15. ஸூரத்துல் ஹிஜ்ர்(மலைப்பாறை)

மக்கீ, வசனங்கள்: 99

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
الٓرٰ ۫ تِلْكَ اٰیٰتُ الْكِتٰبِ وَقُرْاٰنٍ مُّبِیْنٍ ۟
الۤرٰஅலிஃப்; லாம்; றாتِلْكَஇவைاٰيٰتُவசனங்கள்الْـكِتٰبِவேதங்களின்وَقُرْاٰنٍஇன்னும் குர்ஆனின்مُّبِيْنٍ‏தெளிவான(து)
அலிFப்-லாம்-ரா; தில்க ஆயாதுல் கிதாBபி வ குர்ஆ-னிம் முBபீன்
அலிஃப், லாம், றா. (நபியே!) இவை வேதத்தினுடையவும் தெளிவான திருக்குர்ஆனுடையவுமான வசனங்களாகவும்.
رُبَمَا یَوَدُّ الَّذِیْنَ كَفَرُوْا لَوْ كَانُوْا مُسْلِمِیْنَ ۟
رُبَمَا يَوَدُّபெரிதும் விரும்புவார்(கள்)الَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தனர்لَوْ كَانُوْاதாங்கள் இருந்திருக்க வேண்டுமே!مُسْلِمِيْنَ‏முஸ்லிம்களாக
ருBபமா யவத்துல் லதீன கFபரூ லவ் கானூ முஸ்லிமீன்
தாங்களும் முஸ்லிம்களாக இருந்திருக்க வேண்டுமே, என்று காஃபிர்கள் (மறுமையில் பெரிதும்) ஆசைப்படுவார்கள்.
ذَرْهُمْ یَاْكُلُوْا وَیَتَمَتَّعُوْا وَیُلْهِهِمُ الْاَمَلُ فَسَوْفَ یَعْلَمُوْنَ ۟
ذَرْهُمْவிடுவீராக/அவர்களைيَاْكُلُوْاஅவர்கள் புசிக்கட்டும்وَيَتَمَتَّعُوْاஇன்னும் அவர்கள் சுகம் அனுபவிக்கட்டும்وَيُلْهِهِمُஇன்னும் மறக்கடிக்கட்டும்/அவர்களைالْاَمَلُ‌ஆசைفَسَوْفَ يَعْلَمُوْنَ‏(பின்னர்) அறிவார்கள்
தர்ஹும் யாகுலூ வ யதமத்த'ஊ வ யுல்ஹிஹிமுல் அமலு Fபஸவ்Fப யஃலமூன்
(இம்மையில் தம் விருப்பம் போல்) புசித்துக் கொண்டும், சுகம் அனுபவித்துக் கொண்டும் இருக்க அவர்களை விட்டு விடுவீராக; அவர்களுடைய வீணான ஆசைகள் (மறுமையிலிருந்தும்) அவர்களைப் பராக்காக்கி விட்டன; (இதன் பலனைப் பின்னர்) அவர்கள் நன்கறிந்து கொள்வார்கள்.
وَمَاۤ اَهْلَكْنَا مِنْ قَرْیَةٍ اِلَّا وَلَهَا كِتَابٌ مَّعْلُوْمٌ ۟
وَمَاۤ اَهْلَـكْنَاநாம் அழிக்கவில்லைمِنْ قَرْيَةٍஎவ்வூரையும்اِلَّاதவிரوَلَهَاஅதற்குكِتَابٌதவணைمَّعْلُوْمٌ‏குறிப்பிட்ட
வ மா அஹ்லக்னா மின் கர்யதின் இல்லா வ லஹா கிதாBபும் மஃலூம்
எந்த ஊர்(வாசி)களையும் (அவர்களுடைய பாவங்களின் காரணமாக) அவர்களுக்கெனக் குறிப்பிட்ட காலத்தவணையிலன்றி நாம் அழித்துவிடுவதுமில்லை.
مَا تَسْبِقُ مِنْ اُمَّةٍ اَجَلَهَا وَمَا یَسْتَاْخِرُوْنَ ۟
مَا تَسْبِقُமுந்த மாட்டா(ர்க)ள்مِنْ اُمَّةٍஎந்த சமுதாயமும்اَجَلَهَاதங்கள் தவணையைوَمَا يَسْتَاْخِرُوْنَ‏இன்னும் பிந்தமாட்டார்கள்
மா தஸ்Bபிகு மின் உம்மதின் அஜலஹா வமா யஸ்தாகிரூன்
எந்த ஒரு சமுதாயமும் தனக்குரிய தவணைக்கு முந்தவும் மாட்டார்கள்; பிந்தவும் மாட்டார்கள்.
وَقَالُوْا یٰۤاَیُّهَا الَّذِیْ نُزِّلَ عَلَیْهِ الذِّكْرُ اِنَّكَ لَمَجْنُوْنٌ ۟ؕ
وَ قَالُوْاகூறுகின்றனர்يٰۤاَيُّهَاஓ!الَّذِىْஎவர்نُزِّلَஇறக்கப்பட்டதுعَلَيْهِஅவர்மீதுالذِّكْرُஅறிவுரைاِنَّكَநிச்சயமாக நீர்لَمَجْنُوْنٌؕ‏பைத்தியக்காரர்தான்
வ காலூ யா அய்யுஹல் லதீ னுZஜ்Zஜில 'அலய்ஹித் திக்ரு இன்னக லமஜ்னூன்
(நினைவூட்டும்) வேதம் அருளப் பட்ட(தாகக் கூறுப)வரே! நிச்சயமாக நீர் பைத்தியக்காரர்தான் என்றும் கூறுகின்றனர்.
لَوْ مَا تَاْتِیْنَا بِالْمَلٰٓىِٕكَةِ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِیْنَ ۟
لَوْ مَا تَاْتِيْنَاநீர்வரலாமே/நம்மிடம்بِالْمَلٰۤٮِٕكَةِவானவர்களைக் கொண்டுاِنْ كُنْتَநீர் இருந்தால்مِنَ الصّٰدِقِيْنَ‏உண்மையாளர்களில்
லவ் மா தாதீனா Bபில் மலா'இகதி இன் குன்த மினஸ் ஸாதிகீன்
“நீர் உண்மையாளரில் ஒருவராக இருப்பின் நீர் எங்களிடத்தில் மலக்குகளைக் கொண்டு வந்திருக்க வேண்டாமா?” (என்றும் கூறுகின்றனர்.)
مَا نُنَزِّلُ الْمَلٰٓىِٕكَةَ اِلَّا بِالْحَقِّ وَمَا كَانُوْۤا اِذًا مُّنْظَرِیْنَ ۟
مَا نُنَزِّلُஇறக்கமாட்டோம்الْمَلٰۤٮِٕكَةَவானவர்களைاِلَّاதவிரبِالْحَـقِّசத்தியத்தைக் கொண்டேوَمَا كَانُوْۤاஇருக்கமாட்டார்கள்اِذًاஅப்போதுمُّنْظَرِيْنَ‏அவகாசமளிக்கப்படுபவர்களாக
மா னுனZஜ்Zஜிலுல் மலா'இ கத இல்லா Bபில்ஹக்கி வமா கானூ இதம் முன்ளரீன்
நாம் மலக்குகளை உண்மையான (தக்க காரணத்தோடு அல்லாமல் இறக்குவதில்லை; அப்(படி இறக்கப்படும்) போது அ(ந் நிராகரிப்ப)வர்கள் அவகாசம் கொடுக்கப்பட மாட்டார்கள்.
اِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَاِنَّا لَهٗ لَحٰفِظُوْنَ ۟
اِنَّا نَحْنُநிச்சயமாக நாம்தான்نَزَّلْنَاஇறக்கினோம்الذِّكْرَஅறிவுரையைوَஇன்னும்اِنَّاநிச்சயமாக நாம்لَهٗஅதைلَحٰـفِظُوْنَ‏பாதுகாப்பவர்கள்
இன்னா னஹ்னு னZஜல்னத் திக்ர வ இன்னா லஹூ லஹா Fபிளூன்
நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்.
وَلَقَدْ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ فِیْ شِیَعِ الْاَوَّلِیْنَ ۟
وَلَـقَدْ اَرْسَلْنَاதிட்டமாக அனுப்பினோம்مِنْ قَبْلِكَஉமக்கு முன்னர்فِىْ شِيَعِபிரிவுகளில்الْاَوَّلِيْنَ‏முன்னோர்களின்
வ லகத் அர்ஸல்னா மின் கBப்லிக Fபீ ஷிய'இல் அவ்வலீன்
(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு முன்னால் முந்திய பல கூட்டத்தாருக்கும் நாம் (தூதர்களை) அனுப்பிவைத்தோம்.
وَمَا یَاْتِیْهِمْ مِّنْ رَّسُوْلٍ اِلَّا كَانُوْا بِهٖ یَسْتَهْزِءُوْنَ ۟
وَمَاவருவதில்லைيَاْتِيْهِمْஅவர்களிடம்مِّنْ رَّسُوْلٍஎந்த ஒரு தூதரும்اِلَّاதவிரكَانُوْاஇருந்தனர்بِهٖஅவரைيَسْتَهْزِءُوْنَ‏பரிகசிப்பார்கள்
வமா யாதீஹிம் மிர் ரஸூலின் இல்லா கானூ Bபிஹீ யஸ்தஹ்Zஜி'ஊன்
எனினும் அவர்களிடம் (நம்முடைய) எந்தத் தூதர் வந்தாலும் அவரை அந்த மக்கள் ஏளனம் செய்யாமல் இருந்ததில்லை.
كَذٰلِكَ نَسْلُكُهٗ فِیْ قُلُوْبِ الْمُجْرِمِیْنَ ۟ۙ
كَذٰلِكَஅவ்வாறேنَسْلُكُهٗபுகுத்துகிறோம்/அதைفِىْ قُلُوْبِஉள்ளங்களில்الْمُجْرِمِيْنَۙ‏குற்றவாளிகள்
கதாலிக னஸ்லுகுஹூ Fபீ குலூBபில் முஜ்ரிமீன்
இவ்வாறே நாம் குற்றவாளிகளின் உள்ளங்களில் இ(வ் விஷமத்)தைப் புகுத்தி விடுகிறோம்.
