">

தேடல் வார்த்தை: "தூய்மை"

தேடல் மொழிபெயர்ப்புகள்: முஹம்மது ஜான்

52 முடிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன

பக்கம் 1 / 2 (முடிவுகள் 1 - 50)

یٰۤاَیُّهَا النَّاسُ اعْبُدُوْا رَبَّكُمُ الَّذِیْ خَلَقَكُمْ وَالَّذِیْنَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ ۟ۙ
یٰۤاَیُّهَاالنَّاسُமனிதர்களேاعْبُدُوْاவணங்குங்கள்رَبَّكُمُஉங்கள் இறைவனைالَّذِیْஎவன்خَلَقَكُمْஉங்களைப் படைத்தானோوَ الَّذِیْنَமேலும் எவர்களைمِنْஇருந்துقَبْلِكُمْஉங்களுக்கு முன்னால்لَعَلَّكُمْஅதனால் நீங்கள்تَتَّقُوْنَ ۙஇறையச்சமுடையவர்களாகலாம்
யா அய்யுஹன் னாஸுஃBபுதூ ரBப்Bபகுமுல் லதீ கலககும் வல்லதீன மின் கBப்லிகும் ல'அல்லகும் தத்தகூன்
மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும்; தூய்மையும்) உடையோராகலாம்.
وَقَالُوا اتَّخَذَ اللّٰهُ وَلَدًا ۙ سُبْحٰنَهٗ ؕ بَلْ لَّهٗ مَا فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ كُلٌّ لَّهٗ قٰنِتُوْنَ ۟
وَ قَالُواமேலும் அவர்கள் கூறினார்கள்اتَّخَذَஏற்படுத்திக் கொண்டான்اللّٰهُஅல்லாஹ்وَلَدًا ۙஒரு மகனைسُبْحٰنَهٗ ؕஅவன் தூய்மையானவன்بَلْமாறாகلَّهٗஅவனுக்கேمَاஎவைفِیஇல்السَّمٰوٰتِவானங்கள்وَ الْاَرْضِ ؕமற்றும் பூமிكُلٌّஅனைத்தும்لَّهٗஅவனுக்கேقٰنِتُوْنَபணியக்கூடியவை
வ காலுத் தகதல் லாஹு வலதன் ஸுBப்ஹானஹூ Bபல் லஹூ மா Fபிஸ் ஸமாவாதி வல் அர்ளி குல்லுல் லஹூ கானிதூன்
இன்னும் கூறுகிறார்கள்: “அல்லாஹ் ஒரு குமாரனைப் பெற்றிருக்கிறான்” என்று. அப்படியல்ல - அவன் (இவர்கள் கூறுவதிலிருந்து) மிகத் தூய்மையானவன்; வானங்கள், பூமியில் உள்ளவை யாவும் அவனுக்கே உரியவை; இவையனைத்தும் அவனுக்கே அடிபணிந்து வழிபடுகின்றன.
وَاِذْ جَعَلْنَا الْبَیْتَ مَثَابَةً لِّلنَّاسِ وَاَمْنًا ؕ وَاتَّخِذُوْا مِنْ مَّقَامِ اِبْرٰهٖمَ مُصَلًّی ؕ وَعَهِدْنَاۤ اِلٰۤی اِبْرٰهٖمَ وَاِسْمٰعِیْلَ اَنْ طَهِّرَا بَیْتِیَ لِلطَّآىِٕفِیْنَ وَالْعٰكِفِیْنَ وَالرُّكَّعِ السُّجُوْدِ ۟
وَ اِذْமேலும் (நினைவு கூருங்கள்)جَعَلْنَاநாம் ஆக்கினோம்الْبَیْتَஅந்த வீட்டைمَثَابَةًதிரும்பி வரும் இடமாகلِّلنَّاسِமனிதர்களுக்குوَ اَمْنًا ؕமேலும் பாதுகாப்பானதாகவும்وَ اتَّخِذُوْاமேலும் ஆக்கிக்கொள்ளுங்கள்مِنْஇருந்துمَّقَامِநின்ற இடத்தைاِبْرٰهٖمَஇப்ராஹீமுடையمُصَلًّی ؕதொழும் இடமாகوَ عَهِدْنَاۤமேலும் நாம் கட்டளையிட்டோம்اِلٰۤیநோக்கிاِبْرٰهٖمَஇப்ராஹீமைوَ اِسْمٰعِیْلَமேலும் இஸ்மாயீலைاَنْஎன்றுطَهِّرَاநீங்கள் இருவரும் தூய்மைப்படுத்துங்கள்بَیْتِیَஎனது வீட்டைلِلطَّآىِٕفِیْنَசுற்றி வருபவர்களுக்காகوَ الْعٰكِفِیْنَமேலும் தங்கியிருப்பவர்களுக்காகوَ الرُّكَّعِமேலும் ருகூஃ செய்பவர்களுக்காகالسُّجُوْدِஸுஜூது செய்பவர்களுக்காக
வ இத் ஜ'அல்னல் Bபய்த மதாBபதல் லின்னாஸி வ அம்ன(ன்)வ் வத்தகிதூ மிம் மகாமி இBப்ராஹீம முஸல்லா; வ 'அஹித்னா இலா இBப்ராஹீம வ இஸ்மா'ஈல அன் தஹ்ஹிரா Bபய்திய லித்தா'இFபீன வல்'ஆகிFபீன வர்ருக்க'இஸ் ஸுஜூத்
(இதையும் எண்ணிப் பாருங்கள்; “கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்; இப்ராஹீம் நின்ற இடத்தை - மகாமு இப்ராஹீமை - தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளுங்கள்” (என்றும் நாம் சொன்னோம்). இன்னும் “என் வீட்டைச் சுற்றி வருபவர்கள், தங்கியிருப்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும்” என்று இப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதி மொழி வாங்கினோம்.
رَبَّنَا وَابْعَثْ فِیْهِمْ رَسُوْلًا مِّنْهُمْ یَتْلُوْا عَلَیْهِمْ اٰیٰتِكَ وَیُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَیُزَكِّیْهِمْ ؕ اِنَّكَ اَنْتَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟۠
رَبَّنَاஎங்கள் இறைவாوَ ابْعَثْமேலும் அனுப்புவாயாகفِیْهِمْஅவர்களிடையேرَسُوْلًاஒரு தூதரைمِّنْهُمْஅவர்களிலிருந்தேیَتْلُوْاஅவர் ஓதிக்காட்டுவார்عَلَیْهِمْஅவர்களுக்குاٰیٰتِكَஉனது வசனங்களைوَ یُعَلِّمُهُمُமேலும் அவர்களுக்குக் கற்பிப்பார்الْكِتٰبَவேதத்தைوَ الْحِكْمَةَமற்றும் ஞானத்தைوَ یُزَكِّیْهِمْ ؕமேலும் அவர்களைத் தூய்மைப்படுத்துவார்اِنَّكَநிச்சயமாக நீاَنْتَநீயேالْعَزِیْزُமிகைத்தவன்الْحَكِیْمُ۠ஞானமிக்கவன்
ரBப்Bபனா வBப்'அத் Fபீஹிம் ரஸூலம் மின்ஹும் யத்லூ 'அலய்ஹிம் ஆயாதிக வ யு'அல்லிமுஹுமுல் கிதாBப வல் ஹிக்மத வ யுZஜக்கீஹிம்; இன்னக அன்தல் 'அZஜீZஜுல் ஹகீம்
“எங்கள் இறைவனே! அவர்களிடையே உன்னுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து; அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுத்து; அவர்களைத் தூய்மைப்படுத்தக் கூடிய ஒரு தூதரை அவர்களிலிருந்தே எழுந்திடச் செய்வாயாக - நிச்சயமாக நீயே வல்லமை மிக்கோனுமாகவும், பெரும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றாய்.”
وَمَنْ یَّرْغَبُ عَنْ مِّلَّةِ اِبْرٰهٖمَ اِلَّا مَنْ سَفِهَ نَفْسَهٗ ؕ وَلَقَدِ اصْطَفَیْنٰهُ فِی الدُّنْیَا ۚ وَاِنَّهٗ فِی الْاٰخِرَةِ لَمِنَ الصّٰلِحِیْنَ ۟
وَ مَنْஇன்னும் எவர்یَّرْغَبُபுறக்கணிப்பாரோعَنْவிட்டுمِّلَّةِமார்க்கத்தைاِبْرٰهٖمَஇப்ராஹீமுடையاِلَّاதவிரمَنْஎவர்سَفِهَஅறிவீனமாக்கிக் கொண்டாரோنَفْسَهٗ ؕதன்னைத் தானேوَ لَقَدِஇன்னும் நிச்சயமாகاصْطَفَیْنٰهُநாம் அவரைத் தேர்ந்தெடுத்தோம்فِیஇல்الدُّنْیَا ۚஇவ்வுலகம்وَ اِنَّهٗஇன்னும் நிச்சயமாக அவர்فِیஇல்الْاٰخِرَةِமறுமைلَمِنَநிச்சயமாகالصّٰلِحِیْنَநல்லோர்களில்
வ மய் யர்கBபு 'அம்-மில்லதி இBப்ராஹீம இல்லா மன் ஸFபிஹ னFப்ஸஹ்; வ லகதிஸ் தFபய்னாஹு Fபித்-துன்யா வ இன்னஹூ Fபில் ஆகிரதி லமினஸ் ஸாலிஹீன்
இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்?-தன்னைத் தானே தாழ்த்திக் கொள்பவனைத் தவிர; நிச்சயமாக நாம் அவரை(த் தூய்மையாளராக) இவ்வுலகில் தேர்ந்தெடுத்தோம்; நிச்சயமாக அவர் மறுமையில் நல்லடியார் கூட்டத்திலேயே இருப்பார்.
كَمَاۤ اَرْسَلْنَا فِیْكُمْ رَسُوْلًا مِّنْكُمْ یَتْلُوْا عَلَیْكُمْ اٰیٰتِنَا وَیُزَكِّیْكُمْ وَیُعَلِّمُكُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَیُعَلِّمُكُمْ مَّا لَمْ تَكُوْنُوْا تَعْلَمُوْنَ ۟ؕۛ
كَمَاۤஎவ்வாறுاَرْسَلْنَاநாம் அனுப்பினோமோفِیْكُمْஉங்களுக்குள்رَسُوْلًاஒரு தூதரைمِّنْكُمْஉங்களிலிருந்தேیَتْلُوْاஅவர் ஓதிக்காட்டுவார்عَلَیْكُمْஉங்களுக்குاٰیٰتِنَاநம் வசனங்களைوَ یُزَكِّیْكُمْமேலும் உங்களைத் தூய்மைப்படுத்துவார்وَ یُعَلِّمُكُمُமேலும் உங்களுக்குக் கற்றுக்கொடுப்பார்الْكِتٰبَவேதத்தைوَ الْحِكْمَةَமேலும் ஞானத்தைوَ یُعَلِّمُكُمْமேலும் உங்களுக்குக் கற்றுக்கொடுப்பார்مَّاஎவற்றைلَمْஇல்லையோتَكُوْنُوْاநீங்கள் இருந்தீர்களோتَعْلَمُوْنَؕۛஅறிந்தவர்களாக
கமா அர்ஸல்னா Fபீகும் ரஸூலம் மின்கும் யத்லூ 'அலய்கும் ஆயாதின வ யுZஜக்கீகும் வ யு'அல்லி முகுமுல் கிதாBப வல் ஹிக்மத வ யு'அல்லிமுகும் மா லம் தகூனூ தஃலமூன்
இதே போன்று, நாம் உங்களிடையே உங்களிலிருந்து ஒரு தூதரை, நம் வசனங்களை உங்களுக்கு எடுத்து ஓதுவதற்காகவும்; உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும்; உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக்கொடுப்பதற்காகவும்; இன்னும் உங்களுக்குத் தெரியாமல் இருந்தவற்றை, உங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும் அனுப்பியுள்ளோம்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا كُلُوْا مِنْ طَیِّبٰتِ مَا رَزَقْنٰكُمْ وَاشْكُرُوْا لِلّٰهِ اِنْ كُنْتُمْ اِیَّاهُ تَعْبُدُوْنَ ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோكُلُوْاஉண்ணுங்கள்مِنْஇருந்துطَیِّبٰتِதூய்மையானவற்றைمَاஎவற்றைرَزَقْنٰكُمْநாம் உங்களுக்கு வழங்கினோமோوَ اشْكُرُوْاமேலும் நன்றி செலுத்துங்கள்لِلّٰهِஅல்லாஹ்வுக்குاِنْஎன்றால்كُنْتُمْநீங்கள்اِیَّاهُஅவனையேتَعْبُدُوْنَவணங்குகிறீர்கள்
யா அய்யுஹல் லதீன ஆமனூ குலூ மின் தய்யிBபாதி மா ரZஜக்னாகும் வஷ்குரூ லில்லாஹி இன் குன்தும் இய்யாஹு தஃBபுதூன்
நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்; நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருப்பீர்களாயின், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாருங்கள்.
