86. ஸூரத்துத் தாரிஃக் (விடிவெள்ளி)

மக்கீ, வசனங்கள்: 17

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
وَالسَّمَآءِ وَالطَّارِقِ ۟ۙ
وَ السَّمَآءِவானத்தின் மீது சத்தியமாகوَ الطَّارِقِۙஇரவில் தோன்றும் விண்மீன் மீதும் சத்தியமாக
வஸ்ஸமா'இ வத்தாரிக்
வானத்தின் மீது சத்தியமாக! தாரிக் மீதும் சத்தியமாக
وَمَاۤ اَدْرٰىكَ مَا الطَّارِقُ ۟ۙ
وَ مَاۤமேலும் எதுاَدْرٰىكَஉமக்கு அறிவிக்கும்مَاஎன்னவென்றுالطَّارِقُۙஅத்தாரிக்
வ மா அத்ராக மத்தாரிக்
தாரிக் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
النَّجْمُ الثَّاقِبُ ۟ۙ
النَّجْمُநட்சத்திரம்الثَّاقِبُۙதுளைத்துச் செல்லும்
அன்னஜ்முத் தாகிBப்
அது இலங்கும் ஒரு நட்சத்திரம்.
اِنْ كُلُّ نَفْسٍ لَّمَّا عَلَیْهَا حَافِظٌ ۟ؕ
اِنْஇல்லைكُلُّஒவ்வொருنَفْسٍஆத்மாவும்لَّمَّاதவிரعَلَیْهَاஅதன் மீதுحَافِظٌؕஒரு பாதுகாவலர்
இன் குல்லு னFப்ஸில் லம்மா 'அலய்ஹா ஹாFபிள்
ஒவ்வொரு ஆத்மாவுக்கு ஒரு பாதுகாவலர் இல்லாமலில்லை.
فَلْیَنْظُرِ الْاِنْسَانُ مِمَّ خُلِقَ ۟ؕ
فَلْیَنْظُرِஎனவே கவனிக்கட்டும்الْاِنْسَانُமனிதன்مِمَّஎதிலிருந்துخُلِقَؕபடைக்கப்பட்டான்
Fபல் யன்ளுரில் இன்ஸானு மிம்ம குலிக்
மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கட்டும்.
خُلِقَ مِنْ مَّآءٍ دَافِقٍ ۟ۙ
خُلِقَபடைக்கப்பட்டான்مِنْஇருந்துمَّآءٍநீர்دَافِقٍۙகுதித்து வெளிப்படும்
குலிக மிம் மா'இன் தாFபிக்
குதித்து வெளிப்படும் (ஒரு துளி) நீரினால் படைக்கப்பட்டான்.
یَّخْرُجُ مِنْ بَیْنِ الصُّلْبِ وَالتَّرَآىِٕبِ ۟ؕ
یَّخْرُجُவெளிப்படுகிறதுمِنْۢஇருந்துبَیْنِஇடையில்الصُّلْبِமுதுகெலும்பிற்கும்وَ التَّرَآىِٕبِؕமற்றும் விலா எலும்புகளுக்கும்
யக்ருஜு மிம் Bபய்னிஸ்ஸுல்Bபி வத் தரா'இBப்
முதுகந் தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது.
اِنَّهٗ عَلٰی رَجْعِهٖ لَقَادِرٌ ۟ؕ
اِنَّهٗநிச்சயமாக அவன்عَلٰیமீதுرَجْعِهٖஅவரை மீண்டும் கொண்டுவருவதன்لَقَادِرٌؕநிச்சயமாக ஆற்றலுடையவன்
இன்னஹூ 'அலா ரஜ்'இஹீ லகாதிர்
இறைவன் (மனிதன் இறந்த பின் அவனை உயிர்ப்பித்து) மீட்டும் சக்தியுடையவன்.
