எவனுடைய கையில் ஆட்சி இருக்கின்றதோ அவன் பாக்கியவான்; மேலும், அவன் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.
அப்துல் ஹமீது பாகவி
(மனிதர்களே! வானம் பூமி உடைய) ஆட்சி எல்லாம் எவன் கையில் இருக்கிறதோ அவன் மிக பாக்கியமுடையவன். (வானம் பூமிகளை அழிக்கவும், ஆக்கவும்) அவன் (விரும்பியவாறு அவற்றைச் செய்ய) அனைத்தின் மீதும் ஆற்றலுடையவன்.
IFT
யாருடைய கைவசத்தில் (பேரண்டத்தின்) ஆட்சியதிகாரம் உள்ளதோ அவன் உயர்வும் கண்ணியமும் மிக்கவனாவான். மேலும், அவன் அனைத்துப் பொருளின் மீதும் ஆற்றல் பெற்றவனாக உள்ளான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எவனது கரத்தில் (இம்மை, மறுமையில் வானம் மற்றும் பூமியின்) ஆட்சி இருக்கின்றதோ, அவன் மிக்க பாக்கியமுடையவன், இன்னும், அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன்.
Saheeh International
Blessed is He in whose hand is dominion, and He is over all things competent -
உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.
அப்துல் ஹமீது பாகவி
உங்களில் மிகத்தூய்மையான அமல் செய்பவர்கள் யார் என்று சோதிப்பதற்காகவே, அவன் மரணத்தையும், வாழ்க்கையையும் படைத்திருக்கிறான். அவன் (அனைவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்புடையவன் ஆவான்.
IFT
அவன் மரணத்தையும் வாழ்வையும் ஏற்படுத்தினான்; உங்களில் யார் மிகச் சிறந்த செயல் புரியக்கூடியவர் என்று உங்களைச் சோதிக்கும் பொருட்டு! மேலும், அவன் வல்லமை மிக்கவனாகவும் பெரும் மன்னிப்பாளனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவன் எத்தகையவனென்றால், உங்களில் எவர் செயலால் மிக்க அழகானவர் என்று உங்களை அவன் சோதிப்பதற்காக மரணத்தையும், ஜீவியத்தையும் அவன் படைத்திருக்கின்றான், அவனே (யாவற்றையும்) மிகைத்தவன், மிக்க மன்னிக்கிறவன்.
Saheeh International
[He] who created death and life to test you [as to] which of you is best in deed - and He is the Exalted in Might, the Forgiving -
அல்லதீ கலக ஸBப்'அ ஸமாவாதின் திBபாகம் மா தரா Fபீ கல்கிர் ரஹ்மானி மின் தFபாவுத் Fபர்ஜி'இல் Bபஸர ஹல் தரா மின் Fபுதூர்
முஹம்மது ஜான்
அவனே ஏழு வானங்களையும் அடுக்கடுக்காக படைத்தான்; (மனிதனே) அர்ரஹ்மானின் படைப்பில் குறையை நீர் காணமாட்டீர்; பின்னும் (ஒரு முறை) பார்வையை மீட்டிப்பார்! (அவ்வானங்களில்) ஏதாவது ஓர் பிளவை காண்கிறாயா?
அப்துல் ஹமீது பாகவி
அவனே ஏழு வானங்களையும் அடுக்கடுக்காகப் படைத்தவன். (மனிதனே!) அந்த ரஹ்மானுடைய படைப்பில் நீ ஒரு ஒழுங்கீனத்தையும் காணமாட்டாய். மற்றொரு முறை (அதைக் கவனித்துப்)பார். அதில் ஒரு பிளவை நீ காண்கிறாயா?
IFT
அவனே ஏழு வானங்களை அடுக்கடுக்காகப் படைத்தான். கருணைமிக்க இறைவனின் படைப்பில் எந்த முரண்பாட்டையும் நீர் காணமாட்டீர்! பிறகு, திரும்பவும் பாரீர்! எங்காவது பழுதுகளேதும் உமக்குத் தென்படுகின்றதா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவன் எத்தகையவனென்றால், ஏழு வானங்களை அடுக்கடுக்காகப் படைத்தான், (மனிதனே!) அர்ரஹ்மானுடைய படைப்பில் நீ யாதொரு முரண்பாட்டையும் காணமாட்டாய், ஆகவே, பார்வையை மீட்டிப்பார், (அதில்) பிளவுகளை நீ காண்கிறாயா?
Saheeh International
[And] who created seven heavens in layers. You do not see in the creation of the Most Merciful any inconsistency. So return [your] vision [to the sky]; do you see any breaks?
பின்னர் இருமுறை உன் பார்வையை மீட்டிப்பார்; உன் பார்வை களைத்து, மழுங்கிச் சிறுமையடைந்து உன்னிடம் திரும்பும்.
அப்துல் ஹமீது பாகவி
(பின்னும்) மேலும் இரு முறைப் பார்! (இவ்வாறு நீ எத்தனை முறை துருவித் துருவிப் பார்த்த போதிலும் ஒரு குறையையும் காண முடியாது.) உன் பார்வைதான் அலுத்து, கேவலமுற்று உன்னிடம் திரும்பிவிடும்.
IFT
மீண்டும் மீண்டும் பார்வையைச் செலுத்துவீர்! உமது பார்வை தளர்வுற்று, தோல்வியடைந்த நிலையில் திரும்பும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னும் இருமுறை உன் பார்வையை மீட்டிப்பார், (எக்குறையையும் காணாது) அப்பார்வை இழிவடைந்ததாக அது களைப்புற்று உன்னிடம் திரும்பிவரும்.