وَیَسْـَٔلُوْنَكَ عَنِ الْمَحِیْضِ ؕ قُلْ هُوَ اَذًی ۙ فَاعْتَزِلُوا النِّسَآءَ فِی الْمَحِیْضِ ۙ وَلَا تَقْرَبُوْهُنَّ حَتّٰی یَطْهُرْنَ ۚ فَاِذَا تَطَهَّرْنَ فَاْتُوْهُنَّ مِنْ حَیْثُ اَمَرَكُمُ اللّٰهُ ؕ اِنَّ اللّٰهَ یُحِبُّ التَّوَّابِیْنَ وَیُحِبُّ الْمُتَطَهِّرِیْنَ ۟
وَ یَسْـَٔلُوْنَكَமேலும் அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்عَنِபற்றிالْمَحِیْضِ ؕமாதவிடாய்قُلْநீர் கூறுவீராகهُوَஅதுاَذًی ۙஒரு உபாதைفَاعْتَزِلُواஎனவே விலகியிருங்கள்النِّسَآءَபெண்களிடமிருந்துفِیகாலத்தில்الْمَحِیْضِ ۙமாதவிடாய்وَ لَاமேலும் வேண்டாம்تَقْرَبُوْهُنَّஅவர்களை நெருங்கحَتّٰیவரைیَطْهُرْنَ ۚஅவர்கள் தூய்மையாகும்فَاِذَاபின்னர் எப்போதுتَطَهَّرْنَஅவர்கள் தூய்மை அடைந்து விடுகிறார்களோفَاْتُوْهُنَّஅப்போது அவர்களிடம் செல்லுங்கள்مِنْஇருந்துحَیْثُஎவ்விடம்اَمَرَكُمُஉங்களுக்குக் கட்டளையிட்டானோاللّٰهُ ؕஅல்லாஹ்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்یُحِبُّநேசிக்கிறான்التَّوَّابِیْنَபாவமன்னிப்புத் தேடுபவர்களைوَ یُحِبُّமேலும் நேசிக்கிறான்الْمُتَطَهِّرِیْنَதூய்மையாக இருப்பவர்களை
வ யஸ்'அலூனக 'அனில் மஹீளி குல் ஹுவ அதன் FபஃதZஜிலுன் னிஸா'அ Fபில் மஹீளி வலா தக்ரBபூ ஹுன்ன ஹத்தா யத்ஹுர்ன Fப-இதா ததஹ்-ஹர்ர்ன Fபாதூஹுன்ன மின் ஹய்து அமரகுமுல் லாஹ்; இன்னல்லாஹ யுஹிBப்Bபுத் தவ்வாBபீன வ யுஹிBப்Bபுல் முததஹ்ஹிரீன்
மாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள்; நீர் கூறும்: “அது (ஓர் உபாதையான) தீட்டு ஆகும்; ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் விலகியிருங்கள்; அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்; அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள்; பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்; இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்.”
وَاِذَا طَلَّقْتُمُ النِّسَآءَ فَبَلَغْنَ اَجَلَهُنَّ فَلَا تَعْضُلُوْهُنَّ اَنْ یَّنْكِحْنَ اَزْوَاجَهُنَّ اِذَا تَرَاضَوْا بَیْنَهُمْ بِالْمَعْرُوْفِ ؕ ذٰلِكَ یُوْعَظُ بِهٖ مَنْ كَانَ مِنْكُمْ یُؤْمِنُ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ ؕ ذٰلِكُمْ اَزْكٰی لَكُمْ وَاَطْهَرُ ؕ وَاللّٰهُ یَعْلَمُ وَاَنْتُمْ لَا تَعْلَمُوْنَ ۟
وَ اِذَاமேலும் எப்போதுطَلَّقْتُمُநீங்கள் விவாகரத்து செய்துالنِّسَآءَபெண்களைفَبَلَغْنَஅவர்கள் அடைந்துவிட்டால்اَجَلَهُنَّஅவர்களின் தவணையைفَلَاஎனவேتَعْضُلُوْهُنَّஅவர்களைத் தடுக்காதீர்கள்اَنْஅவர்கள்یَّنْكِحْنَதிருமணம் செய்துகொள்வதைاَزْوَاجَهُنَّதங்களின் கணவர்களைاِذَاஎப்போதுتَرَاضَوْاஒருவருக்கொருவர் சம்மதித்தால்بَیْنَهُمْதங்களுக்கு இடையில்بِالْمَعْرُوْفِ ؕநல்முறையில்ذٰلِكَஅதுیُوْعَظُஅறிவுரை கூறப்படுகிறதுبِهٖஅதைக் கொண்டுمَنْஎவர்كَانَஇருக்கிறாரோمِنْكُمْஉங்களில்یُؤْمِنُநம்பிக்கை கொள்கிறாரோبِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுوَ الْیَوْمِமேலும் நாளின் மீதுالْاٰخِرِ ؕஇறுதிذٰلِكُمْஅதுவேاَزْكٰیமிகவும் தூய்மையானதுلَكُمْஉங்களுக்குوَ اَطْهَرُ ؕமேலும் மிகவும் பரிசுத்தமானதுوَ اللّٰهُமேலும் அல்லாஹ்یَعْلَمُஅறிவான்وَ اَنْتُمْமேலும் நீங்கள்لَاஅறியتَعْلَمُوْنَமாட்டீர்கள்
வ இதா தல்லக்துமுன் னிஸா'அ FபBபலக்ன அஜலஹுன்ன Fபலா தஃளுலூ ஹுன்ன அய் யன்கிஹ்ன அZஜ்வாஜ ஹுன்ன இதா தராளவ் Bபய்னஹும் Bபில்மஃ ரூFப்; தாலிக யூ'அளு Bபிஹீ மன் கான மின்கும் யு'மினு Bபில்லாஹி வல் யவ்மில் ஆகிர்; தாலிகும் அZஜ்கா லகும் வ அத்-ஹர்; வல்லாஹு யஃலமு வ அன்தும் லா தஃலமூன்
இன்னும், பெண்களை நீங்கள் தலாக் செய்து, அவர்களும் தங்களுடைய இத்தா தவணையைப் பூர்த்தி செய்து விட்டால், அவர்கள் தாங்கள் விரும்பி ஏற்கும் கணவர்களை முறைப்படித் திருமணம் செய்து கொள்வதைத் தடுக்காதீர்கள்; உங்களில் யார் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளார்களோ, அவர்களுக்கு இதைக் கொண்டு உபதேசிக்கப்படுகிறது; இ(தன்படி நடப்ப)து உங்களுக்கு நற்பண்பும், தூய்மையும் ஆகும்; (இதன் நலன்களை) அல்லாஹ் அறிவான்; நீங்கள் அறிய மாட்டீர்கள்.
وَاِذْ قَالَتِ الْمَلٰٓىِٕكَةُ یٰمَرْیَمُ اِنَّ اللّٰهَ اصْطَفٰىكِ وَطَهَّرَكِ وَاصْطَفٰىكِ عَلٰی نِسَآءِ الْعٰلَمِیْنَ ۟
وَ اِذْமேலும் (அச்சமயம்)قَالَتِகூறினார்கள்الْمَلٰٓىِٕكَةُவானவர்கள்یٰمَرْیَمُமர்யமே!اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்اصْطَفٰىكِஉன்னைத் தேர்ந்தெடுத்தான்وَ طَهَّرَكِமேலும் உன்னைப் பரிசுத்தப்படுத்தினான்وَ اصْطَفٰىكِமேலும் உன்னைத் தேர்ந்தெடுத்தான்عَلٰیமேலாகنِسَآءِபெண்களைالْعٰلَمِیْنَஅகிலத்தாரின்
வ இத் காலதில் மலா'இகது யா மர்யமு இன்னல் லாஹஸ் தFபாகி வ தஹ்ஹரகி வஸ்தFபாகி 'அலா னிஸா'இல் 'ஆலமீன்
(நபியே! மர்யமிடத்தில்) மலக்குகள்; மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்; உம்மைத் தூய்மையாகவும் ஆக்கியிருக்கிறான்; இன்னும் உலகத்திலுள்ள பெண்கள் யாவரையும் விட (மேன்மையாக) உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்” (என்றும்),
اِذْ قَالَ اللّٰهُ یٰعِیْسٰۤی اِنِّیْ مُتَوَفِّیْكَ وَرَافِعُكَ اِلَیَّ وَمُطَهِّرُكَ مِنَ الَّذِیْنَ كَفَرُوْا وَجَاعِلُ الَّذِیْنَ اتَّبَعُوْكَ فَوْقَ الَّذِیْنَ كَفَرُوْۤا اِلٰی یَوْمِ الْقِیٰمَةِ ۚ ثُمَّ اِلَیَّ مَرْجِعُكُمْ فَاَحْكُمُ بَیْنَكُمْ فِیْمَا كُنْتُمْ فِیْهِ تَخْتَلِفُوْنَ ۟
اِذْஅப்போதுقَالَகூறினான்اللّٰهُஅல்லாஹ்یٰعِیْسٰۤیஈஸாவே!اِنِّیْநிச்சயமாக நான்مُتَوَفِّیْكَஉம்மைக் கைப்பற்றுபவன்وَ رَافِعُكَமேலும் உம்மை உயர்த்துபவன்اِلَیَّஎன்னிடம்وَ مُطَهِّرُكَமேலும் உம்மைத் தூய்மைப்படுத்துபவன்مِنَஇருந்துالَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோوَ جَاعِلُமேலும் ஆக்குபவன்الَّذِیْنَஎவர்கள்اتَّبَعُوْكَஉம்மைப் பின்பற்றினார்களோفَوْقَமேலாகالَّذِیْنَஎவர்கள்كَفَرُوْۤاநிராகரித்தார்களோاِلٰیவரைیَوْمِநாள்الْقِیٰمَةِ ۚகியாமத்ثُمَّபின்னர்اِلَیَّஎன்னிடமேمَرْجِعُكُمْஉங்கள் திரும்புதல்فَاَحْكُمُநான் தீர்ப்பளிப்பேன்بَیْنَكُمْஉங்களுக்கிடையேفِیْمَاஎவற்றில்كُنْتُمْநீங்கள் இருந்தீர்களோفِیْهِஅதில்تَخْتَلِفُوْنَமுரண்பட்டுக் கொண்டிருந்தீர்களோ
இத் காலல் லாஹு யா 'ஈஸா இன்னீ முதவFப்Fபீக வ ராFபி'உக இலய்ய வ முதஹ் ஹிருக மினல் லதீன கFபரூ வ ஜா'இலுல் லதீனத்தBப ஊக Fபவ்கல் லதீன கFபரூ இலா யவ்மில் கியாமதி தும்ம இலய்ய மர்ஜி'உகும் Fப அஹ்குமு Bபய்னகும் Fபீமா குன்தும் Fபீஹி தக்தலிFபூன்
“ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்; இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்; நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்; மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்; பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது; (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்” என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)!
الَّذِیْنَ یَذْكُرُوْنَ اللّٰهَ قِیٰمًا وَّقُعُوْدًا وَّعَلٰی جُنُوْبِهِمْ وَیَتَفَكَّرُوْنَ فِیْ خَلْقِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ۚ رَبَّنَا مَا خَلَقْتَ هٰذَا بَاطِلًا ۚ سُبْحٰنَكَ فَقِنَا عَذَابَ النَّارِ ۟
الَّذِیْنَஎத்தகையோர்یَذْكُرُوْنَநினைவுகூருவார்களோاللّٰهَஅல்லாஹ்வைقِیٰمًاநின்ற நிலையிலும்وَّ قُعُوْدًاஅமர்ந்த நிலையிலும்وَّ عَلٰیமேலும் மீதுجُنُوْبِهِمْதங்கள் விலாப்புறங்களின்وَ یَتَفَكَّرُوْنَமேலும் அவர்கள் சிந்திப்பார்கள்فِیْஇல்خَلْقِபடைப்பில்السَّمٰوٰتِவானங்களின்وَ الْاَرْضِ ۚமற்றும் பூமியின்رَبَّنَاஎங்கள் இறைவனேمَاஇல்லைخَلَقْتَநீ படைத்தாய்هٰذَاஇதனைبَاطِلًا ۚவீணாகسُبْحٰنَكَநீ தூய்மையானவன்فَقِنَاஎனவே எங்களைப் பாதுகாப்பாயாகعَذَابَவேதனையிலிருந்துالنَّارِநெருப்பின்
அல்லதீன யத்குரூனல் லாஹ கியாம(ன்)வ்-வ கு'ஊத(ன்)வ்-வ 'அலா ஜுனூ Bபிஹிம் வ யதFபக்கரூன Fபீ கல்கிஸ் ஸமாவாதி வல் அர்ளி ரBப்Bபனா மா கலக்த ஹாத Bபாதிலன் ஸுBப்ஹானக Fபகினா 'அதாBபன் னார்
அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள்; வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து, “எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை; நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!” (என்றும்;)
اِلَّا الَّذِیْنَ تَابُوْا وَاَصْلَحُوْا وَاعْتَصَمُوْا بِاللّٰهِ وَاَخْلَصُوْا دِیْنَهُمْ لِلّٰهِ فَاُولٰٓىِٕكَ مَعَ الْمُؤْمِنِیْنَ ؕ وَسَوْفَ یُؤْتِ اللّٰهُ الْمُؤْمِنِیْنَ اَجْرًا عَظِیْمًا ۟
اِلَّاதவிரالَّذِیْنَஎவர்கள்تَابُوْاபாவமன்னிப்புத் தேடினார்களோوَ اَصْلَحُوْاமேலும் சீர்திருத்திக் கொண்டார்களோوَ اعْتَصَمُوْاமேலும் உறுதியாகப் பற்றிக் கொண்டார்களோبِاللّٰهِஅல்லாஹ்வைوَ اَخْلَصُوْاமேலும் தூய்மையாக்கிக் கொண்டார்களோدِیْنَهُمْதங்கள் மார்க்கத்தைلِلّٰهِஅல்லாஹ்வுக்காகفَاُولٰٓىِٕكَஅத்தகையோர்مَعَஉடன்الْمُؤْمِنِیْنَ ؕஇறைநம்பிக்கையாளர்கள்وَ سَوْفَமேலும் விரைவில்یُؤْتِவழங்குவான்اللّٰهُஅல்லாஹ்الْمُؤْمِنِیْنَஇறைநம்பிக்கையாளர்களுக்குاَجْرًاநற்கூலியைعَظِیْمًاமகத்தான
இல்லல் லதீன தாBபூ வ அஸ்லஹூ வஃதஸமூ Bபில்லாஹி வ அக்லஸூ தீனஹும் லில்லாஹி Fபஉலா'இக ம'அல் மு'மினீன வ ஸவ்Fப யு'தில் லாஹுல் மு'மினீன அஜ்ரன் 'அளீமா
யார் மன்னிப்புக் கேட்டு சீர்திருந்தி, அல்லாஹ்வை (தம் நற்செய்கைகள் மூலம்) கெட்டியாகப் பிடித்து, தங்களுடைய சன்மார்க்கத்தை அல்லாஹ்வுக்காகத் தூய்மையாக்கியும் கொண்டார்களோ அவர்கள் முஃமின்களுடன் இருப்பார்கள்; மேலும் அல்லாஹ் முஃமின்களுக்கு மகத்தான நற்கூலியை அளிப்பான்.
