67. ஸூரத்துல் முல்க் (ஆட்சி)

மக்கீ, வசனங்கள்: 30

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
تَبٰرَكَ الَّذِیْ بِیَدِهِ الْمُلْكُ ؗ وَهُوَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرُ ۟ۙ
تَبٰرَكَஅருள் வளமிக்கவன்الَّذِىْஎவன்بِيَدِهِஅவனுடைய கரத்தில்الْمُلْكُஆட்சிوَهُوَஅவன்عَلٰى كُلِّ شَىْءٍஎல்லாப் பொருள்கள் மீதும்قَدِيْرُۙ‏பேராற்றலுடையவன்
தBபாரகல் லதீ Bபியதிஹில் முல்கு வ ஹுவ 'அலா குல்லி ஷய்-இன் கதீர்
எவனுடைய கையில் ஆட்சி இருக்கின்றதோ அவன் பாக்கியவான்; மேலும், அவன் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.
لَّذِیْ خَلَقَ الْمَوْتَ وَالْحَیٰوةَ لِیَبْلُوَكُمْ اَیُّكُمْ اَحْسَنُ عَمَلًا ؕ وَهُوَ الْعَزِیْزُ الْغَفُوْرُ ۟ۙ
اۨلَّذِىْஎவன்خَلَقَபடைத்தான்الْمَوْتَமரணத்தை(யும்)وَالْحَيٰوةَவாழ்க்கையையும்لِيَبْلُوَكُمْஅவன் உங்களை சோதிப்பதற்காகاَيُّكُمْஉங்களில் யார்اَحْسَنُமிக அழகானவர்عَمَلًا ؕசெயலால்وَهُوَஅவன்தான்الْعَزِيْزُமிகைத்தவன்الْغَفُوْرُۙ‏மகா மன்னிப்பாளன்
அல்லதீ கலகல் மவ்த வல்ஹயாத லியBப்லுவகும் அய்யுகும் அஹ்ஸனு 'அமலா; வ ஹுவல் 'அZஜீZஜுல் கFபூர்
உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.
الَّذِیْ خَلَقَ سَبْعَ سَمٰوٰتٍ طِبَاقًا ؕ مَا تَرٰی فِیْ خَلْقِ الرَّحْمٰنِ مِنْ تَفٰوُتٍ ؕ فَارْجِعِ الْبَصَرَ ۙ هَلْ تَرٰی مِنْ فُطُوْرٍ ۟
الَّذِىْஎவன்خَلَقَபடைத்தான்سَبْعَ سَمٰوٰتٍஏழு வானங்களைطِبَاقًا‌ ؕஅடுக்கடுக்காகمَا تَرٰىநீர் பார்ப்பதில்லைفِىْ خَلْقِபடைப்பில்الرَّحْمٰنِபேரருளாளனின்مِنْ تَفٰوُتٍ‌ ؕஎவ்வித ஏற்றத் தாழ்வையும்فَارْجِعِநீர் மீண்டும் திருப்புவீராக!الْبَصَرَۙபார்வையைهَلْ تَرٰىநீர் பார்க்கிறீரா?مِنْ فُطُوْرٍ‏ஏதாவது பிளவுகளை
அல்லதீ கலக ஸBப்'அ ஸமாவாதின் திBபாகம் மா தரா Fபீ கல்கிர் ரஹ்மானி மின் தFபாவுத் Fபர்ஜி'இல் Bபஸர ஹல் தரா மின் Fபுதூர்
அவனே ஏழு வானங்களையும் அடுக்கடுக்காக படைத்தான்; (மனிதனே) அர்ரஹ்மானின் படைப்பில் குறையை நீர் காணமாட்டீர்; பின்னும் (ஒரு முறை) பார்வையை மீட்டிப்பார்! (அவ்வானங்களில்) ஏதாவது ஓர் பிளவை காண்கிறாயா?
ثُمَّ ارْجِعِ الْبَصَرَ كَرَّتَیْنِ یَنْقَلِبْ اِلَیْكَ الْبَصَرُ خَاسِئًا وَّهُوَ حَسِیْرٌ ۟
ثُمَّபிறகுارْجِعِமீண்டும் திருப்புவீராக!الْبَصَرَபார்வையைكَرَّتَيْنِஇரு முறைيَنْقَلِبْதிரும்பிவிடும்اِلَيْكَஉம் பக்கம்الْبَصَرُஅந்தப் பார்வைخَاسِئًاஇழிவடைந்ததாகوَّهُوَஇன்னும் அதுحَسِيْرٌ‏கலைத்துவிடும்
தும்மர் ஜி'இல் Bபஸர கர்ரதய்னி யன்கலிBப் இலய்கல் Bபஸரு காஸி'அ(ன்)வ் வ ஹுவ ஹஸீர்
பின்னர் இருமுறை உன் பார்வையை மீட்டிப்பார்; உன் பார்வை களைத்து, மழுங்கிச் சிறுமையடைந்து உன்னிடம் திரும்பும்.
