பின்னர், நாம் வானவர்களை (நோக்கி) “ஆதமுக்கு நீங்கள் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்'' எனக் கூறியபோது இப்லீஸைத் தவிர (அனைவரும்) ஸுஜூது செய்தார்கள். அவனோ பெருமைகொண்டு விலகி (நம் கட்டளையை) நிராகரிப்பவர்களில் ஆகி விட்டான்.
شَهْرُமாதம்رَمَضَانَரமழான்الَّذِىْٓஎதுاُنْزِلَஇறக்கப்பட்டதுفِيْهِஅதில்الْقُرْاٰنُஅல்குர்ஆன்هُدًىநேர்வழியாகلِّلنَّاسِமக்களுக்குوَ بَيِّنٰتٍஇன்னும் சான்றுகளாகمِّنَ الْهُدٰىநேர்வழியின்وَالْفُرْقَانِۚஇன்னும் பிரித்தறிவிப்பதுفَمَنْஎவர்شَهِدَதங்கி இருப்பார்مِنْكُمُஉங்களிலிருந்துالشَّهْرَஅம்மாதத்தில்فَلْيَـصُمْهُ ؕஅவர் அதில் நோன்பிருக்கவும்وَمَنْஇன்னும் எவர்کَانَஇருப்பார்مَرِيْضًاநோயாளியாகاَوْஅல்லதுعَلٰى سَفَرٍபயணத்தில்فَعِدَّةٌகணக்கிடவும்مِّنْஇருந்துاَيَّامٍநாட்கள்اُخَرَؕமற்ற(வை)يُرِيْدُநாடுவான்اللّٰهُஅல்லாஹ்بِکُمُஉங்களுக்குالْيُسْرَஇலகுவைوَلَا يُرِيْدُஇன்னும் நாடமாட்டான்بِکُمُஉங்களுக்குالْعُسْرَசிரமத்தைوَلِتُکْمِلُواஇன்னும் நீங்கள் முழுமைப்படுத்துவதற்காகالْعِدَّةَஎண்ணிக்கையைوَلِتُکَبِّرُواஇன்னும் நீங்கள் பெருமைப்படுத்துவதற்காகاللّٰهَஅல்லாஹ்வைعَلٰى مَا هَدٰٮكُمْஉங்களை நேர்வழி நடத்தியதற்காகوَلَعَلَّکُمْ تَشْكُرُوْنَஇன்னும் நீங்கள் நன்றி செலுத்துவதற்காக
ரமழான் மாதம் எத்தகைய (மகத்துவமுடைய)து என்றால் அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழி காட்டும் திருகுர்ஆன் (என்னும் வேதம்) இறக்கப்பட்டது. அது (நன்மை, தீமையைப்) பிரித்தறிவித்து நேரான வழியைத் தெளிவாக்கக்கூடிய வசனங்களை உடையதாகவும் இருக்கிறது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கவும். ஆனால், (அக்காலத்தில் உங்களில்) யாராவது நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால் (ரமழான் அல்லாத) மற்ற நாள்களில் (விட்டுப்போன நாள்களின் நோன்பைக்) கணக்கிட்டு (நோற்று) விடவும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவா(ன கட்டளையைக் கொடு)க்க விரும்புகிறான் தவிர சிரமத்தை(க் கொடுக்க) விரும்பவில்லை. மேலும், (தவறிய நாள்களைக் கணக்கிடும்படி கட்டளையிட்டதெல்லாம், உங்கள்மீது கடமையாக உள்ள ஒரு மாத நோன்பின்) எண்ணிக்கையை நீங்கள் முழுமை செய்வதற்காகவும்; (அவ்வான்ற) அல்லாஹ் உங்களை நேரான பாதையில் நடத்தியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்துவதற்காகவும்; (நோய், பிரயாணம் போன்ற சந்தர்ப்பங்களில் நோன்பு நோற்காதிருக்க உங்களுக்கு அனுமதி வழங்கியதற்காக) நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதற்காகவுமே ஆகும்!
(ஹஜ்ஜூக்குச் சென்ற) நீங்கள் உங்கள் (ஹஜ்ஜின்) கடமைகளை நிறைவேற்றி விட்டால், நீங்கள் (இஸ்லாமிற்கு முன்) உங்கள் மூதாதை(களின் பெயர்)களை (சப்த மிட்டு பெருமையாக) நினைவு கூர்ந்து கூறிவந்ததைப்போல் அல்லது அதைவிட அதிகமாக அல்லாஹ்வை ‘திக்ரு' (செய்து உங்களுக்கு வேண்டியவற்றையும் அவனிடம் கேட்டுப் பிரார்த்தனை) செய்யுங்கள். (பிரார்த்தனையில்) ‘‘எங்கள் இறைவனே! எங்களுக்கு (வேண்டியவற்றை எல்லாம்) இம்மையிலேயே கொடுத்து விடுவாயாக!'' என்று கோருபவரும் மனிதர்களில் உண்டு. ஆனால், இவருக்கு மறுமையில் ஒரு பாக்கியமும் இல்லை.