یٰۤاَهْلَ الْكِتٰبِ لَا تَغْلُوْا فِیْ دِیْنِكُمْ وَلَا تَقُوْلُوْا عَلَی اللّٰهِ اِلَّا الْحَقَّ ؕ اِنَّمَا الْمَسِیْحُ عِیْسَی ابْنُ مَرْیَمَ رَسُوْلُ اللّٰهِ وَكَلِمَتُهٗ ۚ اَلْقٰىهَاۤ اِلٰی مَرْیَمَ وَرُوْحٌ مِّنْهُ ؗ فَاٰمِنُوْا بِاللّٰهِ وَرُسُلِهٖ ۫ۚ وَلَا تَقُوْلُوْا ثَلٰثَةٌ ؕ اِنْتَهُوْا خَیْرًا لَّكُمْ ؕ اِنَّمَا اللّٰهُ اِلٰهٌ وَّاحِدٌ ؕ سُبْحٰنَهٗۤ اَنْ یَّكُوْنَ لَهٗ وَلَدٌ ۘ لَهٗ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ وَكَفٰی بِاللّٰهِ وَكِیْلًا ۟۠
یٰۤاَهْلَஓ மக்களேالْكِتٰبِவேதத்தைلَاவேண்டாம்تَغْلُوْاவரம்பு மீறفِیْஇல்دِیْنِكُمْஉங்கள் மார்க்கத்தில்وَ لَاமேலும் வேண்டாம்تَقُوْلُوْاநீங்கள் கூறعَلَیமீதுاللّٰهِஅல்லாஹ்வின்اِلَّاதவிரالْحَقَّ ؕஉண்மையைاِنَّمَاநிச்சயமாகالْمَسِیْحُமஸீஹ்عِیْسَیஈஸாابْنُமகன்مَرْیَمَமர்யமின்رَسُوْلُதூதர்اللّٰهِஅல்லாஹ்வின்وَ كَلِمَتُهٗ ۚமேலும் அவனுடைய வார்த்தைاَلْقٰىهَاۤஅதை அவன் அளித்தான்اِلٰیபால்مَرْیَمَமர்யம்وَ رُوْحٌமேலும் ஓர் ஆன்மாمِّنْهُ ؗஅவனிடமிருந்துفَاٰمِنُوْاஎனவே ஈமான் கொள்ளுங்கள்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுوَ رُسُلِهٖ ۫ۚமேலும் அவனுடைய தூதர்கள் மீதுوَ لَاமேலும் வேண்டாம்تَقُوْلُوْاநீங்கள் கூறثَلٰثَةٌ ؕமூவர்اِنْتَهُوْاவிலகிக் கொள்ளுங்கள்خَیْرًاசிறந்ததாகும்لَّكُمْ ؕஉங்களுக்குاِنَّمَاநிச்சயமாகاللّٰهُஅல்லாஹ்اِلٰهٌஇறைவன்وَّاحِدٌ ؕஒருவனேسُبْحٰنَهٗۤஅவன் தூய்மையானவன்اَنْஎன்பதை விட்டும்یَّكُوْنَஇருப்பதுلَهٗஅவனுக்குوَلَدٌ ۘஒரு குழந்தைلَهٗஅவனுக்கே உரியதுمَاஎவைفِیஇல்السَّمٰوٰتِவானங்களில்وَ مَاமேலும் எவைفِیஇல்الْاَرْضِ ؕபூமியில்وَ كَفٰیமேலும் போதுமானவன்بِاللّٰهِஅல்லாஹ்வேوَكِیْلًا۠பொறுப்பாளனாக
யா அஹ்லல் கிதாBபி லா தக்லூ Fபீ தீனிகும் வலா தகூலூ 'அலல் லாஹி இல்லல்ஹக்க்; இன்னமல் மஸீஹு 'ஈஸBப்-னு-மர்யம ரஸூலுல் லாஹி வ கலிமதுஹூ அல்காஹா இலா மர்யம வ ரூஹும் மின்ஹும் Fப ஆமினூ Bபில்லாஹி வ ருஸுலிஹீ வலா தகூலூ தலாதஹ்; இன்தஹூ கய்ரல்லகும்; இன்னமல் லாஹு இலாஹு(ன்)வ் வாஹித், ஸுBப்ஹானஹூ அ(ன்)ய் யகூன லஹூ வலத்; லஹூ மா Fபிஸ்ஸமாவாதி வமா Fபில் அர்ள்; வ கFபா Bபில்லாஹி வகீலா
வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்; நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்; இன்னும் (“குன்” ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார்; அதை அவன் மர்யமின்பால் போட்டான்; (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான்; ஆகவே, அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; இன்னும், (வணக்கத்திற்குரிய இறைவன்) மூன்று என்று கூறாதீர்கள் - (இப்படிக் கூறுவதை விட்டு) விலகிக் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும் - ஏனெனில் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவன் தான்; அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து அவன் தூய்மையானவன். வானங்களிலும்;, பூமியிலும் இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம். (காரியங்கள் அனைத்துக்கும்) பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِذَا قُمْتُمْ اِلَی الصَّلٰوةِ فَاغْسِلُوْا وُجُوْهَكُمْ وَاَیْدِیَكُمْ اِلَی الْمَرَافِقِ وَامْسَحُوْا بِرُءُوْسِكُمْ وَاَرْجُلَكُمْ اِلَی الْكَعْبَیْنِ ؕ وَاِنْ كُنْتُمْ جُنُبًا فَاطَّهَّرُوْا ؕ وَاِنْ كُنْتُمْ مَّرْضٰۤی اَوْ عَلٰی سَفَرٍ اَوْ جَآءَ اَحَدٌ مِّنْكُمْ مِّنَ الْغَآىِٕطِ اَوْ لٰمَسْتُمُ النِّسَآءَ فَلَمْ تَجِدُوْا مَآءً فَتَیَمَّمُوْا صَعِیْدًا طَیِّبًا فَامْسَحُوْا بِوُجُوْهِكُمْ وَاَیْدِیْكُمْ مِّنْهُ ؕ مَا یُرِیْدُ اللّٰهُ لِیَجْعَلَ عَلَیْكُمْ مِّنْ حَرَجٍ وَّلٰكِنْ یُّرِیْدُ لِیُطَهِّرَكُمْ وَلِیُتِمَّ نِعْمَتَهٗ عَلَیْكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْۤاநம்பிக்கை கொண்டார்களோاِذَاபொழுதுقُمْتُمْநீங்கள் தயாரானால்اِلَیநோக்கிالصَّلٰوةِதொழுகையைفَاغْسِلُوْاஅப்பொழுது கழுவுங்கள்وُجُوْهَكُمْஉங்கள் முகங்களைوَ اَیْدِیَكُمْஉங்கள் கைகளையும்اِلَیவரைالْمَرَافِقِமுழங்கைகள்وَ امْسَحُوْاதடவிக் கொள்ளுங்கள்بِرُءُوْسِكُمْஉங்கள் தலைகளைوَ اَرْجُلَكُمْஉங்கள் கால்களையும்اِلَیவரைالْكَعْبَیْنِ ؕஇரு கரண்டைக்கணுக்கள்وَ اِنْமேலும் என்றால்كُنْتُمْநீங்கள்جُنُبًاகுளிப்பு கடமையானவர்களாகفَاطَّهَّرُوْا ؕஅப்பொழுது தூய்மை செய்து கொள்ளுங்கள்وَ اِنْமேலும் என்றால்كُنْتُمْநீங்கள்مَّرْضٰۤیநோயாளிகளாகاَوْஅல்லதுعَلٰیமீதுسَفَرٍபயணம்اَوْஅல்லதுجَآءَவந்தால்اَحَدٌஒருவர்مِّنْكُمْஉங்களில்مِّنَலிருந்துالْغَآىِٕطِமலம் கழிக்கும் இடம்اَوْஅல்லதுلٰمَسْتُمُநீங்கள் தீண்டினால்النِّسَآءَபெண்களைفَلَمْபிறகு இல்லைتَجِدُوْاநீங்கள் பெற்றால்مَآءًதண்ணீர்فَتَیَمَّمُوْاஅப்பொழுது தயம்மம் செய்யுங்கள்صَعِیْدًاமண்ணைطَیِّبًاதூய்மையானفَامْسَحُوْاஅப்பொழுது தடவிக் கொள்ளுங்கள்بِوُجُوْهِكُمْஉங்கள் முகங்களைوَ اَیْدِیْكُمْஉங்கள் கைகளையும்مِّنْهُ ؕஅதிலிருந்துمَاஇல்லைیُرِیْدُநாடுகிறான்اللّٰهُஅல்லாஹ்لِیَجْعَلَஆக்குவதற்குعَلَیْكُمْஉங்கள் மீதுمِّنْஎந்தحَرَجٍசிரமத்தையும்وَّ لٰكِنْஆனால்یُّرِیْدُநாடுகிறான்لِیُطَهِّرَكُمْஉங்களைத் தூய்மைப்படுத்தوَ لِیُتِمَّமேலும் முழுமையாக்கنِعْمَتَهٗதனது அருட்கொடையைعَلَیْكُمْஉங்கள் மீதுلَعَلَّكُمْநீங்கள்تَشْكُرُوْنَநன்றி செலுத்துவதற்காக
யா அய்யுஹல் லதீன ஆமனூ இதா கும்தும் இலஸ் ஸலாதி Fபக்ஸிலூ வுஜூஹகும் வ அய்தியகும் இலல் மராFபிகி வம்ஸஹூ Bபிரு'ஊஸிகும் வ அர்ஜுலகும் இலல் கஃBபய்ன்; வ இன் குன்தும் ஜுனுBபன் Fபத்தஹ்ஹரூ; வ இன் குன்தும் மர்ளா அவ்'அலா ஸFபரின் அவ் ஜா'அ அஹதும் மின்கும் மினல் கா'இதி அவ் லாமஸ்துமுன்னிஸா'அ Fபலம் தஜிதூ மா'அன் Fபதயம்மமூ ஸ'ஈதன் தய்யிBபன் Fபம்ஸஹூ Bபிவுஜூஹிகும் வ அய்தீகும் மின்ஹ்; ம யுரீதுல் லாஹு லியஜ்'அல 'அலய்கும் மின் ஹரஜி(ன்)வ் வலாகி(ன்)ய் யுரீது லியுதஹ்ஹிரகும் வ லியுதிம்ம னிஃமதஹூ 'அலய்கும் ல'அல்லகும் தஷ்குரூன்
முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள்; உங்களுடைய தலைகளை (ஈரக்கையால்) தடவி (மஸஹு செய்து) கொள்ளுங்கள்; உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்) - நீங்கள் பெருந்தொடக்குடையோராக (குளிக்கக் கடமைப் பட்டோராக) இருந்தால் குளித்து(த் தேகம் முழுவதையும் சுத்தம் செய்து)க் கொள்ளுங்கள்; தவிர நீங்கள் நோயாளிகளாகவோ, அல்லது பிரயாணத்திலோ இருந்தால், அல்லது உங்களில் எவரும் மல ஜலம் கழித்து வந்தாலும், அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டி (உடல் உறவு கொண்டி)ருந்தாலும் (உங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள) உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் (தயம்மும் செய்து கொள்ளுங்கள்; அதாவது) சுத்தமான மண்ணைக் (கையினால் தடவிக்) கொண்டு அவைகளால் உங்கள் முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்; அல்லாஹ் உங்களை வருத்தக் கூடிய எந்த சிரமத்தையும் கொடுக்க விரும்பவில்லை - ஆனால் அவன் உங்களைத் தூய்மைப் படுத்தவும்; இன்னும் நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு, தனது அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்கவும் விரும்புகிறான்.
وَاِذْ قَالَ اللّٰهُ یٰعِیْسَی ابْنَ مَرْیَمَ ءَاَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُوْنِیْ وَاُمِّیَ اِلٰهَیْنِ مِنْ دُوْنِ اللّٰهِ ؕ قَالَ سُبْحٰنَكَ مَا یَكُوْنُ لِیْۤ اَنْ اَقُوْلَ مَا لَیْسَ لِیْ ۗ بِحَقٍّ ؔؕ اِنْ كُنْتُ قُلْتُهٗ فَقَدْ عَلِمْتَهٗ ؕ تَعْلَمُ مَا فِیْ نَفْسِیْ وَلَاۤ اَعْلَمُ مَا فِیْ نَفْسِكَ ؕ اِنَّكَ اَنْتَ عَلَّامُ الْغُیُوْبِ ۟
وَ اِذْமேலும் (அந்நேரத்தில்)قَالَகூறினான்اللّٰهُஅல்லாஹ்یٰعِیْسَیஈஸாவே!ابْنَமகனே!مَرْیَمَமர்யமின்ءَاَنْتَநீராقُلْتَகூறினீர்لِلنَّاسِமனிதர்களிடம்اتَّخِذُوْنِیْஎன்னை ஆக்கிக் கொள்ளுங்கள்وَ اُمِّیَமேலும் என் தாயாரையும்اِلٰهَیْنِஇரு கடவுள்களாகمِنْஅன்றிدُوْنِதவிரاللّٰهِ ؕஅல்லாஹ்வைقَالَஅவர் கூறினார்سُبْحٰنَكَநீ தூய்மையானவன்مَاஇல்லைیَكُوْنُதகுதியானதுلِیْۤஎனக்குاَنْஎன்றுاَقُوْلَநான் கூறுவதற்குمَاஎதைلَیْسَஇல்லையோلِیْ ۗஎனக்குبِحَقٍّ ؔؕஉரிமைاِنْஒருவேளைكُنْتُநான்قُلْتُهٗஅதை கூறியிருந்தால்فَقَدْநிச்சயமாகعَلِمْتَهٗ ؕநீ அதை அறிந்திருப்பாய்تَعْلَمُநீ அறிகிறாய்مَاஉள்ளதைفِیْஇல்نَفْسِیْஎன் மனதில்وَ لَاۤமேலும் இல்லைاَعْلَمُநான் அறியமாட்டேன்مَاஉள்ளதைفِیْஇல்نَفْسِكَ ؕஉன் மனதில்اِنَّكَநிச்சயமாக நீاَنْتَநீயேعَلَّامُநன்கறிந்தவன்الْغُیُوْبِமறைவானவற்றை
வ இத் காலல் லாஹு யா 'ஈஸBப் ன மர்யம 'அ-அன்த குல்த லின்னாஸித் தகிதூனீ வ உம்மிய இலாஹய்னி மின் தூனில் லாஹி கால ஸுBப்ஹானக மா யகூனு லீ அன் அகூல மா லய்ஸ லீ Bபிஹக்க்; இன் குன்து குல்துஹூ Fபகத் 'அலிம்தஹ்; தஃலமு மா Fபீ னFப்ஸீ வ லா அ'அலமு மா Fபீ னFப்ஸிக்; இன்னக அன்த 'அல்லாமுல் குயூBப்
இன்னும், “மர்யமுடைய மகன் ஈஸாவே, “அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்” என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?” என்று அல்லாஹ் கேட்கும் போது அவர், “நீ மிகவும் தூய்மையானவன்; எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை; அவ்வாறு நான் கூறியிருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய்; என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய்; உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன்; நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன்” என்று அவர் கூறுவார்.