وَلَقَدْ زَیَّنَّا السَّمَآءَ الدُّنْیَا بِمَصَابِیْحَ وَجَعَلْنٰهَا رُجُوْمًا لِّلشَّیٰطِیْنِ وَاَعْتَدْنَا لَهُمْ عَذَابَ السَّعِیْرِ ۟
وَلَـقَدْதிட்டவட்டமாகزَيَّـنَّاஅலங்கரித்தோம்السَّمَآءَவானத்தைالدُّنْيَاகீழ்بِمَصَابِيْحَவிளக்குகளால்وَجَعَلْنٰهَاஇன்னும் அவற்றை ஏற்படுத்தினோம்رُجُوْمًاஎறிவதற்காகلِّلشَّيٰطِيْنِ‌ஷைத்தான்களைوَاَعْتَدْنَاஇன்னும் தயார் செய்துள்ளோம்لَهُمْஅவர்களுக்குعَذَابَ السَّعِيْرِ‏கொழுந்து விட்டெரியும் நரகநெருப்பின் வேதனையை
வ லகத் Zஜய்யன்னஸ் ஸமா'அத் துன்யா Bபிமஸா Bபீஹ வ ஜ'அல்னாஹா ருஜூமல் லிஷ் ஷயாதீனி வ அஃதத்னா லஹும் 'அதாBபஸ் ஸ'ஈர்
அன்றியும், திட்டமாக நாமே (பூமிக்குச்) சமீபமாக இருக்கும் வானத்தை (நட்சத்திர) விளக்குகளைக் கொண்டு அலங்கரித்திருக்கின்றோம்; இன்னும், அவற்றை ஷைத்தான்களை (வெருட்டும்) எறி கற்களாகவும் நாம் ஆக்கினோம்; அன்றியும் அவர்களுக்காகக் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பின் வேதனையைச் சித்தம் செய்திருக்கின்றோம்.
وَلِلَّذِیْنَ كَفَرُوْا بِرَبِّهِمْ عَذَابُ جَهَنَّمَ ؕ وَبِئْسَ الْمَصِیْرُ ۟
وَلِلَّذِيْنَ كَفَرُوْاநிராகரிப்பவர்களுக்குبِرَبِّهِمْதங்கள் இறைவனைعَذَابُதண்டனைجَهَنَّمَ‌ؕநரகத்தின்وَبِئْسَஇன்னும் மிகக் கெட்டதுالْمَصِيْرُ‏மீளுமிடங்களில்
வ லில்லதீன கFபரூ Bபி ரBப்Bபிஹிம் 'அதாBபு ஜஹன்னம வ Bபி'ஸல் மஸீர்
இன்னும், எவர்கள் தங்கள் இறைவனை நிராகரிக்கின்றார்களோ, அவர்களுக்கு நரக வேதனை உண்டு; (அது) மிகக் கெட்ட மீளுமிடமாகும்.
اِذَاۤ اُلْقُوْا فِیْهَا سَمِعُوْا لَهَا شَهِیْقًا وَّهِیَ تَفُوْرُ ۟ۙ
اِذَاۤ اُلْقُوْاஅவர்கள் எறியப்பட்டால்فِيْهَاஅதில்سَمِعُوْاசெவியுறுவார்கள்لَهَاஅதில்شَهِيْقًاகடுமையான சப்தத்தைوَّهِىَஇன்னும் அதுتَفُوْرُۙ‏கொதிக்கும்
இதா உல்கூ Fபீஹா ஸமி'ஊ லஹா ஷஹீக(ன்)வ் வ ஹிய தFபூர்
அதில் அவர்கள் போடப்படுவார்களாயின், அது கொதிக்கும் நிலை (கழுதையின் பெருங்குரலைப் போல்) அருவருப்பான சப்தம் உண்டாவதை அவர்கள் கேட்பார்கள்.
تَكَادُ تَمَیَّزُ مِنَ الْغَیْظِ ؕ كُلَّمَاۤ اُلْقِیَ فِیْهَا فَوْجٌ سَاَلَهُمْ خَزَنَتُهَاۤ اَلَمْ یَاْتِكُمْ نَذِیْرٌ ۟
تَكَادُஅது நெருங்கிவிடும்تَمَيَّزُதெரித்துவிடمِنَ الْغَيْظِ‌ؕகோபத்தால்كُلَّمَاۤ اُلْقِىَஎறியப்படும் போதெல்லாம்فِيْهَاஅதில்فَوْجٌஒரு கூட்டம்سَاَلَهُمْஅவர்களிடம் கேட்பார்(கள்)خَزَنَـتُهَاۤஅதன் காவலாளிகள்اَلَمْ يَاْتِكُمْஉங்களிடம் வரவில்லையா?نَذِيْرٌ‏ஓர் எச்சரிப்பாளர்
தகாது தமய்யZஜு மினல் கய்ளி குல்லமா உல்கிய Fபீஹா Fபவ்ஜுன் ஸ அலஹும் கZஜனதுஹா அலம் ய'திகும் னதீர்
அது கோபத்தால் வெடித்து விடவும் நெருங்குகிறது; அதில் ஒவ்வொரு கூட்டமும் போடப்படும் போதெல்லாம், “அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் உங்களிடம் வரவில்லையா?” என்று அதன் காவலாளிகள் அவர்களைக் கேட்பார்கள்.
