كَمْஎத்தனையோاَهْلَـكْنَاநாம் அழித்தோம்مِنْ قَبْلِهِمْஇவர்களுக்கு முன்னர்مِّنْ قَرْنٍபல தலைமுறைفَنَادَوْاஅழைத்தனர்وَّلَاتَஅந்த நேரம் அல்லحِيْنَ مَنَاصٍதப்பித்து ஓடுவதற்குரிய நேரம்
கம் அஹ்லக்னா மின் கBப்லிஹிம் மின் கர்னின் Fபனாதவ் வ லாத ஹீன மனாஸ்
முஹம்மது ஜான்
இவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறைகளை நாம் அழித்திருக்கின்றோம்; அப்போது, அவர்கள் தப்பி ஓட வழியில்லாத நிலையில் (உதவி தேடிக்) கூக்குரலிட்டனர்.
அப்துல் ஹமீது பாகவி
இவர்களுக்கு முன்னர், (இவ்வாறு இருந்த) எத்தனையோ வகுப்பாரை நாம் அழித்திருக்கிறோம். (வேதனை வந்த சமயத்தில்) அவர்கள் எல்லோரும் உதவி தேடிக் கூச்சலிட்டார்கள். அது (வேதனையிலிருந்து) தப்பித்துக் கொள்ளக்கூடிய நேரமாய் இருக்கவில்லை.
IFT
இவர்களுக்கு முன் எத்தனையோ சமூகங்களை நாம் அழித்திருக்கின்றோம். (அவர்களுடைய தீயகதி வந்தபோது) அவர்கள் கூக்குரலிட்டார்கள். ஆயினும், அது தப்பிப்பதற்கான நேரமாய் இருக்கவில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இவர்களுக்கு முன்னர், எத்தனையோ தலைமுறையினரை நாம் அழித்திருகின்றோம், (வேதனை வந்த சமயத்தில்) அவர்கள் (உதவி தேடி) அழைத்தார்கள், (அது வேதனையிலிருந்து) தப்பித்துக்கொள்ளக்கூடிய நேரமாகவும் இருக்கவில்லை.
Saheeh International
How many a generation have We destroyed before them, and they [then] called out; but it was not a time for escape.
அன்றியும் தங்களிடமிருந்தே அச்சமூட்டி எச்சரிப்பவர் தங்களிடம் வந்ததைப் பற்றி ஆச்சரியமடைந்தனர்; “இவர் ஒரு சூனியக்காரப் பொய்யர்!” என்றும் காஃபிர்கள் கூறினர்.
அப்துல் ஹமீது பாகவி
(அவர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கக்கூடிய ஒரு தூதர் (ஆகிய நீர்) அவர்களி(ன் இனத்தி)லிருந்தே அவர்களிடம் வந்ததைப் பற்றி அவர்கள் ஆச்சரியப்பட்டு, ‘‘இவர் மிகப் பொய் சொல்லும் சூனியக்காரர்தான்'' என்று (உங்களைப் பற்றி) அந்த நிராகரிப்பாளர்கள் கூறுகின்றனர்.
IFT
அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் ஒருவர் இவர்களிலிருந்தே வந்துவிட்டார் என்பது குறித்து இவர்களுக்குப் பெரும்வியப்பு ஏற்பட்டது. நிராகரிப்பாளர்கள் கூறலாயினர்: “இவர் ஒரு சூனியக்காரர்; சுத்தப் பொய்யர்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும் (அவர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிப்பவர் (ஆகிய நீர்) அவர்களி(ன் இனத்தி)லிருந்து அவர்களிடம் வந்ததைப் பற்றி அவர்கள் ஆச்சரியப்பட்டனர்; ”இவர் பெரும் பொய்யரான சூனியக்காரர்” என்றும் (உம்மைப்பற்றி) நிராகரிப்போர் கூறினர்.
Saheeh International
And they wonder that there has come to them a warner [i.e., Prophet Muhammad (ﷺ] from among themselves. And the disbelievers say, "This is a magician and a liar.
“இவர் (எல்லாத்) தெய்வங்களையும் ஒரே நாயனாக ஆக்கிவிட்டாரா? நிச்சயமாக இது ஓர் ஆச்சரியமான விஷயமே! (என்றும் கூறினர்).
அப்துல் ஹமீது பாகவி
‘‘என்ன! இவர் (நம்) தெய்வங்கள் அனைத்தையும் (பொய்யெனக் கூறி, வணக்கத்திற்குரியவன்) ஒரே ஓர் இறைவன்தான் என்று ஆக்கிவிட்டாரா? மெய்யாகவே, இது ஓர் ஆச்சரியமான விஷயம்தான்'' (என்று கூறி,)
IFT
என்ன, இவர் அத்தனை கடவுளருக்கும் பகரமாக ஒரே கடவுள்தான் என்று ஆக்கிவிட்டாரா? இது மிகவும் வியப்புக்குரிய விஷயம்தான்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(என்ன!) இவர் (நம்முடைய வணக்கத்திற்குரிய) தெய்வங்களை (நிராகரித்து விட்டு) ஒரே ஒரு வணக்கதிற்குரியவனாக ஆக்கிவிட்டாரா? நிச்சயமாக இது ஓர் ஆச்சரியமான விஷயம்தான்” (என்றும் கூறினர்).
Saheeh International
Has he made the gods [only] one God? Indeed, this is a curious thing."
“(இவரை விட்டும் விலகிச்) செல்லுங்கள். உங்கள் தெய்வங்களை உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள். நிச்சயமாக இதில் (இவரது பிரச்சாரத்தில்) ஏதோ (சுயநலம்) நாடப்படுகிறது” என்று அவர்களின் தலைவர்கள் (கூறிச்) சென்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களிலுள்ள தலைவர்கள் (மற்றவர்களை நோக்கி, ‘‘இவரை விட்டு) நீங்கள் சென்றுவிடுங்கள். உங்கள் தெய்வங்களை ஆராதனை செய்வதில் நீங்கள் உறுதியாயிருங்கள். (உங்கள் தெய்வங்களைக் கைவிடும்படி கூறும்)இவ்விஷயத்தில் ஏதோ (ஒரு சுயநலம்தான்) கருதப்படுகிறது'' என்று கூறிக் கொண்டே சென்று விட்டனர்.
IFT
மேலும், சமுதாயத் தலைவர்கள் பின்வருமாறு கூறிக்கொண்டு வெளியேறிச் சென்றார்கள்: “செல்லுங்கள்; உங்களுடைய தெய்வங்களை வணங்குவதில் உறுதியாய் இருங்கள். திண்ணமாக, இவ்விஷயம் ஏதோ ஓர் உள்நோக்கத்துடன் கூறப்படுகின்றது;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களிலுள்ள தலைவர்கள், (மற்றவர்களிடம், “இவரை விட்டு உங்கள் வழியில்) நீங்கள் சென்றுவிடுங்கள், இன்னும், உங்கள் தெய்வங்களின் மீது நீங்கள் (உறுதியுடன்) பொறுமையாக இருங்கள். நிச்சயமாக, (உங்கள் தெய்வங்களைக் கைவிடும்படி கூறும்) இ(க் கூற்றான)து ஏதோ ஒன்றை (சுயநலத்தை கருத்தில் கொண்டு) நாடப்பட்டதாக உள்ளது” என்று (கூறிக்கொண்டே) சென்றுவிட்டனர்.
Saheeh International
And the eminent among them went forth, [saying], "Continue, and be patient over [the defense of] your gods. Indeed, this is a thing intended.
'அ-உன்Zஜில 'அலய்ஹித் திக்ரு மின் Bபய்னினா; Bபல் ஹும் Fபீ ஷக்கின் மின் திக்ரீ Bபல் லம்மா யதூகூ 'அதாBப்
முஹம்மது ஜான்
“நம்மில், இவர் பேரில்தான் நினைவுறுத்தும் நல்லுபதேசம் இறக்கப்பட்டு விட்டதோ?” (என்றும் கூறுகிறார்கள்.) அவ்வாறல்ல! அவர்கள் எனது போதனையில் சந்தேகத்தில் இருக்கின்றனர்; அவ்வாறல்ல! இன்னும் அவர்கள் என் வேதனையை அனுபவித்ததில்லை.
அப்துல் ஹமீது பாகவி
‘‘நம்மைவிட்டு இவர் பேரில் மட்டும்தானா (வேத) உபதேசம் இறக்கப்பட்டு விட்டது'' (என்றும் கூறினார்கள்). அவ்வாறன்று. உண்மையில் இவர்கள் நம் எச்சரிக்கையைப் பற்றியே பெரும் சந்தேகத்தில் இருக்கின்றனர். மேலும், இதுவரை அவர்கள் நம் வேதனையைச் சுவைத்துப் பார்க்கவே இல்லை.
IFT
நம்மிடையே, அல்லாஹ்வுடைய அறிவுரை இறக்கி வைக்கப்படுவதற்கு இவர் ஒருவர் மட்டும்தான் இருந்தாரா, என்ன?” உண்மை என்னவெனில், இவர்கள் என்னுடைய அறிவுரையின் மீது சந்தேகம் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறெல்லாம் இவர்கள் பேசுவதற்குக் காரணம், இவர்கள் நான் தரும் வேதனையைச் சுவைக்கவில்லை என்பதுதான்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நம்மவர்களுக்கிடையில் இவர் மீது (வேத) உபதேசம் இறக்கப்பட்டுவிட்டதா” (என்றும் கூறினார்கள்.) அவ்வாறன்று! உண்மையில் இவர்கள் என்னுடைய (வேத) உபதேசத்தைப் பற்றி சந்தேகத்திலிருகின்றனர். இல்லை, இதுவரையில் அவர்கள் என்னுடைய வேதனையைச் சுவைத்(துப்பார்த்)ததில்லை.
Saheeh International
Has the message been revealed to him out of [all of] us?" Rather, they are in doubt about My message. Rather, they have not yet tasted My punishment.
அல்லது, யாவரையும் மிகைத்தவனும் மிகப்பெருங் கொடையாளியுமாகிய உமது இறைவனின் கிருபைக் கருவூலங்கள் - அவர்களிடம் இருக்கின்றனவா,
அப்துல் ஹமீது பாகவி
(வேத உபதேசம் தங்கள் மீது இறங்க வேண்டுமென்று இவர்கள் கூறுவதற்கு) அனைவரையும் மிகைத்த பெரும் கொடையாளியாகிய, உமது இறைவனின் அருள் பொக்கிஷம் அவர்களிடம்தான் இருக்கிறதா?
