81. ஸூரத்துத் தக்வீர் (சுருட்டுதல்)

மக்கீ, வசனங்கள்: 29

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
اِذَا الشَّمْسُ كُوِّرَتْ ۟
اِذَاஎப்போதுالشَّمْسُசூரியன்كُوِّرَتْ۪ۙசுருட்டப்படும்
இதஷ் ஷம்ஸு குவ்விரத்
சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது-
وَاِذَا النُّجُوْمُ انْكَدَرَتْ ۟
وَ اِذَاமேலும் எப்போதுالنُّجُوْمُநட்சத்திரங்கள்انْكَدَرَتْ۪ۙஉதிர்ந்து விழுமோ
வ இதன் னுஜூமுன் கதரத்
நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது-
وَاِذَا الْجِبَالُ سُیِّرَتْ ۟
وَ اِذَاமேலும் எப்போதுالْجِبَالُமலைகள்سُیِّرَتْ۪ۙநகர்த்தப்படும்போது
வ இதல் ஜிBபாலு ஸுய்யிரத்
மலைகள் பெயர்க்கப்படும் போது-
وَاِذَا الْعِشَارُ عُطِّلَتْ ۟
وَ اِذَاஇன்னும் எப்போதுالْعِشَارُபத்து மாதச் சினை ஒட்டகங்கள்عُطِّلَتْ۪ۙகைவிடப்படுமோ
வ இதல் 'இஷாரு 'உத்திலத்
சூல் நிறைந்த ஒட்டகைகள் (கவனிப்பாரற்று) விடப்படும் போது-
وَاِذَا الْوُحُوْشُ حُشِرَتْ ۟
وَ اِذَاஇன்னும் எப்போதுالْوُحُوْشُகாட்டு விலங்குகள்حُشِرَتْ۪ۙஒன்று திரட்டப்படுமோ
வ இதல் வுஹூஷு ஹுஷிரத்
காட்டு மிருகங்கள் (மனிதர்களுடனும், இதர பிராணிகளுடனும்) ஒன்று சேர்க்கப்படும்போது-
وَاِذَا الْبِحَارُ سُجِّرَتْ ۟
وَ اِذَاஇன்னும் எப்போதுالْبِحَارُகடல்கள்سُجِّرَتْ۪ۙதீமூட்டப்படுமோ
வ இதல் Bபிஹாரு ஸுஜ்ஜிரத்
கடல்கள் தீ மூட்டப்படும்போது-
وَاِذَا النُّفُوْسُ زُوِّجَتْ ۟
وَ اِذَاமேலும் எப்போதுالنُّفُوْسُஆன்மாக்கள்زُوِّجَتْ۪ۙஇணைக்கப்படுமோ
வ இதன் னுFபூஸு Zஜுவ்விஜத்
உயிர்கள் ஒன்றிணைக்கப்படும் போது-
وَاِذَا الْمَوْءٗدَةُ سُىِٕلَتْ ۟
وَ اِذَاமேலும் எப்போதுالْمَوْءٗدَةُஉயிருடன் புதைக்கப்பட்ட பெண் குழந்தைسُىِٕلَتْ۪ۙவினவப்படுமோ
வ இதல் மவ்'ஊதது ஸு'இலத்
உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது-
بِاَیِّ ذَنْۢبٍ قُتِلَتْ ۟ۚ
بِاَیِّஎந்தذَنْۢبٍபாவத்திற்காகقُتِلَتْۚஅவள் கொல்லப்பட்டாள்
Bபி அய்யி தம்Bபின் குதிலத்
“எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?” என்று-
وَاِذَا الصُّحُفُ نُشِرَتْ ۟
وَ اِذَاமேலும் எப்போதுالصُّحُفُஏடுகள்نُشِرَتْ۪ۙவிரிக்கப்படுமோ
வ இதஸ் ஸுஹுFபு னுஷிரத்
பட்டோலைகள் விரிக்கப்படும் போது-
وَاِذَا السَّمَآءُ كُشِطَتْ ۟
وَ اِذَاஇன்னும், எப்பொழுதுالسَّمَآءُவானம்كُشِطَتْ۪ۙஅகற்றப்படுமோ
வ இதஸ் ஸமா'உ குஷிதத்
வானம் அகற்றப்படும் போது-
وَاِذَا الْجَحِیْمُ سُعِّرَتْ ۟
وَ اِذَاமேலும் எப்போதுالْجَحِیْمُநரக நெருப்புسُعِّرَتْ۪ۙமூட்டப்படுமோ
வ இதல் ஜஹீமு ஸு'-'இரத்
நரகம் கொழுந்துவிட்டு எரியுமாறு செய்யப்படும் போது-
وَاِذَا الْجَنَّةُ اُزْلِفَتْ ۟
وَ اِذَاமேலும் எப்போதுالْجَنَّةُசுவர்க்கம்اُزْلِفَتْ۪ۙஅருகில் கொண்டுவரப்படுமோ
வ இதல் ஜன்னது உZஜ்லிFபத்
சுவர்க்கம் சமீபமாக கொண்டு வரப்படும்போது-
عَلِمَتْ نَفْسٌ مَّاۤ اَحْضَرَتْ ۟ؕ
عَلِمَتْஅறிந்துகொள்ளும்نَفْسٌஒவ்வோர் ஆத்மாவும்مَّاۤஎதனைاَحْضَرَتْؕஅது கொண்டு வந்ததோ
அலிமத் னFப்ஸும் மா அஹ்ளரத்
ஒவ்வோர் ஆத்மாவும், தான் கொண்டு வந்ததை அறிந்து கொள்ளும்.