قُلْ اَمَرَ رَبِّیْ بِالْقِسْطِ ۫ وَاَقِیْمُوْا وُجُوْهَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ وَّادْعُوْهُ مُخْلِصِیْنَ لَهُ الدِّیْنَ ؕ۬ كَمَا بَدَاَكُمْ تَعُوْدُوْنَ ۟ؕ
قُلْகூறுவீராகاَمَرَகட்டளையிட்டுள்ளான்رَبِّیْஎன் இறைவன்بِالْقِسْطِ ۫நீதியைوَ اَقِیْمُوْاமேலும் நிலைநிறுத்துங்கள்وُجُوْهَكُمْஉங்கள் முகங்களைعِنْدَஇடத்தில்كُلِّஒவ்வொருمَسْجِدٍமஸ்ஜிதின்وَّ ادْعُوْهُமேலும் அவனைப் பிரார்த்தியுங்கள்مُخْلِصِیْنَகலப்பற்றவர்களாகلَهُஅவனுக்கேالدِّیْنَ ؕ۬மார்க்கத்தைكَمَاஎவ்வாறுبَدَاَكُمْஉங்களை அவன் முதலில் படைத்தானோتَعُوْدُوْنَؕநீங்கள் மீளுவீர்கள்
குல் அமர ரBப்Bபீ Bபில்கிஸ்தி வ அகீமூ வுஜூஹகும் 'இன்த குல்லி மஸ்ஜிதின் வத்'ஊஹு முக்லிஸீன லஹுத் தீன்; கமா Bபத அகும் த'ஊதூன்
“என் இறைவன், நீதத்தைக் கொண்டே ஏவியுள்ளான்; ஒவ்வொரு தொழுகையின் போதும் உங்கள் முகங்களை அவன் பக்கமே நிலைப்படுத்திக்கொள்ளுங்கள்; வணக்கத்தை அவனுக்கே தூய்மையாக்கியவர்களாக அவனை அழையுங்கள்; உங்களை அவன் துவக்கியது போலவே (அவனிடம்) நீங்கள் மீளுவீர்கள்” என்று நீர் கூறும்.
قُلْ مَنْ حَرَّمَ زِیْنَةَ اللّٰهِ الَّتِیْۤ اَخْرَجَ لِعِبَادِهٖ وَالطَّیِّبٰتِ مِنَ الرِّزْقِ ؕ قُلْ هِیَ لِلَّذِیْنَ اٰمَنُوْا فِی الْحَیٰوةِ الدُّنْیَا خَالِصَةً یَّوْمَ الْقِیٰمَةِ ؕ كَذٰلِكَ نُفَصِّلُ الْاٰیٰتِ لِقَوْمٍ یَّعْلَمُوْنَ ۟
قُلْகூறுவீராகمَنْயார்حَرَّمَதடுத்ததுزِیْنَةَஅலங்காரத்தைاللّٰهِஅல்லாஹ்வின்الَّتِیْۤஎதனைاَخْرَجَஅவன் வெளிப்படுத்தினானோلِعِبَادِهٖதன் அடியார்களுக்குوَ الطَّیِّبٰتِமேலும் தூய்மையானவற்றைمِنَஇருந்துالرِّزْقِ ؕவாழ்வாதாரங்களில்قُلْகூறுவீராகهِیَஅவைلِلَّذِیْنَஎவர்களுக்குاٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோفِیஇல்الْحَیٰوةِவாழ்க்கையில்الدُّنْیَاஇவ்வுலகخَالِصَةًபிரத்தியேகமாகیَّوْمَநாளில்الْقِیٰمَةِ ؕமறுமைكَذٰلِكَஇவ்வாறேنُفَصِّلُநாம் விவரிக்கிறோம்الْاٰیٰتِவசனங்களைلِقَوْمٍஒரு சமூகத்தாருக்குیَّعْلَمُوْنَஅறிந்து கொள்கிறவர்களுக்கு
குல் மன் ஹர்ரம Zஜீனத் அல்லாஹில் லதீ அக்ரஜ லி'இBபாதிஹீ வத்தய்யிBபாதி மினர் ரிZஜ்க்; குல் ஹிய லில்லதீன ஆமனூ Fபில் ஹயாதித் துன்யா காலிஸத(ன்)ய் யவ்மல் கியாமஹ்; கதாலிக னுFபஸ்ஸிலுல் ஆயாதி லி கவ்மி(ன்)ய் யஃலமூன்
(நபியே!) நீர் கேட்பீராக: “அல்லாஹ் தன் அடியார்களுக்காக வெளிப்படுத்தியுள்ள (ஆடை) அழகையும், உணவு வகைகளில் தூய்மையானவற்றையும் தடுத்தது யார்?” இன்னும் கூறும்: “அவை இவ்வுலக வாழ்க்கையில் நம்பிக்கையாளர்களுக்கு (அனுமதிக்கப்பட்டவையே, எனினும் மறுமையில்) அவர்களுக்கு மட்டுமே சொந்தமானவையாகவும் இருக்கும்” இவ்வாறு நாம் நம் வசனங்களை அறியக்கூடிய மக்களுக்கு விவரிக்கின்றோம்.
وَمَا كَانَ جَوَابَ قَوْمِهٖۤ اِلَّاۤ اَنْ قَالُوْۤا اَخْرِجُوْهُمْ مِّنْ قَرْیَتِكُمْ ۚ اِنَّهُمْ اُنَاسٌ یَّتَطَهَّرُوْنَ ۟
وَ مَاமேலும் இல்லைكَانَஇருந்ததுجَوَابَபதில்قَوْمِهٖۤஅவருடைய சமுதாயத்தாரின்اِلَّاۤதவிரاَنْஎன்றுقَالُوْۤاஅவர்கள் கூறினார்கள்اَخْرِجُوْهُمْஅவர்களை வெளியேற்றுங்கள்مِّنْஇருந்துقَرْیَتِكُمْ ۚஉங்கள் ஊரில்اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்اُنَاسٌமனிதர்கள்یَّتَطَهَّرُوْنَதூய்மை பேணுபவர்கள்
வமா கான ஜவாBப கவ்மிஹீ இல்லா அன் காலூ அக்ரிஜூஹும் மின் கர்யதிகும் இன்னஹும் உனாஸு(ன்)ய் யததஹ்ஹரூன்
நிச்சயமாக இவர்கள் தூய்மையான மனிதர்களாக இருக்கிறார்கள். இவர்களை உங்கள் ஊரைவிட்டும் வெளியேற்றி விடுங்கள் என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும்) அவரது சமுதாயத்தின் பதிலாக இருக்கவில்லை.
اَلَّذِیْنَ یَتَّبِعُوْنَ الرَّسُوْلَ النَّبِیَّ الْاُمِّیَّ الَّذِیْ یَجِدُوْنَهٗ مَكْتُوْبًا عِنْدَهُمْ فِی التَّوْرٰىةِ وَالْاِنْجِیْلِ ؗ یَاْمُرُهُمْ بِالْمَعْرُوْفِ وَیَنْهٰىهُمْ عَنِ الْمُنْكَرِ وَیُحِلُّ لَهُمُ الطَّیِّبٰتِ وَیُحَرِّمُ عَلَیْهِمُ الْخَبٰٓىِٕثَ وَیَضَعُ عَنْهُمْ اِصْرَهُمْ وَالْاَغْلٰلَ الَّتِیْ كَانَتْ عَلَیْهِمْ ؕ فَالَّذِیْنَ اٰمَنُوْا بِهٖ وَعَزَّرُوْهُ وَنَصَرُوْهُ وَاتَّبَعُوا النُّوْرَ الَّذِیْۤ اُنْزِلَ مَعَهٗۤ ۙ اُولٰٓىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ ۟۠
اَلَّذِیْنَஎவர்கள்یَتَّبِعُوْنَபின்பற்றுகிறார்களோالرَّسُوْلَஇத்தூதரைالنَّبِیَّஅந்த நபியைالْاُمِّیَّஎழுதப்படிக்கத் தெரியாதالَّذِیْஎவரைیَجِدُوْنَهٗஅவரை அவர்கள் காண்கிறார்களோمَكْتُوْبًاஎழுதப்பட்டவராகعِنْدَهُمْஅவர்களிடமுள்ளفِیஇல்التَّوْرٰىةِதவ்ராத்وَ الْاِنْجِیْلِ ؗஇன்னும் இன்ஜீல்یَاْمُرُهُمْஅவர் அவர்களுக்கு ஏவுகிறார்بِالْمَعْرُوْفِநன்மையைوَ یَنْهٰىهُمْஇன்னும் அவர்களைத் தடுக்கிறார்عَنِலிருந்துالْمُنْكَرِதீமைوَ یُحِلُّஇன்னும் அவர் அனுமதிக்கிறார்لَهُمُஅவர்களுக்குالطَّیِّبٰتِதூய்மையானவற்றைوَ یُحَرِّمُஇன்னும் அவர் விலக்குகிறார்عَلَیْهِمُஅவர்கள் மீதுالْخَبٰٓىِٕثَஅசுத்தமானவற்றைوَ یَضَعُஇன்னும் அவர் அகற்றுகிறார்عَنْهُمْஅவர்களிடமிருந்துاِصْرَهُمْஅவர்களின் சுமைகளைوَ الْاَغْلٰلَஇன்னும் விலங்குகளைالَّتِیْஎவைكَانَتْஇருந்தனவோعَلَیْهِمْ ؕஅவர்கள் மீதுفَالَّذِیْنَஆகவே எவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோبِهٖஅவர் மீதுوَ عَزَّرُوْهُஇன்னும் அவரைக் கண்ணியப்படுத்தினார்களோوَ نَصَرُوْهُஇன்னும் அவருக்கு உதவினார்களோوَ اتَّبَعُواஇன்னும் பின்பற்றினார்களோالنُّوْرَஅந்த ஒளியைالَّذِیْۤஎதுاُنْزِلَஇறக்கப்பட்டதோمَعَهٗۤ ۙஅவருடன்اُولٰٓىِٕكَஅவர்கள் தான்هُمُஅவர்கள்الْمُفْلِحُوْنَ۠வெற்றியாளர்கள்
அல்லதீன யத்தBபி'ஊனர் ரஸூலன் னBபிய்யல் உம்மிய்யல் லதீ யஜிதூனஹூ மக்தூBபன் 'இன்தஹும் Fபித் தவ்ராதி வல் இன்ஜீலி ய' முருஹும் Bபில்மஃரூFபி வ யன்ஹாஹும் 'அனில் முன்கரி வ யுஹில்லு லஹுமுல் தய்யிBபாதி வ யுஹர்ரிமு 'அலய்ஹிமுல் கBபா'இத வ யள'உ 'அன்ஹும் இஸ்ரஹும் வல் அக்லாலல் லதீ கானத் 'அலய்ஹிம்; Fபல்லதீன ஆமனூ Bபிஹீ வ 'அZஜ்Zஜரூஹு வ னஸரூஹு வத்தBப'உன் னூரல் லதீ உன்Zஜில ம'அஹூ உலா'இக ஹுமுல் முFப்லிஹூன்
எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ - அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதைக் காண்பார்கள்; அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்; பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார்; தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்கு ஆகுமாக்குவார்; கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார்; அவர்களுடைய பளுவான சுமைகளையும், அவர்கள் மீது இருந்த விலங்குகளையும், (கடினமான கட்டளைகளையும்) இறக்கிவிடுவார்; எனவே எவர்கள் அவரை மெய்யாகவே நம்பி, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி செய்து, அவருடன் அருளப்பட்டிருக்கும் ஒளிமயமான (வேதத்)தையும் பின் பற்றுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெறுவார்கள்.
