உலகத்தார் யாவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக (சத்தியத்தையும், அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தைத் தன் அடியார் மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன்.
(அந்த நாயன்) எத்தகையவன் என்றால் வானங்கள், பூமி (ஆகியவற்றின்) ஆட்சி அவனுக்கே உரியது; அவன் (தனக்கென) ஒரு மகனை எடுத்துக் கொள்ளவில்லை; அவனுடைய ஆட்சியில் அவனுக்கு கூட்டாளி எவருமில்லை; அவனே எல்லாப் பொருட்களையும் படைத்து, அவற்றை அதனதன் அளவுப் படி அமைத்தான்.
وَاتَّخَذُوْاஅவர்கள் எடுத்துக் கொண்டனர்مِنْ دُوْنِهٖۤஅவனையன்றிاٰلِهَةًகடவுள்களைلَّا يَخْلُقُوْنَபடைக்க மாட்டார்கள்شَيْـٴًـــاஎதையும்وَّهُمْஅவர்கள்يُخْلَقُوْنَபடைக்கப்படுகிறார்கள்وَلَا يَمْلِكُوْنَஇன்னும் உரிமை பெற மாட்டார்கள்لِاَنْفُسِهِمْதங்களுக்குத் தாமேضَرًّاதீமை செய்வதற்கும்وَّلَا نَفْعًاநன்மை செய்வதற்கும்وَّلَا يَمْلِكُوْنَஇன்னும் உரிமை பெற மாட்டார்கள்مَوْتًاஇறப்பிற்கும்وَّلَا حَيٰوةًவாழ்விற்கும்وَّلَا نُشُوْرًاமீண்டும் உயிர்த்தெழ செய்வதற்கும்
(எனினும் முஷ்ரிக்குகள்) அவனையன்றி (வேறு) தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் - அவர்கள் எந்தப் பொருளையும் படைக்க மாட்டார்கள்; (ஏனெனில்) அவர்களே படைக்கப்பட்டவர்கள். இன்னும் அவர்கள்; தங்களுக்கு நன்மை செய்து கொள்ளவோ தீமையை தடுத்துக் கொள்ளவோ சக்திபெற மாட்டார்கள்; மேலும் அவர்கள் உயிர்ப்பிக்கவோ, மரணிக்கச் செய்யவோ, மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பவோ, இயலாதவர்களாகவும் இருக்கின்றனர்.
“இன்னும்; இது (அல் குர்ஆன்) பொய்யேயன்றி வேறு இல்லை; இதை இவரே இட்டுக்கட்டிக் கொண்டார்; இன்னும் மற்ற மக்கள் கூட்டத்தாரும் இதில் அவருக்கு உதவிபுரிந்துள்ளார்கள்” என்றும் நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர்; ஆனால் (இப்படிக் கூறுவதன் மூலம்) திடனாக அவர்களே ஓர் அநியாயத்தையும், பொய்யையும் கொண்டு வந்துள்ளார்கள்.
இன்னும் அவர்கள் கூறுகிறார்கள்: “இன்னும் அவை முன்னோர்களின் கட்டுக் கதைகளே; அவற்றை இவரே எழுதுவித்துக் கொண்டிருக்கிறார் - ஆகவே அவை அவர் முன்னே காலையிலும் மாலையிலும் ஓதிக் காண்பிக்கப்படுகின்றன.”
(நபியே!) “வானங்களிலும், பூமியிலுமுள்ள இரகசியங்களை அறிந்தவன் எவனோ அவனே அதை இறக்கி வைத்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவனாகவும், மிக்க கிருபை செய்வோனாகவும் இருக்கின்றான்” என்று கூறுவீராக!
மேலும் அவர்கள் கூறுகிறார்கள்: “இந்த ரஸூலுக்கு என்ன? இவர் (மற்றவர்களைப் போலவே) உணவு உண்கிறார்; கடை வீதிகளில் நடக்கிறார். இவருடன் சேர்ந்து அச்சமூட்டி எச்சரிப்பதற்காக, ஒரு மலக்கு (வானவர்) அனுப்பப்படடிருக்க வேண்டாமா?”
