20. ஸூரத்து தாஹா

மக்கீ, வசனங்கள்: 135

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
مَاۤ اَنْزَلْنَا عَلَیْكَ الْقُرْاٰنَ لِتَشْقٰۤی ۟ۙ
مَاۤ اَنْزَلْـنَاநாம் இறக்கவில்லைعَلَيْكَஉம்மீதுالْـقُرْاٰنَகுர்ஆனைلِتَشْقٰٓى ۙ‏நீர் சிரமப்படுவதற்காக
மா அன்Zஜல்னா 'அலய்கல் குர்ஆன லிதஷ்கா
(நபியே!) நீர் துன்பப்படுவதற்காக நாம் இந்த குர்ஆனை உம்மீது இறக்கவில்லை.
اِلَّا تَذْكِرَةً لِّمَنْ یَّخْشٰی ۟ۙ
اِلَّاதவிரتَذْكِرَةًஒரு நினைவூட்டலாகவேلِّمَنْ يَّخْشٰى ۙ‏பயப்படுகின்றவருக்கு
இல்லா தத்கிரதல் லிம(ன்)ய் யக்-ஷா
(அல்லாஹ்வுக்கு) அஞ்சுவோருக்கு நல்லுபதேசமே அன்றி (வேறில்லை).
تَنْزِیْلًا مِّمَّنْ خَلَقَ الْاَرْضَ وَالسَّمٰوٰتِ الْعُلٰی ۟ؕ
تَنْزِيْلًاஇறக்கப்பட்டதாகும்مِّمَّنْ خَلَقَபடைத்தவனிடமிருந்துالْاَرْضَபூமியைوَالسَّمٰوٰتِஇன்னும் வானங்களைالْعُلَىؕ ‏உயர்ந்த
தன்Zஜீலம் மிம்மன் கலகல் அர்ள வஸ் ஸமாவாதில் 'உலா
பூமியையும், உயர்வான வானங்களையும் படைத்தவனிடமிருந்து அது இறக்கி அருளப் பெற்றது.
اَلرَّحْمٰنُ عَلَی الْعَرْشِ اسْتَوٰی ۟
اَلرَّحْمٰنُபேரருளாளன்عَلَىமீதுالْعَرْشِஅர்ஷின்اسْتَوٰى‏உயர்ந்து இருக்கிறான்
அர்-ரஹ்மானு 'அலல் 'அர்ஷிஸ் தவா
அர்ரஹ்மான் அர்ஷின் மீது அமைந்தான்.
لَهٗ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ وَمَا بَیْنَهُمَا وَمَا تَحْتَ الثَّرٰی ۟
لَهٗஅவனுக்கே உரியனمَاஉள்ளவைفِى السَّمٰوٰتِவானங்களில்وَمَاஇன்னும் உள்ளவைفِى الْاَرْضِபூமியில்وَمَاஇன்னும் உள்ளவைبَيْنَهُمَاஅவ்விரண்டுக்கும் இடையில்وَمَاஇன்னும் உள்ளவைتَحْتَகீழ்الثَّرٰى‏ஈரமான மண்ணுக்கு
லஹூ மா Fபிஸ் ஸமாவாதி வமா Fபில் அர்ளி வமா Bபய்னஹுமா வமா தஹ்தத்தரா
வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும், இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவையும், மண்ணுக்கு அடியில் உள்ளவையும் அவனுக்கே உரியன.
وَاِنْ تَجْهَرْ بِالْقَوْلِ فَاِنَّهٗ یَعْلَمُ السِّرَّ وَاَخْفٰی ۟
وَاِنْ تَجْهَرْநீர் பகிரங்கப்படுத்தினாலும்بِالْقَوْلِபேச்சைفَاِنَّهٗநிச்சயமாக அவன்يَعْلَمُநன்கறிவான்السِّرَّஇரகசியத்தைوَاَخْفٰى‏இன்னும் மிக மறைந்ததை
வ இன் தஜ்ஹர் Bபில்கவ்லி Fப-இன்னஹூ யஃலமுஸ் ஸிர்ர வ அக்Fபா
(நபியே!) நீர் உரக்கச் சொன்னாலும் நிச்சயமாக அவன் இரகசியத்தையும் (அதை விட) மறைவானதையும் அறிகிறான்.
اَللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ؕ لَهُ الْاَسْمَآءُ الْحُسْنٰی ۟
اَللّٰهُஅல்லாஹ்لَاۤஅறவே இல்லைاِلٰهَவணக்கத்திற்குரியவன்اِلَّاதவிரهُوَ ؕஅவனைلَـهُஅவனுக்கு உண்டுالْاَسْمَآءُபெயர்கள்الْحُسْنٰى‏மிக அழகிய
அல்லாஹு லா இலாஹ இல்லா ஹுவ லஹுல் அஸ்மா'உல் ஹுஸ்னா
அல்லாஹ் - அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை; அவனுக்கு அழகிய திரு நாமங்கள் இருக்கின்றன.
وَهَلْ اَتٰىكَ حَدِیْثُ مُوْسٰی ۟ۘ
وَهَلْ اَتٰٮكَஉமக்கு வந்ததா?حَدِيْثُசெய்திمُوْسٰى‌ۘ‏மூஸாவுடைய
வ ஹல் அதாக ஹதீது மூஸா
இன்னும் (நபியே!) மூஸாவின் வரலாறு உம்மிடம் வந்ததா?
اِذْ رَاٰ نَارًا فَقَالَ لِاَهْلِهِ امْكُثُوْۤا اِنِّیْۤ اٰنَسْتُ نَارًا لَّعَلِّیْۤ اٰتِیْكُمْ مِّنْهَا بِقَبَسٍ اَوْ اَجِدُ عَلَی النَّارِ هُدًی ۟
اِذْ رَاٰஅவர் பார்த்தபோதுنَارًاஒரு நெருப்பைفَقَالَஅவர் கூறினார்لِاَهْلِهِதனது குடும்பத்தினருக்குامْكُثُوْۤاதங்கி இருங்கள்اِنِّىْۤநிச்சயமாக நான்اٰنَسْتُநான் காண்கின்றேன்نَارًاஒரு நெருப்பைلَّعَلِّىْۤ اٰتِيْكُمْஉங்களிடம் கொண்டு வரலாம்مِّنْهَاஅதிலிருந்துبِقَبَسٍஒரு எரிகொல்லியைاَوْஅல்லதுاَجِدُபெறலாம்عَلَى النَّارِநெருப்பின் அருகில்هُدًى‏வழிகாட்டுதலை
இத் ர ஆ னாரன் Fபகால லி அஹ்லிஹிம் குதூ இன்னீ ஆனஸ்து னாரல் ல'அல்லீ ஆதீகும் மின்ஹா BபிகBபஸின் அவ் அஜிது 'அலன் னாரி ஹுதா
அவர் நெருப்பைக் கண்டு தம் குடும்பத்தாரிடம் “நீங்கள் (இங்கு சிறிது) தங்குங்கள்; நிச்சயமாக நான் நெருப்பைக் கண்டேன்; ஒரு வேளை அதிலிருந்து உங்களுக்கு ஓர் எரி கொள்ளியைக் கொண்டு வரவோ; அல்லது நாம் செல்ல வேண்டிய பாதையை அந் நெருப்பி(ன் உதவியி)னால் கண்டு பிடிக்கவோ செய்யலாம்” என்று (கூறினார்).
فَلَمَّاۤ اَتٰىهَا نُوْدِیَ یٰمُوْسٰی ۟ؕ
فَلَمَّاۤ اَتٰٮهَاஅவர் அதனிடம் வந்தபோதுنُوْدِىَஅழைக்கப்பட்டார்يٰمُوْسٰىؕ‏மூஸாவே!
Fபலம்மா அதாஹா னூதிய யா மூஸா
அவர் (நெருப்பின்) அருகே வந்த போது “மூஸாவே!” என்று அழைக்கப் பட்டார்.
اِنِّیْۤ اَنَا رَبُّكَ فَاخْلَعْ نَعْلَیْكَ ۚ اِنَّكَ بِالْوَادِ الْمُقَدَّسِ طُوًی ۟ؕ
اِنِّىْۤ اَنَاநிச்சயமாக நான்தான்رَبُّكَஉமது இறைவன்فَاخْلَعْகழட்டுவீராகنَـعْلَيْكَ‌ۚஉமது செருப்புகளைاِنَّكَநிச்சயமாக நீர்بِالْوَادِபள்ளத்தாக்கில்الْمُقَدَّسِபரிசுத்தமானطُوًىؕ‏துவா
இன்னீ அன ரBப்Bபுக Fபக்லஃ னஃலய்க இன்னக Bபில்வாதில் முகத்தஸி துவா
“நிச்சயமாக நான் தான் உம்முடைய இறைவன்; நீர் உம் காலணிகள் இரண்டையும் கழற்றிவிடும்! நிச்சயமாக நீர் “துவா” என்னும் புனிதமான பள்ளத்தாக்கில் இருக்கிறீர்.
وَاَنَا اخْتَرْتُكَ فَاسْتَمِعْ لِمَا یُوْحٰی ۟
وَاَنَاநான்اخْتَرْتُكَஉம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்فَاسْتَمِعْஆகவே செவிமடுப்பீராகلِمَا يُوْحٰى‏வஹீ அறிவிக்கப்படுபவற்றை
வ அனக்தர்துக Fபஸ்தமிஃ லிமா யூஹா
இன்னும் “நான் உம்மை (என் தூதராக)த் தேர்ந்தெடுத்தேன்; ஆதலால் வஹீயின் வாயிலாக (உமக்கு) அறிவிக்கப் படுவதற்கு நீர் செவியேற்பீராக.
اِنَّنِیْۤ اَنَا اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّاۤ اَنَا فَاعْبُدْنِیْ ۙ وَاَقِمِ الصَّلٰوةَ لِذِكْرِیْ ۟
اِنَّنِىْۤ اَنَاநிச்சயமாக நான்தான்اللّٰهُஅல்லாஹ்لَاۤஅறவே இல்லைاِلٰهَவணக்கத்திற்குரியவன்اِلَّاۤதவிரاَنَاஎன்னைفَاعْبُدْنِىْ ۙஆகவே, என்னை வணங்குவீராகوَاَقِمِஇன்னும் நிலைநிறுத்துவீராகالصَّلٰوةَதொழுகையைلِذِكْرِىْ‏என் நினைவிற்காக
இன்னனீ அனல் லாஹு லா இலாஹ இல்லா அன FபஃBபுத்னீ வ அகிமிஸ்-ஸலாத லிதிக்ரீ
“நிச்சயமாக நான் தான் அல்லாஹ்! என்னைத் தவிர வேறு நாயன் இல்லை; ஆகவே, என்னையே நீர் வணங்கும், என்னை தியானிக்கும் பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக.
اِنَّ السَّاعَةَ اٰتِیَةٌ اَكَادُ اُخْفِیْهَا لِتُجْزٰی كُلُّ نَفْسٍ بِمَا تَسْعٰی ۟
اِنَّநிச்சயமாகالسَّاعَةَமறுமைاٰتِيَـةٌவரக்கூடியதாகும்اَكَادُ اُخْفِيْهَاஅதை நான் மறைத்தே வைத்திருப்பேன்لِتُجْزٰىகூலி கொடுக்கப்படுவதற்காகكُلُّஒவ்வொருنَفْسٍۢஆன்மாவும்بِمَا تَسْعٰى‏அது செய்கின்றவற்றுக்கு
இன்னஸ் ஸா'அத ஆதியதுன் அகாது உக்Fபீஹா லிதுஜ்Zஜா குல்லு னFப்ஸின் Bபிமா தஸ்'ஆ
“ஒவ்வோர் ஆத்மாவும் தான் செய்ததற்குத் தக்கபடி பிரதிபலன்கள் அளிக்கப்படும் பொருட்டு (நியாயத் தீர்ப்புக்குரிய) வேளை நிச்சயமாக வரவிருக்கிறது; ஆயினும் அதை மறைத்து வைக்க நாடுகிறேன்.
فَلَا یَصُدَّنَّكَ عَنْهَا مَنْ لَّا یُؤْمِنُ بِهَا وَاتَّبَعَ هَوٰىهُ فَتَرْدٰی ۟
فَلَا يَصُدَّنَّكَஉம்மை திருப்பிவிட வேண்டாம்عَنْهَاஅதை விட்டுمَنْ لَّا يُؤْمِنُஎவன் நம்பிக்கை கொள்ளவில்லைبِهَاஅதைوَاتَّبَعَபின்பற்றியவன்هَوٰٮهُதனது மன இச்சையைفَتَرْدٰى‏நீர் அழிந்து விடுவீர்
Fபலா யஸுத்தன்னக 'அன்ஹா மல் லா யு'மினு Bபிஹா வத்தBப'அ ஹவாஹு Fபதர்தா
“ஆகவே, அதனை நம்பாது, தன் (மன) இச்சையைப் பின்பற்றுபவன் திடனாக அதைவிட்டும் உம்மைத் திருப்பிவிட வேண்டாம். அவ்வாறாயின், நீர் அழிந்துபோவீர்.
وَمَا تِلْكَ بِیَمِیْنِكَ یٰمُوْسٰی ۟
وَمَاஎன்ன?تِلْكَஅதுبِيَمِيْنِكَஉமது வலக்கையில்يٰمُوْسٰى‏மூஸாவே!
வமா தில்க Bபி யமீ னிக யா மூஸா
“மூஸாவே! உம்முடைய வலது கையில் இருப்பது என்ன?” (என்றும் அல்லாஹ் கேட்டான்.)
قَالَ هِیَ عَصَایَ ۚ اَتَوَكَّؤُا عَلَیْهَا وَاَهُشُّ بِهَا عَلٰی غَنَمِیْ وَلِیَ فِیْهَا مَاٰرِبُ اُخْرٰی ۟
قَالَஅவர் கூறினார்هِىَஅதுعَصَاىَ‌ۚஎனது கைத்தடிاَتَوَكَّؤُاசாய்ந்து கொள்வேன்عَلَيْهَاஅதன் மீதுوَاَهُشُّஇன்னும் பறிப்பேன்بِهَاஅதைக் கொண்டுعَلٰى غَـنَمِىْஎன் ஆடுகளுக்குوَلِىَஇன்னும் எனக்குفِيْهَاஅதில் உள்ளனمَاٰرِبُ اُخْرٰى‏மற்ற பல தேவைகள்
கால ஹிய 'அஸாய அதவக்க'உ அலய்ஹா வ அஹுஷ்ஷு Bபிஹா 'அலா கனமீ வ லிய Fபீஹா ம ஆரிBபு உக்ரா
(அதற்கவர்) “இது என்னுடைய கைத்தடி; இதன் மீது நான் சாய்ந்து கொள்வேன்; இதைக் கொண்டு என் ஆடுகளுக்கு இலைகள் பறிப்பேன்; இன்னும் இதில் எனக்கு வேறு தேவைகளும் நிறைவேறுகின்றன” என்று கூறினார்.
قَالَ اَلْقِهَا یٰمُوْسٰی ۟
قَالَஅவன் கூறினான்اَلْقِهَاஅதை நீர் எறிவீராகيٰمُوْسٰى‏மூஸாவே!
கால அல்கிஹா யா மூஸா
அதற்கு (இறைவன்) “மூஸாவே! அதை நீர் கீழே எறியும்” என்றான்.
فَاَلْقٰىهَا فَاِذَا هِیَ حَیَّةٌ تَسْعٰی ۟
فَاَلْقٰٮهَاஅதை அவர்எறிந்தார்فَاِذَاஉடனேهِىَஅது ஆகிவிட்டதுحَيَّةٌஓடுகின்றதுتَسْعٰى‏ஒரு பாம்பாக
Fப-அல்காஹா Fப -இதா ஹிய ஹய்யதுன் தஸ்'ஆ
அவ்வாறே அவர் அதனைக் கீழே எறிந்தார்; அப்போது அது ஊர்ந்து செல்லும் ஒரு பாம்பாயிற்று.
قَالَ خُذْهَا وَلَا تَخَفْ ۥ سَنُعِیْدُهَا سِیْرَتَهَا الْاُوْلٰی ۟
قَالَஅவன் கூறினான்خُذْهَاஅதைப் பிடிப்பீராக!وَلَا تَخَفْ‌பயப்படாதீர்!سَنُعِيْدُهَاஅதை திருப்புவோம்سِيْرَتَهَاஅதன் தன்மைக்கேالْاُوْلٰى‏முந்திய
கால குத்ஹா வலா த கFப் ஸனு'ஈதுஹா ஸீரதஹல் ஊலா
(இறைவன்) கூறினான்: “அதைப் பிடியும்; பயப்படாதீர்; உடனே நாம் அதை அதன் பழைய நிலைக்கே மீட்டுவோம்.”
وَاضْمُمْ یَدَكَ اِلٰی جَنَاحِكَ تَخْرُجْ بَیْضَآءَ مِنْ غَیْرِ سُوْٓءٍ اٰیَةً اُخْرٰی ۟ۙ
وَاضْمُمْஇன்னும் சேர்ப்பீராகيَدَكَஉமது கரத்தைاِلَىٰ جَنَاحِكَபுஜத்தின் கீழ்تَخْرُجْதோன்றும்بَيْضَآءَவெண்மையாகمِنْ غَيْرِ سُوْٓءٍநோயுமின்றிاٰيَةًஅத்தாட்சியாகاُخْرٰىۙ‏மற்றொரு
வள்மும் யதக இலா ஜனாஹிக தக்ருஜ் Bபய்ளா'அ மின் கய்ரி ஸூ'இன் ஆயதன் உக்ரா
“இன்னும், உம் கையை உம் விலாப்புறமாக புகுத்தி (வெளியில்) எடும்; அது ஒளி மிக்கதாய் மாசற்ற வெண்மையாக வெளிவரும்; இது மற்றோர் அத்தாட்சியாகும்.
لِنُرِیَكَ مِنْ اٰیٰتِنَا الْكُبْرٰی ۟ۚ
لِنُرِيَكَஉமக்கு நாம் காண்பிப்பதற்காகمِنْ اٰيٰتِنَاநமது அத்தாட்சிகளில்الْـكُبْـرٰى‌ۚ‏பெரிய
லினுரியக மின் ஆயாதினல் குBப்ரா
“(இவ்வாறு) நம்முடைய பெரிய அத்தாட்சிகளிலிருந்து (சிலவற்றை) உமக்குக் காண்பிக்கிறோம்.
اِذْهَبْ اِلٰی فِرْعَوْنَ اِنَّهٗ طَغٰی ۟۠
اِذْهَبْநீர் செல்வீராகاِلٰى فِرْعَوْنَஃபிர்அவ்னிடம்اِنَّهٗநிச்சயமாக அவன்طَغٰى‏வரம்பு மீறிவிட்டான்
இத்ஹBப் இலா Fபிர்'அவ்ன இன்னஹூ தகா
“ஃபிர்அவ்னிடம் நீர் செல்வீராக! நிச்சயமாக அவன் (வரம்பு) மீறி விட்டான்” (என்றும் அல்லாஹ் கூறினான்).
قَالَ رَبِّ اشْرَحْ لِیْ صَدْرِیْ ۟ۙ
قَالَஅவர் கூறினார்رَبِّஎன் இறைவாاشْرَحْ لِىْஎனக்கு விரிவாக்குصَدْرِىْ ۙ‏என் நெஞ்சத்தை
கால ரBப்Bபிஷ் ரஹ் லீ ஸத்ரீ
(அதற்கு மூஸா) கூறினார்: “இறைவனே! எனக்காக என் நெஞ்சத்தை நீ (உறுதிப்படுத்தி) விரிவாக்கி தருவாயாக!
