25. ஸூரத்துல் ஃபுர்ஃகான் (பிரித்தறிவித்தல்)

மக்கீ, வசனங்கள்: 77

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
முஹம்மது ஜான்
அப்துல் ஹமீது பாகவி
IFT
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
Saheeh International
تَبٰرَكَ الَّذِیْ نَزَّلَ الْفُرْقَانَ عَلٰی عَبْدِهٖ لِیَكُوْنَ لِلْعٰلَمِیْنَ نَذِیْرَا ۟ۙ
تَبٰـرَكَமிக்க அருள் நிறைந்தவன்الَّذِىْஎவன்نَزَّلَஇறக்கினான்الْـفُرْقَانَபகுத்தறிவிக்கும் வேதத்தைعَلٰى عَبْدِهٖதனது அடியார் மீதுلِيَكُوْنَஅவர் இருப்பதற்காகلِلْعٰلَمِيْنَஅகிலத்தார்களைنَذِيْرَا ۙ‏எச்சரிப்பவராக
தBபாரகல் லதீ னZஜ்Zஜலல் Fபுர்கான 'அலா 'அBப்திஹீ லி யகூன லில்'ஆலமீன னதீரா
முஹம்மது ஜான்
உலகத்தார் யாவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக (சத்தியத்தையும், அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தைத் தன் அடியார் மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன்.
அப்துல் ஹமீது பாகவி
(நன்மை தீமைகளைத் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தை தன் அடியார் (முஹம்மது) மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன். இது உலகத்தார் அனைவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதாக இருக்கிறது.
IFT
பெரும்பாக்கியம் நிறைந்தவனாக இருக்கின்றான், தன்னுடைய அடியார் மீது (சத்தியத்தையும், அசத்தியத்தையும் பிரித்துக் காட்டும்) இந்த ஃபுர்கானை (அதாவது குர்ஆனை) இறக்கி வைத்தவன். அகிலத்தார் அனைவருக்கும் (அவர்) எச்சரிக்கை செய்யக் கூடியவராக திகழ வேண்டும் என்பதற்காக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தன் அடியார் (முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்) மீது (அசத்தியத்திலிருந்து சத்தியத்தைப் பிரித்தறிவிக்கும்) ஃபுர்கானை – அது அகிலத்தார்க்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யக்கூடியதாக ஆவதற்காக இறக்கி வைத்தானே அத்தகையோன் மிக்க பாக்கியமுடையவன்.
Saheeh International
Blessed is He who sent down the Criterion upon His Servant that he may be to the worlds a warner -
لَّذِیْ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَلَمْ یَتَّخِذْ وَلَدًا وَّلَمْ یَكُنْ لَّهٗ شَرِیْكٌ فِی الْمُلْكِ وَخَلَقَ كُلَّ شَیْءٍ فَقَدَّرَهٗ تَقْدِیْرًا ۟
اۨلَّذِىْஎவன்لَهٗஅவனுக்கே உரியதுمُلْكُஆட்சிالسَّمٰوٰتِவானங்கள்وَالْاَرْضِஇன்னும் பூமிوَلَمْ يَتَّخِذْஅவன் எடுத்துக் கொள்ளவில்லைوَلَدًاகுழந்தையைوَّلَمْ يَكُنْஇல்லைلَّهٗஅவனுக்குشَرِيْكٌஇணைفِى الْمُلْكِஆட்சியில்وَخَلَقَஇன்னும் அவன்படைத்தான்كُلَّ شَىْءٍஎல்லாவற்றையும்فَقَدَّرَهٗஅவற்றை நிர்ணயித்தான்تَقْدِيْرًا‏சீராக
அல்லதீ லஹூ முல்குஸ் ஸமாவாதி வல் அர்ளி வ லம் யத்தகித் வலத(ன்)வ் வ லம் யகுல் லஹூ ஷரீகுன் Fபில்முல்கி வ கலக குல்ல ஷய்'இன் Fபகத்தரஹூ தக்தீரா
முஹம்மது ஜான்
(அந்த நாயன்) எத்தகையவன் என்றால் வானங்கள், பூமி (ஆகியவற்றின்) ஆட்சி அவனுக்கே உரியது; அவன் (தனக்கென) ஒரு மகனை எடுத்துக் கொள்ளவில்லை; அவனுடைய ஆட்சியில் அவனுக்கு கூட்டாளி எவருமில்லை; அவனே எல்லாப் பொருட்களையும் படைத்து, அவற்றை அதனதன் அளவுப் படி அமைத்தான்.
அப்துல் ஹமீது பாகவி
(இவ்வேதத்தை அருளியவன் எத்தகையவனென்றால்,) வானங்கள், பூமியின் ஆட்சி அவனுக்குரியதே! அவன் ஒரு சந்ததியை எடுத்துக் கொள்ளவும் இல்லை; அவனுடைய ஆட்சியில் அவனுக்கு ஒரு துணையுமில்லை. அவனே அனைத்தையும் படைத்து அவற்றுக்குரிய இயற்கைத் தன்மையையும் அமைத்தவன்.
IFT
அவன் எத்தகையவனெனில், வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சிக்கு அவனே அதிபதி. மேலும், அவன் யாரையும் மகனாக ஏற்படுத்திக் கொள்ளவில்லை. ஆட்சியில் அவனுடன் பங்கு உடையோர் எவரும் இல்லை! மேலும், அவன் ஒவ்வொரு பொருளையும் படைத்து, பிறகு அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதியை நிர்ணயித்தான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இவ்வேதத்தை அருட்செய்தவன்) எத்தகையோனென்றால் வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது, அவன் (தனக்கென) மகனை எடுத்துக்கொள்ளவுமில்லை, (அவனுடைய) ஆட்சியில் அவனுக்குக் கூட்டுக்காரரும் இல்லை, அவனே ஒவ்வொரு பொருளையும் படைத்தான், பிறகு அதனதன் முறைப்படி அதைச் சரியாக அமைத்தான்.
Saheeh International
He to whom belongs the dominion of the heavens and the earth and who has not taken a son and has not had a partner in dominion and has created each thing and determined it with [precise] determination.
وَاتَّخَذُوْا مِنْ دُوْنِهٖۤ اٰلِهَةً لَّا یَخْلُقُوْنَ شَیْـًٔا وَّهُمْ یُخْلَقُوْنَ وَلَا یَمْلِكُوْنَ لِاَنْفُسِهِمْ ضَرًّا وَّلَا نَفْعًا وَّلَا یَمْلِكُوْنَ مَوْتًا وَّلَا حَیٰوةً وَّلَا نُشُوْرًا ۟
وَاتَّخَذُوْاஅவர்கள் எடுத்துக் கொண்டனர்مِنْ دُوْنِهٖۤஅவனையன்றிاٰلِهَةًகடவுள்களைلَّا يَخْلُقُوْنَபடைக்க மாட்டார்கள்شَيْـٴًـــاஎதையும்وَّهُمْஅவர்கள்يُخْلَقُوْنَபடைக்கப்படுகிறார்கள்وَلَا يَمْلِكُوْنَஇன்னும் உரிமை பெற மாட்டார்கள்لِاَنْفُسِهِمْதங்களுக்குத் தாமேضَرًّاதீமை செய்வதற்கும்وَّلَا نَفْعًاநன்மை செய்வதற்கும்وَّلَا يَمْلِكُوْنَஇன்னும் உரிமை பெற மாட்டார்கள்مَوْتًاஇறப்பிற்கும்وَّلَا حَيٰوةًவாழ்விற்கும்وَّلَا نُشُوْرًا‏மீண்டும் உயிர்த்தெழ செய்வதற்கும்
வத்தகதூ மின் தூனிஹீ ஆலிஹதல் லா யக்லுகூன ஷய்'அ(ன்)வ் வ ஹும் யுக்லகூன வலா யம்லிகூன லி அன்Fபுஸிஹிம் ளர்ர(ன்)வ் வலா னFப்'அ(ன்)வ் வலா யம்லிகூன மவ்த(ன்)வ் வலா ஹயாத(ன்)வ் வலா னுஷூரா
முஹம்மது ஜான்
(எனினும் முஷ்ரிக்குகள்) அவனையன்றி (வேறு) தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் - அவர்கள் எந்தப் பொருளையும் படைக்க மாட்டார்கள்; (ஏனெனில்) அவர்களே படைக்கப்பட்டவர்கள். இன்னும் அவர்கள்; தங்களுக்கு நன்மை செய்து கொள்ளவோ தீமையை தடுத்துக் கொள்ளவோ சக்திபெற மாட்டார்கள்; மேலும் அவர்கள் உயிர்ப்பிக்கவோ, மரணிக்கச் செய்யவோ, மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பவோ, இயலாதவர்களாகவும் இருக்கின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
(இவ்வாறெல்லாமிருந்தும் இணைவைத்து வணங்குபவர்கள்) அல்லாஹ் அல்லாதவற்றை தெய்வங்களாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவையோ (அல்லாஹ்வினால்) படைக்கப்பட்டவை. எதையும் அவை படைக்கவில்லை. எவ்வித நன்மையையும் தீமையையும் தங்களுக்கு செய்து கொள்ள அவை சக்தியற்றவை. உயிர்ப்பிக்கவோ, மரணிக்க வைக்கவோ, உயிர் கொடுத்து எழுப்பவோ அவை சக்திபெற மாட்டா.
IFT
ஆனால், மக்கள் அவனை விடுத்து எத்தகைய கடவுள்களை ஏற்படுத்திக் கொண்டார்கள் என்றால், அந்தக் கடவுள்கள் எந்தப் பொருளையும் படைப்பதில்லை ஏன், அவர்களே படைக்கப்பட்டவர்களாக இருக்கின்றார்கள். மேலும், தங்களுக்குக்கூட எத்தகைய இலாபத்தையும் நஷ்டத்தையும் அளிக்கும் அதிகாரத்தை அவர்கள் பெற்றிருக்கவில்லை; மேலும், மரணிக்கச் செய்யவும், உயிர் கொடுக்கவும் (இறந்தவர்களை) மீண்டும் எழுப்பவும் அவர்களால் இயலாது!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஆனால் இணைவைத்துக் கொண்டிருப்போர்) அவனையன்றி (வேறு வணக்கத்திற்குரிய) தெய்வங்களை அவர்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் எதையும் படைக்க (சக்தி பெற) மாட்டார்கள், அவர்களோ (அல்லாஹ்வினால்) படைக்கப்படுகிறார்கள், மேலும், அவர்கள் தங்களுக்ககுத் தீமையையோ, நன்மையையோ செய்து கொள்ள அதிகாரம் (சக்தி) பெற மாட்டார்கள், இன்னும் அவர்கள் (யாரையும்) மரணிக்கச் செய்யவோ, (எதையும்) உயிர்ப்பிக்கவோ, (இறந்ததை உயிர் கொடுத்து) மீண்டும் எழுப்பவோ அதிகாரம் பெற மாட்டார்கள்.
Saheeh International
But they have taken besides Him gods which create nothing, while they are created, and possess not for themselves any harm or benefit and possess not [power to cause] death or life or resurrection.
وَقَالَ الَّذِیْنَ كَفَرُوْۤا اِنْ هٰذَاۤ اِلَّاۤ اِفْكُ فْتَرٰىهُ وَاَعَانَهٗ عَلَیْهِ قَوْمٌ اٰخَرُوْنَ ۛۚ فَقَدْ جَآءُوْ ظُلْمًا وَّزُوْرًا ۟ۚۛ
وَقَالَகூறுகின்றனர்الَّذِيْنَ كَفَرُوْۤاநிராகரிப்பாளர்கள்اِنْ هٰذَاۤஇது இல்லைاِلَّاۤதவிரاِفْكٌஇட்டுக்கட்டப்பட்டதேاۨفْتَـرٰٮهُஇதை இட்டுக்கட்டினார்وَاَعَانَهٗஇன்னும் உதவினர்/இவருக்குعَلَيْهِஇதற்குقَوْمٌமக்கள்اٰخَرُوْنَ‌ ۛۚமற்றفَقَدْஆகவே, திட்டமாகجَآءُوْஇவர்கள் வந்தனர்ظُلْمًاஅநியாயத்திற்கும்وَّزُوْرًا ۛۚ‏பொய்யுக்கும்
வ காலல் லதீன கFபரூ இன் ஹாதா இல்லா இFப்குனிFப் தராஹு வ அ'ஆனஹூ 'அலய்ஹி கவ்முன் ஆகரூன Fபகத் ஜா'ஊ ளுல்ம(ன்)வ் வ Zஜூரா
முஹம்மது ஜான்
“இன்னும்; இது (அல் குர்ஆன்) பொய்யேயன்றி வேறு இல்லை; இதை இவரே இட்டுக்கட்டிக் கொண்டார்; இன்னும் மற்ற மக்கள் கூட்டத்தாரும் இதில் அவருக்கு உதவிபுரிந்துள்ளார்கள்” என்றும் நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர்; ஆனால் (இப்படிக் கூறுவதன் மூலம்) திடனாக அவர்களே ஓர் அநியாயத்தையும், பொய்யையும் கொண்டு வந்துள்ளார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘ (திருகுர்ஆனாகிய) இது பொய்யாக அவர் கற்பனை செய்து கொண்டதே தவிர, வேறில்லை. இ(தைக் கற்பனை செய்வ)தில் வேறு மக்கள் அவருக்கு உதவி புரிகின்றனர்'' என்று நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர். ஆகவே, (நிராகரிப்பவர்கள் இவ்வாறு கூறுவதன் காரணமாக) அவர்கள் அநியாயத்தையும் பொய்யையுமே சுமந்து கொண்டனர்.
IFT
எவர்கள் (நபியின் கூற்றை) ஏற்றுக்கொள்ள மறுத்தார்களோ அவர்கள் கூறுகின்றார்கள்: “இந்த ஃபுர்கான் புனைந்துரைக்கப்பட்ட ஒன்றேயாகும்; இதனை இவரே இயற்றிக்கொண்டார். மேலும், (இது விஷயத்தில்) வேறு சில மனிதர்கள் இவருக்கு உதவியுள்ளார்கள்!” இத்தகைய பெரும் கொடுமை புரியும் அளவிற்கும், கடும் பொய்யைக் கூறும் அளவிற்கும் அவர்கள் இறங்கி வந்துவிட்டார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் (குர் ஆனாகிய) “இது பொய்யே அன்றி (வேறு) இல்லை, இதனை (அபாண்டமாக) அவர் கற்பனை செய்து கொண்டார், இதில் வேறு கூட்டத்தினரும் அவருக்கு உதவி புரிந்துள்ளார்கள்” என்று நிராகரிப்பவர்கள் கூறுகிறார்கள்.
Saheeh International
And those who disbelieve say, "This [Qur’an] is not except a falsehood he invented, and another people assisted him in it." But they have committed an injustice and a lie.
وَقَالُوْۤا اَسَاطِیْرُ الْاَوَّلِیْنَ اكْتَتَبَهَا فَهِیَ تُمْلٰی عَلَیْهِ بُكْرَةً وَّاَصِیْلًا ۟
وَقَالُوْۤاஇன்னும் கூறினர்اَسَاطِيْرُகதைகள்الْاَوَّلِيْنَமுன்னோரின்اكْتَتَبَهَاஅவர் எழுதிக் கொண்டார்/இவற்றைفَهِىَஇவைتُمْلٰىஎடுத்தியம்பப் படுகின்றனعَلَيْهِஅவர் மீதுبُكْرَةًகாலையிலும்وَّاَصِيْلًا‏இன்னும் மாலையிலும்
வ காலூ அஸாதீருல் அவ்வலீனக் ததBபஹா Fபஹிய தும்லா 'அலய்ஹி Bபுக்ரத(ன்)வ் வ அஸீலா
முஹம்மது ஜான்
இன்னும் அவர்கள் கூறுகிறார்கள்: “இன்னும் அவை முன்னோர்களின் கட்டுக் கதைகளே; அவற்றை இவரே எழுதுவித்துக் கொண்டிருக்கிறார் - ஆகவே அவை அவர் முன்னே காலையிலும் மாலையிலும் ஓதிக் காண்பிக்கப்படுகின்றன.”
அப்துல் ஹமீது பாகவி
‘‘இது முன்னோர்களின் கட்டுக்கதைகள். காலையிலும் மாலையிலும் இவருக்கு ஓதிக் காண்பிக்கப்படுகிறது. அதை இவர் (மற்றொருவரின் உதவியைக் கொண்டு) எழுதி வைக்கும்படிச் செய்கிறார்'' என்று அ(ந்நிராகரிப்ப)வர்கள் கூறுகின்றனர்.
IFT
மேலும், இவர்கள் கூறுகின்றார்கள்: “இவை பழங்காலத்து மக்களால் எழுதப்பட்டவையாகும். இவர் அவற்றை நகல் எடுக்கச் செய்கின்றார். அவை, காலையிலும், மாலையிலும் இவருக்கு ஓதிக் காட்டப்படுகின்றன.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், (இது) முன்னோர்களின் கட்டுக்கதைகள் (மற்றவரின் உதவி கொண்டு) இவற்றை இவரே எழுதச்செய்து கொண்டிருக்கிறார், அது இவருக்குக் காலையிலும், மாலையிலும் ஓதிக் காண்பிக்கப்படுகிறது என்று (நிராகரிப்பவர்களாகிய) அவர்கள் கூறுகிறார்கள்.
Saheeh International
And they say, "Legends of the former peoples which he has written down, and they are dictated to him morning and afternoon."
قُلْ اَنْزَلَهُ الَّذِیْ یَعْلَمُ السِّرَّ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ اِنَّهٗ كَانَ غَفُوْرًا رَّحِیْمًا ۟
قُلْகூறுவீராகاَنْزَلَهُஇதை இறக்கினான்الَّذِىْஎவன்يَعْلَمُஅறிகின்றான்السِّرَّஇரகசியத்தைفِى السَّمٰوٰتِவானங்களிலும்وَالْاَرْضِ‌ؕபூமியிலும்اِنَّهٗநிச்சயமாக அவன்كَانَஇருக்கிறான்غَفُوْرًاமகாமன்னிப்பாளனாகرَّحِيْمًا‏பெரும் கருணையாளனாக
குல் அன்Zஜல்ஹுல் லதீ யஃலமுஸ் ஸிர்ர Fபிஸ் ஸமாவாதி வல்-அர்ள்; இன்னஹூ கான கFபூரர் ரஹீமா
முஹம்மது ஜான்
(நபியே!) “வானங்களிலும், பூமியிலுமுள்ள இரகசியங்களை அறிந்தவன் எவனோ அவனே அதை இறக்கி வைத்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவனாகவும், மிக்க கிருபை செய்வோனாகவும் இருக்கின்றான்” என்று கூறுவீராக!
அப்துல் ஹமீது பாகவி
(அதற்கு நபியே!) கூறுவீராக: ‘‘ (அவ்வாறல்ல.) வானங்களிலும், பூமியிலுமுள்ள ரகசியங்களை அறிந்தவன் எவனோ அவனே இதை இறக்கிவைத்தான். (நீங்கள் மனம் வருந்தி அவனளவில் திரும்பினால்) நிச்சயமாக அவன் (உங்கள் குற்றங்களை) மன்னிப்பவனாகவும் மகா கருணையுடையவனாகவும் இருக்கிறான்.’‘
IFT
(நபியே!) இவர்களிடம் நீர் கூறும்: “பூமி மற்றும் வானங்களில் உள்ள இரகசியங்களை அறிகின்றவன்தான் இதனை இறக்கி அருளினான். திண்ணமாக, அவன் அதிகம் மன்னிப்பவனாகவும் கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு) “வானங்களிலும், பூமியிலுமுள்ள இரகசியத்தை அறிகின்றானே அத்தகையவன் இதனை இறக்கி வைத்தான், “நிச்சயமாக அவன் மிக்க மன்னிக்கிறவனாக, மிக்க கிருபையுடையவனாக இருக்கிறான்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
Saheeh International
Say, [O Muhammad], "It has been revealed by He who knows [every] secret within the heavens and the earth. Indeed, He is ever Forgiving and Merciful."
وَقَالُوْا مَالِ هٰذَا الرَّسُوْلِ یَاْكُلُ الطَّعَامَ وَیَمْشِیْ فِی الْاَسْوَاقِ ؕ لَوْلَاۤ اُنْزِلَ اِلَیْهِ مَلَكٌ فَیَكُوْنَ مَعَهٗ نَذِیْرًا ۟ۙ
وَقَالُوْاஅவர்கள் கூறுகின்றனர்مَالِஎன்ன!هٰذَاஇந்தالرَّسُوْلِதூதருக்குيَاْكُلُஇவர் சாப்பிடுகிறார்الطَّعَامَஉணவுوَيَمْشِىْஇன்னும் நடக்கிறார்فِى الْاَسْوَاقِ‌ ؕகடைத் தெருக்களில்لَوْلَاۤ اُنْزِلَஇறக்கப்பட்டு இருக்க வேண்டாமா?اِلَيْهِஇவர் மீதுمَلَكٌஒரு வானவர்فَيَكُوْنَஅவர் இருக்கிறார்مَعَهٗஇவருடன்نَذِيْرًا ۙ‏எச்சரிப்பவராக
வ காலூ மா லி ஹாதர் ரஸூலி ய'குலுத் த'ஆம வ யம்ஷீ Fபில் அஸ்வாக்; லவ் லா உன்Zஜில இலய்ஹி மலகுன் Fப யகூன ம'அஹூ னதீரா
முஹம்மது ஜான்
மேலும் அவர்கள் கூறுகிறார்கள்: “இந்த ரஸூலுக்கு என்ன? இவர் (மற்றவர்களைப் போலவே) உணவு உண்கிறார்; கடை வீதிகளில் நடக்கிறார். இவருடன் சேர்ந்து அச்சமூட்டி எச்சரிப்பதற்காக, ஒரு மலக்கு (வானவர்) அனுப்பப்படடிருக்க வேண்டாமா?”
அப்துல் ஹமீது பாகவி
(பின்னும்) அவர்கள் கூறுகின்றனர்: ‘‘ இந்தத் தூதருக்கென்ன (நேர்ந்தது)? அவர் (நம்மைப் போலவே) உணவு உண்ணுகிறார்; கடைகளுக்கும் செல்கிறார். (அவர் இறைவனுடைய தூதராக இருந்தால்) அவருக்காக ஒரு வானவர் இறக்கிவைக்கப்பட்டிருக்க வேண்டாமா? அவ்வாறாயின், அவர் அவருடன் இருந்துகொண்டு அச்சமூட்டி எச்சரிக்கை செய்து கொண்டிருப்பாரே!
IFT
மேலும், கூறுகின்றார்கள்: “இவர் எத்தகைய இறைத்தூதர்! உணவு உண்ணுகிறாரே; கடை வீதிகளில் நடமாடுகின்றாரே! இவரிடம் ஒரு வானவர் அனுப்பப்பட்டிருக்கக் கூடாதா? அவர், இவருடன் சேர்ந்து (ஏற்றுக் கொள்ளாதவர்களை) எச்சரிக்கை செய்வதற்காக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும் அவர்கள் கூறுகின்றனர், “இந்தத் தூதருக்கென்ன? அவர் (மற்ற மனிதர்களைப் போன்றே) உணவு உண்ணுகிறார், இன்னும், கடைவீதிகளில் நடக்கிறார், (அல்லாஹ்வுடைய தூதராக அவர் இருந்தால்,) அவர்பால் ஒரு மலக்கு இறக்கி வைக்கப்பட்டிருக்க வேண்டாமா? அப்பொழுது அவர் இவருடனிருந்து அச்சமூட்டி எச்சரிக்கைச் செய்பவராக இருப்பார்.
Saheeh International
And they say, "What is this messenger that eats food and walks in the markets? Why was there not sent down to him an angel so he would be with him a warner?
اَوْ یُلْقٰۤی اِلَیْهِ كَنْزٌ اَوْ تَكُوْنُ لَهٗ جَنَّةٌ یَّاْكُلُ مِنْهَا ؕ وَقَالَ الظّٰلِمُوْنَ اِنْ تَتَّبِعُوْنَ اِلَّا رَجُلًا مَّسْحُوْرًا ۟
اَوْஅல்லதுيُلْقٰٓىஇறக்கப்பட வேண்டாமா!اِلَيْهِஇவருக்குكَنْزٌஒரு பொக்கிஷம்اَوْஅல்லதுتَكُوْنُஇருக்க வேண்டாமா!لَهٗஇவருக்குجَنَّةٌஒரு தோட்டம்يَّاْكُلُஇவர் புசிப்பாரே!مِنْهَا‌ ؕஅதிலிருந்துوَقَالَஇன்னும் கூறுகின்றனர்الظّٰلِمُوْنَஅநியாயக்காரர்கள்اِنْ تَتَّبِعُوْنَநீங்கள் பின்பற்றவில்லைاِلَّاதவிரرَجُلًاஒரு மனிதரைمَّسْحُوْرًا‏சூனியம் செய்யப்பட்ட
அவ் யுல்கா இலய்ஹி கன்Zஜுன் அவ் தகூனு லஹூ ஜன்னது(ன்)ய் ய'குலு மின்ஹா; வ காலள் ளாலிமூன இன் தத்தBபி'ஊன இல்லா ரஜுலன் மஸ் ஹூரா
முஹம்மது ஜான்
“அல்லது இவருக்கு ஒரு புதையல் அளிக்கப்பட்டிருக்க வேண்டாமா? அல்லது அதிலிருந்து உண்பதற்கு (ஒரு பழத்)தோட்டம் உண்டாயிருக்க வேண்டாமா?” (என்றும் கூறுகின்றனர்;) அன்றியும், இந்த அநியாயக் காரர்கள்; (முஃமின்களை நோக்கி) “சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையேயன்றி, வேறெவரையும் நீங்கள் பின்பற்றவில்லை” என்றும் கூறுகிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லது அவருக்கு ஒரு புதையல் கொடுக்கப்பட வேண்டாமா? அல்லது அவர் புசிப்பதற்கு வேண்டிய ஒரு சோலை அவருக்கு இருக்க வேண்டாமா? (என்று கூறுகின்றனர்.) இவ்வக்கிரமக்காரர்கள் (நம்பிக்கையாளர்களை நோக்கி) நீங்கள் சூனியம் செய்கின்ற ஒரு மனிதரையே பின்பற்றுகிறீர்கள்'' என்றும் கூறுகின்றனர்.