Saheeh International
Then return [your] vision twice again. [Your] vision will return to you humbled while it is fatigued.
وَلَـقَدْதிட்டவட்டமாகزَيَّـنَّاஅலங்கரித்தோம்السَّمَآءَவானத்தைالدُّنْيَاகீழ்بِمَصَابِيْحَவிளக்குகளால்وَجَعَلْنٰهَاஇன்னும் அவற்றை ஏற்படுத்தினோம்رُجُوْمًاஎறிவதற்காகلِّلشَّيٰطِيْنِஷைத்தான்களைوَاَعْتَدْنَاஇன்னும் தயார் செய்துள்ளோம்لَهُمْஅவர்களுக்குعَذَابَ السَّعِيْرِகொழுந்து விட்டெரியும் நரகநெருப்பின் வேதனையை
அன்றியும், திட்டமாக நாமே (பூமிக்குச்) சமீபமாக இருக்கும் வானத்தை (நட்சத்திர) விளக்குகளைக் கொண்டு அலங்கரித்திருக்கின்றோம்; இன்னும், அவற்றை ஷைத்தான்களை (வெருட்டும்) எறி கற்களாகவும் நாம் ஆக்கினோம்; அன்றியும் அவர்களுக்காகக் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பின் வேதனையைச் சித்தம் செய்திருக்கின்றோம்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நாம், சமீபமாக உள்ள வானத்தை (பூமியிலுள்ளவர்களுக்கு நட்சத்திர) விளக்குகளைக் கொண்டு அலங்காரமாக்கி வைத்தோம். மேலும், அவற்றை ஷைத்தான்களுக்கு ஓர் எறிகல்லாகவும் அமைத்தோம். இன்னும் அவர்களுக்கு நரக வேதனையையும் நாம் தயார்படுத்தி வைத்திருக்கிறோம்.
IFT
நாம் உங்களுக்கு அருகிலிருக்கும் வானத்தை மாபெரும் விளக்குகளால் அலங்கரித்திருக்கின்றோம். மேலும், அவற்றை நாம் ஷைத்தான்களை எறிந்து விரட்டுவதற்கான கருவிகளாக ஆக்கியுள்ளோம். இந்த ஷைத்தான்களுக்காகக் கொழுந்துவிட் டெரியும் நெருப்பை நாம் தயார் செய்து வைத்திருக்கின்றோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நிச்சயமாக நாம் (பூமிக்குச்) சமீபமான வானத்தை (நட்சத்திரங்களால் ஆன) விளக்குகளைக் கொண்டு அலங்கரித்திருக்கின்றோம், இன்னும், அவைகளை ஷைத்தான்களுக்கு எறியப்படுபவைகளாகவும் நாம் அமைத்தோம், அவர்களுக்கு நரக நெருப்பின் வேதனையையும் நாம் தயார் செய்து வைத்திருக்கின்றோம்.
Saheeh International
And We have certainly beautified the nearest heaven with lamps [i.e., stars] and have made [from] them what is thrown at the devils and have prepared for them the punishment of the Blaze.
وَلِلَّذِيْنَ كَفَرُوْاநிராகரிப்பவர்களுக்குبِرَبِّهِمْதங்கள் இறைவனைعَذَابُதண்டனைجَهَنَّمَؕநரகத்தின்وَبِئْسَஇன்னும் மிகக் கெட்டதுالْمَصِيْرُமீளுமிடங்களில்
அதில் அவர்கள் போடப்படுவார்களாயின், அது கொதிக்கும் நிலை (கழுதையின் பெருங்குரலைப் போல்) அருவருப்பான சப்தம் உண்டாவதை அவர்கள் கேட்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அதில் அவர்கள் (தூக்கி) எறியப்படும்பொழுது (கழுதையின் பெரிய சப்தத்தைப் போல்) அதன் கொதி சப்தத்தைக் கேட்பார்கள்.
IFT
அதில் அவர்கள் வீசியெறியப்படும்போது அதனுடைய கடுமையான கர்ஜனையைக் கேட்பார்கள். அது கொதித்துக் கொண்டிருக்கும்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அதில் அவர்கள் தூக்கிப்போடப்பட்டால், அதுவோ கொதித்துக் கொண்டிருக்கும் நிலையில் (கழுதையின் சப்தத்தைப்போல்) அருவருப்பான சப்தம் அதற்கிருப்பதை அவர்கள் கேட்பார்கள்.
Saheeh International
When they are thrown into it, they hear from it a [dreadful] inhaling while it boils up.
அது கோபத்தால் வெடித்து விடவும் நெருங்குகிறது; அதில் ஒவ்வொரு கூட்டமும் போடப்படும் போதெல்லாம், “அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் உங்களிடம் வரவில்லையா?” என்று அதன் காவலாளிகள் அவர்களைக் கேட்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அது கோபத்தால் வெடித்து விடுவதைப்போல் குமுறிக் கொண்டிருக்கும். அதில் ஒரு கூட்டத்தினர் எறியப்படும் பொழுதெல்லாம், அதன் காவலாளர் அவர்களை நோக்கி (‘‘இவ்வேதனையைப் பற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் தூதர் உங்களிடம் வரவில்லையா'' என்று கேட்பார்கள்.