وَیَسِّرْ لِیْۤ اَمْرِیْ ۟ۙ
وَيَسِّرْஇன்னும் இலகுவாக்குلِىْۤஎனக்குاَمْرِىْ ۙ‏என் காரியத்தை
வ யஸ்ஸிர் லீ அம்ரீ
“என் காரியத்தை எனக்கு நீ எளிதாக்கியும் வைப்பாயாக!
وَاحْلُلْ عُقْدَةً مِّنْ لِّسَانِیْ ۟ۙ
وَاحْلُلْஇன்னும் அவிழ்த்துவிடுعُقْدَةًகொன்னலைمِّنْ لِّسَانِیْ ۙ‏என் நாவிலிருந்து
வஹ்லுல் 'உக்ததன் மில்லி ஸானீ
“என் நாவிலுள்ள (திக்குவாய்) முடிச்சையும் அவிழ்ப்பாயாக!
یَفْقَهُوْا قَوْلِیْ ۪۟
يَفْقَهُوْاஅவர்கள் புரிந்து கொள்வார்கள்قَوْلِیْ ‏என் பேச்சை
யFப்கஹூ கவ்லீ
“என் சொல்லை அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக!
وَاجْعَلْ لِّیْ وَزِیْرًا مِّنْ اَهْلِیْ ۟ۙ
وَاجْعَلْஇன்னும் ஏற்படுத்துلِّىْஎனக்குوَزِيْرًاஓர் உதவியாளரைمِّنْ اَهْلِىْ ۙ‏என்குடும்பத்திலிருந்து
வஜ்'அல் லீ வZஜீரன் மின் அஹ்லீ
“என் குடும்பத்திலிருந்து எனக்கு (உதவி செய்ய) ஓர் உதவியாளரையும் ஏற்படுத்தித் தருவாயாக!
اشْدُدْ بِهٖۤ اَزْرِیْ ۟ۙ
اشْدُدْபலப்படுத்துبِهٖۤஅதன் மூலம்اَزْرِىْ ۙ‏எனது முதுகை
உஷ்துத் Bபிஹீ அZஜ்ரீ
“அவரைக் கொண்டு என் முதுகை வலுப்படுத்துவாயாக!
وَاَشْرِكْهُ فِیْۤ اَمْرِیْ ۟ۙ
وَاَشْرِكْهُஅவரை இணைத்துவிடுفِىْۤ اَمْرِىْ ۙ‏எனது காரியத்தில்
வ அஷ்ரிக் ஹு Fபீ அம்ரீ
“என் காரியத்தில் அவரைக் கூட்டாக்கி வைப்பாயாக!
كَیْ نُسَبِّحَكَ كَثِیْرًا ۟ۙ
كَىْ نُسَبِّحَكَநாங்கள் உன்னை துதிப்பதற்காகكَثِيْرًا ۙ‏அதிகம்
கய் னுஸBப்Bபிஹக கதீரா
“நாங்கள் உன்னை அதிகமதிகம் (தஸ்பீஹு செய்து) துதிப்பதற்காகவும்;
وَّنَذْكُرَكَ كَثِیْرًا ۟ؕ
وَّنَذْكُرَكَஇன்னும் நாங்கள் உன்னை நினைவு கூருவதற்காகكَثِيْرًا ؕ‏அதிகம்
வ னத்குரக கதீரா
“உன்னை அதிகமதிகம் நினைவு கூர்வதற்காகவும் (இவற்றையெல்லாம் அருள்வாயாக!)
اِنَّكَ كُنْتَ بِنَا بَصِیْرًا ۟
اِنَّكَநிச்சயமாக நீكُنْتَஇருக்கின்றாய்بِنَاஎங்களைبَصِيْرًا‏உற்று நோக்கியவனாக
இன்னக குன்த Bபினா Bபஸீரா
“நிச்சயமாக, நீ எங்களை நோக்கியவனாகவே இருக்கிறாய்” (என்றார்)
قَالَ قَدْ اُوْتِیْتَ سُؤْلَكَ یٰمُوْسٰی ۟
قَالَஅவன் கூறினான்قَدْ اُوْتِيْتَதிட்டமாக கொடுக்கப்பட்டீர்سُؤْلَـكَஉமது கோரிக்கையைيٰمُوْسٰى‏மூஸாவே!
கால கத் ஊதீத ஸு'லக யா மூஸா
“மூஸாவே! நீர் கேட்டவை, நிச்சயமாக உமக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றன” என்று (அல்லாஹ்) கூறினான்.
وَلَقَدْ مَنَنَّا عَلَیْكَ مَرَّةً اُخْرٰۤی ۟ۙ
وَلَـقَدْதிட்டமாகمَنَـنَّاஅருள் புரிந்திருக்கின்றேன்عَلَيْكَஉம்மீதுمَرَّةًமுறைاُخْرٰٓىۙ‏மற்றொரு
வ லகத் மனன்னா 'அலய்க மர்ரதன் உக்ரா
மேலும், முன்னர் மற்றொரு முறையும் நிச்சயமாக நாம் உம்மீது பேரருள் புரிந்துள்ளோம்.
اِذْ اَوْحَیْنَاۤ اِلٰۤی اُمِّكَ مَا یُوْحٰۤی ۟ۙ
اِذْ اَوْحَيْنَاۤநாம் அறிவித்தபோதுاِلٰٓى اُمِّكَஉமது தாய்க்குمَا يُوْحٰٓى ۙ‏அறிவிக்கப்பட வேண்டியவற்றை
இத் அவ்ஹய்னா இலா உம்மிக மா யூஹா
“உம் தாயாருக்கு அறிவிக்க வேண்டியதை அறிவித்த நேரத்தை (நினைவு கூர்வீராக)!
اَنِ اقْذِفِیْهِ فِی التَّابُوْتِ فَاقْذِفِیْهِ فِی الْیَمِّ فَلْیُلْقِهِ الْیَمُّ بِالسَّاحِلِ یَاْخُذْهُ عَدُوٌّ لِّیْ وَعَدُوٌّ لَّهٗ ؕ وَاَلْقَیْتُ عَلَیْكَ مَحَبَّةً مِّنِّیْ ۚ۬ وَلِتُصْنَعَ عَلٰی عَیْنِیْ ۟ۘ
اَنِ اقْذِفِيْهِஅதாவது அவரை போடுவீராகفِى التَّابُوْتِபேழையில்فَاقْذِفِيْهِஅதை போடுவீராகفِى الْيَمِّகடலில்فَلْيُلْقِهِஅதை எறியும்الْيَمُّகடல்بِالسَّاحِلِகரையில்يَاْخُذْهُஅதை எடுப்பான்عَدُوٌّஎதிரிلِّىْஎனதுوَعَدُوٌّஇன்னும் எதிரிلَّهٗ‌ ؕஅவரதுوَاَلْقَيْتُஇன்னும் ஏற்படுத்தினேன்عَلَيْكَஉம்மீதுمَحَـبَّةًஅன்பைمِّنِّىْ ۚஎன் புறத்திலிருந்துوَلِتُصْنَعَஇன்னும் நீ பராமரிக்கப்படுவதற்காகعَلٰى عَيْنِىْ ۘ‏என் கண்பார்வையில்
'அனிக்திFபீஹி Fபித் தாBபூதி Fபக்திFபீஹி Fபில் யம்மி Fபல் யுல் கிஹில் யம்மு Bபிஸ் ஸாஹிலி ய'குத்ஹு 'அதுவ்வுல் லீ வ 'அதுவ்வுல் லஹ்; வ அல்கய்து 'அலய்க மஹBப்Bபதன் மின்னீ வ லிதுஸ்ன'அ 'அலா 'அய்னீ
அவரை (குழந்தையை)ப் பேழையில் வைத்து (அப்பேழையை நீல்) நதியில் போட்டுவிடும்; பின்னர் அந்த நதி அதைக் கரையிலே கொணர்ந்து எறிந்து விடும்; அங்கே எனக்கு பகைவனும்; அவருக்குப் பகைவனுமாகிய (ஒரு)வன் அவரை எடுத்துக்கொள்வான்” (எனப் பணித்தோம்). மேலும், ”(மூஸாவே!) நீர் என் கண் முன்னே வளர்க்கப்படுவதற்காக உம் மீது அன்பைப் பொழிந்தேன்.
اِذْ تَمْشِیْۤ اُخْتُكَ فَتَقُوْلُ هَلْ اَدُلُّكُمْ عَلٰی مَنْ یَّكْفُلُهٗ ؕ فَرَجَعْنٰكَ اِلٰۤی اُمِّكَ كَیْ تَقَرَّ عَیْنُهَا وَلَا تَحْزَنَ ؕ۬ وَقَتَلْتَ نَفْسًا فَنَجَّیْنٰكَ مِنَ الْغَمِّ وَفَتَنّٰكَ فُتُوْنًا ۫۬ فَلَبِثْتَ سِنِیْنَ فِیْۤ اَهْلِ مَدْیَنَ ۙ۬ ثُمَّ جِئْتَ عَلٰی قَدَرٍ یّٰمُوْسٰی ۟
اِذْ تَمْشِىْۤநடந்து சென்றபோதுاُخْتُكَஉமது சகோதரிفَتَقُوْلُகூறினாள்هَلْ اَدُلُّـكُمْநான் உங்களுக்கு அறிவிக்கவா?عَلٰى مَنْ يَّكْفُلُهٗ‌ ؕஅவரை பொறுப்பேற்பவரைفَرَجَعْنٰكَஉம்மை திரும்பக் கொண்டு வந்தோம்اِلٰٓى اُمِّكَஉமது தாயிடமேكَىْ تَقَرَّகுளிர்வதற்காகعَيْنُهَاஅவளது கண்وَلَا تَحْزَنَ ؕஇன்னும் அவள் கவலைப்படாமல் இருப்பதற்காகوَقَتَلْتَநீர் கொன்று விட்டீர்نَـفْسًاஓர் உயிரைفَنَجَّيْنٰكَஉம்மை நாம் பாதுகாத்தோம்مِنَ الْغَمِّஅந்த துக்கத்திலிருந்துوَفَتَـنّٰكَஇன்னும் உம்மை நாம் சோதித்தோம்فُتُوْنًا பல சோதனைகளில்فَلَبِثْتَஆக, நீர் தங்கினீர்سِنِيْنَபல ஆண்டுகள்فِىْۤ اَهْلِவாசிகளிடம்مَدْيَنَ ۙமத்யன்ثُمَّபிறகுجِئْتَநீர் அடைந்தீர்عَلٰى قَدَرٍஒரு குறிப்பிட்ட நேரத்தைيّٰمُوْسٰى‏மூஸாவே!
இத் தம்ஷீ உக்துக Fபதகூலு ஹல் அதுல்லுகும் 'அலா மய் யக்Fபுலுஹூ Fபரஜஃனாக இலா உம்மிக கய் தகர்ர 'அய்னுஹா வலா தஹ்Zஜன்; வ கதல்த னFப்ஸன் Fபனஜ்ஜய்னாக மினல் கம்மி வ Fபதன்னாக Fபுதூனா; FபலBபித்த ஸினீன Fபீ அஹ்லி மத்யன தும்ம ஜி'த 'அலா கதரி(ன்)ய் யா மூஸா
(பேழை கண்டெடுக்கப்பட்ட பின்) உம் சகோதரி நடந்து வந்து, “இவரை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒருவரை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?” என்று கேட்டாள்; ஆகவே நாம் உம் தாயாரிடம், அவருடைய கண் குளிர்ச்சியடையும் பொருட்டும்; அவர் துக்கம் அடையாமல் இருக்கும் பொருட்டும் உம்மை (அவர்பால்) மீட்டினோம்; பின்னர் நீர் ஒரு மனிதனைக் கொன்று விட்டீர்; அப்பொழுதும் நாம் உம்மை அக்கவலையிலிருந்து விடுவித்தோம்; மேலும் உம்மைப் பல சோதனைகளைக் கொண்டு சோதித்தோம். அப்பால் நீர் பல ஆண்டுகளாக மதியன் வாசிகளிடையே தங்கியிருந்தீர்; மூஸாவே! பிறகு நீர் (நம் தூதுக்குரிய) தக்க பருவத்தை அடைந்தீர்.
وَاصْطَنَعْتُكَ لِنَفْسِیْ ۟ۚ
وَاصْطَنَعْتُكَஇன்னும் நான் உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்لِنَفْسِى‌ۚ‏எனக்காகவே
வஸ்தனஃ துக லினFப்ஸீ
இன்னும், “எனக்காகவே நான் உம்மைத் (தூதராகத்) தேர்ந்தெடுத்திருக்கின்றேன்.
اِذْهَبْ اَنْتَ وَاَخُوْكَ بِاٰیٰتِیْ وَلَا تَنِیَا فِیْ ذِكْرِیْ ۟ۚ
اِذْهَبْசெல்வீர்களாக!اَنْتَநீரும்وَاَخُوْكَஉனது சகோதரரும்بِاٰيٰتِىْஎன் அத்தாட்சிகளைக் கொண்டுوَلَا تَنِيَاஇன்னும் நீங்கள் இருவரும் சோர்வடையாதீர்கள்فِىْ ذِكْرِى‌ۚ‏என்னை நினைவு கூர்வதில்
இத்ஹBப் அன்த வ அகூக Bபி ஆயாதீ வலா தனியா Fபீ திக்ரீ
“ஆகவே, நீரும் உம் சகோதரரும் என்னுடைய அத்தாட்சிகளுடன் செல்வீர்களாக! மேலும் என்னைத் தியானிப்பதில் (நீங்களிருவரும்) சளைக்காதீர்கள்.
اِذْهَبَاۤ اِلٰی فِرْعَوْنَ اِنَّهٗ طَغٰی ۟ۚۖ
اِذْهَبَاۤநீங்கள் இருவரும் செல்வீர்களாகاِلٰى فِرْعَوْنَஃபிர்அவ்னிடம்اِنَّهٗநிச்சயமாக அவன்طَغٰى‌ ۖۚ‌‏வரம்பு மீறிவிட்டான்
இத்ஹBபா இலா Fபிர்'அவ்ன இன்னஹூ தகா
“நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள்; நிச்சயமாக அவன் வரம்பு மீறிவிட்டான்.
فَقُوْلَا لَهٗ قَوْلًا لَّیِّنًا لَّعَلَّهٗ یَتَذَكَّرُ اَوْ یَخْشٰی ۟
فَقُوْلَاநீங்கள் இருவரும் கூறுவீர்களாகلَهٗஅவனுக்குقَوْلًاசொல்லைلَّيِّنًاமென்மையானلَّعَلَّهٗ يَتَذَكَّرُஅவன் நல்லறிவு பெறுகிறானாاَوْஅல்லதுيَخْشٰى‏பயப்படுகிறானா
Fபகூலா லஹூ கவ்லல் லய்யினல் ல அல்லஹூ யததக்க்கரு 'அவ் யக்-ஷா
“நீங்கள் இருவரும் அவனிடம் (சாந்தமாக) மென்மையான சொல்லால் சொல்லுங்கள்; அதனால், அவன் நல்லுபதேசம் பெறலாம்; அல்லது அச்சம் கொள்ளலாம்.”
قَالَا رَبَّنَاۤ اِنَّنَا نَخَافُ اَنْ یَّفْرُطَ عَلَیْنَاۤ اَوْ اَنْ یَّطْغٰی ۟
قَالَاஇருவரும் கூறினர்رَبَّنَاۤஎங்கள் இறைவன்اِنَّـنَاநிச்சயமாக நங்கள்نَخَافُபயப்படுகிறோம்اَنْ يَّفْرُطَஅவசரப்படுவதைعَلَيْنَاۤஎங்கள் மீதுاَوْஅல்லதுاَنْ يَّطْغٰى‏வரம்பு மீறுவதை
காலா ரBப்Bபனா இன்னனா னகாFபு அய் யFப்ருத 'அலய்னா அவ் அய் யத்கா
“எங்கள் இறைவனே! அவன் எங்களுக்குத் தீங்கிழைக்கத் தீவிரப்படவோ அல்லது வரம்பு மீறவோ செய்யலாம் என்று நாங்கள் பயப்படுகிறோம்” என்று (மூஸாவும், ஹாரூனும்) கூறினார்கள்.
قَالَ لَا تَخَافَاۤ اِنَّنِیْ مَعَكُمَاۤ اَسْمَعُ وَاَرٰی ۟
قَالَகூறினான்لَا تَخَافَآ‌இருவரும் பயப்படாதீர்கள்اِنَّنِىْநிச்சயமாக நான்مَعَكُمَاۤஉங்கள் இருவருடன்اَسْمَعُ(நான்) கேட்பவனாகوَاَرٰى‏இன்னும் பார்ப்பவனாக (இருக்கிறேன்)
கால லா தகாFபா இன்னனீ ம'அகுமா அஸ்ம'உ வ அரா
(அதற்கு அல்லாஹ்) “நீங்களிருவரும் அஞ்ச வேண்டாம்; நிச்சயமாக நான் (யாவற்றையும்) செவியேற்பவனாகவும், பார்ப்பவனாகவும் உங்களிருவருடனும் இருக்கிறேன்” என்று கூறினான்.
فَاْتِیٰهُ فَقُوْلَاۤ اِنَّا رَسُوْلَا رَبِّكَ فَاَرْسِلْ مَعَنَا بَنِیْۤ اِسْرَآءِیْلَ ۙ۬ وَلَا تُعَذِّبْهُمْ ؕ قَدْ جِئْنٰكَ بِاٰیَةٍ مِّنْ رَّبِّكَ ؕ وَالسَّلٰمُ عَلٰی مَنِ اتَّبَعَ الْهُدٰی ۟
فَاْتِيٰهُஆகவே இருவரும் வாருங்கள்فَقُوْلَاۤஇன்னும் கூறுங்கள்اِنَّاநிச்சயமாக நாங்கள்رَسُوْلَاதூதர்கள்رَبِّكَஉனது இறைவனின்فَاَرْسِلْஆகவே அனுப்பி விடுمَعَنَاஎங்களுடன்بَنِىْۤ اِسْرَآءِيْلَ ۙஇஸ்ரவேலர்களைوَلَا تُعَذِّبْهُمْ‌ ؕஇன்னும் அவர்களை வேதனை செய்யாதேقَدْ جِئْنٰكَதிட்டமாக உன்னிடம் நாங்கள் கொண்டு வந்துள்ளோம்بِاٰيَةٍஓர் அத்தாட்சியைمِّنْ رَّبِّكَ‌ ؕஉமது இறைவனிடமிருந்துوَالسَّلٰمُஈடேற்றம் உண்டாகுகعَلٰى مَنِ اتَّبَعَபின்பற்றியவருக்குالْهُدٰى‏நேர்வழியை
Fபாதியாஹு Fபகூலா இன்னா ரஸூலா ரBப்Bபிக Fப அர்ஸில் ம'அனா Bபனீ இஸ்ரா'ஈல வலா து'அத்திBப்ஹும் கத் ஜி'னாக Bபி ஆயதிம் மிர் ரBப்Bபிக வஸ்ஸ லாமு 'அலா மனித் தBப'அல் ஹுதா
“ஆகவே, நீங்கள் இருவரும் அவனிடம் சென்று: “நாங்களிருவரும் உன்னுடைய இறைவனின் தூதர்கள்; பனூ இஸ்ராயீல்களை எங்களுடன் அனுப்பி விடு; மேலும் அவர்களை வேதனை படுத்தாதே; திடனாக, நாங்கள் உன் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியை உனக்குக் கொண்டு வந்திருக்கிறோம்; இன்னும் எவர் நேர் வழியைப் பின்பற்றுகிறாரோ அவர் மீது (சாந்தி) ஸலாம் உண்டாவதாக” என்று சொல்லுங்கள்” (என்று அல்லாஹ் கட்டளையிட்டான்).