IFT
அல்லது அவருக்கு ஏதேனுமொரு கருவூலமாவது இறக்கப்பட்டிருக்கக் கூடாதா? அல்லது (நிம்மதியாக) உணவு பெறுவதற்குரிய ஏதேனும் தோட்டமாயினும் இவருக்கு இருந்திருக்கக்கூடாதா?” மேலும், இவ்வக்கிரமக்காரர்கள் கூறுகின்றார்கள்: “சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரின் பின்னால்தான் நீங்கள் சென்று கொண்டிருக்கின்றீர்கள்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லது அவர்பால் ஒரு புதையல் போடப்பட்டிருக்க வேண்டாமா? அல்லது அவர் அதிலிருந்து புசித்துக் கொள்வாரே அத்தகைய ஒரு சோலை அவருக்கு உண்டாகி இருக்க வேண்டாமா? (என்றும் கூறுகிறார்கள்.) அன்றியும் இந்த அநியாயக்காரர்கள் சூனியம் செய்யப்பட்ட மனிதரையே அன்றி (வேறெவரையும்) நீங்கள் பின்பற்றவில்லை என்று (விசுவாசிகளிடம்) கூறுகிறார்கள்.
Saheeh International
Or [why is not] a treasure presented to him [from heaven], or does he [not] have a garden from which he eats?" And the wrongdoers say, "You follow not but a man affected by magic."
اُنْظُرْ كَیْفَ ضَرَبُوْا لَكَ الْاَمْثَالَ فَضَلُّوْا فَلَا یَسْتَطِیْعُوْنَ سَبِیْلًا ۟۠
اُنْظُرْபார்ப்பீராக!كَيْفَஎப்படிضَرَبُوْاஅவர்கள் விவரிக்கின்றனர்لَـكَஉமக்குالْاَمْثَالَதன்மைகளைفَضَلُّوْاஆகவே, அவர்கள் வழிகெட்டனர்فَلَا يَسْتَطِيْعُوْنَஅவர்கள் சக்தி பெறமாட்டார்கள்سَبِيْلاً‏ஒரு பாதைக்கு
உன்ளுர் கய்Fப ளரBபூ லகல் அம்தால Fபளல்லூ Fபலா யஸ்ததீ'ஊன ஸBபீலா
முஹம்மது ஜான்
(நபியே! உமக்காக அவர்கள் எத்தகைய உவமானங்களை எடுத்துக் கூறுகிறார்கள் என்பதை நீர் பாரும்! அவர்கள் வழி கெட்டுப் போய்விட்டார்கள் - ஆகவே அவர்கள் (நேரான) மார்க்கத்தைக் காண சக்தி பெறமாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (நபியே!) உம்மைப் பற்றி இவ்வக்கிரமக்காரர்கள் என்னென்ன வர்ணிப்புகள் கூறுகிறார்கள் என்பதை கவனித்துப் பார்ப்பீராக. ஆகவே, இவர்கள் (முற்றிலும்) வழிகெட்டு விட்டார்கள்; நேரான வழியை அடைய இவர்களால் முடியாது.
IFT
பாருங்கள்! உம் விஷயத்தில் எத்தகைய விந்தையான வாதங்களை இவர்கள் உம் முன் எடுத்துரைக்கின்றார்கள்! எந்த அளவுக்கு இவர்கள் வழிதவறிப் போய்விட்டார்களெனில் உறுதியாக நிற்பதற்கான எந்த விஷயமும் அவர்களுக்குப் புலப்படுவதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உம்மைப்பற்றி அவர்கள் எப்படி உதாரணங்களைக் கூறுகின்றார்கள் என்பதை (நபியே கவனித்து)ப் பார்ப்பீராக! இவர்கள் வழிகெட்டுப் போனார்கள், ஆதலால் நேர்வழிக்கு (வர) அவர்கள் சக்திபெற மாட்டார்கள்.
Saheeh International
Look how they strike for you comparisons; but they have strayed, so they cannot [find] a way.
تَبٰرَكَ الَّذِیْۤ اِنْ شَآءَ جَعَلَ لَكَ خَیْرًا مِّنْ ذٰلِكَ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ۙ وَیَجْعَلْ لَّكَ قُصُوْرًا ۟
تَبٰـرَكَஅருள் நிறைந்தவன்الَّذِىْۤ اِنْ شَآءَஎவன்/அவன் நாடினால்جَعَلَஏற்படுத்துவான்لَكَஉமக்குخَيْرًاசிறந்ததைمِّنْ ذٰ لِكَஇவற்றை விடجَنّٰتٍசொர்க்கங்களைتَجْرِىْஓடும்مِنْ تَحْتِهَاஅவற்றை சுற்றிالْاَنْهٰرُ ۙநதிகள்وَيَجْعَلْஇன்னும் ஏற்படுத்துவான்لَّكَஉமக்குقُصُوْرًا‏மாளிகைகளை
தBபாரகல் லதீ இன் ஷா'அ ஜ'அல லக கய்ரன் மின் தாலிக ஜன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு வ யஜ்'அல் லக குஸூரா
முஹம்மது ஜான்
(நபியே! இந்நிராகரிப்போர் சொல்வதைவிட) மேலான சுவன(த் தோட்ட)ங்களை அவன் நாடினால் உமக்காக உண்டாக்குவானே (அந்த நாயன்) பாக்கியம் மிக்கவன்; அவற்றின் கீழே ஆறுகள் சதா ஓடிக்கொண்டிருக்கும் - இன்னும் உமக்காக (அங்கு) மாளிகைகளையும் அவன் உண்டாக்குவான்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! உமது இறைவனாகிய) அவன் மிக்க பாக்கியமுடையவன். அவன் நாடினால் (இந்நிராகரிப்பவர்கள் கோரும்) இவற்றைச் சொந்தமாக்கி மிக்க மேலான சொர்க்கங்களை உமக்குத் தரக்கூடியவன். அவற்றில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். அதில் உமக்குப் பல மாட மாளிகைகளையும் அமைத்து விடுவான்.
IFT
பெரும் பாக்கியம் நிறைந்தவனாவான் அவன். தான் நாடினால், இவர்கள் சொன்னவற்றையெல்லாம் விட மிகச் சிறந்ததை உமக்கு வழங்கிட முடியும் (ஒன்றல்ல) கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் பல தோப்புகளையும், பெரும் பெரும் மாளிகைகளையும் (அவனால் வழங்கிட முடியும்).
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) மிக்க பாக்கியமுடைய அவன் எத்தகையவனெனின், அவன் நாடினால், இதைவிட மிக்க மேலான சுவனங்களை உமக்கு ஆக்கித்தருவான், அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், இன்னும் உமக்கு (அதில்) மாளிகைகளையும் அமைத்துவிடுவான்.
Saheeh International
Blessed is He who, if He willed, could have made for you [something] better than that - gardens beneath which rivers flow - and could make for you palaces.
بَلْ كَذَّبُوْا بِالسَّاعَةِ ۫ وَاَعْتَدْنَا لِمَنْ كَذَّبَ بِالسَّاعَةِ سَعِیْرًا ۟ۚ
بَلْமாறாகكَذَّبُوْاஅவர்கள் பொய்ப்பித்தனர்بِالسَّاعَةِ‌உலக முடிவைوَاَعْتَدْنَاஇன்னும் தயார்படுத்தியுள்ளோம்لِمَنْ كَذَّبَபொய்ப்பிப்பவருக்குبِالسَّاعَةِஉலக முடிவைسَعِيْرًا‌ ۚ‏கொழுந்து விட்டெரியும் நெருப்பை
Bபல் கத்தBபூ Bபிஸ் ஸா'அதி வ அஃதத்னா லிமன் கத்தBப Bபிஸ் ஸா'அதி ஸ'ஈரா
முஹம்மது ஜான்
எனினும் அவர்கள் (இறுதி விசாரணக்) காலத்தையே பொய்ப்பிக்க முற்படுகின்றனர்; ஆனால் நாம் அந்தக்காலத்தைப் பொய்ப்பிக்க முற்படுபவனுக்கு (நரக) நெருப்பைச் சித்தம் செய்திருக்கிறோம்.
அப்துல் ஹமீது பாகவி
உண்மையில் இவர்கள் விசாரணைக் காலத்தையே பொய்யாக்குகின்றனர். எவர்கள் விசாரணைக் காலத்தைப் பொய்யாக்குகிறார்களோ அவர்களுக்கு கடுமையாக பற்றி எரியும் நரகத்தைத்தான் நாம் தயார்படுத்தி வைத்திருக்கிறோம்.
IFT
உண்மை யாதெனில், இவர்கள் அந்த நேரத்தைப் பொய்யென்று வாதாடினர். யார் அந்த நேரத்தைப் பொய்யென்று வாதாடினார்களோ அவர்களுக்குக் கொழுந்து விட்டெரியும் நெருப்பை நாம் தயார் செய்து வைத்திருக்கின்றோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனினும், இவர்கள் மறுமை நாளைப் பொய்யாக்குகின்றனர், மறுமை நாளைப் பொய்யாக்குகிறவனுக்கு (கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கும்) நரகத்தை நாம் தயார் செய்தும் வைத்துள்ளோம்.
Saheeh International
But they have denied the Hour, and We have prepared for those who deny the Hour a Blaze.
اِذَا رَاَتْهُمْ مِّنْ مَّكَانٍ بَعِیْدٍ سَمِعُوْا لَهَا تَغَیُّظًا وَّزَفِیْرًا ۟
اِذَا رَاَتْهُمْபார்த்தால் / அவர்களை அதுمِّنْ مَّكَانٍۢஇடத்திலிருந்துبَعِيْدٍதூரமானسَمِعُوْاசெவிமடுப்பார்கள்لَهَاஅதனுடையتَغَيُّظًاசப்தத்தையும்وَّزَفِيْرًا‏இரைச்சலையும்
இதா ர'அத் ஹும் மின் மகானின் Bப'ஈதின் ஸமி'ஊ லஹா தகய்யுள(ன்)வ் வ ZஜFபீரா
முஹம்மது ஜான்
(அந்நரகம்) இவர்களை வெகு தொலைவில் காணும்போதே அதற்கே உரித்தான கொந்தளிப்பையும், பேரிரைச்சலையும் அவர்கள் கேட்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அது இவர்களைக் கண்ட மாத்திரத்தில் சப்தமிட்டு ஆர்ப்பரிப்பதை இவர்கள் வெகு தூரத்திலிருந்தே செவிமடுத்துக் கொள்வார்கள்.
IFT
அது தொலைவான இடத்திலிருந்து இவர்களைப் பார்க்குமாயின், அதன் ஆவேசம் மற்றும் சீற்றத்தின் இரைச்சல்களை இவர்கள் கேட்பார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(ந்நரகமான)து இவர்களை வெகு தொலைவான இடத்திலிருந்து கண்டால் அதற்குரிய கொந்தளிப்பையும், அது மூச்சுவிடும் பேரிரைச்சலையும் இவர்கள் (தங்கள் செவியால்) கேட்பார்கள்.
Saheeh International
When it [i.e., the Hellfire] sees them from a distant place, they will hear its fury and roaring.
وَاِذَاۤ اُلْقُوْا مِنْهَا مَكَانًا ضَیِّقًا مُّقَرَّنِیْنَ دَعَوْا هُنَالِكَ ثُبُوْرًا ۟ؕ
وَاِذَاۤ اُلْقُوْاஅவர்கள் போடப்பட்டால்مِنْهَاஅதில்مَكَانًـاஇடத்தில்ضَيِّقًاநெருக்கமானمُّقَرَّنِيْنَகட்டப்பட்டவர்களாகدَعَوْاஅழைப்பார்கள்هُنَالِكَஅங்குثُبُوْرًا ؕ‏கைசேதமே என்று
வ இதா உல்கூ மின்ஹா மகானன் ளய்யிகம் முகர் ரனீன த'அவ் ஹுனாலிக துBபூரா
முஹம்மது ஜான்
மேலும் அ(ந்நரகத்)தின் ஒரு நெருக்கமான இடத்தில் அவர்கள் (சங்கிலியால்) கட்டி எறியப்பட்டால், (அவ்வேதனையை தாங்கமாட்டாமல், அதைவிட) அழிவே மேல் என அங்கே வேண்டியழைப்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்க(ளின் கை கால்க)ளைக் கட்டி, அதில் மிக்க நெருக்கடியான ஓரிடத்தில் எறியப்பட்டால் (துன்பத்தைத் தாங்க முடியாமல் மரணத்தைத் தரக்கூடிய) அழிவையே அவர்கள் கேட்பார்கள்.
IFT
மேலும், கை, கால்கள் விலங்கிடப்பட்டு அதன் நெருக்கடியான ஓர் இடத்தில் அவர்கள் வீசி யெறியப்படுவார்கள். அங்கே அவர்கள் மரணத்தை அழைக்கத் தொடங்குவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவர்கள் (சங்கிலியால்) கட்டப்பட்டவர்களாக, அதில் மிக்க நெருக்கடியான ஓர் இடத்தில் போடப்பட்டால் (கஷ்டத்தைத் தாங்க முடியாமல்) அழிவை அங்கு அவர்கள் அழைப்பார்கள்.
Saheeh International
And when they are thrown into a narrow place therein bound in chains, they will cry out thereupon for destruction.
لَا تَدْعُوا الْیَوْمَ ثُبُوْرًا وَّاحِدًا وَّادْعُوْا ثُبُوْرًا كَثِیْرًا ۟
لَا تَدْعُواஅழைக்காதீர்கள்الْيَوْمَஇன்றுثُبُوْرًاகைசேதமே என்றுوَّاحِدًاஒரு முறைوَّادْعُوْاஅழையுங்கள்ثُبُوْرًاகைசேதமே என்றுكَثِيْرًا‏பல முறை
லா தத்'உல் யவ்ம துBபூர(ன்)வ் வாஹித(ன்)வ் வத்'ஊ துBபூரன் கதீரா
முஹம்மது ஜான்
“இந்த நாளில் நீங்கள் ஓர் அழிவை அழைக்காதீர்கள்; இன்னும் பல அழிவுகளை வேண்டியழையுங்கள்” (என்று அவர்களிடம் கூறப்படும்).
அப்துல் ஹமீது பாகவி
(ஆகவே, அந்நேரத்தில் அவர்களை நோக்கி,) ‘‘ இன்றைய தினம் நீங்கள் ஓர் அழிவை மாத்திரம் கேட்காதீர்கள். பல அழிவுகளை கேட்டுக் கொள்ளுங்கள்'' (என்று கூறப்படும்).
IFT
(அப்போது அவர்களிடம் கூறப்படும்:) “இன்று ஒரு மரணத்தையல்ல, பல மரணங்களை அழையுங்கள்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“இன்றையத்தினம் நீங்கள் ஓர் அழிவை மாத்திரம் அழைக்காதீர்கள், இன்னும் அநேக அழிவுகளை அழைத்துக் கொள்ளுங்கள்” (என்று அவர்களிடம் கூறப்படும்)
Saheeh International
[They will be told], "Do not cry this Day for one destruction but cry for much destruction."
قُلْ اَذٰلِكَ خَیْرٌ اَمْ جَنَّةُ الْخُلْدِ الَّتِیْ وُعِدَ الْمُتَّقُوْنَ ؕ كَانَتْ لَهُمْ جَزَآءً وَّمَصِیْرًا ۟
قُلْநீர் கேட்பீராக!اَذٰ لِكَஅது?خَيْرٌசிறந்ததாاَمْஅல்லதுجَنَّةُ الْخُـلْدِஜன்னதுல் குல்துالَّتِىْஎதுوُعِدَவாக்களிக்கப்பட்டனர்الْمُتَّقُوْنَ ؕஇறையச்சமுள்ளவர்கள்كَانَتْஅது இருக்கும்لَهُمْஅவர்களுக்குجَزَآءًகூலியாகவும்وَّمَصِيْرًا‏மீளுமிடமாகவும்
குல் அதாலிக கய்ருன் அம் ஜன்னதுல் குல்தில் லதீ வு'இதல் முத்தகூன்; கானத் லஹும் ஜZஜா'அ(ன்)வ் வ மஸீரா
முஹம்மது ஜான்
அ(த்தகைய நரகமான)து நல்லதா? அல்லது பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள நித்திய சுவர்க்கம் நல்லதா? அது அவர்களுக்கு நற்கூலியாகவும், அவர்கள் போய்ச் சேருமிடமாகவும் இருக்கும்” என்று (அவர்களிடம் நபியே!) நீர் கூறும்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! அவர்களை நோக்கி) நீர் கேட்பீராக: ‘‘ அந்த நரகம் மேலா? அல்லது பரிசுத்தவான்களுக்கு வாக்களிக்கப்பட்ட நிலையான சொர்க்கம் மேலா? அது அவர்களுக்கு (நற்)கூலியாகவும், அவர்கள் சேருமிடமாகவும் இருக்கிறது.
IFT
இவர்களிடம் கேளுங்கள்: “இந்த முடிவு சிறந்ததா? அல்லது இறையச்சம் கொண்ட தூய்மையாளர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள நிலையான சுவனம் சிறந்ததா? அது எத்தகையது எனில், அவர்களின் (செயல்களுக்குக்) கூலியாகவும் (அவர்களுடைய பயணத்தின்) இறுதி இடமாகவும் இருக்கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“(நரகமாகிய) அது மேலானதா? அல்லது பயபக்தியுடையவர்கள் வாக்களிக்கப்பட்டுள்ளார்களே அத்தகைய நிலையான சுவனபதி மேலானதா?” என்று நீர் கேட்பீராக! அது அவர்களுக்கு (நற்) கூலியாகவும், (அவர்கள்) சேருமிடமாகவும் இருக்கின்றது.
Saheeh International
Say, "Is that better or the Garden of Eternity which is promised to the righteous? It will be for them a reward and destination.
لَهُمْ فِیْهَا مَا یَشَآءُوْنَ خٰلِدِیْنَ ؕ كَانَ عَلٰی رَبِّكَ وَعْدًا مَّسْـُٔوْلًا ۟
لَّهُمْஅவர்களுக்குفِيْهَاஅதில்مَاஅவர்கள் நாடுவார்கள்يَشَآءُوْنَஎதுخٰلِدِيْنَ‌ ؕநிரந்தரமாக இருப்பார்கள்كَانَஇருக்கிறதுعَلٰىமீதுرَبِّكَஉமது இறைவன்وَعْدًاவாக்காகمَّسْــــٴُـوْلًا‏வேண்டப்பட்ட
லஹும் Fபீஹா மா யஷா'ஊன காலிதீன்; கான 'அலா ரBப்Bபிக வஃதன் மஸ்'ஊலா
முஹம்மது ஜான்
“அதில் அவர்களுக்கு விரும்பியதெல்லாம் கிடைக்கும்; (அதில்) அவர்கள் நிரந்தரமாகத் தங்குவார்கள் - இதுவே உமது இறைவனிடம் வேண்டிப் பெறக்கூடிய வாக்குறுதியாக இருக்கும்.”
அப்துல் ஹமீது பாகவி
‘‘ அதில் அவர்கள் விரும்பியதெல்லாம் அவர்களுக்குக் கிடைக்கும். (அதில்) அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.'' (நபியே!) இது உமது இறைவன் மீது (அவனால்) வாக்களிக்கப்பட்ட கடமையாக இருக்கிறது.
IFT
அதில் அவர்களுடைய விருப்பங்கள் எல்லாம் நிறைவேறும். அதில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். இதனை வழங்குவது உம் இறைவனின் பொறுப்பில் உள்ள நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு வாக்குறுதியாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் நாடியவைகளெல்லாம் அதில் அவர்களுக்குண்டு, (அதில்) அவர்கள் நிரந்தரமாக (த் தங்கி) இருப்பவர்கள், (நபியே!) அது உமது இரட்சகனிடம் (மலக்குகளால் பிரார்த்தித்துக்) கேட்கப்படக் கூடிய வாக்குறுதியாக இருக்கிறது.
Saheeh International
For them therein is whatever they wish, [while] abiding eternally. It is ever upon your Lord a promise [worthy to be] requested.
وَیَوْمَ یَحْشُرُهُمْ وَمَا یَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ فَیَقُوْلُ ءَاَنْتُمْ اَضْلَلْتُمْ عِبَادِیْ هٰۤؤُلَآءِ اَمْ هُمْ ضَلُّوا السَّبِیْلَ ۟ؕ
وَيَوْمَநாளின்போதுيَحْشُرُஅவன் எழுப்புவான்هُمْஅவர்களையும்وَمَا يَعْبُدُوْنَஅவர்கள் வணங்கியவர்களையும்مِنْ دُوْنِ اللّٰهِஅல்லாஹ்வையன்றிفَيَقُوْلُகேட்பான்ءَاَنْـتُمْ اَضْلَلْـتُمْநீங்கள் வழிகெடுத்தீர்களா?عِبَادِىْஎனது அடியார்களைهٰٓؤُلَاۤءِநீங்கள்தான்اَمْஅல்லதுهُمْஅவர்கள்ضَلُّواதாமாகதவறவிட்டனராالسَّبِيْلَ ؕ‏பாதையை
வ யவ்ம யஹ்ஷுருஹும் வமா யஃBபுதூன மின் தூனில் லாஹி Fப யகூலு 'அ-அன்தும் அள்லல்தும் 'இBபாதீ ஹா'உலா'இ அம் ஹும் ளல்லுஸ் ஸBபீல்
முஹம்மது ஜான்
அவர்களையும் அல்லாஹ்வையன்றி அவர்கள் வணங்கி கொண்டிருந்தவற்றையும் அவன் ஒன்று சேர்க்கும் நாளில்; (அத்தெய்வங்களை நோக்கி) “என்னுடைய இந்த அடியார்களை நீங்கள் வழி கெடுத்தீர்களா? அல்லது அவர்கள் தாமாகவே வழி கெட்டுப் போனார்களா?” என்று (இறைவன்) கேட்பான்.
அப்துல் ஹமீது பாகவி
(இணைவைத்து வணங்கிய) அவர்களையும், அல்லாஹ்வையன்றி அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களையும் (விசாரணைக்காக) ஒன்று சேர்க்கும் நாளில், ‘‘ என் இவ்வடியார்களை நீங்கள் வழி கெடுத்தீர்களா? அல்லது அவர்கள் தாமாகவே வழி தவறி சென்று விட்டனரா'' என்று (இறைவன்) கேட்பான்.
IFT
மேலும், அந்நாளிலேயே (உம் இறைவன்) இவர்களையும் ஒன்று திரட்டுவான். (இன்று) அல்லாஹ்வை விடுத்து இவர்கள் வணங்கிக் கொண்டிருக்கும் தெய்வங்களையும் கூப்பிடுவான். பிறகு, அவன் அவர்களிடம் கேட்பான்: “என்னுடைய இந்த அடிமைகளை நீங்கள்தாம் வழிகெடுத்தீர்களா? அல்லது அவர்களே வழி கெட்டுப் போனார்களா?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களையும், அல்லாஹ்வையன்றி அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த (அல்லாஹ் அல்லாத)வர்களையும் அவன் (விசாரணைக்காக) ஒன்று திரட்டும் (மறுமை) நாளில், “என்னுடைய இந்த அடியார்களை நீங்கள்தாம் வழிகெடுத்தீர்களா? அல்லது அவர்கள் தாமாகவே வழிகெட்டு விட்டனரா?” என்று (அல்லாஹ்) கேட்பான்.
Saheeh International
And [mention] the Day He will gather them and that which they worship besides Allah and will say, "Did you mislead these, My servants, or did they [themselves] stray from the way?"
قَالُوْا سُبْحٰنَكَ مَا كَانَ یَنْۢبَغِیْ لَنَاۤ اَنْ نَّتَّخِذَ مِنْ دُوْنِكَ مِنْ اَوْلِیَآءَ وَلٰكِنْ مَّتَّعْتَهُمْ وَاٰبَآءَهُمْ حَتّٰی نَسُوا الذِّكْرَ ۚ وَكَانُوْا قَوْمًا بُوْرًا ۟
قَالُوْاஅவர்கள் கூறுவர்سُبْحٰنَكَநீ மிகப் பரிசுத்தமானவன்مَا كَانَஇல்லைيَنْۢبَغِىْதகுதியானதாகلَنَاۤஎங்களுக்குاَنْ نَّـتَّخِذَஎடுத்துக் கொள்வதுمِنْ دُوْنِكَஉன்னை அன்றிمِنْ اَوْلِيَآءَபாதுகாவலர்களைوَ لٰـكِنْஎனினும்مَّتَّعْتَهُمْநீ அவர்களுக்கு சுகமளித்தாய்وَاٰبَآءَமூதாதைகளுக்கும்هُمْஅவர்களுடையحَتّٰىஇறுதியாகنَسُواஅவர்கள் மறந்தனர்الذِّكْرَ‌ۚஅறிவுரையைوَكَانُوْاஇன்னும் ஆகிவிட்டனர்قَوْمًۢاமக்களாகبُوْرًا‏அழிந்து போகும்
காலூ ஸுBப்ஹானக மா கான யன்Bபகீ லனா அன் னத்தகித மின் தூனிக மின் அவ்லியா'அ வ லாகின் மத்தஃதஹும் வ ஆBபா'அஹும் ஹத்தா னஸூத் திக்ர வ கானூ கவ்மன் Bபூரா
முஹம்மது ஜான்
(அதற்கு) அவர்கள் “இறைவா! நீ தூயவன். உன்னையன்றி நாங்கள் பாது காவலர்களை ஏற்படுத்திக் கொள்ள எங்களுக்குத் தேவையில்லையே! எனினும் நீ இவர்களையும் இவர்களுடைய மூதாதையர்களையும் சுகம் அனுபவிக்கச் செய்தாய்; அவர்களோ உன் நினைப்பை மறந்தார்கள்; மேலும் அழிந்து போகும் கூட்டத்தாரானார்கள்” என்று கூறுவர்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு அவை (இறைவனை நோக்கி) ‘‘ நீ மிகப் பரிசுத்தமானவன். உன்னைத் தவிர (மற்றெவரையும்) நாங்கள் எங்களுக்கு பாதுகாவலர்களாக எடுத்துக்கொள்வது எங்களுக்குத் தகுதியல்ல. எனினும், நீதான் அவர்களுக்கும் அவர்களுடைய மூதாதைகளுக்கும் சுகபோகத்தைக் கொடுத்தாய். அதனால் அவர்கள் (உன்னை) நினைப்பதை(யும் உனது அறிவுரையையும்) மறந்து (பாவங்களில் மூழ்கி) அழிந்துபோகும் மக்களாகி விட்டார்கள்'' என்று அவை கூறும்.