IFT
கடுமையான கோபத்தால் வெடித்துவிடுவது போல் இருக்கும். ஒவ்வொரு குழுக்களும் அதில் தள்ளப்படும்போது அதன் பாதுகாவலர்கள் அவர்களிடம் கேட்பார்கள், “எச்சரிக்கை செய்பவர் எவரும் உங்களிடம் வரவில்லையா?” என்று!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிராகரிப்போரின் மீதுள்ள) கடுங்கோபத்தால் வெடித்துவிட, அது சமீபித்துவிடும், அதில் ஒரு கூட்டத்தினரைப் போடப்படும் பொழுதெல்லாம் அதன் காவலர்கள் அவர்களிடம், “(இது பற்றி) அச்சமூட்டி எச்சரிக்கின்றவர் உங்களிடம் வரவில்லையா?” என்று கேட்பார்கள்.
Saheeh International
It almost bursts with rage. Every time a company is thrown into it, its keepers ask them, "Did there not come to you a warner?"
காலூ Bபலா கத் ஜா'அனா னதீருன் Fபகத்தBப்னா வ குல்னா மா னZஜ்Zஜலல் லாஹு மின் ஷய் இன் இன் அன்தும் இல்லா Fபீ ளலாலின் கBபீர்
முஹம்மது ஜான்
அதற்கவர்கள் கூறுவார்கள்: “ஆம்! அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் திட்டமாக எங்களிடம் வந்தார்; ஆனால் நாங்கள் (அவரைப்) பொய்ப்பித்து, “அல்லாஹ் யாதொன்றையும் இறக்கவில்லை; நீங்கள் பெரும் வழிகேட்டில் அல்லாமல் வேறில்லை” என்று சொன்னோம்.”
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர்கள் ‘‘மெய்தான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் தூதர் நிச்சயமாக எங்களிடம் வந்தார். எனினும், நாங்கள் (அவரைப்) பொய்யாக்கி, அல்லாஹ் (உங்கள் மீது) எதையும் இறக்கிவைக்கவே இல்லை. நீங்கள் பெரும் வழிகேட்டிலே தவிர இருக்கவில்லை என்று (அவர்களை நோக்கி) நாங்கள் கூறினோம்'' என்று கூறுவார்கள்.
IFT
அதற்கு அவர்கள் பதில் கூறுவார்கள்: “ஆம்! எச்சரிக்கை செய்பவர் எங்களிடம் வந்திருந்தார். ஆனால் நாங்கள் அவரைப் பொய்யரெனத் தூற்றினோம். அல்லாஹ் எதனையும் இறக்கி வைக்கவில்லை; நீங்கள் பெரும் வழிகேட்டில் வீழ்ந்து கிடக்கின்றீர்கள் என்றும் கூறினோம்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர்கள் “மெய்தான்! அச்சமூட்டி எச்சரிக்கின்றவர் நிச்சயமாக எங்களிடம் வந்தார், பின்னர் நாங்கள் (அவரைப்) பொய்யாக்கி, அல்லாஹ் எதையும் (உம்மீது) இறக்கி வைக்கவில்லை, நீங்கள் பெரும்வழிகேட்டிலல்லாமல் (வேறு) இல்லை என்று நாங்கள் கூறினோம்” என்று அவர்கள் கூறுவார்கள்.
Saheeh International
They will say, "Yes, a warner had come to us, but we denied and said, 'Allah has not sent down anything. You are not but in great error.'"
இன்னும் அவர்கள் கூறுவார்கள்: “நாங்கள் (அவர் போதனையைச்) செவியுற்றோ அல்லது சிந்தித்தோ இருந்திருந்தோமானால் நாங்கள் நரகவாசிகளில் இருந்திருக்க மாட்டோம்.”
அப்துல் ஹமீது பாகவி
இன்னும் ‘‘(அத்தூதர்களின் வார்த்தைகளுக்கு) நாங்கள் செவிசாய்த்து அவற்றை நாங்கள் சிந்தித்திருந்தால், நாங்கள் நரகவாசிகளில் ஆகியிருக்கவே மாட்டோம்'' என்று கூறுவார்கள்.
IFT
மேலும் அவர்கள் கூறுவார்கள்: “அந்தோ! நாங்கள் செவிதாழ்த்திக் கேட்பவர்களாய் அல்லது புரிந்துகொள்பவர்களாய் இருந்திருந்தால், (இன்று) நாங்கள் கொழுந்து விட்டெரியும் இந்த நெருப்பின் தண்டனைக்குரியவர்களோடு சேர்ந்திருக்க மாட்டோம்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவர் உபதேசத்தை) “நாங்கள் செவியுற்றோ, அல்லது (அவைகளை) நாங்கள் விளங்கியோ இருந்திருந்தால் நாங்கள் நரகவாசிகளில் ஆகியிருக்கமாட்டோம்” என்று அவர்கள் கூறுவார்கள்.
Saheeh International
And they will say, "If only we had been listening or reasoning, we would not be among the companions of the Blaze."
மேலும், உங்கள் சொல்லை நீங்கள் இரகசியமாக்குங்கள்; அல்லது அதை பகிரங்கமாக்குங்கள் - நிச்சயமாக அவன் இதயங்களிலுள்ளவற்றையும் மிக அறிந்தவன்.
அப்துல் ஹமீது பாகவி
(மனிதர்களே!) நீங்கள் உங்கள் வார்த்தைகளை இரகசியமாகக் கூறுங்கள் அல்லது பகிரங்கமாகவே கூறுங்கள். (எவ்விதம் கூறியபோதிலும், இறைவன் அதை நன்கறிவான். ஏனென்றால்,) நிச்சயமாக அவன், உள்ளங்களில் உள்ளவற்றையும் நன்கறிபவன் ஆவான்.
