12. ஸூரத்து யூஸுஃப்

மக்கீ, வசனங்கள்: 111

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
الٓرٰ ۫ تِلْكَ اٰیٰتُ الْكِتٰبِ الْمُبِیْنِ ۟۫
الٓرٰ ۫அலிஃப் லாம் றாتِلْكَஇவைاٰیٰتُவசனங்கள்الْكِتٰبِவேதத்தின்الْمُبِیْنِ۫தெளிவான
அலிFப்-லாம்-ரா; தில்க ஆயாதுல் கிதாBபில் முBபீன்
அலிஃப், லாம், றா. இவை தெளிவான இவ்வேதத்தின் வசனங்களாகும்.
اِنَّاۤ اَنْزَلْنٰهُ قُرْءٰنًا عَرَبِیًّا لَّعَلَّكُمْ تَعْقِلُوْنَ ۟
اِنَّاۤநிச்சயமாக நாம்اَنْزَلْنٰهُஅதனை இறக்கியருளினோம்قُرْءٰنًاகுர்ஆனாகعَرَبِیًّاஅரபு மொழியில்لَّعَلَّكُمْநீங்கள்تَعْقِلُوْنَவிளங்கிக் கொள்வதற்காக
இன்னா அன்Zஜல்னாஹு குர்'ஆன 'அரBபிய்யல் ல 'அல்லகும் தஃகிலூன்
நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக, இதனை அரபி மொழியிலான குர்ஆனாக நிச்சயமாக நாமே இறக்கி வைத்தோம்.
نَحْنُ نَقُصُّ عَلَیْكَ اَحْسَنَ الْقَصَصِ بِمَاۤ اَوْحَیْنَاۤ اِلَیْكَ هٰذَا الْقُرْاٰنَ ۖۗ وَاِنْ كُنْتَ مِنْ قَبْلِهٖ لَمِنَ الْغٰفِلِیْنَ ۟
نَحْنُநாம்نَقُصُّவிவரிக்கிறோம்عَلَیْكَஉமக்குاَحْسَنَமிக அழகானالْقَصَصِவரலாற்றைبِمَاۤஎதன் மூலமாகاَوْحَیْنَاۤநாம் வஹீ அறிவித்தோமோاِلَیْكَஉமக்குهٰذَاஇந்தالْقُرْاٰنَ ۖۗகுர்ஆனைوَ اِنْமேலும் நிச்சயமாகكُنْتَநீர் இருந்தீர்مِنْஇருந்துقَبْلِهٖஇதற்கு முன்னர்لَمِنَநிச்சயமாகالْغٰفِلِیْنَஅறியாதவர்களில்
னஹ்னு னகுஸ்ஸு 'அலய்க அஹ்ஸனல் கஸஸி Bபிமா அவ்ஹய்னா இலய்க ஹாதல் குர்'ஆன வ இன் குன்த மின் கBப்லிஹீ லமினல் காFபிலீன்
(நபியே!) நாம் வஹீ மூலம் உம் மீது இந்த குர்ஆனை அருள் செய்தது கொண்டு மிக அழகான வரலாற்றை உமக்கு நாம் கூறுகின்றோம் - இதற்குமுன் (இது குறித்து) ஏதும் அறியாதவர்களில் (ஒருவராய்) நீர் இருந்தீர்.
اِذْ قَالَ یُوْسُفُ لِاَبِیْهِ یٰۤاَبَتِ اِنِّیْ رَاَیْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَیْتُهُمْ لِیْ سٰجِدِیْنَ ۟
اِذْஅப்போதுقَالَகூறினார்یُوْسُفُயூஸுஃப்لِاَبِیْهِதன் தந்தையிடம்یٰۤاَبَتِஎன் அருமைத் தந்தையேاِنِّیْநிச்சயமாக நான்رَاَیْتُகண்டேன்اَحَدَஒன்றுعَشَرَபத்துكَوْكَبًاநட்சத்திரங்களைوَّ الشَّمْسَசூரியனையும்وَ الْقَمَرَசந்திரனையும்رَاَیْتُهُمْஅவற்றை நான் கண்டேன்لِیْஎனக்குسٰجِدِیْنَசிரம் பணிபவர்களாக
இத் கால யூஸுFபு லி அBபீஹி யா அBபதி இன்னீ ர அய்து அஹத 'அஷர கவ்கBப(ன்)வ் வஷ் ஷம்ஸ வல்கமர ர அய்துஹும் லீ ஸாஜிதீன்
யூஸுஃப் தம் தந்தையாரிடம்: “என் அருமைத் தந்தையே! பதினோரு நட்சத்திரங்களும், சூரியனும், சந்திரனும் - (இவை யாவும்) எனக்குச் சிரம் பணிவதை மெய்யாகவே (கனவில்) நான் கண்டேன்” என்று கூறியபொழுது.
قَالَ یٰبُنَیَّ لَا تَقْصُصْ رُءْیَاكَ عَلٰۤی اِخْوَتِكَ فَیَكِیْدُوْا لَكَ كَیْدًا ؕ اِنَّ الشَّیْطٰنَ لِلْاِنْسَانِ عَدُوٌّ مُّبِیْنٌ ۟
قَالَஅவர் கூறினார்یٰبُنَیَّஎன் அருமை மகனேلَاவேண்டாம்تَقْصُصْநீ விவரிக்கرُءْیَاكَஉனது கனவைعَلٰۤیமுன்பாகاِخْوَتِكَஉனது சகோதரர்களின்فَیَكِیْدُوْاஅதனால் அவர்கள் சூழ்ச்சி செய்வார்கள்لَكَஉனக்கு எதிராகكَیْدًا ؕஒரு சூழ்ச்சியைاِنَّநிச்சயமாகالشَّیْطٰنَஷைத்தான்لِلْاِنْسَانِமனிதனுக்குعَدُوٌّபகைவன்مُّبِیْنٌதெளிவான
கால யா Bபுனய்ய லா தக்ஸுஸ் ரு'யாக 'அலா இக்வதிக Fபயகீதூ லக கய்தா; இன்னஷ் ஷய்தான லில் இன்ஸானி 'அதுவ்வும் முBபீன்
“என் அருமை மகனே! உமது கனவை உன் சகோதரர்களிடம் சொல்லிக் காட்ட வேண்டாம்; (அவ்வாறு செய்தால்) அவர்கள், உனக்கு(த் தீங்கிழைக்க) சதி செய்வார்கள்; ஏனெனில் (அவ்வாறு சதி செய்யத் தூண்டும்) ஷைத்தான், நிச்சயமாக மனிதனுக்குப் பகிரங்க விரோதியாக இருக்கின்றான்.
وَكَذٰلِكَ یَجْتَبِیْكَ رَبُّكَ وَیُعَلِّمُكَ مِنْ تَاْوِیْلِ الْاَحَادِیْثِ وَیُتِمُّ نِعْمَتَهٗ عَلَیْكَ وَعَلٰۤی اٰلِ یَعْقُوْبَ كَمَاۤ اَتَمَّهَا عَلٰۤی اَبَوَیْكَ مِنْ قَبْلُ اِبْرٰهِیْمَ وَاِسْحٰقَ ؕ اِنَّ رَبَّكَ عَلِیْمٌ حَكِیْمٌ ۟۠
وَ كَذٰلِكَஅவ்வாறேیَجْتَبِیْكَஉன்னைத் தேர்ந்தெடுப்பான்رَبُّكَஉனது இறைவன்وَ یُعَلِّمُكَமேலும் உனக்குக் கற்றுக்கொடுப்பான்مِنْஇருந்துتَاْوِیْلِவிளக்கத்தைالْاَحَادِیْثِகனவுகளின்وَ یُتِمُّமேலும் அவன் முழுமையாக்குவான்نِعْمَتَهٗதனது அருட்கொடையைعَلَیْكَஉன் மீதுوَ عَلٰۤیமேலும் மீதுاٰلِசந்ததியினர்یَعْقُوْبَயஃகூப்كَمَاۤஎவ்வாறுاَتَمَّهَاஅதனை முழுமையாக்கினானோعَلٰۤیமீதுاَبَوَیْكَஉனது இரு முன்னோர்கள்مِنْஇருந்துقَبْلُமுன்னர்اِبْرٰهِیْمَஇப்ராஹீம்وَ اِسْحٰقَ ؕமேலும் இஸ்ஹாக்اِنَّநிச்சயமாகرَبَّكَஉனது இறைவன்عَلِیْمٌநன்கறிந்தவன்حَكِیْمٌ۠ஞானமிக்கவன்
வ கதாலிக யஜ்தBபீக ரBப்Bபுக வ யு'அல்லிமுக மின் த'வீலில் அஹாதீதி வ யுதிம்மு னிஃமதஹூ 'அலய்க வ 'அலா ஆலி யஃகூBப கமா அதம்மஹா 'அலா அBபவய்க மின் கBப்லு இBப்ராஹீம வ இஸ்ஹாக்; இன்ன ரBப்Bபக 'அலீமுன் ஹகீம்
இவ்வாறு உன் இறைவன் உன்னைத் தேர்ந்தெடுத்து கனவுகளின் விளக்கத்தை உனக்குக் கற்றுக்கொடுத்து அவனுடைய அருளை உன் மீதும், யஃகூபின் சந்ததியார் மீதும் நிரப்பமாக்கி வைப்பான் - இதற்கு முன்னர் உன்னுடைய மூதாதையராகிய இப்ராஹீம், இஸ்ஹாக் (ஆகிய) இருவர் மீதும் தன் அருளை அவன் நிரப்பமாக்கி வைத்தது போல், நிச்சயமாக உம் இறைவன் யாவற்றையும் நன்கறிந்தோனும், மிக்க ஞானமுடையவனுமாக இருக்கின்றான்.”
لَقَدْ كَانَ فِیْ یُوْسُفَ وَاِخْوَتِهٖۤ اٰیٰتٌ لِّلسَّآىِٕلِیْنَ ۟
لَقَدْநிச்சயமாகكَانَஇருக்கின்றனفِیْஇல்یُوْسُفَயூஸுஃப்وَ اِخْوَتِهٖۤமேலும் அவருடைய சகோதரர்கள்اٰیٰتٌஅத்தாட்சிகள்لِّلسَّآىِٕلِیْنَகேட்பவர்களுக்கு
லகத் கான Fபீ யூஸுFப வ இக்வதிஹீ ஆயாதுல் லிஸ்ஸா'இலீன்
நிச்சயமாக யூஸுஃபிடத்திலும் அவர்களுடைய சகோதரர்களிடத்திலும் (அவர்களைப் பற்றி) விசாரிப்பவர்களுக்கு பல படிப்பினைகள் இருக்கின்றன.
اِذْ قَالُوْا لَیُوْسُفُ وَاَخُوْهُ اَحَبُّ اِلٰۤی اَبِیْنَا مِنَّا وَنَحْنُ عُصْبَةٌ ؕ اِنَّ اَبَانَا لَفِیْ ضَلٰلٍ مُّبِیْنِ ۟ۚۖ
اِذْபோதுقَالُوْاஅவர்கள் கூறினார்கள்لَیُوْسُفُநிச்சயமாக யூஸுஃப்وَ اَخُوْهُமேலும் அவரது சகோதரரும்اَحَبُّமிக விருப்பமானவர்கள்اِلٰۤیஇடம்اَبِیْنَاஎங்கள் தந்தைمِنَّاஎங்களை விடوَ نَحْنُஇன்னும் நாம்عُصْبَةٌ ؕஒரு பலமான கூட்டமாகاِنَّநிச்சயமாகاَبَانَاஎங்கள் தந்தைلَفِیْநிச்சயமாகضَلٰلٍவழிகேட்டில்مُّبِیْنِۚۖதெளிவான
இத் காலூ ல யூஸுFபு வ அகூஹு அஹBப்Bபு இலா அBபீனா மின்னா வ னஹ்னு 'உஸ்Bபதுன்; இன்ன அBபானா லFபீ ளலாலிம் முBபீன்
(யூஸுஃபுடைய சகோதரர்கள்) கூறினார்கள்: “யூஸுஃபும், அவருடைய சகோதரரும் நம் தந்தைக்கு நம்மைவிட அதிகப் பிரியமுள்ளவர்களாக இருக்கின்றனர் - நாமோ (பலமுள்ள) கூட்டதினராக இருக்கின்றோம்; நிச்சயமாக நம் தந்தை பகிரங்கமான தவறிலேயே இருக்கின்றார் (என்றும்),
قْتُلُوْا یُوْسُفَ اَوِ اطْرَحُوْهُ اَرْضًا یَّخْلُ لَكُمْ وَجْهُ اَبِیْكُمْ وَتَكُوْنُوْا مِنْ بَعْدِهٖ قَوْمًا صٰلِحِیْنَ ۟
قْتُلُوْاகொன்று விடுங்கள்یُوْسُفَயூஸுஃபைاَوِஅல்லதுاطْرَحُوْهُஅவரை எறிந்து விடுங்கள்اَرْضًاஒரு நிலத்தில்یَّخْلُமுழுமையாகக் கிடைக்கும்لَكُمْஉங்களுக்குوَجْهُமுகம்اَبِیْكُمْஉங்கள் தந்தையின்وَ تَكُوْنُوْاமேலும் நீங்கள் ஆகிவிடலாம்مِنْۢஇருந்துبَعْدِهٖஅதன் பிறகுقَوْمًاஒரு கூட்டத்தாராகصٰلِحِیْنَநல்லவர்களாக
உக்துலூ யூஸுFப அவித்ர ஹூஹு அர்ள(ன்)ய் யக்லு லகும் வஜ்ஹு அBபீகும் வ தகூனூ மிம் Bபஃதிஹீ கவ்மன் ஸாலிஹீன்
“யூஸுஃபை” கொன்றுவிடுங்கள், அல்லது அவரை (தொலைவான) ஒரு நாட்டில் எறிந்துவிடுங்கள்; (அப்பொழுது) உங்கள் தந்தையின் கவனம் உங்கள் பக்கமே இருக்கும்; இதன்பின் நீங்கள் நல்ல மனிதர்களாகி விடுவீர்கள்” என்றும் கூறியபொழுது,
قَالَ قَآىِٕلٌ مِّنْهُمْ لَا تَقْتُلُوْا یُوْسُفَ وَاَلْقُوْهُ فِیْ غَیٰبَتِ الْجُبِّ یَلْتَقِطْهُ بَعْضُ السَّیَّارَةِ اِنْ كُنْتُمْ فٰعِلِیْنَ ۟
قَالَகூறினார்قَآىِٕلٌஒருவர்مِّنْهُمْஅவர்களில்لَاவேண்டாம்تَقْتُلُوْاகொல்லாதீர்கள்یُوْسُفَயூஸுஃபைوَ اَلْقُوْهُமேலும் அவரைப் போடுங்கள்فِیْஇல்غَیٰبَتِஆழத்தில்الْجُبِّகிணற்றின்یَلْتَقِطْهُஅவரை எடுத்துக் கொள்வார்கள்بَعْضُசிலர்السَّیَّارَةِபயணிகளில்اِنْஎன்றால்كُنْتُمْநீங்கள் இருந்தால்فٰعِلِیْنَசெய்பவர்களாக
காலா கா'இலும் மின்ஹும் லா தக்துலூ யூஸுFப வ அல்கூஹு Fபீ கயாBபதில் ஜுBப்Bபி யல்தகித்ஹு Bபஃளுஸ் ஸய் யாரதி இன் குன்தும் Fபா 'இலீன்
அவர்களில் ஒருவர்: “நீங்கள் யூஸுஃபை கொலை செய்யாதீர்கள், நீங்கள் அவரை (ஏதாவது) செய்தே ஆகவேண்டுமென்றால் - அவரை ஓர் ஆழமான கிணற்றில் தள்ளிவிடுங்கள்; (அப்போது அவ்வழி செல்லும்) பிரயாணிகளில் சிலர் அவரை எடுத்துக் கொள்ளக்கூடும்” என்று கூறினார்.
قَالُوْا یٰۤاَبَانَا مَا لَكَ لَا تَاْمَنَّا عَلٰی یُوْسُفَ وَاِنَّا لَهٗ لَنٰصِحُوْنَ ۟
قَالُوْاஅவர்கள் கூறினார்கள்یٰۤاَبَانَاஎங்கள் தந்தையேمَاஏன்لَكَஉங்களுக்குلَاஇல்லைتَاْمَنَّاஎங்களை நீர் நம்புகிறீர்عَلٰیவிஷயத்தில்یُوْسُفَயூஸுப்وَ اِنَّاமேலும் நிச்சயமாக நாங்கள்لَهٗஅவருக்குلَنٰصِحُوْنَநிச்சயமாக நலன் நாடுபவர்கள்
காலூ யா அBபானா மா லக லா த'மன்னா 'அலா யூஸுFப வ இன்னா லஹூ லனா ஸிஹூன்
(பிறகு தம் தந்தையிடம் வந்து,) “எங்கள் தந்தையே! யூஸுஃபுடைய விஷயத்தில் நீங்கள் ஏன் எங்களை நம்புவதில்லை? மெய்யாகவே, நாங்கள் அவருக்கு நன்மையை நாடுபவர்களாகவே இருக்கின்றோம்.
اَرْسِلْهُ مَعَنَا غَدًا یَّرْتَعْ وَیَلْعَبْ وَاِنَّا لَهٗ لَحٰفِظُوْنَ ۟
اَرْسِلْهُஅவரை அனுப்பி வையுங்கள்مَعَنَاஎங்களுடன்غَدًاநாளைیَّرْتَعْஅவர் உண்டு மகிழட்டும்وَ یَلْعَبْமேலும் விளையாடட்டும்وَ اِنَّاமேலும் நிச்சயமாக நாங்கள்لَهٗஅவரைப்لَحٰفِظُوْنَபாதுகாப்பவர்கள்
அர்ஸில்ல்ஹு ம'அனா கத(ன்)ய் யர்தஃ வ யல்'அBப் வ இன்னா லஹூ ல ஹாFபிளூன்
“நாளைக்கு அவரை எங்களுடன் அனுப்பி வையுங்கள். (காட்டிலுள்ள கனிகளைப்) புசித்துக் கொண்டும் விளையாடிக் கொண்டும் இருப்பார்; நிச்சயமாக நாங்கள் அவரைப் பாதுகாத்துக் கொள்வோம்” என்று கூறினார்கள்.
قَالَ اِنِّیْ لَیَحْزُنُنِیْۤ اَنْ تَذْهَبُوْا بِهٖ وَاَخَافُ اَنْ یَّاْكُلَهُ الذِّئْبُ وَاَنْتُمْ عَنْهُ غٰفِلُوْنَ ۟
قَالَஅவர் கூறினார்اِنِّیْநிச்சயமாகلَیَحْزُنُنِیْۤஎன்னை கவலையடையச் செய்கிறதுاَنْநீங்கள்تَذْهَبُوْاஅழைத்துச் செல்வதுبِهٖஅவனைوَ اَخَافُமேலும் நான் பயப்படுகிறேன்اَنْஎன்றுیَّاْكُلَهُஅவனைத் தின்றுவிடுமோالذِّئْبُஓநாய்وَ اَنْتُمْமேலும் நீங்கள்عَنْهُஅவனைப் பற்றிغٰفِلُوْنَகவனக்குறைவாக இருக்கும்போது
கால இன்னீ ல யஹ்Zஜுனுனீ அன் தத்ஹBபூ Bபிஹீ வ அகாFபு அ(ன்)ய் ய'குலஹுத் தி'Bபு வ அன்தும் 'அன்ஹு காFபிலூன்
(அதற்கு யஃகூப்,) “நீங்கள் அவரை அழைத்துச் செல்வது, நிச்சயமாக என்னைக் கவலைக்குள் ஆக்குகிறது; மேலும், நீங்கள் அவரை கவனியாது, பராமுகமாகயிருக்கும்போது அவரை ஓநாய் (பிடித்துத்) தின்றுவிடுமோ என்று நான் பயப்படுகிறேன்” என்று கூறினார்.
قَالُوْا لَىِٕنْ اَكَلَهُ الذِّئْبُ وَنَحْنُ عُصْبَةٌ اِنَّاۤ اِذًا لَّخٰسِرُوْنَ ۟
قَالُوْاஅவர்கள் கூறினார்கள்لَىِٕنْநிச்சயமாகاَكَلَهُஅவனைத் தின்றுவிட்டால்الذِّئْبُஓநாய்وَ نَحْنُநாங்கள் இருக்கும்போதுعُصْبَةٌஒரு பலமான குழுவாகاِنَّاۤநிச்சயமாக நாங்கள்اِذًاஅவ்வாறாயின்لَّخٰسِرُوْنَநஷ்டமடைந்தவர்களாவோம்
காலூ ல இன் அகலஹுத்தி'Bபு வ னஹ்னு 'உஸ்Bபதுன் இன்னா இதல் லகாஸிரூன்
(அதற்கு) அவர்கள் “நாங்கள் (பலசாலிகளான) ஒரு கூட்டமாக இருந்தும், அவரை ஓநாய் தின்று விடுமானால், நிச்சயமாக நாங்கள் நஷ்டவாளிகளாக ஆகியிருப்போம்“ என்று கூறினார்கள்.
فَلَمَّا ذَهَبُوْا بِهٖ وَاَجْمَعُوْۤا اَنْ یَّجْعَلُوْهُ فِیْ غَیٰبَتِ الْجُبِّ ۚ وَاَوْحَیْنَاۤ اِلَیْهِ لَتُنَبِّئَنَّهُمْ بِاَمْرِهِمْ هٰذَا وَهُمْ لَا یَشْعُرُوْنَ ۟
فَلَمَّاபின்னர் எப்போதுذَهَبُوْاஅவர்கள் சென்றார்களோبِهٖஅவனை அழைத்துக்கொண்டுوَ اَجْمَعُوْۤاமேலும் அவர்கள் ஒருமனப்பட்டார்களோاَنْஎன்றுیَّجْعَلُوْهُஅவனைப் போட்டுவிடفِیْஉள்ளேغَیٰبَتِஇருண்ட ஆழத்தில்الْجُبِّ ۚகிணற்றின்وَ اَوْحَیْنَاۤமேலும் நாம் அறிவித்தோம்اِلَیْهِஅவனுக்குلَتُنَبِّئَنَّهُمْநிச்சயமாக நீர் அவர்களுக்குத் தெரிவிப்பீர்بِاَمْرِهِمْஅவர்களுடைய காரியத்தைப் பற்றிهٰذَاஇந்தوَ هُمْமேலும் அவர்கள்لَاஇல்லைیَشْعُرُوْنَஉணர்கிறார்கள்
Fபலம்மா தஹBபூ Bபிஹீ வ அஜ்ம'ஊ அ(ன்)ய்யஜ்'அலூஹு Fபீ கயாBபதில் ஜுBப்Bப்; வ அவ்ஹய்னா இலய்ஹி லதுனBப்Bபி 'அன்னஹும் Bபி அம்ரிஹிம் ஹாத வ ஹும் லா யஷ்'உரூன்
(இவ்வாறாக) அவர்கள் அவரை அழைத்துச் சென்று ஆழமான கிணற்றில் தள்ளிவிட ஒன்று சேர்ந்து முடிவு செய்த போது, “நீர் அவர்களின் இச்செயலைப்பற்றி அவர்களுக்கு (ஒரு காலத்தில்) உணர்த்துவீர். அது சமயம் அவர்கள் உம்மை அறிந்து கொள்ள மாட்டார்கள்” என்று நாம் யூஸுஃபுக்கு வஹீ அறிவித்தோம்.
وَجَآءُوْۤ اَبَاهُمْ عِشَآءً یَّبْكُوْنَ ۟ؕ
وَ جَآءُوْۤமேலும் அவர்கள் வந்தார்கள்اَبَاهُمْதங்கள் தந்தையிடம்عِشَآءًஇரவில்یَّبْكُوْنَؕஅழுதுகொண்டே
வ ஜா'ஊ அBபாஹும் 'இஷா 'அ(ன்)ய் யBப்கூன்
இன்னும், அவர்கள் (அன்று) பொழுது சாய்ந்ததும் தங்களுடைய தந்தையாரிடம் அழுது கொண்டே வந்தார்கள்.
قَالُوْا یٰۤاَبَانَاۤ اِنَّا ذَهَبْنَا نَسْتَبِقُ وَتَرَكْنَا یُوْسُفَ عِنْدَ مَتَاعِنَا فَاَكَلَهُ الذِّئْبُ ۚ وَمَاۤ اَنْتَ بِمُؤْمِنٍ لَّنَا وَلَوْ كُنَّا صٰدِقِیْنَ ۟
قَالُوْاஅவர்கள் கூறினார்கள்یٰۤاَبَانَاۤஎங்கள் தந்தையேاِنَّاநிச்சயமாக நாங்கள்ذَهَبْنَاசென்றோம்نَسْتَبِقُபந்தயமிடوَ تَرَكْنَاமேலும் நாங்கள் விட்டுச் சென்றோம்یُوْسُفَயூஸுஃபைعِنْدَஅருகில்مَتَاعِنَاஎங்கள் பொருட்களின்فَاَكَلَهُஆகவே அவரைத் தின்றுவிட்டதுالذِّئْبُ ۚஓநாய்وَ مَاۤமேலும் இல்லைاَنْتَநீர்بِمُؤْمِنٍநம்புபவராகلَّنَاஎங்களைوَ لَوْஎன்றாலும்كُنَّاநாங்கள்صٰدِقِیْنَஉண்மையாளர்களாக
காலூ யா அBபானா இன்னா தஹBப்னா னஸ்தBபிகு வ தரக்னா யூஸுFப 'இன்த மதா'இனா Fப அகலஹுத் தி'Bப், வ மா அன்த Bபிமு'மினில் லனா வ லவ் குன்னா ஸாதிகீன்
“எங்கள் தந்தையே! நாங்கள் யூஸுஃபை எங்களுடைய சாமான்களிடத்தில் விட்டுவிட்டு, ஓடி(யாடி விளையாடிக் கொண்டே வெகுதூரம்) சென்று விட்டோம்; அப்போது ஓநாய் அவரை(ப் பிடித்துத்) தின்று விட்டது - ஆனால் நாங்கள் உண்மையே சொன்ன போதிலும், நீங்கள் எங்களை நம்பவே மாட்டீர்கள்!” என்று கூறினார்கள்.