IFT
அதற்கு அவர்கள் பணிந்து கூறுவார்கள்: “நீ தூய்மையானவன்! உன்னைத் தவிர வேறு யாரையும் எங்களுடைய பாதுகாவலர்களாக்கிக் கொள்வதற்கு எங்களுக்குத் துணிவு ஏது? ஆயினும், நீ இவர்களுக்கும் இவர்களுடைய மூதாதையர்களுக்கும் வாழ்க்கை வசதிகளை தாராளமாக வழங்கியிருந்தாய்; இறுதியில் இவர்கள் இந்தப் படிப்பினையை மறந்து விட்டனர். கடும் நாசத்திற்குரியவராகிவிட்டனர்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர்கள் “நீ மிகப் பரிசுத்தமானவன், உன்னையன்றி (மற்றெதனையும்) நாங்கள் எங்களுக்குப் பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்வது எங்களுக்கு அவசியமன்று, எனினும், நீதான் அவர்களையும் அவர்களின் மூதாதையரையும் (உன்னை) நினனைவு கூர்வதை அவர்கள் மறந்துவிடும்வரை சுகமனுபவிக்கச் செய்தாய், மேலும் அவர்கள் அழிந்து போகும் கூட்டத்தாராகி விட்டார்கள்” என்று கூறுவர்.
Saheeh International
They will say, "Exalted are You! It was not for us to take besides You any allies [i.e., protectors]. But You provided comforts for them and their fathers until they forgot the message and became a people ruined."
فَقَدْ كَذَّبُوْكُمْ بِمَا تَقُوْلُوْنَ ۙ فَمَا تَسْتَطِیْعُوْنَ صَرْفًا وَّلَا نَصْرًا ۚ وَمَنْ یَّظْلِمْ مِّنْكُمْ نُذِقْهُ عَذَابًا كَبِیْرًا ۟
فَقَدْஆகவே, திட்டமாகكَذَّبُوْபொய்ப்பித்துவிட்டனர்كُمْஉங்களைبِمَا تَقُوْلُوْنَۙநீங்கள் கூறியதில்فَمَا تَسْتَطِيْعُوْنَஆகவே, நீங்கள் சக்தி பெறமாட்டீர்கள்صَرْفًاதிருப்பி விடுவதற்கோوَّلَا نَـصْرًا‌ۚஉதவுவதற்கோوَمَنْயார்يَّظْلِمْஅநீதி இழைத்துக் கொண்டாரோمِّنْكُمْஉங்களில்نُذِقْهُஅவருக்கு சுவைக்க வைப்போம்عَذَابًاதண்டனையைكَبِيْرًا‏பெரிய
Fபகத் கத்தBபூகும் Bபிமா தகூலூன Fபமா தஸ்ததீ'ஊன ஸர்Fப(ன்)வ் வலா னஸ்ரா; வ ம(ன்)ய் யள்லிம் மின்கும் னுதிக்ஹு 'அதாBபன் கBபீரா
முஹம்மது ஜான்
நீங்கள் சொல்லியதையெல்லாம் திடனாக இவர்கள் பொய்யாக்கிவிட்டனர்; ஆகவே (இப்போது வேதனையைத்) தடுத்துக் கொள்ளவோ, உதவி பெற்றுக் கொள்ளவோ நீங்கள் சக்தி பெறமாட்டீர்கள்; மேலும் உங்களில் எவன் அநியாயம் செய்து கொண்டிருந்தானோ, அவனை நாம் பெரியதொரு வேதனையைச் சுவைக்கச்செய்வோம்” (என்று இறைவன் கூறுவான்).
அப்துல் ஹமீது பாகவி
(ஆகவே, அந்த நிராகரிப்பவர்களை நோக்கி ‘‘ உங்களை வழி கெடுத்தவை இவைதான் என்று) நீங்கள் கூறியதை இவையே பொய்யாக்கி விட்டன. ஆதலால், (நம் வேதனையைத்) தட்டிக் கழிக்கவும் உங்களால் முடியாது. (இவற்றின்) உதவியைப் பெற்றுக் கொள்ளவும் உங்களால் முடியாது.. ஆகவே, உங்களில் எவன் அநியாயம் செய்து கொண்டிருந்தானோ அவன் பெரும் வேதனையைச் சுவைக்கும்படி நிச்சயமாக நாம் செய்வோம்'' (என்று கூறுவோம்).
IFT
இவ்வாறு அவர்கள் (உங்களுடைய தெய்வங்கள்) பொய்யெனக் கூறிவிடுவார்கள், இன்று நீங்கள் வாதித்துக் கொண்டிருக்கும் உங்களுடைய விஷயங்களை! பிறகு (உங்களுக்கு ஏற்படும் நாசத்தை) உங்களால் தடுக்கவும் இயலாது; எங்கிருந்தும் உதவியைப் பெறவும் இயலாது. மேலும், உங்களில் எவரேனும் கொடுமை புரிந்தால் அவருக்குக் கடுமையான வேதனையை நாம் சுவைக்கக் கொடுப்போம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, நீங்கள் கூறியதை திட்டமாக இவர்கள் பொய்யாக்கிவிட்டனர், ஆதலால் (நம்முடைய தண்டனையைத்) தடுத்துக் கொள்ளவோ, இன்னும் உதவியைப் பெற்றுக்கொள்ளவோ நீங்கள் சக்திபெற மாட்டீர்கள், மேலும், உங்களில் எவர் அநியாயம் செய்கிறாரோ அவரை மாபெரும் வேதனையைச் சுவைக்குமாறு நாம் செய்வோம்” (என்று அவர்களுக்கு நாம் கூறுவோம்).
Saheeh International
So they will deny you, [disbelievers], in what you say, and you cannot avert [punishment] or [find] help. And whoever commits injustice among you - We will make him taste a great punishment.
وَمَاۤ اَرْسَلْنَا قَبْلَكَ مِنَ الْمُرْسَلِیْنَ اِلَّاۤ اِنَّهُمْ لَیَاْكُلُوْنَ الطَّعَامَ وَیَمْشُوْنَ فِی الْاَسْوَاقِ ؕ وَجَعَلْنَا بَعْضَكُمْ لِبَعْضٍ فِتْنَةً ؕ اَتَصْبِرُوْنَ ۚ وَكَانَ رَبُّكَ بَصِیْرًا ۟۠
وَمَاۤ اَرْسَلْنَاநாம் அனுப்பவில்லைقَبْلَكَஉமக்கு முன்னர்مِنَ الْمُرْسَلِيْنَதூதர்களில் எவரையும்اِلَّاۤதவிரاِنَّهُمْநிச்சயமாக அவர்கள்لَيَاْكُلُوْنَஉண்பவர்களாகالطَّعَامَஉணவுوَيَمْشُوْنَஇன்னும் நடந்து செல்பவர்களாகفِى الْاَسْوَاقِ‌ ؕகடைத் தெருக்களில்وَجَعَلْنَاஆக்கினோம்بَعْضَكُمْஉங்களில் சிலரைلِبَعْضٍசிலருக்குفِتْنَةً  ؕசோதனையாகاَتَصْبِرُوْنَ‌ۚநீங்கள் பொறுப்பீர்களா?وَكَانَஇருக்கிறான்رَبُّكَஉமது இறைவன்بَصِيْرًا‏உற்று நோக்குபவனாக
வ மா அர்ஸல்னா கBப்லக மினல் முர்ஸலீன இல்லா இன்னஹும் ல ய'குலூனத் த'ஆம வ யம்ஷூன Fபில் அஸ்வாக்; வ ஜ'அல்னா Bபஃளகும் லிBபஃளின் Fபித்னதன் அதஸ்Bபிரூன்; வ கான ரBப்Bபுக Bபஸீரா
முஹம்மது ஜான்
(நபியே!) இன்னும் உமக்கு முன்னர் நாம் அனுப்பிய தூதர்களெல்லாம் நிச்சயமாக உணவருந்துபவர்களாகவும், கடை வீதிகளில் நடமாடுபவர்களாகவும் தாம் இருந்தார்கள்; மேலும், நாம் உங்களில் சிலரை மற்றும் சிலருக்குச் சோதனையாக்கி இருக்கிறோம் - ஆகவே நீங்கள் பொறுமையுடன் இருப்பீர்களா? உம்முடைய இறைவன் (யாவற்றையும்) உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிவைத்த நம் தூதர்களெல்லாம் நிச்சயமாக (உம்மைப் போல்) உணவு உண்பவர்களாகவும், கடைகளுக்குச் செல்பவர்களாகவும் இருந்தார்கள். எனினும், உங்களில் சிலரை சிலருக்குச் சோதனையாக ஆக்கி வைத்தோம். ஆகவே, (நம்பிக்கையாளர்களே! இந்நிராகரிப்பவர்கள் உங்களை துன்புறுத்துவதை) நீங்களும் சகித்துக் கொண்டிருங்கள். (நபியே!) உமது இறைவன் (அனைத்தையும்) உற்று நோக்கியவனாகவே இருக்கிறான்.
IFT
மேலும் (நபியே!) உமக்கு முன்பு நாம் அனுப்பி வைத்திருந்த தூதர்கள் அனைவரும் உணவு உண்பவர்களாயும் கடைவீதிகளில் நடமாடுபவர்களாயும்தாம் இருந்தார்கள். உண்மையில் நாம் உங்களில் ஒரு சிலரை மற்றும் சிலருக்குச் சோதனையாக ஆக்கிவைத்துள்ளோம். நீங்கள் பொறுமையை மேற்கொள்வீர்களா? உம் இறைவன் அனைத்தையும் பார்ப்பவனாய் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (நபியே! உமக்கு) முன்னர் (நாம் அனுப்பிய) தூதர்களிலிருந்து நிச்சயமாக அவர்கள் உணவு உண்பவர்களாகவும், கடைத்தெருவில் நடமாடுபவர்களாகவுமே தவிர நாம் அனுப்பவில்லை, மேலும் உங்களில் சிலரை, (மற்றும்) சிலருக்குச் சோதனையாக ஆக்கி வைத்தோம், (அச்சோதனையில்) நீங்கள் பொறுமையாய் இருப்பீர்களா? (நபியே!) மேலும், உம்முடைய இரட்சகன் (யாவற்றையும்) பார்க்கக்கூடியவனாக இருக்கிறான்.
Saheeh International
And We did not send before you, [O Muhammad], any of the messengers except that they ate food and walked in the markets. And We have made some of you [people] as trial for others - will you have patience? And ever is your Lord, Seeing.
وَقَالَ الَّذِیْنَ لَا یَرْجُوْنَ لِقَآءَنَا لَوْلَاۤ اُنْزِلَ عَلَیْنَا الْمَلٰٓىِٕكَةُ اَوْ نَرٰی رَبَّنَا ؕ لَقَدِ اسْتَكْبَرُوْا فِیْۤ اَنْفُسِهِمْ وَعَتَوْ عُتُوًّا كَبِیْرًا ۟
وَقَالَகூறினார்(கள்)الَّذِيْنَ لَا يَرْجُوْنَஆதரவு வைக்காதவர்கள்لِقَآءَنَاநம் சந்திப்பைلَوْلَاۤ اُنْزِلَஇறக்கப்பட வேண்டாமா?عَلَيْنَاஎங்கள் மீதுالْمَلٰٓٮِٕكَةُவானவர்கள்اَوْஅல்லதுنَرٰىநாங்கள் பார்க்க வேண்டாமா?رَبَّنَا ؕஎங்கள் இறைவனைلَـقَدِதிட்டவட்டமாகاسْتَكْبَرُوْاஅவர்கள் பெருமை அடித்தனர்فِىْۤ اَنْفُسِهِمْதங்களுக்குள்وَعَتَوْ عُتُوًّاஇன்னும் கடுமையாக அழிச்சாட்டியம் செய்தனர்كَبِيْرًا‏மிகப்பெரிய அளவில்
வ காலல் லதீன லா யர்ஜூன லிகா'அனா லவ் லா உன்Zஜில 'அலய்னல் மலா'இகது அவ்னரா ரBப்Bபனா; லகதிஸ்தக்Bபரூ Fபீ அன்Fபுஸிஹிம் வ 'அதவ் 'உதுவ்வன் கBபீரா
முஹம்மது ஜான்
மேலும் (மறுமையில்) நம் சந்திப்பை நம்பாது இருக்கிறார்களே அவர்கள்: “எங்களிடம் ஏன் மலக்குகள் அனுப்பப்படவில்லை? அல்லது ஏன் நாம் நம்முடைய இறைவனைக் காண முடியவில்லை?” என்று கூறுகிறார்கள். திடமாக அவர்கள் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்கள்; மேலும், மிகவும் வரம்பு கடந்து சென்று விட்டனர்.
அப்துல் ஹமீது பாகவி
(மறுமை நாளில்) நம்மைச் சந்திப்பதை எவர்கள் நம்பவில்லையோ அவர்கள், ‘‘ எங்கள் மீது (நேரடியாகவே) வானவர்கள் இறக்கப்பட வேண்டாமா? அல்லது (எங்கள் கண்களால்) எங்கள் இறைவனைப் பார்க்க வேண்டாமா?'' என்று கூறுகின்றனர். இவர்கள் தங்களை மிக மிகப் பெரிதாக எண்ணிக்கொண்டு அளவு கடந்து (பெரும் பாவத்தில் சென்று) விட்டனர்.
IFT
எவர்கள் நம் திருமுன் வருவதைக் குறித்து சற்றும் கவலை கொள்ளாமல் இருக்கின்றார்களோ அவர்கள் கூறுகின்றார்கள்: “எங்களிடம் வானவர்கள் ஏன் அனுப்பப்படவில்லை? அல்லது எங்கள் இறைவனை நாங்கள் ஏன் காணுவதில்லை?” இவர்கள் தங்களையே பெரிதாக எண்ணி ஆணவம் கொண்டு திரிகின்றார்கள். மேலும், இவர்கள் தங்கள் அக்கிரமத்தில் பெரிதும் வரம்பு மீறிச் சென்றுவிட்டார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (மறுமையில்) நம் சந்திப்பை நம்பாதிருக்கிறார்களே அத்தகையோர், “எங்கள்மீது மலக்குகள் இறக்கப்பட்டிருக்க வேண்டாமா? அல்லது நாங்கள் எங்கள் இரட்சகனை (கண்களால்) காண வேண்டாமா?” என்று கூறுகின்றனர், இவர்கள் தங்கள் மனங்களில் திட்டமாக தங்களைப் பெரிதாக எண்ணிக் கொண்டனர், பெரிய அளவு வரம்பு கடந்து (சென்று)ம் விட்டனர்.
Saheeh International
And those who do not expect the meeting with Us say, "Why were not angels sent down to us, or [why] do we [not] see our Lord?" They have certainly become arrogant within themselves and [become] insolent with great insolence.
یَوْمَ یَرَوْنَ الْمَلٰٓىِٕكَةَ لَا بُشْرٰی یَوْمَىِٕذٍ لِّلْمُجْرِمِیْنَ وَیَقُوْلُوْنَ حِجْرًا مَّحْجُوْرًا ۟
يَوْمَநாளில்يَرَوْنَஅவர்கள் பார்ப்பார்கள்الْمَلٰٓٮِٕكَةَவானவர்களைلَاஅறவே இல்லைبُشْرٰىநற்செய்திيَوْمَٮِٕذٍஇந்நாளில்لِّـلْمُجْرِمِيْنَகுற்றவாளிகளுக்குوَ يَقُوْلُوْنَஇன்னும் கூறுவார்கள்حِجْرًاஉங்களுக்கு தடுக்கப்பட்டு விட்டதுمَّحْجُوْرًا‏முற்றிலும்
யவ்ம யரவ்னல் மலா 'இகத லா Bபுஷ்ரா யவ்மய்தின் லில் முஜ்ரிமீன வ யகூலூன ஹிஜ்ரன் மஹ்ஜூரா
முஹம்மது ஜான்
அவர்கள் மலக்குகளைக் காணும் நாளில், அக்குற்றவாளிகளுக்கு நற்செய்தி எதுவும் அன்றைய தினம் இராது; (நற்பாக்கியம்) முற்றாக (உங்களுக்கு) தடுக்கப்பட்டு விட்டது என்று அந்த மலக்குகள் கூறுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(அவர்கள் விரும்பியவாறு) வானவர்களை அவர்கள் காணும் நாளில், இக்குற்றவாளிகளை நோக்கி ‘‘ இன்றைய தினம் (உங்களுக்கு அழிவைத் தவிர) வேறு ஒரு நல்ல செய்தியும் இல்லை'' என்று (அவ்வானவர்கள்) கூறுவார்கள். (அக்குற்றவாளிகளோ தங்களை அழிக்க வரும் அவ்வானவர்களைத்) ‘‘ தடுத்துக் கொள்ளுங்கள்; தடுத்துக் கொள்ளுங்கள்'' என்று சப்தமிடுவார்கள்.
IFT
எந்த நாளில் இவர்கள் வானவர்களைக் காண்பார்களோ அந்த நாள் குற்றவாளிகளுக்கு நற்செய்திக்குரிய நாளாக இராது. (நற்பாக்கியம்) முற்றாக (உங்களுக்கு) தடுக்கப்பட்டு விட்டது என்று அந்த மலக்குகள் கூறுவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவர்களை மரணிக்கச் செய்ய வரும்) மலக்குகளை அவர்கள் காணும் நாளில், அக்குற்றவாளிகளுக்கு அன்றையத்தினம் யாதொரு நற்செய்தியும் இராது, (உங்களுக்கு நற்செய்தி கூறப்படுவது) முற்றாகத் தடுக்கப்பட்டுவிட்டது என்றும் அவர்கள் கூறுவார்கள்.
Saheeh International
The day they see the angels - no good tidings will there be that day for the criminals, and [the angels] will say, "Prevented and inaccessible."
وَقَدِمْنَاۤ اِلٰی مَا عَمِلُوْا مِنْ عَمَلٍ فَجَعَلْنٰهُ هَبَآءً مَّنْثُوْرًا ۟
وَقَدِمْنَاۤநாம் நாடுவோம்اِلٰى مَا عَمِلُوْاஅவர்கள் செய்ததைمِنْ عَمَلٍசெயல்களில்فَجَعَلْنٰهُபிறகு அதை ஆக்கிவிடுவோம்هَبَآءًபுழுதியாகمَّنْثُوْرًا‏பரத்தப்பட்ட
வ கதிம்னா இலா மா 'அமிலூ மின் 'அமலின் Fபஜ'அல்னாஹுஹBபா'அன் மன்தூரா
முஹம்மது ஜான்
இன்னும்; நாம் அவர்கள் (இம்மையில்) செய்த செயல்களின் பக்கம் முன்னோக்கி அவற்றை (நன்மை எதுவும் இல்லாது) பரத்தப் பட்ட புழுதியாக ஆக்கிவிடுவோம்.
அப்துல் ஹமீது பாகவி
(இம்மையில்) அவர்கள் செய்து கொண்டிருந்த காரியங்களை நாம் நோக்கினால் (அதில் ஒரு நன்மையும் இல்லாததனால்) பறக்கும் தூசிகளைப் போல் அவற்றை நாம் ஆக்கிவிடுவோம்.
IFT
மேலும், அவர்கள் செய்த செயல்கள் எதுவாக இருந்தாலும் அதைப் புழுதியாக்கிப் பறக்க விட்டுவிடுவோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (இம்மையில்) செயலால் அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றின்பால் நாம் முன்னோக்கி, பின்னர் (அவர்கள் உலகில் விசுவாசம் கொள்ளாததால்) பரத்தப்பட்ட புழுதியாக (பலனற்றதாக) அவைகளை நாம் ஆக்கிவிடுவோம்.
Saheeh International
And We will approach [i.e., regard] what they have done of deeds and make them as dust dispersed.
اَصْحٰبُ الْجَنَّةِ یَوْمَىِٕذٍ خَیْرٌ مُّسْتَقَرًّا وَّاَحْسَنُ مَقِیْلًا ۟
اَصْحٰبُ الْجَنَّةِசொர்க்கவாசிகள்يَوْمَٮِٕذٍஅந்நாளில்خَيْرٌசிறந்தவர்கள்مُّسْتَقَرًّاதங்குமிடத்தால்وَّاَحْسَنُஇன்னும் மிக சிறப்பானவர்கள்مَقِيْلًا‏ஓய்வெடுக்கும் இடத்தால்
அஸ் ஹாBபுல் ஜன்னதி யவ்ம'இதின் கய்ருன் முஸ்தகர் ர(ன்)வ் வ அஹ்ஸனு மகீலா
முஹம்மது ஜான்
அந்நாளில் சுவர்க்க வாசிகள் தங்குமிடத்தால் மேலானவர்களாகவும், சுகமனுபவிக்கும் இடத்தால் அழகானவர்களாகவும் இருப்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அந்நாளில் (நம்பிக்கையாளர்களான) சொர்க்கவாசிகளோ, நல்ல தங்குமிடத்திலும் அழகான (இன்பமான) ஓய்வு பெறும் இடத்திலும் இருப்பார்கள்.
IFT
ஆனால், எவர்கள் சுவனத்துக்குத் தகுதியானவர்களோ அவர்கள்தாம் அந்நாளில் சிறந்த இடத்தில் தங்குவார்கள். மதிய வேளையைக் கழிப்பதற்கு மிக அழகிய இடத்தைப் பெறுவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அந்நாளில் சுவனவாசிகள் தங்குமிடத்தால் மிகச் சிறந்தவர்களாகவும், ஓய்வுபெறும் இடத்தால் மிக அழகானவர்களாகவும் இருப்பர்.
Saheeh International
The companions of Paradise, that Day, are [in] a better settlement and better resting place.
وَیَوْمَ تَشَقَّقُ السَّمَآءُ بِالْغَمَامِ وَنُزِّلَ الْمَلٰٓىِٕكَةُ تَنْزِیْلًا ۟
وَيَوْمَநாளில்تَشَقَّقُபிளந்துவிடும்السَّمَآءُவானம்بِالْـغَمَامِவெள்ளை மேகத்தைக் கொண்டுوَنُزِّلَஇன்னும் இறக்கப்படும் (நாளில்)الْمَلٰٓٮِٕكَةُவானவர்கள்تَنْزِيْلًا‏இறங்குதல்
வ யவ்ம தஷக்ககுஸ் ஸமா'உ Bபில்கமாமி வ னுZஜ்Zஜிலல் மலா'இகது தன்Zஜீலா
முஹம்மது ஜான்
இன்னும் வானம் மேகத்தால் பிளந்து போகும் நாளில்; மலக்குகள் (அணியணியாய் கீழே) இறக்கப்படுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
வானம் மேகங்களால் பிளக்கப்பட்டு அந்நாளில் வானவர்கள் கூட்டம் கூட்டமாக இறங்குவார்கள்.
IFT
அந்நாளில் வானத்தைப் பிளந்துகொண்டு ஒரு மேகம் வெளிப்படும். மேலும், வானவர்கள் கூட்டங்கூட்டமாய் இறக்கி வைக்கப்படுவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், வானம் மேகத்தால் பிளந்து, மலக்குகள் உறுதியாகவே இறக்கிவைக்கப்படும் நாளை-(அவர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக).
Saheeh International
And [mention] the Day when the heaven will split open with [emerging] clouds, and the angels will be sent down in successive descent.
اَلْمُلْكُ یَوْمَىِٕذِ لْحَقُّ لِلرَّحْمٰنِ ؕ وَكَانَ یَوْمًا عَلَی الْكٰفِرِیْنَ عَسِیْرًا ۟
اَلْمُلْكُஆட்சிيَوْمَٮِٕذِஅந்நாளில்اۨلْحَـقُّஉண்மையானلِلرَّحْمٰنِ‌ؕரஹ்மானிற்கேوَكَانَஇருக்கும்يَوْمًاநாளாகعَلَى الْكٰفِرِيْنَநிராகரிப்பாளர்களுக்குعَسِيْرًا‏மிக சிரமமான
அல்முல்கு யவ்ம'இதினில் ஹக்கு லிர் ரஹ்மான்; வ கான யவ்மன்'அலல் காFபிரீன 'அஸீரா
முஹம்மது ஜான்
அந்நாளில் உண்மையான ஆட்சி அர்ரஹ்மானுக்குத்தான்; மேலும் காஃபிர்களுக்கு கடுமையான நாளாகவும் இருக்கும்.
