79. ஸூரத்துந் நாஜிஆத் (பறிப்பவர்கள்)

மக்கீ, வசனங்கள்: 46

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
وَالنّٰزِعٰتِ غَرْقًا ۟ۙ
وَ النّٰزِعٰتِபறிப்பவற்றின் மீது சத்தியமாகغَرْقًاۙகடுமையாக
வன் னாZஜி 'ஆதி கர்கா
(பாவிகளின் உயிர்களை) கடினமாகப் பறிப்பவர்(களான மலக்கு)கள் மீது சத்தியமாக-
وَّالنّٰشِطٰتِ نَشْطًا ۟ۙ
وَّ النّٰشِطٰتِமேலும் மென்மையாக உருவி எடுப்பவர்கள் மீது சத்தியமாகنَشْطًاۙமென்மையாக உருவி எடுத்தல்
வன் னா ஷி தாதி னஷ்தா
(நல்லோர் உயிர்களை) இலேசாகக் கழற்றுபவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
وَّالسّٰبِحٰتِ سَبْحًا ۟ۙ
وَّ السّٰبِحٰتِநீந்திச் செல்பவற்றின் மீது சத்தியமாகسَبْحًاۙவேகமாக நீந்தி
வஸ்ஸ் ஸாBபி-ஹாதி ஸBப்ஹா
வேகமாக நீந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
فَالسّٰبِقٰتِ سَبْقًا ۟ۙ
فَالسّٰبِقٰتِபின்னர் முந்திச் செல்பவைسَبْقًاۙமுந்துதலாக
Fபஸ்ஸ் ஸாBபி காதி ஸBப்கா
முந்தி முந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
فَالْمُدَبِّرٰتِ اَمْرًا ۟ۘ
فَالْمُدَبِّرٰتِபின்னர் நிர்வகிப்பவர்கள்اَمْرًاۘகாரியத்தை
Fபல் மு தBப்-Bபி ராதி அம்ரா
ஒவ்வொரு காரியத்தையும் நிர்வகிப்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
یَوْمَ تَرْجُفُ الرَّاجِفَةُ ۟ۙ
یَوْمَஅந்நாளில்تَرْجُفُஅதிரும்الرَّاجِفَةُۙபேரதிர்ச்சி
யவ்ம தர்ஜுFபுர் ராஜிFபா
பூமி நடுக்கமாக நடுங்கும் அந்நாளில்:
تَتْبَعُهَا الرَّادِفَةُ ۟ؕ
تَتْبَعُهَاஅதனைத் தொடரும்الرَّادِفَةُؕஇரண்டாவது ஊதல்
தத்Bப'உ ஹர் ராதிFபா
அதனைத் தொடரும் (நில நடுக்கம்) தொடர்ந்து வரும்.
قُلُوْبٌ یَّوْمَىِٕذٍ وَّاجِفَةٌ ۟ۙ
قُلُوْبٌஉள்ளங்கள்یَّوْمَىِٕذٍஅந்நாளில்وَّاجِفَةٌۙநடுங்கும்
குலூBபு(ன்)ய்-யவ் மாஇதிவ்-வாஜி-Fபா
அந்நாளில் நெஞ்சங்கள் திடுக்கிட்டவையாக இருக்கும்.
اَبْصَارُهَا خَاشِعَةٌ ۟ۘ
اَبْصَارُهَاஅவற்றின் பார்வைகள்خَاشِعَةٌۘதாழ்ந்திருக்கும்
அBப்ஸா ருஹா கஷி'அஹ்
அவர்கள் பார்வைகள் (அச்சத்தால்) கீழ் நோக்கியிருக்கும்.
