80. ஸூரத்து அபஸ (கடு கடுத்தார்)

மக்கீ, வசனங்கள்: 42

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
முஹம்மது ஜான்
அப்துல் ஹமீது பாகவி
IFT
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
Saheeh International
عَبَسَ وَتَوَلّٰۤی ۟ۙ
عَبَسَகடுகடுத்தார்وَتَوَلّٰٓىۙ‏இன்னும் புறக்கணித்தார்
'அBபஸ வ தவல்லா.
முஹம்மது ஜான்
அவர் கடுகடுத்தார்; மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்.
அப்துல் ஹமீது பாகவி
(நம் நபி) கடுகடுத்தார்; புறக்கணித்தார். (எதற்காக?)
IFT
முகம் சுளித்தார்; மேலும், புறக்கணித்தார்,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நமது நபியாகிய) அவர் கடுகடுத்தார்; மேலும், புறக்கணித்தார்.
Saheeh International
He [i.e., the Prophet (ﷺ ] frowned and turned away
اَنْ جَآءَهُ الْاَعْمٰى ۟ؕ
اَنْ جَآءَهُஅவரிடம் வந்ததற்காகالْاَعْمٰىؕ‏பார்வையற்றவர்
அன் ஜா-அஹுல் அஃ-மா
முஹம்மது ஜான்
அவரிடம் அந்த அந்தகர் வந்தபோது,
அப்துல் ஹமீது பாகவி
தன்னிடம் ஓர் பார்வையற்றவர் வந்ததற்காக.
IFT
அந்தப் பார்வையிழந்தவர் அவரிடம் வந்ததற்காக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தன்னிடம் பார்வையிழந்தவர் வந்ததற்காக-
Saheeh International
Because there came to him the blind man, [interrupting].
وَمَا یُدْرِیْكَ لَعَلَّهٗ یَزَّ ۟ۙ
وَمَا يُدْرِيْكَஇன்னும் நீர் அறிவீரா?لَعَلَّهٗ يَزَّكّٰٓىۙ‏அவர் பரிசுத்தமடையலாம்
வமா யுத்ரீக ல'அல்லஹு யZஜ் Zஜக்கா.
முஹம்மது ஜான்
(நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா?
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! உம்மிடம் வந்த) அவர் பரிசுத்தவானாக இருக்கலாம் என்பதை நீர் அறிவீரா?
IFT
அவர் சீர்திருந்தக்கூடும்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! உம்மிடம் வந்த) அவர் பரிசுத்தவானாக ஆகிவிடக் கூடும் என்பதை உமக்கு எது அறிவித்தது?
Saheeh International
But what would make you perceive, [O Muhammad], that perhaps he might be purified
اَوْ یَذَّكَّرُ فَتَنْفَعَهُ الذِّكْرٰى ۟ؕ
اَوْஅல்லதுيَذَّكَّرُஅவர் அறிவுரை பெறுவார்فَتَنْفَعَهُஅவருக்கு பலனளிக்கலாம்الذِّكْرٰىؕ‏அறிவுரை
அவ் யத்தக்கரு Fபதன்Fப 'அஹுத் திக்ரா.
முஹம்மது ஜான்
அல்லது அவர் (உம் உபதேசத்தை) நினைவு படுத்திக்கொள்வதன் மூலம், (உம்முடைய) உபதேசம் அவருக்குப் பயனளித்திருக்கலாம்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லது அவர் நல்லுணர்வு பெறுவார். (உமது) நல்லுபதேசம் அவருக்குப் பயனளிக்கலாம் (என்பதை நீர் அறிவீரா? அவ்வாறிருக்க, அவரை நீர் ஏன் கடுகடுத்துப் புறக்கணித்தீர்?)
IFT
அல்லது அறிவுரைக்குச் செவி சாய்க்கக்கூடும்; அந்த அறிவுரை அவருக்குப் பயனளித்திருக்கும் என்பது பற்றி உமக்குத் தெரியுமா, என்ன?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லது அவர் (உம்முடைய உபதேசத்தை) நினைவுபடுத்திக் கொள்பவராகலாம்; அப்போது அவ்வுபதேசம் அவருக்குப் பயனளிக்கும்.
Saheeh International
Or be reminded and the remembrance would benefit him?
اَمَّا مَنِ اسْتَغْنٰى ۟ۙ
اَمَّا مَنِஆக, எவன்اسْتَغْنٰىۙ‏தேவையற்றவனாகக் கருதினானோ
அம்மா மனிஸ் தக்னா
முஹம்மது ஜான்
(உம் உபதேசத்தின்) தேவையை எவன் அலட்சியம் செய்கிறானோ-
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! மார்க்கத்தை) எவன் அலட்சியம் செய்கிறானோ,
IFT
எவன் அலட்சியம் செய்கின்றானோ
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, எவன் பொருளாதார மேம்பாடு உடையவனோ-
Saheeh International
As for he who thinks himself without need,
فَاَنْتَ لَهٗ تَصَدّٰى ۟ؕ
فَاَنْتَநீர்لَهٗஅவனைتَصَدّٰىؕ‏முன்னோக்குகிறீர்
Fப-அன்த லஹு தஸத்தா
முஹம்மது ஜான்
நீர் அவன்பாலே முன்னோக்குகின்றீர்.