وَجَآءُوْ عَلٰی قَمِیْصِهٖ بِدَمٍ كَذِبٍ ؕ قَالَ بَلْ سَوَّلَتْ لَكُمْ اَنْفُسُكُمْ اَمْرًا ؕ فَصَبْرٌ جَمِیْلٌ ؕ وَاللّٰهُ الْمُسْتَعَانُ عَلٰی مَا تَصِفُوْنَ ۟
وَ جَآءُوْமேலும் அவர்கள் வந்தார்கள்عَلٰیமீதுقَمِیْصِهٖஅவனுடைய சட்டையின்بِدَمٍஇரத்தத்துடன்كَذِبٍ ؕபொய்யானقَالَஅவர் கூறினார்بَلْமாறாகسَوَّلَتْஅழகாகக் காட்டிவிட்டதுلَكُمْஉங்களுக்குاَنْفُسُكُمْஉங்கள் மனங்கள்اَمْرًا ؕஒரு காரியத்தைفَصَبْرٌஎனவே பொறுமையேجَمِیْلٌ ؕஅழகானதுوَ اللّٰهُமேலும் அல்லாஹ்الْمُسْتَعَانُஉதவி தேடப்படுபவன்عَلٰیமீதுمَاஎதைتَصِفُوْنَநீங்கள் விவரிக்கிறீர்களோ
வ ஜா'ஊ 'அலா கமீஸி ஹீ Bபிதமின் கதிBப் கால Bபல் ஸவ்வலத் லகும் அன்Fபுஸுகும் அம்ரா; FபஸBப்ருன் ஜமீல்; வல்லாஹுல் முஸ்த'ஆனு 'அலா மாதஸிFபூன்
(மேலும், தங்கள் கூற்றை மெய்ப்பிக்க) யூஸுஃபுடைய சட்டையில் பொய்யான இரத்தத்தைத் தடவிக்கொண்டு வந்திருந்தார்கள்; “இல்லை, உங்கள் மனம் ஒரு (தீய) காரியத்தை உங்களுக்கு அழகாகக் காண்பித்துவிட்டது; எனவே (எனக்கு இந்நிலையில் அழகிய) பொறுமையை மேற்கொள்வதே நலமாக இருக்கும்;மேலும், நீங்கள் கூறும் விஷயத்தில் அல்லாஹ்வே உதவி தேடப்படுபவன்” என்று கூறினார்.
وَجَآءَتْ سَیَّارَةٌ فَاَرْسَلُوْا وَارِدَهُمْ فَاَدْلٰی دَلْوَهٗ ؕ قَالَ یٰبُشْرٰی هٰذَا غُلٰمٌ ؕ وَاَسَرُّوْهُ بِضَاعَةً ؕ وَاللّٰهُ عَلِیْمٌۢ بِمَا یَعْمَلُوْنَ ۟
وَ جَآءَتْமேலும் வந்ததுسَیَّارَةٌஒரு பயணக்குழுفَاَرْسَلُوْاஎனவே அவர்கள் அனுப்பினார்கள்وَارِدَهُمْதங்கள் தண்ணீர் எடுப்பவரைفَاَدْلٰیஎனவே அவர் இறக்கினார்دَلْوَهٗ ؕதனது வாளியைقَالَஅவர் கூறினார்یٰبُشْرٰیஆஹா! நற்செய்திهٰذَاஇதோغُلٰمٌ ؕஒரு சிறுவன்وَ اَسَرُّوْهُமேலும் அவர்கள் அவரை மறைத்து வைத்தார்கள்بِضَاعَةً ؕஒரு வியாபாரப் பொருளாகوَ اللّٰهُமேலும் அல்லாஹ்عَلِیْمٌۢநன்கறிந்தவன்بِمَاஎவற்றைیَعْمَلُوْنَஅவர்கள் செய்கிறார்களோ
வ ஜா'அத் ஸய்யாரதுன் Fப-அர்ஸலூ வாரிதஹும் Fப அத்லா தல்வஹ்; கால யா Bபுஷ்ரா ஹாத குலாம்; வ அஸர்ரூஹு Bபி-ளா'அஹ்; வல்லாஹு 'அலீமுன் Bபிமா யஃமலூன்
பின்னர் (அக்கிணற்றருகே) ஒரு பயணக்கூட்டம் வந்தது; அவர்களில் தண்ணீர் கொண்டு வருபவரை(த் தண்ணீருக்காக அக்கூட்டத்தினர்) அனுப்பினார்கள். அவர் தம் வாளியை(க் கிணற்றில்) விட்டார். “நற்செய்தி! இதோ ஓர் (அழகிய) சிறுவன்!” என்று கூறினார் - (யூஸுஃபை தூக்கியெடுத்து) அவரை ஒரு வியாபாரப் பொருளாக(க் கருதி) மறைத்து வைத்துக் கொண்டார்கள்; அவர்கள் செய்ததை எல்லாம் அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்.
وَشَرَوْهُ بِثَمَنٍ بَخْسٍ دَرَاهِمَ مَعْدُوْدَةٍ ۚ وَكَانُوْا فِیْهِ مِنَ الزَّاهِدِیْنَ ۟۠
وَ شَرَوْهُமேலும் அவர்கள் அவனை விற்றார்கள்بِثَمَنٍۭஒரு விலைக்குبَخْسٍஅற்பமானدَرَاهِمَதிர்ஹம்களுக்குمَعْدُوْدَةٍ ۚஎண்ணக்கூடியوَ كَانُوْاமேலும் அவர்கள் இருந்தார்கள்فِیْهِஅவன் விஷயத்தில்مِنَஇருந்துالزَّاهِدِیْنَ۠பற்றில்லாதவர்களாக
வ ஷரவ்ஹு Bபிதமனிம் Bபக்ஸின் தராஹிம மஃதூ ததி(ன்)வ் வ கானூ Fபீஹி மினZஜ் Zஜாஹிதீன்
(இதற்குள் அவருடைய சகோதரர்கள் ஓடிவந்து) அவரை அவர்கள் (விரல்விட்டு) எண்ணக்கூடிய சில வெள்ளிக் காசுகளுக்கு அற்பமான கிரயத்திற்கு விற்றுவிட்டார்கள். அவர் விஷயத்தில் அவர்கள் பற்றற்றவர்களாக இருந்தார்கள்.
وَقَالَ الَّذِی اشْتَرٰىهُ مِنْ مِّصْرَ لِامْرَاَتِهٖۤ اَكْرِمِیْ مَثْوٰىهُ عَسٰۤی اَنْ یَّنْفَعَنَاۤ اَوْ نَتَّخِذَهٗ وَلَدًا ؕ وَكَذٰلِكَ مَكَّنَّا لِیُوْسُفَ فِی الْاَرْضِ ؗ وَلِنُعَلِّمَهٗ مِنْ تَاْوِیْلِ الْاَحَادِیْثِ ؕ وَاللّٰهُ غَالِبٌ عَلٰۤی اَمْرِهٖ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یَعْلَمُوْنَ ۟
وَ قَالَமேலும் கூறினார்الَّذِیஎவர்اشْتَرٰىهُஅவரை விலைக்கு வாங்கினாரோمِنْஇருந்துمِّصْرَஎகிப்தில்لِامْرَاَتِهٖۤதன் மனைவியிடம்اَكْرِمِیْகண்ணியமாக வைمَثْوٰىهُஅவர் தங்குமிடத்தைعَسٰۤیஒருவேளைاَنْஎன்றுیَّنْفَعَنَاۤஅவர் நமக்கு பயனளிக்கலாம்اَوْஅல்லதுنَتَّخِذَهٗநாம் அவரை ஆக்கிக்கொள்ளலாம்وَلَدًا ؕஒரு மகனாகوَ كَذٰلِكَஇவ்வாறேمَكَّنَّاநாம் நிலைப்படுத்தினோம்لِیُوْسُفَயூஸுஃபுக்குفِیஇல்الْاَرْضِ ؗபூமியில்وَ لِنُعَلِّمَهٗஅவருக்கு நாம் கற்றுக்கொடுப்பதற்காகவும்مِنْஇருந்துتَاْوِیْلِவிளக்கத்தைالْاَحَادِیْثِ ؕகனவுகளின்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்غَالِبٌமிகைத்தவன்عَلٰۤیமீதுاَمْرِهٖதன் காரியத்தின்وَ لٰكِنَّஆனால்اَكْثَرَபெரும்பான்மையானالنَّاسِமனிதர்கள்لَاஇல்லைیَعْلَمُوْنَஅவர்கள் அறிவார்கள்
வ காலல் லதிஷ் தராஹு மிம் மிஸ்ர லிம்ர அதிஹீ அக்ரிமீ மத்வாஹு 'அஸா அ(ன்)ய்-யன்Fப'அனா அவ் னத்தகிதஹூ வலதா; வ கதாலிக மக்-கன்னா லி-யூஸுFப Fபில் அர்ளி வ லினு'அல்லிமஹூ மின் த'வீலில் அஹாதீத்; வல்லாஹு காலிBபுன் 'அலா அம்ரிஹீ வ லாகின்ன அக்தரன் னாஸி லா யஃலமூன்
(யூஸுஃபை) மிஸ்ரு நாட்டில் வாங்கியவர் தம் மனைவியை நோக்கி, “இவர் (நம்மிடம்) தங்குவதை சங்கையாக வைத்துக்கொள்; ஒருவேளை இவர் நமக்கு (மிக்க) நன்மையைக் கொண்டு வரலாம்; அல்லது இவரை நாம் (நம் சுவீகார) புத்திரனாக ஆக்கிக் கொள்ளலாம்” என்று கூறினார். இவ்வாறு நாம் யூஸுஃபுக்குப் பூமியிலே (தக்க) வசதியளித்தோம்; இன்னும் நாம் அவருக்குக் கனவுகளுக்குப் பலன் கூறுவதையும் கற்றுக் கொடுத்தோம்; அல்லாஹ் தன் காரியத்தில் வெற்றியாளனாக இருக்கிறான் - ஆனால் மக்களில் பெரும்பாலோர் (இதனை) அறிந்து கொள்ள மாட்டார்கள்.
وَلَمَّا بَلَغَ اَشُدَّهٗۤ اٰتَیْنٰهُ حُكْمًا وَّعِلْمًا ؕ وَكَذٰلِكَ نَجْزِی الْمُحْسِنِیْنَ ۟
وَ لَمَّاமேலும், அவர்بَلَغَஅடைந்த போதுاَشُدَّهٗۤதனது வாலிபத்தைاٰتَیْنٰهُஅவருக்கு நாம் வழங்கினோம்حُكْمًاஞானத்தைوَّ عِلْمًا ؕமேலும் கல்வியைوَ كَذٰلِكَமேலும் இவ்வாறேنَجْزِیநாம் நற்கூலி வழங்குகிறோம்الْمُحْسِنِیْنَநன்மை செய்வோருக்கு
வ லம்மா Bபலக அஷுத்தஹூ ஆதய்னாஹு ஹுக்ம(ன்)வ் வ 'இல்மா; வ கதா லிக னஜ்Zஜில் முஹ்ஸினீன்
அவர் தம் வாலிபத்தை அடைந்ததும், அவருக்கு நாம் ஞானத்தையும், கல்வியையும் கொடுத்தோம். இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் நற்கூலி வழங்குகிறோம்.
وَرَاوَدَتْهُ الَّتِیْ هُوَ فِیْ بَیْتِهَا عَنْ نَّفْسِهٖ وَغَلَّقَتِ الْاَبْوَابَ وَقَالَتْ هَیْتَ لَكَ ؕ قَالَ مَعَاذَ اللّٰهِ اِنَّهٗ رَبِّیْۤ اَحْسَنَ مَثْوَایَ ؕ اِنَّهٗ لَا یُفْلِحُ الظّٰلِمُوْنَ ۟
وَ رَاوَدَتْهُமேலும் அவள் அவனைத் தூண்டினாள்الَّتِیْஎவள்هُوَஅவன்فِیْஇல்بَیْتِهَاஅவளுடைய வீடுعَنْபற்றிنَّفْسِهٖஅவனது மனதைوَ غَلَّقَتِமேலும் அவள் தாழிட்டாள்الْاَبْوَابَகதவுகளைوَ قَالَتْமேலும் அவள் கூறினாள்هَیْتَவாلَكَ ؕஉனக்குقَالَஅவர் கூறினார்مَعَاذَபாதுகாப்புத் தேடுகிறேன்اللّٰهِஅல்லாஹ்விடம்اِنَّهٗநிச்சயமாக அவன்رَبِّیْۤஎனது இறைவன்اَحْسَنَசிறப்பாக்கினான்مَثْوَایَ ؕஎனது தங்குமிடத்தைاِنَّهٗநிச்சயமாகلَاமாட்டார்கள்یُفْلِحُவெற்றி பெறالظّٰلِمُوْنَஅநியாயக்காரர்கள்
வ ராவதத் ஹுல் லதீ ஹுவ Fபீ Bபய்திஹா 'அன் னFப்ஸிஹீ வ கல்லகதில் அBப்வாBப வ காலத் ஹய்த லக்; கால ம'ஆதல் லாஹி இன்னஹூ ரBப்Bபீ அஹ்ஸன மத்வாய்; இன்னஹூ லா யுFப்லிஹுள்-ளாலிமூன்
அவர் எந்தப் பெண்ணின் வீட்டில் இருந்தாரோ, அவள் அவர்மீது விருப்பங்கொண்டு, கதவுகளைத் தாழிட்டுக் கொண்டு (தன் விருப்பதிற்கு இணங்குமாறு) “வாரும்” என்று அழைத்தாள் - (அதற்கு அவர் மறுத்து,) “அல்லாஹ் (இத்தீய செயலிலிருந்து) என்னைக் காத்தருள்வானாக; நிச்சயமாக (உன் கணவர்) என் எஜமானர், என் இடத்தை அழகாக (கண்ணியமாக) வைத்திருக்கிறார் - அநியாயம் செய்பவர்கள் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள்” என்று சொன்னார்.
وَلَقَدْ هَمَّتْ بِهٖ ۚ وَهَمَّ بِهَا لَوْلَاۤ اَنْ رَّاٰ بُرْهَانَ رَبِّهٖ ؕ كَذٰلِكَ لِنَصْرِفَ عَنْهُ السُّوْٓءَ وَالْفَحْشَآءَ ؕ اِنَّهٗ مِنْ عِبَادِنَا الْمُخْلَصِیْنَ ۟
وَ لَقَدْமேலும் நிச்சயமாகهَمَّتْஅவள் நாடினாள்بِهٖ ۚஅவரைوَ هَمَّஅவரும் நாடியிருப்பார்بِهَاஅவளைلَوْ لَاۤஇல்லாவிட்டால்اَنْஅவர்رَّاٰகண்டிருக்கبُرْهَانَஅத்தாட்சியைرَبِّهٖ ؕதன் இறைவனின்كَذٰلِكَஅவ்வாறேلِنَصْرِفَநாம் திருப்புவதற்காகعَنْهُஅவரிடமிருந்துالسُّوْٓءَதீமையைوَ الْفَحْشَآءَ ؕமேலும் மானக்கேடான செயலைاِنَّهٗநிச்சயமாக அவர்مِنْஇருந்துعِبَادِنَاநமது அடியார்களில்الْمُخْلَصِیْنَதூய்மையாக்கப்பட்டவர்களில்
வ லகத் ஹம்மத் Bபிஹீ வ ஹம்ம Bபிஹா லவ் லா அர் ரஆ Bபுர்ஹான ரBப்Bபிஹ்; கதாலிக லினஸ்ரிFப 'அன்ஹு ஸூ'அ வல்Fபஹ்ஷா'; இன்னஹூ மின் 'இBபாதி னல் முக்லஸீன்
ஆனால் அவளோ அவரைத் திடமாக விரும்பினாள்; அவரும் தம் இறைவனின் ஆதாரத்தைக் கண்டிராவிட்டால் அவள் மீது விருப்பம் கொண்டே இருப்பார்; இவ்வாறு நாம் அவரைவிட்டுத் தீமையையும் மானக்கேடான செயல்களையும் திருப்பிவிட்டோம் - ஏனெனில் நிச்சயமாக அவர் நம் தூய்மையான அடியார்களில் ஒருவராக இருந்தார்.
وَاسْتَبَقَا الْبَابَ وَقَدَّتْ قَمِیْصَهٗ مِنْ دُبُرٍ وَّاَلْفَیَا سَیِّدَهَا لَدَا الْبَابِ ؕ قَالَتْ مَا جَزَآءُ مَنْ اَرَادَ بِاَهْلِكَ سُوْٓءًا اِلَّاۤ اَنْ یُّسْجَنَ اَوْ عَذَابٌ اَلِیْمٌ ۟
وَ اسْتَبَقَاமேலும் அவ்விருவரும் முந்திக்கொண்டனர்الْبَابَவாசலைوَ قَدَّتْமேலும் அவள் கிழித்தாள்قَمِیْصَهٗஅவனுடைய சட்டையைمِنْஇருந்துدُبُرٍபின்புறத்தில்وَّ اَلْفَیَاமேலும் அவ்விருவரும் கண்டனர்سَیِّدَهَاஅவளுடைய எஜமானரைلَدَاஅருகில்الْبَابِ ؕவாசலின்قَالَتْஅவள் கூறினாள்مَاஎன்னجَزَآءُதண்டனைمَنْஎவர்اَرَادَநாடினாரோبِاَهْلِكَஉமது குடும்பத்தாருக்குسُوْٓءًاதீமையைاِلَّاۤதவிரاَنْஎன்பதைیُّسْجَنَஅவர் சிறைப்படுத்தப்படுவதுاَوْஅல்லதுعَذَابٌவேதனைاَلِیْمٌநோவினைமிக்க
வஸ்தBபகல் BபாBப வ கத்தத் கமீஸஹூ மின் துBபுரி(ன்)வ் வ அல்Fபயா ஸய்யிதஹா லதல் BபாBப்; காலத் மா ஜZஜா'உ மன் அராத Bபி அஹ்லிக ஸூ'அன் இல்லா அ(ன்)ய்-யுஸ்ஜன அவ் அதாBபுன் 'அலீம்
(யூஸுஃப் அவளை விட்டும் தப்பி ஓட முயன்று) ஒருவரை ஒருவர் முந்திக் கொள்ள வாசலின் பக்கம் ஓடினார்கள்; அவள் அவருடைய சட்டையைப் பின்புறத்தில் கிழித்து விட்டாள்; அப்போது அவளுடைய கணவரை வாசல் பக்கம் இருவரும் கண்டனர். உடன் (தன் குற்றத்தை மறைக்க) “உம் மனைவிக்குத் தீங்கிழைக்க நாடிய இவருக்குச் சிறையிலிடப்படுவதோ அல்லது நோவினை தரும் வேதனையைத் தருவதோ அன்றி வேறு என்ன தண்டனை இருக்கமுடியும்?” என்று கேட்டாள்.
قَالَ هِیَ رَاوَدَتْنِیْ عَنْ نَّفْسِیْ وَشَهِدَ شَاهِدٌ مِّنْ اَهْلِهَا ۚ اِنْ كَانَ قَمِیْصُهٗ قُدَّ مِنْ قُبُلٍ فَصَدَقَتْ وَهُوَ مِنَ الْكٰذِبِیْنَ ۟
قَالَஅவர் கூறினார்هِیَஅவள்رَاوَدَتْنِیْஎன்னை மயக்க முயன்றாள்عَنْபற்றிنَّفْسِیْஎன்னையேوَ شَهِدَமேலும் சாட்சியளித்தார்شَاهِدٌஒரு சாட்சிمِّنْஇருந்துاَهْلِهَا ۚஅவளுடைய குடும்பத்தாரில்اِنْஒருவேளைكَانَஇருந்தால்قَمِیْصُهٗஅவருடைய சட்டைقُدَّகிழிக்கப்பட்டுمِنْஇருந்துقُبُلٍமுன்புறம்فَصَدَقَتْஎனவே அவள் உண்மை உரைத்தாள்وَ هُوَமேலும் அவர்مِنَஉள்ளவர்الْكٰذِبِیْنَபொய்யர்களில்
கால ஹிய ராவதத்னீ 'அன் னFப்ஸீ வ ஷஹித ஷாஹிதும் மின் அஹ்லிஹா இன் கான கமீஸுஹூ குத்த மின் குBபுலின் Fபஸதகத் வ ஹுவ மினல் காதிBபீன்
(இதை மறுத்து யூஸுஃப்;) “இவள் தான் என்னை வற்புறுத்தித் தன்னிடம் அழைத்தாள்” என்று கூறினார்; (இதற்கிடையில்) அவள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் சாட்சி(யாகப் பின்வருமாறு) கூறினார்: “இவருடைய சட்டை முன்புறத்தில் கிழிந்திருந்தால், அவள் உண்மை சொல்கிறாள்; இவர் பொய்யராவார்.
وَاِنْ كَانَ قَمِیْصُهٗ قُدَّ مِنْ دُبُرٍ فَكَذَبَتْ وَهُوَ مِنَ الصّٰدِقِیْنَ ۟
وَ اِنْஆனால்كَانَஇருந்தால்قَمِیْصُهٗஅவனுடைய சட்டைقُدَّகிழிக்கப்பட்டுمِنْஇருந்துدُبُرٍபின்புறம்فَكَذَبَتْஎனவே அவள் பொய் சொன்னாள்وَ هُوَமேலும் அவன்مِنَஉள்ளவர்களில்الصّٰدِقِیْنَஉண்மையாளர்கள்
வ இன் கான கமீஸுஹூ குத்த மின் துBபுரின் FபகதBபத் வ ஹுவ மினஸ் ஸாதிகீன்
“ஆனால் இவருடைய சட்டை பின்புறமாகக் கிழிந்திருந்தால், அவள் பொய் சொல்லுகிறாள்; அவர் உண்மையாளர்களில் உள்ளவர்.”
فَلَمَّا رَاٰ قَمِیْصَهٗ قُدَّ مِنْ دُبُرٍ قَالَ اِنَّهٗ مِنْ كَیْدِكُنَّ ؕ اِنَّ كَیْدَكُنَّ عَظِیْمٌ ۟
فَلَمَّاஎனவே எப்போதுرَاٰஅவர் கண்டாரோقَمِیْصَهٗஅவருடைய சட்டையைقُدَّகிழிக்கப்பட்டிருப்பதைمِنْஇருந்துدُبُرٍபின்புறத்தில்قَالَஅவர் கூறினார்اِنَّهٗநிச்சயமாக இதுمِنْஇருந்துكَیْدِكُنَّ ؕஉங்கள் சூழ்ச்சிகளில்اِنَّநிச்சயமாகكَیْدَكُنَّஉங்கள் சூழ்ச்சிعَظِیْمٌமகத்தானது
Fபலம்மா ரஆ கமீ ஸஹூ குத்த மின் துBபுரின் கால இன்னஹூ மின் கய்திகுன்ன இன்ன கய்தகுன்ன 'அளீம்
(யூஸுஃபுடைய) சட்டை பின்புறமாகக் கிழிந்திருந்ததை அவர் கண்டபோது, நிச்சயமாக இது (பெண்களாகிய) உங்கள் சதியேயாகும் - நிச்சயமாக உங்களுடைய சதி மகத்தானதே!
یُوْسُفُ اَعْرِضْ عَنْ هٰذَا ٚ وَاسْتَغْفِرِیْ لِذَنْۢبِكِ ۖۚ اِنَّكِ كُنْتِ مِنَ الْخٰطِـِٕیْنَ ۟۠
یُوْسُفُயூஸுஃபேاَعْرِضْபுறக்கணிப்பீராகعَنْவிட்டுهٰذَا ٚஇதைوَ اسْتَغْفِرِیْமேலும் மன்னிப்புத் தேடுلِذَنْۢبِكِ ۖۚஉனது பாவத்திற்காகاِنَّكِநிச்சயமாக நீكُنْتِஇருந்தாய்مِنَஉள்ளவர்களில்الْخٰطِـِٕیْنَ۠தவறு செய்தவர்கள்
யூஸுFபு அஃரிள் 'அன் ஹாத வஸ்தக்Fபிரீ லி தன்Bபிகி இன்னகி குன்தி மினல் காதி'ஈன்
(என்றும்) “யூஸுஃபே! இதனை நீர் இம்மட்டில் விட்டு விடும். (பெண்ணே!) உனது பாவத்திற்காக மன்னிப்புத் தேடிக் கொள்; நிச்சயமாக நீ தவறு செய்தவர்களில் ஒருத்தியாக இருக்கின்றாய்” என்றும் கூறினார்.  
وَقَالَ نِسْوَةٌ فِی الْمَدِیْنَةِ امْرَاَتُ الْعَزِیْزِ تُرَاوِدُ فَتٰىهَا عَنْ نَّفْسِهٖ ۚ قَدْ شَغَفَهَا حُبًّا ؕ اِنَّا لَنَرٰىهَا فِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟
وَ قَالَமேலும் கூறினர்نِسْوَةٌபெண்கள்فِیஉள்ளالْمَدِیْنَةِநகரத்தில்امْرَاَتُமனைவிالْعَزِیْزِஅஸீஸுடையتُرَاوِدُமயக்க முற்படுகிறாள்فَتٰىهَاதன் வாலிபனைعَنْஅவனதுنَّفْسِهٖ ۚமனதைقَدْநிச்சயமாகشَغَفَهَاஅவளை ஆட்கொண்டுவிட்டதுحُبًّا ؕகாதல்اِنَّاநிச்சயமாக நாம்لَنَرٰىهَاநிச்சயமாக அவளைக் காண்கிறோம்فِیْஇல்ضَلٰلٍவழிகேட்டில்مُّبِیْنٍதெளிவான
வ கால னிஸ்வதுன் Fபில் மதீனதிம் ர அதுல்'அZஜீZஜி துராவிது Fபதாஹா 'அன் னFப்ஸிஹீ கத் ஷகFபஹா ஹுBப்Bபா; இன்னா லன ராஹா Fபீ ளலாலிம் முBபீன்
அப்பட்டிணத்தில் சில பெண்கள்; “அஜீஸின் மனைவி தன்னிடமுள்ள ஓர் இளைஞரைத் தனக்கு இணங்கும்படி வற்புறுத்தியிருக்கிறாள்; (அவர் மேலுள்ள) ஆசை அவளை மயக்கி விட்டது - நிச்சயமாக நாம் அவளை பகிரங்கமான வழிகேட்டில் தான் காண்கிறோம்” என்று பேசிக் கொண்டார்கள்.