یَقُوْلُوْنَ ءَاِنَّا لَمَرْدُوْدُوْنَ فِی الْحَافِرَةِ ۟ؕ
یَقُوْلُوْنَஅவர்கள் கூறுகிறார்கள்ءَاِنَّاநிச்சயமாக நாம்لَمَرْدُوْدُوْنَநிச்சயமாகத் திருப்பப்படுவோமாفِیஇல்الْحَافِرَةِؕமுந்தைய நிலைக்கு
ய கூ லூன அ-இன்ன லமர் தூ தூன Fபில் ஹாFபிரஹ்
“நாம் நிச்சயமாக மண்ணறைகளிலிருந்து திரும்ப (எழுப்ப)ப் படுவோமா?” என்று கூறுகிறார்கள்.
ءَاِذَا كُنَّا عِظَامًا نَّخِرَةً ۟ؕ
ءَاِذَاஎன்ன! ... பொழுதா?كُنَّاநாங்கள் ஆகிவிட்டعِظَامًاஎலும்புகளாகنَّخِرَةًؕமக்கிப்போன
அய்தா குன்னா 'இளா மன்-னகிரஹ்
“மக்கிப் போன எலும்புகளாக நாம் ஆகிவிட்ட பொழுதிலுமா?”
قَالُوْا تِلْكَ اِذًا كَرَّةٌ خَاسِرَةٌ ۟ۘ
قَالُوْاஅவர்கள் கூறினார்கள்تِلْكَஅதுاِذًاஅப்படியானால்كَرَّةٌமீளுதல்خَاسِرَةٌۘநஷ்டமானது
காலு தில்க இதன் கர்ரதுன் காஸிரஹ்.
“அப்படியானால் அது பெரும் நஷ்ட முண்டாக்கும் திரும்புதலே யாகும்” என்றும் கூறுகின்றார்கள்.
فَاِنَّمَا هِیَ زَجْرَةٌ وَّاحِدَةٌ ۟ۙ
فَاِنَّمَاநிச்சயமாகهِیَஅதுزَجْرَةٌபேரொலிوَّاحِدَةٌۙஒரே
Fப இன்ன ம ஹிய Zஜஜ்ரதுவ்-வாஹிதா
ஆனால் (யுக முடிவுக்கு), அது நிச்சயமாக ஒரே ஒரு பயங்கர சப்தம் தான்-
فَاِذَا هُمْ بِالسَّاهِرَةِ ۟ؕ
فَاِذَاஅப்போதுهُمْஅவர்கள்بِالسَّاهِرَةِؕசமவெளியில்
Fப-இதா ஹும் Bபிஸ்ஸ் ஸாஹிரஹ்
அப்போது அவர்கள் (உயிர் பெற்றெழுந்து) ஒரு திடலில் சேகரமாய் விடுவார்கள்.
هَلْ اَتٰىكَ حَدِیْثُ مُوْسٰی ۟ۘ
هَلْவந்ததாاَتٰىكَஉமக்குحَدِیْثُசெய்திمُوْسٰیۘமூஸாவின்
ஹல் அதாக ஹதீது முஸா
(நபியே!) மூஸாவின் செய்தி உங்களுக்கு வந்ததா?
اِذْ نَادٰىهُ رَبُّهٗ بِالْوَادِ الْمُقَدَّسِ طُوًی ۟ۚ
اِذْஅப்பொழுதுنَادٰىهُஅவரை அழைத்தார்رَبُّهٗஅவருடைய இறைவன்بِالْوَادِபள்ளத்தாக்கில்الْمُقَدَّسِபுனிதமானطُوًیۚதுவா
இத் னதாஹு ரBப்Bபுஹு Bபில் வாதில்-முகத் தஸி துவா
“துவா” என்னும் புனித பள்ளத்தாக்கில் அவருடைய இறைவன் அவரை அழைத்து,
اِذْهَبْ اِلٰی فِرْعَوْنَ اِنَّهٗ طَغٰی ۟ؗۖ
اِذْهَبْநீர் செல்வீராகاِلٰیஇடம்فِرْعَوْنَஃபிர்அவ்ன்اِنَّهٗநிச்சயமாக அவன்طَغٰیؗۖவரம்பு மீறிவிட்டான்
இத்ஹBப் இலா Fபிர்'அவ்ன இன்னஹு தகா.