“அல்லது இவருக்கு ஒரு புதையல் அளிக்கப்பட்டிருக்க வேண்டாமா? அல்லது அதிலிருந்து உண்பதற்கு (ஒரு பழத்)தோட்டம் உண்டாயிருக்க வேண்டாமா?” (என்றும் கூறுகின்றனர்;) அன்றியும், இந்த அநியாயக் காரர்கள்; (முஃமின்களை நோக்கி) “சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையேயன்றி, வேறெவரையும் நீங்கள் பின்பற்றவில்லை” என்றும் கூறுகிறார்கள்.
اُنْظُرْபார்ப்பீராக!كَيْفَஎப்படிضَرَبُوْاஅவர்கள் விவரிக்கின்றனர்لَـكَஉமக்குالْاَمْثَالَதன்மைகளைفَضَلُّوْاஆகவே, அவர்கள் வழிகெட்டனர்فَلَا يَسْتَطِيْعُوْنَஅவர்கள் சக்தி பெறமாட்டார்கள்سَبِيْلاًஒரு பாதைக்கு
(நபியே! உமக்காக அவர்கள் எத்தகைய உவமானங்களை எடுத்துக் கூறுகிறார்கள் என்பதை நீர் பாரும்! அவர்கள் வழி கெட்டுப் போய்விட்டார்கள் - ஆகவே அவர்கள் (நேரான) மார்க்கத்தைக் காண சக்தி பெறமாட்டார்கள்.
தBபாரகல் லதீ இன் ஷா'அ ஜ'அல லக கய்ரன் மின் தாலிக ஜன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு வ யஜ்'அல் லக குஸூரா
(நபியே! இந்நிராகரிப்போர் சொல்வதைவிட) மேலான சுவன(த் தோட்ட)ங்களை அவன் நாடினால் உமக்காக உண்டாக்குவானே (அந்த நாயன்) பாக்கியம் மிக்கவன்; அவற்றின் கீழே ஆறுகள் சதா ஓடிக்கொண்டிருக்கும் - இன்னும் உமக்காக (அங்கு) மாளிகைகளையும் அவன் உண்டாக்குவான்.
எனினும் அவர்கள் (இறுதி விசாரணக்) காலத்தையே பொய்ப்பிக்க முற்படுகின்றனர்; ஆனால் நாம் அந்தக்காலத்தைப் பொய்ப்பிக்க முற்படுபவனுக்கு (நரக) நெருப்பைச் சித்தம் செய்திருக்கிறோம்.
وَاِذَاۤ اُلْقُوْاஅவர்கள் போடப்பட்டால்مِنْهَاஅதில்مَكَانًـاஇடத்தில்ضَيِّقًاநெருக்கமானمُّقَرَّنِيْنَகட்டப்பட்டவர்களாகدَعَوْاஅழைப்பார்கள்هُنَالِكَஅங்குثُبُوْرًا ؕகைசேதமே என்று
மேலும் அ(ந்நரகத்)தின் ஒரு நெருக்கமான இடத்தில் அவர்கள் (சங்கிலியால்) கட்டி எறியப்பட்டால், (அவ்வேதனையை தாங்கமாட்டாமல், அதைவிட) அழிவே மேல் என அங்கே வேண்டியழைப்பார்கள்.
அ(த்தகைய நரகமான)து நல்லதா? அல்லது பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள நித்திய சுவர்க்கம் நல்லதா? அது அவர்களுக்கு நற்கூலியாகவும், அவர்கள் போய்ச் சேருமிடமாகவும் இருக்கும்” என்று (அவர்களிடம் நபியே!) நீர் கூறும்.
அவர்களையும் அல்லாஹ்வையன்றி அவர்கள் வணங்கி கொண்டிருந்தவற்றையும் அவன் ஒன்று சேர்க்கும் நாளில்; (அத்தெய்வங்களை நோக்கி) “என்னுடைய இந்த அடியார்களை நீங்கள் வழி கெடுத்தீர்களா? அல்லது அவர்கள் தாமாகவே வழி கெட்டுப் போனார்களா?” என்று (இறைவன்) கேட்பான்.
