80. ஸூரத்து அபஸ (கடு கடுத்தார்)

மக்கீ, வசனங்கள்: 42

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
عَبَسَ وَتَوَلّٰۤی ۟ۙ
عَبَسَகடுகடுத்தார்وَ تَوَلّٰۤیۙமேலும் திரும்பிக் கொண்டார்
'அBபஸ வ தவல்லா.
அவர் கடுகடுத்தார்; மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்.
اَنْ جَآءَهُ الْاَعْمٰى ۟ؕ
اَنْஎன்பதற்காகجَآءَهُஅவரிடம் வந்தார்الْاَعْمٰىؕபார்வையற்றவர்
அன் ஜா-அஹுல் அஃ-மா
அவரிடம் அந்த அந்தகர் வந்தபோது,
وَمَا یُدْرِیْكَ لَعَلَّهٗ یَزَّ ۟ۙ
وَ مَاமேலும் எதுیُدْرِیْكَஉமக்கு அறிவிக்கும்لَعَلَّهٗஅவர் ஒருவேளைیَزَّكّٰۤیۙதூய்மையடையலாம்
வமா யுத்ரீக ல'அல்லஹு யZஜ் Zஜக்கா.
(நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா?
اَوْ یَذَّكَّرُ فَتَنْفَعَهُ الذِّكْرٰى ۟ؕ
اَوْஅல்லதுیَذَّكَّرُஅவர் அறிவுரை பெறலாம்فَتَنْفَعَهُஅதனால் அவருக்குப் பயனளிக்கலாம்الذِّكْرٰىؕஅந்த அறிவுரை
அவ் யத்தக்கரு Fபதன்Fப 'அஹுத் திக்ரா.
அல்லது அவர் (உம் உபதேசத்தை) நினைவு படுத்திக்கொள்வதன் மூலம், (உம்முடைய) உபதேசம் அவருக்குப் பயனளித்திருக்கலாம்.
اَمَّا مَنِ اسْتَغْنٰى ۟ۙ
اَمَّاஆனால்مَنِஎவர்اسْتَغْنٰىۙதேவையற்றவராகக் கருதுகிறாரோ
அம்மா மனிஸ் தக்னா
(உம் உபதேசத்தின்) தேவையை எவன் அலட்சியம் செய்கிறானோ-
فَاَنْتَ لَهٗ تَصَدّٰى ۟ؕ
فَاَنْتَஎனவே நீர்لَهٗஅவனுக்குتَصَدّٰىؕகவனம் செலுத்துகிறீர்
Fப-அன்த லஹு தஸத்தா
நீர் அவன்பாலே முன்னோக்குகின்றீர்.
وَمَا عَلَیْكَ اَلَّا یَزَّكّٰى ۟ؕ
وَ مَاமேலும் (குற்றம்) இல்லைعَلَیْكَஉம்மீதுاَلَّاஅவர் ஆகாவிட்டால்یَزَّكّٰىؕதூய்மையாளராக
வ ம 'அலய்க அல்லா யZஜ் Zஜக்க.
ஆயினும் (இஸ்லாத்தை யேற்று) அவன் தூய்மையடையாமல் போனால், உம் மீது (அதனால் குற்றம்) இல்லை.
وَاَمَّا مَنْ جَآءَكَ یَسْعٰى ۟ۙ
وَ اَمَّاஆனால்مَنْஎவர்جَآءَكَஉம்மிடம் வந்தாரோیَسْعٰىۙவிரைந்து
வ அம்மா மன் ஜா-அக யஸ்'ஆ
ஆனால், எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ,
فَاَنْتَ عَنْهُ تَلَهّٰى ۟ۚ
فَاَنْتَநீரோعَنْهُஅவரைتَلَهّٰىۚஅலட்சியப்படுத்துகிறீர்
Fப-அன்த 'அன்ஹு தலஹ் ஹா.
அவரை விட்டும் பராமுகமாய் இருக்கின்றீர்.
كَلَّاۤ اِنَّهَا تَذْكِرَةٌ ۟ۚ
كَلَّاۤஅவ்வாறல்லاِنَّهَاநிச்சயமாக இதுتَذْكِرَةٌۚஒரு நினைவூட்டலாகும்
கல்லா இன்னஹ தத்கிரஹ்
அவ்வாறல்ல! ஏனெனில் (இத்திருக் குர்ஆன் நினைவூட்டும்) நல்லுபதேசமாகும்.