அப்துல் ஹமீது பாகவி
அவனை வரவேற்பதில் நீர் அதிக சிரமத்தை எடுத்துக் கொள்கிறீர்.
IFT
அவன் பக்கம் நீர் கவனம் செலுத்துகின்றீர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவனுக்காக நீர் செவிமடுக்கிறீர்.
Saheeh International
To him you give attention.
وَمَا عَلَیْكَ اَلَّا یَزَّكّٰى ۟ؕ
وَمَاஇன்னும் இல்லைعَلَيْكَஉம்மீதுاَلَّا يَزَّكّٰٓىؕ‏அவன் பரிசுத்தமடையாதது
வ ம 'அலய்க அல்லா யZஜ் Zஜக்க.
முஹம்மது ஜான்
ஆயினும் (இஸ்லாத்தை யேற்று) அவன் தூய்மையடையாமல் போனால், உம் மீது (அதனால் குற்றம்) இல்லை.
அப்துல் ஹமீது பாகவி
அவன் பரிசுத்தவானாக ஆகாவிட்டால் அதைப் பற்றி உம் மீது ஒரு குற்றமும் இல்லை(யே)!
IFT
அவன் திருந்தாவிட்டால் அதற்கு நீர் பொறுப்பாளியா, என்ன?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவன் (இஸ்லாத்தை ஏற்காது) பரிசுத்தம் அடையாவிட்டால் உம்மீது குற்றமில்லை.
Saheeh International
And not upon you [is any blame] if he will not be purified.
وَاَمَّا مَنْ جَآءَكَ یَسْعٰى ۟ۙ
وَاَمَّا مَنْஆக, எவர்جَآءَவந்தாரோكَஉம்மிடம்يَسْعٰىۙ‏விரைந்தவராக
வ அம்மா மன் ஜா-அக யஸ்'ஆ
முஹம்மது ஜான்
ஆனால், எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ,
அப்துல் ஹமீது பாகவி
எவர் (தானாகவே) உம்மிடம் ஓடி வருகிறாரோ,
IFT
மேலும், எவர் உம்மிடம் விரைந்து வருகின்றாரோ
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், எவர் உம்மிடம் விரைந்தவராக வந்தாரோ அவர்,
Saheeh International
But as for he who came to you striving [for knowledge]
وَهُوَ یَخْشٰى ۟ۙ
وَهُوَஅவரோيَخْشٰىۙ‏பயப்படுகிறவராக
வஹுவ யக்-ஷா,
முஹம்மது ஜான்
அல்லாஹ்வுக்கு அஞ்சியவராக-
அப்துல் ஹமீது பாகவி
அவர்தான் (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறவர்.
IFT
(இறைவனை) அஞ்சியவராக
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவரோ (அல்லாஹ்வைப்) பயந்த நிலையில் (உம்மிடம் வர)
Saheeh International
While he fears [Allah],
فَاَنْتَ عَنْهُ تَلَهّٰى ۟ۚ
فَاَنْتَநீர்عَنْهُஅவரைتَلَهّٰى‌ۚ‏அலட்சியப்படுத்துகிறீர்
Fப-அன்த 'அன்ஹு தலஹ் ஹா.
முஹம்மது ஜான்
அவரை விட்டும் பராமுகமாய் இருக்கின்றீர்.
அப்துல் ஹமீது பாகவி
எனினும், நீர் அவரை அலட்சியம் செய்து விடுகிறீர்.
IFT
அவரைக் குறித்து நீர் பாராமுகமாக இருந்துவிடுகின்றீர்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அப்போது அவரை விட்டும் நீர் அசட்டை செய்கிறீர்.
Saheeh International
From him you are distracted.
كَلَّاۤ اِنَّهَا تَذْكِرَةٌ ۟ۚ
كَلَّاۤஅவ்வாறல்லاِنَّهَاநிச்சயமாக இதுتَذْكِرَةٌ ۚ‏ஓர் அறிவுரை
கல்லா இன்னஹ தத்கிரஹ்
முஹம்மது ஜான்
அவ்வாறல்ல! ஏனெனில் (இத்திருக் குர்ஆன் நினைவூட்டும்) நல்லுபதேசமாகும்.
அப்துல் ஹமீது பாகவி
அவ்வாறு செய்யாதீர். (திரு குர்ஆனாகிய) இது ஒரு நல்லுபதேசம்தான்.
IFT
அவ்வாறன்று! நிச்சயமாக, இது ஓர் அறிவுரையாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவ்வாறன்று! நிச்சயமாக (குர் ஆனாகிய) இது உபதேசமாகும்.