لَا یُؤْمِنُوْنَ بِهٖ وَقَدْ خَلَتْ سُنَّةُ الْاَوَّلِیْنَ ۟
لَا يُؤْمِنُوْنَஅவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்بِهٖ‌ۚஇவரைوَقَدْ خَلَتْசென்றுவிட்டதுسُنَّةُவழிமுறைالْاَوَّلِيْنَ‏முன்னோரின்
லா யு'மினூன Bபிஹீ வ கத் கலத் ஸுன்னதுல் அவ்வலீன்
அவர்கள் இ(வ் வேதத்)தின் மீது ஈமான் கொள்ள மாட்டார்கள்; அவர்களுக்கு முன்னிருந்தவர்களின் இந்நடை முறையும் (இறுதியில் அவர்கள் அழிவும்) நிகழ்ந்தே வந்துள்ளன.
وَلَوْ فَتَحْنَا عَلَیْهِمْ بَابًا مِّنَ السَّمَآءِ فَظَلُّوْا فِیْهِ یَعْرُجُوْنَ ۟ۙ
وَلَوْ فَتَحْنَاநாம் திறந்தால்عَلَيْهِمْஅவர்கள் மீதுبَابًاஒரு வாசலைمِّنَஇருந்துالسَّمَآءِவானம்فَظَلُّوْاபகலில் அவர்கள் ஆகினர்فِيْهِஅதில்يَعْرُجُوْنَۙ‏ஏறுபவர்களாக
வ லவ் Fபதஹ்னா 'அலய்ஹிம் BபாBபம் மினஸ் ஸமா'இ Fபளலூ Fபீஹி யஃருஜூன்
இவர்களுக்காக நாம் வானத்திலிருந்து ஒரு வாயிலைத் திறந்து விட்டு, அவர்கள் அதில் (நாள் முழுதும் தொடர்ந்து) ஏறிக் கொண்டிருந்தாலும் (அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்).
لَقَالُوْۤا اِنَّمَا سُكِّرَتْ اَبْصَارُنَا بَلْ نَحْنُ قَوْمٌ مَّسْحُوْرُوْنَ ۟۠
لَـقَالُوْۤاநிச்சயம் அவர்கள் கூறுவர்اِنَّمَا سُكِّرَتْமயக்கப்பட்டு விட்டனاَبْصَارُنَاஎங்கள் கண்கள்بَلْஇல்லைنَحْنُநாங்கள்قَوْمٌமக்கள்مَّسْحُوْرُوْنَ‏சூனியம் செய்யப்பட்டவர்கள்
லகாலூ இன்னமா ஸுக்கிரத் அBப்ஸாருனா Bபல் னஹ்னு கவ்மும் மஸ்ஹூரூன்
“நம் பார்வைகளெல்லாம் மயக்கப்பட்டு விட்டன; இல்லை! நாங்கள் சூனியம் செய்யப்பட்ட ஒரு கூட்டமாகி விட்டோம்“ என்று நிச்சயமாகக் கூறுவார்கள்.
وَلَقَدْ جَعَلْنَا فِی السَّمَآءِ بُرُوْجًا وَّزَیَّنّٰهَا لِلنّٰظِرِیْنَ ۟ۙ
وَلَـقَدْதிட்டவட்டமாகجَعَلْنَاஅமைத்தோம்فِى السَّمَآءِ بُرُوْجًاவானத்தில்/பெரிய நட்சத்திரங்களைوَّزَيَّـنّٰهَاஇன்னும் அலங்காரமாக்கினோம்/அவற்றைلِلنّٰظِرِيْنَۙ‏பார்ப்பவர்களுக்கு
வ லகத் ஜ'அல்னா Fபிஸ்ஸமா'இ Bபுரூஜ(ன்)வ் வ Zஜய்யன்னாஹா லின்னாளிரீன்
வானத்தில் கிரகங்களுக்கான பாதைகளை நிச்சயமாக நாம் அமைத்து பார்ப்போருக்கு அவற்றை அலங்காரமாகவும் ஆக்கினோம்.
وَحَفِظْنٰهَا مِنْ كُلِّ شَیْطٰنٍ رَّجِیْمٍ ۟ۙ
وَحَفِظْنٰهَاஇன்னும் பாதுகாத்தோம்/அதைمِنْஎல்லாம்كُلِّவிட்டுشَيْطٰنٍஷைத்தான்رَّجِيْمٍۙ‏விரட்டப்பட்டவன்
வ ஹFபிள்னாஹா மின் குல்லி ஷய்தானிர் ரஜீம்
விரட்டப்பட்ட ஒவ்வொரு ஷைத்தானை விட்டும் நாம் அவற்றைப் பாதுகாத்தோம்.
اِلَّا مَنِ اسْتَرَقَ السَّمْعَ فَاَتْبَعَهٗ شِهَابٌ مُّبِیْنٌ ۟
اِلَّاஎனினும்مَنِஎவன்اسْتَرَقَ السَّمْعَஒட்டுக் கேட்பான்فَاَ تْبَعَهٗபின்தொடர்ந்தது / அவனைشِهَابٌஓர் எரி நட்சத்திரம்مُّبِيْنٌ‏தெளிவானது
இல்லா மனிஸ் தரகஸ் ஸம்'அ Fப அத்Bப'அஹூ ஷிஹாBபும் முBபீன்
திருட்டுத்தனமாக ஒட்டுக் கேட்கும் ஷைத்தானைத்தவிர; (அப்போது) பிரகாசமான தீப்பந்தம் அந்த ஷைத்தானை (விரட்டிப்) பின் பற்றும்.
وَالْاَرْضَ مَدَدْنٰهَا وَاَلْقَیْنَا فِیْهَا رَوَاسِیَ وَاَنْۢبَتْنَا فِیْهَا مِنْ كُلِّ شَیْءٍ مَّوْزُوْنٍ ۟
وَالْاَرْضَஇன்னும் பூமிمَدَدْنٰهَاவிரித்தோம்/அதைوَاَلْقَيْنَاஇன்னும் நிறுவினோம்فِيْهَاஅதில்رَوَاسِىَஅசையாத மலைகளைوَاَنْۢبَتْنَاஇன்னும் முளைக்க வைத்தோம்فِيْهَاஅதில்مِنْ كُلِّ شَىْءٍஎல்லாவற்றையும்مَّوْزُوْنٍ‏நிறுக்கப்படும்
வல் அர்ள மதத்னாஹா வ அல்கய்னா Fபீஹா ரவாஸிய வ அம்Bபத்னா Fபீஹா மின் குல்லி ஷய்'இம் மவ்Zஜூன்
பூமியை நாம் விரித்து அதில் உறுதியான, (அசையா) மலைகளை நிலைப் படுத்தினோம்; ஒவ்வொரு பொருளையும் அதற்குரிய அளவின்படி அதில் நாம் முளைப்பித்தோம்.
وَجَعَلْنَا لَكُمْ فِیْهَا مَعَایِشَ وَمَنْ لَّسْتُمْ لَهٗ بِرٰزِقِیْنَ ۟
وَجَعَلْنَاஅமைத்தோம்لَـكُمْஉங்களுக்குفِيْهَاஅதில்مَعَايِشَவாழ்வாதாரங்களைوَمَنْஇன்னும் எவர்لَّسْتُمْநீங்கள் இல்லைلَهٗஅவருக்குبِرٰزِقِيْنَ‏உணவளிப்பவர்களாக
வ ஜ'அல்னா லகும் Fபீஹா ம'ஆயிஷ வ மல் லஸ்தும் லஹூ BபிராZஜிகீன்
நாம் அதில் உங்களுக்கும் நீங்கள் எவருக்கு உணவளிக்கிறவர்களாக இல்லையோ அவர்களுக்கும் வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை ஆக்கியுள்ளோம்.
وَاِنْ مِّنْ شَیْءٍ اِلَّا عِنْدَنَا خَزَآىِٕنُهٗ ؗ وَمَا نُنَزِّلُهٗۤ اِلَّا بِقَدَرٍ مَّعْلُوْمٍ ۟
وَاِنْ مِّنْ شَىْءٍஎப்பொருளும்/இல்லைاِلَّاதவிரعِنْدَنَاநம்மிடம்خَزَآٮِٕنُهٗபொக்கிஷங்கள்/அதன்وَمَاஇன்னும் இறக்க மாட்டோம்نُنَزِّلُهٗۤஅதைاِلَّاதவிரبِقَدَرٍஓர் அளவில்مَّعْلُوْمٍ‏குறிப்பிடப்பட்ட
வ இம் மின் ஷய்'இன் இல்லா 'இன்தனா கZஜா 'இனுஹூ வமா னுனZஜ்Zஜிலுஹூ இல்லா Bபிகதரிம் மஃலூம்
ஒவ்வொரு பொருளுக்குமான பொக்கிஷங்கள் நம்மிடமே இருக்கின்றன; அவற்றை நாம் ஒரு குறிப்பிட்ட அளவுப்படி அல்லாமல் இறக்கிவைப்பதில்லை.
وَاَرْسَلْنَا الرِّیٰحَ لَوَاقِحَ فَاَنْزَلْنَا مِنَ السَّمَآءِ مَآءً فَاَسْقَیْنٰكُمُوْهُ ۚ وَمَاۤ اَنْتُمْ لَهٗ بِخٰزِنِیْنَ ۟
وَاَرْسَلْنَاஇன்னும் அனுப்புகிறோம்الرِّيٰحَகாற்றுகளைلَوَاقِحَகருக்கொள்ள வைக்கக் கூடியதாகفَاَنْزَلْنَاஇறக்குகிறோம்مِنَ السَّمَآءِமேகத்திலிருந்துمَآءًமழை நீரைفَاَسْقَيْنٰكُمُوْهُ‌ۚபுகட்டுகிறோம்/உங்களுக்கு/அதைوَمَاۤஇல்லைاَنْتُمْநீங்கள்لَهٗஅதைبِخٰزِنِيْنَ‏சேகரிப்பவர்களாக
வ அர்ஸல்னர் ரியாஹ ல வாகிஹ Fப அன்Zஜல்னா மினஸ் ஸமா'இ மா'அன் Fப அஸ்கய் னாகுமூஹு வ மா அன்தும் லஹூ BபிகாZஜினீன்
இன்னும் காற்றுகளை சூல் கொண்ட மேகங்களாக நாமே அனுப்புகிறோம்; பின்னர் வானத்திலிருந்து நாம் மழை பொழிவித்து, அதனை உங்களுக்கு நாம் புகட்டுகிறோம் - நீங்கள் அதனைச் சேகரித்து வைப்பவர்களும் இல்லை.