அப்துல் ஹமீது பாகவி
அந்நாளில் உண்மையான ஆட்சி ரஹ்மான் ஒருவனுக்கே இருக்கும். நிராகரிப்பவர்களுக்கு அது மிக்க கடினமான நாளாகவும் இருக்கும்.
IFT
அந்நாளில் உண்மையான ஆட்சியதிகாரம், ரஹ்மானுக்கே கருணைமிக்க இறைவனுக்கே உரியதாக இருக்கும். மேலும், அது இறைநிராகரிப்பாளர்களுக்கு மிகக் கடினமான நாளாக இருக்கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அந்நாளில் உண்மையான ஆட்சி அர்ரஹ்மா(ன் ஒருவ)னுக்கே இருக்கும், மேலும், நிராகரிப்போருக்கு அது (மிக்க) கடினமான நாளாகவும் இருக்கும்.
Saheeh International
True sovereignty, that Day, is for the Most Merciful. And it will be upon the disbelievers a difficult Day.
وَیَوْمَ یَعَضُّ الظَّالِمُ عَلٰی یَدَیْهِ یَقُوْلُ یٰلَیْتَنِی اتَّخَذْتُ مَعَ الرَّسُوْلِ سَبِیْلًا ۟
وَيَوْمَஅந்நாளில்يَعَضُّகடிப்பான்الظَّالِمُஅநியாயக்காரன்عَلٰى يَدَيْهِதனது இரு கரங்களையும்يَقُوْلُகூறுவான்يٰلَيْتَنِى اتَّخَذْتُநான் எடுத்துக் கொண்டிருக்க வேண்டுமே!مَعَ الرَّسُوْلِதூதருடன்سَبِيْلًا‏ஒரு வழியை
வ யவ்ம ய'அள்ளுள் ளாலிமு 'அலா யதய்ஹி யகூலு யா லய்தனித் தகத்து ம'அர் ரஸூலி ஸBபீலா
முஹம்மது ஜான்
அந்நாளில் அநியாயக்காரன் தன்னிருகைகளையும் கடித்துக்கொண்டு: “அத்தூதருடன் நானும் - (நேரான) வழியை எடுத்துக் கொண்டிருக்க வேண்டாமா?” எனக் கூறுவான்.
அப்துல் ஹமீது பாகவி
அந்நாளில் அநியாயக்காரன் தன் இரு கைகளையும் கடித்துக் கொண்டு ‘‘நம் தூதருடன் நானும் நேரான வழியைப் பின்பற்றிச் சென்றிருக்க வேண்டாமா?'' என்று கூறுவான்.
IFT
மேலும், அந்நாளில் கொடுமை புரிந்த மனிதன் தன்னுடைய கைகளைக் கடித்தபடிக் கூறுவான்: “அந்தோ! நான் இறைத்தூதருக்குத் துணைபுரிந்திருக்கக் கூடாதா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், “அத்தூதருடன் நானும் (நேரான) வழியை எடுத்துக் கொண்டிருக்க வேண்டுமே!” என்று கூறியவனாக அநியாயக்காரன் தன் இரு கைகளையும் கடித்துக் கொள்ளும் நாளை (அவர்களுக்கு நீர் நினைவுபடுத்துவீராக)
Saheeh International
And the Day the wrongdoer will bite on his hands [in regret] he will say, "Oh, I wish I had taken with the Messenger a way.
یٰوَیْلَتٰی لَیْتَنِیْ لَمْ اَتَّخِذْ فُلَانًا خَلِیْلًا ۟
يٰوَيْلَتٰىஎன் நாசமே!لَيْتَنِىْ لَمْ اَتَّخِذْநான் எடுத்திருக்கக் கூடாதே!فُلَانًاஇன்னவனைخَلِيْلًا‏நண்பனாக
யா வய்லதா லய்தனீ லம் அத்தகித் Fபுலானன் கலீலா
முஹம்மது ஜான்
“எனக்கு வந்த கேடே! (என்னை வழி கெடுத்த) ஒருவனை நண்பனாக ஆக்கிக் கொள்ளாது இருந்திருக்க வேண்டாமா?”
அப்துல் ஹமீது பாகவி
‘‘என் துக்கமே! (பாவம் செய்யும்படித் தூண்டிய) இன்னவனை நான் (எனது) நண்பனாக ஆக்காமல் இருந்திருக்க வேண்டாமா?
IFT
ஐயகோ! எனது துர்பாக்கியமே! நான் இன்ன மனிதனை நண்பனாக்காமல் இருந்திருக்க வேண்டுமே!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“எனக்கு வந்த கேடே! (வழிகேட்டிற்கு அழைத்த) இன்னவனை நான் என்னுடைய சிநேகிதனாக ஆக்கிக் கொள்ளாதிருந்திருக்க வேண்டுமே! (என்றும்),
Saheeh International
Oh, woe to me! I wish I had not taken that one as a friend.
لَقَدْ اَضَلَّنِیْ عَنِ الذِّكْرِ بَعْدَ اِذْ جَآءَنِیْ ؕ وَكَانَ الشَّیْطٰنُ لِلْاِنْسَانِ خَذُوْلًا ۟
لَقَدْதிட்டவட்டமாகاَضَلَّنِىْஎன்னை வழிகெடுத்து விட்டான்عَنِ الذِّكْرِஅறிவுரையிலிருந்துبَعْدَபின்னர்اِذْ جَآءَنِىْ‌ ؕஅது என்னிடம் வந்தوَكَانَஇருக்கிறான்الشَّيْطٰنُஷைத்தான்لِلْاِنْسَانِமனிதனைخَذُوْلًا‏கைவிடுபவனாக
லகத் அளல்லனீ 'அனித் திக்ரி Bபஃத இத் ஜா'அனீ; வ கானஷ் ஷய்தானு லில் இன்ஸானி கதூலா
முஹம்மது ஜான்
“நிச்சயமாக, என்னிடம் நல்லுபதேசம் வந்த பின்னரும் அதிலிருந்து அவன் என்னை வழி கெடுத்தானே! மேலும் ஷைத்தான் மனிதனுக்கு மிகவும் சதி செய்பவனாக இருக்கிறான்!” (என்று புலம்புவான்.)
அப்துல் ஹமீது பாகவி
நல்லுபதேசம் என்னிடம் வந்ததன் பின்னரும் அதிலிருந்து அவன் என்னைத் திருப்பி விட்டானே! அந்த ஷைத்தான் மனிதனுக்குப் பெரும் சதிகாரனாக இருந்தானே!'' (என்றும் புலம்புவான்.)
IFT
நான் அவனுடைய வழிகேட்டுக்குப் பலியாகி என்னிடம் வந்த அறிவுரையை ஏற்காமல் இருந்துவிட்டேனே! ஷைத்தான் மனிதனை மிகவும் ஏமாற்றக்கூடியவன் என்று நிரூபணமாகிவிட்டது.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நல்லுபதேசத்தை விட்டும்-அது என்னிடம் வந்ததன் பின்னர் (நல்லுபதேசம் பெறுவதிலிருந்து) அவன்தான் என்னைத் திட்டமாக வழி கெடுத்துவிட்டான், மேலும், “ஷைத்தான் மனிதனுக்குப் பெரும் மோசக்காரனாக இருக்கிறான்” (என்றும் பிதற்றுவான்).
Saheeh International
He led me away from the remembrance after it had come to me. And ever is Satan, to man, a deserter."
وَقَالَ الرَّسُوْلُ یٰرَبِّ اِنَّ قَوْمِی اتَّخَذُوْا هٰذَا الْقُرْاٰنَ مَهْجُوْرًا ۟
وَقَالَகூறுவார்الرَّسُوْلُதூதர்يٰرَبِّஎன் இறைவா!اِنَّநிச்சயமாகقَوْمِىஎனது மக்கள்اتَّخَذُوْاஎடுத்துக் கொண்டனர்هٰذَا الْقُرْاٰنَஇந்த குர்ஆனைمَهْجُوْرًا‏புறக்கணிக்கப் பட்டதாக
வ காலர் ரஸூலு யா ரBப்Bபி இன்ன கவ்மித் தகதூ ஹாதல் குர்'ஆன மஹ்ஜூரா
முஹம்மது ஜான்
“என்னுடைய இறைவா நிச்சயமாக என் சமூகத்தார் இந்த குர்ஆனை முற்றிலும் புறக்கணித்து ஒதுக்கிவிட்டார்கள்” என்று (நம்) தூதர் கூறுவார்.
அப்துல் ஹமீது பாகவி
(அச்சமயம் நம்) தூதர் ‘‘என் இறைவனே! நிச்சயமாக என் இந்த மக்கள் இந்த குர்ஆனை முற்றிலும் வெறுத்து(த் தள்ளி) விட்டார்கள்'' என்று கூறுவார்.
IFT
மேலும், இறைத்தூதர் கூறுவார்: “என் இறைவா! என் சமூகத்தைச் சார்ந்த மக்கள் இந்தக் குர்ஆனை நகைப்புக்குரியதாக்கிக் கொண்டிருந்தார்கள்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நம்முடைய) தூதர், “என் இரட்சகனே! நிச்சயமாக என்னுடைய சமூகத்தார் இந்தக் குர் ஆனை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டதாக எடுத்துக் கொண்டனர்” என்று கூறுவார்.
Saheeh International
And the Messenger has said, "O my Lord, indeed my people have taken this Qur’an as [a thing] abandoned."
وَكَذٰلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِیٍّ عَدُوًّا مِّنَ الْمُجْرِمِیْنَ ؕ وَكَفٰی بِرَبِّكَ هَادِیًا وَّنَصِیْرًا ۟
وَكَذٰلِكَஇவ்வாறுதான்جَعَلْنَاநாம் ஆக்கினோம்لِكُلِّஒவ்வொருنَبِىٍّநபிக்கும்عَدُوًّاஎதிரிகளைمِّنَ الْمُجْرِمِيْنَ‌ؕகுற்றவாளிகளில்وَكَفٰىபோதுமானவன்بِرَبِّكَஉமது இறைவன்هَادِيًاநேர்வழி காட்டுபவனாகوَّنَصِيْرًا‏இன்னும் உதவுபவனாக
வ கதாலிக ஜ'அல்னா லிகுல்லி னBபிய்யின் 'அதுவ்வன் மினல் முஜ்ரிமீன்; வ கFபா Bபி ரBப்Bபிக ஹாதிய(ன்)வ் வ னஸீரா
முஹம்மது ஜான்
மேலும், இவ்வாறே நாம் ஒவ்வொரு நபிக்கும் குற்றவாளிகளிலிருந்து பகைவரை உண்டாக்கினோம்; இன்னும், உம்முடைய இறைவன் (உமக்கு) நேர்வழி காட்டியாகவும் உதவிபுரிபவனாகவும் இருக்கப் போதுமானவன்.
அப்துல் ஹமீது பாகவி
இவ்வாறே ஒவ்வொரு நபிமாருக்கும் குற்றவாளிகளை நாம் எதிரிகளாக ஏற்படுத்தி இருந்தோம். (நபியே!) உமக்கு நேரான வழியை அறிவித்து, உதவி செய்ய உமது இறைவனே போதுமானவன்.
IFT
(நபியே!) இவ்வாறே நாம் குற்றவாளிகளை இறைத்தூதர் ஒவ்வொருவருக்கும் பகைவர்களாக்கினோம். மேலும், வழிகாட்டுவதற்கும், உதவி புரிவதற்கும் உங்கள் இறைவனே உங்களுக்குப் போதுமானவன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இவ்வாறே ஒவ்வொரு நபிக்கும், குற்றவாளிகளிலிருந்து பகைவரை நாம் ஆக்கினோம், நேர் வழிகாட்டுபவனாகவும், உதவி செய்பவனாகவும் இருக்க (நபியே!) உம் இரட்சகன் (உமக்குப்) போதுமானவன்.
Saheeh International
And thus have We made for every prophet an enemy from among the criminals. But sufficient is your Lord as a guide and a helper.
وَقَالَ الَّذِیْنَ كَفَرُوْا لَوْلَا نُزِّلَ عَلَیْهِ الْقُرْاٰنُ جُمْلَةً وَّاحِدَةً ۛۚ كَذٰلِكَ ۛۚ لِنُثَبِّتَ بِهٖ فُؤَادَكَ وَرَتَّلْنٰهُ تَرْتِیْلًا ۟
وَقَالَகூறினர்الَّذِيْنَ كَفَرُوْاநிராகரிப்பாளர்கள்لَوْلَا نُزِّلَஇறக்கப்பட வேண்டாமா!عَلَيْهِஇவர் மீதுالْـقُرْاٰنُஇந்த குர்ஆன்جُمْلَةًஒட்டு மொத்தமாகوَّاحِدَةً‌  ۛۚஒரே தடவையில்كَذٰلِكَ ۛۚஇவ்வாறுதான்لِنُثَبِّتَஉறுதிப்படுத்துவதற்காகبِهٖஅதன் மூலம்فُـؤَادَكَ‌உமது உள்ளத்தைوَرَتَّلْنٰهُஇன்னும் இதை கற்பித்தோம்.تَرْتِيْلًا‏சிறிது சிறிதாக
வ காலல் லதீன கFபரூ லவ் லா னுZஜ்Zஜில 'அலய்ஹில் குர்'ஆனு ஜும்லத(ன்)வ் வாஹிதஹ்; கதாலிக லினுதBப்Bபித Bபிஹீ Fபு'ஆதக வ ரத்தல்னாஹு தர்தீலா
முஹம்மது ஜான்
இன்னும்: “இவருக்கு இந்த குர்ஆன் (மொத்தமாக) ஏன் ஒரே தடவையில் முழுதும் இறக்கப்படவில்லை?” என்று நிராகரிப்போர் கேட்கிறார்கள்; இதைக் கொண்டு உம் இதயத்தை உறுதிப்படுத்துவதற்காக இதனை படிப்படியாக நாம் இறக்கினோம்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) எவர்கள் (உம்மை) நிராகரிக்கிறார்களோ அவர்கள் ‘‘ இந்த வேதம் முழுவதும் ஒரே தடவையில் அவர்மீது இறக்கப்பட வேண்டாமா?'' என்று கூறுகின்றனர். (இதை) இவ்வாறு நாம் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கி (வரிசை முறைப்படி) ஒழுங்குபடுத்துவதெல்லாம் உமது உள்ளத்தைத் திடப்படுத்துவதற்காகவே ஆகும்.
IFT
மேலும், இறைநிராகரிப்பாளர்கள் கேட்கின்றார்கள்: “இவர் மீது குர்ஆன் முழுவதும் ஒரே நேரத்தில் ஏன் இறக்கி வைக்கப்படவில்லை? ஆம்! இவ்வாறு ஏன் செய்யப்பட்டிருக்கின்றது என்றால், இதனை நல்ல முறையில் உமது இதயத்தில் நாம் பதிய வைக்க வேண்டும் என்பதற்காகத்தான்! மேலும் (இதே நோக்கத்திற்காகத்தான்) இதனை நாம் ஒரு குறிப்பிட்ட வரிசைக் கிரமத்துடன் தனித்தனிப் பகுதிகளாக்கினோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (நபியே!) நிராகரித்தோர் “இவர் மீது குர் ஆன் (தவ்றாத், இன்ஜீல், ஜபூர் ஆகிய வேதங்கள் இறக்கப்பட்டது போன்று முழுவதும்) ஒரே தொகுப்பாக இறக்கப்பட்டிருக்க வேண்டாமா?” என்று கூறுகின்றனர், அப்படித்தான் அதைக்கொண்டு உம் இதயத்தை நாம் உறுதிப்படுத்துவதற்காக (இறக்கிவைத்தோம்.) இன்னும் இதனைப் படிப்படியாக நாம் ஓதிக்காண்பித்(து விளக்கத்தையும் தெளிவு செய்)தோம்.
Saheeh International
And those who disbelieve say, "Why was the Qur’an not revealed to him all at once?" Thus [it is] that We may strengthen thereby your heart. And We have spaced it distinctly.
وَلَا یَاْتُوْنَكَ بِمَثَلٍ اِلَّا جِئْنٰكَ بِالْحَقِّ وَاَحْسَنَ تَفْسِیْرًا ۟ؕ
وَلَا يَاْتُوْنَكَஅவர்கள் உம்மிடம் கூறமாட்டார்கள்بِمَثَلٍஎந்த ஒரு தன்மையையும்اِلَّاதவிரجِئْنٰكَஉமக்கு நாம் கூறியேبِالْحَـقِّசத்தியத்தையும்وَاَحْسَنَஇன்னும் மிக அழகானتَفْسِيْرًا ؕ‏விளக்கத்தை(யும்)
வ லா ய'தூனக Bபி மதலின் இல்லா ஜி'னாக Bபில்ஹக்கி வ அஹ்ஸன தFப்ஸீரா
முஹம்மது ஜான்
அவர்கள் உம்மிடம் எவ்விதமான உவமானத்தைக் கொண்டு வந்தாலும், (அதை விடவும்) உண்மையானதும், அழகானதுமான ஒரு விளக்கத்தை நாம் உமக்குக் கொடுக்காமல் இல்லை.
அப்துல் ஹமீது பாகவி
இந்நிராகரிப்பவர்கள் (எத்தகைய கேள்விகளைக் கேட்டு அதற்காக ஆச்சரியமான) எந்த உதாரணத்தை உங்களிடம் அவர்கள் கொண்டு வந்த போதிலும் (அதைவிட) உண்மையான விஷயத்தையும், அழகான வியாக்கியானத்தையும் (விவரத்தையும்) நாம் உங்களுக்கு கூறாமல் இருக்கவில்லை.
IFT
மேலும் (இதில் இந்த விவேகம் இருக்கின்றது:) அவர்கள் உம்மிடம் விநோதமான விஷயத்தை (அல்லது வியப்புக்குரிய கேள்வியை)க் கேட்டு வந்த போதெல்லாம் அதற்குரிய சரியான விடையை (உரிய நேரத்தில்) உமக்கு நாம் அளித்துள்ளோம். மேலும், மிக அழகான முறையில் விஷயத்தை விளக்கியுள்ளோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உம்மிடம் எந்த உதாரணத்தையும் அவர்கள் கொண்டு வருவதில்லை, (அதைவிட) உண்மையானதையும், விளக்கத்தால் மிக அழகானதையும் நாம் உம்மிடம் கொண்டுவந்தே தவிர,
Saheeh International
And they do not come to you with an example [i.e., argument] except that We bring you the truth and the best explanation.
اَلَّذِیْنَ یُحْشَرُوْنَ عَلٰی وُجُوْهِهِمْ اِلٰی جَهَنَّمَ ۙ اُولٰٓىِٕكَ شَرٌّ مَّكَانًا وَّاَضَلُّ سَبِیْلًا ۟۠
اَلَّذِيْنَஎவர்கள்يُحْشَرُوْنَஎழுப்பப்படுகிறார்களோعَلٰىமீதுوُجُوْهِهِمْதங்கள் முகங்களின்اِلٰىபக்கம்جَهَـنَّمَۙநரகத்தின்اُولٰٓٮِٕكَஅவர்கள்தான்شَرٌّமிக கெட்டவர்கள்مَّكَانًاதங்குமிடத்தால்وَّاَضَلُّஇன்னும் மிக வழிதவறியவர்கள்سَبِيْلًا‏பாதையால்
அல்லதீன யுஹ்ஷரூன 'அலா வுஜூஹிஹிம் இலா ஜஹன்னம உலா'இக ஷர்ருன் மகான(ன்)வ் வ அளல்லு ஸBபீலா
முஹம்மது ஜான்
எவர்கள் நரகத்திற்குத் தங்கள் முகம் குப்புற (இழுத்துச் செல்லப் பெற்று) ஒன்று சேர்க்கப் படுவார்களோ, அவர்கள் தங்குமிடத்தால் மிகவும் கெட்டவர்கள்; பாதையால் பெரிதும் வழி கெட்டவர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
இவர்கள்தான் நரகத்திற்கு முகங்குப்புற இழுத்துச் செல்லப்படுபவர்கள். இவர்கள்தான் மகாகெட்ட இடத்தில் தங்குபவர்களும் வழி தவறியவர்களும் ஆவார்கள்.
IFT
நரகத்தை நோக்கி எவர்கள் முகம் குப்புற இழுத்துச் செல்லப்படவிருக்கின்றார்களோ அவர்களின் தங்குமிடம் மிகவும் மோசமானதாகும்; அவர்களின் வழியும் மிகமிகத் தவறானதாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தங்களின் முகங்களின் மீது (முகங்குப்புற) நரகத்தின்பால் இழுத்துச் செல்லப்படுவார்களே அத்தகையோர் -அவர்கள் (தங்கும்) இடத்தால் மிகவும் கெட்டவர்கள், பாதையால் மிகவும் வழி தவறியவர்கள்.
Saheeh International
The ones who are gathered on their faces to Hell - those are the worst in position and farthest astray in [their] way.
وَلَقَدْ اٰتَیْنَا مُوْسَی الْكِتٰبَ وَجَعَلْنَا مَعَهٗۤ اَخَاهُ هٰرُوْنَ وَزِیْرًا ۟ۚۖ
وَلَقَدْதிட்டவட்டமாகاٰتَيْنَاகொடுத்தோம்مُوْسَىமூஸாவுக்குالْكِتٰبَவேதத்தைوَجَعَلْنَاஇன்னும் ஆக்கினோம்مَعَهٗۤஅவருடன்اَخَاهُஅவரது சகோதரர்هٰرُوْنَஹாரூனைوَزِيْرًا‌ ۖ‌ ۚ‏உதவியாளராக
வ லகத் ஆதய்னா மூஸல் கிதாBப வ ஜ'அல்னா ம'அஹூ அகாஹு ஹாரூன வZஜீரா
முஹம்மது ஜான்
மேலும் நிச்சயமாக நாம் மூஸாவுக்கு (தவ்ராத்) வேதத்தைக் கொடுத்தோம் - இன்னும் அவருடன் அவருடைய சகோதரர் ஹாரூனை உதவியாளராகவும் ஏற்படுத்தினோம்.
அப்துல் ஹமீது பாகவி
(இதற்கு முன்னர்) நிச்சயமாக நாம் மூஸாவுக்கு(த் ‘தவ்றாத்' என்னும்) வேதத்தைக் கொடுத்திருந்தோம். அவருடைய சகோதரர் ஹாரூனை அவருக்கு மந்திரியாகவும் ஆக்கினோம்.
IFT
மேலும், நாம் மூஸாவுக்கு வேதத்தை அருளினோம். மேலும், அவருடன் அவருடைய சகோதரர் ஹாரூனை உதவி யாளராய் ஆக்கினோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நிச்சயமாக, மூஸாவுக்கு(த் ‘தவ்றாத்’ என்னும்) வேதத்தை நாம் கொடுத்தோம், அவருடன் அவருடைய சகோதரர் ஹாரூனை உதவியாளராகவும் ஆக்கினோம்.
Saheeh International
And We had certainly given Moses the Scripture and appointed with him his brother Aaron as an assistant.
فَقُلْنَا اذْهَبَاۤ اِلَی الْقَوْمِ الَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا ؕ فَدَمَّرْنٰهُمْ تَدْمِیْرًا ۟ؕ
فَقُلْنَاநாம் கூறினோம்اذْهَبَاۤநீங்கள் இருவரும் செல்லுங்கள்اِلَى الْقَوْمِமக்களிடம்الَّذِيْنَ كَذَّبُوْاபொய்ப்பித்தவர்கள்بِاٰيٰتِنَاؕநமது அத்தாட்சிகளைفَدَمَّرْنٰهُمْஆகவே நாம் அவர்களை அழித்து விட்டோம்تَدْمِيْرًاؕ‏முற்றிலும் தரை மட்டமாக
Fபகுல்னத் ஹBபா இலல் கவ்மில் லதீன கத்தBபூ Bபி ஆயாதினா Fபதம்மர்னாஹும் தத்மீரா
முஹம்மது ஜான்
ஆகவே நாம், “நீங்கள் இருவரும் நம் அத்தாட்சிகளைப் பொய்ப்பித்தார்களே அக்கூட்டத்தாரிடம் செல்லுங்கள்” என்று கூறினோம். பின்னர், அ(வ்வாறு பொய்ப்பித்த)வர்களை முற்றும் அழித்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
அவ்விருவரையும் நோக்கி, ‘‘நம் அத்தாட்சிகளைப் பொய்யாக்கிய மக்களிடம் நீங்கள் இருவரும் செல்லுங்கள்'' எனக் கூறினோம். (அவ்வாறு அவர்கள் சென்று அவர்களுக்குக் கூறியதை அந்த மக்கள் நிராகரித்து விட்டதனால்) நாம் அவர்களை அடியோடு அழித்துவிட்டோம்.
IFT
அவ்விருவர்க்கும் கூறினோம்: “நமது சான்றுகளைப் பொய்யென வாதிட்டுக் கொண்டிருக்கின்ற சமூகத்தாரிடம் செல்லுங்கள்!” இறுதியில், அச்சமூகத்தை நாம் அழித்தொழித்துவிட்டோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே நாம், “நீங்கள் இருவரும் நம்முடைய அத்தாட்சிகளைப் பொய்யாக்கினார்களே அத்தகைய சமூகத்தாரிடம் செல்லுங்கள்” எனக் கூறினோம், பின்னர், (அவ்விருவரையும் விசுவாசம் கொள்ளாத) அவர்களை நாம் அடியோடு அழித்துவிட்டோம்.
Saheeh International
And We said, "Go both of you to the people who have denied Our signs." Then We destroyed them with [complete] destruction.