தவிர, ‘‘நீ அல்லாஹ்வுக்குப் பயந்துகொள். (விஷமம் செய்யாதே)'' என அவனுக்குக் கூறப்பட்டால் (அவனுடைய) பெருமை அவனை (விஷமம் செய்து) பாவத்தைச் செய்யும்படியே (இழுத்துப்) பிடித்துக்கொள்கிறது. ஆகவே, அவனுக்கு நரகமே தகுதியாகும். நிச்சயமாக (அது) தங்குமிடங்களில் மிகக் கெட்டது.
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பாமல் மக்கள் காண்பதற்காக தன் பொருளை செலவு செய்(து வீணாக்கு)பவனைப் போல (நீங்கள் மனமுவந்து வழங்கும்) உங்கள் தர்மங்களை(ப் பெற்றவனுக்கு முன்னும் பின்னும்) சொல்லி காண்பிப்பதாலும் துன்புறுத்துவதாலும் (அதன் பலனை) பாழாக்கி விடாதீர்கள். இவனின் உதாரணம், ஒரு வழுக்கைப் பாறையை ஒத்திருக்கிறது. அதன் மீது மண்படிந்தது. எனினும், ஒரு பெரும் மழை பொழிந்து, அதை(க் கழுவி) வெறும் பாறையாக்கி விட்டது. (இவ்வாறே அவன் செய்த தானத்தை அவனுடைய பெருமை அழித்துவிடும்.) ஆகவே, அவர்கள் (தானம்) செய்ததில் இருந்து ஒரு பலனையும் (மறுமையில்) அடையமாட்டார்கள். மேலும், அல்லாஹ் (தன்னை) நிராகரிக்கும் கூட்டத்தை (அவர்களின் தீயச் செயல்களின் காரணமாக) நேரான வழியில் செலுத்தமாட்டான்.
(நபியே! மனிதர்களுக்கு நேரான வழியை அறிவிப்பதுதான் உங்கள் கடமை.) நேரான வழியில் அவர்களைச் செலுத்துவது உங்கள் கடமையல்ல. ஆயினும், அல்லாஹ், தான் நாடியவர்களையே நேரான வழியில் செலுத்துகிறான். (நம்பிக்கையாளர்களே!) நல்லதிலிருந்து நீங்கள் எதை செலவு செய்தபோதிலும் அது உங்களுக்கே (நன்மையாக அமையும்). அல்லாஹ்வின் முகத்தைத் தேடுவதற்கே தவிர, (பெருமைக்காக) நீங்கள் (எதையும்) செலவு செய்யாதீர்கள். (பெருமையை நாடாமல்) நன்மைக்காக எதைச் செலவு செய்தபோதிலும் அதன் கூலியை நீங்கள் முழுமையாக அடைவீர்கள், (அதில்) உங்களுக்கு அநீதி இழைக்கப்படமாட்டாது.
அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள். தாய், தந்தைக்கு நன்றி செய்யுங்கள். (அவ்வாறே) உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அந்நிய அண்டை வீட்டாருக்கும், (எப்பொழுதும்) உங்களுடன் இருக்கக்கூடிய நண்பர்களுக்கும், பயணிகளுக்கும், உங்களிடம் உள்ள அடிமைகளுக்கும், (அன்புடன் நன்றி செய்யுங்கள்). எவன் கர்வம் கொண்டவனாக, பெருமை அடிப்பவனாக இருக்கிறானோ அவனை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.
எவர்கள் மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவே (பெருமைக்காகத்) தங்கள் பொருள்களைச் செலவு செய்வதுடன் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பிக்கை கொள்ளாதிருக்கின்றனரோ (அவர்களுக்கு ஷைத்தான்தான் நண்பன். ஆகவே,) எவனுக்கு ஷைத்தான் நண்பனாக இருக்கிறானோ அவன் நண்பர்களிலெல்லாம் மிகக் கெட்டவன் ஆவான்.