فَلَاۤ اُقْسِمُ بِالْخُنَّسِ ۟ۙ
فَلَاۤஎனவே இல்லைاُقْسِمُநான் சத்தியம் செய்கிறேன்بِالْخُنَّسِۙபின்வாங்கிச் செல்பவற்றின் மீது
Fபலா உக்ஸிமு Bபில் குன்னஸ்
எனவே, பின்னே விலகிச் செல்பவை (கிரகங்களின்) மீது சத்தியமாக-
الْجَوَارِ الْكُنَّسِ ۟ۙ
الْجَوَارِவேகமாகச் செல்பவைالْكُنَّسِۙமறைபவை
அல் ஜவாரில் குன்னஸ்
முன் சென்று கொண்டிருப்பவை மறைபவை (மீதும்),
وَالَّیْلِ اِذَا عَسْعَسَ ۟ۙ
وَ الَّیْلِஇரவின் மீது சத்தியமாகاِذَاஅதுعَسْعَسَۙபின்வாங்கும் போது
வல்லய்லி இதா 'அஸ்'அஸ்
பின்வாங்கிச் செல்லும் இரவின் மீதும்,
وَالصُّبْحِ اِذَا تَنَفَّسَ ۟ۙ
وَ الصُّبْحِவிடியற்காலையின் மீதுاِذَاபொழுதுتَنَفَّسَۙமூச்சுவிடும்
வஸ்ஸுBப்ஹி இதா தனFப்Fபஸ்
மூச்சுவிட்டுக் கொண்டெழும் வைகறையின் மீதும் சத்தியமாக.
اِنَّهٗ لَقَوْلُ رَسُوْلٍ كَرِیْمٍ ۟ۙ
اِنَّهٗநிச்சயமாக இதுلَقَوْلُநிச்சயமாக ஒரு சொல்லாகும்رَسُوْلٍஒரு தூதரின்كَرِیْمٍۙகண்ணியமிக்க
இன்னஹூ லகவ்லு ரஸூலின் கரீம்
நிச்சயமாக (இக்குர்ஆன்) மிகவும் கண்ணியமிக்க ஒரு தூதுவர் (ஜிப்ரீல் மூலம் வந்த) சொல்லாகும்.
ذِیْ قُوَّةٍ عِنْدَ ذِی الْعَرْشِ مَكِیْنٍ ۟ۙ
ذِیْஉடையவர்قُوَّةٍவலிமைعِنْدَஇடத்தில்ذِیஉடையவன்الْعَرْشِஅரியாசனத்தைمَكِیْنٍۙஅந்தஸ்துடையவர்
தீ குவ்வதின் 'இன்த தில் 'அர்ஷி மகீன்
(அவர்) சக்திமிக்கவர்; அர்ஷுக்குடையவனிடம் பெரும் பதவியுடையவர்.
مُّطَاعٍ ثَمَّ اَمِیْنٍ ۟ؕ
مُّطَاعٍகீழ்ப்படியப்படுபவர்ثَمَّஅங்குاَمِیْنٍؕநம்பிக்கைக்குரியவர்
முதா'இன் தம்ம அமீன்
(வானவர் தம்) தலைவர்; அன்றியும் நம்பிக்கைக்குரியவர்.