فَلَمَّا سَمِعَتْ بِمَكْرِهِنَّ اَرْسَلَتْ اِلَیْهِنَّ وَاَعْتَدَتْ لَهُنَّ مُتَّكَاً وَّاٰتَتْ كُلَّ وَاحِدَةٍ مِّنْهُنَّ سِكِّیْنًا وَّقَالَتِ اخْرُجْ عَلَیْهِنَّ ۚ فَلَمَّا رَاَیْنَهٗۤ اَكْبَرْنَهٗ وَقَطَّعْنَ اَیْدِیَهُنَّ وَقُلْنَ حَاشَ لِلّٰهِ مَا هٰذَا بَشَرًا ؕ اِنْ هٰذَاۤ اِلَّا مَلَكٌ كَرِیْمٌ ۟
فَلَمَّاஆக, எப்போதுسَمِعَتْஅவள் கேள்விப்பட்டாளோبِمَكْرِهِنَّஅவர்களின் சூழ்ச்சியைاَرْسَلَتْஅவள் ஆள் அனுப்பினாள்اِلَیْهِنَّஅவர்களிடம்وَ اَعْتَدَتْமேலும் அவள் தயார் செய்தாள்لَهُنَّஅவர்களுக்காகمُتَّكَاًசாய்ந்து அமரும் இருக்கைகளைوَّ اٰتَتْமேலும் அவள் கொடுத்தாள்كُلَّஒவ்வொருوَاحِدَةٍஒருத்திக்கும்مِّنْهُنَّஅவர்களில்سِكِّیْنًاஒரு கத்தியைوَّ قَالَتِமேலும் அவள் கூறினாள்اخْرُجْவெளியே வருவீராகعَلَیْهِنَّ ۚஅவர்கள் முன்فَلَمَّاஆக, எப்போதுرَاَیْنَهٗۤஅவர்கள் அவரைப் பார்த்தார்களோاَكْبَرْنَهٗஅவர்கள் அவரை வியந்தார்கள்وَ قَطَّعْنَமேலும் அவர்கள் அறுத்துக் கொண்டார்கள்اَیْدِیَهُنَّதங்களது கைகளைوَ قُلْنَமேலும் அவர்கள் கூறினார்கள்حَاشَதூய்மையானவன்لِلّٰهِஅல்லாஹ்مَاஇல்லைهٰذَاஇவர்بَشَرًا ؕஒரு மனிதர்اِنْஇல்லைهٰذَاۤஇவர்اِلَّاதவிரمَلَكٌஒரு வானவர்كَرِیْمٌகண்ணியமிக்க
Fபலம்மா ஸமி'அத் Bபிமக் ரிஹின்ன அர்ஸலத் இலய்ஹின்ன வ அஃததத் லஹுன்ன முத்தக அ(ன்)வ் வ ஆதத் குல்ல வாஹிததிம் மின் ஹுன்ன ஸிக்கீன(ன்)வ் வ கால திக் ருஜ் 'அலய்ஹின்ன Fபலம்மா ர அய்னஹூ அக்Bபர்னஹூ வ கத்தஃன அய்தியஹுன்ன வ குல்ன ஹாஷ லில்லாஹி மா ஹாத Bபஷரா; இன் ஹாதா இல்லா மலகுன் கரீம்
அப் பெண்களின் பேச்சுக்களை (அஜீஸின் மனைவி) கேட்டபோது (விருந்திற்காகச்) சாய்மானங்கள் சித்தம் செய்து அப் பெண்களுக்கு அழைப்பனுப்பினாள்; (விருந்திற்கு வந்த) அப் பெண்களில் ஒவ்வொருத்திக்கும் (பழங்களை நறுக்கித் தின்பதற்காக) ஒரு கத்தியும் கொடுத்தாள். “இப் பெண்கள் எதிரே செல்லும்” என்று (யூஸுஃபிடம்) கூறினாள்; அப் பெண்கள் அவரைப் பார்த்ததும் (அவரழகில் மயங்கி) அவரை மிக மேன்மையாகக் கண்டார்கள். (அவர் அழகில் மெய் மறந்து) தம் கைகளையும் வெட்டிக்கொண்டனர்: “அல்லாஹ்வே பெரியவன்; இவர் மனிதரே அல்லர்! இவர் மேன்மைக்குரிய ஒரு மலக்கேயன்றி வேறில்லை” என்று கூறினார்கள்.
قَالَتْ فَذٰلِكُنَّ الَّذِیْ لُمْتُنَّنِیْ فِیْهِ ؕ وَلَقَدْ رَاوَدْتُّهٗ عَنْ نَّفْسِهٖ فَاسْتَعْصَمَ ؕ وَلَىِٕنْ لَّمْ یَفْعَلْ مَاۤ اٰمُرُهٗ لَیُسْجَنَنَّ وَلَیَكُوْنًا مِّنَ الصّٰغِرِیْنَ ۟
قَالَتْஅவள் கூறினாள்فَذٰلِكُنَّஆக இவன்தான் அவன்الَّذِیْஎவனைلُمْتُنَّنِیْநீங்கள் என்னை நிந்தித்தீர்களோفِیْهِ ؕஅவன் விஷயத்தில்وَ لَقَدْமேலும் நிச்சயமாகرَاوَدْتُّهٗநான் அவனை மயக்க முயன்றேன்عَنْஅவனதுنَّفْسِهٖமனதைக் குறித்துفَاسْتَعْصَمَ ؕஆனால் அவன் தன்னைத் தற்காத்துக் கொண்டான்وَ لَىِٕنْமேலும் ஒருவேளைلَّمْஇல்லைیَفْعَلْஅவன் செய்தால்مَاۤஎதைاٰمُرُهٗநான் அவனுக்குக் கட்டளையிடுகிறேனோلَیُسْجَنَنَّஅவன் நிச்சயமாகச் சிறையிலிடப்படுவான்وَ لَیَكُوْنًاமேலும் அவன் ஆகிவிடுவான்مِّنَஉள்ளவர்களில்الصّٰغِرِیْنَசிறுமையடைந்தவர்கள்
காலத் Fபதாலிகுன்னல் லதீ லும்துன்னனீ Fபீஹ்; வ லகத் ராவத்துஹூ 'அன் னFப்ஸிஹீ Fபஸ்தஃஸம்; வ ல'இல் லம் யFப்'அல் மா ஆமுருஹூ ல யுஸ்ஜனன்ன வ ல யகூனன் மினஸ் ஸாகிரீன்
அதற்கவள் “நீங்கள் எவர் சம்பந்தமாக என்னை நிந்தித்தீர்களோ, அவர்தாம் இவர்; நிச்சயமாக நான் அவரை என் விருப்பத்திற்கு இணங்கும்படி வற்புறுத்தினேன் - ஆனால் அவர் (மன உறுதியுடன்) தம்மைக் காத்துக் கொண்டார். இனியும் அவர் நான் இடும் கட்டளைக்கிணங்கி நடந்து கொள்ளாவிட்டால் சிறையில் தள்ளப்படுவார்; மேலும் அவர் சிறுமை அடைந்தவர்களில் ஒருவராகவும் ஆகிவிடுவார்” என்று சொன்னாள்.
قَالَ رَبِّ السِّجْنُ اَحَبُّ اِلَیَّ مِمَّا یَدْعُوْنَنِیْۤ اِلَیْهِ ۚ وَاِلَّا تَصْرِفْ عَنِّیْ كَیْدَهُنَّ اَصْبُ اِلَیْهِنَّ وَاَكُنْ مِّنَ الْجٰهِلِیْنَ ۟
قَالَஅவர் கூறினார்رَبِّஎன் இறைவனேالسِّجْنُசிறைச்சாலைاَحَبُّமிகவும் விருப்பமானதுاِلَیَّஎனக்குمِمَّاஎதை விடیَدْعُوْنَنِیْۤஅவர்கள் என்னை அழைக்கிறார்களோاِلَیْهِ ۚஅதன் பக்கம்وَ اِلَّاமேலும் இல்லையெனில்تَصْرِفْநீ திருப்பعَنِّیْஎன்னை விட்டும்كَیْدَهُنَّஅவர்களின் சூழ்ச்சியைاَصْبُநான் சாய்ந்து விடுவேன்اِلَیْهِنَّஅவர்கள் பக்கம்وَ اَكُنْமேலும் நான் ஆகிவிடுவேன்مِّنَஇருந்துالْجٰهِلِیْنَஅறிவீனர்களில்
கால ரBப்Bபிஸ் ஸிஜ்னு அஹBப்Bபு இலய்ய மிம்ம யத்'ஊ னனீ 'இலய்ஹி வ இல்லா தஸ்ரிFப் 'அன்னீ கய்தஹுன்ன அஸ்Bபு இலய்ஹின்ன வ அகும் மினல் ஜாஹிலீன்
(அதற்கு) அவர், “என் இறைவனே! இவர்கள் என்னை எதன் பக்கம் அழைக்கிறார்களோ, அ(த்தீய)தை விடச் சிறைக்கூடமே எனக்கு அதிக விருப்பமுடையதாகும்; இவர்களின் சதியை விட்டு நீ என்னைக் காப்பாற்றவில்லையானால், நான் இவர்கள் பால் சாய்ந்து (பாவத்தால்) அறிவில்லாதவர்களில் ஒருவனாகிவிடுவேன்” என்று (பிரார்த்தித்தவராக) கூறினார்.
فَاسْتَجَابَ لَهٗ رَبُّهٗ فَصَرَفَ عَنْهُ كَیْدَهُنَّ ؕ اِنَّهٗ هُوَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟
فَاسْتَجَابَஎனவே பதிலளித்தான்لَهٗஅவருக்குرَبُّهٗஅவருடைய இறைவன்فَصَرَفَஎனவே திருப்பினான்عَنْهُஅவரை விட்டுكَیْدَهُنَّ ؕஅவர்களின் சூழ்ச்சியைاِنَّهٗநிச்சயமாக அவன்هُوَஅவனேالسَّمِیْعُசெவியேற்பவன்الْعَلِیْمُநன்கறிந்தவன்
Fபஸ்தஜாBப லஹூ ரBப்Bபுஹூ FபஸரFப 'அன்ஹு கய்தஹுன்ன்; இன்னஹூ ஹுவஸ் ஸமீ'உல் 'அலீம்
எனவே அவருடைய இறைவன் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான்; அப்பெண்களுடைய சதியை அவரை விட்டு நீக்கிவிட்டான்; நிச்சயமாக அவன் (யாவற்றையும்) கேட்பவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
ثُمَّ بَدَا لَهُمْ مِّنْ بَعْدِ مَا رَاَوُا الْاٰیٰتِ لَیَسْجُنُنَّهٗ حَتّٰی حِیْنٍ ۟۠
ثُمَّபிறகுبَدَاதோன்றியதுلَهُمْஅவர்களுக்குمِّنْۢஇருந்துبَعْدِபின்புمَاஎவற்றைرَاَوُاஅவர்கள் கண்டார்களோالْاٰیٰتِஅத்தாட்சிகளைلَیَسْجُنُنَّهٗநிச்சயமாக அவனைச் சிறையிலிடحَتّٰیவரைحِیْنٍ۠ஒரு காலம்
தும்ம Bபதா லஹும் மின் Bபஃதி மா ர-அவுல் ஆயாதி லயஸ்ஜுனுன்னஹூ ஹத்தா ஹீன்
(யூஸுஃப் குற்றமற்றவர் என்பதற்குப் பல) அத்தாட்சிகளை அவர்கள் பார்த்த பின்னரும், ஒரு காலம் வரை அவர் சிறையிலிடப்பட வேண்டும் என்றே அவர்களுக்குத் தோன்றியது.
وَدَخَلَ مَعَهُ السِّجْنَ فَتَیٰنِ ؕ قَالَ اَحَدُهُمَاۤ اِنِّیْۤ اَرٰىنِیْۤ اَعْصِرُ خَمْرًا ۚ وَقَالَ الْاٰخَرُ اِنِّیْۤ اَرٰىنِیْۤ اَحْمِلُ فَوْقَ رَاْسِیْ خُبْزًا تَاْكُلُ الطَّیْرُ مِنْهُ ؕ نَبِّئْنَا بِتَاْوِیْلِهٖ ۚ اِنَّا نَرٰىكَ مِنَ الْمُحْسِنِیْنَ ۟
وَ دَخَلَமேலும் நுழைந்தனர்مَعَهُஅவருடன்السِّجْنَசிறையில்فَتَیٰنِ ؕஇரு வாலிபர்கள்قَالَகூறினார்اَحَدُهُمَاۤஅவர்களில் ஒருவர்اِنِّیْۤநிச்சயமாக நான்اَرٰىنِیْۤஎன்னைக் காண்கிறேன்اَعْصِرُபிழிவதாகخَمْرًا ۚமதுவைوَ قَالَமேலும் கூறினார்الْاٰخَرُமற்றவர்اِنِّیْۤநிச்சயமாக நான்اَرٰىنِیْۤஎன்னைக் காண்கிறேன்اَحْمِلُசுமப்பதாகفَوْقَமீதுرَاْسِیْஎன் தலையின்خُبْزًاரொட்டியைتَاْكُلُஉண்கின்றனالطَّیْرُபறவைகள்مِنْهُ ؕஅதிலிருந்துنَبِّئْنَاஎங்களுக்கு அறிவிப்பீராகبِتَاْوِیْلِهٖ ۚஅதன் விளக்கத்தைاِنَّاநிச்சயமாக நாங்கள்نَرٰىكَஉம்மைக் காண்கிறோம்مِنَஒருவராகالْمُحْسِنِیْنَநன்மை செய்வோரில்
வ தகல ம'அ ஹுஸ்ஸிஜ்ன Fபத-யான்; கால அஹதுஹுமா இன்னீ அரானீ அஃஸிரு கம்ர(ன்)வ் வ காலல் ஆகரு இன்னீ அரானீ அஹ்மிலு Fபவ்க ர'ஸீ குBப்Zஜன் த'குலுத் தய்ரு மின்ஹு; னBப்Bபி'னா Bபி த'வீலிஹ்; இன்னா னராக மினல் முஹ்ஸினீன்
அவருடன் இரண்டு வாலிபர்களும் சிறையில் புகுந்தனர்; அவ்விருவரில் ஒருவன், “நான் திராட்சை மது பிழிவதாக நிச்சயமாக ஒரு கனவு கண்டேன்” என்று கூறினான். மற்றவன், “நான் என் தலைமீது ரொட்டி சுமப்பதாகவும், அதிலிருந்து பறவைகள் தின்பதாகவும் கனவு கண்டேன்” என்று கூறினான். (பின் இருவரும் “யூஸுஃபே!) எங்களுக்கு இவற்றின் விளக்கத்தை அறிவிப்பீராக; மெய்யாக நாங்கள் உம்மை (ஞானமுள்ள முஹ்ஸின்களில்) - நன்மை செய்பவர்களில் ஒருவராகக் காண்கிறோம்” (என்று கூறினார்கள்).
قَالَ لَا یَاْتِیْكُمَا طَعَامٌ تُرْزَقٰنِهٖۤ اِلَّا نَبَّاْتُكُمَا بِتَاْوِیْلِهٖ قَبْلَ اَنْ یَّاْتِیَكُمَا ؕ ذٰلِكُمَا مِمَّا عَلَّمَنِیْ رَبِّیْ ؕ اِنِّیْ تَرَكْتُ مِلَّةَ قَوْمٍ لَّا یُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَهُمْ بِالْاٰخِرَةِ هُمْ كٰفِرُوْنَ ۟
قَالَஅவர் கூறினார்لَاஇல்லைیَاْتِیْكُمَاஉங்கள் இருவருக்கும் வரும்طَعَامٌஉணவுتُرْزَقٰنِهٖۤஅது உங்களுக்கு அளிக்கப்படும்اِلَّاதவிரنَبَّاْتُكُمَاஉங்கள் இருவருக்கும் நான் அறிவித்துவிடுவேன்بِتَاْوِیْلِهٖஅதன் விளக்கத்தைقَبْلَமுன்னதாகاَنْஅதுیَّاْتِیَكُمَا ؕஉங்கள் இருவரிடம் வருவதற்குذٰلِكُمَاஇது உங்கள் இருவருக்கும்مِمَّاஎவற்றிலிருந்துعَلَّمَنِیْஎனக்குக் கற்றுத் தந்தான்رَبِّیْ ؕஎன் இறைவன்اِنِّیْநிச்சயமாக நான்تَرَكْتُநான் விட்டுவிட்டேன்مِلَّةَமார்க்கத்தைقَوْمٍஒரு சமூகத்தின்لَّاஇல்லைیُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்கிறார்கள்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுوَ هُمْமேலும் அவர்கள்بِالْاٰخِرَةِமறுமையின் மீதுهُمْஅவர்கள்كٰفِرُوْنَநிராகரிப்பாளர்கள்
கால லா ய'தீகுமா த'ஆமுன் துர்Zஜகானிஹீ இல்லா னBப்Bப'துகுமா Bபி த'வீலிஹீ; கBப்ல அ(ன்)ய் ய'தி யகுமா; தாலிகுமா மிம்மா 'அல்லமனீ ரBப்Bபீ; இன்னீ தரக்து மில்லத கவ்மில் லா யு'மினூன Bபில்லாஹி வஹும் Bபில் ஆகிரதி ஹும் காFபிரூன்
அதற்கு அவர் கூறினார்: “உங்களிருவருக்கும் அளிக்கக்கூடிய உணவு உங்களிடம் வ(ந்து சே)ருவதற்கு முன்னரும் - (இக்கனவுகளின்) பலனை நீங்களிருவரும் அடைவதற்கு முன்னரும் - இவற்றின் விளக்கத்தை உங்களிலிருவருக்கும் கூறிவிடுகிறேன். இது என் இறைவன் எனக்குக் கற்றுக் கொடுத்தவற்றிலிருந்தும் உள்ளவை; அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களும், மறுமையை நிராகரிப்பவர்களுமான சமூகத்தாரின் மார்க்கத்தை நான் நிச்சயமாக விட்டு விட்டேன்.
وَاتَّبَعْتُ مِلَّةَ اٰبَآءِیْۤ اِبْرٰهِیْمَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ ؕ مَا كَانَ لَنَاۤ اَنْ نُّشْرِكَ بِاللّٰهِ مِنْ شَیْءٍ ؕ ذٰلِكَ مِنْ فَضْلِ اللّٰهِ عَلَیْنَا وَعَلَی النَّاسِ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یَشْكُرُوْنَ ۟
وَ اتَّبَعْتُமேலும் நான் பின்பற்றினேன்مِلَّةَமார்க்கத்தைاٰبَآءِیْۤஎன் முன்னோர்களானاِبْرٰهِیْمَஇப்ராஹீம்وَ اِسْحٰقَமற்றும் இஸ்ஹாக்وَ یَعْقُوْبَ ؕமற்றும் யஃகூப்مَاஇல்லைكَانَஆகுமானதுلَنَاۤஎங்களுக்குاَنْஎன்பதுنُّشْرِكَநாங்கள் இணைவைப்பதுبِاللّٰهِஅல்லாஹ்வுக்குمِنْஎந்தشَیْءٍ ؕஒன்றையும்ذٰلِكَஅதுمِنْஇருந்துள்ளفَضْلِஅருட்கொடையாகும்اللّٰهِஅல்லாஹ்வின்عَلَیْنَاஎங்கள் மீதும்وَ عَلَیமற்றும் மீதுالنَّاسِமனிதர்கள்وَ لٰكِنَّஆனால்اَكْثَرَபெரும்பாலானالنَّاسِமனிதர்கள்لَاஇல்லைیَشْكُرُوْنَநன்றி செலுத்துகிறார்கள்
வத்தBபஃது மில்லத ஆBபா'ஈ இBப்ராஹீம வ இஷ்ஹாக வ யஃகூBப்; மா கான லனா அன் னுஷ்ரிக Bபில்லாஹி மின் ஷய்'; தாலிகமின் Fபள்லில் லாஹி 'அலய்னா வ 'அலன் னாஸி வ லாகின்ன அக்தரன் னாஸி லா யஷ்குரூன்
“நான் என் மூதாதையர்களான இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரின் மார்க்கத்தைப் பின்பற்றுகிறேன்; அல்லாஹ்வுக்கு எதையும் நாங்கள் இணைவைப்பது எங்களுக்கு தகுமானதல்ல; இது எங்கள் மீதும் (இதர) மக்கள் மீதும் அல்லாஹ் புரிந்த அருளாகும் - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதில்லை.
یٰصَاحِبَیِ السِّجْنِ ءَاَرْبَابٌ مُّتَفَرِّقُوْنَ خَیْرٌ اَمِ اللّٰهُ الْوَاحِدُ الْقَهَّارُ ۟ؕ
یٰصَاحِبَیِஇரு தோழர்களேالسِّجْنِசிறையின்ءَاَرْبَابٌபல தெய்வங்களாمُّتَفَرِّقُوْنَவெவ்வேறானخَیْرٌசிறந்தவர்களாاَمِஅல்லதுاللّٰهُஅல்லாஹ்வாالْوَاحِدُஏகனாகியالْقَهَّارُؕஅடக்கியாள்பவனான
யா ஸாஹிBபயிஸ் ஸிஜ்னி 'அ-அர்BபாBபும் முதFபர்ரிகூன கய்ருன் அமில் லாஹுல் வாஹிதுல் கஹ்ஹார்
“சிறையிலிருக்கும் என் இரு தோழர்களே! வெவ்வேறான பல தெய்வங்கள் இருப்பது நல்லதா? அல்லது (யாவரையும்) அடக்கி ஆள்கின்ற ஒருவனான அல்லாஹ்வா?
مَا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِهٖۤ اِلَّاۤ اَسْمَآءً سَمَّیْتُمُوْهَاۤ اَنْتُمْ وَاٰبَآؤُكُمْ مَّاۤ اَنْزَلَ اللّٰهُ بِهَا مِنْ سُلْطٰنٍ ؕ اِنِ الْحُكْمُ اِلَّا لِلّٰهِ ؕ اَمَرَ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّاۤ اِیَّاهُ ؕ ذٰلِكَ الدِّیْنُ الْقَیِّمُ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یَعْلَمُوْنَ ۟
مَاஇல்லைتَعْبُدُوْنَநீங்கள் வணங்குகிறீர்கள்مِنْஅன்றிدُوْنِهٖۤஅவனையல்லாமல்اِلَّاۤதவிரاَسْمَآءًசில பெயர்களைسَمَّیْتُمُوْهَاۤஅவற்றைச் சூட்டிக்கொண்டீர்கள்اَنْتُمْநீங்களும்وَ اٰبَآؤُكُمْஉங்கள் மூதாதையர்களும்مَّاۤஇல்லைاَنْزَلَஇறக்கினான்اللّٰهُஅல்லாஹ்بِهَاஅதற்குمِنْஎந்தسُلْطٰنٍ ؕஆதாரத்தையும்اِنِஇல்லைالْحُكْمُஅதிகாரம்اِلَّاதவிரلِلّٰهِ ؕஅல்லாஹ்வுக்கேاَمَرَஅவன் கட்டளையிட்டுள்ளான்اَلَّاகூடாது என்றுتَعْبُدُوْۤاநீங்கள் வணங்கاِلَّاۤதவிரاِیَّاهُ ؕஅவனையேذٰلِكَஅதுவேالدِّیْنُமார்க்கமாகும்الْقَیِّمُநேரானوَ لٰكِنَّஆனால்اَكْثَرَபெரும்பாலானالنَّاسِமனிதர்கள்لَاஇல்லைیَعْلَمُوْنَஅறிகிறார்கள்
மா தஃBபுதூன மின் தூனிஹீ இல்லா அஸ்மா'அன் ஸம் மய்துமூஹா அன்தும் வ ஆBபா'உகும் மா அன்Zஜலல் லாஹு Bபிஹா மின் ஸுல்தான்; இனில்ஹுக்மு இல்லா லில்லாஹ்; அமர அல்லா தஃBபுதூ இல்லா இய்யாஹ்; தாலிகத் தீனுல் கய்யிமு வ லாகின்ன அக்தரன் னாஸி லா யஃலமூன்
“அவனையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருப்பவை யாவும் நீங்கள் உங்கள் மூதாதையரும் வைத்துக் கொண்ட (வெறும் கற்பனைப்) பெயர்களேயன்றி வேறில்லை; அவற்றுக்கு அல்லாஹ் யாதொரு ஆதாரத்தையும் இறக்கி வைக்கவில்லை; அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (வேறெவர்க்கும்) அதிகாரம் இல்லை. அவனையன்றி (வேறு எவரையும்) நீங்கள் வணங்கக் கூடாது என்று அவன் (உங்களுக்குக்) கட்டளையிட்டிருக்கின்றான். இதுவே நேரான மார்க்கமாகும்; ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் இதனை அறிந்து கொள்வதில்லை.
یٰصَاحِبَیِ السِّجْنِ اَمَّاۤ اَحَدُكُمَا فَیَسْقِیْ رَبَّهٗ خَمْرًا ۚ وَاَمَّا الْاٰخَرُ فَیُصْلَبُ فَتَاْكُلُ الطَّیْرُ مِنْ رَّاْسِهٖ ؕ قُضِیَ الْاَمْرُ الَّذِیْ فِیْهِ تَسْتَفْتِیٰنِ ۟ؕ
یٰصَاحِبَیِஎன் இரு தோழர்களேالسِّجْنِசிறைச்சாலையின்اَمَّاۤஎனில்اَحَدُكُمَاஉங்களில் ஒருவர்فَیَسْقِیْஅவர் புகட்டுவார்رَبَّهٗதன் எஜமானுக்குخَمْرًا ۚமதுவைوَ اَمَّاஇன்னும் எனில்الْاٰخَرُமற்றவர்فَیُصْلَبُஅவர் சிலுவையில் அறையப்படுவார்فَتَاْكُلُபிறகு உண்ணும்الطَّیْرُபறவைகள்مِنْஇருந்துرَّاْسِهٖ ؕஅவரது தலையின்قُضِیَதீர்மானிக்கப்பட்டுவிட்டதுالْاَمْرُகாரியம்الَّذِیْஎதுفِیْهِஅதில்تَسْتَفْتِیٰنِؕநீங்கள் இருவரும் விளக்கம் கேட்டீர்களோ
யா ஸாஹிBபயிஸ் ஸிஜ்னி அம்மா அஹதுகுமா Fப யஸ்கீ ரBப்Bபஹூ கம்ர(ன்)வ் வ அம்மல் ஆகரு Fப யுஸ்லBபு Fபத'குலுத் தய்ரு மிர் ர'ஸிஹ்; குளியல் அம்ருல் லதீ Fபீஹி தஸ்தFப்தியான்
“சிறையிலிருக்கும் என் இரு தோழர்களே! (உங்கள் கனவுகளின் பலன்களாவன:) உங்களிருவரில் ஒருவர் தம் எஜமானனுக்கு திராட்சை மதுவைப் புகட்டிக் கொண்டிருப்பார்; மற்றவரோ சிலுவையில் அறையப்பட்டு, அவர் தலையிலிருந்து பறவைகள் கொத்தித் தின்னும்; நீங்களிருவரும் விளக்கம் கோரிய காரியம் (கனவின் பலன்) விதிக்கப்பட்டுவிட்டது” (என்று யூஸுஃப் கூறினார்).