اِنَّا قَدْ اُوْحِیَ اِلَیْنَاۤ اَنَّ الْعَذَابَ عَلٰی مَنْ كَذَّبَ وَتَوَلّٰی ۟
اِنَّاநிச்சயமாக நாங்கள்قَدْதிட்டமாகاُوْحِىَவஹீ அறிவிக்கப்பட்டுள்ளதுاِلَـيْنَاۤஎங்களுக்குاَنَّநிச்சயமாகالْعَذَابَதண்டனைعَلٰىமீதுمَنْ كَذَّبَபொய்ப்பித்தவர்وَتَوَلّٰى‏புறக்கணித்து திரும்பினார்
இன்னா கத் ஊஹிய இலய்னா அன்ன்னல் 'அதாBப 'அலா மன் கத் தBப வ தவல்லா
“எவன் (நாங்கள் கொண்டு வந்திருப்பதை) பொய்ப்பித்து, புறக்கணிக்கிறானோ அவன் மீது நிச்சயமாக வேதனை ஏற்படும் என எங்களுக்கு உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது” (என்று நீங்கள் இருவரும் அவனுக்குக் கூறுங்கள்).
قَالَ فَمَنْ رَّبُّكُمَا یٰمُوْسٰی ۟
قَالَஅவன் கூறினான்فَمَنْயார்رَّبُّكُمَاஉங்கள் இருவரின் இறைவன்يٰمُوْسٰى‏மூஸாவே!
கால Fபமர் ரBப்Bபு குமா யா மூஸா
(இதற்கு ஃபிர்அவ்ன்) “மூஸாவே! உங்களிருவருடைய இறைவன் யார்?” என்று கேட்டான்.
قَالَ رَبُّنَا الَّذِیْۤ اَعْطٰی كُلَّ شَیْءٍ خَلْقَهٗ ثُمَّ هَدٰی ۟
قَالَஅவர் கூறினார்رَبُّنَاஎங்கள் இறைவன்الَّذِىْۤஎவன்اَعْطٰـىகொடுத்தான்كُلَّஒவ்வொருشَىْءٍபொருளுக்கும்خَلْقَهٗஅதற்குரியபடைப்பைثُمَّபிறகுهَدٰى‏வழிகாட்டினான்
கால ரBப்Bபுனல் லதீ அஃதா குல்ல ஷய்'இன் கல்கஹூ தும்ம ஹதா
“ஒவ்வொரு பொருளுக்கும் அதற்கான அமைப்பை வழங்கி பின்னர் வழிகாட்டியிருக்கிறானே அவன்தான் எங்கள் இறைவன்” என்று கூறினார்.
قَالَ فَمَا بَالُ الْقُرُوْنِ الْاُوْلٰی ۟
قَالَஅவன் கூறினான்فَمَا بَالُநிலை என்னவாகும்الْقُرُوْنِதலைமுறையினர்கள்الْاُوْلٰى‏முந்திய
கால Fபமா Bபாலுல் குரூனில் ஊலா
“அப்படியென்றால் முன் சென்ற தலைமுறைகளின் நிலைமை என்ன?” என்று கேட்டான்.
قَالَ عِلْمُهَا عِنْدَ رَبِّیْ فِیْ كِتٰبٍ ۚ لَا یَضِلُّ رَبِّیْ وَلَا یَنْسَی ۟ؗ
قَالَஅவர் கூறினார்عِلْمُهَاஅவர்களைப் பற்றிய ஞானம்عِنْدَ رَبِّىْஎன் இறைவனிடம்فِىْ كِتٰبٍ‌ۚபதிவுப் புத்தகத்தில்لَا يَضِلُّதவறு செய்துவிட மாட்டான்رَبِّىْஎன் இறைவன்وَلَا يَنْسَى‏இன்னும் மறக்கமாட்டான்
கால 'இல்முஹா 'இன்த ரBபீ Fபீ கிதாBப், லா யளில்லு ரBப்Bபீ வலா யன்ஸா
“இது பற்றிய அறிவு என்னுடைய இறைவனிடம் (பதிவுப்) புத்தகத்தில் இருக்கிறது; என் இறைவன் தவறுவதுமில்லை; மறப்பதுமில்லை” என்று (மூஸா பதில்) சொன்னார்.
الَّذِیْ جَعَلَ لَكُمُ الْاَرْضَ مَهْدًا وَّسَلَكَ لَكُمْ فِیْهَا سُبُلًا وَّاَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً ؕ فَاَخْرَجْنَا بِهٖۤ اَزْوَاجًا مِّنْ نَّبَاتٍ شَتّٰی ۟
الَّذِىْஎவன்جَعَلَஆக்கினான்لَـكُمُஉங்களுக்குالْاَرْضَபூமியைمَهْدًاவிரிப்பாகوَّسَلَكَஇன்னும் ஏற்படுத்தினான்لَـكُمْஉங்களுக்குفِيْهَاஅதில்سُبُلًاபாதைகளைوَّ اَنْزَلَஇன்னும் இறக்கினான்مِنَ السَّمَآءِவானத்திலிருந்துمَآءً ؕமழையைفَاَخْرَجْنَاஉற்பத்தி செய்கிறோம்بِهٖۤஅதன்மூலம்اَزْوَاجًاபல வகைகளைمِّنْ نَّبَاتٍதாவரங்களிலிருந்துشَتّٰى‏பலதரப்பட்ட
அல்லதீ ஜ'அல லகுமுல் அர்ள மஹ்த(ன்)வ் வ ஸலக லகும் Fபீஹா ஸுBபுல(ன்)வ் வ அன்Zஜல மினஸ் ஸமா'இ மா'அன் Fப அக்ரஜ்னா Bபிஹீ அZஜ்வாஜம் மின் னBபாதின் ஷத்தா
“(அவனே) உங்களுக்காக இப்பூமியை ஒரு விரிப்பாக அமைத்தான்; இன்னும் அதில் உங்களுக்குப் பாதைகளை இலேசாக்கினான்; மேலும் வானத்திலிருந்து நீரையும் இறக்கினான்; இம் மழை நீரைக் கொண்டு நாம் பல விதமான தாவரவர்க்கங்களை ஜோடி ஜோடியாக வெளிப்படுத்துகிறோம்” (என்று இறைவன் கூறுகிறான்).
كُلُوْا وَارْعَوْا اَنْعَامَكُمْ ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّاُولِی النُّهٰی ۟۠
كُلُوْاசாப்பிடுங்கள்وَارْعَوْاஇன்னும் மேய்த்துக் கொள்ளுங்கள்اَنْعَامَكُمْ‌ ؕஉங்கள் கால் நடைகளைاِنَّநிச்சயம்فِىْ ذٰ لِكَஇதில்لَاٰيٰتٍபல அத்தாட்சிகள்لِّاُولِى الـنُّهٰى‏அறிவுடையவர்களுக்கு
குலூ வர்'அவ் அன்'ஆமகும்; இன்ன Fபீ தாலிக ல ஆயாதில் லி உலின் னுஹா
“(அவற்றிலிருந்து) நீங்களும் புசித்து உங்கள் கால்நடைகளையும் மேய விடுங்கள்; நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குத் (தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன.”
مِنْهَا خَلَقْنٰكُمْ وَفِیْهَا نُعِیْدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً اُخْرٰی ۟
مِنْهَاஅதிலிருந்துதான்خَلَقْنٰكُمْஉங்களைப் படைத்தோம்وَفِيْهَاஇன்னும் அதில்தான்نُعِيْدُமீட்டுக் கொண்டுவருவோம்كُمْஉங்களைوَمِنْهَاஇன்னும் அதிலிருந்துதான்نُخْرِجُكُمْவெளியேற்றுவோம்تَارَةًமுறைاُخْرٰى‏மற்றொரு
மின்ஹா கலக்னாகும் வ Fபீஹா னு'ஈதுகும் வ மின்ஹா னுக்ரிஜுகும் தாரதன் உக்ரா
இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்; அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம்.
وَلَقَدْ اَرَیْنٰهُ اٰیٰتِنَا كُلَّهَا فَكَذَّبَ وَاَبٰی ۟
وَلَـقَدْ اَرَيْنٰهُதிட்டமாக அவனுக்கு நாம் காண்பித்தோம்اٰيٰتِنَاநமது அத்தாட்சிகள்كُلَّهَاஅனைத்தும்فَكَذَّبَஎனினும் அவன் பொய்ப்பித்தான்وَاَبٰى‏இன்னும் ஏற்க மறுத்தான்
வ லகத் அரய்னாஹு ஆயாதினா குல்லஹா Fபகத் தBப வ அBபா
நாம் நம்முடைய அத்தாட்சிகளையெல்லாம் ஃபிர்அவ்னுக்குக் காண்பித்தோம்; ஆனால் அவன் (அவற்றையெல்லாம்) பொய்யெனக் கூறி, நம்பிக்கை கொள்ள மறுத்து விட்டான்.
قَالَ اَجِئْتَنَا لِتُخْرِجَنَا مِنْ اَرْضِنَا بِسِحْرِكَ یٰمُوْسٰی ۟
قَالَஅவன் கூறினான்اَجِئْتَنَاஎங்களிடம் வந்தீரா?لِتُخْرِجَنَاஎங்களை நீர் வெளியேற்றுவதற்காகمِنْ اَرْضِنَاஎங்கள் பூமியிலிருந்துبِسِحْرِكَஉமது சூனியத்தால்يٰمُوْسٰى‏மூஸாவே!
கால அஜி'தனா லிதுக்ரி ஜனா மின் அர்ளினா Bபிஸிஹ்ரிக யா மூஸா
“மூஸாவே! நீர் உம் சூனியத்தைக் கொண்டு, எங்களை எங்கள் நாட்டை விட்டு வெளியேற்றுவதற்காகவா நம்மிடம் வந்தீர்?” என்று கூறினான்.
فَلَنَاْتِیَنَّكَ بِسِحْرٍ مِّثْلِهٖ فَاجْعَلْ بَیْنَنَا وَبَیْنَكَ مَوْعِدًا لَّا نُخْلِفُهٗ نَحْنُ وَلَاۤ اَنْتَ مَكَانًا سُوًی ۟
فَلَنَاْتِيَنَّكَநிச்சயமாக உம்மிடம் கொண்டு வருவோம்بِسِحْرٍஒரு சூனியத்தைمِّثْلِهٖஅதுபோன்றفَاجْعَلْஆகவே, ஏற்படுத்துبَيْنَنَاஎங்களுக்கு மத்தியிலும்وَبَيْنَكَஉங்களுக்கு மத்தியிலும்مَوْعِدًاகுறிப்பிட்ட நேரத்தைلَّا نُخْلِفُهٗஅதற்கு மாறுசெய்ய மாட்டோம்نَحْنُநாமும்وَلَاۤ اَنْتَநீயும் (அதற்கு மாறுசெய்யக் கூடாது)مَكَانًـاஓர் இடத்தில்سُوًى‏சமமான
Fபலனாதியன்னக Bபிஸிஹ்ரிம் மித்லிஹீ Fபஜ்'அல் Bபய்னனா வ Bபய்னக மவ்'இதல் லா னுக்லிFபுஹூ னஹ்னு வ லா அன்த மகானன் ஸுவா
“அவ்வாறாயின் இதைப் போன்ற சூனியத்தை நாங்களும் உமக்குத் திடனாகச் செய்து காண்பிப்போம்; ஆகவே, நாங்களோ அல்லது நீரோ மாற்றம் செய்ய முடியாதபடி நமக்கும் உமக்குமிடையே ஒரு வார்த்தைப் பாட்டை (எல்லோரும் வந்து காணக் கூடிய) ஒரு சரியான தலத்தில் ஏற்படுத்தும் (என்றான்).
قَالَ مَوْعِدُكُمْ یَوْمُ الزِّیْنَةِ وَاَنْ یُّحْشَرَ النَّاسُ ضُحًی ۟
قَالَஅவர் கூறினார்مَوْعِدُவாக்களிக்கப் பட்ட நேரம்كُمْஉங்களுக்குيَوْمُ الزِّيْنَةِயவ்முஸ் ஸீனாوَاَنْ يُّحْشَرَஇன்னும் ஒன்றுதிரட்டப்படுவதுالنَّاسُமக்கள்ضُحًى‏முற்பகலில்
கால மவ்'இதுகும் யவ்முZஜ் Zஜீனதி வ அய் யுஹ்ஷரன் னாஸு ளுஹா
“யவ்முஜ் ஸீனத்” (பண்டிகை நாளே) உங்களுடைய தவணையாகவும், மக்கள் யாவரும் ஒன்று சேரப்பெறும் ளுஹா (முற் பகல்) நேரமும் ஆக இருக்கட்டும்” என்று சொன்னார்.
فَتَوَلّٰی فِرْعَوْنُ فَجَمَعَ كَیْدَهٗ ثُمَّ اَتٰی ۟
فَتَوَلّٰىதிரும்பிச் சென்றான்فِرْعَوْنُஃபிர்அவ்ன்فَجَمَعَஒன்றிணைத்தான்كَيْدَهٗதனது சூழ்ச்சியைثُمَّபிறகுاَتٰى‏வந்தான்
Fபதவல்லா Fபிர்'அவ்னு Fபஜ்ஜம'அ கய்தஹூ தும்ம அதா
அவ்வாறே ஃபிர்அவ்ன் திரும்பிச் சென்று, (சூனியத்திற்கான) சூழ்ச்சிக்காரர்களை ஒன்று திரட்டிக் கொண்டு, மீண்டும் வந்தான்.
قَالَ لَهُمْ مُّوْسٰی وَیْلَكُمْ لَا تَفْتَرُوْا عَلَی اللّٰهِ كَذِبًا فَیُسْحِتَكُمْ بِعَذَابٍ ۚ وَقَدْ خَابَ مَنِ افْتَرٰی ۟
قَالَகூறினார்لَهُمْஅவர்களுக்குمُّوْسٰىமூஸாوَيْلَكُمْஉங்களுக்கு கேடுதான்لَا تَفْتَرُوْاகற்பனை செய்யாதீர்கள்عَلَى اللّٰهِஅல்லாஹ்வின் மீதுكَذِبًاபொய்யைفَيُسْحِتَكُمْஉங்களை அழித்து விடுவான்بِعَذَابٍ‌ۚவேதனையைக் கொண்டுوَقَدْதிட்டமாகخَابَநஷ்டமடைந்து விட்டான்مَنِஎவன்افْتَرٰى‏கற்பனை செய்தான்
கால லஹும் மூஸா வய்லகும் லா தFப்தரூ 'அலல் லாஹி கதிBபன் Fப யுஸ் ஹிதகும் Bபி 'அதாBப், வ கத் காBப மனிFப் தரா
(அப்பொழுது) மூஸா சூனியக் காரர்களிடம் “உங்களுக்குக் கேடுதான்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டாதீர்கள், (அவ்வாறு செய்தால்) அவன் வேதனையினால் உங்களை அழித்து விடுவான்; எவன் பொய்யை இட்டுக் கட்டுகிறானோ, திடனாக அவன் (நற்பேறு கெட்டு) அழிந்து விட்டான்” என்று கூறினார்.
فَتَنَازَعُوْۤا اَمْرَهُمْ بَیْنَهُمْ وَاَسَرُّوا النَّجْوٰی ۟
فَتَنَازَعُوْۤاஅவர்கள் தர்க்கித்துக் கொண்டனர்اَمْرَகாரியத்தில்هُمْதங்கள்بَيْنَهُمْதங்களுக்கு மத்தியில்وَاَسَرُّواஇன்னும் அவர்கள் இரகசியமாக ஆக்கிக் கொண்டனர்النَّجْوٰى‏அந்த பேச்சை
FபதனாZஜ'ஊ அம்ரஹும் Bபய்னஹும் வ அஸர்ருன் னஜ்வா
சூனியக்காரர்கள் தமக்குள்ளே தங்கள் காரியத்தைக் குறித்து(த் தங்களிடையே) விவாதித்து, (அவ்விவாதத்தை) இரகசிய ஆலோசனையாகவும் வைத்துக் கொண்டனர்.
قَالُوْۤا اِنْ هٰذٰىنِ لَسٰحِرٰنِ یُرِیْدٰنِ اَنْ یُّخْرِجٰكُمْ مِّنْ اَرْضِكُمْ بِسِحْرِهِمَا وَیَذْهَبَا بِطَرِیْقَتِكُمُ الْمُثْلٰی ۟
قَالُوْۤاஅவர்கள் கூறினார்கள்اِنْ هٰذٰٮنِநிச்சயமாக இந்த இருவரும்لَسٰحِرٰنِசூனியக்காரர்கள்يُرِيْدٰنِஅவ்விருவரும் நாடுகின்றனர்اَنْ يُّخْرِجٰكُمْஉங்களை வெளியேற்றுவதற்கு(ம்)مِّنْ اَرْضِكُمْஉங்கள் பூமியிலிருந்துبِسِحْرِهِمَاதங்கள் சூனியத்தைக் கொண்டுوَيَذْهَبَاஇன்னும் அவ்விருவரும் மிகைத்து விடுவதற்குبِطَرِيْقَتِكُمُஉங்கள்தலைவர்களைالْمُثْلٰى‏சிறந்த
காலூ இன் ஹாதானி லஸாஹிரானி யுரீதானி அய் யுக்ரிஜாகும் மின் அர்ளிகும் Bபிஸிஹ்ரிஹிமா வ யத்ஹBபா Bபிதரீகதிகுமுல் முத்லா
(சூனியக்காரர்கள் மக்களை நோக்கி:) “நிச்சயமாக இவ்விருவரும் சூனியக்காரர்களே! தம்மிருவருடைய சூனியத்தைக் கொண்டு உங்களை உங்களுடைய நாட்டை விட்டு வெளியேற்றவும், சிறப்பான உங்களுடைய (மார்க்கப்) பாதையைப் போக்கிவிடவுமே இவ்விருவரும் விரும்புகிறார்கள்.
فَاَجْمِعُوْا كَیْدَكُمْ ثُمَّ ائْتُوْا صَفًّا ۚ وَقَدْ اَفْلَحَ الْیَوْمَ مَنِ اسْتَعْلٰی ۟
فَاَجْمِعُوْاஆகவே உறுதிப்படுத்துங்கள்كَيْدَசூழ்ச்சிகளைكُمْஉங்கள்ثُمَّபின்புائْتُوْاவாருங்கள்صَفًّا‌ ۚஓர் அணியாகوَقَدْதிட்டமாகاَفْلَحَவெற்றி அடைந்து விட்டார்الْيَوْمَஇன்றைய தினம்مَنِ اسْتَعْلٰى‏மிகைத்தவர்
Fப அஜ்மி'ஊ கய்தகும் தும்ம்ம'தூ ஸFப்Fபா; வ கத் அFப்லஹல் யவ்ம மனிஸ் தஃலா
“ஆகவே உங்கள் திட்டத்தை ஒரு சேரத் தீர்மானித்துக் கொண்டு அணி அணியாக வாருங்கள்; இன்றைய தினம் எவருடைய (கை) மேலோங்குகிறதோ, நிச்சயமாக அவர்தாம் வெற்றியடைவார்” (என்றுங் கூறினார்).