IFT
மேலும், நீங்கள் இரகசியமாகப் பேசினாலும் சரி; வெளிப்படையாகப் பேசினாலும் சரி! (அல்லாஹ்வைப் பொறுத்தமட்டில் இரண்டும் சமம்தான்!) திண்ணமாக அவன் இதயங்களில் இருப்பவற்றையும் நன்கறிகிறான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (மனிதர்களே!) நீங்கள் உங்கள் கூற்றை இரகசியாக ஆக்குங்கள், அல்லது அதை (சப்தமிட்டு) பகிரங்கமாக ஆக்குங்கள், (யாவற்றையும் அல்லாஹ் நன்கறிந்து கொள்வான், ஏனென்றால்,) நிச்சயமாக அவன் நெஞ்சங்களிலுள்ளவற்றை நன்கறியக்கூடியவன்.
Saheeh International
And conceal your speech or publicize it; indeed, He is Knowing of that within the breasts.
அவனே உங்களுக்கு இப்பூமியை (நீங்கள் வாழ்வதற்கு) வசதியாக ஆக்கினான்; ஆகவே, அதன் பல மருங்குகளிலும், நடந்து அவனுடைய உணவிலிருந்து புசியுங்கள்; இன்னும் அவனிடமே (யாவரும்) உயிர்த்தெழவேண்டியிருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
அவன்தான் உங்களுக்குப் பூமியை (நீங்கள் வசிப்பதற்கு) வசதியாக ஆக்கி வைத்தான். ஆகவே, அதன் பல கோணங்களிலும் சென்று, அவன் (உங்களுக்கு) அளித்திருப்பவற்றைப் புசித்துக் கொண்டிருங்கள். (மறுமையில்) அவனிடமே (அனைவரும்) செல்ல வேண்டியதிருக்கிறது.
IFT
அவனே பூமியை உங்களுக்கு வசப்பட்டதாக அமைத்து வைத்திருக்கின்றான். அதன் மார்பின் மீது நடந்து செல்லுங்கள். மேலும் அல்லாஹ்வின் உணவை உண்ணுங்கள். நீங்கள் (மரணித்த பின்) மீண்டும் உயிர் பெற்று அவனிடமே செல்ல வேண்டி இருக்கிறது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவன் எத்தகையவனென்றால், உங்களுக்கு பூமியை (வாழ்வதற்கு) எளிதானதாக அவன் ஆக்கி வைத்தான், ஆகவே, அதன் பல பாகங்களில் சென்று அவன் உங்களுக்கு அளித்திருக்கும் உணவிலிருந்து உண்ணுங்கள், (உங்களுடைய மண்ணறைகளிலிருந்து) உயிர்பெற்றெழுதல் அவன்பாலே இருக்கிறது.
Saheeh International
It is He who made the earth tame for you - so walk among its slopes and eat of His provision - and to Him is the resurrection.
வானத்தில் இருப்பவன் உங்களைப் பூமியில் சொறுகிவிடுவான் என்பதை பற்றி நீங்கள் அச்சமற்று இருக்கிறீர்களா? அப்போது (பூமி) அதிர்ந்து நடுங்கும்.
அப்துல் ஹமீது பாகவி
வானத்தில் இருப்பவன், உங்களைப் பூமியில் சொருகிவிட மாட்டான் என்று நீங்கள் அச்சமற்றிருக்கிறீர்களா? அந்நேரத்தில் பூமி அதிர்ந்து நடு நடுங்(கிக்) கு(முறு)ம்.
IFT
வானத்திலிருப்பவன் உங்களைப் பூமியினுள் ஆழ்த்தி விடுவதையும் அப்போது உடனே பூமி அதிரத் தொடங்குவதையும் குறித்து நீங்கள் அச்சமின்றி இருக்கின்றீர்களா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வானத்திலிருப்பவன், உங்களை பூமியில் அழுந்தச்செய்து விடுவான் என்பதிலிருந்து நீங்கள் அச்சமற்றிருக்கின்றீர்களா? (பூமியாகிய) அது அந்நேரத்தில் நடுங்கும்.
Saheeh International
Do you feel secure that He who is above would not cause the earth to swallow you and suddenly it would sway?
அல்லது வானத்திலிருப்பவன் உங்கள் மீது கல்மாரியை அனுப்புவது பற்றி அச்சமற்று இருக்கிறீர்களா? ஆகவே, எனது எச்சரிக்கை (செய்யப்பட்ட வேதனை) எப்படி என்பதை விரைவில் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லது வானத்திலிருப்பவன், உங்கள் மீது கல்மழையை பொழிய மாட்டான் என்று நீங்கள் பயமற்றிருக்கிறீர்களா? அவ்வாறாயின், எனது எச்சரிக்கை (செய்யப்பட்ட வேதனை) எவ்வாறிருக்கும் என்பதை நிச்சயமாக நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
IFT
அல்லது வானத்திலிருப்பவன் உங்கள் மீது கற்களைப் பொழியும் காற்றை அனுப்புவது குறித்து நீங்கள் அச்சமின்றி இருக்கின்றீர்களா? பிறகு உங்களுக்குத் தெரிந்துவிடும், எனது எச்சரிக்கை எப்படி இருக்கின்றது என்று!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லது வானத்திலிருப்பவன், உங்கள் மீது கல்மாரியை அவன் அனுப்பி வைப்பான், என்பதிலிருந்து நீங்கள் அச்சமற்றிருக்கின்றீர்களா? அவ்வாறாயின் எச்சரிக்கை (செய்யப்பட்ட வேதனை) எவ்வாறிருக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
Saheeh International
Or do you feel secure that He who is above would not send against you a storm of stones? Then you would know how [severe] was My warning.