یَوْمَ تُبْلَی السَّرَآىِٕرُ ۟ۙ
یَوْمَஅந்நாளில்تُبْلَیசோதிக்கப்படும்السَّرَآىِٕرُۙஇரகசியங்கள்
யவ்ம துBப்லஸ் ஸரா'இர்
இரகசியங்கள் யாவும் வெளிப்பட்டுவிடும் அந்நாளில்.
فَمَا لَهٗ مِنْ قُوَّةٍ وَّلَا نَاصِرٍ ۟ؕ
فَمَاஅப்போது இல்லைلَهٗஅவனுக்குمِنْஎந்தவொருقُوَّةٍவலிமையும்وَّ لَاமேலும் இல்லைنَاصِرٍؕஉதவியாளரும்
Fபமா லஹூ மின் குவ்வதி(ன்)வ் வலா னாஸிர்
மனிதனுக்கு எந்த பலமும் இராது; (அவனுக்கு) உதவி செய்பவனும் இல்லை.
وَالسَّمَآءِ ذَاتِ الرَّجْعِ ۟ۙ
وَ السَّمَآءِவானத்தின் மீது சத்தியமாகذَاتِஉடையالرَّجْعِۙமீளும் மழையை
வஸ்ஸமா'இ தாதிர் ரஜ்'
(திரும்பத் திரும்பப்) பொழியும் மழையை உடைய வானத்தின் மீது சத்தியமாக,
وَالْاَرْضِ ذَاتِ الصَّدْعِ ۟ۙ
وَ الْاَرْضِபூமியின் மீதும்ذَاتِஉடையالصَّدْعِۙபிளவை
வல் அர்ளி தாதிஸ் ஸத்'
(தாவரங்கள் முளைப்பதற்குப்) பிளவு படும் பூமியின் மீதும் சத்தியமாக,
اِنَّهٗ لَقَوْلٌ فَصْلٌ ۟ۙ
اِنَّهٗநிச்சயமாக இதுلَقَوْلٌஒரு சொல்فَصْلٌۙபிரித்துக் காட்டக்கூடியது
இன்னஹூ லகவ்லுன் Fபஸ்ல்
நிச்சயமாக இது (குர்ஆன் சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிரித்து அறிவிக்கக்கூடிய வாக்காகும்.
وَّمَا هُوَ بِالْهَزْلِ ۟ؕ
وَّ مَاமேலும் இல்லைهُوَஅதுبِالْهَزْلِؕவீணானதாக
வமா ஹுவ Bபில் ஹZஜ்ல்
அன்றியும், இது வீணான (வார்த்தைகளைக் கொண்ட)து அல்ல.
اِنَّهُمْ یَكِیْدُوْنَ كَیْدًا ۟ۙ
اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்یَكِیْدُوْنَசூழ்ச்சி செய்கிறார்கள்كَیْدًاۙஒரு சூழ்ச்சியை
இன்னஹும் யகீதூன கய்தா
நிச்சயமாக அவர்கள் (உமக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறார்கள்.
وَّاَكِیْدُ كَیْدًا ۟ۚۖ
وَّ اَكِیْدُநானும் சூழ்ச்சி செய்கிறேன்كَیْدًاۚۖஒரு சூழ்ச்சியை
வ அகீது கய்தா
நானும் (அவர்களுக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறேன்.
فَمَهِّلِ الْكٰفِرِیْنَ اَمْهِلْهُمْ رُوَیْدًا ۟۠
فَمَهِّلِஎனவே அவகாசம் அளிப்பீராகالْكٰفِرِیْنَநிராகரிப்பவர்களுக்குاَمْهِلْهُمْஅவர்களுக்கு அவகாசம் அளிப்பீராகرُوَیْدًا۠சிறிது காலம்
Fபமஹ்ஹிலில் காFபிரீன அம்ஹில்ஹும் ருவய்தா
எனவே, காஃபிர்களுக்கு நீர் அவகாசமளிப்பீராக; சொற்பமாக அவகாசம் அளிப்பீராக.