதித் துன்ய வல் Bபாகியாதுஸ் ஸாலிஹாது கய்ருன் 'இன்த ரBப்Bபிக தவாBப(ன்)வ் வ கய்ருன் அமலா
செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும்; என்றும் நிலைத்து நிற்கக் கூடிய நற்கருமங்களே உம்முடைய இறைவனிடத்தில் நன்மைப் பலனுடையவையாகவும், (அவனிடத்தில்) நம்பிக்கையுடன் ஆதரவு வைக்கத்தக்கவையாகவும் இருக்கின்றன.
وَیَوْمَ نُسَیِّرُ الْجِبَالَ وَتَرَی الْاَرْضَ بَارِزَةً ۙ وَّحَشَرْنٰهُمْ فَلَمْ نُغَادِرْ مِنْهُمْ اَحَدًا ۟ۚ
وَيَوْمَஇன்னும் நாளில்نُسَيِّرُபெயர்த்துவிடுவோம்الْجِبَالَமலைகளைو تَرَىஇன்னும் பார்ப்பீர்الْاَرْضَபூமியைبَارِزَةً  ۙவெளிப்பட்டதாகوَّحَشَرْنٰهُمْஒன்று திரட்டுவோம்/ அவர்களைفَلَمْ نُغَادِرْவிடமாட்டோம்مِنْهُمْஅவர்களில்اَحَدًا‌ ۚ‏ஒருவரை
வ யவ்ம னுஸய்யிருல் ஜிBபால வ தரல் அர்ள BபாரிZஜ த(ன்)வ் வ ஹஷர்னாஹும் Fபலம் னுகாதிர் மின்ஹும் அஹதா
(நபியே!) ஒரு நாள் நாம் மலைகளை (அவற்றின் இடங்களை விட்டுப்) பெயர்த்து விடுவோம்; அப்போது, பூமியை நீர் வெட்ட வெளியாகக் காண்பீர்; அவர்களை ஒன்று சேர்ப்போம், (அந்நாளில்) நாம் ஒருவரையும் விட்டு வைக்க மாட்டோம்.
وَعُرِضُوْا عَلٰی رَبِّكَ صَفًّا ؕ لَقَدْ جِئْتُمُوْنَا كَمَا خَلَقْنٰكُمْ اَوَّلَ مَرَّةٍؗ بَلْ زَعَمْتُمْ اَلَّنْ نَّجْعَلَ لَكُمْ مَّوْعِدًا ۟
وَعُرِضُوْاஇன்னும் சமர்ப்பிக்கப்படுவார்கள்عَلٰى رَبِّكَஉம் இறைவன் முன்صَفًّا ؕவரிசையாகلَقَدْ جِئْتُمُوْنَاஎங்களிடம் வந்துவிட்டீர்கள்كَمَاநாம் படைத்தவாறேخَلَقْنٰكُمْஉங்களைاَوَّلَமுதல்مَرَّةٍ ۢ முறைبَلْமாறாகزَعَمْتُمْபிதற்றினீர்கள்اَ لَّنْ نَّجْعَلَஆக்கவே மாட்டோம்لَـكُمْஉங்களுக்குمَّوْعِدًا‏வாக்களிக்கப்பட்ட நேரத்தை
வ 'உரிளூ 'அலா ரBப்Bபிக ஸFப்Fபா, லகத் ஜி'துமூனா கமா கலக்னாகும் அவல மர்ரஹ்; Bபல் Zஜ'அம்தும் அல்லன்னஜ்'அல லகும் மவ்'இதா
அவர்கள் யாவரும் உம்முடைய இறைவனின் சமூகத்தில் வரிசையாகக் கொண்டு வரப்படுவார்கள்; “நாம் உங்களை முதல் தடவை படைத்தவாறே திட்டமாக இப்பொழுதும் நீங்கள் நம்மிடம் வந்து விட்டீர்கள், ஆனால் நாம் உங்களுக்காக வாக்களிக்கப்பட்ட இத்தகைய நாளை ஏற்படுத்த மாட்டோம் என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்கள்” (என்று சொல்லப்படும்).
وَوُضِعَ الْكِتٰبُ فَتَرَی الْمُجْرِمِیْنَ مُشْفِقِیْنَ مِمَّا فِیْهِ وَیَقُوْلُوْنَ یٰوَیْلَتَنَا مَالِ هٰذَا الْكِتٰبِ لَا یُغَادِرُ صَغِیْرَةً وَّلَا كَبِیْرَةً اِلَّاۤ اَحْصٰىهَا ۚ وَوَجَدُوْا مَا عَمِلُوْا حَاضِرًا ؕ وَلَا یَظْلِمُ رَبُّكَ اَحَدًا ۟۠
وَوُضِعَவைக்கப்படும்الْكِتٰبُபுத்தகம்فَتَرَىபார்ப்பீர்الْمُجْرِمِيْنَகுற்றவாளிகளைمُشْفِقِيْنَபயந்தவர்களாகمِمَّاஎவற்றினால்فِيْهِஅதில்وَ يَقُوْلُوْنَஇன்னும் கூறுவார்கள்يٰوَيْلَـتَـنَاஎங்கள் நாசமேمَالِஎன்ன?/க்குهٰذَاஇந்தالْـكِتٰبِபுத்தகம்لَا يُغَادِرُஅது விடவில்லைصَغِيْرَةًசிறியதைوَّلَا كَبِيْرَةًஇன்னும் பெரியதைاِلَّاۤதவிரاَحْصٰٮهَا‌ ۚகணக்கிட்டது / அவற்றின்وَوَجَدُوْاஇன்னும் காண்பார்கள்مَاஎதைعَمِلُوْاசெய்தார்கள்حَاضِرًا‌ ؕமுன்னால்وَ لَا يَظْلِمُஇன்னும் தீங்கிழைக்க மாட்டான்رَبُّكَஉம் இறைவன்اَحَدًا‏ஒருவருக்கும்
வ வுளி'அல் கிதாBபு Fபதரல் முஜ்ரிமீன முஷ்Fபிகீன மிம்மா Fபீஹி வ யகூலூன யா வய்லதனா மா லிஹாதல் கிதாBபி லா யுகாதிரு ஸகீ ரத(ன்)வ் வலா கBபீரதன் இல்லா அஹ்ஸாஹா; வ வஜதூ மா 'அமிலூ ஹாளிரா; வலா யள்லிமு ரBப்Bபுக அஹதா
இன்னும் (பட்டோலையாகிய) புத்தகம் (அவர்கள் முன்) வைக்கப்படும்; அதிலுள்ளதைக் கண்டு குற்றவாளிகள் மிக்க அச்சத்துடன் இருப்பதைக் காண்பீர்; மேலும் அவர்கள், “எங்கள் கேடே! இந்த ஏட்டிற்கு என்ன (நேர்ந்தது)? சிறியவையோ பெரியவையோ எதையும் வரையறுக்காது இது விட்டுவைக்கவில்லையே!” என்று கூறுவார்கள்; இன்னும், அவர்கள்செய்த யாவும் அவர்கள் முன் வைக்கப்படுவதைக் காண்பார்கள்; ஆனால் உம்முடைய இறைவன் ஒருவருக்கும் அநியாயம் செய்யமாட்டான்.  
وَاِذْ قُلْنَا لِلْمَلٰٓىِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ فَسَجَدُوْۤا اِلَّاۤ اِبْلِیْسَ ؕ كَانَ مِنَ الْجِنِّ فَفَسَقَ عَنْ اَمْرِ رَبِّهٖ ؕ اَفَتَتَّخِذُوْنَهٗ وَذُرِّیَّتَهٗۤ اَوْلِیَآءَ مِنْ دُوْنِیْ وَهُمْ لَكُمْ عَدُوٌّ ؕ بِئْسَ لِلظّٰلِمِیْنَ بَدَلًا ۟
وَاِذْ قُلْنَاநாம் கூறிய சமயம்لِلْمَلٰۤٮِٕكَةِவானவர்களுக்குاسْجُدُوْاசிரம் பணியுங்கள்لِاٰدَمَஆதமுக்குفَسَجَدُوْۤاஆகவே சிரம் பணிந்தனர்اِلَّاۤதவிரاِبْلِيْسَؕஇப்லீஸ்كَانَஇருந்தான்مِنَ الْجِنِّஜின்களில் ஒருவனாகفَفَسَقَமீறினான்عَنْ اَمْرِகட்டளையைرَبِّهٖؕதன் இறைவனின்اَفَتَـتَّخِذُوْنَهٗஎடுத்துக் கொள்கிறீர்களா?/அவனைوَذُرِّيَّتَهٗۤஇன்னும் அவனது சந்ததியைاَوْلِيَآءَநண்பர்களாகمِنْ دُوْنِىْஎன்னையன்றிوَهُمْஅவர்களோلَـكُمْஉங்களுக்குعَدُوٌّ ؕஎதிரிகள்بِئْسَமிக கெட்டவன்لِلظّٰلِمِيْنَதீயவர்களுக்குبَدَلًا‏மாற்றம்
வ இத் குல்னா லில் மலா'இகதிஸ் ஜுதூ லி ஆதம Fபஸஜதூ இல்லா இBப்லீஸ கான மினல் ஜின்னி FபFபஸக 'அன் அம்ரி ரBப்Bபிஹ்; அFபதத்தகிதூனஹூ வ துர்ரியதஹூ அவ்லியா'அ மின் தூனீ வ ஹும் லகும் 'அதுவ்வ்; Bபி'ஸ லிள்ளாலிமீன Bபதலா
அன்றியும், “ஆதமுக்கு ஸுஜூது செய்யுங்கள்” என்று நாம் மலக்குகளிடத்தில் கூறியதை (நபியே!) நினைவு கூர்வீராக; அப்போது இப்லீஸைத்தவிர, அவர்கள் ஸுஜூது செய்தார்கள்; அவன் (இப்லீஸ்) ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; அவன் தன் இறைவனுடைய கட்டளையை மீறி விட்டான்; ஆகவே நீங்கள் என்னையன்றி அவனையும் அவன் சந்ததியாரையும் (உங்களைப்) பாதுகாப்பவர்களாக எடுத்துக் கொள்வீர்களா? அவர்களோ உங்களுக்குப் பகைவர்களாக இருக்கிறர்கள்; அக்கிரமக்காரர்கள் (இவ்வாறு) மாற்றிக் கொண்டது மிகவும் கெட்டதாகும்.
مَاۤ اَشْهَدْتُّهُمْ خَلْقَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَلَا خَلْقَ اَنْفُسِهِمْ ۪ وَمَا كُنْتُ مُتَّخِذَ الْمُضِلِّیْنَ عَضُدًا ۟
مَّاۤநான் ஆஜராக்கவில்லைاَشْهَدْتُّهُمْஅவர்களைخَلْقَபடைத்ததிலும்السَّمٰوٰتِவானங்களைوَالْاَرْضِஇன்னும் பூமிوَلَا خَلْقَஇன்னும் படைத்ததிலும்اَنْفُسِهِمْஅவர்களையேوَمَا كُنْتُஇன்னும் நான் இருக்கவில்லைمُتَّخِذَஎடுத்துக் கொள்பவனாகالْمُضِلِّيْنَவழிகெடுப்பவர்களைعَضُدًا‏உதவியாளர்களாக
மா அஷ் ஹத்துஹும் கல்கஸ் ஸமாவாதி வல் அர்ளி வலா கல்க அன்Fபுஸிஹிம் வமா குன்து முத்தகிதல் முளில்லீன 'அளுதா
வானங்களையும், பூமியையும் படைப்பதற்கோ, இன்னும் அவர்களையே படைப்பதற்கோ (அவர்களை நான் உதவிக்கு) அருகே வைத்துக் கொள்ளவில்லை! வழி கெடுக்கும் இவர்களை (எதிலும்) நான் உதவியாளர்களாக ஏற்படுத்திக் கொள்ளவுமில்லை.