فَلَمَّاۤ اٰتٰىهُمَا صَالِحًا جَعَلَا لَهٗ شُرَكَآءَ فِیْمَاۤ اٰتٰىهُمَا ۚ فَتَعٰلَی اللّٰهُ عَمَّا یُشْرِكُوْنَ ۟
فَلَمَّاۤஎனவே எப்போதுاٰتٰىهُمَاஅவ்விருவருக்கும் அவன் வழங்கினானோصَالِحًاஒரு நல்லதைجَعَلَاஅவ்விருவரும் ஆக்கினார்கள்لَهٗஅவனுக்குشُرَكَآءَஇணைகளைفِیْمَاۤஎதில்اٰتٰىهُمَا ۚஅவ்விருவருக்கும் அவன் வழங்கினானோفَتَعٰلَیஎனவே மிக உயர்ந்தவன்اللّٰهُஅல்லாஹ்عَمَّاஎதை விட்டும்یُشْرِكُوْنَஅவர்கள் இணைவைக்கிறார்களோ
Fபலம்மா ஆதாஹுமா ஸாலிஹன் ஜ'அலா லஹூ ஷுரகா'அ Fபீமா ஆதாஹுமா; Fபத'ஆலல் லாஹு 'அம்மா யுஷ்ரிகூன்
அவர்களுக்கு (அவர்கள் விருப்பப்படி) நல்ல குழந்தையை அவன் கொடுத்தவுடன், அவர்களுக்கு அவன் கொடுத்ததில் அவ்விருவரும் அவனுக்கு இணைகளைக் கற்பிக்கின்றனர் - இவர்கள் இணை வைப்பதை விட்டும் அல்லாஹ் தூய்மையானவன்.”
اِذْ یُغَشِّیْكُمُ النُّعَاسَ اَمَنَةً مِّنْهُ وَیُنَزِّلُ عَلَیْكُمْ مِّنَ السَّمَآءِ مَآءً لِّیُطَهِّرَكُمْ بِهٖ وَیُذْهِبَ عَنْكُمْ رِجْزَ الشَّیْطٰنِ وَلِیَرْبِطَ عَلٰی قُلُوْبِكُمْ وَیُثَبِّتَ بِهِ الْاَقْدَامَ ۟ؕ
اِذْஅச்சமயம்یُغَشِّیْكُمُஅவன் உங்களை ஆட்கொள்ளச் செய்தான்النُّعَاسَசிறு தூக்கத்தைاَمَنَةًஅமைதிக்காகمِّنْهُஅவனிடமிருந்துوَ یُنَزِّلُமேலும் அவன் இறக்கினான்عَلَیْكُمْஉங்கள் மீதுمِّنَஇருந்துالسَّمَآءِவானத்தில்مَآءًநீரைلِّیُطَهِّرَكُمْஉங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகبِهٖஅதன் மூலம்وَ یُذْهِبَமேலும் போக்கடிக்கعَنْكُمْஉங்களிடமிருந்துرِجْزَஅசுத்தத்தைالشَّیْطٰنِஷைத்தானுடையوَ لِیَرْبِطَமேலும் பலப்படுத்தعَلٰیமீதுقُلُوْبِكُمْஉங்கள் உள்ளங்களின்وَ یُثَبِّتَமேலும் நிலைப்படுத்தبِهِஅதன் மூலம்الْاَقْدَامَؕபாதங்களை
இத் யுகஷ்ஷீகுமுன் னு'அஸ்ஸ அமனதம் மின்ஹு வ யுனZஜ்Zஜிலு 'அலய்கும் மினஸ் ஸமா'இ மா'அல் லியுதஹ் ஹிரகும் Bபிஹீ வ யுத்ஹிBப 'அன்கும் ரிஜ்Zஜஷ் ஷய்தானி வ லியர்Bபித 'அல குலூBபிகும் வ யுதBப்Bபித Bபிஹில் அக்தாம்
(நினைவு கூறுங்கள்:) நீங்கள் அமைதியடைவதற்காக அவன் சிறியதொரு நித்திரை உங்களை பொதிந்து கொள்ளுமாறு செய்தான்; இன்னும் உங்களை அதன் மூலம் தூய்மைப்படுத்துவதற்காகவும், ஷைத்தானின் தீய எண்ணங்களை உங்களைவிட்டு நீக்குவதற்காகவும், உங்கள் இருதயங்களைப் பலப்படுத்தி, உங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவதற்காகவும், அவன் உங்கள் மீது வானிலிருந்து மழை பொழியச் செய்தான்.
فَكُلُوْا مِمَّا غَنِمْتُمْ حَلٰلًا طَیِّبًا ۖؗ وَّاتَّقُوا اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟۠
فَكُلُوْاஎனவே உண்ணுங்கள்مِمَّاஎவற்றிலிருந்துغَنِمْتُمْநீங்கள் போரில் பெற்றீர்களோحَلٰلًاஆகுமாக்கப்பட்டதாகطَیِّبًا ۖؗதூய்மையானதாகوَّ اتَّقُواமேலும் அஞ்சிக் கொள்ளுங்கள்اللّٰهَ ؕஅல்லாஹ்வைاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்غَفُوْرٌமிகவும் மன்னிப்பவன்رَّحِیْمٌ۠நிகரற்ற அன்புடையவன்
Fபகுலூ மிம்மா கனிம்தும் ஹலாலன் தய்யிBபா; வத்த குல்லாஹ்; இன்னல் லாஹ கFபூருர் ரஹீம்
ஆகவே, எதிரிகளிடமிருந்து உங்களுக்குப் போரில் கிடைத்த பொருள்களை தூய்மையான - ஹலாலானவையாகக் கருதி புசியுங்கள்; அல்லாஹ்வுக்கே அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்.  
خُذْ مِنْ اَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَتُزَكِّیْهِمْ بِهَا وَصَلِّ عَلَیْهِمْ ؕ اِنَّ صَلٰوتَكَ سَكَنٌ لَّهُمْ ؕ وَاللّٰهُ سَمِیْعٌ عَلِیْمٌ ۟
خُذْநீர் எடுப்பீராகمِنْஇருந்துاَمْوَالِهِمْஅவர்களின் செல்வங்கள்صَدَقَةًதர்மத்தைتُطَهِّرُهُمْஅவர்களைத் தூய்மைப்படுத்தوَ تُزَكِّیْهِمْமேலும் அவர்களைப் பரிசுத்தப்படுத்தبِهَاஅதன் மூலம்وَصَلِّஇன்னும் பிரார்த்தனை செய்வீராகعَلَیْهِمْ ؕஅவர்களுக்காகاِنَّநிச்சயமாகصَلٰوتَكَஉமது பிரார்த்தனைسَكَنٌஆறுதலாகும்لَّهُمْ ؕஅவர்களுக்குوَ اللّٰهُமேலும் அல்லாஹ்سَمِیْعٌசெவியேற்பவன்عَلِیْمٌநன்கறிந்தவன்
குத் மின் அம்வாலிஹிம் ஸதகதன் துதஹ்ஹிருஹும் வ துZஜக்கீஹிம் Bபிஹா வ ஸல்லி 'அலய்ஹிம் இன்ன ஸலாதக ஸகனுல் லஹும்; வல்லாஹு ஸமீ'உன் 'அலீம்
(நபியே!) அவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்திற்கானதை எடுத்துக் கொண்டு, அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மையாக்குவீராக, இன்னும் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக; நிச்சயமாக உம்முடைய பிரார்த்தனை அவர்களுக்கு (சாந்தியும்), ஆறுதலும் அளிக்கும்; அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.
لَا تَقُمْ فِیْهِ اَبَدًا ؕ لَمَسْجِدٌ اُسِّسَ عَلَی التَّقْوٰی مِنْ اَوَّلِ یَوْمٍ اَحَقُّ اَنْ تَقُوْمَ فِیْهِ ؕ فِیْهِ رِجَالٌ یُّحِبُّوْنَ اَنْ یَّتَطَهَّرُوْا ؕ وَاللّٰهُ یُحِبُّ الْمُطَّهِّرِیْنَ ۟
لَاவேண்டாம்تَقُمْநீர் நிற்கفِیْهِஅதில்اَبَدًا ؕஒருபோதும்لَمَسْجِدٌநிச்சயமாக ஒரு பள்ளிவாசல்اُسِّسَஅடித்தளம் இடப்பட்டதோعَلَیமீதுالتَّقْوٰیஇறையச்சத்தின்مِنْஇருந்துاَوَّلِமுதல்یَوْمٍநாளில்اَحَقُّஅதிகத் தகுதியுடையதுاَنْநீர்تَقُوْمَநிற்பதற்குفِیْهِ ؕஅதில்فِیْهِஅதில்رِجَالٌமனிதர்கள் (உள்ளனர்)یُّحِبُّوْنَஅவர்கள் விரும்புகிறார்கள்اَنْதாங்கள்یَّتَطَهَّرُوْا ؕதூய்மையடைவதைوَ اللّٰهُமேலும் அல்லாஹ்یُحِبُّநேசிக்கிறான்الْمُطَّهِّرِیْنَதூய்மையாளர்களை
லா தகும் Fபீஹி அBபதா; லமஸ்ஜிதுன் உஸ்ஸிஸ 'அலத் தக்வா மின் அவ்வலி யவ்மின் அஹக்கு 'அன் தகூம Fபீஹ்; Fபீஹி ரிஜாலு(ன்)ய் யுஹிBப்Bபூன 'அ(ன்)ய் யத தஹ் ஹரூ; வல்லாஹு யுஹிBப்Bபுல் முத்தஹ் ஹிரீன்
ஆகவே, (நபியே!) அங்கு நீர் தொழுகைக்காக ஒருக்காலும் நிற்க வேண்டாம் - நிச்சயமாக ஆரம்ப தினத்திலேயே பயபக்தியின் மீது அடிகோலப்பட்ட மஸ்ஜிது உள்ளது; அதில் நீர் நின்று (தொழவும், தொழ வைக்கவும்) மிகவும் தகுதியானது; அங்கிருக்கும் மனிதர்கள் தூய்மையுடையோராக இருப்பதையே விரும்புகிறார்கள். அல்லாஹ் தூய்மையுடையோரையே விரும்புகிறான்.
قَالُوا اتَّخَذَ اللّٰهُ وَلَدًا سُبْحٰنَهٗ ؕ هُوَ الْغَنِیُّ ؕ لَهٗ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ اِنْ عِنْدَكُمْ مِّنْ سُلْطٰنٍ بِهٰذَا ؕ اَتَقُوْلُوْنَ عَلَی اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ ۟
قَالُواஅவர்கள் கூறினார்கள்اتَّخَذَஏற்படுத்திக்கொண்டான்اللّٰهُஅல்லாஹ்وَلَدًاஒரு மகனைسُبْحٰنَهٗ ؕஅவன் தூய்மையானவன்هُوَஅவன்الْغَنِیُّ ؕதேவையற்றவன்لَهٗஅவனுக்கே உரியதுمَاஎவைفِیஇல்السَّمٰوٰتِவானங்கள்وَ مَاஇன்னும் எவைفِیஇல்الْاَرْضِ ؕபூமிاِنْஇல்லைعِنْدَكُمْஉங்களிடம்مِّنْஎந்த ஒருسُلْطٰنٍۭஆதாரம்بِهٰذَا ؕஇதற்குاَتَقُوْلُوْنَநீங்கள் கூறுகிறீர்களாعَلَیமீதுاللّٰهِஅல்லாஹ்வின்مَاஎதைلَاஇல்லைتَعْلَمُوْنَநீங்கள் அறிவீர்கள்
காலுத் தகதல் லாஹு வலதன் ஸுBப்ஹானஹூ ஹுவல் கனிய்யு லஹூ மா Fபிஸ் ஸமாவாதி வமா Fபில் அர்ள்; இன் 'இன்தகும் மின் ஸுல்தானின் Bபிஹாதா; அ' தகூலூன 'அல் அல்லாஹி மா லா தஃலமூன்
அல்லாஹ் ஒரு சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான் என்று அவர்கள் சொல்கிறார்கள்; (அவர்களின் இக்கற்பனையை விட்டும்) அல்லாஹ் மிகத்தூய்மையானவன்; அவன் எவ்விதத் தேவையுமில்லாதவன். வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் யாவும் அவனுக்கே உரியன; (எனவே அவன் சந்ததி ஏற்படுத்திக் கொண்டான் என்பதற்கு) உங்களிடம் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை; நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது (இவ்வாறு பொய்யாகக்) கூறுகிறீர்களா?
وَلَقَدْ هَمَّتْ بِهٖ ۚ وَهَمَّ بِهَا لَوْلَاۤ اَنْ رَّاٰ بُرْهَانَ رَبِّهٖ ؕ كَذٰلِكَ لِنَصْرِفَ عَنْهُ السُّوْٓءَ وَالْفَحْشَآءَ ؕ اِنَّهٗ مِنْ عِبَادِنَا الْمُخْلَصِیْنَ ۟
وَ لَقَدْமேலும் நிச்சயமாகهَمَّتْஅவள் நாடினாள்بِهٖ ۚஅவரைوَ هَمَّஅவரும் நாடியிருப்பார்بِهَاஅவளைلَوْ لَاۤஇல்லாவிட்டால்اَنْஅவர்رَّاٰகண்டிருக்கبُرْهَانَஅத்தாட்சியைرَبِّهٖ ؕதன் இறைவனின்كَذٰلِكَஅவ்வாறேلِنَصْرِفَநாம் திருப்புவதற்காகعَنْهُஅவரிடமிருந்துالسُّوْٓءَதீமையைوَ الْفَحْشَآءَ ؕமேலும் மானக்கேடான செயலைاِنَّهٗநிச்சயமாக அவர்مِنْஇருந்துعِبَادِنَاநமது அடியார்களில்الْمُخْلَصِیْنَதூய்மையாக்கப்பட்டவர்களில்
வ லகத் ஹம்மத் Bபிஹீ வ ஹம்ம Bபிஹா லவ் லா அர் ரஆ Bபுர்ஹான ரBப்Bபிஹ்; கதாலிக லினஸ்ரிFப 'அன்ஹு ஸூ'அ வல்Fபஹ்ஷா'; இன்னஹூ மின் 'இBபாதி னல் முக்லஸீன்
ஆனால் அவளோ அவரைத் திடமாக விரும்பினாள்; அவரும் தம் இறைவனின் ஆதாரத்தைக் கண்டிராவிட்டால் அவள் மீது விருப்பம் கொண்டே இருப்பார்; இவ்வாறு நாம் அவரைவிட்டுத் தீமையையும் மானக்கேடான செயல்களையும் திருப்பிவிட்டோம் - ஏனெனில் நிச்சயமாக அவர் நம் தூய்மையான அடியார்களில் ஒருவராக இருந்தார்.