Saheeh International
No! Indeed, they [i.e., these verses] are a reminder;
فَمَنْ شَآءَ ذَكَرَهٗ ۟ۘ
فَمَنْஆகவே, யார்شَآءَநாடுகிறாரோذَكَرَهٗ‌ۘ‏இதை நினைவில் வைப்பார்
Fபமன் ஷா அ தகரஹ்
முஹம்மது ஜான்
எனவே, எவர் விரும்புகிறாரோ அவர் அதை நினைவு கொள்வார்.
அப்துல் ஹமீது பாகவி
எவர் (நேரான வழியில் செல்ல) விரும்புகிறாரோ அவர் இதை(ச் செவியுற்று) ஞாபகத்தில் வைத்துக் கொள்வார்.
IFT
எவர் விரும்புகின்றாரோஅவர் இதனை ஏற்றுக் கொள்ளட்டும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனவே, எவர் (இதனைக்கொண்டு நேரான வழியில் செல்ல) நாடுகின்றாரோ அவர் இதனை நினைவு கொள்வார்.
Saheeh International
So whoever wills may remember it.
فِیْ صُحُفٍ مُّكَرَّمَةٍ ۟ۙ
فِىْ صُحُفٍஏடுகளில்مُّكَرَّمَةٍۙ‏கண்ணி யப்படுத்தப்பட்ட
Fபி ஸுஹுFபிம் முகர் ரமா,
முஹம்மது ஜான்
(அது) சங்கையாக்கப்பட்ட ஏடுகளில் இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
இது (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) மிக்க கண்ணியமான புத்தகத்தில் (வரையப்பட்டுள்ளது);
IFT
இது கண்ணியமிக்க,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இவ்வேதமானது) சங்கையாக்கப்பட்ட ஏடுகளில் (இருக்கிறது).
Saheeh International
[It is recorded] in honored sheets,
مَّرْفُوْعَةٍ مُّطَهَّرَةٍۭ ۟ۙ
مَّرْفُوْعَةٍஉயர்வாக்கப்பட்டمُّطَهَّرَةٍ ۭۙ‏தூய்மையாக்கப்பட்ட
மர்Fபூ'அதிம் முதஹ் ஹரா,
முஹம்மது ஜான்
உயர்வாக்கப்பட்டது; பரிசுத்தமாக்கப்பட்டது.
அப்துல் ஹமீது பாகவி
உயர்வுமிக்க தூய்மையான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது; (அது) மிகப் பரிசுத்தமானது.
IFT
உயர்வான, தூய்மையான ஏடுகளில் பொறிக்கப்பட்டு உள்ளது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உயர்வாக்கப்பட்ட, பரிசுத்தமாக்கப்பட்ட (ஏடுகளில் இருக்கிறது).
Saheeh International
Exalted and purified,
بِاَیْدِیْ سَفَرَةٍ ۟ۙ
بِاَيْدِىْகைகளில்سَفَرَةٍۙ‏எழுதுபவர்களின்
Bபி'அய்தீ ஸFபரா
முஹம்மது ஜான்
(வானவர்களான) எழுதுபவர்களின் கைகளால்-
அப்துல் ஹமீது பாகவி
எழுதுபவர்களின் கைகளினால் (வரையப்பட்டது).
IFT
(அந்த ஏடுகள்) எழுத்தர்களின் கைகளில் உள்ளன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(வானவர்களான) எழுதுவோரின் கரங்கள் கொண்டு (எழுதப்படுகின்றது)
Saheeh International
[Carried] by the hands of messenger-angels,
كِرَامٍ بَرَرَةٍ ۟ؕ
كِرَامٍۢகண்ணிய மானவர்களானبَرَرَةٍؕ‏நல்லவர்களான
கிராமிம் Bபரரஹ்.
முஹம்மது ஜான்
(லவ்ஹுல் மஹ்ஃபூளிலிருந்து எழுதிய அவ்வானவர்கள்) சங்கை மிக்கவர்கள்; நல்லோர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(அவர்கள்) மிக கண்ணியமானவர்கள், மிக நல்லவர்கள்.
IFT
(அந்த எழுத்தர்கள்) கண்ணியம் மிகுந்தவர்கள், நல்லவர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவர்கள்) நல்லோர்களான சங்கை மிக்கவர்கள்.
Saheeh International
Noble and dutiful.
قُتِلَ الْاِنْسَانُ مَاۤ اَكْفَرَهٗ ۟ؕ
قُتِلَஅழியட்டும்الْاِنْسَانُமனிதன்مَاۤ اَكْفَرَهٗؕ‏அவன் எவ்வளவு நன்றி கெட்டவன்
குதிலல்-இன்ஸானு மா அக்Fபரஹ்.
முஹம்மது ஜான்
(நன்றி கெட்ட மனிதன்) அழிவானாக! எவ்வளவு நன்றி மறந்தவனாக அவன் இருக்கின்றான்!