وَقَالَ لِلَّذِیْ ظَنَّ اَنَّهٗ نَاجٍ مِّنْهُمَا اذْكُرْنِیْ عِنْدَ رَبِّكَ ؗ فَاَنْسٰىهُ الشَّیْطٰنُ ذِكْرَ رَبِّهٖ فَلَبِثَ فِی السِّجْنِ بِضْعَ سِنِیْنَ ۟ؕ۠
وَ قَالَமேலும் அவர் கூறினார்لِلَّذِیْஎவரிடம்ظَنَّஅவர் கருதினாரோاَنَّهٗநிச்சயமாக அவர்نَاجٍவிடுதலையாவார்مِّنْهُمَاஅவ்விருவரில்اذْكُرْنِیْஎன்னை நினைவூட்டுعِنْدَமுன்னிலையில்رَبِّكَ ؗஉமது எஜமானனிடம்فَاَنْسٰىهُஆனால் அவரை மறக்கடித்தான்الشَّیْطٰنُஷைத்தான்ذِكْرَநினைவூட்டுவதைرَبِّهٖதன் எஜமானனிடம்فَلَبِثَஎனவே அவர் தங்கியிருந்தார்فِیஇல்السِّجْنِசிறைبِضْعَசிலسِنِیْنَؕ۠ஆண்டுகள்
வ கால லில்லதீ ளன்ன அன்னஹூ னஜிம் மின்ஹுமத் குர்னீ 'இன்த ரBப்Bபிக Fப-அன்ஸாஹுஷ் ஷய்தானு திக்ர ரBப்Bபிஹீ FபலBபித Fபிஸ் ஸிஜ்னி Bபிள்'அ ஸினீன்
அவ்விருவரில் யார் விடுதலை அடைவார் என்று எண்ணினாரோ அவரிடம், “என்னைப் பற்றி உம் எஜமானனிடம் கூறுவீராக!” என்றும் சொன்னார்; ஆனால் (சிறையிலிருந்து விடுதலையாகிய) அவர் தம் எஜமானனிடம் (இதைப் பற்றிக்) கூறுவதிலிருந்து ஷைத்தான் அவரை மறக்கடித்து விட்டான்; ஆகவே அவர் சிறைக்கூடத்தில் (பின்னும்) சில ஆண்டுகள் இருக்க வேண்டியவரானார்.
وَقَالَ الْمَلِكُ اِنِّیْۤ اَرٰی سَبْعَ بَقَرٰتٍ سِمَانٍ یَّاْكُلُهُنَّ سَبْعٌ عِجَافٌ وَّسَبْعَ سُنْۢبُلٰتٍ خُضْرٍ وَّاُخَرَ یٰبِسٰتٍ ؕ یٰۤاَیُّهَا الْمَلَاُ اَفْتُوْنِیْ فِیْ رُءْیَایَ اِنْ كُنْتُمْ لِلرُّءْیَا تَعْبُرُوْنَ ۟
وَ قَالَமேலும் கூறினான்الْمَلِكُஅரசன்اِنِّیْۤநிச்சயமாக நான்اَرٰیகாண்கிறேன்سَبْعَஏழுبَقَرٰتٍபசுக்களைسِمَانٍகொழுத்தیَّاْكُلُهُنَّஅவற்றைச் சாப்பிடுகின்றனسَبْعٌஏழுعِجَافٌமெலிந்தவைوَّ سَبْعَமேலும் ஏழுسُنْۢبُلٰتٍகதிர்களைخُضْرٍபசுமையானوَّ اُخَرَமேலும் மற்றவைیٰبِسٰتٍ ؕகாய்ந்தவைیٰۤاَیُّهَاالْمَلَاُபிரமுகர்களேاَفْتُوْنِیْஎனக்கு விளக்கம் கூறுங்கள்فِیْகுறித்துرُءْیَایَஎனது கனவுاِنْஎன்றால்كُنْتُمْநீங்கள் இருந்தால்لِلرُّءْیَاகனவுக்குتَعْبُرُوْنَவிளக்கம் அளிப்பவர்களாக
வ காலல் மலிகு இன்னீ அரா ஸBப்'அ Bபகராதின் ஸிமானி(ன்)ய் ய'குலுஹுன்ன ஸBப்'உன் 'இஜாFபு(ன்)வ் வ ஸBப்'அ ஸும்Bபுலாதின் குள்ரி(ன்)வ் வ உகர யாBபிஸாத்; யா அய்யுஹல் மல-உ அFப்தூனீ Fபீ ரு'யாய இன் குன்தும் லிர்ரு'யா தஃBபுரூன்
நான் ஏழு கொழுத்த பசுக்களை, ஏழு மெலிந்த பசுக்கள் தின்பதையும்; ஏழு பசுமையான கதிர்களையும், வேறு (ஏழு) காய்ந்து (சாவியாகி விட்ட) கதிர்களையும் திடமாக நான் கனவில் கண்டேன்; பிரதானிகளே! நீங்கள் கனவு விளக்கம் கூறக் கூடியவர்களாக இருந்தால், என்னுடைய (இக்)கனவின் பலனை எனக்கு அறிவியுங்கள்” என்று (தம் பிரதானிகளையழைத்து எகிப்து நாட்டு) அரசர் கூறினார்.  
قَالُوْۤا اَضْغَاثُ اَحْلَامٍ ۚ وَمَا نَحْنُ بِتَاْوِیْلِ الْاَحْلَامِ بِعٰلِمِیْنَ ۟
قَالُوْۤاஅவர்கள் கூறினார்கள்اَضْغَاثُகுழப்பமானاَحْلَامٍ ۚகனவுகள்وَ مَاமேலும் இல்லைنَحْنُநாங்கள்بِتَاْوِیْلِவிளக்கத்தைالْاَحْلَامِகனவுகளின்بِعٰلِمِیْنَஅறிந்தவர்கள்
காலூ அள்காது அஹ்லா மி(ன்)வ் வமா னஹ்னு Bபி த'வீலில் அஹ்லாமி Bபி'ஆலிமீன்
“(இவை) குழப்பமான கனவுகளேயாகும், எனவே நாங்கள் (இக்) கனவுகளுக்கு விளக்கங் கூற அறிந்தவர்கள் அல்லர்” என்று கூறினார்கள்.
وَقَالَ الَّذِیْ نَجَا مِنْهُمَا وَادَّكَرَ بَعْدَ اُمَّةٍ اَنَا اُنَبِّئُكُمْ بِتَاْوِیْلِهٖ فَاَرْسِلُوْنِ ۟
وَ قَالَமேலும் கூறினார்الَّذِیْஎவர்نَجَاதப்பினாரோمِنْهُمَاஅவ்விருவரில்وَ ادَّكَرَமேலும் நினைவுகூர்ந்தார்بَعْدَபிறகுاُمَّةٍஒரு காலத்திற்குப்اَنَاநான்اُنَبِّئُكُمْஉங்களுக்கு அறிவிப்பேன்بِتَاْوِیْلِهٖஅதன் விளக்கத்தைفَاَرْسِلُوْنِஎனவே என்னை அனுப்பி வையுங்கள்
வ காலல் லதீ னஜா மின்ஹுமா வத்தகர Bபஃத உம்மதின் அன உனBப்Bபி'உகும் Bபி த'வீலிஹீ Fப-அர்ஸிலூன்
அவ்விருவரில் (சிறையிலிருந்து) விடுதலையடைந்திருந்தவர், நீண்ட காலத்திற்குப் பின்னர், (யூஸுஃபை) நினைவு கூர்ந்து “இக்கனவின் விளக்கத்தை நான் உங்களுக்கு அறிவிப்பேன், என்னை (யூஸுஃபிடம்) அனுப்பி வையுங்கள்” என்று சொன்னார்.
یُوْسُفُ اَیُّهَا الصِّدِّیْقُ اَفْتِنَا فِیْ سَبْعِ بَقَرٰتٍ سِمَانٍ یَّاْكُلُهُنَّ سَبْعٌ عِجَافٌ وَّسَبْعِ سُنْۢبُلٰتٍ خُضْرٍ وَّاُخَرَ یٰبِسٰتٍ ۙ لَّعَلِّیْۤ اَرْجِعُ اِلَی النَّاسِ لَعَلَّهُمْ یَعْلَمُوْنَ ۟
یُوْسُفُயூஸுஃபேاَیُّهَاالصِّدِّیْقُஉண்மையாளரேاَفْتِنَاஎங்களுக்கு விளக்கமளிப்பீராகفِیْபற்றிسَبْعِஏழுبَقَرٰتٍபசுக்கள்سِمَانٍகொழுத்தیَّاْكُلُهُنَّஅவற்றை உண்கின்றனسَبْعٌஏழுعِجَافٌமெலிந்தவைوَّ سَبْعِமேலும் ஏழுسُنْۢبُلٰتٍகதிர்கள்خُضْرٍபசுமையானوَّ اُخَرَமற்றும் சிலیٰبِسٰتٍ ۙகாய்ந்தவைلَّعَلِّیْۤநான் கூடும்اَرْجِعُதிரும்புவதற்குاِلَیபால்النَّاسِமக்கள்لَعَلَّهُمْஅவர்கள் கூடும்یَعْلَمُوْنَஅறிந்து கொள்வதற்கு
யூஸுFபு அய்யுஹஸ் ஸித்தீகு அFப்தினா Fபீ ஸBப்'இ Bபகராதின் ஸிமானி(ன்)ய் ய'குலுஹுன்ன ஸBப்'உன் 'இஜாFபு(ன்)வ் வ ஸBபி'இ ஸும்Bபுலாதின் குள்ரி(ன்)வ் வ உகர யாBபிஸாதில் ல'அல்லீ அர்ஜி'உ இலன் னாஸி ல'அல்லஹும் யஃலமூன்
(சிறையில் யூஸுஃபை கண்ட) அவர், “யூஸுஃபே! உண்மையாளரே! ஏழு கொழுத்த பசுக்களை, ஏழு மெலிந்த பசுக்கள் தின்பதையும்; பசுமையான ஏழு கதிர்களையும் வேறு (ஏழு) காய்ந்து (சாவியாகிவிட்ட) கதிர்களையும் (கனவில் கண்டால் அக்கனவுக்குப் பலன் என்ன என்பதை) எனக்கு அறிவிப்பீராக; மக்கள் அறிந்து கொள்வதற்காக அவர்களிடம் திரும்பிப் போய்(ச் சொல்ல) வேண்டியிருக்கிறது” (என்று கூறினார்).
قَالَ تَزْرَعُوْنَ سَبْعَ سِنِیْنَ دَاَبًا ۚ فَمَا حَصَدْتُّمْ فَذَرُوْهُ فِیْ سُنْۢبُلِهٖۤ اِلَّا قَلِیْلًا مِّمَّا تَاْكُلُوْنَ ۟
قَالَஅவர் கூறினார்تَزْرَعُوْنَநீங்கள் பயிரிடுவீர்கள்سَبْعَஏழுسِنِیْنَஆண்டுகள்دَاَبًا ۚதொடர்ந்துفَمَاபிறகு எதைحَصَدْتُّمْநீங்கள் அறுவடை செய்தீர்களோفَذَرُوْهُஅதை விட்டுவிடுங்கள்فِیْஇல்سُنْۢبُلِهٖۤஅதன் கதிர்களில்اِلَّاதவிரقَلِیْلًاசிறிதளவுمِّمَّاஎதிலிருந்துتَاْكُلُوْنَநீங்கள் உண்பீர்களோ
கால தZஜ்ர'ஊன ஸBப்'அ ஸினீன த அBபன் Fபமா ஹஸத்தும் Fபதரூஹு Fபீ ஸும்Bபு லிஹீ இல்லா கலீலம் மிம்மா த'குலூன்
“நீங்கள் தொடர்ந்து ஏழு ஆண்டுகளுக்கு (நல்லபடியாக) விவசாயம் செய்வீர்கள்; பிறகு நீங்கள் அறுவடை செய்த - (விளைச்ச)லில், நீங்கள் உண்பதற்கு வேண்டிய ஒரு சிறிய அளவைத்தவிர, அதனை அதற்குரிய கதிர்களிலேயே விட்டு வையுங்கள்.
ثُمَّ یَاْتِیْ مِنْ بَعْدِ ذٰلِكَ سَبْعٌ شِدَادٌ یَّاْكُلْنَ مَا قَدَّمْتُمْ لَهُنَّ اِلَّا قَلِیْلًا مِّمَّا تُحْصِنُوْنَ ۟
ثُمَّபின்னர்یَاْتِیْவரும்مِنْۢஇருந்துبَعْدِபின்ذٰلِكَஅதற்குسَبْعٌஏழுشِدَادٌகடுமையானவைیَّاْكُلْنَஅவை தின்றுவிடும்مَاஎதைقَدَّمْتُمْநீங்கள் சேமித்தீர்களோلَهُنَّஅவற்றுக்காகاِلَّاதவிரقَلِیْلًاசிறிதளவைمِّمَّاஎதிலிருந்துتُحْصِنُوْنَநீங்கள் பத்திரப்படுத்துவீர்களோ
தும்ம ய'தீ மிம் Bபஃதி தாலிக ஸBப்'உன் ஷிதாது(ன்)ய் ய'குல்ன மா கத்தம்தும் லஹுன்ன இல்லா கலீலம் மிம்ம துஹ்ஸினூன்
“பின்னும், அதற்கப்பால் கடினமான (பஞ்சத்தையுடை வருடங்கள்) ஏழு வரும்; நீங்கள் பஞ்சமான ஆண்டுகளுக்காக பத்திரப்படுத்தி முன்னமேயே வைத்திருப்பதில் சொற்ப (அளவை)த் தவிர மற்றதை அவை (அந்த பஞ்ச ஆண்டுகள்) தின்றுவிடும்.
ثُمَّ یَاْتِیْ مِنْ بَعْدِ ذٰلِكَ عَامٌ فِیْهِ یُغَاثُ النَّاسُ وَفِیْهِ یَعْصِرُوْنَ ۟۠
ثُمَّபின்னர்یَاْتِیْவரும்مِنْۢஇருந்துبَعْدِபின்ذٰلِكَஅதற்குعَامٌஓர் ஆண்டுفِیْهِஅதில்یُغَاثُமழையளிக்கப்படுவார்கள்النَّاسُமக்கள்وَ فِیْهِமேலும் அதில்یَعْصِرُوْنَ۠பிழிவார்கள்
தும்ம ய'தீ மிம் Bபஃதி தலிக 'ஆமுன் Fபீஹி யுகா துன் னாஸு வ Fபீஹி யஃஸிரூன்
பின்னும், அதற்கப்பால் ஓராண்டு வரும், அதில் மக்களுக்கு நல்ல மழை பெய்யும்; அதில் (விளையும் கனிகளிலிருந்து) அவர்கள் பழரசங்கள் பிழிந்து (சுகமாக) இருப்பார்கள்” என்று கூறினார்.
وَقَالَ الْمَلِكُ ائْتُوْنِیْ بِهٖ ۚ فَلَمَّا جَآءَهُ الرَّسُوْلُ قَالَ ارْجِعْ اِلٰی رَبِّكَ فَسْـَٔلْهُ مَا بَالُ النِّسْوَةِ الّٰتِیْ قَطَّعْنَ اَیْدِیَهُنَّ ؕ اِنَّ رَبِّیْ بِكَیْدِهِنَّ عَلِیْمٌ ۟
وَ قَالَமேலும் கூறினார்الْمَلِكُஅரசர்ائْتُوْنِیْஎன்னிடம் அழைத்து வாருங்கள்بِهٖ ۚஅவரைفَلَمَّاஆகவே எப்போதுجَآءَهُஅவரிடம் வந்தாரோالرَّسُوْلُதூதர்قَالَஅவர் கூறினார்ارْجِعْதிரும்பிச் செல்வீராகاِلٰیநோக்கிرَبِّكَஉமது எஜமானரைفَسْـَٔلْهُஎனவே அவரிடம் கேளும்مَاஎன்னبَالُநிலைமைالنِّسْوَةِபெண்களின்الّٰتِیْஎவர்கள்قَطَّعْنَவெட்டிக்கொண்டார்களோاَیْدِیَهُنَّ ؕதங்களது கைகளைاِنَّநிச்சயமாகرَبِّیْஎன் இறைவன்بِكَیْدِهِنَّஅவர்களின் சூழ்ச்சியைعَلِیْمٌநன்கறிந்தவன்
வ காலல் மலிகு'தூனீ Bபிஹீ Fபலம்மா ஜா'அஹுர் ரஸூலு காலர்-ஜி இலா ரBப்Bபிக Fபஸ்'அல்ஹு மா Bபாலுன் னிஸ்வதில் லாதீ கத்தஃன அய்தியஹுன்ன்; இன்ன ரBப்Bபீ Bபிகய்திஹின்ன 'அலீம்
(“இவ்விவரம் அரசருக்கு அறிவிக்கப்பட்டதும்) அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்” என்று அரசர் கூறினார்; (அவருடைய) தூதர் யூஸுஃபிடம் வந்தபோது அவர், “நீர் உம் எஜமானரிடம் திரும்பிச் சென்று, “தம் கைகளை வெட்டிக்கொண்ட பெண்களின் உண்மை நிலை என்ன?” என்று அவரிடம் கேளும். நிச்சயமாக என் இறைவன் அப்பெண்களின் சதியை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்” என்று கூறினார்.
قَالَ مَا خَطْبُكُنَّ اِذْ رَاوَدْتُّنَّ یُوْسُفَ عَنْ نَّفْسِهٖ ؕ قُلْنَ حَاشَ لِلّٰهِ مَا عَلِمْنَا عَلَیْهِ مِنْ سُوْٓءٍ ؕ قَالَتِ امْرَاَتُ الْعَزِیْزِ الْـٰٔنَ حَصْحَصَ الْحَقُّ ؗ اَنَا رَاوَدْتُّهٗ عَنْ نَّفْسِهٖ وَاِنَّهٗ لَمِنَ الصّٰدِقِیْنَ ۟
قَالَகூறினார்مَاஎன்னخَطْبُكُنَّஉங்கள் விவகாரம்اِذْபோதுرَاوَدْتُّنَّநீங்கள் மயக்க முயன்றீர்கள்یُوْسُفَயூஸுஃபைعَنْஇடமிருந்துنَّفْسِهٖ ؕஅவரது உள்ளத்தைقُلْنَஅவர்கள் கூறினார்கள்حَاشَதூய்மையானவன்لِلّٰهِஅல்லாஹ்مَاஇல்லைعَلِمْنَاநாங்கள் அறிந்தோம்عَلَیْهِஅவர் மீதுمِنْஎந்தسُوْٓءٍ ؕதீமையையும்قَالَتِகூறினாள்امْرَاَتُமனைவிالْعَزِیْزِஅஸீஸின்الْـٰٔنَஇப்போதுحَصْحَصَதெளிவாகிவிட்டதுالْحَقُّ ؗஉண்மைاَنَاநான்رَاوَدْتُّهٗஅவரை மயக்க முயன்றேன்عَنْஇடமிருந்துنَّفْسِهٖஅவரது உள்ளத்தைوَ اِنَّهٗமேலும் நிச்சயமாக அவர்لَمِنَநிச்சயமாகالصّٰدِقِیْنَஉண்மையாளர்களில்
கால மா கத்Bபுகுன்ன இத் ராவத்துன்ன யூஸுFப 'அன்னFப்ஸிஹ்; குல்ன ஹாஷ லில்லாஹி மா 'அலிம்னா 'அலய்ஹி மின் ஸூ'; காலதிம் ர அதுல் 'அZஜீZஜில் 'ஆன ஹஷஸல் ஹக்க், அன ராவத் துஹூ 'அன் னFப்ஸிஹீ வ இன்னஹூ லமினஸ் ஸாதிகீன்
(இவ்விவரம் அறிந்த அரசர் அப் பெண்களை அழைத்து) “நீங்கள் யூஸுஃபை உங்கள் விருப்பத்திற்கு இணங்குமாறு அழைத்தபோது உங்களுக்கு நேர்ந்தது என்ன?” என்று கேட்டார்; (அதற்கு) அப் பெண்கள், “அல்லாஹ் எங்களை காப்பானாக! நாங்கள் அவரிடத்தில் யாதொரு கெடுதியையும் அறியவில்லை” என்று கூறினார்கள்; அஜீஸுடைய மனைவி, “இப்பொழுது (எல்லோருக்கும்) உண்மை வெளிப்பட்டு விட்டது. நான் தான் இவரை என் விருப்பத்திற்கு இணங்குமாறு வற்புறுத்தினேன். நிச்சயமாக அவர் உண்மையாளர்களில் உள்ளவர்” என்று கூறினாள்.
ذٰلِكَ لِیَعْلَمَ اَنِّیْ لَمْ اَخُنْهُ بِالْغَیْبِ وَاَنَّ اللّٰهَ لَا یَهْدِیْ كَیْدَ الْخَآىِٕنِیْنَ ۟
ذٰلِكَஇதுلِیَعْلَمَஅவர் அறிந்துகொள்வதற்காகاَنِّیْநான்لَمْஇல்லைاَخُنْهُஅவருக்கு துரோகம் செய்யبِالْغَیْبِமறைவாகوَ اَنَّமேலும் நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَاஇல்லைیَهْدِیْவழிகாட்டكَیْدَசூழ்ச்சியைالْخَآىِٕنِیْنَதுரோகிகளின்
தாலிக லியஃலம அன்னீ லம் அகுன்ஹு Bபில்கய்Bபி வ அன்னல் லாஹ லா யஹ்தீ கய்தல் கா'இனீன்
இ(வ் விசாரணையை நான் விரும்பிய)தன் காரணம்; “நிச்சயமாக அவர் (என் எஜமானர்) இல்லாத போது அவருக்கு நான் துரோகம் செய்யவில்லை என்பதை அவர் அறிந்து கொள்வதுடன், நிச்சயமாக அல்லாஹ் துரோகிகளின் சதியை நடைபெற விடுவதில்லை என்பதை அறிவிப்பதற்காகவுமேயாகும்.
وَمَاۤ اُبَرِّئُ نَفْسِیْ ۚ اِنَّ النَّفْسَ لَاَمَّارَةٌ بِالسُّوْٓءِ اِلَّا مَا رَحِمَ رَبِّیْ ؕ اِنَّ رَبِّیْ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
وَ مَاۤமேலும் இல்லைاُبَرِّئُநான் பரிசுத்தப்படுத்துகிறேன்نَفْسِیْ ۚஎனது ஆத்மாவைاِنَّநிச்சயமாகالنَّفْسَஆத்மாلَاَمَّارَةٌۢஅதிகமாக ஏவக்கூடியதுبِالسُّوْٓءِதீமையைاِلَّاதவிரمَاஎதன் மீதுرَحِمَஅருள் புரிந்தானோرَبِّیْ ؕஎன் இறைவன்اِنَّநிச்சயமாகرَبِّیْஎன் இறைவன்غَفُوْرٌமிகவும் மன்னிப்பவன்رَّحِیْمٌமிக்க கிருபையுடையவன்
வமா உBபர்ரி'உ னFப்ஸீ; இன்னன் னFப்ஸ ல அம்மாரதும் Bபிஸ்ஸூ'இ இல்லா மா ரஹிம ரBப்Bபீ; இன்ன ரBப்Bபீ கFபூருர் ரஹீம்
“அன்றியும், நான் என் மனதைப் பாவத்தைவிட்டும் பரிசுத்தமாக்கி விட்டதாகவும் (கூற) இல்லை, ஏனெனில் மன இச்சையானது தீமையைத் தூண்டக்கூடியதாக இருக்கிறது - என் இறைவன் அருள்புரிந்தாலன்றி; நிச்சயமாக என் இறைவன் மிக்க மன்னிப்பவனாகவும், அருளாளனாகவும் இருக்கின்றான்” (என்றுங் கூறினார்).
وَقَالَ الْمَلِكُ ائْتُوْنِیْ بِهٖۤ اَسْتَخْلِصْهُ لِنَفْسِیْ ۚ فَلَمَّا كَلَّمَهٗ قَالَ اِنَّكَ الْیَوْمَ لَدَیْنَا مَكِیْنٌ اَمِیْنٌ ۟
وَ قَالَமேலும் கூறினார்الْمَلِكُஅரசர்ائْتُوْنِیْஎன்னிடம் அழைத்து வாருங்கள்بِهٖۤஅவரைاَسْتَخْلِصْهُஅவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்வேன்لِنَفْسِیْ ۚஎனக்காகفَلَمَّاபின்னர்كَلَّمَهٗஅவரிடம் பேசியபோதுقَالَஅவர் கூறினார்اِنَّكَநிச்சயமாக நீர்الْیَوْمَஇன்றுلَدَیْنَاநம்மிடம்مَكِیْنٌஉயர் அந்தஸ்துடையவர்اَمِیْنٌநம்பிக்கைக்குரியவர்
வ காலல் மலிகு' தூனீ Bபிஹீ அஸ்தக்லிஸ்ஹு லினFப்ஸீ Fபலம்மா கல்லமஹூ கால இன்னகல் யவ்ம லதய்னா மகீனுன் அமீன்
இன்னும், அரசர் கூறினார்: “அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்; அவரை நான் என் நெருங்கிய - (ஆலோசக)ராக அமர்த்திக் கொள்வேன்” (இவ்வாறு அரசரிடம் யூஸுஃபு வந்ததும்) அவரிடம் பேசி (அவர் ஞானத்தை நன்கறிந்த பொழுது) “நிச்சயமாக நீர் இன்றிலிருந்து நம்மிடம் பெரும் அந்தஸ்துள்ளவராகவும் நம்பிக்கைக்குரியவராகவும் (உயர்ந்து) இருக்கிறீர்” என்று கூறினார்.
قَالَ اجْعَلْنِیْ عَلٰی خَزَآىِٕنِ الْاَرْضِ ۚ اِنِّیْ حَفِیْظٌ عَلِیْمٌ ۟
قَالَஅவர் கூறினார்اجْعَلْنِیْஎன்னை ஆக்குங்கள்عَلٰیமீதுخَزَآىِٕنِகருவூலங்களின்الْاَرْضِ ۚபூமியின்اِنِّیْநிச்சயமாக நான்حَفِیْظٌபாதுகாப்பவன்عَلِیْمٌநன்கு அறிந்தவன்
காலஜ் 'அல்னீ 'அலா கZஜா'இனில் அர்ளி இன்னீ ஹFபீளுன் 'அலீம்
(யூஸுஃப்) கூறினார்: “(இந்த) பூமியின் களஞ்சியங்களுக்கு என்னை (அதிகாரியாய்) ஆக்கிவிடுவீராக; நிச்சயமாக நான் (அவற்றைப்) பாதுகாக்க நன்கறிந்தவன்.”