IFT
என்ன, யாவற்றையும் மிகைத்தவனும் பெருங்கொடையாளனுமான உம் இறைவனின் அருட்களஞ்சியங்கள் இவர்களின் கைவசத்தில்தான் உள்ளனவா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லது (யாவரையும்) மிகைத்த, பெருங்கொடையாளனாகிய உமதிரட்சகனின் அருள் பொக்கிஷங்கள் அவர்களிடம் இருக்கின்றனவா?
Saheeh International
Or do they have the depositories of the mercy of your Lord, the Exalted in Might, the Bestower?
அல்லது வானங்களுடையவும், பூமியினுடையவும் அவ்விரண்டிற்கும் இடையேயும் இருப்பவற்றின் மீதுள்ள ஆட்சி அவர்களிடம் இருக்கிறதா? அவ்வாறாயின் அவர்கள் (ஏணி போன்ற) சாதனங்களில் ஏறிச் செல்லட்டும்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லது வானங்கள், பூமி, இன்னும் இவற்றின் மத்தியில் உள்ளவற்றின் ஆட்சி அவர்களுக்கு உரியதுதானா? அவ்வாறாயின், அவர்கள் (இறைவனுடன் போர் புரிவதற்காக) ஏணி வைத்து மேலே ஏறவும்.
IFT
அல்லது இவர்கள் வானம், பூமி மற்றும் இவ்விரண்டிற்கும் இடையிலுள்ள பொருள்கள் அனைத்திற்கும் உரிமையாளர்களா? அவ்வாறாயின், இவர்கள் உலகாயத ரீதியான உச்சகட்ட சாதனங்கள் அனைத்தையும் பயன்படுத்திப் பார்க்கட்டும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லது வானங்கள் மற்றும் பூமி, இன்னும் இவ்விரண்டிற்கு மத்தியிலுள்ளவற்றின் ஆட்சி அவர்களுக்கு இருக்கிறதா? அவ்வாறாயின், (வானங்களின்) வழிகளில் (ஏறும் சாதனங்கள் மூலம்) அவர்கள் ஏரிச்செல்லட்டும்.
Saheeh International
Or is theirs the dominion of the heavens and the earth and what is between them? Then let them ascend through [any] ways of access.
(இவ்வாறு) “ஸமூது”ம் லூத்துடைய சமூகத்தவரும், (மத்யன்) தோப்பு வாசிகளும் (பொய்யாக்கினார்கள்); இவர்கள் (எல்லோரும் முன் தலைமுறைகளில் முறியடிக்கப்பட்ட) கூட்டத்தினர் ஆவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவ்வாறே ‘ஸமூத்' என்னும் மக்களும், லூத்துடைய மக்களும், (மத்யன்) தோப்புவாசிகளும் (பொய்யாக்கினார்கள்). இவர்கள்தான் (முறியடிக்கப்பட்ட) அந்தக் கூட்டத்தினர்கள்.
IFT
மற்றும் ஸமூத் சமூகம், லூத்தின் சமூகம், ஐக்காவாசிகள் ஆகியோரும் கூட பொய்யெனத் தூற்றியிருக்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவ்வாறே) ஸமூதும், லூத்துடைய சமூகத்தாரும், (மத்யன்) தோப்புவாசிகளும் (பொய்யாக்கினார்கள்). இவர்கள் தாம் (முறியடிக்கப்பட்ட) அக்கூட்டதினர்கள் ஆவார்கள்.
Saheeh International
And [the tribe of] Thamūd and the people of Lot and the companions of the thicket [i.e., people of Madyan]. Those are the companies.
اِنْஇல்லைكُلٌّஎல்லோரும்اِلَّاதவிரكَذَّبَபொய்ப்பித்தார்(கள்)الرُّسُلَதூதர்களைفَحَقَّஆகவே, உறுதியானதுعِقَابِஎனது தண்டனை
இன் குல்லுன் இல்லா கத்தBபர் ருஸுல Fபஹக்க 'இகாBப்
முஹம்மது ஜான்
இவர்கள் ஒவ்வொருவரும் (நம்) தூதர்களைப் பொய்ப்பிக்க முற்படாமல் இல்லை; எனவே என்னுடைய தண்டனை (அவர்கள் மீது) உறுதியாயிற்று.
அப்துல் ஹமீது பாகவி
இவர்கள் ஒவ்வொரு கூட்டத்தினரும் தூதர்களைப் பொய்யாக்காமல் இருந்ததில்லை. (ஆகவே, அவர்கள் மீது) என் வேதனை உறுதியாயிற்று.
IFT
கூட்டத்தினர் என்பது அவர்கள்தாம்! அவர்களில் ஒவ்வொரு கூட்டத்தாரும் தூதர்களைப் பொய்யர்கள் என வாதிட்டார்கள். எனவே, என்னுடைய தண்டனையின் தீர்ப்பு (அவர்கள் மீது) விதிக்கப்பட்டுவிட்டது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இவர்கள் ஒவ்வொருவரும் (நம்முடைய) தூதர்களைப் பொய்யாக்கியே தவிர இருக்கவில்லை, ஆகவே, (அவர்களுக்கு) என்னுடைய தண்டனை நிச்சயமாகிவிட்டது.
Saheeh International
Each of them denied the messengers, so My penalty was justified.
இன்னும் இவர்களும் ஒரே ஒரு பேரொளியைத் தவிர (வேறெதனையும்) எதிர் பார்க்கவில்லை. அதில் தாமதமும் இராது.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (அரபிகளாகிய) இவர்களும் (தங்களை அழிக்கக்கூடிய) ஒரே ஒரு சப்தத்தைத் தவிர (வேறெதனை) எதிர்பார்க்கின்றனர். (அது வரும் சமயம்) அதைத் தாமதப்படுத்தவும் வழி இருக்காது.
IFT
இந்த மக்களும் ஒரே ஓர் உரத்த ஓசையையே எதிர்பார்த்திருக்கின்றார்கள். அதற்குப் பிறகு மற்றோர் உரத்த ஓசை இராது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், இவர்கள் ஒரே ஒரு சப்தத்தைப் தவிர (வேறெதனையும்) எதிர்பார்க்கவில்லை, அ(துவருவ)தில் தாமதமும் இராது.
Saheeh International
And these [disbelievers] await not but one blast [of the Horn]; for it there will be no delay.
“எங்கள் இறைவா! கேள்வி கணக்குக் கேட்கப்படும் நாளுக்கு முன்னரே, எங்கள் (வேதனையின்) பாகத்தை துரிதப்படுத்தி(க் கொடுத்து) விடுவாயாக” என்றும் (ஏளனமாகக்) கூறுகின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
இவர்கள், கேள்வி கணக்குக் கேட்கும் நாள் வருவதற்கு முன்னதாகவே, ‘‘எங்கள் இறைவனே! எங்கள் (வேதனையின்) பாகத்தை எங்களுக்குக் கொடுத்துத் தீர்த்துவிடு!'' என்று (பரிகாசமாகக்) கேட்கிறார்கள்.
IFT
இவர்கள் கூறுகிறார்கள்: “எங்கள் இறைவனே! கேள்வி கணக்கிற்குரிய நாளுக்கு முன்பே எங்களின் பங்கினை எங்களுக்கு விரைவாகத் தந்துவிடு!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், “எங்கள் இரட்சகனே! (கேள்வி) கணக்குடைய நாளைக்கு முன்னதாகவே, எங்களுடைய (வேதனையின்) பங்கை எங்களுக்குத் துரிதப் படுத்திவிடுவாயாக!” என்று இவர்கள் (பரிகாசமாகக்) கேட்கின்றார்கள்.
Saheeh International
And they say, "Our Lord, hasten for us our share [of the punishment] before the Day of Account."
இவர்கள் கூறுவதைப்பற்றிப் பொறுமையுடன் இருப்பீராக! இன்னும், வல்லமையுள்ள நம் அடியார் தாவூதையும் நினைவு கொள்வீராக! நிச்சயமாக அவர் (எந்நிலையிலும் நம்மையே) நோக்குபவராக இருந்தார்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) இவர்கள் கூறுவதைப் பற்றிப் பொறுமையாக சகித்துக்கொண்டு இருப்பீராக. மேலும், மிக பலசாலியாகிய நம் அடியார் தாவூதை நினைத்துப் பார்ப்பீராக. நிச்சயமாக அவர் (எத்தகைய சிரமத்திலும்) நம்மையே நோக்கி நின்றார்.
IFT
(நபியே!) இவர்கள் பேசும் பேச்சுகளை பொறுத்துக் கொள்ளும். மேலும், பெரும் ஆற்றல்களைக் கொண்டிருந்த நம்முடைய அடியார் தாவூதின் வரலாற்றை இவர்களுக்கு நீர் எடுத்துக்கூறும். அவர் (ஒவ்வொரு விவகாரத்திலும் அல்லாஹ்விடமே) திரும்பக் கூடியவராக இருந்தார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) அவர்கள் கூறுவதின் மீது நீர் பொறுமையாக இருப்பீராக! அன்றியும், மிக்க பலசாலியாகிய நமது அடியார் தாவூதை நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் (நம் பக்கமே) மிகுதியாகத் திரும்பக்கூடியவராக இருந்தார்.
Saheeh International
Be patient over what they say and remember Our servant, David, the possessor of strength; indeed, he was one who repeatedly turned back [to Allah].
وَالطَّيْرَஇன்னும் பறவைகளைمَحْشُوْرَةً ؕஒன்று சேர்க்கப்பட்டكُلٌّ لَّـهٗۤஅவை எல்லாம் அவருக்குاَوَّابٌகீழ்ப்படிபவையாக
வத்தய்ர மஹ்ஷூரஹ்; குல்லுல் லஹூ அவ்வாBப்
முஹம்மது ஜான்
மேலும் பறவைகளை ஒன்று திரட்டி (நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்) அனைத்தும் அவனையே நோக்குபவையாக இருந்தன.