(அதற்கு) அவர்கள் “இறைவா! நீ தூயவன். உன்னையன்றி நாங்கள் பாது காவலர்களை ஏற்படுத்திக் கொள்ள எங்களுக்குத் தேவையில்லையே! எனினும் நீ இவர்களையும் இவர்களுடைய மூதாதையர்களையும் சுகம் அனுபவிக்கச் செய்தாய்; அவர்களோ உன் நினைப்பை மறந்தார்கள்; மேலும் அழிந்து போகும் கூட்டத்தாரானார்கள்” என்று கூறுவர்.
நீங்கள் சொல்லியதையெல்லாம் திடனாக இவர்கள் பொய்யாக்கிவிட்டனர்; ஆகவே (இப்போது வேதனையைத்) தடுத்துக் கொள்ளவோ, உதவி பெற்றுக் கொள்ளவோ நீங்கள் சக்தி பெறமாட்டீர்கள்; மேலும் உங்களில் எவன் அநியாயம் செய்து கொண்டிருந்தானோ, அவனை நாம் பெரியதொரு வேதனையைச் சுவைக்கச்செய்வோம்” (என்று இறைவன் கூறுவான்).
(நபியே!) இன்னும் உமக்கு முன்னர் நாம் அனுப்பிய தூதர்களெல்லாம் நிச்சயமாக உணவருந்துபவர்களாகவும், கடை வீதிகளில் நடமாடுபவர்களாகவும் தாம் இருந்தார்கள்; மேலும், நாம் உங்களில் சிலரை மற்றும் சிலருக்குச் சோதனையாக்கி இருக்கிறோம் - ஆகவே நீங்கள் பொறுமையுடன் இருப்பீர்களா? உம்முடைய இறைவன் (யாவற்றையும்) உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்.
وَقَالَகூறினார்(கள்)الَّذِيْنَ لَا يَرْجُوْنَஆதரவு வைக்காதவர்கள்لِقَآءَنَاநம் சந்திப்பைلَوْلَاۤ اُنْزِلَஇறக்கப்பட வேண்டாமா?عَلَيْنَاஎங்கள் மீதுالْمَلٰٓٮِٕكَةُவானவர்கள்اَوْஅல்லதுنَرٰىநாங்கள் பார்க்க வேண்டாமா?رَبَّنَا ؕஎங்கள் இறைவனைلَـقَدِதிட்டவட்டமாகاسْتَكْبَرُوْاஅவர்கள் பெருமை அடித்தனர்فِىْۤ اَنْفُسِهِمْதங்களுக்குள்وَعَتَوْ عُتُوًّاஇன்னும் கடுமையாக அழிச்சாட்டியம் செய்தனர்كَبِيْرًاமிகப்பெரிய அளவில்
வ காலல் லதீன லா யர்ஜூன லிகா'அனா லவ் லா உன்Zஜில 'அலய்னல் மலா'இகது அவ்னரா ரBப்Bபனா; லகதிஸ்தக்Bபரூ Fபீ அன்Fபுஸிஹிம் வ 'அதவ் 'உதுவ்வன் கBபீரா
மேலும் (மறுமையில்) நம் சந்திப்பை நம்பாது இருக்கிறார்களே அவர்கள்: “எங்களிடம் ஏன் மலக்குகள் அனுப்பப்படவில்லை? அல்லது ஏன் நாம் நம்முடைய இறைவனைக் காண முடியவில்லை?” என்று கூறுகிறார்கள். திடமாக அவர்கள் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்கள்; மேலும், மிகவும் வரம்பு கடந்து சென்று விட்டனர்.
அவர்கள் மலக்குகளைக் காணும் நாளில், அக்குற்றவாளிகளுக்கு நற்செய்தி எதுவும் அன்றைய தினம் இராது; (நற்பாக்கியம்) முற்றாக (உங்களுக்கு) தடுக்கப்பட்டு விட்டது என்று அந்த மலக்குகள் கூறுவார்கள்.