قَالُوْا بَلٰی قَدْ جَآءَنَا نَذِیْرٌ ۙ۬ فَكَذَّبْنَا وَقُلْنَا مَا نَزَّلَ اللّٰهُ مِنْ شَیْءٍ ۖۚ اِنْ اَنْتُمْ اِلَّا فِیْ ضَلٰلٍ كَبِیْرٍ ۟
قَالُوْاஅவர்கள் கூறுவார்கள்بَلٰىஏன் வரவில்லைقَدْதிட்டமாகجَآءَنَاஎங்களிடம் வந்தார்نَذِيْرٌ  ۙஎச்சரிப்பாளர்فَكَذَّبْنَاஆனால் பொய்ப்பித்தோம்وَقُلْنَاஇன்னும் கூறினோம்مَا نَزَّلَஇறக்கவில்லைاللّٰهُஅல்லாஹ்مِنْ شَىْءٍ ۖۚஎதையும்اِنْ اَنْتُمْநீங்கள் இல்லைاِلَّاதவிரفِىْ ضَلٰلٍவழிகேட்டிலேயேكَبِيْرٍ‏பெரிய
காலூ Bபலா கத் ஜா'அனா னதீருன் Fபகத்தBப்னா வ குல்னா மா னZஜ்Zஜலல் லாஹு மின் ஷய் இன் இன் அன்தும் இல்லா Fபீ ளலாலின் கBபீர்
அதற்கவர்கள் கூறுவார்கள்: “ஆம்! அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் திட்டமாக எங்களிடம் வந்தார்; ஆனால் நாங்கள் (அவரைப்) பொய்ப்பித்து, “அல்லாஹ் யாதொன்றையும் இறக்கவில்லை; நீங்கள் பெரும் வழிகேட்டில் அல்லாமல் வேறில்லை” என்று சொன்னோம்.”
وَقَالُوْا لَوْ كُنَّا نَسْمَعُ اَوْ نَعْقِلُ مَا كُنَّا فِیْۤ اَصْحٰبِ السَّعِیْرِ ۟
وَقَالُوْاஇன்னும் கூறுவார்கள்لَوْ كُنَّاநாங்கள் இருந்தால்نَسْمَعُசெவி ஏற்பவர்களாகاَوْஅல்லதுنَعْقِلُசிந்தித்து புரிபவர்களாகمَا كُنَّاஆகி இருக்க மாட்டோம்فِىْۤ اَصْحٰبِ السَّعِيْرِ‏நரகவாசிகளில்
வ காலூ லவ் குன்னா னஸ்ம'உ அவ்னஃகிலு மா குன்னா Fபீ அஸ் ஹாBபிஸ் ஸ'ஈர்
இன்னும் அவர்கள் கூறுவார்கள்: “நாங்கள் (அவர் போதனையைச்) செவியுற்றோ அல்லது சிந்தித்தோ இருந்திருந்தோமானால் நாங்கள் நரகவாசிகளில் இருந்திருக்க மாட்டோம்.”
فَاعْتَرَفُوْا بِذَنْۢبِهِمْ ۚ فَسُحْقًا لِّاَصْحٰبِ السَّعِیْرِ ۟
فَاعْتَرَفُوْاஒப்புக் கொள்வார்கள்بِذَنْۢبِهِمْ‌ۚதங்கள் குற்றத்தைفَسُحْقًاஆகவே கேடுதான்لِّاَصْحٰبِ السَّعِيْرِ‏நரகவாசிகளுக்கு
FபஃதரFபூ Bபிதம்Bபிஹிம் Fபஸுஹ்கல் லி அஸ் ஹாBபிஸ் ஸ'ஈர்
(இவ்வாறு) தங்கள் பாவங்களை அவர்கள் ஒப்புக் கொள்வார்கள் - எனவே, இந்நரகவாசிகளுக்குக் கேடுதான்.