قَالُوْا یٰمُوْسٰۤی اِمَّاۤ اَنْ تُلْقِیَ وَاِمَّاۤ اَنْ نَّكُوْنَ اَوَّلَ مَنْ اَلْقٰی ۟
قَالُوْاஅவர்கள் கூறினர்يٰمُوْسٰٓىமூஸாவே!اِمَّاۤ اَنْ تُلْقِىَஒன்று நீர் எறிவீராகوَاِمَّاۤ اَنْ نَّكُوْنَஅவர்கள் நாங்கள் இருப்போம்اَوَّلَமுதலாவதாகمَنْ اَلْقٰى‏எறிபவர்களில்
காலூ யா மூஸா இம்மா அன் துல்கிய வ இம்மா அன் னகூன அவ்வல மன் அல்கா
“மூஸாவே! நீர் எறிகின்றீரா? எறிகிறவர்களில் நாங்கள் முதலாவதாக இருக்கட்டுமா?” என்று (சூனியக்காரர்கள்) கேட்டனர்.
قَالَ بَلْ اَلْقُوْا ۚ فَاِذَا حِبَالُهُمْ وَعِصِیُّهُمْ یُخَیَّلُ اِلَیْهِ مِنْ سِحْرِهِمْ اَنَّهَا تَسْعٰی ۟
قَالَஅவர் கூறினார்بَلْமாறாகاَلْقُوْا‌ۚநீங்கள் எறியுங்கள்فَاِذَاஆக, அப்போதுحِبَالُهُمْஅவர்களுடைய கயிர்களும்وَعِصِيُّهُمْஅவர்களுடைய தடிகளும்يُخَيَّلُதோற்றமளிக்கப்பட்டதுاِلَيْهِஅவருக்குمِنْ سِحْرِهِمْஅவர்களுடைய சூனியத்தால்اَنَّهَاஅவைتَسْعٰى‏ஓடுவதாக
கால Bபல் அல்கூ Fப இதா ஹிBபாலுஹும் வ 'இஸிய்யுஹும் யுகய்யலு இலய்ஹி மின் ஸிஹ்ரிஹிம் அன்னஹா தஸ்'ஆ
அதற்கவர்: “அவ்வாறன்று! நீங்களே (முதலில்) எறியுங்கள்” என்று (மூஸா) கூறினார். (அவர்கள் எறியவே) அவர்களுடைய கயிறுகளும் அவர்களுடைய தடிகளும் அவர்கள் சூனியத்தால் (பாம்புகளாக) நிச்சயமாக நெளிந்தோடுவது போல் அவருக்குத் தோன்றியது.
فَاَوْجَسَ فِیْ نَفْسِهٖ خِیْفَةً مُّوْسٰی ۟
فَاَوْجَسَஅவர் உணர்ந்தார்فِىْ نَفْسِهٖதனது உள்ளத்தில்خِيْفَةًபயத்தைمُّوْسٰى‏மூஸா
Fப அவ்ஜஸ Fபீ னFப்ஸிஹீ கீFபதம் மூஸா
அப்போது, மூஸா தம் மனதில் அச்சம் கொண்டார்.
قُلْنَا لَا تَخَفْ اِنَّكَ اَنْتَ الْاَعْلٰی ۟
قُلْنَاநாம் கூறினோம்لَا تَخَفْபயப்படாதீர்اِنَّكَ اَنْتَநிச்சயமாக நீதான்الْاَعْلٰى‏மிகைத்தவர்
குல்னா லா தகFப் இன்னக அன்தல் அஃலா
“(மூஸாவே!) நீர் பயப்படாதீர்! நிச்சயமாக நீர் தாம் மேலோங்கி நிற்பீர்!” என்று நாம் சொன்னோம்.
وَاَلْقِ مَا فِیْ یَمِیْنِكَ تَلْقَفْ مَا صَنَعُوْا ؕ اِنَّمَا صَنَعُوْا كَیْدُ سٰحِرٍ ؕ وَلَا یُفْلِحُ السَّاحِرُ حَیْثُ اَتٰی ۟
وَاَ لْقِஇன்னும் எறிவீராகمَا فِىْ يَمِيْنِكَஉமது கையில் உள்ளதைتَلْقَفْவிழுங்கி விடும்مَا صَنَعُوْا‌அவர்கள் செய்ததைؕاِنَّمَا صَنَعُوْاஅவர்கள் செய்ததெல்லாம்كَيْدُசூழ்ச்சிதான்سٰحِرٍ‌ ؕஒரு சூனியக்காரனின்وَلَا يُفْلِحُவெற்றிபெற மாட்டான்السّٰحِرُசூனியக்காரன்حَيْثُ اَتٰى‏எங்கிருந்து வந்தாலும்
வ அல்கி மா Fபீ யமீ னிக தல்கFப் மா ஸன'ஊ; இன்னமா ஸன'ஊ கய்து ஸாஹிர்; வலா யுFப்லிஹுஸ் ஸாஹிரு ஹய்து அதா
“இன்னும், உம் வலது கையில் இருப்பதை நீர் கீழே எறியும்; அவர்கள் செய்த (சூனியங்கள் யா)வற்றையும் அது விழுங்கி விடும்; அவர்கள் செய்தது சூனியக்காரனின் சூழ்ச்சியே ஆகும்; ஆகவே சூனியக்காரன் எங்கு சென்றாலும் வெற்றி பெற மாட்டான்” (என்றும் கூறினோம்).
فَاُلْقِیَ السَّحَرَةُ سُجَّدًا قَالُوْۤا اٰمَنَّا بِرَبِّ هٰرُوْنَ وَمُوْسٰی ۟
فَاُلْقِىَஆக, விழுந்தனர்السَّحَرَةُசூனியக்காரர்கள்سُجَّدًاசிரம்பணிந்தவர்களாகقَالُوْۤاகூறினார்கள்اٰمَنَّاநம்பிக்கை கொண்டோம்بِرَبِّஇறைவனைக்கொண்டுهٰرُوْنَஹாரூன்وَمُوْسٰى‏இன்னும் மூஸாவுடைய
Fப உல்கியஸ் ஸஹரது ஸுஜ்ஜதன் காலூ ஆமன்னா Bபி ரBப்Bபி ஹாரூன வ மூஸா
(மூஸா வெற்றி பெற்றதும்) சூனியக்காரர்கள் ஸுஜூது செய்தவர்களாக வீழ்த்தப்பட்டு - “ஹாரூனுடைய மூஸாவுடைய இறைவன் மீதே நாங்கள் ஈமான் கொள்கிறோம்” என்று கூறினார்கள்.
قَالَ اٰمَنْتُمْ لَهٗ قَبْلَ اَنْ اٰذَنَ لَكُمْ ؕ اِنَّهٗ لَكَبِیْرُكُمُ الَّذِیْ عَلَّمَكُمُ السِّحْرَ ۚ فَلَاُقَطِّعَنَّ اَیْدِیَكُمْ وَاَرْجُلَكُمْ مِّنْ خِلَافٍ وَّلَاُوصَلِّبَنَّكُمْ فِیْ جُذُوْعِ النَّخْلِ ؗ وَلَتَعْلَمُنَّ اَیُّنَاۤ اَشَدُّ عَذَابًا وَّاَبْقٰی ۟
قَالَகூறினான்اٰمَنْتُمْநம்பிக்கை கொண்டீர்களா?لَهٗஅவரைقَبْلَமுன்னர்اَنْ اٰذَنَநான் அனுமதியளிப்பதற்குلَـكُمْ‌ؕஉங்களுக்குاِنَّهٗநிச்சயமாக அவர்لَـكَبِيْرُكُمُஉங்கள் பெரியவர்الَّذِىْ عَلَّمَكُمُஅவர் உங்களுக்கு கற்றுக்கொடுத்தார்السِّحْرَ‌ۚசூனியத்தைفَلَاُقَطِّعَنَّஆகவே, நிச்சயமாக வெட்டுவேன்اَيْدِيَكُمْஉங்கள் கைகளைوَاَرْجُلَكُمْஉங்கள் கால்களைمِّنْ خِلَافٍமாற்றமாகوَّلَاُصَلِّبَـنَّكُمْஉங்களை நிச்சயமாக கழுமரத்தில் ஏற்றுவேன்فِىْ جُذُوْعِபலகைகளில்النَّخْلِபேரித்த மரத்தின்وَلَـتَعْلَمُنَّநிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள்اَيُّنَاۤஎங்களில் யார்اَشَدُّகடினமானவர்عَذَابًاவேதனை செய்வதில்وَّاَبْقٰى‏நிரந்தரமானவர்
கால ஆமன்தும் லஹூ கBப்ல அன் ஆதன லகும்; இன்னஹூ லகBபீருகுமுல் லதீ 'அல்லம குமுஸ் ஸிஹ்ர Fபல உகத்தி'அன்ன அய்தியகும் வ அர்ஜுலகும் மின் கிலாFபி(ன்)வ் வ ல உஸல்லிBபன்னகும் Fபீ ஜுதூ'இன் னக்லி வ லதஃலமுன்ன அய்யுனா அஷத்து 'அதாBப(ன்)வ் வ அBப்கா
“நான் உங்களை அனுமதிக்கும் முன்னரே நீங்கள் அவர் மேல் ஈமான் கொண்டு விட்டீர்களா? நிச்சயமாக அவர் உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுக் கொடுத்த தலைவர் (போல் தோன்றுகிறது); எனவே, நான் உங்களை மாறு கை, மாறு கால் வாங்கி, பேரீத்த மரக்கட்டைகளில் உங்களைக் கழுவேற்றுவேன்; மேலும் வேதனை கொடுப்பதில் நம்மில் கடுமையானவர் யார், அதில் நிலையாக இருப்பவரும் யார் என்பதை நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள்” என்று (ஃபிர்அவ்ன்) கூறினான்.
قَالُوْا لَنْ نُّؤْثِرَكَ عَلٰی مَا جَآءَنَا مِنَ الْبَیِّنٰتِ وَالَّذِیْ فَطَرَنَا فَاقْضِ مَاۤ اَنْتَ قَاضٍ ؕ اِنَّمَا تَقْضِیْ هٰذِهِ الْحَیٰوةَ الدُّنْیَا ۟ؕ
قَالُوْاஅவர்கள் கூறினர்لَنْ نُّؤْثِرَكَநாம் உம்மை தேர்ந்தெடுக்க மாட்டோம்عَلٰى مَا جَآءَنَاஎங்களிடம் வந்ததை விடمِنَ الْبَيِّنٰتِதெளிவான அத்தாட்சிகளில் இருந்துوَالَّذِىْ فَطَرَنَا‌எங்களைப் படைத்தவனை விடفَاقْضِஆகவே நீ செய்مَاۤஎதைاَنْتَநீقَاضٍ‌ ؕசெய்பவனாக இருக்கிறாயோاِنَّمَا تَقْضِىْநீ செய்வதெல்லாம்هٰذِهِஇந்தالْحَيٰوةَ الدُّنْيَا ؕ‏உலக வாழ்க்கையில்தான்
காலூ லன் னு'திரக 'அலா மா ஜா'அனா மினல் Bபய்யினாதி வல்லதீ Fபதரனா Fபக்ளிமா அன்த காள்; இன்னமா தக்ளீ ஹாதிஹில் ஹயாதத் துன்யா
(மனந்திருந்திய அவர்கள் ஃபிர்அவ்னிடம்) “எங்களுக்கு வந்துள்ள தெளிவான அத்தாட்சிகளை விடவும், எங்களைப் படைத்தவனை விடவும் உன்னை (மேலானவனாக) நாங்கள் எடுத்துக் கொள்ள மாட்டோம்; ஆகவே என்ன தீர்ப்புச் செய்ய நீ இருக்கிறாயோ அவ்வாறே தீர்ப்புச் செய்துகொள்; நீ தீர்ப்புச் செய்வதெல்லாம் இவ்வுலக வாழ்க்கையில் தான்” என்று கூறினார்.
اِنَّاۤ اٰمَنَّا بِرَبِّنَا لِیَغْفِرَ لَنَا خَطٰیٰنَا وَمَاۤ اَكْرَهْتَنَا عَلَیْهِ مِنَ السِّحْرِ ؕ وَاللّٰهُ خَیْرٌ وَّاَبْقٰی ۟
اِنَّاۤநிச்சயமாக நாங்கள்اٰمَنَّاநம்பிக்கை கொண்டோம்بِرَبِّنَاஎங்கள் இறைவனைلِيَـغْفِرَஅவன் மன்னிப்பதற்காகلَـنَاஎங்களுக்குخَطٰيٰنَاஎங்கள் பாவங்களைوَمَاۤஇன்னும் எதுاَكْرَهْتَـنَاநீ எங்களை நிர்ப்பந்தித்தாய்عَلَيْهِஅதை செய்வதற்குمِنَ السِّحْرِؕ‌சூனியத்தில்وَاللّٰهُஅல்லாஹ்தான்خَيْرٌமிகச் சிறந்தவன்وَّاَبْقٰى‏மிக நிரந்தரமானவன்
இன்னா ஆமன்னா Bபி ரBப்Bபினா லியக்Fபிர லனா கதாயானா வ மா அக்ரஹ்தனா 'அலய்ஹி மினஸ் ஸிஹ்ர்; வல்லாஹு கய்ரு(ன்)வ் வ அBப்கா
“எங்களின் தவறுகளையும், எங்களை நீ கட்டாயப் படுத்தியதினால் (நாங்கள் செய்ய நேர்ந்த) சூனியத்தையும், எங்களுக்கு மன்னிப்பதற்காக எங்கள் இறைவன் மீது நிச்சயமாக நாங்கள் ஈமான் கொண்டோம்; மேலும், அல்லாஹ் தான் மிக்க மேலானவனாகவும், (என்றும்) நிலைத்திருப்பவனாகவும் இருக்கின்றான்” (என்று கூறினார்கள்).
اِنَّهٗ مَنْ یَّاْتِ رَبَّهٗ مُجْرِمًا فَاِنَّ لَهٗ جَهَنَّمَ ؕ لَا یَمُوْتُ فِیْهَا وَلَا یَحْیٰی ۟
اِنَّهٗநிச்சயமாக விஷயமாவதுمَنْஎவன்يَّاْتِவருகிறானோرَبَّهٗதன் இறைவனிடம்مُجْرِمًاபாவியாகفَاِنَّநிச்சயமாகلَهٗஅவனுக்குجَهَـنَّمَ‌ۚநரகம்தான்لَا يَمُوْتُஅவன் மரணிக்க மாட்டான்فِيْهَاஅதில்وَ لَا يَحْيٰى‏வாழவும் மாட்டான்
இன்னஹூ மய் ய'தி ரBப்Bபஹூ முஜ்ரிமன் Fப இன்ன லஹூ ஜஹன்னம லா யமூது Fபீஹா வலா யஹ்யா
நிச்சயமாக எவன் தன் இறைவனிடத்தில் குற்றவாளியாக வருகிறானோ, அவனுக்கு நரகம் நிச்சயமாக இருக்கிறது; அதில் அவன் மரணிக்கவும் மாட்டான் வாழவும் மாட்டான்.
وَمَنْ یَّاْتِهٖ مُؤْمِنًا قَدْ عَمِلَ الصّٰلِحٰتِ فَاُولٰٓىِٕكَ لَهُمُ الدَّرَجٰتُ الْعُلٰی ۟ۙ
وَمَنْஇன்னும் யார்يَّاْتِهٖஅவனிடம்வருவாரோمُؤْمِنًاநம்பிக்கையாளராகقَدْ عَمِلَதிட்டமாக செய்தார்الصّٰلِحٰتِநன்மைகளைفَاُولٰٓٮِٕكَ لَهُمُஅவர்களுக்குத்தான்الدَّرَجٰتُதகுதிகள் உண்டுالْعُلٰىۙ‏மிக உயர்ந்த
வ மய் ய'திஹீ மு'மினன் கத் 'அமிலஸ் ஸாலிஹாதி Fப உலா'இக லஹுமுத் தரஜாதுல் 'உலா
ஆனால், எவர்கள் முஃமினாக, ஸாலிஹான (நல்ல) செயல்களைச் செய்தவர்களாக அவனிடம் வருகிறார்களோ, அவர்களுக்கு மேலான பதவிகள் உண்டு.
جَنّٰتُ عَدْنٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَا ؕ وَذٰلِكَ جَزٰٓؤُا مَنْ تَزَكّٰی ۟۠
جَنّٰتُசொர்க்கங்கள்عَدْنٍஅத்ன்تَجْرِىْஓடும்مِنْ تَحْتِهَاஅவற்றின் கீழேالْاَنْهٰرُநதிகள்خٰلِدِيْنَஅவர்கள் நிரந்தரமானவர்களாகفِيْهَا‌ ؕஅதில்وَذٰ لِكَஇதுதான்جَزَآءُகூலியாகும்مَنْஎவர்تَزَكّٰى‏பரிசுத்தமானார்
ஜன்னாது 'அத்னின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு காலிதீன Fபீஹா; வ தாலிக ஜZஜா'உ மன் தZஜக்கா
(அத்தகையவர்க்கு) என்றென்றும் நிலைத்திருக்கும் சுவனபதிகள் உண்டு; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்; அவற்றில் அவர் என்றென்றும் வசிப்பர்; இதுவே (பாவங்கள் நீங்கித்) தூய்மையானவர்களின் (நற்) கூலியாகும்.
وَلَقَدْ اَوْحَیْنَاۤ اِلٰی مُوْسٰۤی ۙ۬ اَنْ اَسْرِ بِعِبَادِیْ فَاضْرِبْ لَهُمْ طَرِیْقًا فِی الْبَحْرِ یَبَسًا ۙ لَّا تَخٰفُ دَرَكًا وَّلَا تَخْشٰی ۟
وَلَقَدْதிட்டவட்டமாகاَوْحَيْنَاۤநாம் வஹீ அறிவித்தோம்اِلٰى مُوْسٰٓى ۙமூஸாவிற்குاَنْ اَسْرِஇரவில் அழைத்துச் செல்வீராகبِعِبَادِىْஎன் அடியார்களைفَاضْرِبْஇன்னும் ஏற்படுத்துவீராகلَهُمْஅவர்களுக்காகطَرِيْقًاஒரு பாதையைفِى الْبَحْرِகடலில்يَبَسًا ۙகாய்ந்தلَّا تَخٰفُநீர் பயப்பட மாட்டீர்دَرَكًاபிடிக்கப்படுவதைوَّلَا تَخْشٰى‏அஞ்சமாட்டீர்
வ லகத் அவ்ஹய்னா இலா மூஸா அன் அஸ்ரி Bபி'இBபாதீ Fபள்ரிBப் லஹும் தரீகன் Fபில் Bபஹ்ரி யBபஸல் லா தகாFபு தரக(ன்)வ் வலா தக்-ஷா
இன்னும்: “நீர் என் அடியார்களுடன் இரவோடிரவாகப் பயணம் செய்து, அவர்களுக்காக கடலில் உலர்ந்த பாதையை உண்டாக்கிக் கொள்வீராக! (ஃபிர்அவ்ன் உம்மைப்) பிடித்துவிடுவான் என்று பயப்படாமலும், (கடலில் மூழ்கி விடுவோம் என்று) அஞ்சாமலும் இருப்பீராக!” என்று மூஸாவுக்கு நாம் திட்டமாக வஹீ அறிவித்தோம்.