وَاِنَّا لَنَحْنُ نُحْیٖ وَنُمِیْتُ وَنَحْنُ الْوٰرِثُوْنَ ۟
وَ اِنَّا لَــنَحْنُநிச்சயமாக நாம்தான்نُحْىٖஉயிர் கொடுக்கிறோம்وَنُمِيْتُஇன்னும் மரணிக்க வைக்கிறோம்وَنَحْنُநாம்الْوٰرِثُوْنَ‏அனந்தரக்காரர்கள்
வ இன்ன்னா ல னஹ்னு னுஹ்யீ வ னுமீது வ னஹ்னுல் வாரிதூன்
நிச்சயமாக நாமே உயிரும் கொடுக்கிறோம், நாமே மரணிக்கவும் வைக்கின்றோம்; மேலும், எல்லாவற்றிற்கும் வாரிஸாக (உரிமையாளனாக) நாமே இருக்கின்றோம்.
وَلَقَدْ عَلِمْنَا الْمُسْتَقْدِمِیْنَ مِنْكُمْ وَلَقَدْ عَلِمْنَا الْمُسْتَاْخِرِیْنَ ۟
وَلَـقَدْதிட்டவட்டமாகعَلِمْنَاஅறிந்தோம்الْمُسْتَقْدِمِيْنَமுன் சென்றவர்களைمِنْكُمْஉங்களில்وَلَـقَدْதிட்டவட்டமாகعَلِمْنَاஅறிந்தோம்الْمُسْتَـاْخِرِيْنَ‏பின் வருபவர்களை
வ ல கத் 'அலிம்னல் முஸ்தக்திமீன மின்கும் வ லகத் 'அலிம்னல் முஸ்தாகிரீன்
உங்களில் முந்தியவர்களையும் நாம் நிச்சயமாக அறிவோம்; பிந்தியவர்களையும் நாம் நிச்சயமாக அறிவோம்.
وَاِنَّ رَبَّكَ هُوَ یَحْشُرُهُمْ ؕ اِنَّهٗ حَكِیْمٌ عَلِیْمٌ ۟۠
وَاِنَّநிச்சயமாகرَبَّكَ هُوَஉம் இறைவன்தான்يَحْشُرُஒன்று திரட்டுவான்هُمْ‌ؕஇவர்களைاِنَّهٗநிச்சயமாக அவன்حَكِيْمٌமகா ஞானவான்عَلِيْمٌ‏நன்கறிந்தவன்
வ இன்ன ரBப்Bபக ஹுவ யஹ்ஷுருஹும்; இன்னஹூ ஹகீமுன் 'அலீம்
நிச்சயமாக உம்முடைய இறைவன் (இறுதி நாளில்) அவர்களை ஒன்று திரட்டுவான்; நிச்சயமாக அவன் ஞானம் மிக்கவன்; (யாவற்றையும்) நன்கறிபவன்.
وَلَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ مِنْ صَلْصَالٍ مِّنْ حَمَاٍ مَّسْنُوْنٍ ۟ۚ
وَلَـقَدْதிட்டவட்டமாகخَلَقْنَاபடைத்தோம்الْاِنْسَانَமனிதனைمِنْஇருந்துصَلْصَالٍ‘கன் கன்’ என்று சப்தம் வரக்கூடியதுمِّنْஇருந்துحَمَاٍகளிமண்مَّسْنُوْنٍ‌ۚ‏பிசுபிசுப்பானது
வ லகத் கலக்னல் இன்ஸான மின் ஸல்ஸாலிம் மின் ஹம இம் மஸ்னூன்
ஓசை தரக்கூடிய கருப்பான களி மண்ணால் மனிதனை நிச்சயமாக நாமே படைத்தோம்.
وَالْجَآنَّ خَلَقْنٰهُ مِنْ قَبْلُ مِنْ نَّارِ السَّمُوْمِ ۟
وَالْجَـآنَّஜின்னைخَلَقْنٰهُபடைத்தோம்/அதைمِنْ قَبْلُமுன்பேمِنْஇருந்துنَّارِநெருப்புالسَّمُوْمِ‏கொடிய உஷ்ணமுள்ளது
வல்ஜான்ன கலக்னாஹு மின் கBப்லு மின் னாரிஸ் ஸமூம்
(அதற்கு) முன்னர் ஜான்னை (ஜின்களின் மூல பிதாவை) கடிய சூடுள்ள நெருப்பிலிருந்து நாம் படைத்தோம்.
وَاِذْ قَالَ رَبُّكَ لِلْمَلٰٓىِٕكَةِ اِنِّیْ خَالِقٌۢ بَشَرًا مِّنْ صَلْصَالٍ مِّنْ حَمَاٍ مَّسْنُوْنٍ ۟
وَاِذْ قَالَகூறிய சமயத்தைرَبُّكَஉம் இறைவன்لِلْمَلٰۤٮِٕكَةِவானவர்களுக்குاِنِّىْநிச்சயமாக நான்خَالـِقٌۢபடைக்கப்போகிறேன்بَشَرًاஒரு மனிதனைمِّنْ صَلْصَالٍ‘கன் கன்’ என்று சப்தம் வரக்கூடியதுمِّنْஇருந்துحَمَاٍகளிமண்مَّسْنُوْنٍ‏பிசுபிசுப்பானது
வ இத் கால ரBப்Bபுக லில்மலா' இகதி இன்னீ காலிகும் Bபஷரம் மின் ஸல்ஸாலிம் மின் ஹம இம் மஸ்னூன்
(நபியே!) உம்முடைய இறைவன் மலக்குகளிடம்: “ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, மனிதனை நிச்சயமாக நான் படைக்கப்போகிறேன்” என்றும்,
فَاِذَا سَوَّیْتُهٗ وَنَفَخْتُ فِیْهِ مِنْ رُّوْحِیْ فَقَعُوْا لَهٗ سٰجِدِیْنَ ۟
فَاِذَا سَوَّيْتُهٗஅவரை நான் செம்மை செய்துவிட்டால்وَنَفَخْتُஇன்னும் ஊதினேன்فِيْهِஅவரில்مِنْ رُّوْحِىْஎன் உயிரிலிருந்துفَقَعُوْاவிழுங்கள்لَهٗஅவருக்கு முன்سٰجِدِيْنَ‏சிரம்பணிந்தவர்களாக
Fப இதா ஸவ்வய்துஹூ வ னFபக்து Fபீஹி மிர் ரூஹீ Fபக'ஊ லஹூ ஸாஜிதீன்
அவரை நான் செவ்வையாக உருவாக்கி, அவரில் என் ஆவியிலிருந்து ஊதியதும், “அவருக்கு சிரம் பணியுங்கள்” என்றும் கூறியதை (நினைவு கூர்வீராக)!
فَسَجَدَ الْمَلٰٓىِٕكَةُ كُلُّهُمْ اَجْمَعُوْنَ ۟ۙ
فَسَجَدَசிரம் பணிந்தார்(கள்)الْمَلٰۤٮِٕكَةُவானவர்கள்كُلُّهُمْஅவர்கள் எல்லோரும்اَجْمَعُوْنَۙ‏அனைவரும்
Fபஸஜதல் மலா'இகது குல்லுஹும் அஜ்ம'ஊன்
அவ்வாறே மலக்குகள் - அவர்கள் எல்லோரும் - சிரம் பணிந்தார்கள்.
اِلَّاۤ اِبْلِیْسَ ؕ اَبٰۤی اَنْ یَّكُوْنَ مَعَ السّٰجِدِیْنَ ۟
اِلَّاۤ اِبْلِيْسَؕஇப்லீஸைத் தவிரاَبٰٓىமறுத்து விட்டான்اَنْ يَّكُوْنَ مَعَஆகுவதற்கு/உடன்السّٰجِدِيْنَ‏சிரம் பணிந்தவர்கள்
இல்லா இBப்லீஸ அBபா அய் யகூன ம'அஸ் ஸாஜிதீன்
இப்லீஸைத்தவிர - அவன் சிரம் பணிந்தவர்களுடன் இருப்பதை விட்டும் விலகிக்கொண்டான்.
قَالَ یٰۤاِبْلِیْسُ مَا لَكَ اَلَّا تَكُوْنَ مَعَ السّٰجِدِیْنَ ۟
قَالَகூறினான்يٰۤاِبْلِيْسُஇப்லீஸே!مَا لَـكَஉனக்கென்ன நேர்ந்தது?اَلَّا تَكُوْنَநீ ஆகாதிருக்கمَعَஉடன்السّٰجِدِيْنَ‏சிரம் பணிந்தவர்கள்
கால யா இBப்லீஸு மா லக அல்லா தகூன ம'அஸ் ஸாஜிதீன்
“இப்லீஸே! சிரம் பணிந்தவர்களுடனே நீயும் சேராமல் (விலகி) இருந்ததற்குக் காரணம் என்ன?” என்று (இறைவன்) கேட்டான்.
قَالَ لَمْ اَكُنْ لِّاَسْجُدَ لِبَشَرٍ خَلَقْتَهٗ مِنْ صَلْصَالٍ مِّنْ حَمَاٍ مَّسْنُوْنٍ ۟
قَالَகூறினான்لَمْ اَكُنْநான் இல்லைلِّاَسْجُدَசிரம் பணிபவனாகلِبَشَرٍஒரு மனிதனுக்குخَلَقْتَهٗபடைத்தாய்/அவனைمِنْஇருந்துصَلْصَالٍ‘கன் கன்’ என்று சப்தம் வரக்கூடியதுمِّنْஇருந்துحَمَاٍகளிமண்مَّسْنُوْنٍ‏பிசுபிசுப்பானது
கால லம் அகுல் லி அஸ்ஜுத லிBபஷரின் கலக்தஹூ மின் ஸல்ஸாலிம் மின் ஹம இம் மஸ்னூன்
அதற்கு இப்லீஸ், “ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, நீ படைத்துள்ள (ஒரு) மனிதனுக்கு நான் சிரம் பணிவதற்கில்லை!” என்று கூறினான்.