அப்துல் ஹமீது பாகவி
(பாவம் செய்யும்) மனிதனுக்குக் கேடுதான். அவன் எவ்வளவு நன்றிகெட்டவனாக இருக்கிறான்.
IFT
மனிதன் மீது சாபம் உண்டாகட்டும்! அவன் சத்தியத்தை எத்துணைக் கடுமையாக மறுப்பவனாய் இருக்கின்றான்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(காஃபிரான) மனிதன் சபிக்கப்பட்டுவிட்டான்; (நன்றி கெட்டு) அவனை நிராகரிக்கிறவனாக இருக்கச் செய்தது எது?
Saheeh International
Destroyed [i.e., cursed] is man; how disbelieving is he.
مِنْ اَیِّ شَیْءٍ خَلَقَهٗ ۟ؕ
مِنْ اَىِّ شَىْءٍஎந்த பொருளிலிருந்துخَلَقَهٗؕ‏அவனைப் படைத்தான்
மின் அய்யி ஷய்-இன் கலகஹ்
முஹம்மது ஜான்
எப்பொருளால் அவனை (அல்லாஹ்) படைத்தான்? (என்பதை அவன் சிந்தித்தானா?)
அப்துல் ஹமீது பாகவி
எதைக்கொண்டு (இறைவன்) அவனைப் படைத்திருக்கிறான் (என்பதை அவன் கவனித்தானா)?
IFT
அல்லாஹ், அவனை எதிலிருந்து படைத்திருக்கின்றான்?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எப்பொருளிலிருந்து (நிராகரிக்கும்) அவனை (அல்லாஹ்வாகிய) அவன் படைத்தான் (என்று சிந்தித்தானா?)
Saheeh International
From what thing [i.e., substance] did He create him?
مِنْ نُّطْفَةٍ ؕ خَلَقَهٗ فَقَدَّرَهٗ ۟ۙ
مِنْ نُّطْفَةٍؕவிந்திலிருந்துخَلَقَهٗஅவனைப் படைத்தான்فَقَدَّرَهٗ ۙ‏அவனை அமைத்தான்
மின் னுத்Fபதின் கலகஹூ Fபகத்தரஹ்.
முஹம்மது ஜான்
(ஒரு துளி) இந்திரியத்திலிருந்து அவனைப் படைத்து, அவனை (அளவுப்படி) சரியாக்கினான்.
அப்துல் ஹமீது பாகவி
ஒரு துளி இந்திரியத்தைக் கொண்டுதான் அவன் அவனைப் படைக்கிறான். (அவன் இருக்கின்ற இவ்வாறே, அவனை மனிதனாக அமைத்து) அவனுக்குச் சக்தியைக் கொடுத்தான்.
IFT
ஒரு துளி இந்திரியத்திலிருந்துதானே அல்லாஹ் அவனைப் படைத்தான்! பின்னர், அவனுடைய விதியை நிர்ணயித்தான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஒரு துளி (இந்திரியத்திலிருந்து, அவனை (அல்லாஹ்வாகிய) அவன் படைத்தான்; பின்னர் அவனுக்கு (உரிய அனைத்தையும்) அவன் நிர்ணயித்தான்.
Saheeh International
From a sperm-drop He created him and destined for him;
ثُمَّ السَّبِیْلَ یَسَّرَهٗ ۟ۙ
ثُمَّபிறகுالسَّبِيْلَபாதையைيَسَّرَهٗۙ‏அதை எளிதாக்கினான்
தும்மஸ் ஸBபீல யஸ்-ஸரஹ்
முஹம்மது ஜான்
பின் அவனுக்காக வழியை எளிதாக்கினான்.
அப்துல் ஹமீது பாகவி
பின்னர், அவன் செய்யக்கூடிய (நன்மை தீமைக்குரிய) வழியை அவனுக்கு எளிதாக்கி வைத்தான்.
IFT
பிறகு, வாழ்வின் பாதையை அவனுக்கு எளிதாக்கினான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அப்பால் அவனுக்கு (விசுவாசம், விசுவாசமின்மை, நல்லவை, கெட்டவை, தாய் வயிற்றிலிருந்து வெளியேறுதல் ஆகியவற்றின்) வழியை அவன் எளிதாக்கினான்.
Saheeh International
Then He eased the way for him;
ثُمَّ اَمَاتَهٗ فَاَقْبَرَهٗ ۟ۙ
ثُمَّ اَمَاتَهٗபிறகு அவனை மரணிக்கச் செய்தான்فَاَقْبَرَهٗۙ‏அவனைப் புதைக்குழியில் தள்ளினான்
தும்ம அமதஹு Fப-அக்Bபரஹ்
முஹம்மது ஜான்
பின் அவனை மரணிக்கச் செய்து, அவனை கப்ரில்” ஆக்குகிறான்.
அப்துல் ஹமீது பாகவி
பின்னர், அவனை மரணிக்கச் செய்து சமாதியில் புகுத்துகிறான்.