فَمَنْ شَآءَ ذَكَرَهٗ ۟ۘ
فَمَنْஎனவே எவர்شَآءَவிரும்புகிறாரோذَكَرَهٗۘஅதனை நினைவில் கொள்வார்
Fபமன் ஷா அ தகரஹ்
எனவே, எவர் விரும்புகிறாரோ அவர் அதை நினைவு கொள்வார்.
فِیْ صُحُفٍ مُّكَرَّمَةٍ ۟ۙ
فِیْஇல்صُحُفٍஏடுகளில்مُّكَرَّمَةٍۙகண்ணியமாக்கப்பட்ட
Fபி ஸுஹுFபிம் முகர் ரமா,
(அது) சங்கையாக்கப்பட்ட ஏடுகளில் இருக்கிறது.
مَّرْفُوْعَةٍ مُّطَهَّرَةٍۭ ۟ۙ
مَّرْفُوْعَةٍஉயர்த்தப்பட்டمُّطَهَّرَةٍۭۙதூய்மையாக்கப்பட்ட
மர்Fபூ'அதிம் முதஹ் ஹரா,
உயர்வாக்கப்பட்டது; பரிசுத்தமாக்கப்பட்டது.
كِرَامٍ بَرَرَةٍ ۟ؕ
كِرَامٍۭகண்ணியமானبَرَرَةٍؕபரிசுத்தமான
கிராமிம் Bபரரஹ்.
(லவ்ஹுல் மஹ்ஃபூளிலிருந்து எழுதிய அவ்வானவர்கள்) சங்கை மிக்கவர்கள்; நல்லோர்கள்.
قُتِلَ الْاِنْسَانُ مَاۤ اَكْفَرَهٗ ۟ؕ
قُتِلَநாசமாகட்டும்الْاِنْسَانُமனிதன்مَاۤஎவ்வளவுاَكْفَرَهٗؕஅவன் நன்றிகெட்டவன்
குதிலல்-இன்ஸானு மா அக்Fபரஹ்.
(நன்றி கெட்ட மனிதன்) அழிவானாக! எவ்வளவு நன்றி மறந்தவனாக அவன் இருக்கின்றான்!
مِنْ اَیِّ شَیْءٍ خَلَقَهٗ ۟ؕ
مِنْஇருந்துاَیِّஎந்தشَیْءٍபொருளில்خَلَقَهٗؕஅவனைப் படைத்தான்
மின் அய்யி ஷய்-இன் கலகஹ்
எப்பொருளால் அவனை (அல்லாஹ்) படைத்தான்? (என்பதை அவன் சிந்தித்தானா?)
مِنْ نُّطْفَةٍ ؕ خَلَقَهٗ فَقَدَّرَهٗ ۟ۙ
مِنْஇருந்துنُّطْفَةٍ ؕவிந்துத் துளிخَلَقَهٗஅவனைப் படைத்தான்فَقَدَّرَهٗۙபிறகு அவனை நிர்ணயித்தான்
மின் னுத்Fபதின் கலகஹூ Fபகத்தரஹ்.
(ஒரு துளி) இந்திரியத்திலிருந்து அவனைப் படைத்து, அவனை (அளவுப்படி) சரியாக்கினான்.
ثُمَّ السَّبِیْلَ یَسَّرَهٗ ۟ۙ
ثُمَّபின்னர்السَّبِیْلَவழியைیَسَّرَهٗۙஅவனுக்கு எளிதாக்கினான்
தும்மஸ் ஸBபீல யஸ்-ஸரஹ்
பின் அவனுக்காக வழியை எளிதாக்கினான்.
ثُمَّ اَمَاتَهٗ فَاَقْبَرَهٗ ۟ۙ
ثُمَّபின்னர்اَمَاتَهٗஅவனை மரணிக்கச் செய்தான்فَاَقْبَرَهٗۙபின் அவனை மண்ணறையில் ஆக்கினான்
தும்ம அமதஹு Fப-அக்Bபரஹ்
பின் அவனை மரணிக்கச் செய்து, அவனை கப்ரில்” ஆக்குகிறான்.