قَالَ فَاخْرُجْ مِنْهَا فَاِنَّكَ رَجِیْمٌ ۟ۙ
قَالَகூறினான்فَاخْرُجْவெளியேறுمِنْهَاஇதிலிருந்துفَاِنَّكَநிச்சயமாக நீرَجِيْمٌۙ‏விரட்டப்பட்டவன்
கால Fபக்ருஜ் மின்ஹா Fப இன்னக ரஜீம்
“அவ்வாறாயின், நீ இங்கிருந்து வெளியேறிவிடு; நிச்சயமாக நீ விரட்டப்பட்டவனாக இருக்கிறாய்.”
وَّاِنَّ عَلَیْكَ اللَّعْنَةَ اِلٰی یَوْمِ الدِّیْنِ ۟
وَّاِنَّஇன்னும் நிச்சயமாகعَلَيْكَஉம்மீதுاللَّعْنَةَசாபம்اِلٰى يَوْمِ الدِّيْنِ‏கூலி நாள் வரை
வ இன்ன 'அலய்கல் லஃனத இலா யவ்மித் தீன்
“மேலும், நிச்சயமாக நியாயத் தீர்ப்பு நாள் வரை உன் மீது சாபம் உண்டாவதாக!” என்று (இறைவனும்) கூறினான்.
قَالَ رَبِّ فَاَنْظِرْنِیْۤ اِلٰی یَوْمِ یُبْعَثُوْنَ ۟
قَالَகூறினான்رَبِّஎன் இறைவாفَاَنْظِرْஅவகாசமளிنِىْۤஎனக்குاِلٰىவரைيَوْمِநாள்يُبْعَثُوْنَ‏எழுப்பப்படுவார்கள்
கால ரBப்Bபி Fப அன்ளிர்னீ இலா யவ்மி யுBப்'அதூன்
“என்னுடைய இறைவனே! இறந்தவர்கள் எழுப்பப்படும் நாள்வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக!” என்று இப்லீஸ் கூறினான்.
قَالَ فَاِنَّكَ مِنَ الْمُنْظَرِیْنَ ۟ۙ
قَالَகூறினான்فَاِنَّكَநிச்சயமாக நீمِنَ الْمُنْظَرِيْنَۙ‏அவகாசமளிக்கப்பட்டவர்களில்
கால Fப இன்னக மினல் முன்ளரீன்
“நிச்சயமாக, நீ அவகாசம் அளிக்கப்பட்டோரில் ஒருவனாவாய்;”
اِلٰی یَوْمِ الْوَقْتِ الْمَعْلُوْمِ ۟
اِلٰىவரைيَوْمِநாள்الْوَقْتِநேரத்தின்الْمَعْلُوْمِ‏குறிப்பிடப்பட்டது
இலா யவ்மில் வக்தில் மஃலூம்
“குறிப்பிட்ட நேரத்தின் நாள் வரும் வரையில்” என்று அல்லாஹ் கூறினான்.
قَالَ رَبِّ بِمَاۤ اَغْوَیْتَنِیْ لَاُزَیِّنَنَّ لَهُمْ فِی الْاَرْضِ وَلَاُغْوِیَنَّهُمْ اَجْمَعِیْنَ ۟ۙ
قَالَகூறினான்رَبِّஎன் இறைவாبِمَاۤநீ வழி கெடுத்ததன் காரணமாகاَغْوَيْتَنِىْஎன்னைلَاُزَيِّنَنَّநிச்சயமாக அலங்கரிப்பேன்لَهُمْஅவர்களுக்குفِى الْاَرْضِபூமியில்وَلَاُغْوِيَـنَّهُمْஇன்னும் நிச்சயமாக வழிகெடுப்பேன்/அவர்களைاَجْمَعِيْنَۙ‏அனைவரையும்
கால ரBப்Bபி Bபிமா அக்வய்தனீ ல உZஜய்யின் அன்ன லஹும் Fபில் அர்ளி வ ல உக்வியன் னஹும் அஜ்ம'ஈன்
(அதற்கு இப்லீஸ்,) “என் இறைவனே! என்னை நீ வழிகேட்டில் விட்டுவிட்டதால், நான் இவ்வுலகில் (வழி கேட்டைத்தரும் அனைத்தையும்) அவர்களுக்கு அழகாகத் தோன்றும்படி செய்து (அதன் மூலமாக) அவர்கள் அனைவரையும் வழிகெடுத்தும் விடுவேன்.
اِلَّا عِبَادَكَ مِنْهُمُ الْمُخْلَصِیْنَ ۟
اِلَّاதவிரعِبَادَكَஉன் அடியார்களைمِنْهُمُஅவர்களில்الْمُخْلَصِيْنَ‏பரிசுத்தமானவர்கள்
இல்லா 'இBபாதக மின்ஹுமுல் முக்லஸீன்
“அவர்களில் அந்தரங்க - சுத்தியுள்ள (உன்னருள் பெற்ற) உன் நல்லடியார்களைத் தவிர” என்று கூறினான்.
قَالَ هٰذَا صِرَاطٌ عَلَیَّ مُسْتَقِیْمٌ ۟
قَالَகூறினான்هٰذَاஇதுصِرَاطٌவழிعَلَىَّஎன் பக்கம்مُسْتَقِيْمٌ‏நேரானது
கால ஹாத ஸிராதுன் 'அலய்ய முஸ்தகீம்
(அதற்கு இறைவன் “அந்தரங்க சுத்தியுள்ள என் நல்லடியார்களின்) இந்த வழி, என்னிடம் (வருவதற்குரிய) நேரான வழியாகும்.
اِنَّ عِبَادِیْ لَیْسَ لَكَ عَلَیْهِمْ سُلْطٰنٌ اِلَّا مَنِ اتَّبَعَكَ مِنَ الْغٰوِیْنَ ۟
اِنَّநிச்சயமாகعِبَادِىْஎன் அடியார்கள்لَـيْسَஇல்லைلَكَஉனக்குعَلَيْهِمْஅவர்கள் மீதுسُلْطٰنٌஅதிகாரம்اِلَّاதவிரمَنِஎவர்(கள்)اتَّبَـعَكَபின்பற்றுகின்றார்(கள்)/ உன்னைمِنَ الْغٰوِيْنَ‏வழிகெட்டவர்கள்
இன்ன 'இBபாதீ லய்ஸ லக 'அலய்ஹிம் ஸுல்தானுன் இல்லா மனித்தBப'அக மினல் காவீன்
“நிச்சயமாக என் அடியார்கள் மீது உனக்கு எவ்வித அதிகாரமும் இல்லை - உன்னைப் பின்பற்றி வழிகெட்டவர்களைத் தவிர” என்று கூறினான்.
وَاِنَّ جَهَنَّمَ لَمَوْعِدُهُمْ اَجْمَعِیْنَ ۟۫ۙ
وَاِنَّநிச்சயமாகجَهَـنَّمَநரகம்لَمَوْعِدُهُمْவாக்களிக்கப்பட்ட இடம்/அவர்கள்اَجْمَعِيْنَۙ‏அனைவரின்
வ இன்ன ஜஹன்னம லமவ்'இதுஹும் அஜ்ம'ஈன்
நிச்சயமாக (உன்னைப் பின்பற்றும்) அனைவருக்கும் நரகம் வாக்களிக்கப்பட்ட இடமாகும்.
لَهَا سَبْعَةُ اَبْوَابٍ ؕ لِكُلِّ بَابٍ مِّنْهُمْ جُزْءٌ مَّقْسُوْمٌ ۟۠
لَهَاஅதற்குسَبْعَةُஏழுاَبْوَابٍؕவாசல்கள்لِكُلِّஒவ்வொருبَابٍவாசலுக்கும்مِّنْهُمْஅவர்களில்جُزْءٌஒரு பிரிவினர்مَّقْسُوْمٌ‏பிரிக்கப்பட்ட
லஹா ஸBப்'அது அBப்வாBப்; லிகுல்லி BபாBபிம் மின்ஹும் ஜுZஜ்'உம் மக்ஸூம்
அதற்கு ஏழு வாசல்கள் உண்டு; அவ்வாசல்கள் ஒவ்வொன்றும் பங்கிடப்பட்ட (தனித்தனிப்) பிரிவினருக்கு உரியதாகும்.  
اِنَّ الْمُتَّقِیْنَ فِیْ جَنّٰتٍ وَّعُیُوْنٍ ۟ؕ
اِنَّநிச்சயமாகالْمُتَّقِيْنَஅஞ்சியவா்கள்فِىْ جَنّٰتٍசொர்க்கங்களில்وَّعُيُوْنٍؕ‏இன்னும் நீரருவிகளில்
இன்னல் முத்தகீன Fபீ ஜன்னாதி(ன்)வ் வ 'உயூன்
நிச்சயமாக பயபக்தியுடையவர்கள் சுவனபதிகளிலும், நீரூற்றுகளிலும் (சுகம் பெற்று) இருப்பார்கள்.
اُدْخُلُوْهَا بِسَلٰمٍ اٰمِنِیْنَ ۟
اُدْخُلُوْநுழையுங்கள்هَاஅதில்بِسَلٰمٍஸலாம் உடன்اٰمِنِيْنَ‏அச்சமற்றவர்களாக
உத்குலூஹா Bபிஸலாமின் ஆமினீன்
(அவர்களை நோக்கி) “சாந்தியுடனும், அச்சமற்றவர்களாகவும் நீங்கள் இதில் நுழையுங்கள்” (என்று கூறப்படும்).
وَنَزَعْنَا مَا فِیْ صُدُوْرِهِمْ مِّنْ غِلٍّ اِخْوَانًا عَلٰی سُرُرٍ مُّتَقٰبِلِیْنَ ۟
وَنَزَعْنَاநீக்கிவிடுவோம்مَاஎதைفِىْநெஞ்சங்களில்صُدُوْرِهِمْஅவர்களுடையمِّنْ غِلٍّகுரோதத்தைاِخْوَانًاசகோதரர்களாகعَلٰى سُرُرٍகட்டில்கள் மீதுمُّتَقٰبِلِيْنَ‏ஒருவர் ஒருவரை முகம் நோக்கியவர்களாக
வ னZஜஃனா ம Fபீ ஸுதூரிஹிம் மின் கில்லின் இக்வானன் 'அலா ஸுருரிம் முதகாBபிலீன்
மேலும், அவர்களுடைய நெஞ்சங்களிலிருந்து குரோதத்தை நாம் நீக்கி விடுவோம்; (எல்லோரும்) சகோதரர்களாக ஒருவரையொருவர் முன்னோக்கி அரியாசனங்களில் (ஆனந்தமாக) அமர்ந்திருப்பார்கள்.