அப்துல் ஹமீது பாகவி
பறவைகளின் கூட்டத்தையும், (நாம் அவருக்கு வசப்படுத்தித் தந்தோம்.) அவை, அவருடைய சப்தத்தைப் பின்பற்றி அவரை சூழ்ந்து (அவ்வாறே) சப்தமிட்டன.
IFT
பறவைகளும் ஒன்று திரண்டு வந்தன. அவை அனைத்தும் அல்லாஹ்வைத் துதிப்பதில் கவனம் செலுத்தக் கூடியனவாய் இருந்தன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், தடுக்கப்பட்டவையாக இருக்கும் நிலையில் பறவைகளையும் (அவருக்கு நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்.) அவை ஒவ்வொன்றும் (அவருடன் அல்லாஹ்வைத் துதிசெய்து அவனுக்கு வழிப்படுவதின் மூலம்) அவனின் பக்கம் திரும்பக்கூடியவையாக இருந்தன.
Saheeh International
And the birds were assembled, all with him repeating [praises].
وَشَدَدْنَاபலப்படுத்தினோம்مُلْكَهٗஅவருடைய ஆட்சியைوَاٰتَيْنٰهُஇன்னும் அவருக்கு கொடுத்தோம்الْحِكْمَةَஞானத்தைوَفَصْلَஇன்னும் மிகத்தெளிவான, மிக உறுதியானالْخِطَابِபேச்சை(யும்)
மேலும், நாம் அவருடைய அரசாங்கத்தையும் வலுப்படுத்தினோம்; இன்னும் அவருக்கு ஞானத்தையும், தெளிவான சொல்லாற்றலையும் அளித்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
அவருடைய ஆட்சியை நாம் பலப்படுத்தி, அவருக்கு ஞானத்தையும் பிரச்சனைகளைத் தீர்க்கும் சக்தியையும் கொடுத்தோம்.
IFT
நாம் அவருடைய அரசாட்சியை வலுப்படுத்தியிருந்தோம்; நுண்ணறிவையும் அவருக்கு வழங்கியிருந்தோம். மிக நுட்பமான தீர்ப்பளிக்கும் ஆற்றலையும் நல்கி இருந்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அவருடைய ஆட்சியை நாம் வலுப்படுத்தினோம், அவருக்கு (ஆழ்ந்து சிந்தித்து செயல்படும் உறுதியான) அறிவையும், (விவகாரங்களைத் தீர்க்கும்) தெளிவான விளக்கத்தையும் கொடுத்தோம்.
Saheeh International
And We strengthened his kingdom and gave him wisdom and discernment in speech.
وَهَلْ اَتٰٮكَஉம்மிடம் வந்ததா?نَبَؤُاசெய்திالْخَصْمِۘவழக்காளிகளுடையاِذْ تَسَوَّرُواஅவர்கள் சுவர் ஏறி வந்த சமயத்தை நினைவு கூர்வீராக!الْمِحْرَابَۙவீட்டின் முன்பக்கமாக
வ ஹல் அதாக னBப'உல் கஸ்ம்; இத் தஸவ்வருல் மிஹ்ராBப்
முஹம்மது ஜான்
அந்த வழக்காளிகளின் செய்தி உமக்கு வந்ததா? அவர்கள் (தாவூது இறைவணக்கத்திற்காக அமைந்திருந்த) மிஹ்ராபின் சுவரைத் தாண்டி -
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) அந்த வழக்காளிகளின் செய்தி உமக்குக் கிடைத்திருக்கிறதா? அவர்கள் (தாவூது வணங்கிக் கொண்டிருந்த) மடத்து அறையின் சுவற்றைத்தாண்டி (வந்து),
IFT
மேலும், சுவர் ஏறி மாடத்தில் நுழைந்த வழக்காளிகளின் செய்தி உமக்கு வந்ததா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) அந்த வழக்காளிகளின் செய்தி உமக்கு வந்திருக்கிறதா? (அவர் வணங்கிக்கொண்டிருந்த) தொழுமிடத்தின் சுவரை அவர்கள் தாண்டிய சமயம்_
Saheeh International
And has there come to you the news of the adversaries, when they climbed over the wall of [his] prayer chamber -
தாவூதிடம் நுழைந்த போது அவர்; அவர்களைக் கண்டு திடுக்குற்றார்; அப்போது அவர்கள் கூறினார்கள்; “பயப்படாதீர்! நாங்களிருவரும் வழக்காளிகள்; எங்களில் ஒருவர் மற்றவர் மீது அநீதம் செய்திருக்கிறார்; எங்களிருவருக்கிடையில் நீதத்தைக் கொண்டு தீர்ப்பளிப்பீராக! (அதில்) தவறிழைத்து விடாதீர்! எங்களைச் செவ்வையான பாதைக்கு நேர்வழி காட்டுவீராக!”
அப்துல் ஹமீது பாகவி
தாவூதிடம் நுழைந்தபோது, அவர் அவர்களைப் பற்றி(ப் பயந்து) திடுக்கமுற்றார். அதற்கவர்கள் ‘‘(தாவூதே!) பயப்படாதீர். (நாங்கள் இருவரும்) இரு கட்சிக்காரர்கள். எங்களில் ஒருவர் மற்றொருவர் மீது அநியாயம் செய்திருக்கிறார். எங்களுக்கிடையில் நீர் நீதமாகத் தீர்ப்பளிப்பீராக. அதில் தவறிழைத்து விடாதீர். எங்களை நேரான வழியில் செலுத்துவீராக.
IFT
அவர்கள் தாவூதிடம் வந்தபோது அவர், அவர்களைப் பார்த்துத் திடுக்கிட்டார். அவர்கள் கூறினார்கள்: “பயப்படாதீர்! நாங்கள் ஒரு வழக்கு சம்பந்தமான இரு பிரிவினராவோம். எங்களில் ஒருவர் இன்னொருவருக்கு அநீதி இழைத்துள்ளார். நீர் எங்களிடையே மிகச்சரியாகத் தீர்ப்பு வழங்குவீராக! நேர்மை தவறிவிடாதீர்; எங்களுக்கு நேரான வழியைக் காட்டுவீராக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தாவூதிடம் அவர்கள் நுழைந்த போது அவர், அவர்களைப்பற்றி திடுக்கமுற்றார். அ(தற்க)வர்கள் (“தாவூதே!) நீர் பயப்படாதீர், (நாங்களிருவரும்) இரு வழக்காளிகள், எங்களில் சிலர் சிலரின் மீது அநியாயம் செய்திருக்கின்றனர், ஆகவே, எங்களுக்கிடையில் உண்மையைக் கொண்டு நீர் தீர்ப்பளிப்பீராக! (அதில்) தவறிழைத்தும் விடாதீர், எங்களை நேரான வழியிலும் செலுத்துவீராக!” என்று கூறினார்கள்.
Saheeh International
When they entered upon David and he was alarmed by them? They said, "Fear not. [We are] two adversaries, one of whom has wronged the other, so judge between us with truth and do not exceed [it] and guide us to the sound path.
(அவர்களில் ஒருவர் கூறினார்:) “நிச்சயமாக இவர் என்னுடைய சகோதரர்; இவரிடம் தொண்ணூற்றொன்பது ஆடுகள் இருக்கின்றன; ஆனால் என்னிடம் ஒரே ஓர் ஆடுதான் இருக்கிறது; அவர் அதனையும் தனக்குக் கொடுத்துவிட வேண்டுமெனச் சொல்லி, வாதத்தில் என்னை மிகைத்து விட்டார்.”
அப்துல் ஹமீது பாகவி
இவர் என் சகோதரர். அவருக்கு தொண்ணூற்றி ஒன்பது ஆடுகள் இருக்கின்றன. என்னிடம் ஒரே ஒரு ஆடுதான் இருக்கிறது. (அவ்வாறிருந்தும்) அவர் அதையும் (தனக்குக்) கொடுத்துவிட வேண்டும் என்று கூறி வாதத்தில் அவர் என்னை ஜெயித்து விட்டார்'' என்று கூறினார்.
IFT
இதோ! இவர் என்னுடைய சகோதரர்; இவரிடம் தொண்ணூற்றொன்பது செம்மறி ஆடுகள் இருக்கின்றன. என்னிடமோ ஒரே ஒரு செம்மறி ஆடுதான் இருக்கின்றது. ‘இந்த ஒரு செம்மறி ஆட்டையும் என்னிடம் ஒப்படைத்துவிடு!’ என்று என்னிடம் இவர் கூறுகின்றார். பேச்சுசாதுர்யத்தால் இவர் என்னை மடக்கிவிட்டார்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நிச்சயமாக இவர், என்னுடைய சகோதரர், இவருக்கு தொண்ணூற்றொன்பது பெண் ஆடுகள் இருக்கின்றன, எனக்கு ஒரே ஒரு பெண் ஆடு தான் இருக்கிறது, பின்னர் அவர், “அதனை என் பொறுப்பில் ஆக்கி (எனக்கு கொடுத்து) விடு” என்று கூறி, வாதத்தில் அவர் என்னை மிகைத்தும் விட்டார்“ (என்று கூறினார்).
Saheeh International
Indeed this, my brother, has ninety-nine ewes, and I have one ewe; so he said, 'Entrust her to me,' and he overpowered me in speech."
(அதற்கு தாவூது:) “உம்முடைய ஆட்டை அவர் தம்முடைய ஆடுகளுடன் சேர்த்து விடும்படிக் கேட்டது கொண்டு நிச்சயமாக அவர் உம்மீது அநியாயம் செய்து விட்டார்; நிச்சயமாகக் கூட்டாளிகளில் பெரும்பாலோர் - அவர்களில் சிலர் சிலரை மோசம் செய்து விடுகின்றனர்; ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்லமல்கள் செய்பவர்களைத் தவிர; இத்தகையவர் சிலரே” என்று கூறினார்; இதற்குள்: “நிச்சயமாக நாமே அவரைச் சோதித்து விட்டோம்” என்று தாவூது எண்ணித் தம்முடைய இறைவனிடம் மன்னிப்பு கோரிக் குனிந்து விழுந்தவராக இறைவனை நோக்கினார்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு தாவூத், ‘‘உன் ஆட்டை, அவர் தன் ஆடுகளுடன் சேர்த்து விடும்படி கேட்பது நிச்சயமாக அவர் உம் மீது செய்யும் அநியாயமாகும். கூட்டாளிகளில் பெரும்பாலானவர்கள், ஒருவர் ஒருவரை மோசம் செய்து விடுகின்றனர்; நம்பிக்கை கொண்டு நற்செயல் செய்கிறவர்களைத் தவிர, (நம்பிக்கையாளர்கள் அவ்வாறு செய்வதில்லை. மோசம் செய்யாத) இத்தகையவர்கள் வெகு சிலரே!'' என்று கூறினார். இதற்குள் நிச்சயமாக நாம் தாவூதை சோதனைக்குள்ளாக்கி விட்டோம் என்று தாவூத் எண்ணி, தன் இறைவனிடம் தன் குற்றத்தை மன்னிக்கும்படி கோரி, சிரம் பணிந்து வணங்கி தன் இறைவனை நோக்கி பிரார்த்தனை செய்தார்.