வ லகத் கத்தBபல் லதீன மின் கBப்லிஹிம் Fபகய்Fப கான னகீர்
முஹம்மது ஜான்
அன்றியும் அவர்களுக்கு முன் இருந்தார்களே அவர்களும் (நம் வசனங்களை இவ்வாறே) பொய்ப்பித்துக் கொண்டிருந்தனர்; என் எச்சரிக்கை எவ்வளவு கடுமையாக இருந்தது?
அப்துல் ஹமீது பாகவி
இவர்களுக்கு முன்னுள்ளவர்களும் (நம் வசனங்களைப்) பொய்யாக்கி (நிராகரித்து)க் கொண்டிருந்தனர். ஆகவே (அவர்களுக்கு) எனது கண்டிப்பு எவ்வாறு இருத்தது என்பதை (நபியே! கவனித்தீரா)?
IFT
இவர்களுக்கு முன்னர் சென்றுபோன மக்கள் பொய்யென வாதிட்டிருக்கின்றார்கள். பிறகு பார்த்துக் கொள்ளுங்கள்; என்னுடைய பிடி எவ்வளவு கடுமையாக இருந்தது என்பதை!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவர்களுக்கு முன்னிருந்தார்களே அவர்கள் (இவர்களைப் போலவே நம் வசனங்களைப்) பொய்யாக்கி (நிராகரித்து)க் கொண்டிருந்தனர், ஆனால் (அவர்களை அழிப்பது கொண்டு) என்னுடைய மறுப்பு எவ்வாறிருந்தது?
Saheeh International
And already had those before them denied, and how [terrible] was My reproach.
இறக்கைகளை விரித்துக் கொண்டும், சேர்த்துக் கொண்டும், இவர்களுக்கு மேல் (வானில் பறக்கும்) பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையா? அர்ரஹ்மானைத் தவிர (வேறு யாரும் கீழே விழாது) அவற்றைத் தடுத்துக் கொண்டிருக்கவில்லை - நிச்சயமாக அவன் ஒவ்வொரு பொருளையும் நோட்டமிடுபவன்.
அப்துல் ஹமீது பாகவி
இறக்கைகளை விரித்துக்கொண்டும், மடக்கிக்கொண்டும் இவர்களுக்கு மேல் ஆகாயத்தில் (அணி) அணியாகச் செல்லும் பறவைகளை இவர்கள் கவனிக்கவில்லையா? ரஹ்மானைத் தவிர, (மற்றெவரும்) அவற்றை (ஆகாயத்தில் தூக்கி)ப் பிடித்துக் கொண்டிருக்கவில்லை! நிச்சயமாக அவன் அனைத்தையும் உற்று நோக்குபவன் ஆவான்.
IFT
சிறகுகளை விரித்தும் மடக்கியும் தங்களுக்கு மேல் பறந்து கொண்டிருக்கும் பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையா என்ன? அவற்றைத் தடுத்து வைத்திருப்பவன் கருணைமிக்க இறைவனைத் தவிர வேறு எவருமில்லை! திண்ணமாக, அவனே ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இறக்கைகளை விரித்துக்கொண்டும் மடித்துக் கொண்டும் அவர்களுக்கு மேல் (ஆகாயத்தில் அணியணியாகப் பறக்கும்) பட்சிகளை இவர்கள் பார்க்கவில்லையா? அர்ரஹ்மானைத்தவிர, (மற்றெவரும்) அவைகளை (ஆகாயத்தில்) தடுத்துக் கொண்டிருக்கவில்லை, நிச்சயமாக அவன் ஒவ்வொரு பொருளையும் பார்க்கக்கூடியவன்.
Saheeh International
Do they not see the birds above them with wings outspread and [sometimes] folded in? None holds them [aloft] except the Most Merciful. Indeed He is, of all things, Seeing.
அம்மன் ஹாதல் லதீ ஹுவ ஜுன்துல் லகும் யன்ஸுருகும் மின் தூனிர் ரஹ்மான்; இனில்காFபிரூன இல்லா Fபீ குரூர்
முஹம்மது ஜான்
அன்றியும், அர்ரஹ்மானை தவிர வேறு எவர் உங்களுக்குப் பட்டாளமாக இருந்து கொண்டு உதவி செய்வார்? காஃபிர்கள் ஏமாற்றத்திலன்றி வேறில்லை.
அப்துல் ஹமீது பாகவி
ரஹ்மானையன்றி உங்களுக்கு உதவி செய்யக்கூடிய படைகள் எவை? இந்நிராகரிப்பவர்கள் வெறும் மாயையிலே தவிர வேறில்லை.
IFT
சொல்லுங்கள் பார்ப்போம்; கருணைமிக்க இறைவனுக்கு எதிராக உங்களுக்கு உதவி புரிவதற்கு உங்களிடம் எந்தப் படை இருக்கிறது? உண்மை யாதெனில், இந்த நிராகரிப்பாளர்கள் ஏமாற்றத்திற்குள்ளாகி இருக்கின்றார்கள்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அர்-ரஹ்மானையன்றி உங்களுக்கு உதவி செய்யக்கூடிய படைகள் எவை? நிராகரிப்போர் ஏமாற்றத்திலன்றி (வேறு) இல்லை.
Saheeh International
Or who is it that could be an army for you to aid you other than the Most Merciful? The disbelievers are not but in delusion.