وَكَذٰلِكَ مَكَّنَّا لِیُوْسُفَ فِی الْاَرْضِ ۚ یَتَبَوَّاُ مِنْهَا حَیْثُ یَشَآءُ ؕ نُصِیْبُ بِرَحْمَتِنَا مَنْ نَّشَآءُ وَلَا نُضِیْعُ اَجْرَ الْمُحْسِنِیْنَ ۟
وَ كَذٰلِكَஅவ்வாறேمَكَّنَّاநாம் அதிகாரம் அளித்தோம்لِیُوْسُفَயூஸுஃபுக்குفِیஇல்الْاَرْضِ ۚபூமியில்یَتَبَوَّاُஅவர் தங்குவதற்குمِنْهَاஅதில்حَیْثُஎங்குیَشَآءُ ؕஅவர் நாடுகிறாரோنُصِیْبُநாம் அடையச் செய்கிறோம்بِرَحْمَتِنَاநமது அருளால்مَنْஎவரைنَّشَآءُநாம் நாடுகிறோமோوَ لَاமேலும் இல்லைنُضِیْعُநாம் வீணாக்குவோம்اَجْرَகூலியைالْمُحْسِنِیْنَநன்மை செய்வோரின்
வ கதாலிக மக்கன்னா லி யூஸுFப Fபில் அர்ளி யதBபவ்வ'உ மின்ஹா ஹய்து யஷா'; னுஸீBபு Bபிரஹ்மதினா மன் னஷா'உ வலா னுளீ'உ அஜ்ரல் முஹ்ஸினீன்
யூஸுஃப் தான் விரும்பிய விதத்தில் காரியங்கள் செய்து வர அந்த நாட்டில் யூஸுஃபுக்கு நாம் இவ்வாறே வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தோம்; இவ்வாறே நாம் நாடியவருக்கு நமது அருள் கிடைக்கும் படிச் செய்கின்றோம். நன்மை செய்பவர்களின் கூலியை நாம் வீணாக்க மாட்டோம்.
وَلَاَجْرُ الْاٰخِرَةِ خَیْرٌ لِّلَّذِیْنَ اٰمَنُوْا وَكَانُوْا یَتَّقُوْنَ ۟۠
وَ لَاَجْرُமேலும் நிச்சயமாகக் கூலிالْاٰخِرَةِமறுமையின்خَیْرٌமிகச் சிறந்ததுلِّلَّذِیْنَஅத்தகையோருக்குاٰمَنُوْاஎவர்கள் நம்பிக்கை கொண்டார்களோوَ كَانُوْاமேலும் அவர்கள்یَتَّقُوْنَ۠இறையச்சம் உடையவர்களாக இருந்தார்களோ
வ ல அஜ்ருல் ஆகிரதி கய்ருல் லில்லதீன ஆமனூ வ கானூ யத்தகூன்
மேலும், பயபக்தியுடையவர்களான முஃமின்களுக்கு மறுமையின் கூலி மிகச் சிறந்ததாக இருக்கும்.
وَجَآءَ اِخْوَةُ یُوْسُفَ فَدَخَلُوْا عَلَیْهِ فَعَرَفَهُمْ وَهُمْ لَهٗ مُنْكِرُوْنَ ۟
وَ جَآءَமேலும் வந்தனர்اِخْوَةُசகோதரர்கள்یُوْسُفَயூஸுஃபுடையفَدَخَلُوْاபின்பு அவர்கள் நுழைந்தனர்عَلَیْهِஅவரிடம்فَعَرَفَهُمْஅவர் அவர்களை அடையாளம் கண்டுகொண்டார்وَ هُمْஅவர்களோلَهٗஅவரைمُنْكِرُوْنَஅடையாளம் காணவில்லை
வ ஜா'அ இக்வது யூஸுFப Fபதகலூ 'அலய்ஹி Fப'அரFபஹும் வ ஹும் லஹூ முன்கிரூன்
(பின்னர் யூஸுஃபுடைய சகோதரர்கள் (மிஸ்ரு நாட்டுக்கு) வந்து, அவரிடம் நுழைந்த போது யூஸுஃப் அவர்களை அறிந்து கொண்டார்; ஆனால் அவர்களோ அவரை அறியாதவர்களாக இருந்தனர்,
وَلَمَّا جَهَّزَهُمْ بِجَهَازِهِمْ قَالَ ائْتُوْنِیْ بِاَخٍ لَّكُمْ مِّنْ اَبِیْكُمْ ۚ اَلَا تَرَوْنَ اَنِّیْۤ اُوْفِی الْكَیْلَ وَاَنَا خَیْرُ الْمُنْزِلِیْنَ ۟
وَ لَمَّاமேலும், போதுجَهَّزَهُمْஅவர்களுக்கு அவர் ஆயத்தம் செய்தார்بِجَهَازِهِمْஅவர்களின் சாதனங்களுடன்قَالَஅவர் கூறினார்ائْتُوْنِیْஎன்னிடம் நீங்கள் கொண்டு வாருங்கள்بِاَخٍஒரு சகோதரரைلَّكُمْஉங்களுக்குரியمِّنْஇருந்துاَبِیْكُمْ ۚஉங்கள் தந்தையின்اَلَاகவனியுங்கள்تَرَوْنَநீங்கள் பார்க்கிறீர்கள்اَنِّیْۤநிச்சயமாக நான்اُوْفِیநிறைவாகக் கொடுக்கிறேன்الْكَیْلَஅளவைوَ اَنَاமேலும் நான்خَیْرُமிகச் சிறந்தவன்الْمُنْزِلِیْنَஉபசரிப்பவர்களில்
வ லம்மா ஜஹ்ஹZஜஹும் BபிஜஹாZஜிஹிம் கால' தூனீ Bபி அகில் லகும் மின் அBபீகும்; அலா தரவ்ன அன்னீ ஊFபில் கய்ல வ அன கய்ருல் முன்Zஜிலீன்
(யூஸுஃப்) அவர்களுக்கு வேண்டிய பொருள் (தானியங்களைச்) சித்தம் செய்து கொடுத்த போது, (அவர்களை நோக்கி) “உங்கள் தந்தை வழிச் சகோதரனை (மறுமுறை நீங்கள் இங்கு வரும்போது) என்னிடம் அழைத்து வாருங்கள். நிச்சயமாக நான் உங்களுக்கு (தானியங்களை நிரப்பமாக) அளந்து கொடுத்ததையும், விருந்துபசாரம் செய்வதில் நான் “சிறந்தவன்” என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா?
فَاِنْ لَّمْ تَاْتُوْنِیْ بِهٖ فَلَا كَیْلَ لَكُمْ عِنْدِیْ وَلَا تَقْرَبُوْنِ ۟
فَاِنْஎனவேلَّمْவில்லை என்றால்تَاْتُوْنِیْநீங்கள் என்னிடம் கொண்டு வரبِهٖஅவனைفَلَاஇனி இல்லைكَیْلَதானிய அளவுلَكُمْஉங்களுக்குعِنْدِیْஎன்னிடம்وَ لَاமேலும் கூடாதுتَقْرَبُوْنِஎன்னை நெருங்க
Fப இல் லம் தாதூனீ Bபிஹீ Fபலா கய்ல லகும் 'இன்தீ வலா தக்ரBபூன்
“ஆகவே, நீங்கள் அவரை என்னிடம் அழைத்து வராவிட்டால், என்னிடமிருந்து உங்களுக்கு (தானிய) அளவையும் (இனி) இல்லை; நீங்கள் என்னை நெருங்கவும் கூடாது” என்று கூறினார்.
قَالُوْا سَنُرَاوِدُ عَنْهُ اَبَاهُ وَاِنَّا لَفٰعِلُوْنَ ۟
قَالُوْاஅவர்கள் கூறினார்கள்سَنُرَاوِدُநாங்கள் வற்புறுத்திக் கேட்போம்عَنْهُஅவனைப் பற்றிاَبَاهُஅவனுடைய தந்தையிடம்وَ اِنَّاமேலும் நிச்சயமாக நாங்கள்لَفٰعِلُوْنَநிச்சயமாகச் செய்வோம்
காலூ ஸனுராவிது 'அன்ஹு அBபாஹு வ இன்னா லFபா'இலூன்
“அவரது தந்தையிடத்தில் அவர் விஷயமாக நாம் ஓர் உபாயத்தை மேற்கொள்வோம். மேலும் நிச்சயமாக நாம் அதை செய்பவர்கள்தான்” என்று கூறினார்கள்.
وَقَالَ لِفِتْیٰنِهِ اجْعَلُوْا بِضَاعَتَهُمْ فِیْ رِحَالِهِمْ لَعَلَّهُمْ یَعْرِفُوْنَهَاۤ اِذَا انْقَلَبُوْۤا اِلٰۤی اَهْلِهِمْ لَعَلَّهُمْ یَرْجِعُوْنَ ۟
وَ قَالَமேலும் அவர் கூறினார்لِفِتْیٰنِهِதன் பணியாளர்களிடம்اجْعَلُوْاவைத்துவிடுங்கள்بِضَاعَتَهُمْஅவர்களின் பொருட்களைفِیْஉள்ளேرِحَالِهِمْஅவர்களின் பொதிகளில்لَعَلَّهُمْஅதனால் அவர்கள்یَعْرِفُوْنَهَاۤஅதனை அடையாளம் காண்பார்கள்اِذَاபோதுانْقَلَبُوْۤاஅவர்கள் திரும்பிச் சென்றاِلٰۤیநோக்கிاَهْلِهِمْதங்கள் குடும்பத்தாரைلَعَلَّهُمْஅதனால் அவர்கள்یَرْجِعُوْنَதிரும்பி வருவார்கள்
வ கால லிFபித்யானிஹிஜ் 'அலூ Bபிளா'அதஹும் Fபீ ரிஹாலிஹிம் ல'அல்லஹும் யஃரிFபூனஹா இதன் கலBபூ இலா அஹ்லிஹிம் ல'அல்லஹும் யர்ஜி'ஊன்
(பின்னர் யூஸுஃப்) தம் பணியாட்களை நோக்கி, “அவர்கள் கிரயமாகக் கொடுத்த பொருளை அவர்களுடைய மூட்டைகளிலே வைத்து விடுங்கள்; அவர்கள் தம் குடும்பத்தாரிடம் சென்ற பிறகு இதை அறிந்தால், (நம்மிடம் அதைச் சேர்ப்பிக்க) அவர்கள் திரும்பி வரக்கூடும்” என்று கூறினார்.
فَلَمَّا رَجَعُوْۤا اِلٰۤی اَبِیْهِمْ قَالُوْا یٰۤاَبَانَا مُنِعَ مِنَّا الْكَیْلُ فَاَرْسِلْ مَعَنَاۤ اَخَانَا نَكْتَلْ وَاِنَّا لَهٗ لَحٰفِظُوْنَ ۟
فَلَمَّاஎனவே எப்போதுرَجَعُوْۤاஅவர்கள் திரும்பினார்களோاِلٰۤیநோக்கிاَبِیْهِمْதங்கள் தந்தையிடம்قَالُوْاஅவர்கள் கூறினார்கள்یٰۤاَبَانَاஎங்கள் தந்தையேمُنِعَதடுக்கப்பட்டுவிட்டதுمِنَّاஎங்களிடமிருந்துالْكَیْلُஅளவைفَاَرْسِلْஎனவே அனுப்பி வையுங்கள்مَعَنَاۤஎங்களுடன்اَخَانَاஎங்கள் சகோதரனைنَكْتَلْநாங்கள் அளவைப் பெறுவோம்وَ اِنَّاமேலும் நிச்சயமாக நாங்கள்لَهٗஅவரைلَحٰفِظُوْنَநிச்சயமாகப் பாதுகாப்பவர்கள்
Fபலம்மா ரஜ'ஊ இலா அBபீஹிம் காலூ யா அBபானா முனி'அ மின்னல் கய்லு Fப அர்ஸில் ம'அனா அகானா னக்தல் வ இன்னா லஹூ லஹாFபிளூன்
அவர்கள் தம் தந்தையாரிடம் திரும்பிய போது, அவரை நோக்கி: “எங்கள் தந்தையே! (நாங்கள் நம் சதோதரரை அழைத்துச் செல்லாவிட்டால்) நமக்கு(த் தானியம்) அளந்து கொடுப்பது தடுக்கப்பட்டுவிடும்; ஆகவே எங்களுடன் எங்களுடைய சகோதரனையும் அனுப்பிவையுங்கள். நாங்கள் (தானியம்) அளந்து வாங்கிக் கொண்டு வருவோம்; நிச்சயமாக நாங்கள் இவரை மிகவும் கவனமாக பாதுகாத்தும் வருவோம்” என்று சொன்னார்கள்.
قَالَ هَلْ اٰمَنُكُمْ عَلَیْهِ اِلَّا كَمَاۤ اَمِنْتُكُمْ عَلٰۤی اَخِیْهِ مِنْ قَبْلُ ؕ فَاللّٰهُ خَیْرٌ حٰفِظًا ۪ وَّهُوَ اَرْحَمُ الرّٰحِمِیْنَ ۟
قَالَஅவர் கூறினார்هَلْநான்اٰمَنُكُمْஉங்களை நம்புவேனாعَلَیْهِஇவன் மீதுاِلَّاதவிரكَمَاۤஎவ்வாறுاَمِنْتُكُمْஉங்களை நம்பினேனோعَلٰۤیமீதுاَخِیْهِஅவனுடைய சகோதரர்مِنْஇதற்குقَبْلُ ؕமுன்னர்فَاللّٰهُஅல்லாஹ்வேخَیْرٌமிகச் சிறந்தحٰفِظًا ۪பாதுகாவலன்وَّ هُوَமேலும் அவனேاَرْحَمُமிகவும் கிருபையுடையவன்الرّٰحِمِیْنَகிருபையாளர்களிலெல்லாம்
கால ஹல் ஆமனுகும் 'அலய்ஹி இல்லா கமா அமின்துகும் 'அலா அகீஹி மின் கBப்ல்; Fபல் லாஹு கய்ருன் ஹாFபிள(ன்)வ் வ ஹுவ அர்ஹமுர் ராஹிமீன்
அதற்கு (யஃகூப்; “இதற்கு) முன்னர் இவருடைய சகோதரர் விஷயத்தில் உங்களை நம்பியது போன்று, இவர் விஷயத்திலும் நான் உங்களை நம்புவதா? (அது முடியாது.) பாதுகாப்பவர்களில் அல்லாஹ்வே மிகவும் மேலானவன்; கிருபையாளர்களில் அவனே எல்லோரையும்விட மிக்க கிருபையாளனாவான்” என்று கூறிவிட்டார்.
وَلَمَّا فَتَحُوْا مَتَاعَهُمْ وَجَدُوْا بِضَاعَتَهُمْ رُدَّتْ اِلَیْهِمْ ؕ قَالُوْا یٰۤاَبَانَا مَا نَبْغِیْ ؕ هٰذِهٖ بِضَاعَتُنَا رُدَّتْ اِلَیْنَا ۚ وَنَمِیْرُ اَهْلَنَا وَنَحْفَظُ اَخَانَا وَنَزْدَادُ كَیْلَ بَعِیْرٍ ؕ ذٰلِكَ كَیْلٌ یَّسِیْرٌ ۟
وَ لَمَّاமேலும் எப்போதுفَتَحُوْاஅவர்கள் திறந்தார்களோمَتَاعَهُمْதங்களது மூட்டைகளைوَجَدُوْاஅவர்கள் கண்டார்கள்بِضَاعَتَهُمْதங்களது சரக்குகளைرُدَّتْதிருப்பிக் கொடுக்கப்பட்டிருப்பதைاِلَیْهِمْ ؕதங்களிடமேقَالُوْاஅவர்கள் கூறினார்கள்یٰۤاَبَانَاஎங்கள் தந்தையே!مَاநாம் என்னنَبْغِیْ ؕநாடுகிறோம்?هٰذِهٖஇதோبِضَاعَتُنَاநமது சரக்குرُدَّتْதிருப்பிக் கொடுக்கப்பட்டுவிட்டதுاِلَیْنَا ۚநமக்கேوَ نَمِیْرُமேலும் நாம் உணவு கொண்டு வருவோம்اَهْلَنَاநமது குடும்பத்திற்குوَ نَحْفَظُமேலும் நாம் பாதுகாப்போம்اَخَانَاநமது சகோதரனைوَ نَزْدَادُமேலும் நாம் கூடுதலாகப் பெறுவோம்كَیْلَஅளவைبَعِیْرٍ ؕஓர் ஒட்டகத்தின்ذٰلِكَஅதுكَیْلٌஓர் அளவுیَّسِیْرٌஎளிதானது
வ லம்மா Fபதஹூ மதா 'அஹும் வஜதூ Bபிளா'அதஹும் ருத்தத் இலய்ஹிம் காலூ யா அBபானா மா னBப்கீ; ஹாதிஹீ Bபிள 'அதுனா ருத்தத் இலய்னா வ னமீரு அஹ்லனா வ னஹ்Fபளு அகானா வ னZஜ்தாது கய்ல Bப'ஈர்; தாலிக கய்லு(ன்)ய் யஸீர்
அவர்கள் தங்கள் (சாமான்) மூட்டைகளை அவிழ்த்தபோது, அவர்களுடைய கிரயப்பொருள் (யாவும்) அவர்களிடம் திருப்பப் பட்டிருப்பதைக் கண்டார்கள்; அவர்கள், “எங்கள் தந்தையே! (இதற்கு மேல்) நாம் எதைத் தேடுவோம்? இதோ, நம்முடைய (கிரயப்) பொருள்கள் நம்மிடமே திருப்பப்பட்டுவிட்டன; ஆகவே நம் குடும்பத்திற்கு (வேண்டிய) தானியங்களை நாங்கள் வாங்கி வருவோம்; எங்கள் சகோதரரையும் நாங்கள் பாதுகாத்துக்கொள்வோம்; மேலும், (அவருக்காக) ஓர் ஒட்டகை(ச் சுமை) தானியத்தை அதிகமாகக் கொண்டு வருவோம்; இது (அந்த மன்னரைப் பொறுத்த வரை) சாதாரணமான அளவுதான்” என்று கூறினார்கள்.
قَالَ لَنْ اُرْسِلَهٗ مَعَكُمْ حَتّٰی تُؤْتُوْنِ مَوْثِقًا مِّنَ اللّٰهِ لَتَاْتُنَّنِیْ بِهٖۤ اِلَّاۤ اَنْ یُّحَاطَ بِكُمْ ۚ فَلَمَّاۤ اٰتَوْهُ مَوْثِقَهُمْ قَالَ اللّٰهُ عَلٰی مَا نَقُوْلُ وَكِیْلٌ ۟
قَالَஅவர் கூறினார்لَنْஒருபோதும் மாட்டேன்اُرْسِلَهٗஅவனை அனுப்பمَعَكُمْஉங்களுடன்حَتّٰیவரைتُؤْتُوْنِநீங்கள் எனக்குத் தரும்مَوْثِقًاஒரு உறுதிமொழியைمِّنَபெயரால்اللّٰهِஅல்லாஹ்வின்لَتَاْتُنَّنِیْநிச்சயமாக நீங்கள் என்னிடம் கொண்டு வருவீர்கள்بِهٖۤஅவனைاِلَّاۤதவிரاَنْஎன்றுیُّحَاطَசூழப்பட்டாலேبِكُمْ ۚநீங்கள்فَلَمَّاۤபின்னர் எப்போதுاٰتَوْهُஅவர்கள் அவருக்குக் கொடுத்தார்களோمَوْثِقَهُمْதங்களின் உறுதிமொழியைقَالَஅவர் கூறினார்اللّٰهُஅல்லாஹ்عَلٰیமீதுمَاநாம்نَقُوْلُகூறுவதற்குوَكِیْلٌபொறுப்பாளன்
கால லன் உர்ஸிலஹூ ம'அகும் ஹத்தா து'தூனி மவ்திகம் மினல் லாஹீ லதா துன்னனீ Bபிஹீ இல்லா அய் யுஹாத Bபிகும் Fபலம்மா ஆதவ்ஹு மவ்திகஹும் காலல் லாஹு 'அலா மா னகூலு வகீல்
அதற்கு யஃகூப் “உங்கள் யாவரையுமே (ஏதாவதோர் ஆபத்து) சூழ்ந்து (உங்களைச் சக்தியற்றவர்களாக ஆக்கிக்) கொண்டாலன்றி, நிச்சயமாக நீங்கள் அவரை என்னிடம் கொண்டு வருவீர்களென்று அல்லாஹ்வின் மீது நீங்கள் எனக்குச் சத்தியம்செய்து (வாக்குறுதி) கொடுத்தாலன்றி, நான் அவரை உங்களுடன் அனுப்பவே மாட்டேன்” என்று கூறினார்; அவர்கள் (அவ்வாறு) அவருக்குச் சத்தியம் செய்து (வாக்குறுதி) கொடுத்ததும் அவர் “நாம் பேசிக்கொண்டதற்கு அல்லாஹ்வே காவலனாக இருக்கின்றான்” என்று கூறினார்.
وَقَالَ یٰبَنِیَّ لَا تَدْخُلُوْا مِنْ بَابٍ وَّاحِدٍ وَّادْخُلُوْا مِنْ اَبْوَابٍ مُّتَفَرِّقَةٍ ؕ وَمَاۤ اُغْنِیْ عَنْكُمْ مِّنَ اللّٰهِ مِنْ شَیْءٍ ؕ اِنِ الْحُكْمُ اِلَّا لِلّٰهِ ؕ عَلَیْهِ تَوَكَّلْتُ ۚ وَعَلَیْهِ فَلْیَتَوَكَّلِ الْمُتَوَكِّلُوْنَ ۟
وَ قَالَமேலும் அவர் கூறினார்یٰبَنِیَّஎன் மக்களேلَاவேண்டாம்تَدْخُلُوْاநீங்கள் நுழையمِنْۢவழியாகبَابٍவாசல்وَّاحِدٍஒரேوَّ ادْخُلُوْاமேலும் நுழையுங்கள்مِنْவழியாகاَبْوَابٍவாசல்கள்مُّتَفَرِّقَةٍ ؕவெவ்வேறானوَ مَاۤமேலும் இல்லைاُغْنِیْஎன்னால் தடுத்துவிட முடியும்عَنْكُمْஉங்களுக்குمِّنَஇருந்துاللّٰهِஅல்லாஹ்مِنْஎந்தشَیْءٍ ؕஒரு பொருளையும்اِنِஇல்லைالْحُكْمُஅதிகாரம்اِلَّاதவிரلِلّٰهِ ؕஅல்லாஹ்வுக்கேعَلَیْهِஅவன் மீதேتَوَكَّلْتُ ۚநான் நம்பிக்கை வைத்துள்ளேன்وَ عَلَیْهِமேலும் அவன் மீதேفَلْیَتَوَكَّلِநம்பிக்கை வைக்கட்டும்الْمُتَوَكِّلُوْنَநம்பிக்கை வைப்பவர்கள்
வ கால யா Bபனிய்ய லா தத்குலூ மிம் BபாBபி(ன்)வ் வா ஹிதி(ன்)வ் வத்குலூ மின் அBப்வாBபிம் முதFபர்ரிகஹ்; வ மா உக்னீ 'அன்கும் மினல் லாஹி மின் ஷய்'இன்; இனில் ஹுக்மு இல்லா லில்லாஹி 'அலய்ஹி தவக்கல்து வ 'அலய்ஹி Fபல் யதவக்கலில் முதவக்கிலூன்
(பின்னும்) அவர், “என் (அருமை) மக்களே! நீங்கள் (மிஸ்ருக்குள்) ஒரே வாசல் வழியாக நுழையாதீர்கள்; வெவ்வேறு வாசல்களின் வழியாக நுழையுங்கள்; அல்லாஹ்வின் விதிகளில் யாதொன்றையும் நான் உங்களை விட்டுத்தடுத்து விட முடியாது; (ஏனென்றால்) அதிகாரமெல்லாம் அல்லாஹ்வுக்கேயன்றி (வேறு எவருக்கும்) இல்லை; அவன் மீதே நான் முழுமையாக நம்பிக்கை கொண்டுள்ளேன். எனவே, முழுமையாக நம்பிக்கை வைப்பவர்கள் அவன் மீதே முழு நம்பிக்கைவைப்பார்களாக!” என்று கூறினார்.
وَلَمَّا دَخَلُوْا مِنْ حَیْثُ اَمَرَهُمْ اَبُوْهُمْ ؕ مَا كَانَ یُغْنِیْ عَنْهُمْ مِّنَ اللّٰهِ مِنْ شَیْءٍ اِلَّا حَاجَةً فِیْ نَفْسِ یَعْقُوْبَ قَضٰىهَا ؕ وَاِنَّهٗ لَذُوْ عِلْمٍ لِّمَا عَلَّمْنٰهُ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یَعْلَمُوْنَ ۟۠
وَ لَمَّاமேலும் எப்போதுدَخَلُوْاஅவர்கள் நுழைந்தார்களோمِنْஇருந்துحَیْثُஎவ்விடத்திலிருந்துاَمَرَهُمْஅவர்களுக்குக் கட்டளையிட்டாரோاَبُوْهُمْ ؕஅவர்களின் தந்தைمَاஇல்லைكَانَஇருந்ததுیُغْنِیْபயனளிக்கக் கூடியதாகعَنْهُمْஅவர்களுக்குمِّنَஇருந்துاللّٰهِஅல்லாஹ்مِنْஎவ்விதشَیْءٍபொருளையும்اِلَّاதவிரحَاجَةًஒரு தேவையைفِیْஇல்نَفْسِஉள்ளத்தில்یَعْقُوْبَயஃகூபுடையقَضٰىهَا ؕஅதை அவர் நிறைவேற்றிக் கொண்டார்وَ اِنَّهٗமேலும் நிச்சயமாக அவர்لَذُوْஉடையவர்عِلْمٍஞானத்தைلِّمَاஎதனால் எனில்عَلَّمْنٰهُநாம் அவருக்குக் கற்றுக் கொடுத்தோம்وَ لٰكِنَّஆனால்اَكْثَرَபெரும்பாலானالنَّاسِமனிதர்கள்لَاஇல்லைیَعْلَمُوْنَ۠அவர்கள் அறிகிறார்கள்
வ லம்மா தகலூ மின் ஹய்து அமரஹும் அBபூஹும் மா கான யுக்னீ 'அன்ஹும் மினல் லாஹி மின் ஷய்'இன் இல்லா ஹாஜதன் Fபீ னFப்ஸி யஃகூBப களாஹா; வ இன்னஹூ லதூ 'இல்மில் லிமா 'அல்லம்னாஹு வ லாகின்ன அக்தரன் னாஸி லா யஃலமூன்
(மிஸ்ரு சென்ற) அவர்கள் தம் தந்தை தங்களுக்குக் கட்டளையிட்ட படி நுழைந்ததனால் யஃகூபுடைய மனதிலிருந்து ஒரு நாட்டத்தை அவர்கள் நிறைவேற்றி வைத்தார்களே தவிர, அல்லாஹ்விடமிருந்து (வரக்கூடிய) எதனையும் அது அவர்களை விட்டும் தடுக்கக்கூடியதாக இருக்கவில்லை; நாம்அவருக்கு அறிவித்துக் கொடுத்தவற்றில் நிச்சயமாக அவர் அறிவு(த் தேர்ச்சி) பெற்றவராக இருக்கின்றார்; எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் இதை அறியமாட்டார்கள்.