IFT
தாவூத் பதிலளித்தார்: “இவர் தன்னுடைய செம்மறி ஆடுகளுடன் உம்முடைய செம்மறி ஆட்டையும் இணைத்துக் கொள்வதாகக் கோரியதன் மூலம் திண்ணமாக உமக்கு அநீதி இழைத்து விட்டார். உண்மையில் ஒன்றுகூடி வாழும் மக்களில் பெரும்பாலோர், ஒருவர் மற்றவர் மீது வரம்புமீறி நடந்து கொள்கின்றார்கள். ஆயினும் எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகின்றார்களோ, அவர்கள்தாம் இதிலிருந்து தப்பித்திருக்கின்றார்கள். இத்தகையோர் மிகச்சிலரே ஆவர்.” (இவ்வாறு கூறிக்கொண்டிருந்தபோதே) உண்மையில் நாம் அவரை சோதித்திருக்கின்றோம் என்பதை தாவூத் உணர்ந்து விட்டார். உடனே தம்முடைய இறைவனிடம் மன்னிப்புக் கோரினார். மேலும் ஸஜ்தாவில்* விழுந்து விட்டார்; இறைவன் பக்கம் மீண்டார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு தாவூத்) “உம்முடைய பெண் ஆட்டை அவர் தன்னுடைய பெண் ஆடுகளுடன் சேர்த்துவிடுமாறு கேட்டதனால், நிச்சயமாக அவர் உமக்கு அநியாயமிழைத்து விட்டார்; இன்னும் நிச்சயமாகக் கூட்டாளிகளில் பெரும்பாலோர், அவர்களில் சிலர் மற்ற சிலரின் மீது வரம்பு மீறிவிடுகின்றனர், விசுவாசங் கொண்டு நற்கருமங்களையும் செய்தார்களே அத்தகையோர்களைத் தவிர, இவர்கள் குறைந்தவர்களே” என்று கூறினார், (இதற்குள்) தாவூத் நிச்சயமாக நாமே (அவர் தீர்ப்பு செய்யும் திறன் படைத்தவரா? என) அவரைச் சோதனைக்குள்ளாக்கிவிட்டோம் என்று எண்ணினார், ஆகவே, தன் இரட்சகனிடம் மன்னிப்புத் தேடி, குனிந்தவராக (ஸஜ்தாவில்) விழுந்தார், மேலும், (அல்லாஹ்வின் பால் தவ்பா செய்து) மீண்டார்.
Saheeh International
[David] said, "He has certainly wronged you in demanding your ewe [in addition] to his ewes. And indeed, many associates oppress one another, except for those who believe and do righteous deeds - and few are they." And David became certain that We had tried him, and he asked forgiveness of his Lord and fell down bowing [in prostration] and turned in repentance [to Allah].
ஆகவே, நாம் அவருக்கு அ(க் குற்றத்)தை மன்னித்தோம்; அன்றியும், நிச்சயமாக அவருக்கு நம்மிடத்தில் நெருங்கிய (அந்தஸ்)தும், அழகிய இருப்பிடமும் உண்டு.
அப்துல் ஹமீது பாகவி
ஆதலால், நாம் அவருடைய குற்றத்தை மன்னித்து விட்டோம். நிச்சயமாக அவருக்கு நம்மிடத்தில் மிக நெருங்கிய பெரும் பதவியும் அழகான இருப்பிடமும் உண்டு.
IFT
அப்போது நாம் அவருடைய அந்தத் தவறை மன்னித்து விட்டோம். திண்ணமாக நம்மிடத்தில் அவருக்கு நெருக்கமும் நல்ல முடிவும் இருக்கின்றன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனவே, (தாம் குற்றம் இழைத்துவிட்டதாக) அ(வர் கருதிய)தை அவருக்கு நாம் மன்னித்துவிட்டோம், நிச்சயமாக அவருக்கு, நம்மிடத்தில் (மிக்க) நெருக்கமும், அழகான இருப்பிடமும் உண்டு.
Saheeh International
So We forgave him that; and indeed, for him is nearness to Us and a good place of return.
(நாம் அவரிடம் கூறினோம்:) “தாவூதே! நிச்சயமாக நாம் உம்மை பூமியில் பின்தோன்றலாக ஆக்கினோம்; ஆகவே மனிதர்களிடையே சத்தியத்தைக் கொண்டு (நீதமாக)த் தீர்ப்புச் செய்யும்; அன்றியும், மனோ இச்சையைப் பின் பற்றாதீர்; (ஏனெனில் அது) உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழி கெடுத்து விடும். நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுக்கிறாரோ, அவர்களுக்குக் கேள்வி கணக்குக் கேட்கப்படும் நாளை மறந்து விட்டமைக்காக மிகக்கொடிய வேதனையுண்டு.
அப்துல் ஹமீது பாகவி
ஆதலால், (நாம் அவரை நோக்கி) ‘‘தாவூதே! நிச்சயமாக நாம் உம்மைப் பூமியில் (நம்) பிரதிநிதியாக ஆக்கினோம். ஆதலால், நீர் மனிதர்களுக்கிடையில், நியாயமாகத் தீர்ப்பு கூறுவீராக. சரீர இச்சையைப் பின்பற்றாதீர். அது உம்மை அல்லாஹ்வுடைய பாதையிலிருந்தும் தவறி விடும்படி செய்யும். எவர்கள் அல்லாஹ்வின் பாதையிலிருந்து தவறுகிறார்களோ அவர்கள் கேள்வி கணக்குக் கேட்கும் நாளை மறந்து விடுவார்கள். அதன் காரணமாக, அவர்களுக்கு நிச்சயமாக கடினமான வேதனையுண்டு'' (என்று கூறினோம்).
IFT
(நாம் அவரிடம் கூறினோம்:) “தாவூதே! நாம் உம்மை பூமியில் பிரதிநிதியாக ஆக்கியிருக்கின்றோம். எனவே, நீர் மக்களிடையே நீதியுடன் ஆட்சி செலுத்தும். மேலும், மன இச்சைகளைப் பின்பற்றாதீர். அது, அல்லாஹ்வின் வழியிலிருந்து உம்மைப் பிறழச் செய்துவிடும். எவர்கள் அல்லாஹ்வுடைய வழியிலிருந்து பிறழ்ந்துவிடுகின்றார்களோ, அவர்களுக்குத் திண்ணமாக கடும் தண்டனை இருக்கிறது; கேள்வி கணக்கிற்குரிய நாளை அவர்கள் மறந்துவிட்ட காரணத்தால்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“தாவூதே! நிச்சயமாக நாம், உம்மை பூமியில் பிரதிநிதியாக ஆக்கினோம், ஆகவே நீர் மனிதர்களுக்கிடையில், சத்தியத்தைக் கொண்டுத் தீர்ப்புச் செய்வீராக! மனோ இச்சையைப் பின்பற்றவேண்டாம். (பின்பற்றினால்,) அது உம்மை அல்லாஹ்வுடைய பாதையைவிட்டும் வழிதவறச் செய்துவிடும், நிச்சயமாக அல்லாஹ்வின் பாதையைவிட்டு வழி தவறி விடுகின்றார்களே அத்தகையவர்கள்_ (கேள்வி) கணக்கு (க்கேட்கும்) நாளை அவர்கள் மறந்து விட்டதன் காரணமாக, அவர்களுக்குக் கடினமான வேதனை உண்டு” (என்று கூறினோம்).
Saheeh International
[We said], "O David, indeed We have made you a successor upon the earth, so judge between the people in truth and do not follow [your own] desire, as it will lead you astray from the way of Allah." Indeed, those who go astray from the way of Allah will have a severe punishment for having forgotten the Day of Account.
மேலும், வானத்தையும், பூமியையும், இவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் வீணுக்காக நாம் படைக்கவில்லை. இது (வீணென்பது) காஃபிர்களின் எண்ணமாகும்; காஃபிர்களுக்கு (நரக) நெருப்பின் கேடுதான் உண்டு.
அப்துல் ஹமீது பாகவி
வானங்களையும் பூமியையும் இவற்றுக்கு மத்தியில் உள்ளவற்றையும் வீணுக்காக நாம் படைக்கவில்லை. இது (வீணென்பது) நிராகரிப்பவர்களின் எண்ணமே ஆகும். நிராகரிக்கும் இவர்களுக்குக் கேடுதான்; இவர்களுக்கு நரகமே கிடைக்கும்.
IFT
நாம் இந்த வானத்தையும், பூமியையும் அவற்றிற்கிடையே உள்ள இந்த உலகத்தையும் வீணாகப் படைத்திடவில்லை. நிராகரிப்பாளர்களின் கருத்தாகும் இது. இத்தகைய நிராகரிப் பாளர்களுக்கு நரக நெருப்பின் மூலம் அழிவுதான் இருக்கின்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வானத்தையும், பூமியையும், இவை இரண்டிற்கு மத்தியிலுள்ளவற்றையும் வீணாக நாம் படைக்கவில்லை, இது நிராகரித்தார்களே அத்தகையோரின் எண்ணமேயாகும், ஆகவே, நிராகரித்துவிட்டார்களே அத்தகையவர்களுக்கு (நரக) நெருப்பின் கேடுதான் (உண்டு).
Saheeh International
And We did not create the heaven and the earth and that between them aimlessly. That is the assumption of those who disbelieve, so woe to those who disbelieve from the Fire.
