உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.
الَّذِیْஎவன்خَلَقَபடைத்தானோسَبْعَஏழுسَمٰوٰتٍவானங்களைطِبَاقًا ؕஅடுக்கடுக்காகمَاஇல்லைتَرٰیநீர் காண்பீர்فِیْஇல்خَلْقِபடைப்பில்الرَّحْمٰنِஅளவற்ற அருளாளனின்مِنْஎந்த ஒருتَفٰوُتٍ ؕமுரண்பாட்டையும்فَارْجِعِஎனவே மீண்டும் திருப்புالْبَصَرَ ۙபார்வையைهَلْஏதேனும்تَرٰیகாண்கிறீராمِنْஎந்த ஒருفُطُوْرٍபிளவையும்
அல்லதீ கலக ஸBப்'அ ஸமாவாதின் திBபாகம் மா தரா Fபீ கல்கிர் ரஹ்மானி மின் தFபாவுத் Fபர்ஜி'இல் Bபஸர ஹல் தரா மின் Fபுதூர்
அவனே ஏழு வானங்களையும் அடுக்கடுக்காக படைத்தான்; (மனிதனே) அர்ரஹ்மானின் படைப்பில் குறையை நீர் காணமாட்டீர்; பின்னும் (ஒரு முறை) பார்வையை மீட்டிப்பார்! (அவ்வானங்களில்) ஏதாவது ஓர் பிளவை காண்கிறாயா?
وَ لَقَدْமேலும் நிச்சயமாகزَیَّنَّاநாம் அலங்கரித்தோம்السَّمَآءَவானத்தைالدُّنْیَاஉலகبِمَصَابِیْحَவிளக்குகளால்وَ جَعَلْنٰهَاமேலும் அவற்றை நாம் ஆக்கினோம்رُجُوْمًاஎறிபொருள்களாகلِّلشَّیٰطِیْنِஷைத்தான்களுக்குوَ اَعْتَدْنَاமேலும் நாம் தயார் செய்துள்ளோம்لَهُمْஅவர்களுக்குعَذَابَவேதனையைالسَّعِیْرِகொழுந்துவிட்டு எரியும் நெருப்பின்
وَ لِلَّذِیْنَஇன்னும் எவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோبِرَبِّهِمْதங்கள் இறைவனைعَذَابُவேதனைجَهَنَّمَ ؕநரகத்தின்وَ بِئْسَமேலும் அது மிகக் கெட்டالْمَصِیْرُசேருமிடம்
அது கோபத்தால் வெடித்து விடவும் நெருங்குகிறது; அதில் ஒவ்வொரு கூட்டமும் போடப்படும் போதெல்லாம், “அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் உங்களிடம் வரவில்லையா?” என்று அதன் காவலாளிகள் அவர்களைக் கேட்பார்கள்.
قَالُوْاஅவர்கள் கூறுவார்கள்بَلٰیஆம்قَدْநிச்சயமாகجَآءَنَاஎங்களிடம் வந்தார்نَذِیْرٌ ۙ۬ஓர் எச்சரிக்கையாளர்فَكَذَّبْنَاஎனவே நாங்கள் பொய்ப்பித்தோம்وَ قُلْنَاமேலும் நாங்கள் கூறினோம்مَاஇல்லைنَزَّلَஇறக்கிவைத்தான்اللّٰهُஅல்லாஹ்مِنْஎந்தشَیْءٍ ۖۚஒரு பொருளையும்اِنْஇல்லைاَنْتُمْநீங்கள்اِلَّاதவிரفِیْஇல்ضَلٰلٍவழிகேடுكَبِیْرٍபெரும்
காலூ Bபலா கத் ஜா'அனா னதீருன் Fபகத்தBப்னா வ குல்னா மா னZஜ்Zஜலல் லாஹு மின் ஷய் இன் இன் அன்தும் இல்லா Fபீ ளலாலின் கBபீர்
அதற்கவர்கள் கூறுவார்கள்: “ஆம்! அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் திட்டமாக எங்களிடம் வந்தார்; ஆனால் நாங்கள் (அவரைப்) பொய்ப்பித்து, “அல்லாஹ் யாதொன்றையும் இறக்கவில்லை; நீங்கள் பெரும் வழிகேட்டில் அல்லாமல் வேறில்லை” என்று சொன்னோம்.”
அவனே உங்களுக்கு இப்பூமியை (நீங்கள் வாழ்வதற்கு) வசதியாக ஆக்கினான்; ஆகவே, அதன் பல பாகங்களிலும், நடந்து அவனுடைய உணவிலிருந்து புசியுங்கள்; இன்னும் அவனிடமே (யாவரும்) உயிர்த்தெழவேண்டியிருக்கிறது.
