இன்னும், அந்நாளில் அவர்களில் சிலரைச் சிலருடன் (கடல்) அலைகள் (மோதுவதைப் போல்) மோதுமாறு நாம் விட்டு விடுவோம்; பின்னர், ஸூர் (எக்காளம்) ஊதப்படும்; பிறகு நாம் அவர்களை ஒன்று சேர்ப்போம்.
இன்னும் ஸூர் (எக்காளம்) ஊதப்படும் நாளை (நபியே! நீர் நினைவூட்டுவீராக; அந்நாளில்) அல்லாஹ் நாடியவர்களைத் தவிர, வானங்களில் இருப்பவர்களும், பூமியில் இருப்பவர்களும் திகிலடைந்து விடுவார்கள்; அவ்வனைவரும் பணிந்தவர்களாக அவனிடம் வருவார்கள்.
ஸூர் (எக்காளம்) ஊதப்பட்டால் உடன் வானங்களில் உள்ளவர்களும், பூமியில் உள்ளவர்களும் - அல்லாஹ் நாடியவர்களைத் தவிர - மூர்ச்சித்து விடுவார்கள்; பிறகு அதில் மறு தடவை ஊதப்பட்டதும் உடன் அவர்கள் யாவரும் எழுந்து, எதிர் நோக்கி நிற்பார்கள்.