அல்லது ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்லமல்கள் செய்வோரை பூமியில் குழப்பம் செய்வோரைப்போல் நாம் ஆக்கிவிடுவோமா? அல்லது, பயபக்தியுடையோரைப் பாவிகளைப் போல் நாம் ஆக்கிவிடுவோமா?
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்தவர்களை பூமியில் விஷமம் செய்தவர்களைப் போல் நாம் ஆக்கிவிடுவோமா? அல்லது இறையச்சமுடையவர்களை (குற்றம்புரியும்) பாவிகளைப்போல் நாம் ஆக்கி விடுவோமா?
IFT
நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகின்றவர்களையும் பூமியில் அராஜகம் செய்து திரிபவர்களையும் நாம் சமமாக்கிவிடுவோமா, என்ன? இறையச்சமுள்ளோரை ஒழுக்கக்கேடர்களைப் போன்று ஆக்குவோமா, என்ன?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லது விசுவாசங்கொண்டு, நற்கருமங்களும் செய்தார்களே அத்தகையோரை, பூமியில் குழப்பம் செய்கிறவர்களைப்போல் நாம் ஆக்கிவிடுவோமா? அல்லது பயபக்தியுடைவர்களை (குற்றம் புரியும்) பாவிகளைப்போல் நாம் ஆக்கிவிடுவோமா?
Saheeh International
Or should We treat those who believe and do righteous deeds like corrupters in the land? Or should We treat those who fear Allah like the wicked?
(நபியே!) பாக்கியம் பெற்ற இவ்வேதத்தை உம்மீது அருளியுள்ளோம் - அவர்கள் இதன் வசனங்களைக் கவனித்து ஆய்வதற்காகவும், அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) இவ்வேதத்தை நாமே உம் மீது இறக்கிவைத்தோம். இது மிக பாக்கியமுள்ளது. அறிவுடையவர்கள் இதன் வசனங்களை கவனித்து ஆராய்ந்து நல்லுணர்ச்சி பெறுவார்களாக!
IFT
இது பெரும் பாக்கியங்கள் நிறைந்த ஒரு வேதமாகும். (நபியே!) இதனை நாம் உம்மீது இறக்கி அருளியுள்ளோம். இந்த மக்கள் இதனுடைய வசனங்களைச் சிந்திக்க வேண்டும்; அறிவுடையோர் இதிலிருந்து படிப்பினை பெற வேண்டும் என்பதற்காக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! குர் ஆனாகிய இது, அதன் நன்மைகள் பன்மடங்காக்கப்பட்டதாக இருக்க) பாக்கியமிக்க வேதமாகும், இதனுடைய வசனங்களை அவர்கள் சிந்திப்பதற்காகவும், (இதனை கொண்டு) அறிவுடையோர் நல்லுபதேசம் பெறுவதற்காகவும் நாம் இதை உம்மீது இறக்கிவைத்தோம்.
Saheeh International
[This is] a blessed Book which We have revealed to you, [O Muhammad], that they might reflect upon its verses and that those of understanding would be reminded.
وَوَهَبْنَاநாம் வழங்கினோம்لِدَاوٗدَதாவூதுக்குسُلَيْمٰنَ ؕசுலைமானைنِعْمَ الْعَبْدُ ؕஅவர் சிறந்த அடியார்اِنَّـهٗۤநிச்சயமாக அவர்اَوَّابٌ ؕஅல்லாஹ்வின் பக்கம் அதிகம் திரும்புகின்றவர்
இன்னும் தாவூதுக்கு(ப் புதல்வராக) ஸுலைமானை வழங்கினோம்; சிறப்பான (நம்) நல்லடியார், நிச்சயமாக அவர் (எதிலும் நம்மையே) நோக்குபவர்.
அப்துல் ஹமீது பாகவி
தாவூதுக்கு, ஸுலைமானை நாம் மகனாகத் தந்தருள் புரிந்தோம். அவர் மிக நல்லடியார். மெய்யாகவே அவர் (ஒவ்வொரு விஷயத்திலும்) நம்மையே நோக்கி நின்றார்.
IFT
நாம் தாவூதுக்கு ஸுலைமா(ன் போன்ற மைந்த)னை வழங்கினோம். அவர் மிகச்சிறந்த அடியாராகவும், தம்முடைய இறைவனின் பக்கம் அதிகம் திரும்பக்கூடியவராகவும் திகழ்ந்தார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும் தாவூதுக்கு, ஸுலைமானை அன்பளிப்பாக நாம் வழங்கினோம்; (அவர்) மிக்க நல்லடியார்_நிச்சயமாக அவர், (நம்பக்கமே) மிகுதியாகத் திரும்புபவர்.
Saheeh International
And to David We gave Solomon. An excellent servant, indeed he was one repeatedly turning back [to Allah].
இத் 'உரிள 'அலய்ஹி Bபில்'அஷிய் யிஸ் ஸாFபினாதுல் ஜியாத்
முஹம்மது ஜான்
நன்கு பயிற்சியளிக்கப்பட்ட உயர்ந்த குதிரைகள் (ஒரு) மாலை நேரத்தில் அவர் முன் கொண்டுவரப்பட்ட பொழுது:
அப்துல் ஹமீது பாகவி
(யுத்தத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த) உயர்ந்த குதிரைகள் (ஒரு நாளன்று) மாலை நேரத்தில், அவர் முன் கொண்டு வரப்பட்டபொழுது (அதைப் பார்த்துக் கொண்டிருந்ததனால், சூரியன் அஸ்தமித்து அவருடைய அஸர் தொழுகை தவறி விட்டது. அதற்கவர்:)
IFT
அந்தச் சந்தர்ப்பம் நினைவு கூரத்தக்கதாகும். நன்கு பயிற்சி பெற்ற குதிரைகள் மாலை நேரத்தில் அவர் முன்னால் கொண்டு வரப்பட்டபோது,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மூன்று கால்களிலும், நான்காவது காலின் குழம்பிலும் நின்று, துரிதமாகச் செல்லும் (பயிற்சி அளிக்கப்பட்ட) குதிரைகள் (ஒரு நாளன்று) மாலை நேரத்தில் அவர் முன் கொண்டுவரப்பட்டபொழுது,
Saheeh International
[Mention] when there were exhibited before him in the afternoon the poised [standing] racehorses.
“நிச்சயமாக நான் (சூரியன் இரவாகிய) திரைக்குள் மறைந்து விடும்வரை, என்னுடைய இறைவனை நினைப்பது விட்டும் இந்த நல்ல பொருட்களின் மேல் அதிக அன்பாக அன்பு பாராட்டிவிட்டேன்” என அவர் கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘நிச்சயமாக நான் (சூரியன்) திரைக்குள் மறைந்துவிடும் வரை, அல்லாஹ்வின் திருப்பெயரை நினைவுகூர்வதை விட்டுப் பொருளை அதிகமாக அன்பு கொண்டு விட்டேனே (என்று மனம் வருந்தி),
IFT
அவர் கூறினார்: “என்னுடைய இறைவனை நினைவுகூர்வதற்காகவே நான் இச்செல்வத்தை நேசிக்கின்றேன்.” இறுதியாக அக்குதிரைகள் கண்ணைவிட்டு மறைந்தபோது (அவர்கட்டளையிட்டார்:)
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதன் மேல் கவனம் கொண்டதனால், சூரியன் அஸ்தமித்து, அவருடைய தியான நேரம் தவறிவிட்டது, அதற்கவர்) ”நிச்சயமாக நான் (சூரியன்) திரையினுள் மறைந்துவிடும் வரை என் இரட்சகனை நினைவுகூர்வதைவிட்டும் இந்த நல்ல பொருள்களை அதிகமாக அன்பு கொண்டுவிட்டேன்” என்று கூறினார்.
Saheeh International
And he said, "Indeed, I gave preference to the love of good [things] over the remembrance of my Lord until it [i.e., the sun] disappeared into the curtain [of darkness]."
“என்னிடம் அவற்றை திரும்ப கொண்டு வாருங்கள் (என்று கூறினார்; அவை திரும்ப கொண்டு வரப்பட்டபின்) அவற்றின் பின்னங்கால்களையும் கழுத்துகளையும் தடவிக் கொடுத்தார்.”
அப்துல் ஹமீது பாகவி
அவற்றை என்னிடம் கொண்டு வாருங்கள்'' எனக் கூறி, அவற்றின் பின்னங்கால்களையும், கழுத்துக்களையும் (கையினால் நீவி) தடவிக் கொடுத்தார்.
IFT
“அவற்றை என்னிடம் திரும்பக் கொண்டு வாருங்கள்!” பிறகு அவற்றின் கெண்டைக் கால்களையும், பிடரிகளையும் கையினால் தடவினார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அவற்றை என்னிடம் திரும்பக்கொண்டுவாருங்கள்” எனக் கூறி அவைகளின் பின்னங்கால்களையும் கழுத்துகளையும் (கையால்) தடவிக்கொடுத்தார்.
Saheeh International
[He said], "Return them to me," and set about striking [their] legs and necks.
இன்னும் நாம் ஸுலைமானைத் திட்டமாகச் சோதித்தோம்; அவருடைய அரியணையில் ஒரு முண்டத்தை எறிந்தோம் - ஆகவே அவர் (நம்மளவில்) திரும்பினார்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நாம் ஸுலைமானை (மற்றொரு விதத்திலும்) சோதனை செய்து, அவருடைய சிம்மாசனத்தில் ஒரு முண்டத்தை எறிந்தோம். பிறகு, அவர் நம்மளவில் திரும்பிவிட்டார்.
IFT
பிறகு (பாருங்கள்) நாம் ஸுலைமானையும் சோதனைக்குள்ளாக்கினோம்; அவருடைய அரியணையில் ஒரு சடலத்தைக் கொண்டு வந்து போட்டோம். பிறகு அவர் (தம்முடைய இறைவன் பக்கம்) திரும்பினார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் நிச்சயமாக, நாம் ஸுலைமானை (மற்றொரு விதத்திலும்) சோதித்தோம், மேலும், அவருடைய சிம்மாசனத்தில் ஒரு சடலத்தை நாம் போட்டோம், பின்னர் அவர், (நம்மளவில்) திரும்பினார்.
Saheeh International
And We certainly tried Solomon and placed on his throne a body; then he returned.