ثُمَّ اِذَا شَآءَ اَنْشَرَهٗ ۟ؕ
ثُمَّபின்னர்اِذَاஎப்பொழுதுشَآءَஅவன் நாடுகிறானோاَنْشَرَهٗؕஅவனை உயிர்ப்பித்து எழுப்புவான்
தும்ம இத ஷா-அ அன்ஷரஹ்
பின்னர், அவன் விரும்பும்போது அவனை (உயிர்ப்பித்து) எழுப்புவான்.
كَلَّا لَمَّا یَقْضِ مَاۤ اَمَرَهٗ ۟ؕ
كَلَّاஅப்படியல்லلَمَّاஇன்னும்یَقْضِஅவன் நிறைவேற்றவில்லைمَاۤஎதனைاَمَرَهٗؕஅவன் அவனுக்குக் கட்டளையிட்டானோ
கல்ல லம்ம யக்ளி மா அமரஹ்.
(இவ்வாறிருந்தும் அல்லாஹ் மனிதனுக்கு) எதை ஏவினானோ அதை அவன் நிறைவேற்றுவதில்லை.
فَلْیَنْظُرِ الْاِنْسَانُ اِلٰى طَعَامِهٖۤ ۟ۙ
فَلْیَنْظُرِஎனவே பார்க்கட்டும்الْاِنْسَانُமனிதன்اِلٰىநோக்கிطَعَامِهٖۤۙதன் உணவை
Fபல்யன்ளுரில் இன்ஸனு இலா த-அமிஹ்
எனவே, மனிதன் தன் உணவின் பக்கமே (அது எவ்வாறு பெறப்படுகிறது) என்பதை நோட்டமிட்டுப் பார்க்கட்டும்.
اَنَّا صَبَبْنَا الْمَآءَ صَبًّا ۟ۙ
اَنَّاநிச்சயமாக நாம்صَبَبْنَاபொழிந்தோம்الْمَآءَநீரைصَبًّاۙதாராளமாக
அன்ன ஸBபBப் னல்மா-அ ஸBப்Bபா.
நிச்சயமாக நாமே மழையை நன்கு பொழியச் செய்கிறோம்.
ثُمَّ شَقَقْنَا الْاَرْضَ شَقًّا ۟ۙ
ثُمَّபின்னர்شَقَقْنَاநாம் பிளந்தோம்الْاَرْضَபூமியைشَقًّاۙபிளப்பதாக
தும்ம ஷ கக்னல்-அர்ள ஷக்கா.
பின், பூமியைப் பிளப்பதாகப் பிளந்து-
فَاَنْۢبَتْنَا فِیْهَا حَبًّا ۟ۙ
فَاَنْۢبَتْنَاபின்னர் நாம் முளைக்கச் செய்தோம்فِیْهَاஅதில்حَبًّاۙதானியத்தை
Fப அம்Bபத்ன Fபீஹா ஹBப்Bபா
பின் அதிலிருந்து வித்தை முளைப்பிக்கிறோம்.
وَّعِنَبًا وَّقَضْبًا ۟ۙ
وَّ عِنَبًاதிராட்சையையும்وَّ قَضْبًاۙகீரைகளையும்
வ 'இனBபவ்-வ கள்Bபா
திராட்சைகளையும், புற்பூண்டுகளையும்-
وَّزَیْتُوْنًا وَّنَخْلًا ۟ۙ
وَّ زَیْتُوْنًاஒலிவ மரங்களையும்وَّ نَخْلًاۙபேரீச்சை மரங்களையும்
வ Zஜய்தூனவ் வனக் ல'
ஒலிவ மரத்தையும், பேரீச்சையையும் -
وَّفَاكِهَةً وَّاَبًّا ۟ۙ
وَّ فَاكِهَةًகனிகளையும்وَّ اَبًّاۙபுற்பூண்டுகளையும்
வ Fபகி ஹதவ்-வ அBப்Bபா.
பழங்களையும், தீவனங்களையும்-
مَّتَاعًا لَّكُمْ وَلِاَنْعَامِكُمْ ۟ؕ
مَّتَاعًاபயன்படுவதற்காகلَّكُمْஉங்களுக்குوَ لِاَنْعَامِكُمْؕஉங்கள் கால்நடைகளுக்கும்
மத'அல்-லகும் வ லி-அன்'அமிகும்.