அவர்களுக்குச் செய்யப்பட்ட நல்லுபதேசத்தை அவர்கள் மறந்து விடவே (அவர்களைச் சோதிப்பதற்காக) ஒவ்வொரு பொரு(ள் செல்வங்க)ளின் வாயிலையும் நாம் அவர்களுக்குத் திறந்துவிட்டோம். (அவர்களுக்கு வேண்டியவை எல்லாம் தாராளமாக கிடைத்துக் கொண்டிருந்தன.) அவர்களுக்குக் கொடுக்கப்பட்டவற்றைக் கொண்டு அவர்கள் பெருமையுடன் மகிழ்ச்சி அடைந்து கொண்டிருந்த சமயத்தில் (நமது வேதனையைக் கொண்டு) நாம் அவர்களைத் திடீரென பிடித்துக் கொண்டோம் (தண்டித்தோம்). அந்நேரத்தில் அவர்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்.
(நபியே!) கற்பனையாக அல்லாஹ்வின் மீது பொய் கூறுபவனைவிட அல்லது வஹ்யி மூலம் அவனுக்கு எதுவும் அறிவிக்கப்படாமலிருக்க ‘‘தனக்கும் வஹ்யி வந்தது'' என்று கூறுபவனைவிட அல்லது ‘‘அல்லாஹ் இறக்கிய இ(வ்வேதத்)தைப் போல் நானும் இறக்குவேன்'' என்று கூறுபவனைவிட மகா அநியாயக்காரன் யார்? இவ்வக்கிரமக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும் சமயத்தில் நீர் அவர்களைப் பார்ப்பீராயின், வானவர்கள் தங்கள் கைகளை நீட்டி (அவர்களை நோக்கி) ‘‘உங்கள் உயிர்களைக் கொடுங்கள். இன்றைய தினம் இழிவு தரும் வேதனையே உங்களுக்குக் கூலியாகக் கொடுக்கப்படும். நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது (பொய்யாகக்) கூறி, நீங்கள் அவனுடைய வசனங்களை பெருமை கொண்டு புறக்கணித்ததுவே இதற்குக் காரணமாகும்'' (என்று கூறுவதை நீர் காண்பீர்).
(அதற்கு இறைவன்) ‘‘இதிலிருந்து நீ இறங்கிவிடு! நீ பெருமை கொள்வதற்கு இங்கு இடமில்லை. (உன் பெருமையின் காரணமாக) நிச்சயமாக நீ சிறுமைப்பட்டவனாகி விட்டாய். (ஆதலால், இதிலிருந்து) நீ வெளியேறி விடு'' என்று கூறினான்.
நிச்சயமாக எவர்கள் நம் வசனங்களைப் பொய்யாக்கி, அதைப் புறக்கணிப்பதைப் பெருமையாகக் கொண்டார்களோ அவர்களுக்கு (இறைவனின் அருளுக்குரிய) வானத்தின் வாயில்கள் திறக்கப்பட மாட்டாது. ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரை அவர்கள் சொர்க்கத்தை அடையவே மாட்டார்கள். குற்றவாளிகளை இவ்வாறே நாம் தண்டிப்போம்.
அந்த சிகரங்களில் உள்ளவர்கள், முக அடையாளத்தைக் கொண்டு (தண்டனைக் குள்ளானவர்கள் என) தாங்கள் அறிந்த சில மனிதர்களை கூவி அழைத்து, ‘‘நீங்கள் (உலகத்தில்) சம்பாதித்துச் சேகரித்து வைத்திருந்தவையும், நீங்கள் எவற்றைக் கொண்டு பெருமையடித்துக் கொண்டிருந்தீர்களோ அவையும் உங்களுக்குப் பலனளிக்கவில்லையே!'' என்று கூறுவார்கள்.
வ லா தகூனூ கல்லதீன கரஜூ மின் தியாரிஹிம் Bபதர(ன்)வ் வ ரி'ஆ'அன் னாஸி வ யஸுத்தூன 'அன் ஸBபீலில் லாஹ்; வல்லாஹு Bபிமா யஃமலூன முஹீத்
பெருமைக்காகவும் மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவும் தங்கள் வீடுகளிலிருந்து (முஸ்லிம்களை எதிர்க்க ‘பத்ரு' போருக்குப்) புறப்பட்டும், மக்களை அல்லாஹ்வுடைய பாதையில் செல்வதைத் தடை செய்து கொண்டும் இருந்தவர்களைப் போல் நீங்களும் ஆகிவிட வேண்டாம். அல்லாஹ் அவர்களுடைய செயல்களைச் சூழ்ந்து கொண்டிருக்கிறான்.