لَا یَمَسُّهُمْ فِیْهَا نَصَبٌ وَّمَا هُمْ مِّنْهَا بِمُخْرَجِیْنَ ۟
لَا يَمَسُّهُمْஏற்படாது / அவர்களுக்குفِيْهَاஅதில்نَـصَبٌசிரமம்وَّمَاஇன்னும் இல்லைهُمْஅவர்கள்مِّنْهَاஅதிலிருந்துبِمُخْرَجِيْنَ‏வெளியேற்றப்படுபவர்களாக
லா யமஸ் ஸுஹும் Fபீஹா னஸBபு(ன்)வ் வமா ஹும் மின்ஹா Bபிமுக்ரஜீன்
அவற்றில் அவர்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாது; அவற்றிலிருந்து அவர்கள் வெளியேற்றப்படுபவர்களுமல்லர்.
نَبِّئْ عِبَادِیْۤ اَنِّیْۤ اَنَا الْغَفُوْرُ الرَّحِیْمُ ۟ۙ
نَبِّئْஅறிவிப்பீராகعِبَادِىْۤஎன் அடியார்களுக்குاَنِّىْۤ اَنَاநிச்சயமாக நான்தான்الْغَفُوْرُமகா மன்னிப்பாளன்الرَّحِيْمُۙ‏மகா கருணையாளன்
னBப்Bபி' 'இBபாதீ அன்ன்னீ அனல் கFபூருர் ரஹீம்
(நபியே!) என் அடியார்களிடம் அறிவிப்பீராக: “நிச்சயமாக நான் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க அன்புடையவனாகவும் இருக்கின்றேன்.”
وَاَنَّ عَذَابِیْ هُوَ الْعَذَابُ الْاَلِیْمُ ۟
وَاَنَّஇன்னும் நிச்சயமாகعَذَابِىْ هُوَஎன் வேதனைதான்الْعَذَابُவேதனைالْاَلِيْمُ‏துன்புறுத்தக்கூடியது
வ அன்ன 'அதாBபீ ஹுவல் 'அதாBபுல் அலீம்
“(ஆயினும்) நிச்சயமாக என்னுடைய வேதனையும் நோவினைமிக்கதாகவே இருக்கும்” (என்றும் சொல்லும்).
وَنَبِّئْهُمْ عَنْ ضَیْفِ اِبْرٰهِیْمَ ۟ۘ
وَنَبِّئْهُمْஅறிவிப்பீராக/அவர்களுக்குعَنْ ضَيْفِவிருந்தாளிகள் பற்றிاِبْرٰهِيْمَ‌ۘ‏இப்றாஹீமுடைய
வ னBப்Bபி'ஹும் 'அன் ளய்Fபி இBப்ராஹீம்
இன்னும், இப்ராஹீமின் விருந்தினர்களைப் பற்றியும் அவர்களுக்கு அறிவிப்பீராக!
اِذْ دَخَلُوْا عَلَیْهِ فَقَالُوْا سَلٰمًا ؕ قَالَ اِنَّا مِنْكُمْ وَجِلُوْنَ ۟
اِذْ دَخَلُوْاஅவர்கள் நுழைந்த போதுعَلَيْهِஅவரிடம்فَقَالُوْاகூறினர்سَلٰمًاؕஸலாம்قَالَகூறினார்اِنَّاநிச்சயமாக நாங்கள்مِنْكُمْஉங்களைப் பற்றிوَجِلُوْنَ‏பயமுள்ளவர்கள்
இத் தகலூ 'அலய்ஹி Fபகாலூ ஸலாமன் கால இன்னா மின்கும் வஜிலூன்
அவர்கள் அவரிடம் வந்து, “உங்களுக்குச் சாந்தி (ஸலாமுன்) உண்டாவதாக!” என்று சொன்ன போது அவர், “நாம் உங்களைப்பற்றி பயப்படுகிறோம்” என்று கூறினார்.
قَالُوْا لَا تَوْجَلْ اِنَّا نُبَشِّرُكَ بِغُلٰمٍ عَلِیْمٍ ۟
قَالُوْاகூறினார்கள்لَا تَوْجَلْபயப்படாதீர்اِنَّاநிச்சயமாக நாம்نُبَشِّرُநற்செய்திகூறுகிறோம்كَஉமக்குبِغُلٰمٍஒரு மகனைக் கொண்டுعَلِيْمٍ‏அறிஞர்
காலூ ல தவ்ஜல் இன்னா னுBபஷ்ஷிருக Bபிகுலாமின் 'அலீம்
அதற்கு அவர்கள், “பயப்படாதீர்! நாம் உமக்கு மிக்க ஞானமுள்ள ஒரு மகனைப் பற்றி நன்மாராயம் கூறு(வதற்காகவே வந்திருக்)கின்றோம்” என்று கூறினார்கள்.
قَالَ اَبَشَّرْتُمُوْنِیْ عَلٰۤی اَنْ مَّسَّنِیَ الْكِبَرُ فَبِمَ تُبَشِّرُوْنَ ۟
قَالَகூறினார்اَبَشَّرْتُمُوْنِىْஎனக்கு நற்செய்தி கூறுகிறீர்களா?عَلٰٓى اَنْ مَّسَّنِىَஎனக்கு ஏற்பட்டிருக்கالْكِبَرُமுதுமைفَبِمَஎதைக் கொண்டு?تُبَشِّرُوْنَ‏நற்செய்தி கூறுகிறீர்கள்
கால அBபஷ்ஷர்துமூனீ 'அலா அம் மஸ்ஸனியல் கிBபரு FபBபிம துBபஷ்ஷிரூன்
அதற்கவர், “என்னை முதுமை வந்தடைந்திருக்கும்போதா எனக்கு நன்மாராயங் கூறுகிறீர்கள்? எந்த அடிப்படையில் நீங்கள் நன்மாராயங் கூறுகிறீர்கள்? உங்கள் நற்செய்தி எதைப்பற்றியது?” எனக் கேட்டார்.
قَالُوْا بَشَّرْنٰكَ بِالْحَقِّ فَلَا تَكُنْ مِّنَ الْقٰنِطِیْنَ ۟
قَالُوْاகூறினார்கள்بَشَّرْنٰكَநற்செய்தி கூறினோம்/உமக்குبِالْحَـقِّஉண்மையைக் கொண்டுفَلَا تَكُنْஆகவே ஆகிவிடாதீர்مِّنَ الْقٰنِطِيْنَ‏அவநம்பிக்கையாளர்களில்
காலூ Bபஷ்ஷர்னாக Bபில்ஹக்கி Fபலா தகும் மினல் கானிதீன்
அதற்கவர்கள், “மெய்யாகவே, நாங்கள் உமக்கு நன்மாராயங் கூறினோம்; ஆகவே நீர் (அதுபற்றி) நிராசை கொண்டோரில் ஒருவராகி விடாதீர்!” என்று கூறினார்கள்.
قَالَ وَمَنْ یَّقْنَطُ مِنْ رَّحْمَةِ رَبِّهٖۤ اِلَّا الضَّآلُّوْنَ ۟
قَالَகூறினார்وَمَنْயார்?يَّقْنَطُஅவநம்பிக்கை கொள்வார்مِنْ رَّحْمَةِஅருளில் இருந்துرَبِّهٖۤதன் இறைவனின்اِلَّاதவிரالضَّآلُّوْنَ‏வழிகெட்டவர்கள்
கால வ மய் யக்னது மிர் ரஹ்மதி ரBப்Bபிஹீ இல்லள் ளாலூன்
“வழிகெட்டவர்களைத் தவிர, வேறெவர் தம் இறைவனுடைய அருளைப்பற்றி நிராசை கொள்வர்” என்று (இப்ராஹீம் பதில்) சொன்னார்,
قَالَ فَمَا خَطْبُكُمْ اَیُّهَا الْمُرْسَلُوْنَ ۟
قَالَகூறினார்فَمَاஎன்ன?خَطْبُكُمْஉங்கள் காரியம்اَيُّهَا الْمُرْسَلُوْنَ‏தூதர்களே!
கால Fபமா கத்Bபுகும் அய்யுஹல் முர்ஸலூன்
“(அல்லாஹ்வின்) தூதர்களே! உங்களுடைய காரியமென்ன?” என்று (இப்ராஹீம்) கேட்டார்.
قَالُوْۤا اِنَّاۤ اُرْسِلْنَاۤ اِلٰی قَوْمٍ مُّجْرِمِیْنَ ۟ۙ
قَالُـوْۤاகூறினார்கள்اِنَّاۤநிச்சயமாக நாங்கள்اُرْسِلْنَاۤஅனுப்பப்பட்டோம்اِلٰىபக்கம்قَوْمٍமக்களின்مُّجْرِمِيْنَۙ‏குற்றம் புரிகின்றவர்கள்
காலூ இன்னா உர்ஸில்னா இலா கவ்மிம் முஜ்ரிமீன்
அதற்கவர்கள், “குற்றவாளிகளான ஒரு கூட்டத்தாரிடம் நாங்கள் அனுப்பப்பட்டுள்ளோம்.
اِلَّاۤ اٰلَ لُوْطٍ ؕ اِنَّا لَمُنَجُّوْهُمْ اَجْمَعِیْنَ ۟ۙ
اِلَّاۤதவிரاٰلَகுடும்பத்தார்لُوْطٍؕலூத்துடையاِنَّاநிச்சயமாக நாங்கள்لَمُنَجُّوْபாதுகாப்பவர்கள்தான்هُمْஅவர்களைاَجْمَعِيْنَۙ‏அனைவரையும்
இல்லா ஆல லூத்; இன்னா லமுனஜ்ஜூஹும் அஜ்ம'ஈன்
“லூத்தின் கிளையாரைத் தவிர, அவர்களனைவரையும் நிச்சயமாக நாம் காப்பாற்றுவோம்.