اَصْحٰبُ الْجَنَّةِசொர்க்கவாசிகள்يَوْمَٮِٕذٍஅந்நாளில்خَيْرٌசிறந்தவர்கள்مُّسْتَقَرًّاதங்குமிடத்தால்وَّاَحْسَنُஇன்னும் மிக சிறப்பானவர்கள்مَقِيْلًاஓய்வெடுக்கும் இடத்தால்
وَيَوْمَஅந்நாளில்يَعَضُّகடிப்பான்الظَّالِمُஅநியாயக்காரன்عَلٰى يَدَيْهِதனது இரு கரங்களையும்يَقُوْلُகூறுவான்يٰلَيْتَنِى اتَّخَذْتُநான் எடுத்துக் கொண்டிருக்க வேண்டுமே!مَعَ الرَّسُوْلِதூதருடன்سَبِيْلًاஒரு வழியை
“நிச்சயமாக, என்னிடம் நல்லுபதேசம் வந்த பின்னரும் அதிலிருந்து அவன் என்னை வழி கெடுத்தானே! மேலும் ஷைத்தான் மனிதனுக்கு மிகவும் சதி செய்பவனாக இருக்கிறான்!” (என்று புலம்புவான்.)
மேலும், இவ்வாறே நாம் ஒவ்வொரு நபிக்கும் குற்றவாளிகளிலிருந்து பகைவரை உண்டாக்கினோம்; இன்னும், உம்முடைய இறைவன் (உமக்கு) நேர்வழி காட்டியாகவும் உதவிபுரிபவனாகவும் இருக்கப் போதுமானவன்.
வ காலல் லதீன கFபரூ லவ் லா னுZஜ்Zஜில 'அலய்ஹில் குர்'ஆனு ஜும்லத(ன்)வ் வாஹிதஹ்; கதாலிக லினுதBப்Bபித Bபிஹீ Fபு'ஆதக வ ரத்தல்னாஹு தர்தீலா
இன்னும்: “இவருக்கு இந்த குர்ஆன் (மொத்தமாக) ஏன் ஒரே தடவையில் முழுதும் இறக்கப்படவில்லை?” என்று நிராகரிப்போர் கேட்கிறார்கள்; இதைக் கொண்டு உம் இதயத்தை உறுதிப்படுத்துவதற்காக இதனை படிப்படியாக நாம் இறக்கினோம்.
وَلَا يَاْتُوْنَكَஅவர்கள் உம்மிடம் கூறமாட்டார்கள்بِمَثَلٍஎந்த ஒரு தன்மையையும்اِلَّاதவிரجِئْنٰكَஉமக்கு நாம் கூறியேبِالْحَـقِّசத்தியத்தையும்وَاَحْسَنَஇன்னும் மிக அழகானتَفْسِيْرًا ؕவிளக்கத்தை(யும்)
اَلَّذِيْنَஎவர்கள்يُحْشَرُوْنَஎழுப்பப்படுகிறார்களோعَلٰىமீதுوُجُوْهِهِمْதங்கள் முகங்களின்اِلٰىபக்கம்جَهَـنَّمَۙநரகத்தின்اُولٰٓٮِٕكَஅவர்கள்தான்شَرٌّமிக கெட்டவர்கள்مَّكَانًاதங்குமிடத்தால்وَّاَضَلُّஇன்னும் மிக வழிதவறியவர்கள்سَبِيْلًاபாதையால்
எவர்கள் நரகத்திற்குத் தங்கள் முகம் குப்புற (இழுத்துச் செல்லப் பெற்று) ஒன்று சேர்க்கப் படுவார்களோ, அவர்கள் தங்குமிடத்தால் மிகவும் கெட்டவர்கள்; பாதையால் பெரிதும் வழி கெட்டவர்கள்.
فَقُلْنَاநாம் கூறினோம்اذْهَبَاۤநீங்கள் இருவரும் செல்லுங்கள்اِلَى الْقَوْمِமக்களிடம்الَّذِيْنَ كَذَّبُوْاபொய்ப்பித்தவர்கள்بِاٰيٰتِنَاؕநமது அத்தாட்சிகளைفَدَمَّرْنٰهُمْஆகவே நாம் அவர்களை அழித்து விட்டோம்تَدْمِيْرًاؕமுற்றிலும் தரை மட்டமாக
ஆகவே நாம், “நீங்கள் இருவரும் நம் அத்தாட்சிகளைப் பொய்ப்பித்தார்களே அக்கூட்டத்தாரிடம் செல்லுங்கள்” என்று கூறினோம். பின்னர், அ(வ்வாறு பொய்ப்பித்த)வர்களை முற்றும் அழித்தோம்.