பல போர்க்களங்களில் (உங்கள் எண்ணிக்கைக் குறைவாக இருந்தும்) நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்திருக்கிறான். எனினும், ஹுனைன் போர் அன்று உங்களை பெருமையில் ஆழ்த்திக் கொண்டிருந்த உங்கள் அதிகமான (மக்கள்) தொகை உங்களுக்கு ஒரு பலனும் அளிக்கவில்லை. பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும் (அதுசமயம் அது) உங்களுக்கு மிக நெருக்கமாகி (குறுகி) விட்டது. நீங்கள் புறங்காட்டி ஓடவும் தலைப்பட்டீர்கள்.
அவனுக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கி அவன் இன்பம் அனுபவிக்கும்படி நாம் செய்தால், அதற்கவன் ‘‘நிச்சயமாக என் துன்பங்கள் அனைத்தும் தொலைந்து விட்டன. (இனி திரும்ப வராது)'' என்று கூறுகிறான். ஏனென்றால், நிச்சயமாக மனிதன் (அதிவிரைவில்) மகிழ்ச்சியடையக் கூடியவனாக, பெருமையடிப்பவனாக ஆகிவிடுகிறான்.
வ BபரZஜூ லில்லாஹி ஜமீ'அன் Fபகாலள் ளு'அFபா'உ லில் லதீனஸ் தக்Bபரூ இன்னா குன்னா லகும் தBப'அன் Fபஹல் அன்தும் முக்னூன 'அன்னா மின் 'அதாBபில் லாஹி மின் ஷய்'; காலூ லவ் ஹதானல் லாஹு ல ஹதய்னாகும் ஸவா'உன் 'அலய்னா அஜZஜிஃனா அம் ஸBபர்னா மா லனா மின் மஹீஸ்
(மறுமையில் பாவிகள்) அனைவரும் வெளிப்பட்டு அல்லாஹ்வின் முன் நிற்கும் சமயத்தில் (இவ்வுலகில்) பலவீனமானவர்கள் என்று கருதப்பட்டவர்கள், (பலசாலிகளென) பெருமையடித்துக் கொண்டிருந்தவர்களை நோக்கி ‘‘நிச்சயமாக நாங்கள் உங்களையே பின்பற்றி நடந்தோம். ஆகவே, அல்லாஹ்வுடைய வேதனையிலிருந்து ஒரு சிறிதளவையேனும் எங்களுக்கு நீங்கள் தடுத்து விட வேண்டாமா?'' என்று கூறுவார்கள். அதற்கு அவர்கள் (வேதனையிலிருந்து தப்பித்துக் கொள்ள) அல்லாஹ் எங்களுக்கு ஒரு வழி வைத்திருந்தால் (அதை) நாங்கள் உங்களுக்கு அறிவிப்போம். (தப்ப வழி இல்லை. எங்கள் வேதனையைப்பற்றி) நாங்கள் பதட்டப்பட்டு துடிதுடிப்பதும் அல்லது (அதைச்) சகித்துக் கொண்டு பொறுத்திருப்பதும் ஒன்றாகவே இருக்கிறது. (இவ் வேதனையிலிருந்து) தப்ப எங்களுக்கு ஒரு வழியும் இல்லையே!'' என்று புலம்புவார்கள்.
اِلٰهُكُمْ(வணங்கத் தகுதியான) உங்கள் இறைவன்اِلٰهٌஇறைவன்وَّاحِدٌ ۚஒரே ஒருவன்فَالَّذِيْنَஎவர்கள்لَا يُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்ள மாட்டார்கள்بِالْاٰخِرَةِமறுமையைقُلُوْبُهُمْஉள்ளங்கள்/அவர்களுடையمُّنْكِرَةٌநிராகரிக்கின்றனوَّهُمْஇன்னும் அவர்கள்مُّسْتَكْبِرُوْنَபெருமையடிக்கிறார்கள்
உங்கள் வணக்கத்திற்குரியவன் ஒரே ஓர் இறைவன்தான். ஆகவே, எவர்கள் மறுமையை நம்பவில்லையோ அவர்களுடைய உள்ளங்கள் (எதைக் கூறியபோதிலும்) நிராகரிப்பவைகளாகவே இருக்கின்றன. மேலும், அவர்கள் மிகக் கர்வம்கொண்டு பெருமையடிப்பவர்களாகவும் இருக்கின்றனர்.
(மேலும், இவர்களை நோக்கி) ‘‘நீங்கள் நரகத்தின் வாயில்களில் புகுந்து என்றென்றுமே அதில் தங்கி விடுங்கள்'' (என்று கூறுவார்கள்). பெருமை அடித்துக் கொண்டிருந்த இவர்களின் தங்குமிடம் மகா கெட்டது.