IFT
பிறகு, அவனை மரணமடையச் செய்தான்; மேலும், மண்ணறையில் கொண்டு சேர்த்தான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பிறகு, அவனை அவன் மரணிக்கச் செய்தான்; அப்பால் மண்ணறையில் அவனை அவன் ஆக்குகின்றான்.
Saheeh International
Then He causes his death and provides a grave for him.
ثُمَّ اِذَا شَآءَ اَنْشَرَهٗ ۟ؕ
ثُمَّபிறகுاِذَا شَآءَஅவன் நாடியபோதுاَنْشَرَهٗؕ‏அவனை உயிர்ப்பிப்பான்
தும்ம இத ஷா-அ அன்ஷரஹ்
முஹம்மது ஜான்
பின்னர், அவன் விரும்பும்போது அவனை (உயிர்ப்பித்து) எழுப்புவான்.
அப்துல் ஹமீது பாகவி
பின்னர் (அவன் விரும்பியபொழுது உயிர் கொடுத்து) அவனே அவனை உயிர்ப்பிப்பான்.
IFT
பிறகு, அவன் நாடும்போது அவனை மீண்டும் உயிர் பெற்றெழச் செய்வான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர் தான் நாடும்போது அவனுக்கு (உயிர் கொடுத்து) அவன் எழுப்புவான்.
Saheeh International
Then when He wills, He will resurrect him.
كَلَّا لَمَّا یَقْضِ مَاۤ اَمَرَهٗ ۟ؕ
كَلَّاஅவ்வாறல்லلَـمَّا يَقْضِஅவன் நிறைவேற்றவில்லைمَاۤ اَمَرَهٗؕ‏எதை/கட்டளையிட்டான்/அவனுக்கு
கல்ல லம்ம யக்ளி மா அமரஹ்.
முஹம்மது ஜான்
(இவ்வாறிருந்தும் அல்லாஹ் மனிதனுக்கு) எதை ஏவினானோ அதை அவன் நிறைவேற்றுவதில்லை.
அப்துல் ஹமீது பாகவி
எனினும், நிச்சயமாக மனிதன் இறைவனுடைய கட்டளையை நிறைவேற்றுவதில்லை.
IFT
ஒருபோதுமில்லை! அல்லாஹ் அவன் மீது விதித்திருந்த கடமைகளை அவன் நிறைவேற்றவில்லை!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(கடமையை நிறைவேற்றி விட்டதாக காஃபிரானவன் கூறுவது போன்று) அல்ல! (அல்லாஹ்வாகிய) அவன் இவனுக்கு ஏவியதை இவன் நிறைவேற்றவில்லை.
Saheeh International
No! He [i.e., man] has not yet accomplished what He commanded him.
فَلْیَنْظُرِ الْاِنْسَانُ اِلٰى طَعَامِهٖۤ ۟ۙ
فَلْيَنْظُرِஆகவே பார்க்கட்டும்الْاِنْسَانُமனிதன்اِلٰىபக்கம்طَعَامِهٖۤۙ‏தன் உணவின்
Fபல்யன்ளுரில் இன்ஸனு இலா த-அமிஹ்
முஹம்மது ஜான்
எனவே, மனிதன் தன் உணவின் பக்கமே (அது எவ்வாறு பெறப்படுகிறது) என்பதை நோட்டமிட்டுப் பார்க்கட்டும்.
அப்துல் ஹமீது பாகவி
மனிதன் தன் உணவை (அது எங்கிருந்து எவ்வாறு வருகிறது என்பதைச்) சிறிது கவனித்துப் பார்க்கவும்.
IFT
பிறகு, மனிதன் தனது உணவின் பக்கம் சற்று நோட்டமிடட்டும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, மனிதன் தன்னுடைய உணவின்பால் பார்க்கவும்,
Saheeh International
Then let mankind look at his food -
اَنَّا صَبَبْنَا الْمَآءَ صَبًّا ۟ۙ
اَنَّاநிச்சயமாக நான்صَبَبْنَاபொழிந்தோம்الْمَآءَநீரைصَبًّا ۙ‏பொழிதல்
அன்ன ஸBபBப் னல்மா-அ ஸBப்Bபா.
முஹம்மது ஜான்
நிச்சயமாக நாமே மழையை நன்கு பொழியச் செய்கிறோம்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நாமே ஏராளமான மழையை பொழியச் செய்தோம்,
IFT
நிச்சயமாக, நாம் நீரை நிறையப் பொழிந்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதை உண்டாக்குவதற்கு) நிச்சயமாக நாமே (வானத்திலிருந்து ஏராளமான) நீரைத் தாராளமாகப் பொழியச் செய்தோம்.
Saheeh International
How We poured down water in torrents,
ثُمَّ شَقَقْنَا الْاَرْضَ شَقًّا ۟ۙ
ثُمَّபிறகுشَقَقْنَاபிளந்தோம்الْاَرْضَபூமியைشَقًّا ۙ‏பிளத்தல்
தும்ம ஷ கக்னல்-அர்ள ஷக்கா.