اِنَّ الَّذِیْنَ یَخْشَوْنَ رَبَّهُمْ بِالْغَیْبِ لَهُمْ مَّغْفِرَةٌ وَّاَجْرٌ كَبِیْرٌ ۟
اِنَّநிச்சயமாகالَّذِيْنَஎவர்கள்يَخْشَوْنَபயப்படுகின்றார்கள்رَبَّهُمْதங்கள் இறைவனைبِالْغَيْبِமறைவில்لَهُمْஅவர்களுக்கு உண்டுمَّغْفِرَةٌமன்னிப்பு(ம்)وَّاَجْرٌ كَبِيْرٌ‏பெரிய கூலியும்
இன்னல் லதீன யக்-ஷவ்ன ரBப்Bபஹும் Bபில்கய்Bபி லஹும் மக்Fபிரது(ன்)வ் வ அஜ்ருன் கBபீர்
நிச்சயமாக எவர்கள் தங்கள் இறைவனை(ப் பார்க்காதிருந்தும்) அந்தரங்கத்தில் அவனுக்கு அஞ்சுகிறார்களோ, அவர்களுக்கு மன்னிப்புமுண்டு, பெரிய நற்கூலியும் உண்டு.
وَاَسِرُّوْا قَوْلَكُمْ اَوِ اجْهَرُوْا بِهٖ ؕ اِنَّهٗ عَلِیْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ ۟
وَاَسِرُّوْاஇரகசியமாகப் பேசுங்கள்قَوْلَـكُمْஉங்கள் பேச்சைاَوِ اجْهَرُوْاஅல்லது உரக்கப் பேசுங்கள்بِهٖؕஅதைاِنَّهٗநிச்சயமாக அவன்عَلِيْمٌۢநன்கறிந்தவன்بِذَاتِ الصُّدُوْرِ‏நெஞ்சங்களில் உள்ளதை
வ அஸிர்ரூ கவ்லகும் அவிஜ்ஹரூ Bபிஹ்; இன்னஹூ 'அலீமும் Bபிதாதிஸ் ஸுதூர்
மேலும், உங்கள் சொல்லை நீங்கள் இரகசியமாக்குங்கள்; அல்லது அதை பகிரங்கமாக்குங்கள் - நிச்சயமாக அவன் இதயங்களிலுள்ளவற்றையும் மிக அறிந்தவன்.
اَلَا یَعْلَمُ مَنْ خَلَقَ ؕ وَهُوَ اللَّطِیْفُ الْخَبِیْرُ ۟۠
اَلَا يَعْلَمُஅவன் அறிய மாட்டானா?مَنْஎவன்خَلَقَؕபடைத்தான்وَهُوَஅவன்தான்اللَّطِيْفُநுட்பமானவன்الْخَبِيْرُ‏ஆழ்ந்தறிபவன்
அலா யஃலமு மன் கலக வ ஹுவல் லதீFபுல் கBபீர்
(அனைத்தையும்) படைத்தவன் அறிய மாட்டானா? அவன் நுணுக்கமாக கவனிப்பவன்; யாவற்றையும் நன்கு தெரிந்தவன்.  
هُوَ الَّذِیْ جَعَلَ لَكُمُ الْاَرْضَ ذَلُوْلًا فَامْشُوْا فِیْ مَنَاكِبِهَا وَكُلُوْا مِنْ رِّزْقِهٖ ؕ وَاِلَیْهِ النُّشُوْرُ ۟
هُوَ الَّذِىْஅவன்தான்جَعَلَஆக்கினான்لَـكُمُஉங்களுக்குالْاَرْضَபூமியைذَلُوْلًاஇலகுவாகفَامْشُوْاஆகவே செல்லுங்கள்فِىْ مَنَاكِبِهَاஅதன் பல பகுதிகளில்وَكُلُوْاஇன்னும் உண்ணுங்கள்مِنْ رِّزْقِهٖ‌ؕஅவனுடைய உணவில் இருந்துوَاِلَيْهِஅவன் பக்கம்தான்النُّشُوْرُ‏எழுப்பப்படுதல்
ஹுவல் லதீ ஜ'அல லகுமுல் அர்ள தலூலன் Fபம்ஷூ Fபீ மனாகிBபிஹா வ குலூ மிர் ரிZஜ்கிஹ்; வ இலய்ஹின் னுஷூர்
அவனே உங்களுக்கு இப்பூமியை (நீங்கள் வாழ்வதற்கு) வசதியாக ஆக்கினான்; ஆகவே, அதன் பல மருங்குகளிலும், நடந்து அவனுடைய உணவிலிருந்து புசியுங்கள்; இன்னும் அவனிடமே (யாவரும்) உயிர்த்தெழவேண்டியிருக்கிறது.