وَلَمَّا دَخَلُوْا عَلٰی یُوْسُفَ اٰوٰۤی اِلَیْهِ اَخَاهُ قَالَ اِنِّیْۤ اَنَا اَخُوْكَ فَلَا تَبْتَىِٕسْ بِمَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
وَ لَمَّاமேலும் எப்போதுدَخَلُوْاஅவர்கள் நுழைந்தார்களோعَلٰیஇடம்یُوْسُفَயூஸுஃப்اٰوٰۤیஅவர் அரவணைத்துக் கொண்டார்اِلَیْهِதன்னிடம்اَخَاهُதனது சகோதரரைقَالَஅவர் கூறினார்اِنِّیْۤநிச்சயமாக நான்اَنَاநான்اَخُوْكَஉனது சகோதரன்فَلَاஎனவே வேண்டாம்تَبْتَىِٕسْநீ கவலைப்படبِمَاஎதைக் குறித்துكَانُوْاஅவர்கள் இருந்தார்களோیَعْمَلُوْنَஅவர்கள் செய்து கொண்டிருந்தார்களோ
வ லம்மா தகலூ 'அலா யூஸுFப ஆவா இலய்ஹி அகாஹு கால இன்னீ அன அகூக Fபலா தBப்த'இஸ் Bபிமா கானூ யஃமலூன்
(பின்னர்) அவர்கள் யாவரும் யூஸுஃபின் பால் பிரவேசித்த போது அவர் தம் சகோதர(ன் புன்யாமீ)னைத் தம்முடன் அமரச் செய்து “நிச்சயமாக நாம் உம்முடைய சகோதரன் (யுஸுஃப்); அவர்கள் (நமக்குச்) செய்தவை பற்றி(யெல்லாம்) விசாரப்படாதீர்” என்று (இரகசியமாகக்) கூறினார்.
فَلَمَّا جَهَّزَهُمْ بِجَهَازِهِمْ جَعَلَ السِّقَایَةَ فِیْ رَحْلِ اَخِیْهِ ثُمَّ اَذَّنَ مُؤَذِّنٌ اَیَّتُهَا الْعِیْرُ اِنَّكُمْ لَسٰرِقُوْنَ ۟
فَلَمَّاபின்னர்جَهَّزَهُمْஅவர்களுக்கு அவர் தயார் செய்தபோதுبِجَهَازِهِمْஅவர்களின் பொருட்களுடன்جَعَلَஅவர் வைத்தார்السِّقَایَةَகுடிநீர்ப் பாத்திரத்தைفِیْஉள்ளேرَحْلِபொதியில்اَخِیْهِதனது சகோதரனுடையثُمَّபிறகுاَذَّنَஅறிவித்தார்مُؤَذِّنٌஓர் அறிவிப்பாளர்اَیَّتُهَاالْعِیْرُவணிகக் குழுவினரேاِنَّكُمْநிச்சயமாக நீங்கள்لَسٰرِقُوْنَநிச்சயமாகத் திருடர்கள்
Fபலம்மா ஜஹ்ஹZஜஹும் BபிஜஹாZஜிஹிம் ஜ'அலஸ் ஸிகாயத Fபீ ரஹ்லி அகீஹி தும்ம அத்தன மு'அத்தினுன் அய்யதுஹல்'ஈரு இன்னகும் லஸாரிகூன்
பின்னர், அவர்களுடைய பொருள்களைச் சித்தம் செய்து கொடுத்த போது, தம் சகோதரர் (புன்யாமீன்) உடைய சுமையில் (பானங்கள் பருகுவதற்கான ஒரு பொற்)குவளையை (எவரும் அறியாது) வைத்து விட்டார்; (அவர்கள் புறப்பட்டுச் செல்லலானதும் அரசாங்க) அறிவிப்பாளர் ஒருவர், “ஓ! ஒட்டகக் கூட்டத்தார்களே! நிச்சயமாக நீங்கள் திருடர்களே!” என்று கூறினார்.
قَالُوْا وَاَقْبَلُوْا عَلَیْهِمْ مَّاذَا تَفْقِدُوْنَ ۟
قَالُوْاஅவர்கள் கூறினார்கள்وَ اَقْبَلُوْاஅவர்கள் திரும்பிعَلَیْهِمْஅவர்களை நோக்கிمَّا ذَاஎதைتَفْقِدُوْنَநீங்கள் இழந்துவிட்டீர்கள்
காலூ வ அக்Bபலூ 'அலய்ஹிம் மாதா தFப்கிதூன்
(அதற்கு) அவர்கள் இவர்களை முன்னோக்கி வந்து, “நீங்கள் எதனை இழந்து விட்டீர்கள்” எனக் கேட்டார்கள்.
قَالُوْا نَفْقِدُ صُوَاعَ الْمَلِكِ وَلِمَنْ جَآءَ بِهٖ حِمْلُ بَعِیْرٍ وَّاَنَا بِهٖ زَعِیْمٌ ۟
قَالُوْاஅவர்கள் கூறினார்கள்نَفْقِدُநாங்கள் காணவில்லைصُوَاعَஅளவை முகவையைالْمَلِكِஅரசருடையوَ لِمَنْமேலும் எவர்جَآءَகொண்டு வருகிறாரோبِهٖஅதைحِمْلُஒரு சுமைبَعِیْرٍஒட்டகத்தின்وَّ اَنَاமேலும் நான்بِهٖஅதற்குزَعِیْمٌபொறுப்பாளி
காலூ னFப்கிது ஸுவா'அல் மலிகி வ லிமன் ஜா'அ Bபிஹீ ஹிம்லு Bப'ஈரி(ன்)வ் வ அன Bபிஹீ Zஜ'ஈம்
“நாங்கள் அரசருடைய (அளவு) மரக்காலை இழந்து விட்டோம்; அதனை எவர்கொண்டு வந்தாலும், அவருக்கு ஓர் ஒட்டகச் சுமை (தானியம் சன்மானமாக) உண்டு; இதற்கு நானே பொறுப்பாளி” என்று கூறினார்கள்.
قَالُوْا تَاللّٰهِ لَقَدْ عَلِمْتُمْ مَّا جِئْنَا لِنُفْسِدَ فِی الْاَرْضِ وَمَا كُنَّا سٰرِقِیْنَ ۟
قَالُوْاஅவர்கள் கூறினார்கள்تَاللّٰهِஅல்லாஹ்வின் மீது சத்தியமாகلَقَدْநிச்சயமாகعَلِمْتُمْநீங்கள் அறிவீர்கள்مَّاஇல்லைجِئْنَاநாங்கள் வந்தோம்لِنُفْسِدَகுழப்பம் செய்யفِیஇல்الْاَرْضِபூமிوَ مَاமேலும் இல்லைكُنَّاநாங்கள் இருந்தோம்سٰرِقِیْنَதிருடர்களாக
காலூ தல்லாஹி லகத் 'அலிம்தும் மா ஜி'ன லினுFப்ஸித Fபில் அர்ளி வமா குன்னா ஸாரிகீன்
(அதற்கு) அவர்கள், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக, நாங்கள் நாட்டிலே குழப்பம் உண்டாக்க வரவில்லை என்பதை நீங்கள் நிச்சயமாக அறிவீர்கள்; நாங்கள் திருடர்களுமல்லர்” என்றார்கள்.
قَالُوْا فَمَا جَزَآؤُهٗۤ اِنْ كُنْتُمْ كٰذِبِیْنَ ۟
قَالُوْاஅவர்கள் கூறினார்கள்فَمَاஅப்படியானால் என்னجَزَآؤُهٗۤஅதற்கான தண்டனைاِنْஎன்றால்كُنْتُمْநீங்கள் இருந்தால்كٰذِبِیْنَபொய்யர்களாக
காலூ Fபமா ஜZஜா'உ ஹூ இன் குன்தும் காதிBபீன்
(அதற்கு) அவர்கள், “நீங்கள் பொய்யர்களாக இருந்தால், அதற்குரிய தண்டனை என்ன?” என்று கேட்டார்கள்.
قَالُوْا جَزَآؤُهٗ مَنْ وُّجِدَ فِیْ رَحْلِهٖ فَهُوَ جَزَآؤُهٗ ؕ كَذٰلِكَ نَجْزِی الظّٰلِمِیْنَ ۟
قَالُوْاஅவர்கள் கூறினார்கள்جَزَآؤُهٗஅதன் தண்டனைمَنْஎவர்وُّجِدَகாணப்படுகிறதோفِیْஇல்رَحْلِهٖஅவருடைய பொதிفَهُوَஅவரேجَزَآؤُهٗ ؕஅதன் தண்டனைكَذٰلِكَஇவ்வாறேنَجْزِیநாம் தண்டிப்போம்الظّٰلِمِیْنَஅநியாயக்காரர்களை
காலூ ஜZஜா'உஹூ ம(ன்)வ் வுஜித Fபீ ரஹ்லிஹீ Fபஹுவ ஜZஜா'உஹ்; கதாலிக னஜ்Zஜிள் ளாலிமீன்
அதற்குரிய தண்டனையாவது, “எவருடைய சுமையில் அது காணப்படுகிறதோ (அவரை பிடித்து வைத்துக் கொள்வதே) அதற்குத் தண்டனை; அநியாயம் செய்வோரை இவ்வாறே நாங்கள் தண்டிக்கிறோம்” என்று (அந்த சகோதரர்கள்) கூறினார்கள்.
فَبَدَاَ بِاَوْعِیَتِهِمْ قَبْلَ وِعَآءِ اَخِیْهِ ثُمَّ اسْتَخْرَجَهَا مِنْ وِّعَآءِ اَخِیْهِ ؕ كَذٰلِكَ كِدْنَا لِیُوْسُفَ ؕ مَا كَانَ لِیَاْخُذَ اَخَاهُ فِیْ دِیْنِ الْمَلِكِ اِلَّاۤ اَنْ یَّشَآءَ اللّٰهُ ؕ نَرْفَعُ دَرَجٰتٍ مَّنْ نَّشَآءُ ؕ وَفَوْقَ كُلِّ ذِیْ عِلْمٍ عَلِیْمٌ ۟
فَبَدَاَஎனவே அவர் தொடங்கினார்بِاَوْعِیَتِهِمْஅவர்களின் பைகளைقَبْلَமுன்னதாகوِعَآءِபைக்குاَخِیْهِதன் சகோதரருடையثُمَّபின்னர்اسْتَخْرَجَهَاஅதை அவர் வெளியே எடுத்தார்مِنْஇருந்துوِّعَآءِபையின்اَخِیْهِ ؕதன் சகோதரருடையكَذٰلِكَஇவ்வாறாகவேكِدْنَاநாம் திட்டம் வகுத்துக் கொடுத்தோம்لِیُوْسُفَ ؕயூஸுஃபுக்காகمَاஇல்லைكَانَஇருக்கவில்லைلِیَاْخُذَஅவர் பிடித்து வைத்துக் கொள்ளاَخَاهُதன் சகோதரரைفِیْஇல்دِیْنِசட்டத்தின்الْمَلِكِஅரசனுடையاِلَّاۤதவிரاَنْஎனیَّشَآءَநாடினால்اللّٰهُ ؕஅல்லாஹ்نَرْفَعُநாம் உயர்த்துகிறோம்دَرَجٰتٍஅந்தஸ்துகளில்مَّنْஎவரைنَّشَآءُ ؕநாம் நாடுகிறோமோوَ فَوْقَமேலும் மேலாகكُلِّஒவ்வொருذِیْஉடையعِلْمٍஅறிவுعَلِیْمٌநன்கு அறிந்தவன்
FபBபத-அ Bபி-அவ்'இயதிஹிம் கBப்ல வி'ஆ'இ அகீஹி தும்மஸ் தக்ரஜஹா மி(ன்)வ் வி 'ஆ'இ அகீஹ்; கதாலிக கித்னா லி யூஸுFப்; மா கான லியாகுத அகாஹு Fபீ தீனில் மலிகி இல்லா அ(ன்)ய் யஷா'அல் லாஹ்; னர்Fப'உ தரஜாதிம் மன் னஷா'; வ Fபவ்க குல்லி தீ 'இல்மின் 'அலீம்
ஆகவே அவர் தம் சகோதர(ன் புன்யாமீ)னின் பொதி(யைச் சோதி)க்கு முன்னே, அவர்களுடைய பொதிகளை (சோதிக்க) ஆரம்பித்தார்; பின்பு அதனை தம் (சொந்த) சகோதரனின் பொதியிலிருந்து வெளிப்படுத்தினார்; இவ்வாறாக யூஸுஃபுக்காக நாம் ஓர் உபாயம் செய்து கொடுத்தோம்; அல்லாஹ் நாடினாலன்றி, அவர் தம் சகோதரனை எடுத்துக் கொள்ள அரசரின் சட்டப்படி இயலாதிருந்தார் - நாம் நாடியவர்களின் பதவிகளை நாம் உயர்த்துகின்றோம்; கல்வி அறிவுடைய ஒவ்வொருவருக்கும் மேலான அறிந்த ஒருவன் இருக்கவே செய்கிறான்!
قَالُوْۤا اِنْ یَّسْرِقْ فَقَدْ سَرَقَ اَخٌ لَّهٗ مِنْ قَبْلُ ۚ فَاَسَرَّهَا یُوْسُفُ فِیْ نَفْسِهٖ وَلَمْ یُبْدِهَا لَهُمْ ۚ قَالَ اَنْتُمْ شَرٌّ مَّكَانًا ۚ وَاللّٰهُ اَعْلَمُ بِمَا تَصِفُوْنَ ۟
قَالُوْۤاஅவர்கள் கூறினார்கள்اِنْஒருவேளைیَّسْرِقْஅவன் திருடினால்فَقَدْநிச்சயமாகسَرَقَதிருடினான்اَخٌஒரு சகோதரன்لَّهٗஅவனுக்குمِنْஇருந்துقَبْلُ ۚமுன்னர்فَاَسَرَّهَاஎனவே அதை மறைத்துக்கொண்டார்یُوْسُفُயூஸுஃப்فِیْஇல்نَفْسِهٖதனது மனதிற்குள்وَ لَمْமேலும் அவர்یُبْدِهَاஅதை வெளிப்படுத்தவில்லைلَهُمْ ۚஅவர்களுக்குقَالَஅவர் கூறினார்اَنْتُمْநீங்கள்شَرٌّமிக மோசமானவர்கள்مَّكَانًا ۚநிலையில்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்اَعْلَمُநன்கறிந்தவன்بِمَاஎதைப்பற்றிتَصِفُوْنَநீங்கள் வர்ணிக்கிறீர்களோ
காலூ இ(ன்)ய் யஸ்ரிக் Fபகத் ஸரக அகுல் லஹூ மின் கBப்ல்; Fப அஸர்ரஹா யூஸுFபு Fபீ னFப்ஸிஹீ வ லம் யுBப்திஹா லஹும்; கால அன்தும் ஷர்ரும் மகான(ன்)வ் வல்லாஹு அஃலமு Bபிமா தஸிFபூன்
(அப்போது) அவர்கள், “இவன் (அதைத்) திருடியிருந்தால் இவனுடைய சகோதரன் (யூஸுஃபும்) முன்னால் நிச்சயமாக திருடியிருக்கிறான்” என்று (தங்களுக்குள்) கூறிக்கொண்டார்கள்; (இச்செய்திகளைச் செவியேற்றும்) அவர்களிடம் வெளியிடாது யூஸுஃப் தம் மனதுக்குள் மறைத்து வைத்துக் கொண்டார்; அவர் “நீங்கள் தரத்தில் இன்னும் தீயவர்கள்; (இவர் சகோதரரும் திருடியிருப்பார் என்று) நீங்கள் வர்ணிக்கிறீர்களே அதை அல்லாஹ் நன்றாக அறிவான்” என்று (தமக்குள்ளே) சொல்லிக் கொண்டார்.  
قَالُوْا یٰۤاَیُّهَا الْعَزِیْزُ اِنَّ لَهٗۤ اَبًا شَیْخًا كَبِیْرًا فَخُذْ اَحَدَنَا مَكَانَهٗ ۚ اِنَّا نَرٰىكَ مِنَ الْمُحْسِنِیْنَ ۟
قَالُوْاஅவர்கள் கூறினார்கள்یٰۤاَیُّهَاالْعَزِیْزُஅதிபதியேاِنَّநிச்சயமாகلَهٗۤஅவருக்குاَبًاதந்தைشَیْخًاமுதியكَبِیْرًاவயோதிகர்فَخُذْஎனவே எடுத்துக் கொள்வீராகاَحَدَنَاஎங்களில் ஒருவரைمَكَانَهٗ ۚஅவரது இடத்தில்اِنَّاநிச்சயமாக நாங்கள்نَرٰىكَஉம்மைக் காண்கிறோம்مِنَஒருவராகالْمُحْسِنِیْنَநன்மை செய்பவர்களில்
காலூ யா அய்யுஹல் 'அZஜீZஜு இன்ன லஹூ அBபன் ஷய்கன் கBபீரன் Fபகுத் அஹதனா மகானஹூ இன்னா னராக மினல் முஹ்ஸினீன்
அவர்கள் (யூஸுஃபை நோக்கி), (இந்நாட்டின் அதிபதி) அஜீஸே! நிச்சயமாக இவருக்கு முதிர்ச்சியடைந்துள்ள வயோதிகத் தந்தை இருக்கிறார். எனவே அவருடைய இடத்தில் எங்களில் ஒருவரை நீர் எடுத்துக் கொள்ளும்; நிச்சயமாக நாங்கள் உம்மைப் பரோபகாரம் செய்வேரில் ஒருவராகவே காண்கிறோம்” என்று கூறினார்கள்.
قَالَ مَعَاذَ اللّٰهِ اَنْ نَّاْخُذَ اِلَّا مَنْ وَّجَدْنَا مَتَاعَنَا عِنْدَهٗۤ ۙ اِنَّاۤ اِذًا لَّظٰلِمُوْنَ ۟۠
قَالَஅவர் கூறினார்مَعَاذَபாதுகாப்புاللّٰهِஅல்லாஹ்விடம்اَنْஎன்றுنَّاْخُذَநாங்கள் பிடிப்பதைاِلَّاதவிரمَنْஎவரைوَّجَدْنَاநாங்கள் கண்டோமோمَتَاعَنَاஎங்களது பொருளைعِنْدَهٗۤ ۙஅவனிடத்தில்اِنَّاۤநிச்சயமாக நாங்கள்اِذًاஅப்படியானால்لَّظٰلِمُوْنَ۠அநியாயக்காரர்கள்
கால ம'ஆதல் லாஹி அன் னாகுத இல்லா ம(ன்)வ் வஜத்னா மதா'அனா 'இன்தஹூ இன்னா இதல் லளாலிமூன்
அதற்கவர், “எங்கள் பொருளை எவரிடம் நாங்கள் கண்டோமோ, அவரையன்றி (வேறு ஒருவரை) நாம் எடுத்துக் கொள்வதிலிருந்து அல்லாஹ் காப்பாற்றுவானாக! (அப்படிச் செய்தால்) நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்களாகி விடுவோம்” என்று கூறினார்கள்.
فَلَمَّا اسْتَیْـَٔسُوْا مِنْهُ خَلَصُوْا نَجِیًّا ؕ قَالَ كَبِیْرُهُمْ اَلَمْ تَعْلَمُوْۤا اَنَّ اَبَاكُمْ قَدْ اَخَذَ عَلَیْكُمْ مَّوْثِقًا مِّنَ اللّٰهِ وَمِنْ قَبْلُ مَا فَرَّطْتُّمْ فِیْ یُوْسُفَ ۚ فَلَنْ اَبْرَحَ الْاَرْضَ حَتّٰی یَاْذَنَ لِیْۤ اَبِیْۤ اَوْ یَحْكُمَ اللّٰهُ لِیْ ۚ وَهُوَ خَیْرُ الْحٰكِمِیْنَ ۟
فَلَمَّاஎனவே எப்போதுاسْتَیْـَٔسُوْاஅவர்கள் நம்பிக்கையிழந்தார்களோمِنْهُஅவரிடமிருந்துخَلَصُوْاஅவர்கள் தனித்துச் சென்றார்கள்نَجِیًّا ؕஇரகசியமாக ஆலோசிக்கقَالَகூறினார்كَبِیْرُهُمْஅவர்களில் பெரியவர்اَلَمْஇல்லையாتَعْلَمُوْۤاநீங்கள் அறிந்திருக்கاَنَّநிச்சயமாகاَبَاكُمْஉங்கள் தந்தைقَدْதிண்ணமாகاَخَذَவாங்கியிருக்கிறார்عَلَیْكُمْஉங்களிடம்مَّوْثِقًاஒரு வாக்குறுதியைمِّنَமீதுاللّٰهِஅல்லாஹ்வின்وَ مِنْமேலும் இதற்குقَبْلُமுன்னதாகمَاஎதைفَرَّطْتُّمْநீங்கள் தவறிழைத்தீர்களோفِیْவிஷயத்தில்یُوْسُفَ ۚயூஸுப்فَلَنْஎனவே ஒருபோதும் மாட்டேன்اَبْرَحَநான் நகரالْاَرْضَஇந்த நிலத்தை விட்டுحَتّٰیவரைیَاْذَنَஅனுமதிக்கும்لِیْۤஎனக்குاَبِیْۤஎன் தந்தைاَوْஅல்லதுیَحْكُمَதீர்ப்பளிக்கும்اللّٰهُஅல்லாஹ்لِیْ ۚஎனக்காகوَ هُوَமேலும் அவன்خَیْرُமிகச் சிறந்தவன்الْحٰكِمِیْنَதீர்ப்பளிப்பவர்களில்
Fபலம்மஸ் தய்'அஸூ மின்ஹு கலஸூ னஜிய்யன் கால கBபீருஹும் அலம் தஃலமூன் அன்ன அBபாகும் கத் அகத 'அலய்கும் மவ்திகம் மினல் லாஹி வ மின் கBப்லு மா Fபர்ரத்தும் Fபீ யூஸுFப Fபலன் அBப்ரஹல் அர்ள ஹத்தா யாதன லீ அBபீ அவ் யஹ்குமல் லாஹு லீ வ ஹுவ கய்ருல் ஹாகிமீன்
எனவே அவரிடம் அவர்கள் நம்பிக்கை இழந்து விடவே, அவர்கள் (தமக்குள்) தனித்து ஆலோசனை செய்தார்கள். அவர்களுக்குள் பெரியவர் சொன்னார்: நிச்சயமாக உங்களுடைய தந்தை உங்களிடமிருந்து அல்லாஹ்வின் மீது (ஆணையிட்டு) வாக்குறுதி வாங்கியிருக்கிறார் என்பதையும் முன்னர் யூஸுஃப் சம்பந்தமாக நீங்கள் பெருங்குறை செய்து விட்டீர்கள் என்பதையும் நீங்கள் அறியவில்லையா? ஆகவே, என் தந்தை எனக்கு அனுமதி அளிக்கும் வரை, அல்லது அல்லாஹ் எனக்கு (இது பற்றி) ஏதாவது தீர்ப்புச் செய்யும் வரை நான் இந்த பூமியை விட்டு ஒரு போதும் அகலவே மாட்டேன்; தீர்ப்பளிப்போரில் அவன் தான் மிகவும் மேலானவன்.
اِرْجِعُوْۤا اِلٰۤی اَبِیْكُمْ فَقُوْلُوْا یٰۤاَبَانَاۤ اِنَّ ابْنَكَ سَرَقَ ۚ وَمَا شَهِدْنَاۤ اِلَّا بِمَا عَلِمْنَا وَمَا كُنَّا لِلْغَیْبِ حٰفِظِیْنَ ۟
اِرْجِعُوْۤاதிரும்பிச் செல்லுங்கள்اِلٰۤیநோக்கிاَبِیْكُمْஉங்கள் தந்தையிடம்فَقُوْلُوْاஎனவே கூறுங்கள்یٰۤاَبَانَاۤஎங்கள் தந்தையேاِنَّநிச்சயமாகابْنَكَஉமது மகன்سَرَقَ ۚதிருடிவிட்டான்وَ مَاமேலும் இல்லைشَهِدْنَاۤநாங்கள் சாட்சி கூறினோம்اِلَّاதவிரبِمَاஎதைعَلِمْنَاநாங்கள் அறிந்தோமோوَ مَاமேலும் இல்லைكُنَّاநாங்கள் இருந்தோம்لِلْغَیْبِமறைவானவற்றிற்குحٰفِظِیْنَபாதுகாப்பவர்களாக
இர்ஜி'ஊ இலா அBபீகும் Fபகூலூ யா அBபானா இன்னBப் னக ஸரக்; வமா ஷஹித்னா இல்லா Bபிமா 'அலிம்னா வமா குன்னா லில்கய்Bபி ஹாFபிளீன்
ஆகவே, “நீங்கள் உங்கள் தந்தையாரிடம் திரும்பிச் சென்று, “எங்களுடைய தந்தையே! உங்கள் மகன் நிச்சயமாக திருடியிருக்கிறான்; நாங்கள் உறுதியாக அறிந்ததைத் தவிர (வேறெதையும்) கூறவில்லை; மேலும், நாங்கள் மறைவானவற்றின் காவலர்களாகவும் இருக்கவில்லை என்று கூறுங்கள்;
وَسْـَٔلِ الْقَرْیَةَ الَّتِیْ كُنَّا فِیْهَا وَالْعِیْرَ الَّتِیْۤ اَقْبَلْنَا فِیْهَا ؕ وَاِنَّا لَصٰدِقُوْنَ ۟
وَ سْـَٔلِமேலும் கேளுங்கள்الْقَرْیَةَஅந்த ஊரிடம்الَّتِیْஎதில்كُنَّاநாங்கள் இருந்தோமோفِیْهَاஅதில்وَ الْعِیْرَமேலும் அந்த ஒட்டகக் கூட்டத்திடமும்الَّتِیْۤஎதில்اَقْبَلْنَاநாங்கள் வந்தோமோفِیْهَا ؕஅதில்وَ اِنَّاமேலும் நிச்சயமாக நாங்கள்لَصٰدِقُوْنَஉண்மையாளர்களே
வஸ்'அலில் கர்யதல் லதீ குன்னா Fபீஹா வல்'ஈரல் லதீ அக்Bபல்னா Fபீஹா வ இன்னா லஸாதிகூன்
“நாங்கள் தங்கியிருந்த ஊர் வாசிகளையும், நாங்கள் முன்னோக்கி(ச் சேர்ந்து) வந்த ஒட்டகக் கூட்டத்தினரையும் நீங்கள் கேட்டுக் கொள்ளுங்கள் - நிச்சயமாக நாங்கள் உண்மையே சொல்லுகின்றோம்“ (என்றும் சொல்லுங்கள்” என்று கூறித் தந்தையாரிடம் அனுப்பி வைத்தார்).