முஹம்மது ஜான்
பின், பூமியைப் பிளப்பதாகப் பிளந்து-
அப்துல் ஹமீது பாகவி
பின்னர், பூமியையும் பிளந்(து வெடிக்கச் செய்)தோம்.
IFT
பின்னர், வியக்கத்தக்க முறையில் பூமியைப் பிளந்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர் பூமியை நன்கு பிளக்கச்செய்தோம்.
Saheeh International
Then We broke open the earth, splitting [it with sprouts],
فَاَنْۢبَتْنَا فِیْهَا حَبًّا ۟ۙ
فَاَنْۢبَتْنَاஇன்னும் முளைக்க வைத்தோம்فِيْهَاஅதில்حَبًّا ۙ‏தானியம்
Fப அம்Bபத்ன Fபீஹா ஹBப்Bபா
முஹம்மது ஜான்
பின் அதிலிருந்து வித்தை முளைப்பிக்கிறோம்.
அப்துல் ஹமீது பாகவி
பின்னர், அதிலிருந்து வித்துக்களை முளைத்து வளரும்படி செய்கிறோம்.
IFT
பிறகு, அதில் தானியங்களையும்,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர் அதிலிருந்து தானியங்களை முளைப்பிக்கச் செய்கின்றோம்.
Saheeh International
And caused to grow within it grain
وَّعِنَبًا وَّقَضْبًا ۟ۙ
وَّ عِنَبًاஇன்னும் திராட்சைوَّقَضْبًا ۙ‏இன்னும் காய்கறி
வ 'இனBபவ்-வ கள்Bபா
முஹம்மது ஜான்
திராட்சைகளையும், புற்பூண்டுகளையும்-
அப்துல் ஹமீது பாகவி
(இவ்வாறு) திராட்சைக் கனிகளையும் மற்ற காய்கறிகளையும்,
IFT
திராட்சைகளையும், காய்கறிகளையும்,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இவ்வாறே) திராட்சை)க் கனிகளையும் (மற்ற) காய்கறிகளையும்,
Saheeh International
And grapes and herbage
وَّزَیْتُوْنًا وَّنَخْلًا ۟ۙ
وَّزَيْتُوْنًاஇன்னும் ஸைத்தூன்وَّنَخْلًا ؕ‏இன்னும் பேரிச்சை மரம்
வ Zஜய்தூனவ் வனக் ல'
முஹம்மது ஜான்
ஒலிவ மரத்தையும், பேரீச்சையையும் -
அப்துல் ஹமீது பாகவி
ஜைத்தூனையும், பேரீச்சை மரத்தையும்,
IFT
ஆலிவ் மற்றும் பேரீச்சை மரங்களையும்,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஜைத்தூனையும், பேரீச்சையையும்-
Saheeh International
And olive and palm trees
وَّحَدَآىِٕقَ غُلْبًا ۟ۙ
وَحَدَآٮِٕقَஇன்னும் தோட்டங்கள்غُلْبًا ۙ‏அடர்ந்த
வ ஹதா-இக குல்Bபா
முஹம்மது ஜான்
அடர்ந்த தோட்டங்களையும்,
அப்துல் ஹமீது பாகவி
கிளைகள் அடர்ந்த தோப்புகளையும்,
IFT
அடர்ந்த தோட்டங்களையும்,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மரங்கள் அடர்ந்த தோப்புக்களையும்,
Saheeh International
And gardens of dense shrubbery
وَّفَاكِهَةً وَّاَبًّا ۟ۙ
وَّفَاكِهَةًஇன்னும் கனிوَّاَبًّا ۙ‏இன்னும் புற்பூண்டு
வ Fபகி ஹதவ்-வ அBப்Bபா.
முஹம்மது ஜான்
பழங்களையும், தீவனங்களையும்-
அப்துல் ஹமீது பாகவி
கனிவர்க்கங்களையும், புற்பூண்டுகளையும்,
IFT
விதவிதமான கனிகளையும் மற்றும் புற்பூண்டுகளையும் முளைக்கச் செய்தோம்,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
கனியையும், புல்லை (-தீவனங்களையும்)-
Saheeh International
And fruit and grass -
مَّتَاعًا لَّكُمْ وَلِاَنْعَامِكُمْ ۟ؕ
مَّتَاعًاபலன் தருவதற்காகلَّـكُمْஉங்களுக்கும்وَلِاَنْعَامِكُمْؕ‏உங்கள் கால்நடைகளுக்கும்
மத'அல்-லகும் வ லி-அன்'அமிகும்.
முஹம்மது ஜான்
(இவையெல்லாம்) உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக,
அப்துல் ஹமீது பாகவி
உங்களுக்கும் உங்கள் கால்நடைகளுக்கும், பயனளிக்குமாறு (முளைக்க வைக்கிறோம்).