வ லில்லாஹி யஸ்ஜுது மா Fபிஸ் ஸமாவாதி வமா Fபில் அர்ளி மின் தாBப்Bபதி(ன்)வ் வல்ம லா'இகது வ ஹும் லா யஸ்தக்Bபிரூன்
வானங்களிலும் பூமியிலும் உள்ள மற்ற உயிரினங்களும் வானவர்களும் அல்லாஹ்வையே சிரம்பணிந்து வணங்குகின்றனர்.அவர்கள் (இப்லீஸைப் போல் அவனுக்கு சிரம் பணியாது) பெருமையடிப்பதில்லை.
பூமியில் (பெருமையுடன்) கர்வம் கொண்டு நடக்க வேண்டாம். ஏனென்றால், நிச்சயமாகப் பூமியைப் பிளந்து விடவோ அல்லது மலையின் உச்சியை அடைந்து விடவோ உம்மால் முடியாது.
(நபியே!) கூறுவீராக: ‘‘புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியதே! அவனுக்கு ஒரு சந்ததியுமில்லை. அவனுடைய ஆட்சியில் அவனுக்குக் கூட்டாளி ஒருவருமில்லை. அவனுக்கு பலவீனம் இல்லை என்பதால் அவனுக்கு உதவியாளன் ஒருவனுமில்லை.'' ஆகவே, அவனை மிக மிகப் பெருமைப்படுத்திக் கூறுவீராக!
வானங்களிலும் பூமியிலுமுள்ள அனைத்தும் அவனுக்குரியனவே! அவனிடத்தில் இருக்கக்கூடிய (வானவர்களாயினும் சரி; அவர்களும் அவனுடைய அடியார்களே! அ)வர்கள் அவனை வணங்காது பெருமை அடிக்கவும் மாட்டார்கள், சோர்வுறவும் மாட்டார்கள்.
(இவ்வாறு குர்பானி செய்தபோதிலும்) அதன் மாமிசமோ அல்லது அதன் இரத்தமோ அல்லாஹ்வை அடைந்து விடுவது இல்லை. உங்கள் இறையச்சம்தான் அவனை அடையும். அல்லாஹ் உங்களுக்கு நேரான வழியை அறிவித்ததற்காக (அவனுக்கு நீங்கள் குர்பானி கொடுத்து) அவனை நீங்கள் பெருமைப்படுத்தும் பொருட்டு இவ்வாறு அவற்றை உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான். (நபியே! இவ்வாறு குர்பானி கொடுத்து) நன்மை செய்பவர்களுக்கு நீர் நற்செய்தி கூறுவீராக.
اَلَّا تَعْلُوْاநீங்கள் பெருமை காட்டாதீர்கள்!عَلَىَّஎன்னிடம்وَاْتُوْنِىْஎன்னிடம் வந்து விடுங்கள்!مُسْلِمِيْنَபணிந்தவர்களாக
அல்லா தஃலூ 'அலய்ய வா தூனீ முஸ்லிமீன்
நீங்கள் (கர்வம் கொண்டு) என்னிடம் பெருமை பாராட்டாதீர்கள். (இறைவனுக்கு) முற்றிலும் வழிப்பட்டவர்களாக என்னிடம் வாருங்கள்'' (என்றும் எழுதப்பட்டிருக்கிறது) என்று கூறி
நிச்சயமாக ஃபிர்அவ்ன், பூமியில் மிகவும் பெருமை கொண்டு, அதில் உள்ளவர்களைப் பல வகுப்புக்களாகப் பிரித்து, அவர்களில் ஒரு பிரிவினரை பலவீனப்படுத்தும் பொருட்டு அவர்களுடைய ஆண் மக்களைக் கொலை செய்து, பெண் மக்களை உயிருடன் வாழவைத்து வந்தான். மெய்யாகவே (இவ்வாறு) அவன் விஷமிகளில் ஒருவனாகவே இருந்தான்.
அவனும் அவனுடைய இராணுவங்களும் நியாயமின்றிப் பூமியில் பெருமை அடித்தனர், நிச்சயமாக அவர்கள் நம்மிடம் (விசாரணைக்காக) கொண்டுவரப்பட மாட்டார்கள் என்றும் எண்ணிக் கொண்டனர்.
காரூனையும், ஃபிர்அவ்னையும், ஹாமானையும் (நாம் இவ்வாறே அழித்து விட்டோம்). நிச்சயமாக மூஸா இவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளையே கொண்டு வந்திருந்தார். எனினும், இவர்கள் (அவற்றை நிராகரித்து விட்டுப்) பூமியில் பெருமை கொண்டு நடந்ததினால் (நம் வேதனைக்கு உள்ளானார்கள். அதில் இருந்து) அவர்கள் தப்பித்துக் கொள்ள முடியவில்லை.
