">

தேடல் வார்த்தை: "ஸாலிஹ"

தேடல் மொழிபெயர்ப்புகள்: முஹம்மது ஜான்

82 முடிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன

பக்கம் 2 / 2 (முடிவுகள் 51 - 82)

وَمَاۤ اَمْوَالُكُمْ وَلَاۤ اَوْلَادُكُمْ بِالَّتِیْ تُقَرِّبُكُمْ عِنْدَنَا زُلْفٰۤی اِلَّا مَنْ اٰمَنَ وَعَمِلَ صَالِحًا ؗ فَاُولٰٓىِٕكَ لَهُمْ جَزَآءُ الضِّعْفِ بِمَا عَمِلُوْا وَهُمْ فِی الْغُرُفٰتِ اٰمِنُوْنَ ۟
وَ مَاۤமேலும் இல்லைاَمْوَالُكُمْஉங்கள் செல்வங்களோوَ لَاۤஇன்னும் இல்லைاَوْلَادُكُمْஉங்கள் பிள்ளைகளோبِالَّتِیْஎவைتُقَرِّبُكُمْஉங்களை நெருக்கமாக்குமோعِنْدَنَاஎங்களிடத்தில்زُلْفٰۤیநெருக்கமாகاِلَّاதவிரمَنْஎவர்اٰمَنَநம்பிக்கை கொண்டுوَ عَمِلَமேலும் செய்தாரோصَالِحًا ؗநற்செயல்فَاُولٰٓىِٕكَஅத்தகையோர்لَهُمْஅவர்களுக்குجَزَآءُநற்கூலிالضِّعْفِஇரட்டிப்புبِمَاகாரணமாகعَمِلُوْاஅவர்கள் செய்ததன்وَ هُمْமேலும் அவர்கள்فِیஇல்الْغُرُفٰتِமேலறைகள்اٰمِنُوْنَஅச்சமற்றவர்கள்
வ மா அம்வாலுகும் வ லா அவ்லாதுகும் Bபில்லதீ துகர்ரிBபுகும் 'இன்தனா Zஜுல்Fபா இல்லா மன் ஆமன வ 'அமில ஸாலிஹன் Fப உலா'இக லஹும் ஜZஜா'உள் ளிஃFபி Bபிமா 'அமிலூ வ ஹும் Fபில் குருFபாதி ஆமினூன்
இன்னும் உங்களுடைய செல்வங்களோ, உங்களுடைய மக்களோ (உங்களுக்குத் தகுதி கொடுத்து) உங்களை நம்மளவில் நெருங்கி வைக்க கூடியவர்கள் அல்லர். ஆனால் எவர் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல் செய்கின்றாரோ அத்தகையோர்க்கு, அவர்கள் செய்ததற்கு இரட்டிப்பு நற்கூலி உண்டு; மேலும் அவர்கள் (சுவனபதியின்) உன்னதமான மாளிகைகளில் நிம்மதியுடன் இருப்பார்கள்.
اَلَّذِیْنَ كَفَرُوْا لَهُمْ عَذَابٌ شَدِیْدٌ ؕ۬ وَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ مَّغْفِرَةٌ وَّاَجْرٌ كَبِیْرٌ ۟۠
اَلَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோلَهُمْஅவர்களுக்குعَذَابٌவேதனைشَدِیْدٌ ؕ۬கடுமையானوَ الَّذِیْنَமேலும் எவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِநற்செயல்களைلَهُمْஅவர்களுக்குمَّغْفِرَةٌமன்னிப்புوَّ اَجْرٌமேலும் கூலிكَبِیْرٌ۠மகத்தான
அல்லதீன கFபரூ லஹும் 'அதாBபுன் ஷதீத்; வல்லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி லஹும் மக்Fபிரது(ன்)வ் வ அஜ்ருன் கBபீர்
எவர்கள் (சத்தியத்தை) நிராகரிக்கிறார்களோ, அவர்களுக்குக் கடினமான வேதனையுண்டு; ஆனால் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்களை செய்கிறார்களோ அவர்களுக்கு மன்னிப்பும், மிகப் பெரும் நற்கூலியுமுண்டு.  
وَهُمْ یَصْطَرِخُوْنَ فِیْهَا ۚ رَبَّنَاۤ اَخْرِجْنَا نَعْمَلْ صَالِحًا غَیْرَ الَّذِیْ كُنَّا نَعْمَلُ ؕ اَوَلَمْ نُعَمِّرْكُمْ مَّا یَتَذَكَّرُ فِیْهِ مَنْ تَذَكَّرَ وَجَآءَكُمُ النَّذِیْرُ ؕ فَذُوْقُوْا فَمَا لِلظّٰلِمِیْنَ مِنْ نَّصِیْرٍ ۟۠
وَ هُمْமேலும் அவர்கள்یَصْطَرِخُوْنَகதறுவார்கள்فِیْهَا ۚஅதில்رَبَّنَاۤஎங்கள் இறைவனேاَخْرِجْنَاஎங்களை வெளியேற்றுவாயாகنَعْمَلْநாங்கள் செய்வோம்صَالِحًاநற்செயல்களைغَیْرَஅல்லாதالَّذِیْஎதைكُنَّاநாங்கள் இருந்தோமோنَعْمَلُ ؕசெய்து கொண்டிருந்தோமோاَوَ لَمْமேலும் நாம் அளிக்கவில்லையாنُعَمِّرْكُمْஉங்களுக்கு வாழ்நாளைمَّاஎதில்یَتَذَكَّرُபடிப்பினை பெறுவானோفِیْهِஅதில்مَنْஎவர்تَذَكَّرَபடிப்பினை பெறுகிறானோوَ جَآءَكُمُமேலும் உங்களிடம் வந்தார்النَّذِیْرُ ؕஎச்சரிக்கை செய்பவர்فَذُوْقُوْاஆகவே சுவையுங்கள்فَمَاஎனவே இல்லைلِلظّٰلِمِیْنَஅநியாயக்காரர்களுக்குمِنْஎந்தنَّصِیْرٍ۠உதவியாளரும்
வ ஹும் யஸ்தரிகூன Fபீஹா ரBப்Bபனா அக்ரிஜ்னா னஃமல் ஸாலிஹன் கய்ரல் லதீ குன்னா னஃமல்; அவ லம்னு 'அம்மிர்கும் மா யததக் கரு Fபீஹி மன் ததக்கர வ ஜா'அகுமுன் னதீரு Fபதூகூ Fபமா லிள்ளாலிமீன மின் னஸீர்
இன்னும் அ(ந்நரகத்)தில் அவர்கள்: “எங்கள் இறைவா! நீ எங்களை (இதை விட்டு) வெளியேற்றுவாயாக! நாங்கள் வழக்கமாகச் செய்து கொண்டிருந்த (தீய)வற்றை விட்டும் ஸாலிஹான (நல்ல) அமல்களை செய்வோம்” என்று கூறிக் கதறுவார்கள். (அதற்கு அல்லாஹ்) “சிந்தித்துப் பார்க்கக் கூடியவன் அதில் சிந்திக்கும் பொருட்டு, நாம் உங்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கவில்லையா? உங்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவரும் வந்திருந்தார்; ஆகவே நீங்கள் (செய்த அநியாயத்தின் பயனைச்) சுவையுங்கள்; ஏனென்றால் அநியாயக்காரர்களுக்கு உதவியாளர் எவருமில்லை” (என்று கூறுவான்).  
رَبِّ هَبْ لِیْ مِنَ الصّٰلِحِیْنَ ۟
رَبِّஎன் இறைவாهَبْதந்தருள்வாயாகلِیْஎனக்குمِنَஇருந்துالصّٰلِحِیْنَநல்லோர்களில்
ரBப்Bபி ஹBப் லீ மினஸ் ஸாலிஹீன்
“என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக” (என்று பிரார்த்தித்தார்).
وَبَشَّرْنٰهُ بِاِسْحٰقَ نَبِیًّا مِّنَ الصّٰلِحِیْنَ ۟
وَ بَشَّرْنٰهُமேலும் நாம் அவருக்கு நற்செய்தி கூறினோம்بِاِسْحٰقَஇஸ்ஹாக்கைக் குறித்துنَبِیًّاஒரு நபியாகمِّنَஇருந்துالصّٰلِحِیْنَநல்லோர்களில்
வ Bபஷ்ஷர்னாஹு Bபி இஷ்ஹாக னBபியம் மினஸ் ஸாலிஹீன்
ஸாலிஹானவர்களிலுள்ளவரான நபி இஸ்ஹாக்கை அவருக்கு இன்னும் (மகனாகத் தருவதாக) நாம் நன்மாராயம் கூறினோம்.
قَالَ لَقَدْ ظَلَمَكَ بِسُؤَالِ نَعْجَتِكَ اِلٰی نِعَاجِهٖ ؕ وَاِنَّ كَثِیْرًا مِّنَ الْخُلَطَآءِ لَیَبْغِیْ بَعْضُهُمْ عَلٰی بَعْضٍ اِلَّا الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَقَلِیْلٌ مَّا هُمْ ؕ وَظَنَّ دَاوٗدُ اَنَّمَا فَتَنّٰهُ فَاسْتَغْفَرَ رَبَّهٗ وَخَرَّ رَاكِعًا وَّاَنَابَ ۟
قَالَஅவர் கூறினார்لَقَدْநிச்சயமாகظَلَمَكَஉமக்கு அநீதி இழைத்துவிட்டார்بِسُؤَالِகேட்பதன் மூலம்نَعْجَتِكَஉமது பெண் ஆட்டைاِلٰیசேர்த்துக்கொள்ளنِعَاجِهٖ ؕதன் பெண் ஆடுகளுடன்وَ اِنَّமேலும் நிச்சயமாகكَثِیْرًاஅதிகமானோர்مِّنَஇருந்துالْخُلَطَآءِகூட்டாளிகளில்لَیَبْغِیْஅநீதி இழைக்கிறார்கள்بَعْضُهُمْஅவர்களில் சிலர்عَلٰیமீதுبَعْضٍமற்றவர்اِلَّاதவிரالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِநற்செயல்களைوَ قَلِیْلٌஇன்னும் மிகக் குறைவானவர்களேمَّاஅவர்கள்هُمْ ؕஅவர்கள்وَ ظَنَّமேலும் எண்ணினார்دَاوٗدُதாவூதுاَنَّمَاநிச்சயமாக நாம்فَتَنّٰهُஅவரைச் சோதித்தோம் என்றுفَاسْتَغْفَرَஆகவே அவர் மன்னிப்புக்கோரினார்رَبَّهٗதனது இறைவனிடம்وَ خَرَّமேலும் அவர் விழுந்தார்رَاكِعًاசிரம் பணிந்தவராகوَّ اَنَابَ۩இன்னும் திரும்பினார்
கால லகத் ளலமக Bபிஸு 'ஆலி னஃஜதிக இலா னிஹாஜிஹ்; வ இன்ன கதீரன் மினல் குலதா'இ ல-யBப்கீ Bபஃளுஹும் 'அலா Bபஃளின் இல்லல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி வ கலீலுன் மா ஹும்; வ ளன்ன தாவூது அன்னமா Fபதன்னாஹு Fபஸ்தக்Fபர ரBப்Bபஹூ வ கர்ர ராகி'அ(ன்)வ் வ அனாBப்
(அதற்கு தாவூது:) “உம்முடைய ஆட்டை அவர் தம்முடைய ஆடுகளுடன் சேர்த்து விடும்படிக் கேட்டது கொண்டு நிச்சயமாக அவர் உம்மீது அநியாயம் செய்து விட்டார்; நிச்சயமாகக் கூட்டாளிகளில் பெரும்பாலோர் - அவர்களில் சிலர் சிலரை மோசம் செய்து விடுகின்றனர்; ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்லமல்கள் செய்பவர்களைத் தவிர; இத்தகையவர் சிலரே” என்று கூறினார்; இதற்குள்: “நிச்சயமாக நாமே அவரைச் சோதித்து விட்டோம்” என்று தாவூது எண்ணித் தம்முடைய இறைவனிடம் மன்னிப்பு கோரிக் குனிந்து விழுந்தவராக இறைவனை நோக்கினார்.
اَمْ نَجْعَلُ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ كَالْمُفْسِدِیْنَ فِی الْاَرْضِ ؗ اَمْ نَجْعَلُ الْمُتَّقِیْنَ كَالْفُجَّارِ ۟
اَمْஅல்லதுنَجْعَلُநாம் ஆக்குவோமாالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاஈமான் கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِநற்செயல்களைكَالْمُفْسِدِیْنَகுழப்பம் செய்பவர்களைப் போல்فِیஇல்الْاَرْضِ ؗபூமிاَمْஅல்லதுنَجْعَلُநாம் ஆக்குவோமாالْمُتَّقِیْنَஇறையச்சம் உடையவர்களைكَالْفُجَّارِதீயவர்களைப் போல்
அம் னஜ்'அலுல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி கல்முFபிஸ்தீன Fபில் அர்ளி அம் னஜ்'அலுல் முத்தகீன கல்Fபுஜ்ஜார்
அல்லது ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்லமல்கள் செய்வோரை பூமியில் குழப்பம் செய்வோரைப்போல் நாம் ஆக்கிவிடுவோமா? அல்லது, பயபக்தியுடையோரைப் பாவிகளைப் போல் நாம் ஆக்கிவிடுவோமா?
مَنْ عَمِلَ سَیِّئَةً فَلَا یُجْزٰۤی اِلَّا مِثْلَهَا ۚ وَمَنْ عَمِلَ صَالِحًا مِّنْ ذَكَرٍ اَوْ اُ وَهُوَ مُؤْمِنٌ فَاُولٰٓىِٕكَ یَدْخُلُوْنَ الْجَنَّةَ یُرْزَقُوْنَ فِیْهَا بِغَیْرِ حِسَابٍ ۟
مَنْஎவர்عَمِلَசெய்தாரோسَیِّئَةًதீமையைفَلَاஎனவே இல்லைیُجْزٰۤیகூலி வழங்கப்படுவார்اِلَّاஅன்றிمِثْلَهَا ۚஅதைப் போன்றதேوَ مَنْமேலும் எவர்عَمِلَசெய்தாரோصَالِحًاநற்செயலைمِّنْஇருந்துذَكَرٍஆண்اَوْஅல்லதுاُنْثٰیபெண்وَ هُوَமேலும் அவர்مُؤْمِنٌஇறைநம்பிக்கையாளராகفَاُولٰٓىِٕكَஅத்தகையோர்یَدْخُلُوْنَநுழைவார்கள்الْجَنَّةَசுவனத்தில்یُرْزَقُوْنَவாழ்வாதாரம் அளிக்கப்படுவார்கள்فِیْهَاஅதில்بِغَیْرِஇன்றிحِسَابٍகணக்கு
மன் 'அமில ஸய்யி'அதன் Fபலா யுஜ்Zஜா இல்லா மித்லஹா வ மன் 'அமில ஸாலிஹம் மின் தகரின் அவ் உன்தா வ ஹுவ மு'மினுன் Fப உலா'இக யத்குலூனல் ஜன்னத யுர்Zஜகூன Fபீஹா Bபிகய்ரி ஹிஸாBப்
“எவர் தீமை செய்கிறாரோ, அவர் அதைப் போன்றதையே கூலியாகக் கொடுக்கப்படுவார்; எவர் ஒருவர், ஆணோ அல்லது பெண்ணோ முஃமினான நிலையில் ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறாரோ அவர்கள் சுவர்க்கத்தில் பிரவேசிப்பார்; அதில் கணக்கில்லாது அவர்கள் உணவளிக்கப்படுவார்கள்.
وَمَا یَسْتَوِی الْاَعْمٰی وَالْبَصِیْرُ ۙ۬ وَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَلَا الْمُسِیْٓءُ ؕ قَلِیْلًا مَّا تَتَذَكَّرُوْنَ ۟
وَ مَاமேலும் இல்லைیَسْتَوِیசமமாவார்கள்الْاَعْمٰیபார்வையற்றவரும்وَ الْبَصِیْرُ ۙ۬மேலும் பார்வையுடையவரும்وَ الَّذِیْنَமேலும் எவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِநற்செயல்களைوَ لَاமேலும் இல்லைالْمُسِیْٓءُ ؕதீமை செய்பவரும்قَلِیْلًاமிகக் குறைவாகவேمَّاதான்تَتَذَكَّرُوْنَநீங்கள் சிந்திக்கிறீர்கள்
வமா யஸ்தவில் அஃமா வல்Bபஸீரு வல்லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி வ லல் முஸீ'; கலீலம் மா தததக்கரூன்
குருடரும், பார்வையுடையோரும் சமமாகார்; அவ்வாறே, ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்வோரும், தீயோரும் சமமாக மாட்டார்கள்; உங்களில் சொற்பமானவர்களே (இதைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுகிறீர்கள்.
اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ اَجْرٌ غَیْرُ مَمْنُوْنٍ ۟۠
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِநற்செயல்களைلَهُمْஅவர்களுக்குاَجْرٌநற்கூலிغَیْرُஅற்றمَمْنُوْنٍ۠குறைவு
இன்னல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி லஹும் அஜ்ருன் கய்ரு மம்னூன்
“நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு முடிவேயில்லாத (நிலையான) கூலியுண்டு.”  
وَمَنْ اَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَاۤ اِلَی اللّٰهِ وَعَمِلَ صَالِحًا وَّقَالَ اِنَّنِیْ مِنَ الْمُسْلِمِیْنَ ۟
وَ مَنْமேலும் எவர்اَحْسَنُமிகச் சிறந்தவர்قَوْلًاசொல்லால்مِّمَّنْஅவரை விடدَعَاۤஅழைக்கின்றாரோاِلَیபக்கம்اللّٰهِஅல்லாஹ்வின்وَ عَمِلَமேலும் செய்தாரோصَالِحًاநற்செயலைوَّ قَالَமேலும் கூறினாரோاِنَّنِیْநிச்சயமாக நான்مِنَஒருவன்الْمُسْلِمِیْنَமுஸ்லிம்களில்
வ மன் அஹ்ஸனு கவ்லம் மிம்மன் த'ஆ இலல் லாஹி வ 'அமில ஸாலிஹ(ன்)வ் வ கால இன்னனீ மினல் முஸ்லிமீன்
எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து: “நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரைவிட சொல்லால் அழகியவர் யார்?” (இருக்கின்றார்?)
مَنْ عَمِلَ صَالِحًا فَلِنَفْسِهٖ ۚ وَمَنْ اَسَآءَ فَعَلَیْهَا ؕ وَمَا رَبُّكَ بِظَلَّامٍ لِّلْعَبِیْدِ ۟
مَنْஎவர்عَمِلَசெய்கிறாரோصَالِحًاநன்மையைفَلِنَفْسِهٖஅது அவருக்கேوَ مَنْஇன்னும் எவர்اَسَآءَதீமை செய்கிறாரோفَعَلَیْهَا ؕஅது அவருக்கே எதிரானதுوَ مَاஇன்னும் இல்லைرَبُّكَஉமது இறைவன்بِظَلَّامٍஅநீதி இழைப்பவன்لِّلْعَبِیْدِஅடியார்களுக்கு
மன் 'அமில ஸலிஹன் FபலினFப்ஸிஹீ வ மன் அஸா'அ Fப'அலய்ஹா; வமா ரBப்Bபுக Bபிளல்லாமில் லில் 'அBபீத்
எவர் ஸாலிஹான (நல்ல) அமல் செய்கிறாரோ (அது) அவருக்கே நன்மையாகும், எவர் பாவம் செய்கிறாரோ (அது) அவருக்கே கேடாகும் - அன்றியும் உம்முடைய இறைவன் (தன்) அடியார்களுக்குச் சிறிதும் அநியாயம் செய்பவன் அல்லன்.  
تَرَی الظّٰلِمِیْنَ مُشْفِقِیْنَ مِمَّا كَسَبُوْا وَهُوَ وَاقِعٌ بِهِمْ ؕ وَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فِیْ رَوْضٰتِ الْجَنّٰتِ ۚ لَهُمْ مَّا یَشَآءُوْنَ عِنْدَ رَبِّهِمْ ؕ ذٰلِكَ هُوَ الْفَضْلُ الْكَبِیْرُ ۟
تَرَیநீர் காண்பீர்الظّٰلِمِیْنَஅநியாயக்காரர்களைمُشْفِقِیْنَஅஞ்சுபவர்களாகمِمَّاஎதிலிருந்துكَسَبُوْاஅவர்கள் சம்பாதித்தார்களோوَ هُوَமேலும் அதுوَاقِعٌۢநிகழக்கூடியதுبِهِمْ ؕஅவர்கள் மீதுوَ الَّذِیْنَமேலும் எவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِநற்செயல்களைفِیْஇல்رَوْضٰتِபூஞ்சோலைகள்الْجَنّٰتِ ۚசுவனங்களின்لَهُمْஅவர்களுக்குمَّاஎதைیَشَآءُوْنَஅவர்கள் நாடுகிறார்களோعِنْدَஇடத்திலேرَبِّهِمْ ؕஅவர்களின் இறைவனின்ذٰلِكَஅதுவேهُوَஅதுالْفَضْلُபேரருள்الْكَبِیْرُமிகப்பெரியது
தரள் ளாலிமீன முஷ்Fபிகீன மிம்மா கஸBபூ வ ஹுவ வாகி'உம் Bபிஹிம்; வல்லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி Fபீ ரவ்ளாதில் ஜன்னாதி லஹும் மா யஷா'ஊன 'இன்த ரBப்Bபிஹிம்; தாலிக ஹுவல் Fபள்லுல் கBபீர்
(அந்நாளில்) அநியாயக்காரர்கள் தாங்கள் சம்பாதித்த (தீய)தைப் பற்றி பயந்து கொண்டிருப்பதை நீர் பார்ப்பீர்; ஆனால் அது அவர்கள் மீது நிகழவே செய்யும்; ஆனால் எவர் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்கள் சுவர்க்கப் பூங்காவனங்களில் இருப்பார்கள்; அவர்கள் விரும்பியது அவர்களுடைய இறைவனிடம் கிடைக்கும். அதுவே பெரும் பாக்கியமாகும்.
ذٰلِكَ الَّذِیْ یُبَشِّرُ اللّٰهُ عِبَادَهُ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ؕ قُلْ لَّاۤ اَسْـَٔلُكُمْ عَلَیْهِ اَجْرًا اِلَّا الْمَوَدَّةَ فِی الْقُرْبٰی ؕ وَمَنْ یَّقْتَرِفْ حَسَنَةً نَّزِدْ لَهٗ فِیْهَا حُسْنًا ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ شَكُوْرٌ ۟
ذٰلِكَஅதுவேالَّذِیْஎதைیُبَشِّرُநற்செய்தியாகக் கூறுகிறானோاللّٰهُஅல்லாஹ்عِبَادَهُதன் அடியார்களுக்குالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِ ؕநற்செயல்களைقُلْநீர் கூறுவீராகلَّاۤஇல்லைاَسْـَٔلُكُمْநான் உங்களிடம் கேட்கிறேன்عَلَیْهِஅதற்காகاَجْرًاஒரு கூலியைاِلَّاதவிரالْمَوَدَّةَஅன்பைفِیஇல்الْقُرْبٰی ؕநெருங்கிய உறவுوَ مَنْஇன்னும் எவர்یَّقْتَرِفْசெய்கிறாரோحَسَنَةًஒரு நன்மையைنَّزِدْநாம் அதிகப்படுத்துவோம்لَهٗஅவருக்குفِیْهَاஅதில்حُسْنًا ؕநன்மையைاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்غَفُوْرٌமிக மன்னிப்பவன்شَكُوْرٌநன்றியை ஏற்பவன்
தாலிகல் லதீ யுBபஷ் ஷிருல் லாஹு 'இBபாதஹுல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாத்; குல் லா அஸ்'அலுகும் 'அலய்ஹி அஜ்ரன் இல்லல் மவத்தத Fபில் குர்Bபா; வ மய் யக்தரிFப் ஹஸனதன் னZஜித் லஹூ Fபீஹா ஹுஸ்னா; இன்னல் லாஹ கFபூருன் ஷகூர்
ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்ல அமல்கள் செய்துவரும் தன் அடியார்களுக்கு அல்லாஹ் நன்மாராயங் கூறுவதும் இதுவே: (நபியே!) நீர் கூறும்: “உறவினர்கள் மீது அன்பு கொள்வதைத் தவிர, இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை!” அன்றியும், எவர் ஒரு நன்மை செய்கிறாரோ, அவருக்கு நாம் அதில் பின்னும் (பல) நன்மையை அதிகமாக்குவோம்; நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நன்றியை ஏற்றுக் கொள்பவனாகவும் இருக்கின்றான்.
وَیَسْتَجِیْبُ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَیَزِیْدُهُمْ مِّنْ فَضْلِهٖ ؕ وَالْكٰفِرُوْنَ لَهُمْ عَذَابٌ شَدِیْدٌ ۟
وَ یَسْتَجِیْبُமேலும் அவன் பதிலளிக்கிறான்الَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِநற்செயல்களைوَ یَزِیْدُهُمْமேலும் அவர்களுக்கு அதிகப்படுத்துகிறான்مِّنْஇருந்துفَضْلِهٖ ؕஅவனது அருட்கொடைوَ الْكٰفِرُوْنَமேலும் நிராகரிப்பவர்கள்لَهُمْஅவர்களுக்குعَذَابٌவேதனைشَدِیْدٌகடுமையானது
வ யஸ்தஜீBபுல் லதீன ஆமனூ வ 'அமிலு ஸாலிஹாதி வ யZஜீதுஹும் மின் Fபள்லிஹ்; வல் காFபிரூன லஹும் 'அதாBபுன் ஷதீத்
அன்றியும் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல் செய்பவர்(களின் பிரார்த்தனை)களையும் ஏற்று அவர்களுக்குத் தன் அருளை அதிகப்படுத்துகிறான்; இன்னும், நிராகரிப்பவர்களுக்கு கடுமையான வேதனையுண்டு.
مَنْ عَمِلَ صَالِحًا فَلِنَفْسِهٖ ۚ وَمَنْ اَسَآءَ فَعَلَیْهَا ؗ ثُمَّ اِلٰی رَبِّكُمْ تُرْجَعُوْنَ ۟
مَنْஎவர்عَمِلَசெய்கிறாரோصَالِحًاநன்மையைفَلِنَفْسِهٖ ۚஅது அவருக்கேوَ مَنْமேலும் எவர்اَسَآءَதீமை செய்கிறாரோفَعَلَیْهَا ؗஅது அவருக்கு எதிராகவேثُمَّபின்னர்اِلٰیநோக்கிرَبِّكُمْஉங்கள் இறைவனைتُرْجَعُوْنَநீங்கள் திருப்பப்படுவீர்கள்
மன் 'அமில ஸாலிஹன் FபலினFப்ஸிஹீ வ மன் அஸா'அ Fப'அலய்ஹா தும்ம இலா ரBப்Bபிகும் துர்ஜ'ஊன்
எவர் ஸாலிஹான (நல்ல) அமலை செய்கிறாரோ அது அவருக்கே நன்மையாகும்; அன்றியும், எவர் தீமையைச் செய்கிறாரோ, அது அவருக்கே தீமையாகும், பின்னர் உங்கள் இறைவனிடமே நீங்கள் மீட்டப்படுவீர்கள்.
وَوَصَّیْنَا الْاِنْسَانَ بِوَالِدَیْهِ اِحْسٰنًا ؕ حَمَلَتْهُ اُمُّهٗ كُرْهًا وَّوَضَعَتْهُ كُرْهًا ؕ وَحَمْلُهٗ وَفِصٰلُهٗ ثَلٰثُوْنَ شَهْرًا ؕ حَتّٰۤی اِذَا بَلَغَ اَشُدَّهٗ وَبَلَغَ اَرْبَعِیْنَ سَنَةً ۙ قَالَ رَبِّ اَوْزِعْنِیْۤ اَنْ اَشْكُرَ نِعْمَتَكَ الَّتِیْۤ اَنْعَمْتَ عَلَیَّ وَعَلٰی وَالِدَیَّ وَاَنْ اَعْمَلَ صَالِحًا تَرْضٰىهُ وَاَصْلِحْ لِیْ فِیْ ذُرِّیَّتِیْ ؕۚ اِنِّیْ تُبْتُ اِلَیْكَ وَاِنِّیْ مِنَ الْمُسْلِمِیْنَ ۟
وَ وَصَّیْنَاமேலும் நாம் உபதேசித்தோம்الْاِنْسَانَமனிதனுக்குبِوَالِدَیْهِஅவனது பெற்றோருக்குاِحْسٰنًا ؕநன்மை செய்யுமாறுحَمَلَتْهُஅவனைச் சுமந்தாள்اُمُّهٗஅவனது தாய்كُرْهًاசிரமத்துடன்وَّ وَضَعَتْهُமேலும் அவனைப் பெற்றெடுத்தாள்كُرْهًا ؕசிரமத்துடன்وَ حَمْلُهٗமேலும் அவனைச் சுமப்பதும்وَ فِصٰلُهٗமேலும் அவனது பால்குடி மறப்பதும்ثَلٰثُوْنَமுப்பதுشَهْرًا ؕமாதங்களாகும்حَتّٰۤیவரைاِذَاபோதுبَلَغَஅவன் அடைந்தاَشُدَّهٗதனது வாலிபத்தைوَ بَلَغَமேலும் அவன் அடைந்தاَرْبَعِیْنَநாற்பதுسَنَةً ۙஆண்டுகளைقَالَஅவன் கூறுவான்رَبِّஎன் இறைவனேاَوْزِعْنِیْۤஎனக்கு அருள்வாயாகاَنْநான்اَشْكُرَநன்றி செலுத்தنِعْمَتَكَஉனது அருட்கொடைக்குالَّتِیْۤஎத்தகையதென்றால்اَنْعَمْتَநீ அருளினாயோعَلَیَّஎன் மீதுوَ عَلٰیமேலும் மீதுوَالِدَیَّஎன் பெற்றோர்وَ اَنْமேலும் நான்اَعْمَلَசெய்யصَالِحًاநற்செயலைتَرْضٰىهُநீ அதனைப் பொருந்திக் கொள்வாய்وَ اَصْلِحْமேலும் சீராக்குவாயாகلِیْஎனக்காகفِیْஇல்ذُرِّیَّتِیْ ؕۚஎன் சந்ததியினரைاِنِّیْநிச்சயமாக நான்تُبْتُபாவமன்னிப்புத் தேடி மீண்டேன்اِلَیْكَஉன்பால்وَ اِنِّیْமேலும் நிச்சயமாக நான்مِنَஉள்ளவன்الْمُسْلِمِیْنَமுஸ்லிம்களில்
வ வஸ்ஸய்னல் இன்ஸான Bபிவாலிதய்ஹி இஹ்ஸான; ஹமலத் ஹு உம்முஹூ குர்ஹ(ன்)வ்-வ வள'அத் ஹு குர்ஹ(ன்)வ் வ ஹம்லுஹூ வ Fபிஸாலுஹூ தலாதூன ஷஹ்ரா; ஹத்தா இதா Bபலக அஷுத்தஹூ வ Bபலக அர்Bப'ஈன ஸனதன் கால ரBப்Bபி அவ்Zஜிஃ னீ அன் அஷ்குர னிஃமதகல் லதீ அன்'அம்த 'அலய்ய வ 'அலா வாலிதய்ய வ அன் அஃமல ஸாலிஹன் தர்ளாஹு வ அஸ்லிஹ் லீ Fபீ துர்ரிய்யதீ; இன்னீ துBப்து இலய்க வ இன்னீ மினல் முஸ்லிமீன்
மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம்; அவனுடைய தாய், வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள்; (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும்; அவனுக்குப் பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பதுமாதங்களாகும். அவன் வாலிபமாகி, நாற்பது வயதை அடைந்ததும்: “இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக, (அருள் கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்புகிறேன்; அன்றியும், நான் முஸ்லிம்களில் நின்றுமுள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக) இருக்கின்றேன்” என்று கூறுவான்.
وَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَاٰمَنُوْا بِمَا نُزِّلَ عَلٰی مُحَمَّدٍ وَّهُوَ الْحَقُّ مِنْ رَّبِّهِمْ ۙ كَفَّرَ عَنْهُمْ سَیِّاٰتِهِمْ وَاَصْلَحَ بَالَهُمْ ۟
وَ الَّذِیْنَமேலும் எவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِநற்செயல்களைوَ اٰمَنُوْاமேலும் நம்பிக்கை கொண்டார்களோبِمَاஎதன் மீதுنُزِّلَஅருளப்பட்டதோعَلٰیமீதுمُحَمَّدٍமுஹம்மதின்وَّ هُوَமேலும் அதுالْحَقُّசத்தியமாகும்مِنْஇருந்துرَّبِّهِمْ ۙஅவர்களின் இறைவனிடம்كَفَّرَஅவன் போக்கினான்عَنْهُمْஅவர்களை விட்டும்سَیِّاٰتِهِمْஅவர்களின் தீமைகளைوَ اَصْلَحَமேலும் அவன் சீராக்கினான்بَالَهُمْஅவர்களின் நிலையை
வல்லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி வ ஆமனூ Bபிமா னுZஜ்Zஜில 'அலா முஹம்மதி(ன்)வ்-வ ஹுவல் ஹக்கு மிர் ரBப்Bபிஹிம் கFப்Fபர 'அன்ஹும் ஸய்யிஆதிஹிம் வ அஸ்லஹ Bபாலஹும்
ஆனால், எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, முஹம்மது மீது இறக்கி அருளப்பட்ட (வேதத்)தின் மீது - இது அவர்களுடைய இறைவனிடமிருந்து (வந்து)ள்ள உண்மையாக இருக்கிறது என்று நம்பிக்கை கொள்கிறார்களோ, அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் போக்கி, அவர்களுடைய நிலையையும் சீராக்குகின்றான்.
اِنَّ اللّٰهَ یُدْخِلُ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ؕ وَالَّذِیْنَ كَفَرُوْا یَتَمَتَّعُوْنَ وَیَاْكُلُوْنَ كَمَا تَاْكُلُ الْاَنْعَامُ وَالنَّارُ مَثْوًی لَّهُمْ ۟
اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்یُدْخِلُபுகுத்துவான்الَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِநற்செயல்களைجَنّٰتٍசுவனங்களில்تَجْرِیْஓடும்مِنْஇருந்துتَحْتِهَاஅவற்றின் கீழேالْاَنْهٰرُ ؕஆறுகள்وَ الَّذِیْنَமேலும் எவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோیَتَمَتَّعُوْنَசுகம் அனுபவிக்கிறார்கள்وَ یَاْكُلُوْنَமேலும் உண்கிறார்கள்كَمَاபோன்றுتَاْكُلُஉண்கின்றனவோالْاَنْعَامُகால்நடைகள்وَ النَّارُமேலும் நரகம்مَثْوًیதங்குமிடம்لَّهُمْஅவர்களுக்கு
இன்னல்-லாஹ யுத்கிலுல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி ஜன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு வல்லதீன கFபரூ யதமத்த'ஊன வ ய'குலூன கமா த'குலுல் அன்'ஆமு வன் னாரு மத்வன் லஹும்
நிச்சயமாக அல்லாஹ்: எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைச் சுவர்க்கங்களில் பிரவேசிக்கச் செய்கிறான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்; ஆனால் நிராகரிப்பவர்களோ (இவ்வுலக சுகங்களை) அனுபவித்துக் கொண்டும், மிருகங்கள் தீனி தின்பதைப் போல் தின்று கொண்டும் இருக்கிறார்கள். (நரக) நெருப்பே இவர்கள் தங்குமிடமாக இருக்கும்.
مُحَمَّدٌ رَّسُوْلُ اللّٰهِ ؕ وَالَّذِیْنَ مَعَهٗۤ اَشِدَّآءُ عَلَی الْكُفَّارِ رُحَمَآءُ بَیْنَهُمْ تَرٰىهُمْ رُكَّعًا سُجَّدًا یَّبْتَغُوْنَ فَضْلًا مِّنَ اللّٰهِ وَرِضْوَانًا ؗ سِیْمَاهُمْ فِیْ وُجُوْهِهِمْ مِّنْ اَثَرِ السُّجُوْدِ ؕ ذٰلِكَ مَثَلُهُمْ فِی التَّوْرٰىةِ ۛۖۚ وَمَثَلُهُمْ فِی الْاِنْجِیْلِ ۛ۫ۚ كَزَرْعٍ اَخْرَجَ شَطْـَٔهٗ فَاٰزَرَهٗ فَاسْتَغْلَظَ فَاسْتَوٰی عَلٰی سُوْقِهٖ یُعْجِبُ الزُّرَّاعَ لِیَغِیْظَ بِهِمُ الْكُفَّارَ ؕ وَعَدَ اللّٰهُ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ مِنْهُمْ مَّغْفِرَةً وَّاَجْرًا عَظِیْمًا ۟۠
مُحَمَّدٌமுஹம்மதுرَّسُوْلُதூதர்اللّٰهِ ؕஅல்லாஹ்வின்وَ الَّذِیْنَமேலும் எவர்கள்مَعَهٗۤஅவருடன் இருக்கிறார்களோاَشِدَّآءُகடுமையானவர்கள்عَلَیமீதுالْكُفَّارِநிராகரிப்பாளர்கள்رُحَمَآءُகருணையுடையவர்கள்بَیْنَهُمْதங்களுக்குள்تَرٰىهُمْநீர் அவர்களைக் காண்பீர்رُكَّعًاருகூஃ செய்பவர்களாகسُجَّدًاஸுஜூது செய்பவர்களாகیَّبْتَغُوْنَஅவர்கள் தேடுகிறார்கள்فَضْلًاஅருளைمِّنَஇடமிருந்துاللّٰهِஅல்லாஹ்وَ رِضْوَانًا ؗமேலும் பொருத்தத்தைسِیْمَاهُمْஅவர்களின் அடையாளம்فِیْஇல்وُجُوْهِهِمْஅவர்களின் முகங்கள்مِّنْஇருந்துاَثَرِஅடையாளத்தால்السُّجُوْدِ ؕஸுஜூதுடையذٰلِكَஇதுவேمَثَلُهُمْஅவர்களின் உதாரணம்فِیஇல்التَّوْرٰىةِ ۛۖۚதவ்ராத்وَ مَثَلُهُمْமேலும் அவர்களின் உதாரணம்فِیஇல்الْاِنْجِیْلِ ۛ۫ۚஇன்ஜீல்كَزَرْعٍஒரு பயிரைப் போன்றதாகும்اَخْرَجَஅது வெளிப்படுத்தியதுشَطْـَٔهٗஅதன் முளையைفَاٰزَرَهٗபின்னர் அதனைப் பலப்படுத்தியதுفَاسْتَغْلَظَபின்னர் அது தடித்ததுفَاسْتَوٰیபின்னர் அது நிமிர்ந்து நின்றதுعَلٰیமீதுسُوْقِهٖஅதன் தண்டுیُعْجِبُஅது மகிழ்விக்கிறதுالزُّرَّاعَவிவசாயிகளைلِیَغِیْظَகோபமூட்டுவதற்காகبِهِمُஅவர்களைக் கொண்டுالْكُفَّارَ ؕநிராகரிப்பாளர்களைوَعَدَவாக்களித்துள்ளான்اللّٰهُஅல்லாஹ்الَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاஈமான் கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِநற்செயல்களைمِنْهُمْஅவர்களில்مَّغْفِرَةًமன்னிப்பையும்وَّ اَجْرًاமேலும் கூலியையும்عَظِیْمًا۠மகத்தான
முஹம்மதுர் ரஸூலுல் லாஹ்; வல்லதீன ம'அஹூ அஷித்தா'உ 'அலல் குFப்Fபாரி ருஹமா'உ Bபய்னஹும் தராஹும் ருக்க'அன் ஸுஜ்ஜத(ன்)ய் யBப்தகூன Fபள்லம் மினல் லாஹி வ ரிள்வான ஸீமாஹும் Fபீ வுஜூஹிஹிம் மின் அதரிஸ் ஸுஜூத்; தாலிக மதலுஹும் Fபித் தவ்ராஹ்; வ மதலுஹும் Fபில் இன்ஜீலி கZஜர்'இன் அக்ரஜ ஷத் 'அஹூ Fப 'ஆZஜரஹூ Fபஸ்தக்லள Fபஸ்தவா 'அலா ஸூகிஹீ யுஃஜிBபுத் Zஜுர்ரா'அ லியகீள Bபிஹிமுல் குFப்Fபார்; வ'அதல் லாஹுல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி மின்ஹும் மக்Fபிரத(ன்)வ் வ அஜ்ரன் 'அளீமா
முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்; அவருடன் இருப்பவர்கள், காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள். ருகூஃ செய்பவர்களாகவும், ஸுஜூது செய்பவர்களாகவும்; அல்லாஹ்விடமிருந்து (அவன்) அருளையும் (அவனுடைய) திருப்பொருத்தத்தையும் விரும்பி வேண்டுபவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர்; அவர்களுடைய அடையாளமாவது: அவர்களுடைய முகங்களில் (நெற்றியில்) ஸுஜூதுடைய அடையாளமிருக்கும்; இதுவே தவ்ராத்திலுள்ள அவர்களின் உதாரணமாகும், இன்ஜீலிலுள்ள அவர்கள் உதாரணமாவது: ஒரு பயிரைப் போன்றது; அது தன் முளையைக் கிளப்பி(ய பின்) அதை பலப்படுத்துகிறது; பின்னர் அது பருத்துக் கனமாகி, பிறகு விவசாயிகளை மகிழ்வடையச் செய்யும் விதத்தில், அது தன் அடித்தண்டின் மீது நிமிர்ந்து செவ்வையாக நிற்கிறது; இவற்றைக் கொண்டு நிராகரிப்பவர்களை அவன் கோப மூட்டுகிறான் - ஆனால் அவர்களில் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் வாக்களிக்கின்றான்.
وَاَنْفِقُوْا مِنْ مَّا رَزَقْنٰكُمْ مِّنْ قَبْلِ اَنْ یَّاْتِیَ اَحَدَكُمُ الْمَوْتُ فَیَقُوْلَ رَبِّ لَوْلَاۤ اَخَّرْتَنِیْۤ اِلٰۤی اَجَلٍ قَرِیْبٍ ۙ فَاَصَّدَّقَ وَاَكُنْ مِّنَ الصّٰلِحِیْنَ ۟
وَ اَنْفِقُوْاமேலும் செலவு செய்யுங்கள்مِنْஇருந்துمَّاஎதைرَزَقْنٰكُمْநாம் உங்களுக்கு வழங்கினோமோمِّنْஇருந்துقَبْلِமுன்னதாகاَنْஎன்றுیَّاْتِیَவருவதற்குاَحَدَكُمُஉங்களில் ஒருவருக்குالْمَوْتُமரணம்فَیَقُوْلَஅப்போது அவர் கூறுவார்رَبِّஎன் இறைவனேلَوْ لَاۤஏன் நீاَخَّرْتَنِیْۤஎன்னை தாமதப்படுத்தக் கூடாதுاِلٰۤیவரைاَجَلٍஒரு தவணைقَرِیْبٍ ۙநெருங்கியفَاَصَّدَّقَஅதனால் நான் தர்மம் செய்திருப்பேன்وَ اَكُنْமேலும் நான் ஆகியிருப்பேன்مِّنَஉள்ளவர்களில்الصّٰلِحِیْنَநல்லோர்களில்
வ அன்Fபிகூ மிம் மா ரZஜக்னாகும் மின் கBப்லி அ(ன்)ய்-ய'திய அஹதகுமுல் மவ்து Fப யகூல ரBப்Bபி லவ் லா அக்கர்தனீ இலா அஜலின் கரீBபின் Fப அஸ்ஸத்தக வ அகும் மினஸ்ஸாலிஹீன்
உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள்; (அவ்வாறு செய்யாதது மரணிக்கும் சமயம்); “என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே” என்று கூறுவான்.
یَوْمَ یَجْمَعُكُمْ لِیَوْمِ الْجَمْعِ ذٰلِكَ یَوْمُ التَّغَابُنِ ؕ وَمَنْ یُّؤْمِنْ بِاللّٰهِ وَیَعْمَلْ صَالِحًا یُّكَفِّرْ عَنْهُ سَیِّاٰتِهٖ وَیُدْخِلْهُ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَاۤ اَبَدًا ؕ ذٰلِكَ الْفَوْزُ الْعَظِیْمُ ۟
یَوْمَநாளில்یَجْمَعُكُمْஅவன் உங்களை ஒன்றுசேர்ப்பான்لِیَوْمِநாளுக்காகالْجَمْعِஒன்றுசேர்க்கும்ذٰلِكَஅதுதான்یَوْمُநாள்التَّغَابُنِ ؕநஷ்டத்திற்குரியوَ مَنْமேலும் எவர்یُّؤْمِنْۢநம்பிக்கை கொள்கிறாரோبِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுوَ یَعْمَلْமேலும் செய்கிறாரோصَالِحًاநற்செயல்களைیُّكَفِّرْஅவன் நீக்கிவிடுவான்عَنْهُஅவரிடமிருந்துسَیِّاٰتِهٖஅவருடைய தீமைகளைوَ یُدْخِلْهُமேலும் அவரை நுழைவிப்பான்جَنّٰتٍசுவனங்களில்تَجْرِیْஓடிக்கொண்டிருக்கும்مِنْஇருந்துتَحْتِهَاஅவற்றின் கீழேالْاَنْهٰرُஆறுகள்خٰلِدِیْنَநிரந்தரமாகத் தங்குபவர்களாகفِیْهَاۤஅவற்றில்اَبَدًا ؕஎன்றென்றும்ذٰلِكَஅதுவேالْفَوْزُவெற்றிالْعَظِیْمُமகத்தான
யவ்ம யஜ்ம'உகும் லி யவ்மில் ஜம்'இ தாலிக யவ்முத் தகாBபுன்; வ ம(ன்)ய்-யுமிம் Bபில்லாஹி வ யஃமல் ஸாலிஹ(ன்)ய் யுகFப்Fபிர் 'அன்ஹு ஸய்யி ஆதிஹீ வ யுத்கில்ஹு ஜன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு காலிதீன Fபீஹா அBபதா; தாலிகல் Fபவ்Zஜுல் 'அளீம்
ஒன்று திரட்டும் (மறுமை) நாளுக்காக அவன் உங்களை ஒன்று திரட்டும் நாள் அதுவே, (தீயோரை) நஷ்டப்படுத்தும் நாளாகும்; ஆனால், எவர் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு, ஸாலிஹான - நல்ல - அமல்களைச் செய்கிறாரோ, அவருடைய பாவங்களை அவரை விட்டும் நீக்கி, ஆறுகள் அவற்றின் கீழே ஓடிக் கொண்டிருக்கும் சுவர்க்கச் சோலைகளிலும் அவன் அவரை பிரவேசிக்கச் செய்வான்; அவற்றில் என்றென்றும் இருப்பார்கள் - இது மகத்தான பாக்கியமாகும்.
رَّسُوْلًا یَّتْلُوْا عَلَیْكُمْ اٰیٰتِ اللّٰهِ مُبَیِّنٰتٍ لِّیُخْرِجَ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ مِنَ الظُّلُمٰتِ اِلَی النُّوْرِ ؕ وَمَنْ یُّؤْمِنْ بِاللّٰهِ وَیَعْمَلْ صَالِحًا یُّدْخِلْهُ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَاۤ اَبَدًا ؕ قَدْ اَحْسَنَ اللّٰهُ لَهٗ رِزْقًا ۟
رَّسُوْلًاஒரு தூதரைیَّتْلُوْاஅவர் ஓதிக்காட்டுகிறார்عَلَیْكُمْஉங்களுக்குاٰیٰتِவசனங்களைاللّٰهِஅல்லாஹ்வின்مُبَیِّنٰتٍதெளிவானلِّیُخْرِجَஅவர் வெளியேற்றுவதற்காகالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِநற்செயல்களைمِنَஇருந்துالظُّلُمٰتِஇருள்களில்اِلَیநோக்கிالنُّوْرِ ؕஒளியின்وَ مَنْஇன்னும் எவர்یُّؤْمِنْۢநம்பிக்கை கொள்கிறாரோبِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுوَ یَعْمَلْமேலும் செய்கிறாரோصَالِحًاநற்செயலைیُّدْخِلْهُஅவனை அவர் புகுத்துவார்جَنّٰتٍசுவனச் சோலைகளில்تَجْرِیْஓடும்مِنْஇருந்துتَحْتِهَاஅவற்றின் கீழேالْاَنْهٰرُஆறுகள்خٰلِدِیْنَஎன்றென்றும் தங்குபவர்களாகفِیْهَاۤஅவற்றில்اَبَدًا ؕநிலையாகقَدْதிண்ணமாகاَحْسَنَஅழகியதாக்கினான்اللّٰهُஅல்லாஹ்لَهٗஅவனுக்குرِزْقًاவாழ்வாதாரத்தை
ரஸூல(ன்)ய் யத்லூ 'அலய்கும் ஆயாதில் லாஹி முBபய்யினாதில் லியுக்ரிஜல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி மினள் ளுலுமாதி இலன் னூர்; வ ம(ன்)ய் யு'மின் Bபில்லாஹி வ யஃமல் ஸாலிஹ(ன்)ய் யுத்கில்ஹு ஜன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு காலிதீன Fபீஹா அBபதா கத் அஹ்ஸனல் லாஹு லஹூ ரிZஜ்கா
அன்றியும், ஒரு தூதரையும் அவன் (அனுப்பி வைத்தான்); அவர் அல்லாஹ்வுடைய தெளிவான வசனங்களை உங்களுக்கு ஓதிக் காண்பிக்கிறார்; ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்பவர்களை இருள்களிலிருந்து, ஒளியின் பக்கம் கொண்டு வருவதற்காக; மேலும் எவர் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல் செய்கின்றாரோ அவரை அல்லாஹ் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்கிறான் - அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள்; அல்லாஹ் அவர்களுக்குத் திடமாக உணவை அழகாக்கினான்.
اِنْ تَتُوْبَاۤ اِلَی اللّٰهِ فَقَدْ صَغَتْ قُلُوْبُكُمَا ۚ وَاِنْ تَظٰهَرَا عَلَیْهِ فَاِنَّ اللّٰهَ هُوَ مَوْلٰىهُ وَجِبْرِیْلُ وَصَالِحُ الْمُؤْمِنِیْنَ ۚ وَالْمَلٰٓىِٕكَةُ بَعْدَ ذٰلِكَ ظَهِیْرٌ ۟
اِنْஒருவேளைتَتُوْبَاۤநீங்கள் இருவரும் தவ்பா செய்தால்اِلَیபக்கம்اللّٰهِஅல்லாஹ்வின்فَقَدْநிச்சயமாகصَغَتْசாய்ந்துவிட்டனقُلُوْبُكُمَا ۚஉங்கள் இருவரின் இதயங்கள்وَ اِنْஇன்னும் ஒருவேளைتَظٰهَرَاநீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொண்டால்عَلَیْهِஅவருக்கு எதிராகفَاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்هُوَஅவன் தான்مَوْلٰىهُஅவருடைய பாதுகாவலன்وَ جِبْرِیْلُஇன்னும் ஜிப்ரீலும்وَ صَالِحُஇன்னும் நல்லோரானالْمُؤْمِنِیْنَ ۚமுஃமின்களும்وَ الْمَلٰٓىِٕكَةُஇன்னும் மலக்குகளும்بَعْدَபிறகுذٰلِكَஅதற்குப்ظَهِیْرٌஉதவியாளர்களாக இருப்பார்கள்
இன் ததூBபா இலல் லாஹி Fபகத் ஸகத் குலூBபுகுமா வ இன் தளாஹரா 'அலய்ஹி Fப இன்னல் லாஹ ஹுவ மவ்லாஹு வ ஜிBப்ரீலு வ ஸாலிஹுல் மு'மினீன்; வல் மலா'இகது Bபஃத தாலிக ளஹீர்
நீங்கள் இருவரும் - இதற்காக அல்லாஹ்விடம் தவ்பா செய்வீர்களாயின் (அது உங்களுக்கு நலமாகும்) ஏனெனில் நிச்சயமாக உங்களிருவரின் இதயங்களும் (இவ்விஷயத்தில் கோணிச்) சாய்ந்து விட்டன - தவிர, நீங்கள் இருவரும் அவருக்கெதிராய் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டால், நிச்சயமாக அல்லாஹ் - அவருடைய எஜமானன் (அவருக்கு உதவுவான்; அன்றியும்) ஜிப்ரீலும், ஸாலிஹான முஃமின்களும் (உதவுவார்கள்.) அதன் பின் மலக்குகளும் (அவருக்கு) உதவியாளராக இருப்பார்கள்.
ضَرَبَ اللّٰهُ مَثَلًا لِّلَّذِیْنَ كَفَرُوا امْرَاَتَ نُوْحٍ وَّامْرَاَتَ لُوْطٍ ؕ كَانَتَا تَحْتَ عَبْدَیْنِ مِنْ عِبَادِنَا صَالِحَیْنِ فَخَانَتٰهُمَا فَلَمْ یُغْنِیَا عَنْهُمَا مِنَ اللّٰهِ شَیْـًٔا وَّقِیْلَ ادْخُلَا النَّارَ مَعَ الدّٰخِلِیْنَ ۟
ضَرَبَஎடுத்துக்காட்டுகிறான்اللّٰهُஅல்லாஹ்مَثَلًاஓர் உதாரணத்தைلِّلَّذِیْنَஅவர்களுக்குكَفَرُواநிராகரித்தார்களோامْرَاَتَமனைவியைنُوْحٍநூஹின்وَّ امْرَاَتَமற்றும் மனைவியைلُوْطٍ ؕலூத்தின்كَانَتَاஅவ்விருவரும் இருந்தனர்تَحْتَகீழ்عَبْدَیْنِஇரு அடியார்களின்مِنْஉள்ளعِبَادِنَاநம் அடியார்களில்صَالِحَیْنِநல்லவர்களானفَخَانَتٰهُمَاஆனால் அவ்விருவரும் அவர்களுக்குத் துரோகம் செய்தனர்فَلَمْஎனவே இல்லைیُغْنِیَاஅவர்கள் இருவரும் காப்பாற்றعَنْهُمَاஅவ்விருவரையும்مِنَஇருந்துاللّٰهِஅல்லாஹ்விடம்شَیْـًٔاஎதனையும்وَّ قِیْلَமேலும் சொல்லப்பட்டதுادْخُلَاநீங்கள் இருவரும் நுழையுங்கள்النَّارَநரக நெருப்பில்مَعَஉடன்الدّٰخِلِیْنَநுழைபவர்களுடன்
ளரBபல் லாஹு மதலல் லில்லதீன கFபரும் ர அத னூஹி(ன்)வ் வம்ர அத லூத், கானதா தஹ்த 'அBப்தய்னி மின் 'இBபாதினா ஸாலிஹய்னி Fபகானதாஹுமா Fபலம் யுக்னியா 'அன்ஹுமா மினல் லாஹி ஷய் அ(ன்)வ்-வ கீலத் குலன் னார ம'அத் தாகிலீன்
நிராகரிப்பவர்களுக்கு, நூஹுடைய மனைவியையும் லூத்துடைய மனைவியையும் அல்லாஹ் உதாரணமாக்கி வைக்கிறான்; இவ்விருவரும் ஸாலிஹான நம் நல்லடியார்களில், இரு நல்லடியார்களின் மனைவிகளாகவே இருந்தனர்; எனினும் இவ்விருவரும் தம் கணவர்களை மோசம் செய்தனர்; எனவே, அவ்விருவரும் (தம் மனைவியரான) அவ்விருவரைவிட்டும் அல்லாஹ்விலிருந்து (வேதனையைத்) தடுக்க இயலவில்லை; இன்னும், “நீங்களிருவரும் (நரக) நெருப்பில் நுழைபவர்களுடனே நுழையுங்கள்” என்று (இவ்விருவருக்கும்) கூறப்பட்டது.
فَاجْتَبٰىهُ رَبُّهٗ فَجَعَلَهٗ مِنَ الصّٰلِحِیْنَ ۟
فَاجْتَبٰىهُஎனவே அவரைத் தேர்ந்தெடுத்தார்رَبُّهٗஅவருடைய இறைவன்فَجَعَلَهٗஅவரை ஆக்கினான்مِنَஒருவராகالصّٰلِحِیْنَநல்லோர்களில்
Fபஜ்தBபாஹு ரBப்Bபுஹூ Fபஜ'அலஹூ மினஸ் ஸாலிஹீன்
ஆனால், அவருடைய இறைவன், அவரைத் தேர்ந்தெடுத்து, அவரை ஸாலிஹானவர்களில் - நல்லவர்களில் நின்றும் ஆக்கினான்.
اِلَّا الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ اَجْرٌ غَیْرُ مَمْنُوْنٍ ۟۠
اِلَّاதவிரالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِநற்செயல்களைلَهُمْஅவர்களுக்குاَجْرٌநற்கூலிغَیْرُஇல்லாதمَمْنُوْنٍ۠முடிவு
இல்லல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி லஹும் அஜ்ருன் கய்ரு மம்னூன்
எவர்கள் ஈமான்கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைத் தவிர - அவர்களுக்கு முடிவேயில்லாத நற்கூலி உண்டு.
اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ جَنّٰتٌ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ؔؕ۬ ذٰلِكَ الْفَوْزُ الْكَبِیْرُ ۟ؕ
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِநற்செயல்களைلَهُمْஅவர்களுக்குجَنّٰتٌசுவனச்சோலைகள்تَجْرِیْஓடும்مِنْஇருந்துتَحْتِهَاஅவற்றின் கீழேالْاَنْهٰرُ ؔؕ۬ஆறுகள்ذٰلِكَஅதுவேالْفَوْزُவெற்றிالْكَبِیْرُؕமகத்தான
இன்னல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி லஹும் ஜன்னாதுன் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹார்; தாலிகல் Fபவ்Zஜுல் கBபீர்
ஆனால் எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ, அவர்களுக்குச் சுவர்க்கச் சோலைகள் உண்டு, அவற்றின் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும் - அதுவே மாபெரும் பாக்கியமாகும்.
كَذَّبَتْ ثَمُوْدُ بِطَغْوٰىهَاۤ ۟
كَذَّبَتْபொய்ப்பித்ததுثَمُوْدُஸமூதுبِطَغْوٰىهَاۤஅதன் வரம்பு மீறலினால்
கத்தBபத் தமூது Bபி தக்வாஹா
“ஸமூது” (கூட்டத்தினர்) தங்கள் அக்கிரமத்தினால் (ஸாலிஹ் நபியைப்) பொய்ப்பித்தனர்.
فَقَالَ لَهُمْ رَسُوْلُ اللّٰهِ نَاقَةَ اللّٰهِ وَسُقْیٰهَا ۟ؕ
فَقَالَஎனவே கூறினார்لَهُمْஅவர்களுக்குرَسُوْلُதூதர்اللّٰهِஅல்லாஹ்வின்نَاقَةَபெண் ஒட்டகத்தைاللّٰهِஅல்லாஹ்வின்وَ سُقْیٰهَاؕஅதன் குடிநீரையும்
Fபகால லஹும் ரஸூலுல் லாஹி னாகதல் லாஹி வ ஸுகியாஹா
அல்லாஹ்வின் தூதர் (ஸாலிஹ்) அவர்களை நோக்கி: “இப் பெண் ஒட்டகம் அல்லாஹ்வுடையது; இது தண்ணீர் அருந்த(த் தடை செய்யாது) விட்டு விடுங்கள்” என்று கூறினார்.
اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ۙ اُولٰٓىِٕكَ هُمْ خَیْرُ الْبَرِیَّةِ ۟ؕ
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِ ۙநற்செயல்களைاُولٰٓىِٕكَஅவர்கள்தாம்هُمْஅவர்கள்خَیْرُமிகச் சிறந்தவர்கள்الْبَرِیَّةِؕபடைப்பினங்களில்
இன்னல் லதீன ஆமனு வ 'அமிலுஸ் ஸாலிஹாதி உல-இக ஹும் கய்ருல் Bபரீய் யஹ்
நிச்சயமாக, எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ, அவர்கள் தாம் படைப்புகளில் மிக மேலானவர்கள்.
اِلَّا الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ ۙ۬ وَتَوَاصَوْا بِالصَّبْرِ ۟۠
اِلَّاதவிரالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِநற்செயல்களைوَ تَوَاصَوْاமேலும் ஒருவருக்கொருவர் உபதேசித்தார்களோبِالْحَقِّ ۙ۬சத்தியத்தைக் கொண்டுوَ تَوَاصَوْاமேலும் ஒருவருக்கொருவர் உபதேசித்தார்களோبِالصَّبْ۠رِபொறுமையைக் கொண்டு
இல்லல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி வ தவாஸவ் Bபில்ஹக்கி வ தவாஸவ் Bபிஸ்ஸBப்ர்
ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).