وَقَوْمَ نُوْحٍ لَّمَّا كَذَّبُوا الرُّسُلَ اَغْرَقْنٰهُمْ وَجَعَلْنٰهُمْ لِلنَّاسِ اٰیَةً ؕ وَاَعْتَدْنَا لِلظّٰلِمِیْنَ عَذَابًا اَلِیْمًا ۟ۚۖ
وَقَوْمَஇன்னும் மக்களையும்نُوْحٍநூஹூடையلَّمَّاபோதுكَذَّبُواஅவர்கள் பொய்ப்பித்தனர்الرُّسُلَதூதர்களைاَغْرَقْنٰهُمْஅவர்களை மூழ்கடித்தோம்وَجَعَلْنٰهُمْஅவர்களை ஆக்கினோம்لِلنَّاسِமக்களுக்குاٰيَةً  ؕஓர் அத்தாட்சியாகوَاَعْتَدْنَاஇன்னும் நாம் தயார் படுத்தியுள்ளோம்لِلظّٰلِمِيْنَஅநியாயக்காரர்களுக்குعَذَابًاதண்டனையைاَ لِيْمًا ۖ‌ ۚ‏வலி தரும்
வ கவ்ம னூஹின் லம்மா கத்தBபுர் ருஸுல அக்ரக்னாஹும் வ ஜ'அல்னாஹும் லின்னாஸி ஆயத(ன்)வ் வ அஃதத்னா லிள்ளாலிமீன 'அதாBபன் அலீமா
முஹம்மது ஜான்
இன்னும்: நூஹின் சமூகத்தவர் அவர்கள் (நம்) தூதர்களைப் பொய்யாக்கிய போது, நாம் அவர்களை மூழ்கடித்தோம்; அவர்களை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கிவைத்தோம்; மேலும் அநியாயக் காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனையை நாம் சித்தப்படுத்தி இருக்கிறோம்.
அப்துல் ஹமீது பாகவி
நூஹ்வுடைய மக்கள் (நம்) தூதர்களைப் பொய்யாக்கிய சமயத்தில் அவர்களையும் மூழ்கடித்து, அவர்களை மனிதர்கள் அனைவருக்கும் ஓர் அத்தாட்சியாக ஆக்கினோம். இத்தகைய அநியாயக்காரர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையையே நாம் தயார்படுத்தி வைத்திருக்கிறோம்.
IFT
இதே கதிதான் நூஹ் உடைய சமூகத்தார்க்கும் ஏற்பட்டது; தூதர்களைப் பொய்யர்களென்று அவர்கள் தூற்றியபோது! அவர்களை நாம் மூழ்கடித்தோம். மேலும் (அனைத்துலக) மக்களுக்கும் ஒரு படிப்பினை தரும் சான்றாக அவர்களை ஆக்கினோம். மேலும், அந்தக் கொடுமைக்காரர்களுக்கு துன்புறுத்தும் வேதனையை நாம் தயார் செய்து வைத்திருக்கின்றோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், (நபி) நூஹ்வுடைய சமூகத்தாரை – அவர்கள் (நம்) தூதர்களைப் பொய்யாக்கியபோது அவர்களை மூழ்கடித்தோம், அவர்களை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம், இன்னும், அநியாயக்காரர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையை நாம் தயாராக்கி வைத்திருக்கிறோம்.
Saheeh International
And the people of Noah - when they denied the messengers, We drowned them, and We made them for mankind a sign. And We have prepared for the wrongdoers a painful punishment.
وَّعَادًا وَّثَمُوْدَاۡ وَاَصْحٰبَ الرَّسِّ وَقُرُوْنًا بَیْنَ ذٰلِكَ كَثِیْرًا ۟
وَّعَادًاஆதுوَّثَمُوْدَا۟ஸமூதுوَ اَصْحٰبَ الرَّسِّகிணறு வாசிகள்وَقُرُوْنًۢاஇன்னும் பல தலைமுறையினரைبَيْنَ ذٰ لِكَஇவர்களுக்கிடையில்كَثِيْرًا‏பல
வ 'ஆத(ன்)வ் வ தமூத வ அஸ் ஹாBபர் ரஸ்ஸி வ குரூனன் Bபய்ன தாலிக கதீரா
முஹம்மது ஜான்
இன்னும் “ஆது” “ஸமூது” (கூட்டத்தாரையும்), ரஸ் (கிணறு) வாசிகளையும், இவர்களுக்கிடையில் இன்னும் அநேக தலைமுறையினரையும் (நாம் தண்டித்தோம்).
அப்துல் ஹமீது பாகவி
ஆது, ஸமூது மக்களையும், றஸ் (அகழ்) வாசிகளையும், இவர்களுக்கிடையில் வசித்த இன்னும் பல வகுப்பினரையும் (நாம் அழித்திருக்கிறோம்).
IFT
இதேபோன்று ஆத், ஸமூத் சமூகத்தினரும் ‘ரஸ்’ சமூகத்தினரும், மேலும், அவர்களுக்கு இடைப்பட்ட நூற்றாண்டுகளில் வாழ்ந்த அநேக மக்களும் அழித்தொழிக்கப்பட்டனர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆ(துக்கூட்டத்)தையும், ஸமூ(துக் கூட்டத்)தையும், ரஸ் (கிணறு) வாசிகளையும் இவர்களுக்கிடையில் இன்னும் அநேக தலைமுறையினர்களையும் (நாம் அழித்துவிட்டோம்)
Saheeh International
And [We destroyed] ʿAad and Thamūd and the companions of the well and many generations between them.
وَكُلًّا ضَرَبْنَا لَهُ الْاَمْثَالَ ؗ وَكُلًّا تَبَّرْنَا تَتْبِیْرًا ۟
وَكُلًّاஎல்லோருக்கும்ضَرَبْنَاநாம் விவரித்தோம்لَهُஅவர்களுக்குالْاَمْثَالَ‌பல உதாரணங்களைوَكُلًّاஎல்லோரையும்تَبَّـرْنَاநாம் அழித்துவிட்டோம்تَـتْبِيْرًا‏அடியோடு
வ குல்லன் ளரBப்னா லஹுல் அம்தால வ குல்லன் தBப்Bபர்னா தத்Bபீரா
முஹம்மது ஜான்
அவர்கள் ஒவ்வொருவருக்கும் நாம் தெளிவான சான்றுகளை தெளிவுபடுத்தினோம். மேலும் (அவர்கள் அவைகளை நிராகரித்ததினால்) அவர்கள் அனைவரையும் முற்றாக அழித்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
(அவர்கள் நல்லுணர்ச்சி பெறும் பொருட்டு அழிந்துபோன முன்னிருந்தவர்களின் சரித்திரங்களை) அவர்கள் அனைவருக்கும் நாம் பல உதாரணங்களாகக் கூறினோம். (அவர்கள் அவற்றை நிராகரித்து விடவே,) அவர்கள் அனைவரையும் நாம் அடியோடு அழித்து விட்டோம்.
IFT
மேலும், அவர்களில் ஒவ்வொருவருக்கும் (முன்னர் அழிந்து போனவர்களின்) உதாரணங்களைக் கூறி விளக்கினோம். இறுதியில், ஒவ்வொருவரையும் அடியோடு அழித்துவிட்டோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஓவ்வொருவருக்கும் (நாம் தெளிவான சான்றுகளைக் கொடுத்து) அவ(ரவ)ருக்குரிய பல உதாரணங்களையும் கூறினோம், (அவைகளை ஏற்காது மறுத்துவிட்ட) ஒவ்வொருவரையும் நாம் அடியோடு அழித்துவிட்டோம்.
Saheeh International
And for each We presented examples [as warnings], and each We destroyed with [total] destruction.
وَلَقَدْ اَتَوْا عَلَی الْقَرْیَةِ الَّتِیْۤ اُمْطِرَتْ مَطَرَ السَّوْءِ ؕ اَفَلَمْ یَكُوْنُوْا یَرَوْنَهَا ۚ بَلْ كَانُوْا لَا یَرْجُوْنَ نُشُوْرًا ۟
وَلَقَدْதிட்டவட்டமாகاَتَوْاஅவர்கள் வந்திருக்கின்றனர்عَلَىஅருகில்الْقَرْيَةِஊரின்الَّتِىْۤ اُمْطِرَتْபொழியப்பட்டதுمَطَرَமழைالسَّوْءِ‌ ؕமிக மோசமானاَفَلَمْ يَكُوْنُوْا يَرَوْنَهَا ۚஅதை அவர்கள் பார்த்திருக்கவில்லையா?بَلْமாறாகكَانُوْاஇருந்தனர்لَا يَرْجُوْنَஅவர்கள் ஆதரவு வைக்காதவர்களாகنُشُوْرًا‏எழுப்பப்படுவதை
வ லகத் அதவ் 'அலல் கர்யதில் லதீ உம்திரத் மதரஸ் ஸவ்'; அFபலம் யகூனூ யரவ்னஹா; Bபல் கானூ லா யர்ஜூன னுஷூரா
முஹம்மது ஜான்
இன்னும்: நிச்சயமாக இ(ந்நிராகரிப்ப)வர்கள் ஒரு தீமையான (கல்) மாரி பொழிவிக்கப்பட்ட ஊருக்குச் சென்றிருக்கிறார்கள் - அதனையும் இவர்கள் பார்க்கவில்லையா? எனினும் (மரணத்திற்குப் பின் உயிர் கொடுத்து) எழுப்பப்படுவதை இவர்கள் நம்பவேயில்லை.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக (மக்காவிலுள்ள நிராகரிப்பாளர்கள்) கெட்ட (கல்) மாரி பொழிந்த ஊரின் சமீபமாக (அடிக்கடி)ச் சென்றே இருக்கின்றனர். அதை இவர்கள் பார்க்கவில்லையா? உண்மையில் இவர்கள் (மறுமையில்) உயிர் கொடுத்து எழுப்பப்படுவதை நம்பவேயில்லை.
IFT
மேலும், எந்த ஊர் மீது கொடுமையான மழை பொழிவிக்கப்பட்டதோ அந்த ஊரினூடே இவர்கள் சென்றிருக்கின்றார்கள். என்ன, அதனுடைய கதியை இவர்கள் பார்க்கவில்லையா? இருப்பினும், இவர்கள் மரணத்திற்குப் பின் மற்றொரு வாழ்க்கையை நம்பாதவர்களாகவே இருக்கின்றனர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக (மக்கத்துக் காஃபிர்களான) இவர்கள், தீய (கல்மாரி) மழை பொழிவிக்கப்பட்டிருந்ததே அத்தகைய ஊருக்கு (ச் சென்று) வந்திருக்கிறார்கள், அதை அவர்கள் பார்த்திருக்கவில்லையா? எனினும், (மரணத்திற்குப்பின் உயிர் கொடுத்து) எழுப்பப்படுவதை அவர்கள் நம்பாதவர்களாக இருந்தனர்.
Saheeh International
And they have already come upon the town which was showered with a rain of evil [i.e., stones]. So have they not seen it? But they are not expecting resurrection.
وَاِذَا رَاَوْكَ اِنْ یَّتَّخِذُوْنَكَ اِلَّا هُزُوًا ؕ اَهٰذَا الَّذِیْ بَعَثَ اللّٰهُ رَسُوْلًا ۟
وَاِذَا رَاَوْكَஅவர்கள் உம்மைப் பார்த்தால்اِنْ يَّتَّخِذُوْنَكَஉம்மை எடுத்துக் கொள்ளமாட்டார்கள்اِلَّاதவிரهُزُوًا ؕகேலியாகவேاَهٰذَاஇவரையா?الَّذِىْஎவர்بَعَثَஅனுப்பினான்اللّٰهُஅல்லாஹ்رَسُوْلًا‏தூதராக
வ இதா ர அவ்க இ(ன்)ய் யத்தகிதூனக இல்லா ஹுZஜுவன் அஹாதல் லதீ Bப'அதல் லாஹு ரஸூலா
முஹம்மது ஜான்
“இவரைத்தானா அல்லாஹ் தூதராக அனுப்பியிருக்கிறான்” (என்று கூறி) உம்மை அவர்கள் காணும் பொழுது உம்மைக் கேலிக்குரியவராக அவர்கள் கருதுகின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) இவர்கள் உம்மைக் கண்டால் உம்மைப் பற்றி ‘‘இவரையா அல்லாஹ் (தன்) தூதராக அனுப்பி வைத்தான்?'' என்று பரிகாசமாகக் கூறுகின்றனர்.
IFT
மேலும், இவர்கள் உம்மைக் காண்பார்களானால், உம்மைக்கேலிக்கு உரியவராக எடுத்துக் கொள்கின்றார்கள். (அவர்கள் கூறுகின்றார்கள்:) “இவரைத்தான் இறைவன் தூதராய் அனுப்பியிருக்கின்றானா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (நபியே!) அவர்கள் உம்மைப் பார்த்துவிட்டால், பரிகாசமாகவே தவிர அவர்கள் உம்மை எடுத்துக் கொள்வதில்லை, “அல்லாஹ் (தன்னுடைய) தூதராக அனுப்பினானே அத்தகையவர்தானா இவர்?” (என்று கூறுகின்றனர்).
Saheeh International
And when they see you, [O Muhammad], they take you not except in ridicule, [saying], "Is this the one whom Allah has sent as a messenger?
اِنْ كَادَ لَیُضِلُّنَا عَنْ اٰلِهَتِنَا لَوْلَاۤ اَنْ صَبَرْنَا عَلَیْهَا ؕ وَسَوْفَ یَعْلَمُوْنَ حِیْنَ یَرَوْنَ الْعَذَابَ مَنْ اَضَلُّ سَبِیْلًا ۟
اِنْ كَادَ لَيُضِلُّنَاஇவர் நம்மை நிச்சயமாக வழி கெடுத்திருப்பார்عَنْ اٰلِهَـتِنَاநமது தெய்வங்களை விட்டுلَوْ لَاۤ اَنْ صَبَـرْنَاநாம் உறுதியாக இருந்திருக்க வில்லையென்றால்عَلَيْهَا‌ ؕஅவற்றின் மீதுوَسَوْفَ يَعْلَمُوْنَஅவர்கள் அறிந்து கொள்வார்கள்حِيْنَபோதுيَرَوْنَஅவர்கள் பார்க்கும்الْعَذَابَதண்டனையைمَنْயார்اَضَلُّமிக வழிகெட்டவர்سَبِيْلًا‏பாதையால்
இன் காத ல யுளில்லுனா 'அன் ஆலிஹதினா லவ் லா அன் ஸBபர்னா 'அலய்ஹா; வ ஸவ்Fப யஃலமூன ஹீன யரவ்னல் 'அதாBப மன் அளல்லு ஸBபீலா
முஹம்மது ஜான்
“நாம் (நம் தெய்வங்களின் மீது) உறுதியாக இல்லாதிருந்தால், நம்முடைய தெய்வங்களை விட்டும் திருப்பி நம்மை இவர் வழி கெடுத்தேயிருப்பார்” (என்றும் அவர்கள் கூறுகின்றனர்; (மறுமையின்) வேதனையை அவர்கள் காணும்பொழுது, பாதையால் மிக வழிகெட்டவர்கள் யார் என்பதை நன்கறிந்து கொள்வார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘நாம் உறுதியாக இல்லையென்றால், நம் தெய்வங்களை விட்டும் நம்மை இவர் வழிகெடுத்தே இருப்பார்'' (என்றும் கூறுகின்றனர். மறுமையில்) அவர்கள் வேதனையைத் தங்கள் கண்ணால் காணும் நேரத்தில் வழி கெட்டவர்கள் யார் என்பதை நன்கறிந்து கொள்வார்கள்.
IFT
நம் தெய்வங்கள் மீது உள்ள நம்பிக்கையில் நாம் நிலைத்திருக்கவில்லையானால் இவரோ நம்மை வழிகெடுத்து அந்தத் தெய்வங்களை விட்டு நம்மை விலக்கியே வைத்திருப்பார்.” சரி! அந்த நேரம் வெகு தூரத்தில் இல்லை இவர்கள் வேதனையைக் காணும்போது யார் வழிகேட்டில் வெகுதூரம் சென்றுவிட்டார்கள் என்பது இவர்களுக்குத் தாமாகவே தெரிந்துவிடும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(தெய்வங்களாகிய) அவற்றின் மீது நாம் உறுதியாக இல்லாதிருந்தால், நம்முடைய (வணக்கத்திற்குரிய) தெய்வங்களை விட்டும் திரும்பி நம்மை இவர் வழிகெடுக்க சமீபித்து இருப்பார் (என்றும் கூறுகின்றனர். மறுமையில்) அவர்கள் வேதனையைக் கண்ணால் காணும் நேரத்தில், பாதையால் மிக வழிகெட்டவர்கள் யார் என்பதை நன்கறிந்து கொள்வார்கள்.
Saheeh International
He almost would have misled us from our gods had we not been steadfast in [worship of] them." But they are going to know, when they see the punishment, who is farthest astray in [his] way.
اَرَءَیْتَ مَنِ اتَّخَذَ اِلٰهَهٗ هَوٰىهُ ؕ اَفَاَنْتَ تَكُوْنُ عَلَیْهِ وَكِیْلًا ۟ۙ
اَرَءَيْتَநீர் பார்த்தீரா?مَنِ اتَّخَذَஎடுத்துக் கொண்டவனைاِلٰهَهٗதனது கடவுளாகهَوٰٮهُ ؕதனது மன இச்சையைاَفَاَنْتَநீர்?تَكُوْنُஆகுவீராعَلَيْهِஅவனுக்குوَكِيْلًا ۙ‏பொறுப்பாளராக
அர'அய்த மனித் தகத இலாஹஹூ ஹவாஹு அFப அன்த தகூனு 'அலய்ஹி வகீலா
முஹம்மது ஜான்
தன் (இழிவான) இச்சையையே தன் தெய்வமாக எடுத்துக் கொண்டவனை (நபியே!) நீர் பார்த்தீரா? அ(த்தகைய)வனுக்கு நீர் பாதுகாவலராக இருப்பீரா?
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) எவன் தன் சரீர இச்சையை(த் தான் பின்பற்றும்) தன் தெய்வமாக எடுத்துக் கொண்டானோ அவனை நீர் பார்த்தீரா? (அவன் வழி தவறாது) நீர் அவனுக்குப் பாதுகாப்பாளராக இருப்பீரா?
IFT
தனது மனஇச்சையைத் தன் கடவுளாக்கிக் கொண்டவனின் நிலை குறித்து என்றேனும் நீர் சிந்தித்ததுண்டா? இத்த கையவனை நேர்வழியில் கொண்டுவரும் பொறுப்பை நீர் ஏற்க முடியுமா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) தன் மனோ இச்சையைத் தன் (வணக்கத்திற்குரிய) தெய்வமாக எடுத்துக் கொண்டவனை நீர் பார்த்தீரா? நீர் அவனுக்குப் பாதுகாப்பாளராக இருப்பீரா?
Saheeh International
Have you seen the one who takes as his god his own desire? Then would you be responsible for him?
اَمْ تَحْسَبُ اَنَّ اَكْثَرَهُمْ یَسْمَعُوْنَ اَوْ یَعْقِلُوْنَ ؕ اِنْ هُمْ اِلَّا كَالْاَنْعَامِ بَلْ هُمْ اَضَلُّ سَبِیْلًا ۟۠
اَمْஅல்லதுتَحْسَبُநீர் எண்ணுகிறீரா?اَنَّஎன்றுاَكْثَرَஅதிகமானவர்கள்هُمْஅவர்களில்يَسْمَعُوْنَசெவிமடுப்பார்கள்اَوْஅல்லதுيَعْقِلُوْنَ‌ ؕசிந்தித்து புரிவார்கள்اِنْ هُمْஅவர்கள் இல்லைاِلَّاதவிரكَالْاَنْعَامِ‌கால்நடைகளைப் போன்றேبَلْமாறாகهُمْஅவர்கள்اَضَلُّவழிகெட்டவர்கள்سَبِيْلًا‏பாதையால்
அம் தஹ்ஸBபு அன்ன அக்தரஹும் யஸ்ம'ஊன அவ் யஃகிலூன்; இன் ஹும் இல்லா கல் அன்'ஆமி Bபல் ஹும் அளல்லு ஸBபீலா
முஹம்மது ஜான்
அல்லது, நிச்சயமாக அவர்களில் பெரும்பாலோர் (உம் உபதேசத்தைக்) கேட்கிறார்கள்; அல்லது அறிந்துணர்கிறார்கள் என்று நீர் நினைக்கின்றீரா? அவர்கள் கால்நடைகளைப் போன்றவர்களேயன்றி வேறில்லை-அல்ல; (அவற்றை விடவும்) அவர்கள், மிகவும் வழி கெட்டவர்கள்.  
அப்துல் ஹமீது பாகவி
அவர்களில் பெரும்பாலானவர்கள் (உமது வார்த்தைகளைக் காதால்) கேட்கிறார்கள் என்றோ அல்லது அதை(த் தங்கள் மனதால்) உணர்ந்து பார்க்கிறார்கள் என்றோ நீங்கள் எண்ணிக் கொண்டீரா? அன்று! அவர்கள் மிருகங்களைப் போன்றவர்களே தவிர, வேறில்லை. மாறாக, (மிருகங்களை விட) மிகவும் வழிகெட்டவர்களாகவும் இருக்கின்றனர்.
IFT
என்ன, இவர்களில் பெரும்பாலோர் செவியேற்கின்றார்கள் என்றோ, புரிந்து கொள்கின்றார்கள் என்றோ நீர் கருதுகின்றீரா? இவர்களோ கால்நடைகளைப் போன்றவர்களாவர். ஏன், அவற்றை விடவும் இவர்கள் மிகவும் தரங்கெட்டவர்களாவர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லது, நிச்சயமாக அவர்களில் பெரும்பாலோர் (உம்முடைய கூற்றை) கேட்கின்றார்கள் என்றோ, அல்லது அதனை விளங்கிக் கொள்கிறார்கள் என்றோ நீர் எண்ணிக் கொண்டீரா? அவர்கள் (ஆடு, மாடு, ஒட்டகங்கள் ஆகிய) கால்நடைகளைப் போன்றவர்களேயன்றி வேறில்லை, அல்ல, (அவற்றைவிட) அவர்கள் பாதையால் மிக வழிதவறியவர்கள்.
Saheeh International
Or do you think that most of them hear or reason? They are not except like livestock. Rather, they are [even] more astray in [their] way.
اَلَمْ تَرَ اِلٰی رَبِّكَ كَیْفَ مَدَّ الظِّلَّ ۚ وَلَوْ شَآءَ لَجَعَلَهٗ سَاكِنًا ۚ ثُمَّ جَعَلْنَا الشَّمْسَ عَلَیْهِ دَلِیْلًا ۟ۙ
اَلَمْ تَرَநீர் பார்க்கவில்லையா?اِلٰىபக்கம்رَبِّكَஉமது இறைவன்كَيْفَஎப்படிمَدَّநீட்டுகிறான்الظِّلَّ‌ ۚநிழலைوَلَوْ شَآءَஅவன் நாடியிருந்தால்لَجَـعَلَهٗஅதை ஆக்கியிருப்பான்سَاكِنًا‌ ۚநிரந்தரமாகثُمَّபிறகுجَعَلْنَاநாம் ஆக்கினோம்الشَّمْسَசூரியனைعَلَيْهِஅதன் மீதுدَلِيْلًا ۙ‏ஆதாரமாக
அலம் தர இலா ரBப்Bபிக கய்Fப மத்தள் ளில்ல வ லவ் ஷா'அ ல ஜ'அலஹூ ஸாகினன் தும்ம ஜ'அல்னஷ் ஷம்ஸ 'அலய்ஹி தலீலா
முஹம்மது ஜான்
(நபியே!) உம்முடைய இறைவன் நிழலை எப்படி நீட்டுகின்றான் என்பதை நீர் பார்க்கவில்லையா? மேலும் அவன் நாடினால் அதனை (ஒரே நிலையில்) அசைவற்றிருக்கச் செய்ய முடியும். (நபியே!) பின்னர் சூரியனை - நாம் தாம் நிழலுக்கு ஆதாரமாக ஆக்கினோம்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) உமது இறைவன் நிழலை எவ்வாறு (குறைத்து, பின்பு அதை) நீட்டுகிறான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? அவன் நாடியிருந்தால், அதை ஒரே நிலையில் வைத்திருக்க முடியும். சூரியனை நிழலுக்கு வழிகாட்டியாக நாம்தான் ஆக்கினோம்.
IFT
உம் இறைவன் எவ்வாறு நிழலை விரிக்கின்றான் என்பதை நீர் பார்க்கவில்லையா? அவன் நாடினால், அந்நிழலை நிலையானதாய் ஆக்கியிருப்பான். பிறகு, நாம் சூரியனை அதற்கு வழிகாட்டி ஆக்கினோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) உம் இரட்சகனின் பக்கம் - நிழலை அவன் எவ்வாறு நீட்டுகிறான் என்பதை நீர் பார்க்கவில்லையா? அவன் நாடியிருந்தால் அதனை நிலைபெற்றதாகவும் ஆக்கிவிடுவான், பிறகு சூரியனை (நிழலாகிய) அதற்கு ஆதாரமாக நாம் ஆக்கினோம்.
Saheeh International
Have you not considered your Lord - how He extends the shadow, and if He willed, He could have made it stationary? Then We made the sun for it an indication.
ثُمَّ قَبَضْنٰهُ اِلَیْنَا قَبْضًا یَّسِیْرًا ۟
ثُمَّபிறகுقَبَضْنٰهُஅதை கைப்பற்றி விடுகிறோம்اِلَـيْنَاநம் பக்கம்قَبْضًاகைப்பற்றுதல்يَّسِيْرًا‏மறைவாக
தும்ம கBபள்னாஹு இலய்னா கBப்ள(ன்)ய் யஸீரா
முஹம்மது ஜான்
பிறகு, நாம் அதனைச் சிறுகச் சிறுக (குறைத்து) நம்மிடம் கைப்பற்றிக் கொள்கிறோம்.