வ லா துஸ'-'இர் கத்தக லின்னாஸி வலா தம்ஷி Fபில் அர்ளி மாரஹன் இன்னல் லாஹ லா யுஹிBப்Bபு குல்ல முக்தாலின் Fபகூர்
(பெருமை கொண்டு) உன் முகத்தை மனிதர்களை விட்டுத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையடித்துக் கொண்டு நடக்காதே! நிச்சயமாக கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.
உன் நடையில் (பெருமையும் கர்வமுமின்றி) மத்திய தரத்தை விரும்பு. உன் சப்தத்தையும் தாழ்த்திக்கொள். ஏனென்றால், சப்தங்களிலெல்லாம் மிக்க வெறுக்கத்தக்கது கழுதையின் (உரத்த) சப்தமே!'' (என்று கூறினார்).
நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், எவர்கள் (பூமியில்) சிரம் பணிந்து தங்கள் இறைவனைப் புகழ்ந்து துதி செய்கிறார்களோ அவர்கள்தான் நம் வசனங்களை மெய்யாகவே நம்பிக்கை கொள்வார்கள். அவர்கள் கர்வம்கொண்டு பெருமையடிக்கவும் மாட்டார்கள்.
எவர்கள் (இறைவனிடமிருந்து) தங்களுக்கு வந்துள்ளதாகக் கூறக்கூடிய ஓர் ஆதாரமுமின்றியே, அல்லாஹ்வுடைய வசனங்களைப் பற்றி (வீணாகத்) தர்க்கிக்கிறார்களோ... (அவர்கள் நஷ்டமடைந்து விடுவார்கள்). ஏனென்றால், இது அல்லாஹ்விடத்திலும், நம்பிக்கை கொண்டவர்களிடத்திலும் பெரும் அருவருப்பானதாகும். இவ்வாறே, பெருமை கொள்ளும் வம்பர்களின் உள்ளங்களிலெல்லாம் முத்திரையிட்டு விடுகிறான்'' (என்றும் அவர் கூறினார்).
وَاِذْ يَتَحَآجُّوْنَஅவர்கள் ஒருவருக்கொருவர் வாய்ச் சண்டை செய்யும்போதுفِى النَّارِநரகத்தில்فَيَقُوْلُகூறுவார்கள்الضُّعَفٰٓؤُاபலவீனமானவர்கள்لِلَّذِيْنَ اسْتَكْبَرُوْۤاபெருமை கொண்டிருந்தவர்களுக்குاِنَّا كُنَّاநிச்சயமாக நாங்கள் இருந்தோம்لَـكُمْஉங்களைتَبَعًاபின்பற்றுபவர்களாகفَهَلْ اَنْتُمْ مُّغْنُوْنَஆகவே நீங்கள் தடுப்பீர்களா?عَنَّاஎங்களை விட்டுنَصِيْبًاஒரு பகுதியைمِّنَ النَّارِநரகத்தில் இருந்து
நரகத்தில் அவர்கள் தங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு, (அவர்களில் உள்ள) பலவீனமானவர்கள் பெருமையடித்துக் கொண்டிருந்த (தலை)வர்களை நோக்கி ‘‘மெய்யாகவே நாங்கள் உங்களையே பின்பற்றியிருந்தோம். இன்றைய தினம் நரகத்தி(ன் வேதனையி)லிருந்து ஒரு சிறிதேனும் எங்களை விட்டு நீங்கள் தடுத்துவிட முடியுமா?'' என்று கேட்பார்கள்.
அதற்கு, பெருமையடித்துக் கொண்டிருந்த அ(வர்களுடைய தலை)வர்கள், ‘‘மெய்யாகவே (நாங்களும், நீங்களும் ஆக) நாம் அனைவரும் நரகத்தில்தான் இருக்கிறோம். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களுக்கு(ச் செய்ய வேண்டிய) தீர்ப்பைச் செய்து விட்டான். (ஆகவே, உங்களுக்காக நாங்கள் ஒன்றும் உதவி செய்வதற்கில்லை)'' என்று கூறுவார்கள்.
நிச்சயமாக எவர்கள் தங்களிடம் ஆதாரம் ஏதும் இல்லாதிருக்க அல்லாஹ்வுடைய வசனங்களைப் பற்றித் தர்க்கிக்கிறார்களோ, அவர்களுடைய உள்ளங்களில் (வெறும்) பெருமையைத் தவிர வேறொன்றுமில்லை. (அப்பெருமையை) அவர்கள் அடையவும் மாட்டார்கள். ஆகவே, (உம்மை) பாதுகாத்துக் கொள்ளுமாறு அல்லாஹ்விடம் நீர் கோருவீராக. நிச்சயமாக அவன்தான் (அனைத்தையும்) செவியுறுபவன், உற்று நோக்குபவன் ஆவான்.