قُلْ هٰذِهٖ سَبِیْلِیْۤ اَدْعُوْۤا اِلَی اللّٰهِ ؔ۫ عَلٰی بَصِیْرَةٍ اَنَا وَمَنِ اتَّبَعَنِیْ ؕ وَسُبْحٰنَ اللّٰهِ وَمَاۤ اَنَا مِنَ الْمُشْرِكِیْنَ ۟
قُلْகூறுவீராகهٰذِهٖஇதுسَبِیْلِیْۤஎனது வழிاَدْعُوْۤاநான் அழைக்கிறேன்اِلَیபால்اللّٰهِ ؔ۫அல்லாஹ்வின்عَلٰیமீதுبَصِیْرَةٍதெளிவான ஆதாரத்தின்اَنَاநான்وَ مَنِமேலும் எவர்اتَّبَعَنِیْ ؕஎன்னைப் பின்பற்றினாரோوَ سُبْحٰنَமேலும் தூய்மையானவன்اللّٰهِஅல்லாஹ்وَ مَاۤமேலும் இல்லைاَنَاநான்مِنَஇருந்துالْمُشْرِكِیْنَஇணைவைப்பாளர்களில்
குல் ஹாதிஹீ ஸBபீலீ அத்'ஊ இலல் லாஹ்; 'அலா Bபஸீர தின் அன வ மனித் தBப'அனீ வ ஸுBப்ஹானல் லாஹி வ மா அன மினல் முஷ்ரிகீன்
(நபியே!) நீர் சொல்வீராக! “இதுவே என்னுடைய (நேரிய) வழியாகும்; நான் அல்லாஹ்வின் பால் (உங்களை) அழைக்கின்றேன்; நானும் என்னைப் பின்பற்றியவர்களும் தெளிவான ஞானத்தின் மீதே இருக்கின்றோம்; அல்லாஹ் மிகத் தூய்மையானவன்; ஆகவே, அவனுக்கு இணைவைப்போரில் நானும் ஒருவனல்லன்.”
جَنّٰتُ عَدْنٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَا ؕ وَذٰلِكَ جَزٰٓؤُا مَنْ تَزَكّٰی ۟۠
جَنّٰتُசொர்க்கச் சோலைகள்عَدْنٍநிலையானتَجْرِیْஓடும்مِنْஇருந்துتَحْتِهَاஅவற்றின் கீழேالْاَنْهٰرُஆறுகள்خٰلِدِیْنَஎன்றென்றும் தங்கியிருப்பார்கள்فِیْهَا ؕஅவற்றில்وَ ذٰلِكَமேலும் அதுவேجَزٰٓؤُاநற்கூலியாகும்مَنْஎவர்تَزَكّٰی۠தூய்மையடைந்தாரோ
ஜன்னாது 'அத்னின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு காலிதீன Fபீஹா; வ தாலிக ஜZஜா'உ மன் தZஜக்கா
(அத்தகையவர்க்கு) என்றென்றும் நிலைத்திருக்கும் சுவனபதிகள் உண்டு; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்; அவற்றில் அவர் என்றென்றும் வசிப்பர்; இதுவே (பாவங்கள் நீங்கித்) தூய்மையானவர்களின் (நற்) கூலியாகும்.
كُلُوْا مِنْ طَیِّبٰتِ مَا رَزَقْنٰكُمْ وَلَا تَطْغَوْا فِیْهِ فَیَحِلَّ عَلَیْكُمْ غَضَبِیْ ۚ وَمَنْ یَّحْلِلْ عَلَیْهِ غَضَبِیْ فَقَدْ هَوٰی ۟
كُلُوْاஉண்ணுங்கள்مِنْஇருந்துطَیِّبٰتِதூய்மையானவற்றில்مَاஎவற்றைرَزَقْنٰكُمْநாம் உங்களுக்கு வழங்கினோமோوَ لَاமேலும்تَطْغَوْاவரம்பு மீறாதீர்கள்فِیْهِஅதில்فَیَحِلَّஅதனால் இறங்கிவிடும்عَلَیْكُمْஉங்கள் மீதுغَضَبِیْ ۚஎனது கோபம்وَ مَنْமேலும் எவர்یَّحْلِلْஇறங்குகிறதோعَلَیْهِஅவர் மீதுغَضَبِیْஎனது கோபம்فَقَدْநிச்சயமாகهَوٰیவீழ்ந்துவிட்டார்
குலூ மின் தய்யிBபாதி மா ரZஜக்னாகும் வலா தத்கவ் Fபீஹி Fப யஹில்ல 'அலய்கும் களBபீ வ மய் யஹ்லில் 'அலய்ஹி களBபீ Fபகத் ஹவா
“நாம் உங்களுக்கு அளித்துள்ள தூய்மையானவற்றிலிருந்து உண்ணுங்கள்; (அதற்கு நன்றி செலுத்தாமல்) அழிச்சாட்டியம் செய்யாதீர்கள்; (அப்படி செய்வீர்களானால்) உங்கள் மீது என் கோபம் இறங்கி விடும்; மேலும், எவன் மீது என் கோபம் இறங்குகிறதோ, அவன் நிச்சயமாக வீழ்வான்.
لَوْ كَانَ فِیْهِمَاۤ اٰلِهَةٌ اِلَّا اللّٰهُ لَفَسَدَتَا ۚ فَسُبْحٰنَ اللّٰهِ رَبِّ الْعَرْشِ عَمَّا یَصِفُوْنَ ۟
لَوْஒருவேளைكَانَஇருந்திருந்தால்فِیْهِمَاۤஅவையிரண்டிலும்اٰلِهَةٌதெய்வங்கள்اِلَّاதவிரاللّٰهُஅல்லாஹ்வைلَفَسَدَتَا ۚநிச்சயமாகச் சீர்குலைந்திருக்கும்فَسُبْحٰنَஎனவே தூயவன்اللّٰهِஅல்லாஹ்رَبِّஇறைவன்الْعَرْشِஅர்ஷின்عَمَّاஎவற்றிலிருந்துیَصِفُوْنَஅவர்கள் வர்ணிக்கிறார்களோ
லவ் கான Fபீஹிமா ஆலிஹதுன் இல்லல் லாஹு லFபஸததா; Fப-ஸுBப்ஹானல் லாஹி ரBப்Bபில் 'அர்ஷி 'அம்மா யஸிFபூன்
(வான், பூமி ஆகிய) இவற்றில் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்கள் இருந்திருந்தால், நிச்சயமாக இவையிரண்டும் அழிந்தே போயிருக்கும், அர்ஷுடைய இறைவனாம் அல்லாஹ், அவர்கள் வர்ணிக்கும் (இத்தகைய) தன்மைகளிலிருந்து மிகவும் தூய்மையானவன்.
وَذَا النُّوْنِ اِذْ ذَّهَبَ مُغَاضِبًا فَظَنَّ اَنْ لَّنْ نَّقْدِرَ عَلَیْهِ فَنَادٰی فِی الظُّلُمٰتِ اَنْ لَّاۤ اِلٰهَ اِلَّاۤ اَنْتَ سُبْحٰنَكَ ۖۗ اِنِّیْ كُنْتُ مِنَ الظّٰلِمِیْنَ ۟ۚۖ
وَ ذَاமேலும் உடையவரைالنُّوْنِமீன்اِذْபோதுذَّهَبَஅவர் சென்றார்مُغَاضِبًاகோபமடைந்தவராகفَظَنَّஎனவே அவர் எண்ணினார்اَنْஎன்றுلَّنْஒருபோதும் மாட்டோம்نَّقْدِرَநாம் நெருக்கடிக்குள்ளாக்கعَلَیْهِஅவர் மீதுفَنَادٰیபின்னர் அவர் அழைத்தார்فِیஉள்ளேالظُّلُمٰتِஇருள்களில்اَنْஎன்றுلَّاۤஇல்லைاِلٰهَஇறைவன்اِلَّاۤதவிரاَنْتَஉன்னைسُبْحٰنَكَ ۖۗநீ தூய்மையானவன்اِنِّیْநிச்சயமாக நான்كُنْتُஇருந்தேன்مِنَசேர்ந்தவனாகالظّٰلِمِیْنَۚۖஅநியாயக்காரர்களில்
வ தன் னூனி இத் தஹBப முகாளிBபன் Fப ளன்னா அல் லன் னக்திர 'அலய்ஹி Fபனாதா Fபிள் ளுலுமாதி அல் லா இலாஹ இல்லா அன்த ஸுBப்ஹானக இன்னீ குன்து மினள் ளாலிமீன்
இன்னும் (நினைவு கூர்வீராக:) துன்னூன் (யூனுஸ் தம் சமூகத்தவரை விட்டும்) கோபமாக வெளியேறிய போது, (பாவிகள் சமூகத்தை விட்டும் வெளியேறி விட்ட படியால்) அவரை நாம் நெருக்கடியில் ஆக்கமாட்டோம் என்று எண்ணிக் கொண்டார்; எனவே அவர் (மீன் வயிற்றின்) ஆழ்ந்த இருளிலிருந்து “உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்” என்று பிரார்த்தித்தார்.
وَاِذْ بَوَّاْنَا لِاِبْرٰهِیْمَ مَكَانَ الْبَیْتِ اَنْ لَّا تُشْرِكْ بِیْ شَیْـًٔا وَّطَهِّرْ بَیْتِیَ لِلطَّآىِٕفِیْنَ وَالْقَآىِٕمِیْنَ وَالرُّكَّعِ السُّجُوْدِ ۟
وَ اِذْஇன்னும் (நினைவுகூருங்கள்)بَوَّاْنَاநாம் நிர்ணயித்துக் கொடுத்ததைلِاِبْرٰهِیْمَஇப்ராஹீமுக்குمَكَانَஇடத்தைالْبَیْتِஅந்த ஆலயத்தின்اَنْஎன்றுلَّاவேண்டாம்تُشْرِكْநீர் இணைவைக்கبِیْஎன்னோடுشَیْـًٔاஎதனையும்وَّ طَهِّرْமேலும் தூய்மைப்படுத்துவீராகبَیْتِیَஎனது ஆலயத்தைلِلطَّآىِٕفِیْنَசுற்றி வருபவர்களுக்காகوَ الْقَآىِٕمِیْنَமேலும் நின்று வணங்குபவர்களுக்காகوَ الرُّكَّعِமேலும் குனிந்து வணங்குபவர்களுக்காகالسُّجُوْدِசிரம்பணிந்து வணங்குபவர்களுக்காக
வ இத் Bபவ்வானா லி இBப்ராஹீம மகானல் Bபய்தி அல்லா துஷ்ரிக் Bபீ ஷய்'அ(ன்)வ் வ தஹ்ஹிர் Bபய்திய லிதா'இFபீன வல்கா' இமீன வர்ருக்க 'இஸ் ஸுஜூத்
நாம் இப்ராஹீமுக்குப் புனித ஆலயத்தின் இடத்தை நிர்ணயித்து “நீர் எனக்கு எவரையும் இணைவைக்காதீர்; என்னுடைய (இந்த) ஆலயத்தைச் சுற்றி வருவோருக்கும், அதில் ருகூஃ, ஸுஜூது செய்(து தொழு)வோருக்கும், அதைத் தூய்மையாக்கி வைப்பீராக” என்று சொல்லியதை (நபியே! நினைவு கூறுவீராக).
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّیْطٰنِ ؕ وَمَنْ یَّتَّبِعْ خُطُوٰتِ الشَّیْطٰنِ فَاِنَّهٗ یَاْمُرُ بِالْفَحْشَآءِ وَالْمُنْكَرِ ؕ وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَیْكُمْ وَرَحْمَتُهٗ مَا زَكٰی مِنْكُمْ مِّنْ اَحَدٍ اَبَدًا ۙ وَّلٰكِنَّ اللّٰهَ یُزَكِّیْ مَنْ یَّشَآءُ ؕ وَاللّٰهُ سَمِیْعٌ عَلِیْمٌ ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டீர்களோلَاவேண்டாம்تَتَّبِعُوْاநீங்கள் பின்பற்றخُطُوٰتِஅடிச்சுவடுகளைالشَّیْطٰنِ ؕஷைத்தானின்وَ مَنْமேலும் எவர்یَّتَّبِعْபின்பற்றுகிறாரோخُطُوٰتِஅடிச்சுவடுகளைالشَّیْطٰنِஷைத்தானின்فَاِنَّهٗநிச்சயமாக அவன்یَاْمُرُஏவுகிறான்بِالْفَحْشَآءِமானக்கேடானவற்றைوَ الْمُنْكَرِ ؕமேலும் வெறுக்கத்தக்கவற்றைوَ لَوْ لَاமேலும் இல்லாவிட்டால்فَضْلُஅருள்اللّٰهِஅல்லாஹ்வின்عَلَیْكُمْஉங்கள் மீதுوَ رَحْمَتُهٗமேலும் அவனது கருணையும்مَاஇல்லைزَكٰیபரிசுத்தமாகி இருக்கمِنْكُمْஉங்களில்مِّنْஇருந்துاَحَدٍஒருவரும்اَبَدًا ۙஎக்காலத்திலும்وَّ لٰكِنَّஆனால்اللّٰهَஅல்லாஹ்یُزَكِّیْபரிசுத்தப்படுத்துகிறான்مَنْஎவரைیَّشَآءُ ؕநாடுகிறானோوَ اللّٰهُமேலும் அல்லாஹ்سَمِیْعٌசெவியேற்பவன்عَلِیْمٌநன்கறிந்தவன்
யா அய்யுஹல் லதீன ஆமனூ லா தத்தBபி'ஊ குதுவாதிஷ் ஷய்தான்; வ ம(ன்)ய்-யத்தBபிஃ குதுவாதிஷ் ஷய்தானி Fப இன்னஹூ யாமுரு Bபில்Fபஹ்ஷா'இ வல்முன்கர்; வ லவ் லா Fபள்லுல் லாஹி 'அலய்கும் வ ரஹ்மதுஹூ மா Zஜகா மின்கும் மின் அஹதின் அBபத(ன்)வ் வ லாகின்னல் லாஹ யுZஜக்கீ ம(ன்)ய்-யஷா'; வல்லாஹு ஸமீ'உன் 'அலீம்
ஈமான் கொண்டவர்களே! ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; இன்னும் எவன் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறானோ அவனை, ஷைத்தான் மானக் கேடானவற்றையும், வெறுக்கத்தக்க வற்றையும், (செய்ய) நிச்சயமாக ஏவுவான்; அன்றியும், உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால், உங்களில் எவரும் எக்காலத்திலும் (தவ்பா செய்து) தூய்மையடைந்திருக்க முடியாது - எனினும் தான் நாடியவர்களை அல்லாஹ் தூய்மைப் படுத்துகிறான் - மேலும் அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.