وَقَوْمَஇன்னும் மக்களையும்نُوْحٍநூஹூடையلَّمَّاபோதுكَذَّبُواஅவர்கள் பொய்ப்பித்தனர்الرُّسُلَதூதர்களைاَغْرَقْنٰهُمْஅவர்களை மூழ்கடித்தோம்وَجَعَلْنٰهُمْஅவர்களை ஆக்கினோம்لِلنَّاسِமக்களுக்குاٰيَةً ؕஓர் அத்தாட்சியாகوَاَعْتَدْنَاஇன்னும் நாம் தயார் படுத்தியுள்ளோம்لِلظّٰلِمِيْنَஅநியாயக்காரர்களுக்குعَذَابًاதண்டனையைاَ لِيْمًا ۖ ۚவலி தரும்
இன்னும்: நூஹின் சமூகத்தவர் அவர்கள் (நம்) தூதர்களைப் பொய்யாக்கிய போது, நாம் அவர்களை மூழ்கடித்தோம்; அவர்களை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கிவைத்தோம்; மேலும் அநியாயக் காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனையை நாம் சித்தப்படுத்தி இருக்கிறோம்.
இன்னும்: நிச்சயமாக இ(ந்நிராகரிப்ப)வர்கள் ஒரு தீமையான (கல்) மாரி பொழிவிக்கப்பட்ட ஊருக்குச் சென்றிருக்கிறார்கள் - அதனையும் இவர்கள் பார்க்கவில்லையா? எனினும் (மரணத்திற்குப் பின் உயிர் கொடுத்து) எழுப்பப்படுவதை இவர்கள் நம்பவேயில்லை.
اِنْ كَادَ لَيُضِلُّنَاஇவர் நம்மை நிச்சயமாக வழி கெடுத்திருப்பார்عَنْ اٰلِهَـتِنَاநமது தெய்வங்களை விட்டுلَوْ لَاۤ اَنْ صَبَـرْنَاநாம் உறுதியாக இருந்திருக்க வில்லையென்றால்عَلَيْهَا ؕஅவற்றின் மீதுوَسَوْفَ يَعْلَمُوْنَஅவர்கள் அறிந்து கொள்வார்கள்حِيْنَபோதுيَرَوْنَஅவர்கள் பார்க்கும்الْعَذَابَதண்டனையைمَنْயார்اَضَلُّமிக வழிகெட்டவர்سَبِيْلًاபாதையால்
இன் காத ல யுளில்லுனா 'அன் ஆலிஹதினா லவ் லா அன் ஸBபர்னா 'அலய்ஹா; வ ஸவ்Fப யஃலமூன ஹீன யரவ்னல் 'அதாBப மன் அளல்லு ஸBபீலா
“நாம் (நம் தெய்வங்களின் மீது) உறுதியாக இல்லாதிருந்தால், நம்முடைய தெய்வங்களை விட்டும் திருப்பி நம்மை இவர் வழி கெடுத்தேயிருப்பார்” (என்றும் அவர்கள் கூறுகின்றனர்; (மறுமையின்) வேதனையை அவர்கள் காணும்பொழுது, பாதையால் மிக வழிகெட்டவர்கள் யார் என்பதை நன்கறிந்து கொள்வார்கள்.
அம் தஹ்ஸBபு அன்ன அக்தரஹும் யஸ்ம'ஊன அவ் யஃகிலூன்; இன் ஹும் இல்லா கல் அன்'ஆமி Bபல் ஹும் அளல்லு ஸBபீலா
அல்லது, நிச்சயமாக அவர்களில் பெரும்பாலோர் (உம் உபதேசத்தைக்) கேட்கிறார்கள்; அல்லது அறிந்துணர்கிறார்கள் என்று நீர் நினைக்கின்றீரா? அவர்கள் கால்நடைகளைப் போன்றவர்களேயன்றி வேறில்லை-அல்ல; (அவற்றை விடவும்) அவர்கள், மிகவும் வழி கெட்டவர்கள்.