ءَاَمِنْتُمْ مَّنْ فِی السَّمَآءِ اَنْ یَّخْسِفَ بِكُمُ الْاَرْضَ فَاِذَا هِیَ تَمُوْرُ ۟ۙ
ءَاَمِنْتُمْபயமற்று இருக்கின்றீர்களா?مَّنْ فِىْ السَّمَآءِவானத்தின் மேல் உள்ளவன்اَنْ يَّخْسِفَசொருகிவிடுவதைبِكُمُஉங்களைالْاَرْضَபூமியில்فَاِذَا هِىَஅப்போது அதுتَمُوْرُۙ‏குலுங்கும்
அ-அமின்தும் மன் Fபிஸ்ஸமா'இ அய்யக்ஸிFப Bபி குமுல் அர்ள Fப இதா ஹிய தமூர்
வானத்தில் இருப்பவன் உங்களைப் பூமியில் சொறுகிவிடுவான் என்பதை பற்றி நீங்கள் அச்சமற்று இருக்கிறீர்களா? அப்போது (பூமி) அதிர்ந்து நடுங்கும்.
اَمْ اَمِنْتُمْ مَّنْ فِی السَّمَآءِ اَنْ یُّرْسِلَ عَلَیْكُمْ حَاصِبًا ؕ فَسَتَعْلَمُوْنَ كَیْفَ نَذِیْرِ ۟
اَمْ اَمِنْتُمْஅல்லது பயமற்று இருக்கின்றீர்களா?مَّنْ فِى السَّمَآءِவானத்தின் மேல் உள்ளவன்اَنْ يُّرْسِلَஅனுப்புவதைعَلَيْكُمْஉங்கள் மீதுحَاصِبًا‌ ؕகல் மழையைفَسَتَعْلَمُوْنَவிரைவில் அறிவீர்கள்كَيْفَஎப்படி (இருந்தது)نَذِيْرِ‏என் எச்சரிக்கை
அம் அமின்தும் மன் Fபிஸ்ஸமா'இ அய் யுர்ஸில 'அலய்கும் ஹாஸிBபன் Fபஸதஃலமூன கய்Fப னதீர்
அல்லது வானத்திலிருப்பவன் உங்கள் மீது கல்மாரியை அனுப்புவது பற்றி அச்சமற்று இருக்கிறீர்களா? ஆகவே, எனது எச்சரிக்கை (செய்யப்பட்ட வேதனை) எப்படி என்பதை விரைவில் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
وَلَقَدْ كَذَّبَ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ فَكَیْفَ كَانَ نَكِیْرِ ۟
وَلَـقَدْதிட்டவட்டமாகكَذَّبَபொய்ப்பித்தார்(கள்)الَّذِيْنَஎவர்கள்مِن قَبْلِهِمْஇவர்களுக்கு முன்னர்فَكَيْفَஎப்படி?كَانَஇருந்ததுنَكِيْرِ‏எனது மறுப்பு
வ லகத் கத்தBபல் லதீன மின் கBப்லிஹிம் Fபகய்Fப கான னகீர்
அன்றியும் அவர்களுக்கு முன் இருந்தார்களே அவர்களும் (நம் வசனங்களை இவ்வாறே) பொய்ப்பித்துக் கொண்டிருந்தனர்; என் எச்சரிக்கை எவ்வளவு கடுமையாக இருந்தது?
اَوَلَمْ یَرَوْا اِلَی الطَّیْرِ فَوْقَهُمْ صٰٓفّٰتٍ وَّیَقْبِضْنَ ؔؕۘ مَا یُمْسِكُهُنَّ اِلَّا الرَّحْمٰنُ ؕ اِنَّهٗ بِكُلِّ شَیْءٍ بَصِیْرٌ ۟
اَوَلَمْ يَرَوْاஅவர்கள் பார்க்கவில்லையா?اِلَى الطَّيْرِபறவைகளைفَوْقَهُمْதங்களுக்கு மேல்صٰٓفّٰتٍவிரித்தவைகளாகவும்وَّيَقْبِضْنَؕؔ ۘமடக்கியவைகளாகவும்مَا يُمْسِكُهُنَّஅவற்றை தடுக்க முடியாதுاِلَّا الرَّحْمٰنُ‌ؕரஹ்மானைத் தவிரاِنَّهٗநிச்சயமாக அவன்بِكُلِّ شَىْءٍۢஎல்லாப் பொருளையும்بَصِيْرٌ‏உற்று நோக்குபவன்
அவலம் யரவ் இலத் தய்ரி Fபவ்கஹும் ஸாFப்Fபாதி(ன்)வ் வ யக்Bபிள்ன்; மா யும்ஸிகுஹுன்ன இல்'லர் ரஹ்மான்; இன்னஹூ Bபிகுல்லி ஷய் இன் Bபஸீர்
இறக்கைகளை விரித்துக் கொண்டும், சேர்த்துக் கொண்டும், இவர்களுக்கு மேல் (வானில் பறக்கும்) பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையா? அர்ரஹ்மானைத் தவிர (வேறு யாரும் கீழே விழாது) அவற்றைத் தடுத்துக் கொண்டிருக்கவில்லை - நிச்சயமாக அவன் ஒவ்வொரு பொருளையும் நோட்டமிடுபவன்.