اِلَّا امْرَاَتَهٗ قَدَّرْنَاۤ ۙ اِنَّهَا لَمِنَ الْغٰبِرِیْنَ ۟۠
اِلَّاதவிரامْرَاَتَهٗஅவருடைய மனைவிقَدَّرْنَاۤ ۙமுடிவு செய்தோம்اِنَّهَاநிச்சயமாக அவள்لَمِنَ الْغٰبِرِيْنَ‏தங்கிவிடுபவர்களில்தான்
இல்லம் ர அதஹூ கத்தர்னா இன்னஹா லமினல் காBபிரீன்
ஆனால் அவர் (லூத்) உடைய மனைவியைத் தவிர - நிச்சயமாக அவள் (காஃபிர்களின் கூட்டத்தாரோடு) பின்தங்கியிருப்பாள் என்று நாம் நிர்ணயித்து விட்டோம்” என்று (வானவர்கள்) கூறினார்கள்.  
فَلَمَّا جَآءَ اٰلَ لُوْطِ لْمُرْسَلُوْنَ ۟ۙ
فَلَمَّا جَآءَவந்த போதுاٰلَகுடும்பத்தார்لُوْطِலூத்துடையۨالْمُرْسَلُوْنَۙ‏தூதர்கள்
Fபலம்ம ஜா'அ ஆல லூதினில் முர்ஸலூன்
(இறுதியில்) அத்தூதர்கள் லூத்துடைய கிளையாரிடம் வந்த போது.
قَالَ اِنَّكُمْ قَوْمٌ مُّنْكَرُوْنَ ۟
قَالَகூறினார்اِنَّـكُمْநிச்சயமாக நீங்கள்قَوْمٌகூட்டம்مُّنْكَرُوْنَ‏அறியப்படாதவர்கள்
கால இன்னகும் கவ்மும் முன்கரூன்
(அவர்களை நோக்கி எனக்கு) அறிமுகமில்லாத மக்களாக நீங்கள் இருக்கிறீர்கள்” என்று (லூத்) சொன்னார்,
قَالُوْا بَلْ جِئْنٰكَ بِمَا كَانُوْا فِیْهِ یَمْتَرُوْنَ ۟
قَالُوْاகூறினர்بَلْமாறாகجِئْنٰكَவந்துள்ளோம்/உம்மிடம்بِمَاஎதைக் கொண்டுكَانُوْاஇருந்தனர்فِيْهِஅதில்يَمْتَرُوْنَ‏சந்தேகிக்கின்றனர்
காலூ Bபல் ஜி'னாக Bபிமா கானூ Fபீஹி யம்தரூன்
(அதற்கு அவர்கள்,) “அல்ல, (உம் கூட்டதாராகிய) இவர்கள் எதைச் சந்தேகித்தார்களோ, அதை நாம் உம்மிடம் கொண்டு வந்திருக்கிறோம்;
وَاَتَیْنٰكَ بِالْحَقِّ وَاِنَّا لَصٰدِقُوْنَ ۟
وَ اَتَيْنٰكَஇன்னும் வந்துள்ளோம் / உம்மிடம்بِالْحَـقِّஉண்மையைக் கொண்டுوَاِنَّاநிச்சயமாக நாம்لَصٰدِقُوْنَ‏உண்மையாளர்கள்தான்
வ அதய்னாக Bபில்ஹக்கி வ இன்னா லஸாதிகூன்
(உறுதியாக நிகழவிருக்கும்) உண்மையையே உம்மிடம் நாங்கள் கொண்டு வந்திருக்கின்றோம்; நிச்சயமாக நாங்கள் உண்மையாளர்களாகவே இருக்கிறோம்.
فَاَسْرِ بِاَهْلِكَ بِقِطْعٍ مِّنَ الَّیْلِ وَاتَّبِعْ اَدْبَارَهُمْ وَلَا یَلْتَفِتْ مِنْكُمْ اَحَدٌ وَّامْضُوْا حَیْثُ تُؤْمَرُوْنَ ۟
فَاَسْرِஆகவே, செல்வீராகبِاَهْلِكَஉமது குடும்பத்தினருடன்بِقِطْعٍஒரு பகுதியில்مِّنَ الَّيْلِஇரவின்وَاتَّبِعْஇன்னும் பின்பற்றுவீராகاَدْبَارَهُمْஅவர்களுக்குப் பின்னால்وَلَا يَلْـتَفِتْதிரும்பிப் பார்க்கவேண்டாம்مِنْكُمْஉங்களில்اَحَدٌஒருவரும்وَّامْضُوْاஇன்னும் செல்லுங்கள்حَيْثُஇடத்திற்குتُؤْمَرُوْنَ‏ஏவப்பட்டீர்கள்
Fப அஸ்ரி Bபி அஹ்லிக Bபிகித்'இம் மினல் லய்லி வத்தBபிஃ அத்Bபாரஹும் வலா யல்தFபித் மின்கும் அஹது(ன்)வ் வம்ளூ ஹய்து து'மரூன்
ஆகவே இரவில் ஒரு பகுதியில் உம்முடைய குடும்பத்தினருடன் நடந்து சென்று விடும்; அன்றியும் (அவர்களை முன்னால் செல்ல விட்டு) அவர்கள் பின்னே நீர் தொடர்ந்து செல்லும். உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். நீங்கள் ஏவப்படும் இடத்திற்கு சென்று விடுங்கள் என்று அ(த் தூது)வர்கள் கூறினார்கள்.
وَقَضَیْنَاۤ اِلَیْهِ ذٰلِكَ الْاَمْرَ اَنَّ دَابِرَ هٰۤؤُلَآءِ مَقْطُوْعٌ مُّصْبِحِیْنَ ۟
وَقَضَيْنَاۤமுடிவு செய்தோம்اِلَيْهِஅவருக்குذٰ لِكَஅதுالْاَمْرَகாரியம்اَنَّ دَابِرَநிச்சயமாக வேர்هٰٓؤُلَاۤءِஇவர்களின்مَقْطُوْعٌதுண்டிக்கப்படும்مُّصْبِحِيْنَ‏விடிந்தவர்களாக
வ களய்னா இலய்ஹி தாலிகல் அம்ர அன்ன தாBபிர ஹா'உலா'இ மக்தூ'உம் முஸ்Bபிஹீன்
மேலும், “இவர்கள் யாவரும் அதிகாலையிலேயே நிச்சயமாக வேரறுக்கப்பட்டு விடுவார்கள் (என்னும்) அக்காரியத்தையும் நாம் முடிவாக அவருக்கு அறிவித்தோம்”.
وَجَآءَ اَهْلُ الْمَدِیْنَةِ یَسْتَبْشِرُوْنَ ۟
وَجَآءَவந்தார்(கள்)اَهْلُ الْمَدِيْنَةِஅந்நகரவாசிகள்يَسْتَـبْشِرُوْنَ‏மகிழ்ச்சியடைந்தவர்களாக
வ ஜா'அ அஹ்லுல் மதீனதி யஸ்தBப்ஷிரூன்
(லூத்தின் விருந்தினர்களாக வாலிபர்கள் வந்திருப்பதையறிந்து) அந் நகரத்து மக்கள் மிக்க மகிழ்ச்சியுடன் வந்து சேர்ந்தார்கள்.
قَالَ اِنَّ هٰۤؤُلَآءِ ضَیْفِیْ فَلَا تَفْضَحُوْنِ ۟ۙ
قَالَகூறினார்اِنَّ هٰٓؤُلَاۤءِநிச்சயமாக இவர்கள்ضَيْفِىْஎன் விருந்தினர்فَلَا تَفْضَحُوْنِۙ‏ஆகவே அவமானப் படுத்தாதீர்கள் / என்னை
கால இன்ன ஹா'உலா'இ ளய்Fபீ Fபலா தFப்ளஹூன்
(லூத் வந்தவர்களை நோக்கி:) “நிச்சயமாக இவர்கள் என்னுடைய விருந்தினர்கள். ஆகவே, (அவர்கள் முன்) என்னை நீங்கள் அவமானப்படுத்தி விடாதீர்கள்;”
وَاتَّقُوا اللّٰهَ وَلَا تُخْزُوْنِ ۟
وَاتَّقُواஇன்னும் அஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَلَا تُخْزُوْنِ‏இன்னும் இழிவு படுத்தாதீர்கள் / என்னை
வத்தகுல் லாஹ வலா துக்Zஜூன்
“அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். என்னைக் கேவலப்படுத்தி விடாதீர்கள்” என்றும் கூறினார்.
قَالُوْۤا اَوَلَمْ نَنْهَكَ عَنِ الْعٰلَمِیْنَ ۟
قَالُـوْۤاகூறினர்اَوَلَمْநாம் தடுக்கவில்லையா?نَـنْهَكَஉம்மைعَنِ الْعٰلَمِيْنَ‏உலகமக்களை விட்டு
காலூ அவலம் னன்ஹக 'அனில் 'ஆலமீன்
அதற்கவர்கள், “உலக மக்களைப் பற்றியெல்லாம் (எங்களிடம் பேசுவதை விட்டும்) நாங்கள் உம்மைத் தடுக்கவில்லையா?” என்று கேட்டார்கள்.
قَالَ هٰۤؤُلَآءِ بَنٰتِیْۤ اِنْ كُنْتُمْ فٰعِلِیْنَ ۟ؕ
قَالَகூறினார்هٰٓؤُلَاۤءِஇவர்கள்بَنٰتِىْۤஎன் பெண் மக்கள்اِنْ كُنْـتُمْநீங்கள் இருந்தால்فٰعِلِيْنَؕ‏செய்பவர்களாக
கால ஹா'உலா'இ Bபனாதீ இன் குன்தும் Fபா'இலீன்
அதற்கவர், “இதோ! என் புதல்வியர் இருக்கிறார்கள். நீங்கள் (ஏதும்) செய்தே தீர வேண்டுமெனக் கருதினால் (இவர்களை திருமணம்) செய்து கொள்ளலாம்” என்று கூறினார்.
لَعَمْرُكَ اِنَّهُمْ لَفِیْ سَكْرَتِهِمْ یَعْمَهُوْنَ ۟
لَعَمْرُكَஉம்வாழ்வின்சத்தியம்اِنَّهُمْநிச்சயமாக இவர்கள்لَفِىْ سَكْرَتِهِمْதங்கள் மயக்கத்தில்يَعْمَهُوْنَ‏தடுமாறுகின்றனர்
ல'அம்ருக இன்னஹும் லFபீ ஸக்ரதிஹிம் யஃமஹூன்
(நபியே!) உம் உயிர் மீது சத்தியமாக, நிச்சயமாக அவர்கள் தம் மதிமயக்கத்தில் தட்டழிந்து கொண்டிருந்தார்கள்.