அப்துல் ஹமீது பாகவி
பின்னர் நாம்தான் அதை சிறுகச் சிறுகக் குறைத்து விடுகிறோம்.
IFT
பிறகு (சூரியன் மேலே செல்லச் செல்ல) அந்நிழலை நாம் மெல்ல மெல்ல நம் பக்கமாக சுருட்டிக் கொண்டே போகின்றோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், நாம் அதனைச் சிறுகச் சிறுக குறைத்து நம்மளவில் அதைக் கைப்பற்றிக் கொள்கிறோம்.
Saheeh International
Then We [retract and] hold it with Us for a brief grasp.
وَهُوَ الَّذِیْ جَعَلَ لَكُمُ الَّیْلَ لِبَاسًا وَّالنَّوْمَ سُبَاتًا وَّجَعَلَ النَّهَارَ نُشُوْرًا ۟
وَهُوَ الَّذِىْஅவன்தான்جَعَلَஆக்கினான்لَـكُمُஉங்களுக்குالَّيْلَஇரவைلِبَاسًاஓர் ஆடையாகவும்وَّالنَّوْمَஇன்னும் தூக்கத்தைسُبَاتًاஓய்வாகவும்وَّجَعَلَஇன்னும் ஆக்கினான்النَّهَارَபகலைنُشُوْرًا‏விழிப்பதற்கும்
வ ஹுவல் லதீ ஜ'அல லகுமுல் லய்ல லிBபாஸ(ன்)வ் வன்னவ்ம ஸுBபாத(ன்)வ் வ ஜ'அலன் னஹார னுஷூரா
முஹம்மது ஜான்
அவன்தான் உங்களுக்கு இரவை ஆடையாகவும், நித்திரையை இளைப்பாறுதலாகவும் ஆக்கியிருக்கின்றான்; இன்னும், அவனே பகலை உழைப்பிற்கு ஏற்றவாறு ஆக்கியிருக்கிறான்.
அப்துல் ஹமீது பாகவி
அவன்தான் உங்களுக்கு இரவைப் போர்வையாகவும், தூக்கத்தை ஓய்வளிக்கக் கூடியதாகவும், பகலை (உங்கள்) நடமாட்டத்திற்காக (பிரகாசமாக)வும் ஆக்கினான்.
IFT
மேலும், அவனே உங்களுக்கு இரவை ஆடையாகவும், உறக்கத்தை அமைதியாகவும் பகலை உயிர்த்தெழும் வேளையாகவும் ஆக்கினான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அவன் எத்தகையவனென்றால் உங்களுக்கு இரவை ஆடையாகவும், நித்திரையை இளைப்பாறுதலாகவும் ஆக்கினான், பகலை (நீங்கள் தூக்கத்திலிருந்து) மீண்டெழு(ந்து வாழ்க்கைக்குரியவற்றை பூமியின் பல பாகங்களிலும் தேடிக் கொள்)வதற்காகவும் ஆக்கினான்.
Saheeh International
And it is He who has made the night for you as clothing and sleep [a means for] rest and has made the day a resurrection.
وَهُوَ الَّذِیْۤ اَرْسَلَ الرِّیٰحَ بُشْرًاۢ بَیْنَ یَدَیْ رَحْمَتِهٖ ۚ وَاَنْزَلْنَا مِنَ السَّمَآءِ مَآءً طَهُوْرًا ۟ۙ
وَهُوَ الَّذِىْۤஅவன்தான்اَرْسَلَஅனுப்புகிறான்الرِّيٰحَகாற்றுகளைبُشْرًۢاநற்செய்தி கூறக்கூடியதாகبَيْنَ يَدَىْமுன்பாகرَحْمَتِهٖ‌ۚதன் அருளுக்குوَاَنْزَلْنَاஇன்னும் நாம் இறக்குகிறோம்مِنَ السَّمَآءِவானத்திலிருந்துمَآءًமழை நீரைطَهُوْرًا ۙ‏பரிசுத்தமான
வ ஹுவல் லதீ அர்ஸலர் ரியாஹ Bபுஷ்ரன் Bபய்ன யதய் ரஹ்மதிஹ்; வ அன்Zஜல்னா மினஸ் ஸமா'இ மா'அன் தஹூரா
முஹம்மது ஜான்
இன்னும், அவன்தான் தன்னுடைய கிருபை (மழை)க்கு முன்னே காற்றுகளை நன்மாராயமாக அனுப்பி வைக்கின்றான்; மேலும், (நபியே!) நாமே வானத்திலிருந்து தூய்மையான நீரையும் இறக்கி வைக்கிறோம்.
அப்துல் ஹமீது பாகவி
அவன்தான் மழைக்கு முன்னதாக (குளிர்ந்த) காற்றை நற்செய்தியாக அனுப்பி வைக்கிறான். (மனிதர்களே!) நாம்தான் மேகத்திலிருந்து பரிசுத்தமான நீரை பொழியச் செய்கிறோம்.
IFT
மேலும், அவனே தன்னுடைய கருணைக்கு முன்னால் காற்றை நற்செய்தியாக அனுப்புகின்றான். பிறகு, வானத்தில் இருந்து தூய்மையான நீரை இறக்குகின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவன் எத்தகையவனென்றால், (மழை எனும்) தன் அருளுக்கு முன்னதாகக் (குளிர்ந்த) காற்றுகளை நன்மாராயமாக அனுப்பி வைக்கின்றான், (மனிதர்களே!) நாம் தாம் வானத்திலிருந்து பரிசுத்தமான நீரை இறக்கியும் வைக்கிறோம்.
Saheeh International
And it is He who sends the winds as good tidings before His mercy [i.e., rainfall], and We send down from the sky pure water
لِّنُحْیِ بِهٖ بَلْدَةً مَّیْتًا وَّنُسْقِیَهٗ مِمَّا خَلَقْنَاۤ اَنْعَامًا وَّاَنَاسِیَّ كَثِیْرًا ۟
لِّـنُحْیَِۧநாம் உயிர்ப்பிப்பதற்காகவும்بِهٖஅதன்மூலம்بَلْدَةًபூமியைمَّيْتًاஇறந்தوَّنُسْقِيَهٗஇன்னும் நாம் அதை புகட்டுவதற்காகவும்مِمَّا خَلَقْنَاۤநாம் படைத்தவற்றில்اَنْعَامًاபல கால்நடைகளுக்கும்وَّاَنَاسِىَّஇன்னும் மனிதர்களுக்கும்كَثِيْرًا‏அதிகமான
லினுஹ்யிய Bபிஹீ Bபல்ததன் மய்த(ன்)வ்-வ னுஸ்கியஹூ மிம்மா கலக்னா அன்'ஆம(ன்)வ் வ அனாஸிய்ய கதீரா
முஹம்மது ஜான்
இறந்து போன பூமிக்கு அதனால் உயிர் அளிக்கிறோம்; நாம் படைத்துள்ளவற்றிலிருந்து கால் நடைகளுக்கும், ஏராளமான மனிதர்களுக்கும் அதை பருகும்படிச் செய்கிறோம்.
அப்துல் ஹமீது பாகவி
இறந்த பூமிக்கு அதைக்கொண்டு நாம் உயிர் கொடுத்து நம் படைப்புகளில் ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற உயிரினங்களுக்கும் பல மனிதர்களுக்கும் அதைப் புகட்டுகிறோம்.
IFT
பூமியின் உயிரற்ற பகுதிகளுக்கு அதன் மூலம் நாம் உயிர் கொடுப்பதற்காகவும், மேலும், நம்முடைய படைப்பினங்களில் அநேக கால்நடைகளுக்கும், மனிதர்களுக்கும் தண்ணீர் புகட்டுவதற்காகவும்தான்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அதனைக் கொண்டு இறந்த பூமியை நாம் உயிர்ப்பிப்பதற்காகவும், நாம் படைத்தவற்றில் (ஆடு, மாடு, ஒட்டகம் போன்று) கால்நடைகளுக்கும், அநேக மனிதர்களுக்கும் அதனைப் புகட்டுவதற்காகவும் (நீரை இறக்கி வைக்கிறோம்).
Saheeh International
That We may bring to life thereby a dead land and give it as drink to those We created of numerous livestock and men.
وَلَقَدْ صَرَّفْنٰهُ بَیْنَهُمْ لِیَذَّكَّرُوْا ۖؗ فَاَبٰۤی اَكْثَرُ النَّاسِ اِلَّا كُفُوْرًا ۟
وَلَـقَدْ صَرَّفْنٰهُஅதை நாம் பிரித்துக் கொடுத்தோம்بَيْنَهُمْஅவர்களுக்கு மத்தியில்لِيَذَّكَّرُوْا ۖஅவர்கள் நல்லறிவு பெறுவதற்காகفَاَبٰٓىமறுத்து விட்டனர்اَكْثَرُமிகஅதிகமானவர்கள்النَّاسِமனிதர்களில்اِلَّاதவிரكُفُوْرًا‏நிராகரிப்பதை
வ லகத் ஸர்ரFப்னாஹு Bபய்னஹும் லி யத்தக்கரூ Fப அBபா அக்தருன் னாஸி இல்லா குFபூரா
முஹம்மது ஜான்
அவர்கள் படிப்பினை பெறுவதற்காக அவர்களுக்கு இதனை (குர்ஆனை) நாம் தெளிவு படுத்துகிறோம். மனிதர்களில் பெரும்பாலோர் நிராகரிப்போராகவே இருக்கின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் நல்லுணர்ச்சி பெறும் பொருட்டு இவ்விஷயத்தைப் பலவாறாக அவர்களுக்கு எடுத்துரைத்தோம். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் மிக்க நன்றி கெட்டவர்களாகவே இருக்கின்றனர்.
IFT
இந்த விந்தைகளை அவர்களிடையே அடிக்கடி நாம் நிகழ்த்துகின்றோம், அவர்கள் படிப்பினை பெற வேண்டும் என்பதற்காக! ஆயினும், மக்களில் பெரும்பாலோர் நிராகரிப்பு மற்றும் நன்றி கொல்லும் நடத்தையைத் தவிர வேறெதனையும் மேற்கொள்ள மறுக்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
திட்டமாக நாம் (நம் அருட்கொடைகளை) அவர்கள் நினைவு கூர்வதற்காக (மழையான)அதை அவர்களுக்கிடையில் (தேவைக்குத் தக்க) பங்கீடு செய்தோம், (ஆனால்) மனிதர்களில் அதிகமானவர்கள் நிராகரிப்பைத் தவிர (வேறு எதையும்) ஏற்பதில்லை.
Saheeh International
And We have certainly distributed it among them that they might be reminded, but most of the people refuse except disbelief.
وَلَوْ شِئْنَا لَبَعَثْنَا فِیْ كُلِّ قَرْیَةٍ نَّذِیْرًا ۟ؗۖ
وَلَوْ شِئْنَاநாம் நாடியிருந்தால்لَبَـعَثْنَاஅனுப்பியிருப்போம்فِىْ كُلِّஒவ்வொருقَرْيَةٍஊரிலும்نَّذِيْرًا ۖ ‏ஓர் எச்சரிப்பாளரை
வ லவ் ஷி'னா லBப'அத்னா Fபீ குல்லி கர்யதின் னதீரா
முஹம்மது ஜான்
மேலும், நாம் நாடியிருந்தால், ஒவ்வொரு ஊரிலும், அச்சமூட்டி எச்சரிக்கும் ஒருவரை நாம் அனுப்பியிருப்போம்.
அப்துல் ஹமீது பாகவி
நாம் நாடியிருந்தால் ஒவ்வொரு ஊருக்கும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யக்கூடிய ஒவ்வொரு தூதரை (இன்றைய தினமும்) நாம் அனுப்பியே இருப்போம்.
IFT
மேலும், நாம் நாடியிருந்தால் ஒவ்வோர் ஊரிலும் ஒவ்வோர் எச்சரிக்கையாளரை அனுப்பி வைத்திருப்போம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நாம் நாடியிருந்தால் ஒவ்வொரு ஊரிலும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்யக்கூடியவரை, திட்டமாக நாம் அனுப்பியிருப்போம்.
Saheeh International
And if We had willed, We could have sent into every city a warner.
فَلَا تُطِعِ الْكٰفِرِیْنَ وَجَاهِدْهُمْ بِهٖ جِهَادًا كَبِیْرًا ۟
فَلَا تُطِعِஆகவே கீழ்ப்படியாதீர்الْكٰفِرِيْنَநிராகரிப்பாளர்களுக்குوَ جَاهِدْபோர் செய்வீராக!هُمْஅவர்களிடம்بِهٖஇதன்மூலம்جِهَادًاபோர்كَبِيْرًا‏பெரும்
Fபலா துதி'இல் காFபிரீன வ ஜாஹித்ஹும் Bபிஹீ ஜிஹாதன் கBபீரா
முஹம்மது ஜான்
ஆகவே, (நபியே!) நீர் இந்த காஃபிர்களுக்கு வழிபடாதீர்; இதன் மூலம் (குர்ஆன் மூலம்) அவர்களுடன் பெரும் போராட்டத்தை மேற்கொள்வீராக.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (நபியே!) நீர் இந்த நன்றி கெட்டவர்களுக்கு கட்டுப்படாதீர். இந்த குர்ஆனை (ஆதாரமாக) கொண்டு நீர் அவர்களிடத்தில் பெரும் போராக போராடுவீராக!
IFT
எனவே, (நபியே!) நிராகரிப்பாளர்களின் பேச்சை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாதீர்! மேலும், இந்தக் குர்ஆனைக் கொண்டு அவர்களுடன் பெரும் ஜிஹாதில் கடுமையான போராட்டத்தில் ஈடுபடுங்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, (நபியே!) நீர் நிராகரிப்போருக்கு கீழ்ப்படியாதீர்; அன்றி (குர் ஆனாகிய) இதனை (சான்றாக)க் கொண்டு, நீர் அவர்களுடன் பலமாகப் போராடுவீராக.
Saheeh International
So do not obey the disbelievers, and strive against them with it [i.e., the Qur’an] a great striving.
وَهُوَ الَّذِیْ مَرَجَ الْبَحْرَیْنِ هٰذَا عَذْبٌ فُرَاتٌ وَّهٰذَا مِلْحٌ اُجَاجٌ ۚ وَجَعَلَ بَیْنَهُمَا بَرْزَخًا وَّحِجْرًا مَّحْجُوْرًا ۟
وَهُوَ الَّذِىْஅவன்தான்مَرَجَஇணைத்தான்الْبَحْرَيْنِஇரு கடல்களைهٰذَاஇதுعَذْبٌமிக்க மதுரமானதுفُرَاتٌஇனிப்பு நீராகும்وَّهٰذَاஇதுவோمِلْحٌ‌உப்பு நீராகும்اُجَاجٌ ۚமிக்க உவர்ப்பானதுوَجَعَلَஇன்னும் அவன் ஆக்கினான்بَيْنَهُمَاஅவ்விரண்டுக்கும் இடையில்بَرْزَخًاஒரு திரையையும்وَّحِجْرًاதடுப்பையும்مَّحْجُوْرًا‏முற்றிலும் தடுக்கக்கூடியது
வ ஹுவல் லதீ மரஜல் Bபஹ்ரய்னி ஹாதா 'அத்Bபுன் Fபுராது(ன்)வ் வ ஹாதா மில்ஹுன் உஜாஜ்; வ ஜ'அல Bபய்னஹுமா Bபர்Zஜக(ன்)வ் வ ஹிஜ்ரன் மஹ்ஜூரா
முஹம்மது ஜான்
அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான்; ஒன்று, மிக்க இனிமையும் சுவையுமுள்ளது; மற்றொன்று உப்பும் கசப்புமானது - இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான்.
அப்துல் ஹமீது பாகவி
அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்திருக்கிறான். ஒன்று, மிக்க இன்பமும் மதுரமுமான தண்ணீர். மற்றொன்று, உப்பும் கசப்புமான தண்ணீர். (இவை ஒன்றோடொன்று கலந்து விடாதிருக்கும் பொருட்டு) இவ்விரண்டுக்கும் இடையில் திரையையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தி இருக்கிறான்.
IFT
மேலும், இரு கடல்களை ஒன்றிணைத்து வைத்திருப்பவன் அவனே! ஒன்று சுவையும் இனிமையும் வாய்ந்தது; மற்றொன்று, உப்பும் கசப்பும் கலந்தது. மேலும், இரண்டுக்குமிடையே ஒரு திரை ஒரு தடுப்பு இருக்கிறது. (அவை ஒன்றோடொன்று கலந்து விடாதவாறு) அது தடுத்துக் கொண்டிருக்கிறது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் அவன் எத்தகையவனென்றால், இரு கடல்களையும் அவன் ஒன்று சேர்த்திருக்கின்றான்; (அதில் ஒன்றான) இது மிக்க மதுரமானது, தாகம் தீர்க்கக் கூடியது, (அதில் மற்றொன்றான) இது உப்புக்கரிப்பானது கசப்பானது; இவ்விரண்டிற்கிடையில் (அவை ஒன்றோடொன்று கலந்திடாமல்) திரையையும், மீற முடியாத ஒரு தடையையும் அவன் ஆக்கியிருக்கின்றான்.
Saheeh International
And it is He who has released [simultaneously] the two seas [i.e., bodies of water], one fresh and sweet and one salty and bitter, and He placed between them a barrier and prohibiting partition.
وَهُوَ الَّذِیْ خَلَقَ مِنَ الْمَآءِ بَشَرًا فَجَعَلَهٗ نَسَبًا وَّصِهْرًا ؕ وَكَانَ رَبُّكَ قَدِیْرًا ۟
وَهُوَ الَّذِىْஅவன்தான்خَلَقَபடைத்தான்مِنَ الْمَآءِநீரிலிருந்துبَشَرًاமனிதனைفَجَعَلَهٗஇன்னும் அவனை ஆக்கினான்نَسَبًاஇரத்த பந்தமுடையவனாகوَّ صِهْرًا‌ ؕஇன்னும் திருமண பந்தமுடையவனாகوَكَانَஇருக்கிறான்رَبُّكَஉமது இறைவன்قَدِيْرًا‏பேராற்றலுடையவனாக
வ ஹுவல் லதீ கலக மினல் மா'இ Bபஷரன் Fப ஜ'அலஹூ னஸBபன் வ ஸிஹ்ரா; வ கான ரBப்Bபுக கதீரா
முஹம்மது ஜான்
இன்னும் அவன்தான் மனிதனை நீரிலிருந்து படைத்து, பின்னர் அவனுக்கு வம்சத்தையும், சம்பந்தங்களையும் ஏற்படுத்துகிறான்; மேலும் உம்முடைய இறைவன் பேராற்றலுள்ளவன்.
அப்துல் ஹமீது பாகவி
அவன்தான் (ஒரு துளி) தண்ணீரிலிருந்து மனிதனை உற்பத்தி செய்கிறான். பின்னர், அவனுக்குச் சந்ததிகளையும் சம்பந்திகளையும் ஆக்குகிறான். (நபியே!) உமது இறைவன் (தான் விரும்பியவாறெல்லாம் செய்ய) ஆற்றலுடையவனாகவே இருக்கிறான்.
IFT
மேலும், நீரிலிருந்து மனிதனைப் படைத்தவன் அவனே! பிறகு, வம்ச உறவின் மூலமாகவும், திருமணத் தொடர்பின் மூலமாகவும் இரு தனித்தனியான உறவு முறைகளை அவன் ஏற்படுத்தினான். உம் இறைவன் பெரும் ஆற்றல் மிக்கவனாய் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் அவன் எத்தகையவனென்றால், மனிதனை (ஒரு துளி) நீரிலிருந்து படைத்தான். பின்னர் அவனுக்கு வம்சாவழியையும் (அதன் மூலம் ஏற்படும் உறவையும் திருமணம் மூலம் ஏற்படும்) சம்பந்தத்தையும் ஆக்கினான், மேலும், (நபியே!) உம் இரட்சகன் (எவ்வாறும் செய்ய) ஆற்றலுடையோனாக இருக்கின்றான்.
Saheeh International
And it is He who has created from water [i.e., semen] a human being and made him [a relative by] lineage and marriage. And ever is your Lord competent [concerning creation].
وَیَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا یَنْفَعُهُمْ وَلَا یَضُرُّهُمْ ؕ وَكَانَ الْكَافِرُ عَلٰی رَبِّهٖ ظَهِیْرًا ۟
وَيَعْبُدُوْنَஅவர்கள் வணங்குகின்றனர்مِنْ دُوْنِ اللّٰهِஅல்லாஹ்வையன்றிمَا لَا يَنْفَعُهُمْஅவர்களுக்கு நற்பலனளிக்காதவற்றைوَلَا يَضُرُّஇன்னும் தீங்கிழைக்காதவற்றைهُمْ‌ؕஅவர்களுக்குوَكَانَஇருக்கிறான்الْـكَافِرُநிராகரிப்பாளன்عَلٰىஎதிராகرَبِّهٖதன் இறைவனுக்குظَهِيْرًا‏உதவக்கூடியவனாக
வ யஃBபுதூன மின் தூனில் லாஹி மா லா யன்Fப'உஹும் வலா யளுர்ருஹும்; வ கானல் காFபிரு 'அலா ரBப்Bபிஹீ ளஹீரா
முஹம்மது ஜான்
இவ்வாறிருந்தும், அவர்கள் அல்லாஹ்வை அன்றி தங்களுக்கு நன்மை செய்யவோ, தீமையை செய்யவோ இயலாதவற்றை வணங்குகின்றனர்; நிராகரிப்பவன் தன் இறைவனுக்கு எதிராக (தீய சக்திகளுக்கு) உதவி செய்பவனாகவே இருக்கிறான்.
அப்துல் ஹமீது பாகவி
இவ்வாறிருந்தும் அவர்களோ தங்களுக்கு நன்மையும், தீமையும் செய்ய சக்தியற்றதை அல்லாஹ்வை அன்றி வணங்குகின்றனர். நிராகரிப்பவர்கள் தங்கள் இறைவனுக்கு விரோதமானவர்களாக இருக்கின்றனர்.
IFT
மேலும், அல்லாஹ்வை விடுத்து தமக்கு எவ்வித நன்மையும் தீமையும் அளித்திட இயலாத தெய்வங்களை மக்கள் வணங்கிக் கொண்டிருக்கின்றார்கள். மேலும், இது தவிர நிராகரிப்பாளன் தன் இறைவனுக்கு எதிரான ஒவ்வொரு துரோகிக்கும் உதவியாளனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அல்லாஹ்வையன்றி தங்களுக்கு பலன்தராதவற்றையும், தங்களுக்கு இடர் செய்யாதவற்றையும் இணைவைப்பவர்களான அவர்கள் வணங்குகின்றனர், நிராகரிப்பவன் தன் இறைவனுக்கு விரோதமாக (ஷைத்தானுக்கு) உதவுபவனாக இருக்கின்றான்.
Saheeh International
But they worship rather than Allah that which does not benefit them or harm them, and the disbeliever is ever, against his Lord, an assistant [to Satan].
وَمَاۤ اَرْسَلْنٰكَ اِلَّا مُبَشِّرًا وَّنَذِیْرًا ۟
وَمَاۤ اَرْسَلْنٰكَஉம்மை நாம் அனுப்பவில்லைاِلَّاதவிரمُبَشِّرًاநற்செய்தி கூறுபவராகوَّنَذِيْرًا‏இன்னும் எச்சரிப்பவராகவே
வமா அர்ஸல்னாக இல்லா முBபஷ்ஷிர(ன்)வ் வ னதீரா
முஹம்மது ஜான்
இன்னும் (நபியே!) நாம் உம்மை நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே அல்லாமல் அனுப்பவில்லை.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நற்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே தவிர, உம்மை நாம் அனுப்பவில்லை.
IFT
(நபியே!) நற்செய்தி அறிவிப்பவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் மட்டுமே உம்மை நாம் அனுப்பியிருக்கின்றோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நன்மாராயங்கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே தவிர (நபியே!) உம்மை நாம் அனுப்பவில்லை.
Saheeh International
And We have not sent you, [O Muhammad], except as a bringer of good tidings and a warner.
قُلْ مَاۤ اَسْـَٔلُكُمْ عَلَیْهِ مِنْ اَجْرٍ اِلَّا مَنْ شَآءَ اَنْ یَّتَّخِذَ اِلٰی رَبِّهٖ سَبِیْلًا ۟
قُلْகூறுவீராக!مَاۤ اَسْـٴَــلُكُمْநான் உங்களிடம் கேட்கவில்லைعَلَيْهِஇதற்காகمِنْ اَجْرٍஎவ்வித கூலியையும்اِلَّاஎனினும்مَنْயார்شَآءَநாடினானோاَنْ يَّـتَّخِذَஎடுத்துக்கொள்ளاِلٰى رَبِّهٖதன் இறைவனுடையسَبِيْلًا‏வழியில்
குல் மா அஸ்'அலுகும் 'அலய்ஹி மின் அஜ்ரின் இல்லா மன் ஷா'அ அய் யத்தகித இலா ரBப்Bபிஹீ ஸBபீலா
முஹம்மது ஜான்
“அதற்காக நான் உங்களிடம் எந்தக் கூலியையும் கேட்கவில்லை - விருப்பமுள்ளவர் தம் இறைவனிடத்து(ச் செல்ல) நேர் வழியை ஏற்படுத்திக் கொள்ளட்டும் என்பதைத் தவிர” என்று (நபியே!) நீர் கூறும்.
அப்துல் ஹமீது பாகவி
(அவர்களை நோக்கி) ‘‘இதற்காக நான் உங்களிடம் ஒரு கூலியையும் கேட்கவில்லை. ஆயினும், எவன் தன் இறைவனின் வழியில் செல்ல விரும்புகிறானோ அவன் செல்வதை (நீங்கள் தடை செய்யாமல் இருப்பதை)யே (நான் உங்களிடம்) விரும்புகிறேன்'' என்று (நபியே!) கூறுவீராக.