اَمْஅல்லதுاَمِنْتُمْநீங்கள் அச்சமற்று இருக்கிறீர்களாمَّنْஎவன்فِیஇல்السَّمَآءِவானம்اَنْஎன்றுیُّرْسِلَஅவன் அனுப்புவான்عَلَیْكُمْஉங்கள் மீதுحَاصِبًا ؕகல் மழையைفَسَتَعْلَمُوْنَஆகவே விரைவில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள்كَیْفَஎப்படிنَذِیْرِஎனது எச்சரிக்கை
அல்லது வானத்திலிருப்பவன் உங்கள் மீது கல்மாரியை அனுப்புவது பற்றி அச்சமற்று இருக்கிறீர்களா? ஆகவே, எனது எச்சரிக்கை (செய்யப்பட்ட வேதனை) எப்படி என்பதை விரைவில் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
இறக்கைகளை விரித்துக் கொண்டும், சேர்த்துக் கொண்டும், இவர்களுக்கு மேல் (வானில் பறக்கும்) பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையா? அர்ரஹ்மானைத் தவிர (வேறு யாரும் கீழே விழாது) அவற்றைத் தடுத்துக் கொண்டிருக்கவில்லை - நிச்சயமாக அவன் ஒவ்வொரு பொருளையும் நோட்டமிடுபவன்.
அம்மன் ஹாதல் லதீ யர்Zஜுகுகும் இன் அம்ஸக ரிZஜ்கஹ்; Bபல் லஜ்ஜூ Fபீ 'உதுவ்வி(ன்)வ் வ னுFபூர்
அல்லது, தான் உணவளிப்பதை அவன் தடுத்துக் கொண்டால், உங்களுக்கு உணவளிப்பவர் யார்? அப்படியல்ல, ஆனால், இவர்கள் மாறு செய்வதிலும் (சத்தியத்தை) வெறுப்பதிலும் ஆழ்ந்திருக்கின்றனர்.
(நபியே!) நீர் கூறுவீராக: “அவனே உங்களைப் படைத்து உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும் இதயங்களையும் அமைத்தான்; (எனினும்) மிகவும் சொற்பமாகவே நீங்கள் நன்றி செலுத்துகிறீர்கள்.”
“இதைப் பற்றிய ஞானம் நிச்சயமாக அல்லாஹ்விடமே தான் இருக்கிறது; தவிர, நிச்சயமாக நான் தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன் தான்” என்று (நபியே!) நீர் கூறும்.
எனவே, அது நெருங்கி வருவதை அவர்கள் காணும் போது நிராகரிப்போரின் முகங்கள் (நிறம் பேதலித்துக்) கெட்டுவிடும்; இன்னும், “நீங்கள் எதை வேண்டிக் கொண்டிருந்தீர்களோ, அது இது தான்” என்று அவர்களுக்குக் கூறப்படும்.
قُلْகூறுவீராகاَرَءَیْتُمْசொல்லுங்கள்اِنْஒருவேளைاَهْلَكَنِیَஎன்னை அழித்துவிட்டால்اللّٰهُஅல்லாஹ்وَ مَنْமேலும் எவர்مَّعِیَஎன்னுடன் இருக்கிறார்களோاَوْஅல்லதுرَحِمَنَا ۙஎங்களுக்கு அருள் புரிந்தால்فَمَنْஅப்படியானால் யார்یُّجِیْرُபாதுகாப்பார்الْكٰفِرِیْنَநிராகரிப்பவர்களைمِنْஇருந்துعَذَابٍவேதனையில்اَلِیْمٍநோவினை தரும்
குல் அர'அய்தும் இன் அஹ்லக னியல் லாஹு வ மம் ம'இய அவ் ரஹிமனா Fபமய்-யுஜீருல் காFபிரீன மின் 'அதாBபின் அலீம்
கூறுவீராக: அல்லாஹ், என்னையும் என்னுடன் இருப்பவர்களையும் (நீங்கள் ஆசிப்பது போல்) அழித்து விட்டாலும், அல்லது (நாங்கள் நம்புவது போல்) அவன் எங்கள் மீது கிருபை புரிந்தாலும், நோவினை செய்யும் வேதனையை விட்டு, காஃபிர்களைக் காப்பவர் யார் என்பதை கவனித்தீர்களா?
(நபியே!) நீர் கூறும்: (எங்களைக் காப்பவன்) அவனே - அர்ரஹ்மான்; அவன் மீதே நாங்கள் ஈமான் கொண்டோம்; மேலும் அவனையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம் - எனவே, வெகு சீக்கிரத்தில் பகிரங்கமான வழி கேட்டிலிருப்பவர் யார் என்பதை நீங்கள் அறிவீர்கள்!”
قُلْகூறுவீராகاَرَءَیْتُمْநீங்கள் கவனித்தீர்களாاِنْஒருவேளைاَصْبَحَஆகிவிட்டால்مَآؤُكُمْஉங்கள் தண்ணீர்غَوْرًاபூமிக்குள் வற்றிفَمَنْபின் யார்یَّاْتِیْكُمْஉங்களுக்குக் கொண்டு வருவான்بِمَآءٍதண்ணீரைمَّعِیْنٍ۠ஓடக்கூடிய
குல் அர'அய்தும் இன் அஸ்Bபஹ மா'உகும் கவ்ரன் Fபமய் ய'தீகும் Bபிமா'இம் ம'ஈன்
(நபியே!) நீர் கூறும்: உங்களின் தண்ணீர் பூமியினுள் (உறிஞ்சப்பட்டுப்) போய்விட்டால், அப்பொழுது ஓடும் நீரை உங்களுக்குக் கொண்டு வருபவன் யார்? என்பதை கவனித்தீர்களா? என்று (எனக்கு அறிவியுங்கள்).