وَیَوْمَ یَقُوْلُ نَادُوْا شُرَكَآءِیَ الَّذِیْنَ زَعَمْتُمْ فَدَعَوْهُمْ فَلَمْ یَسْتَجِیْبُوْا لَهُمْ وَجَعَلْنَا بَیْنَهُمْ مَّوْبِقًا ۟
وَيَوْمَநாளைيَقُوْلُகூறுவான்نَادُوْاஅழையுங்கள்شُرَكَآءِىَஎன் இணைகளைالَّذِيْنَஎவர்கள்زَعَمْتُمْபிதற்றினீர்கள்فَدَعَوْهُمْஅவற்றை அவர்கள் அழைப்பார்கள்فَلَمْ يَسْتَجِيْبُوْاபதிலளிக்கமாட்டாதுلَهُمْஅவர்களுக்குوَجَعَلْنَاஇன்னும் ஆக்குவோம்بَيْنَهُمْஅவர்களுக்கு மத்தியில்مَّوْبِقًا‏ஓர் அழிவிடத்தை
வ யவ்ம யகூலு னாதூ ஷுரகா'இ யல் லதீன Zஜ'அம்தும் Fபத'அவ்ஹும் Fபலம் யஸ்தஜீBபூ லஹும் வ ஜ'அல்னா Bபய்னஹும் மவ் Bபிகா
“எனக்கு இணையானவர்களென எவர்களை நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்களோ அவர்களை நீங்கள் அழையுங்கள் என்று அவன் கூறக்கூடிய நாளில் இவர்கள் அவர்களை அழைப்பார்கள். ஆனால் அவர்கள் இவர்களுக்கு பதிலளிக்க மாட்டார்கள்; இன்னும் அவர்களுக்கிடையே நாசத்தை நாம் ஏற்படுத்துவோம்.”
وَرَاَ الْمُجْرِمُوْنَ النَّارَ فَظَنُّوْۤا اَنَّهُمْ مُّوَاقِعُوْهَا وَلَمْ یَجِدُوْا عَنْهَا مَصْرِفًا ۟۠
وَرَاَபார்ப்பார்(கள்)الْمُجْرِمُوْنَகுற்றவாளிகள்النَّارَநரகத்தைفَظَنُّوْۤاஇன்னும் உறுதி கொள்வார்கள்اَنَّهُمْநிச்சயம் தாங்கள்مُّوَاقِعُوْهَاவிழக்கூடியவர்கள்தான்/அதில்وَ لَمْ يَجِدُوْاஇன்னும் காணமாட்டார்கள்عَنْهَاஅதை விட்டுمَصْرِفًا‏விலகுமிடத்தை
வ ர அல் முஜ்ரிமூனன் னார Fபளன்னூ அன்னஹும் முவாகி'ஊஹா வ லம் யஜிதூ 'அன்ஹா மஸ்ரிFபா
இன்னும், குற்றவாளிகள்: (நரக) நெருப்பைப் பார்ப்பார்கள்; தாங்கள் அதில் விழப்போகிறவர்கள் என்பதைத் தெரிந்து கொள்வார்கள்; அதிலிருந்து தப்ப மாற்றிடம் எதையும் காண மாட்டார்கள்.
وَلَقَدْ صَرَّفْنَا فِیْ هٰذَا الْقُرْاٰنِ لِلنَّاسِ مِنْ كُلِّ مَثَلٍ ؕ وَكَانَ الْاِنْسَانُ اَكْثَرَ شَیْءٍ جَدَلًا ۟
وَلَقَدْ صَرَّفْنَاவிவரித்துவிட்டோம்فِىْஇல்هٰذَاஇந்தالْقُرْاٰنِகுர்ஆன்لِلنَّاسِமக்களுக்குمِنْஇருந்துكُلِّஎல்லாمَثَلٍ‌ ؕஉதாரணம்وَكَانَஇருக்கிறான்الْاِنْسَانُமனிதன்اَكْثَرَ شَىْءٍமிக அதிகம்جَدَلًا‏வாதம்
வ லகத் ஸர்ரFப்னா Fபீ ஹாதல் குர்'ஆனி லின்னாஸி மின் குல்லி மதல்; வ கானல் இன்ஸானு அக்தர ஷய்'இன் ஜதலா
இன்னும், நிச்சயமாக நாம் இந்த குர்ஆனில் ஒவ்வோர் உதாரணத்தையும் மனிதர்களுக்காக விளக்கியுள்ளோம். எனினும் மனிதன் அதிகமாகத் தர்க்கம் செய்பவனாகவே இருக்கின்றான்.
وَمَا مَنَعَ النَّاسَ اَنْ یُّؤْمِنُوْۤا اِذْ جَآءَهُمُ الْهُدٰی وَیَسْتَغْفِرُوْا رَبَّهُمْ اِلَّاۤ اَنْ تَاْتِیَهُمْ سُنَّةُ الْاَوَّلِیْنَ اَوْ یَاْتِیَهُمُ الْعَذَابُ قُبُلًا ۟
وَمَا مَنَعَஇன்னும் தடுக்கவில்லைالنَّاسَமக்களைاَنْ يُّؤْمِنُوْۤاஅவர்கள் நம்பிக்கைகொள்வதுاِذْ جَآءَவந்த போதுهُمُஅவர்களுக்குالْهُدٰىநேர்வழிوَيَسْتَغْفِرُوْاஇன்னும் பாவமன்னிப்புக் கோருவதைرَبَّهُمْஅவர்களுடைய இறைவனிடம்اِلَّاۤதவிரاَنْவருவதைتَاْتِيَهُمْஅவர்களுக்குسُنَّةُநடைமுறைالْاَوَّلِيْنَமுன்னோரின்اَوْ يَاْتِيَهُمُஅல்லது/வருவதை/அவர்களுக்குالْعَذَابُவேதனைقُبُلًا‏கண்முன்
வமா மன'அன் னாஸ அ(ன்)ய் யு'மினூ இத் ஜா'அஹுமுல் ஹுதா வ யஸ்தக்Fபிரூ ரBப்Bபஹும் இல்லா அன் தாதியஹும் ஸுன்னதுல் அவ்வலீன அவ் யாதியஹுமுல் 'அதாBபு குBபுலா
மனிதர்களிடம் நேர்வழி வந்த போது அவர்கள் நம்பிக்கை கொள்வதையும், தங்கள் இறைவனிடம் பிழை பொறுக்கத் தேடுவதையும் தடை செய்வதெல்லாம், முன் சென்றவர்களுக்கு நேர்ந்தது இவர்களுக்கும் நேர்தல் அல்லது இவர்களுக்கு எதிரிலேயே (நம்முடைய) வேதனை வருதல் ஆகியவை தவிர வேறில்லை.
وَمَا نُرْسِلُ الْمُرْسَلِیْنَ اِلَّا مُبَشِّرِیْنَ وَمُنْذِرِیْنَ ۚ وَیُجَادِلُ الَّذِیْنَ كَفَرُوْا بِالْبَاطِلِ لِیُدْحِضُوْا بِهِ الْحَقَّ وَاتَّخَذُوْۤا اٰیٰتِیْ وَمَاۤ اُنْذِرُوْا هُزُوًا ۟
وَمَا نُرْسِلُஅனுப்ப மாட்டோம்الْمُرْسَلِيْنَதூதர்களைاِلَّاதவிரمُبَشِّرِيْنَநற்செய்தி கூறுபவர்களாகوَمُنْذِرِيْنَ‌ ۚஇன்னும் எச்சரிப்பவர்களாகوَيُجَادِلُஇன்னும் வாதிடுகிறார்(கள்)الَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தனர்بِالْبَاطِلِஅசத்தியத்தைக் கொண்டுلِـيُدْحِضُوْاஅவர்கள் அழிப்பதற்காகبِهِஅதைக் கொண்டுالْحَـقَّ‌சத்தியத்தைوَاتَّخَذُوْۤاஇன்னும் எடுத்துக்கொண்டனர்اٰيٰتِىْஎன் வசனங்களைوَمَاۤ اُنْذِرُوْاஇன்னும் எச்சரிக்கப்பட்டவற்றைهُزُوًا‏கேலியாக
வமா னுர்ஸிலுல் முர்ஸலீன இல்லா முBபஷ்ஷிரீன வ முன்திரீன்; வ யுஜாதிலுல் லதீன கFபரூ Bபில்Bபாதிலி லியுத்ஹிளூ Bபிஹில் ஹக்க வத்தகதூ ஆயாதீ வ மா உன்திரூ ஹுZஜுவா
இன்னும், நாம் தூதர்களை நன்மாரயங் கூறுபவர்களாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் அல்லாமல் அனுப்பவில்லை; எனினும் காஃபிர்களோ பொய்யைக் கொண்டு சத்தியத்தை அழித்து விடுவதற்காகத் தர்க்கம் செய்கிறார்கள் - என்னுடைய அத்தாட்சிகளையும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்டதையும் பரிகாசமாகவே எடுத்துக் கொள்கின்றனர்.
وَمَنْ اَظْلَمُ مِمَّنْ ذُكِّرَ بِاٰیٰتِ رَبِّهٖ فَاَعْرَضَ عَنْهَا وَنَسِیَ مَا قَدَّمَتْ یَدٰهُ ؕ اِنَّا جَعَلْنَا عَلٰی قُلُوْبِهِمْ اَكِنَّةً اَنْ یَّفْقَهُوْهُ وَفِیْۤ اٰذَانِهِمْ وَقْرًا ؕ وَاِنْ تَدْعُهُمْ اِلَی الْهُدٰی فَلَنْ یَّهْتَدُوْۤا اِذًا اَبَدًا ۟
وَمَنْயார்?اَظْلَمُமகா தீயவன்مِمَّنْஎவனைவிடذُكِّرَஅறிவுரை கூறப்பட்டான்بِاٰيٰتِவசனங்களைக் கொண்டுرَبِّهٖதன் இறைவனின்فَاَعْرَضَபுறக்கணித்தான்عَنْهَاஅவற்றைوَنَسِىَஇன்னும் மறந்தான்مَاஎவற்றைقَدَّمَتْமுற்படுத்தினيَدٰهُ‌ ؕதன் இரு கரங்கள்اِنَّاநிச்சயமாக நாம்جَعَلْنَاஆக்கினோம்عَلٰى قُلُوْبِهِمْஅவர்களின் உள்ளங்கள் மீதுاَكِنَّةًதடுக்கும் மூடிகளைاَنْஅவர்கள் புரிவதைيَّفْقَهُوْهُஅதைوَفِىْۤ اٰذَانِهِمْஇன்னும் அவர்களுடைய காதுகள் மீதுوَقْرًا‌ ؕகனத்தைوَاِنْ تَدْعُهُمْஅழைத்தால் / நீர் அவர்களைاِلَى الْهُدٰىநேர்வழிக்குفَلَنْ يَّهْتَدُوْۤاநேர்வழி பெறவே மாட்டார்கள்اِذًاஅப்போதுاَبَدًا‏ஒருபோதும்
வ மன் அள்லமு மிம்மன் துக்கிர Bபி அயாதி ரBப்Bபிஹீ Fப-அஃரள 'அன்ஹா வ னஸிய மா கத்தமத் யதாஹ்; இன்னா ஜ'அல்னா 'அலா குலூBபிஹிம் அகின்னதன் அ(ன்)ய் யFப்கஹூஹு வ Fபீ ஆதானிஹிம் வக்ரா; வ இன் தத்'உஹும் இலல் ஹுதா Fபல(ன்)ய் யஹ்ததூ இதன் அBபதா
எவன் தன் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு உபதேசிக்கப்பட்டும் அவற்றைப் புறக்கணித்துத் தன்னிரு கரங்களும் செய்த குற்றங்களை மறந்து விடுகிறானோ அவனை விடப் பெரிய அக்கிரமக்காரன் எவன் இருக்கின்றான்? நிச்சயமாக நாம் அவர்களுடைய இருதயங்களின் மீது, இதை விளங்கிக் கொள்ளாதவாறு திரைகளையும், அவர்களுடைய செவிகளில் செவிட்டுத்தனத்தையும் ஏற்படுத்தியிருக்கிறோம்; ஆதலால் நீர் அவர்களை நேர்வழியின் பால் அழைத்தாலும், அவர்கள் ஒரு போதும் நேர்வழியடைய மாட்டார்கள்.