قَالَ بَلْ سَوَّلَتْ لَكُمْ اَنْفُسُكُمْ اَمْرًا ؕ فَصَبْرٌ جَمِیْلٌ ؕ عَسَی اللّٰهُ اَنْ یَّاْتِیَنِیْ بِهِمْ جَمِیْعًا ؕ اِنَّهٗ هُوَ الْعَلِیْمُ الْحَكِیْمُ ۟
قَالَஅவர் கூறினார்بَلْமாறாகسَوَّلَتْஅழகாகக் காட்டிவிட்டதுلَكُمْஉங்களுக்குاَنْفُسُكُمْஉங்கள் மனங்கள்اَمْرًا ؕஒரு காரியத்தைفَصَبْرٌஎனவே பொறுமைجَمِیْلٌ ؕஅழகியதேعَسَیகூடும்اللّٰهُஅல்லாஹ்اَنْஎன்றுیَّاْتِیَنِیْஎன்னிடம் கொண்டு வரبِهِمْஅவர்களைجَمِیْعًا ؕஅனைவரையும்اِنَّهٗநிச்சயமாக அவன்هُوَஅவனேالْعَلِیْمُமுற்றறிந்தவன்الْحَكِیْمُஞானமிக்கவன்
கால Bபல் ஸவ்வலத் லகும் அன்Fபுஸுகும் அம்ரன் FபஸBப்ருன் ஜமீலுன் 'அஸல் லாஹு அ(ன்)ய் யா தியனீ Bபிஹிம் ஜமீ'ஆ; இன்னஹூ ஹுவல் 'அலீமுல் ஹகீம்
(ஊர் திரும்பியவர்கள் தம் தந்தையிடம் அவ்வாறே சொல்லவும்) “இல்லை! உங்களுடைய மனங்கள் (இவ்வாறே ஒரு தவறான) விஷயத்தைச் செய்யும்படித் தூண்டி விட்டிருக்கின்றன; ஆயினும், அழகான பொறுமையே (எனக்கு உகந்ததாகும்); அல்லாஹ் அவர்களனைவரையும் என்னிடம் கொண்டுவந்து சேர்க்கப் போதுமானவன்; நிச்சயமாக அவன் மிகவும் அறிந்தவனாகவும், மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்” என்று கூறினார்.
وَتَوَلّٰی عَنْهُمْ وَقَالَ یٰۤاَسَفٰی عَلٰی یُوْسُفَ وَابْیَضَّتْ عَیْنٰهُ مِنَ الْحُزْنِ فَهُوَ كَظِیْمٌ ۟
وَ تَوَلّٰیமேலும் அவர் விலகிச் சென்றார்عَنْهُمْஅவர்களிடமிருந்துوَ قَالَமேலும் அவர் கூறினார்یٰۤاَسَفٰیஅந்தோ என் துக்கமேعَلٰیமீதுیُوْسُفَயூஸுஃபின்وَ ابْیَضَّتْமேலும் வெளுத்தனعَیْنٰهُஅவருடைய இரு கண்கள்مِنَஇருந்துالْحُزْنِகவலையினால்فَهُوَஎனவே அவர்كَظِیْمٌதுக்கத்தை அடக்கிக் கொண்டவர்
வ தவல்லா 'அன்ஹும் வ கால யா அஸFபா 'அலா யூஸுFப வBப்யள்ளத் 'அய்னாஹு மினல் ஹுZஜ்னி Fபஹுவ களீம்
பின்னர் அவர்களை விட்டுத் திரும்பி “யூஸுஃபைப் பற்றி (எனக்கு ஏற்பட்டுள்ள) துக்கமே!” என்று (வியாகூலப்பட்டுக்) கூறினார்; துக்கத்தால் (அழுது அழுது) அவருடைய இரண்டு கண்களும் வெளுத்து(ப் பஞ்சடைந்து) விட்டன - பிறகு அவர் (தம் துக்கத்தை) விழுங்கி அடக்கிக் கொண்டார்.
قَالُوْا تَاللّٰهِ تَفْتَؤُا تَذْكُرُ یُوْسُفَ حَتّٰی تَكُوْنَ حَرَضًا اَوْ تَكُوْنَ مِنَ الْهٰلِكِیْنَ ۟
قَالُوْاஅவர்கள் கூறினார்கள்تَاللّٰهِஅல்லாஹ்வின் மீது சத்தியமாகتَفْتَؤُاநீங்கள் ஓயமாட்டீர்கள்تَذْكُرُநினைப்பதைیُوْسُفَயூஸுஃபைحَتّٰیவரைتَكُوْنَநீங்கள் ஆகும்حَرَضًاஉருக்குலைந்தவராகاَوْஅல்லதுتَكُوْنَநீங்கள் ஆகும்مِنَஇருந்துالْهٰلِكِیْنَஅழிந்தவர்களில்
காலூ தல்லாஹி தFப்த'உ தத்குரு யூஸுFப ஹத்தா தகூன ஹரளன் அவ் தகூன மினல் ஹாலிகீன்
(இதைக் கண்ணுற்ற அவருடைய மக்கள்; தந்தையே!) “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் யூஸுஃபை நினைத்து (நினைத்து அழுது, நோயுற்று,) இளைத்து மடிந்து போகும் வரை (அவர் எண்ணத்தை விட்டும்) நீங்க மாட்டீர்கள்” என்று கூறினார்கள்.
قَالَ اِنَّمَاۤ اَشْكُوْا بَثِّیْ وَحُزْنِیْۤ اِلَی اللّٰهِ وَاَعْلَمُ مِنَ اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ ۟
قَالَஅவர் கூறினார்اِنَّمَاۤநிச்சயமாகاَشْكُوْاநான் முறையிடுகிறேன்بَثِّیْஎனது துயரத்தைوَ حُزْنِیْۤமற்றும் எனது கவலையைاِلَیபால்اللّٰهِஅல்லாஹ்விடம்وَ اَعْلَمُமேலும் நான் அறிவேன்مِنَஇருந்துاللّٰهِஅல்லாஹ்விடம்مَاஎவற்றைلَاஇல்லைتَعْلَمُوْنَநீங்கள் அறிவீர்கள்
கால இன்னமா அஷ்கூ Bபத்தீ வ ஹுZஜ்னீ இலல் லாஹி வ அஃலமு மினல் லாஹி மா லா தஃலமூன்
அதற்கவர், “என்னுடைய சஞ்சலத்தையும் கவலையையும் அல்லாஹ்விடமே முறையிடுகின்றேன்; அல்லாஹ்விடமிருந்து, நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன் (என்றும்);
یٰبَنِیَّ اذْهَبُوْا فَتَحَسَّسُوْا مِنْ یُّوْسُفَ وَاَخِیْهِ وَلَا تَایْـَٔسُوْا مِنْ رَّوْحِ اللّٰهِ ؕ اِنَّهٗ لَا یَایْـَٔسُ مِنْ رَّوْحِ اللّٰهِ اِلَّا الْقَوْمُ الْكٰفِرُوْنَ ۟
یٰبَنِیَّஎன் மகன்களேاذْهَبُوْاசெல்லுங்கள்فَتَحَسَّسُوْاதேடிப் பாருங்கள்مِنْபற்றிیُّوْسُفَயூஸுஃபைப்وَ اَخِیْهِஅவருடைய சகோதரரையும்وَ لَاமேலும் வேண்டாம்تَایْـَٔسُوْاநம்பிக்கையிழக்கمِنْஇருந்துرَّوْحِஅருளில்اللّٰهِ ؕஅல்லாஹ்வின்اِنَّهٗநிச்சயமாகلَاஇல்லைیَایْـَٔسُநம்பிக்கையிழப்பார்கள்مِنْஇருந்துرَّوْحِஅருளில்اللّٰهِஅல்லாஹ்வின்اِلَّاதவிரالْقَوْمُகூட்டத்தினர்الْكٰفِرُوْنَநிராகரிப்பவர்கள்
யா Bபனிய்யத் ஹBபூ Fபதஹஸ்ஸஸூ மி(ன்)ய் யூஸுFப வ அகீஹி வலா தய்'அஸூ மிர் ரவ்ஹில் லாஹி இன்னஹூ லா யய்'அஸு மிர் ரவ்ஹில் லாஹி இல்லல் கவ்முல் காFபிரூன்
“என் மக்களே! (மீண்டும் மிஸ்ருக்கு) நீங்கள் செல்லுங்கள்! யூஸுஃபையும் அவருடைய சகோதரரையும் தேடி விசாரியுங்கள்; (நம்மைத் தேற்றும்) அல்லாஹ்வின் அருளைப் பற்றி நம்பிக்கை இழக்காதீர்கள். ஏனென்றால் நிச்சயமாக காஃபிர்களின் கூட்டத்தைத் தவிர (வேறுயாரும்) அல்லாஹ்வின் அருளைப்பற்றி நம்பிக்கை இழக்கமாட்டார்கள்” என்றும் கூறினார்.
فَلَمَّا دَخَلُوْا عَلَیْهِ قَالُوْا یٰۤاَیُّهَا الْعَزِیْزُ مَسَّنَا وَاَهْلَنَا الضُّرُّ وَجِئْنَا بِبِضَاعَةٍ مُّزْجٰىةٍ فَاَوْفِ لَنَا الْكَیْلَ وَتَصَدَّقْ عَلَیْنَا ؕ اِنَّ اللّٰهَ یَجْزِی الْمُتَصَدِّقِیْنَ ۟
فَلَمَّاபின்னர்دَخَلُوْاஅவர்கள் நுழைந்தபோதுعَلَیْهِஅவரிடம்قَالُوْاஅவர்கள் கூறினார்கள்یٰۤاَیُّهَاالْعَزِیْزُஅமைச்சரேمَسَّنَاஎங்களைத் தீண்டிவிட்டதுوَ اَهْلَنَاஎங்கள் குடும்பத்தையும்الضُّرُّதுன்பம்وَ جِئْنَاமேலும் நாங்கள் வந்துள்ளோம்بِبِضَاعَةٍபொருட்களுடன்مُّزْجٰىةٍஅற்பமானفَاَوْفِஎனவே நிறைவாகத் தாருங்கள்لَنَاஎங்களுக்குالْكَیْلَஅளவைوَ تَصَدَّقْமேலும் தர்மம் செய்யுங்கள்عَلَیْنَا ؕஎங்கள் மீதுاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்یَجْزِیநற்கூலி வழங்குவான்الْمُتَصَدِّقِیْنَதர்மம் செய்பவர்களுக்கு
Fபலம்மா தகலூ 'அலய்ஹி காலூ யா அய்யுஹல் 'அZஜீZஜு மஸ்ஸனா வ அஹ்லனள் ளுர்ரு வ ஜி'னா BபிBபிளா 'திம்முZஜ்ஜாதின் Fப அவ்Fபி லனல் கய்ல வ தஸத்தக் 'அலய்னா இன்னல் லாஹ யஜ்Zஜில் முதஸத்திகீன்
அவ்வாறே அவர்கள் (மிஸ்ரையடைந்து) யூஸுஃப் முன்னிலையில் வந்து அவரிடம்; “அஜீஸே! எங்களையும் எங்கள் குடும்பத்திலுள்ளவர்களையும் பெருந்துயர் பற்றிக்கொண்டது; நாங்கள் சொற்பமான பொருளையே கொண்டுவந்திருக்கின்றோம்; எங்களுக்கு நிரப்பமாகத் (தானியம்) அளந்து கொடுங்கள்; எங்களுக்கு (மேற்கொண்டு) தானமாகவும் கொடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் தானம் செய்பவர்களுக்கு நற்கூலி வழங்குகிறான்” என்று கூறினார்கள்.
قَالَ هَلْ عَلِمْتُمْ مَّا فَعَلْتُمْ بِیُوْسُفَ وَاَخِیْهِ اِذْ اَنْتُمْ جٰهِلُوْنَ ۟
قَالَஅவர் கூறினார்هَلْஎன்னعَلِمْتُمْநீங்கள் அறிந்தீர்கள்مَّاஎதைفَعَلْتُمْநீங்கள் செய்தீர்கள்بِیُوْسُفَயூஸுபுக்குوَ اَخِیْهِமற்றும் அவரது சகோதரருக்குاِذْபோதுاَنْتُمْநீங்கள்جٰهِلُوْنَஅறியாதவர்களாக
கால ஹல் 'அலிம்தும் மா Fப'அல்தும் Bபி யூஸுFப வ அகீஹி இத் அன்தும் ஜாஹிலூன்
(அதற்கு அவர்?) “நீங்கள் அறிவீனர்களாக இருந்த போது, யூஸுஃபுக்கும் அவர் சகோதரருக்கும் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா?” என்று வினவினார்.
قَالُوْۤا ءَاِنَّكَ لَاَنْتَ یُوْسُفُ ؕ قَالَ اَنَا یُوْسُفُ وَهٰذَاۤ اَخِیْ ؗ قَدْ مَنَّ اللّٰهُ عَلَیْنَا ؕ اِنَّهٗ مَنْ یَّتَّقِ وَیَصْبِرْ فَاِنَّ اللّٰهَ لَا یُضِیْعُ اَجْرَ الْمُحْسِنِیْنَ ۟
قَالُوْۤاஅவர்கள் கூறினார்கள்ءَاِنَّكَமெய்யாகவே நீங்களாلَاَنْتَநீங்கள்தான்یُوْسُفُ ؕயூஸுஃப்قَالَஅவர் கூறினார்اَنَاநான்தான்یُوْسُفُயூஸுஃப்وَ هٰذَاۤமேலும் இவர்اَخِیْ ؗஎன் சகோதரர்قَدْநிச்சயமாகمَنَّபேரருள் புரிந்தான்اللّٰهُஅல்லாஹ்عَلَیْنَا ؕஎங்கள் மீதுاِنَّهٗநிச்சயமாக அவன்مَنْஎவர்یَّتَّقِஇறையச்சம் கொள்கிறாரோوَ یَصْبِرْமேலும் பொறுமை காக்கிறாரோفَاِنَّஆகவே நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَاஇல்லைیُضِیْعُவீணாக்குவான்اَجْرَகூலியைالْمُحْسِنِیْنَநன்மை செய்வோரின்
காலூ 'அ இன்னக ல அன்த யூஸுFபு கால அன யூஸுFபு வ ஹாதா அகீ கத் மன்னல் லாஹு 'அலய்னா இன்னஹூ மய் யத்தகி வ யஸ்Bபிர் Fப இன்னல் லாஹ லா யுளீ'உ அஜ்ரல் முஹ்ஸினீன்
(அப்போது அவர்கள்) “நிச்சயமாக நீர் தாம் யூஸுஃபோ? என்று கேட்டார்கள்; (ஆம்!) நான் தாம் யூஸுஃபு (இதோ!) இவர் என்னுடைய சகோதரராவர்; நிச்சயமாக அல்லாஹ் எங்கள் மீது அருள் புரிந்திருக்கின்றான்; எவர் (அவனிடம் பயபக்தியுடன் இருக்கிறார்களோ, இன்னும் பொறுமையையும் மேற்கொண்டிருக்கிறாரோ (அத்தகைய) நன்மை செய்வோர் கூலியை நிச்சயமாக அல்லாஹ் வீணாக்கிவிடமாட்டான்” என்று கூறினார்.
قَالُوْا تَاللّٰهِ لَقَدْ اٰثَرَكَ اللّٰهُ عَلَیْنَا وَاِنْ كُنَّا لَخٰطِـِٕیْنَ ۟
قَالُوْاஅவர்கள் கூறினார்கள்تَاللّٰهِஅல்லாஹ்வின் மீது சத்தியமாகلَقَدْநிச்சயமாகاٰثَرَكَஉன்னை மேன்மையாக்கினான்اللّٰهُஅல்லாஹ்عَلَیْنَاஎங்களை விடوَ اِنْமேலும் நிச்சயமாகكُنَّاநாங்கள் இருந்தோம்لَخٰطِـِٕیْنَதவறு செய்தவர்களாக
காலூ தல்லாஹி லகத் ஆதரகல் லாஹு 'அலய்னா வ இன் குன்னா லகாதி'ஈன்
அதற்கவர்கள் “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாங்கள் உமக்குத் தவறு இழைத்தவர்களாக இருந்தும், நிச்சயமாக அல்லாஹ் எங்களை விட உம்மை மேன்மையுடையவராகத் தெரிவு செய்திருக்கின்றான்” என்று கூறினார்கள்.
قَالَ لَا تَثْرِیْبَ عَلَیْكُمُ الْیَوْمَ ؕ یَغْفِرُ اللّٰهُ لَكُمْ ؗ وَهُوَ اَرْحَمُ الرّٰحِمِیْنَ ۟
قَالَஅவர் கூறினார்لَاஇல்லைتَثْرِیْبَஎந்தப் பழியும்عَلَیْكُمُஉங்கள் மீதுالْیَوْمَ ؕஇன்றுیَغْفِرُமன்னிப்பான்اللّٰهُஅல்லாஹ்لَكُمْ ؗஉங்களைوَ هُوَமேலும் அவன்اَرْحَمُமிகக் கருணையாளன்الرّٰحِمِیْنَகருணையாளர்களில்
கால லா தத்ரீBப 'அலய்குமுல் யவ்ம யக்Fபிருல் லாஹு லகும் வ ஹுவ அர்ஹமுர் ராஹிமீன்
அதற்கவர், “இன்று உங்கள் மீது எவ்விதக் குற்றச்சாட்டும் இல்லை; அல்லாஹ் உங்களை மன்னித்தருள்வானாக! அவனே கிருபையாளர்களிலெல்லாம் மிக்க கிருபையாளனாக இருக்கின்றான்” என்று கூறினார்.
اِذْهَبُوْا بِقَمِیْصِیْ هٰذَا فَاَلْقُوْهُ عَلٰی وَجْهِ اَبِیْ یَاْتِ بَصِیْرًا ۚ وَاْتُوْنِیْ بِاَهْلِكُمْ اَجْمَعِیْنَ ۟۠
اِذْهَبُوْاசெல்லுங்கள்بِقَمِیْصِیْஎன்னுடைய சட்டையைهٰذَاஇந்தفَاَلْقُوْهُஅதனைப் போடுங்கள்عَلٰیமீதுوَجْهِமுகத்தின்اَبِیْஎன் தந்தையின்یَاْتِஅவர் ஆகிவிடுவார்بَصِیْرًا ۚபார்வையுடையவராகوَ اْتُوْنِیْமேலும் என்னிடம் அழைத்து வாருங்கள்بِاَهْلِكُمْஉங்கள் குடும்பத்தினர்اَجْمَعِیْنَ۠அனைவரையும்
இத்ஹBபூ Bபிகமீஸீ ஹாதா Fப அல்கூஹு 'அலா வஜ்ஹி அBபீ யாதி Bபஸீர(ன்)வ் வாதூனீ Bபி அஹ்லிகும் அஜ்ம'ஈன்
“என்னுடைய இந்தச் சட்டையை நீங்கள் எடுத்துக் கொண்டு சென்று, என் தந்தையாரின் முகத்தில் போடுங்கள்; அவருக்குக் கண்பார்வை வந்துவிடும்; இன்னும் உங்களுடைய குடும்பத்தார் அனைவரையும் என்னிடம் கொண்டு வாருங்கள்” (என்று கூறினார்).  
وَلَمَّا فَصَلَتِ الْعِیْرُ قَالَ اَبُوْهُمْ اِنِّیْ لَاَجِدُ رِیْحَ یُوْسُفَ لَوْلَاۤ اَنْ تُفَنِّدُوْنِ ۟
وَ لَمَّاமேலும் எப்போதுفَصَلَتِபுறப்பட்டதோالْعِیْرُஅந்தப் பயணக் கூட்டம்قَالَகூறினார்اَبُوْهُمْஅவர்களின் தந்தைاِنِّیْநிச்சயமாக நான்لَاَجِدُஉணர்கிறேன்رِیْحَவாசனையைیُوْسُفَயூஸுஃபுடையلَوْ لَاۤஇல்லையென்றால்اَنْஎன்றுتُفَنِّدُوْنِநீங்கள் என்னை மதியீனன் என்பீர்கள்
வ லம்மா Fபஸலதில் 'ஈரு கால அBபூஹும் இன்னீ ல அஜிது ரீஹ யூஸுFப லவ் லா அன் துFபன்னிதூன்
(அவர்களுடைய) ஒட்டக வாகனங்கள் (மிஸ்ரை விட்டுப்) பிரிந்த நேரத்தில், அவர்களுடைய தந்தை, “நிச்சயமாக நான் யூஸுஃபின் வாடையை நுகர்கிறேன்; (இதன் காரணமாக) என்னை நீங்கள் பைத்தியக்காரன் என்று எண்ணாமல் இருக்க வேண்டுமே!” என்றார்.
قَالُوْا تَاللّٰهِ اِنَّكَ لَفِیْ ضَلٰلِكَ الْقَدِیْمِ ۟
قَالُوْاஅவர்கள் கூறினார்கள்تَاللّٰهِஅல்லாஹ்வின் மீது சத்தியமாகاِنَّكَநிச்சயமாக நீர்لَفِیْநிச்சயமாகவே உள்ளீர்ضَلٰلِكَஉமது வழிகேட்டில்الْقَدِیْمِபழைய
காலூ தல்லாஹி இன்னக லFபீ ளலாலிகல் கதீம்
(அதற்கவர்கள்) “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் உங்களுடைய பழைய தவறிலேயே இருக்கின்றீர்கள்” என்று சொன்னார்கள்.
فَلَمَّاۤ اَنْ جَآءَ الْبَشِیْرُ اَلْقٰىهُ عَلٰی وَجْهِهٖ فَارْتَدَّ بَصِیْرًا ۚ قَالَ اَلَمْ اَقُلْ لَّكُمْ ۙۚ اِنِّیْۤ اَعْلَمُ مِنَ اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ ۟
فَلَمَّاۤபின்னர் எப்போதுاَنْஎன்றுجَآءَவந்தாரோالْبَشِیْرُநற்செய்தி கொண்டுவந்தவர்اَلْقٰىهُஅதை அவர் போட்டார்عَلٰیமீதுوَجْهِهٖஅவரது முகத்தின்فَارْتَدَّஉடனே அவர் மாறினார்بَصِیْرًا ۚபார்வை உடையவராகقَالَஅவர் கூறினார்اَلَمْஇல்லையாاَقُلْநான் கூறلَّكُمْ ۙۚஉங்களுக்குاِنِّیْۤநிச்சயமாக நான்اَعْلَمُஅறிவேன்مِنَபுறத்திலிருந்துاللّٰهِஅல்லாஹ்வின்مَاஎவற்றைلَاஇல்லைتَعْلَمُوْنَநீங்கள் அறிவீர்கள்
Fபலம்மா அன் ஜா'அல்Bபஷீரு அல்காஹு 'அலா வஜ்ஹிஹீ Fபர்தத்த Bபஸீரன் கால அலம் அகுல் லகும் இன்னீ அஃலமு மினல் லாஹி மா லா தஃலமூன்
பிறகு, நன்மாராயங் கூறுபவர் வந்து, (சட்டையை) அவர் முகத்தில் போட்டபோது அவர் மீண்டும் பார்வையுடையோரானார்; “நீங்கள் அறியாததையெல்லாம் அல்லாஹ்விடமிருந்து நிச்சயமாக நான் அறிவேன் என்று உங்களிடம் கூறவில்லையா?” என்று (அவர்களை நோக்கிக்) கூறினார்,
قَالُوْا یٰۤاَبَانَا اسْتَغْفِرْ لَنَا ذُنُوْبَنَاۤ اِنَّا كُنَّا خٰطِـِٕیْنَ ۟
قَالُوْاஅவர்கள் கூறினார்கள்یٰۤاَبَانَاஎங்கள் தந்தையேاسْتَغْفِرْமன்னிப்புத் தேடுங்கள்لَنَاஎங்களுக்காகذُنُوْبَنَاۤஎங்கள் பாவங்களைاِنَّاநிச்சயமாக நாங்கள்كُنَّاஇருந்தோம்خٰطِـِٕیْنَதவறு செய்தவர்களாக
காலூ யா அBபானஸ் தக்Fபிர் லனா துனூBபனா இன்னா குன்னா காதி'ஈன்
(அதற்கு அவர்கள்) “எங்களுடைய தந்தையே! எங்களுடைய பாவங்களை மன்னிக்குமாறு எங்களுக்காக (இறைவனிடம்) பிரார்த்தனை செய்யுங்கள், நிச்சயமாக நாங்கள் தவறு செய்தவர்களாக இருக்கின்றோம்” என்று கூறினார்கள்.
قَالَ سَوْفَ اَسْتَغْفِرُ لَكُمْ رَبِّیْ ؕ اِنَّهٗ هُوَ الْغَفُوْرُ الرَّحِیْمُ ۟
قَالَகூறினார்سَوْفَவிரைவில்اَسْتَغْفِرُநான் பாவமன்னிப்புத் தேடுவேன்لَكُمْஉங்களுக்காகرَبِّیْ ؕஎன் இறைவனிடம்اِنَّهٗநிச்சயமாக அவன்هُوَஅவனேالْغَفُوْرُமிக்க மன்னிப்பவன்الرَّحِیْمُநிகரற்ற அன்புடையவன்
கால ஸவ்Fப அஸ்தக்Fபிரு லகும் ரBப்Bபீ இன்னஹூ ஹுவல் கFபூருர் ரஹீம்
நான் உங்களுக்காக என் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுவேன். நிச்சயமாக அவன் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான் என்று கூறினார்.