அலம் தர இலா ரBப்Bபிக கய்Fப மத்தள் ளில்ல வ லவ் ஷா'அ ல ஜ'அலஹூ ஸாகினன் தும்ம ஜ'அல்னஷ் ஷம்ஸ 'அலய்ஹி தலீலா
(நபியே!) உம்முடைய இறைவன் நிழலை எப்படி நீட்டுகின்றான் என்பதை நீர் பார்க்கவில்லையா? மேலும் அவன் நாடினால் அதனை (ஒரே நிலையில்) அசைவற்றிருக்கச் செய்ய முடியும். (நபியே!) பின்னர் சூரியனை - நாம் தாம் நிழலுக்கு ஆதாரமாக ஆக்கினோம்.
لِّـنُحْیَِۧநாம் உயிர்ப்பிப்பதற்காகவும்بِهٖஅதன்மூலம்بَلْدَةًபூமியைمَّيْتًاஇறந்தوَّنُسْقِيَهٗஇன்னும் நாம் அதை புகட்டுவதற்காகவும்مِمَّا خَلَقْنَاۤநாம் படைத்தவற்றில்اَنْعَامًاபல கால்நடைகளுக்கும்وَّاَنَاسِىَّஇன்னும் மனிதர்களுக்கும்كَثِيْرًاஅதிகமான
அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான்; ஒன்று, மிக்க இனிமையும் சுவையுமுள்ளது; மற்றொன்று உப்பும் கசப்புமானது - இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான்.
இன்னும் அவன்தான் மனிதனை நீரிலிருந்து படைத்து, பின்னர் அவனுக்கு வம்சத்தையும், சம்பந்தங்களையும் ஏற்படுத்துகிறான்; மேலும் உம்முடைய இறைவன் பேராற்றலுள்ளவன்.
வ யஃBபுதூன மின் தூனில் லாஹி மா லா யன்Fப'உஹும் வலா யளுர்ருஹும்; வ கானல் காFபிரு 'அலா ரBப்Bபிஹீ ளஹீரா
இவ்வாறிருந்தும், அவர்கள் அல்லாஹ்வை அன்றி தங்களுக்கு நன்மை செய்யவோ, தீமையை செய்யவோ இயலாதவற்றை வணங்குகின்றனர்; நிராகரிப்பவன் தன் இறைவனுக்கு எதிராக (தீய சக்திகளுக்கு) உதவி செய்பவனாகவே இருக்கிறான்.
“அதற்காக நான் உங்களிடம் எந்தக் கூலியையும் கேட்கவில்லை - விருப்பமுள்ளவர் தம் இறைவனிடத்து(ச் செல்ல) நேர் வழியை ஏற்படுத்திக் கொள்ளட்டும் என்பதைத் தவிர” என்று (நபியே!) நீர் கூறும்.
எனவே மரணிக்கமாட்டானே அந்த நித்திய ஜீவ(னாகிய அல்லாஹ்வி)ன் மீதே முற்றிலும் நம்பிக்கை வைப்பீராக. இன்னும் அவன் புகழைக் கொண்டு (அவனைத்) துதி செய்து கொண்டிருப்பீராக; இன்னும் அவன் தன் அடியார்களின் பாவங்களை அறிந்தவனாக இருப்பதே போதுமானதாகும்.
அவனே வானங்களையும், பூமியையும், அவற்றிற்கிடையிலுள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தான்; பின்னர் அவன் அர்ஷின் மீது அமைந்தான்; (அவன் தான் அருள் மிக்க) அர்ரஹ்மான்; ஆகவே, அறிந்தவர்களிடம் அவனைப் பற்றிக் கேட்பீராக.
“இன்னும் அர்ரஹ்மானுக்கு நீங்கள் ஸஜ்தா செய்யுங்கள்” என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் “அர்ரஹ்மான் என்பவன் யார்? நீர் கட்டளையிடக் கூடியவனுக்கு நாங்கள் ஸஜ்தா செய்வோமா?” என்று கேட்கிறார்கள்; இன்னும், இது அவர்களுக்கு வெறுப்பையே அதிகப்படுத்திவிட்டது.
இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள்; மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதா)ட முற்பட்டால் “ஸலாம்” (சாந்தியுண்டாகட்டும் என்று) சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள்.
இன்னும், அவர்கள் செலவு செய்தால் வீண் விரயம் செய்யமாட்டார்கள்; (உலோபித்தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள் - எனினும், இரண்டுக்கும் மத்திய நிலையாக இருப்பார்கள்.
அன்றியும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்கமாட்டார்கள்; இன்னும், அல்லாஹ்வினால் விலக்கப் பட்ட எந்த மனிதரையும் அவர்கள் நியாயமின்றிக் கொல்லமாட்டார்கள், விபசாரமும் செய்ய மாட்டார்கள் - ஆகவே, எவர் இவற்றைச் செய்கிறாரோ, அவர் தண்டனை அடைய நேரிடும்.
ஆனால் (அவர்களில் எவர்) தவ்பா செய்து ஈமானுங் கொண்டு, ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கிறார்களோ - அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றிவிடுவான். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்.
وَالَّذِيْنَ لَا يَشْهَدُوْنَஇன்னும் அவர்கள் ஆஜராக மாட்டார்கள்الزُّوْرَۙபொய்யான செயலுக்குوَ اِذَا مَرُّوْاஇன்னும் இவர்கள் கடந்து சென்றால்بِاللَّغْوِவீணான செயலுக்குمَرُّوْاகடந்து சென்று விடுவார்கள்كِرَامًاகண்ணியவான்களாக
அன்றியும், அவர்கள் பொய் சாட்சி சொல்லமாட்டார்கள்; மேலும், அவர்கள் வீணான காரிய(ம் நடக்கும் இட)த்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவராக (ஒதுங்கிச்) சென்றுவிடுவார்கள்.
இன்னும் அவர்கள், தங்கள் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால், செவிடர்களையும், குருடர்களையும் போல் அவற்றின் மீது விழமாட்டார்கள். (சிந்தனையுடன் செவி சாய்ப்பார்கள்.)
மேலும் அவர்கள்: “எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள்.
خٰلِدِيْنَஅவர்கள் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்فِيْهَا ؕஅதில்حَسُنَتْஅது மிக அழகானதுمُسْتَقَرًّاநிரந்தரமான தங்குமிடத்தாலும்وَّمُقَامًاதற்காலிகமான தங்குமிடத்தாலும்
காலிதீன Fபீஹா; ஹஸுனத் முஸ்தகர்ர(ன்)வ் வ முகாமா
அதில் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள்; அது வாழ்வதற்கும் வசிப்பதற்கும் அழகிய இடமாகும்.
قُلْகூறுவீராக!مَا يَعْبَـؤُاஒரு பொருட்டாகவே கருதமாட்டான்بِكُمْஉங்களைرَبِّىْஎன் இறைவன்لَوْلَاஇல்லாதிருந்தால்دُعَآؤُபிரார்த்தனைكُمْۚஉங்கள்فَقَدْதிட்டமாகكَذَّبْتُمْநீங்கள் பொய்ப்பித்தீர்கள்فَسَوْفَ يَكُوْنُஇது கண்டிப்பாக இருக்கும்لِزَامًاஉங்களை தொடரக்கூடியதாக
குல் மா யஃBப'உ Bபிகும் ரBப்Bபீ லவ் லா து'ஆ'உகும் Fபகத் கத்தBப்தும் Fபஸவ்Fப யகூனு லிZஜாமா
(நபியே!) சொல்வீராக: “உங்களுடைய பிரார்த்தனை இல்லாவிட்டால், என்னுடைய இறைவன் உங்களைப் பொருட்படுத்தி இருக்க மாட்டான்; ஆனால் நீங்களோ (சத்தியத்தை) நிராகரித்துக் கொண்டே இருக்கிறீர்கள். எனவே, அதன் வேதனை பின்னர் உங்களைக் கண்டிப்பாகப் பிடித்தே தீரும்.”