وَرَبُّكَ الْغَفُوْرُ ذُو الرَّحْمَةِ ؕ لَوْ یُؤَاخِذُهُمْ بِمَا كَسَبُوْا لَعَجَّلَ لَهُمُ الْعَذَابَ ؕ بَلْ لَّهُمْ مَّوْعِدٌ لَّنْ یَّجِدُوْا مِنْ دُوْنِهٖ مَوْىِٕلًا ۟
وَرَبُّكَஉம் இறைவன்الْغَفُوْرُமகா மன்னிப்பாளன்ذُوْ الرَّحْمَةِ‌ ؕகருணையுடையவன்لَوْ يُؤَاخِذُهُمْபிடித்தால் / அவர்களைبِمَا كَسَبُوْاஅவர்கள் செய்தவற்றுக்காகلَعَجَّلَதீவிரப்படுத்தியிருப்பான்لَهُمُஅவர்களுக்குالْعَذَابَ‌ ؕவேதனையைبَلْமாறாகلَّهُمْஅவர்களுக்குمَّوْعِدٌவாக்களிக்கப்பட்ட ஒரு நேரம்لَّنْ يَّجِدُوْاபெறவே மாட்டார்கள்مِنْ دُوْنِهٖஅதிலிருந்துمَوْٮِٕلًا‏ஒதுங்குமிடத்தை
வ ரBப்Bபுகல் கFபூரு துர் ரஹ்மதி லவ் யு'ஆகி துஹும் Bபிமா கஸBபூ ல'அஜல லஹுமுல் 'அதாBப்; Bபல் லஹும் மவ்'இதுல் ல(ன்)ய் யஜிதூ மின் தூனிஹீ மவ்'இலா
(நபியே!) உம் இறைவன் மிகப்பிழை பொறுப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்; அவர்கள் சம்பாதித்த (தீவினைகளைக்) கொண்டு, (உடனுக்குடன்) அவர்களைப் பிடிப்பதாக இருந்தால், நிச்சயமாக அவர்களுக்கு வேதனையை தீவிரமாக்கியிருப்பான்; ஆனால் அவர்களுக்கு ஒரு (குறிப்பிட்ட) தவணை உண்டு; அப்போது அவனையன்றி புகலிடத்தைக் காணவே மாட்டார்கள்.
وَتِلْكَ الْقُرٰۤی اَهْلَكْنٰهُمْ لَمَّا ظَلَمُوْا وَجَعَلْنَا لِمَهْلِكِهِمْ مَّوْعِدًا ۟۠
وَتِلْكَஅந்தالْقُرٰٓىஊர்கள்اَهْلَكْنٰهُمْஅழித்தோம்/அவர்களைلَمَّا ظَلَمُوْاஅவர்கள் தீங்கிழைத்தபோதுوَجَعَلْنَاஇன்னும் ஆக்கினோம்لِمَهْلِكِهِمْஅவர்கள் அழிவதற்குمَّوْعِدًا‏ஒரு தவணையை
வ தில்கல் குரா அஹ்லக் னஹும் லம்மா ளலமூ வ ஜ'அல்னா லிமஹ்லிகிஹிம் மவ்'இதா
மேலும் அவ்வூர்வாசிகளை, அவர்கள் அக்கிரமம் செய்த போது நாம் அழித்தோம் - ஏனெனில் அவர்களை அழிப்பதற்கு(க் குறிப்பிட்ட) தவணையை நாம் ஏற்படுத்தியிருந்தோம்.
وَاِذْ قَالَ مُوْسٰی لِفَتٰىهُ لَاۤ اَبْرَحُ حَتّٰۤی اَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَیْنِ اَوْ اَمْضِیَ حُقُبًا ۟
وَاِذْசமயம்قَالَகூறினார்مُوْسٰىமூஸாلِفَتٰٮهُதன் வாலிபரை நோக்கிلَاۤ اَبْرَحُசென்று கொண்டே இருப்பேன்حَتّٰۤىவரைاَبْلُغَஅடைவேன்مَجْمَعَஇணைகின்ற இடத்தைالْبَحْرَيْنِஇரு கடல்களும்اَوْஅல்லதுاَمْضِىَநடந்து கொண்டே இருப்பேன்حُقُبًا‏நீண்டதொரு காலம்
வ இத் காலா மூஸா லிFபதாஹு லா அBப்ரஹு ஹத்தா அBப்லுக மஜ்ம'அல் Bபஹ்ரய்னி அவ் அம்ளிய ஹுகுBபா
இன்னும் மூஸா தம் பணியாளிடம், “இரு கடல்களும் சேரும் இடத்தை அடையும் வரை நீங்காது நடப்பேன்; அல்லது வருடக் கணக்கில் நான் போய்க்கொண்டிருப்பேன்” என்று கூறியதை நீர் நினைவு படுத்துவீராக.
فَلَمَّا بَلَغَا مَجْمَعَ بَیْنِهِمَا نَسِیَا حُوْتَهُمَا فَاتَّخَذَ سَبِیْلَهٗ فِی الْبَحْرِ سَرَبًا ۟
فَلَمَّا بَلَغَاஅவ்விருவரும் அடைந்தபோதுمَجْمَعَஇணையும் இடத்தைبَيْنِهِمَاஅவ்விரண்டும்نَسِيَاஇருவரும் மறந்தனர்حُوْتَهُمَاதங்கள் மீனைفَاتَّخَذَஆக்கிக்கொண்டதுسَبِيْلَهٗ فِى الْبَحْرِதன் வழியை/கடலில்سَرَبًا‏சுரங்கம் போல்
Fபலம்மா Bபலகா மஜ்ம'அ Bபய்னிஹிமா னஸியா ஹூதஹுமா Fபத்தகத ஸBபீலஹூ Fபில் Bபஹ்ரி ஸரBபா
அவர்கள் இருவரும் அவ்விரண்டு (கடல்களு)க்கும் இடையே ஒன்று சேரும் இடத்தை அடைந்த போது; அவ்விருவருடைய மீனை அவ்விருவரும் மறந்து விட்டனர்; அது கடலில் தன்னுடைய வழியைச் சுரங்கம் போல் அமைத்துக்கொண்டு (நீந்திப் போய்) விட்டது.
فَلَمَّا جَاوَزَا قَالَ لِفَتٰىهُ اٰتِنَا غَدَآءَنَا ؗ لَقَدْ لَقِیْنَا مِنْ سَفَرِنَا هٰذَا نَصَبًا ۟
فَلَمَّا جَاوَزَاஅவ்விருவரும் கடந்தபோதுقَالَகூறினார்لِفَتٰٮهُதன் வாலிபரை நோக்கிاٰتِنَاகொண்டுவா/நம்மிடம்غَدَآءَنَاஉணவை/நம்لَقَدْதிட்டவட்டமாகلَقِيْنَاசந்தித்தோம்مِنْ سَفَرِنَاநம் பயணத்தில்هٰذَاஇந்தنَصَبًا‏களைப்பை
Fபலம்மா ஜாவZஜா கால லிFபதாஹு ஆதினா கதா'அனா லகத் லகீன மின் ஸFபரினா ஹாதா னஸBபா
அவ்விருவரும், அப்புறம் அந்த இடத்தைக் கடந்த போது, தம் பணியாளை நோக்கி, “நம்முடைய காலை ஆகாரத்தைக் கொண்டுவா; இந்த நம் பிரயாணத்தில் நிச்சயமாக நாம் களைப்பைச் சந்திக்கிறோம்” என்று (மூஸா) கூறினார்.
قَالَ اَرَءَیْتَ اِذْ اَوَیْنَاۤ اِلَی الصَّخْرَةِ فَاِنِّیْ نَسِیْتُ الْحُوْتَ ؗ وَمَاۤ اَنْسٰىنِیْهُ اِلَّا الشَّیْطٰنُ اَنْ اَذْكُرَهٗ ۚ وَاتَّخَذَ سَبِیْلَهٗ فِی الْبَحْرِ ۖۗ عَجَبًا ۟
قَالَகூறினார்اَرَءَيْتَநீர் பார்த்தீரா?اِذْ اَوَيْنَاۤநாம் ஒதுங்கியபோதுاِلَىஅருகில்الصَّخْرَةِஅந்த கற்பாறைفَاِنِّىْநிச்சயமாக நான்نَسِيْتُமறந்தேன்الْحُوْتَமீனைوَ مَاۤ اَنْسٰٮنِيْهُமறக்கடிக்கவில்லை/எனக்குاِلَّا الشَّيْطٰنُஷைத்தானைத் தவிரاَنْ اَذْكُرَهٗ‌ ۚநான்கூறுவதை/அதைوَاتَّخَذَஇன்னும் ஆக்கிக் கொண்டதுسَبِيْلَهٗதன் வழியைفِىْ الْبَحْرِகடலில்ۖ عَجَبًا‏ஆச்சரியமான
கால அர'அய்த இத் அவய்னா இலஸ் ஸக்ரதி Fப இன்னீ னஸீதுல் ஹூத வ மா அன்ஸானீஹு இல்லஷ் ஷய்தானு அன் அத்குரஹ்; வத்தகத ஸBபீலஹூ Fபில் Bபஹ்ரி'அஜBபா
அதற்கு “அக்கற்பாறையில் நாம் தங்கிய சமயத்தில் நீங்கள் பார்த்தீர்களா? நிச்சயமாக நான் மீனை மறந்து விட்டேன்.” மேலும், அதை (உங்களிடம்) சொல்வதை ஷைத்தானையன்றி (வேறு எவனும்) என்னை மறக்கடிக்கவில்லை; மேலும் அது கடலுக்குள் தன் வழியை ஆச்சரியமாக அமைத்துக் கொண்டது!” என்று பணியாள் கூறினார்.
قَالَ ذٰلِكَ مَا كُنَّا نَبْغِ ۖۗ فَارْتَدَّا عَلٰۤی اٰثَارِهِمَا قَصَصًا ۟ۙ
قَالَகூறினார்ذٰ لِكَஅதுதான்مَاஎதுكُنَّاஇருந்தோம்نَبْغِதேடுவோம்ۖ  فَارْتَدَّاஅவ்விருவரும் திரும்பினார்கள்عَلٰٓى اٰثَارِهِمَاதங்கள் சுவடுகள் மீதேقَصَصًا ۙ‏பின்பற்றி
கால தாலிக மா குன்னா னBப்கி; Fபர்தத்தா 'அலா ஆதாரி ஹிம் மா கஸஸா
(அப்போது) மூஸா, “நாம் தேடிவந்த (இடம் அ)துதான்” என்று கூறி, இருவரும் தம் காலடிச் சுவடுகளைப் பின்பற்றி (வந்தவழியே) திரும்பிச் சென்றார்கள்.
فَوَجَدَا عَبْدًا مِّنْ عِبَادِنَاۤ اٰتَیْنٰهُ رَحْمَةً مِّنْ عِنْدِنَا وَعَلَّمْنٰهُ مِنْ لَّدُنَّا عِلْمًا ۟
فَوَجَدَاஅவ்விருவரும் கண்டார்கள்عَبْدًاஓர் அடியாரைمِّنْ عِبَادِنَاۤநமது அடியார்களில்اٰتَيْنٰهُகொடுத்திருந்தோம்/அவருக்குرَحْمَةًகருணையைمِّنْ عِنْدِنَاநம்மிடமிருந்துوَعَلَّمْنٰهُஇன்னும் /கற்பித்திருந்தோம்/அவருக்குمِنْ لَّدُنَّاநம் புறத்திலிருந்துعِلْمًا‏ஞானத்தை
Fப வஜதா 'அBப்தம் மின் 'இBபாதினா ஆதய்னாஹு ரஹ்மதம் மின் 'இன்தினா வ 'அல்லம்னாஹு மில் லதுன்னா 'இல்மா
(இவ்வாறு) அவ்விருவரும் நம் அடியார்களில் ஒருவரைக் கண்டார்கள்; நாம் அவருக்கு நம்மிடமிருந்து கிருபை அருளியிருந்தோம்; இன்னும் நாம் அவருக்கு நம்மிடமிருந்து கல்வி ஞானத்தையும் கற்றுக் கொடுத்திருந்தோம்.
قَالَ لَهٗ مُوْسٰی هَلْ اَتَّبِعُكَ عَلٰۤی اَنْ تُعَلِّمَنِ مِمَّا عُلِّمْتَ رُشْدًا ۟
قَالَகூறினார்لَهٗஅவரை நோக்கிمُوْسٰىமூஸாهَلْ?اَتَّبِعُكَபின்தொடர்வேன்/உம்மைعَلٰٓى اَنْ تُعَلِّمَنِநீர் எனக்கு கற்பிப்பதற்காகمِمَّا عُلِّمْتَநீர் கற்பிக்கப்பட்டதிலிருந்துرُشْدًا‏நல்லறிவை
கால லஹூ மூஸா ஹல் அத்தBபி'உக 'அலா அன் து'அல்லிமனி மிம்மா 'உல்லிம்த ருஷ்தா
“உங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட நன்மையானவற்றை நீங்கள் எனக்குக் கற்பிக்கும் பொருட்டு, உங்களை நான் பின் தொடரட்டுமா? என்று அவரிடம் மூஸா கேட்டார்.