فَاَتْبَعَهُمْ فِرْعَوْنُ بِجُنُوْدِهٖ فَغَشِیَهُمْ مِّنَ الْیَمِّ مَا غَشِیَهُمْ ۟ؕ
فَاَتْبَعَهُمْஅவர்களைப் பின்தொடர்ந்தான்فِرْعَوْنُஃபிர்அவ்ன்بِجُنُوْدِهٖதனது படைகளைக்கொண்டுفَغَشِيَهُمْஆகவே, அவர்களை சூழவேண்டியதுمِّنَ الْيَمِّகடலில் இருந்துمَا غَشِيَهُمْؕ‏எது/ சூழ்ந்தது/அவர்களை
Fப அத்Bப'அஹும் Fபிர்'அவ்னு Bபிஜுனூதிஹீ Fபகஷியஹும் மினல் யம்ம்மி மா கஷி யஹும்
மேலும் ஃபிர்அவ்ன் தன் சேனைகளுடன் அவர்களைப் பின் தொடர்ந்தான்; ஆனால் கடல் அவர்களை முற்றாக மூழ்கடித்து விட்டது.
وَاَضَلَّ فِرْعَوْنُ قَوْمَهٗ وَمَا هَدٰی ۟
وَاَضَلَّவழிகெடுத்தான்فِرْعَوْنُஃபிர்அவ்ன்قَوْمَهٗதன் சமுதாயத்தினரைوَمَا هَدٰى‏அவன் நேர்வழி காட்டவில்லை
வ அளல்ல Fபிர்'அவ்னு கவ்மஹூ வமா ஹதா
ஃபிர்அவ்ன் தன் சமூகத்தாரை வழி கெடுத்தான்; நேரான பாதையை (அவர்களுக்குக்) காட்டவுமில்லை.
یٰبَنِیْۤ اِسْرَآءِیْلَ قَدْ اَنْجَیْنٰكُمْ مِّنْ عَدُوِّكُمْ وَوٰعَدْنٰكُمْ جَانِبَ الطُّوْرِ الْاَیْمَنَ وَنَزَّلْنَا عَلَیْكُمُ الْمَنَّ وَالسَّلْوٰی ۟
يٰبَنِىْۤ اِسْرَآءِيْلَஇஸ்ரவேலர்களே!قَدْதிட்டமாகاَنْجَيْنٰكُمْஉங்களை நாம் பாதுகாத்தோம்مِّنْ عَدُوِّஎதிரிகளிடமிருந்துكُمْஉங்கள்وَوٰعَدْنٰكُمْஇன்னும் உங்களுக்கு வாக்களித்தோம்جَانِبَபகுதியைالطُّوْرِதூர் மலைالْاَيْمَنَவலதுوَنَزَّلْنَاஇன்னும் இறக்கினோம்عَلَيْكُمُஉங்கள் மீதுالْمَنَّமன்னுوَالسَّلْوٰى‏ஸல்வா
யா Bபனீ இஸ்ரா'ஈல கத் அன்ஜய்னாகும் மின் 'அதுவ் விகும் வ வ'அத்னாகும் ஜானிBபத் தூரில் அய்மன வ னZஜ்Zஜல்னா 'அலய்குமுல் மன்ன வஸ் ஸல்வா
“இஸ்ராயீலின் சந்ததியினரே! நாம் திட்டமாக உங்களை உங்கள் பகைவனிடமிருந்து இரட்சித்தோம்; மேலும், தூர்(ஸினாய் மலையின்) வலப்பக்கத்தில் நாம் (தவ்ராத் வேதத்தை அருள்வதாக) உங்களுக்கு வாக்குறுதியளித்தோம்; இன்னும் “மன்னு ஸல்வாவை” (உணவாக) உங்கள் மீது நாம் இறக்கி வைத்தோம்.
كُلُوْا مِنْ طَیِّبٰتِ مَا رَزَقْنٰكُمْ وَلَا تَطْغَوْا فِیْهِ فَیَحِلَّ عَلَیْكُمْ غَضَبِیْ ۚ وَمَنْ یَّحْلِلْ عَلَیْهِ غَضَبِیْ فَقَدْ هَوٰی ۟
كُلُوْاபுசியுங்கள்مِنْ طَيِّبٰتِநல்லவற்றிலிருந்துمَا رَزَقْنٰكُمْநாம் உங்களுக்கு வழங்கியوَلَا تَطْغَوْاஎல்லை மீறாதீர்கள்فِيْهِஅதில்فَيَحِلَّஇறங்கிவிடும்عَلَيْكُمْஉங்கள் மீதுغَضَبِىْ‌ۚஎன் கோபம்وَمَنْஎவன்يَّحْلِلْஇறங்கி விடுகிறதோعَلَيْهِமீதுغَضَبِىْஎன் கோபம்فَقَدْதிட்டமாகهَوٰى‏அவன் வீழ்ந்து விடுவான்
குலூ மின் தய்யிBபாதி மா ரZஜக்னாகும் வலா தத்கவ் Fபீஹி Fப யஹில்ல 'அலய்கும் களBபீ வ மய் யஹ்லில் 'அலய்ஹி களBபீ Fபகத் ஹவா
“நாம் உங்களுக்கு அளித்துள்ள தூய்மையானவற்றிலிருந்து உண்ணுங்கள்; (அதற்கு நன்றி செலுத்தாமல்) அழிச்சாட்டியம் செய்யாதீர்கள்; (அப்படி செய்வீர்களானால்) உங்கள் மீது என் கோபம் இறங்கி விடும்; மேலும், எவன் மீது என் கோபம் இறங்குகிறதோ, அவன் நிச்சயமாக வீழ்வான்.
وَاِنِّیْ لَغَفَّارٌ لِّمَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ صَالِحًا ثُمَّ اهْتَدٰی ۟
وَاِنِّىْநிச்சயமாக நான்لَـغَفَّارٌமிகவும் மன்னிக்கக்கூடியவன்لِّمَنْ تَابَதிருந்தியவரைوَاٰمَنَஇன்னும் நம்பிக்கைகொண்டார்وَعَمِلَ صَالِحًـاநன்மை செய்தார்ثُمَّபின்னர்اهْتَدٰى‏நேர்வழி பெற்றார்
வ இன்னீ ல கFப்Fபாருல் லிமன் தாBப வ ஆமன வ 'அமில ஸாலிஹன் தும்மஹ் ததா
“எவன் பாவமன்னிப்புத் தேடி ஈமான் கொண்டு நற்செயல்களையும் செய்து அப்பால் நேர்வழியும் அடைகிறானோ அவனுக்கு நிச்சயமாக நான் மிகவும் மன்னிப்பவனாக இருக்கின்றேன்” (என்று கூறினோம்).
وَمَاۤ اَعْجَلَكَ عَنْ قَوْمِكَ یٰمُوْسٰی ۟
وَمَاۤஎது?اَعْجَلَكَஉம்மை அவசரமாக வரவழைத்ததுعَنْ قَوْمِكَஉமது சமுதாயத்தை விட்டுيٰمُوْسٰى‏மூஸாவே!
வ மா அஃஜலக 'அன் கவ்மிக யா மூஸா
“மூஸாவே! உம் சமூகத்தாரை விட்டு உம்மை இவ்வளவு சீக்கிரம் விரைந்து வரச்செய்தது யாது?” (என்று தூர் ஸினாய் மலைக்கு அவர்கள் வந்த போது அல்லாஹ் கேட்டான்.)
قَالَ هُمْ اُولَآءِ عَلٰۤی اَثَرِیْ وَعَجِلْتُ اِلَیْكَ رَبِّ لِتَرْضٰی ۟
قَالَஅவர் கூறினார்هُمْ اُولَاۤءِஅவர்கள்عَلٰٓىமீதுاَثَرِىْஎன் அடிச்சுவட்டின்وَ عَجِلْتُநான் விரைந்தேன்اِلَيْكَஉன் பக்கம்رَبِّஎன் இறைவாلِتَرْضٰى‏நீ திருப்தி கொள்வதற்காக
கால ஹும் உலா'இ 'அலா அதரீ வ 'அஜில்து இலய்க ரBப்Bபி லிதர்ளா
(அதற்கவர்) “அவர்களும் என் அடிச்சுவட்டின் மீதே வருகின்றனர்; இன்னும் (என்) இறைவனே! நீ என்னைப் பற்றித் திருப்திப் படுவதற்காக, நான் உன்னிடத்தில் விரைந்து வந்தேன்” என்று கூறினார்.
قَالَ فَاِنَّا قَدْ فَتَنَّا قَوْمَكَ مِنْ بَعْدِكَ وَاَضَلَّهُمُ السَّامِرِیُّ ۟
قَالَகூறினான்فَاِنَّاநிச்சயமாக நாம்قَدْ فَتَـنَّاதிட்டமாக சோதித்தோம்قَوْمَكَஉமது சமுதாயத்தைمِنْۢ بَعْدِكَஉமக்குப் பின்னர்وَاَضَلَّهُمُஇன்னும் அவர்களை வழிகெடுத்தான்السَّامِرِىُّ‏ஸாமிரி
கால Fப இன்னா கத் Fபதன்னா கவ்மக மிம் Bபஃதிக வ அளல்லஹுமுஸ் ஸாமிரிய்ய்
“நிச்சயமாக, (நீர் இங்கு வந்த) பின்னர் உம்முடைய சமூகத்தாரைச் சோதித்தோம்; இன்னும் அவர்களை “ஸாமிரி” வழிகெடுத்து விட்டான்” என்று (அல்லாஹ்) கூறினான்.
فَرَجَعَ مُوْسٰۤی اِلٰی قَوْمِهٖ غَضْبَانَ اَسِفًا ۚ۬ قَالَ یٰقَوْمِ اَلَمْ یَعِدْكُمْ رَبُّكُمْ وَعْدًا حَسَنًا ؕ۬ اَفَطَالَ عَلَیْكُمُ الْعَهْدُ اَمْ اَرَدْتُّمْ اَنْ یَّحِلَّ عَلَیْكُمْ غَضَبٌ مِّنْ رَّبِّكُمْ فَاَخْلَفْتُمْ مَّوْعِدِیْ ۟
فَرَجَعَதிரும்பினார்مُوْسَىٰۤமூஸாاِلٰى قَوْمِهٖதனது சமுதாயத்திடம்غَضْبَانَகோபமானவராகاَسِفًا  ۙகவலையடைந்தவராகقَالَகூறினார்يٰقَوْمِஎன் சமுதாயமேاَلَمْ يَعِدْவாக்களிக்கவில்லையாكُمْஉங்களுக்குرَبُّكُمْஉங்கள் இறைவன்وَعْدًا حَسَنًا  ۙஅழகிய வாக்கைاَفَطَالَதூரமாகிவிட்டதாعَلَيْكُمُஉங்களுக்குالْعَهْدُகாலம்اَمْஅல்லதுاَرَدْتُّمْநீங்கள் நாடுகிறீர்களாاَنْ يَّحِلَّஇறங்குவதைعَلَيْكُمْஉங்கள் மீதுغَضَبٌகோபம்مِّنْ رَّبِّكُمْஉங்கள் இறைவன் புறத்திலிருந்துفَاَخْلَفْتُمْஅதனால் மாறு செய்தீர்களாمَّوْعِدِىْ‏எனது குறிப்பிட்ட நேரத்திற்கு
Fபரஜ'அ மூஸா இலா கவ்மிஹீ கள்Bபான அஸிFபா; கால யா கவ்மி அலம் ய'இத்கும் ரBப்Bபுகும் வ'தன் ஹஸனா; அFபதால 'அலய்குமுல் 'அஹ்து அம் அரத்தும் அய் யஹில்ல 'அலய்கும் களBபும் மிர் ரBப்Bபிகும் Fப அக்லFப்தும் மவ்'இதீ
ஆகவே, மூஸா கோபமும் விசனமும் கொண்டவராய்த் தம் சமூகத்தாரிடம் திரும்பி வந்து: “என்னுடைய சமூகத்தவர்களே! உங்கள் இறைவன் உங்களுக்கு ஓர் அழகிய வாக்குறுதி கொடுக்கவில்லையா? எனவே அந்த வாக்குறுதி(க் காலம்) அதிகமாகி விட்டதா? அல்லது உங்கள் மீது உங்கள் இறைவனுடைய கோபம் இறங்க வேண்டுமென்று விரும்பி நீங்கள் எனக்குக் கொடுத்த வாக்குறுதிக்கு மாறு செய்தீர்களா?” (என்றார்).
قَالُوْا مَاۤ اَخْلَفْنَا مَوْعِدَكَ بِمَلْكِنَا وَلٰكِنَّا حُمِّلْنَاۤ اَوْزَارًا مِّنْ زِیْنَةِ الْقَوْمِ فَقَذَفْنٰهَا فَكَذٰلِكَ اَلْقَی السَّامِرِیُّ ۟ۙ
قَالُوْاகூறினார்கள்مَاۤ اَخْلَـفْنَاநாங்கள் மாறுசெய்யவில்லைمَوْعِدَكَஉமது குறிப்பிட்டநேரத்திற்குبِمَلْكِنَاஎங்கள் விருப்பப்படிوَلٰـكِنَّاஎன்றாலும்حُمِّلْنَاۤநாங்கள் சுமத்தப்பட்டோம்اَوْزَارًاபலசுமைகளைمِّنْ زِيْنَةِஆபரணங்களில்الْقَوْمِமக்களின்فَقَذَفْنٰهَاஆகவே அவற்றை நாங்கள் எறிந்தோம்فَكَذٰلِكَஅவ்வாறேاَلْقَىஎறிந்தான்السَّامِرِىُّ ۙ‏சாமிரி
காலூ மா அக்லFப்னா மவ்'இதக Bபிமல்கின்ன வ லாகின்ன ஹும்மில்னா அவ்Zஜாரம் மின் Zஜீனதில் கவ்மி FபகதFப்னாஹா Fபகதாலிக அல்கஸ் ஸாமிரிய்ய்
“உங்களுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதிக்கு எங்கள் சக்தியைக் கொண்டு நாங்கள் மாறு செய்யவில்லை; ஆனால் நாங்கள் சமூகத்தாரின் அலங்கார (ஆபரண)ங் களிலிருந்து சில சுமைகள் (கொண்டு) சுமத்தப்பட்டோம்; பிறகு, நாங்கள் அவற்றை(க் கழற்றி நெருப்பில்) எறிந்தோம்; அவ்வாறே ஸாமிரியும் எறிந்தான்” என்று அவர்கள் கூறினார்கள்.
فَاَخْرَجَ لَهُمْ عِجْلًا جَسَدًا لَّهٗ خُوَارٌ فَقَالُوْا هٰذَاۤ اِلٰهُكُمْ وَاِلٰهُ مُوْسٰی ۬ فَنَسِیَ ۟ؕ
فَاَخْرَجَஉருவாக்கினான்لَهُمْஅவர்களுக்குعِجْلًاஒரு காளைக் கன்றைجَسَدًاஓர் உடலைلَّهٗஅதற்குخُوَارٌமாட்டின் சப்தத்தை உடையفَقَالُوْاகூறினர்هٰذَاۤஇதுதான்اِلٰهُكُمْஉங்களது தெய்வமும்وَاِلٰهُதெய்வமும்مُوْسٰى மூஸாவுடையفَنَسِىَ‏ஆனால் மறந்து விட்டார்
Fப அக்ரஜ லஹும் 'இஜ்லன் ஜஸதல் லஹூ குவாருன் Fபகாலூ ஹாதா இலாஹுகும் வ இலாஹு மூஸா Fபனஸீ
பின்னர் அவன் அவர்களுக்காக ஒரு காளைக்கன்றை (உருவாக்கி) வெளிப்படுத்தினான்; அதற்கு மாட்டின் சப்தமும் இருந்தது. (இதைக் கண்ட) சிலர் “இது தான் உங்களுடைய நாயன்; இன்னும் (இதுவே) மூஸாவின் நாயனுமாகும்; ஆனால் அவர் இதை மறந்து விட்டார்” என்று சொன்னார்கள்.
اَفَلَا یَرَوْنَ اَلَّا یَرْجِعُ اِلَیْهِمْ قَوْلًا ۙ۬ وَّلَا یَمْلِكُ لَهُمْ ضَرًّا وَّلَا نَفْعًا ۟۠
اَفَلَا يَرَوْنَஅவர்கள் பார்க்கவேண்டாமாاَلَّاஅதுيَرْجِعُதிரும்பاِلَيْهِمْஅவர்களுக்குقَوْلًا ۙபேசாமல் இருப்பதைوَّلَا يَمْلِكُஇன்னும் ஆற்றல் பெறவில்லைلَهُمْஅவர்களுக்குضَرًّاதீமை செய்வதற்கும்وَّلَا نَفْعًا‏நன்மை செய்வதற்கும்
அFபலா யரவ்ன அல்லா யர்ஜி'உ இலய்ஹிம் கவ்ல(ன்)வ் வலா யம்லிகு லஹும் ளர்ர(ன்)வ் வலா னFப்'ஆ
அவர்களுக்கு அது மறுபடி எதுவும் சொல்லவில்லை என்பதையும்; அவர்களுக்காக நன்மையையோ, தீமையையோ செய்யச் சக்தியற்றது என்பதையும் அவர்கள் பார்க்க வில்லையா?
وَلَقَدْ قَالَ لَهُمْ هٰرُوْنُ مِنْ قَبْلُ یٰقَوْمِ اِنَّمَا فُتِنْتُمْ بِهٖ ۚ وَاِنَّ رَبَّكُمُ الرَّحْمٰنُ فَاتَّبِعُوْنِیْ وَاَطِیْعُوْۤا اَمْرِیْ ۟
وَلَـقَدْதிட்டவட்டமாகقَالَகூறினார்لَهُمْஅவர்களுக்குهٰرُوْنُஹாரூன்مِنْ قَبْلُஇதற்கு முன்னர்يٰقَوْمِஎன் சமுதாயமேاِنَّمَا فُتِنْتُمْநிச்சயமாக நீங்கள் சோதிக்கப்பட்டுள்ளீர்கள்بِهٖ‌ۚஇதைக் கொண்டுوَاِنَّநிச்சயமாகرَبَّكُمُஉங்கள் இறைவன்الرَّحْمٰنُபேரருளாளன் தான்فَاتَّبِعُوْنِىْஆகவே, என்னைப் பின்பற்றுங்கள்وَاَطِيْعُوْۤاகீழ்ப்படியுங்கள்اَمْرِىْ‏என் கட்டளைக்கு
வ லகத் கால லஹும் ஹாரூனு மின் கBப்லு யா கவ்மி இன்னமா Fபுதின்தும் Bபிஹீ வ இன்ன ரBப்Bபகுமுர் ரஹ்மானு Fபத்தBபி'ஊனீ வ அதீ'ஊ அம்ரீ
இதற்கு முன்னரே ஹாரூன் அவர்களை நோக்கி, “என் சமூகத்தாரே! நிச்சயமாக இதைக் கொண்டு நீங்கள் சோதிக்கப்ட்டிருக்கிறீர்கள், நிச்சயமாக உங்களுடைய இறைவன் “அர்ரஹ்மானே” ஆவான்; எனவே, என்னைப் பின்பற்றுங்கள். இன்னும் என் கட்டளைக்குக் கீழ்ப்படியுங்கள்” என்று கூறினார்.