IFT
இவர்களிடம் கூறிவிடும்: “இப்பணிக்காக உங்களிடம் நான் கூலி எதுவும் கேட்கவில்லை. எனது கூலியோ, எவர் தன் இறைவன் பக்கம் சென்றடைவதற்கான வழியினை மேற்கொள்ள விரும்புகின்றாரோ அவர் இதனை மேற்கொள்வதுதான்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இதன்மீது எந்தக் கூலியையும் உங்களிடம் நான் கேட்கவில்லை, தன் இரட்சகனின் பக்கம் (செல்லும்) வழியை எடுத்துக்கொள்ள நாடுகிறவரைத்தவிர (மற்ற யாவரும் நஷ்டத்தில் உள்ளனர்) என்று (நபியே!) நீர் கூறுவீராக!
Saheeh International
Say, "I do not ask of you for it any payment - only that whoever wills might take to his Lord a way."
وَتَوَكَّلْ عَلَی الْحَیِّ الَّذِیْ لَا یَمُوْتُ وَسَبِّحْ بِحَمْدِهٖ ؕ وَكَفٰی بِهٖ بِذُنُوْبِ عِبَادِهٖ خَبِیْرَا ۟
وَتَوَكَّلْநம்பிக்கை வைப்பீராகعَلَىமீதுالْحَـىِّஉயிருள்ளவன்الَّذِىْஎவன்لَا يَمُوْتُமரணிக்கமாட்டான்وَسَبِّحْஇன்னும் துதிப்பீராக!بِحَمْدِهٖ‌ ؕஅவனைப் புகழ்ந்துوَكَفٰىபோதுமானவன்بِهٖஅவனேبِذُنُوْبِபாவங்களைعِبَادِهٖதன் அடியார்களின்خَبِيْرَ ا‌ ۛۚ ۙ‏ஆழ்ந்தறிபவனாக
வ தவக்கல் 'அலல் ஹய்யில் லதீ லா யமூது வ ஸBப்Bபிஹ் Bபிஹம்திஹ்; வ கFபா Bபிஹீ BபிதுனூBபி 'இBபாதிஹீ கBபீரா
முஹம்மது ஜான்
எனவே மரணிக்கமாட்டானே அந்த நித்திய ஜீவ(னாகிய அல்லாஹ்வி)ன் மீதே முற்றிலும் நம்பிக்கை வைப்பீராக. இன்னும் அவன் புகழைக் கொண்டு (அவனைத்) துதி செய்து கொண்டிருப்பீராக; இன்னும் அவன் தன் அடியார்களின் பாவங்களை அறிந்தவனாக இருப்பதே போதுமானதாகும்.
அப்துல் ஹமீது பாகவி
மரணமற்ற என்றும் நிரந்தரமான அல்லாஹ்வையே நீர் நம்புவீராக. அவனுடைய புகழைக் கூறி அவனைத் துதி செய்து வருவீராக. அவன் தன் அடியார்களின் பாவங்களை அறிந்திருப்பதே போதுமானது. (அதற்குரிய தண்டனையை அவன் கொடுப்பான்.)
IFT
மேலும் (நபியே!) என்றென்றும் உயிருடன் இருப்பவனும் ஒருபோதும் மரணிக்காதவனுமான இறைவனை முழுவதுஞ் சார்ந்திருப்பீராக! அவனைப் புகழ்வதுடன் அவன் தூய்மையையும் எடுத்துரைப்பீராக! தன்னுடைய அடிமைகளின் பாவங்களை நன்கு அறிந்துகொள்ள அவனே போதுமானவன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இறந்து விடமாட்டானே அத்தகைய உயிருள்ளவனின் மீது (உமது காரியங்களை ஒப்படைத்து அவன் மீது முழு) நம்பிக்கையும் வைப்பீராக! இன்னும், அவனின் புகழைக் கொண்டு (அவனைத்) துதி செய்வீராக! இன்னும் அவன் தன் அடியார்களின் பாவங்களை நன்குணர்ந்திருப்பது அவனுக்குப் போதுமானதாகும்.
Saheeh International
And rely upon the Ever-Living who does not die, and exalt [Allah] with His praise. And sufficient is He to be, with the sins of His servants, [fully] Aware -
لَّذِیْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَیْنَهُمَا فِیْ سِتَّةِ اَیَّامٍ ثُمَّ اسْتَوٰی عَلَی الْعَرْشِ ۛۚ اَلرَّحْمٰنُ فَسْـَٔلْ بِهٖ خَبِیْرًا ۟
اۨلَّذِىْஅவன்தான்خَلَقَபடைத்தான்السَّمٰوٰتِவானங்களையும்وَالْاَرْضَபூமியையும்وَمَا بَيْنَهُمَاஅவற்றுக்கு இடையில் உள்ளவற்றையும்فِىْ سِتَّةِ اَيَّامٍஆறு நாட்களில்ثُمَّபிறகுاسْتَوٰىஉயர்ந்து விட்டான்عَلَىமீதுالْعَرْشِ ۛۚஅர்ஷின்اَلرَّحْمٰنُஅவன் பேரருளாளன்فَسْــٴَــــلْகேட்பீராக!بِهٖஅவனைخَبِيْرًا‏அறிந்தவனிடம்
அல்லதீ கலகஸ் ஸமாவாதி வல் அர்ள வமா Bபய்னஹுமா Fபீ ஸித்ததி அய்யாமின் தும்ம ஸ்தவா 'அலல் 'அர்ஷ்; அர் ரஹ்மானு Fபஸ்'அல் Bபிஹீ கBபீரா
முஹம்மது ஜான்
அவனே வானங்களையும், பூமியையும், அவற்றிற்கிடையிலுள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தான்; பின்னர் அவன் அர்ஷின் மீது அமைந்தான்; (அவன் தான் அருள் மிக்க) அர்ரஹ்மான்; ஆகவே, அறிந்தவர்களிடம் அவனைப் பற்றிக் கேட்பீராக.
அப்துல் ஹமீது பாகவி
அவன் எத்தகையவனென்றால் வானங்களையும், பூமியையும், இவற்றுக்கு மத்தியில் உள்ளவற்றையும் ஆறு நாள்களில் படைத்தான். பின்னர், அவன் ‘அர்ஷின்' மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்து விட்டான். அவன்தான் ரஹ்மான் (-அளவற்ற அருளாளன்). இதைப் பற்றித் தெரிந்தவர்களைக் கேட்டறிந்து கொள்வீராக.
IFT
அவன் எத்தகையவனெனில் வானங்களையும் பூமியையும் அவற்றுக்கிடையேயுள்ள அனைத்துப் பொருட்களையும் ஆறு நாட்களில் படைத்தான். பிறகு அர்ஷின்* மீது அமர்ந்தான்; அவன் ரஹ்மான்கருணை மிக்கவன். அவனுடைய மாட்சிமை பற்றி யாரேனும் அறிந்தவரிடம் கேளுங்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவன் எத்தகையவனென்றால், வானங்களையும், பூமியையும் இவையிரண்டுக் கிடையிலுள்ளவைகளையும் ஆறு நாட்களில் அவன் படைத்தான், பின்னர் (தன் கண்ணியத்திற்குத் தக்கவாறும், மகத்துவத்திற்குரியவாறும் அர்ஷின் மீதிருப்பது அவனுக்கு எவ்வாறு தகுமோ அவ்வாறே) அவன் அர்ஷின் மீது உயர்ந்து (நிலைபெற்று) விட்டான், அவன்தான் (பேரருளாளனாகிய) அர்ரஹ்மான், அவனைப்பற்றி நன்கு தெரிந்தவரைக் கேட்பீராக!
Saheeh International
He who created the heavens and the earth and what is between them in six days and then established Himself above the Throne - the Most Merciful, so ask about Him one well informed [i.e., the Prophet (ﷺ].
وَاِذَا قِیْلَ لَهُمُ اسْجُدُوْا لِلرَّحْمٰنِ قَالُوْا وَمَا الرَّحْمٰنُ ۗ اَنَسْجُدُ لِمَا تَاْمُرُنَا وَزَادَهُمْ نُفُوْرًا ۟
وَاِذَا قِيْلَகூறப்பட்டால்لَهُمُஅவர்களுக்குاسْجُدُوْاசிரம் பணியுங்கள்لِلرَّحْمٰنِரஹ்மானுக்குقَالُوْاகூறுகின்றனர்وَمَاயார்?الرَّحْمٰنُபேரருளாளன்اَنَسْجُدُநாங்கள் சிரம் பணிய வேண்டுமா?لِمَا تَاْمُرُنَاநீர்ஏவக்கூடியவனுக்குوَزَادَஅதிகப்படுத்தியதுهُمْஅவர்களுக்குنُفُوْرًا ۩‏வெறுப்பை
வ இதா கீல லஹுமுஸ் ஜுதூ லிர் ரஹ்மானி காலூ வ மர் ரஹ்மானு 'அ னஸ்ஜுது லிமா த'முருனா வ Zஜாதஹும் னுFபூரா
முஹம்மது ஜான்
“இன்னும் அர்ரஹ்மானுக்கு நீங்கள் ஸஜ்தா செய்யுங்கள்” என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் “அர்ரஹ்மான் என்பவன் யார்? நீர் கட்டளையிடக் கூடியவனுக்கு நாங்கள் ஸஜ்தா செய்வோமா?” என்று கேட்கிறார்கள்; இன்னும், இது அவர்களுக்கு வெறுப்பையே அதிகப்படுத்திவிட்டது.
அப்துல் ஹமீது பாகவி
(ஆகவே,) அந்த ரஹ்மானைச் சிரம் பணிந்து வணங்குங்கள் என அவர்களுக்குக் கூறப்பட்டால், அவர்களுக்கு வெறுப்பு அதிகரித்து ‘‘ரஹ்மான் யார்? நீங்கள் கூறியவர்களுக்கெல்லாம் நாம் சிரம் பணிந்து வணங்குவதா?'' என்று கேட்கின்றனர்.
IFT
“ரஹ்மானுக்கு கருணைமிக்க இறைவனுக்கு ஸுஜூது• செய்யுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், “ரஹ்மான் என்றால் யார்? நீர் சொல்வோருக்கெல்லாம் நாங்கள் ஸஜ்தா செய்துகொண்டிருக்க வேண்டுமா?” என்று அவர்கள் கேட்கின்றார்கள். இந்த அழைப்பு அவர்களுடைய வெறுப்பை இன்னும் அதிகமாக்கி விடுகின்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஆகவே. மிகக்கிருபையுடையவனாகிய) அர்ரஹ்மானுக்கு சிரம் பணியுங்கள் என அவர்களுக்குக் கூறப்பட்டால், அர்ரஹ்மான் யார்? நீர் கட்டளையிடுபவனுக்கு நாங்கள் சிரம் பணிவோமா? என்று கேட்கின்றனர். (அர்ரஹ்மானுக்கு சிரம் பணியுங்கள் என கூறப்பட்டதாகிய) அது அவர்களுக்கு (மார்க்கத்தின் மீது) வெறுப்பையே அதிகமாக்கியது.
Saheeh International
And when it is said to them, "Prostrate to the Most Merciful," they say, "And what is the Most Merciful? Should we prostrate to that which you order us?" And it increases them in aversion.
تَبٰرَكَ الَّذِیْ جَعَلَ فِی السَّمَآءِ بُرُوْجًا وَّجَعَلَ فِیْهَا سِرٰجًا وَّقَمَرًا مُّنِیْرًا ۟
تَبٰـرَكَமிக்க அருள் நிறைந்தவன்الَّذِىْஎவன்جَعَلَஅமைத்தான்فِى السَّمَآءِவானங்களில்بُرُوْجًاபெரும் கோட்டைகளைوَّجَعَلَஇன்னும் அமைத்தான்فِيْهَاஅதில்سِرٰجًاசூரியனையும்وَّقَمَرًاசந்திரனையும்مُّنِيْرًا ‏ஒளிரும்
தBபாரகல் லதீ ஜ'அல Fபிஸ் ஸமா'இ Bபுரூஜ(ன்)வ் வ ஜ'அல Fபீஹா ஸிராஜ(ன்)வ் வ கமரன் முனீரா
முஹம்மது ஜான்
வான (மண்டல)த்தில் கோளங்கள் சுழன்று வரும் பாதைகளை உண்டாக்கி, அவற்றிடையே ஒரு விளக்கை (சூரியனை)யும்; ஒளிவான சந்திரனையும் உண்டாக்கினானே அவன் பாக்கியமுள்ளவன்.
அப்துல் ஹமீது பாகவி
(அந்த ரஹ்மான்) மிக்க பாக்கியமுடையவன். அவன்தான் வானத்தில் நட்சத்திரங்களை அமைத்து, அதில் (சூரிய) ஒளியையும், பிரகாசம் தரக்கூடிய சந்திரனையும் அமைத்தான்.
IFT
பெரும் பாக்கியம் உடையவனாவான்; விண்ணில் உறுதியான மண்டலங்கள் அமைத்து அதில் ஒளிவிளக்கையும் ஒளிர்கின்ற சந்திரனையும் பிரகாசிக்கச் செய்தவன்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வானத்தில் (கோளங்கள் சுழன்று வர) பெரும் தங்குமிடங்களை ஆக்கி, அதில் ஒரு விளக்கை (ப்போன்று சூரியனை)யும், பிரகாசிக்கக்கூடிய சந்திரனையும் அமைத்தானே அத்தகையவன் (-அந்த ரஹ்மான் மிக்க) பாக்கியமுடையவன்.
Saheeh International
Blessed is He who has placed in the sky great stars and placed therein a [burning] lamp and luminous moon.
وَهُوَ الَّذِیْ جَعَلَ الَّیْلَ وَالنَّهَارَ خِلْفَةً لِّمَنْ اَرَادَ اَنْ یَّذَّكَّرَ اَوْ اَرَادَ شُكُوْرًا ۟
وَهُوَ الَّذِىْஅவன்தான்جَعَلَஅமைத்தான்الَّيْلَஇரவையும்وَالنَّهَارَபகலையும்خِلْفَةًபகரமாகلِّمَنْ اَرَادَநாடுபவருக்குاَنْ يَّذَّكَّرَநல்லறிவு பெறاَوْஅல்லதுاَرَادَநாடினார்شُكُوْرًا‏நன்றிசெய்ய
வ ஹுவல் லதீ ஜ'அலல் லய்ல வன்னஹார கில்Fபதன் லிமன் அராத 'அ(ன்)ய் யத்தக்கர அவ் அராதா ஷுகூரா
முஹம்மது ஜான்
இன்னும் சிந்திக்க விரும்புபவருக்கு, அல்லது நன்றி செலுத்த விரும்புபவருக்கு அவன்தான் இரவையும், பகலையும் அடுத்தடுத்து வருமாறு ஆக்கினான்.
அப்துல் ஹமீது பாகவி
அவன்தான் இரவையும், பகலையும் மாறி மாறி வரும்படி செய்திருக்கிறான். (இதைக் கொண்டு) எவர்கள் நல்லுணர்ச்சி பெற்று, அவனுக்கு நன்றி செலுத்த விரும்புகிறார்களோ அவர்களுக்காக (இதைக் கூறுகிறான்).
IFT
அவனே, இரவையும் பகலையும் ஒன்று மற்றொன்றைத் தொடர்ந்து வரக்கூடியதாக அமைத்தான்படிப்பினை பெற நாடும் அல்லது நன்றியுடையவராக இருக்க விரும்பும் ஒவ்வொரு மனிதனுக்காகவும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் அவன் எத்தகையவனென்றால், (அவனது பேராற்றலை) நினைவு கூர நாடியவர்களுக்கு, அல்லது (அவனுக்கு) நன்றி செலுத்த நாடியவர்களுக்கு இரவையும் பகலையும் ஒன்றன் பின் ஒன்றாக (மாறி மாறி) வருமாறு ஆக்கினான்.
Saheeh International
And it is He who has made the night and the day in succession for whoever desires to remember or desires gratitude.
وَعِبَادُ الرَّحْمٰنِ الَّذِیْنَ یَمْشُوْنَ عَلَی الْاَرْضِ هَوْنًا وَّاِذَا خَاطَبَهُمُ الْجٰهِلُوْنَ قَالُوْا سَلٰمًا ۟
وَعِبَادُஅடியார்கள்الرَّحْمٰنِபேரருளாளனுடையالَّذِيْنَஎவர்கள்يَمْشُوْنَநடப்பார்கள்عَلَى الْاَرْضِபூமியில்هَوْنًاமென்மையாகوَّاِذَا خَاطَبَهُمُஇன்னும் அவர்களிடம் பேசினால்الْجٰهِلُوْنَஅறிவீனர்கள்قَالُوْاகூறி விடுவார்கள்سَلٰمًا‏ஸலாம்
வ 'இBபாதுர் ரஹ்மானில் லதீன யம்ஷூன 'அலல் அர்ளி ஹவ்ன(ன்)வ் வ இதா காத Bபஹுமுல் ஜாஹிலூன காலூ ஸலாமா
முஹம்மது ஜான்
இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள்; மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதா)ட முற்பட்டால் “ஸலாம்” (சாந்தியுண்டாகட்டும் என்று) சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ரஹ்மானுடைய அடியார்கள்: பூமியில் (அடக்கமாகவும்) பணிவாகவும் நடப்பார்கள். மூடர்கள் அவர்களுடன் தர்க்கிக்க முற்பட்டால் ‘ஸலாம்' கூறி (அவர்களை விட்டு விலகி) விடுவார்கள்.
IFT
மேலும், ரஹ்மானின் (உண்மையான) அடியார்கள் எத்தகையவர்களெனில், அவர்கள் பூமியில் பணிவோடு நடப்பார்கள்; அறிவீனர்கள் அவர்களுடன் முறைகேடாக உரையாடினால், “உங்களுக்கு ஸலாம்சாந்தி உண்டாகட்டும்” என்று கூறிவிடுவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அர்ரஹ்மானுடைய அடியார்கள் எத்தகையோரெனில், அவர்கள் பூமியில் பணிவாக நடப்பார்கள், மூடர்கள் அவர்களுடன் (வேண்டாதவற்றைப்) பேச முற்பட்டால், “ஸலாமுன்” (சாந்தி உண்டாகட்டும்) என்று கூறி (அவர்களைவிட்டு விலகி) விடுவார்கள்.
Saheeh International
And the servants of the Most Merciful are those who walk upon the earth easily, and when the ignorant address them [harshly], they say [words of] peace,
وَالَّذِیْنَ یَبِیْتُوْنَ لِرَبِّهِمْ سُجَّدًا وَّقِیَامًا ۟
وَالَّذِيْنَஎவர்கள்يَبِيْتُوْنَஇரவு கழிப்பார்கள்لِرَبِّهِمْதங்கள் இறைவனுக்குسُجَّدًاசிரம் பணிந்தவர்களாகوَّقِيَامًا‏நின்றவர்களாக
வல்லதீன யBபீதூன லி ரBப்Bபிஹிம் ஸுஜ்ஜத(ன்)வ் வ கியாமா
முஹம்மது ஜான்
இன்னும், அவர்கள் தங்கள் இறைவனை ஸஜ்தா செய்தவர்களாகவும், நின்றவர்களாகவும் வழிபாடு செய்து இரவிலிருப்பார்களே அவர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் தங்கள் இறைவனை, நின்றவர்களாகவும் சிரம் பணிந்தவர்களாகவும் இரவெல்லாம் வணங்குவார்கள்.
IFT
மேலும், அவர்கள் தங்கள் இறைவனின் திருமுன் ஸுஜூது செய்தும் நின்றும் வணங்கியவாறு இரவைக் கழிப்பார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அவர்கள் எத்தகையோரெனில், தங்கள் இரட்சகனை சிரம்பணிந்தவர்களாக (ஸஜ்தா செய்தவர்களாக)வும், நின்றவர்களாகவும் (அல்லாஹ்வின் வழிபாட்டில்) இரவைக் கழிப்பார்கள்.
Saheeh International
And those who spend [part of] the night to their Lord prostrating and standing [in prayer]
وَالَّذِیْنَ یَقُوْلُوْنَ رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ ۖۗ اِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا ۟ۗۖ
وَالَّذِيْنَ يَقُوْلُوْنَஇன்னும் அவர்கள் கூறுவார்கள்رَبَّنَاஎங்கள் இறைவா!اصْرِفْதிருப்பி விடுعَنَّاஎங்களை விட்டுعَذَابَதண்டனையைجَهَـنَّمَநரகமுடையۖ  اِنَّநிச்சயமாகعَذَابَهَاஅதனுடைய தண்டனைكَانَஇருக்கிறதுغَرَامًا ۖ ‏நீங்காத ஒன்றாக
வல்லதீன யகூலூன ரBப்Bபனஸ் ரிFப் 'அன்னா 'அதாBப ஜஹன்னம இன்ன 'அதாBபஹா கான கராமா
முஹம்மது ஜான்
“எங்கள் இறைவனே! எங்களைவிட்டும் நரகத்தின் வேதனையைத் திருப்புவாயாக; நிச்சயமாக அதன் வேதனை நிரந்தரமானதாகும்” என்று கூறுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் “எங்கள் இறைவனே! நரகத்தின் வேதனையை எங்களை விட்டு நீ தடுத்துக் கொள்வாயாக! ஏனென்றால், அதன் வேதனையானது நிச்சயமாக நிலையான துன்பமாகும்'' என்று பிரார்த்தனை செய்வார்கள்.
IFT
மேலும், அவர்கள் இறைஞ்சுவார்கள்: “எங்கள் இறைவனே! நரக வேதனையை எங்களைவிட்டு அகற்றுவாயாக! அதன் வேதனையோ ஓயாது தொல்லை தரக்கூடியதாக இருக்கின்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அவர்கள் எத்தகையோரெனில், “எங்கள் இரட்சகனே! நரகத்தின் வேதனையை எங்களை விட்டும் நீர் திருப்பிவிடுவாயாக! ஏனென்றால்,) நிச்சயமாக அதன் வேதனை நிலையானதாகும், என்று (பிரார்த்தனை செய்து) கூறுவார்கள்.
Saheeh International
And those who say, "Our Lord, avert from us the punishment of Hell. Indeed, its punishment is ever adhering;
اِنَّهَا سَآءَتْ مُسْتَقَرًّا وَّمُقَامًا ۟
اِنَّهَاநிச்சயமாக அதுسَآءَتْமிக கெட்டதுمُسْتَقَرًّاநிரந்தரமானதுوَّمُقَامًا‏தங்குமிடத்தாலும்
இன்னஹா ஸா'அத் முஸ்தகர்ர(ன்)வ் வ முகாமா
முஹம்மது ஜான்
நிச்சயமாக அது வாழ்வதற்கும் வசிப்பதற்கும் மிகக் கெட்ட இடமாகும்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘ சிறிது நேரமோ அல்லது எப்பொழுதுமோ தங்குவதற்கும் அது மிகக் கெட்ட இடமாகும் (ஆகவே, அதில் இருந்து எங்களை நீ பாதுகாத்துக்கொள்'' என்று பிரார்த்திப்பார்கள்).
IFT
திண்ணமாக, நரகம் தீய தங்குமிடமாகவும் மிகவும் மோசமான இடமாகவும் இருக்கின்றது!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நிச்சயமாக அது நிலையாகத் தங்குமிடத்தாலும், சிறிது நேரம் தங்குமிடத்தாலும் மிகக்கெட்டது.
Saheeh International
Indeed, it is evil as a settlement and residence."
وَالَّذِیْنَ اِذَاۤ اَنْفَقُوْا لَمْ یُسْرِفُوْا وَلَمْ یَقْتُرُوْا وَكَانَ بَیْنَ ذٰلِكَ قَوَامًا ۟
وَالَّذِيْنَ اِذَاۤ اَنْفَقُوْاஅவர்கள் செலவு செய்தால்لَمْ يُسْرِفُوْاவரம்பு மீறமாட்டார்கள்وَلَمْ يَقْتُرُوْاஇன்னும் கருமித்தனமும் காட்ட மாட்டார்கள்وَكَانَஇருக்கும்بَيْنَமத்தியில்ذٰلِكَஅதற்குقَوَامًا‏நடுநிலையாக
வல்லதீன இதா அன்Fபகூ லம் யுஸ்ரிFபூ வ லம் யக்துரூ வ கான Bபய்ன தாலிக கவாமா
முஹம்மது ஜான்
இன்னும், அவர்கள் செலவு செய்தால் வீண் விரயம் செய்யமாட்டார்கள்; (உலோபித்தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள் - எனினும், இரண்டுக்கும் மத்திய நிலையாக இருப்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் தானம் கொடுத்தால் அளவு கடந்தும் கொடுத்துவிட மாட்டார்கள்; கஞ்சத்தனமும் செய்யமாட்டார்கள். இதற்கு மத்திய தரத்தில் கொடுப்பார்கள்.
IFT
மேலும், அவர்கள் செலவு செய்யும்போது வீண்விரயமும் கஞ்சத்தனமும் செய்வதில்லை. மாறாக, அவர்களுடைய செலவுகள் இந்த மிதமிஞ்சிய இரு நிலைகளுக்கிடையில் மிதமானதாக இருக்கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அவர்கள் எத்தகையோரெனில், அவர்கள் செலவு செய்தால், வீண் விரயம் செய்யமாட்டார்கள், (ஒரேயடியாக) சுருக்கிக் கொள்ளவும் மாட்டார்கள், அ(வ்வாறு செலவு செய்வதான)து அவ்விரண்டு நிலைகளுக்கும் மத்தியிலிருக்கும்.