قَالَ اِنَّكَ لَنْ تَسْتَطِیْعَ مَعِیَ صَبْرًا ۟
قَالَகூறினார்اِنَّكَநிச்சயமாக நீர்لَنْ تَسْتَطِيْعَஇயலவே மாட்டீர்مَعِىَஎன்னுடன்صَبْرًا‏பொறுத்திருக்க
காலா இன்னக லன் தஸ்ததீ'அ ம'இய ஸBப்ரா
(அதற்கவர்,) “நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையாக இருக்க இயலமாட்டீர்!” என்று கூறினார்.
وَكَیْفَ تَصْبِرُ عَلٰی مَا لَمْ تُحِطْ بِهٖ خُبْرًا ۟
وَكَيْفَஎப்படிتَصْبِرُபொறு(த்திரு)ப்பீர்عَلٰىமீதுمَاஎதைلَمْ تُحِطْநீர் சூழ்ந்தறியவில்லையோبِهٖஅதைخُبْرًا‏ஆழமாக அறிதல்
வ கய்Fப தஸ்Bபிரு 'அலா மா லம் துஹித் Bபிஹீ குBப்ரா
“(ஏனெனில்) எதைப் பற்றி உமக்கு முழுமையான ஞானம் இல்லையோ, அதில் நீர் எவ்வாறு பொறுமையாயிருப்பீர்!” (என்று கேட்டார்.)
قَالَ سَتَجِدُنِیْۤ اِنْ شَآءَ اللّٰهُ صَابِرًا وَّلَاۤ اَعْصِیْ لَكَ اَمْرًا ۟
قَالَகூறினார்سَتَجِدُنِىْۤகாண்பீர்/என்னைاِنْ شَآءَநாடினால்اللّٰهُஅல்லாஹ்صَابِرًاபொறுமையாளனாகوَّلَاۤ اَعْصِىْஇன்னும் மாறுசெய்யமாட்டேன்لَكَஉமக்குاَمْرًا‏எந்த ஒரு காரியத்திலும்
கால ஸதஜிதுனீ இன் ஷா 'அல் லாஹு ஸாBபிர(ன்)வ் வ லா அஃஸீ லக அம்ரா
(அதற்கு) மூஸா, “இன்ஷா அல்லாஹ்! நான் பொறுமையுள்ளவனாகவும், எவ்விஷயத்திலும் உமக்கு மாறு செய்யாதவனாகவும் நான் இருப்பதை நீங்கள் விரைவில் காண்பீர்கள்” என்று (மூஸா) சொன்னார்.
قَالَ فَاِنِ اتَّبَعْتَنِیْ فَلَا تَسْـَٔلْنِیْ عَنْ شَیْءٍ حَتّٰۤی اُحْدِثَ لَكَ مِنْهُ ذِكْرًا ۟۠
قَالَகூறினார்فَاِنِ اتَّبَعْتَنِىْநீர் பின்தொடர்ந்தால் / என்னைفَلَاகேட்காதீர்تَسْــٴَــلْنِىْஎன்னிடம்عَنْ شَىْءٍஎந்த ஒரு விஷயத்தைப் பற்றிحَتّٰٓىவரைاُحْدِثَஆரம்பிக்கும்لَـكَஉமக்குمِنْهُஅதில்ذِكْرًا‏விளக்கத்தை
கால Fப இனித் தBபஃதனீ Fபலா தஸ்'அல்னீ 'அன் ஷய்'இன் ஹத்தா உஹ்தித லக மின்ஹு திக்ரா
(அதற்கு அவர்) “நீர் என்னைப்பின் தொடர்வதாயின், எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் - நானாகவே அதைப்பற்றி உமக்கு அறிவிக்கும் வரை - நீர் என்னிடம் கேட்கக் கூடாது” என்று சொன்னார்.
فَانْطَلَقَا ۥ حَتّٰۤی اِذَا رَكِبَا فِی السَّفِیْنَةِ خَرَقَهَا ؕ قَالَ اَخَرَقْتَهَا لِتُغْرِقَ اَهْلَهَا ۚ لَقَدْ جِئْتَ شَیْـًٔا اِمْرًا ۟
فَانْطَلَقَاஆகவே, இருவரும் சென்றனர்حَتّٰۤىஇறுதியாகاِذَا رَكِبَاஇருவரும் பயணித்தபோதுفِى السَّفِيْنَةِகப்பலில்خَرَقَهَا‌ஓட்டையாக்கினார்قَالَகூறினார்اَخَرَقْتَهَاஅதை ஓட்டையாக்கினீரா?لِتُغْرِقَநீர் மூழ்கடிக்கاَهْلَهَا‌ ۚஇதில் உள்ளவர்களைلَقَدْதிட்டவட்டமாகجِئْتَசெய்தீர்شَيْــٴًـــاகாரியத்தைاِمْرًا‏மிக கெட்டது
Fபன்தலகா ஹத்தா இதா ரகிBபா Fபிஸ் ஸFபீனதி கரகஹா கால அகரக்தஹா லிதுக்ரிக அஹ்லஹா லகத் ஜி'த ஷய்'அன் இம்ரா
பின்னர் இருவரும் ஒரு மரக்கலத்தில் ஏறும் வரையில் நடந்து சென்றனர், (மரக்கலம் கடலில் செல்லலானதும்;) அவர் அதில் ஓர் ஓட்டையைப் போட்டார்; “இதிலுள்ளவர்களை மூழ்கடிக்கவா நீங்கள் இதில் ஓர் ஓட்டையைப் போட்டீர்கள்? நிச்சயமாக நீங்கள் ஓர் (அபாயகரமான) பெருங் காரியத்தைச் செய்துவிட்டீர்கள்” என்று (மூஸா) கூறினார்.
قَالَ اَلَمْ اَقُلْ اِنَّكَ لَنْ تَسْتَطِیْعَ مَعِیَ صَبْرًا ۟
قَالَகூறினார்اَلَمْ اَقُلْநான் கூறவில்லையா?اِنَّكَநிச்சயமாக நீர்لَنْ تَسْتَطِيْعَஇயலவே மாட்டீர்مَعِىَஎன்னுடன்صَبْرًا‏பொறுப்பதற்கு
கால அலம் அகுல் இன்னக லன் தஸ்ததீ'அ ம'இய ஸBப்ரா
(அதற்கு அவர்,) “நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையைக் கடைப்பிடிக்க முடியாது என்று உமக்கு நான் சொல்லவில்லையா? என்றார்.
قَالَ لَا تُؤَاخِذْنِیْ بِمَا نَسِیْتُ وَلَا تُرْهِقْنِیْ مِنْ اَمْرِیْ عُسْرًا ۟
قَالَகூறினார்لَا تُؤَاخِذْنِىْகுற்றம் பிடிக்காதீர் / என்னைبِمَا نَسِيْتُநான் மறந்ததினால்وَلَا تُرْهِقْنِىْஇன்னும் என்னை கட்டாயப்படுத்தாதீர்مِنْ اَمْرِىْஎன் காரியத்தில்عُسْرًا‏சிரமத்திற்கு
கால லா து'ஆகித்னீ Bபிமா னஸீது வலா துர்ஹிக்னீ மின் அம்ரீ 'உஸ்ரா
“நான் மறந்து விட்டதைப் பற்றி நீங்கள் என்னை(க் குற்றம்) பிடிக்க வேண்டாம்; இன்னும் என் காரியத்தைச் சிரமமுடையதாக ஆக்கி விடாதீர்கள்” என்று (மூஸா) கூறினார்.
فَانْطَلَقَا ۥ حَتّٰۤی اِذَا لَقِیَا غُلٰمًا فَقَتَلَهٗ ۙ قَالَ اَقَتَلْتَ نَفْسًا زَكِیَّةً بِغَیْرِ نَفْسٍ ؕ لَقَدْ جِئْتَ شَیْـًٔا نُّكْرًا ۟
فَانْطَلَقَاஆகவே, இருவரும் சென்றனர்حَتّٰۤىஇறுதியாகاِذَا لَقِيَاஇருவரும் சந்தித்தபோதுغُلٰمًاஒரு சிறுவனைفَقَتَلَهٗ ۙகொன்றார் / அவனைقَالَகூறினார்اَقَتَلْتَகொன்றீரா?نَـفْسًاஓர் உயிரைزَكِيَّةً ۢபரிசுத்தமானதுبِغَيْرِ نَـفْسٍ ؕஓர் உயிரைக் கொன்ற குற்றமின்றிلَـقَدْதிட்டவட்டமாகجِئْتَசெய்தீர்شَيْــٴًـــاசெயலைنُّـكْرًا‏மகா கொடியது
Fபன்தலகா ஹத்தா இதா லகியா குலாமன் Fபகதலஹூ கால அகதல்த னFப்ஸன் Zஜகிய் யதம் Bபிகய்ரி னFப்ஸ்; லகத் ஜி'த ஷய்'அன் னுக்ரா
பின்னர் (மரக்கலத்திலிருந்து இறங்கி) இருவரும் வழி நடக்கலானார்கள்; (வழியில்) ஒரு பையனை அவ்விருவரும் சந்தித்த போது, அவர் அவனைக் கொன்று விட்டார். (உடனே மூஸா) “கொலைக்குற்றமின்றி, பரிசுத்தமான ஜீவனைக் கொன்றுவிட்டீர்களே? நிச்சயமாக நீங்கள் பெருத்தக் கேடான ஒருகாரியத்தையே செய்து விட்டீர்கள்!” என்று (மூஸா) கூறினார்.
قَالَ اَلَمْ اَقُلْ لَّكَ اِنَّكَ لَنْ تَسْتَطِیْعَ مَعِیَ صَبْرًا ۟
قَالَகூறினார்اَ لَمْ اَ قُلْநான் கூறவில்லையா?لَّكَஉமக்குاِنَّكَநிச்சயமாக நீர்لَنْ تَسْتَطِيْعَஇயலவே மாட்டீர்مَعِىَஎன்னுடன்صَبْرًا‏பொறுப்பதற்கு
கால அலம் அகுல் லக இன்னக லன் தஸ்ததீ'அ ம'இய ஸBப்ரா
(அதற்கு அவர்) “நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையாக இருக்க இயலாது என்று உமக்கு நாம் சொல்லவில்லையா?” என்று கூறினார்.
قَالَ اِنْ سَاَلْتُكَ عَنْ شَیْءٍ بَعْدَهَا فَلَا تُصٰحِبْنِیْ ۚ قَدْ بَلَغْتَ مِنْ لَّدُنِّیْ عُذْرًا ۟
قَالَகூறினார்اِنْ سَاَ لْـتُكَகேட்டால்/உம்மிடம்عَنْ شَىْءٍۢஒரு விஷயத்தைப் பற்றிبَعْدَهَاஇதன் பின்னர்فَلَا تُصٰحِبْنِىْ‌ ۚசேர்க்காதீர்/என்னைقَدْ بَلَـغْتَதிட்டமாக அடைந்தீர்مِنْ لَّدُنِّىْஎன்னிடம்عُذْرًا‏ஒரு காரணத்தை
கால இன் ஸ அல்துக 'அன் ஷய்'இம் Bபஃதஹா Fபலா துஸாஹிBப்னீ கத் Bபலக்த மில் லதுன்னீ 'உத்ரா
இதன் பின்னர் நான் எந்த விஷயத்தைப் பற்றியாவது உங்களிடம் கேட்பேனாயின் நீங்கள் உங்கள் தோழனாக வைத்துக் கொள்ள வேண்டாம் - நிச்சயமாக நீங்கள் என்னிடமிருந்து தக்க மன்னிப்புக் கோருதலைப் பெற்றுக் கொண்டீர்கள்” என்று கூறினார்.