اَمَّنْ هٰذَا الَّذِیْ هُوَ جُنْدٌ لَّكُمْ یَنْصُرُكُمْ مِّنْ دُوْنِ الرَّحْمٰنِ ؕ اِنِ الْكٰفِرُوْنَ اِلَّا فِیْ غُرُوْرٍ ۟ۚ
اَمَّنْமாறாக, யார்?هٰذَاஇவர்(கள்)الَّذِىْஎவர்(கள்)هُوَஅவர்(கள்)جُنْدٌ لَّكُمْஉங்கள் ராணுவமாகيَنْصُرُكُمْஉங்களுக்கு உதவுகின்றார்(கள்)مِّنْ دُوْنِஅன்றிالرَّحْمٰنِ‌ؕபேரருளாளனைاِنِ الْكٰفِرُوْنَநிராகரிப்பாளர்கள் இல்லைاِلَّاதவிரفِىْ غُرُوْرٍ‌ۚ‏ஏமாற்றத்தில்
அம்மன் ஹாதல் லதீ ஹுவ ஜுன்துல் லகும் யன்ஸுருகும் மின் தூனிர் ரஹ்மான்; இனில்காFபிரூன இல்லா Fபீ குரூர்
அன்றியும், அர்ரஹ்மானை தவிர வேறு எவர் உங்களுக்குப் பட்டாளமாக இருந்து கொண்டு உதவி செய்வார்? காஃபிர்கள் ஏமாற்றத்திலன்றி வேறில்லை.
اَمَّنْ هٰذَا الَّذِیْ یَرْزُقُكُمْ اِنْ اَمْسَكَ رِزْقَهٗ ۚ بَلْ لَّجُّوْا فِیْ عُتُوٍّ وَّنُفُوْرٍ ۟
اَمَّنْமாறாக, யார்?هٰذَاஇவர்(கள்)الَّذِىْஎவர்(கள்)يَرْزُقُكُمْஉங்களுக்கு உணவளிக்கின்றார்(கள்)اِنْ اَمْسَكَஅவன் தடுத்துவிட்டால்رِزْقَهٗ‌ ۚதனது உணவைبَلْமாறாக,لَّجُّوْاபிடிவாதம் பிடித்தனர்فِىْ عُتُوٍّவரம்பு மீறுவதிலும்وَّنُفُوْرٍ‏விலகிச் செல்வதிலும்தான்
அம்மன் ஹாதல் லதீ யர்Zஜுகுகும் இன் அம்ஸக ரிZஜ்கஹ்; Bபல் லஜ்ஜூ Fபீ 'உதுவ்வி(ன்)வ் வ னுFபூர்
அல்லது, தான் உணவளிப்பதை அவன் தடுத்துக் கொண்டால், உங்களுக்கு உணவளிப்பவர் யார்? அப்படியல்ல, ஆனால், இவர்கள் மாறு செய்வதிலும் (சத்தியத்தை) வெறுப்பதிலும் ஆழ்ந்திருக்கின்றனர்.
اَفَمَنْ یَّمْشِیْ مُكِبًّا عَلٰی وَجْهِهٖۤ اَهْدٰۤی اَمَّنْ یَّمْشِیْ سَوِیًّا عَلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۟
اَفَمَنْயார்?يَّمْشِىْநடக்கின்றான்مُكِبًّاகவிழ்ந்தவனாகعَلٰى وَجْهِهٖۤதனது முகத்தின் மீதுاَهْدٰٓىநேர்வழி பெற்றவனாاَمَّنْஅல்லது யார்?يَّمْشِىْநடக்கின்றான்سَوِيًّاசரியாகعَلٰى صِرَاطٍபாதையில்مُّسْتَقِيْمٍ‏நேரான
அFபமய் யம்ஷீ முகிBப்Bபன் 'அலா வஜ்ஹிஹீ அஹ்தா அம்ம(ன்)ய் யம்ஷீ ஸவிய்யன் 'அலா ஸிரதிம் முஸ்தகீம்
முகம் குப்புற விழுந்து செல்பவன் மிக நேர்வழி அடைந்தவனா? அல்லது நேரான பாதையில் செவ்வையாக நடப்பவ(ன் மிக நேர்வழி அடைந்தவ)னா.