அம்மன் ஹாதல் லதீ யர்Zஜுகுகும் இன் அம்ஸக ரிZஜ்கஹ்; Bபல் லஜ்ஜூ Fபீ 'உதுவ்வி(ன்)வ் வ னுFபூர்
முஹம்மது ஜான்
அல்லது, தான் உணவளிப்பதை அவன் தடுத்துக் கொண்டால், உங்களுக்கு உணவளிப்பவர் யார்? அப்படியல்ல, ஆனால், இவர்கள் மாறு செய்வதிலும் (சத்தியத்தை) வெறுப்பதிலும் ஆழ்ந்திருக்கின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ் (உங்களுக்களிக்கும்) தன் உணவைத் தடுத்துக் கொண்டால், உங்களுக்கு உணவு கொடுப்பவன் யார்? (இதையும் இவர்கள் கவனிப்பதில்லை.) மாறாக, இவர்கள் வழிகேட்டிலும், (சத்தியத்தை) வெறுப்பதிலுமே மூழ்கிக் கிடக்கின்றனர்.
IFT
அல்லது கருணைமிக்க இறைவன் தான் வழங்கும் உணவை நிறுத்திக்கொண்டால் பிறகு, உங்களுக்கு உணவு வழங்குவது யார் என்பதைச் சொல்லுங்கள் பார்ப்போம்! உண்மை யாதெனில், இவர்கள் வரம்பை மீறுவதிலும், சத்தியத்தைப் புறக்கணிப்பதிலும் மூழ்கிக் கிடக்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ரஹ்மானாகிய அவன் அளித்துவரும்) அவனுடைய ரிஜ்கை (அருள் விஸ்தீரணத்தை) அவன் தடுத்துக் கொண்டால், (உங்களுக்கு எதிராக உள்ள இவனா? அவனுக்கு எதிராக) உங்களுக்கு ரிஜ்கை அளிப்பான்? அன்று! இவர்கள் பெருமையடிப்பதிலும் (சத்தியத்தை) வெறுப்பதிலேயுமே மூழ்கிக்கிடக்கின்றனர்.
Saheeh International
Or who is it that could provide for you if He withheld His provision? But they have persisted in insolence and aversion.
முகம் குப்புற விழுந்து செல்பவன் மிக நேர்வழி அடைந்தவனா? அல்லது நேரான பாதையில் செவ்வையாக நடப்பவ(ன் மிக நேர்வழி அடைந்தவ)னா.
அப்துல் ஹமீது பாகவி
என்னே! முகங்குப்புற விழுந்து செல்பவன் தன் லட்சியத்தை அடைவானா? அல்லது நேரான பாதையில் ஒழுங்காகச் செல்பவன் அடைவானா?
IFT
சற்று சிந்தித்துப் பாருங்கள்! முகங்குப்புற நடந்து செல்பவன் மிகச் சரியான வழியை அடைபவனா? அல்லது தலைநிமிர்ந்து ஒரு நேரான வழியில் நடந்து சென்று கொண்டிருப்பவனா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தன் முகத்தின் மீது முகங்குப்புற விழுந்து செல்பவன் மிக்க நேரான வழியில் இருக்கின்றானா? அல்லது நேரான பாதையில் சீராக நடப்பவனா?
Saheeh International
Then is one who walks fallen on his face better guided or one who walks erect on a straight path?
(நபியே!) நீர் கூறுவீராக: “அவனே உங்களைப் படைத்து உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும் இதயங்களையும் அமைத்தான்; (எனினும்) மிகவும் சொற்பமாகவே நீங்கள் நன்றி செலுத்துகிறீர்கள்.”
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) கூறுவீராக: அவன்தான் உங்களைப் படைத்து உங்களுக்குச் செவிகளையும், கண்களையும், உள்ளங்களையும் கொடுத்தவன். (அவ்வாறிருந்தும்) நீங்கள் வெகு சொற்பமாகவே (அவனுக்கு) நன்றி செலுத்துகிறீர்கள்.
IFT
(இவர்களிடம்) கூறும்: “அல்லாஹ்தான் உங்களைப் படைத்து, கேட்கின்ற மற்றும் பார்க்கின்ற ஆற்றல்களையும் சிந்தித்துணரும் உள்ளங்களையும் உங்களுக்கு வழங்கியுள்ளான்.” ஆனால், நீங்கள் மிகக் குறைவாகவே நன்றி செலுத்துகின்றீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நீர் கூறுவீராக (ரஹ்மானாகிய) அவன் எத்தகையவனென்றால், உங்களை அவன் (ஆரம்பமாக) உற்பத்தி செய்து உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும், இதயங்களையும் அவன் ஆக்கினான், (இத்தகு பேரருட்களைச் செய்த அவனுக்கு) நீங்கள் வெகு சொற்பமாகவே நன்றி செலுத்துகிறீர்கள்.
Saheeh International
Say, "It is He who has produced you and made for you hearing and vision and hearts [i.e., intellect]; little are you grateful."
குல் ஹுவல் லதீ தர அகும் Fபில் அர்ளி வ இலய்ஹி துஹ்ஷரூன்
முஹம்மது ஜான்
“அவனே உங்களைப் பூமியின் (பல பாகங்களிலும்) பரவச் செய்தான்; அன்றியும், அவனிடமே நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள்” என்று கூறுவீராக.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) கூறுவீராக: அவன்தான் உங்களைப் பூமியில் (பல பாகங்களிலும்) பரப்பி வைத்திருக்கிறான். (மறுமையில்) அவனிடமே ஒன்று சேர்க்கப்படுவீர்கள்.
IFT
(இவர்களிடம் கூறும்:) “அல்லாஹ்தான் உங்களைப் பூமியில் பரவச் செய்தான். அவனிடமே நீங்கள் ஒன்றுதிரட்டப்பட இருக்கின்றீர்கள்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நீர் கூறுவீராக! அவன் எத்தகையவனென்றால், பூமியில் (பலபாகங்களிலும்) உங்களை அவன் பரவச் செய்திருக்கின்றான், (மறுமையில்) அவன் பக்கமே நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள்.