فَانْطَلَقَا ۥ حَتّٰۤی اِذَاۤ اَتَیَاۤ اَهْلَ قَرْیَةِ سْتَطْعَمَاۤ اَهْلَهَا فَاَبَوْا اَنْ یُّضَیِّفُوْهُمَا فَوَجَدَا فِیْهَا جِدَارًا یُّرِیْدُ اَنْ یَّنْقَضَّ فَاَقَامَهٗ ؕ قَالَ لَوْ شِئْتَ لَتَّخَذْتَ عَلَیْهِ اَجْرًا ۟
فَانْطَلَقَاஆகவே, இருவரும் சென்றனர்حَتّٰۤىஇறுதியாகاِذَاۤ اَتَيَاۤஅவ்விருவரும்வரவேاَهْلَ قَرْيَةِஓர் ஊராரிடம்ۨاسْتَطْعَمَاۤஅவ்விருவரும் உணவு கேட்டார்கள்اَهْلَهَاஅவ்வூராரிடம்فَاَبَوْاஅவர்கள் மறுத்தனர்اَنْ يُّضَيِّفُوْஅவர்கள் விருந்தளிக்கهُمَاஅவ்விருவருக்கும்فَوَجَدَاஅவ்விருவரும் கண்டனர்فِيْهَاஅங்குجِدَارًاஒரு சுவற்றைيُّرِيْدُ اَنْ يَّـنْقَضَّவிழ இருக்கும்فَاَقَامَهٗ‌ ؕஅவர் நிறுத்தினார் / அதைقَالَகூறினார்لَوْ شِئْتَநீ நாடியிருந்தால்لَـتَّخَذْتَஎடுத்திருக்கலாமேعَلَيْهِஅதற்காகاَجْرًا‏ஒரு கூலியை
Fபன்தலகா ஹத்தா இதா அதயா அஹ்ல கர்யதினிஸ் தத்'அமா அஹ்லஹா Fப அBபவ் அ(ன்)ய் யுளய்யிFபூஹுமா Fபவஜதா Fபீஹா ஜிதார(ன்)ய் யுரீது அ(ன்)ய் யன்கள்ள Fப அகாமஹ்; கால லவ் ஷி'த லத்தகத்த 'அலய்ஹி அஜ்ரா
பின்னர் அவ்விருவரும் வழி நடந்து, இருவரும் ஒரு கிராமத்தாரிடம் வந்து சேர்ந்தார்கள்; தங்களிருவருக்கும் உணவு தருமாறு அந்த கிராமத்தாரிடம் கேட்டார்கள்; ஆனால் அவ்விருவருக்கும் விருந்தளிக்க அவர்கள் மறுத்து விட்டார்கள்; அப்போது அங்கே இடிந்து அடியோடு விழும் நிலையிலிருந்த ஒரு சுவரை அவ்விருவரும் கண்டனர்; ஆகவே, அவர் (சரிசெய்து) நிமிர்த்து வைத்தார். (இதைக் கண்ட மூஸா) “நீங்கள் நாடியிருந்தால் இதற்கென ஒரு கூலியை பெற்றிருக்கலாமே” என்று (மூஸா) கூறினார்.
قَالَ هٰذَا فِرَاقُ بَیْنِیْ وَبَیْنِكَ ۚ سَاُنَبِّئُكَ بِتَاْوِیْلِ مَا لَمْ تَسْتَطِعْ عَّلَیْهِ صَبْرًا ۟
قَالَகூறினார்هٰذَاஇதுவேفِرَاقُபிரிவினைبَيْنِىْஎனக்கிடையில்وَبَيْنِكَ‌ ۚஇன்னும் உமக்கிடையில்سَاُنَـبِّئُكَஅறிவிப்பேன்/உமக்குبِتَاْوِيْلِவிளக்கத்தைمَا لَمْ تَسْتَطِعْநீர் இயலாதவற்றின்عَّلَيْهِஅதன் மீதுصَبْرًا‏பொறுக்க
கால ஹாதா Fபிராகு Bபய்னீ வ Bபய்னிக்; ஸ உனBப்Bபி'உக Bபி த'வீலி மா லம் தஸ்ததிஃ 'அலய்ஹி ஸBப்ரா
“இது தான் எனக்கும், உமக்குமிடையே பிரிவு(க்குரிய நேரம்) ஆகும்; எதைப் பற்றி நீர் பொறுமையாக இருக்க முடியவில்லையோ, அதன் விளக்கத்தையும் (இப்பொழுதே) உமக்குத் திட்டமாக அறிவித்து விடுகிறேன்” என்று அவர் கூறினார்.
اَمَّا السَّفِیْنَةُ فَكَانَتْ لِمَسٰكِیْنَ یَعْمَلُوْنَ فِی الْبَحْرِ فَاَرَدْتُّ اَنْ اَعِیْبَهَا وَكَانَ وَرَآءَهُمْ مَّلِكٌ یَّاْخُذُ كُلَّ سَفِیْنَةٍ غَصْبًا ۟
اَمَّاஆகالسَّفِيْنَةُஅக்கப்பல்فَكَانَتْஇருக்கிறதுلِمَسٰكِيْنَஏழைகளுக்குيَعْمَلُوْنَவேலை செய்கிறفِى الْبَحْرِகடலில்فَاَرَدْتُّநாடினேன்اَنْநான் குறைபடுத்தاَعِيْبَهَاஅதைوَكَانَஇருக்கிறான்وَرَآءَهُمْஅவர்களுக்கு முன்مَّلِكٌஓர் அரசன்يَّاْخُذُஎடுத்துக்கொள்கிறான்كُلَّஎல்லாம்سَفِيْنَةٍகப்பல்களைغَصْبًا‏அபகரித்து
அம்மஸ் ஸFபீனது Fபகானத் லிமஸாகீன யஃமலூன Fபில் Bபஹ்ரி Fப அரத்து அன் அ'ஈBபஹா வ கான வரா' அஹும் மலிகு(ன்)ய் யாகுது குல்ல ஸFபீனதின் கஸ்Bபா
“அம்மரக்கலம் கடலில் வேலை செய்யும் ஏழைகள் சிலருக்குச் சொந்தமானது; எனவே நான் அதை (ஓட்டையிட்டு)ப் பழுதாக்க விரும்பினேன்; (ஏனெனில்) அவர்களுக்குப் பின்னால் (கொடுங்கோலனான) ஓர் அரசன் இருந்தான்; அவன் (பழுதில்லா) மரக்கலங்களையெல்லாம் பலவந்தமாக எடுத்துக் கொள்கிறான்.
وَاَمَّا الْغُلٰمُ فَكَانَ اَبَوٰهُ مُؤْمِنَیْنِ فَخَشِیْنَاۤ اَنْ یُّرْهِقَهُمَا طُغْیَانًا وَّكُفْرًا ۟ۚ
وَاَمَّا الْغُلٰمُஆக,அந்தச் சிறுவன்فَكَانَஇருக்கிறார்(கள்)اَبَوٰهُஅவனுடைய தாய் தந்தைمُؤْمِنَيْنِநம்பிக்கையாளர்களாகفَخَشِيْنَاۤபயந்தோம்اَنْகட்டாயப்படுத்தி விடுவான் என்றுيُّرْهِقَهُمَاஅவ்விருவரையும்طُغْيَانًاஅட்டூழியம் செய்வதற்குوَّكُفْرًا‌ۚ‏இன்னும் நிராகரிப்பதற்கு
வ ஆம்மல் குலாமு Fபகான அBபவாஹு மு'மினய்னி Fபகஷீனா அ(ன்)ய் யுர்ஹிக ஹுமா துக்யான(ன்)வ் வ குFப்ரா
“(அடுத்து) அந்த சிறுவனுடைய தாய், தந்தையர் இருவரும் முஃமின்களாக இருக்கிறார்கள்; அவன் (வாலிபனாகி) அவ்விருவரையும் வழிகேட்டிலும், குஃப்ரிலும் சேர்த்து விடுவான் என்று நாம் பயந்தோம்.
فَاَرَدْنَاۤ اَنْ یُّبْدِلَهُمَا رَبُّهُمَا خَیْرًا مِّنْهُ زَكٰوةً وَّاَقْرَبَ رُحْمًا ۟
فَاَرَدْنَاۤஆகவே, நாடினோம்اَنْ يُّبْدِகொடுப்பதை / பகரமாகلَهُمَا رَبُّهُمَاஅவ்விருவருக்கும் / அவ்விருவரின் இறைவன்خَيْرًاசிறந்தمِّنْهُஅவனை விடزَكٰوةًபரிசுத்தமானوَّاَقْرَبَஇன்னும் அதிக நெருக்கமானرُحْمًا‏கருணையுடையவரை
Fபரத்னா அ(ன்)ய் யுBப்தில ஹுமா ரBப்Bபுஹுமா கய்ரம் மின்ஹு Zஜகாத(ன்)வ் வ அக்ரBப ருஹ்மா
“இன்னும், அவ்விருவருக்கும், பரிசுத்தத்திலும் (பெற்றோரிடம்) அன்பு செலுத்துவதிலும் சிறந்திருக்க கூடிய (ஒரு மகனை) அவ்விருவருடைய இறைவன் (கொலையுண்டவனுக்குப்) பதிலாக கொடுப்பதை நாம் விரும்பினோம்.
وَاَمَّا الْجِدَارُ فَكَانَ لِغُلٰمَیْنِ یَتِیْمَیْنِ فِی الْمَدِیْنَةِ وَكَانَ تَحْتَهٗ كَنْزٌ لَّهُمَا وَكَانَ اَبُوْهُمَا صَالِحًا ۚ فَاَرَادَ رَبُّكَ اَنْ یَّبْلُغَاۤ اَشُدَّهُمَا وَیَسْتَخْرِجَا كَنْزَهُمَا ۖۗ رَحْمَةً مِّنْ رَّبِّكَ ۚ وَمَا فَعَلْتُهٗ عَنْ اَمْرِیْ ؕ ذٰلِكَ تَاْوِیْلُ مَا لَمْ تَسْطِعْ عَّلَیْهِ صَبْرًا ۟ؕ۠
وَاَمَّاஆகالْجِدَارُசுவரோفَكَانَஇருந்ததுلِغُلٰمَيْنِஇரு குழந்தைகளுக்குيَتِيْمَيْنِஇரு அனாதைகள்فِى الْمَدِيْنَةِபட்டிணத்தில்وَكَانَஇன்னும் இருக்கிறதுتَحْتَهٗஅதற்குக் கீழ்كَنْزٌஒரு புதையல்لَّهُمَاஅவ்விருவருக்குரியوَكَانَஇருந்தார்اَبُوْهُمَاஅவ்விருவரின் தந்தைصَالِحًـا ۚநல்லவராகفَاَرَادَஆகவே நாடினான்رَبُّكَஉம் இறைவன்اَنْ يَّبْلُغَاۤஅவ்விருவரும் அடைந்துاَشُدَّவாலிபத்தைهُمَاஅவ்விருவரின்وَيَسْتَخْرِجَاஇன்னும் அவ்விருவரும் வெளியே எடுத்துக்கொள்வதற்குكَنْزَهُمَاதங்கள் (இருவரின்) புதையலைۖ  رَحْمَةًஅருளினால்مِّنْ رَّبِّكَ‌ ۚஉம் இறைவனின்وَمَاநான் செய்யவில்லைفَعَلْتُهٗஇவற்றைعَنْ اَمْرِىْ‌ ؕஎன் இஷ்டப்படிذٰ لِكَஇதுதான்تَاْوِيْلُவிளக்கம்مَا لَمْ تَسْطِعْஎவை/ நீர் இயலவில்லைعَّلَيْهِஅவற்றின் மீதுصَبْرًا ؕ‏பொறு(த்திரு)ப்பதற்கு
வ அம்மல் ஜிதாரு Fபகான லிகுலாமய்னி யதீமய்னி Fபில் மதீனதி வ கான தஹ்தஹூ கன்Zஜுல் லஹுமா வ கான அBபூஹுமா ஸாலிஹன் Fப அராத ரBப்Bபுக அ(ன்)ய் யBப்லுகா அஷுத்தஹுமா வ யஸ்தக்ரிஜா கன்Zஜஹுமா ரஹ்மதம் மிர் ரBப்Bபிக்; வமா Fப'அல்துஹூ 'அன் அம்ரீ; தாலிக தாவீலு மா லம் தஸ்திஃ 'அலய்ஹி ஸBப்ரா
“இனி: (நான் நிமிர்த்து வைத்த) அந்த சுவர் அந்தப் பட்டிணத்திலுள்ள அநாதைச் சிறுவர் இருவருக்குரியது; அதன் அடியில் அவ்விருவருக்கும் சொந்தமான புதையல் உள்ளது; அவ்விருவருடைய தந்தை (ஸாலிஹான) நல்ல மனிதராக இருந்தார்; எனவே, அவ்விருவரும் தக்க பிராயமடைந்த தம்மிருவரின் புதையலையும் வெளிப்படுத்தி (எடுத்துக்) கொள்ள வேண்டும் என உம்முடைய இறைவன் நாடினான். (இவையெல்லாம்) உம் இறைவனுடைய ரஹ்மத்தில் நின்றும் உள்ளவை; என் விருப்பு, வெறுப்பின்படி எந்தக் காரியத்தையும் செய்யவில்லை; எதைப் பற்றி நீர் பொறுமையாக இருக்க முடியவில்லையோ அதன் விளக்கம் இது தான்” என்று கூறினார்.  