Saheeh International
And [they are] those who, when they spend, do so not excessively or sparingly but are ever, between that, [justly] moderate
وَالَّذِیْنَ لَا یَدْعُوْنَ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ وَلَا یَقْتُلُوْنَ النَّفْسَ الَّتِیْ حَرَّمَ اللّٰهُ اِلَّا بِالْحَقِّ وَلَا یَزْنُوْنَ ۚ وَمَنْ یَّفْعَلْ ذٰلِكَ یَلْقَ اَثَامًا ۟ۙ
وَالَّذِيْنَ لَا يَدْعُوْنَஅவர்கள் அழைக்க மாட்டார்கள்مَعَ اللّٰهِஅல்லாஹ்வுடன்اِلٰهًاஒரு கடவுளைاٰخَرَவேறுوَلَا يَقْتُلُوْنَஇன்னும் கொல்ல மாட்டார்கள்النَّفْسَஉயிரைالَّتِىْஎதுحَرَّمَதடுத்தான்اللّٰهُஅல்லாஹ்اِلَّاதவிரبِالْحَـقِّஉரிமையைக் கொண்டேوَلَا يَزْنُوْنَ‌ ۚஇன்னும் விபசாரம் செய்யமாட்டார்கள்وَمَنْ يَّفْعَلْயார் செய்வாரோذٰ لِكَஇவற்றைيَلْقَஅவர் சந்திப்பார்اَثَامًا ۙ‏தண்டனையை
வல்லதீன லா யத்'ஊன ம'அல் லாஹி இலாஹன் ஆகர வலா யக்துலூனன் னFப்ஸல் லதீ ஹர்ரமல் லாஹு இல்லா Bபில்ஹக்கி வலா யZஜ்னூன்; வ மய் யFப்'அல் தாலிக யல்க 'அதாமா
முஹம்மது ஜான்
அன்றியும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்கமாட்டார்கள்; இன்னும், அல்லாஹ்வினால் விலக்கப் பட்ட எந்த மனிதரையும் அவர்கள் நியாயமின்றிக் கொல்லமாட்டார்கள், விபசாரமும் செய்ய மாட்டார்கள் - ஆகவே, எவர் இவற்றைச் செய்கிறாரோ, அவர் தண்டனை அடைய நேரிடும்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் அல்லாஹ்வுடன் வேறொரு கடவுளை அழைக்க மாட்டார்கள். (கொலை செய்யக் கூடாதென்று) அல்லாஹ் தடுத்திருக்கும் எம்மனிதனையும் அவர்கள் நியாயமின்றிக் கொலை செய்ய மாட்டார்கள்; விபசாரமும் செய்ய மாட்டார்கள். ஆகவே, எவனேனும் இத்தகைய தீய காரியங்களைச் செய்ய முற்பட்டால், அவன் (அதற்குரிய) தண்டனையை அடைய வேண்டியதுதான்.
IFT
மேலும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைப்பதில்லை. மேலும், (கொலை செய்யக்கூடாது) என்று அல்லாஹ்வினால் தடை செய்யப்பட்ட எந்த உயிரையும் நியாயமின்றி அவர்கள் கொலை செய்வதில்லை; மேலும், விபச்சாரமும் செய்வதில்லை. யாரேனும் இச்செயல்களைச் செய்தால் அவன் தன் பாவத்திற்கான கூலியைப் பெற்றே தீருவான்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் அவர்கள் எத்தகையோரெனில், அல்லாஹ்வுடன் வேறொரு நாயனை (வணக்கத்திற்குரியவனாக பிரார்த்தித்து) அழைக்கமாட்டார்கள், அல்லாஹ் தடுத்திருக்கும் எந்த உயிரையும் அவர்கள் உரிமையின்றி கொலை செய்துவிடவுமாட்டார்கள், அவர்கள் விபச்சாரமும் செய்யமாட்டார்கள், எவரேனும் இவைகளைச் செய்ய முற்பட்டால், அவர் (அதற்குரிய) தண்டனையைச் சந்திப்பார்.
Saheeh International
And those who do not invoke with Allah another deity or kill the soul which Allah has forbidden [to be killed], except by right, and do not commit unlawful sexual intercourse. And whoever should do that will meet a penalty.
یُّضٰعَفْ لَهُ الْعَذَابُ یَوْمَ الْقِیٰمَةِ وَیَخْلُدْ فِیْهٖ مُهَانًا ۟ۗۖ
يُضٰعَفْபன்மடங்காக ஆக்கப்படும்لَهُஅவருக்குالْعَذَابُஅந்த தண்டனைيَوْمَ الْقِيٰمَةِமறுமை நாளில்وَيَخْلُدْநிரந்தரமாக தங்கி விடுவார்فِيْهٖஅதில்مُهَانًا ۖ ‏இழிவுபடுத்தப்பட்டவராக
யுளா'அFப் லஹுல் 'அதாBபு யவ்மல் கியாமதி வ யக்லுத் Fபீஹீ முஹானா
முஹம்மது ஜான்
கியாம நாளில் அவருடைய வேதனை இரட்டிப்பாக்கப்படும்; இன்னும் அதில் இழிவாக்கப்பட்டவராக என்றென்றும் தங்கிவிடுவர்.
அப்துல் ஹமீது பாகவி
மறுமை நாளிலோ அவனுடைய வேதனை இரட்டிப்பாக ஆக்கப்பட்டு இழிவுபட்டவனாக அந்த வேதனையில் என்றென்றும் தங்கிவிடுவான்.
IFT
மறுமைநாளில் அவனுக்கு இரட்டிப்பு தண்டனை அளிக்கப்படும். மேலும், அதிலேயே இழிவுக்குரியவனாய் என்றென்றும் அவன் வீழ்ந்து கிடப்பான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மறுமை நாளில் அவருக்கு வேதனை இரட்டிப்பாக்கப்படும்; மேலும் இழிவுப்படுத்தப்பட்டவராக அதில் என்றென்றும் தங்கிவிடுவார்.
Saheeh International
Multiplied for him is the punishment on the Day of Resurrection, and he will abide therein humiliated -
اِلَّا مَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ عَمَلًا صَالِحًا فَاُولٰٓىِٕكَ یُبَدِّلُ اللّٰهُ سَیِّاٰتِهِمْ حَسَنٰتٍ ؕ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِیْمًا ۟
اِلَّاஎனினும்,مَنْயார்تَابَதிருந்தினார்(கள்)وَاٰمَنَஇன்னும் நம்பிக்கை கொண்டார்(கள்)وَعَمِلَஇன்னும் செய்தார்عَمَلًاசெயலைصَالِحًـاநன்மையானفَاُولٰٓٮِٕكَஅவர்கள்يُبَدِّلُமாற்றி விடுவான்اللّٰهُஅல்லாஹ்سَيِّاٰتِهِمْஅவர்களுடைய தீய செயல்களைحَسَنٰتٍ‌ ؕநல்ல செயல்களாகوَكَانَஇருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்غَفُوْرًاமகா மன்னிப்பாளனாகرَّحِيْمًا‏பெரும் கருணையாளனாக
இல்லா மன் தாBப வ 'ஆமன வ 'அமில 'அமலன் ஸாலிஹன் Fப உலா'இக யுBபத் திலுல் லாஹு ஸய்யி ஆதிஹிம் ஹஸனாத்; வ கானல் லாஹு கFபூரர் ரஹீமா
முஹம்மது ஜான்
ஆனால் (அவர்களில் எவர்) தவ்பா செய்து ஈமானுங் கொண்டு, ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கிறார்களோ - அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றிவிடுவான். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
ஆயினும், (அவர்களில்) எவர்கள் பாவத்திலிருந்து விலகி (மன்னிப்புக் கோரி) நம்பிக்கைகொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ, அத்தகையவர்கள் (முன்னர் செய்துவிட்ட) பாவங்களை அல்லாஹ் (மன்னிப்பது மட்டுமல்ல; அவற்றை) நன்மைகளாகவும் மாற்றிவிடுகிறான். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் மகா கருணையுடையவனாகவும் இருக்கிறான்.
IFT
ஆனால் (இந்தப் பாவங்களுக்குப் பின்னர்) எவர் மன்னிப்புக்கோரி, மேலும், நம்பிக்கை கொண்டு நற்செயலும் புரியத்தொடங்கி விட்டிருக்கின்றாரோ அவரைத் தவிர! இத்தகையோரின் தீமைகளை அல்லாஹ் நன்மைகளாக மாற்றி விடுவான். மேலும், அவன் பெரும் மன்னிப்பாளனும் கிருபையாளனுமாவான்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இப்பாவங்களிலிருந்து) எவர் தவ்பாச்செய்து, விசுவாசமும் கொண்டு நற்செயலும் செய்தாரோ அவரைத்தவிர, எனவே அத்தகையோர்-அவர்களுடைய தீமைகளை நன்மைகளாக அல்லாஹ் மாற்றிவிடுவான், மேலும் அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக, மிகக் கிருபையுடையவனாக இருக்கிறான்.
Saheeh International
Except for those who repent, believe and do righteous work. For them Allah will replace their evil deeds with good. And ever is Allah Forgiving and Merciful.
وَمَنْ تَابَ وَعَمِلَ صَالِحًا فَاِنَّهٗ یَتُوْبُ اِلَی اللّٰهِ مَتَابًا ۟
وَمَنْயார்تَابَதிருந்துவார்وَعَمِلَஇன்னும் செய்வார்صَالِحًـاநன்மைفَاِنَّهٗநிச்சயமாக அவர்يَتُوْبُதிரும்பி விடுகிறார்اِلَى اللّٰهِஅல்லாஹ்வின் பக்கம்مَتَابًا‏திரும்புதல்-முற்றிலும்
வ மன் தாBப வ 'அமில ஸாலிஹன் Fப இன்னஹூ யதூBபு இலல் லாஹி மதாBபா
முஹம்மது ஜான்
இன்னும், எவர் தவ்பா செய்து ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கின்றாரோ, அவர் நிச்சயமாக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடியவராவார்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, எவர்கள் கைசேதப்பட்டு (பாவத்திலிருந்து) விலகி மன்னிப்புக் கோருவதுடன், நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்கள், நிச்சயமாக முற்றிலும் அல்லாஹ்விடமே திரும்பிவிடுகின்றனர்.
IFT
எவர் பாவமன்னிப்புக் கோரி, நற்செயலை மேற்கொள்கின்றாரோ அவர் அல்லாஹ்வின் பக்கம் எவ்வாறு திரும்பி வர வேண்டுமோ அவ்வாறு திரும்பி வருகின்றார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், எவர் தவ்பாச் செய்து, நற்கருமங்களையும் செய்கின்றாரோ அவர், நிச்சயமாக முற்றிலும் அல்லாஹ்வின்பாலே திரும்பிவிடுகின்றார்.
Saheeh International
And he who repents and does righteousness does indeed turn to Allah with [accepted] repentance.
وَالَّذِیْنَ لَا یَشْهَدُوْنَ الزُّوْرَ ۙ وَاِذَا مَرُّوْا بِاللَّغْوِ مَرُّوْا كِرَامًا ۟
وَالَّذِيْنَ لَا يَشْهَدُوْنَஇன்னும் அவர்கள் ஆஜராக மாட்டார்கள்الزُّوْرَۙபொய்யான செயலுக்குوَ اِذَا مَرُّوْاஇன்னும் இவர்கள் கடந்து சென்றால்بِاللَّغْوِவீணான செயலுக்குمَرُّوْاகடந்து சென்று விடுவார்கள்كِرَامًا‏கண்ணியவான்களாக
வல்லதீன லா யஷ் ஹதூனZஜ் Zஜூர வ இதா மர்ரூ Bபில்லக்வி மர்ரூ கிராமா
முஹம்மது ஜான்
அன்றியும், அவர்கள் பொய் சாட்சி சொல்லமாட்டார்கள்; மேலும், அவர்கள் வீணான காரிய(ம் நடக்கும் இட)த்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவராக (ஒதுங்கிச்) சென்றுவிடுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
இன்னும், எவர்கள் பொய் சாட்சி சொல்லாமலும் (வீணான காரியம் நடைபெறும் இடத்திற்குச் செல்லாமலும்) ஒருக்கால் (அத்தகைய இடத்திற்குச்) செல்லும்படி ஏற்பட்டு விட்டபோதிலும் (அதில் சம்பந்தப்படாது) கண்ணியமான முறையில் (அதைக் கடந்து) சென்று விடுகிறார்களோ அவர்களும்,
IFT
மேலும் (ரஹ்மானின் உண்மையான அடியார்கள் யாரெனில்) அவர்கள் பொய்மைக்கு சாட்சியாக இருப்பதில்லை. அவர்கள் ஏதேனும் வீணானவற்றின் அருகில் செல்ல நேர்ந்தால் கண்ணியமானவர்களாய்க் கடந்து சென்றுவிடுவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அவர்கள் எத்தகையோரென்றால், பொய்சாட்சி சொல்ல மாட்டார்கள், (ஒருகால்) வீணான காரிய(ம் நடக்கும் இட)த்தின் பக்கம் அவர்கள் சென்றுவிட்டால், கண்ணியமானவர்களாக (அதனைவிட்டும் ஒதுங்கிச்) சென்று விடுவார்கள்.
Saheeh International
And [they are] those who do not testify to falsehood, and when they pass near ill speech, they pass by with dignity.
وَالَّذِیْنَ اِذَا ذُكِّرُوْا بِاٰیٰتِ رَبِّهِمْ لَمْ یَخِرُّوْا عَلَیْهَا صُمًّا وَّعُمْیَانًا ۟
وَالَّذِيْنَ اِذَا ذُكِّرُوْاஇன்னும் எவர்கள்/அவர்கள் அறிவுறுத்தப்பட்டால்بِاٰيٰتِவசனங்களைக் கொண்டுرَبِّهِمْதங்கள் இறைவனின்لَمْ يَخِرُّوْاவிழ மாட்டார்கள்عَلَيْهَاஅவற்றின் மீதுصُمًّاசெவிடர்களாகوَّعُمْيَانًا‏இன்னும் குருடர்களாக
வல்லதீன இதா துக்கிரூ Bபி ஆயாதி ரBப்Bபிஹிம் லம் யகிர்ரூ 'அலய்ஹா ஸும்ம(ன்)வ் வ'உம்யானா
முஹம்மது ஜான்
இன்னும் அவர்கள், தங்கள் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால், செவிடர்களையும், குருடர்களையும் போல் அவற்றின் மீது விழமாட்டார்கள். (சிந்தனையுடன் செவி சாய்ப்பார்கள்.)
அப்துல் ஹமீது பாகவி
இன்னும் எவர்கள் தங்கள் இறைவனின் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் குருடர்களைப் போலும் செவிடர்களைப் போலும் அதன் மீது (அடித்து) விழாமல்; (அதை முற்றிலும் நன்குணர்ந்து கொள்வதுடன் அதன்படி செயல்படுகிறார்களோ அவர்களும்)
IFT
மேலும், தம் இறைவனின் வசனங்களை ஓதிக்காட்டி அவர்களுக்கு நல்லுரை வழங்கப்படும்போது அவற்றைக் குறித்து குருடர்களாயும், செவிடர்களாயும் இருப்பதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் இரட்சகனின் வசனங்களைக் கொண்டு உபதேசிக்கப்பட்டால் செவிடர்களாகவும், குருடர்களாகவும் அதன் மீது விழமாட்டார்கள் (அதனை நன்குணர்ந்து அதன்படி நடப்பார்கள்).
Saheeh International
And those who, when reminded of the verses of their Lord, do not fall upon them deaf and blind.
وَالَّذِیْنَ یَقُوْلُوْنَ رَبَّنَا هَبْ لَنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّیّٰتِنَا قُرَّةَ اَعْیُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِیْنَ اِمَامًا ۟
وَالَّذِيْنَ يَقُوْلُوْنَஅவர்கள் கூறுவார்கள்رَبَّنَاஎங்கள் இறைவா!هَبْதருவாயாக!لَـنَاஎங்களுக்குمِنْ اَزْوَاجِنَاஎங்கள் மனைவிகள் மூலமும்وَذُرِّيّٰتِنَاஎங்கள் சந்ததிகள் மூலமும்قُرَّةَகுளிர்ச்சியைاَعْيُنٍகண்களுக்குوَّاجْعَلْنَاஎங்களை ஆக்குவாயாக!لِلْمُتَّقِيْنَஇறையச்சமுள்ளவர்களுக்குاِمَامًا‏இமாம்களாக
வல்லதீன யகூலூன ரBப்Bபனா ஹBப் லனா மின் அZஜ்வாஜினா வ துர்ரியாதினா குர்ரத அஃயுனி(ன்)வ் வஜ் 'அல்னா லில்முத்தகீன இமாமா
முஹம்மது ஜான்
மேலும் அவர்கள்: “எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
மேலும், எவர்கள் ‘‘எங்கள் இறைவனே! எங்கள் மனைவிகளையும், எங்கள் மக்களையும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியாக்கி வைத்தருள்வாயாக! இறையச்சமுள்ளவர்களுக்கு வழிகாட்டியாகவும் எங்களை நீ ஆக்குவாயாக!'' என்று பிரார்த்திப்பார்களோ அவர்களும்;
IFT
மேலும், அவர்கள் இறைஞ்சிய வண்ணம் இருப்பார்கள்: “எங்கள் இறைவனே! எங்கள் மனைவிமார்களையும், எங்கள் குழந்தைகளையும், எங்கள் கண்களுக்குக் குளிர்ச்சி அளிக்கக்கூடியவர்களாய் விளங்கச் செய்வாயாக! மேலும், எங்களை இறையச்சமுடையோருக்குத் தலைவர்களாய் திகழச் செய்வாயாக!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவர்கள் எத்தகையோரென்றால் “எங்கள் இரட்சகனே! எங்கள் மனைவியர்களிடமிருந்தும், எங்கள் சந்ததிகளிலிருந்தும் எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியைத் தந்தருள்வாயாக! அன்றியும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை (நல்வழியில் நின்று அதன்பால் அழைக்கும்) வழிகாட்டியாகவும் நீ ஆக்குவாயாக” என்று (பிரார்த்தித்துக்) கூறுவார்கள்.
Saheeh International
And those who say, "Our Lord, grant us from among our wives and offspring comfort to our eyes and make us a leader [i.e., example] for the righteous."
اُولٰٓىِٕكَ یُجْزَوْنَ الْغُرْفَةَ بِمَا صَبَرُوْا وَیُلَقَّوْنَ فِیْهَا تَحِیَّةً وَّسَلٰمًا ۟ۙ
اُولٰٓٮِٕكَஇவர்கள்يُجْزَوْنَகூலியாக கொடுக்கப்படுவார்கள்الْغُرْفَةَஅறையைبِمَا صَبَرُوْاஅவர்கள் பொறுமையாக இருந்ததால்وَيُلَقَّوْنَசந்திக்கப்படுவார்கள்فِيْهَاஅதில்تَحِيَّةًமுகமனைக்கொண்டும்وَّسَلٰمًا ۙ‏ஸலாமைக் கொண்டும்
உலா'இக யுஜ்Zஜவ்னல் குர்Fபத Bபிமா ஸBபரூ வ யுலக்கவ்ன Fபீஹா தஹிய்யத(ன்)வ் வ ஸலாமா
முஹம்மது ஜான்
பொறுமையுடனிருந்த காரணத்தால், இவர்களுக்கு(ச் சுவனபதியில்) உன்னதமான மாளிகை நற்கூலியாக அளிக்கப்படும்; வாழ்த்தும், ஸலாமும் கொண்டு அவர்கள் எதிர்கொண்டழைக்கப் படுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகிய இத்தகையவர்களுக்கு, அவர்கள் (பல நல்ல காரியங்களைச் செய்திருப்பதுடன் அவற்றைச் செய்யும்போது ஏற்பட்ட) சிரமங்களைச் சகித்துக் கொண்டதன் காரணமாக உயர்ந்த மாளிகைகள் (மறுமையில்) கொடுக்கப்படும். ‘‘ஸலாம் (உண்டாவதாக)'' என்று போற்றி அதில் அவர்கள் வரவேற்கப்படுவார்கள்.
IFT
இத்தகையோரே தங்களுடைய பொறுமையின் பலனாக உயர்ந்த மாளிகைகளைப் பெறுவார்கள். மரியாதையுடனும் வாழ்த்துக்களுடனும் அவர்கள் அங்கு வரவேற்கப்படுவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அத்தகையோர் - அவர்கள் கஷ்டங்களைப் பொறுத்துக்கொண்டதன் காரணமாக, உயர்ந்த மாளிகையை (மறுமையில்) அவர்கள் கூலியாகக் கொடுக்கப்படுவார்கள், காணிக்கையாலும், சாந்தியாலும் அதில் வரவேற்கப்படுவார்கள்.
Saheeh International
Those will be awarded the Chamber for what they patiently endured, and they will be received therein with greetings and [words of] peace,
خٰلِدِیْنَ فِیْهَا ؕ حَسُنَتْ مُسْتَقَرًّا وَّمُقَامًا ۟
خٰلِدِيْنَஅவர்கள் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்فِيْهَا‌ ؕஅதில்حَسُنَتْஅது மிக அழகானதுمُسْتَقَرًّاநிரந்தரமான தங்குமிடத்தாலும்وَّمُقَامًا‏தற்காலிகமான தங்குமிடத்தாலும்
காலிதீன Fபீஹா; ஹஸுனத் முஸ்தகர்ர(ன்)வ் வ முகாமா
முஹம்மது ஜான்
அதில் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள்; அது வாழ்வதற்கும் வசிப்பதற்கும் அழகிய இடமாகும்.
அப்துல் ஹமீது பாகவி
என்றென்றும் அதில் தங்கிவிடுவார்கள். சிறிது நேரம் தங்குவதாயினும் சரி, என்றென்றும் தங்குவதாயினும் சரி, அது மிக்க (நல்ல) அழகான தங்குமிடம் ஆகும்.
IFT
அவர்கள் என்றென்றும் அங்குத் தங்கி வாழ்வார்கள். எவ்வளவு அழகானதாக இருக்கின்றது அந்தத் தங்குமிடம்! எவ்வளவு உன்னதமாக இருக்கிறது அந்த ஓய்விடம்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அதில் (அவர்கள்) நிரந்தரமாக (த் தங்கி) இருப்பவர்கள், நிலையாகத் தங்குமிடத்தாலும், சிறிது நேரம் தங்குமிடத்தாலும் அது அழகானதாகிவிட்டது.
Saheeh International
Abiding eternally therein. Good is the settlement and residence.
قُلْ مَا یَعْبَؤُا بِكُمْ رَبِّیْ لَوْلَا دُعَآؤُكُمْ ۚ فَقَدْ كَذَّبْتُمْ فَسَوْفَ یَكُوْنُ لِزَامًا ۟۠
قُلْகூறுவீராக!مَا يَعْبَـؤُاஒரு பொருட்டாகவே கருதமாட்டான்بِكُمْஉங்களைرَبِّىْஎன் இறைவன்لَوْلَاஇல்லாதிருந்தால்دُعَآؤُபிரார்த்தனைكُمْ‌ۚஉங்கள்فَقَدْதிட்டமாகكَذَّبْتُمْநீங்கள் பொய்ப்பித்தீர்கள்فَسَوْفَ يَكُوْنُஇது கண்டிப்பாக இருக்கும்لِزَامًا‏உங்களை தொடரக்கூடியதாக
குல் மா யஃBப'உ Bபிகும் ரBப்Bபீ லவ் லா து'ஆ'உகும் Fபகத் கத்தBப்தும் Fபஸவ்Fப யகூனு லிZஜாமா
முஹம்மது ஜான்
(நபியே!) சொல்வீராக: “உங்களுடைய பிரார்த்தனை இல்லாவிட்டால், என்னுடைய இறைவன் உங்களைப் பொருட்படுத்தி இருக்க மாட்டான்; ஆனால் நீங்களோ (சத்தியத்தை) நிராகரித்துக் கொண்டே இருக்கிறீர்கள். எனவே, அதன் வேதனை பின்னர் உங்களைக் கண்டிப்பாகப் பிடித்தே தீரும்.”
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) கூறுவீராக: ‘‘ நீங்கள் என் இறைவனை(க் கெஞ்சிப்) பிரார்த்தனை செய்யாவிடில் (அதற்காக) அவன் உங்களைப் பொருட்படுத்தமாட்டான். ஏனென்றால், நீங்கள் (அவனுடைய வசனங்களை) நிச்சயமாக பொய்யாக்கிக் கொண்டே இருக்கிறீர்கள். ஆகவே, அதன் வேதனை (உங்களைக்) கண்டிப்பாகப் பிடித்தே தீரும்.
IFT
(நபியே!) மக்களிடம் கூறுங்கள்: “என்னுடைய இறைவனை நீங்கள் அழைக்கவில்லையென்றால், அவனுக்கு உங்களுடைய தேவைதான் என்ன? இப்போது நீங்கள் (இறைத்தூதைப்) பொய்யெனக் கூறிவிட்டீர்கள். தடுக்க முடியாத கடும் தண்டனையை, விரைவில் நீங்கள் பெறத்தான் போகிறீர்கள்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நீர் கூறுவீராக! “நீங்கள் (அல்லாஹ்வை) அழைத்துப் பிரார்த்திப்பது (மட்டும்) இல்லையெனில், என்னுடைய இரட்சகன் உங்களை பொருட்படுத்தியிருக்க மாட்டான், ஏனெனில் நீங்கள் (அவனுடைய வசனங்களைப்) பொய்ப்படுத்திவிட்டீர்கள், எனவே அ(தற்குரிய தண்டனையான)து கட்டாயமாக உங்களுக்கு உண்டாகும்.
Saheeh International
Say, "What would my Lord care for you if not for your supplication?" For you [disbelievers] have denied, so it [i.e., your denial] is going to be adherent.