فَلَمَّا دَخَلُوْا عَلٰی یُوْسُفَ اٰوٰۤی اِلَیْهِ اَبَوَیْهِ وَقَالَ ادْخُلُوْا مِصْرَ اِنْ شَآءَ اللّٰهُ اٰمِنِیْنَ ۟ؕ
فَلَمَّاபிறகுدَخَلُوْاஅவர்கள் நுழைந்தபோதுعَلٰیஅருகில்یُوْسُفَயூசுஃபிடம்اٰوٰۤیஅவர் அரவணைத்துக் கொண்டார்اِلَیْهِதன்னிடம்اَبَوَیْهِதன் பெற்றோரைوَ قَالَமேலும் அவர் கூறினார்ادْخُلُوْاநுழையுங்கள்مِصْرَஎகிப்திற்குள்اِنْஎனில்شَآءَநாடினால்اللّٰهُஅல்லாஹ்اٰمِنِیْنَؕபாதுகாப்பானவர்களாக
Fபலம்மா தகலூ 'அலா யூஸுFப ஆவா இலய்ஹி அBபவய்ய்ஹி வ காலத் குலூ மிஸ்ர இன்ஷா'அல் லாஹு ஆமினீன்
(பின்னர் குடும்பத்துடன்) அவர்கள் யூஸுஃபிடம் வந்தபோது, அவர் தம் தாய் தந்தையரை (கண்ணியத்துடன் வரவேற்றுத்) தம்முடன் வைத்துக் கொண்டார்; இன்னும் “அல்லாஹ் நாடினால் நீங்கள் மிஸ்ருக்குள் அச்ச மற்றவர்களாகப் பிரவேசியுங்கள்” என்றும் கூறினார்.
وَرَفَعَ اَبَوَیْهِ عَلَی الْعَرْشِ وَخَرُّوْا لَهٗ سُجَّدًا ۚ وَقَالَ یٰۤاَبَتِ هٰذَا تَاْوِیْلُ رُءْیَایَ مِنْ قَبْلُ ؗ قَدْ جَعَلَهَا رَبِّیْ حَقًّا ؕ وَقَدْ اَحْسَنَ بِیْۤ اِذْ اَخْرَجَنِیْ مِنَ السِّجْنِ وَجَآءَ بِكُمْ مِّنَ الْبَدْوِ مِنْ بَعْدِ اَنْ نَّزَغَ الشَّیْطٰنُ بَیْنِیْ وَبَیْنَ اِخْوَتِیْ ؕ اِنَّ رَبِّیْ لَطِیْفٌ لِّمَا یَشَآءُ ؕ اِنَّهٗ هُوَ الْعَلِیْمُ الْحَكِیْمُ ۟
وَ رَفَعَமேலும் அவர் உயர்த்தினார்اَبَوَیْهِதன் பெற்றோரைعَلَیமீதுالْعَرْشِஅரியாசனத்தின்وَ خَرُّوْاமேலும் அவர்கள் விழுந்தார்கள்لَهٗஅவருக்குسُجَّدًا ۚசிரம் பணிந்தவர்களாகوَ قَالَமேலும் அவர் கூறினார்یٰۤاَبَتِஎன் தந்தையேهٰذَاஇதுتَاْوِیْلُவிளக்கம்رُءْیَایَஎனது கனவின்مِنْஇருந்துقَبْلُ ؗமுன்னர்قَدْநிச்சயமாகجَعَلَهَاஅதை ஆக்கினான்رَبِّیْஎன் இறைவன்حَقًّا ؕஉண்மையாகوَ قَدْமேலும் நிச்சயமாகاَحْسَنَஅவன் உபகாரம் செய்தான்بِیْۤஎனக்குاِذْபோதுاَخْرَجَنِیْஎன்னை அவன் வெளியேற்றினான்مِنَஇருந்துالسِّجْنِசிறைوَ جَآءَமேலும் அவன் கொண்டு வந்தான்بِكُمْஉங்களைمِّنَஇருந்துالْبَدْوِபாலைவனம்مِنْۢஇருந்துبَعْدِபிறகுاَنْஎன்றுنَّزَغَபிளவு ஏற்படுத்தியالشَّیْطٰنُஷைத்தான்بَیْنِیْஎனக்கும்وَ بَیْنَமற்றும் இடையேاِخْوَتِیْ ؕஎன் சகோதரர்களுக்கும்اِنَّநிச்சயமாகرَبِّیْஎன் இறைவன்لَطِیْفٌநுட்பமானவன்لِّمَاஎதைیَشَآءُ ؕஅவன் நாடுகிறானோاِنَّهٗநிச்சயமாக அவன்هُوَஅவனேالْعَلِیْمُநன்கறிந்தவன்الْحَكِیْمُஞானமிக்கவன்
வ ரFப்'அ அBபவய்ஹி 'அலல் 'அர்ஷி வ கர்ரூ லஹூ ஸுஜ்ஜதா; வ கால யா அBபதி ஹாத தாவீலு ரு'யாய மின் கBப்லு கத் ஜ'அலஹா ரBப்Bபீ ஹக்கா; வ கத் அஹ்ஸன Bபீ இத் அக்ரஜனீ மினஸ் ஸிஜ்னி வ ஜா'அ Bபிகும் மினல் Bபத்வி மிம் Bபஃதி அன் னZஜகஷ் ஷய்தானு Bபய்னீ வ Bபய்ன இக்வதீ; இன்ன ரBப்Bபீ லதீFபுல் லிமா யஷா'; இன்னஹூ ஹுவல் 'அலீமுல் ஹகீம்
இன்னும், அவர் தம் தாய் தந்தையரை அரியாசனத்தின் மீது உயர்த்தி (அமர்த்தி)னார்; அவர்கள் (எல்லோரும்) அவருக்கு (மரியாதை செலுத்தியவர்களாகச்) சிரம் பணிந்து வீழ்ந்தனர்; அப்போது அவர் (தம் தந்தையை நோக்கி), “என் தந்தையே! இது தான் என்னுடைய முந்தைய கனவின் விளக்கமாகும்; அதனை என் இறைவன் உண்மையாக்கினான்; மேலும், அவன் என்னைச் சிறைச்சாலையிலிருந்து வெளியாக்கியதுடன் எனக்கும் என் சகோதரர்களுக்குமிடையில் ஷைத்தான் பிரிவினையை உண்டு பண்ணி விட்ட பின்னர் உங்களை கிராமத்திலிருந்து கொண்டு வந்ததன் மூலம் அவன் நிச்சயமாக எனக்குப் பேருபகாரம் செய்துள்ளான்; நிச்சயமாக என் இறைவன், தான் நாடியவற்றை மிக நுட்பமாகச் செய்கிறவன், நிச்சயமாக அவன் (யாவற்றையும்) நன்கறிந்தவன்; மிக்க ஞானமுள்ளவன்” என்று கூறினார்.
رَبِّ قَدْ اٰتَیْتَنِیْ مِنَ الْمُلْكِ وَعَلَّمْتَنِیْ مِنْ تَاْوِیْلِ الْاَحَادِیْثِ ۚ فَاطِرَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ۫ اَنْتَ وَلِیّٖ فِی الدُّنْیَا وَالْاٰخِرَةِ ۚ تَوَفَّنِیْ مُسْلِمًا وَّاَلْحِقْنِیْ بِالصّٰلِحِیْنَ ۟
رَبِّஎன் இறைவனேقَدْநிச்சயமாகاٰتَیْتَنِیْநீ எனக்கு அளித்தாய்مِنَஇருந்துالْمُلْكِஆட்சியைوَ عَلَّمْتَنِیْமேலும் நீ எனக்குக் கற்றுத் தந்தாய்مِنْஇருந்துتَاْوِیْلِவிளக்கத்தைالْاَحَادِیْثِ ۚகனவுகளின்فَاطِرَபடைத்தவனேالسَّمٰوٰتِவானங்களைوَ الْاَرْضِ ۫மற்றும் பூமியைاَنْتَநீயேوَلِیّٖஎன் பாதுகாவலன்فِیஇல்الدُّنْیَاஇவ்வுலகம்وَ الْاٰخِرَةِ ۚமற்றும் மறுமைتَوَفَّنِیْஎன்னை மரணிக்கச் செய்வாயாகمُسْلِمًاமுஸ்லிமாகوَّ اَلْحِقْنِیْமேலும் என்னைச் சேர்த்து வைப்பாயாகبِالصّٰلِحِیْنَநல்லோர்களுடன்
ரBப்Bபி கத் ஆதய்தனீ மினல் முல்கி வ 'அல்லம்தனீ மின் தாவீலில் அஹாதீத்; Fபாதி ரஸ் ஸமாவாதி வல் அர்ளி அன்த வலிய்யீ Fபித் துன்யா வல் ஆகிரதி தவFப்Fபனீ முஸ்லிம(ன்)வ் வ அல்ஹிக்னீ Bபிஸ்ஸாலிஹீன்
“என் இறைவனே! நிச்சயமாக நீ எனக்கு அரசாட்சியைத் தந்து, கனவுகளின் விளக்கங்களையும் எனக்கு கற்றுத்தந்தாய்; வானங்களையும் பூமியையும் படைத்தவனே! இம்மையிலும் மறுமையிலும் நீயே என் பாதுகாவலன்; முஸ்லிமாக (உனக்கு முற்றிலும் வழிபட்டவனாக இருக்கும் நிலையில்) என்னை நீ கைப்பறறிக் கொள்வாயாக! இன்னும் நல்லடியார் கூட்டத்தில் என்னைச் சேர்த்திடுவாயாக!” (என்று அவர் பிரார்த்தித்தார்.)
ذٰلِكَ مِنْ اَنْۢبَآءِ الْغَیْبِ نُوْحِیْهِ اِلَیْكَ ۚ وَمَا كُنْتَ لَدَیْهِمْ اِذْ اَجْمَعُوْۤا اَمْرَهُمْ وَهُمْ یَمْكُرُوْنَ ۟
ذٰلِكَஅதுمِنْஇருந்துاَنْۢبَآءِசெய்திகளில்الْغَیْبِமறைவானவற்றின்نُوْحِیْهِஅதனை நாம் அறிவிக்கிறோம்اِلَیْكَ ۚஉமக்குوَ مَاமேலும் இல்லைكُنْتَநீர் இருந்தீர்لَدَیْهِمْஅவர்களிடம்اِذْபோதுاَجْمَعُوْۤاஅவர்கள் ஒருமித்து முடிவெடுத்தاَمْرَهُمْதங்கள் காரியத்தைوَ هُمْமேலும் அவர்கள்یَمْكُرُوْنَசூழ்ச்சி செய்து கொண்டிருந்தார்கள்
தாலிக மின் அம்Bபா'இல் கய்Bபி னூஹீஹி இலய்க வமா குன்த லதய்ஹிம் இத் அஜ்ம'ஊ அம்ரஹும் வ ஹும் யம்குரூன்
(நபியே!) இது (நீர் அறியாத) மறைவான செய்திகளில் உள்ளதாகும்; இதனை நாம் உமக்கு வஹீ மூலம் அறிவித்தோம்; அவர்கள் (கூடிச்) சதி செய்து நம் திட்டத்தில் அவர்கள் ஒன்று சேர்ந்த பொழுது நீர் அவர்களுடன் இருக்கவில்லை.
وَمَاۤ اَكْثَرُ النَّاسِ وَلَوْ حَرَصْتَ بِمُؤْمِنِیْنَ ۟
وَ مَاۤமேலும் இல்லைاَكْثَرُபெரும்பான்மையானالنَّاسِமனிதர்கள்وَ لَوْஎனினும்حَرَصْتَநீர் பேராவல் கொண்டாலும்بِمُؤْمِنِیْنَநம்பிக்கை கொண்டவர்களாக
வமா அக்தருன் னாஸி வ லவ் ஹரஸ்த Bபிமு'மினீன்
ஆனால் நீர் எவ்வளவு அதிகமாக விரும்பினாலும் (அம்) மனிதர்களில் பெரும் பாலோர் (உம்மை நபி என) நம்பமாட்டார்கள்.
وَمَا تَسْـَٔلُهُمْ عَلَیْهِ مِنْ اَجْرٍ ؕ اِنْ هُوَ اِلَّا ذِكْرٌ لِّلْعٰلَمِیْنَ ۟۠
وَ مَاமேலும் நீர்تَسْـَٔلُهُمْஅவர்களிடம் கேட்பதில்லைعَلَیْهِஇதற்காகمِنْஎந்தக்اَجْرٍ ؕகூலியும்اِنْஇல்லைهُوَஅதுاِلَّاதவிரذِكْرٌஒரு நினைவூட்டல்لِّلْعٰلَمِیْنَ۠அகிலத்தாருக்கு
வமா தஸ்'அலுஹும் 'அலய்ஹி மின் அஜ்ர்; இன் ஹுவ இல்லா திக்ருல் லில்'ஆலமீன்
இதற்காக நீர் அவர்களிடத்தில் எந்தக் கூலியும் கேட்பதில்லை. இது அகிலத்தார் அனைவருக்கும் நினைவூட்டும் நல்லுபதேசமே அன்றி வேறில்லை.
وَكَاَیِّنْ مِّنْ اٰیَةٍ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ یَمُرُّوْنَ عَلَیْهَا وَهُمْ عَنْهَا مُعْرِضُوْنَ ۟
وَ كَاَیِّنْஇன்னும் எத்தனையோمِّنْஇருந்துاٰیَةٍஅத்தாட்சிகள்فِیஉள்ளالسَّمٰوٰتِவானங்களில்وَ الْاَرْضِபூமியிலும்یَمُرُّوْنَஅவர்கள் கடந்து செல்கிறார்கள்عَلَیْهَاஅவற்றின் மீதுوَ هُمْஇன்னும் அவர்கள்عَنْهَاஅவற்றைப்مُعْرِضُوْنَபுறக்கணிப்பவர்கள்
வ க அய்யிம் மின் ஆயதின் Fபிஸ் ஸமாவாதி வல் அர்ளி யமுர்ரூன 'அலய்ஹா வ ஹும் 'அன்ஹா முஃரிளூன்
இன்னும் வானங்களிலும் பூமியிலும் எத்தனையோ அத்தாட்சிகள் இருக்கின்றன, ஆனால் அவற்றை அவர்கள் புறக்கணித்தவர்களாகவே அவற்றினருகே நடந்து செல்கின்றனர்.
وَمَا یُؤْمِنُ اَكْثَرُهُمْ بِاللّٰهِ اِلَّا وَهُمْ مُّشْرِكُوْنَ ۟
وَ مَاமேலும் இல்லைیُؤْمِنُநம்பிக்கை கொள்கிறார்கள்اَكْثَرُهُمْஅவர்களில் பெரும்பாலோர்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுاِلَّاதவிரوَ هُمْஅவர்கள்مُّشْرِكُوْنَஇணைவைப்பவர்களாக
வமா யு'மினு அக்தரு ஹும் Bபில்லாஹி இல்லா வ ஹும் முஷ்ரிகூன்
மேலும் அவர்கள் இணைவைப்பவர்களாக இருக்கிற நிலையிலில்லாமல் அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதில்லை.
اَفَاَمِنُوْۤا اَنْ تَاْتِیَهُمْ غَاشِیَةٌ مِّنْ عَذَابِ اللّٰهِ اَوْ تَاْتِیَهُمُ السَّاعَةُ بَغْتَةً وَّهُمْ لَا یَشْعُرُوْنَ ۟
اَفَاَمِنُوْۤاஅவர்கள் அச்சமற்று இருக்கிறார்களா?اَنْஎன்பதைتَاْتِیَهُمْஅவர்களுக்கு வருவதைغَاشِیَةٌமூடிக்கொள்ளும் ஒன்றுمِّنْஇலிருந்துعَذَابِவேதனைاللّٰهِஅல்லாஹ்வின்اَوْஅல்லதுتَاْتِیَهُمُஅவர்களுக்கு வருவதைالسَّاعَةُஇறுதி நேரம்بَغْتَةًதிடீரென்றுوَّ هُمْமேலும் அவர்கள்لَاஉணராதیَشْعُرُوْنَநிலையில்
அFப அமினூ அன் தாதிய ஹும் காஷியதும் மின் 'அதாBபில் லாஹி அவ் தாதியஹுமுஸ் ஸா'அது Bபக்தத(ன்)வ் வ ஹும் லா யஷ்'உரூன்
(அவர்களைச்) சூழ்ந்து கொள்ளக்கூடிய அல்லாஹ்வின் வேதனை அவர்களுக்கு வந்துவிடுவதைப் பற்றியும் அல்லது அவர்கள் அறியாதிருக்கும் போது திடீரென முடிவு காலம் வந்து விடுவதைப்பற்றியும் அவர்கள் அச்சமற்று இருக்கின்றார்களா?
قُلْ هٰذِهٖ سَبِیْلِیْۤ اَدْعُوْۤا اِلَی اللّٰهِ ؔ۫ عَلٰی بَصِیْرَةٍ اَنَا وَمَنِ اتَّبَعَنِیْ ؕ وَسُبْحٰنَ اللّٰهِ وَمَاۤ اَنَا مِنَ الْمُشْرِكِیْنَ ۟
قُلْகூறுவீராகهٰذِهٖஇதுسَبِیْلِیْۤஎனது வழிاَدْعُوْۤاநான் அழைக்கிறேன்اِلَیபால்اللّٰهِ ؔ۫அல்லாஹ்வின்عَلٰیமீதுبَصِیْرَةٍதெளிவான ஆதாரத்தின்اَنَاநான்وَ مَنِமேலும் எவர்اتَّبَعَنِیْ ؕஎன்னைப் பின்பற்றினாரோوَ سُبْحٰنَமேலும் தூய்மையானவன்اللّٰهِஅல்லாஹ்وَ مَاۤமேலும் இல்லைاَنَاநான்مِنَஇருந்துالْمُشْرِكِیْنَஇணைவைப்பாளர்களில்
குல் ஹாதிஹீ ஸBபீலீ அத்'ஊ இலல் லாஹ்; 'அலா Bபஸீர தின் அன வ மனித் தBப'அனீ வ ஸுBப்ஹானல் லாஹி வ மா அன மினல் முஷ்ரிகீன்
(நபியே!) நீர் சொல்வீராக! “இதுவே என்னுடைய (நேரிய) வழியாகும்; நான் அல்லாஹ்வின் பால் (உங்களை) அழைக்கின்றேன்; நானும் என்னைப் பின்பற்றியவர்களும் தெளிவான ஞானத்தின் மீதே இருக்கின்றோம்; அல்லாஹ் மிகத் தூய்மையானவன்; ஆகவே, அவனுக்கு இணைவைப்போரில் நானும் ஒருவனல்லன்.”
وَمَاۤ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ اِلَّا رِجَالًا نُّوْحِیْۤ اِلَیْهِمْ مِّنْ اَهْلِ الْقُرٰی ؕ اَفَلَمْ یَسِیْرُوْا فِی الْاَرْضِ فَیَنْظُرُوْا كَیْفَ كَانَ عَاقِبَةُ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ ؕ وَلَدَارُ الْاٰخِرَةِ خَیْرٌ لِّلَّذِیْنَ اتَّقَوْا ؕ اَفَلَا تَعْقِلُوْنَ ۟
وَ مَاۤமேலும் இல்லைاَرْسَلْنَاநாம் அனுப்பினோம்مِنْஇருந்துقَبْلِكَஉமக்கு முன்னால்اِلَّاதவிரرِجَالًاஆண்களையேنُّوْحِیْۤநாம் வஹீ அறிவித்தோம்اِلَیْهِمْஅவர்களுக்குمِّنْஇருந்துاَهْلِவாசிகள்الْقُرٰی ؕஊர்களின்اَفَلَمْஆக அவர்கள் இல்லையாیَسِیْرُوْاபயணம் செய்யفِیஇல்الْاَرْضِபூமிفَیَنْظُرُوْاஆக அவர்கள் பார்க்கكَیْفَஎப்படிكَانَஇருந்ததுعَاقِبَةُமுடிவுالَّذِیْنَஅவர்கள்مِنْஇருந்துقَبْلِهِمْ ؕஅவர்களுக்கு முன்னால்وَ لَدَارُமேலும் நிச்சயமாக இல்லம்الْاٰخِرَةِமறுமையின்خَیْرٌமிகச் சிறந்ததுلِّلَّذِیْنَஅவர்களுக்குاتَّقَوْا ؕபயபக்தி கொண்டார்களோاَفَلَاநீங்கள் ஏன்تَعْقِلُوْنَசிந்திக்க மாட்டீர்களா
வ மா அர்ஸல்னா மின் கBப்லிக இல்லா ரிஜாலன் னூஹீ இலய்ஹிம் மின் அஹ்லில் குரா; அFபலம் யஸீரூ Fபில் அர்ளி Fப யன்ளுரூ கய்Fப கான 'ஆகிBபதுல் லதீன மின் கBப்லிஹிம்; வ ல தாருல் ஆகிரதி கய்ருல் லில்லதீனத் தகவ்; அFபலா தஃகிலூன்
(நபியே!) உமக்கு முன்னர் (பற்பல சமூகங்களுக்கும் ) நாம் அனுப்பிய தூதர்கள் (அந்தந்த சமூகங்களின்) ஊர்களிலிருந்த மனிதர்களேயன்றி வேறில்லை; அவர்களுக்கு நாம் வஹீ மூலம் (நம் கட்டளைகளை) அறிவித்தோம் - இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து இவர்களுக்கு முன் இருந்தவர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதைப் பார்க்க வில்லையா? மறுமை வீடுதான் பயபக்தியுடையவர்களுக்கு மிகவும் மேலானதாகும்; (இதனை) நீங்கள் (சிந்தித்து) விளங்கிக்கொள்ள வேண்டாமா?
حَتّٰۤی اِذَا اسْتَیْـَٔسَ الرُّسُلُ وَظَنُّوْۤا اَنَّهُمْ قَدْ كُذِبُوْا جَآءَهُمْ نَصْرُنَا ۙ فَنُجِّیَ مَنْ نَّشَآءُ ؕ وَلَا یُرَدُّ بَاْسُنَا عَنِ الْقَوْمِ الْمُجْرِمِیْنَ ۟
حَتّٰۤیவரைاِذَاபோதுاسْتَیْـَٔسَநம்பிக்கையிழந்தالرُّسُلُதூதர்கள்وَ ظَنُّوْۤاமேலும் அவர்கள் எண்ணினார்கள்اَنَّهُمْதாங்கள்قَدْநிச்சயமாகكُذِبُوْاபொய்ப்பிக்கப்பட்டுவிட்டதாகجَآءَهُمْஅவர்களுக்கு வந்ததுنَصْرُنَاநம்முடைய உதவிفَنُجِّیَஎனவே காப்பாற்றப்பட்டனர்مَنْஎவரைنَّشَآءُ ؕநாம் நாடுகிறோமோوَ لَاமேலும் இல்லைیُرَدُّதிருப்பப்படும்بَاْسُنَاநம்முடைய தண்டனைعَنِஇருந்துالْقَوْمِகூட்டத்தாரைالْمُجْرِمِیْنَகுற்றவாளிகளான
ஹத்தா இதஸ் தய்'அஸர் ருஸுலு வ ளன்னூ அன்னஹும் கத் குதிBபூ ஜா'அஹும் னஸ் ருனா Fபனுஜ்ஜிய மன் னஷா'உ வலா யுரத்து Bபா'ஸுன்ன 'அனில் கவ்மில் முஜ்ரிமீன்
(நம்) தூதர்கள் நிச்சயமாக பொய்ப்படுத்தப்பட்டு விட்டார்கள் என்று எண்ணி நம்பிக்கை இழந்து விடும் பொழுது நமது உதவி அவர்களுக்கு வந்தது; நாம் நாடியவர்கள் காப்பாற்றப்பட்டனர். நமது தண்டனை குற்றம் புரிந்த கூட்டத்தாரைவிட்டும் நீக்கப்படாது.
لَقَدْ كَانَ فِیْ قَصَصِهِمْ عِبْرَةٌ لِّاُولِی الْاَلْبَابِ ؕ مَا كَانَ حَدِیْثًا یُّفْتَرٰی وَلٰكِنْ تَصْدِیْقَ الَّذِیْ بَیْنَ یَدَیْهِ وَتَفْصِیْلَ كُلِّ شَیْءٍ وَّهُدًی وَّرَحْمَةً لِّقَوْمٍ یُّؤْمِنُوْنَ ۟۠
لَقَدْநிச்சயமாகكَانَஇருக்கிறதுفِیْஇல்قَصَصِهِمْஅவர்களின் வரலாறுகளில்عِبْرَةٌஒரு படிப்பினைلِّاُولِیஉடையவர்களுக்குالْاَلْبَابِ ؕஅறிவுمَاஇல்லைكَانَஇதுحَدِیْثًاஒரு செய்திیُّفْتَرٰیஇட்டுக்கட்டப்பட்டوَ لٰكِنْஆனால்تَصْدِیْقَஉறுதிப்படுத்துவதுالَّذِیْஎதனைبَیْنَமுன்னால்یَدَیْهِஅதற்குوَ تَفْصِیْلَமேலும் விளக்கம்كُلِّஒவ்வொருشَیْءٍவிஷயத்திற்கும்وَّ هُدًیமேலும் நேர்வழிوَّ رَحْمَةًமேலும் அருள்لِّقَوْمٍஒரு சமூகத்திற்குیُّؤْمِنُوْنَ۠நம்பிக்கை கொள்ளும்
லகத் கான Fபீ கஸஸிஹிம் 'இBப்ரதுல் லி உலில் அல்BபாBப்; மா கான ஹதீத(ன்)ய் யுFப்தரா வ லாகின் தஸ்தீகல் லதீ Bபய்ன யதிஹி வ தFப்ஸீல குல்லி ஷய்'இ(ன்)வ் வ ஹுத(ன்)வ் வ ரஹ்மதல் லிகவ்மி(ன்)ய் யு'மினூன்
(நிச்சயமாக) அவர்களின் வரலாறுகளில் அறிவுடையோருக்கு (நல்ல) படிப்பினை இருக்கிறது; இது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாக இருக்கவில்லை, மாறாக இதற்கு முன் உள்ள (வேதத்)தையும் இது உண்மையாக்கி வைக்கிறது. ஒவ்வொரு விஷயத்தையும் இது விவரித்துக் காட்டுவதாகவும், நம்பிக்கை கொண்ட சமூகத்தவருக்கு நேர்வழியாகவும், ரஹ்மத்தாகவும் இருக்கிறது.