قَالُوْا لَنْ نَّبْرَحَ عَلَیْهِ عٰكِفِیْنَ حَتّٰی یَرْجِعَ اِلَیْنَا مُوْسٰی ۟
قَالُوْاஅவர்கள் கூறினர்لَنْ نَّبْرَحَநாங்கள் நீடித்திருப்போம்عَلَيْهِஇதைعٰكِفِيْنَவணங்கியவர்களாகவேحَتّٰى يَرْجِعَதிரும்புகின்ற வரைاِلَيْنَاஎங்களிடம்مُوْسٰى‏மூஸா
காலூ லன் னBப்ரஹ 'அலய்ஹி 'ஆகிFபீன ஹத்தா யர்ஜி'அ இலய்னா மூஸா
“மூஸா எங்களிடம் திரும்பி வரும் வரையில், நாங்கள் இதன் ஆராதனையை நிறுத்த மாட்டோம்” என்று அவர்கள் கூறினார்கள்.
قَالَ یٰهٰرُوْنُ مَا مَنَعَكَ اِذْ رَاَیْتَهُمْ ضَلُّوْۤا ۟ۙ
قَالَகூறினார்يٰهٰرُوْنُஹாரூனேمَاஎதுمَنَعَكَஉம்மை தடுத்ததுاِذْ رَاَيْتَهُمْநீர் அவர்களைப் பார்த்தபோதுضَلُّوْٓا ۙ‏அவர்கள் வழிதவறி விட்டார்கள்
கால யா ஹாரூனு மா மன 'அக இத் ர அய்தஹும் ளல்லூ
(மூஸா திரும்பியதும் தம் சகோதரரிடம்) “ஹாரூனே! இவர்கள் வழி கெடுகிறார்கள் என்று நீங்கள் கண்ட போது (அவர்களுக்கு போதனை செய்து திருத்துவதில் நின்றும்) உங்களைத் தடை செய்தது யாது? என்று கேட்டார்.
اَلَّا تَتَّبِعَنِ ؕ اَفَعَصَیْتَ اَمْرِیْ ۟
اَلَّا تَتَّبِعَنِ‌ؕநீர் என்னைப் பின்பற்றி நடந்திருக்க வேண்டாமாاَفَعَصَيْتَமாறு செய்துவிட்டீராاَمْرِىْ‏எனது கட்டளைக்கு
அல்லா தத்தBபி'அனி அFப'அஸய்த அம்ரீ
“நீங்கள் என்னைப் பின்பற்றியிருக்க வேண்டாமா? (அவ்வாறு செய்வதை என்ன தடுத்தது?) நீங்கள் என் கட்டளையை மீறினீர்களா?”
قَالَ یَبْنَؤُمَّ لَا تَاْخُذْ بِلِحْیَتِیْ وَلَا بِرَاْسِیْ ۚ اِنِّیْ خَشِیْتُ اَنْ تَقُوْلَ فَرَّقْتَ بَیْنَ بَنِیْۤ اِسْرَآءِیْلَ وَلَمْ تَرْقُبْ قَوْلِیْ ۟
قَالَஅவர் கூறினார்يَابْنَؤُمَّஎன் தாயின் மகனேلَا تَاْخُذْபிடிக்காதேبِلِحْيَتِىْஎனது தாடியையும்وَلَا بِرَاْسِىْ‌ۚஎன் தலையையும்اِنِّىْ خَشِيْتُநிச்சயமாக நான் பயந்தேன்اَنْ تَقُوْلَநீர் கூறிவிடுவதைفَرَّقْتَபிரித்து விட்டாய்بَيْنَமத்தியில்بَنِىْۤ اِسْرَآءِيْلَஇஸ்ரவேலர்களுக்குوَلَمْ تَرْقُبْநீர் கவனிக்காமல்قَوْلِىْ‏என் கூற்றை
கால யBப்ன'உம்ம லா த'குத் Bபி லிஹ்யதீ வலா Bபி ர'ஸீ இன்னீ கஷீது அன் தகூல Fபர்ரக்த Bபய்ன Bபனீ இஸ்ரா'ஈல வ லம் தர்குBப் கவ்லீ
(இதற்கு ஹாரூன்:) “என் தாயின் மகனே! என் தாடியையோ என் தலை (முடி)யையோ பிடி(த்திழு)க்காதீர்கள்; “பனீ இஸ்ராயீலிடையே நீங்கள் பிரிவினையை உண்டாக்கி விட்டீர்கள்; என் வார்த்தைக்காக நீங்கள் காத்திருக்கவில்லை!” என்று நீர் கூறுவீரோ என நிச்சயமாக நான் அஞ்சினேன்” என்று கூறினார்.
قَالَ فَمَا خَطْبُكَ یٰسَامِرِیُّ ۟
قَالَகூறினார்فَمَا خَطْبُكَஉன் விஷயம் என்னيٰسَامِرِىُّ‏ஸாமிரியே
கால Fபமா கத்Bபுக யா ஸாமிரிய்ய்
“ஸாமிரிய்யே! உன் விஷயமென்ன?” என்று மூஸா அவனிடம் கேட்டார்.
قَالَ بَصُرْتُ بِمَا لَمْ یَبْصُرُوْا بِهٖ فَقَبَضْتُ قَبْضَةً مِّنْ اَثَرِ الرَّسُوْلِ فَنَبَذْتُهَا وَكَذٰلِكَ سَوَّلَتْ لِیْ نَفْسِیْ ۟
قَالَஅவன் கூறினான்بَصُرْتُநான் பார்த்தேன்بِمَا لَمْ يَـبْصُرُوْاஎதை/அவர்கள் பார்க்கவில்லைبِهٖஅதைفَقَبَـضْتُஆகவே, எடுத்தேன்قَبْضَةًஒரு பிடிمِّنْ اَثَرِகாலடி சுவடிலிருந்துالرَّسُوْلِதூதரின்فَنَبَذْتُهَاஇன்னும் அதை எறிந்தேன்وَكَذٰلِكَஇப்படித்தான்سَوَّلَتْஅலங்கரித்ததுلِىْஎனக்குنَفْسِى‏என் மனம்
கால Bபஸுர்து Bபிமா லம் யBப்ஸுரூ Bபிஹீ FபகBபள்து கBப்ளதம் மின் அதரிர் ரஸூலி FபனBபத்துஹா வ கதாலிக ஸவ்வலத் லீ னFப்ஸீ
“அவர்கள் காணாத ஒன்றை நான் கண்டேன்; ஆகவே, நான் அந்த தூதர் காலடியிலிருந்து ஒரு பிடி (மண்ணாகப்) பிடித்து, அதை எறிந்தேன்; அவ்விதம் (செய்வதை) என் மனம் எனக்கு அழகா(ன செயலா)க ஆக்கிற்று” என (ஸாமிரி பதில்) சொன்னான்.
قَالَ فَاذْهَبْ فَاِنَّ لَكَ فِی الْحَیٰوةِ اَنْ تَقُوْلَ لَا مِسَاسَ ۪ وَاِنَّ لَكَ مَوْعِدًا لَّنْ تُخْلَفَهٗ ۚ وَانْظُرْ اِلٰۤی اِلٰهِكَ الَّذِیْ ظَلْتَ عَلَیْهِ عَاكِفًا ؕ لَنُحَرِّقَنَّهٗ ثُمَّ لَنَنْسِفَنَّهٗ فِی الْیَمِّ نَسْفًا ۟
قَالَஅவர் கூறினார்فَاذْهَبْநீ சென்று விடுفَاِنَّ لَـكَநிச்சயமாக உனக்குفِى الْحَيٰوةِஇவ்வாழ்க்கையில்اَنْ تَقُوْلَஎன்று சொல்வதுதான்لَا مِسَاسَ‌தொடாதீர்وَاِنَّ لَـكَஇன்னும் உமக்கு உண்டுمَوْعِدًاஒரு குறிப்பிட்ட நேரம்لَّنْ تُخْلَفَهٗ‌ ۚஅதை நீ தவறவிடமாட்டாய்وَانْظُرْஇன்னும் பார்اِلٰٓى اِلٰهِكَஉனது தெய்வத்தைالَّذِىْஎதுظَلْتَஇருந்தாய்عَلَيْهِஅதனைعَاكِفًا‌ ؕவணங்கியவனாகلَّـنُحَرِّقَنَّهٗநிச்சயமாக நாம் அதை எறிந்து விடுவோம்ثُمَّபிறகுلَـنَنْسِفَنَّهٗஅதை பரப்பிவிடுவோம்فِى الْيَمِّகடலில்نَسْفًا‏பரப்பப்பட்டதாக
கால Fபத்ஹBப் Fப இன்ன லக Fபில் ஹயாதி அன் தகூல லா மிஸாஸ வ இன்ன லக மவ்'இதல் லன் துக்லFபஹூ வன்ளுர் இலா இலாஹிகல் லதீ ளல்த 'அலய்ஹி 'ஆகிFபா; ல னுஹர்ரிகன்னஹூ தும்ம ல னன்ஸிFபன்னஹூ Fபில் யம்மி னஸ்Fபா
“நீ இங்கிருந்து போய் விடு; நிச்சயமாக இந்த வாழ்க்கையில் (எவரைக் கண்டாலும், என்னைத்) “தீண்டாதீர்கள்” என்று சொல்(லித் திரி)வது தான் உனக்குள்ளது, (மறுமையில்) நிச்சயமாக உனக்கு வாக்களிக்கப்பட்ட வேதனையும் உண்டு; அதை விட்டும் நீ தப்பமாட்டாய்; மேலும்: நீ தரிபட்டு ஆராதனை செய்து கொண்டிருந்தாயே அந்த “நாயனைப்” பார்; நிச்சயமாக அதனைச் சுட்டெரித்துப் பின்னர் (சாம்பலாக்கி) அதைக் கடலில் பரத்திவிடுவோம்” என்றார்.
اِنَّمَاۤ اِلٰهُكُمُ اللّٰهُ الَّذِیْ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ؕ وَسِعَ كُلَّ شَیْءٍ عِلْمًا ۟
اِنَّمَاۤ اِلٰهُكُمُநிச்சயமாக உங்கள் (வணக்கத்திற்குரிய) இறைவன்اللّٰهُஅல்லாஹ்தான்الَّذِىْஅவன்لَاۤஅறவே இல்லைاِلٰـهَவணக்கத்திற்குரியவன்اِلَّاதவிரهُوَ‌ؕஅவனைوَسِعَஅவன் விசாலமாகி இருக்கின்றான்كُلَّ شَىْءٍஎல்லாவற்றையும்عِلْمًا‏அறிவால்
இன்னமா இலாஹு குமுல் லாஹுல் லதீ லா இலாஹ இல்லா ஹூ; வஸி'அ குல்ல ஷய்'இன் இல்மா
“உங்களுடைய நாயன் அல்லாஹ் ஒருவன்தான்; அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறில்லை; எல்லாப் பொருட்களிலும் ஞானத்தால் விசாலமானவன்” என்றும் கூறினார்.
كَذٰلِكَ نَقُصُّ عَلَیْكَ مِنْ اَنْۢبَآءِ مَا قَدْ سَبَقَ ۚ وَقَدْ اٰتَیْنٰكَ مِنْ لَّدُنَّا ذِكْرًا ۟ۖۚ
كَذٰلِكَஇவ்வாறுنَقُصُّநாம் விவரிக்கிறோம்عَلَيْكَஉமக்குمِنْ اَنْۢبَآءِசெய்திகளைمَا قَدْ سَبَقَ‌ ۚமுன் சென்றுவிட்டவர்களின்وَقَدْதிட்டமாகاٰتَيْنٰكَஉமக்கு கொடுத்தோம்مِنْ لَّدُنَّاநம் புறத்திலிருந்துذِكْرًا ۖ‌ ۚ‏ஒரு நல்லுரையை
கதாலிக னகுஸ்ஸு 'அலய்க மின் அன்Bபா'இ மா கத் ஸBபக்; வ கத் ஆதய்னாக மில் லதுன்னா திக்ரா
(நபியே!) இவ்வாறே முன் சென்று போனவர்களின் வரலாற்றை நாம் உமக்குக் கூறுகிறோம்; மேலும் திட்டமாக நம்மிடமிருந்து நினைவூட்டும் நல்லுபதேசத்தை (இத்திருக் குர்ஆனை) நாம் உமக்குக் கொடுத்திருக்கிறோம்.
مَنْ اَعْرَضَ عَنْهُ فَاِنَّهٗ یَحْمِلُ یَوْمَ الْقِیٰمَةِ وِزْرًا ۟ۙ
مَنْயார்اَعْرَضَபுறக்கணித்தாரோعَنْهُஅதைفَاِنَّهٗநிச்சயமாக அவர்يَحْمِلُஅவர் சுமப்பார்يَوْمَ الْقِيٰمَةِமறுமை நாளில்وِزْرًا ۙ‏பாவத்தை
மன் அஃரள 'அன்ஹு, Fப இன்னஹூ யஹ்மிலு யவ்மல் கியாமதி விZஜ்ரா
எவன் அதனைப் புறக்கணிக்கின்றானோ, அவன் கியாம நாளில் (பாவச்) சுமையைச் சுமப்பான்.
خٰلِدِیْنَ فِیْهِ ؕ وَسَآءَ لَهُمْ یَوْمَ الْقِیٰمَةِ حِمْلًا ۟ۙ
خٰلِدِيْنَஅவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்فِيْهِ‌ ؕஅதில்وَسَآءَமிகக் கெட்டதுلَهُمْஅவர்களுக்குيَوْمَ الْقِيٰمَةِமறுமை நாளில்حِمْلًاۙ‏சுமையால்
காலிதீன Fபீஹி வ ஸா'அ லஹும் யவ்மல் கியாமதி ஹிம்லா
அ(ப்படிச் சுமப்ப)வர்கள் அதில் எந்நாளும் (அதைச் சுமந்தவாறே) இருப்பார்கள்; கியாம நாளில் இச்சுமை அவர்களுக்கு மிகவும் கெட்டது.
یَّوْمَ یُنْفَخُ فِی الصُّوْرِ وَنَحْشُرُ الْمُجْرِمِیْنَ یَوْمَىِٕذٍ زُرْقًا ۟ۚۖ
يَّوْمَநாளில்يُنْفَخُஊதப்படும்فِى الصُّوْرِ‌சூரில்وَنَحْشُرُநாம் எழுப்புவோம்الْمُجْرِمِيْنَபாவிகளைيَوْمَٮِٕذٍஅந்நாளில்زُرْقًا‌ ۖ ۚ‏கண்கள் நீலமானவர்களாக
யவ்ம யுன்Fபகு Fபிஸ்ஸூரி வ னஹ்ஷுருல் முஜ்ரிமீன யவ்ம 'இதின் Zஜுர்கா
ஸூர் (எக்காளம்) ஊதப்படும் நாள் அது; குற்றவாளிகளை, (பயத்தினால்) நீலம் பூத்த கண்ணுடையோராக நாம் அந்நாளில் ஒன்று சேர்ப்போம்.
یَّتَخَافَتُوْنَ بَیْنَهُمْ اِنْ لَّبِثْتُمْ اِلَّا عَشْرًا ۟
يَّتَخَافَـتُوْنَஅவர்கள் மெதுவாகப் பேசிக் கொள்வார்கள்بَيْنَهُمْதங்களுக்கு மத்தியில்اِنْ لَّبِثْتُمْநீங்கள் தங்கவில்லைاِلَّاதவிரعَشْرًا‏பத்து நாட்களே
யதகாFபதூன Bபய்னஹும் இல் லBபித்தும் இல்லா 'அஷ்ரா
“நீங்கள் பத்து (நாட்களு)க்கு மேல் (பூமியில்) தங்கியதில்லை” என்று அவர்கள் தங்களுக்கிடையில் இரகசியம் பேசிக் கொள்வார்கள்.
نَحْنُ اَعْلَمُ بِمَا یَقُوْلُوْنَ اِذْ یَقُوْلُ اَمْثَلُهُمْ طَرِیْقَةً اِنْ لَّبِثْتُمْ اِلَّا یَوْمًا ۟۠
نَحْنُநாம்اَعْلَمُநன்கறிந்தவர்கள்بِمَا يَقُوْلُوْنَஅவர்கள் பேசுவதைاِذْ يَقُوْلُகூறும் போதுاَمْثَلُهُمْமுழுமையானவர்/அவர்களில்طَرِيْقَةًஅறிவால்اِنْ لَّبِثْتُمْநீங்கள் தங்கவில்லைاِلَّاதவிரيَوْمًا‏ஒரு நாளே
னஹ்னு அஃலமு Bபிமா யகூலூன இத் யகூலு அம்தலுஹும் தரீகதன் இல்லBபித்தும் இல்லா யவ்மா
“ஒரு நாளேயன்றி (அதிகமாக) நீங்கள் தங்கவில்லை” என்று அவர்களில் நல்வழியில் சென்றவர்கள் கூறுவதையும் நாம் நன்கறிவோம்.
وَیَسْـَٔلُوْنَكَ عَنِ الْجِبَالِ فَقُلْ یَنْسِفُهَا رَبِّیْ نَسْفًا ۟ۙ
وَيَسْــٴَــلُوْنَكَஉம்மிடம் கேட்கிறார்கள்عَنِ الْجِبَالِமலைகளைப் பற்றிفَقُلْநீர் கூறுவீராகيَنْسِفُهَاஅவற்றை தூளாக ஆக்கி விடுவான்رَبِّىْஎன் இறைவன்نَسْفًا ۙ‏தூள்
வ யஸ்'அலூனக 'அனில் ஜிBபாலி Fபகுல் யன்ஸிFபுஹா ரBப்Bபீ னஸ்Fபா
(நபியே!) இன்னும் உம்மிடம் மலைகளைப்பற்றி அவர்கள் கேட்கிறார்கள். “அவைகளை என் இறைவன் தூள் தூளாக்கி (மணல்களைப் போல் பரப்பி)விடுவான்” என்று நீர் கூறுவீராக.
فَیَذَرُهَا قَاعًا صَفْصَفًا ۟ۙ
فَيَذَرُهَاஇன்னும் அவற்றை விட்டுவிடுவான்قَاعًاசமமானصَفْصَفًا ۙ‏பூமியாக
Fப யதருஹா கா'அன் ஸFப்ஸFபா
“பின்பு, அவற்றைச் சமவெளியாக்கி விடுவான்.
لَّا تَرٰی فِیْهَا عِوَجًا وَّلَاۤ اَمْتًا ۟ؕ
لَّا تَرٰىநீர் காணமாட்டீர்فِيْهَاஅவற்றில்عِوَجًاகோணலைوَّلَاۤ اَمْتًا ؕ‏இன்னும் வளைவை
லா தரா Fபீஹா 'இவஜ(ன்)வ் வ லா அம்தா
“அதில் நீர் மேடு பள்ளத்தை காணமாட்டீர்.”
یَوْمَىِٕذٍ یَّتَّبِعُوْنَ الدَّاعِیَ لَا عِوَجَ لَهٗ ۚ وَخَشَعَتِ الْاَصْوَاتُ لِلرَّحْمٰنِ فَلَا تَسْمَعُ اِلَّا هَمْسًا ۟
يَوْمَٮِٕذٍஅந்நாளில்يَّتَّبِعُوْنَபின் தொடர்வார்கள்الدَّاعِىَஅழைப்பாளரைلَا عِوَجَதிரும்ப முடியாதுلَهٗ‌ؕஅவரை விட்டுوَخَشَعَتِஇன்னும் அமைதியாகிவிடும்الْاَصْوَاتُசப்தங்கள் எல்லாம்لِلرَّحْمٰنِரஹ்மானுக்கு முன்فَلَا تَسْمَعُசெவிமடுக்க மாட்டீர்اِلَّاதவிரهَمْسًا‏மென்மையான சப்தத்தைத்
யவ்ம இதி(ன்)ய் யத்தBபி'ஊனத் தா'இய லா 'இவஜ லஹூ வ கஷ'அதில் அஸ்வாது லிர் ரஹ்மானி Fபலா தஸ்ம'உ இல்லா ஹம்ஸா
அந்நாளில் அவர்கள் (ஸூர் மூலம்) அழைப்பவரையே பின்பற்றிச் செல்வார்கள்; அதில் எத்தகைய கோணலும் இருக்காது; இன்னும் (அவ் வேளை) அர்ரஹ்மானுக்கு (அஞ்சி) எல்லாச் சப்தங்களும் ஒடுங்கி விடும். கால்கள் (மெதுவாக அடியெடுத்து வைக்கும்) சப்தத்தைத் தவிர (வேறெதையும்) நீர் கேட்கமாட்டீர்.