وَیَسْـَٔلُوْنَكَ عَنْ ذِی الْقَرْنَیْنِ ؕ قُلْ سَاَتْلُوْا عَلَیْكُمْ مِّنْهُ ذِكْرًا ۟ؕ
وَيَسْــٴَــلُوْنَكَஇன்னும் /கேட்கின்றனர்/உம்மிடம்عَنْ ذِى الْقَرْنَيْنِ‌ ؕதுல்கர்னைனைப்பற்றிقُلْகூறுவீராகسَاَ تْلُوْاஓதுவேன்عَلَيْكُمْஉங்களுக்குمِّنْهُஅவரைப் பற்றிذِكْرًا ؕ‏நல்லுபதேசத்தை
வ யஸ்'அலூனக 'அன் தில் கர்னய்னி குல் ஸ அத்லூ 'அலய்கும் மின்ஹு திக்ரா
(நபியே!) அவர்கள் துல்கர்னைனை பற்றி உங்களிடம் வினவுகின்றனர்; “அவருடைய வரலாற்றில் சிறிது உங்களுக்கு நான் ஓதிக் காண்பிக்கிறேன்” என்று நீர் கூறுவீராக.
اِنَّا مَكَّنَّا لَهٗ فِی الْاَرْضِ وَاٰتَیْنٰهُ مِنْ كُلِّ شَیْءٍ سَبَبًا ۟ۙ
اِنَّاநிச்சயமாக நாம்مَكَّنَّاஆதிக்கத்தைக் கொடுத்தோம்لَهٗஅவருக்குفِى الْاَرْضِபூமியில்وَاٰتَيْنٰهُஇன்னும் அவருக்குக் கொடுத்தோம்مِنْ كُلِّ شَىْءٍஒவ்வொருபொருளின்سَبَبًا ۙ‏அறிவை
இன்னா மக்கன்னா லஹூ Fபில் அர்ளி வ ஆதய்னாஹு மின் குல்லி ஷய்'இன் ஸBபBபா
நிச்சயமாக நாம் அவருக்கு பூமியில் (தம் ஆட்சியை நிறுவ) வசதிகள் அளித்தோம்; இன்னும் ஒவ்வொரு பொருளிலிருந்தும் (தக்க பலனடையும்) வழியையும் அவருக்குக் (காண்பித்துக்) கொடுத்தோம்.
حَتّٰۤی اِذَا بَلَغَ مَغْرِبَ الشَّمْسِ وَجَدَهَا تَغْرُبُ فِیْ عَیْنٍ حَمِئَةٍ وَّوَجَدَ عِنْدَهَا قَوْمًا ؕ۬ قُلْنَا یٰذَا الْقَرْنَیْنِ اِمَّاۤ اَنْ تُعَذِّبَ وَاِمَّاۤ اَنْ تَتَّخِذَ فِیْهِمْ حُسْنًا ۟
حَتّٰٓىஇறுதியாகاِذَا بَلَغَஅவர் அடைந்தபோதுمَغْرِبَமறையும் இடத்தைالشَّمْسِசூரியன்وَجَدَهَاகண்டார்/அதைتَغْرُبُமறைவதாகفِىْ عَيْنٍகடலில்حَمِئَةٍசேறுوَّوَجَدَகண்டார்عِنْدَهَاஅதனிடத்தில்قَوْمًا ؕசில மக்களைقُلْنَاகூறினோம்يٰذَا الْقَرْنَيْنِதுல்கர்னைனே!اِمَّاۤ اَنْ تُعَذِّبَஒன்று வேதனை செய்வீர்وَاِمَّاۤ اَنْ تَتَّخِذَஅவர்கள் கடைப்பிடிப்பீர்فِيْهِمْஅவர்களில்حُسْنًا‏ஓர் அழகியதை
ஹத்தா இதா Bபலக மக்ரிBபஷ் ஷம்ஸி வஜதஹா தக்ருBபு Fபீ 'அய்னின் ஹமி'அ தி(ன்)வ் வ வஜத 'இன்தஹா கவ்மா; குல்னா யா தல் கர்னய்னி இம்மா அன் து'அத் திBப வ இம்மா அன் தத்தகித Fபீஹிம் ஹுஸ்னா
சூரியன் மறையும் (மேற்குத்) திசைவரை அவர் சென்றடைந்த போது, அது ஒரு சேறு கலந்த நீரில் (மூழ்குவதுபோல்) மறையக் கண்டார்; இன்னும் அவர் அவ்விடத்தில் ஒரு சமூகத்தினரையும் கண்டார்; “துல்கர்னைனே! நீர் இவர்களை(த் தண்டித்து) வேதனை செய்யலாம்; அல்லது அவர்களுக்கு அழகியதான நன்மை செய்யலாம்” என்று நாம் கூறினோம்.
قَالَ اَمَّا مَنْ ظَلَمَ فَسَوْفَ نُعَذِّبُهٗ ثُمَّ یُرَدُّ اِلٰی رَبِّهٖ فَیُعَذِّبُهٗ عَذَابًا نُّكْرًا ۟
قَالَகூறினார்اَمَّاஆகவேمَنْஎவன்ظَلَمَஅநியாயம் செய்தானோفَسَوْفَ نُعَذِّبُهٗவேதனை செய்வோம் / அவனைثُمَّபிறகுيُرَدُّதிருப்பப்படுவான்اِلٰى رَبِّهٖதன் இறைவனிடம்فَيُعَذِّبُهٗவேதனை செய்வான்/அவனைعَذَابًاவேதனைنُّكْرًا‏கொடியது
கால அம்ம மன் ளலம Fபஸவ்Fப னு'அத்திBபுஹூ தும்ம யுரத்து இலா ரBப்Bபிஹீ Fப யு 'அத்திBபுஹூ அதாBபன் னுக்ரா
(ஆகவே அம்மக்களிடம் அவர்) கூறினார்: “எவன் ஒருவன் அநியாயம் செய்கிறானோ அவனை நாம் வேதனை செய்வோம்.” பின்னர் அ(த்தகைய)வன் தன் இறைவனிடத்தில் மீள்விக்கப்பட்டு, (இறைவனும்) அவனைக் கடுமையான வேதனையைக் கொண்டு வேதனை செய்வான்.
وَاَمَّا مَنْ اٰمَنَ وَعَمِلَ صَالِحًا فَلَهٗ جَزَآءَ لْحُسْنٰی ۚ وَسَنَقُوْلُ لَهٗ مِنْ اَمْرِنَا یُسْرًا ۟ؕ
وَاَمَّاஆகவேمَنْஎவர்اٰمَنَநம்பிக்கை கொண்டார்وَعَمِلَஇன்னும் செய்தனர்صَالِحًـاநற்செயலைفَلَهٗஅவருக்கு இருக்கிறதுجَزَآءَகூலிۨالْحُسْنٰى‌ ۚஅழகியوَسَنَقُوْلُஇன்னும் கூறுவோம்لَهٗஅவருக்குمِنْ اَمْرِنَاநம் காரியத்தில்يُسْرًا ؕ‏இலகுவானதை
வ அம்மா மன் ஆமன வ 'அமில ஸாலிஹன் Fபலஹூ ஜZஜா'அனில் ஹுஸ்னா வ ஸனகூலு லஹூ மின் அம்ரினா யுஸ்ரா
ஆனால், எவன் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நல்ல - செயல்களைச் செய்கிறானோ அவனுக்கு அழகான நற்கூலி இருக்கிறது; இன்னும் நம்முடைய கட்டளைகளில் இலகுவானதை அவனுக்கு நாம் கூறுவோம்.
ثُمَّ اَتْبَعَ سَبَبًا ۟
ثُمَّபிறகுاَتْبَعَபின்தொடர்ந்தார்سَبَبًا‏ஒரு வழி
தும்ம அத்Bப'அ ஸBபBபா
பின்னர், அவர் (மற்றும்) ஒரு வழியைப் பின்பற்றிச் சென்றார்.
حَتّٰۤی اِذَا بَلَغَ مَطْلِعَ الشَّمْسِ وَجَدَهَا تَطْلُعُ عَلٰی قَوْمٍ لَّمْ نَجْعَلْ لَّهُمْ مِّنْ دُوْنِهَا سِتْرًا ۟ۙ
حَتّٰٓىஇறுதியாகاِذَابَلَغَஅவர் அடைந்தபோதுمَطْلِعَஉதிக்குமிடத்தைالشَّمْسِசூரியன்وَجَدَهَاகண்டார்/அதைتَطْلُعُஉதிப்பதாகعَلٰىமீதுقَوْمٍஒரு சமுதாயம்لَّمْ نَجْعَلْநாம் ஆக்கவில்லைلَّهُمْஅவர்களுக்குمِّنْ دُوْنِهَاஅதற்கு முன்னாலிருந்துسِتْرًا ۙ‏ஒரு தடுப்பை
ஹத்தா இதா Bபலக மத்லி'அஷ் ஷம்ஸி வஜ்தஹா தத்லு'உ அலா கவ்மில் லம் னஜ்'அல் லஹும் மின் தூனிஹா ஸித்ரா
அவர் சூரியன் உதயமாகும் (கிழக்குத்) திசையை எத்திய போது, அது ஒரு சமூகத்தாரின் மீது உதயமாகி (அவர்கள் வெயிலில்) இருப்பதைக் கண்டார்; அவர்களுக்கும் சூரியனுக்குமிடையே நாம் ஒரு தடுப்பையும் ஏற்படுத்தவில்லை.
كَذٰلِكَ ؕ وَقَدْ اَحَطْنَا بِمَا لَدَیْهِ خُبْرًا ۟
كَذٰلِكَؕஅப்படித்தான்وَقَدْதிட்டமாகاَحَطْنَاசூழ்ந்தறிவோம்بِمَا لَدَيْهِஅதனிடத்தில் இருந்தவற்றைخُبْرًا‏ஆழமாக
கதாலிக வ கத் அஹத்னா Bபிமா லதய்ஹி குBப்ரா
(வெப்பத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்ளாத அவர்களுடைய நிலை) அவ்வாறுதான் இருந்தது; இன்னும் என்னென்ன அவருடன் இருந்தது என்பதை நாம் நன்கறிந்திருக்கிறோம்.
ثُمَّ اَتْبَعَ سَبَبًا ۟
ثُمَّபிறகுاَتْبَعَபின்தொடர்ந்தார்سَبَبًا‏ஒரு வழியை
தும்ம அத்Bப'அ ஸBபBபா
பின்னர், அவர் (வேறொரு) வழியைப் பின்பற்றிச் சென்றார்.
