இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

3605ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ الْمَكِّيُّ، حَدَّثَنَا عَمْرُو بْنُ يَحْيَى بْنِ سَعِيدٍ الأُمَوِيُّ، عَنْ جَدِّهِ، قَالَ كُنْتُ مَعَ مَرْوَانَ وَأَبِي هُرَيْرَةَ فَسَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ سَمِعْتُ الصَّادِقَ الْمَصْدُوقَ، يَقُولُ ‏ ‏ هَلاَكُ أُمَّتِي عَلَى يَدَىْ غِلْمَةٍ مِنْ قُرَيْشٍ ‏ ‏‏.‏ فَقَالَ مَرْوَانُ غِلْمَةٌ‏.‏ قَالَ أَبُو هُرَيْرَةَ إِنْ شِئْتَ أَنْ أُسَمِّيَهُمْ بَنِي فُلاَنٍ وَبَنِي فُلاَنٍ‏.‏
ஸயீத் அல்-உமவீ அவர்கள் அறிவித்தார்கள்:

நான் மர்வான் மற்றும் அபூ ஹுரைரா (ரழி) அவர்களுடன் இருந்தேன். அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் (இவ்வாறு) கூற நான் கேட்டேன்: "நான், உண்மையாளரும், உண்மைப்படுத்தப்பட்டவருமான (நபி (ஸல்) அவர்கள்) 'என் சமுதாயத்தின் (முஸ்லிம்களின்) அழிவு குறைஷிக் குலத்தைச் சேர்ந்த சில இளைஞர்களின் கரங்களால் ஏற்படும்' என்று கூறக் கேட்டேன்." மர்வான், "இளைஞர்களா?" என்று கேட்டார். அதற்கு அபூ ஹுரைரா (ரழி) அவர்கள், "நீங்கள் விரும்பினால், நான் அவர்களின் பெயர்களைக் குறிப்பிடுவேன்: அவர்கள் இன்னாரின் பிள்ளைகளும் இன்னாரின் பிள்ளைகளும் ஆவார்கள்" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح