">

தேடல் வார்த்தை: "முஹம்ம"

தேடல் மொழிபெயர்ப்புகள்: முஹம்மது ஜான்

5 முடிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன

பக்கம் 1 / 1 (முடிவுகள் 1 - 5)

وَاِنْ كُنْتُمْ فِیْ رَیْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلٰی عَبْدِنَا فَاْتُوْا بِسُوْرَةٍ مِّنْ مِّثْلِهٖ ۪ وَادْعُوْا شُهَدَآءَكُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
وَاِنْ کُنْتُمْநீங்கள் இருந்தால்فِىْ رَيْبٍசந்தேகத்தில்مِّمَّاஎதில்نَزَّلْنَاஇறக்கினோம்عَلٰىமீதுعَبْدِنَاநம் அடிமைفَاْتُوْاஎனவே, வாருங்கள்بِسُوْرَةٍஓர் அத்தியாயத்தைக் கொண்டுمِّنْ مِّثْلِهٖஅது போன்றوَادْعُوْاஇன்னும் அழையுங்கள்شُهَدَآءَكُمْஉங்கள் ஆதரவாளர்களைمِّنْ دُوْنِஅல்லாதاللّٰهِஅல்லாஹ்اِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்صٰدِقِيْنَ‏உண்மையாளர்களாக
வ இன் குன்தும் Fபீ ரய்Bபிம் மிம்மா னZஜ்Zஜல்னா 'அலா 'அBப்தினா Fபதூ Bபி ஸூரதிம் மிம் மித்லிஹீ வத்'ஊ ஷுஹதா'அகும் மின் தூனில் லாஹி இன் குன்தும் ஸாதிகீன்
இன்னும், (முஹம்மது (ஸல்) என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை (யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள்.
وَمَا مُحَمَّدٌ اِلَّا رَسُوْلٌ ۚ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ ؕ اَفَاۡىِٕنْ مَّاتَ اَوْ قُتِلَ انْقَلَبْتُمْ عَلٰۤی اَعْقَابِكُمْ ؕ وَمَنْ یَّنْقَلِبْ عَلٰی عَقِبَیْهِ فَلَنْ یَّضُرَّ اللّٰهَ شَیْـًٔا ؕ وَسَیَجْزِی اللّٰهُ الشّٰكِرِیْنَ ۟
وَمَاஇல்லைمُحَمَّدٌமுஹம்மதுاِلَّاதவிரرَسُوْلٌ  ۚஒரு தூதரேقَدْ خَلَتْசென்று விட்டனர்مِنْ قَبْلِهِஅவருக்கு முன்னர்الرُّسُلُ‌ؕதூதர்கள்افَا۟ٮِٕنْ مَّاتَஅவர் இறந்தால்اَوْஅல்லதுقُتِلَகொல்லப்பட்டால்انْقَلَبْتُمْபுரண்டு விடுவீர்கள்عَلٰٓىமீதுاَعْقَابِكُمْ‌ؕஉங்கள் குதிங்கால்கள்وَمَنْஇன்னும் எவர்يَّنْقَلِبْபுரண்டு விடுவாரோعَلٰىமீதுعَقِبَيْهِதன் குதிங்கால்கள்فَلَنْ يَّضُرَّஅறவே தீங்கு செய்யமுடியாதுاللّٰهَஅல்லாஹ்விற்குشَيْئًا‌ ؕஎதையும்وَسَيَجْزِىகூலி வழங்குவான்اللّٰهُஅல்லாஹ்الشّٰكِرِيْنَ‏நன்றி செலுத்துபவர்களுக்கு
வமா முஹம்மதுன் இல்லா ரஸூலுன் கத் கலத் மின் கBப்லிஹிர் ருஸுல்; அFப'இம் மாத அவ் குதிலன் கலBப்தும் 'அலா அஃகாBபிகும்; வ மய் யன்கலிBப் 'அலா அகிBபய்ஹி Fபலய் யளுர்ரல் லாஹ ஷய்'ஆ; வ ஸயஜ்Zஜில் லாஹுஷ் ஷாகிரீன்
முஹம்மது(ஸல்) (இறைவனின்) தூதரே அன்றி(வேறு) அல்லர்; அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றுவிட்டார்கள்; அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டால்; நீங்கள் உங்கள் குதிகால்களின் மேல் (புறங்காட்டித்) திரும்பி விடுவீர்களா? அப்படி எவரேனும் தம் குதிகால்கள்மேல் (புறங்காட்டி) திரும்பி விடுவாரானால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது; அன்றியும், அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதிசீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான்.
مَا كَانَ مُحَمَّدٌ اَبَاۤ اَحَدٍ مِّنْ رِّجَالِكُمْ وَلٰكِنْ رَّسُوْلَ اللّٰهِ وَخَاتَمَ النَّبِیّٖنَ ؕ وَكَانَ اللّٰهُ بِكُلِّ شَیْءٍ عَلِیْمًا ۟۠
مَا كَانَஇருக்கவில்லைمُحَمَّدٌமுஹம்மதுاَبَآதந்தையாகاَحَدٍஒருவருக்கும்مِّنْ رِّجَالِكُمْஉங்கள் ஆண்களில்وَلٰـكِنْஎன்றாலும்رَّسُوْلَதூதராகவும்اللّٰهِஅல்லாஹ்வின்وَخَاتَمَஇறுதி முத்திரையாகவும்النَّبِيّٖنَ ؕநபிமார்களின்وَكَانَஇருக்கின்றான்اللّٰهُஅல்லாஹ்بِكُلِّ شَىْءٍஎல்லாவற்றையும்عَلِيْمًا‏நன்கறிந்தவனாக
மா கான முஹம்ம்மதுன் அBபா அஹதிம் மிர் ரிஜாலிகும் வ லாகிர் ரஸூலல் லாஹி வ காதமன் னBபிய்யீன்; வ கானல் லாஹு Bபிகுல்லி ஷய்'இன் 'அலீமா
முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை; ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன்.  
وَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَاٰمَنُوْا بِمَا نُزِّلَ عَلٰی مُحَمَّدٍ وَّهُوَ الْحَقُّ مِنْ رَّبِّهِمْ ۙ كَفَّرَ عَنْهُمْ سَیِّاٰتِهِمْ وَاَصْلَحَ بَالَهُمْ ۟
وَالَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்وَعَمِلُوا الصّٰلِحٰتِஇன்னும் நன்மைகளை செய்தனர்وَاٰمَنُوْاஇன்னும் நம்பிக்கை கொண்டார்கள்بِمَا نُزِّلَஇறக்கப்பட்டதை(யும்)عَلٰى مُحَمَّدٍமுஹம்மது நபியின் மீதுوَّهُوَஅதுதான்الْحَقُّஉண்மையாகும்مِنْ رَّبِّهِمْ‌ۙஅவர்களின் இறைவனிடம் இருந்து வந்தكَفَّرَபோக்கிவிடுவான்عَنْهُمْஅவர்களை விட்டுسَيِّاٰتِهِمْஅவர்களின் பாவங்களைوَاَصْلَحَஇன்னும் சீர் செய்துவிடுவான்بَالَهُمْ‏அவர்களின் காரியத்தை
வல்லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி வ ஆமனூ Bபிமா னுZஜ்Zஜில 'அலா முஹம்மதி(ன்)வ்-வ ஹுவல் ஹக்கு மிர் ரBப்Bபிஹிம் கFப்Fபர 'அன்ஹும் ஸய்யிஆதிஹிம் வ அஸ்லஹ Bபாலஹும்
ஆனால், எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, முஹம்மது மீது இறக்கி அருளப்பட்ட (வேதத்)தின் மீது - இது அவர்களுடைய இறைவனிடமிருந்து (வந்து)ள்ள உண்மையாக இருக்கிறது என்று நம்பிக்கை கொள்கிறார்களோ, அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் போக்கி, அவர்களுடைய நிலையையும் சீராக்குகின்றான்.
مُحَمَّدٌ رَّسُوْلُ اللّٰهِ ؕ وَالَّذِیْنَ مَعَهٗۤ اَشِدَّآءُ عَلَی الْكُفَّارِ رُحَمَآءُ بَیْنَهُمْ تَرٰىهُمْ رُكَّعًا سُجَّدًا یَّبْتَغُوْنَ فَضْلًا مِّنَ اللّٰهِ وَرِضْوَانًا ؗ سِیْمَاهُمْ فِیْ وُجُوْهِهِمْ مِّنْ اَثَرِ السُّجُوْدِ ؕ ذٰلِكَ مَثَلُهُمْ فِی التَّوْرٰىةِ ۛۖۚ وَمَثَلُهُمْ فِی الْاِنْجِیْلِ ۛ۫ۚ كَزَرْعٍ اَخْرَجَ شَطْـَٔهٗ فَاٰزَرَهٗ فَاسْتَغْلَظَ فَاسْتَوٰی عَلٰی سُوْقِهٖ یُعْجِبُ الزُّرَّاعَ لِیَغِیْظَ بِهِمُ الْكُفَّارَ ؕ وَعَدَ اللّٰهُ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ مِنْهُمْ مَّغْفِرَةً وَّاَجْرًا عَظِیْمًا ۟۠