(இவையெல்லாம்) உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக,
فَاِذَا جَآءَتِ الصَّآخَّةُ ۟ؗ
فَاِذَاஆகவே, எப்போதுجَآءَتِவருகிறதோالصَّآخَّةُؗசெவிடாக்கும் பேரோசை
Fபய்த ஜா-அதிஸ் ஸாகஹ்.
ஆகவே, (யுக முடிவின் போது காதைச் செவிடாக்கும் பெருஞ் சப்தம் வரும் போது -
یَوْمَ یَفِرُّ الْمَرْءُ مِنْ اَخِیْهِ ۟ۙ
یَوْمَஅந்நாளில்یَفِرُّவெருண்டோடுவான்الْمَرْءُமனிதன்مِنْவிட்டும்اَخِیْهِۙதன் சகோதரனை
யவ்ம யFபிர்-ருல் மர்-உ மின் அகீஹ்
அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும் -
وَاُمِّهٖ وَاَبِیْهِ ۟ۙ
وَ اُمِّهٖதன் தாயையும்وَ اَبِیْهِۙதன் தந்தையையும்
வ உம்மிஹீ வ அBபீஹ்
தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்;
وَصَاحِبَتِهٖ وَبَنِیْهِ ۟ؕ
وَ صَاحِبَتِهٖதன் மனைவியிடமிருந்தும்وَ بَنِیْهِؕதன் பிள்ளைகளிடமிருந்தும்
வ ஸாஹி Bபதிஹீ வ Bபனீஹ்.
தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்-
لِكُلِّ امْرِئٍ مِّنْهُمْ یَوْمَىِٕذٍ شَاْنٌ یُّغْنِیْهِ ۟ؕ
لِكُلِّஒவ்வொருامْرِئٍமனிதனுக்கும்مِّنْهُمْஅவர்களில்یَوْمَىِٕذٍஅந்நாளில்شَاْنٌஒரு நிலைیُّغْنِیْهِؕஅவனைப் போதுமானதாக்கும்
லிகுல் லிம்ரி-இம்-மின்ஹும் யவ்மா-இதின் ஷா னுய்-யுக்னீஹ்
அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும்.
وُجُوْهٌ یَّوْمَىِٕذٍ مُّسْفِرَةٌ ۟ۙ
وُجُوْهٌமுகங்கள்یَّوْمَىِٕذٍஅந்நாளில்مُّسْفِرَةٌۙபிரகாசமானவை
வுஜூ ஹு(ன்)ய்-யவ்ம-இதிம்-முஸ்Fபிர;
அந்நாளில் சில முகங்கள் இலங்கிக் கொண்டிருக்கும்.
ضَاحِكَةٌ مُّسْتَبْشِرَةٌ ۟ۚ
ضَاحِكَةٌசிரித்தவையாகمُّسْتَبْشِرَةٌۚமகிழ்ச்சியடைந்தவையாக
ளஹி கதும் முஸ்தBப் ஷிரஹ்
சிரித்தவையாகவும், மகிழ்வுடையதாகவும் இருக்கும்.
وَوُجُوْهٌ یَّوْمَىِٕذٍ عَلَیْهَا غَبَرَةٌ ۟ۙ
وَ وُجُوْهٌஇன்னும் சில முகங்கள்یَّوْمَىِٕذٍஅந்நாளில்عَلَیْهَاஅவற்றின் மீதுغَبَرَةٌۙபுழுதி படிந்திருக்கும்
வ வுஜூஹுய் யவ்ம-இதின் 'அலய்ஹ கBபரா
ஆனால் அந்நாளில் - (வேறு) சில முகங்கள், அவற்றின் மீது புழுதி படிந்திருக்கும்.
تَرْهَقُهَا قَتَرَةٌ ۟ؕ
تَرْهَقُهَاஅவற்றை மூடியிருக்கும்قَتَرَةٌؕஇருள்
தர்ஹகுஹ கதரஹ்.
அவற்றைக் கருமை இருள் மூடியிருக்கும்.
اُولٰٓىِٕكَ هُمُ الْكَفَرَةُ الْفَجَرَةُ ۟۠
اُولٰٓىِٕكَஅவர்கள்هُمُதாம்الْكَفَرَةُநிராகரிப்பவர்கள்الْفَجَرَةُ۠பாவிகள்
உலா-இக ஹுமுல்-கFப ரதுல்-Fபஜரஹ்.
அவர்கள்தாம், நிராகரித்தவர்கள்; தீயவர்கள்.