فَاَخَذَتْهُمُ الصَّیْحَةُ مُشْرِقِیْنَ ۟ۙ
فَاَخَذَتْهُمُஆகவே, அவர்களைப் பிடித்ததுالصَّيْحَةُசப்தம்,இடிமுழக்கம்مُشْرِقِيْنَۙ‏வெளிச்சமடைந்தவர்களாக
Fப அகதத் ஹுமுஸ் ஸய்ஹது முஷ்ரிகீன்
ஆகவே, பொழுது உதிக்கும் வேளையில், அவர்களை பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது.
فَجَعَلْنَا عَالِیَهَا سَافِلَهَا وَاَمْطَرْنَا عَلَیْهِمْ حِجَارَةً مِّنْ سِجِّیْلٍ ۟ؕ
فَجَعَلْنَاஆக்கினோம்عَالِيـَهَاஅதன் மேல் புறத்தைسَافِلَهَاஅதன் கீழ்ப்புறமாகوَ اَمْطَرْنَاஇன்னும் பொழிந்தோம்عَلَيْهِمْஅவர்கள் மீதுحِجَارَةًகல்லைمِّنْ سِجِّيْلٍؕ‏களிமண்ணின்
Fபஜ'அல்னா 'ஆலியஹா ஸாFபிலஹா வ அம்தர்னா 'அலய்ஹிம் ஹிஜாரதம் மின் ஸிஜ்ஜீல்
பின்பு அவர்களுடைய ஊரை மேல் கீழாகப் புரட்டி விட்டோம்; இன்னும், அவர்கள் மேல் சுடப்பட்ட களிமண்ணாலான கற்களைப் பொழியச் செய்தோம்.
اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّلْمُتَوَسِّمِیْنَ ۟
اِنَّநிச்சயமாகفِىْ ذٰ لِكَஇதில்لَاٰيٰتٍஅத்தாட்சிகள்لِّـلْمُتَوَسِّمِيْنَ‏நுண்ணறி வாளர்களுக்கு
இன்ன Fபீ தாலிக ல ஆயாதில் லில்முதவஸ்ஸிமீன்
நிச்சயமாக இதில் சிந்தனையுடையோருக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
وَاِنَّهَا لَبِسَبِیْلٍ مُّقِیْمٍ ۟
وَاِنَّهَاநிச்சயமாக அதுلَبِسَبِيْلٍபாதையில்مُّقِيْمٍ‏நிலையான, தெளிவான
வ இன்னஹா லBபி ஸBபீலிம் முகீம்
நிச்சயமாக அவ்வூர் (நீங்கள் பயணத்தில்) வரப்போகும் வழியில்தான் இருக்கிறது.
اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً لِّلْمُؤْمِنِیْنَ ۟ؕ
اِنَّ فِىْ ذٰلِكَநிச்சயமாக/அதில்لَاٰيَةًஓர் அத்தாட்சிلِّـلْمُؤْمِنِيْنَؕ‏நம்பிக்கையாளர்களுக்கு
இன்ன Fபீ தாலிக ல ஆயதல் லில்மு'மினீன்
திடமாக முஃமின்களுக்கு இதில் (தகுந்த) அத்தாட்சி இருக்கிறது.
وَاِنْ كَانَ اَصْحٰبُ الْاَیْكَةِ لَظٰلِمِیْنَ ۟ۙ
وَاِنْ كَانَநிச்சயமாக இருந்தார்(கள்)اَصْحٰبُ الْاَيْكَةِதோப்புடையவர்கள்لَظٰلِمِيْنَۙ‏அநியாயக்காரர்களாகவே
வ இன் கான அஸ்ஹாBபுல் அய்கதி லளாலிமீன்
இன்னும், அடர்ந்த சோலைகளில் வசித்திருந்த (ஷுஐபுடைய) சமூகத்தாரும் அக்கிரமக்காரர்களாக இருந்தனர்.
فَانْتَقَمْنَا مِنْهُمْ ۘ وَاِنَّهُمَا لَبِاِمَامٍ مُّبِیْنٍ ۟ؕ۠
فَانْتَقَمْنَاஆகவே பழிவாங்கினோம்مِنْهُمْ‌ۘஅவர்களைوَاِنَّهُمَاநிச்சயமாக அவ்விரண்டும்لَبِاِمَامٍவழியில்தான்مُّبِيْنٍؕதெளிவானது
Fபன்தகம்னா மின்ஹும் வ இன்னஹுமா லBபி இமாமிம் முBபீன்
எனவே அவர்களிடமும் நாம் பழிவாங்கினோம்; (அழிந்த) இவ்விரு (மக்களின்) ஊர்களும் பகிரங்கமான (போக்குவரத்து) வழியில் தான் இருக்கின்றன.  
وَلَقَدْ كَذَّبَ اَصْحٰبُ الْحِجْرِ الْمُرْسَلِیْنَ ۟ۙ
وَلَـقَدْதிட்டவட்டமாகكَذَّبَபொய்ப்பித்தார்(கள்)اَصْحٰبُ الْحِجْرِஹிஜ்ர் வாசிகள்الْمُرْسَلِيْنَۙ‏தூதர்களை
வ லகத் கத்தBப அஸ்ஹாBபுல் ஹிஜ்ரில் முர்ஸலீன்
(இவ்வாறே ஸமூது சமூகத்தாரான) மலைப்பாறை வாசிகளும் (நம்) தூதர்களைப் பொய்யாக்கிக் கொண்டிருந்தனர்.
وَاٰتَیْنٰهُمْ اٰیٰتِنَا فَكَانُوْا عَنْهَا مُعْرِضِیْنَ ۟ۙ
وَاٰتَيْنٰهُمْகொடுத்தோம்/அவர்களுக்குاٰيٰتِنَاநம் அத்தாட்சிகளைفَكَانُوْاஇருந்தனர்عَنْهَاஅவற்றைمُعْرِضِيْنَۙ‏புறக்கணித்தவர்களாக
வ ஆதய்னாஹும் ஆயாதினா Fபகானூ 'அன்ஹா முஃரிளீன்
அவர்களுக்கு நாம் நம் அத்தாட்சிகளைக் கொடுத்தோம்; அவர்கள் அவற்றைப் புறக்கணித்தவர்களாகவே இருந்தார்கள்.
وَكَانُوْا یَنْحِتُوْنَ مِنَ الْجِبَالِ بُیُوْتًا اٰمِنِیْنَ ۟
وَكَانُوْاஇன்னும் இருந்தனர்يَنْحِتُوْنَகுடைகின்றனர்مِنَ الْجِبَالِ بُيُوْتًاமலைகளில்/வீடுகளைاٰمِنِيْنَ‏அச்சமற்றவர்களாக
வ கானூ யன்ஹிதூன மினல் ஜிBபாலி Bபுயூதன் ஆமினீன்
அச்சமற்றுப் பாதுகாப்பாக வாழலாம் எனக்கருதி, அவர்கள் மலைகளைக் குடைந்து வீடுகளை அமைத்துக் கொண்டார்கள்.
فَاَخَذَتْهُمُ الصَّیْحَةُ مُصْبِحِیْنَ ۟ۙ
فَاَخَذَتْهُمُஅவர்களைப் பிடித்ததுالصَّيْحَةُசப்தம்مُصْبِحِيْنَۙ‏பொழுது விடிந்தவர்களாக இருக்க
Fப அகதத் ஹுமுஸ் ஸய்ஹது முஸ்Bபிஹீன்
ஆனால், அவர்களையும் அதிகாலையில் பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது,
فَمَاۤ اَغْنٰی عَنْهُمْ مَّا كَانُوْا یَكْسِبُوْنَ ۟ؕ
فَمَاۤ اَغْنٰىதடுக்கவில்லைعَنْهُمْஅவர்களை விட்டும்مَّاஎவைكَانُوْاஇருந்தனர்يَكْسِبُوْنَؕ‏செய்வார்கள்
Fபமா அக்னா 'அன்ஹும் மா கானூ யக்ஸிBபூன்
அப்போது அவர்கள் (தம் பாதுகாப்புக்கென) அமைத்துக் கொண்டிருந்தவை எதுவும் அவர்களுக்கு ஒரு பலனும் அளிக்கவில்லை.
وَمَا خَلَقْنَا السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَیْنَهُمَاۤ اِلَّا بِالْحَقِّ ؕ وَاِنَّ السَّاعَةَ لَاٰتِیَةٌ فَاصْفَحِ الصَّفْحَ الْجَمِیْلَ ۟
وَمَا خَلَقْنَاநாம் படைக்கவில்லைالسَّمٰوٰتِவானங்களைوَالْاَرْضَஇன்னும் பூமியைوَمَا بَيْنَهُمَاۤஇன்னும் அவை இரண்டிற்கு மத்தியிலுள்ளவைاِلَّا بِالْحَـقِّ‌ ؕஉண்மையான நோக்கத்திற்கே தவிரوَاِنَّநிச்சயம்السَّاعَةَமறுமைلَاٰتِيَةٌ‌வரக்கூடியதேفَاصْفَحِஆகவே புறக்கணிப்பீராகالصَّفْحَபுறக்கணிப்பாகالْجَمِيْلَ‏அழகியது
வமா கலக்னஸ் ஸமாவாதி வல் அர்ள வமா Bபய்னஹுமா இல்லா Bபில்ஹக்க்; வ இன்னஸ் ஸா'அத ல ஆதியதுன் Fபஸ்Fபஹிஸ் ஸFப்ஹல் ஜமீல்
நாம் வானங்களையும், பூமியையும், இவை இரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் உண்மையைக் கொண்டே அல்லாது படைக்கவில்லை. (நபியே! இவர்களுடைய தண்டனைக்குரிய) காலம் நிச்சயமாக வருவதாகவே உள்ளது; ஆதலால் (இவர்களின் தவறுகளை) முற்றாகப் புறக்கணித்துவிடும்.