یَوْمَىِٕذٍ لَّا تَنْفَعُ الشَّفَاعَةُ اِلَّا مَنْ اَذِنَ لَهُ الرَّحْمٰنُ وَرَضِیَ لَهٗ قَوْلًا ۟
يَوْمَٮِٕذٍஅந்நாளில்لَّا تَنْفَعُபலனளிக்காதுالشَّفَاعَةُபரிந்துரைاِلَّاதவிரمَنْஎவர்اَذِنَஅனுமதித்தான்لَـهُஎவருக்குالرَّحْمٰنُபேரருளாளன்وَرَضِىَஇன்னும் அவன் விரும்பினான்لَـهٗஅவருடையقَوْلًا‏பேச்சை
யவ்ம 'இதில் லா தன்Fப'உஷ் ஷFபா'அது இல்லா மன் அதின லஹுர் ரஹ்மானு வ ரளிய லஹூ கவ்லா
அந்நாளில் அர்ரஹ்மான் எவரை அனுமதித்து, எவருடைய பேச்சை உவந்து கொள்கிறானோ, அவர்களைத் தவிர வேறு எவருடைய ஷஃபாஅத்தும் (பரிந்துரையும்) பலனளிக்காது.
یَعْلَمُ مَا بَیْنَ اَیْدِیْهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا یُحِیْطُوْنَ بِهٖ عِلْمًا ۟
يَعْلَمُஅவன் நன்கறிவான்مَا بَيْنَஉள்ளதையும்اَيْدِيْهِمْஅவர்களுக்கு முன்وَمَا خَلْفَهُمْஇன்னும் அவர்களுக்குப் பின்وَلَا يُحِيْطُوْنَஅவர்கள் சூழ்ந்தறிய மாட்டார்கள்بِهٖஅவனைعِلْمًا‏அறிவால்
யஃலமு மா Bபய்னா அய்தீஹிம் வமா கல்Fபஹும் வலா யுஹீதூன Bபிஹீ 'இல்மா
அவர்களுக்கு முன்னிருப்பதையும், அவர்களுக்குப் பின்னால் இருப்பதையும் அவன் நன்கறிவான்; ஆனால் அவர்கள் அதை(த் தங்கள்) கல்வியறிவு கொண்டு சூழ்ந்தறிய மாட்டார்கள்.
وَعَنَتِ الْوُجُوْهُ لِلْحَیِّ الْقَیُّوْمِ ؕ وَقَدْ خَابَ مَنْ حَمَلَ ظُلْمًا ۟
وَعَنَتِபணிந்து விட்டனالْوُجُوْهُமுகங்கள்لِلْحَىِّஎன்றும் உயிருள்ளவன்الْقَيُّوْمِ‌ؕஎன்றும் நிலையானவன்وَقَدْதிட்டமாகخَابَநஷ்டமடைந்தான்مَنْ حَمَلَசுமந்தவன்ظُلْمًا‏அநியாயத்தை
வ 'அனதில் வுஜூஹு லில் ஹய்யுல் கய்யூமி வ கத் காBப மன் ஹமல ளுல்மா
இன்னும், நிலைத்தவனாகிய நித்திய ஜீவனான (அல்லாஹ்வுக்கு) யாவருடைய முகங்களும் பணிந்து தாழ்ந்துவிடும்; ஆகவே எவன் அக்கிரமத்தைச் சுமந்து கொண்டானோ, அவன் நற்பேறிழந்தவனாகி விடுவான்.
وَمَنْ یَّعْمَلْ مِنَ الصّٰلِحٰتِ وَهُوَ مُؤْمِنٌ فَلَا یَخٰفُ ظُلْمًا وَّلَا هَضْمًا ۟
وَمَنْயார்يَّعْمَلْசெய்வாரோمِنَ الصّٰلِحٰتِநன்மைகளைوَهُوَஅவரோ இருக்கمُؤْمِنٌநம்பிக்கையாளராகفَلَا يَخٰفُபயப்பட மாட்டார்ظُلْمًاஅநியாயத்தைوَّلَا هَضْمًا‏இன்னும் நன்மைகள் குறைக்கப்படுவதை
வ மய் யஃமல் மினஸ் ஸாலிஹாதி வ ஹுவ மு'மினுன் Fபலா யகாFபு ளுல்ம(ன்)வ் வலா ஹள்மா
எவர் முஃமினாக இருந்து, ஸாலிஹான- நற்செயல்களைச் செய்கிறாரோ அவர் தமக்கு அநியாயம் செய்யப்படுமென்றோ, (தமக்குரிய) நற்கூலி குறைந்துவிடுமென்றோ பயப்படமாட்டார்கள்.
وَكَذٰلِكَ اَنْزَلْنٰهُ قُرْاٰنًا عَرَبِیًّا وَّصَرَّفْنَا فِیْهِ مِنَ الْوَعِیْدِ لَعَلَّهُمْ یَتَّقُوْنَ اَوْ یُحْدِثُ لَهُمْ ذِكْرًا ۟
وَكَذٰلِكَஇவ்வாறேاَنْزَلْنٰهُஇதை இறக்கினோம்قُرْاٰنًاகுர்ஆனாகعَرَبِيًّاஅரபி மொழியிலானوَّ صَرَّفْنَا فِيْهِநாம் விவரித்து இருக்கிறோம்/அதில்مِنَ الْوَعِيْدِஎச்சரிக்கையை பலவாறாகلَعَلَّهُمْ يَتَّقُوْنَஅவர்கள் இறையச்சமுள்ளவர்களாக ஆகுவதற்காகاَوْஅல்லதுيُحْدِثُஅது ஏற்படுத்துவதற்காகلَهُمْஅவர்களுக்குذِكْرًا‏ஓர் அறிவுரையை
வ கதாலிக அன்Zஜல்னாஹு குர்ஆனன் 'அரBபிய்ய(ன்)வ் வ ஸர்ரFப்னா Fபீ ஹி மினல் வ'ஈதி ல'அல்லஹும் யத்தகூன அவ் யுஹ்திது லஹும் திக்ரா
மேலும், இவ்விதமாகவே இந்த குர்ஆனை அரபி மொழியில் நாம் இறக்கி வைத்தோம்; அவர்கள் பயபக்தியுடையவர்களாக ஆகும் பொருட்டு, அல்லது நல்லுபதேசத்தை அவர்களுக்கு நினைவூட்டும் பொருட்டு, இதில் அவர்களுக்கு எச்சரிக்கையை விவரித்திருக்கின்றோம்.
فَتَعٰلَی اللّٰهُ الْمَلِكُ الْحَقُّ ۚ وَلَا تَعْجَلْ بِالْقُرْاٰنِ مِنْ قَبْلِ اَنْ یُّقْضٰۤی اِلَیْكَ وَحْیُهٗ ؗ وَقُلْ رَّبِّ زِدْنِیْ عِلْمًا ۟
فَتَعٰلَىமிக உயர்ந்தவன்اللّٰهُஅல்லாஹ்الْمَلِكُஅரசனாகியالْحَـقُّ‌ ۚஉண்மையாளனாகியوَلَا تَعْجَلْஅவசரப்படாதீர்بِالْقُرْاٰنِகுர்ஆனில்مِنْ قَبْلِமுன்னர்اَنْ يُّقْضٰٓىமுழுமையாக அறிவிக்கப்படுவதற்குاِلَيْكَஉமக்குوَحْيُهٗ‌அதனுடைய வஹீوَقُلْஇன்னும் கூறுவீராகرَّبِّஎன் இறைவாزِدْنِىْஎனக்குஅதிகப்படுத்துعِلْمًا‏ஞானத்தை
Fபத'ஆலல் லாஹுல் மலிகுல் ஹக்க்; வலா தஃஜல் Bபில் குர்'ஆனி மின் கBப்லி அய் யுக்ளா இலய்க வஹ்யுஹூ வ குர் ரBப்Bபி Zஜித்னீ 'இல்மா
ஆகவே, உண்மை அரசனாகிய அல்லாஹ்வே மிக உயர்ந்தவன்; இன்னும் (நபியே!) உமக்கு (குர்ஆனின்) வஹீ அறிவிக்கப்பட்டு அது முடிவதற்கு முன்னதாகவே குர்ஆனை ஓத நீர் அவசரப்படாதீர்; “இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!” என்றும் நீர் பிரார்த்தனை செய்வீராக!
وَلَقَدْ عَهِدْنَاۤ اِلٰۤی اٰدَمَ مِنْ قَبْلُ فَنَسِیَ وَلَمْ نَجِدْ لَهٗ عَزْمًا ۟۠
وَلَـقَدْ عَهِدْنَاۤதிட்டவட்டமாக நாம் கட்டளையிட்டோம்اِلٰٓى اٰدَمَஆதமுக்குمِنْ قَبْلُஇதற்கு முன்னர்فَنَسِىَமறந்து விட்டார்وَلَمْ نَجِدْநாம் காணவில்லைلَهٗஅவரிடம்عَزْمًا‏உறுதியை
வ லகத் 'அஹித்னா இலா ஆதம மின் கBப்லு Fபனஸிய வ லம் னஜித் லஹூ 'அZஜ்மா
முன்னர், நாம் ஆதமுக்கு நிச்சயமாக கட்டளையிட்டிருந்தோம்; ஆனால் (அதனை) அவர் மறந்து விட்டார்; (அக்கட்டளைபடி நடக்கும்) உறுதிப்பாட்டை நாம் அவரிடம் காணவில்லை.
وَاِذْ قُلْنَا لِلْمَلٰٓىِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ فَسَجَدُوْۤا اِلَّاۤ اِبْلِیْسَ ؕ اَبٰی ۟
وَاِذْசமயத்தைقُلْنَاநாம் கூறியلِلْمَلٰٓٮِٕكَةِவானவர்களுக்குاسْجُدُوْاநீங்கள் சிரம் தாழ்த்துங்கள்لِاٰدَمَஆதமுக்குفَسَجَدُوْۤاஅவர்கள் சிரம் தாழ்த்தினர்اِلَّاۤ اِبْلِيْسَؕஇப்லீஸைத் தவிரاَبٰى‏மறுத்து விட்டான்
வ இத் குல்னா லில்ம லா'இகதிஸ் ஜுதூ லி ஆதம Fபஸஜதூ இல்லா இBப்லீஸ; அBபா
“நீங்கள் ஆதமுக்கு ஸுஜூது செய்யுங்கள்” என்று நாம் வானவர்களிடம் கூறிய போது, இப்லீஸை தவிர, அவர்கள் ஸுஜூது செய்தார்கள். அவன் (அவ்வாறு செய்யாது) விலகிக் கொண்டான்.
فَقُلْنَا یٰۤاٰدَمُ اِنَّ هٰذَا عَدُوٌّ لَّكَ وَلِزَوْجِكَ فَلَا یُخْرِجَنَّكُمَا مِنَ الْجَنَّةِ فَتَشْقٰی ۟
فَقُلْنَاஆகவே நாம் கூறினோம்يٰۤاٰدَمُஆதமேاِنَّநிச்சயமாகهٰذَاஇவன்عَدُوٌّஎதிரிلَّكَஉமக்குوَلِزَوْجِكَஇன்னும் உமது மனைவிக்குفَلَا يُخْرِجَنَّكُمَاஆகவே, அவன் உங்கள் இருவரையும் வெளியேற்றிவிட வேண்டாம்مِنَ الْجَـنَّةِசொர்க்கத்திலிருந்துفَتَشْقٰى‏நீர்சிரமப்பட்டுவிடுவீர்
Fபகுல்னா யா ஆதமு இன்ன ஹாதா 'அதுவ்வுல் லக வ லிZஜவ்ஜிக Fபலா யுக்ரிஜன் னகுமா மினல் ஜன்னதி Fபதஷ்கா
அப்பொழுது “ஆதமே! நிச்சயமாக இவன் உமக்கும், உம்முடைய மனைவிக்கும் பகைவனானான்; ஆதலால், உங்களிருவரையும் இச்சுவனபதியிலிருந்து திட்டமாக வெளியேற்ற (இடந்) தரவேண்டாம்; இன்றேல் நீர் பெரும் இன்னலுக்குள்ளாவீர்.
اِنَّ لَكَ اَلَّا تَجُوْعَ فِیْهَا وَلَا تَعْرٰی ۟ۙ
اِنَّநிச்சயமாகلَـكَஉமக்குاَلَّا تَجُوْعَநீர் பசித்திருக்காதفِيْهَاஅதில்وَلَا تَعْرٰىۙ‏இன்னும் ஆடையற்றிருக்காத
இன்னா லக அல்லா தஜூ'அ Fபீஹா வலா தஃரா
“நிச்சயமாக நீர் இ(ச் சுவர்க்கத்)தில் பசியாகவோ நிர்வாணமாகவோ இருக்கமாட்டீர்.
وَاَنَّكَ لَا تَظْمَؤُا فِیْهَا وَلَا تَضْحٰی ۟
وَاَنَّكَஇன்னும் நிச்சயமாக நீர்لَا تَظْمَؤُا فِيْهَاஅதில் தாகிக்கவும் மாட்டீர்وَلَا تَضْحٰى‏இன்னும் வெட்பத்தை உணர மாட்டீர்
வ அன்னக லா தள்ம'உ Fபீஹா வலா தள்ஹா
“இன்னும் இதில் நீர் தாகிக்கவும், வெயிலில் (கஷ்டப்)படவும் மாட்டீர் (என்று கூறினோம்).
فَوَسْوَسَ اِلَیْهِ الشَّیْطٰنُ قَالَ یٰۤاٰدَمُ هَلْ اَدُلُّكَ عَلٰی شَجَرَةِ الْخُلْدِ وَمُلْكٍ لَّا یَبْلٰی ۟
فَوَسْوَسَஊசலாட்டத்தை ஏற்படுத்தினான்اِلَيْهِஅவருக்குالشَّيْطٰنُஷைத்தான்قَالَகூறினான்يٰۤاٰدَمُஆதமேهَلْ اَدُلُّكَநான் உமக்கு அறிவிக்கவா?عَلٰى شَجَرَةِமரத்தையும்الْخُلْدِநிரந்தரத்தின்وَمُلْكٍஆட்சியையும்لَّا يَبْلٰى‏அழியாத
Fப வஸ்வஸ இலய்ஹிஷ் ஷய்தானு கால யா ஆதமு ஹல் அதுல்லுக 'அலா ஷஜரதில் குல்தி வ முல்கில் லா யBப்லா
ஆனால், ஷைத்தான் அவருக்கு (ஊசலாட்டத்தையும்) குழப்பத்தையும் உண்டாக்கி: “ஆதமே! நித்திய வாழ்வளிக்கும் மரத்தையும், அழிவில்லாத அரசாங்கத்தையும் உமக்கு நான் அறிவித்துத் தரவா?” என்று கேட்டான்.
فَاَكَلَا مِنْهَا فَبَدَتْ لَهُمَا سَوْاٰتُهُمَا وَطَفِقَا یَخْصِفٰنِ عَلَیْهِمَا مِنْ وَّرَقِ الْجَنَّةِ ؗ وَعَصٰۤی اٰدَمُ رَبَّهٗ فَغَوٰی ۪۟ۖ
فَاَكَلَاஆக, அவ்விருவரும் சாப்பிட்டனர்مِنْهَاஅதிலிருந்துفَبَدَتْஆகவே தெரியவந்தனلَهُمَاஅவ்விருவருக்கும்سَوْاٰ تُہُمَاஅவ்விருவரின் மறைவிடங்கள்وَطَفِقَاஇன்னும் முற்பட்டனர்يَخْصِفٰنِஅவ்விருவரும் கட்டிக்கொள்வதற்குعَلَيْهِمَاதங்கள் இருவர் மீதுمِنْ وَّرَقِஇலைகளைالْجَـنَّةِ‌சொர்க்கத்தின்وَعَصٰۤىஇன்னும் மாறுசெய்தார்اٰدَمُஆதம்رَبَّهٗதன் இறைவனுக்குفَغَوٰى‌ۖ‏ஆகவே வழி தவறி விட்டார்
Fப அகலா மின்ஹா FபBபதத் லஹுமா ஸவ் ஆதுஹுமா வ தFபிகா யக்ஸிFபானி 'அலய்ஹிமா மி(ன்)வ் வரகில் ஜன்னஹ்; வ 'அஸா ஆதமு ரBப்Bபஹூ Fபகவா
பின்னர் (இப்லீஸின் ஆசை வார்த்தைப்படி) அவ்விருவரும் அ(ம் மரத்)தினின்று புசித்தனர்; உடனே அவ்விருவரின் வெட்கத் தலங்களும் வெளியாயின; ஆகவே அவ்விருவரும் சுவர்க்கத்துச் சோலையின் இலையைக் கொண்டு அவற்றை மறைத்துக் கொள்ளலானார்கள்; இவ்வாறு ஆதம் தம்முடைய இறைவனுக்கு மாறு செய்து, அதனால் வழி பிசகி விட்டார்.
ثُمَّ اجْتَبٰهُ رَبُّهٗ فَتَابَ عَلَیْهِ وَهَدٰی ۟
ثُمَّபிறகுاجْتَبٰهُஅவரை தேர்ந்தெடுத்தான்رَبُّهٗஅவருடையஇறைவன்فَتَابَமன்னித்தான்عَلَيْهِஅவரைوَهَدٰى‏நேர்வழி காட்டினான்
தும்மஜ் தBப்Bபஹு ரBப்Bபுஹூ FபதாBப 'அலய்ஹி வ ஹதா
பின்னர் அவரது இறைவன் அவரைத் தேர்ந்தெடுத்து அவரை மன்னித்து நேர்வழியும் காட்டினான்.
قَالَ اهْبِطَا مِنْهَا جَمِیْعًا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ ۚ فَاِمَّا یَاْتِیَنَّكُمْ مِّنِّیْ هُدًی ۙ۬ فَمَنِ اتَّبَعَ هُدَایَ فَلَا یَضِلُّ وَلَا یَشْقٰی ۟
قَالَகூறினான்اهْبِطَاநீங்கள் இறங்குங்கள்مِنْهَاஇதிலிருந்துجَمِيْعًا‌ۢஅனைவரும்بَعْضُكُمْஉங்களில் சிலர்لِبَعْضٍசிலருக்குعَدُوٌّ‌ ۚஎதிரிفَاِمَّا يَاْتِيَنَّكُمْஉங்களுக்கு வந்தால்مِّنِّىْஎன்னிடமிருந்துهُدًى ۙநேர்வழியைفَمَنِஎவர்اتَّبَعَபின்பற்றுவாரோهُدَاىَஎனது நேர்வழியைفَلَا يَضِلُّவழிதவற மாட்டார்وَلَا يَشْقٰى‏இன்னும் சிரமப்பட மாட்டார்
காலஹ் Bபித மின்ஹா ஜமீ'அம் Bபஃளுகும் லிBபஃளின் 'அதுவ்வ்; Fப இம்மா ய'தியன்னகும் மின்னீ ஹுதன் Fபமனித் தBப'அ ஹுதாய Fபலா யளில்லு வலா யஷ்கா
“இதிலிருந்து நீங்கள் இருவரும் சேகரமாக இங்கிருந்து வெளியேறி விடுங்கள். உங்க(ள் சந்ததிக)ளில் சிலருக்குச் சிலர் பகைவர்களாகவே யிருப்பார்கள்; அப்பொழுது நிச்சயமாக என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும்; எவர் என்னுடைய நேர்வழியைப் பின் பற்றி நடக்கிறாரோ அவர் வழி தவறவும் மாட்டார், நற்பேறிழக்கவும் மாட்டார்.