قُلْ هُوَ الَّذِیْۤ اَنْشَاَكُمْ وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْاَبْصَارَ وَالْاَفْـِٕدَةَ ؕ قَلِیْلًا مَّا تَشْكُرُوْنَ ۟
قُلْகூறுவீராக!هُوَ الَّذِىْۤஅவன்தான்اَنْشَاَكُمْஉங்களை உருவாக்கினான்وَجَعَلَஇன்னும் ஏற்படுத்தினான்لَـكُمُஉங்களுக்குالسَّمْعَசெவியை(யும்)وَالْاَبْصَارَபார்வைகளையும்وَ الْاَفْـــِٕدَةَ ؕஉள்ளங்களையும்قَلِيْلًاமிகக் குறைவாகவேمَّا تَشْكُرُوْنَ‏நீங்கள் நன்றி செலுத்துகின்றீர்கள்
குல் ஹுவல் லதீ அன்ஷ அகும் வ ஜ'அல லகுமுஸ் ஸம்'அ வல் அBப்ஸார வல் அFப்'இதத கலீலம் மா தஷ்குரூன்
(நபியே!) நீர் கூறுவீராக: “அவனே உங்களைப் படைத்து உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும் இதயங்களையும் அமைத்தான்; (எனினும்) மிகவும் சொற்பமாகவே நீங்கள் நன்றி செலுத்துகிறீர்கள்.”
قُلْ هُوَ الَّذِیْ ذَرَاَكُمْ فِی الْاَرْضِ وَاِلَیْهِ تُحْشَرُوْنَ ۟
قُلْகூறுவீராக!هُوَ الَّذِىْஅவன்தான்ذَرَاَكُمْஉங்களை பரத்தினான்فِى الْاَرْضِபூமியில்وَاِلَيْهِஅவன் பக்கமேتُحْشَرُوْنَ‏ஒன்று திரட்டப்படுவீர்கள்
குல் ஹுவல் லதீ தர அகும் Fபில் அர்ளி வ இலய்ஹி துஹ்ஷரூன்
“அவனே உங்களைப் பூமியின் (பல பாகங்களிலும்) பரவச் செய்தான்; அன்றியும், அவனிடமே நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள்” என்று கூறுவீராக.
وَیَقُوْلُوْنَ مَتٰی هٰذَا الْوَعْدُ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
وَيَقُوْلُوْنَஅவர்கள் கூறுகின்றனர்مَتٰىஎப்போது நிகழும்هٰذَاஇந்தالْوَعْدُவாக்குاِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்صٰدِقِيْنَ‏உண்மையாளர்களாக
வ யகூலூன மதா ஹாதல் வஃது இன் குன்தும் ஸாதிகீன்
ஆயினும், “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், வாக்களிக்கப்பட்ட (மறுமையான)து எப்பொழுது (வரும்)?” என்று (காஃபிர்கள்) கேட்கிறார்கள்.
قُلْ اِنَّمَا الْعِلْمُ عِنْدَ اللّٰهِ ۪ وَاِنَّمَاۤ اَنَا نَذِیْرٌ مُّبِیْنٌ ۟
قُلْகூறுவீராக!اِنَّمَا الْعِلْمُஅறிவெல்லாம்عِنْدَ اللّٰهِஅல்லாஹ்விடம்தான்وَاِنَّمَاۤ اَنَاநான் எல்லாம்نَذِيْرٌஎச்சரிப்பாளர்தான்مُّبِيْنٌ‏தெளிவான
குல் இன்னமல் 'இல்மு 'இன்தல்லாஹி வ இன்னமா அன னதீரும் முBபீன்
“இதைப் பற்றிய ஞானம் நிச்சயமாக அல்லாஹ்விடமே தான் இருக்கிறது; தவிர, நிச்சயமாக நான் தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன் தான்” என்று (நபியே!) நீர் கூறும்.
فَلَمَّا رَاَوْهُ زُلْفَةً سِیْٓـَٔتْ وُجُوْهُ الَّذِیْنَ كَفَرُوْا وَقِیْلَ هٰذَا الَّذِیْ كُنْتُمْ بِهٖ تَدَّعُوْنَ ۟
فَلَمَّا رَاَوْهُஅவர்கள் அதை பார்க்கின்றபோதுزُلْفَةًமிக நெருக்கமாகسِيْٓئَتْகெட்டுவிடும்وُجُوْهُமுகங்கள்الَّذِيْنَ كَفَرُوْاநிராகரித்தவர்களின்وَقِيْلَஇன்னும் கூறப்படும்هٰذَاஇதுதான்الَّذِىْஎதைكُنْتُمْநீங்கள் இருந்தீர்களோبِهٖஅதைتَدَّعُوْنَ‏தேடுபவர்களாக
Fபலம்மா ர-அவ்ஹு Zஜுல்Fபதன் ஸீ'அத் வுஜூஹுல் லதீன கFபரூ வ கீல ஹாதல் லதீ குன்தும் Bபிஹீ தத்த'ஊன்
எனவே, அது நெருங்கி வருவதை அவர்கள் காணும் போது நிராகரிப்போரின் முகங்கள் (நிறம் பேதலித்துக்) கெட்டுவிடும்; இன்னும், “நீங்கள் எதை வேண்டிக் கொண்டிருந்தீர்களோ, அது இது தான்” என்று அவர்களுக்குக் கூறப்படும்.