உங்கள் இறைவன் கூறுகிறான்: ‘‘நீங்கள் (உங்களுக்கு வேண்டியவை அனைத்தையும்) என்னிடமே கேளுங்கள். நான் உங்கள் பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொள்வேன். எவர்கள் என்னை வணங்காது பெருமையடிக்கின்றனரோ, அவர்கள் நிச்சயமாக சிறுமைப்பட்டவர்களாக நரகம் புகுவார்கள்.
ஆது என்னும் மக்களோ, பூமியில் நியாயமின்றிப் பெருமைகொண்டு, எங்களைவிட பலசாலியாரென்று கூறினார்கள். அவர்களைப் படைத்த அல்லாஹ் நிச்சயமாக அவர்களைவிட பலசாலி என்பதை அவர்கள் கவனித்திருக்க வேண்டாமா? (எனினும்,) அவர்கள் நமது (இத்தகைய) அத்தாட்சிகளையும் (தர்க்கித்து) நிராகரித்துக் கொண்டே இருந்தார்கள்.
وَاَمَّاஆகالَّذِيْنَ كَفَرُوْۤاநிராகரித்தவர்கள்اَفَلَمْ تَكُنْஇருக்கவில்லையா?اٰيٰتِىْஎனது வசனங்கள்تُتْلٰىஓதப்படுகின்றனعَلَيْكُمْஉங்கள் மீதுفَاسْتَكْبَرْتُمْநீங்கள் பெருமை அடித்தீர்கள்وَكُنْتُمْஇன்னும் நீங்கள் இருந்தீர்கள்قَوْمًاமக்களாகمُّجْرِمِيْنَகுற்றம் புரிகின்றவர்கள்
قُلْகூறுவீராக!اَرَءَيْتُمْஅறிவியுங்கள்اِنْ كَانَஇது இருந்தால்مِنْ عِنْدِ اللّٰهِஅல்லாஹ்விடமிருந்துوَكَفَرْتُمْஇன்னும் நீங்கள் நிராகரித்து விட்டால்بِهٖஇதைوَشَهِدَஇன்னும் சாட்சியும் கூறினார்شَاهِدٌஒரு சாட்சியாளர்مِّنْۢ بَنِىْۤ اِسْرَآءِيْلَஇஸ்ரவேலர்களில் உள்ளعَلٰى مِثْلِهٖஇதுபோன்ற ஒன்றுக்குفَاٰمَنَஅவர் நம்பிக்கை கொண்டிருக்கوَاسْتَكْبَرْتُمْ ؕநீங்களோ பெருமை அடித்தீர்கள்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَا يَهْدِىநேர்வழி காட்ட மாட்டான்الْقَوْمَமக்களுக்குالظّٰلِمِيْنَஅநியாயக்கார(ர்கள்)
குல் அர'அய்தும் இன் கான மின் 'இன்தில் லாஹி வ கFபர்தும் Bபிஹீ வ ஷஹித ஷாஹிதும் மிம் Bபனீ இஸ்ரா'ஈல 'அலா மித்லிஹீ Fப ஆமன வஸ்தக் Bபர்தும் இன்னல் லாஹ லா யஹ்தில் கவ்மள் ளாலிமீன்
(நபியே!) கூறுவீராக: ‘‘(யூதர்களே! இவ்வேதம்) அல்லாஹ்விடம் இருந்தே வந்திருக்க, அதை நீங்கள் நிராகரித்து விட்டீர்களே! (உங்கள் இனத்தைச் சார்ந்த) இஸ்ராயீலின் சந்ததிகளிலுள்ள ஒருவர், இதைப் போன்ற ஒரு வேதம் வர வேண்டியதிருக்கிறது என்று சாட்சியம் கூறி, அதை அவர் நம்பிக்கை கொண்டுமிருக்க, நீங்கள் பெருமைகொண்டு (இதை நிராகரித்து) விட்டால், (உங்கள் கதி) என்னவாகும் என்பதை கவனித்தீர்களா? நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) அநியாயக்கார மக்களை நேரான வழியில் செலுத்த மாட்டான்.''