اَلْخَبِیْثٰتُ لِلْخَبِیْثِیْنَ وَالْخَبِیْثُوْنَ لِلْخَبِیْثٰتِ ۚ وَالطَّیِّبٰتُ لِلطَّیِّبِیْنَ وَالطَّیِّبُوْنَ لِلطَّیِّبٰتِ ۚ اُولٰٓىِٕكَ مُبَرَّءُوْنَ مِمَّا یَقُوْلُوْنَ ؕ لَهُمْ مَّغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِیْمٌ ۟۠
اَلْخَبِیْثٰتُகெட்ட பெண்கள்لِلْخَبِیْثِیْنَகெட்ட ஆண்களுக்குوَ الْخَبِیْثُوْنَமேலும் கெட்ட ஆண்கள்لِلْخَبِیْثٰتِ ۚகெட்ட பெண்களுக்குوَ الطَّیِّبٰتُமேலும் நல்ல பெண்கள்لِلطَّیِّبِیْنَநல்ல ஆண்களுக்குوَ الطَّیِّبُوْنَமேலும் நல்ல ஆண்கள்لِلطَّیِّبٰتِ ۚநல்ல பெண்களுக்குاُولٰٓىِٕكَஅவர்கள்مُبَرَّءُوْنَதூய்மையானவர்கள்مِمَّاஎதை விட்டும்یَقُوْلُوْنَ ؕஅவர்கள் கூறுகிறார்களோلَهُمْஅவர்களுக்குمَّغْفِرَةٌமன்னிப்புوَّ رِزْقٌமேலும் வாழ்வாதாரம்كَرِیْمٌ۠கண்ணியமான
அல் கBபீதாது லில் கBபீதீன வல் கBபீதூன லில் கBபீதாதி வத் தய்யிBபாது லித் தய்யிBபீன வத் தய்யிBபூன லித் தய்யிBபாத்; உலா'இக முBபர்ர'ஊன மிம்ம யகூலூன லஹும் மக்Fபிரது(ன்)வ் வ ரிZஜ்குன் கரீம்
கெட்ட பெண்கள் கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள் கெட்ட பெண்களுக்கும் இன்னும்: நல்ல தூய்மையுடைய பெண்கள், நல்ல தூய்மையான ஆண்களுக்கும் நல்ல தூய்மையான ஆண்கள் நல்ல தூய்மையான பெண்களுக்கும் (தகுதியானவர்கள்.) அவர்கள் கூறுவதை விட்டும் இவர்களே தூய்மையானவர்கள். இவர்களுக்கு மன்னிப்பும், கண்ணியமான உணவுமுண்டு.  
وَهُوَ الَّذِیْۤ اَرْسَلَ الرِّیٰحَ بُشْرًاۢ بَیْنَ یَدَیْ رَحْمَتِهٖ ۚ وَاَنْزَلْنَا مِنَ السَّمَآءِ مَآءً طَهُوْرًا ۟ۙ
وَ هُوَமேலும் அவன்தான்الَّذِیْۤஎத்தகையவன் என்றால்اَرْسَلَஅனுப்புகிறான்الرِّیٰحَகாற்றுகளைبُشْرًۢاநற்செய்தியாகبَیْنَமுன்னேیَدَیْமுன்னதாகرَحْمَتِهٖ ۚஅவனது அருளுக்குوَ اَنْزَلْنَاமேலும் நாம் இறக்கினோம்مِنَஇருந்துالسَّمَآءِவானம்مَآءًநீரைطَهُوْرًاۙதூய்மையான
வ ஹுவல் லதீ அர்ஸலர் ரியாஹ Bபுஷ்ரன் Bபய்ன யதய் ரஹ்மதிஹ்; வ அன்Zஜல்னா மினஸ் ஸமா'இ மா'அன் தஹூரா
இன்னும், அவன்தான் தன்னுடைய கிருபை (மழை)க்கு முன்னே காற்றுகளை நன்மாராயமாக அனுப்பி வைக்கின்றான்; மேலும், (நபியே!) நாமே வானத்திலிருந்து தூய்மையான நீரையும் இறக்கி வைக்கிறோம்.
وَرَبُّكَ یَخْلُقُ مَا یَشَآءُ وَیَخْتَارُ ؕ مَا كَانَ لَهُمُ الْخِیَرَةُ ؕ سُبْحٰنَ اللّٰهِ وَتَعٰلٰی عَمَّا یُشْرِكُوْنَ ۟
وَ رَبُّكَமேலும் உமது இறைவன்یَخْلُقُபடைக்கிறான்مَاஎதைیَشَآءُஅவன் நாடுகிறானோوَ یَخْتَارُ ؕமேலும் அவன் தேர்ந்தெடுக்கிறான்مَاஇல்லைكَانَஇருந்ததுلَهُمُஅவர்களுக்குالْخِیَرَةُ ؕதேர்ந்தெடுக்கும் உரிமைسُبْحٰنَதூயவன்اللّٰهِஅல்லாஹ்وَ تَعٰلٰیமேலும் அவன் உயர்ந்தவன்عَمَّاஎவற்றிலிருந்துیُشْرِكُوْنَஅவர்கள் இணைவைக்கிறார்களோ
வ ரBப்Bபுக யகுலுகு மா யஷா'உ வ யக்தார்; மா கான லஹுமுல் கியரஹ்; ஸுBப்ஹானல்லாஹி வ த'ஆலா 'அம்ம்மா யுஷ்ரிகூன்
மேலும், உம்முடைய இறைவன், தான் நாடியதைப் படைக்கிறான்; (தூதராகத் தான் நாடியோரைத்) தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். (எனவே இத்தகு) தேர்ந்தெடுத்தல் இவர்களு(க்கு உரிமையு)டையதல்ல; அல்லாஹ் மிகத் தூய்மையானவன்; இவர்கள் இணை வைப்பதை விட்டும் அவன் மிகவும் உயர்ந்தவன்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَدْخُلُوْا بُیُوْتَ النَّبِیِّ اِلَّاۤ اَنْ یُّؤْذَنَ لَكُمْ اِلٰی طَعَامٍ غَیْرَ نٰظِرِیْنَ اِنٰىهُ ۙ وَلٰكِنْ اِذَا دُعِیْتُمْ فَادْخُلُوْا فَاِذَا طَعِمْتُمْ فَانْتَشِرُوْا وَلَا مُسْتَاْنِسِیْنَ لِحَدِیْثٍ ؕ اِنَّ ذٰلِكُمْ كَانَ یُؤْذِی النَّبِیَّ فَیَسْتَحْیٖ مِنْكُمْ ؗ وَاللّٰهُ لَا یَسْتَحْیٖ مِنَ الْحَقِّ ؕ وَاِذَا سَاَلْتُمُوْهُنَّ مَتَاعًا فَسْـَٔلُوْهُنَّ مِنْ وَّرَآءِ حِجَابٍ ؕ ذٰلِكُمْ اَطْهَرُ لِقُلُوْبِكُمْ وَقُلُوْبِهِنَّ ؕ وَمَا كَانَ لَكُمْ اَنْ تُؤْذُوْا رَسُوْلَ اللّٰهِ وَلَاۤ اَنْ تَنْكِحُوْۤا اَزْوَاجَهٗ مِنْ بَعْدِهٖۤ اَبَدًا ؕ اِنَّ ذٰلِكُمْ كَانَ عِنْدَ اللّٰهِ عَظِیْمًا ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோلَاவேண்டாம்تَدْخُلُوْاநீங்கள் நுழையبُیُوْتَவீடுகளுக்குள்النَّبِیِّநபியுடையاِلَّاۤதவிரاَنْஎன்றுیُّؤْذَنَஅனுமதி வழங்கப்பட்டால்لَكُمْஉங்களுக்குاِلٰیநோக்கிطَعَامٍஉணவிற்குغَیْرَஇன்றிنٰظِرِیْنَகாத்திருப்பவர்களாகاِنٰىهُ ۙஅது தயாராவதைوَ لٰكِنْஆனால்اِذَاஎப்போதுدُعِیْتُمْநீங்கள் அழைக்கப்பட்டால்فَادْخُلُوْاஅப்போது நுழையுங்கள்فَاِذَاபின்னர் எப்போதுطَعِمْتُمْநீங்கள் உண்டு முடித்துவிட்டால்فَانْتَشِرُوْاகலைந்து செல்லுங்கள்وَ لَاமேலும் வேண்டாம்مُسْتَاْنِسِیْنَஆர்வம் கொண்டவர்களாகلِحَدِیْثٍ ؕபேச்சில்اِنَّநிச்சயமாகذٰلِكُمْஅதுكَانَஇருந்ததுیُؤْذِیதொந்தரவு தருவதாகالنَّبِیَّநபிக்குفَیَسْتَحْیٖஎனவே அவர் வெட்கப்படுகிறார்مِنْكُمْ ؗஉங்களிடம்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்لَاஇல்லைیَسْتَحْیٖவெட்கப்படுவதில்லைمِنَகுறித்துالْحَقِّ ؕசத்தியத்தைوَ اِذَاமேலும் எப்போதுسَاَلْتُمُوْهُنَّநீங்கள் அவர்களிடம் கேட்டால்مَتَاعًاஒரு பொருளைفَسْـَٔلُوْهُنَّஅப்போது அவர்களிடம் கேளுங்கள்مِنْஇருந்துوَّرَآءِபின்னால்حِجَابٍ ؕதிரைக்குப்ذٰلِكُمْஅதுவேاَطْهَرُமிகவும் தூய்மையானதுلِقُلُوْبِكُمْஉங்கள் உள்ளங்களுக்குوَ قُلُوْبِهِنَّ ؕமேலும் அவர்களின் உள்ளங்களுக்கும்وَ مَاமேலும் இல்லைكَانَதகுதியானதுلَكُمْஉங்களுக்குاَنْஎன்றுتُؤْذُوْاநீங்கள் துன்புறுத்துவதுرَسُوْلَதூதரைاللّٰهِஅல்லாஹ்வின்وَ لَاۤமேலும் கூடாதுاَنْஎன்றுتَنْكِحُوْۤاநீங்கள் திருமணம் செய்வதுاَزْوَاجَهٗஅவருடைய மனைவியரைمِنْۢஇருந்துبَعْدِهٖۤஅவருக்குப் பிறகுاَبَدًا ؕஎன்றென்றும்اِنَّநிச்சயமாகذٰلِكُمْஅதுكَانَஆகும்عِنْدَமுன்னிலையில்اللّٰهِஅல்லாஹ்வின்عَظِیْمًاமிகப்பெரியதாக
யா அய்யுஹல் லதீன ஆமனூ லா தத்குலூ Bபு யூதன் னBபிய்யி இல்லா அய் யு'தன லகும் இலா த'ஆமின் கய்ர னாளிரீன இனாஹு வ லாகின் இதா து'ஈதும் Fபத்குலூ Fப இதா த'இம்தும் Fபன்தஷிரூ வலா முஸ்தானிஸீன லிஹதீத்; இன்ன தாலிகும் கான யு'தின் னBபிய்ய Fப யஸ்தஹ்யீ மின்கும் வல்லாஹு லா யஸ்தஹ்யீ மினல் ஹக்க்; வ இதா ஸ அல்துமூஹுன்ன மதா'அன் Fபஸ்'அலூஹுன்ன மி(ன்)வ் வரா'இ ஹிஜாBப்; தாலிகும் அத்ஹரு லிகுலூBபிகும் வ குலூBபிஹின்ன்; வமா கான லகும் அன் து'தூ ரஸூலல் லாஹி வ லா அன் தன்கிஹூ அZஜ்வாஜஹூ மிம் Bபஃதிஹீ அBபதா; இன்ன தாலிகும் கான 'இன்தல் லாஹி 'அளீமா
முஃமின்களே! (உங்களுடைய நபி) உங்களை உணவு அருந்த அழைத்தாலன்றியும், அது சமையலாவதை எதிர்பார்த்தும் (முன்னதாகவே) நபியுடைய வீடுகளில் பிரவேசிக்காதீர்கள்; ஆனால், நீங்கள் அழைக்கப்பட்டீர்களானால் (அங்கே) பிரவேசியுங்கள்; அன்றியும் நீங்கள் உணவருந்தி விட்டால் (உடன்) கலைந்து போய் விடுங்கள்; பேச்சுகளில் மனங்கொண்டவர்களாக (அங்கேயே) அமர்ந்து விடாதீர்கள்; நிச்சயமாக இது நபியை நோவினை செய்வதாகும்; இதனை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுவார்; ஆனால் உண்மையைக் கூற அல்லாஹ் வெட்கப்படுவதில்லை; நபியுடைய மனைவிகளிடம் ஏதாவது ஒரு பொருளை (அவசியப்பட்டுக்) கேட்டால், திரைக்கு அப்பாலிருந்தே அவர்களைக் கேளுங்கள். அதுவே உங்கள் இருதயங்களையும் அவர்கள் இருதயங்களையும் தூய்மையாக்கி வைக்கும்; அல்லாஹ்வின் தூதரை நோவினை செய்வது உங்களுக்கு தகுமானதல்ல; அன்றியும் அவருடைய மனைவிகளை அவருக்குப் பின்னர் நீங்கள் மணப்பது ஒருபோதும் கூடாது; நிச்சயமாக இது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் (பாவ) காரியமாகும்.