وَمَنْ اَعْرَضَ عَنْ ذِكْرِیْ فَاِنَّ لَهٗ مَعِیْشَةً ضَنْكًا وَّنَحْشُرُهٗ یَوْمَ الْقِیٰمَةِ اَعْمٰی ۟
وَمَنْஎவன்اَعْرَضَபுறக்கணிப்பானோعَنْ ذِكْرِىْஎன் அறிவுரையை விட்டுفَاِنَّநிச்சயமாகلَـهٗஅவனுக்குمَعِيْشَةًவாழ்க்கைதான்ضَنْكًاநெருக்கடியானوَّنَحْشُرُهٗஇன்னும் அவனை நாம் எழுப்புவோம்يَوْمَ الْقِيٰمَةِமறுமையில்اَعْمٰى‏குருடனாக
வ மன் அஃரள 'அன் திக்ரீ Fப இன்ன லஹூ ம'ஈஷதன் ளன்க(ன்)வ் வ னஹ்ஷுருஹூ யவ்மல் கியாமதி அஃமா
“எவன் என்னுடைய உபதேசத்தைப் புறக்கணிக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும்; மேலும், நாம் அவனை கியாம நாளில் குருடனாவே எழுப்புவோம்” என்று கூறினான்.
قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِیْۤ اَعْمٰی وَقَدْ كُنْتُ بَصِیْرًا ۟
قَالَஅவன் கூறுவான்رَبِّஎன் இறைவாلِمَ حَشَرْتَنِىْۤஏன் என்னை எழுப்பினாய்اَعْمٰىகுருடனாகوَقَدْ كُنْتُநான் இருந்தேனேبَصِيْرًا‏பார்வை உள்ளவனாக
கால ரBப்Bபி லிம ஹஷர் தனீ அஃமா வ கத் குன்து Bபஸீரா
(அப்போது அவன்) “என் இறைவனே! நான் பார்வையுடையவனாக இருந்தேனே! என்னை ஏன் குருடனாக எழுப்பினாய்?” என்று கூறுவான்.
قَالَ كَذٰلِكَ اَتَتْكَ اٰیٰتُنَا فَنَسِیْتَهَا ۚ وَكَذٰلِكَ الْیَوْمَ تُنْسٰی ۟
قَالَஅவன் கூறுவான்كَذٰلِكَஅவ்வாறுதான்اَتَـتْكَஉன்னிடம் வந்தனاٰيٰتُنَاஎனது வசனங்கள்فَنَسِيْتَهَا‌ۚஆனால், நீ அவற்றை மறந்தாய்وَكَذٰلِكَஅவ்வாறேالْيَوْمَஇன்றுتُنْسٰى‏நீ மறக்கப்படுவாய்
கால கதாலிக அதத்க ஆயாதுனா Fபனஸீதஹா வ கதாலிகல் யவ்ம துன்ஸா
(அதற்கு இறைவன்,) “இவ்விதம்தான் இருக்கும்; நம்முடைய வசனங்கள் உன்னிடம் வந்தன; அவற்றை நீ மறந்துவிட்டாய்; அவ்வாறே இன்றைய தினம் நீயும் மறக்கப்பட்டு விட்டாய்” என்று கூறுவான்.
وَكَذٰلِكَ نَجْزِیْ مَنْ اَسْرَفَ وَلَمْ یُؤْمِنْ بِاٰیٰتِ رَبِّهٖ ؕ وَلَعَذَابُ الْاٰخِرَةِ اَشَدُّ وَاَبْقٰی ۟
وَكَذٰلِكَஇவ்வாறுதான்نَجْزِىْகூலி கொடுப்போம்مَنْஎவர்اَسْرَفَவரம்பு மீறினார்وَلَمْ يُؤْمِنْۢஇன்னும் நம்பிக்கை கொள்ளவில்லைبِاٰيٰتِவசனங்களைرَبِّهٖ‌ؕதன் இறைவனின்وَلَعَذَابُதண்டனைالْاٰخِرَةِமறுமையின்اَشَدُّமிகக் கடுமையானதுوَاَبْقٰى‏இன்னும் நிரந்தரமானது
வ கதாலிக னஜ்Zஜீ மன் அஸ்ரFப வ லம் யு'மின் Bபி ஆயாதி ரBப்Bபிஹ்; வ ல'அதாBபுல் ஆகிரதி அஷத்து வ அBப்கா
ஆகவே, எவன் தன் இறைவனுடைய வசனங்களின் மேல் நம்பிக்கை கொள்ளாமல், வரம்பு மீறி நடக்கின்றானோ அவனுக்கு இவ்வாறுதான் நாம் கூலி கொடுப்போம்; மேலும் மறுமையின் வேதனை மிகவும் கடினமானதும் நிலையானதுமாகும்.
اَفَلَمْ یَهْدِ لَهُمْ كَمْ اَهْلَكْنَا قَبْلَهُمْ مِّنَ الْقُرُوْنِ یَمْشُوْنَ فِیْ مَسٰكِنِهِمْ ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّاُولِی النُّهٰی ۟۠
اَفَلَمْ يَهْدِதெளிவுபடுத்தவில்லையாلَهُمْஅவர்களுக்குكَمْஎத்தனையோاَهْلَكْنَاநாம் அழித்ததுقَبْلَهُمْஇவர்களுக்கு முன்னர்مِّنَ الْقُرُوْنِதலைமுறையினர்களைيَمْشُوْنَசெல்கிறார்கள்فِىْ مَسٰكِنِهِمْ‌ؕஅவர்களின் இருப்பிடங்களில்اِنَّநிச்சயமாகفِىْ ذٰ لِكَஇதில்لَاٰيٰتٍபல அத்தாட்சிகள்لِّاُولِى النُّهٰى‏அறிவுடையவர்களுக்கு
அFபலம் யஹ்தி லஹும் கம் அஹ்லக்னா கBப்லஹும் மினல் குரூனி யம்ஷூன Fபீ மஸாகினிஹிம்; இன்ன Fபீ தாலிக ல ஆயாதில் லி உலின்னுஹா
இவர்களுக்கு முன் நாம் எத்தனையோ தலைமுறையினரை அழித்திருக்கிறோம் என்பது அவர்களுக்கு(ப் படிப்பினையைத் தந்து) நேர் வழி காட்டவில்லையா? (அழிந்து போன) அவர்கள் குடியிருந்த இடங்களில் தானே இவர்கள் நடக்கிறார்கள்; நிச்சயமாக அதில் அறிவுடையோருக்கு அத்தாட்சிகள் உள்ளன.
وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَّبِّكَ لَكَانَ لِزَامًا وَّاَجَلٌ مُّسَمًّی ۟ؕ
وَلَوْلَا كَلِمَةٌஒரு வாக்கு(ம்) இருக்கவில்லையெனில்سَبَقَتْமுந்திمِنْ رَّبِّكَஉமது இறைவனிடம்لَــكَانَ لِزَامًاகண்டிப்பாக மரணம் ஏற்பட்டே இருக்கும்وَّاَجَلٌதவணையும்مُّسَمًّىؕ‏ஒரு குறிப்பிட்ட
வ லவ் லா கலிமதுன் ஸBபகத் மிர் ரBப்Bபிக லகான லிZஜாம(ன்)வ் வ 'அஜலுன் முஸம்மா
உமது இறைவனிடமிருந்து ஒரு வாக்கும் (தண்டனைக்கான) குறிப்பிடபட்ட ஒரு தவணையும் முந்திரா விட்டால் அது (வேதனை) ஏற்பட்டு இருக்கும்.
فَاصْبِرْ عَلٰی مَا یَقُوْلُوْنَ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوْعِ الشَّمْسِ وَقَبْلَ غُرُوْبِهَا ۚ وَمِنْ اٰنَآئِ الَّیْلِ فَسَبِّحْ وَاَطْرَافَ النَّهَارِ لَعَلَّكَ تَرْضٰی ۟
فَاصْبِرْநீர் பொறுத்துக் கொள்வீராகعَلٰى مَا يَقُوْلُوْنَஅவர்கள் கூறுவதைوَسَبِّحْஇன்னும் தொழுவீராகبِحَمْدِபுகழ்ந்துرَبِّكَஉமது இறைவனைقَبْلَமுன்னரும்طُلُوْعِஉதிக்கும்الشَّمْسِசூரியன்وَقَبْلَமுன்னரும்غُرُوْبِهَا‌ ۚஅது மறையும்وَمِنْ اٰنَآىٴِநேரங்களிலும்الَّيْلِஇரவின்فَسَبِّحْஇன்னும் தொழுவீராகوَاَطْرَافَஓரங்களிலும்النَّهَارِபகலின்لَعَلَّكَ تَرْضٰى‏நீர் திருப்தி பெறுவீர்
Fபஸ்Bபிர் 'அலா மா யகூலூன வ ஸBப்Bபிஹ் Bபிஹம்தி ரBப்Bபிக கBப்ல துலூ'இஷ் ஷம்ஸி வ கBப்ல குரூBபிஹா வ மின் ஆனா'இல் லய்லி FபஸBப்Bபிஹ் வ அத்ராFபன் னஹாரி ல 'அல்லக தர்ளா
ஆகவே (நபியே!) அவர்கள் சொல்வதை(யெல்லாம்) நீர் பொறுத்துக் கொள்வீராக; இன்னும் சூரியன் உதிப்பதற்கு முன்னும், அது அடைவதற்கு முன்னும், இரவின் நேரங்களிலும் உம்முடைய இறைவனின் புகழைத் துதித்துத் தொழுவீராக; மேலும் இன்னும் பகலின் (இரு) முனைகளிலும் இவ்வாறே துதி செய்து தொழுவீராக; இதனால் (நன்மைகளடைந்து) நீர் திருப்தி பெறலாம்.
وَلَا تَمُدَّنَّ عَیْنَیْكَ اِلٰی مَا مَتَّعْنَا بِهٖۤ اَزْوَاجًا مِّنْهُمْ زَهْرَةَ الْحَیٰوةِ الدُّنْیَا ۙ۬ لِنَفْتِنَهُمْ فِیْهِ ؕ وَرِزْقُ رَبِّكَ خَیْرٌ وَّاَبْقٰی ۟
وَلَا تَمُدَّنَّநீர் திருப்பாதீர்عَيْنَيْكَஉமது கண்களைاِلٰى مَا مَتَّعْنَاஎவற்றின் பக்கம் இன்பமளித்தோம்بِهٖۤஅதன் மூலம்اَزْوَاجًاபோன்றவர்கள்مِّنْهُمْஇவர்களைزَهْرَةَஅலங்காரமாகالْحَيٰوةِ الدُّنْيَا ۙஉலக வாழ்க்கையின்لِنَفْتِنَهُمْஅவர்களை நாம் சோதிப்பதற்காகفِيْهِ‌ ؕஅதில்وَرِزْقُஅருட்கொடைرَبِّكَஉமது இறைவனின்خَيْرٌசிறந்ததுوَّاَبْقٰى‏நிலையானது
வ லா தமுத்தன்ன 'அய்னய்க இலா ம மத்தஃன Bபிஹீ அZஜ்வஜம் மின்ஹும் Zஜஹ்ரதல் ஹயாதித் துன்ய லினFப்தினஹும் Fபீஹ்; வ ரிZஜ்கு ரBப்Bபிக கய்ரு(ன்)வ் வ அBப்கா
இன்னும், அவர்களில் சில பிரிவினர் இன்பமனுபவிக்க நாம் கொடுத்திருக்கும் (வாழ்க்கை வசதிகளின்) பக்கம் உமது கண்களை நீட்டாதீர்; (இவை யெல்லாம்) அவர்களைச் சோதிப்பதற்காகவே நாம் கொடுத்துள்ள உலக வாழ்க்கையின் அலங்காரங்களாகும். உமது இறைவன் (மறுமையில் உமக்கு) வழங்கவிருப்பது சிறந்ததும் நிலையானதும் ஆகும்.
وَاْمُرْ اَهْلَكَ بِالصَّلٰوةِ وَاصْطَبِرْ عَلَیْهَا ؕ لَا نَسْـَٔلُكَ رِزْقًا ؕ نَحْنُ نَرْزُقُكَ ؕ وَالْعَاقِبَةُ لِلتَّقْوٰی ۟
وَاْمُرْஏவுவீராகاَهْلَكَஉமது குடும்பத்திற்குبِالصَّلٰوةِதொழுகையைوَاصْطَبِرْஉறுதியாக இருப்பீராகعَلَيْهَا‌ ؕஅதன் மீதுلَا نَسْــٴَــلُكَநாம் உம்மிடம் எதையும் கேட்கவில்லைرِزْقًا‌ ؕஉணவு எதையும்نَحْنُ نَرْزُقُكَ‌ ؕநாம்தான் உமக்கு உணவளிக்கிறோம்وَالْعَاقِبَةُநல்ல முடிவுلِلتَّقْوٰى‏இறையச்சத்திற்குத்தான்
வ'முர் அஹ்லக Bபிஸ் ஸலாதி வஸ்தBபிர் 'அலய்ஹா லா னஸ்'அலுக ரிZஜ்கா; னஹ்னு னர்Zஜுகுக்; வல் 'ஆகிBபது லித்தக்வா
(நபியே!) உம் குடும்பத்தினரைத் தொழுது வருமாறு நீர் ஏவுவீராக! (தொழுகையின் மீது) நீர் பொறுமையும், உறுதியும் கொண்டிருப்பீராக! நாம் உம்மிடம் உணவு கேட்கவில்லை; ஆனால் உமக்கு உணவை நாம் கொடுக்கிறோம்; இறுதியாகச் சிறந்த நிலை பயபக்தி(யுடையோரு)க்குத் தான்.
وَقَالُوْا لَوْلَا یَاْتِیْنَا بِاٰیَةٍ مِّنْ رَّبِّهٖ ؕ اَوَلَمْ تَاْتِهِمْ بَیِّنَةُ مَا فِی الصُّحُفِ الْاُوْلٰی ۟
وَقَالُوْاஇவர்கள் கூறினார்கள்لَوْلَا يَاْتِيْنَاநம்மிடம் கொண்டு வரமாட்டாராبِاٰيَةٍஓர் அத்தாட்சியைمِّنْ رَّبِّهٖ ؕதன் இறைவனிடமிருந்துاَوَلَمْ تَاْتِہِمْஅவர்களிடம் வரவில்லையாبَيِّنَةُதெளிவான சான்றுمَا فِى الصُّحُفِவேதங்களில் உள்ளالْاُوْلٰى‏முந்திய
வ காலூ லவ் லா ய'தீனா Bபி ஆயதின் மிர் ரBப்Bபிஹ்; அவ லம் த'திஹிம் Bபய்யினது மா Fபிஸ் ஸுஹுFபில் ஊலா
“தம் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியை ஏன் அவர் நம்மிடம் கொண்டு வரவில்லை?” என்று (நிராகரிப்போர்) கேட்கின்றனர்; முந்தைய வேதங்களில் உள்ள தெளிவான அத்தாட்சிகள் அவர்களுக்கு வரவில்லையா?
وَلَوْ اَنَّاۤ اَهْلَكْنٰهُمْ بِعَذَابٍ مِّنْ قَبْلِهٖ لَقَالُوْا رَبَّنَا لَوْلَاۤ اَرْسَلْتَ اِلَیْنَا رَسُوْلًا فَنَتَّبِعَ اٰیٰتِكَ مِنْ قَبْلِ اَنْ نَّذِلَّ وَنَخْزٰی ۟
وَلَوْ اَنَّاۤ اَهْلَكْنٰهُمْஇவர்களை நாம் அழித்திருந்தால்بِعَذَابٍஒரு வேதனையைக் கொண்டுمِّنْ قَبْلِهٖஇதற்கு முன்னரேلَـقَالُوْاகூறுவார்கள்رَبَّنَاஎங்கள் இறைவாلَوْلَاۤ اَرْسَلْتَநீ அனுப்பி இருக்கக்கூடாதா?اِلَـيْنَاஎங்களுக்குرَسُوْلًاஒரு தூதரைفَنَتَّبِعَபின்பற்றி இருப்போமேاٰيٰتِكَஉனது வசனங்களைمِنْ قَبْلِமுன்னர்اَنْ نَّذِلَّஇழிவடைவதற்கும்وَنَخْزٰى‏கேவலப்படுவதற்கும்
வ லவ் அன்னா அஹ்லக்னாஹும் Bபி 'அதாBபின் மின் கBப்லிஹீ லகாலூ ரBப்Bபனா லவ் லா அர்ஸல்த இலய்னா ரஸூலன் Fபனத்தBபி'அ ஆயாதிக மின் கBப்லி அன் னதில்ல வ னக்Zஜா
இன்னும் (நம் தூதர்) வருவதற்கு முன், நாம் இவர்களை வேதனை செய்து அழித்திருந்தால், அவர்கள், “எங்கள் இறைவா! நீ எங்களுக்கு ஒரு தூதரை அனுப்பியிருக்க வேண்டாமா? அவ்வாறாயின் நாங்கள் சிறுமைப்படுவதற்கும், கேவலப்படுவதற்கும் முன் உன் வசனங்களைப் பின்பற்றியிருப்போமே” என்று கூறுவார்கள்.
قُلْ كُلٌّ مُّتَرَبِّصٌ فَتَرَبَّصُوْا ۚ فَسَتَعْلَمُوْنَ مَنْ اَصْحٰبُ الصِّرَاطِ السَّوِیِّ وَمَنِ اهْتَدٰی ۟۠
قُلْகூறுவீராகكُلٌّஒவ்வொருவரும்مُّتَرَبِّصٌஎதிர்பார்ப்பவர்களேفَتَرَبَّصُوْا‌ ۚஆகவே எதிர்பாருங்கள்فَسَتَعْلَمُوْنَநீங்கள் அறிந்து கொள்வீர்கள்مَنْயார்اَصْحٰبُ الصِّرَاطِபாதையுடையவர்கள்السَّوِىِّநேரானوَمَنِயார்اهْتَدٰى‏நேர்வழி பெற்றவர்
குல் குல்லும் முதரBப்Bபிஸுன் Fப தரBப்Bபஸூ Fப ஸ தஃலமூன மன் அஸ்ஹாBபுஸ் ஸிராதிஸ் ஸவிய்யி வ மனிஹ் ததா
(நபியே! “இறுதி நாளை) அனைவரும் எதிர்பார்த்திருப்பவர்களே! ஆகவே நீங்களும் எதிர்பார்த்திருங்கள், நேரான வழியை உடையவர் யார்? நேர் வழி அடைந்து விட்டவர்கள் யார்? என்பதையும் திடமாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள்” என்று நீர் கூறுவீராக.