قُلْ اَرَءَیْتُمْ اِنْ اَهْلَكَنِیَ اللّٰهُ وَمَنْ مَّعِیَ اَوْ رَحِمَنَا ۙ فَمَنْ یُّجِیْرُ الْكٰفِرِیْنَ مِنْ عَذَابٍ اَلِیْمٍ ۟
قُلْகூறுவிராகاَرَءَيْتُمْஅறிவியுங்கள்اِنْ اَهْلَـكَنِىَஎன்னை(யும்) அழித்துவிட்டால்اللّٰهُஅல்லாஹ்وَمَنْ مَّعِىَஎன்னுடன் இருப்பவர்களையும்اَوْஅல்லதுرَحِمَنَا ۙஎங்கள் மீது கருணை புரிந்தால்فَمَنْயார்?يُّجِيْرُகாப்பாற்றுவார்الْكٰفِرِيْنَநிராகரிப்பாளர்களைمِنْ عَذَابٍதண்டனையிலிருந்துاَلِيْمٍ‏வலி தரக்கூடிய(து)
குல் அர'அய்தும் இன் அஹ்லக னியல் லாஹு வ மம் ம'இய அவ் ரஹிமனா Fபமய்-யுஜீருல் காFபிரீன மின் 'அதாBபின் அலீம்
கூறுவீராக: அல்லாஹ், என்னையும் என்னுடன் இருப்பவர்களையும் (நீங்கள் ஆசிப்பது போல்) அழித்து விட்டாலும், அல்லது (நாங்கள் நம்புவது போல்) அவன் எங்கள் மீது கிருபை புரிந்தாலும், நோவினை செய்யும் வேதனையை விட்டு, காஃபிர்களைக் காப்பவர் யார் என்பதை கவனித்தீர்களா?
قُلْ هُوَ الرَّحْمٰنُ اٰمَنَّا بِهٖ وَعَلَیْهِ تَوَكَّلْنَا ۚ فَسَتَعْلَمُوْنَ مَنْ هُوَ فِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟
قُلْகூறுவீராக!هُوَஅவன்தான்الرَّحْمٰنُபேரருளாளன்اٰمَنَّاநாங்கள் நம்பிக்கை கொண்டோம்بِهٖஅவனைوَعَلَيْهِஇன்னும் அவன் மீதேتَوَكَّلْنَا‌ۚநாங்கள் நம்பிக்கை வைத்தோம்فَسَتَعْلَمُوْنَவிரைவில் அறிவீர்கள்مَنْ هُوَ فِىْ ضَلٰلٍவழிகேட்டில் உள்ளவர்களைمُّبِيْنٍ‏தெளிவான
குல் ஹுவர் ரஹ்மானு ஆமன்னா Bபிஹீ வ 'அலய்ஹி தவக்கல்னா Fபஸதஃலமூன மன் ஹுவ Fபீ ளலாலிம் முBபீன்
(நபியே!) நீர் கூறும்: (எங்களைக் காப்பவன்) அவனே - அர்ரஹ்மான்; அவன் மீதே நாங்கள் ஈமான் கொண்டோம்; மேலும் அவனையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம் - எனவே, வெகு சீக்கிரத்தில் பகிரங்கமான வழி கேட்டிலிருப்பவர் யார் என்பதை நீங்கள் அறிவீர்கள்!”
قُلْ اَرَءَیْتُمْ اِنْ اَصْبَحَ مَآؤُكُمْ غَوْرًا فَمَنْ یَّاْتِیْكُمْ بِمَآءٍ مَّعِیْنٍ ۟۠
قُلْகூறுவீராகاَرَءَيْتُمْஅறிவியுங்கள்اِنْ اَصْبَحَசென்று விட்டால்مَآؤُكُمْஉங்கள் தண்ணீர்غَوْرًاஆழத்தில்فَمَنْயார்يَّاْتِيْكُمْ بِمَآءٍஉங்களுக்கு தண்ணீரைக் கொண்டு வருவார்مَّعِيْنٍ‏மதுரமான
குல் அர'அய்தும் இன் அஸ்Bபஹ மா'உகும் கவ்ரன் Fபமய் ய'தீகும் Bபிமா'இம் ம'ஈன்
(நபியே!) நீர் கூறும்: உங்களின் தண்ணீர் பூமியினுள் (உறிஞ்சப்பட்டுப்) போய்விட்டால், அப்பொழுது ஓடும் நீரை உங்களுக்குக் கொண்டு வருபவன் யார்? என்பதை கவனித்தீர்களா? என்று (எனக்கு அறிவியுங்கள்).