IFT
உங்களுக்கும் உங்கள் கால்நடைகளுக்கும் வாழ்வதாராப் பொருட்களாகும் பொருட்டு!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உங்களுக்கும், உங்கள் கால்நடைகளுக்கும் பயனளிப்பதற்காக (முளைக்கச் செய்தோம்)
Saheeh International
[As] enjoyment [i.e., provision] for you and your grazing livestock.
فَاِذَا جَآءَتِ الصَّآخَّةُ ۟ؗ
فَاِذَا جَآءَتِஆகவே, வந்தால்الصَّآخَّةُ‏செவிடாக்கும் சப்தம்
Fபய்த ஜா-அதிஸ் ஸாகஹ்.
முஹம்மது ஜான்
ஆகவே, (யுக முடிவின் போது காதைச் செவிடாக்கும் பெருஞ் சப்தம் வரும் போது -
அப்துல் ஹமீது பாகவி
(உலக முடிவின்பொழுது செவிகளை) செவிடாக்கும்படியான (பயங்கரச்) சப்தம் ஏற்படுமாயின்,
IFT
இறுதியில், காதைச் செவிடாக்கும் அந்தப் பேரோசை முழங்கும்போது
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனவே, (காதைச் செவிடாக்கும்) பயங்கர சப்தம் வந்து விடும்போது,
Saheeh International
But when there comes the Deafening Blast
یَوْمَ یَفِرُّ الْمَرْءُ مِنْ اَخِیْهِ ۟ۙ
يَوْمَநாளில்يَفِرُّவிரண்டோடுவான்الْمَرْءُமனிதன்مِنْவிட்டும்اَخِيْهِۙ‏தன் சகோதரன்
யவ்ம யFபிர்-ருல் மர்-உ மின் அகீஹ்
முஹம்மது ஜான்
அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும் -
அப்துல் ஹமீது பாகவி
அந்நாளில் மனிதன் தன் சகோதரனை விட்டும் வெருண்டோடுவான்,
IFT
அந்நாளில் மனிதன் விரண்டோடுவான் தன் சகோதரனை விட்டும்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அந்நாளில் மனிதன் தன் சகோதரனை விட்டும் வெருண்டோடுவான்-
Saheeh International
On the Day a man will flee from his brother
وَاُمِّهٖ وَاَبِیْهِ ۟ۙ
وَاُمِّهٖஇன்னும் தன் தாய்وَاَبِيْهِۙ‏இன்னும் தன் தந்தை
வ உம்மிஹீ வ அBபீஹ்
முஹம்மது ஜான்
தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்;
அப்துல் ஹமீது பாகவி
தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்,
IFT
தாயையும் தந்தையையும் விட்டும்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தன் தாயையும், தன் தந்தையையும் (விட்டு)- விட்டும் வெருண்டோடுவான்
Saheeh International
And his mother and his father
وَصَاحِبَتِهٖ وَبَنِیْهِ ۟ؕ
وَصَاحِبَتِهٖஇன்னும் தன் மனைவிوَبَنِيْهِؕ‏இன்னும் தான் பிள்ளைகள்
வ ஸாஹி Bபதிஹீ வ Bபனீஹ்.
முஹம்மது ஜான்
தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்-
அப்துல் ஹமீது பாகவி
தன் மனைவியை விட்டும், தன் பிள்ளைகளை விட்டும் (ஓடுவான்).
IFT
தன்னுடைய மனைவியையும் குழந்தைகளையும் விட்டும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தன் மனைவியையும், தன் மக்களையும் (விட்டும் வெருண்டோடுவான்_)
Saheeh International
And his wife and his children,
لِكُلِّ امْرِئٍ مِّنْهُمْ یَوْمَىِٕذٍ شَاْنٌ یُّغْنِیْهِ ۟ؕ
لِكُلِّ امْرِیءٍஒவ்வொரு மனிதனுக்கும்مِّنْهُمْஅவர்களில்يَوْمَٮِٕذٍஅந்நாளில்شَاْنٌநிலைமைيُّغْنِيْهِؕ‏அவனைத் திருப்பிவிடுகின்ற
லிகுல் லிம்ரி-இம்-மின்ஹும் யவ்மா-இதின் ஷா னுய்-யுக்னீஹ்
முஹம்மது ஜான்
அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும்.
அப்துல் ஹமீது பாகவி
அந்நாளில், அவர்களில் ஒவ்வொரு மனிதனுக்கும், மற்றவர்களைக் கவனிக்க முடியாதவாறு சொந்தக் கவலை ஏற்பட்டுவிடும்.
IFT
அவர்களில் ஒவ்வொருவருக்கும் அந்நாளில் தன்னைத் தவிர வேறெவரைப் பற்றியும் கவனம் செலுத்தமுடியாத நிலை வந்தே தீரும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அந்நாளில், அவர்களில் ஒவ்வொரு மனிதருக்கும் (தன் சுற்றத்தாரை விட்டும்) அவரைத் திருப்பிவிடும் ஒரு காரியம் உண்டு.