“நீர் ஃபிர்அவ்னிடம் செல்லும், நிச்சயமாக அவன் வரம்பு மீறி விட்டான்.”
فَقُلْ هَلْ لَّكَ اِلٰۤی اَنْ تَزَكّٰی ۟ۙ
فَقُلْஎனவே கூறுவீராகهَلْஉண்டாلَّكَஉமக்குاِلٰۤیவிருப்பம்اَنْஎன்றுتَزَكّٰیۙதூய்மையடைய
Fபகுல் ஹல் லக இலா-அன் தZஜக்கா.
இன்னும் (ஃபிர்அவ்னிடம்: “பாவங்களை விட்டும்) பரிசுத்தமாக வேண்டும் என்ற (விருப்பம்) உன்னிடம் இருக்கிறதா?” என்று கேளும்.
وَاَهْدِیَكَ اِلٰی رَبِّكَ فَتَخْشٰی ۟ۚ
وَ اَهْدِیَكَமேலும் நான் உனக்கு வழிகாட்டاِلٰیபக்கம்رَبِّكَஉனது இறைவனின்فَتَخْشٰیۚஅதனால் நீ அஞ்சுவாய்
வ அஹ்தி யக இல ரBப்Bபிக Fபதக் ஷா
“அப்படியானால் இறைவனிடம் (செல்லும்) வழியை நான் உனக்குக் காண்பிக்கிறேன்; அப்போது நீ உள்ளச்சமுடையவன் ஆவாய்” (எனக் கூறுமாறு இறைவன் பணித்தான்).
فَاَرٰىهُ الْاٰیَةَ الْكُبْرٰی ۟ؗۖ
فَاَرٰىهُஆகவே அவர் அவருக்குக் காட்டினார்الْاٰیَةَஅத்தாட்சியைالْكُبْرٰیؗۖமிகப்பெரிய
Fப அராஹுல்ஆயதல் குBப்ரா.
ஆகவே, மூஸா அவனுக்கு பெரும் அத்தாட்சியை காண்பித்தார்.
فَكَذَّبَ وَعَصٰی ۟ؗۖ
فَكَذَّبَஎனவே அவன் பொய்ப்பித்தான்وَعَصٰیؗۖமேலும் அவன் மாறுசெய்தான்
Fப கத்தBப வ அஸா.
ஆனால், அவனோ அதைப் பொய்ப்பித்து, மாறு செய்தான்.
ثُمَّ اَدْبَرَ یَسْعٰی ۟ؗۖ
ثُمَّபின்னர்اَدْبَرَதிரும்பினான்یَسْعٰیؗۖமுயன்றான்
தும்ம அத்Bபர யஸ்'ஆ.
பிறகு அவன் (அவரை விட்டுத்) திரும்பி (அவருக்கெதிராய் சதி செய்ய) முயன்றான்.
فَحَشَرَ فَنَادٰی ۟ؗۖ
فَحَشَرَபின்னர் அவன் ஒன்றுதிரட்டினான்فَنَادٰیؗۖபின்னர் அவன் அழைத்தான்
Fப ஹஷர Fபனதா.
அன்றியும் (அவன் தன் சமூகத்தாரை) ஒன்று திரட்டி அறிக்கை செய்தான்.
فَقَالَ اَنَا رَبُّكُمُ الْاَعْلٰی ۟ؗۖ
فَقَالَபின்னர் அவன் கூறினான்اَنَاநானேرَبُّكُمُஉங்கள் இறைவன்الْاَعْلٰیؗۖமிக உயர்ந்தவன்
Fபகால அன ரBப்Bபு குமுல்-அஃலா.
“நான்தான் உங்களுடைய மாபெரும் இறைவன் - ரப்புக்குமுல் அஃலா” என்று (அவர்களிடம்) கூறினான்.