اِنَّ رَبَّكَ هُوَ الْخَلّٰقُ الْعَلِیْمُ ۟
اِنَّ رَبَّكَ هُوَநிச்சயமாக/உம் இறைவன்தான்الْخَـلّٰقُமகா படைப்பாளன்الْعَلِيْمُ‏நன்கறிந்தவன்
இன்ன ரBப்Bபக ஹுவல் கல்லாகுல் 'அலீம்
நிச்சயமாக உம்முடைய இறைவன் (எல்லாவற்றையும்) படைத்தவனாகவும், அனைத்தையும் அறிந்தவனாகவும் இருக்கின்றான்.
وَلَقَدْ اٰتَیْنٰكَ سَبْعًا مِّنَ الْمَثَانِیْ وَالْقُرْاٰنَ الْعَظِیْمَ ۟
وَلَـقَدْதிட்டவட்டமாகاٰتَيْنٰكَகொடுத்தோம்/உமக்குسَبْعًاஏழு வசனங்களைمِّنَ الْمَـثَانِىْமீண்டும் மீண்டும் ஓதப்படுகின்ற வசனங்களில்وَالْـقُرْاٰنَஇன்னும் குர்ஆனைالْعَظِيْمَ‏மகத்துவமிக்கது
வ லகத் ஆதய்னாக ஸBப்'அம் மினல் மதானீ வல் குர்ஆனல் 'அளீம்
(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு திரும்பத் திரும்ப ஓதக் கூடிய (ஸுரத்துல் ஃபாத்திஹாவின்) ஏழு வசனங்களையும், மகத்தான (இந்த) குர்ஆனையும் வழங்கியிருக்கின்றோம்.
لَا تَمُدَّنَّ عَیْنَیْكَ اِلٰی مَا مَتَّعْنَا بِهٖۤ اَزْوَاجًا مِّنْهُمْ وَلَا تَحْزَنْ عَلَیْهِمْ وَاخْفِضْ جَنَاحَكَ لِلْمُؤْمِنِیْنَ ۟
لَا تَمُدَّنَّகண்டிப்பாக நீட்டாதீர்عَيْنَيْكَஉம் இரு கண்களைاِلٰىபக்கம்مَاஎதைمَتَّعْنَاசுகமளித்தோம்بِهٖۤஅதைக் கொண்டுاَزْوَاجًاசில வகையினர்களுக்குمِّنْهُمْஇவர்களில்وَلَا تَحْزَنْஇன்னும் கவலைப்படாதீர்عَلَيْهِمْஅவர்கள் மீதுوَاخْفِضْஇன்னும் தாழ்த்துவீராகجَنَاحَكَஉமது புஜத்தைلِلْمُؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களுக்கு
லா தமுத்தன்ன 'அய்னய்க இலா மா மத்தஃனா Bபிஹீ அZஜ்வாஜம் மின்ஹும் வலா தஹ்Zஜன் 'அலய்ஹிம் வக்Fபிள் ஜனாஹக லில்மு 'மினீன்
அவர்களிலிருந்து, சில வகுப்பினரை இவ்வுலகில் எவற்றைக் கொண்டு சுகம் அனுபவிக்க நாம் செய்திருக்கின்றோமோ அவற்றின் பால் நீர் உமது கண்களை நீட்டாதீர்; அவர்களுக்காக நீர் துக்கப்படவும் வேண்டாம்; ஆனால் உம் (அன்பென்னும்) இறக்கையை முஃமின்கள் மீது இறக்கும்.
وَقُلْ اِنِّیْۤ اَنَا النَّذِیْرُ الْمُبِیْنُ ۟ۚ
وَقُلْகூறுவீராகاِنِّىْۤ اَنَاநிச்சயமாக நான்தான்النَّذِيْرُஎச்சரிப்பாளன்الْمُبِيْنُ‌ۚ‏தெளிவானவன்
வ குல் இன்னீ அனன் னதீருல் முBபீன்
“பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிப்பவனாக நிச்சயமாக நான் இருக்கின்றேன்” என்று நீர் கூறுவீராக;
كَمَاۤ اَنْزَلْنَا عَلَی الْمُقْتَسِمِیْنَ ۟ۙ
كَمَاۤ اَنْزَلْنَاநாம் இறக்கியது போன்றேعَلَىமீதுالْمُقْتَسِمِيْنَۙ‏பிரித்தவர்கள்
கமா அன்Zஜல்னா 'அலல் முக்தஸிமீன்
(நபியே! முன் வேதங்களை) பலவாறாகப் பிரித்தவர்கள் மீது முன்னர் நாம் (வேதனையை) இறக்கியவாறே,
الَّذِیْنَ جَعَلُوا الْقُرْاٰنَ عِضِیْنَ ۟
الَّذِيْنَஎவர்கள்جَعَلُواஆக்கினார்கள்الْـقُرْاٰنَகுர்ஆனைعِضِيْنَ‏பல வகைகளாக
அல்லதீன ஜ'அலுல் குர்'ஆன'இளீன்
இந்த குர்ஆனை பலவாறாகப் பிரிப்போர் மீதும் (வேதனையை இறக்கி வைப்போம்).
فَوَرَبِّكَ لَنَسْـَٔلَنَّهُمْ اَجْمَعِیْنَ ۟ۙ
فَوَرَبِّكَஉம் இறைவன் மீது சத்தியமாகلَـنَسْـٴَــلَـنَّهُمْநிச்சயமாக அவர்களை விசாரிப்போம்اَجْمَعِيْنَۙ‏அனைவரையும்
Fபவ ரBப்Bபிக லனஸ்'அ லன்னஹும் அஜ்ம'ஈன்
உம் இறைவன் மீது ஆணையாக, நிச்சயமாக நாம் அவர்களனைவரையும் விசாரிப்போம்.
عَمَّا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
عَمَّاபற்றிكَانُوْاஇருந்தனர்يَعْمَلُوْنَ‏செய்கின்றனர்
'அம்மா கானூ யஃமலூன்
அவர்கள் செய்து கொண்டிருந்த (எல்லாச்) செயல்களைப் பற்றியும், (நாம் விசாரிப்போம்).
فَاصْدَعْ بِمَا تُؤْمَرُ وَاَعْرِضْ عَنِ الْمُشْرِكِیْنَ ۟
فَاصْدَعْஆகவே தெளிவுடன் பகிரங்கப்படுத்துவீராகبِمَاஎதைتُؤْمَرُநீர் ஏவப்படுகிறீர்وَ اَعْرِضْஇன்னும் புறக்கணிப்பீராகعَنِ الْمُشْرِكِيْنَ‏இணைவைப்பவர்களை
Fபஸ்தஃ Bபிமா து'மரு வ அஃரிள் அனில் முஷ்ரிகீன்
ஆதலால் உமக்குக் கட்டளையிடப் பட்டிருப்பதை வெளிப்படையாக அவர்களுக்கு அறிவிப்பீராக; இணைவைத்து வணங்குபவர்களை புறக்கணித்துவிடுவீராக!
اِنَّا كَفَیْنٰكَ الْمُسْتَهْزِءِیْنَ ۟ۙ
اِنَّاநிச்சயமாக நாம்كَفَيْنٰكَபாதுகாத்தோம்/ உம்மைالْمُسْتَهْزِءِيْنَۙ‏பரிகசிப்பவர்களிடமிருந்து
இன்னா கFபய்னாகல் முஸ்தஹ்Zஜி'ஈன்
உம்மை ஏளனம் செய்பவர்கள் சம்பந்தமாக நாமே உமக்குப் போதுமாக இருக்கின்றோம்.
الَّذِیْنَ یَجْعَلُوْنَ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ ۚ فَسَوْفَ یَعْلَمُوْنَ ۟
الَّذِيْنَஎவர்கள்يَجْعَلُوْنَஆக்குகிறார்கள்مَعَஉடன்اللّٰهِஅல்லாஹ்اِلٰهًاவணங்கப்படும் தெய்வத்தைاٰخَرَ‌ۚமற்றொருفَسَوْفَ يَعْلَمُوْنَ‏விரைவில்அறிவார்கள்
அல்லதீன யஜ்'அலூன ம'அல் லாஹி இலாஹன் ஆகர்; Fபஸவ்Fப யஃலமூன்
இவர்கள் எத்தகையோர் என்றால் அல்லாஹ்வுடன் வேறு தெய்வத்தையும் (இணை) ஆக்கிக் கொள்கிறார்கள்; (இதன் பலனை இவர்கள்) பின்னர் அறிந்து கொள்வார்கள்.
وَلَقَدْ نَعْلَمُ اَنَّكَ یَضِیْقُ صَدْرُكَ بِمَا یَقُوْلُوْنَ ۟ۙ
وَلَـقَدْதிட்டவட்டமாகنَـعْلَمُஅறிவோம்اَنَّكَநிச்சயமாக நீர்يَضِيْقُநெருக்கடிக்குள்ளாகிறதுصَدْرُكَஉம் நெஞ்சுبِمَا يَقُوْلُوْنَۙ‏அவர்கள் கூறுவதால்
வ லகத் னஃலமு அன்னக யளீகு ஸத்ருக Bபிமா யகூலூன்
(நபியே!) இவர்கள் (இழிவாகப்) பேசுவது உம் நெஞ்சத்தை எப்படி நெருக்குகிறது என்பதை நாம் அறிவோம்.
فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَكُنْ مِّنَ السّٰجِدِیْنَ ۟ۙ
فَسَبِّحْஆகவே துதிப்பீராகبِحَمْدِபுகழ்ந்துرَبِّكَஉம் இறைவனைوَكُنْஇன்னும் ஆகிவிடுவீராகمِّنَ السّٰجِدِيْنَۙ‏சிரம் பணிபவர்களில்
FபஸBப்Bபிஹ் Bபிஹம்தி ரBப்Bபிக வ கும் மினஸ் ஸாஜிதீன்
நீர் (அப்பேச்சைப் பொருட்படுத்தாது) உம் இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக! ஸுஜூது செய்(து சிரம் பணி)வோர்களில் நீரும் ஆகிவிடுவீராக!
وَاعْبُدْ رَبَّكَ حَتّٰی یَاْتِیَكَ الْیَقِیْنُ ۟۠
وَاعْبُدْவணங்குவீராகرَبَّكَஉம் இறைவனைحَتّٰى يَاْتِيَكَவரை/வரும்/உமக்குالْيَـقِيْنُ‏யகீன்
வஃBபுத் ரBப்Bபக ஹத்தா யாதியகல் யகீன்
உமக்கு மரணம் வரும்வரை உமது இறைவனை வணங்குவீராக!