Saheeh International
Say, "It is He who has multiplied you throughout the earth, and to Him you will be gathered."
ஆயினும், “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், வாக்களிக்கப்பட்ட (மறுமையான)து எப்பொழுது (வரும்)?” என்று (காஃபிர்கள்) கேட்கிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(இவ்வாறிருந்தும் அவர்கள் நம்பிக்கையாளர்களை நோக்கி,) ‘‘நீங்கள் உண்மை சொல்பவர்களாயிருந்தால் (மறுமையைப் பற்றிய) இந்த வாக்குறுதி எப்பொழுது (வரும்?)'' என்று கேட்கிறார்கள்.
IFT
மேலும் இவர்கள் கேட்கின்றார்கள்: “இந்த வாக்குறுதி எப்போது நிறைவேறும்? நீங்கள் உண்மையாளர்களாய் இருந்தால், காண்பித்துத் தாருங்கள்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (மறுமை நாளைப்பற்றி) “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், இந்த வாக்கு எப்பொழுது (வரும்)?” என்று கேட்கின்றார்கள்.
Saheeh International
And they say, "When is this promise, if you should be truthful?"
“இதைப் பற்றிய ஞானம் நிச்சயமாக அல்லாஹ்விடமே தான் இருக்கிறது; தவிர, நிச்சயமாக நான் தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன் தான்” என்று (நபியே!) நீர் கூறும்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு (நபியே!) கூறுவீராக: (‘‘அது எப்போது வரும் என்ற) ஞானம் அல்லாஹ்விடத்தில்தான் இருக்கிறது. நான் (அதைப் பற்றிப்) பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்தான்.
IFT
நீர் கூறும்: “இதனைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது. நானோ தெள்ளத் தெளிவாக எச்சரிக்கை செய்பவன் மட்டும்தான்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு நபியே!) நீர் கூறுவீராக “நிச்சயமாக (அது பற்றிய) அறிவெல்லாம், அல்லாஹ்விடத்தில் உள்ளது, அன்றியும், நிச்சயமாக நானோ (அதைப்பற்றி) தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்தான்”
Saheeh International
Say, "The knowledge is only with Allah, and I am only a clear warner."
எனவே, அது நெருங்கி வருவதை அவர்கள் காணும் போது நிராகரிப்போரின் முகங்கள் (நிறம் பேதலித்துக்) கெட்டுவிடும்; இன்னும், “நீங்கள் எதை வேண்டிக் கொண்டிருந்தீர்களோ, அது இது தான்” என்று அவர்களுக்குக் கூறப்படும்.
அப்துல் ஹமீது பாகவி
(நீர் அச்சமூட்டிய) வேதனை (இவர்களை) நோக்கி வருவதை அவர்கள் கண்டால், அந்நிராகரிப்பவர்களுடைய முகங்கள் கருகிவிடும். (இன்னும், அவர்களை நோக்கி) ‘‘(எப்பொழுது வரும், எப்பொழுது வரும் என்று) நீங்கள் கேட்டுக் கொண்டிருந்தது இதுதான்'' என்றும் கூறப்படும்.
IFT
பின்னர், அவர்கள் அதை அருகில் பார்க்கும் போது, எவர்கள் அதை நிராகரித்தார்களோ அவர்களின் முகங்கள் அலங்கோலமாகிவிடும். (அவர்களிடம்) கூறப்படும்: “நீங்கள் எதனைக் குறித்து வற்புறுத்திக் கொண்டிருந்தீர்களோ அதுதான் இது!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(வாக்களிக்கப்பட்டதான) அதனை (அவர்களுக்குச்) சமீபமாக அவர்கள் பார்த்துவிடும்போது அந்நிராகரித்தோருடைய முகங்கள் வேதனையால் (பேதலித்துக்) கெட்டுவிடும்; அன்றியும், (அவர்களிடம்) “நீங்கள் (எப்பொழுது வருமென்று அவசரமாகத்) தேடிக் கொண்டிருந்தீர்களே அத்தகையது இதுதான்” என்று கூறப்படும்.
Saheeh International
But when they see it approaching, the faces of those who disbelieve will be distressed, and it will be said, "This is that for which you used to call."
குல் அர'அய்தும் இன் அஹ்லக னியல் லாஹு வ மம் ம'இய அவ் ரஹிமனா Fபமய்-யுஜீருல் காFபிரீன மின் 'அதாBபின் அலீம்
முஹம்மது ஜான்
கூறுவீராக: அல்லாஹ், என்னையும் என்னுடன் இருப்பவர்களையும் (நீங்கள் ஆசிப்பது போல்) அழித்து விட்டாலும், அல்லது (நாங்கள் நம்புவது போல்) அவன் எங்கள் மீது கிருபை புரிந்தாலும், நோவினை செய்யும் வேதனையை விட்டு, காஃபிர்களைக் காப்பவர் யார் என்பதை கவனித்தீர்களா?
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) கூறுவீராக: என்னையும், என்னுடன் இருப்பவர்களையும் (நீங்கள் விரும்புகிறபடி) அல்லாஹ் அழித்து விட்டாலும் அல்லது அவன் எங்களுக்கு அருள் புரிந்தாலும் (அது எங்கள் விஷயம். ஆயினும்,) துன்புறுத்தும் வேதனையிலிருந்து நிராகரிக்கும் உங்களை பாதுகாப்பவர் யார் என்பதை(க் கவனித்து)ப் பார்த்தீர்களா?