فَاَخَذَهُ اللّٰهُ نَكَالَ الْاٰخِرَةِ وَالْاُوْلٰی ۟ؕ
فَاَخَذَهُஎனவே அவனைப் பிடித்தான்اللّٰهُஅல்லாஹ்نَكَالَதண்டனையாகالْاٰخِرَةِமறுமையின்وَ الْاُوْلٰیؕமற்றும் இம்மையின்
Fப-அக தஹுல் லாஹு னகலல் ஆகிரதி வல்-ஊலா.
இம்மைக்கும் மறுமைக்குமான தண்டனையாக அல்லாஹ் அவனை பிடித்துக் கொண்டான்.
اِنَّ فِیْ ذٰلِكَ لَعِبْرَةً لِّمَنْ یَّخْشٰی ۟ؕ۠
اِنَّநிச்சயமாகفِیْஇல்ذٰلِكَஅதில்لَعِبْرَةًஒரு படிப்பினைلِّمَنْஎவர்یَّخْشٰیؕ۠அஞ்சுகிறாரோ
இன்ன Fபீ தாலிக ல'இBப்ரதல் லிமய்ய்-யக்ஷா
நிச்சயமாக இதில் இறையச்சம் கொள்வோருக்கு படிப்பினை இருக்கிறது.  
ءَاَنْتُمْ اَشَدُّ خَلْقًا اَمِ السَّمَآءُ ؕ بَنٰىهَا ۟ۙ
ءَاَنْتُمْநீங்களாاَشَدُّமிகக் கடினமானதாخَلْقًاபடைப்பதற்குاَمِஅல்லதுالسَّمَآءُ ؕவானமாبَنٰىهَاۥஅதனை அவன் அமைத்தான்
அ-அன்தும் அ ஷத்து கல்கன் அமிஸ் ஸமா-உ Bபனாஹா.
உங்களைப் படைத்தல் கடினமா? அல்லது வானத்தை (படைத்தல் கடினமா?) அதை அவனே படைத்தான்.
رَفَعَ سَمْكَهَا فَسَوّٰىهَا ۟ۙ
رَفَعَஉயர்த்தினான்سَمْكَهَاஅதன் முகட்டைفَسَوّٰىهَاۙபின் அதனைச் சீராக்கினான்
ரFப்'அ ஸம் கஹ Fபஸவ் வாஹா
அதன் முகட்டை அவன் உயர்த்தி அதை ஒழுங்கு படுத்தினான்.
وَاَغْطَشَ لَیْلَهَا وَاَخْرَجَ ضُحٰىهَا ۪۟
وَ اَغْطَشَமேலும் இருளாக்கினான்لَیْلَهَاஅதன் இரவைوَ اَخْرَجَமேலும் வெளிப்படுத்தினான்ضُحٰىهَا۪அதன் பகல் ஒளியை
வ அக்தஷ லய்லஹ வ அக்ரஜ ளுஹாஹா.
அவன்தான் இரவை இருளுடையதாக்கிப் பகலின் ஒளியை வெளியாக்கினான்.
وَالْاَرْضَ بَعْدَ ذٰلِكَ دَحٰىهَا ۟ؕ
وَ الْاَرْضَமேலும் பூமியைبَعْدَபிறகுذٰلِكَஅதற்குدَحٰىهَاؕஅதனை விரித்தான்
வல் அர்ள Bபஃத தாலிக தஹாஹா.
இதன் பின்னர், அவனே பூமியை விரித்தான்.
اَخْرَجَ مِنْهَا مَآءَهَا وَمَرْعٰىهَا ۪۟
اَخْرَجَவெளியாக்கினான்مِنْهَاஅதிலிருந்துمَآءَهَاஅதன் நீரைوَ مَرْعٰىهَا۪அதன் மேய்ச்சல் நிலத்தையும்
அக்ரஜ மின்ஹ மா-அஹ வ மர் 'ஆஹா.