حَتّٰۤی اِذَا بَلَغَ بَیْنَ السَّدَّیْنِ وَجَدَ مِنْ دُوْنِهِمَا قَوْمًا ۙ لَّا یَكَادُوْنَ یَفْقَهُوْنَ قَوْلًا ۟
حَتّٰٓىஇறுதியாகاِذَا بَلَغَஅவர் அடைந்தபோதுبَيْنَஇடையில்السَّدَّيْنِஇரு மலைகள்وَجَدَகண்டார்مِنْ دُوْنِهِمَاஅவ்விரண்டிற்கும் முன்னால்قَوْمًا ۙஒரு சமுதாயத்தைلَّا يَكَادُوْنَ يَفْقَهُوْنَஅவர்கள் எளிதில் விளங்க(முடியா)துقَوْلًا‏பேச்சை
ஹத்தா இதா Bபலக Bபய்னஸ் ஸத்தய்னி வஜத மின் தூனிஹிமா கவ்மல் லா யகா தூன யFப்கஹூன கவ்லா
இரு மலைகளுக்கிடையே (இருந்த ஓரிடத்தை) அவர் எத்தியபோது, அவ்விரண்டிற்கும் அப்பால் இருந்த ஒரு சமூகத்தாரைக் கண்டார். அவர்கள் எந்தச் சொல்லையும் விளங்கிக் கொள்பவராக இருக்கவில்லை;
قَالُوْا یٰذَا الْقَرْنَیْنِ اِنَّ یَاْجُوْجَ وَمَاْجُوْجَ مُفْسِدُوْنَ فِی الْاَرْضِ فَهَلْ نَجْعَلُ لَكَ خَرْجًا عَلٰۤی اَنْ تَجْعَلَ بَیْنَنَا وَبَیْنَهُمْ سَدًّا ۟
قَالُوْاஅவர்கள் கூறினார்கள்يٰذَا الْقَرْنَيْنِதுல்கர்னைனே!اِنَّநிச்சயமாகيَاْجُوْجَயஃஜூஜ்وَمَاْجُوْجَஇன்னும் மஃஜூஜ்مُفْسِدُوْنَவிஷமம் செய்கிறார்கள்فِى الْاَرْضِபூமியில்فَهَلْ نَجْعَلُநாங்கள் ஆக்கட்டுமா?لَكَஉமக்குخَرْجًاஒரு தொகையைعَلٰٓى اَنْ تَجْعَلَநீர்ஏற்படுத்துவதற்காகبَيْنَـنَاஎங்களுக்கிடையில்وَبَيْنَهُمْஇன்னும் அவர்களுக்கு இடையில்سَدًّا‏ஒரு தடையை
காலூ யா தல் கர்னய்னி இன்ன ய'ஜூஜ வ ம'ஜூஜ முFப்ஸிதூன Fபில் அர்ளி Fபஹல் னஜ்'அலு லக கர்ஜன் 'அலா அன் தஜ்'அல Bபய்னனா வ Bபய்னஹும் ஸத்தா
அவர்கள் “துல்கர்னைனே! நிச்சயமாக யஃஜூஜும், மஃஜூஜும் பூமியில் ஃபஸாது - குழப்பம் - செய்கிறார்கள்; ஆதலால், எங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஒரு தடுப்பு(ச் சுவரை) நீர் ஏற்படுத்தித் தரும் பொருட்டு நாங்கள் உமக்கு ஒரு தொகையைத் தரலாமா?” என்று கேட்டார்கள்.
قَالَ مَا مَكَّنِّیْ فِیْهِ رَبِّیْ خَیْرٌ فَاَعِیْنُوْنِیْ بِقُوَّةٍ اَجْعَلْ بَیْنَكُمْ وَبَیْنَهُمْ رَدْمًا ۟ۙ
قَالَகூறினார்مَاஎதுمَكَّنِّىْஎனக்கு ஆற்றல் அளித்துள்ளான்فِيْهِஅதில்رَبِّىْஎன் இறைவன்خَيْرٌமிக்க மேலானதுفَاَعِيْنُوْنِىْஆகவே எனக்கு உதவுங்கள்بِقُوَّةٍவலிமையைக்கொண்டுاَجْعَلْஏற்படுத்துவேன்بَيْنَكُمْஉங்களுக்கிடையில்وَبَيْنَهُمْஅவர்களுக்கிடையில்رَدْمًا ۙ‏பலமான ஒரு தடுப்பை
கால மா மக்கன்னீ Fபீஹி ரBப்Bபீ கய்ருன் Fப-அ'ஈனூனீ Bபிகுவ்வதின் அஜ்'அல் Bபய்னகும் வ Bபய்னஹும் ரத்மா
அதற்கவர்: “என் இறைவன் எனக்கு எதில் (வசதிகள்) அளித்திருக்கிறானோ அது (நீங்கள் கொடுக்க இருப்பதைவிட) மேலானது; ஆகவே, (உங்கள் உடல்) பலம் கொண்டு எனக்கு நீங்கள் உதவி செய்யுங்கள்; நான் உங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஓர் உறுதியான தடுப்பை ஏற்படுத்தி விடுகிறேன்”என்றுகூறினார்.
اٰتُوْنِیْ زُبَرَ الْحَدِیْدِ ؕ حَتّٰۤی اِذَا سَاوٰی بَیْنَ الصَّدَفَیْنِ قَالَ انْفُخُوْا ؕ حَتّٰۤی اِذَا جَعَلَهٗ نَارًا ۙ قَالَ اٰتُوْنِیْۤ اُفْرِغْ عَلَیْهِ قِطْرًا ۟ؕ
اٰتُوْகொண்டு வாருங்கள்نِىْஎன்னிடம்زُبَرَபாலங்களைالْحَدِيْدِ‌ ؕஇரும்புحَتّٰٓىஇறுதியாகاِذَا سَاوٰىஅவை சமமாகினால்بَيْنَ الصَّدَفَيْنِஇரு மலைகளின் உச்சிகளுக்குقَالَகூறினார்انْـفُخُوْا‌ ؕஊதுங்கள்حَتّٰٓىஇறுதியாகاِذَا جَعَلَهٗஆக்கினால் / அவற்றைنَارًا ۙநெருப்பாகقَالَகூறினார்اٰتُوْகொண்டு வாருங்கள்نِىْۤஎன்னிடம்اُفْرِغْஊற்றுவேன்عَلَيْهِஅதன் மீதுقِطْرًا ؕ‏செம்பை
ஆதூனீ ZஜுBபரல் ஹதீத், ஹத்தா இதா ஸாவா Bபய்னஸ் ஸதFபய்னி காலன் Fபுகூ ஹத்தா இதா ஜ'அலஹூ னாரன் கால ஆதூனீ உFப்ரிக் 'அலய்ஹி கித்ரா
“நீங்கள் இரும்புப் பாளங்களை எனக்குக் கொண்டு வாருங்கள்” (என்றார்). பிறகு அவை இரு மலைகளின் (இடையே நிரம்பி) உச்சிக்குச் சமமாகும் போது, ஊதுங்கள் என்றார்; அதனை அவர் நெருப்பாக ஆக்கியதும் (பின்னர் “உருக்கிய) செம்பை என்னிடம் கொண்டு வாருங்கள்; அதன் மேல் ஊற்றுகிறேன்” (என்றார்).
فَمَا اسْطَاعُوْۤا اَنْ یَّظْهَرُوْهُ وَمَا اسْتَطَاعُوْا لَهٗ نَقْبًا ۟
فَمَا اسْطَاعُوْۤاஆகவே அவர்கள் இயலவில்லைاَنْஅதன் மீதுيَّظْهَرُوْهُஅவர்கள் ஏறுவதற்குوَمَا اسْتَطَاعُوْاஇன்னும் அவர்கள் இயலவில்லைلَهٗஅதைنَـقْبًا‏துளையிட
Fபமஸ் தா'ஊ அ(ன்)ய் யள்ஹரூஹு வ மஸ்ததா'ஊ லஹூ னக்Bபா
எனவே, (யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார்) அதன் மீது ஏறவும் சக்தி பெறவில்லை, அதில் துவாரமிடவும் அவர்கள் சக்தி பெறவில்லை.
قَالَ هٰذَا رَحْمَةٌ مِّنْ رَّبِّیْ ۚ فَاِذَا جَآءَ وَعْدُ رَبِّیْ جَعَلَهٗ دَكَّآءَ ۚ وَكَانَ وَعْدُ رَبِّیْ حَقًّا ۟ؕ
قَالَகூறினார்هٰذَاஇதுرَحْمَةٌஅருளாகும்مِّنْஇருந்துرَّبِّىْ‌ ۚஎன் இறைவனிடம்فَاِذَا جَآءَவரும்போதுوَعْدُவாக்குرَبِّىْஎன் இறைவனின்جَعَلَهٗஇதை/ஆக்கி விடுவான்دَكَّآءَ‌ ۚதூள் தூளாகوَكَانَஇன்னும் இருக்கிறதுوَعْدُவாக்குرَبِّىْஎன் இறைவனின்حَقًّا ؕ‏உண்மையாக
கால ஹாத ரஹ்மதுன் மிர் ரBப்Bபீ Fப இதா ஜா'அ வஃது ரBப்Bபீ ஜ'அலஹூ தக்கா'அ; கான வஃது ரBப்Bபீ ஹக்கா
“இது என் இறைவனிடமிருந்துள்ள ஒரு கிருபையே ஆகும், ஆனால் என் இறைவனுடைய வாக்குறுதி நிறைவேறும்போது, அவன் இதனையும் தூள் தூளாக்கி விடுவான்; மேலும், என் இறைவனுடைய வாக்குறுதி (முற்றிலும்) உண்மையானதே” என்று கூறினார்.
وَتَرَكْنَا بَعْضَهُمْ یَوْمَىِٕذٍ یَّمُوْجُ فِیْ بَعْضٍ وَّنُفِخَ فِی الصُّوْرِ فَجَمَعْنٰهُمْ جَمْعًا ۟ۙ
وَتَرَكْنَاஇன்னும் விட்டுவிடுவோம்بَعْضَهُمْஅவர்களில் சிலரைيَوْمَٮِٕذٍஅந்நாளில்يَّمُوْجُகலந்துவிடும்படிفِىْ بَعْضٍ‌சிலருடன்وَّنُفِخَ فِى الصُّوْرِஇன்னும் ஊதப்படும்/சூரில்فَجَمَعْنٰهُمْ جَمْعًا ۙ‏ஆகவே நிச்சயம் ஒன்று சேர்ப்போம்/அவர்களை
வ தரக்னா Bபஃளஹும் யவ்ம'இதி(ன்)ய் யமூஜு Fபீ Bபஃளி(ன்)வ் வ னுFபிக Fபிஸ் ஸூரி Fபஜமஃனாஹும் ஜம்'ஆ
இன்னும், அந்நாளில் அவர்களில் சிலரைச் சிலருடன் (கடல்) அலைகள் (மோதுவதைப் போல்) மோதுமாறு நாம் விட்டு விடுவோம்; பின்னர், ஸூர் (எக்காளம்) ஊதப்படும்; பிறகு நாம் அவர்களை ஒன்று சேர்ப்போம்.
وَّعَرَضْنَا جَهَنَّمَ یَوْمَىِٕذٍ لِّلْكٰفِرِیْنَ عَرْضَا ۟ۙ
وَّعَرَضْنَاஇன்னும் வெளிப்படுத்துவோம்جَهَـنَّمَநரகத்தைيَوْمَٮِٕذٍஅந்நாளில்لِّـلْكٰفِرِيْنَ عَرْضَا ۙ‏நிராகரிப்பவர்களுக்கு/ வெளிப்படுத்துதல்
வ 'அரள்னா ஜஹன்னம யவ்ம'இதில் லில்காFபிரீன 'அர்ளா
மேலும், நிராகரித்து கொண்டிருந்தவர்களுக்கு அந்நாளில் நரகத்தை நாம் (அவர்கள்) முன்னிலையில் எடுத்து காட்டுவோம்.
لَّذِیْنَ كَانَتْ اَعْیُنُهُمْ فِیْ غِطَآءٍ عَنْ ذِكْرِیْ وَكَانُوْا لَا یَسْتَطِیْعُوْنَ سَمْعًا ۟۠
اۨلَّذِيْنَஎவர்கள்كَانَتْஇருந்தனاَعْيُنُهُمْஅவர்களுடைய கண்கள்فِىْ غِطَآءٍதிரைக்குள்عَنْ ذِكْرِىْஎன் நல்லுப தேசங்களை விட்டுوَكَانُوْاஇன்னும் இருந்தனர்لَا يَسْتَطِيْعُوْنَஇயலாதவர்களாகسَمْعًا‏செவியுற
அல்லதீன கானத் அஃயுனுஹும் Fபீ கிதா'இன் 'அன் திக்ரீ வ கானூ லா யஸ்ததீ'ஊன ஸம்'ஆ
அவர்கள் எத்தகையோர் (என்றால்) என் நினைவை விட்டும் அவர்களுடைய கண்களில் திரையிடப் பட்டிருந்தன; இன்னும் (நல்லுபதேசங்களைச்) செவிமடுக்கவும் அவர்கள் சக்தியற்றுப் போயினர்.  