கால ரBப்Bபிக் Fபிர் லீ வ ஹBப் லீ முல்கல் லா யம்Bபகீ லி அஹதின் மின் Bபஃதீ இன்னக அன்தல் வஹ்ஹாBப்
முஹம்மது ஜான்
“என் இறைவனே! என்னை மன்னித்தருள்வாயாக! அன்றியும், பின்னர் எவருமே அடைய முடியாத ஓர் அரசாங்கத்தை எனக்கு நீ நன்கொடையளிப்பாயாக! நிச்சயமாக நீயே மிகப்பெருங் கொடையாளியாவாய்” எனக் கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, அவர் ‘‘என் இறைவனே! என் குற்றங்களை மன்னித்து விடு! எனக்குப் பின்னர் எவருமே அடைய முடியாத ஓர் ஆட்சியை எனக்கு நீ தந்தருள் புரிவாயாக! நிச்சயமாக நீதான் பெரும் கொடையாளி'' என்று பிரார்த்தனை செய்தார்.
IFT
“என்னுடைய இறைவா! என்னை நீ மன்னிப்பாயாக! எனக்குப் பின் எவருக்கும் கிடைக்க முடியாத ஓர் ஆட்சியதிகாரத்தை எனக்கு நீ வழங்குவாயாக! திண்ணமாக, நீயே உண்மையான கொடையாளன்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஆகவே) “என் இரட்சகனே! என்னை மன்னித்து விடுவாயாக! எனக்குப் பின்னர், எவருக்குமே கிடைக்காத ஓர் ஆட்சியை எனக்கு நீ அன்பளிப்புச் செய்வாயாக! நிச்சயமாக நீயே பெரும் கொடையாளனாவாய்” என்று (பிரார்த்தனை செய்து) அவர் கூறினார்.
Saheeh International
He said, "My Lord, forgive me and grant me a kingdom such as will not belong to anyone after me. Indeed, You are the Bestower."
فَسَخَّرْنَاஆகவே, நாம் கட்டுப்படுத்திக் கொடுத்தோம்لَهُஅவருக்குالرِّيْحَகாற்றைتَجْرِىْஅது வீசும்بِاَمْرِهٖஅவருடைய கட்டளைக்கிணங்கرُخَآءًமென்மையாகحَيْثُ اَصَابَۙஅவர் விரும்புகின்ற இடத்திற்கு
ஆகவே, நாம் அவருக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம்; அது அவருடைய கட்டளைப்படி அவர் நாடிய இடங்களுக்கெல்லாம் இலகுவாக (அவரைச் சுமந்து) சென்று கொண்டிருந்தது.
அப்துல் ஹமீது பாகவி
ஆதலால், (அவர் விரும்பிய ஆட்சியைக் கொடுத்துக்) காற்றையும் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தோம். அது அவருடைய கட்டளையின் படி, அவர் செல்லக்கூடிய இடங்களுக்கெல்லாம் மிக்க சௌகரியமாகவே (அவரைச் சுமந்து) சென்று கொண்டிருந்தது.
IFT
அப்போது நாம் அவருக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம். அது அவருடைய ஆணையால் அவர் விரும்பிய திசையில் மென்மையாய் வீசிக்கொண்டிருந்தது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆதலால், காற்றை அவருக்கு நாம் வசப்படுத்திக் கொடுத்தோம், அது அவருடைய கட்டளையின் பிரகாரம் அவர் நாடியவாறு (பல இடங்களுக்கும்) மிக்க இலகுவாக (அவரைச் சுமந்து) சென்று கொண்டிருந்தது.
Saheeh International
So We subjected to him the wind blowing by his command, gently, wherever he directed,
“இது நம்முடைய நன்கொடையாகும்; (நீர் விரும்பினால் இவற்றைப் பிறருக்குக்) கொடுக்கலாம், அல்லது கொடாது நிறுத்திக் கொள்ளலாம் - கேள்வி கணக்கில்லாத நிலையில் (என்று நாம் அவரிடம் கூறினோம்).
அப்துல் ஹமீது பாகவி
பின்னர், (அவரை நோக்கி) ‘‘இவையெல்லாம் நாம் உமக்கு வழங்கிய கொடைகளாகும். ஆகவே, (இவற்றை) நீர் கணக்கின்றி (எல்லோருக்கும் கொடுத்து) நன்றி செய்யவும். அல்லது (அவற்றை உம்மிடமே) நிறுத்திக் கொள்ளும். (அது உமது விருப்பத்தைப் பொறுத்த விஷயம்'' என்றோம்.)
IFT
(நாம் அவரிடம் கூறினோம்:) “இது நம்முடைய அன்பளிப்பு: இதை உம் விருப்பப்படி வழங்குவதற்கும், வழங்காமல் இருப்பதற்கும் உமக்கு முழு அதிகாரம் இருக்கின்றது. எந்தக் கேள்வி கணக்கும் இல்லை.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“இது (உமக்கு கொடுக்கப்பட்ட) நம்முடைய அன்பளிப்பாகும், ஆகவே, (இதிலிருந்து பிறருக்கு கொடுத்து) உபகாரம் செய்யும், அல்லது (உம்மிடமே) நிறுத்திக்கொள்ளும், உம் மீது எந்த கேள்வி கணக்கும் இல்லை”.
Saheeh International
[We said], "This is Our gift, so grant or withhold without account."
மேலும் (நபியே!) நம்முடைய (நல்) அடியார் அய்யூபை நினைவு கூர்க! அவர் தம் இறைவனிடம், “நிச்சயமாக ஷைத்தான் எனக்குத் துன்பத்தையும், வேதனையையும் கொடுத்து விட்டான்” (என்று கூறிய போது);
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நம் அடியார் ஐயூபை நினைத்துப் பார்ப்பீராக. அவர் தன் இறைவனிடம் பிரார்த்தனை செய்தபொழுது ‘‘நிச்சயமாக எனக்கு ஷைத்தான் துன்பத்தையும் வேதனையையும் கொடுத்து விட்டான்'' (என்று கூறினார்.)
IFT
நம்முடைய அடியார் அய்யூபையும் நினைவுகூர்வீராக! ஒருபோது அவர், “ஷைத்தான் என்னைச் சிரமத்திலும், துன்பத்திலும் ஆழ்த்திவிட்டானே!” என்று தன்னுடைய இறைவனை அழைத்து முறையிட்டார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும் (நபியே!) நமது அடியார் அய்யூபை நினைவு கூர்வீராக! அவர் தன் இரட்சகனை அழைத்(துப் பிரார்த்தனை செய்)து “நிச்சயமாக என்னை ஷைத்தான் துன்பத்தையும், வேதனையும் கொண்டு தீண்டிவிட்டான்” (என்று கூறியபோது, அதற்கு நாம்)
Saheeh International
And remember Our servant Job, when he called to his Lord, "Indeed, Satan has touched me with hardship and torment."
(அதற்கு நாம்) ‘‘உமது காலை(ப் பூமியில்) தட்டுவீராக'' (என்று கூறினோம். அவர் தட்டவே ஓர் ஊற்று உதித் தோடியது. அவரை நோக்கி) ‘‘இதோ குளிப்பதற்கான குளிர்ந்த நீர். (இதுவே உமது) பானமுமாகும்'' (என்று கூறினோம். அதனால் அவருடைய நோய்கள் குணமாகி விட்டன.)
IFT
(அப்பொழுது நாம் அவருக்குக் கட்டளையிட்டோம்:) பூமியில் உம்முடைய கால்களைக் கொண்டு உதையும். இதோ குளிப்பதற்கும், குடிப்பதற்கும் குளிர்ந்த நீர்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“உம்முடைய காலால் (பூமியில்) அடியும்” (என்று கூறினோம், அவர் அடிக்கவே அங்கு ஓர் ஊற்று உதித்தோடியது, அவரிடம்.) “இதோ குளிர்ச்சியான குளிக்குமிடமும், பானமும் இருக்கின்றன (என்று கூறினோம், அதனால், அவருடைய நோய் குணமாகிவிட்டது).
Saheeh International
[So he was told], "Strike [the ground] with your foot; this is a [spring for a] cool bath and drink."
பின்னர் நம்மிடத்திலிருந்துள்ள கிருபையாகவும் அறிவுடையயோருக்கு நினைவூட்டுதலாகவும் அவருடைய குடும்பத்தையும், பின்னும் அதைப் போன்ற ஒரு தொகையினரையும் (அவருக்குக் குடும்பமாகக்) கொடுத்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
பின்னர், நம் அருளாகவும் அறிவுடையவர்கள் நல்லுணர்ச்சி பெறுவதற்காகவும் நாம் அவருக்கு(ப் பிரிந்திருந்த) அவருடைய குடும்பத்தாரையும் அவர்கள் போன்றவர்களையும் அவர்களுடன் கொடுத்து அருள் புரிந்தோம்.
IFT
நாம் அவருக்கு அவருடைய குடும்பத்தாரைத் திருப்பிக் கொடுத்தோம். மேலும், அவர்களோடு அதே அளவுக்கு மற்றவர்களையும் அவருக்கு வழங்கினோம். நமது சார்பிலிருந்து அருளாகவும், அறிவுடையோருக்குப் படிப்பினையாகவும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நம்மிடமிருந்து அருளாகவும், அறிவுடையோர் நல்லுணர்ச்சி பெறுவதற்காகவும் அவருக்கு அவருடைய குடும்பத்தினரையும், அவர்களுடன் அவர்களைப் போன்றோரையும் நாம் அன்பளிப்பாக வழங்கினோம்.
Saheeh International
And We granted him his family and a like [number] with them as mercy from Us and a reminder for those of understanding.
“ஒரு பிடி புல் (கற்றையை) உம்கையில் எடுத்து, அதைக் கொண்டு (உம் மனைவியை) அடிப்பீராக; நீர் (உம்) சத்தியத்தை முறிக்கவும் வேண்டாம்” (என்று கூறினோம்). நிச்சயமாக நாம் அவரைப் பொறுமையுடையவராகக் கண்டோம்; அவர் சிறந்த நல்லடியார் - நிச்சயமாக அவர் (எதிலும் நம்மை) நோக்கியவராகவே இருந்தார்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘ஒரு பிடி (புல்) கத்தையை எடுத்து, அதைக்கொண்டு (உமது மனைவியை) அடிப்பீராக. நீர் உமது சத்தியத்தை முறிக்க வேண்டியதில்லை'' (என்று கூறினோம்.) நிச்சயமாக நாம், அவரை மிக்க பொறுமை உடையவராகவே கண்டோம். அவர் மிக்க நல்லடியார். நிச்சயமாக அவர் (ஒவ்வொரு விஷயத்திலும் நம்மை) நோக்கினவராகவே இருந்தார்.