قَالُوْا سُبْحٰنَكَ اَنْتَ وَلِیُّنَا مِنْ دُوْنِهِمْ ۚ بَلْ كَانُوْا یَعْبُدُوْنَ الْجِنَّ ۚ اَكْثَرُهُمْ بِهِمْ مُّؤْمِنُوْنَ ۟
قَالُوْاஅவர்கள் கூறுவார்கள்سُبْحٰنَكَநீ தூய்மையானவன்اَنْتَநீயேوَلِیُّنَاஎங்கள் பாதுகாவலன்مِنْவிடدُوْنِهِمْ ۚஅவர்களைத் தவிரبَلْமாறாகكَانُوْاஅவர்கள் இருந்தார்கள்یَعْبُدُوْنَவணங்கிக் கொண்டிருந்தார்கள்الْجِنَّ ۚஜின்களைاَكْثَرُهُمْஅவர்களில் பெரும்பாலோர்بِهِمْஅவர்கள் மீதுمُّؤْمِنُوْنَநம்பிக்கை கொண்டவர்கள்
காலூ ஸுBப்ஹானக அன்த வலிய்யுனா மின் தூனிஹிம் Bபல் கானூ யஃBபுதூனல் ஜின்ன அக்தருஹும் Bபிஹிம் மு'மினூன்
(இதற்கு மலக்குகள்:) “நீ மிகத் தூய்மையானவன்; நீயே எங்கள் பாதுகாவலன்; இவர்கள் அல்லர்; எனினும் இவர்கள் ஜின்களை வணங்கிக் கொண்டிருந்தார்கள் - இவர்களில் பெரும்பாலோர் அவர்(ஜின்)கள் மேல் நம்பிக்கை கொண்டிருந்தவர்கள்” என்று கூறுவார்கள்.
مَنْ كَانَ یُرِیْدُ الْعِزَّةَ فَلِلّٰهِ الْعِزَّةُ جَمِیْعًا ؕ اِلَیْهِ یَصْعَدُ الْكَلِمُ الطَّیِّبُ وَالْعَمَلُ الصَّالِحُ یَرْفَعُهٗ ؕ وَالَّذِیْنَ یَمْكُرُوْنَ السَّیِّاٰتِ لَهُمْ عَذَابٌ شَدِیْدٌ ؕ وَمَكْرُ اُولٰٓىِٕكَ هُوَ یَبُوْرُ ۟
مَنْஎவர்كَانَஇருக்கிறாரோیُرِیْدُநாடுகிறவராகالْعِزَّةَகண்ணியத்தைفَلِلّٰهِஅல்லாஹ்வுக்கேالْعِزَّةُகண்ணியம்جَمِیْعًا ؕஅனைத்தும்اِلَیْهِஅவனிடமேیَصْعَدُஏறிச் செல்கின்றனالْكَلِمُசொற்கள்الطَّیِّبُதூய்மையானوَ الْعَمَلُமேலும் செயலைالصَّالِحُநல்லیَرْفَعُهٗ ؕஅதனை அவன் உயர்த்துகிறான்وَ الَّذِیْنَமேலும் எவர்கள்یَمْكُرُوْنَசதி செய்கிறார்களோالسَّیِّاٰتِதீமைகளைلَهُمْஅவர்களுக்குعَذَابٌவேதனைشَدِیْدٌ ؕகடுமையானதுوَ مَكْرُமேலும் சதிاُولٰٓىِٕكَஅவர்களுடையهُوَஅதுவேیَبُوْرُஅழிந்து போகும்
மன் கான யுரீதுல் 'இZஜ்Zஜத Fபலில்லாஹில் 'இZஜ்Zஜது ஜமீ'ஆ; இலய்ஹி யஸ்'அதுல் கலிமுத் தய்யிBபு வல்'அமலுஸ் ஸாலிஹு யர்Fப'உஹ்; வல்லதீன யம்குரூனஸ் ஸய்யிஆதி லஹும் 'அதாBபுன் ஷதீத்; வ மக்ரு உலா'இக ஹுவ யBபூர்
எவர் கண்ணியத்தை நாடுகிறாரோ, கண்ணியம் யாவும் அல்லாஹ்வுக்கே உரியதாகும் (என்பதை அறிந்து கொள்ளட்டும்); தூய்மையான வாக்குகளெல்லாம் அவன் பக்கமே மேலேறிச் செல்கின்றன; நற்செயல் அதனை உயர்த்துகிறது; அன்றியும் எவர்கள் தீமைகளைச் செய்யச்சதி செய்கிறார்களோ அவர்களுக்குக் கடினமான வேதனையுண்டு; இன்னும், இவர்களுடைய சதித்திட்டம் அழிந்து போகும்.
سُبْحٰنَ الَّذِیْ خَلَقَ الْاَزْوَاجَ كُلَّهَا مِمَّا تُنْۢبِتُ الْاَرْضُ وَمِنْ اَنْفُسِهِمْ وَمِمَّا لَا یَعْلَمُوْنَ ۟
سُبْحٰنَதூயவன்الَّذِیْஅவன்خَلَقَபடைத்தான்الْاَزْوَاجَஜோடிகளைكُلَّهَاஅனைத்தையும்مِمَّاஎவற்றிலிருந்துتُنْۢبِتُமுளைப்பிக்கிறதோالْاَرْضُபூமிوَ مِنْமேலும்اَنْفُسِهِمْஅவர்களிலிருந்தும்وَ مِمَّاமேலும் எவற்றிலிருந்துلَاஇல்லைیَعْلَمُوْنَஅவர்கள் அறிகிறார்கள்
ஸுBப்ஹானல் லதீ கலகல் அZஜ்வாஜ குல்லஹா மிம்மா தும்Bபிதுல் அர்ளு வ மின் அன்Fபுஸிஹிம் வ மிம்மா லா யஃலமூன்
பூமி முளைப்பிக்கின்ற (புற்பூண்டுகள்) எல்லாவற்றையும், (மனிதர்களாகிய) இவர்களையும், இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன்.
فَسُبْحٰنَ الَّذِیْ بِیَدِهٖ مَلَكُوْتُ كُلِّ شَیْءٍ وَّاِلَیْهِ تُرْجَعُوْنَ ۟۠
فَسُبْحٰنَஎனவே அவன் தூய்மையானவன்الَّذِیْஎவன்بِیَدِهٖஅவனது கையில்مَلَكُوْتُஆட்சி அதிகாரம்كُلِّஒவ்வொருشَیْءٍபொருளின்وَّ اِلَیْهِமேலும் அவனிடமேتُرْجَعُوْنَ۠நீங்கள் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள்
Fப ஸுBப்ஹானல் லதீ Bபியதிஹீ மலகூது குல்லி ஷய்-இ(ன்)வ்-வ இலய்ஹி துர்ஜ'ஊன்
ஆகவே, எல்லாப் பொருட்களின் ஆட்சியும் எவன் கையிலிருக்கிறதோ அவனே மிகத் தூய்மையானவன், அவனிடமே நீங்கள் மீள்விக்கப்படுவீர்கள்.
كَاَنَّهُنَّ بَیْضٌ مَّكْنُوْنٌ ۟
كَاَنَّهُنَّஅவர்கள் போன்றிருப்பார்கள்بَیْضٌமுட்டைகள்مَّكْنُوْنٌமறைத்து வைக்கப்பட்ட
க அன்னஹுன்ன Bபய்ளும் மக்னூன்
(தூய்மையில் அவர்கள் சிப்பிகளில்) மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் இருப்பார்கள்.
لَّا یَمَسُّهٗۤ اِلَّا الْمُطَهَّرُوْنَ ۟ؕ
لَّاஇல்லைیَمَسُّهٗۤஅதனைத் தீண்டுவார்கள்اِلَّاதவிரالْمُطَهَّرُوْنَؕதூய்மையாக்கப்பட்டவர்கள்
லா யமஸ்ஸுஹூ இல்லல் முதஹ்ஹரூன்
தூய்மையானவர்களைத் தவிர (வேறெவரும்) இதனைத் தொட மாட்டார்கள்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِذَا نَاجَیْتُمُ الرَّسُوْلَ فَقَدِّمُوْا بَیْنَ یَدَیْ نَجْوٰىكُمْ صَدَقَةً ؕ ذٰلِكَ خَیْرٌ لَّكُمْ وَاَطْهَرُ ؕ فَاِنْ لَّمْ تَجِدُوْا فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْۤاநம்பிக்கை கொண்டார்களோاِذَاஎப்பொழுதுنَاجَیْتُمُநீங்கள் இரகசியமாகப் பேசுகிறீர்களோالرَّسُوْلَஇறைத்தூதரிடம்فَقَدِّمُوْاமுன்வையுங்கள்بَیْنَமுன்பாகیَدَیْமுன்னிலையில்نَجْوٰىكُمْஉங்கள் இரகசியப் பேச்சுக்குصَدَقَةً ؕஒரு தர்மத்தைذٰلِكَஅதுخَیْرٌசிறந்ததுلَّكُمْஉங்களுக்குوَ اَطْهَرُ ؕமேலும் தூய்மையானதுفَاِنْஆனால் ஒருவேளைلَّمْஇல்லைتَجِدُوْاநீங்கள் பெற்றுக் கொள்ளாவிட்டால்فَاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்غَفُوْرٌமிக மன்னிப்பவன்رَّحِیْمٌநிகரற்ற அன்புடையவன்
யா அய்யுஹல் லதீன ஆமனூ இதா னாஜய்துமுர் ரஸூல Fபகத்திமூ Bபய்ன யதய் னஜ்வாகும் ஸதகஹ்; தாலிக கய்ருல் லகும் வ அத்ஹர்; Fப இல் லம் தஜிதூ Fப இன்னல் லாஹ கFபூருர் ரஹீம்
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் (நம்) தூதருடன் இரகசியம் பேச நேரிட்டால் உங்கள் இரகசியத்திற்கு முன்னர் ஏதேனும் தான தர்மத்தை முற்படுத்துங்கள். இது உங்களுக்கு, நன்மையாகவும், (உள்ளத்திற்குத்) தூய்மையாகவும் இருக்கும், ஆனால் (தான தர்மம் செய்வதற்கு) நீங்கள் வசதிபெற்றிராவிடின் - நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.
هُوَ اللّٰهُ الَّذِیْ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ۚ اَلْمَلِكُ الْقُدُّوْسُ السَّلٰمُ الْمُؤْمِنُ الْمُهَیْمِنُ الْعَزِیْزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ ؕ سُبْحٰنَ اللّٰهِ عَمَّا یُشْرِكُوْنَ ۟
هُوَஅவன்اللّٰهُஅல்லாஹ்الَّذِیْஎத்தகையவன்لَاۤஇல்லைاِلٰهَவணக்கத்திற்குரியவன்اِلَّاதவிரهُوَ ۚஅவனைاَلْمَلِكُபேரரசன்الْقُدُّوْسُமிகப் பரிசுத்தமானவன்السَّلٰمُசாந்தியளிப்பவன்الْمُؤْمِنُஅபயமளிப்பவன்الْمُهَیْمِنُபாதுகாப்பவன்الْعَزِیْزُமிகைத்தவன்الْجَبَّارُஅடக்கியாள்பவன்الْمُتَكَبِّرُ ؕபெருமைக்குரியவன்سُبْحٰنَதூயவன்اللّٰهِஅல்லாஹ்عَمَّاஎவற்றை விட்டும்یُشْرِكُوْنَஅவர்கள் இணைவைக்கிறார்களோ
ஹுவல்-லாஹுல்-லதீ லா இலாஹ இல்லா ஹுவல்-மலிகுல் குத்தூஸுஸ்-ஸலாமுல் முமினுல் முஹய்மினுல்-'ஆZஜீZஜுல் ஜBப்Bபாருல்-முதகBப்Bபிர்; ஸுBப்ஹானல் லாஹி 'அம்மா யுஷ்ரிகூன்
அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவிர, வேறு யாரும் இல்லை; அவனே பேரரசன்; மிகப்பரிசுத்தமானவன்; சாந்தியளிப்பவன்; தஞ்சமளிப்பவன்; பாதுகாப்பவன்; (யாவரையும்) மிகைப்பவன்; அடக்கியாள்பவன்; பெருமைக்குரித்தானவன் - அவர்கள் இணைவைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன்.
وَثِیَابَكَ فَطَهِّرْ ۟
وَ ثِیَابَكَஉமது ஆடைகளைفَطَهِّرْ۪ۙதூய்மைப்படுத்துவீராக
வ தியாBபக Fபதஹ்ஹிர்
உம் ஆடைகளைத் தூய்மையாக ஆக்கி வைத்துக் கொள்வீராக.
وَمَا یُدْرِیْكَ لَعَلَّهٗ یَزَّ ۟ۙ
وَ مَاமேலும் எதுیُدْرِیْكَஉமக்கு அறிவிக்கும்لَعَلَّهٗஅவர் ஒருவேளைیَزَّكّٰۤیۙதூய்மையடையலாம்
வமா யுத்ரீக ல'அல்லஹு யZஜ் Zஜக்கா.
(நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா?
وَمَا عَلَیْكَ اَلَّا یَزَّكّٰى ۟ؕ
وَ مَاமேலும் (குற்றம்) இல்லைعَلَیْكَஉம்மீதுاَلَّاஅவர் ஆகாவிட்டால்یَزَّكّٰىؕதூய்மையாளராக
வ ம 'அலய்க அல்லா யZஜ் Zஜக்க.
ஆயினும் (இஸ்லாத்தை யேற்று) அவன் தூய்மையடையாமல் போனால், உம் மீது (அதனால் குற்றம்) இல்லை.
قَدْ اَفْلَحَ مَنْ تَزَكّٰی ۟ۙ
قَدْநிச்சயமாகاَفْلَحَவெற்றியடைந்தார்مَنْஎவர்تَزَكّٰیۙதூய்மையாக்கிக் கொண்டாரோ
கத் அFப்லஹ மன் தZஜக்கா
தூய்மையடைந்தவன், திட்டமாக வெற்றி பெறுகிறான்.