நிராகரிப்பவர்களை நரகத்தின்முன் கொண்டுவரப்படும் நாளில் (அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் உலகத்தில் வாழ்ந்திருந்த காலத்தில், நீங்கள் பெற்றிருந்த நல்லவற்றை எல்லாம், (நன்மையான காரியங்களில் உபயோகிக்காது) உங்கள் சுகபோகங்களிலேயே உபயோகித்து இன்பமனுபவித்து விட்டீர்கள். ஆகவே, நீங்கள் பூமியில் நியாயமின்றிப் பெருமையடித்துக்கொண்டும், பாவம் செய்துகொண்டும் இருந்ததன் காரணமாக, இழிவு தரும் வேதனையே இன்றைய தினம் உங்களுக்குக் கூலியாகக் கொடுக்கப்படும்'' (என்று கூறப்படும்).
يٰۤاَيُّهَا النَّاسُமக்களே!اِنَّاநிச்சயமாக நாம்خَلَقْنٰكُمْஉங்களைப் படைத்தோம்مِّنْ ذَكَرٍஓர் ஆணிலிருந்துوَّاُنْثٰىஇன்னும் ஒரு பெண்وَجَعَلْنٰكُمْஇன்னும் உங்களை நாம் ஆக்கினோம்شُعُوْبًاபல நாட்டவர்களாக(வும்)وَّقَبَآٮِٕلَபல குலத்தவர்களாகவும்لِتَعَارَفُوْا ؕநீங்கள் ஒருவர் ஒருவரை அறிவதற்காகاِنَّநிச்சயமாகاَكْرَمَكُمْஉங்களில் மிக கண்ணியமானவர்عِنْدَ اللّٰهِஅல்லாஹ்விடம்اَ تْقٰٮكُمْ ؕஉங்களில் அதிகம் இறையச்சமுடையவர்தான்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்عَلِيْمٌநன்கறிந்தவன்خَبِيْرٌஆழ்ந்தறிபவன்
மனிதர்களே! உங்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் ஒரேஓர் ஆண், ஒரேஓர் பெண்ணிலிருந்துதான் படைத்தோம். பின்னர், ஒருவர் மற்றவரை அறிந்துகொள்ளும் பொருட்டு, உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆதலால், உங்களில் ஒருவர் மற்றவரைவிட மேலானவர் என்று பெருமை பேசாதீர்கள்.) எனினும், உங்களில் எவர் இறையச்சம் உடையவராக இருக்கிறாரோ, அவர்தான் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிக கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவன், நன்கு தெரிந்தவன் ஆவான்.
(மனிதர்களே!) நிச்சயமாக நீங்கள் அறிந்துகொள்ளுங்கள் இவ்வுலக வாழ்க்கையெல்லாம் வீண் விளையாட்டும், வேடிக்கையும், வெறும் அலங்காரமும்தான். தவிர உங்களுக்கிடையில் ஏற்படும் வீண் பெருமையும், பொருளிலும் சந்ததியிலும் அதிகரிக்க வேண்டுமென்ற வீண் எண்ணமும்தான். (இதன் உதாரணமாவது:) ஒரு மழையின் உதாரணத்தை ஒத்திருக்கிறது. அந்த மழையினால் முளைத்த பயிர்கள் (நன்கு வளர்ந்து) விவசாயிகளுக்குக் களிப்பை உண்டு பண்ணிக்கொண்டிருந்தன. பின்னர், அவை மஞ்சனித்துக் காய்ந்து, சருகுகளாகிவிடுவதை நீர் காண்கிறீர். (இவ்வுலக வாழ்க்கையும் அவ்வாறே இருக்கிறது.) மறுமையிலோ (அவர்களில் பலருக்குக்) கொடிய வேதனையும், (பலருக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், அவனது திருப்பொருத்தமும் கிடைக்கின்றன. ஆகவே, இவ்வுலக வாழ்க்கை (மனிதனை) மயக்கும் சொற்ப இன்பமே தவிர வேறில்லை.
உங்களை விட்டும் தவறிப்போனதைப் பற்றி நீங்கள் கவலை கொள்ளாதிருக்கவும் (அல்லாஹ்) உங்களுக்குக் கொடுத்ததைப் பற்றி நீங்கள் கர்வம் கொள்ளாதிருக்கவும். (இதை உங்களுக்கு அறிவிக்கிறான்). அல்லாஹ், கர்வம் கொள்பவர்களையும் பெருமையடிப்பவர்களையும் நேசிப்பதில்லை.
அந்த அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறொரு இறைவனுமில்லை. அவன்தான் மெய்யான அரசன்; பரிசுத்தமானவன்; சாந்தியும் சமாதானமும் அளிப்பவன்; அபயமளிப்பவன்; பாதுகாவலன்; (அனைவரையும்) மிகைத்தவன்; அடக்கி ஆளுபவன்; பெருமைக்குரியவன். இவர்கள் கூறும் இணை துணைகளை விட்டு அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன்.