Saheeh International
For every man, that Day, will be a matter adequate for him.
وُجُوْهٌ یَّوْمَىِٕذٍ مُّسْفِرَةٌ ۟ۙ
وُجُوْهٌ(சில) முகங்கள்يَّوْمَٮِٕذٍஅந்நாளில்مُّسْفِرَةٌ ۙ‏ஒளிரக்கூடியதாக
வுஜூ ஹு(ன்)ய்-யவ்ம-இதிம்-முஸ்Fபிர;
முஹம்மது ஜான்
அந்நாளில் சில முகங்கள் இலங்கிக் கொண்டிருக்கும்.
அப்துல் ஹமீது பாகவி
எனினும், அந்நாளில் சில முகங்கள் பிரகாசமுள்ளவையாகவும்,
IFT
சில முகங்கள் அந்நாளில் பளிச்சிட்டுக் கொண்டிருக்கும்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(எனினும்,) அந்நாளில் சில முகங்கள் பிரகாசமுள்ளவையாக (இருக்கும்)
Saheeh International
[Some] faces, that Day, will be bright -
ضَاحِكَةٌ مُّسْتَبْشِرَةٌ ۟ۚ
ضَاحِكَةٌசிரித்தவையாகمُّسْتَبْشِرَةٌ ۚ‏நற்செய்தி பெற்றவையாக
ளஹி கதும் முஸ்தBப் ஷிரஹ்
முஹம்மது ஜான்
சிரித்தவையாகவும், மகிழ்வுடையதாகவும் இருக்கும்.
அப்துல் ஹமீது பாகவி
சந்தோஷத்தால் சிரித்தவையாகவும் இருக்கும்.
IFT
சிரித்துக் கொண்டும் மலர்ச்சியுடனும் இருக்கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
சிரித்தவையாக மகிழ்வுடையவையாக (இருக்கும்)-
Saheeh International
Laughing, rejoicing at good news.
وَوُجُوْهٌ یَّوْمَىِٕذٍ عَلَیْهَا غَبَرَةٌ ۟ۙ
وَوُجُوْهٌஇன்னும் (சில) முகங்கள்يَّوْمَٮِٕذٍஅந்நாளில்عَلَيْهَاஅவற்றின் மீதுغَبَرَةٌ ۙ‏புழுதி
வ வுஜூஹுய் யவ்ம-இதின் 'அலய்ஹ கBபரா
முஹம்மது ஜான்
ஆனால் அந்நாளில் - (வேறு) சில முகங்கள், அவற்றின் மீது புழுதி படிந்திருக்கும்.
அப்துல் ஹமீது பாகவி
அந்நாளில் வேறு சில முகங்கள் மீது, புழுதி படிந்து கிடக்கும்.
IFT
மேலும், அந்நாளில் வேறு சில முகங்களில் புழுதி படிந்திருக்கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், சில முகங்கள் அவற்றின் மீது அந்நாளில் புழுதி படிந்திருக்கும்.
Saheeh International
And [other] faces, that Day, will have upon them dust.
تَرْهَقُهَا قَتَرَةٌ ۟ؕ
تَرْهَقُهَاஅவற்றை மூடிக்கொள்ளும்قَتَرَةٌ ؕ‏கருமை
தர்ஹகுஹ கதரஹ்.
முஹம்மது ஜான்
அவற்றைக் கருமை இருள் மூடியிருக்கும்.
அப்துல் ஹமீது பாகவி
கருமை இருள் அவற்றை மூடிக்கொள்ளும், (துக்கத்தால் அவர்களது முகங்கள் இருளடைந்து கிடக்கும்).
IFT
அவற்றில் இருளும் கருமையும் கப்பியிருக்கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(துக்கத்தால்) கருமை இருள் அவற்றை மூடியிருக்கும்-
Saheeh International
Blackness will cover them.
اُولٰٓىِٕكَ هُمُ الْكَفَرَةُ الْفَجَرَةُ ۟۠
اُولٰٓٮِٕكَ هُمُஇவர்கள்தான்الْكَفَرَةُநிராகரிப்பாளர்கள்الْفَجَرَةُ‏பெரும் பாவிகளான
உலா-இக ஹுமுல்-கFப ரதுல்-Fபஜரஹ்.
முஹம்மது ஜான்
அவர்கள்தாம், நிராகரித்தவர்கள்; தீயவர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
இவர்கள்தான் (மறுமையை) நிராகரித்துப் பாவம் செய்பவர்கள்.
IFT
அவர்கள்தாம் நிராகரிப்பாளர்கள்; தீயவர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் தாம் (இதயத்தால்) நிராகரித்தவர்கள்; (அவர்களின் செயல்களால்) பாவிகள்.
Saheeh International
Those are the disbelievers, the wicked ones.