அதிலிருந்து அதன் தண்ணீரையும், அதன் மீதுள்ள (பிராணிகளுக்கான) மேய்ச்சல் பொருள்களையும் அவனே வெளியாக்கினான்.
وَالْجِبَالَ اَرْسٰىهَا ۟ۙ
وَ الْجِبَالَமேலும் மலைகளைاَرْسٰىهَاۙஅவற்றை அவன் உறுதியாக நாட்டினான்
வல் ஜிBபல அர்ஸாஹா.
அதில், மலைகளையும் அவனே நிலை நாட்டினான்.
مَتَاعًا لَّكُمْ وَلِاَنْعَامِكُمْ ۟ؕ
مَتَاعًاபயன்படுவதற்காகلَّكُمْஉங்களுக்குوَ لِاَنْعَامِكُمْؕஉங்கள் கால்நடைகளுக்கும்
மதா'அல் லகும் வலி அன் 'ஆமிகும்.
உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக (இவ்வாறு செய்துள்ளான்).
فَاِذَا جَآءَتِ الطَّآمَّةُ الْكُبْرٰی ۟ؗۖ
فَاِذَاஆகவே எப்போதுجَآءَتِவருகிறதோالطَّآمَّةُபேரிடர்الْكُبْرٰیؗۖமிகப்பெரியது
Fப-இதா ஜா'அதித் தாம் மதுல் குBப்ரா.
எனவே (தடுத்து நிறுத்த முடியாத மறுமைப்) பேரமளி வந்து விட்டால்,
یَوْمَ یَتَذَكَّرُ الْاِنْسَانُ مَا سَعٰی ۟ۙ
یَوْمَஅந்நாளில்یَتَذَكَّرُநினைவுகூர்வான்الْاِنْسَانُமனிதன்مَاஎதைسَعٰیۙஅவன் முயன்றானோ
யவ்ம யத தக்கருல் இன்ஸானு ம ஸ'ஆ.
அந்நாளில் மனிதன் தான் முயன்றவற்றையெல்லாம் நினைவுபடுத்திக் கொள்வான்.
وَبُرِّزَتِ الْجَحِیْمُ لِمَنْ یَّرٰی ۟
وَ بُرِّزَتِமேலும் வெளிப்படுத்தப்படும்الْجَحِیْمُநரக நெருப்புلِمَنْஎவருக்குیَّرٰیபார்க்கிறாரோ
வ Bபுர்ரிZஜதில்-ஜஹீமு லிம(ன்)ய்-யரா.
அப்போது பார்ப்போருக்கு(க் காணும் வகையில்) நரகம் வெளிப்படுத்தப்படும்.
وَاٰثَرَ الْحَیٰوةَ الدُّنْیَا ۟ۙ
وَ اٰثَرَமேலும் தேர்ந்தெடுத்தானோالْحَیٰوةَவாழ்க்கையைالدُّنْیَاۙஇவ்வுலக
வ ஆதரல் ஹயாதத் துன்யா
இந்த உலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தானோ-
فَاِنَّ الْجَحِیْمَ هِیَ الْمَاْوٰی ۟ؕ
فَاِنَّநிச்சயமாகالْجَحِیْمَநரகம்هِیَஅதுவேالْمَاْوٰیؕதங்குமிடம்
Fப இன்னல் ஜஹீம ஹியல் மா'வா.
அவனுக்கு, நிச்சயமாக நரகந்தான் தங்குமிடமாகும்.
وَاَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهٖ وَنَهَی النَّفْسَ عَنِ الْهَوٰی ۟ۙ
وَ اَمَّاஆனால்مَنْஎவர்خَافَஅஞ்சினாரோمَقَامَசந்நிதானத்தைرَبِّهٖதன் இறைவனின்وَ نَهَیமேலும் தடுத்தாரோالنَّفْسَமனதைعَنِவிட்டுالْهَوٰیۙதீய இச்சைகளை
வ அம்மா மன் காFப மகாம ரBப்Bபிஹீ வ னஹன் னFப்ஸ 'அனில் ஹவா
எவன் தன் இறைவன் முன் நிற்பதை அஞ்சி மனதையும் இச்சைகளை விட்டு விலக்கிக் கொண்டானோ,
فَاِنَّ الْجَنَّةَ هِیَ الْمَاْوٰی ۟ؕ
فَاِنَّஆகவே நிச்சயமாகالْجَنَّةَசுவனம்هِیَஅதுவேالْمَاْوٰیؕதங்குமிடம்
Fப இன்னல் ஜன்னத ஹியல் ம'வா
நிச்சயமாக அவனுக்குச் சுவர்க்கம்தான் தங்குமிடமாகும்.
یَسْـَٔلُوْنَكَ عَنِ السَّاعَةِ اَیَّانَ مُرْسٰىهَا ۟ؕ
یَسْـَٔلُوْنَكَஅவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்عَنِபற்றிالسَّاعَةِமறுமை நாளைப்اَیَّانَஎப்பொழுதுمُرْسٰىهَاؕஅது நிகழும்
யஸ்'அலூனக 'அனிஸ் ஸா'அதி அய்யான முர்ஸாஹா
(நபியே! “மறுமையின்) நேரத்தைப் பற்றி - அது எப்போது ஏற்படும்?” என்று அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள்.
فِیْمَ اَنْتَ مِنْ ذِكْرٰىهَا ۟ؕ
فِیْمَஎதில்اَنْتَநீர்مِنْஇருந்துذِكْرٰىهَاؕஅதனை நினைவூட்டுவது
Fபீம அன்த மின் திக்ராஹா
அ(ந்நேரத்)தைப் பற்றி நீர் குறிப்பிடுவதற்கு என்ன இருக்கிறது?
اِلٰی رَبِّكَ مُنْتَهٰىهَا ۟ؕ
اِلٰیபால்رَبِّكَஉமது இறைவன்مُنْتَهٰىهَاؕஅதன் முடிவு
இலா ரBப்Bபிக முன்தஹா ஹா
அதன் முடிவெல்லாம் உம்முடைய இறைவனிடம் (அல்லவா) இருக்கிறது.
اِنَّمَاۤ اَنْتَ مُنْذِرُ مَنْ یَّخْشٰىهَا ۟ؕ
اِنَّمَاۤநிச்சயமாகاَنْتَநீர்مُنْذِرُஎச்சரிப்பவர்مَنْஎவர்یَّخْشٰىهَاؕஅதனை அஞ்சுகிறாரோ
இன்னமா அன்த முன்திரு மய்ய் யக்ஷாஹா
அதை பயப்படுவோருக்கு, நிச்சயமாக நீர் எச்சரிக்கை செய்பவர் தாம்,
كَاَنَّهُمْ یَوْمَ یَرَوْنَهَا لَمْ یَلْبَثُوْۤا اِلَّا عَشِیَّةً اَوْ ضُحٰىهَا ۟۠
كَاَنَّهُمْஅவர்கள் போல்یَوْمَஅந்நாளில்یَرَوْنَهَاஅதை அவர்கள் காணும்لَمْஇல்லைیَلْبَثُوْۤاஅவர்கள் தங்கியிருந்ததுاِلَّاதவிரعَشِیَّةًஒரு மாலைப் பொழுதுاَوْஅல்லதுضُحٰىهَا۠அதன் முற்பகல்
க அன்னஹும் யவ்ம யரவ்னஹா லம் யல்Bபதூ இல்லா 'அஷிய்யதன் அவ் ளுஹாஹா
நிச்சயமாக அதை அவர்கள் காணும் நாளில், மாலையிலோ, அல்லது காலையிலோ ஒரு சொற்ப நேரமேயன்றி, அவர்கள் (இவ்வுலகில்) தங்கியிருக்கவில்லை என்று தோன்றும்.