مُحَمَّدٌமுஹம்மதுرَّسُوْلُ اللّٰهِ‌ ؕஅல்லாஹ்வின் தூதர்وَالَّذِيْنَ مَعَهٗۤஅவருடன் இருக்கின்றவர்கள்اَشِدَّآءُகடினமானவர்கள்عَلَى الْكُفَّارِநிராகரிப்பாளர்கள்மீதுرُحَمَآءُகருணையாளர்கள்بَيْنَهُمْதங்களுக்கு மத்தியில்تَرٰٮهُمْநீர் அவர்களைக்காண்பீர்رُكَّعًاருகூஃசெய்தவர்களாகسُجَّدًاசுஜூது செய்தவர்களாகيَّبْتَغُوْنَஅவர்கள் விரும்புகிறார்கள்فَضْلًاஅருளை(யும்)مِّنَ اللّٰهِஅல்லாஹ்வின்وَرِضْوَانًا‌பொருத்தத்தையும்سِيْمَاهُمْஅவர்களின் தோற்றம்فِىْ وُجُوْهِهِمْஅவர்களின் முகங்களில்مِّنْ اَثَرِஅடையாளமாகالسُّجُوْدِ‌ ؕசுஜூதின்ذٰ لِكَஇதுمَثَلُهُمْஅவர்களின் தன்மையாகும்فِى التَّوْرٰٮةِ ۛ ۖۚதவ்றாத்தில் கூறப்பட்டوَمَثَلُهُمْஇன்னும் அவர்களின் தன்மையாவதுفِى الْاِنْجِيْلِ ۛۚஇன்ஜீலில் கூறப்பட்டكَزَرْعٍஒரு விளைச்சலைப் போலாகும்اَخْرَجَவெளியாக்கியதுشَطْئَـهٗதனது காம்பைفَاٰزَرَهٗஇன்னும் அதை பலப்படுத்தியதுفَاسْتَغْلَظَபிறகு அது தடிப்பமாக ஆனதுفَاسْتَوٰىஅது உயர்ந்து நின்றுعَلٰى سُوْقِهٖதனது தண்டின் மீதுيُعْجِبُகவர்கிறதுالزُّرَّاعَவிவசாயிகளைلِيَـغِيْظَஅவன் ரோஷமூட்டுவதற்காகبِهِمُஅவர்கள் மூலமாகالْكُفَّارَ‌ ؕநிராகரிப்பாளர்களைوَعَدَவாக்களித்துள்ளான்اللّٰهُஅல்லாஹ்الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கை கொண்டவர்களுக்குوَعَمِلُواஇன்னும் செய்தார்கள்الصّٰلِحٰتِநன்மைகளைمِنْهُمْஅவர்களில்مَّغْفِرَةًமன்னிப்பை(யும்)وَّاَجْرًا عَظِيْمًا‏மகத்தானகூலியையும்
முஹம்மதுர் ரஸூலுல் லாஹ்; வல்லதீன ம'அஹூ அஷித்தா'உ 'அலல் குFப்Fபாரி ருஹமா'உ Bபய்னஹும் தராஹும் ருக்க'அன் ஸுஜ்ஜத(ன்)ய் யBப்தகூன Fபள்லம் மினல் லாஹி வ ரிள்வான ஸீமாஹும் Fபீ வுஜூஹிஹிம் மின் அதரிஸ் ஸுஜூத்; தாலிக மதலுஹும் Fபித் தவ்ராஹ்; வ மதலுஹும் Fபில் இன்ஜீலி கZஜர்'இன் அக்ரஜ ஷத் 'அஹூ Fப 'ஆZஜரஹூ Fபஸ்தக்லள Fபஸ்தவா 'அலா ஸூகிஹீ யுஃஜிBபுத் Zஜுர்ரா'அ லியகீள Bபிஹிமுல் குFப்Fபார்; வ'அதல் லாஹுல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி மின்ஹும் மக்Fபிரத(ன்)வ் வ அஜ்ரன் 'அளீமா
முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்; அவருடன் இருப்பவர்கள், காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள். ருகூஃ செய்பவர்களாகவும், ஸுஜூது செய்பவர்களாகவும்; அல்லாஹ்விடமிருந்து (அவன்) அருளையும் (அவனுடைய) திருப்பொருத்தத்தையும் விரும்பி வேண்டுபவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர்; அவர்களுடைய அடையாளமாவது: அவர்களுடைய முகங்களில் (நெற்றியில்) ஸுஜூதுடைய அடையாளமிருக்கும்; இதுவே தவ்ராத்திலுள்ள அவர்களின் உதாரணமாகும், இன்ஜீலிலுள்ள அவர்கள் உதாரணமாவது: ஒரு பயிரைப் போன்றது; அது தன் முளையைக் கிளப்பி(ய பின்) அதை பலப்படுத்துகிறது; பின்னர் அது பருத்துக் கனமாகி, பிறகு விவசாயிகளை மகிழ்வடையச் செய்யும் விதத்தில், அது தன் அடித்தண்டின் மீது நிமிர்ந்து செவ்வையாக நிற்கிறது; இவற்றைக் கொண்டு நிராகரிப்பவர்களை அவன் கோப மூட்டுகிறான் - ஆனால் அவர்களில் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் வாக்களிக்கின்றான்.