اَفَحَسِبَ الَّذِیْنَ كَفَرُوْۤا اَنْ یَّتَّخِذُوْا عِبَادِیْ مِنْ دُوْنِیْۤ اَوْلِیَآءَ ؕ اِنَّاۤ اَعْتَدْنَا جَهَنَّمَ لِلْكٰفِرِیْنَ نُزُلًا ۟
اَفَحَسِبَஎண்ணினார்களா?الَّذِيْنَஎவர்கள்كَفَرُوْۤاநிராகரித்தார்கள்اَنْ يَّتَّخِذُوْاஅவர்கள் எடுத்துக்கொள்ளعِبَادِىْஎன் அடியார்களைمِنْ دُوْنِىْۤஎன்னையன்றிاَوْلِيَآءَ‌ ؕபாதுகாவலர்களாகاِنَّاۤநிச்சயமாக நாம்اَعْتَدْنَاதயார்படுத்தினோம்جَهَـنَّمَநரகத்தைلِلْكٰفِرِيْنَநிராகரிப்பவர்களுக்குنُزُلًا‏தங்குமிடங்களாக
அFபஹஸிBபல் லதீன கFபரூ அ(ன்)ய் யத்தகிதூ 'இBபாதீ மின் தூனீ அவ்லியா'; இன்னா அஃதத்னா ஜஹன்னம லில் காFபிரீன னுZஜுலா
நிராகரிப்பவர்கள் என்னையன்றி என் அடியார்களை(த் தம் ) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறார்களா? நிச்சயமாக இக்காஃபிர்கள் (விருந்துக்கு) இறங்குமிடமாக நரகத்தையே சித்தப்படுத்தி வைத்திருக்கின்றோம்.
قُلْ هَلْ نُنَبِّئُكُمْ بِالْاَخْسَرِیْنَ اَعْمَالًا ۟ؕ
قُلْகூறுவீராகهَلْ نُـنَبِّئُكُمْநாம்/ அறிவிக்கவா?/உங்களுக்குبِالْاَخْسَرِيْنَமிகப் பெரிய நஷ்டவாளிகளைاَعْمَالًا ؕ‏செயல்களால்
குல் ஹல் னுனBப்Bபி'உகும் Bபிலக்ஸரீன அஃமாலா
“(தம்) செயல்களில் மிகப் பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று (நபியே!) நீர் கேட்பீராக.
اَلَّذِیْنَ ضَلَّ سَعْیُهُمْ فِی الْحَیٰوةِ الدُّنْیَا وَهُمْ یَحْسَبُوْنَ اَنَّهُمْ یُحْسِنُوْنَ صُنْعًا ۟
اَ لَّذِيْنَஎவர்கள்ضَلَّவழிகெட்டதுسَعْيُهُمْதங்கள் முயற்சிகள்فِى الْحَيٰوةِவாழ்க்கையில்الدُّنْيَاஉலகம்وَهُمْஅவர்களோيَحْسَبُوْنَஎண்ணுகிறார்கள்اَنَّهُمْநிச்சயமாக தாங்கள்يُحْسِنُوْنَநல்லதை செய்கிறார்கள்صُنْعًا‏செயலை
அல்லதீன ளல்ல ஸஃயுஹும் Fபில் ஹயாதித் துன்யா வ ஹும் யஹ்ஸBபூன அன்னஹும் யுஹ்ஸினூன ஸுன்'ஆ
யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான்.
اُولٰٓىِٕكَ الَّذِیْنَ كَفَرُوْا بِاٰیٰتِ رَبِّهِمْ وَلِقَآىِٕهٖ فَحَبِطَتْ اَعْمَالُهُمْ فَلَا نُقِیْمُ لَهُمْ یَوْمَ الْقِیٰمَةِ وَزْنًا ۟
اُولٰۤٮِٕكَ الَّذِيْنَஇவர்கள்தான்كَفَرُوْاநிராகரித்தார்கள்بِاٰيٰتِவசனங்களைرَبِّهِمْதங்கள் இறைவனின்وَلِقَآٮِٕهٖஇன்னும் அவனுடைய சந்திப்பைفَحَبِطَتْஇன்னும் அழிந்தனاَعْمَالُهُمْஅவர்களுடைய செயல்கள்فَلَا نُقِيْمُஆகவேநிறுத்தமாட்டோம்لَهُمْஅவர்களுக்காகيَوْمَ الْقِيٰمَةِமறுமை நாளில்وَزْنًـا‏எடைக் கோலை
உலா'இகல் லதீன கFபரூ Bபி ஆயாதி ரBப்Bபிஹிம் வ லிகா'இஹீ FபஹBபிதத் அஃமாலுஹும் Fபலா னுகீமு லஹும் யவ்மல் கியாமதி வZஜ்னா
அவர்கள் தங்களுடைய இறைவனின் வசனங்களையும், அவனை (மறுமையில்) சந்திப்போம் என்பதையும் நிராகரிக்கிறார்கள்; அவர்களுடைய செயல்கள் யாவும் வீணாகும்; மறுமை நாளில் அவர்களுக்காக எந்த மதிப்பையும் நாம் ஏற்படுத்த மாட்டோம்.
ذٰلِكَ جَزَآؤُهُمْ جَهَنَّمُ بِمَا كَفَرُوْا وَاتَّخَذُوْۤا اٰیٰتِیْ وَرُسُلِیْ هُزُوًا ۟
ذٰلِكَஅதுجَزَآؤُهُمْஅவர்களுடைய கூலிجَهَنَّمُ بِمَا كَفَرُوْاநரகம்/அவர்கள் நிராகரித்த காரணத்தால்وَاتَّخَذُوْۤاஇன்னும் எடுத்துக்கொண்டனர்اٰيٰتِىْநம் வசனங்களைوَرُسُلِىْஇன்னும் நம் தூதர்களைهُزُوًا‏பரிகாசமாக
தாலிக ஜZஜா'உஹும் ஜஹன்னமு Bபிமா கFபரூ வத்தகதூ ஆயாதீ வ ருஸுலீ ஹுZஜுவா
அதுவே அவர்களுடைய கூலியாகும் - (அது தான்) நரகம் - ஏனென்றால் அவர்கள் (உண்மையை) நிராகரித்தார்கள்; என்னுடைய வசனங்களையும், என் தூதர்களையும் ஏளனமாகவே எடுத்துக் கொண்டார்கள்.
اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ كَانَتْ لَهُمْ جَنّٰتُ الْفِرْدَوْسِ نُزُلًا ۟ۙ
اِنَّநிச்சயமாகالَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்وَعَمِلُواஇன்னும் செய்தார்கள்الصّٰلِحٰتِநன்மைகளைكَانَتْஇருக்கும்لَهُمْஅவர்களுக்குجَنّٰتُசொர்க்கங்கள்الْفِرْدَوْسِஃபிர்தவ்ஸ்نُزُلًا ۙ‏தங்குமிடங்களாக
இன்னல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி கானத் லஹும் ஜன்னாதுல் Fபிர்தவ்ஸி னுZஜுலா
நிச்சயமாக எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நல்ல - செயல்களைச் செய்கிறார்களோ அவர்கள் (விருந்துக்கு) இறங்கும் இடமாக ஃபிர்தவ்ஸ் என்னும் தோட்டங்கள் இருக்கும்.
خٰلِدِیْنَ فِیْهَا لَا یَبْغُوْنَ عَنْهَا حِوَلًا ۟
خٰلِدِيْنَநிரந்தரமானவர்களாகفِيْهَاஅதில்لَا يَـبْغُوْنَவிரும்ப மாட்டார்கள்عَنْهَاஅதிலிருந்துحِوَلًا‏மாறுவதை
காலிதீன Fபீஹா லா யBப்கூன 'அன்ஹா ஹிவலா
அதில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்; அவர்கள் அதிலிருந்து மாறி (வேறிடம்) செல்ல விரும்ப மாட்டார்கள்.
قُلْ لَّوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِّكَلِمٰتِ رَبِّیْ لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ اَنْ تَنْفَدَ كَلِمٰتُ رَبِّیْ وَلَوْ جِئْنَا بِمِثْلِهٖ مَدَدًا ۟
قُلْகூறுவீராகلَّوْ كَانَமாறினால்الْبَحْرُகடல்مِدَادًاமையாகلِّـكَلِمٰتِவாக்கியங்களுக்குرَبِّىْஎன் இறைவனின்لَـنَفِدَநிச்சயமாக தீர்ந்துவிடும்الْبَحْرُகடல்قَبْلَமுன்னதாகவேاَنْ تَـنْفَدَதீர்ந்துவிடுவதற்குكَلِمٰتُவாக்கியங்கள்رَبِّىْஎன் இறைவனின்وَلَوْ جِئْنَاநாம் வந்தாலும்بِمِثْلِهٖஅது போன்றதைக் கொண்டுمَدَدًا‏அதிகமாக
குல் லவ் கானல் Bபஹ்ரு மிதாதல் லி கலிமாதி ரBப்Bபீ லனFபிதல் Bபஹ்ரு கBப்ல அன் தன்Fபத கலிமாது ரBப்Bபீ வ லவ் ஜி'னா Bபிமித்லிஹீ மததா
(நபியே!) நீர் கூறுவீராக: “என் இறைவனுடைய வார்த்தை(களை எழுதுவதற்)காக கடல் (முழுவதும்) மையாக ஆகுமானாலும், என் இறைவனுடைய வார்த்தைகள் (எழுதி) முடிப்பதற்குள் கடல் (நீர்) தீர்ந்து விடும்; அதைப் போல் (இன்னொரு கடலையே) நாம் உதவிக்குக் கொண்டு வந்தாலும் சரி!”
قُلْ اِنَّمَاۤ اَنَا بَشَرٌ مِّثْلُكُمْ یُوْحٰۤی اِلَیَّ اَنَّمَاۤ اِلٰهُكُمْ اِلٰهٌ وَّاحِدٌ ۚ فَمَنْ كَانَ یَرْجُوْا لِقَآءَ رَبِّهٖ فَلْیَعْمَلْ عَمَلًا صَالِحًا وَّلَا یُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهٖۤ اَحَدًا ۟۠
قُلْகூறுவீராகاِنَّمَاۤ اَنَاநானெல்லாம்بَشَرٌஒரு மனிதன்தான்مِّثْلُكُمْஉங்களைப் போன்றيُوْحٰٓىவஹீ அறிவிக்கப்படுகிறதுاِلَىَّஎனக்குاَنَّمَاۤஎல்லாம்اِلٰهُكُمْஉங்கள் கடவுள்اِلٰـهٌகடவுள்وَّاحِدٌ‌  ۚஒரே ஒருفَمَنْஆகவே, எவர்كَانَஇருக்கிறார்يَرْجُوْاஆதரவு வைப்பார்لِقَآءَசந்திப்பைرَبِّهٖதன் இறைவனின்فَلْيَـعْمَلْஅவர் செய்யட்டும்عَمَلًاசெயலைصَالِحًـاநல்லதுوَّلَايُشْرِكْஇன்னும் இணையாக்க வேண்டாம்بِعِبَادَةِவணங்குவதில்رَبِّهٖۤதன் இறைவனைاَحَدًا‏ஒருவரை
குல் இன்னமா அன Bபஷருன் மித்லுகும் யூஹா இலய்ய அன்னமா இலாஹுகும் இலாஹு(ன்)வ் வாஹித்; Fபமன் கான யர்ஜூ லிகா'அ ரBப்Bபிஹீ Fபல்யஃமல் 'அமலன் ஸாலிஹ(ன்)வ் வலா யுஷ்ரிக் Bபி'இBபாததி ரBப்Bபிஹீ அஹதா
(நபியே!) நீர் சொல்வீராக: “நிச்சயமாக நான் உங்களைப் போன்ற ஒரு மனிதனே! நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான் என்று எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டிருக்கிறது; எவன் தன்னுடைய இறைவனைச் சந்திக்கலாமென ஆதரவு வைக்கின்றானோ அவன் (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்து, தன் இறைவனை வணங்குவதில் வேறெவரையும் இணையாக்காதும் இருப்பானாக.”