IFT
மேலும், (நாம் அவரிடம் கூறினோம்:) ‘ஒருபிடி புல்லை எடுத்து அதைக்கொண்டு அடியும்; உம்முடைய சத்தியத்தை முறித்து விடாதிரும்.’ அவரை நாம் பொறுமையாளராய்க் கண்டோம். அவர் மிகச்சிறந்த அடியாராகவும் தம் இறைவனின் பக்கம் அதிகம் திரும்பக் கூடியவராகவும் திகழ்ந்தார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், “புல்லிலிருந்து ஒரு பிடியை உமது கையில் எடுத்து, அதனைக் கொண்டு (உம் மனைவியை) அடியும், நீர் (உம்முடைய) சத்தியத்தை முறிக்கவும் வேண்டாம்” (என்று கூறினோம்). நிச்சயமாக நாம், அவரை மிக்க பொறுமையாளராகவே கண்டோம், (அவர்) மிக்க நல்லடியார். நிச்சயமாக அவர் (நம்பால்) அதிகமாக மீளக்கூடியவராக இருந்தார்.
Saheeh International
[We said], "And take in your hand a bunch [of grass] and strike with it and do not break your oath." Indeed, We found him patient, an excellent servant. Indeed, he was one repeatedly turning back [to Allah].
(நபியே! ஆத்மீக) ஆற்றலும், அகப்பார்வையும் உடையவர்களாயிருந்த நம் அடியார்களான இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரையும் நினைவு கூர்வீராக!
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நம் அடியார்கள் இப்ராஹீம், இஸ்ஹாக், யஅகூபையும் நினைத்துப் பார்ப்பீராக. இவர்கள் கொடையாளிகளாகவும், அகப்பார்வை உடையவர்களாகவும் இருந்தார்கள்.
IFT
மேலும், நம்முடைய அடியார்களான இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரை நினைவுபடுத்துவீராக! அவர்கள் மிகுந்த செயலாற்றல் கொண்டவர்களாகவும், நுண்ணோக்கு உடையவர்களாகவும் இருந்தார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றும்) ஆற்றல்களும், (மார்க்கத்தின் நுணுக்கங்களை விளங்கும்) பார்வைகளும் உடையவர்களாக இருந்த நமது அடியார்களான இப்றாஹீமையும், இஸ்ஹாக்கையும், யஃகூபையும் நினைவு கூர்வீராக!
Saheeh International
And remember Our servants, Abraham, Isaac and Jacob - those of strength and [religious] vision.
هٰذَاஇதுفَوْجٌகூட்டமாகும்مُّقْتَحِمٌநுழையக்கூடியمَّعَكُمْۚஉங்களுடன்لَا مَرْحَبًۢـا(இங்கு) வசதி உண்டாகாமல் இருக்கட்டும்بِهِمْؕஅவர்களுக்குاِنَّهُمْநிச்சயமாக அவர்கள்صَالُواஎரிந்து பொசுங்குவார்கள்النَّارِநரகத்தில்
ஹாதா Fபவ்ஜுன் முக்தஹிமுன் ம'அகும் லா மர்ஹBபன் Bபிஹிம்; இன்னஹும் ஸாலுன் னார்
முஹம்மது ஜான்
(நரகவாதிகளின் தலைவர்களிடம்:) “இது உங்களுடன் நெருங்கிக் கொண்டு (நரகம்) புகும் சேனையாகும்; இவர்களுக்கு அங்கு சங்கை இருக்காது; நிச்சயமாக இவர்கள் நரகில் சேர்பவர்கள்” (என்று கூறப்படும்).
அப்துல் ஹமீது பாகவி
(இவர்களுடைய தலைவர்களை நோக்கி,) ‘‘இந்தக் கூட்டத்தாரும் உங்களுடன் (நரகத்தில்) தள்ளப்படுவார்கள்'' (என்று கூறப்படும். அதற்கு அவர்கள்) ‘‘இது அவர்களுக்கு நல்வரவாகாது. நிச்சயமாக இவர்கள் நரகம் செல்பவர்களே'' (என்று கூறுவார்கள்).
IFT
(அவர்கள், தம்மைப் பின்பற்றியவர்கள் நரகத்தை நோக்கி வருவதைப் பார்த்துவிட்டு தமக்கிடையே கூறிக்கொள்வார்கள்:) “இதோ! ஒரு படை முண்டியடித்துக் கொண்டு உங்களிடம் வருகின்றது. எந்த வரவேற்பும் இவர்களுக்கு இல்லை; இவர்கள் நெருப்பில் எரிந்து பொசுங்கக்கூடியவர்கள்தாம்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இவர்களுடைய தலைவர்களிடம்) “இது உங்களுடன் (நரகத்தில்) புகும் படையாகும்” (என்று கூறப்படும் அதற்கு அவர்கள்,) ”இது அவர்களுக்கு நல்லவரவாகாது, நிச்சயமாக, அவர்கள் நரகத்தில் புகுந்து விட்டவர்களே!” (என்று கூறுவார்கள்).
Saheeh International
[Its inhabitants will say], "This is a company bursting in with you. No welcome for them. Indeed, they will burn in the Fire."
அதற்கு அவர்கள்: “அப்படியல்ல, நீங்களும் தான்! உங்களுக்கும் சங்கை கிடையாது! நீங்கள் தாம் எங்களுக்கு இதை (இந் நிலையை) முற்படுத்தி வைத்தீர்கள்; (ஆதலால் நம் இரு கூட்டத்தாருக்கும்) தங்குமிடம் மிகவும் கெட்டது!” என்று கூறுவர்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு அ(த்தலை)வர்கள் (பின் தொடர்ந்த) அவர்களை நோக்கி, ‘‘(எங்களுக்கு) இல்லை. மாறாக, உங்களுக்குத்தான் நல்வரவில்லை. நீங்கள் தான் எங்களுக்கு இதைத் தேடித்தந்தீர்கள். (ஆதலால், நம்மிருவரின்) தங்குமிடம் மகா கெட்டதுதான்'' என்று கூறுவார்கள்.
IFT
அதற்கு அவர்கள் பதிலளிப்பார்கள். “இல்லை! நீங்கள்தாம் எரிந்து பொசுங்கிக் கொண்டிருக்கின்றீர்கள்; எந்த வரவேற்பும் உங்களுக்குத்தான் இல்லை; நீங்கள்தாம் இந்தத் தீயகதிக்கு எங்களை ஆளாக்கினீர்கள். எவ்வளவு மோசமான தங்குமிடம் இது!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அதற்கு அ(த்தலைவர்களைப் பின்பற்றிய)வர்கள் (தலைவர்களிடம், “எங்களுக்கு) அன்று! நீங்களும்தான், உங்களுக்கு நல்வரவில்லை, நீங்கள்தாம் எங்களுக்கு இதனை முற்படுத்தித்தந்தீர்கள், ஆதலால், (நம்மிருசாராரின்) தங்குமிடம் மிகக் கெட்டது” என்று கூறுவார்கள்.
Saheeh International
They will say, "Nor you! No welcome for you. You, [our leaders], brought this upon us, and wretched is the settlement."
“எங்கள் இறைவா! எவர் எங்களுக்கு இதை (இந்நிலையை) முற்படுத்தி வைத்தாரோ அவருக்கு நரகத்தின் வேதனையை இரு மடங்காக அதிகப்படுத்துவாயாக!” என்று அவர்கள் கூறுவர்.
அப்துல் ஹமீது பாகவி
தவிர, ‘‘எங்கள் இறைவனே! எவன் இதை எங்களுக்குத் தேடி வைத்தானோ, அவனுக்கு நரகத்தில் (வேதனையை) இரு மடங்கு அதிகப்படுத்து'' என்று பிரார்த்திப்பார்கள்.
IFT
பிறகு அவர்கள் கூறுவார்கள்: “இறைவா! எவர்கள் எங்களை இந்தத் தீயகதிக்கு ஆளாக்கிடத் தேவையான ஏற்பாடுகளைச் செய்தார்களோ அவர்களுக்கு நரகத்தின் இருமடங்கு வேதனையை நீ கொடுப்பாயாக!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எங்களிரட்சகனே! எவன் இதனை எங்களுக்கு முற்படுத்தி வைத்தானோ அவனுக்கு நரகத்தின் வேதனையை இரு மடங்கு அதிகப்படுத்துவாயாக! என்று கூறுவார்கள்.
Saheeh International
They will say, "Our Lord, whoever brought this upon us - increase for him double punishment in the Fire."
இன்னும், அவர்கள்: “நமக்கு என்ன நேர்ந்தது? மிகக் கெட்ட மனிதர்களிலுள்ளவர்கள் என்று நாம் எண்ணிக் கொண்டிருந்தோமே, அவர்களை (நரகத்தில்) ஏன் காணவில்லை?
அப்துல் ஹமீது பாகவி
தவிர, ‘‘மிகக் கெட்ட மனிதர்கள் என்று (உலகத்தில்) எண்ணிக் கொண்டிருந்தோமே அவர்களை (நரகத்தில்) காணவில்லையே?'' என்று ஒருவர் ஒருவரைக் கேட்பார்கள்.
IFT
அவர்கள் தமக்கிடையில் பேசிக்கொள்வார்கள்: “என்ன நாம் உலகில் யாரைத் தீயவர்களென்று கருதியிருந்தோமோ அவர்களை எங்குமே காணவில்லையே?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், “எங்களுகென்ன நேர்ந்தது? எவர்களை தீயவர்களில் உள்ளவர்கள் என்று (உலகத்தில்) எண்ணிக்கொண்டிருந்தோமோ அந்த மனிதர்களை (நரகத்தில்) காணவில்லையே!“ என்று கூறுவார்கள்.
Saheeh International
And they will say, "Why do we not see men whom we used to count among the worst?