IFT
(இவர்களிடம்) கேளும்: “அல்லாஹ் என்னையும் என் தோழர்களையும் அழித்துவிட்டால் அல்லது எங்கள் மீது கருணை புரிந்தால் துன்புறுத்தும் வேதனையிலிருந்து நிராகரிப்பாளர்களைக் காப்பாற்றுபவன் யார் என்பதை எப்போதேனும் நீங்கள் சிந்தித்ததுண்டா?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“என்னையும், என்னுடன் இருப்பவர்களையும் அல்லாஹ் அழித்துவிட்டாலும், அல்லது அவன் எங்களுக்கு அருள் செய்துவிட்டாலும், துன்புறுத்தும் வேதனையிலிருந்து நிராகரிப்போரைக் காப்பாற்றுபவர் யார்?” என்பதை எனக்குத் தெரிவியுங்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
Saheeh International
Say, [O Muhammad], "Have you considered: whether Allah should cause my death and those with me or have mercy upon us, who can protect the disbelievers from a painful punishment?"
قُلْகூறுவீராக!هُوَஅவன்தான்الرَّحْمٰنُபேரருளாளன்اٰمَنَّاநாங்கள் நம்பிக்கை கொண்டோம்بِهٖஅவனைوَعَلَيْهِஇன்னும் அவன் மீதேتَوَكَّلْنَاۚநாங்கள் நம்பிக்கை வைத்தோம்فَسَتَعْلَمُوْنَவிரைவில் அறிவீர்கள்مَنْ هُوَ فِىْ ضَلٰلٍவழிகேட்டில் உள்ளவர்களைمُّبِيْنٍதெளிவான
(நபியே!) நீர் கூறும்: (எங்களைக் காப்பவன்) அவனே - அர்ரஹ்மான்; அவன் மீதே நாங்கள் ஈமான் கொண்டோம்; மேலும் அவனையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம் - எனவே, வெகு சீக்கிரத்தில் பகிரங்கமான வழி கேட்டிலிருப்பவர் யார் என்பதை நீங்கள் அறிவீர்கள்!”
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) கூறுவீராக: ‘‘அவன்தான் ரஹ்மான். அவனையே நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். அவனையே நாங்கள் நம்பியும் இருக்கிறோம். ஆகவே, பகிரங்கமான வழிகேட்டில் இருப்பவர்கள் யாரென்பதை அதிசீக்கிரத்தில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.''
IFT
மேலும் (இவர்களிடம்) கூறும்: “அவன் பெரும் கருணையாளனாவான். அவன் மீதே நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்றோம். அவனையே நாங்கள் முழுமையாகச் சார்ந்திருக்கின்றோம். வெளிப்படையான வழிகேட்டில் வீழ்ந்து கிடப்பவன் யார் என்பது விரைவில் உங்களுக்குத் தெரிந்துவிடும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அவன் தான் ரஹ்மான், அவனையே நாங்கள் விசுவாசித்திருக்கின்றோம், (எங்கள் காரியங்களை ஒப்படைத்து முழுமையாக) அவன் மீதே நம்பிக்கையும் வைத்திருக்கிறோம், ஆகவே, தெளிவான வழிகேட்டிலிருப்பவர் யாரென்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
Saheeh International
Say, "He is the Most Merciful; we have believed in Him, and upon Him we have relied. And you will [come to] know who it is that is in clear error."
قُلْகூறுவீராகاَرَءَيْتُمْஅறிவியுங்கள்اِنْ اَصْبَحَசென்று விட்டால்مَآؤُكُمْஉங்கள் தண்ணீர்غَوْرًاஆழத்தில்فَمَنْயார்يَّاْتِيْكُمْ بِمَآءٍஉங்களுக்கு தண்ணீரைக் கொண்டு வருவார்مَّعِيْنٍமதுரமான
குல் அர'அய்தும் இன் அஸ்Bபஹ மா'உகும் கவ்ரன் Fபமய் ய'தீகும் Bபிமா'இம் ம'ஈன்
முஹம்மது ஜான்
(நபியே!) நீர் கூறும்: உங்களின் தண்ணீர் பூமியினுள் (உறிஞ்சப்பட்டுப்) போய்விட்டால், அப்பொழுது ஓடும் நீரை உங்களுக்குக் கொண்டு வருபவன் யார்? என்பதை கவனித்தீர்களா? என்று (எனக்கு அறிவியுங்கள்).
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) கூறுவீராக: ‘‘(நீங்கள் குடிக்கும்) தண்ணீர் பூமிக்குள் வெகு ஆழத்தில் சென்றுவிட்டால், பிறகு தண்ணீரின் (வேறொரு) ஊற்றை உங்களுக்குக் கொண்டு வருபவன் யாரென்று கவனித்தீர்களா?
IFT
(இவர்களிடம்) கேளும்: “உங்கள் (கிணறுகளின்) நீர் பூமிக்குள் போய்விட்டால் பிறகு தண்ணீர் ஊற்றுகளை உங்களுக்கு வெளிக்கொணர்பவன் யார் என்பதையும் நீங்கள் எப்போதேனும் சிந்தித்ததுண்டா?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“உங்களுடைய தண்ணீர் (நீங்கள் பெறமுடியாதவாறு)) பூமியினுள் (இழுக்கப்பட்டு வெகு ஆழத்தில்) சென்றுவிட்டால், பொங்கி ஓடும் நீரை உங்களுக்குக் கொண்டு வருபவன் யார், என எனக்குத் தெரிவியுங்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
Saheeh International
Say, "Have you considered: if your water was to become sunken [into the earth], then who could bring you flowing water?"