وَمَا صَاحِبُكُمْ بِمَجْنُوْنٍ ۟ۚ
وَ مَاமேலும் இல்லைصَاحِبُكُمْஉங்கள் தோழர்بِمَجْنُوْنٍۚபைத்தியக்காரர்
வமா ஸாஹிBபுகும் Bபிமஜ்னூன்
மேலும் உங்கள் தோழர் பைத்தியக்காரர் அல்லர்.
وَلَقَدْ رَاٰهُ بِالْاُفُقِ الْمُبِیْنِ ۟ۚ
وَ لَقَدْநிச்சயமாகرَاٰهُஅவரை அவர் கண்டார்بِالْاُفُقِஅடிவானத்தில்الْمُبِیْنِۚதெளிவான
வ லகத் ர ஆஹு BபிலுFபுகில் முBபீன்
அவர் திட்டமாக அவரை (ஜிப்ரீலை) தெளிவான அடிவானத்தில் கண்டார்.
وَمَا هُوَ عَلَی الْغَیْبِ بِضَنِیْنٍ ۟ۚ
وَ مَاமேலும் இல்லைهُوَஅவர்عَلَیபற்றிالْغَیْبِமறைவானவைبِضَنِیْنٍۚகஞ்சத்தனம் செய்பவராக
வமா ஹுவ 'அலல் கய்Bபி Bபிளனீன்
மேலும், அவர் மறைவான செய்திகளை கூறுவதில் உலோபித்தனம் செய்பவரல்லர்.
وَمَا هُوَ بِقَوْلِ شَیْطٰنٍ رَّجِیْمٍ ۟ۙ
وَ مَاமேலும் இல்லைهُوَஅதுبِقَوْلِசொல்شَیْطٰنٍஷைத்தானின்رَّجِیْمٍۙவிரட்டப்பட்ட
வமா ஹுவ Bபிகவ்லி ஷய்தானிர் ரஜீம்
அன்றியும், இது விரட்டப்பட்ட ஷைத்தானின் வாக்கல்ல.
فَاَیْنَ تَذْهَبُوْنَ ۟ؕ
فَاَیْنَஎனவே எங்கேتَذْهَبُوْنَؕநீங்கள் செல்கிறீர்கள்
Fப அய்ன தத்ஹBபூன்
எனவே, (நேர்வழியை விட்டும்) நீங்கள் எங்கே செல்கின்றீர்கள்?
اِنْ هُوَ اِلَّا ذِكْرٌ لِّلْعٰلَمِیْنَ ۟ۙ
اِنْஇல்லைهُوَஅதுاِلَّاஅன்றிذِكْرٌநினைவூட்டல்لِّلْعٰلَمِیْنَۙஅகிலத்தாருக்கு
இன் ஹுவ இல்லா திக்ருல் லில்'ஆலமீன்
இது, அகிலத்தாருக்கெல்லாம் உபதேசமாகும்.
لِمَنْ شَآءَ مِنْكُمْ اَنْ یَّسْتَقِیْمَ ۟ؕ
لِمَنْஎவர்شَآءَநாடுகிறாரோمِنْكُمْஉங்களில்اَنْஎன்றுیَّسْتَقِیْمَؕநேர்வழியில் நடக்க
லிமன் ஷா'அ மின்கும் அய் யஸ்தகீம்
உங்களில் நின்றும் யார் நேர்வழியை விரும்புகிறாரோ, அவருக்கு (நல்லுபதேசமாகும்).
وَمَا تَشَآءُوْنَ اِلَّاۤ اَنْ یَّشَآءَ اللّٰهُ رَبُّ الْعٰلَمِیْنَ ۟۠
وَ مَاமேலும் இல்லைتَشَآءُوْنَநீங்கள் நாடுவீர்கள்اِلَّاۤதவிரاَنْஎன்றுیَّشَآءَஅவன் நாடுவதுاللّٰهُஅல்லாஹ்رَبُّஇறைவனானالْعٰلَمِیْنَ۠அகிலங்களின்
வமா தஷா'ஊன இல்லா அய் யஷா 'அல் லாஹு ரBப்Bபுல் 'ஆலமீன்
ஆயினும், அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் (நல்லுபதேசம் பெற) நாடமாட்டீர்கள்.