اَ تَّخَذْنٰهُمْஅவர்களை நாங்கள் எடுத்துக் கொண்டோமா?سِخْرِيًّاபரிகாசமாகاَمْஅல்லதுزَاغَتْசோர்ந்துவிட்டனவா?عَنْهُمُஅவர்களை பார்க்க முடியாமல்الْاَبْصَارُபார்வைகள்
அவர்களை நாம் தாம் வெறுமனே பரிகாசம் செய்துகொண்டு இருந்தோமா? அல்லது அவர்கள் கண்ணில்படாமல் இருக்கின்றார்களா?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அவர்களைப் பரிகாசமாக நாம் எடுத்துக்கொண்டிருந்தோமோ? அல்லது (அவர்கள் இங்கிருந்தும்) அவர்களைப் பார்க்காதவாறு நம்முடைய பார்வைகள் தாம் சாய்ந்துவிட்டனவா!” (என்றும் கூறுவார்கள்).
Saheeh International
Is it [because] we took them in ridicule, or has [our] vision turned away from them?"
(நபியே!) நீர் கூறுவீராக: “நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனே, அன்றியும் ஏகனும், (யாவரையும்) அடக்கியாள்பவனுமாகிய அல்லாஹ்வைத் தவிர நாயன் இல்லை.
அப்துல் ஹமீது பாகவி
‘‘நிச்சயமாக நான் உங்களுக்கு (இதைப் பற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறேன். (அனைவரையும்) அடக்கி ஆளுகின்ற ஒரே அல்லாஹ்வைத் தவிர (வணக்கத்திற்குரிய) வேறு இறைவன் இல்லவே இல்லை.
IFT
(நபியே! இவர்களிடம்) கூறும்: “நான் எச்சரிக்கை செய்பவன் ஆவேன். அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய உண்மையான இறைவன் வேறு யாரும் இல்லை. அவன் ஏகன்; அடக்கியாள்பவன்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நிச்சயமாக நான் (இதனைப்பற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவனே, (யாவரையும்) அடக்கி ஆளுகின்ற ஒரே அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய (வேறு) நாயன் இல்லை” என்றும் (நபியே!) நீர் கூர்வீராக!
Saheeh International
Say, [O Muhammad], "I am only a warner, and there is not any deity except Allah, the One, the Prevailing,
“(அவனே) வானங்களுக்கும், பூமிக்கும், இவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றுக்கும் இறைவனாக இருக்கின்றான்; அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிகவும் மன்னிப்பவன்.”
அப்துல் ஹமீது பாகவி
அவன்தான் வானங்கள், பூமி இன்னும் இவற்றுக்கு மத்தியில் உள்ளவை அனைத்திற்கும் உரிமையாளன். அவன் அனைவரையும் மிகைத்தவன், மிக்க மன்னிப்புடையவன்'' என்று (நபியே!) நீர் கூறுவீராக.
IFT
மேலும் வானங்கள் மற்றும் பூமி இவ்விரண்டுக்குமிடையிலுள்ள பொருள்கள் அனைத்தின் அதிபதி; வலிமை மிக்கவன்; பெரிதும் பிழைபொறுப்பவன்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவன் தான்) வானங்கள் மற்றும் பூமி இன்னும், இவ்விரண்டிற்கு மத்தியிலுள்ளவற்றிற்கு இரட்சகன், (அவன் யாவற்றையும்) மிகைத்தோன், மிக்க மன்னிப்புடையோன்.
Saheeh International
Lord of the heavens and the earth and whatever is between them, the Exalted in Might, the Perpetual Forgiver."
مَا كَانَஇல்லைلِىَஎனக்குمِنْ عِلْمٍۢஅறவே ஞானம்بِالْمَلَاِவானவர்களைப் பற்றிالْاَعْلٰٓىமிக உயர்ந்தاِذْ يَخْتَصِمُوْنَஅவர்கள் தர்க்கித்த போது
மா கான லிய மின் 'இல்மின் Bபில் மல'இல் அஃலா இத் யக்தஸிமூன்
முஹம்மது ஜான்
“மேலான கூட்டத்தார் தர்க்கித்துக் கொண்டது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.
அப்துல் ஹமீது பாகவி
(ஆதமை இறைவன் படைத்தபோது,) மேலுலகத்தார் (ஆகிய வானவர்கள்) தங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டது எனக்கொன்றும் தெரியாது. (அதைப் பற்றி) ‘‘எனக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டதைத் தவிர, (நான் அறியேன்.)
IFT
(இவர்களிடம் கூறுங்கள்:) “மேலுலகத்தில் தர்க்கம் நடைபெற்றபோது, அவர்களைப்பற்றிய எந்த விவரமும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“(ஆதமை அல்லாஹ் படைத்தபோது,) மிக மேலான கூட்டத்தார் (ஆகிய மலக்குகள் தங்களுக்குள்) தர்க்கித்துக்கொண்டது பற்றி (அல்லாஹ் அறிவித்ததே தவிர) எனகொன்றும் தெரியாது (என்றும்),
Saheeh International
I had no knowledge of the exalted assembly [of angels] when they were disputing [the creation of Adam].
فَاِذَا سَوَّيْتُهٗஆக, நான் அவரை சிறப்பாக படைத்து(விட்டால்)وَنَفَخْتُஇன்னும் ஊதினால்فِيْهِஅவரில்مِنْ رُّوْحِىْஎன் உயிர்களிலிருந்துفَقَعُوْاவிழுந்து விடுங்கள்!لَهٗஅவருக்கு முன்سٰجِدِيْنَசிரம் பணிந்தவர்களாக
“நான் அவரைச் செவ்வைப்படுத்தி, எனது ஆவியிலிருந்து அவருக்குள் ஊதிய பொழுது: அவருக்கு நீங்கள் விழுந்து ஸுஜூது செய்யுங்கள்” (எனக் கூறியதும்);
அப்துல் ஹமீது பாகவி
நான் அவரைச் செப்பனிட்டு, அவருக்குள் (நான் படைத்த) என் உயிரிலிருந்து ஊதினால் அவருக்குமுன் நீங்கள் சிரம் பணிந்தவர்களாக விழுந்துவிடுங்கள் என்றும் கூறினான்.''
IFT
நான் அவரை முழுமையாகப் படைத்து, அவருக்குள் என்னுடைய உயிரை ஊதினால், அவருக்கு முன்னால் சிரம் பணியுங்கள் எனக் கூறியபோது
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பிறகு நான் அவரை (அவருடைய தோற்றத்தை உருவாக்கி)ச்சரிப்படுத்தி என் உயிரிலிருந்தும் அவரில் ஊதியபோது, அவருக்கு சிரம் பணிந்தவர்களாக விழுங்கள் (எனக் கூறியதும்).
Saheeh International
So when I have proportioned him and breathed into him of My [created] soul, then fall down to him in prostration."
கால யா இBப்லீஸு மா மன'அக அன் தஸ்ஜுத லிமா கலக்து Bபி யதய்ய 'அ ஸ்தக்Bபர்த அம் குன்த மின் அல் 'ஆலீன்
முஹம்மது ஜான்
“இப்லீஸே! நான் என்னுடைய கைகளால் படைத்தவருக்கு ஸுஜூது செய்வதை விட்டும் உன்னைத் தடுத்தது எது? பெருமையடிக்கிறாயா? அல்லது நீ உயர்ந்தவர்களில் (ஒருவனாக) ஆகிவிட்டாயா?” என்று (அல்லாஹ்) கேட்டான்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு இறைவன், ‘‘இப்லீஸே! நானே என் இரு கரங்களால் படைத்தவருக்கு முன் நீ சிரம் பணிய உன்னைத் தடுத்தது எது? நீ உன்னை மிகப் பெரியவனாக மதித்துக் கொண்டாயா? அல்லது நீ, (என் கட்டளைக்குக் கீழ்ப்படியக் கூடாத) உயர்ந்த பதவியுடையவனாகி விட்டாயா?'' என்றான்.
IFT
இறைவன் கூறினான்: “இப்லீஸே! நான் என்னுடைய இரு கைகளால் படைத்திருக்கும் இவருக்கு சிரம் பணிவதை விட்டு உன்னைத் தடுத்தது எது? நீ கர்வம் கொண்டு விட்டாயா? அல்லது நீ உயர் அந்தஸ்து உடையவர்களுள் ஒருவனாகி விட்டாயா?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு அல்லாஹ்,) ”இப்லீஸே! என் இருகரங்களால் நான் படைத்ததற்கு நீ சிரம் பணியாது உன்னைத் தடுத்தது எது? நீ கர்வங்கொண்டுவிட்டாயா? அல்லது, நீ உயர்ந்த (பதவியுடைய)வர்களில் ஆகிவிட்டாயா?” என்றான்.
Saheeh International
[Allah] said, "O Iblees, what prevented you from prostrating to that which I created with My hands? Were you arrogant [then], or were you [already] among the haughty?"
(நபியே!) நீர் கூறும்: (“இக் குர்ஆனுக்காக) நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை; அன்றியும், (இதை இட்டுக் கட்டி) சிரமம் எடுத்துக் கொண்டவனும் அல்லன்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (நபியே!) கூறுவீராக: (மனிதர்களே! இதை ஓதிக் காண்பிப்பதற்காக) நான் உங்களிடத்தில் ஒரு கூலியையும் கேட்கவில்லை. மேலும், (நீங்கள் சுமக்க முடியாத ஒரு சுமையை) நான் உங்கள் மீது சுமத்தவும் இல்லை. இவ்வேதத்தை நான் கற்பனையாக கட்டிக் கொள்ளவும் இல்லை.
IFT
(நபியே!) இவர்களிடம் நீர் கூறும்: “இந்த அழைப்புப் பணிக்காக உங்களிடம் எந்தக் கூலியையும் நான் கேட்கவில்லை. மேலும், நான் போலிக்குணம் உடையவர்களில் உள்ளவனல்லன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மனிதர்களே!) இ(வ்வேதத்தை ஓதிக் காண்பிப்ப)தற்காக உங்களிடத்தில் எவ்விதக் கூலியையும் நான் கேட்கவில்லை, (எதையும்) உண்டாக்கி (பொய்யாக)க் கூறுபவர்களில் நான் உள்ளவனுமல்லன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
Saheeh International
Say, [O Muhammad], "I do not ask you for it [i.e., the Qur’an] any payment, and I am not of the pretentious.